வியாழன், 27 மார்ச், 2025

27 ம் இரவு பயான்

 28-03-2025

RAMZAN – 27


بسم الله الرحمن الرحيم  

27 வது இரவு பயான் 


إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3)

லைலத்துல் கத்ரை இறுதி பத்து நாட்களில் அதுவும் ஒற்றைப் படை இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள் என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த 27 வது இரவும்  லைலத்துல் கத்ர் இரவாக இருக்கலாம் என்ற ஆதரவில் நாம் இங்கே ஒன்று கூடி இருக்கிறோம். லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பை நாம் அறிந்திருப்போம். எனவே லைலத்துல் கத்ரு இரவில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சுருக்கமாக முதலில் காண்போம். 1. இந்த இரவில் தொழுகை, பயான் கேட்குதல், திக்ரு ஆகிய அமல்கள் செய்வதுடன் இது பாவ மன்னிப்புக் கேட்க வேண்டிய இரவு என்பதால் அதிகமாக பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். 2. பல்வேறு மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி  இவ்வருடம் முதல் அடுத்த வருடம் வரை உள்ள மனிதர்களின் விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும் இரவு பராஅத் இரவா அல்லது லைலத்துல் கத்ர் இரவா என்பதில்  மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. அது லைலத்துல் கத்ரு இரவு என்று கூறும் மார்க்க அறிஞர்களும் நிறைய  உள்ளனர். எனவே பராஅத் இரவில் ரிஜ்க் விஸ்தீரணம், முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பு, நலவான அமலின் பேரில் ஆயுள் நீளமாகுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்காக துஆச் செய்வது போன்று இந்த இரவிலும் துஆ செய்யலாம்.  



லைலத்துல் கத்ரு இரவில் பாவமன்னிப்புக் கேட்பது என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது

عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو قَالَ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي(ابن ماجة

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் நான்  என்ன துஆ ஓத வேண்டும் என ஆயிஷா ரழி அவர்கள் கேட்க, நபி  ஸல் அவர்கள் பாவ மன்னிப்புக்கான மேற்படி துஆவை கற்றுத் தந்தார்கள். 

  விளக்கம்- இதில் அஃபுவ்வுன் என்ற பயன்படுத்தப் பட்டுள்ளது.  மஃபிரத் என்றாலும்  அஃப்வ் என்றாலும் மன்னித்தல் என்பது பொருளாக இருந்தாலும் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. மஃபிரத் என்பதில் இல்லாத கூடுதலான அர்த்தம் அஃப்வ் என்பதில் உள்ளது. அஃப்வ் என்பது தடயமே இல்லாமல் மன்னிப்பதைக் குறிக்கும். உதாரணமாக காவல் நிலையத்தில் ஒருவர் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப் படும் அத்துடன் அவருக்கு விடுதலையும் கொடுக்கப்படும். ஆனால் சிலருக்கு குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப் படாமலேயே அவருக்கு விடுதலை கொடுக்கப்படும். இதுபோல மறுமையில் சில அடியார்களை தனியாக அழைத்து நீ இன்ன பாவங்களைச் செய்தாயா என்று கேட்டு பிறகு மன்னிப்பு வழங்குவான். வேறு சில அடியார்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அல்லாஹ்வின் அருளால் அப்போதே அழிக்கப்பட்டிருக்கும்



பாவ மன்னிப்புக் கேட்பது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ (ابن ماجة

யார் இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வாரோ அவருக்கு எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுதலையை அல்லாஹ் தருவான். எல்லாக் கவலைகளையும் அல்லாஹ் நீக்குவான். அவர் அறியாப் புறத்தில் இருந்து அவருக்கு இரணம் வழங்குவான்.                

பஞ்சம் நீங்க, கவலைகள் தீர,  குழந்தை பாக்கியம் பெற ,வீடு,தோட்டம் செழிக்க  இஸ்திஃபார் தான் சிறந்த வழி

وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح قال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا –(القرطبي)

நபி நூஹ் அலை அவர்களை அவர்களுடைய சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்தியபோது அல்லாஹ் 40 வருடங்கள் அவர்களுக்கு மழையை நிறுத்தி விட்டான். பெண்களை மலடிகளாக அல்லாஹ் ஆக்கி விட்டான். கால்நடைகளும் விவசாய நிலங்களும் அழிந்தன. அப்போது அவர்கள் நபி நூஹ் அலை அவர்களிடம் முறையிட, நபி நூஹ் அலை அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பான். மழை பொழிய வைப்பான். குழந்தை பாக்கியங்களைத் தருவான். தோட்டங்களை உருவாக்கி ஆறுகளை அல்லாஹ் ஓடச் செய்வான் என நபி நூஹ் அலை அவர்கள் கூறினார்கள்.                                                

وقال ابن صبيح : شكا رجل إلى الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ الله وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله وشكا إليه آخر جفاف بستانه فقال له: استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ من عندي شيئا  إن الله تعالى يقول في سورة "نوح": {اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً} (القرطبي) 

 ஒருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மழை இல்லாததால் ஏற்பட்ட பஞ்சத்தை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் பஞ்சம் நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் வறுமையை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் வறுமை நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக துஆச் செய்யுங்கள்என முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் தன் தோட்டம் வரண்டு கிடப்பதை முறையிட்டபோது அல்லாஹ்விடம்நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். உடன் இருந்தவர்கள் எல்லாவற்றுக்கும் இஸ்திஃபாரைக் கூறுகிறீர்களே என்று கேட்டபோது இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் நான் என் சொந்தக் கருத்தில் எதையும் கூறவில்லை. நபி நூஹ் அலை அவர்கள் தனது சமூக மக்களிடம் கூறியதையே நான் கூறுகிறேன் என்றார்கள்.                                  

قال الشعبي:خرج عُمَر رض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع فأُمْطِرُوا فقالوا مارأيناك استسقيت؟فقال لقد طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا(القرطبي  

உமர் ரழி அவர்கள் மழைத் தொழுகைக்கான குத்பாவின் போது இஸ்திஃபாருடைய வாசகங்களைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. திரும்பி வருவதற்குள் அல்லாஹ் மழையை இறக்கினான். உமர் ரழி அவர்களிடம் சிலர் நீங்கள் மழைக்கான பிரார்த்தனை எதுவுமே கேட்கவில்லையே எவ்வாறு மழை பெய்தது என்று கேட்க, அதற்கு உமர் ரழி நான் அல்லாஹ்விடம் மழைவருவதற்குமுன் அதன் அறிகுறியாக தோன்றும் நட்சத்திரங்களுக்கு ஒப்பான இஸ்திஃபாரை வைத்து அல்லாஹ்விடம் மழை வேண்டினேன். மழையை இறக்கினான் என்றார்கள்  

عَنِ الأَوْزَاعِيِّ"خَرَجَ النَّاسُ إِلَى الاسْتِسْقَاءِ، فَقَامَ فِيهِنَّ بِلالُ بْنُ سَعْدٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا مَعْشَرُ مَنْ حَضَرَ، أَلَسْتُمْ مُقِرِّينَ بِالإِسَاءَةِ ؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: اللَّهُمَّ إِنَّا نَسْمَعُكَ تَقُولُ:  " مَا عَلَى الْمُحْسِنِينَ مِنْ سَبِيلٍ "  وَقَدْ أَقْرَرْنَا بِالإِسَاءَةِ فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَاسْقِنَا، وَرَفَعَ يَدَيْهِ وَرَفَعُوا أَيْدِيَهُمْ، فَسُقُوا".  (تفسير  ابن ابي حاتم

 திமிஷ்க் நகரில் ஏற்பட்ட பஞ்சத்திற்காக மக்கள் மழைத்தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களின் இமாம் பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் அல்லாஹ்வைப் புகழந்த பின் மக்களை நோக்கி மக்களே நீங்கள் உங்களின் பாவத்தை அல்லாஹ்விடம் முறையிட மாட்டீர்களா என்று கேட்க, அதற்கு மக்கள் நாங்கள் முறையிடுகிறோம் என்றார்கள். அப்போது பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் யாஅல்லாஹ் உனது குர்ஆனில் நல்லோர்களுக்கு எல்லாப் பிரச்சினைக்கும் தவ்பாவைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளாய் நாங்கள் எங்களுடைய பாவங்களை உன்னிடம் முறையிடுகிறோம் எங்களை மன்னித்து மழையை இறக்கு என்று கேட்டார்கள். இமாம் அவர்களும் கையை உயர்த்தினார்கள். மற்றவர்களும் கையை உயர்த்தினார்கள். அல்லாஹ் மழையை இறக்கினான்.                             

عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ فِي لِسَانِي ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لَا يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ أَنْتَ مِنْ الِاسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً (ابن ماجة)

கருத்து-ஹுதைபா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் நான் என்னையும் அறியாமல் என் குடும்பத்தாரை அதிகம் திட்டி விடுகிறேன் என்று கூறியபோது அதிகம் இஸ்திஃபார் செய்வீராக என்று கூறினார்கள்

كان الإمام أبو حنيفة إذا أشكَلت عليه مسألة قال لأصحابه: "ما هذا إلا لذنبٍ أحدثتُه"، وكان يستغفر، وربما قام وصلى، فتنكشف له المسألة، ويقول: "رجوتُ أني تِيبَ علَيَّ"؛ (الجواهر المضية - محيي الدين الحنفي - ج- 2 - ص- 478).

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் நான் செய்த பாவத்தின் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று கூறி இஸ்திஃபார் செய்வார்கள். சில நேரங்களில் அதற்காக தொழுது தவ்பா செய்வார்கள். அதன் பின்பு அந்த சிக்கல் நீங்கும். அப்போது இமாம் அவர்கள் என்னுடைய தவ்பா ஏற்கப்பட்டதன் அடையாளமாக இந்த சிக்கல் நீங்கி இருக்கலாம் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறுவார்கள்.                                                                     

இஸ்திஃபாரின் பலனை அனுபவித்த நல்லடியாரின் வரலாறு

كان الإمام أحمد بن حنبل في مدينة غريبة لا يعرفه أهلها وقرر بعد أن بلغ به التعب مبلغه أن ينام في المسجد فرآه حارس المسجد فرفض أن يمكث فيه فقال الإمام سوف أنام موضع قدمي فقط ونام الإمام موضع قدمه فقام الحارس بسحبه من قدميه وأخرجه من المسجد  وكان الإمام أحمد شيخا وقورا تبدو على وجهه ملامح التقوى والصلاح، فلما رآه خباز بهذه الهيئة عرض عليه أن يحضر لينام في منزله، فذهب معه ولاحظ الإمام أحمد أن الخباز وهو يقوم بعمله في عجن العجين وخبز الخبز أنه يستغفر ويستغفر ويستغفر،فلما رأى الإمام حال هذا الخباز مع الاستغفار استأذنه أن يسأله سؤالاً، وكان الإمام يعرف أن للاستغفار فوائد عظيمة، فقال له هل وجدت لاستغفارك هذا ثمرة، فأجابه الخباز: نعم.. أنا والله كلما دعوت الله دعوة استجابها لي ما عدا دعوة واحدة، قال له الإمام أحمد وما هي هذه الدعوة التي لم تستجب؟ قال الخباز: دعوت الله أن يريني الإمام أحمد بن حنبل فقال الإمام: أنا الإمام أحمد بن حنبل، والله إني جررت إليك جراً؟

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றார்கள். மிக களைப்பாக இருந்ததால் சற்று நேரம் ஓய்வெடுக்க ஒரு மஸ்ஜிதில் அனுமதி கேட்டார்கள். முஅத்தினுக்கு இவர்களை யாரென்று தெரியாததாலும் இமாம் அவர்களும் தங்களை அறிமுகப் படுத்தவில்லை  என்பதாலும் அவர்   இங்கெல்லாம் தங்க முடியாது என்று உறுதியாக க் கூறினார். இமாம் அவர்கள் அதிக களைப்பின் காரணமாக சற்று ஓரமாக படுத்தார்கள். அது கண்ட முஅத்தின் காலைப் பிடித்து  இழுத்து வெளியே தள்ளினார். இமாம் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த போது  ரொட்டி சுட்டு விற்பனை செய்யும் ஏழை ஒருவரைச் சந்தித்தார்கள். அவர் இமாம் அவர்களை நோக்கி நீங்கள் மிகவும் களைப்புடன் காணப்படுகிறீர்கள். என் வீட்டுக்கு வந்து ஓய்வெடுங்கள் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அங்கு தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அந்த ஏழையின் செயல்பாடுகளை இமாம் அவர்கள் உற்று கவனித்தார்கள். ரொட்டி சுடும்போதெல்லாம் அவரின் நாவின் இஸ்திஃபார்  வெளிப்பட்டுக் கொண்டேயிருந்த து. அதைக் கவனித்த இமாம் அவர்கள் நீங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்திஃபாரை மொழிந்து கொண்டே இருக்கிறீர்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா என்று கேட்க, அந்த ஏழை வியாபாரி நான் இதன் பலனை நிறைய அனுபவித்துள்ளேன். நான் கேட்கும் துஆக்கள் அனைத்தும் ஒப்புக் கொள்ளப்படுகிறது என்று கூறி விட்டு, பிறகு வருத்தத்துடன்  நான் பல வருடமாக கேட்டும் ஒரே ஒரு துஆ மட்டும் இதுவரை நிறைவேறவில்லை என்றார். அது என்ன என்று இமாம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நான் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பல வருடங்களாக  அவர்களைக் காண வேண்டும் என்று துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதுவரை நிறைவேறவில்லை என்று கூறிய போது இமாம் அவர்கள்  மிகவும் ஆச்சரியத்துடன்  நான் தான் அஹ்மதுப்னு ஹன்பல்  அல்லாஹ்வின் மீது சத்தியமாக  உங்களிடம் நானாக வரவில்லை. காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்றார்கள்.                                 

 இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொண்ட சமூகத்தை அல்லாஹ்  ஆட்சியாளர்கள் மூலம் தண்டிக்க மாட்டான்  وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33)الانفال

கருத்து – இரண்டு விதமான பாதுகாப்புகள் இருக்கும் வரை அல்லாஹ் நம்மை சோதிக்க மாட்டான் 1. நபி ஸல் அவர்கள் நம்மோடு இருப்பது. 2.இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வது  முந்தியது சாத்தியமில்லை என்றாலும் பிந்தியது சாத்தியம். 

தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். 

قال الإمام ابن القيم رحمه الله: "المعاصي تزرع أمثالها، وتولد بعضها بعضًا، حتى يَعِزَّ على العبد مفارقتها والخروج منها، كما قال بعض السلف: إن مِن عقوبة السيئةِ السيئةَ بعدها، وإن من ثواب الحسنةِ الحسنةَ بعدها؛ فالعبد إذا عمل حسنةً قالت أخرى إلى جنبها: اعملني أيضًا، فإذا عملها، قالت الثالثة كذلك، فتضاعف الربح، وتزايدت الحسنات، وكذلك كانت السيئات أيضًا، حتى تصير الطاعات والمعاصي هيئاتٍ راسخةً، وصفاتٍ لازمةً، وملَكاتٍ ثابتةً، فلو عطَّل المحسن الطاعة لضاقت عليه نفسه، وضاقت عليه الأرض بما رحبت، وأحسَّ من نفسه بأنه كالحوت إذا فارق الماء، حتى يعاودها، فتسكُنَ نفسُه، وتقَرَّ عينه، ولو عطَّل المجرم المعصية وأقبل على الطاعة، لضاقت عليه نفسه، وضاق صدره، وأعيت عليه مذاهبه، حتى يعاودها، حتى إن كثيرًا من الفسَّاق ليواقع المعصية من غير لذةٍ يجدها، ولا داعيةٍ إليها، إلا بما يجد من الألم بمفارقتها"؛ (الجواب الكافي - لابن القيم - ص- 81).

 இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப் பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப் பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான் முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார்.  

 (எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் நாடகங்களில் வரும் தொடர்களைப் போன்றாகும்.)  ஒரு நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய் என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம் செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல  இடையூறுகள் செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். (சாராயம் குடித்தே நான் செத்தாலும் சரி... நான் குடிப்பேன் என்பது போல.) ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.                                 

தவ்பா இல்லாத பாவங்களால் பரக்கத் நீங்கும்.

ومعنى قوله تعالى: {ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ}الروم 41 -أي بان النقص في الزروع والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة, ولهذا جاء في الحديث الذي رواه أبو داود "لحد يقام في الأرض أحب إلى أهلها من أن يمطروا أربعين صباحاً" والسبب في هذا أن الحدود إذا أقيمت انكف الناس أو أكثرهم أو كثير منهم عن تعاطي المحرمات, وإذا تركت المعاصي كان سبباً في حصول البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يحكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسر الصليب ووضع الجزية, وهو تركها, فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أخرجي بركتك, فيأكل من الرمانة الفئام من الناس ويستظلون بقحفها, ويكفي لبن اللقحة الجماعة من الناس, وما ذاك إلا ببركة تنفيذ شريعة محمد صلى الله عليه وسلم فكلما أقيم العدل كثرت البركات والخير. ولهذا ثبت في الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب. (تفسير ابن كثير)

ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான்  என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது  அந்த  கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின்  அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் ஒரு மாபெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும் இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்துவிடும்.                                         

தவ்பா இல்லாத பாவங்களின் காரணமாக வணக்க வழிபாட்டில் படிப்படியாக தடை ஏற்படும்.

அதாவது இன்று ஒரு பாவம் செய்தால் இன்று ஒரு வணக்கம் தடைபடும். நாளை ஒரு பாவம் செய்தால் நாளை ஒரு வணக்கம் தடைபடும். உதாரணமாக முதலில் நஃபிலான வணக்கம் தடைபடும். பின்பு சுன்னத்தான வணக்கங்கள் தடைபடும். அப்போதுதான் இது பாவத்தின் பாதிப்புகள் என்பது புரியும்.


பராஅத் இரவில் மூன்று விதமான துஆக்களை அல்லாஹ்விடம் கேட்பது போல் இந்த இரவிலும் துஆ  கேட்கலாம்

இவ்வருடம் முதல் அடுத்த வருடம் வரை உள்ள மனிதர்களின் விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும் இரவு பராஅத் இரவா அல்லது லைலத்துல் கத்ர் இரவா என்பதில்  பல அறிஞர்களின் கருத்து லைலத்துல் கத்ரு என்பதாகும். எனவே பராஅத் இரவில் ரிஜ்க் விஸ்தீரணம், முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பு, நலவான அமலின் பேரில் ஆயுள் நீளமாகுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்வது போன்று இந்த இரவிலும் துஆ செய்யலாம்

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ- فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ(سورة الدخان) أَيْ فِي لَيْلَة الْقَدْر يُفْصَل مِنْ اللَّوْح الْمَحْفُوظ إِلَى الْكَتَبَة أَمْر السّنَة وَمَا يَكُون فِيهَا مِنْ الْآجَال وَالْأَرْزَاق وَمَا يَكُون فِيهَا إِلَى آخِرهَا وَهَكَذَارُوِيَ عَنْ اِبْن عُمَر وَمُجَاهِد وَأَبِي مَالِك وَالضَّحَّاك وَغَيْر وَاحِد مِنْ السَّلَف (تفسير ابن كثير) عَنِ ابْنِ عَبَّاس رضي الله عنه قَالَ:إِنَّكَ لَتَرَى الرَّجُلَ يَمْشِي فِي الْأَسْوَاقِ وَقَدْ وَقَعَ اسْمُهُ فِي الْمَوْتَى، ثُمَّ قَرَأَ" إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ-فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ  يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ قَالَ: فَفِي تِلْكَ اللَّيْلَةِ يُفْرَقُ أَمْرُ الدُّنْيَا إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ مَوْتٌ أَوْ حَيَاةٌ أَوْ رِزْقٌ كُلُّ أَمْرِ الدُّنْيَا يُفْرَقُ تِلْكَ اللَّيْلَةَ إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ (تفسير ابن ابي حاتم    

واعلم أن تقدير الله لا يحدث في تلك الليلة فإنه تعالى قدر المقادير قبل أن يخلق السموات والأرض في الأزل ، بل المراد إظهار تلك الليلة المقادير للملائكة في تلك الليلة بأن يكتبها في اللوح المحفوظ وهذا القول اختيار عامة العلماء (تفسير الرازي)

ரிஜ்கில் பரக்கத்தை தரும்படி அல்லாஹ்விடம் கேட்பது. ரிஜ்க் என்பது விசாலமான பொருள் கொண்டது

உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பெற்றெடுத்த பிள்ளை, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் பரக்கத் வேண்டி அல்லாஹ்விடம் கேட்கிறோம். காரணம் எல்லாவற்றிலும்  பரக்கத் மிக மிக அவசியம். பரக்கத் என்பதற்கு அந்தந்த இடத்திற்கு தகுந்த மாதிரி வளர்ச்சி, முன்னேற்றம், வெற்றி, நிம்மதி என பல அர்த்தங்கள் உண்டு.

وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ (151)الانعامعَنْ عَلِيِّ بْنِ بَكَّارٍ، قَالَ: شَكَا رَجُلٌ إِلَى إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ كَثْرَةَ عِيَالِهِ، فَقَالَ لَهُ إِبْرَاهِيمُ: " يَا أَخِي، انْظُرْ كُلَّ مَنْ فِي مَنْزِلِكَ لَيْسَ رِزْقُهُ عَلَى اللهِ فَحَوِّلْهُ إِلَى مَنْزِلِي "شعب الايمان

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து தன் குடும்பம் பெருகி விட்டதையும்  அதனால் உணவு நெருக்கடி ஏற்படுமோ என்ற தனது பயத்தையும் தெரிவித்தார் அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் உனது வீட்டில் யாருக்கு அல்லாஹ் ரிஜ்க் தர மாட்டான் என்று நீ நினைக்கிறாயோ அவர்களை என்னிடம் அனுப்பி வை.. எனது பொறுப்பில் உள்ளவர்களுக்கெல்லாம் சேர்த்தே அல்லாஹ் எனக்கு ரிஜ்க் தருவான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்கள். 

1. உண்ணும் உணவில் பரக்கத் இருந்தால் குறைந்த உணவும் வயிறை நிரப்பும்

قَالَ النَّوَوِيّ :وَالْمُرَاد بِالْبَرَكَةِ مَا تَحْصُل بِهِ التَّغْذِيَة وَتَسْلَم عَاقِبَتُهُ مِنْ الْأَذَى وَيُقَوِّي عَلَى الطَّاعَة وَالْعِلْم عِنْد اللَّه(فتح الباري

இமாம் நவவீ ரஹ் அவர்கள் உணவு விஷயத்தில் பரக்கத் என்பதற்கு விளக்கம் கூறும்போது எந்த உணவின் மூலம் வயிறும் நிரம்புவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்குமோ, வணக்க வழிபாடுகளுக்கு உதவியாகவும் இருக்குமோ, தீனுடைய கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமோ அது தான் உணவில் பரக்கத் என்று கூறினார்கள் 

உணவில் பரக்கத் இருந்தால் கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகும் என்பதற்கு உதாரணம்.

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு அவர்களின் முன்னால் மாணவரான அஹமத் இப்னு ஹன்பல் அவர்கள் தம் ஆசிரியரை பார்க்க தாம் வரவிருப்பதாக சொல்லியனுப்புகிறார்கள் அதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் மிகவும் மிகவும் மகிழ்ந்து தம்முடைய இந்நாள் மாணவர்களிடம்  என்னுடைய மாணவர்  வருகிறார் அவரை நீங்கள் நன்கு உபசரிக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.                                                                

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் வந்தவுடன் ஆசிரியரை நலம் விசாரித்து விட்டு புறப்பட எண்ணிய போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள்  இருங்கள் இங்கே தங்கி விட்டு நாளை செல்லுங்கள் அன்புடன் கூற, அதை ஏற்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள்  அங்கே தங்குகிறார்கள். அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் தம் மாணவர்களை அழைத்து அவரை நன்கு உபசரியுங்கள் மறக்காமல் அவர் தங்கும் அறையில் உளூச் செய்ய தண்ணீர் வைக்க வேண்டும் ஏனெனில் என் முன்னால் மாணவர் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தவறாமல் தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடிப்பவர் என்று கூற, மாணவர்களும் அவ்விதமே செய்தார்கள். அதிகாலையில் மாணவர்கள் சென்று பார்த்த போது தண்ணீர் அப்படியே இருக்கிறது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயம் மாணவர்களின் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்த அதை ஆசிரியரிம் கூறினார்கள் அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இதில் ஏதேனும் காரணம் இருக்கும் இந்த விஷயத்தை நீங்கள் விட்டு விடுங்கள் நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்றார்கள் அதிகாலையில் சுப்ஹுக்கு வந்த போது அவர்களிடம் நைசாகப் பேசி  நேற்று நீங்கள் தஹஜ்ஜுத் தொழுகையை தொழவில்லையா மாணவர்கள் வைத்த தண்ணீர் அப்படியே இருந்ததாக கூறினார்களே  என அன்புடன் கேட்ட போது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் சொன்ன பதில் - ஆசிரியர் அவர்களே கடந்த பல நாட்களாக  ஹலாலான உணவு எனக்குக் குறைவாகவே கிடைத்த து. இந்த நிலையில் நேற்று இஷா முடிந்த பின் நீங்கள் வழங்கிய ஹலாலான உணவை திருப்தியாக சாப்பிட்ட பின் எனக்கு நல்ல சிந்தனைகளும், அதில் ஓர்மையும் ஏற்பட்டது நான் இஷாவிற்குச் செய்த உளூவுடன் இரவு முழுவதும் தூங்காமல்  குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்து பல சட்டங்களை எடுத்தேன். அப்படியே தஹஜ்ஜுத் நேரம் ஆகி விட்டது உளூவுடன் இருந்ததால் அப்படியே தஹஜ்ஜுத் தொழுது விட்டு சற்று நேரம் தூங்கி விட்டேன். அந்த நேரத்தில்தான் மாணவர்கள் வந்து பார்த்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

சிறந்த முஃமினின் உணவில் பரக்கத் செய்யப்படும் என்பதால் குறைந்த உணவே அவருக்குப்போதும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ (بخاري) بَاب طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ- كتاب الأطعمة- 

عَنْ أَبِي هُرَيْرَةَ   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ وَهُوَ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (مسلم)بَاب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ-كِتَاب الْأَشْرِبَةِ-

நபி ஸல் அவர்களிடம் ஒரு மாற்று மதத்தவர் விருந்தாளியாக வந்தார். முதல்நாள் அவருக்கு ஆட்டுப்பால் குடிக்கத் தரும்படி நபி ஸல் உத்தரவிட்டார்கள். அவர் குடித்தார். மீண்டும் தரப்ப்பட்டது. குடித்தார். இவ்வாறே ஏழு கோப்பைகளை காலி செய்தார். பிறகு அவர் முஸ்லிமாக விட்டார். அதன்பின்பு அவரிடம் ஆட்டுப்பால் குடிக்கத் தந்த போது ஒரு கோப்பைக்கு மேல் அவரால் குடிக்க முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு முஃமின் ஒரு இரைப்பையை நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே அருந்துவார். ஆனால் ஒரு காஃபிர் ஏழு இரைப்பைகளை நிரப்பிக் கொள்ளும்  அளவுக்கு அருந்துவார் என்றார்கள்.                               

قال القرطبي:المؤمن يأكل للضرورة والكافر يأكل للشهوة أو المؤمن يقل حرصه وشرهه على الطعام ويبارك له في مأكله ومشربه فيشبع من قليل والكافر شديد الحرص لا يطمح بصره إلا للمطاعم والمشارب كالأنعام فمثل ما بينهما من التفاوت كما بين من يأكل في وعاء ومن يأكل في سبعة (فيض القدير) 

عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (بخاري)باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِى مِعًى وَاحِدٍ- الْأَشْرِبَةِ

2.3. நலவான அமலின் பேரில் ஆயுளை அல்லாஹ் நீளமாக்கிடவும் இந்த இரவில் துஆச் செய்யலாம்

காரணம் இந்த வருடம் முதல் அடுத்த வருடம் வரையிலான விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும்போது அடுத்த வருடத்திற்குள் நமக்கு மவ்த் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் முஸீபத்துகள் ஏற்படும் என்றிருந்தாலோ நம்முடைய துஆவின் காரணமாக அது தடுக்கப்படும். 

عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ (ابن ماجة) 

நற்காரியங்கள் ஆயுளை அதிகரிக்கும். துஆ விதியை மாற்றும். ஒருவன் செய்யும் பாவங்களால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய அபிவிருத்தி தடுக்கப்படும்.

عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم : الدعاء ينفع مما نزل و مما لم ينزل فعليكم عباد الله بالدعاء (حاكم)

عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه  أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنْ السُّوءِ مِثْلَهَا قَالُوا إِذًا نُكْثِرُ قَالَ اللَّهُ أَكْثَرُ (مسند)

அல்லாஹ் விதியை மாற்றியமைப்பதற்கு ஒரு உதாரணம்

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ (11)الرعد

  மேற்படி வசனத்திற்கு விரிவான விளக்கம் உள்ளது. அதில் ஒரு துளி என்னவென்றால் வலது இடது தோளில் உள்ள கிராமன் காதீபீன் அல்லாத இன்னும் இரு மலக்குகள் நமக்கு முன்னும் பின்னும் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றனர். சமீபத்தில் ஒரு நண்பர் வந்து சொன்னார் சில வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. பயணம் செய்த பலர் இறந்து விட்டனர். ஆனால் நான் மட்டும் எந்தக் காயமும் இல்லாமல் தப்பித்தேன். மயக்கம் மட்டும் இருந்த நிலையில் நான் வெளியில் கிடந்தேன். விபத்து நடக்கும் நேரத்தில் என்னை யாரோ காரில் இருந்து வெளியே வீசியிருக்கலாம் என்று நெகிழ்வுடன் ஆதாரத்துடன் கூறினார்.

விபத்தில் ஒருவரின் உயிர் பிரிய வேண்டும் என்று அல்லாஹ் நாடி விட்டால் சிறிய விபத்திலும் கூட அவரின் உயிர் பிரிந்து விடலாம். ஆனால் அவரின் உயிர் இப்போது பிரியக்கூடாது என்று அல்லாஹ் நாடி விட்டால் எவ்வளவு பெரிய விபத்தாக இருந்தாலும் தப்பித்து விடுவார். மேற்படி மலக்குகளைக் கொண்டு அல்லாஹ் தப்பிக்க வைப்பான். செல்போன் பேசிக் கொண்டே பைக் ஓட்டும் ஒருவன் எதிரில் வேகமாக லாரி வருவதைக் கூட கவனிக்காமல் இருப்பான். கடைசி நொடியில் அதைக் கவனித்து வண்டியை வேறு பக்கம் திருப்பி சிறு காயத்துடன் தப்புவான். கடைசி நேரத்தில் அந்த இரு மலக்குகள் தான்  அவனை உஷார் படுத்திப் பாதுகாத்திருப்பார்கள். 

அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் துஆவின் காரணமாக அபுல் முழஃப்பர் அவர்களின்  ஆயுள் அதிகரித்த சம்பவத்தை இங்கே சுட்டிக்காட்டலாம்

 முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் காலத்தில் அபுல் முழஃப்பர் என்பவர் இருந்தார், அவர் எப்போது வியாபார விஷ.மாக வெளியூர் சென்றாலும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லிச் செல்வது வழக்கம். ஒருமுறை அவ்வாறு அவர் செல்லும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வதற்காக வந்தார், அப்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் நீங்கள் இப்போது செல்ல வேண்டாம் இப்பயணம் முடித்து விட்டு நீங்கள்   திரும்பும்போது உங்களுக்கு ஆபத்து வரலாம் என எச்சரித்தர்கள் அவர் கவலையுடன் திரும்பிய போது வழிய.ல் ஹம்மாத் ரஹ அவர்களை சந்தித்தார்கள் கவலைக்கு காரணம் கேட்ட போது அபுல்முழஃஃப்பர் அவர்கள் காரணத்தைக் கூற, அதற்கு ஹம்மாத் ரஹ் அவர்கள் நீங்கள் சென்று வாருங்கள். அல்லாஹ்வின் விதி அப்படி இருந்தாலும் அவன் உங்களைப் பாதுகாப்பான் என்று கூறி அனுப்பினார்கள், அவர் சென்று சரக்குகளை விற்பனை செய்து விட்டு பணப்பையுடன் திரும்பும்போது வழி.யில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது ஒரு இடத்தில் பையை வைத்தார் ஆனால் அதை எடுக்க மறந்து விட்டார். அதை தாண்டி சற்று தூரம் வந்து ஓரிடத்தில் ஓய்வெடுத்த போது அயர்ந்து தூங்கினார். அதில் ஒரு கனவு கண்டார் தன்னோடு பல வியாபாரிகள் பணப்பைகளுடன் இருப்பது போலவும் அவற்றைப் பறிக்க கொள்ளைக் கூட்டம் ஆயதங்களுடன் வருவது போலவும் கனவு கண்டார். அதில் ஒரு கொள்ளையன் இவருக்கு அருகில் வந்து இவரைக் கழுத்தில் தாக்கி இவரிடமிருந்து பணப்பையைப் பறித்தான். அத்துடன் கனவு கலைந்தது. ஆனால் அருகில் யாரும் இல்லை. ஆனால் கழுத்தில் மட்டும் காயத்தின் தழும்பு இருந்த து. அப்போது தான் மறந்த பணப்பையின் நினைவு வந்தது, உடனே அந்த இடத்திற்குச் சென்றபோது அது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அவர் ஊர் திரும்பியவுடன் வழியில் ஹம்மாத் ரஹ் அவர்களைச் சந்தித்து நடந்த விஷயத்தைக் கூறியவுடன் ஹம்மாத் ரஹ் அவர்கள் கறினார்கள் நீங்கள் கனவில் பார்த்த அத்தனை விஷயங்களும் நிஜத்தில் நடைபெற வேண்டியவை ஆனால் அவையனைத்தும் அல்லாஹ் கனவில் நிகழ்த்தி அல்லாஹ் உங்களைப் பாதுகாத்துள்ளான் இதற்குக் காரணம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள்  தான். அவர்கள் நீங்கள் சென்றதை அறிந்த தில் இருந்து உங்களுக்காக  எழுபது தடவை துஆ செய்தார்கள். அதனால் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்றார்கள் 

வாழ்நாள் விஷயத்தில் பெற்றோரின் சாப பிரார்த்தனையும் உடனே ஏற்றுக் கொள்ளப்படும்

அல்லாமா துல்பிகார் சாஹிப் ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் ஒரு சம்பவத்தை எழுதுகிறார்கள், முற்காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை  இருந்தது அப்பெண் அக்குழந்தையை தூங்க வைக்க மிகவும் கஷ்டப்படுவாள் அவ்வளவு எளிதாக அவன் தூங்க மாட்டான் ஒரு தடவை அவளுக்கு அடுப்பில் அதிகமான வேலை இருந்த து. ஆனால் மகன் எந்த வேலையையும் செய்ய விடாமல் இடுப்பிலயே தூக்கி வைக்கும்படி அடம் பிடித்தான். அந்தப் பெண் எப்படியோ பிள்ளைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம் என்று வயிறு நிறையும் அளவுக்குப் பால் தந்தாள், அவனும் தூங்கும் நிலைக்கு வந்தவுடன் அவனைப் படுக்க வைத்து விட்டு மறுபடியும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும்போது மறுபடியும் அவன் விழித்துக் கொண்டான். அப்போது அப்பெண் சங்கடப்பட்டு ஒரு வார்த்தையைச் சொன்னாள் நீ தூங்கினாயே ஒரேயடியாக தூங்கி இருக்க வேண்டாமா அதாவது இறந்திருக்க வேண்டாமா என்று கருத்தில் அவ்வாறு  கூறி விட்டாள். அல்லாஹ் அதை அப்படியே அங்கீகரித்தான். ஆனால் உடனே எதுவும் நடைபெறவில்லை. அவள் தன் மகனை நன்கு வளர்த்தாள். படிக்க வைத்தாள். அவனும் எல்லா படிப்புகளையும் படித்து நன்கு முன்னேறி பல பட்டங்களைப் பெற்றான். சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கினான். மற்றவர்கள் எல்லோரும்  இப்படித்தான் பிள்ளையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஊரே மெச்சும் அளவுக்கு அவன் உயர்ந்தான். கடைசியில் ஒரு பெரிய இடத்தில் அவனுக்குப் பெண் பேசி திருமணமும் நிச்சயமானது.  அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது அவன் வீட்டில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக ஒரு  ஸ்டூலில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழ, சற்று நேரத்தில் அவன் மூச்சும் அடங்கியது. வாழைப்பழத்தை அது காயாக இருக்கும்போது அறுக்காமல் அது கனிந்த பின்பு அறுப்பது போல அல்லாஹ் இதை நிகழ்த்தினான். இச்சம்பவத்தால் அவனின் தாய் பைத்தியமாகி விட்டாள். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊரின் இறைநேசர் ஒருவரின் கனவில் அந்தத் தாய்  தன் பிள்ளையை திட்டிய காட்சி கனவாக காட்டப்பட்டு இதனால் தான் அவன் இறந்தான் என்பதும் கூறப்பட்டது.                                                                   

லைலத்துல் கத்ரு இரவின் அடையாளங்களில் சில...

عَنْ جَابِر بْن عَبْد اللَّه أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنِّي رَأَيْت لَيْلَة الْقَدْر فَأُنْسِيتهَا وَهِيَ فِي الْعَشْر الْأَوَاخِر مِنْ لَيَالِيهَا طَلْقَة بَلْجَة لَا حَارَّة وَلَا بَارِدَة كَأَنَّ فِيهَا قَمَرًا لَا يَخْرُج شَيْطَانهَا حَتَّى يُضِيءَ فَجْرُهَا (تفسير ابن كثير)

 லைலத்துல் கத்ரு இரவை நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். எனவ ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் அதை தேடுங்கள். அதன் அடையாளங்களாகிறது அந்த இரவில் அதிக உஷ்ணமும் இருக்காது அதிக குளிரும் இருக்காது. நடுநிலையாக இருக்கும். மற்ற நாட்களில் ஷைத்தான் சூரியனுடன் இணைந்து வெளியாகுவதைப் போல அன்றைய இரவு முடிந்து சூரியன் உதிக்கும் போது அதனுடன் ஷைத்தான் வெளியாக மாட்டான். 

قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه الشَّيْطَانُ يَطْلُعُ مَعَ الشَّمْسِ كُلَّ يَوْمٍ إِلاَّ لَيْلَةَ الْقَدْرِ  قَالَ : وَذَلِكَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لاَ شُعَاعَ لَهَا (مصنف ابن ابي شيبة) عَنِ الْحَسَنِ قَالَ:قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةٌ بَلْجَةٌ سَمْحَةٌ تَطْلُعُ شَمْسُهَا لَيْسَ لَهَا شُعَاعٌ(مصنف ابن ابي شيبة)  عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه قَالَ تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மார்க்கக் கல்வியின் அவசியம்

ஒவ்வொரு மஹல்லா தோறும் மக்தப் மதரஸாக்களை வலுப்படுத்த வேண்டும். மஹல்லாவில் உள்ள ஒவ்வொருவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தா...