21-03-2025
RAMZAN - 20 بسم الله الرحمن الرحيم
ரமழான் கடைசி பத்து நாட்களின் சிறப்பு
عن عَائِشَة رض كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِى غَيْرِهِ(مسلم) باب الاِجْتِهَادِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ – كتاب الاعتكاف
மற்ற நாட்களை விட ரமழான் கடைசி பத்து நாட்களில் நபி ஸல் அவர்கள் அதிகம் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்
عَنْ عَائِشَةَ رَضِ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَه(بُخاري) باب الْعَمَلِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ-كتاب فضل ليلة القدر- قِيلَ لأَبِي بَكْرٍ مَا رَفْعُ الْمِئْزَرِ؟ قَالَ:اعْتِزَالُ النِّسَاءِ (مصنف ابن ابي شيبة)
ரமழானின் கடைசி பத்து நாட்களில் முடிந்த வரை இரவில் விழித்திருந்து வணங்க வேண்டும் என்பதே லைலத்துல் கத்ரை அடைவதற்குத் தான். அந்த லைலத்துல் கத்ர் இறுதிப் பத்து நாட்களில் மறைக்கப்பட்டுள்ளது அது ஏன் மறைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிப் பேசும் முன்பு லைலத்துல் கத்ரை அல்லாஹ் நமக்கு வழங்கியதன் நோக்கம் அறிய வேண்டும். குறைந்த வேலையை நிறைய நன்மைகள் பெறுபவர்களாக நம்மை ஆக்குவதற்குத் தான் அல்லாஹ் லைலத்துல் கத்ரை வழங்கினான்.
குறைந்த அமல் நிறைந்த நன்மை என்பது இந்த உம்மத்துக்கு மட்டும் தான். அதில் லைலத்துல் கத்ரும் அடங்கும்
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُكُمْ وَمَثَلُ أَهْلِ الْكِتَابَيْنِ كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ أُجَرَاءَ فَقَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ غُدْوَةَ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتْ الْيَهُودُ ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلَاةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتْ النَّصَارَى ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ الْعَصْرِ إِلَى أَنْ تَغِيبَ الشَّمْسُ عَلَى قِيرَاطَيْنِ فَأَنْتُمْ هُمْ فَغَضِبَتْ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالُوا مَا لَنَا أَكْثَرَ عَمَلًا وَأَقَلَّ عَطَاءً قَالَ هَلْ نَقَصْتُكُمْ مِنْ حَقِّكُمْ قَالُوا لَا قَالَ فَذَلِكَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ (بخاري)
‘உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு ‘கீராத்’ கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப் பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை செய்து அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு ‘கீராத்’ கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு ‘கீராத்’ வழங்கப்பட்டோம். ‘எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் ‘உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?’ என்று கேட்பான். அவர்கள் ‘இல்லை’ என்பர். ‘அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்’ என்று இறைவன் விடையளிப்பான்.
கருத்து – மிகவும் குறைந்த அளவு வேலை அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்வது இந்த உம்மத்துக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பாகும். லைலத்துல் கத்ரு இரவில் வணங்கினால் ஆயிரம் மாதங்கள் வணங்கிய நன்மைகள் கிடைக்கும். அதாவது 84 வருடங்கள் வணங்கிய நன்மைகள் கிடைக்கும். அதன்படி ஒருவரின் வாழ்நாளில் 50 லைலத்துல் கத்ரு கிடைத்து விட்டால் அவர் 4200 வருடங்கள் வணங்கிய நன்மைகள் கிடைக்கும்.
லைலத்துல் கத்ரு இரவை இந்த உம்மத்துக்கு அல்லாஹ் வழங்கியதற்கான அடிப்படைக் காரணங்களில் சில....
عَنْ مَالِكٍ أَنَّهُ سَمِعَ مَنْ يَثِقُ بِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُرِىَ أَعْمَارَ النَّاسِ قَبْلَهُ أَوْ مَا شَاءَ اللَّهُ مِنْ ذَلِكَ فَكَأَنَّهُ تَقَاصَرَ أَعْمَارَ أُمَّتِهِ أَنْ لاَ يَبْلُغُوا مِنَ الْعَمَلِ مِثْلَ الَّذِى بَلَغَ غَيْرُهُمْ فِى طُولِ الْعُمْرِ فَأَعْطَاهُ اللَّهُ لَيْلَةَ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (مؤطا مالك)
நபி ஸல் அவர்களுக்கு முந்திய உம்மத்துமார்கள் அதிகமாக வயது கொடுக்கப்பட்டு அவர்களின் வாழ்நாள் முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடு பட்ட நபர்களை காட்டப்பட்டது அப்போது நபி ஸல் அவர்கள் இந்த உம்மத்துக்கு அதுபோன்று இல்லையே என்று ஏங்கினார்கள். அப்போது கத்ரு சூராவை அல்லாஹ் இறக்கினான்
عَنْ مُجَاهِد قَالَ كَانَ فِي بَنِي إِسْرَائِيل رَجُل يَقُوم اللَّيْل حَتَّى يُصْبِح ثُمَّ يُجَاهِد الْعَدُوّ بِالنَّهَارِ حَتَّى يُمْسِي فَفَعَلَ ذَلِكَ أَلْف شَهْر فَأَنْزَلَ اللَّه هَذِهِ الْآيَة "لَيْلَة الْقَدْر خَيْر مِنْ أَلْف شَهْر" قِيَام تِلْكَ اللَّيْلَة خَيْر مِنْ عَمَل ذَلِكَ الرَّجُل(تفسير ابن كثير)-
மற்றொரு அறிவிப்பில் பனீ இஸ்ராயீலைச் சார்ந்த ஒருவர் இரவில் தொழுவார் பகலில் ஜிஹாது செய்வார். இவ்வாறே ஆயிரம் மாதங்கள் செய்தார். அவரின் அமலை விட அதிகமானதாக இந்த உம்மத்தின் நன்மையை ஆக்கிட அல்லாஹ் லைலத்துல் கத்ரு இரவை வழங்கினான்
عَنْ عَلِيّ بْن عُرْوَة قَالَ:ذَكَرَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا أَرْبَعَة مِنْ بَنِي إِسْرَائِيل عَبَدُوا اللَّه ثَمَانِينَ عَامًا لَمْ يَعْصُوهُ طَرْفَة عَيْن فَذَكَرَ أَيُّوب وَزَكَرِيَّا وَحِزْقِيل بْن الْعَجُوز وَيُوشَع بْن نُون قَالَ فَعَجِبَ أَصْحَابُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ فَأَتَاهُ جِبْرِيل فَقَالَ يَا مُحَمَّد عَجِبَتْ أُمَّتُك مِنْ عِبَادَة هَؤُلَاءِ النَّفَر ثَمَانِينَ سَنَة لَمْ يَعْصُوهُ طَرْفَة عَيْن فَقَدْ أَنْزَلَ اللَّه خَيْرًا مِنْ ذَلِكَ فَقَرَأَ عَلَيْهِ " إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَة الْقَدْر وَمَا أَدْرَاك مَا لَيْلَة الْقَدْر لَيْلَة الْقَدْر خَيْر مِنْ أَلْف شَهْر هَذَا أَفْضَل مِمَّا عَجِبْت أَنْتَ وَأُمَّتك قَالَ فَسُرَّ بِذَلِكَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاس مَعَهُ (تفسير ابن ابي حاتم) وقال أبو بكر الوراق: كان ملك سليمان خمسمائة شهر وملك ذي القرنين خمسمائة شهر فصار ملكهما ألف شهر فجعل الله تعالى العمل في هذه الليلة لمن أدركها خيرا من ملكهما (قرطبي)
லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றி....
أنه تعالى أخفى هذه الليلة لوجوه أحدها: أنه تعالى أخفاها كما أخفى سائر الأشياء فإنه أخفى رضاه في الطاعات حتى يرغبوا في الكل وأخفى الإجابة في الدعاء ليبالغوا في كل الدعواتوأخفى الاسم الأعظم ليعظموا كل الأسماء وأخفى في الصلاة الوسطى ليحافظوا على الكل وأخفى قبول التوبة ليواظب المكلف على جميع أقسام التوبة وأخفى وقت الموت ليخاف المكلففكذا أخفى هذه الليلة ليعظموا جميع ليالي رمضان وثانيها : كأنه تعالى يقول : لو عينت ليلة القدر وأنا عالم بتجاسركم على المعصية فربما دعتك الشهوة في تلك الليلة إلى المعصية فوقعت في الذنب فكانت معصيتك مع علمك أشد من معصيتك لا مع علمك فلهذا السبب أخفيتها عليك روي أنه عليه السلام دخل المسجد فرأى نائماً فقال : يا علي نَبِّهْه ليتوضأ فأيقظه علي ثم قال علي: يا رسول الله إنك سباق إلى الخيرات فلم لم تنبهه؟ قال : لأن رده عليك ليس بكفر ففعلت ذلك لتخف جنايته لو أبى فإذا كان هذا رحمة الرسول فقس عليه رحمة الرب تعالى فكأنه تعالى يقول: إذا علمت ليلة القدر فإن أطعت فيها اكتسبت ثواب ألف شهر وإن عصيت فيها اكتسب عقاب ألف شهر ودفع العقاب أولى من جلب الثواب ثالثها:أني أخفيت هذه الليلة حتى يجتهد المكلف في طلبها فيكتسب ثواب الاجتهاد ورابعهاأن العبد إذا لم يتيقن ليلة القدر فإنه يجتهد في الطاعة في جميع ليالي رمضان على رجاء أنه ربما كانت هذه الليلة هي ليلة القدر فيباهي الله تعالى بهم ملائكته يقول:كنتم تقولون فيهم يفسدون ويسفكون الدماء (تفسير الرازي
முதலாவது காரணம்
1. (அ)அல்லாஹ் சிலவற்றை சிலவற்றில் மறைத்து வைத்துள்ளான். எத்தனையோ வணக்க வழிபாடுகள் நாம் செய்தாலும் அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தி நம் மீது உண்டாகும். அது எந்த அமல் என்பது மறைக்கப்ப்பட்டுள்ளது. இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் வஃபாத்தான பின்பு அவர்களைக் கனவில் கண்ட போது அல்லாஹ் உங்களின் எந்த செயலைக் கொண்டு பொருந்திக் கொண்டான் என்று கேட்டபோது நான் ஒருமுறை பேனாவைக் கொண்டு எழுதிக் கொண்டிருந்த போது அதில் உள்ள மையை உறிஞ்சுவதற்காக ஒரு ஈ வந்து அமர்ந்தது. நான் அந்த ஈ தானாக பறந்து போகும் வரை அந்த பேனாவை சற்றும் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தேன். இதனால் அல்லாஹ் என்னைப் பொருந்திக் கொண்டான் என்றார்கள்
ஆ. துஆக்களில் எந்த துஆ ஏற்கப்படும் என்பதை மறைந்து வைத்துள்ளான். ஒரே கோரிக்கையை பல முறை கேட்கிறோம்.ஒவ்வொரு துஆவையும் இஜாபதுக்குரியதாக கருதி துஆ செய்ய வேண்டும் என்பதற்காக...
இ. இஸ்முல் அஃழமை மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு திருநாமத்தையும் இஸ்முல் அஃழமாக கருதி துஆ செய்வதற்காக.
ஈ. நடுத்தொழுகை எது என்பதை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு தொழுகையையும் நடுத்தொழுகையாக கருதி தொழ வேண்டும். முதல் நாள் மஃரிப் முதல் மறுநாள் மஃரிப் வரை என்ற கணக்கில் பார்த்தால் ஃபஜ்ர் நடுத்தொழுகை. ஜிப்ரயீல் அலை முதலில் கற்றுத் தந்தது லுஹர் என்ற கணக்கில் பார்த்தால் மஃரிப் நடுத்தொழுகை. இப்படி ஒவ்வொரு தொழுகையும் நடுத்தொழுகையாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238) البقرة
உ. தவ்பா கேட்டுக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எந்த நேரம் மன்னிப்பு வழங்கப்படும் என்பதை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான்
ஊ. மவ்த்தை மறைத்து வைத்துள்ளான். எந்த நேரமும் மவ்த் வரலாம் என்று அஞ்சி நடக்க வேண்டும் என்பதற்காக.
இதே மாதிரி லைலத்துல் கத்ரை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு இரவும் லைலத்துல் கத்ராக இருக்கலாம் என்று எண்ணி அமல் செய்வதற்காக....எனவே ரமழானின் கடைசி பத்து நாட்களிலும் நாம் அதிகமான அமல்களில் ஈடுபட வேண்டும் இரண்டாவது காரணம்
2. லைலத்துல் கத்ரு எது என்று அறிவித்துத் தரப்பட்டு அது சிறந்த இரவு என்று தெரிந்தே ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அவன் மீது தண்டனைகள் அதிகமாகி விடுமல்லவா அல்லாஹ்வின் விதியில் ஒருவனுக்கு நன்மை அதிகம் கிடைப்பதை விட மனிதனின் பாவச் சுமைகள் பல மடங்காக ஆகி விடக்கூடாது என்பதாக இருக்கலாம். உதாரணமாக நபி ஸல் ஒருமுறை மஸ்ஜிதில் நுழைந்த போது தொழுகை நேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு சற்று தூரத்தில் நின்ற அலீ ரழி அவர்களை அழைத்து இவரை எழுப்புங்கள் என்று கூற அவ்வாறே அவரை அலீ ரழி அவர்கள் எழுப்பினார்கள் எனினும் ஒரு சந்தேகம் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே நன்மையில் நீங்கள் முந்துபவர் ஆயிற்றே நீங்களே எழுப்பியிருக்கலாமே என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவேளை நான் எழுப்பி அவர் எழுந்திருக்கா விட்டால் அவர் மீது பாவம் பல மடங்காக ஆகி விடுமே அதனால் எழுப்பவில்லை என்றார்கள். மற்றொரு நேரத்தில் கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்த போது மற்றொருவரை அழைத்து அவரை அஊது பில்லாஹ் சொல்லச் சொல்லுங்கள் என்றார்கள். அவர் சென்று கூறிய போது கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்தவர் எனக்கென்ன பைத்தியமா என்று கூறி உதாசீனப்படுத்தி விட்டார்.
மூன்றாவது காரணம்
3. லைலத்துல் கத்ரைத் தேடி ஒவ்வொரு இரவிலும் அமல் செய்பவர் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்
நான்காவது காரணம்
4. மனிதர்களின் அமல்களை மலக்குகளிடம் காட்டி அல்லாஹ் மனிதனைப் பெருமைப் படுத்துவற்காக அல்லாஹ் இவ்வாறு மறைத்து வைத்துள்ளான். என்னுடைய அடியார்கள் பத்து நாட்களும் விழித்திருந்து வணக்கம் செய்கிறார்கள் என நம்மைப் பற்றி மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப் படுத்துவான்.
இதற்கு உதாரணம் நாம் நுத்ஃபா வாக இருக்கும்போது நம்மைக்கழுவி அப்புறப்படுத்தும் பெற்றோர்கள் நம்மை அழகிய உருவில் பார்க்கும்போது கொஞ்சுகின்றனர். அதுபோல் மனிதனை முதலில் அல்லாஹ் படைத்த போது பாவம் செய்யும் தோற்றத்தில் கண்டு இவர்களை ஏன் படைக்கிறாய் என்று கேட்ட மலக்குகள், மனிதனின் அழகிய வணக்க வழிபாடுகளைக் கண்டு வாழ்த்துகின்றனர்
قوله تعالى : { تَنَزَّلُ الملائكة والروح فِيهَا } وفيه مسائل :المسألة الأولى : اعلم أن نظر الملائكة على الأرواح ونظر البشر على الأشباح ثم إن الملائكة لما رأوا روحك محلاً للصفات الذميمة من الشهوة والغضب ما قبلوك فقالوا : أتجعل فيها من يفسد فيها ويفسك الدماء وأبواك لما رأوا قبح صورتك في أول الأمر حين كنت منياً وعلقة ما قبلوك أيضاً بل أظهروا النفرة واستقذروا ذلك المني والعلقة وغسلوا ثيابهم عنه ثم كم احتالوا للإسقاط والإبطال ثم إنه تعالى لما أعطاك الصورة الحسنة فالأبوان لما رأوا تلك الصورة الحسنة قبلوك ومالوا إليك فكذا الملائكة لما رأوا في روحك الصورة الحسنة وهي معرفة الله وطاعته أحبوك فنزلوا إليك معتذرين عما قالوه أولاً(تفسير الرازي)
விண்ணுலகில் எவ்வளவோ வணக்க வழிபாடுகள் நடைபெற்றாலும் அங்கு இல்லாத வித்தியாசமான வணக்க வழிபாடுகளை காண்பதற்காக மலக்குகள் வருகிறார்கள்
أنهم يرون في الأرض من أنواع الطاعات أشياء ما رأوها في عالم السموات أحدها:أن الأغنياء يجيئون بالطعام من بيوتهم فيجعلونه ضيافة للفقراء والفقراء يأكلون طعام الأغنياء ويعبدون الله وهذا نوع من الطاعة لا يوجد في السموات وثانيهاأنهم يسمعون أنين العصاة وهذا لا يوجد في السموات وثالثها: أنه تعالى قال لأنين المذنبين أحب إلي من زجل المسبحينفقالوا: تعالوا نذهب إلى الأرض فنسمع صوتاً هو أحب إلى ربنا من صوت تسبيحنا
செல்வந்தர்கள் இந்த இரவில் உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவர்.இந்த நற்செயலை விண்ணுலகில் பார்க்க முடியாது. பாவிகளின் அழுகையை இந்த உலகில் தான் பார்க்க முடியும். விண்ணுலகில் பார்க்க முடியாது. 3. தஸ்பீஹ் செய்பவர்களின் தஸ்பீஹை விட பாவிகளின் அழுகை அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது அதனால் மலக்குகள் தங்களுக்குள் பேசும்போது வாருங்கள் பாவிகளின் அழுகுரலைக் கேட்போம் என்று பேசிக் கொள்வார்கள்.
லைலத்துல் கத்ரு இரவின் அடையாளங்களில் சில...
قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه الشَّيْطَانُ يَطْلُعُ مَعَ الشَّمْسِ كُلَّ يَوْمٍ إِلاَّ لَيْلَةَ الْقَدْرِ قَالَ : وَذَلِكَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لاَ شُعَاعَ لَهَا (مصنف ابن ابي شيبة) عَنِ الْحَسَنِ قَالَ:قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةٌ بَلْجَةٌ سَمْحَةٌ تَطْلُعُ شَمْسُهَا لَيْسَ لَهَا شُعَاعٌ(مصنف ابن ابي شيبة) عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه قَالَ تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَيُّكُمْ يَذْكُرُ حِينَ طَلَعَ الْقَمَرُ وَهُوَ مِثْلُ شِقِّ جَفْنَةٍ (مسلم) باب فَضْلِ لَيْلَةِ الْقَدْرِ وَالْحَثِّ عَلَى طَلَبِهَا- كتاب الصيام- عَنْ زِرٍّ قَالَ قُلْتُ لِأُبَيِّ بْنِ كَعْبٍ أَخْبِرْنِي عَنْ لَيْلَةِ الْقَدْرِ يَا أَبَا الْمُنْذِرِ....أَنَّى عَلِمْتَ ذَلِكَ قَالَ بِالْآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لِزِرٍّ مَا الْآيَةُ قَالَ تُصْبِحُ الشَّمْسُ صَبِيحَةَ تِلْكَ اللَّيْلَةِ مِثْلَ الطَّسْتِ لَيْسَ لَهَا شُعَاعٌ حَتَّى تَرْتَفِعَ (ابوداود) بَاب فِي لَيْلَةِ الْقَدْرِ- كِتَاب الصَّلَاةِ
இஃதிகாஃபின் சிறப்புகளும் சட்டங்களும்
இஃதிகாஃப் என்பதன் பொருள்
وَالِاعْتِكَافُ فِي اللُّغَةِ مُشْتَقٌّ مِنْ الْعُكُوفِ وَهُوَ الْمُلَازَمَةُ وَالْحَبْسُ وَالْمَنْعُ وَمَحَاسِنُ الِاعْتِكَافِ ظَاهِرَةٌ فَإِنَّ فِيهِ تَسْلِيمَ الْمُعْتَكِفِ كُلِّيَّتَهُ إلَى طَاعَةِ اللَّهِ لِطَلَبِ الزُّلْفَى وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (جوهرة النيرة)
இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல், சிறை வைத்தல், ஒன்றைப் பற்றிக்கொண்டு அதிலேயே மனைதைக் கட்டுப்படுத்தி வைத்தல் ஆகிய சொற்பொருள்கள் உண்டு. இஸ்லாத்தில் ‘இஃதிகாஃப்’ என்பது, பள்ளிவாசலில் குறிப்பிட்ட முறையில் ஒருவர் தங்கியிருப்பதற்கு பெயராகும். அவசியத் தேவைகளுக்குத் தவிர வேறு எதற்காகவும் பள்ளிவாசலைவிட்டு வெளியே போகாமலும், அவசியமான பேச்சுகளைத் தவிர வேறு எந்தப் பேச்சுகளையும் பேசாமலும் பள்ளியில் தங்கியிருந்து தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆ போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவதே இஃதிகாஃப் ஆகும்.
இஃதிகாஃபின் நன்மைகள்
عن الحسين بن علي رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين. (شعب الايمان-لبيهقى-3680)
ஹுஸைன் பின் அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தவருக்கு ஹஜ்ஜும் இரண்டு உம்ராவும் (செய்த நன்மை) கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷுஃபுல் ஈமான்-பைஹகீ-
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين. (رواه الطبرانى, والحاكم, والبيهقى-3965)
இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒருநாள் இஃதிகாஃப் இருப்பவருக்கு, அவருக்கம் நரகத்திற்கும் இடையில், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியை விட மிக தூரமான மூன்று அகழிகளை ஏற்படுத்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ, ஹாகிம், பைஹகீ-
عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال : من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (رواه الديلمى- 21356)
ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: மன உறுதியோடும், நன்மையை எதிர்பர்த்தும் இஃதிகாஃப் இருப்பவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தைலமீ-21356)
இஃதிகாஃப் மூன்று வகை 1, வாஜிப் [நேர்ச்சையின் இஃதிகாஃப்] 2, சுன்னத் [ரமளான் கடைசிப்பத்தின் இஃதிகாஃப்] 3, நஃபில்
الاول-عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ رضي الله عنه سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ فَأَوْفِ بِنَذْرِكَ (بخاري)2043 بَاب الِاعْتِكَافِ لَيْلًا-كتاب الاعتكاف-
வாஜிபான இஃதிகாஃப் என்பது நேர்ச்சை இஃதிகாஃபைக் குறிக்கும் செய்யும் உமர் ரழி அவர்கள் நபி ஸல்அவர்களிடம் நான் மஸ்ஜிதுல் ஹராமில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்தேன் அதை இப்போது நிறைவேற்றவா என கேட்க, ஆம் நிறைவேற்றுங்கள் என்றார்கள்
الثاني عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ (بُخاري( باب الاِعْتِكَافِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ-
சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃப். இதுதான் [ரமளான் கடைசிப்பத்தின் இஃதிகாஃப்]
நபி (ஸல்) அவர்கள் கடைசி காலம் வரை ரமளான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்துவந்தனர்.
-الثالث فَالنَّفَلُ يَجُوزُ بِغَيْرِ صَوْمٍ هُوَ أَنْ يَدْخُلَ الْمَسْجِدَ بِنِيَّةِ الِاعْتِكَاف مِنْ غَيْرِ أَنْ يُوجِبَهُ عَلَى نَفْسِهِ فَيَكُونُ مُعْتَكِفًا بِقَدْرِ مَا أَقَامَ فَإِذَا خَرَجَ انْتَهَى اعْتِكَافُهُ (جوهرة النيرة)
மஸ்ஜிதில் நுழையும் போது இஃதிகாஃப் நிய்யத்தில் நுழைவது. சிறிது நேரமாக இருந்தாலும் சரி. இதற்கு காலம் நிர்ணயம் இல்லை. எப்போது அவர் வருவாரோ அத்தோடு அது நிய்யத் முடிந்து விடும்.
கடைசிப் பத்தில் மூன்று நாள், அல்லது ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பது சுன்னத் முஅக்கதாவாக ஆகாது
قَالَ الزُّهْرِيُّ يَا عَجَبًا لِلنَّاسِ تَرَكُوا الِاعْتِكَافَ وَمَا تَرَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ دَخَلَ الْمَدِينَةَ إلَى أَنْ تَوَفَّاهُ اللَّهُ وَهُوَ أَشْرَفُ الْأَعْمَالِ لِأَنَّهُ جَمَعَ بَيْنَ عِبَادَتَيْنِ الصَّوْمُ وَالْجُلُوسُ فِي الْمَسْجِدِ وَفِيهِ تَفْرِيغُ الْقَلْبِ وَتَسْلِيمُ النَّفْسِ إلَى بَارِئِهَا وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (الجوهرة
ஆச்சரியமாக இருக்கிறது. நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த பின்பு ஒரு வருடம் கூட விடாத இந்த சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃபை மக்கள் எவ்வாறு விடுகிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது இந்த இஃதிகாஃப் நோன்பு என்ற வணக்கத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இரண்டு வணக்கமாக நிறைவேறுகிறது. உள்ளத்தை அல்லாஹ்விடம் ஒப்படைப்பது என்பதும் உலக சிந்தனைகளில் இருந்து தூரமாக இருப்பதும் இதில் இருக்கிறது
இஃதிகாஃப் இருப்பவருக்கு நோன்பு கட்டாயமாக்கப்பட்டதின் தாத்பரியம். அல்லாஹ்வின் வீட்டில் இருப்பதை தனக்கு அவசியமாக்கிக் கொண்ட ஒருவர் அல்லாஹ்வின் விருந்தாளியாக ஆக வேண்டுமானால் நோன்பு அவசியம்
وَمِنْ مَحَاسِنِهِ أَيْضًا اشْتِرَاطُ الصَّوْمِ فِي حَقِّهِ وَالصَّائِمُ ضَيْفُ اللَّهِ فَالْأَلْيَقُ بِهِ أَنْ يَكُونَ فِي بَيْتِ اللَّهِ (الجوهرة)
இஃதிகாஃப் ஆரம்பித்த பின் நிர்பந்தத்தால் விடுபட்டால் அதை இன்னொரு நாளில் களா செய்ய வேண்டுமா ?
عَنْ عَائِشَةَ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا وَسَأَلَتْ حَفْصَةُ عَائِشَةَ أَنْ تَسْتَأْذِنَ لَهَا فَفَعَلَتْ فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ أَمَرَتْ بِبِنَاءٍ فَبُنِيَ لَهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى انْصَرَفَ إِلَى بِنَائِهِ فَبَصُرَ بِالْأَبْنِيَةِ فَقَالَ مَا هَذَا قَالُوا بِنَاءُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَالْبِرَّ أَرَدْنَ بِهَذَا مَا أَنَا بِمُعْتَكِفٍ فَرَجَعَ فَلَمَّا أَفْطَرَ اعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ (بخاري) بَاب مَنْ أَرَادَ أَنْ يَعْتَكِفَ ثُمَّ بَدَا لَهُ أَنْ..
ஆயிஷா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ரமழானில் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கப் போவதாக கூறினார்கள் அப்போது நானும் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருக்கிறேன் என்று கூற நபி ஸல் எனக்கு அனுமதி கொடுத்தார்கள் அங்கே ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன் இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா ரழி அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார் அவ்வாறே செய்தேன் இதைக்கண்ட ஜைனப் பின்து ஜஹ்ஷ் ரழி ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார் அவ்வாறே செய்யப்பட்டது நபி ஸல் அவர்கள் தொழுகை முடிந்து தன் கூடாரத்திற்கு சென்ற போது அங்கே பல கூடாரங்களைக் கண்டு இவை என்ன என்று கேட்டார்கள் அதற்கு நபித் தோழர்கள் இவை ஆயிஷா , ஹஃப்ஸா, ஜைனப் ரழி ஆகியோரின் கூடாரங்கள் என்று கூற , இதன் மூலம் நன்மையைத் தான் இவர்கள் நாடுகிறார்களா என்று கேட்டு விட்டு இவற்றை நான் காணாதவாறு அப்புறப் படுத்துங்கள் என்றார்கள் உடனே அவைகள் அப்புறப்படுத்தப்பட்டன. பின்பு நபி ஸல் அவர்கள் நான் இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை என்று கூறி விட்டு ஷவ்வால் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் புஹாரீ – 2041,
இந்த ஹதீஸை வைத்து இஃதிகாஃபை ஆரம்பித்து நடுவில் விட்டு விட்டால் பின்னர் வேறொரு நாளில் நிறைவேற்ற வேண்டுமென சில அறிஞர்கள் கூறுவர். ஆனால் வேறு சிலர் வேறொரு நாளில் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்று கூறி, அதற்கு ஆதாரமாக பின்வரும் விளக்கத்தை கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் ஷவ்வால் மாதம் இஃதிகாஃப் இருந்த போது தம் மனைவியரை இஃதிகாஃப் இருக்குமாறு கூறவில்லை. மேலும் நபி ஸல் அவர்கள் ரமழானில் கைவிட்ட இஃதிகாஃபை ஷவ்வால் மாதத்தில் நிறைவேற்றுவது கூடும் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்களே தவிர கட்டாயம் என்பதற்காக அல்ல..
அந்த வருடம் மட்டும் ரமழானில் இஃதிகாஃபை விட்டதற்கு காரணம் என்ன ?
கூடாரங்கள் அதிகமானதால் பள்ளிவாசலில் தொழுகையாளிகளுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது மூன்று மனைவியரும் பள்ளிவாசலில் இருக்கும் நிலை ஏற்பட்டதால் வீட்டில் மனைவியருடன் இருப்பதைப் போன்றே சூழல் உருவாகி விடும். இஃதிகாஃபின் நோக்கமே சிதைந்து விடும் என்பதால் தம் மனைவியரையும் சங்கடப்படுத்தாத வகையில் ரமழானில் இஃதிகாஃபை கைவிட்டார்கள் ( ஃபத்ஹுல் பாரீ)
இந்த இஃதிகாஃபின் முக்கிய நோக்கம் லைலத்துல் கத்ரு இரவை அடைவதாகும்
ஒரு வருடத்தில் நபி ஸல் லைலத்துல் கத்ரு இரவைத் தேடி ரமழானின் மூன்று பத்து நாட்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். முதல் பத்து முடிந்த போது அதில் லைலத்துல் கத்ரு இல்லை என அறிவிக்கப்பட்டு இரண்டாம் பத்திலும் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்பு அதிலும் லைலத்துல் கத்ரு இல்லை என்று அறிவிக்கப்பட்டு கடைசிப் பத்தில் அந்த இரவு உண்டு என்பதை உறுதி செய்தார்கள்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ..قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الْأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ1 فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ2 تَصْدِيقَ رُؤْيَاهُ وفي رواية فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاء وَالطِّين مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ (بخاري)(باب السُّجُودِ عَلَى الأَنْفِ وَالسُّجُودِ عَلَى الطِّينِ)كتاب الأذان
ஒரே ஒரு லைலத்துல் கத்ரு இரவை பத்து நாட்களிலும் தேட வேண்டுமா என்று சங்கடப்பட்டு 27-ம் இரவில் மட்டும் அமல் செய்தால் அந்த இரவு கிடைத்து விடும் என்று எண்ணுபவர்களுக்கு மேற்படி ஹதீஸ் பகதிலடியாக அமைந்துள்ளது. நபி ஸல் அவர்களை மூன்று பத்து நாட்களிலும் அந்த இரவை அல்லாஹ் தேட வைத்துள்ளான்
இஃதிகாஃபின் ஒழுக்கங்கள்-
عن ابن عباس والحسن رض قالا لاَ اعْتِكافَ إِلاَّ فِى مَسْجِدٍ تُقَامُ فِيهِ الصَّلاَةُ (سنن الكبري للبيهقي)
ஐந்து வேளை தொழுகை நடைபெறும் மஸ்ஜிதில் மட்டுமே ஆண்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும்
عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتِ السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لاَ يَعُودَ مَرِيضًا وَلاَ يَشْهَدَ جَنَازَةً وَلاَ يَمَسَّ امْرَأَةً وَلاَ يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ إِلاَّ لِمَا لاَ بُدَّ مِنْهُ وَلاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ (ابوداود) بَاب الْمُعْتَكِفِ يَعُودُ الْمَرِيضَ-الصَّوْمِ-
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை நலம் விசாரிக்க வெளியே செல்ல மாட்டார். ஜனாஸாவில் கலந்து கொள்ள வெளியே வர மாட்டார். மனைவியைத் தொடக் கூடாது. மனைவியைதக் கட்டித் தழுவக் கூடாது. அவசியமான தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். நோன்பு இல்லாமல் இந்த இஃதிகாஃப் கூடாது- ஆயிஷா ரழி
المعتكف إذا أتى كبيرة فسد اعتكافه لأن الكبيرة ضد العبادة كما أن الحدث ضد الطهارة والصلاة وترك ما حرم اللّه أعلى منازل الاعتكافِ في العبادة قاله ابن خويز منداد عن مالك (قرطبي)
குர்துபி யில் உள்ள வாசகம். இஃதிகாஃப் இருப்பவர் பெரும்பாவம் செய்து விட்டால் அவரின் இஃதிகாஃப் முறிந்து விடும். காரணம் பெரும்பாவம் என்பது இஃதிகாஃபின் நோக்கத்திற்கு நேர் மாற்றமான செயலாகும் எவ்வாறு காற்றுப் பிரிந்தால் சுத்தம் இல்லாமல் ஆகி விடுமோ அதுபோல. - இமாம் மாலிக் ரஹ்
வியாபாரப்பொருட்களை பள்ளிக்குள் கொண்டு வராமல் வியாபாரத்தை பேசி முடிப்பது நிர்பந்தமான சூழ்நிலையில் மட்டும் கூடும் இது பற்றி எல்லா சட்ட நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வெளியே நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிக்கலாம்
أَنْ لاَ يَعُودَ مَرِيضًا : عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ النَّبِىُّ صلى الله عليه وسلم يَمُرُّ بِالْمَرِيضِ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ وَلاَ يُعَرِّجُ4 يَسْأَلُ عَنْهُ (ابوداود) عَنْ عَمْرَةَ أَنَّ عَائِشَةَ رضي الله عنها كَانَتْ إِذَا اعْتَكَفَتْ لاَ تَسْأَلُ عَنِ الْمَرِيضِ إِلاَّ وَهِىَ تَمْشِى لاَ تَقِفُ (مؤطا)
நபி ஸல் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிப்பார்கள் நின்று கொண்டு நலம் விசாரிக்க மாட்டார்கள்
மலம்,ஜலம் கழிக்கச் செல்பவர் யாரிடமும் தேவையின்றி பேசிக் கொண்டிருக்காமல் உடனே திரும்பி விடுவது நல்லது
وَلَا يَخْرُجُ مِنْ الْمَسْجِدِ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ وَهِيَ الْغَائِطِ وَالْبَوْلِ لِأَنَّهُ مَعْلُومٌ وُقُوعُهَا فَلَا بُدَّ مِنْ الْخُرُوجِ لِأَجْلِهَا وَلَا يَمْكُثُ بَعْدَ فَرَاغِهِ مِنْ الطَّهُورِ (الهداية)
கழிவறையில் நெருக்கடி இருந்தால் வேறு நேரத்தில் செல்வது நல்லது. அல்லது இஃதிகாஃப் இருப்பவருக்காக பிறர் விட்டுக் கொடுப்பது நல்லது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் கழிவறையில் அதற்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருப்பது கூடாது
நபி[ஸல்] ரமளானில் இஃதிகாஃப் இருக்கும் போது அதுவரை இறங்கிய குர்ஆனை முழுவதும் வானவர் ஓதிக்காட்டுவார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا وَكَانَ يُعْرَضُ عَلَيْهِ الْقُرْآنُ فِي كُلِّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ (ابوداود- بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ- كِتَاب الصِّيَامِ
இஃதிகாஃப் இருக்கும்போது குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் என்ற படிப்பினையும் மேற்படி ஹதீஸில் உண்டு
மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தால் இஃதிகாஃபின் நன்மை கிடைக்காது
عَمْرُو بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ : { نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الْأَشْعَارُ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الضَّالَّةُ ، وَعَنْ الْحِلَقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ (مسند أحمد)
மஸ்ஜிதில் நான்கு செயல்களை நபி ஸல் தடுத்தார்கள்.1.விற்பது வாங்குவது 2.(அல்லாஹ்வை நினைவு படுத்தாத) கவிகள் படிப்பது 3.காணாமல் போன பொருளை சப்தமிட்டுத் தேடுவது4. தொழுகைக்கு முன்னால் மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசுவது
இஃதிகாஃப் இருப்பவர் யாரிடமும் பேசக் கூடாது என்று கருதுவதும் தவறாகும், முந்திய உம்மத்தினருக்கு அந்த அனுமதி இருந்தது
فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (مريم) 26فهذا النذر الذي نذرته مريم ألا تكلم اليوم إنسياً كان جائزاً في شريعتهم أما في الشريعة التي جاءنا بها نبينا صلى الله عليه وسلم فلا يجوز ذلك النذر ولا يجب الوفاء به.(اضواء البيان) عَنْ حَارِثَةَ قَالَ:كُنْتُ جَالِسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَجَاءَ رَجُلاَنِ فَسَلَّمَ أَحَدُهُمَا وَلَمْ يُسَلِّمِ الآخَرُ فَقُلْنَا أَوْ قَالَ مَا بَالُ صَاحِبِكَ لَمْ يُسَلِّمْ قَالَ : إِنَّهُ نَذَرَ صَوْمًا لاَ يُكَلِّمُ الْيَوْمَ إِنْسِيًّا. قَالَ عَبْدُ اللَّهِ بِئْسَمَا قُلْتَ إِنَّمَا كَانَتْ تِلْكَ امْرَأَةً قَالَتْ ذَلِكَ لِيَكُونَ لَهَا عُذْرا وَكَانُوا يُنْكِرُونَ أَنْ يَكُونَ وَلَدٌ مِنْ غَيْرِ زَوْجٍ إِلاَّ زِنًا - فَسَلِّمْ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ خَيْرٌ لَكَ(تفسير ابن كثير
ஹாரிஸா ரழி கூறினார்கள் நான் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் அமர்ந்திருந்தேன் அப்போது இரு நபர்கள் வந்தார்கள் அவர்களில் ஒருவர் மட்டும் ஸலாம் கூற, மற்றவர் ஸலாம் கூறவில்லை. அப்போது நாங்கள் அதுபற்றி எங்களுக்கு சலாம் சொன்ன நபரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறினார் அந்த நபர் நோன்பு வைத்துள்ளார் அதனால் யாரிடமும் பேச மாட்டார் என்று கூற, உடனே இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. மர்யம் அலைஹிஸ்ஸலாம் என்ற பெண்ணுக்கு மட்டும் அந்த அனுமதி இருந்த து. கணவன் இல்லாமல் குழந்தை பெற்றதால் அந்த சமூகம் அதைப் பழித்துப் பேசியதால் அல்லாஹ் அவ்வாறு உத்தரவிட்டான். இது நமக்குக் கிடையாது எனவே நீங்கள் பேசுங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையைத் தடுங்கள் நன்மை கிட்டும்.
عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ فَرَآهَا لَا تَكَلَّمُ فَقَالَ مَا لَهَا لَا تَكَلَّمُ قَالُوا حَجَّتْ مُصْمِتَةً5 قَالَ لَهَا تَكَلَّمِي فَإِنَّ هَذَا لَا يَحِلُّ هَذَا مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ فَتَكَلَّمَتْ (بخاري) باب أَيَّامِ الْجَاهِلِيَّةِ – كتاب مناقب الأنصار عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلَا يَقْعُدَ وَلَا يَسْتَظِلَّ6 وَلَا يَتَكَلَّمَ وَيَصُومَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ (بخاري)باب النَّذْرِ فِيمَا لاَ يَمْلِكُ وَفِى مَعْصِيَةٍ- كتاب الَأيمان والنذور
ஜைனப் என்ற பெண்ணிடம் அபூபக்கர் ரழி வருகை தந்தார்கள் அவர் யாரிடமும் பேசாமல் இருப்பதைக் கண்டு இவருக்கு என்ன ஆயிற்று என்று கேட்க, இவர் யாரிடமும் பேச மாட்டேன் என்று நிய்யத் செய்து ஹஜ்ஜுக்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டது. உடனே அபூபக்கர் ரழி அவர்கள் அதைக் கண்டித்து இது அறியாமைக் காலத்தின் செயல் என்றார்கள் அதன் பிறகு அவர் பேசினார்
இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியின் வாசலில் நின்று நபி ஸல் மனைவியிடம் பேசிய சம்பவம்
عن صَفِيَّةَ رضي الله عنها زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ مَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا (بُخاري)2038 باب هَلْ يَخْرُجُ الْمُعْتَكِفُ لِحَوَائِجِهِ إِلَى بَابِ الْمَسْجِدِ- كتاب الاعتكاف-شرح : (ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ )أَيْ تَرُدُّ إِلَى بَيْتِهَا(فَقَامَ مَعَهَا يَقْلِبُهَا )أَيْ يَرُدُّهَا إِلَى مَنْزِلِهَا (عَلَى رِسْلِكُمَا )أَيْ عَلَى هِينَتِكُمَا فِي الْمَشْي فَلَيْسَ هُنَا شَيْءٌ تَكْرَهَانِهِ (فتح الباري) وَالْمُحَصَّلُ مِنْ هَذِهِ الرِّوَايَات أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْسُبْهُمَا إِلَى أَنَّهُمَا يَظُنَّانِ بِهِ سُوءًا لِمَا تَقَرَّرَ عِنْده مِنْ صِدْقِ إِيمَانِهِمَا وَلَكِنْ خَشِيَ عَلَيْهِمَا أَنْ يُوَسْوِسَ لَهُمَا الشَّيْطَان ذَلِكَ لِأَنَّهُمَا غَيْرُ مَعْصُومَيْنِ فَقَدْ يُفْضِي بِهِمَا ذَلِكَ إِلَى الْهَلَاكِ فَبَادَرَ إِلَى إِعْلَامهمَا (فتح الباري)
கருத்து- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் இஃதிகாப் இருந்த நேரத்தில் அவர்களுடைய மனைவி அங்கு வந்தார்கள் இரவு நேரமாக இருந்ததால் மனைவியை அனுப்புவதற்காக தெருமுனை வரை சென்றார்கள். அப்போது இரண்டு நபித் தோழர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். இருவரையும் அழைத்து இவர் என்னுடைய மனைவிதான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்த இருவரும் அல்லாஹ்வின் தூதரே தங்களை குறித்து எந்த சந்தேகமும் நாங்கள் கொள்ளவில்லை என்று கூறினார்கள் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதமின் மகனுடைய உடம்பில் ஷைத்தான் ரத்தம் ஓடும் இடமெல்லாம் ஓடுகிறான் என்றார்கள். அதாவது இப்போது உங்கள் மனதில் சந்தேகம் இல்லா விட்டாலும் பின்னால் உங்களின் மனதில் சந்தேகத்தை ஷைத்தான் ஏற்படுத்துவான். எனவே நான் முந்திக் கொண்டேன் என்றார்கள்.
படிப்பினை- நம் மீது தவறு இல்லா விட்டாலும் பிறர் தவறாக எண்ணும்படி நடந்து கொள்ளக்கூடாது என்ற பாடமும் இதில் உண்டு இன்றைக்கு சந்தேகப்படும் நபர்களை விட சந்தேகப்படும்படி நடந்து கொள்பவர்கள்தான் அதிகம். ஏனெனில்அவர்களின் தினசரி வெளிப்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. அவர்களது சொல்லில், செயலில், கொடுக்கல் வாங்கலில், நடைமுறையில் என அனைத்திலும் மற்றவர்கள் சந்தேகப்படும் வகையில் நடந்து கொள்வதை காணலாம் சந்தேகக்கோடு அது வந்தாலே கேடு என்று சொல்வார்கள். எனவே இது நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். சில சமயங்களில் நாம் என்னதான் பரிசுத்தமானவர்களாக இருந்தாலும் கூட ஷைத்தான் நம்மைப்பற்றி மற்றவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பு உண்டு. எனவே அந்த சந்தேகம் ஏற்படும் முன்பே அதை நீக்குவது கட்டாயமாகும்
பொருள்-1,எந்த இரவைத் தேடுகிறீர்களோ அந்த இரவு இனிமேல் தான் வரவிருக்கிறது, 2, மூக்கின் நுனி 3, சுருட்டி வைத்துக் கொள்ளக் கூடாது 4,நிற்க மாட்டார்கள் 5,மவுனமாகவே இருந்து ஹஜ் செய்வதாக, 6,நிழலில் ஒதுங்க மாட்டேன் 7,சிறைக்கைதிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக