17-10-2025
ரபீஉல் ஆகிர் 24 بسم الله الرحمن الرحيم
வீண் விரயங்கள் பலவிதம்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
காசைக் கரியாக்குவது என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது தீபாவளியைப் பற்றித் தான். ஒவ்வொரு வருடமும் பட்டாசு என்ற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் சாம்பலாக ஆக்கப்படுகிறது. அதை நமது முஸ்லிம் பிள்ளைகளும் செய்வது தான் மிகப்பெரும் கைசேதம்.
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31) الاعراف
நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை நல்லது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் வரவேற்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை கெட்டது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கும். எத்தனையோ மக்கள் உண்ணுவதற்கு உணவு இல்லாமல் கஷ்டப் படும் நேரத்தில் இது போன்ற வீண் விரயத்தை எந்த நடுநிலை சிந்தனை கொண்டவர்களும் ஜீரணிக்க மாட்டார்கள்.பட்டாசுகளால் பணம் வீண் விரயம் என்பது மட்டுமல்ல. சுற்றுச் சூழல் பாதிக்கப் படுகிறது. உதாரணம் இறந்து விட்ட ஒரு மனிதனை எரிப்பது நல்லதா புதைப்பது நல்லதா எனும்போதுஅறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களைப் போன்ற புதைப்பது தான் சுற்றுச் சூழலை பாதிக்காது. மாறாக எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்கின்றனர்.
பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகளை நான்கு வகையாக பிரிக்கலாம்
1. சுற்றுச் சூழல் பாதிப்பு 2. வீண் விரயம். 3.தன் சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவது 4. மாற்றாருடன் ஒப்பாகுதல்
1. சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றி...
பசுமை தீபாவளி என்ற தலைப்பில் அகிலாம்பாள் என்பவரின் கட்டுரையின் சில துளிகள் இதோ... பட்டாசு வெடிப்பதால் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னா பின்னமாகி விடும். நீர் நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படும். நச்சுக்கள் நீரில் கலந்து நிலத்தடி நீர் மாறுபடும். பட்டாசுக் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மக்கும் குப்பையைக் கூட மக்க வைக்க முடியாத அளவுக்கு மண் மலடாகிறது. பட்டாசுப் புகையால் பறக்கும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. அதன் கரு கலைகின்றன. பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை. காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை. ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை. ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை. நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை. வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை. உணவு இல்லையேல் மனிதன் இல்லை.
2. வீண் விரயம்
வீண் விரயம் செய்வதை இஸ்லாம் கடுமையாக எச்சரித்துள்ளது
ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் சில ஏரியாக்களில் மற்றவர்களைவிட பட்டாசுகளை வாங்கி வெடித்தவர்களில் அதிகம் பேர் முஸ்லிம்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய அனாவசிய செலவுகளால் நம் சமூகத்தில் பலர் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் இருக்கின்றனர். இவர்கள் தான் அடகுக் கடைக்காரர்களை வளர்த்து விடுகிறார்கள். வட்டிக்குக் கடன் வாங்கி ஆடம்பரத் திருமணங்களை, தேவையில்லாத வைபவங்களை நடத்துகின்றனர். பாலஸ்தீன மண்ணில் நம்முடைய சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும் செய்திகளை பார்க்கும்போது உண்மையான முஸ்லிம்களில் பலருக்கு உணவே வயிற்றுக்குள் செல்ல மறுக்கிறது. ஆனால் சில முஸ்லிம்கள் இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் ஆடம்பர செலவுகளில் மூழ்கியிருக்கிறார்கள். தேவையற்ற செலவுகளை மிச்சப்படுத்தினால் ஹஜ்ஜுக் கடமையைக் கூட நிறைவேற்றி விடலாம். இன்னும் பலர் கடனாளிகளாக மாறியதே வீண் செலவுகளால் தான்.
வீண் செலவுகள் பலவிதம்.
வீட்டில் சமைக்காமல் ஹோட்டல் சாப்பாட்டில் ருசி காண்பவர்கள் பணத்தை வீண் விரயம் செய்கின்றனர். எப்போதாவது ஒருமுறை என்றால் அது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலர் அடிக்கடி இவ்வாறு செய்கின்றனர். இன்னும் சில குடும்பங்களில் மனைவிமார்களின் சீரியல் மோகம் அவர்களை சமைக்க விடாமல் செய்து விடும். கொஞ்சம் சோம்பலாக இருந்தாலும் கடையில் உணவு வாங்கி வாருங்கள் என்றுகூறும் மனைவிகளும் உள்ளனர்.
ஏழைகளில் பலர் உணவின்றி பசியுடன் இருக்க, திருமண மண்டபங்களில் குப்பைக்குச் செல்லும் உணவுகள்
வீண் விரயங்களால் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்ட முஸ்லிம்கள்
2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துக் கொன்றது உட்பட பல்வேறுகொடூரங்களை அரங்கேற்றியவர்கள் பாசிசவாதிகளால் ஏவப்பட்டஅம்புகளான தாழ்த்தப் பட்ட மக்கள் தான். பாசிசவாதிகளால் அவர்களுக்கு வழங்கப்படும் பணங்களுக்காக அவர்கள் முஸ்லிம்களை வேட்டையாடினர். பின்னால் ஒரு நேரத்தில் அவர்களின் ஒரு முக்கியமான தலைவனை முஸ்லிம்களில் சிலர் சென்று சந்தித்து உங்களுக்கு அப்படியென்ன முஸ்லிம்கள்மீது கோபம் என்று கேட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினர் நாங்கள் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில்தான் வசித்தோம்.அப்போது நாங்கள் மிகவும் வறுமையில் இருந்தோம். ஆனால் எங்களுக்கு அருகில் முஸ்லிம்கள் வசித்தார்கள். அவ்வப்போது அவர்கள் விருந்து தயார் செய்வார்கள். அவர்களே சாப்பிட்டுக் கொள்வார்கள். சாப்பிட்ட பிறகு மிச்சமுள்ள உணவுகளை அண்டாக்களில் கொட்டு வந்து குப்பைகளில் கொட்டுவார்கள். அந்த உணவுகளை எங்களிடம் கொண்டு வந்து தந்திருந்தாலும் நாங்கள் ஒரு வாரத்திற்கு அதைப்பாதுகாத்து வைத்து சாப்பிடுவோம். ஆனால் எங்களுக்கும் அதை தர மாட்டார்கள். அவர்களே சாப்பிட்டு மீதியை குப்பையில் கொண்டு வந்து கொட்டுவார்கள். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க நாளடைவில் முஸ்லிம்கள் என்றாலே ஒரு விதமான வெறுப்பு எங்களுக்குள் இருந்தது. இந்த நிலையில் இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் எங்களிடம் வந்து முஸ்லிம்களைப் பற்றி மேலும் வெறுப்புணர்வைத் தூண்டி நீங்கள் முஸ்லிம்களைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு நிறைய செல்வங்களைத் தருகிறோம் என்று கூறி எங்களைத் தயார் படுத்தினார்கள். அதனடிப்படையில் தான் நாங்கள் கலவரத்தில் நிறைய முஸ்லிம்களைக் கொன்று குவித்தோம் என்று அவர் கூறியுள்ளார்.
வீண் விரயம் செய்வதால் பரக்கத் நீங்கி விடுகிறது. பரக்கத் நீங்குவதால் வாழ்வில் நிம்மதி குறைந்து விடுகிறது
திருமணங்களுக்காக செலவு செய்வதில் போட்டி போட்டிக் கொண்டு சில செல்வந்தர்கள் செலவு செய்வார்கள். அவர் தன் குடும்பத் திருமணத்திற்கு இவ்வளவு செலவு செய்தார். நான் அதை விட அதிகம் செலவு செய்வேன் என்று போட்டி போட்டு வீண் விரயம் செய்கிறார்கள்.
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً (مسند أحمد
திருமணங்களில் மிகவும் பரக்கத்தானது குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணங்களாகும். ஹதீஸ்
வீண் விரயம் இல்லாத, குறைந்த செலவிலான திருமணங்களில் பரக்கத் உண்டு என்பதை பல விதமாக விளங்கலாம். இத்தகைய திருமணங்களின் இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதையும், ஆடம்பரமான திருமணங்களின் இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியில்லாமல் வாழ்வதையும் பார்க்கலாம். பரக்கத் இருந்தால் தான் நிம்மதி இருக்கும். ஆடம்பர திருமணங்களில் நிம்மதி கிடைப்பதில்லை.
அவசியமற்ற பயணங்களுக்கும் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வீண் விரயம்.
நடப்பதற்கு தூரமான இடங்களுக்குச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட வாகனங்கள் தற்போது அவசியமற்ற பயணங்களுக்கும் பயன்படுத்துப் படுகின்றன. அருகில் இருக்கும் கடைக்கோ, மஸ்ஜிதுக்கோ செல்வதற்கும் கூட வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் எரிபொருள் வீண் விரயம், பணம் வீண் விரயம் ஏற்படுகின்றன.
நடந்து செல்லும் தூரத்திலுள்ள மஸ்ஜிதுக்கு நடந்து செல்வதால் நன்மையும் அதிகமாகும். பணமும் மிச்சமாகும்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يُكَفِّرُ اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَزِيدُ بِهِ فِي الْحَسَنَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَى إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ (ابن ماجة
பாவங்களைப் பரிகாரமாக அமைந்து நன்மைகளை அள்ளித் தரும் ஒரு நன்மையைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா என்று கேட்டு விட்டு பின்பு நபி ஸல் அவர்கள் கூறினார்கள். சிரம மான நிலையிலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்றுவது. மேலும் மஸ்ஜிதை நோக்கி அதிகம் நடந்து வருவது. ஒரு தொழுகைக்குப் பின்னால் மற்றொரு தொழுகைக்காக காத்திருப்பது என்று நபி ஸல் கூறினார்கள்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَلَتْ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم
பட்டாசுக்காக செய்த செலவுகளும் வீண் விரயமாகும். அதைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31)الاعراف
عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَزُولُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمْرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلاَهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ (ترمذي)
3.தன் சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவது
முடிந்த வரை பிறருக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர, நோவினை தரக்கூடாது ஆனால் பட்டாசுகளால் பல்வேறு வகையிலும் பிற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு காது கேட்பதில் மந்த நிலை நீடிப்பதற்கு பட்டாசு முக்கிய காரணம்
சப்தங்களை டெசிபல் என்ற அளவில் கணக்கிடுவார்கள் நாம் பேசும் சப்தங்கள் 30 டெசிபலுக்கு மேலே போகாது அதிக பட்சம் 60 டெசிபல் சப்த த்திற்கு மேல் கேட்டால் அது காதை பாதிக்கும். ஜவ்வு கிழிய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுவார்கள். இதனால் வாகனங்களின் ஹாரன் கூட 80 டெசிபலுக்கும் மேலே இருக்க க் கடாது என போக்குவரத்து துறை சட்டம் இயற்றியுள்ளது ஆனால் பட்டாசுக்கு அதற்கும் மேலாக அதிக பட்சம் 125 டெசிபல் வரை அரசாங்கம் அனுமதி தந்துள்ளது.125 டெசிபலுக்கு மேலே வெடிகளை வெடித்தால் அவர் 1986 ஆம் ஈண்டு சுற்றுப்புற சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி அவர் தண்டனைக்குரியவர் ஆவார். ஆனால் அதையும் மீறி 150 முதல் 200 டெசிபல் வரை பட்டாசுகள் வரைமுறையை மீறி தயாரிக்கப் படுகின்றன. இதனால் சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் 10 ஒருவருக்கு காது சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு பல காரணங்கள். அளவுக்கு மீறிய சப்தத்துடன் காதுகளில் வாக்மேன் மாட்டிக் கொண்டு இசை கேட்பது. வாகன இரைச்சல், திருவிழாக்களில் அதிக சப்தத்துடன் ஒலி பரப்பப்படும் பாட்டுகள், அதிக சப்தத்துடன் தியேட்டர் மற்றும் டிவி முன்பு அமருதல் மற்றும் பட்டாசு வெடி சப்தங்கள் ஆகியவை இதற்கான காரணங்களாகும்
நம்மால் முடிந்த வரை பிறரை சந்தோஷத்தப் படுத்த வேண்டுமே தவிர
தன்னுடைய சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவதை நம்முடைய மார்க்கம் தடுக்கிறது
عَن أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ أَوْ يَسْتَطِعْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالَ فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ يَأْمُرُ بِالْخَيْرِ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ يَفْعَلْ قَالَ يُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ صَدَقَةٌ (مسلم) بَاب بَيَانِ أَنَّ اسْمَ الصَّدَقَةِ يَقَعُ عَلَى كُلِّ نَوْعٍ - كِتَاب الزَّكَاةِ
ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்ய வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறிய போது அதற்கு இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, தம்மால் இயன்ற வரை உழைத்து அதில் தனக்கும் பயன்படுத்தி பிறருக்கும் தர் ம ம் செய்வார் என நபி ஸல் கூறினார்கள். அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, பொருளுதவி இல்லா விட்டாலும் துன்பத்தில் சிக்கியவருக்கு உடலால் ஒத்துழைப்புச் செய்வார் என்று கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, நன்மையை ஏவுவார் என நபி ஸல் கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, பிறருக்கு தீங்கு செய்யாமல் தடுத்துக் கொள்வதே ஒருவகை தர்மம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
தன்னுடைய கரத்தாலும் நாவாலும் பிறருக்குத் தொந்தரவு தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضى الله عنهما عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ (بخاري) عن أبي هريرة قال : (قال رجل: يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال : هي في النار. قال : يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة). أخرجه أحمد.
ஒரு பெண் அதிகம் நோன்பு வைக்கிறாள். அதிகம் தொழுகிறாள். அதிகம் தர்மமும் செய்கிறாள். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்கிறாள். அவளது நிலை என்ன என்று கேட்டதற்கு, அவள் நரகவாதி என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.
ஜனங்கள் நடந்து செல்லும் பாதையில் அவர்களுக்கு இடையூறு செய்வது மாபெரும் குற்றம்
عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم : إياكم والجلوس في الطرقات فقالوا : يا رسول الله مالنا بد من مجالسنا نتحدث فيها فقال: فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا وما حقه قال : غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر. متفق عليه
பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நபி ஸல் அவர்கள் கண்டித்த போது அல்லாஹ்வின் தூதரே அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது என தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையின் உரிமைகளைப் பேணுங்கள் என்றார்கள். அது என்ன என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, பாதையில் நடப்பவருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பது, தவறான பார்வைகளை விட்டும் தற்காத்துக் கொள்வது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பது என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.
பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது மாபெரும் நன்மைக்குரிய செயல்
قال رسول الله صلى الله عليه وسلم (بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له) رواه مسلم.:
ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாதையில் ஒரு முள்செடியைப் பார்த்தார். மக்களுக்கு இடையூறாக இருக்குமே என்று அதை அப்புறப்படுத்தினார். அதற்காக அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து நன்றி பாராட்டினான்.
قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبة، افضلها قول: لا اله الا الله وادناها اماطة الاذى عن الطريق) مسلم.
பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது நபி ஸல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.
عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ». (مسلم
என் உம்மத்தின் நற்செயல்கள், தீய செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் மிகச் சிறந்த நற்காரியமாக பாதையில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவதை நான் பெற்றுக் கொண்டேன். அவற்றில் மிகக்கெட்ட காரியமாக நான் கண்டது மஸ்ஜிதை ஒருவர் எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி விட்டு அதை புதைக்காமல் (சுத்தம் செய்யாமல்) விடுவதாகும்.
நன்மையான காரியமாக இருப்பினும் பிறருக்கு தொந்தரவு கொடுத்து நிறைவேற்றப்பட்டால் நன்மை இல்லை
عن سَلْمَانُ الْفَارِسِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ فَصَلَّى مَا كُتِبَ لَهُ ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى (بخاري
யார் ஜும்ஆ நாளில் குளித்து தம்மிடம் உள்ள நறுமணத்தைப் பூசி பின்பு மஸ்ஜிதுக்கு வந்து அங்கு அமர்ந்திருக்கும் இருவரைப் பிரிக்காத நிலையில் அதாவது அவ்விருவரையும் தாண்டிச் செல்லாத நிலையில் உபரியான தொழுகை தொழுது பிறகு இமாம் அறையில் இருந்து குத்பாவுக்காக வெளியேறிய பின் அமைதியாக அவரது உரையைக் கேட்பாரோ அவருடைய அடுத்த ஜும்ஆ வரையிலான பாவங்கள் மன்னிக்கப்படும்.
படிப்பினை- இருவரின் பிடரிகளைத் தாண்டிச் சென்றால் ஜும்ஆவின் நன்மை இல்லை
عن ابْن عُمَرَ رَض نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا (بخاري
ஜும்ஆவிலோ மற்ற நாட்களிலோ ஒருவர் தான் அமருவதற்காக மற்றொருவரை எழுப்பி அந்த இடத்தில் அமர வேண்டாம்
عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُقِمْ أَحَدُكُمْ أَخَاهُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ قَالَ وَكَانَ الرَّجُلُ يَقُومُ لِابْنِ عُمَرَ فَلَا يَجْلِسُ فِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ (ترمذي
இப்னு உமர் ரழி அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்த போது அவர்களுக்காக ஒருவர் எழுந்து தம்முடைய இருப்பிடத்தை விட்டுக் கொடுத்தார். அந்த இடத்தில் இப்னு உமர் ரழி அமர மறுத்து விட்டார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ، وَأَبِي سَعِيدٍ ، قَالاَ :سَمِعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَاسْتَنَّ وَمَسَّ مِنَ الطِّيبِ إِنْ كَانَ عِنْدَهُ , وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ , ثُمَّ جَاءَ إِلَى الْمَسْجِدِ , وَلَمْ يَتَخَطَّ رِقَابَ النَّاسِ , ثُمَّ رَكَعَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَرْكَعَ , ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يُصَلِّيَ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الَّتِي كَانَتْ قَبْلَهَا (صحيح ابن حبان)
ஆயிஷா ரழி அவர்களிடம் அவர்களின் பணிப்பெண் வந்து அன்னையே! நான் என்னுடைய தவாஃபின் ஏழு சுற்றில் இரண்டு மூன்று தடவை ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டேன் என்று பெருமையுடன் வந்து கூறினார். உடனே ஆயிஷா ரழி அவர்கள் கோபத்துடன் ஆண்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவர்களை இடித்துக் கொண்டு நீ இவ்வாறு செய்தாயல்லவா? அல்லாஹ் உனக்கு நற்கூலி தராமல் போகட்டுமாக! கூட்ட நெரிசலாக இருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கி தக்பீர் மட்டும் சொல்லி அந்த இடத்தை விட்டும் நீ கடந்து போயிருக்க வேண்டாமா? என்றார்கள்- நூல் பைஹகீ
மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பவன் மறுமையில் தான் செய்த நன்மைகளை இழப்பான்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ
பரிதாபமான ஏழை யார் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது யாரிடம் பணம் காசுகள் பொருட்கள் எதுவும் இல்லையோ அவர் தான் என்று நாங்கள் கூறினோம் அதற்கு நபி ஸல் அவர்கள் என்னுடைய உம்மத்தில் பரிதாபமான ஏழை யாரென்றால் மறுமை நாளில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய அனைத்தையும் சரியாக நிறைவேற்றியவராக வருவார். ஆனால் அவர் இன்னாரைத் திட்டியிருப்பார். இன்னார் மீது அவதூறு சுமத்தியிருப்பார். இன்னாருடைய பொருளை அபகரித்திருப்பார். இன்னாரின் உயிரைப் பறித்திருப்பார். இன்னாரை அடித்திருப்பார். எனவே இவருடைய நன்மைகளைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுக்கப்படும். இறுதியில் இவரின் நன்மைகள் தீர்ந்து விடும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மிச்சமிருப்பார்கள். தீர்ப்புகள் முடியும் முன்பே இவரின் நன்மைகள் தீர்ந்து விட்டதால் அவர்களின் பாவங்களை இவர் மீது சுமத்தப்பட்டு நரகில் வீசப்படுவார்.
முடிவுரை- பட்டாசு வாங்கித் தரச் சொல்லி பிள்ளை அடம் பிடிப்பதால் வாங்கித் தருகிறேன் என்று சாக்குப் போக்குச் சொல்லும் பெற்றோர்களிடம் நீங்கள் ஒரு 100 ரூபாய் நோட்டை உங்கள் பிள்ளையிடம் தரும்போது அந்தப் பிள்ளை அதை நெருப்பில் காட்டி சாம்பலாக்க நினைத்தால் பிள்ளை ஆசைப் படுகிறான் என்று நீங்கள் விடுவீர்களா நிச்சயமாக அனுமதிக்க மாட்டீர்கள். 100 ரூபாயை சாம்பலாக்குவதும் அதை பட்டாசாக வாங்கி கரியாக்குவதும் இரண்டும் ஒன்று தான்.
பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம்.
ஒன்று நம்மை நாமேஅழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ (195) البقرة
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மைசெய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
4. மாற்றார்களுடன் ஒப்பாகுதல்
பட்டாசு என்பது மாற்றார்களின் மதச்சடங்கு. அதைச்செய்வது அவர்களின் மதச் சடங்கைச் செய்வது போன்றாகும்
மாற்றார்களின் எந்த ஒரு பண்டிகைகளையும் நாம் கொண்டாடுவது அவர்களுக்கு ஒப்பாகுவதாக ஆகும்
மாற்று மதத்தவர்களோடு நாம் ஒப்பாகி விடக் கூடாது என்ற கருத்தில் கூறப்பட்ட பல்வேறு விஷயங்களில் சில..
சலாம் கூறுவதில்
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا لَا تَشَبَّهُوا بِالْيَهُودِ وَلَا بِالنَّصَارَى فَإِنَّ تَسْلِيمَ الْيَهُودِ الْإِشَارَةُ بِالْأَصَابِعِ وَتَسْلِيمَ النَّصَارَى الْإِشَارَةُ بِالْأَكُفِّ (ترمذي)
நோன்பு வைப்பதில்
عن عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم)
உடை உடுத்துவதில்
عن عَبْد اللَّهِ بْن عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنه قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا وفي رواية قُلْتُ أَغْسِلُهُمَا قَالَ بَلْ أَحْرِقْهُمَا (مسلم)
தாடியை வளர்ப்பதில்
عَنْ ابْنِ عُمَرَ رضعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ رضي الله عنه إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ (بخاري)خالفوا المشركين أي فإنهم يقصون اللحى ويتركون الشوارب حتى تطول
தலை முடி, தாடிக்கு மருதாணி இடுவதில்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ(بخاري)عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا الشَّيْبَ وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ (نسائ) عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ (والد ابي بكر رضي الله عنه)يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ (نسائ)عَنْ ابْنِ عَبَّاسٍ رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ(ابوداود)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக