ஒவ்வொரு வணக்கங்களிலும் அதைச் செய்வதற்காக எதிர் பார்த்துக் காத்திருப்பதிலும் அல்லாஹ் நன்மையை வைத்துள்ளான். குறிப்பாக சங்கையான ரமழானை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் நன்மை உண்டு.
தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் மிகுந்த நன்மை உள்ளது
عَنْ أَنَسِ رض أَنَّ هَذِهِ الْآيَةَ{ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنْ الْمَضَاجِعِ } نَزَلَتْ فِي انْتِظَارِ الصَّلَاةِ الَّتِي تُدْعَى الْعَتَمَةَ(العشاء (ترمذي) سورة السجدة
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ احْتُبِسَ عَنَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ عَنْ صَلَاةِ الصُّبْحِ حَتَّى كِدْنَا نَتَرَاءَى عَيْنَ الشَّمْسِ فَخَرَجَ سَرِيعًا فَثُوِّبَ بِالصَّلَاةِ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَجَوَّزَ فِي صَلَاتِهِ فَلَمَّا سَلَّمَ دَعَا بِصَوْتِهِ فَقَالَ لَنَا عَلَى مَصَافِّكُمْ كَمَا أَنْتُمْ ثُمَّ انْفَتَلَ إِلَيْنَا ثُمَّ قَالَ أَمَا إِنِّي سَأُحَدِّثُكُمْ مَا حَبَسَنِي عَنْكُمْ الْغَدَاةَ أَنِّي قُمْتُ مِنْ اللَّيْلِ فَتَوَضَّأْتُ وَصَلَّيْتُ مَا قُدِّرَ لِي فَنَعَسْتُ فِي صَلَاتِي فَاسْتَثْقَلْتُ فَإِذَا أَنَا بِرَبِّي تَبَارَكَ وَتَعَالَى فِي أَحْسَنِ صُورَةٍ ..... فَقَالَ يَا مُحَمَّدُ قُلْتُ لَبَّيْكَ رَبِّ قَالَ فِيمَ يَخْتَصِمُ الْمَلَأُ الْأَعْلَى قُلْتُ فِي الْكَفَّارَاتِ قَالَ مَا هُنَّ قُلْتُ مَشْيُ الْأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ وَالْجُلُوسُ فِي الْمَسَاجِدِ بَعْدَ الصَّلَوَاتِ وَإِسْبَاغُ الْوُضُوءِ فِي الْمَكْرُوهَاتِ قَالَ ثُمَّ فِيمَ قُلْتُ إِطْعَامُ الطَّعَامِ وَلِينُ الْكَلَامِ وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ قَالَ سَلْ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا حَقٌّ فَادْرُسُوهَا ثُمَّ تَعَلَّمُوهَا (ترمذي
ஒருநாள் நபி ஸல் அவர்களுக்கு சுப்ஹு தொழுகை சற்று தாமதமாகி விட்டது. சூரியனை நாங்கள் பார்க்கும் அளவுக்கு நேரம் கடந்த பின் வேகமாக வெளியேறினார்கள். இகாமத் சொலப்பட்டது. நபி ஸல் சுருக்கமாகத் தொழ வைத்தார்கள். சலாம் கொடுத்தவுடன் உங்கள் வரிசையில் அப்படியே அமருங்கள் என்று கூறி எங்கள் பக்கம் திரும்பி நான் ஏன் இன்று தாமதமாகி விட்டேன் தெரியுமா நேற்றிரவு நான் இரவில் எழுந்து உளூச் செய்து அல்லாஹ் நாடிய வரை தொழுதேன். அப்போது என்னையும் மீறி சிறு தூக்கம் ஏற்பட்டது. சற்று உறங்கினேன். அப்போது அல்லாஹ்வை என்னுடைய கனவில் அழகிய தோற்றத்தில் பார்த்தேன். அப்போது அல்லாஹ் என்னிடம் மனிதர்களின் எந்த அமல்களை எடுத்துச் செல்வதற்கு மலக்குகள் போட்டி போடுகிறார்கள் தெரியுமா என்று கேட்க, அதற்கு நான் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆக்கப்படும் நற்காரியங்களில் என்று கூறினேன். அவைகள் என்னென்ன என்று அல்லாஹ் கேட்க, அதற்கு நான் ஜமாஅத் தொழுகைக்காக நடந்து செல்வது. ஒரு தொழுகை முடிந்த பின்பு அடுத்த தொழுகைக்காக மஸ்ஜிதில் காத்திருப்பது. (குளிர் போன்ற) சிரமமான நேரத்திலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்றுவது என்று கூற, மீண்டும் அல்லாஹ் என்னிடம் வேறு எவற்றில் மலக்குகள் போட்டி போடுகிறார்கள் தெரியுமா என்று கேட்க, அதற்கு நான் “உணவளிப்பது, மிருதுவாகப் பேசுவது, மனிதர்கள் உறங்கும் போது இரவில் எழுந்து தொழுவது” என்று நான் கூறினேன். பின்பு அல்லாஹ் தன்னிடம் ஏதேனும் கேட்கும்படி கூற, நான் இந்த துஆவைக் கேட்டேன். யாஅல்லாஹ் நல்லதைச் செய்வதற்கும், தீமையை விடுவதற்கும், ஏழைகளை நேசிப்பதற்கும் தவ்ஃபீகை உன்னிடம் கேட்கிறேன். என்னை மன்னிப்பதையும் என் மீது இரக்கம் காட்டுவதையும் உன்னிடம் கேட்கிறேன். குழப்பங்களின் மூலம் இந்த உம்மத்தை நீ சோதிக்க நாடினால் அத்தகைய குழப்பங்களில் சிக்குவதற்கு முன்பே என்னை உன்னிடம் அழைத்துக் கொள். யாஅல்லாஹ் உன்னை நேசிப்பதையும், உன்னை நேசிப்பவர்களை நான் நேசிப்பதையும், உன்னை நேசிப்பதை நெருக்கமாக்கி வைக்கும் நற்செயலையும் உன்னிடம் கேட்கிறேன்.
படிப்பினை- பின்பு நபிஸல் அவர்கள் நான் கண்ட கனவு உண்மை.இந்த துஆவை ஓதுங்கள். இதன் கருத்தையும் அறியுங்கள் என்றார்கள். மக்களுக்கு மார்க்கத்தைப் புரிய வைப்பதற்காக எப்படி நபிகளாரிடம் ஜிப்ரயீல் அலை கேள்வி கேட்டுப் புரிய வைத்தார்களோ அதுபோல அல்லாஹ் இங்கே நபி ஸல் அவர்களிடமே கேள்வி கேட்டு, பதிலை வரவழைத்துப் புரிய வைத்துள்ளான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَم ْ يَقُمْ أَوْ يُحْدِثْ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ (مسند أحمد)
தொழுகை முடிந்தும் அந்த இடத்திலேயே காத்திருப்பவருக்காக மலக்குகள் துஆ செய்கின்றனர். அவர் எழாமல் இருக்கும் வரை அல்லது உளூ முறியாமல் இருக்கும் வரை இச்சிறப்பு உண்டு.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : صَلَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ ، فَرَجَعَ مَنْ رَجَعَ ، وَعَقَّبَ مَنْ عَقَّبَ ، فَجَاءَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يُثَوِّبَ النَّاسُ بِصَلاةِ الْعِشَاءِ ، فَقَالَ : أَبْشِرُوا أَبْشِرُوا ، هَذَا رَبُّكُمْ تَبَارَكَ وَتَعَالَى قَدْ فَتَحَ بَابًا مِنْ أَبْوَابِ السَّمَاءِ يُبَاهِيَ بِكُمُ الْمَلائِكَةَ ، يَقُولُ : انْظُرُوا إِلَى عِبَادِي قَضَوْا فَرِيضَةً ، وَهُمْ يَنْتَظِرُونَ أُخْرَى.( : مسند البزار
ஒருநாள் மஃரிப் தொழுகை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்பவர்கள் சென்று விட்டனர். மஸ்ஜிதில் தங்கியவர்கள் தங்கினர். அப்போது இஷாவுக்கு இகாமத் சொல்லப்படும் முன்பு அங்கு நபி ஸல் அங்கு வருகை தந்து நீங்கள் சுபச் செய்தி பெறுங்கள். இதோ அல்லாஹ் தஆலா வானத்தின் ஒரு வாசலை உங்களுக்காகத் திறந்துள்ளான். மலக்குகளிடம் உங்களைப் பற்றிப் பெருமையாக எனது அடியார்களைப் பாருங்கள் ஒரு ஃபர்ளை முடித்து விட்டு அடுத்த ஃபர்ளுக்காக மஸ்ஜிதில் காத்திருக்கிறார்கள் என்று கூறி நம்மைப் பெருமைப் படுத்துகிறான்.
إنه إذا كان يوم القيامة يحشر قوم وجوههم كالكوكب الدري فتقول لهم الملائكة ما كانت أعمالكم فيقولون كنا إذا سمعنا الأذان قمنا إلى الطهارة لا يشغلنا غيرها ثم تحشر طائفة وجوههم كالأقمار فيقولون بعد السؤال كنا نتوضأ قبل الوقت ثم تحشر طائفة وجوههم كالشمس فيقولون كنا نسمع الأذان في المسجد (احياء علوم الدين
மறுமை நாளில் சிலரின் முகங்கள் நட்சத்திரங்களைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் நாங்கள் பாங்கு சப்தம் கேட்டவுடன் வேறு வேலைகளில் ஈடுபடாமல் உடன் எழுந்து உளூச் செய்வோம். என்று கூறுவர். இன்னும் சிலரின் முகங்கள் சந்திரனைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்பர். அதற்கு அவர்கள் நாங்கள் தொழுகை வரும் முன்பே உளூச் செய்து தயாராக இருப்போம். பாங்கு சப்தம் கேட்டதும் உடனே மஸ்ஜிதுக்கு விரைவோம் என்று கூறுவர். இன்னும் சிலரின் முகங்கள் சூரியனைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்பர். அதற்கு அவர்கள் நாங்கள் முன்பே உளூச் செய்து தயாராகி பாங்கு சொல்லும் போது மஸ்ஜிதுக்குள் இருப்போம் என்று கூறுவர்.
ரமழானை எதிர்பார்ப்பதிலும் மிகுந்த நன்மை உண்டு
كان الصحابة -رضي الله عنهم- يحرصون أشدّ الحرص على الاستعداد لشهر رمضان استعداداً حقيقيّاً؛ فيتوجّهون إلى الله بالدعاء ستّة أشهرٍ أن يُبلّغهم الله رمضان، ثمّ يدعونه ستّة أشهرٍ أخرى أن يتقبّل منهم صيامهم، وطاعاتهم، وعباداتهم، فبذلك يكون العام لديهم كأنّه كلّه شهر رمضان،[٦]
ஸஹாபாக்கள் ரமழானை எதிர்பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பே ரமழானை எதிர்பார்ப்பார்கள். பின்பு ரமழான் வந்த பின்பு அது முடிந்து ஆறு மாதங்கள் வரை அந்த ரமழானில் செய்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக துஆ செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர்களுக்கு வருடம் முழுவதும் ரமழானாகவே ஆகி விடும்.
ரமழான் வரை நமக்கு அல்லாஹ் ஆயுளை நீளமாக்கிட துஆ செய்ய வேண்டும்
عَن أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد
இரு சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில் ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார். தல்ஹா ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப் பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள் இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார் என்றார்கள்.
ரமழானுக்கு பல மாதங்களுக்கு முன்பே ரமழானுக்காக சுவனம் அலங்கரிக்கப் படுகிறது
عَنْ أَبِي مَسْعُودٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهَذَا حَدِيثُ أَبِي الْخَطَّابِ - ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَاتَ يَوْمٍ وَقَدْ أَهَلَّ رَمَضَانُ ، فَقَالَ : لَوْ يَعْلَمُ الْعِبَادُ مَا رَمَضَانُ لَتَمَنَّتْ أُمَّتِي أَنْ يَكُونَ السَّنَةَ كُلَّهَا ، فَقَالَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ : يَا نَبِيَّ اللهِ ، حَدِّثْنَا ، فَقَالَ : إِنَّ الْجَنَّةَ لَتَزَيَّنُ لِرَمَضَانَ مِنْ رَأْسِ الْحَوْلِ إِلَى الْحَوْلِ ، فَإِذَا كَانَ أَوَّلُ يَوْمٍ مِنْ رَمَضَانَ هَبَّتْ رِيحٌ مِنْ تَحْتِ الْعَرْشِ ، فَصَفَقَتْ وَرَقَ الْجَنَّةِ ، فَتَنْظُرُ الْحُورُ الْعِينُ إِلَى ذَلِكَ ، فَيَقُلْنَ : يَا رَبِّ اجْعَلْ لَنَا مِنْ عِبَادِكَ فِي هَذَا الشَّهْرِ أَزْوَاجًا تُقِرُّ أَعْيُنَنَا بِهِمْ ، وَتُقِرُّ أَعْيُنَهُمْ بِنَا ، قَالَ : فَمَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا مِنْ رَمَضَانَ إِلاَّ زُوِّجَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ فِي خَيْمَةٍ مِنْ دُرَّةٍ مِمَّا نَعَتَ اللَّهُ : {حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ} [الرحمن] عَلَى كُلِّ امْرَأَةٍ سَبْعُونَ حُلَّةً ، لَيْسَ مِنْهَا حُلَّةٌ عَلَى لَوْنِ الأُخْرَى ، (ابن خزيمة
குறிப்பு -- ஹூருல் ஈன் என்ற வார்த்தை சுவனத்து மங்கைகள், சுவனத்தின் ஆடவர்கள் இருவருக்கும் பொருந்தும்
ரமழானுக்காக முன்பே தயாராகுதல்,
ரமழானில் அமல் செய்வதற்கான நேரங்களை இப்போதே திட்டமிடுதல்
முக்கியமான ஒரு விழாவை நாம் நடத்தப்போகிறோம் என்றால் அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பே விழாவின் பொறுப்புதாரிகள் ஒன்று கூறி இத்தனை மணிக்கு விழா ஆரம்பம். இன்னார் இன்னார் இவ்வளவு நேரம் பேசுவார் இத்தனை மணிக்கு விழா முடியும் என்றெல்லாம் திட்டமிடுகிறோம். இவ்வாறு திட்டமிடப்படும் விழாக்களில் சற்று முன் பின் ஏற்பட்டாலும் விழாவை நல்ல முறையில் நடத்துவதற்கு இந்த திட்டமிடுதல் முக்கியப் பங்காற்றுகிறது.
நேரங்களை, காலங்களை திட்டமிடுதல் அல்லாஹ்வின் வழிமுறை
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ (3)يونس عن سعيد بن جبير رضي الله عنهما . إنما خلقها في ستة أيام وهو يقدر على أن يخلقها في لحظة ، تعليماً لخلقه الرفق والتثبت (تفسير الرازي
அல்லாஹ் ஆகு என்றால் உடனே அனைத்தும் ஆகி விடும். எனினும் திட்டமிட்டு, நேரங்களை பங்கு வைத்து செயலாற்றுவதை நமக்குக் கற்றுத் தருவதற்காக அல்லாஹ் வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்தான்.
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ..... (مسلم)
அல்லாஹ் பூமியை சனிக்கிழமையில் படைத்தான்.அதில் மலைகளை அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமையில் படைத்தான் பூமியில் மரங்களை அல்லாஹ் திங்கள்கிழமையில் படைத்தான். மக்ரூஹானவைகளை செவ்வாய்க்கிழமையில் படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்தான். பூமியில் பிற உயிரினங்களை வியாழக்கிழமை யில் படைத்தான்
மனிதனை அதாவது ஆதம் அலை அவர்களை வெள்ளிக்கிழமை அசருக்குப் பின்பு அல்லாஹ் படைத்தான்.
வருகிற ரமழானை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த ஒரு மாதத்தின் ஒவ்வொரு வினாடிகளும் நமக்குப் பொன்னானவை என விளங்கி ஒவ்வொரு அமலுக்கும் ஒரு நேரத்தை சரியான முறையில் ஒதுக்கி அமல்களில் ஈடுபட்டால் ரமழானின் பலன்களை நிறைய அடையலாம். உதாரணமாக ரமழான் என்பது துஆக்கள் அதிகம் ஏற்கப்படும் மாதம் என்பதால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் தஹஜ்ஜுதுக்குப் பிறகும் பத்து நிமிடமேனும் துஆ செய்ய வேண்டும் என்று நேரம் நிர்ணயித்தால் ரமழான் முழுக்க முப்பது மணி நேரம் துஆ செய்தவர்களாக நாம் ஆகி விடுவோம். இது மாதிரி ஒவ்வொரு அமலுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே ஆக்கப்படும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)أي اشتغالا من غير منفعة ولم أسد فقرك أي لا من شغلك ولا من غيره وحاصله أنك تتعب نفسك بكثرة التردد في طلب المال ولا تنال إلا ما قدرت لك من المال في الأزل وتحرم عن غنى القلب لترك عبادة الرب (مرقاة)
அல்லாஹ் கூறுகிறான்- ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நேரத்தை (நிர்ணயம் செய்து)ஒதுக்கு! அவ்வாறு செய்தால் உனக்குள் (பணக்காரத்தனத்தை உருவாக்குவேன்) பிறரிடம் தேவையாகாத நிலையை ஏற்படுத்துவேன். உன் வறுமையைப் போக்குவேன். அவ்வாறு நீ நேரம் ஒதுக்கா விட்டால் அல்லாஹ்வை வணங்க நேரமில்லை என்று கூறி விட்டால் உன் கைகள் நிறைய வேலைப் பழுவை ஏற்படுத்தி நேரமில்லாமல் ஆக்கி விடுவேன். உன் வறுமையையும் போக்க மாட்டேன்.
விளக்கம்- இப்படிப்பட்டவரின் நேரங்கள் தேவையில்லாமல் வீணாகும். குறுகிய நேரத்தில் முடிய வேண்டிய வேலையை அல்லாஹ்வே நீளமாக்கி விடுவான். இறைவனை வணங்க நேரம் ஒதுக்கி இலகுவான முறையில் அடைய வேண்டிய வருமானத்தை இவன் மிகவும் சிரமப்பட்டு அடைவான். நிறைய சம்பாதித்தாலும் மனதளவில் ஏழையாகவே இருப்பான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ (ابن ماجة
பொருள் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. மன நிறைவு உள்ளவனே பணக்காரன்.
ரமழானில் வேலைப் பழுவை அதிகமாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக இப்போதே சில அலுவல்களை முன் கூட்டியே முடிப்பது முடியுமானால் முடிப்பது நல்லது.
மழைக்காலம் வருவதற்கு முன்பே தேவையான இரையை சேமித்து வைத்துக் கொள்ளும் எறும்பு.
எறும்புகள் வெயில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்டநாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன. தானியங்கள் முளைவிட்டு வளரும்போது அவற்றின் அடிவேர்களை அறுத்து விடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போது அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. அடிக்கடி நின்றும், திரும்பியும் வேகமாக ஊர்ந்துசெல்லும் எறும்பு தன் கூட்டில் இருந்து 200 மீட்டர் (655 அடி)பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆற குளம் குட்டை ஏரி மரம் கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன்வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது ஆச்சரியம்.
ரமழானுக்காக உடல் ரீதியாக நம்மைத் தயார் படுத்திக் கொள்ளுதல்
உடல் ரீதியாக நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வதற்காக ரமழான் துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே வேறு நோன்புகள் வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. ரமழானை கண்ணியப் படுத்துவதற்காகவும் இவ்வாறு நபி ஸல் கூறியிருக்கலாம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلَا تَصُومُوا (ابوداود)
கருத்து ஷஃபான் நடுப்பகுதி முடிந்து விட்டால் நோன்பு வைக்க வேண்டாம்
عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : إذا بقي نصف شعبان ، فلا تصوموا " (شرح السنة)
ஷஃபானின் ஒரு பாதி முடிந்து மற்றொரு பாதி மீதம் இருக்கும்போது நோன்பு வைக்காதீர்கள்.
ரமழானில் பெரும்பாலான நேரங்களை துணிக்கடைகளில் செலவு செய்பவர்கள் கவனிக்க..
சிலர் புனிதமான ரமழானில் அதிகம் அமல் செய்வதற்கு பதிலாக அதிக நேரங்களை துணிக்கடையில் செலவு செய்வார்கள். கணவனுக்கு ஒருநாள் மனைவிக்கு மற்றொரு நாள் பிள்ளைகளுக்கு மூன்றாவது நாள் என பெரும்பாலான நேரங்களை துணிக்கடையில் செலவு செய்வார்கள். அதிலும் குறிப்பாக கடைசி பத்து நாட்களில் தராவீஹின் நேரத்திலும் கூட துணிக்கடைகளில் கூட்டத்தைப் பார்க்க முடியும். இது துர்பாக்கியமான செயல். ரமழான் என்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாத செயலாகும். எனவே ரமழான் வரும் முன்பே துணிமணிகள் எடுத்து விடுவது நல்லோர்களின் செயலாகும்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ (بخاري
அறியாமைக் காலத்திலேயே வணக்கத்தின் நாட்களில் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை விட்டு விடுவது அரபிகளின் பழக்கமாக இருந்தது
كان ناس من العرب لا يتّجرون في أيام الحج فإذا دخل العشر كفّوا عن الشراء والبيع فلم يقم لهم سوق وكانوا يسمون من يخرج إلى الحجّ ومعه تجارة : الداج (الكشف والبيان) قال ابن عباس رضي الله عنه : كان ناس من العرب يحترزون من التجارة في أيام الحج وإذا دخل العشر بالغوا في ترك البيع والشراء بالكلية ، وكانوا يسمون التاجر في الحج : الداج ويقولون : هؤلاء الداج ، وليسوا بالحاج ، ، فأنزل الله تعالى هذه الآية واباح التجارة في الحج .(لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُواْ فَضْلاً مِّن رَّبِّكُمْ) البقرة (198) (تفسير الرازي
الداج : هم الذين مع الحجاج من الأجراء والمكارين والأعوان والخدم ، وظاهر أنهم كانوا لا يحجون مع الناس .
அரபு மக்கள் ஹஜ்ஜுடைய காலங்கள் வந்து விட்டால் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை முற்றிலும் நிறுத்தி விடுவார்கள். மேலும் அவ்வாறு ஹஜ்ஜுடைய காலங்களில் கொடுக்கல் வாங்கல் செய்பவர்களை தாஜ் என்ற அடைமொழியுடன் அதாவது ஹஜ்ஜுக்கு வராமல் சம்பளத்திற்கு வேலை செய்ய வந்திருப்பவர்கள் என்ற பெயருடன் அழைப்பார்கள். இது பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அப்போது அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கி, அவசியத்திற்கு மட்டும் வியாபாரம் செய்தால் தவறில்லை என்று உணர்த்தினான்.
( وَيُكْرَهُ أَنْ يَنْتَفِلَ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ )
لِأَنَّ الْكَرَاهَةَ كَانَتْ لِحَقِّ الْفَرْضِ لِيَصِيرَ الْوَقْتُ كَالْمَشْغُولِ بِهِ لَا لِمَعْنًى فِي الْوَقْتِ (هداية
ஹிதாயா நூலில் ஃபஜ்ருக்குப் பின்னாலும் அசருக்குப் பின்னாலும் நஃபில் தொழுவது மக்ரூஹ் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் அதன் விளக்கம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அந்த நேரம் தொழுகைக்குத் தகுதியுள்ள நேரம் தான். உச்சம், உதயம், அஸ்தம் போன்று தொழுவது அறவே தடுக்கப் பட்ட நேரம் அல்ல. இருந்தாலும் ஃபஜ்ருக்குப் பின்னாலும் அசருக்குப் பின்னாலும் நஃபில் தொழுவது மக்ரூஹ் என்று கூறப்பட்டதற்குக் காரணம் அந்த நேரம் முழுவதும் ஃபஜ்ருக்கு மட்டுமே உரித்தானது அந்த நேரங்களில் வேறு நஃபில் தொழுகைகளில் ஈடுபட்டாலும் கூட அது ஃபர்ளின் கண்ணியத்திற்கு இடையூறாக அமைந்து விடும் என்பதால் மக்ரூஹ் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு முக்கியப் பிரமுகர் வருகிறார் என்றால் அதற்காக பல ஏற்பாடுகள் நடைபெறும். அவரின் வாகனம் செல்வதற்கு சிறிதளவு இடம் போதும் என்றிருந்தாலும் நிறைய இடங்கள் காலி செய்து வைக்கப்படும் இதுவெல்லாம் அவருடைய கண்ணியத்தைக் கருதியே செய்யப்படும். அதுபோல் தான் மேலே உள்ள ஹிதாயாவின் சட்டம். அதுபோல் ரமழானில் ரமழான் சம்பந்தப்பட்ட அமல்களுக்காக அதிக நேரங்கள் கொடுத்து நம் அவசிய வேலைகளுக்காக சிறிதளவு நேரத்தை மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நல்லது
பொருளாதார ரீதியாக தயார் படுத்திக் கொள்ளுதல்
சிலருக்கு ரமழானில் நிறைய தர்மம் செய்யலாம் என்ற ஆர்வம் இருக்கலாம். ஆனால் அவருடைய வருமானம் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அவர் இப்போதிருந்தே மிச்சப்படுத்தினால் இயன்றவரை தர்மம் செய்ய அவரால் இயலும்.வசதியற்றவர் தன்னால் இயன்றவரை சிறிது தர்மம் செய்தாலும் அல்லாஹ்விடம் நிறைய நன்மைகளைப் பெற்றுத்தரும்
عن بن عباس كان يقول : كان رسول الله صلى الله عليه و سلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن قال فرسول الله صلى الله عليه و سلم حين يلقاه جبريل أجود من الريح المرسلة (نسائ
நபி ஸல் அவர்கள் பொதுவாகவே அதிகம் தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள். குறிப்பாக ஜிப்ரயீல் அலை அவர்களை அதிகம் சந்திக்கும் மாதமான ரமழான் வந்து விட்டால் இன்னும் அதிகமாக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களை சந்தித்து அதுவரை இறங்கிய குர்ஆனை ஓதிக் காட்டுபவர்களாக இருந்தார்கள். அத்தகைய ரமழானில் நபி ஸல் அவர்கள் புயல் காற்றை விட வேகமாக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள்.
நிறைய சொத்துக்களுக்கு ஜகாத் தர வேண்டியவர்கள் ஜகாத்துடைய கணக்குகளை
ரமழான் வரும் முன்பே சரி பார்த்துக் கொண்டால் ரமழானில் அந்த வேலை மிச்சமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக