வியாழன், 20 பிப்ரவரி, 2025

நோன்பு & பிறை

 கடமைகளில் அல்லாஹ் வழங்கிய சலுகைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. சில கட்டளைகள் கடமையாக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வரும் முன்பே மாற்றியமைக்கப் பட்டன. இதற்கு உதாரணம் தொழுகை. முதலில் 50 நேரங்கள் கடமையாக்கப் பட்டு பின்பு நடைமுறைக்கும் வரும் முன்பே ஐந்தாக குறைக்கப்பட்டது.                                                                       

 2.சில கட்டளைகள் கடமையாக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்த பின்பு ஒரே ஒரு நபர் மட்டும் அதை செயல் படுத்திய நிலையில் மாற்றியமைக்கப் பட்டன. இதற்கு உதாரணமாக பின்வரும் வசனத்தைக் கூறலாம்.                                          

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً (12) أَأَشْفَقْتُمْ أَنْ تُقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَاتٍ فَإِذْ لَمْ تَفْعَلُوا وَتَابَ اللَّهُ عَلَيْكُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (13) المجادلة

عن مجاهد ، في قوله تعالى : ( فقدموا بين يدي نجواكم صدقة قال : أمروا أن لا يناجي أحد النبي صلى الله عليه وسلم حتى يتصدق بين يدي ذلك ، فكان أول من يتصدق بين يدي ذلك علي بن أبي طالب فناجاه ، فلم يناجه  أحد غيره ، ثم نزلت الرخصة ( أأشفقتم أن تقدموا بين يدي نجواكم .(تفسير  الصنعاني )

இறைத் தூதரிடம் அடிக்கடி வந்து எதையேனும் கேட்பதைக் கட்டுப் படுத்துவதற்காக அல்லாஹ் தஆலா பின்வருமாறு வசனம் இறக்கினான். இனி யாரேனும் இறைத்தூதர் ஸல் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஏதேனும் பேசுவதாக இருந்தால் அதற்கு முன்பு யாரேனும் ஏழைக்கு தர்மம் செய்து விட்டு வர வேண்டும் என அல்லாஹ் உத்தரவிட்டான். இதனடிப்படையில்  ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் இரகசியம் பேசுவதற்காக அவ்வாறு தர்ம ம் செய்து விட்டு வந்து நபி ஸல் அவர்களிடம் பேசினார்கள். அத்தோடு அல்லாஹ் உம்மத்தின் சிரம ம் கருதி அந்த சட்டத்தை மாற்றியமைத்து அடுத்த வசனத்தை இறக்கி விட்டான்.            

 எனவே தான் இதைக் குறித்து விரிவுரையாளர்கள் கூறும்போது குர்ஆனின் ஒரு வசனத்தைக் கொண்டு ஒரேயொருவர் மட்டும் செயல் பட்டுள்ளார். அதற்கு முன்பும் யாரும் அதை செயல் படுத்தவில்லை. அதற்குப் பின்பும் யாரும் செயல் படுத்தவில்லை. அது யார் என்று விடுகதை போன்று கேட்பார்கள். இந்த உம்மத்தின் சலுகைக்காகவே அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது.             

3.இன்னும் சில கட்டளைகள் கடமையாக்கப் பட்டு அவை நடைமுறைக்கு வந்து குறிப்பிட்ட காலம் வரை அதை மக்கள் செயல்படுத்திய பின்பு மக்களின் சிரமம் கருதி  பின்பு மாற்றியமைக்கப்பட்டன. இதற்கு உதாரணம் நோன்பு.                

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ (البقرة

عن البراء قال: كان أصحاب محمد صلى الله عليه وسلم إذا كان الرجل صائمًا فنام قبل أن يفطر، لم يأكل إلى مثلها، وإنّ قيس بن صرمة الأنصاري كان صائمًا، وكان توجَّه ذلك اليوم فعمِل في أرضه، فلما حضر الإفطارُ أتى امرأته فقال: هل عندكم طعام؟ قالت: لا ولكن أنطلق فأطلب لك. فغلبته عينه فنام، وجاءت امرأته قالت: قد نمت! فلم ينتصف النهارُ حتى غُشي عليه، فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم، فنزلت فيه هذه الآية:"أحِلَ لكم ليلة الصيام الرفث إلى نسائكم" إلى"من الخيط الأسود" ففرحوا بها فرحًا شديدًا الكتاب (: جامع البيان في تأويل القرآن)

كَانَ عُمَرُ قَدْ أَصَابَ مِنَ النِّسَاءِ بَعْدَ مَا نَامَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَذَكَرَ لَهُ ذَلِكَ ; فَأَنْزَلَ اللهُ (أُحِلَّ لَكُمْ) إِلَى قَوْلِهِ : (ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ)

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் மக்கள் இஃப்தார் நேரத்தில் நோன்பு திறந்த பிறகு தூங்காமல் இருக்கும் வரை தான் எதுவும் சாப்பிட அனுமதி உண்டு. தூங்கி விட்டால் அவ்வளவு  தான். அடுத்த நாள் இஃப்தார் வரை எதுவும் உண்ண முடியாது அதாவது சஹர் நேரத்தில் எழுந்து சாப்பிட அனுமதியில்லை. ரமழானின் இரவு நேரங்களில் மனைவியுடன் சேர அனுமதி இல்லை. இவ்வாறிருக்க கைஸ் ரழி எனும் நபித்தோழர் கடினமான வயல் வேலை செய்பவர். அவர் நோன்பு வைத்திருந்தார். சாப்பிட்டு ஒருநாள் ஆன நிலையில் அடுத்த நாள் நோன்பு திறக்க வீட்டுக்கு வந்தார். அந்த நேரம் பார்த்து வீட்டில் எதுவும் இல்லை. அவரது மனைவி இன்னும் சற்று நேரத்தில் நான் தயாரிக்கிறேன். அதற்கு முன்பு நீங்கள் தூங்கி விட வேண்டாம் என்று கூறியும் அவர் களைப்பின் காரணமாக தூங்கி விட்டார். வந்து பார்த்த மனைவி மிகவும் கவலையடைந்தார். இனி அவர் சாப்பிட வேண்டுமானால் அடுத்த நாள் இஃப்தார் நேரம் தான். இந்நிலையில் அவர் அத்துடனே அடுத்த நாள்  வயல் வேலைக்குப் புறப்பட்டார். பசி தாங்க முடியாமல் மயக்கமுற்றுக் கீழே விழுந்து விட்டார். இதுபோல் உமர் ரழி அவர்களும் உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாமல் ரமழானின் இரவில் மனைவியுடன் உறவு கொண்டு விட்டார்கள். இவ்விரண்டையும் நபிஸல் அவர்கள் கேள்விப்பட்டார்கள். அதன் பின்பு  தான் மேற்படி வசனம் இறங்கியது. ஃபஜ்ருடைய நேரம் வரும் வரை உண்ணலாம். பருகலாம். உறவு கொள்ளலாம் என்ற வசனம் இறங்கியது.                          

படிப்பினை- வணக்கங்களில் சலுகை வழங்கப்படுவதன் நோக்கம் அதை முறையாக நாம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். 



நோன்பு சிறந்த வணக்கம் என்பதால் தான் தன்னிடம் உரையாட வரும்போது 

நோன்பாளியாக வர மூஸா நபிக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்

وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142)الاعراف

قَالَ الْمُفَسِّرُونَ فَصَامَهَا مُوسَى عَلَيْهِ السَّلَام وَطَوَاهَا فَلَمَّا تَمَّ الْمِيقَات اِسْتَاك بِلِحَاءِ شَجَرَة فَأَمَرَهُ اللَّه تَعَالَى أَنْ يُكْمِل الْعَشَرَة أَرْبَعِينَ (تفسير  ابن كثير

விளக்கம்- அல்லாஹ் கூறியது போன்றே நோன்பே திறக்காமல் ஸ்வ்முல் விசால்  எனப்படும் தொடர் நோன்பை  நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் நிரைவேற்றினார்கள். கடைசியில் அல்லாஹ்விடம் உரையாடப் போகிறோம் என்று கருதி மிஸ்வாக் செய்தார்கள். அல்லாஹ் அதைக் கண்டித்தான். மிஸ்வாக் செய்த தற்காவே இன்னும் 10 நாட்கள் நோன்பு திறக்காமல் நோன்பு நோற்கும்படியும் அதன் பிறகு மிஸ்வாக் செய்யாமல் தன்னிடம் உரையாட வரும்படியும் அல்லாஹ் உத்தரவிட்டான். 

தன் சமூகம் காளை மாட்டை வணங்கியதால் ஏற்பட்ட கோபத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் தாம் வாங்கி வந்த தவ்ராத் ஏடுகளை கோபத்தில் கீழே போட்டு  உடைத்த போது அதற்கு அல்லாஹ் நோன்பையே  பரிகாரமாக ஆக்கினான். அதற்காக மீண்டும் நாற்பது நோன்புகள் வைக்கும்படி அல்லாஹ் கூறினான். மற்றொரு ரிவாயத்தில் எத்தனை துண்டுகளாக உடைந்ததோ  அத்தனை நோன்புகளை அல்லாஹ் கடமையாக்கினான். நோன்பு வைக்க வைக்க அவை ஒவ்வொன்றாக ஒன்று சேர்ந்த து.  மூஸா அலை வைத்த ஒவ்வொரு  நோன்பின் போதுஅவை மீண்டும் ஒன்று சேருவதற்கு 

وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وَأَلْقَى الْأَلْوَاحَ (150) الاعراف

قال ابن عباس : لما ألقى موسى عليه السلام الألواح تكسرت فصام أربعين يوماً ، فأعاد الله تعالى الألواح   (تفسير الرازي

நோன்பின் இன்பமான அனுபவத்தை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழி அவர்கள் சகராத் நிலையிலும்

 நோன்பு திறக்க மறுத்து நான் எனது ரப்பிடம் சென்று நோன்பு திறந்து கொள்கிறேன் என்று கூறிய நிலையில் உயிர் பிரிந்த து

وأخرج البيهقي عن أبي قتادة قال بعث رسول الله {صلى الله عليه وسلم} جيش الامراء وقال عليكم زيد بن حارثة فان اصيب زيد فجعفر فإن اصيب جعفر فعبد الله بن رواحة فانطلقوا فلبثوا ما شاء الله فصعد رسول الله {صلى الله عليه وسلم} المنبر وأمر فنودي بالصلاة جامعة فاجتمع الناس فقال اخبركم عن جيشكم هذا انهم انطلقوا فلقوا العدو فقتل زيد شهيدا ثم اخذ اللواء جعفر فشد على القوم حتى قتل شهيدا ثم أخذ اللواء عبد الله بن رواحة فاثبت قدميه حتى قتل شهيدا ثم اخذ اللواء خالد بن الوليد وهو أمير نفسه ثم قال رسول الله {صلى الله عليه وسلم} اللهم إنه سيف من سيوفك فانت تنصره فمن يومئذ سمى خالد سيف الله

மூத்தா போரில் நபி ஸல் அவர்கள் வழமைக்கு மாற்றமாக பின்வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இப்போருக்கு ஜைதுப்னு ஹாரிஸா தளபதியாக இருப்பார். ஒருவேளை அவர் கொல்லப்பட்டு விட்டால் அடுத்து ஜஃபர் ரழி தளபதியாக இருப்பார்.  ஒருவேளை அவரும் கொல்லப்பட்டு விட்டால் அடுத்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழி தளபதியாக இருப்பார் என்றார்கள் நபி ஸல் அவர்கள் சொன்னது போன்றே போரில் நடந்தது. அங்கே நடைபெறும் நிகழ்வை மதீனாவில் இருந்த படி நபி ஸல் அவர்கள் நேரில் நடந்தது போன்று சொல்லிக் காட்டினார்கள். கைகளில் கொடி இருக்கும் நிலையில் முடிந்த வரை கொடியைத் தாங்கிப் பிடித்தவாறு  மூவரும் கொல்லப்பட்டனர். இம்மூவருக்குப் பின்னால் கொடியை காலித் இப்னு வலீத் ரழி வாங்கினார்கள் அல்லாஹ் வெற்றியைத் தந்தான்    

வேறு சில அறிவிப்புகளில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழி அவர்கள் அப்போது நேன்பாளியாக இருந்தார்கள் குற்றுயிராக இருக்கும் நிலையில் தண்ணீர் தரப்பட்டபோது நான் என்னுடைய ரப்பிடம் சென்று நோன்பு திறப்பேன் என்று கூறியதாக அறிவிப்புகள் உள்ளது.    

ரமழானில்  தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமாக காலமெல்லாம் நோன்பு வைத்தாலும் அதன் நன்மையை முழுமையாக அடைய முடியாது. இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் ஏற்கப்படாது என்றே கூறுகிறார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ عُذْرٍ وَلَا مَرَضٍ لَمْ يَقْضِهِ صِيَامُ الدَّهْرِ (بخاري)

معناه أي لا سبيل إلى استدراك كمال فضيلة الأداء بالقضاء،قال عبد الله بن مسعود "من أفطر يوما في رمضان متعمدا من غير علة ثم قضى طول الدهر لم يقبل منه(فتح الباري)

ரமளான் மாதத்தில் ஒரு நோன்பை விட்டால் அதற்கு என்ன பரிகாரம் என்று கேட்க இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறிய பதில்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ فِي غَيْرِ رُخْصَةٍ رَخَّصَهَا اللَّهُ لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ.زَادَ فِي خَبَرِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ : وَإِنْ صَامَهُ.(ابن خزيمة) عن سعيد بن جبير رضي الله عنه أن رجلا سأل ابن عباس فقال : إني أفطرتُ يوما من رمضان  فهل تجد لي مخرجا ؟ فقال له ابن عباس : إن قدرت على يوم من رمضان فارغا فصمه مكانه  قال : وهل أجد يوما من رمضان فارغا ؟ فقال ابن عباس : « هل أجد لك في الفتيا غير هذا ؟  (فضل شهر رمضان لابن شاهين)

அந்தக் கேள்விக்கு இப்னு அப்பாஸ்ரழி பின்வருமாறு பதில் கூறினார்கள்.ஏதாவது ஒரு ரமழானின் பகலில் நோன்பு வைப்பது கடமையாகாத பகல் இருக்குமானால் அப்போது விடுபட்ட நோன்பைக் களாச் செய் என்றார்கள். அதற்கு அந்த நபர் அது எப்படி சாத்தியம் எந்த ரமழானின் பகலும் அவ்வாறு இல்லையே என்றார். அதற்கு இப்னு அப்பாஸ் ரழி இதைத் தவிர வேறு பதில் எனக்குக் கிடைக்கவில்லை என்றார்கள் 

விளக்கம்- ஒரு ரமழானின் ஒரு நொடி வீணாக் கழிந்தாலும் அதே நொடிகளைத் திரும்பப் பெறுவது கடினம். 

நபி ஸல் காலத்தில் சிறுவர்களும்  நோன்பு வைத்தனர்

وَقَالَ عُمَرَ  رضى الله عنه  لِنَشْوَانٍ فِى رَمَضَانَ وَيْلَكَ ، وَصِبْيَانُنَا صِيَامٌ . فَضَرَبَهُ  (بخاري) باب صَوْمِ الصِّبْيَانِ-كتاب الصيام 1960

விளக்கம் – ரமழானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் உமர் ரழி அவர்கள் உனக்கு கேடு உண்டாகட்டும் நம்முடைய சிறுவர்கள் கூட நோன்பு வைத்திருக்கும்போது நீ இவ்வாறு செய்திருக்கிறாயே என்று கூறி அவருக்கு 80 கசையடி கொடுத்தார்கள். வேறு சில நூல்களில் சிரியாவுக்கு நாடு கடத்தினார்கள் என்றும் உள்ளது

சிறுவர்களை நோன்பு வைக்கத் தூண்டுவது அதற்காக அன்பளிப்புகள் வழங்குவதும், நீ நோன்பு வைத்தால் இஃப்தார் நேரம் உனக்கு இன்ன பதார்த்தம் வாங்கித் தருவேன் என்று சொல்வதும் சஹாபாக்களின் வழிமுறை

عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الْأَنْصَارِ مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَليَصُمْ قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا وَنَجْعَلُ لَهُمْ اللُّعْبَةَ مِنْ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الْإِفْطَارِ(بخاري

கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் தயார் செய்து சிறுவர்கள் பசியால் உணவு கேட்டு அழும்போது நோன்பு திறக்கும் நேரம் வரை அவன் பசியை மறந்திருப்பதற்காக அந்த விளையாட்டுப் பொருட்களை கொடுப்போம்


ரய்யான் (அதிகம் தாகம் தீருதல்) என்ற பொருள் கொண்ட வாசல் வழியாக நோன்பாளிகளை பிரவேசிக்க வைப்பதின் தாத்பரியம்

عَنْ سَهْلٍ رضى الله عنه عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  قَالَ  إِنَّ فِى الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ  يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ  لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ  فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ (بخاري) – 

وقوله : (( إن في الجنة بابًا يقال له : الرَّيَّان  وهو الكثير الرِّيّ ، الذي هو نقيض العطش . وسُمِّي هذا الباب بهذا الاسم : لأنه جزاء الصائمين على عطشهم وجوعهم ، واكتفى بذكر الرِّي عن الشبع لأنه يدل عليه من حيث إنه يستلزمه .(شرح مسلم)

விளக்கம்-தவறுகளுக்கு அல்லாஹ் தரும் தண்டனைகளும், நன்மைகளுக்கு அல்லாஹ் தரும் சன்மானமும் பெரும்பாலும் பொருத்தமாக அமையும். தற்கொலை செய்தவர்களுக்கு தற்கொலையே தண்டனை, புறம் பேசியவர்கள் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் என்ற அடிப்படையில் தங்களின் உடம்பை தாங்களே கீறிக் கொள்ளும் தண்டனை, அந்த வகையில் அல்லாஹ்விற்காக தாகத்துடன் இருந்தவர்கள் நுழையும் வாசலே தாகம் தீருதல் என்ற பெயருள்ளதாக இருக்கிறது என்றால் அதற்குள்ளே அவர்களுக்கு எவ்வளவு குடிபானங்கள் காத்திருக்கும் என்பதை விளங்க முடியும். மேலும் நோன்பாளி  தாகத்தை மட்டுமல்ல. பசியையும் அடக்கிக் கொள்கிறார் அப்படியிருந்தும் இங்கே தாகத்தை மட்டுமே மையமாக ஆக்கப்படுவதின் காரணம் நோன்பாளியைப் பொறுத்த வரை பசியை விட தாகம் தான் அதிகம் ஏற்படுகிறது என்பதால். பசியை அடக்கிக் கொண்டு நீண்ட நேரம் இருந்து விடலாம். ஆனால் தாகத்தை அடக்கிக் கொண்டு நீண்ட நேரம் இருப்பது கடினம்.                                 

விமான நிலையம் போன்ற இடங்களில் V.I.P களுக்கென்று தனி நுழைவாயில் இருப்பது போல நோன்பாளிகளுக்கென்று தனி நுழைவாயில்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا قَالَ نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ (بخاري) - باب وُجُوبِ صَوْمِ رَمَضَانَ – الصوم

  அபூபக்ர் ரழி அவர்கள் கூறியதின் சுருக்கம்- யாரஸூலல்லாஹ் இந்த வாசல்களில் ஏதேனும் ஒரு வாசல் வழியாக அழைக்கப்படுபவருக்கு சிரமம் இருக்காது ஏனெனில் அவர் எந்த வழியிலாவது சுவனம் சென்று விடுவார் எனினும் இந்த வாசல்கள் ஒவ்வொன்றிலிருந்தும் யாராவது அழைக்கப்படுவார்களா என்று கேட்டதற்கு ஆம் அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று நபி ஸல் கூறினார்கள்

நோன்பு எனக்குரியது என்ற வார்த்தையின் பல விளக்கங்களில் ஒன்று..

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  قَالَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ الصَّوْمُ لِى وَأَنَا أَجْزِى بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِى ، وَالصَّوْمُ جُنَّةٌ ، وَلِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ حِينَ يُفْطِرُ وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ ، وَلَخَلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ (بخاري)

உண்ணுதல், பருகுதல் என்பது மனிதனின் இயல்பான குணம் அவ்வாறிருக்க நோன்பாளி நோன்பு நேரத்தில் தன் இயல்பான குணத்தை  மாற்றிக் கொண்டு உண்ணுதல், பருகுதல் இல்லாத அல்லாஹ்வின் தன்மையைப் போன்று சற்று நேரம் தனது இயல்பை மாற்றிக் கொள்வதால் அல்லாஹ் அவரை மிகவும் விரும்புகிறான்- ஆதாரம்- முஸ்லிம் விரிவுரை

சில விஷயங்களில், சில நேரங்களில் மட்டும் அல்லாஹ் தனது தன்மை தன் அடியானிடம் பிரதிபலிப்பதை விரும்புகிறான்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِى قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً. قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ (مسلم)

கருத்து- யாருடைய மனதில் சிறிதளவு பெருமை இருக்குமோ அவர் சுவனம் செல்ல மாட்டார் என நபி ஸல் கூற, அல்லாஹ்வின் தூதரே  ஒரு மனிதர் தனது ஆடை அழகாக இருப்பதை விரும்புகிறார். தனது செருப்பு அழகாக இருப்பதை விரும்புகிறார். இது பெருமையா என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் இல்லை. அது பெருமை கிடையாது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் நம்மிடமும் அழகை அவன் விரும்புகிறான் என்றார்கள்

ரமழான் வந்தால் ஷைத்தான் விலங்கிடப்படுகிறார்கள் என்ற ஹதீஸும் அதற்கான விளக்கமும்

عن أَبَي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتْ الشَّيَاطِينُ (بخاري)1899 قَالَ الْحَلِيمِيّ يَحْتَمِل أَنْ يَكُون الْمُرَاد أَنَّ الشَّيَاطِين مُسْتَرِقُو السَّمْع مِنْهُمْ وَأَنَّ تَسَلُّطَهُمْ يَقَع فِي لَيَالِي رَمَضَان دُون أَيَّامه لِأَنَّهُمْ كَانُوا مُنِعُوا فِي زَمَن نُزُول الْقُرْآن مِنْ اِسْتِرَاق السَّمْع فَزِيدَ وَالتَّسَلْسُل مُبَالَغَة فِي الْحِفْظ وَيَحْتَمِل أَنْ يَكُون الْمُرَاد أَنَّ الشَّيَاطِين لَا يَخْلُصُونَ مِنْ إِفْسَاد الْمُؤْمِنِينَ إِلَى مَا يَخْلُصُونَ إِلَيْهِ فِي غَيْره لِاشْتِغَالِهِمْ بِالصِّيَامِ الَّذِي فِيهِ قَمْع الشَّهَوَات وَبِقِرَاءَةِ الْقُرْآن وَالذِّكْر وَقَالَ غَيْره : الْمُرَاد بِالشَّيَاطِينِ بَعْضهمْ وَهُمْ الْمَرَدَة مِنْهُمْ وَيُؤَيِّدهُ قَوْله فِي الْحَدِيث بَعْد هَذَا  .(فتح الباري)

சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகிறது என்பதற்கு இப்படியும் ஒரு விளக்கம் அதாவது சுவனம் செல்வதற்குரிய காரியங்களைச் செய்வது மற்ற மாதங்களை விட இம்மாதத்தில் இலகுவாகிறது அதையே சுவனம் திறந்து விடப்படுகிறது என்று நபி ஸல் கூறியதாக சிலர் விளக்கமளிக்கிறார்கள் அதேபோல் நரகம் மூடப்படுகிறது என்பதற்கும்..

قَالَ الْقَاضِي : وَيَحْتَمِل أَنْ يَكُون فَتْح أَبْوَاب الْجَنَّة عِبَارَة عَمَّا يَفْتَحهُ اللَّه تَعَالَى لِعِبَادِهِ مِنْ الطَّاعَات فِي هَذَا الشَّهْر الَّتِي لَا تَقَع فِي غَيْره عُمُومًا كَالصِّيَامِ وَالْقِيَام وَفِعْل الْخَيْرَات وَالِانْكِفَاف عَنْ كَثِير مِنْ الْمُخَالَفَات ، وَهَذِهِ أَسْبَابٌ لِدُخُولِ الْجَنَّة وَأَبْوَابٌ لَهَا ، وَكَذَلِكَ تَغْلِيق أَبْوَاب النَّار وَتَصْفِيد الشَّيَاطِين عِبَارَة عَمَّا يَنْكَفُّونَ عَنْهُ مِنْ الْمُخَالَفَات.(فتح الباري)

ரமழான் நோன்பு கடமையாகப்பட்டதால் அதன் கண்ணியம் கருதி 

மற்ற சுன்னத்தான நோன்புகளுக்கு சலுகை வழங்கப்பட்டது

عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ ، فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ (بخاري باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ كتاب الحج

பிறை பற்றிய சில செய்திகள்

29-ம் நாளில் முடிவில் பிறையைத் தேட வேண்டும். இஸ்லாமிய மாதம் என்பது 29 நாட்களாகவோ அல்லது முப்பது நாட்களாகவோ இருக்கும்

عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آلَى مِنْ نِسَائِهِ شَهْرًا فَلَمَّا مَضَى تِسْعَةٌ وَعِشْرُونَ يَوْمًا غَدَا أَوْ رَاحَ فَقِيلَ لَهُ إِنَّكَ حَلَفْتَ أَنْ لَا تَدْخُلَ شَهْرًا فَقَالَ إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعَةً وَعِشْرِينَ يَوْمًا (بخاري

நபி ஸல் அவர்களிடம் சக்திக்கு மீறிய ஜீவனாம்சம் கேட்ட காரணத்தால் ஒரு மாதம் தன் மனைவிமார்களிடம் பேச மாட்டேன் என நபி ஸல் சத்தியம்செய்திருந்தார்கள். பின்பு அல்லாஹ் அந்த மனைவிமார்களைக் கண்டித்து ஆயத்தை இறக்கினான் தவ்பா செய்தார்கள்.  அதன் பின்பு நபி ஸல் அவர்கள் சத்தியம் செய்து ஒரு மாதம் முடிவடையாத நிலையில் 29 நாட்கள் மட்டுமே முடிந்த நிலையில் மனைவிமார்களிடம் பேசினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு மாதம் என சத்தியம் செய்திருந்தீர்களே என்று கேட்டதற்கு ஒரு மாதம் என்பது 29 ல் கூட முடிந்து விடும் அல்லவா என்று பதில் கூறினார்கள்       

உலகெங்கும் ஒரே பிறை சாத்தியம் இல்லை.  சிரியாவில் பார்த்த பிறையை மதீனாவில் இருந்த சஹாபாக்கள் பின்பற்றவில்லை

عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي ابْنُ عَبَّاسٍ رَضِ ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) بَاب بَيَانِ أَنَّ لِكُلِّ بَلَدٍ رُؤْيَتَهُمْ- كِتَاب الصِّيَامِ قال النووي في شرح مسلم وَالصَّحِيح عِنْد أَصْحَابنَا أَنَّ الرُّؤْيَة لَا تَعُمّ النَّاس بَلْ تَخْتَصُّ بِمَنْ قَرُبَ عَلَى مَسَافَة لَا تُقْصَر فِيهَا الصَّلَاة وَقِيلَ : إِنْ اِتَّفَقَ الْمَطْلَع لَزِمَهُمْ ، وَقِيلَ : إِنْ اِتَّفَقَ الْإِقْلِيم وَإِلَّا فَلَا (شرح النووي) قَالَ أَبُو عِيسَى (الترمذي) حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ لِكُلِّ أَهْلِ بَلَدٍ رُؤْيَتَهُمْ (سنن الترمذي)

ரமளான் பிறை பார்க்க வேண்டிய நாளில் பிறை தெரியாமல், அல்லது தகவல் வராத நிலையில் நோன்பு வைப்பது குற்றம்

عَنْ صِلَةَ بْنِ زُفَرَ قَالَ كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَقَالَ كُلُوا فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ فَقَالَ إِنِّي صَائِمٌ فَقَالَ عَمَّارٌ مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ترمذي) بَاب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ صَوْمِ يَوْمِ الشَّكِّ-كتاب الصوم

பிறை காண்பதில் சிலர் செய்யும் குழப்பத்தால் பிறை தெரியாத நாளில் பலர் நோன்பு வைத்து இறைத்தூதருக்கு மாறு செய்கின்..

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقَدَّمُوا رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ وَلَا يَوْمَيْنِ إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمًا فَلْيَصُمْهُ (مسلم)

பிறை பார்க்க வேண்டிய நாளில் பிறை தெரியாமல் அடுத்த நாள் பிறை பெரிதாக தெரிந்தால் அது இரண்டாம் நாள் பிறையாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்ளத் தேவையில்லை

عَنْ أَبِي الْبَخْتَرِيِّ قَالَ خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ قَالَ تَرَاءَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ قَالَ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ فَقَالَ أَيَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ قَالَ فَقُلْنَا لَيْلَةَ كَذَا وَكَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةٍ رَأَيْتُمُوهُ (مسلم)  فقه:  وإذا كان بالسماء علةٌ قبل الإمام شهادة الواحد العدل في رؤية الهلال رجلاً كان أو امرأةً حراً كان أو عبداً فإن لم يكن بالسماء علةٌ لم تقبل شهادته حتى يراه جمعٌ كثيرٌ يقع العلم بخبرهم وإذا كان بالسماء علة لم تقبل في هلال الفطر إلا شهادة رجلين أو رجل وامرأتين وإن لم يكن بالسماء علة لم تقبل إلا شهادة جمع كثير يقع العام بخبرهم (مختصر القدوري)

காலண்டர் கணிப்பைப் போல் சாட்டிலைட் மூலம் ஆயிரம் வருடங்களுக்கான பிறையை கணித்து விட முடியும் என்று சிலர் கூறுவதைப் பற்றி...

பிறையை பார்த்து நோன்பை துவக்குங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்க இன்று சிலர் சாட்டிலைட் மூலம் ஆயிரம் வருடங்களுக்கான பிறையை கணித்து விட முடியும். அவ்வப்போது பிறை பார்க்க தேவையில்லை என்று கூறி மக்களை குழப்புகின்றனர். விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்பதற்காக மார்க்க விஷயங்கள் அனைத்தையும் விஞ்ஞான ரீதியில் பார்க்கக்கூடாது. படைத்த இறைவன் முற்றும் அறிந்தவன் அவன் விஞ்ஞான வளர்ச்சியையும் அறிந்தவன் அவனே அதை நமக்கு கற்றுத்தருபவன். அவன் நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும் எனவே பிறைகளை மக்களே கணிக்கலாம் என்று சட்டம் வகுத்திருக்கலாம் அப்படி சட்டம் வகுத்து தருவது அவனுக்கு சிரமமானதல்ல ஆனால் அவன் கீழ்கண்டவாறு தான் சட்டம் வகுத்துள்ளான்! உங்களில் எவர் அந்த மாதத்தை (அந்த பிறையை) அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

மேலும் கடைசி காலத்தில் நிகழும் பல்வேறு கலாச்சார மாற்றங்களை அன்றே கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  சந்திரன் பிளந்தது என்ற உண்மையை உலகிற்கு காட்டித்தந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்துவிடும் அன்றைய தினம் உங்கள் இஷ்டம் போல் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கலாமே ஏன் அவ்வாறு அறிவுறுத்தவில்லை? மாதங்கள்  பிறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட வேண்டும் என்பதே இதன் நோக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...