28-03-2025
رمضان - 27 بسم الله الرحمن الرحيم
ஃபித்ரா & ஈதுப் பெருநாள் முன் தயாரிப்புகள்
ஃபித்ராவைப்பற்றியும் ஈதுப் பெருநாளுக்கு முதல் நாள் மஃரிபில் இருந்தே நாம் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுக்கங்களைப் பற்றி..
ஃபித்ரா பற்றிய இறை வசனம்
{قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى} ولإبن خزيمة من طريق كثير بن عبد الله عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه و سلم سئل عن هذه الآية فقال نزلت في زكاة الفطر (فتح الباري
மேற்படி வசனம் பற்றி நபி ஸல் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது இவ்வசனம் சதக்கத்துல் ஃபித்ரு விஷயமாக இறங்கியது என பதில் கூறியதாக ஃபத்ஹுல் பாரீ போன்ற நூல்களில் உள்ளது.
ஏழைகளுக்கு உணவாக கொடுக்கப்படுபவைகளில் பல விதம் உள்ளன. ஃபித்ரா, ஃபித்யா, கஃப்பாரா இன்னும் இது போன்ற பல வகைகள் உள்ளன. நம்முடைய மார்க்கத்தின் தனித்துவம் என்னவென்றால் ஒரு முஸ்லிம் ஏதேனும் தவறு செய்தால் அதற்கு தண்டனையாக நீ இத்தனை ரக்அத் தொழு அல்லது இத்தனை திக்ருகள் செய் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம் ஆனால் நம்முடைய மார்க்கம் நாம் செய்த குற்றத்திற்கான பரிகாரத்தைக் கூட ஏழைகளின் பசியைப் போக்கும் விதமாக ஆக்கி வைத்து பசித்தவருக்கு உணவு கொடுப்பதில்தான் இறைக்கடமை விஷயத்தில் நீ செய்த தவறுகளுக்கான நிவர்த்தி உள்ளது என்றும் நீ முதலில் ஏழைகளை திருப்திப் படுத்தினால் அல்லாஹ்வை திருப்திப் படுத்தியவராக ஆக முடியும் என்பதையும் உணர்த்தியது.
வெடி வெடித்து வழியில் நடந்து செல்பவர்களை பயமுறுத்துவதை பண்டிகை என்றும், வருவோர் போவோர் அனைவர் முகத்திலும் கலர் பொடிகள் பூசுவதை பண்டிகை என்றும் பல மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இஸ்லாம் இரண்டு பெருநாட்களை நமக்கு அறிமுகப் படுத்தி அந்த இரு பெருநாட்களிலும் ஃபித்ரா, குர்பானி என்ற அடிப்படையில் தர்மம் செய்யும்படி கட்டாயப் படுத்துகிறது.
ஃபித்யா, ஃபித்ரா, வேறுபாடு
ஃபித்யா என்பது அறவே நோன்பு வைக்க முடியாதவர்கள் தாம் வைக்க முடியாத ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு இரு வேளை உணவு தானியங்கள் கொடுப்பதாகும். அதனுடைய அளவும் ஃபித்ராவின் அளவும் ஒன்று தான்.
ஃபித்ரா என்பது ஈதுப் பெருநாள் அன்று காலையில் ஈதுத் தொழுகைக்கும் வருவதற்கு முன்பு கொடுக்கப்படும் தர்மமாகும். இது நான்கு நோக்கங்களுக்காக கொடுக்கப் படுகிறது.
ஃபித்ராவின் நான்கு விதமான நோக்கங்கள்
الاول : إغناء الفقراء عن ذل السؤال في هذا اليوم العظيم - الثاني: إدخال الفرح والسرور عليهم في هذا اليوم الذي يفرح فيه المسلمون جميعا - الثالث : تطهير مال الصائم بعد أن تطهر جسده بالصوم الرابع: جبر ما عساه أن يكون من خلل في صومه
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث (نور الايضاح
1.மகத்தான அந்த நாளில் எந்த ஏழைகளையும் கையேந்தும் நிலையை விட்டும் பாதுகாப்பது 2.அனைவரும் சந்தோஷமாக இருக்கும் அந்த நாளில் ஏழைகளையும் மகிழ்ச்சியாக்கி வைத்தல் 3.நோன்பாளி தம் உடலை பல்வேறு நோய்களை விட்டும் சுத்தப்படுத்தியது போன்று ஃபித்ரா மூலம் தம் பொருளை சுத்தப் படுத்துவது 4.நோன்பில் ஏற்பட்ட சிறிய தவறுகளுக்குப் பரிகாரம்
عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِىَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِىَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ. (ابوداود
நோன்பு வைக்காதவர்கள் ஃபித்ரா கொடுக்கலாமா ?
ஃபித்ரா என்பது நோன்பில் ஏற்பட்ட சிறிய தவறுகளுக்குப் பரிகாரம் என்பதால் நோன்பு வைக்காதவர்கள் தர வேண்டிய அவசியமில்லை என்று சிலர் விளங்கி வைத்துள்ளனர். அது தவறாகும். ஃபித்ரா வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். நோன்பு வைத்தவர், நோன்பு வைக்காதவர் என்ற வேறுபாடு கிடையாது
ஃபித்ராவின் அளவு
நபி ஸல் அவர்களின் காலத்தில் கோதுமையாகவோ, பேரீத்தம்பழமாகவோ, பாலாடைக்கட்டியாகவோ, உலர் திராட்சையாகவோ கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நபருக்கான ஃபித்ரா என்பது தோல் நீக்காத கோதுமையாக இருந்தால் ஒரு ஸாஃ என்றும் தோல் நீக்கிய கோதுமையாக இருந்தால் அரை ஸாஃ என்றும் சட்ட நூல்களில் கூறப்படும்.
அந்தக் காலத்தில் உணவு தானியங்களை அளப்பதற்குப் பயன்படுத்தும் ஸாஉ என்ற அளக்கும் பாத்திரத்தை நம்முடைய காலத்தின் அளவோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் கருத்து வேறுபாடு வருவதால் தான் ஃபித்ராவின் அளவிலும் கருத்து வேறுபாடு வருகிறது. அதன்படி ஹனஃபி மத்ஹபின் படி ஒரு கிலோ 600 கிராம் என்றும் ஷாஃபிஈ மத்ஹபின் அடிப்படையில் 2 கிலோ 400 கிராம் என்றும் கூறப்படும். பெருநாள் தொழுகைக்கு வரும் முன் கொடுத்து விட வேண்டும்.
عَنْ ابْنِ عُمَرَ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ وَالذَّكَرِ وَالْأُنْثَى وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ (بخاري - عن أَبي سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ أَقِطٍ أَوْ صَاعًا مِنْ زَبِيب(بخاري) بَاب صَدَقَةِ الْفِطْرِ صَاعٌ مِنْ طَعَامٍ-كتاب الزكاة
ஹனஃபீ மத்ஹபில் பணமாகவும் கொடுக்கலாம். ஏனெனில் அதைப் பெற்றுக் கொள்ளும் ஏழைகள் தமக்குப் பிரியமான உணவை வாங்கிக் கொள்ளலாம். என்பது அவர்களின் கருத்து
الدَّقِيقُ أَوْلَى مِنْ الْبُرِّ وَالدَّرَاهِمُ أَوْلَى مِنْ الدَّقِيقِ فِيمَا يُرْوَى عَنْ أَبِي يُوسُفَ وَهُوَ اخْتِيَارُ الْفَقِيهِ أَبِي جَعْفَرٍ لِأَنَّهَا أَدْفَعُ لِلْحَاجَةِ وَأَعْجَلُ بِه(هداية)الدَّقِيقُசலித்தகோதுமை
ஜகாத், ஃபித்ரா வேறுபாடு
ஜகாத் கடமையாகுவதற்கு அதற்குரிய நிஸாபை அடைந்திருக்க வேண்டும். ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரையும் கணக்கிடத் தேவையில்லை. ஆனால் ஃபித்ரா அப்படியல்ல. அன்றைய அவசியமான செலவுகள் போக கையிருப்பு வைத்திருப்பவர்கள் தனக்காகவும், தன் குடும்ப நபர்களுக்காகவும் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அன்று அதிகாலையில் பிறந்த குழந்தையையும் கணக்கிட்டுத் தர வேண்டும்.
هي صدقة يعطيها المسلم في يوم عيد الفطر لمن تصرف إليهم الزكاة - أمرنا بها سيدنا النبي صلى الله عليه وسلم في السنة الثانية من الهجرة
ஜகாத்தை எந்த ஏழைகளுக்குத் தர முடியுமோ அத்தகையவர்களுக்கு இந்த ஃபித்ராவைத் தரலாம். எனவே இந்த ஃபித்ராவை முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தரக்கூடாது. ஹிஜ்ரி இரண்டாம் வருடம் இது கடமையானது
ஈதுப் பெருநாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு கொடுக்கலாமா ?
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ.. فَكَانَ ابْنُ عُمَرَ يُعْطِي عَنْ الصَّغِيرِ وَالْكَبِيرِ حَتَّى إِنْ كَانَ لِيُعْطِي عَنْ بَنِيَّ وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ .(بخاري) باب صَدَقَةِ الْفِطْرِ عَلَى الْحُرِّ وَالْمَمْلُوك-كتاب الزكاة
இப்னு உமர் ரழி அவர்கள் தன்னுடைய பெரிய பிள்ளைகளுக்கும் சிறிய பிள்ளைகளுக்கும் சேர்த்தே ஃபித்ரா கொடுப்பவர்களாக இருந்தார்கள். மேலும் ஈத் பெருநாளுக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பாக கொடுப்பவர்களாக இருந்தார்கள்
وقال : هذا حسن ، وأنا أستحبه - يعني تعجيلها قبل يوم الفطر – (فتح الباري
இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்பே கொடுப்பதை விரும்புபவர்களாக ஆயிருந்தார்கள்
ويصح أداؤها مقدما عن يوم الفطر أو مؤخرا عنه إلا أنه يستحب أداؤها قبل الخروج الى المصلى (نور الايضاح
ஃபித்ரா கடமையாகுவது பெருநாள் அன்று அதிகாலையின் தான் என்றாலும் ஃபித்ராவை ஈதுப் பெருநாளுக்கு முன்பு கொடுத்தாலும் கூடும். நிர்பந்தம் காரணமாக சற்று பிற்படுத்துவதும் கூடும் எனினும் ஈதுத் தொழுகைக்கு வரும் முன்பு தருவது முஸ்தஹப்பாகும்- நூருல் ஈழாஹ்
ஃபித்ராவை முன்பே கொடுக்கலாம் என்பதற்குத் தோதுவான சம்பவம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَبِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ وَقُلْتُ وَاللَّهِ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَعُودُ فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ لَا أَعُودُ فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ وَهَذَا آخِرُ ثَلَاثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لَا تَعُودُ ثُمَّ تَعُودُ قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الْآيَةَ فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ مَا هِيَ قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الْآيَةَ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الْخَيْرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلَاثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ لَا قَالَ ذَاكَ شَيْطَانٌ (بخاري)2311
شرح: (وكلني رسول الله - صلى الله عليه وسلم - بحفظ زكاة رمضان) أي في حفظ زكاة الفطر من رمضان (مرعاة المفاتيح شرح مشكاة المصابيح)
சுருக்கம்- ஃபித்ரா தானியங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அபூஹுரைரா ரழி அவர்கள் ஈடுபட்டிருந்த போது தான் மேற்படி சம்பவம் நடந்தது. ஷைத்தான் மூன்று தடவை அதைத் திருட முற்பட்டான். அவன் ஷைத்தான் என அந்த சஹாபிக்குத் தெரியாது. முதல் இரண்டு தடவைகளில் அவன் தனது வறுமையைச் சொல்லி கெஞ்சியதால் விட்டு விட்டார்கள் மூன்றாவது முறை அவனை எப்படியேனும் பிடித்து நபி ஸல் அவர்களிடம் ஒப்படைக்க எண்ணிய போது தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸீயை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற இரகசியத்தைக் கூறி அவன் தப்பித்தான். ஆகா அற்பதமான விஷயம் கூறியுள்ளானே என்று அந்த சஹாபீ அவனை விட்டு விட்டார்கள். நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அவன் சொன்னது உண்மை தான் என்று கூறியதுடன் அவன் தான் ஷைத்தான் என்றும் கூறினார்கள்.
ஆயத்துல் குர்ஸீயை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் ஸலாம் கொடுத்தவுடன் எப்போதும் ஓதினால் சுவனம் செல்வதற்கு மவ்த்தைத் தவிர வேறு தடை இல்லை என்ற நபிமொழி
: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ:"مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ، إِلا الْمَوْتُ"،(طبراني
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஓத வேண்டிய வேறு சில திக்ருகள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى فُقَرَاءُ الْمُسْلِمِينَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ،"ذَهَبَ ذَوُو الأَمْوَالِ بِالدَّرَجَاتِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَحُجُّونَ كَمَا نَحُجُّ، وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَتَصَدَّقُونَ مِنْهَا، وَلَيْسَ لَنَا مَا نَتَصَدَّقُ، فَقَالَ: أَلا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ، وَلَمْ يَلْحَقْكُمْ مِنْ خَلْفِكُمْ إِلا مَنْ عَمِلَ بِمِثْلِ مَا عَمِلْتُمْ بِهِ؟ تُسَبِّحُونَ اللَّهَ دُبُرَ كُلِّ صَلاةٍ ثَلاثًا وَثَلاثِينَ، وتحَمَدُونَهُ ثَلاثًا وَثَلاثِينَ، وَتُكَبِّرُونَهُ أَرْبَعًا وَثَلاثِينَ، فَبَلَغَ ذَلِكَ الأَغْنِيَاءَ، فَقَالُوا مِثْلَ مَا قَالُوا، فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، فَأَخْبَرُوهُ، فَقَالَ: ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ"، (معجم الكبير للطبراني
ஏழைகள் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே செல்வந்தர்கள் எங்களை விட அந்தஸ்தால் முன் சென்று விட்டனர் எங்களைப் போன்று தொழுகின்றனர். எங்களைப் போன்று நோன்பு வைக்கின்றனர். எங்களைப் போன்று ஹஜ்ஜும் செய்கின்றனர் ஆனால் அவர்களுக்கு வசதி உள்ளது தர்மம் செய்கின்றனர் எங்களால் செய்ய முடியவில்லையே என்றபோது நபி ஸல் அவர்கள் நான் உங்களுக்கு ஒரு செயலை அறிவிக்கிறேன். அதைச் செய்தால் உங்களை விட முந்தி விட்டவர்களின் சிறப்பை நீங்கள் அடைவீர்கள் என்று கூறி, தஸ்பீஹே பாத்திமாவை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஓதும்படி கற்றுத் தந்தார்கள் எப்படியோ இவ்விஷயம் செல்வந்தர்களுக்கும் தெரிய வந்தபோது அவர்களும் இந்த தஸ்பீஹை ஓத ஆரம்பித்தார்கள் மறுபடியும் ஏழைகள் வந்து நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தரும் அருள் என்றார்கள்.
عَنْ وَرَّادٍ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ كَتَبَ الْمُغِيرَةُ إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا سَلَّمَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ (بخاري
ரமழான் 29 நோன்புகளுடன் முடிவதால் நாம் பாக்கியசாலிகள் இல்லை என்றாகி விடுமா?
عَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ : لَمَا صُمْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْتُ مَعَهُ ثَلاَثِينَ. (صحيح ابن خزيمة
இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் இருக்கும்போது நாங்கள் முப்பது நோன்புகள் வைத்ததை விட 29 நோன்புகள் வைத்ததே அதிகம்.- நூல் இப்னு குஜைமா
படிப்பினை - நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் அதிகமாக 29 நோன்புகள் தான் அவர்களுக்குக் கிடைத்துள்ளது என்றால் முப்பதாவது நோன்பைப் பெறாதவர்கள் பாக்கியமற்றவர்கள் என்று கருதுவதற்கு இடமில்லை.
ஈதுப் பெருநாளின் சில சுன்னத்தான செயல்கள் முதல் நாள் மஃரிபில் இருந்தே துவங்கி விடுகின்றன
وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (185)البقرة - معناه الحض على التكبير في آخر رمضان في قول جمهور أهل التأويل. واختلف الناس في حده، فقال الشافعي: روي عن سعيد ابن المسيب وعروة وأبي سلمة أنهم كانوا يكبرون ليلة الفطر ويحمدون، قال: وتشبه ليلة النحر بها. وقال ابن عباس: حق على المسلمين إذا رأوا هلال شوال أن يكبروا وروي عنه: يكبر المرء من رؤية الهلال إلى انقضاء الخطبة، ويمسك وقت خروج الإمام ويكبر بتكبيره. وقال قوم: يكبر من رؤية الهلال إلى خروج الإمام للصلاة (قرطبي
மேற்படி வசனத்தில் அல்லாஹ் ரமழான் கடைசி நேரத்தில் தக்பீர் கூறுவதைத் தூண்டுகிறான் என பெரும்பாலான விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். இன்னும் விரிவாக இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறும்போது பெருநாள் இரவு தக்பீர் கூற வேண்டும் என்று கூறுவதுடன் அதற்கு ஆதாரமாக இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர். இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள். ஷவ்வால் பிறையைப் பார்த்து விட்டால் முஸ்லிம்கள் தக்பீர் கூறவேண்டும். மறுநாள் காலை வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தக்பீர் கூறலாம். இமாம் பெருநாள் தொழுகைக்காக வெளியேறிய பின் அவரும் இணைந்து சிறிது நேரம் கூறுவார். அத்தோடு அதற்கான நேரம் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு தக்பீர் கிடையாது. அதாவது ஈதுத் தொழுகை முடிந்த பிறகு கிடையாது.
وكان الشافعي يقول إذا رأى هلال شوال: أحببت أن يكبر الناس جماعة وفرادى، ولا يزالون يكبرون ويظهرون التكبير حتى يغدوا إلى المصلى وحين يخرج الإمام إلى الصلاة، وكذلك أحب ليلة الأضحى لمن لم يحج (قرطبي.
ஈதுகாவுக்குச் செல்லும் வழியிலும் தக்பீர் சொல்வது ஸாஹிபைன் ரஹ் அவர்களின் கூற்றுப்படி சுன்னத்
ولا يكبر عند أبي حنيفة رحمه الله في طريق المصلى وعندهما يكبر اعتبارا بالأضحى (هداية
ஈதுடைய இரவில் முடிந்தவரை தனித்தனியாக வணக்கங்களில் ஈடுபடுவது நல்லது
இதற்காக ஜமாஅத் வைப்பது ஹனஃபி மத்ஹபில் மக்ரூஹ்
( و ) ندب ( إحياء ليلة العيدين ) الفطر والأضحى لحديث " من أحيا ليلة العيد أحيا قلبه يوم تموت القلوب " ويستحب الإكثار من الاستغفار بالأسحار وسيد الاستغفار " اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت " والدعاء فيها مستجاب (مراقي الفلاح حنفي عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ (ابن ماجة) وَالْمَرْجُوّ أَنَّ قِيَام التَّهَجُّد يَكْفِي (حاشية السندي)( ويكره الاجتماع على إحياء ليلة من هذه الليالي ) ومعنى القيام أن يكون مشتغلا معظم الليل بطاعة وقيل بساعة منه يقرأ أو يسمع القرآن أو الحديث أو يسبح أو يصلي على النبي صلى الله عليه و سلم (مراقي الفلاح حنفي فقه)
நபி ஸல் கூறினார்கள் எவர் இரு பெருநாட்களில் இரவை முடிந்த வரை விழித்திருந்து வணங்குவாரோ அவருடைய சிறப்பாகிறது மற்ற உள்ளங்கள் பாவங்களின் காரணமாக மரணித்து விடும் நாளில் இவரின் உள்ளம் மட்டும் ஹயாத்தாக இருக்கும்.அதாவது உள்ளம் மரணித்து விட்டவர்களின் பட்டியலில் இவர் சேர மாட்டார். அன்று இரவு தஹஜ்ஜுத் தொழுது விட்டாலே அதுவே இந்த சிறப்புகளை அடைய வாய்ப்பைத் தரும். பெருநாள் இரவில் ஸய்யிதுல் இஸ்திஃபாரை அதிகம் ஓதுவது நல்லது
ஐந்து இரவுகளில் வணக்கம் புரிவது நல்லது
وقال صلى الله عليه و سلم " من أحيا الليالي الخمس وجبت له الجنة ليلة التروية وليلة عرفة وليلة النحر وليلة الفطر وليلة النصف من شعبان " (مراقي الفلاح حنفي فقه)
ஈதுப் பெருநாளுக்காக குளிப்பதும், புத்தாடைகள் உடுத்துவதும் சுன்னத்தான செயல்
عن فَاكِهِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ النَّحْرِ وَيَوْمَ عَرَفَةَ وَكَانَ الْفَاكِهُ يَأْمُرُ أَهْلَهُ بِالْغُسْلِ فِي هَذِهِ الْأَيَّامِ (ابن ماجة
عَنْ أَبِي رِمْثَةَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ رواه النسائ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ - يَعْنِى تُبَاعُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ - فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ (وفي رواية البخاري "تَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالْوُفُودِ") فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِى الآخِرَةِ ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ كَسَوْتَنِيهَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ قُلْتَ فِى حُلَّةِ عُطَارِدَ مَا قُلْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنِّى لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مُشْرِكًا بِمَكَّةَ.رواه ابوداود (السيراء : ثياب من الحرير)
இமாம் புகாரீ ரஹ் அவர்கள் ஈதுப் பெருநாட்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது, தன்னை சந்திக்க வருபவர்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது மாற்றார்களுக்கு அன்பளிப்பு வழங்குவது போன்ற தலைப்புகளின் கீழ்காணும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார்கள்
கருத்து- உமர் ரழி அவர்கள் ஒருமுறை மஸ்ஜிதின் வாசலில் பட்டு கலந்த ஆடை விற்கப் படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை விலைக்கு வாங்கிக் கொண்டால் ஈதுப் பெருநாளுக்காகவும் தங்களைச் சந்திக்க வருபவர்களுக்காகவும் இதை அணிந்து கொள்ளலாமே என்று கேட்க அதற்கு நபி ஸல் அவர்கள் மறுமையில் யாருக்கு எவ்வித நற்கூலியும் இல்லையோ அவர் தான் இதை வாங்குவார் என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்பு சில தினங்கள் கழித்து அதே போன்ற பட்டாடை நபி ஸல் அவர்களுக்கு அன்பளிப்பாக தரப்பட்டதோ அதை உமர் ரழி அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உடனே உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை வேண்டாம் என்று தடுத்தீர்கள். இப்போது நீங்களே இதை எனக்கு அணியக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இதை உமக்காக நான் கொடுத்தனுப்பவில்லை. மக்காவில் இருக்கும் உமது காஃபிரான சகோதரருக்கு கொடுத்து விடுங்கள் என்றார்கள்.
இதில் நிறைய படிப்பினைகள் உள்ளன. முக்கியமான படிப்பினை ஈதுப் பெருநாளுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவதை நபி ஸல் விரும்பியதால் தான் இதை தாங்கள் வாங்கிக் கொள்ளலாமே என உமர் ரழி கேட்டார்கள். ஆனாலும் பட்டு என்பதால் நபி ஸல் மறுத்தார்கள்.
ஈதுப் பெருநாளில் செய்ய வேண்டிய சுன்னத்தான செயல்களில் இன்னும் சில...
தொழ வரும்போது ஒரு பாதையிலும் செல்லும் போது வேறு பாதையிலும் செல்வது சுன்னத்
عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ ربخاري) عَنْ ابْنِ عُمَر رضي الله عنهما أَنَّهُ كَانَ يَخْرُجُ إِلَى الْعِيدِ فِي طَرِيقٍ وَيَرْجِعُ فِي أُخْرَى وَيَزْعُمُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ (ابن ماجة)
முடிந்த வரை நடந்து வருவது சுன்னத். பார்க்கிங் வசதி இல்லாத மஸ்ஜித்களுக்கு இதுவே நல்லது
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ إِلَى الْعِيدِ مَاشِيًا وَيَرْجِعُ مَاشِيًا (ابن ماجة) عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ إِنَّ مِنْ السُّنَّةِ أَنْ يُمْشَى إِلَى الْعِيدِ ابن ماجة
நபி ஸல் அவர்கள் ஈதுத் தொழுகைக்கு வரும்போது நடந்து வருவார்கள் போகும்போது நடந்து செல்வார்கள்
நகர்ப்புறங்களில் பல மஸ்ஜித்களில் பார்க்கிங் வசதி இல்லை. அவ்வாறிருக்க சிலர் நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு தொழ வருவதால் பொது மக்களுக்கு நிறைய இடையூறுகள் உள்ளது.
عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - « يُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ (بخاري
மக்களுக்கு நோவினை தரும் பொருட்களை நடைபாதையில் இருந்து அப்புறப்படுத்துவது சுன்னத் என்றிருக்க நாம் அதற்கு நேர் மாற்றமாக நடைபாதையில் வண்டியை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் நம் தொழுகைக்கும் பலனிருக்காது
ஈதுப் பெருநாளில் சாப்பிட்டு விட்டு வருவது சுன்னத்
عَنْ بُرَيْدَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ وَلَا يَطْعَمُ يَوْمَ الْأَضْحَى حَتَّى يُصَلِّيَ(ترمذي) وَقَدْ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ لَا يَخْرُجَ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ شَيْئًا وَيُسْتَحَبُّ لَهُ أَنْ يُفْطِرَ عَلَى تَمْرٍ (ترمذي)
ஈதுத் தொழுகைக்கு முன்னும் பின்னும் நஃபில் தொழுவது மக்ரூஹ். தொழுகை முடிந்து வீட்டுக்கு வந்த பின் தொழுகலாம்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا وَمَعَهُ بِلَالٌ رواه البخاري عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ شَيْئًا فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ (ابن ماجة
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக