24-01-2025 ★ ரஜப் 23 ★ ஹிஜ்ரி :1446 ★ بسم الله الرحمن الرحيم
அறிவு ஏற்கா விட்டாலும் கண்டிப்பாக நம்ப வேண்டிய எத்தனையோ விஷயங்கள் மார்க்கத்தில் உள்ளன. அதில் ஒன்று மிஃராஜ்
ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ- الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5)البقرة
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنْ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ (بخاري)- باب فَضْلِ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ – الدعوات
கருத்து- அல்லாஹ்வுக்கு சில மலக்குகள் உள்ளனர். அவர்கள் பூமியெங்கும் பல குழுக்களாக சுற்றித் திரிந்து அல்லாஹ்வை திக்ரு செய்பவர்களைத் தேடி அலைவார்கள். அப்படியொரு கூட்டத்தை அவர்களில் ஒரு சாரார் கண்டால் அவர்கள் மற்ற மலக்குகளையும் அங்கு அழைத்து வாருங்கள் நாம் தேடியவர்கள் இங்கே உள்ளனர் என்று கூறி அழைப்பார்கள். அனைவரும் அந்த மனிதர்களை தங்களுடைய இறக்கைகளால் ஒன்றன் மேல் ஒன்றாக ஆகாயம் வரை சூழ்ந்து கொண்டு அந்த மனிதர்களுக்காக துஆச் செய்வார்கள். பின்பு அல்லாஹ்விடம் சென்று அந்த அடியார்களின் நன்மைகளை சமர்ப்பிக்கும்போது அல்லாஹ் அவர்களிடம் என்னுடைய அடியார்கள் எதை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்பான். அனைத்தையும் அவன் அறிந்திருந்தும் கூட இவ்வாறு கேட்பான். அதற்கு மலக்குகள் உன்னுடைய அடியார்கள் உன்னை தஸ்பீஹ் செய்து கொண்டிருக்கின்றனர் உன்னை புகழந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று அல்லாஹ் கேட்பான். இல்லை பார்க்கவில்லை என மலக்குகள் கூற, அதற்கு அல்லாஹ் என்னைப் பார்க்காமலேயே இந்த அளவு என்னைத் துதிப்பவர்கள் என்னைப் பார்த்தால் எந்த அளவு திக்ரு செய்வார்கள் என்று கேட்பான். உன்னைப் பார்த்தால் இன்னும் அதிகமாக உன்னை திக்ரு செய்வார்கள் என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
அடுத்து அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் எதை என்னிடம் கேட்கிறார்கள் என்று வினவும்போது உன்னுடைய அடியார்கள் உன்னிடம் சுவனத்தைக் கேட்கின்றனர் என்று கூறுவர். அதையேனும் அவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று அல்லாஹ் கேட்பான். இல்லை பார்க்கவில்லை என மலக்குகள் கூற, அதற்கு அல்லாஹ் சுவனத்தைப் பார்க்காமலேயே இந்த அளவுக்கு சுவனத்தைக் கேட்பவர்கள் அதைப் பார்த்தால் எந்த அளவு அதைக் கேட்பார்கள் என்று வினவும்போது சுவனத்தைப் பார்த்தால் இன்னும் அதிகமாக அதை உன்னிடம் கேட்பார்கள் என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
அடுத்து அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் எதை விட்டும் என்னிடம் பாதுகாப்புக் கேட்கிறார்கள் என்று வினவும்போது உன்னுடைய அடியார்கள் உன்னிடம் நரகத்தை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றனர். என்று கூறுவர். அதையேனும் அவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று அல்லாஹ் கேட்பான். இல்லை பார்க்கவில்லை என மலக்குகள் கூற, அதற்கு அல்லாஹ் நரகத்தைப் பார்க்காமலேயே இந்த அளவுக்கு அதைவிட்டும் பாதுகாப்புக் கேட்பவர்கள் அதைப் பார்த்தால் எந்த அளவு பாதுகாப்புக் கேட்பார்கள் என்று வினவும்போது நரகத்தைப் பார்த்தால் இன்னும் அதிகமாக அதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புக் கேட்பார்கள் என்று அந்த மலக்குகள் கூறுவார்கள். அடுத்து அல்லாஹ் அம்மலக்குகளிடம் உங்களை சாட்சியாகவைத்து நான் இவர்களை மன்னித்து விட்டேன் என்று கூறுவான். அதற்கு அந்த மலக்குகல் ரப்பே இவர்களில் ஒருவர் வேறு ஒரு தேவைக்காக வந்தவர் இவர்களுடன் அமர்ந்துள்ளார்.அவரிடம் உளத்தூய்மை இல்லை என்று கூறுவர். அதற்கு அல்லாஹ் கூறுவான். பரவாயில்லை. இவர்களுடன் சேர்ந்து இருந்த தால் அவரையும் நான் மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான்.
இவ்வாறு அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தாலும் அதை முஃமின் நம்புவார். அது போன்று தான் மிஃராஜ்.
விஞ்ஞானம் வளராத அக்காலத்தில் நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தை நிறைந்த ஈமான் உடையவர்கள் மட்டுமே நம்பினர்.
قَالَ أَبُو سَلَمَة فَتَجَهَّزَ نَاس مِنْ قُرَيْش إِلَى أَبِي بَكْر فَقَالُوا هَلْ لَك فِي صَاحِبك يَزْعُم أَنَّهُ جَاءَ إِلَى بَيْت الْمَقْدِس ثُمَّ رَجَعَ إِلَى مَكَّة فِي لَيْلَة وَاحِدَة فَقَالَ أَبُو بَكْر أَوَقَالَ ذَلِكَ ؟ قَالُوا نَعَمْ قَالَ فَأَنَا أَشْهَد لَئِنْ كَانَ قَالَ ذَلِكَ لَقَدْ صَدَقَ قَالُوا فَتُصَدِّقهُ فِي أَنْ يَأْتِي الشَّام فِي لَيْلَة وَاحِدَة ثُمَّ يَرْجِع إِلَى مَكَّة قَبْل أَنْ يُصْبِح؟ قَالَ نَعَمْ أَنَا أُصَدِّقهُ بِأَبْعَد مِنْ ذَلِكَ أُصَدِّقهُ بِخَبَرِ السَّمَاء قَالَ أَبُو سَلَمَة فَبِهَا سُمِّيَ أَبُو بَكْر الصِّدِّيق (دلائل النبوة)
நிறைந்த ஈமான் உள்ளவர் இறந்த பின் அவருடைய ஆன்மா மேற்கொள்ளும் விண்ணுலகப் பயணம் அவருடைய ஆன்மா ஏழாவது வானம் வரை சென்று வரும். அந்த ஆன்மாவுக்கான வரவேற்பு பற்றிய நீண்ட ஹதீஸ்
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةِ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ وَلَمَّا يُلْحَدْ فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَلَسْنَا حَوْلَهُ وَكَأَنَّ عَلَى رُءُوسِنَا الطَّيْرَ وَفِي يَدِهِ عُودٌ يَنْكُتُ فِي الْأَرْضِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا ثُمَّ قَالَ إِنَّ الْعَبْدَ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنْ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنْ الْآخِرَةِ نَزَلَ إِلَيْهِ مَلَائِكَةٌ مِنْ السَّمَاءِ بِيضُ الْوُجُوهِ كَأَنَّ وُجُوهَهُمْ الشَّمْسُ مَعَهُمْ كَفَنٌ مِنْ أَكْفَانِ الْجَنَّةِ وَحَنُوطٌ مِنْ حَنُوطِ الْجَنَّةِ حَتَّى يَجْلِسُوا مِنْهُ مَدَّ الْبَصَرِ ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ عَلَيْهِ السَّلَام حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ فَيَقُولُ أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ اخْرُجِي إِلَى مَغْفِرَةٍ مِنْ اللَّهِ وَرِضْوَانٍ قَالَ فَتَخْرُجُ تَسِيلُ كَمَا تَسِيلُ الْقَطْرَةُ مِنْ فِي السِّقَاءِ فَيَأْخُذُهَا فَإِذَا أَخَذَهَا لَمْ يَدَعُوهَا فِي يَدِهِ طَرْفَةَ عَيْنٍ حَتَّى يَأْخُذُوهَا فَيَجْعَلُوهَا فِي ذَلِكَ الْكَفَنِ وَفِي ذَلِكَ الْحَنُوطِ وَيَخْرُجُ مِنْهَا كَأَطْيَبِ نَفْحَةِ مِسْكٍ وُجِدَتْ عَلَى وَجْهِ
الْأَرْضِ قَالَ فَيَصْعَدُونَ بِهَا فَلَا يَمُرُّونَ يَعْنِي بِهَا عَلَى مَلَإٍ مِنْ الْمَلَائِكَةِ إِلَّا قَالُوا مَا هَذَا الرُّوحُ الطَّيِّبُ فَيَقُولُونَ فُلَانُ بْنُ فُلَانٍ بِأَحْسَنِ أَسْمَائِهِ الَّتِي كَانُوا يُسَمُّونَهُ بِهَا فِي الدُّنْيَا حَتَّى يَنْتَهُوا بِهَا إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَسْتَفْتِحُونَ لَهُ فَيُفْتَحُ لَهُمْ فَيُشَيِّعُهُ مِنْ كُلِّ سَمَاءٍ مُقَرَّبُوهَا إِلَى السَّمَاءِ
الَّتِي تَلِيهَا حَتَّى يُنْتَهَى بِهِ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ اكْتُبُوا كِتَابَ عَبْدِي فِي عِلِّيِّينَ وَأَعِيدُوهُ إِلَى الْأَرْضِ فَإِنِّي مِنْهَاخَلَقْتُهُمْ وَفِيهَا أُعِيدُهُمْ وَمِنْهَا أُخْرِجُهُمْ تَارَةً أُخْرَى قَالَ فَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ فَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولَانِ لَهُ مَنْ رَبُّكَ فَيَقُولُ رَبِّيَ اللَّهُ فَيَقُولَانِ لَهُ مَا دِينُكَ فَيَقُولُ دِينِيَ الْإِسْلَامُ فَيَقُولَانِ لَهُ مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ فَيَقُولُ هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولَانِ لَهُ وَمَا عِلْمُكَ فَيَقُولُ قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ فَيُنَادِي مُنَادٍ فِي السَّمَاءِ أَنْ صَدَقَ عَبْدِي فَأَفْرِشُوهُ مِنْ الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنْ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ قَالَ فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيبِهَا وَيُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ مَدَّ بَصَرِهِ قَالَ وَيَأْتِيهِ رَجُلٌ حَسَنُ الْوَجْهِ حَسَنُ الثِّيَابِ طَيِّبُ الرِّيحِ فَيَقُولُ أَبْشِرْ بِالَّذِي يَسُرُّكَ هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ فَيَقُولُ لَهُ مَنْ أَنْتَ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالْخَيْرِ فَيَقُولُ أَنَا عَمَلُكَ الصَّالِحُ فَيَقُولُ رَبِّ أَقِمْ السَّاعَةَ حَتَّى أَرْجِعَ إِلَى أَهْلِي وَمَالِي..
قَالَ وَإِنَّ الْعَبْدَ الْكَافِرَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنْ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنْ الْآخِرَةِ نَزَلَ إِلَيْهِ مِنْ السَّمَاءِ مَلَائِكَةٌ سُودُ الْوُجُوهِ مَعَهُمْ الْمُسُوحُ فَيَجْلِسُونَ مِنْهُ مَدَّ الْبَصَرِ ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ فَيَقُولُ أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ اخْرُجِي إِلَى سَخَطٍ مِنْ اللَّهِ وَغَضَبٍ قَالَ فَتُفَرَّقُ فِي جَسَدِهِ فَيَنْتَزِعُهَا كَمَا يُنْتَزَعُ السَّفُّودُ مِنْ الصُّوفِ الْمَبْلُولِ فَيَأْخُذُهَا فَإِذَا أَخَذَهَا لَمْ يَدَعُوهَا فِي يَدِهِ طَرْفَةَ عَيْنٍ حَتَّى يَجْعَلُوهَا فِي تِلْكَ الْمُسُوحِ وَيَخْرُجُ مِنْهَا كَأَنْتَنِ رِيحِ جِيفَةٍ وُجِدَتْ عَلَى وَجْهِ الْأَرْضِ فَيَصْعَدُونَ بِهَا فَلَا يَمُرُّونَ بِهَا عَلَى مَلَإٍ مِنْ الْمَلَائِكَةِ إِلَّا قَالُوا مَا هَذَا الرُّوحُ الْخَبِيثُ فَيَقُولُونَ فُلَانُ بْنُ فُلَانٍ بِأَقْبَحِ أَسْمَائِهِ الَّتِي كَانَ يُسَمَّى بِهَا فِي الدُّنْيَا حَتَّى يُنْتَهَى بِهِ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيُسْتَفْتَحُ لَهُ فَلَا يُفْتَحُ لَهُ ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ{لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ}فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ اكْتُبُوا كِتَابَهُ فِي سِجِّينٍ فِي الْأَرْضِ السُّفْلَى فَتُطْرَحُ رُوحُهُ طَرْحًا ثُمَّ قَرَأَ{وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ}فَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ وَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولَانِ لَهُ مَنْ رَبُّكَ فَيَقُولُ هَاهْ هَاهْ لَا أَدْرِي فَيَقُولَانِ لَهُ مَا دِينُكَ فَيَقُولُ هَاهْ هَاهْ لَا أَدْرِي فَيَقُولَانِ لَهُ مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ فَيَقُولُ هَاهْ هَاهْ لَا أَدْرِي فَيُنَادِي مُنَادٍ مِنْ السَّمَاءِ أَنْ كَذَبَ فَافْرِشُوا لَهُ مِنْ النَّارِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى النَّارِ فَيَأْتِيهِ مِنْ حَرِّهَا وَسَمُومِهَا وَيُضَيَّقُ عَلَيْهِ قَبْرُهُ حَتَّى تَخْتَلِفَ فِيهِ أَضْلَاعُهُ وَيَأْتِيهِ رَجُلٌ قَبِيحُ الْوَجْهِ قَبِيحُ الثِّيَابِ مُنْتِنُ الرِّيحِ فَيَقُولُ أَبْشِرْ بِالَّذِي يَسُوءُكَ هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ فَيَقُولُ مَنْ أَنْتَ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالشَّرِّ فَيَقُولُ أَنَا عَمَلُكَ الْخَبِيثُ فَيَقُولُ رَبِّ لَا تُقِمْ السَّاعَةَ (أحمد)حدبث البراء بن عازب رضي الله عنه –مشكاة- باب ما يقال عند من حضره الموت-كتاب الجنائز
மிஃராஜ் உடைய சம்பவம் பல்வேறு படிப்பினைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அந்த மிஃராஜ் சம்பவத்தை நாம் ஒவ்வொரு வருடமும் செவியுறும்போது நம் வாழ்வில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்
நாம் பார்க்கும் கண்ணாக அல்லாஹ் ஆகி விடும்போது எவ்வளவு தூரத்தில் உள்ளதையும் இங்கிருந்த படியே பார்க்க முடியும்
மிஃராஜ் பயணத்தை நம்பாத காஃபிர்கள் நீங்கள் சென்று வந்த பைத்துல் முகத்தஸை வர்ணித்துக் காட்டுங்கள் என நபி ஸல் அவர்களிடம் கூறிய போது அல்லாஹ் பைத்துல் முகத்தஸை கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து காட்டினான் அதைப் பார்த்த படியே நபி ஸல் வர்ணித்துக் காட்டினார்கள்
عن جَابِر رَضِيَ اللَّه عَنْهُ يُحَدِّث أَنَّهُ سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " لَمَّا كَذَّبَتْنِي قُرَيْش حِين أُسْرِيَ بِي إِلَى بَيْت الْمَقْدِس قُمْت فِي الْحِجْر فَجَلَّى اللَّه لِي بَيْت الْمَقْدِس فَطَفِقْت أُخْبِرهُمْ عَنْ آيَاته وَأَنَا أَنْظُر إِلَيْهِ
குறைஷிகள் என்னை பொய் படுத்திய போது நான் (கஃபா) ஹிஜ்ர் அருகே நின்றிருந்தேன்
அப்போது அல்லாஹ் பைத்துல் முகத்தஸை என் கண் முன்னால் காட்சி அளிக்க வைத்தான்
நான் அதை நேரடியாக பார்ப்பது போல குரைஷிகளுக்கு பைத்துல் முகத்தஸை விவரித்துக் கொண்டிருந்தேன்
(بخاري) بَاب حَدِيثِ الْإِسْرَاءِ –كتاب مناقب الأنصار
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ (بخاري) باب التَّوَاضُعِ - كتاب الرقاق
கருத்து - எனது அடியான் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் மூலம் என்னை நெருங்குவதில்லை மாறாக உபரியான வணக்கங்களைக் கொண்டு என்னை நெருங்குகிறான் அப்படி அவன் நெருங்கும்போது அவன் பார்க்கும் கண்ணாக அவன் பிடிக்கும் கரமாக அவன் நடக்கும் கால்களாக நான் மாறி விடுகிறேன் அதாவது அவனுடைய காரியங்களை நான் நடத்துவேன்
புராக் விமானம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்து சென்றதோ அந்த நாடுகள் அடைந்த செழிப்பு...
அமெரிக்கா மற்றும் ஜெர்மன் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் வற்றாத பெட்ரோல் வளம் கொண்ட நாடுகள் எவை என மண்ணியல் வரைபடமாக தயாரித்தனர்.அதில் வளைகுடா நாடுகளே அதிகம் இடம்பெற்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் நபி(ஸல்) அவர்களை சுமந்து சென்ற புராக் வாகனம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்ததோ அந்த நாடுகள் இன்று பெட்ரோல் வளம் கொண்ட நாடுகளாக உள்ளன.
நபி ஸல் அவர்களுக்கு மிஃராஜ் இரவிலும் ஆன்மீக ஆபரேஷன் நடத்தப்பட்டது. சிறு வயதில் நடத்தப்பட்டதைப் போன்று
عَنْ أَنَس رض يَقُولُ لَيْلَةَ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الْكَعْبَةِ أَنَّهُ جَاءَهُ ثَلَاثَةُ نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ وَهُوَ نَائِمٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَقَالَ أَوَّلُهُمْ أَيُّهُمْ هُوَ فَقَالَ أَوْسَطُهُمْ هُوَ خَيْرُهُمْ فَقَالَ آخِرُهُمْ خُذُوا خَيْرَهُمْ فَكَانَتْ تِلْكَ اللَّيْلَةَ فَلَمْ يَرَهُمْ حَتَّى أَتَوْهُ لَيْلَةً أُخْرَى فِيمَا يَرَى قَلْبُهُ وَتَنَامُ عَيْنُهُ وَلَا يَنَامُ قَلْبُهُ وَكَذَلِكَ الْأَنْبِيَاءُ تَنَامُ أَعْيُنُهُمْ وَلَا تَنَامُ قُلُوبُهُمْ فَلَمْ يُكَلِّمُوهُ حَتَّى احْتَمَلُوهُ فَوَضَعُوهُ عِنْدَ بِئْرِ زَمْزَمَ فَتَوَلَّاهُ مِنْهُمْ جِبْرِيلُ فَشَقَّ جِبْرِيلُ مَا بَيْنَ نَحْرِهِ إِلَى لَبَّتِهِ حَتَّى فَرَغَ مِنْ صَدْرِهِ وَجَوْفِهِ فَغَسَلَهُ مِنْ مَاءِ زَمْزَمَ بِيَدِهِ حَتَّى أَنْقَى جَوْفَهُ ثُمَّ أُتِيَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ فِيهِ تَوْرٌ مِنْ ذَهَبٍ مَحْشُوًّا إِيمَانًا وَحِكْمَةً فَحَشَا بِهِ صَدْرَهُ وَلَغَادِيدَهُ يَعْنِي عُرُوقَ حَلْقِهِ ثُمَّ أَطْبَقَهُ (بخاري) باب قَوْلِهِ ( وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا ) كتاب التوحيد
عَنْ أَنَسِ رض أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ يَعْنِي ظِئْرَهُ فَقَالُوا إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقِعُ اللَّوْنِ قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرْئِي أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ(مسلم)
கருத்து - ஹலீமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிள்ளைகளுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளையாடிக் கொண்டிருந்த போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அங்கு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை படுக்க வைத்து அவர்களின் இருதயத்தை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து இது ஷைத்தானின் துண்டு என்று கூறி வெளியே எறிந்தார்கள்
இதைக் கண்ட அந்த சிறுவர்கள் தனது தாயாரிடம் முகமது யாரோ கொள்ளுகிறார்கள் என்று கூற பதட்டத்துடன் அவர்கள் ஓடி வருவதற்குள் இங்கே ஆன்மீக ஆபரேஷன் நடந்து முடிந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருவித பதட்டத்துடன் இருந்த நின்று கொண்டு இருந்தார்கள்
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சில் அந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதன் அடையாளத்தை நான் கண்டேன் என்று கூறினார்கள்
புறம் பேசுபவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் மிஃராஜில் நபியவர்களுக்கு காட்டப்பட்டது
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ (ابوداود)
சில மனிதர்களை நான் கண்டேன் அவர்களுடைய மிகவும் கூர்மையான நகங்களால் தங்களுக்கு தாங்களே தங்களுடைய உடம்பில் குத்திக் கிழித்துக் கொள்ளக் கூடியவர்களாக நான் கண்டு இவர்கள் யார் என்று நான் கேட்க இவர்கள்தான் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் அதாவது புறம் பேசியவர்கள் என்று எனக்கு பதில் கூறப்பட்டது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الْغِيبَةُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدْ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهَتَّهُ (ابوداود)
இருப்பதைப் பேசுவது தான் புறம். இல்லாததைப் பேசினால் இட்டுக்கட்டு.
வட்டி உண்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் மிஃராஜில் நபிகளாருக்கு காட்டப்பட்டது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجِ بُطُونِهِمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرَائِيلُ قَالَ هَؤُلَاءِ أَكَلَةُ الرِّبَا (ابن ماجة) بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا- كِتَاب التِّجَارَاتِ-
மிஃராஜ் உடைய பயணத்தில் சில மனிதர்களை நான் கண்டேன் அவர்களுடைய வயிறுகள் ஒரு அறை போன்று இருந்தது
அதற்குள் பாம்புகளும் விஷ ஜந்துக்களும் உள்ளே இருந்து அவரை தீண்டிக்கொண்டிருந்தன அவர் யார் என்று கேட்டபோது அவர்கள் தான் உலகில் வாழும் போது ஹராமான வட்டியின் மூலம் வயிற்றை நிரப்பி கொண்டவர்கள் என்று எனக்கு பதில் சொல் கூறப்பட்டது
عَنْ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَحَدٌ أَكْثَرَ مِنْ الرِّبَا إِلَّا كَانَ عَاقِبَةُ أَمْرِهِ إِلَى قِلَّةٍ (ابن ماجة) بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا- كِتَاب التِّجَارَاتِ
வட்டியினால் வரும் வருமானம் பார்ப்பதற்கு பெரிதாக இருந்தாலும் இறுதியில் அது நஷ்டத்தின் பக்கம் கொண்டு போய் சேர்க்கும்
மிஃராஜ் இரவில் பாலை நபி ஸல் அவர்கள் தேர்ந்தெடுத்ததும் அதன் படிப்பினைகளும்
ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ (مسلم) ومعناه والله أعلم اخترتَ علامة الاسلام والاستقامة وجعل اللبنَ علامة لكونه سهلا طيبا طاهرا سائغا للشاربين سليم العاقبة وأما الخمر فانها أم الخبائث وجالبة لأنواع من الشر فى الحال والمآل والله أعلم- قال الله تعالي وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ (66النحل)
படிப்பினை - பால் தூய்மையான பானம். என்பதால் இஸ்லாத்தை பாலுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. மாட்டிலிருந்து கறக்கப் படும்போது சுத்தமான பாலாக இருக்கிறது. பிறகு தான் அது பல வடிவங்களில் தயிர், மோர், வெண்ணெய், நெய், டீ, காஃபி, கேக், பால்கோவா என பல வடிவங்களில் மாறுகிறது அதேபோல் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கிறது அதன் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றுகிறார்கள் என்பதும் பாலின் பரிசுத்தத் தன்மையை மனிதர்கள் பல வடிவங்களில் மாற்றுகிறார்கள் என்பது போன்றாகும். மிஃராஜ் இரவில் பாலை தேர்ந்தெடுத்ததை பரிசுத்த இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததற்குச் சமமாக கூறப்பட்டுள்ளது.
பாலை கனவில் காண்பது கூட நல்ல விஷயங்களுக்கான அறிகுறியாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
عن ابْن عُمَرَ قَالَ قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَطْرَافِي وفي رواية مِنْ أَظْفَارِي فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ مَنْ حَوْلَهُ فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ (بخاري)-كتاب التعبير
மிஃராஜ் இரவில் இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மூன்று அற்புதமான பாக்கியங்கள்
1. ஐந்து நேரத் தொழுகைகள்
2. பகரா சூராவின் கடைசி இரண்டு வசனங்கள்
3. இணை வைக்காத மனிதர்களுக்கு அவர்களின் பெரும் பாவங்கள் அல்லாஹ் நாடினால் மன்னிக்கப்படுதல்
فَأُعْطِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ وَغُفِرَ لِمَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ مِنْ أُمَّتِهِ شَيْئًا الْمُقْحِمَاتُ (مسلم) بَاب فِي ذِكْرِ سِدْرَةِ الْمُنْتَهَى-كِتَاب الْإِيمَانِ ( المقحمات ) معناه الذنوب العظام الكبائر التي تهلك أصحابها وتوردهم النار وتقحمهم إياها والتقحم الوقوع في المهالك ومعنى الكلام من مات من هذه الأمة غير مشرك بالله غفر له المقحمات ]
خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ لَقِيتُ أَبَا مَسْعُودٍ عِنْدَ الْبَيْتِ فَقُلْتُ حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ فِي الْآيَتَيْنِ فِي سُورَةِ الْبَقَرَةِ فَقَالَ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ (مسلم) (بخاري) باب فَضْلُ الْبَقَرَةِ- فضائل القرآن (كفتاه ) حفظتاه من الشر ووقتاه من المكروه قيل أغنتاه عن قيام الليل وذلك لما فيهما من معاني الإيمان والإسلام والالتجاء إلى الله عز و جل والاستعانة به والتوكل عليه وطلب المغفرة والرحمة منه ]
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ بَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِىِّ صلى الله عليه وسلم سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِىٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلاَّ أُعْطِيتَهُ.(مسلم) باب فَضْلِ الْفَاتِحَةِ وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ وَالْحَثِّ عَلَى قِرَاءَةِ الآيَتَيْنِ مِنْ آخِرِ الْبَقَرَةِ.-كتاب صلاة المسافربن -
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அமர்ந்திருந்தபோது வானில் இருந்து ஒரு சப்தம் கேட்டது
அப்போது தன் தலையை உயர்த்திய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள் வானத்தின் இந்த கதவு இதற்கு முன்பு திறக்கப்படவே இல்லை அதன் வழியாக ஒரு வானவர் இறங்கி வந்தார் அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறினார் அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள் இந்த வானவர் இதற்கு முன்பு இந்த பூமிக்கு வந்ததே இல்லை என்று கூறினார்கள்
பிறகு அந்த மலக்கு சொன்னார் நபியே இரண்டு செய்திகளை கொண்டு நீங்கள் சுபச் செய்தி பெறுங்கள்
இதற்கு முன்பு எந்த நபிக்கும் இந்த பாக்கியம் வழங்கப்படவில்லை
முதலாவது பாத்திஹா சூரா
இரண்டாவது பகரா சூராவின் கடைசி வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளைக் கொண்டு துஆ செய்தால் அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றாமல் இருப்பதில்லை
என்று கூறினார்
عَنْ حُذَيْفَةَ قَالَ فُضِّلَتْ هَذِهِ الْأُمَّةُ عَلَى سَائِرِ الْأُمَمِ بِثَلَاثٍ جُعِلَتْ لَهَا الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَجُعِلَتْ صُفُوفُهَا عَلَى صُفُوفِ الْمَلَائِكَةِ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَا وَأُعْطِيتُ هَذِهِ الْآيَاتِ مِنْ آخِرِ الْبَقَرَةِ مِنْ كَنْزٍ تَحْتَ الْعَرْشِ لَمْ يُعْطَهَا نَبِيٌّ قَبْلِي (مسند أحمد)
உலகில் ஓடும் பிரபலமான நதிகளான நைல் நதி, யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி ஆகியவற்றின் பிறப்பிடங்களை நபி ஸல் அவர்கள் மிஃராஜில் பார்த்துள்ளார்கள். இதன் விளக்கம் பின்வருமாறு
وَفِي الْحَدِيثِ وَحَدَّثَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ رَأَى أَرْبَعَةَ أَنْهَارٍ يَخْرُجُ مِنْ أَصْلِهَا نَهْرَانِ ظَاهِرَانِ وَنَهْرَانِ بَاطِنَانِ فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا هَذِهِ الْأَنْهَارُ قَالَ أَمَّا النَّهْرَانِ الْبَاطِنَانِ فَنَهْرَانِ فِي الْجَنَّةِ...(مسلم) " فإذا في أصلها - أي في أصل سدرة المنتهى
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيْحَانُ وَجَيْحَانُ وَالْفُرَاتُ وَالنِّيلُ كُلٌّ مِنْ أَنْهَارِ الْجَنَّةِ (مسلم)
قال النووي : أن أصل النيل والفرات من الجنة ، وأنهما يخرجان من أصل سدرة المنتهى ، ثم يسيران حيث شاء الله ، ثم ينزلان إلى الأرض ، ثم يسيران فيها ثم يخرجان منها ، وهذا لا يمنعه العقل ، وقد شهد به ظاهر الخبر فليعتمد . ، وكذا سيحان وجيحان .
பூமியில் ஓடும் அத்தனை நதிகளும், ஆறுகளும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் தான். எனினும் இங்கே நான்கு நதிகளை முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் நைல் நதி எகிப்து, சூடான், உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளின் தண்ணீர் தேவையை பூர்த்து செய்து கொண்டிருக்கும் நதியாகும். அதேபோல் யூப்ரடீஸ் நதி சிரியா, ஈராக் உள்ளிட்ட எத்தனையோ நாடுகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது
மிஃராஜ் பயணத்தில் நபி ஸல் அவர்களிடம் மலக்குகள் மிகவும் வலியுறுத்திய ஹிஜாமா
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِمَلَإٍ مِنْ الْمَلَائِكَةِ إِلَّا كُلُّهُمْ يَقُولُ لِي عَلَيْكَ يَا مُحَمَّدُ بِالْحِجَامَةِ (ابن ماجة )
விண்ணுலகப் பயணத்தின் போது நான் கடந்து சென்ற வானவர்களில் எவரும்
ஹிஜாமாவைப் பற்றி வலியுறுத்தாமல் இருக்கவில்லை
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنْ كَانَ فِي شَيْءٍ مِمَّا تَدَاوَوْنَ بِهِ خَيْرٌ فَالْحِجَامَةُ (ابن ماجة
நீங்கள் சிகிச்சை செய்து கொள்ளும் முறைகளில் மிகச் சிறந்தது ஹிஜாமாவாகும்
- عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَ الْعَبْدُ الْحَجَّامُ يَذْهَبُ بِالدَّمِ وَيُخِفُّ الصُّلْبَ وَيَجْلُو الْبَصَرَ (ابن ماجة - بَاب الْحِجَامَةُ- كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي كَبْشَةَ الْأَنْمَارِيِّ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَحْتَجِمُ عَلَى هَامَتِهِ وَبَيْنَ كَتِفَيْهِ وَيَقُولُ مَنْ أَهْرَاقَ مِنْهُ هَذِهِ الدِّمَاءَ فَلَا يَضُرُّهُ أَنْ لَا يَتَدَاوَى بِشَيْءٍ لِشَيْءٍ (ابن ماجة
தொழுகை கடமையாக்கப்பட்ட இந்த இரவில் தொழுகையின் முக்கியத்துவத்தை உணரவேண்டும்
عَنِ ابْنِ عُمَرَ ،رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لا إِيمَانَ لِمَنْ لا أَمَانَةَ لَهُ ، وَلا صَلاةَ لِمَنْ لا طُهُورَ لَهُ ، وَلا دِينَ لِمَنْ لا صَلاةَ لَهُ ، إِنَّمَا مَوْضِعُ الصَّلاةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ (طبراني) عَنْ أَبِي هُرَيْرَةَ رض أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ صَلَاتُهُ فَإِنْ وُجِدَتْ تَامَّةً كُتِبَتْ تَامَّةً وَإِنْ كَانَ انْتُقِصَ مِنْهَا شَيْءٌ قَالَ انْظُرُوا هَلْ تَجِدُونَ لَهُ مِنْ تَطَوُّعٍ يُكَمِّلُ لَهُ مَا ضَيَّعَ مِنْ فَرِيضَةٍ مِنْ تَطَوُّعِهِ ثُمَّ سَائِرُ الْأَعْمَالِ تَجْرِي عَلَى حَسَبِ ذَلِكَ (ابن ماجة)
தொழுகையை விட வியாபாரத்தை பெரிதாக கருதுபவர்களுக்கு எச்சரிக்கை
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)التوبة
பொழுது போக்கான விஷயங்களால் தொழுகையை மறந்தவர்கள் ஸகர் எனும் நரகத்தில் இருப்பார்கள்
فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ (40) عَنِ الْمُجْرِمِينَ (41) مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ (43) وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ (44) وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ (45) وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ (46) حَتَّى أَتَانَا الْيَقِينُ (47)المدثر
கடும் குளிர் காலத்திலும் அதிகாலை எழுந்து உளூச் செய்து தொழுபவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (مسلم) باب فَضْلِ إِسْبَاغِ الْوُضُوءِ-كتاب الطهارة
إسباغ الوضوء على المكاره أي تثنية الوضوء وتثليثه في زمان البرد الشديد ، وذلك أن الإنسان يكره ويجد المشقة والعناء بصب الماء على الجسد فإذا كرر الصب في الوضوء فقد أسبغ ووفي وأكمل ولذلك مُدح ووُعد بهذا الأجر والثواب (شرح الترمذي)
பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்துகின்ற அமல்களின் வரிசையில் பனி காலத்திலும் உளூவைப் பரிபூரணமாக செய்வதின் சிறப்பைப் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக