24-10-2025
ஜமாதுல் அவ்வல்-1
بسم الله الرحمن الرحيم
ஜமாஅத் தொழுகையின்
சிறப்புகளும் சட்டங்களும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
முஸ்லிம்களில் பலரிடம் ஐவேளைத் தொழும் வழமை இல்லை. அவ்வாறு ஐவேளை தொழுபவர்களாக இருந்தாலும் ஜமாஅத்துடன் தொழுவதில் பேணுதல் இருப்பதில்லை. ஜமாஅத்துடன் தொழுவது ஆண்களுக்கு எவ்வளவு தூரம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் முற்காலத்திலும் தற்காலத்திலும் இமாம் ஜமாஅத்தைக் கடைபிடிப்பதில் பேணுதலாக வாழ்ந்தவர்களைப் பற்றி, வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் தமிழக அரசு காஜியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹழ்ரத் கிப்லா அவர்கள் ஸாஹிபுத் தர்தீப் எனும் சிறப்பைப் பெற்றவர்கள் அதாவது வாழ்நாளில் ஒரு நேரத் தொழுகை கூட தவறியதில்லை. தஹஜ்ஜத் தொழுகையும் தவறியதில்லை என அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்.
நாற்பது வருடங்களாக இமாம் ஜமாஅத்தை தவற விடாத ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள்
ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்கள் தாபியீன்களில் சிறந்தவர்கள். 40 வருடங்களாக அவர்களுக்கு இமாம் ஜமாஅத் தவறியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஹர்ரா என்ற போர் நடைபெற்ற நேரத்தில் தான் அவர்களுக்கு இமாம் ஜமாஅத் தவறி இருக்கலாம் என்று வரலாறுகள் கூறுகின்றன. ஹர்ரா போர் நடைபெற்ற நாட்களில் மஸ்ஜிதுன் நபவியில் மூன்று நாட்கள் பாங்கும் சொல்லப்படவில்லை. தொழுகையும் நடைபெறவில்லை. ஹழ்ரத் ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்கள் பள்ளியிலேயே இருந்தார்கள். இந்த மூன்று நாட்களும் தொழுகையின் நேரத்தை நபி ஸல் அவர்களின் ரவ்ழாவில் இருந்து வரும் கனைப்புச் சப்தத்தை வைத்தே அறிந்து கொண்டார்கள். நூல் தாரமீ 93
عن سعيد بن عبد العزيز قال : لما كان أيام الحرة لم يُؤذن في مسجد النبي صلى الله عليه و سلم ثلاثا ولم يَقُم ولم يبرح سعيد بن المسيب من المسجد وكان لا يعرف وقت الصلاة الا بهمهمة يسمعها من قبر النبي صلى الله عليه و سلم (سنن الدارمي)
ஹர்ரா என்பது மதீனாவுக்கு வெளியே பாறைகள் நிறைந்த பகுதியாகும். அங்கு ஒரு போர் நடைபெற்றது. யஜீத் ஆட்சியில் ஷாம் வாசிகளில் சிலர் மதீனாவைக் கொள்ளையடிக்க வந்த போது அவர்களுக்கு எதிராக யஜீத் உடைய உத்தரவின் பேரில் மதீனாவாசிகள் போர் செய்தார்கள். இது ஹிஜ்ரி 63- துல்ஹஜ் மாதம் நிகழ்ந்தது
قال الطيبي الحرة يوم مشهور في الإسلام أيام يزيد بن معاوية لما نهب المدينة عسكر من أهل الشام ندبهم لقتال أهل المدينة من الصحابة والتابعين وأمَّر عليهم مسلم بن عيينة المري في ذي الحجة سنة ثلاث وستين وعقيبها هلك يزيد والحرة هذه أرض بظاهر المدينة بها حجارة سود كثيرة وقعت فيها هذه الوقعة- لم يؤذن في مسجد النبي بصيغة المجهول أي لم يؤذن أحد فيه لأجل الفتنة ثلاثا أي ثلاث ليال بأيامها ولم يقم على بناء المفعول من الإقامة أي ولم يقم أحد للصلاة أيضا ولم يبرح بفتح الراء لم يفارق سعيد بن المسيب المسجد وكان الناس يقولون في حقه إنه شيخ مجنون (مرقاة)
வாழ்நாள் முழுவதும் ஜமாஅத் தவற விடாமல் தொழுவதே பெரிய கராமத்
இறை நேசர் ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்களிடம் மாணவராக இருந்த ஒருவர் சுமார் 12 வருடங்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டார் அப்போது அவர் ஷைகு அவர்களிடம் பயணம் கூறும்போது நான் இத்தனை வருடங்களாக என் மனதில் வைத்துள்ள ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இத்தனை வருடத்தில் நான் உங்களிடம் எந்த கராமத்தையும் நான் கண்டதில்லையே என்று கூற ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதாவது ஒரு நேரம் இமாம் ஜமாஅத்தை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள் இல்லை என்று இவர் பதில் கூறினார் மீண்டும் ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதேனும் ஒரு நேரம் தக்பீர் தஹ்ரீமாவை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்க இல்லை என்று இவர் பதில் கூறினார் அதற்கு ஷைகு அவர்கள் இதை விட என்ன அற்புதம் உமக்கு வேண்டும் என்றார்கள்... உடனே அந்த சீடர் ஷைகு அவர்களை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தியவராக உங்களுடைய நிலையை நானும் அடைய வேண்டும் நான் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்ப உங்களிடம் எப்போது வரட்டும் என்று கேட்டார் அதற்கு ஷைகு அவர்கள் "நான்" இறந்த பிறகு வா என்றார்கள் உடனே அந்த சீடர் ஷைகு அவர்களே நீங்கள் இறந்த பின்பு வருவதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நான் இறந்த பிறகு என்று என்னுடைய மவ்த்தை நான் குறிப்பிடவில்லை மாறாக "நான்" என்ற அகம்பாவம் எப்போது உன் உள்ளத்தில் அழியுமோ, இறந்து விடுமோ அப்போது என்னிடம் வா என்ற பொருளில் தான் நான் கூறினேன் என்றார்கள்.
ஜமாஅத் தொழுகையில் அடங்கியுள்ள தத்துவங்கள்
உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அளவுக்கு சமுதாய ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தியுள்ளது இஸ்லாம். அந்த ஒற்றுமையை இஸ்லாத்தின் தூணாகிய தொழுகையில் இருந்தே முஸ்லிம்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. மனிதர்கள் அனைவரும் சமம். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை என்ற விஷயமும் ஜமாஅத் தொழுகையின் மூலமே பயிற்றுவிக்கப் படுகிறது. நாட்டின் ஜனாதிபதியே வந்து தொழுதாலும் தலையை கீழே தான் வைத்தாக வேண்டும். அவரின் தலைக்கு அருகில் சாதாரண மனிதரின் கால்கள் இருக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். இதுதான் சமத்துவம்.
இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதற்கு ஜமாஅத் தொழுகையே மாபெரும் சாட்சியாகும். இது வெறும் வணக்கம் மட்டுமல்ல. மாறாக சமத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு வழியாக இருக்கிறது. இமாம் முன்னால் நின்று தொழுகை நடத்துகிறார் என்றால் அது அவருக்கு இருக்கிற தனிப்பட்ட முன்னுரிமையினால் அல்ல. சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் சீராக செயல்பட வேண்டும் என்பதை பழக்கப்படுத்துவதற்குத் தான்.
நிர்பந்தம் இல்லாமல் ஜமாஅத் தொழுகையை விடுவது நிஃபாக் தன்மையின் அடையாளம்
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلاَءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صلى الله عليه وسلم سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِى بُيُوتِكُمْ كَمَا يُصَلِّى هَذَا الْمُتَخَلِّفُ فِى بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَعْمِدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الْمَسَاجِدِ إِلاَّ كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ خَطْوَةٍ يَخْطُوهَا حَسَنَةً وَيَرْفَعُهُ بِهَا دَرَجَةً وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلاَّ مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُؤْتَى بِهِ يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِى الصَّفِّ(مسلم)باب صَلاَةُ الْجَمَاعَةِ مِنْ سُنَنِ الْهُدَى- كتاب المساجد
அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது யாருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துமோ அவர் தொழுகையை பேணித் தொழட்டும். நீங்கள் வீட்டில் தொழுதால் நபியின் சுன்னத்தை விட்டவர்களாக ஆகிவிடுவீர்கள் நபியின் சுன்னத்தை விட்டு விட்டால் நீங்கள் வழிகெட்டு விடுவீர்கள்
யார் அழகான முறையில் ஒழு செய்து மஸ்ஜிதுக்கு நடந்து வருவாரோ அவருடைய ஒவ்வொரு எட்டுக்களுக்கும் நன்மை உண்டு அந்தஸ்து உயர்த்தப்படும் எங்களுடைய காலத்தில் முனாபிக் தவிர மற்ற யாரும் தொழுகையை விட மாட்டார் எந்த அளவுக்கு என்றால் முடியாத நபரும் கூட இரண்டு நபர்கள் கை தாங்கலாக அழைத்து வரப்பட்டு ஸஃப்பிலே நிப்பாட்டப்படுவார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ صَلَاةٌ أَثْقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنْ الْفَجْرِ وَالْعِشَاءِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْت أَنْ آمُر بِالصَّلَاةِ فَتُقَام ثُمَّ آمُر رَجُلًا فَيُصَلِّي بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِق مَعِي بِرِجَالٍ وَمَعَهُمْ حُزَم مِنْ حَطَب إِلَى قَوْم لَا يَشْهَدُونَ الصَّلَاة فَأُحَرِّق عَلَيْهِمْ بُيُوتهمْ بِالنَّارِ (بخاري) باب فَضْلِ الْعِشَاءِ فِى الْجَمَاعَةِ- كتاب الأذان
முனாபிக்கீன்ளுக்கு பஜ்ருடைய தொழுகை மற்றும் இஷாவுடைய தொழுகையை விட கஷ்டமான தொழுகை எதுவுமில்லை இந்த இரண்டிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் வந்து விடுவார்கள் நான் தொழ வைப்பதற்கு எவரேனும் ஒருவரை ஏவி விட்டு நான் வீடுகளுக்கு சென்று என்னோடு சிலர்களை அழைத்துக் கொண்டு விறகுகளை எங்களுடன் எடுத்துக் கொண்டு வீட்டில் யார் தொழுகிறார்களோ அவர்களின் வீடுகளை எரிக்க நாடுகிறேன். ..
وَفِي رِوَايَة وَاَلَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ عَلِمَ أَحَدهمْ أَنَّهُ يَجِد عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الصَّلَاة وَلَوْلَا مَا فِي الْبُيُوت مِنْ النِّسَاء وَالذُّرِّيَّة لَحَرَّقْت عَلَيْهِمْ بُيُوتهمْ بِالنَّارِ(بخاري)باب وُجُوبِ صَلاَةِ الْجَمَاعَةِ-كتاب الأذان
எப்படியேனும் தவழ்ந்தாவது மஸ்ஜிதுக்கு வந்தால் இரண்டு எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என்று இருந்தால் ஜமாஅத்துக்கு வந்து விடுவார்கள் என்று மேற்படி ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துள்ளார்கள்
இன்றைய காலத்திலும் இமாம் ஜமாஅத்துக்கு வராத நபர்கள் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஏதேனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உணவு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தால் அன்றைய தினம் மஸ்ஜிதே நிரம்பி வழிவதை நாம் பார்க்க முடியும்
ஜமாஅத் தொழுகைக்கு ஒருவர் வராமல் ஆகிவிட்டாலும் ஏன் வரவில்லை என்று விசாரிக்கும் வழக்கம் இருந்தது
عَنْ أَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَدَ سُلَيْمَانَ بْنَ أَبِي حَثْمَةَ فِي صَلَاةِ الصُّبْحِ وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غَدَا إِلَى السُّوقِ وَمَسْكَنُ سُلَيْمَانَ بَيْنَ السُّوقِ وَالْمَسْجِدِ النَّبَوِيِّ فَمَرَّ عَلَى الشِّفَاءِ أُمِّ سُلَيْمَانَ فَقَالَ لَهَا لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ فَقَالَتْ إِنَّهُ بَاتَ يُصَلِّي فَغَلَبَتْهُ عَيْنَاهُ فَقَالَ عُمَرُ لَأَنْ أَشْهَدَ صَلَاةَ الصُّبْحِ فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً (مؤطا)
ஜமாஅத் தொழுகைக்கு ஒருவர் வராமல் ஆகிவிட்டாலும் அவர் ஏன் வரவில்லை என்று விசாரிக்கும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது சுலைமான் என்பவர் பஜ்ர் தொழுகைக்கு வரவில்லை என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கவலைப்பட்டு அவருடைய தாயாரை கடைவீதியிலே சந்தித்து காரணம் கேட்க என்னுடைய மகன் சுலைமான் இரவெல்லாம் தொழுதார் அந்த அசதியிலே தூங்கிவிட்டார் என்று சொன்னபோது உமர் ரலியல்லாஹு தஆலா கூறினார்கள் சுபஹுத் தொழுகைக்கு ஜமாத்துடன் கலந்து கொள்வது இரவெல்லாம் நின்று தொழுவதை விட மேலானது என்றார்கள் அதாவது இரவுத் தொழுகை வேண்டாம் என்று கூறவில்லை மாறாக பஜ்ர் தொழுகையின் ஜமாஅத் தப்பிவிடும் அளவுக்கு இரவுத் தொழுகை தொழுவதை தான் உமர் ரலி கண்டித்தார்கள்.
கூட்டாக ஒற்றுமையுடன் சேர்ந்து தொழுவதில் கிடைக்கும் நன்மை தனியாக தொழுவதில் கிடைப்பதில்லை
عَنْ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً (بخاري) وَكَانَ الأَسْوَدُ إِذَا فَاتَتْهُ الْجَمَاعَةُ ذَهَبَ إِلَى مَسْجِدٍ آخَرَ(بخاري- باب فَضْلِ صَلاَةِ الْجَمَاعَةِ-كتاب الاذان-عَنْ قُبَاثِ بْنِ أَشْيَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ:صَلاَةُ رَجُلَيْنِ يَؤُمُّ أَحَدُهُمَا صَاحِبَهُ أَزْكَى عِنْدَ اللَّهِ مِنْ صَلاَةِ أَرْبَعَةٍ تَتْرَى وَصَلاَةُ أَرْبَعَةٍ يَؤُمُّهُمْ أَحَدُهُمْ أَزْكَى عِنْدَ اللَّهِ مِنْ صَلاَةِ ثَمَانِيَةٍ تَتْرَى1 وَصَلاَةُ ثَمَانِيَةٍ يَؤُمُّهُمْ أَحَدُهُمْ أَزْكَى عِنْدَ اللَّهِ مِنْ صَلاَةِ مِائَةٍ تَتْرَى (بيهقي)
ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்து மஸ்ஜிதில் காத்திருப்பவருக்கு மலக்குகளின் துஆ
عن أَبي هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةُ الرَّجُلِ فِى الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلاَتِهِ فِى بَيْتِهِ وَفِى سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا وَذَلِكَ أَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لاَ يُخْرِجُهُ إِلاَّ الصَّلاَةُ لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ فَإِذَا صَلَّى لَمْ تَزَلِ الْمَلاَئِكَةُ تُصَلِّى عَلَيْهِ مَا دَامَ فِى مُصَلاَّهُ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ اللَّهُمَّ ارْحَمْهُ وَلاَ يَزَالُ أَحَدُكُمْ فِى صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ (بخاري) - باب فَضْلِ صَلاَةِ الْجَمَاعَةِ-كتاب الاذان
இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக தொழுகை நடத்தலாம்
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ اللَّيْلِ فَلَمَّا كَانَ فِي بَعْضِ اللَّيْلِ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا يُخَفِّفُهُ عَمْرٌو وَيُقَلِّلُهُ وَقَامَ يُصَلِّي فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ عَنْ شِمَالِهِ فَحَوَّلَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ ثُمَّ أَتَاهُ الْمُنَادِي فَآذَنَهُ بِالصَّلَاةِ فَقَامَ مَعَهُ إِلَى الصَّلَاةِ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ قُلْنَا لِعَمْرٍو إِنَّ نَاسًا يَقُولُونَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَامُ عَيْنُهُ وَلَا يَنَامُ قَلْبُهُ قَالَ عَمْرٌو سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ رُؤْيَا الْأَنْبِيَاءِ وَحْيٌ ثُمَّ قَرَأَ{إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ} (بخاري) باب التَّخْفِيفِ فِى الْوُضُوءِ- الوضوء
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் நான் என்னுடைய சின்னம்மா மைமுனா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் தொழுவதற்காக எழுந்தார்கள் உளூச் செய்தார்கள் அவர்கள் உளுச் செய்ததைப் போல நானும் உளூ செய்தேன் பின்பு அவர்களின் தொழ ஆரம்பிக்கும் போது எழுது புறமாக வந்து நின்றேன் என் கையைப் பிடித்து என்னை வலது புறமாக ஆக்கினார்கள் பிறகு அல்லாஹ் நாடியவரை தொழுதார்கள் பிறகு மீண்டும் தொழுதார்கள் தூங்கினார்கள் பிறகு தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அழைத்தார் உடனே தொழுகையின் பக்கம் எழுந்தார்கள் உளூச் செய்யவில்லை.
உளு செய்யவில்லை என்பதற்கான காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிச்சிறப்பாக அவர்கள் தூங்கினாலும் கண்கள் மட்டுமே உறங்கும் உள்ளம் உறங்காது என்பதாகும்
ஜமாஅத் தொழுகையில் எண்ணிக்கை கூடும் அளவுக்கு நன்மை அதிகம்
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا الصُّبْحَ فَقَالَ أَشَاهِدٌ فُلَانٌ قَالُوا لَا قَالَ أَشَاهِدٌ فُلَانٌ قَالُوا لَا قَالَ إِنَّ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ أَثْقَلُ الصَّلَوَاتِ عَلَى الْمُنَافِقِينَ وَلَوْ تَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَيْتُمُوهُمَا وَلَوْ حَبْوًا2 عَلَى الرُّكَبِ وَإِنَّ الصَّفَّ الْأَوَّلَ عَلَى مِثْلِ صَفِّ الْمَلَائِكَةِ وَلَوْ عَلِمْتُمْ مَا فَضِيلَتُهُ لَابْتَدَرْتُمُوهُ وَإِنَّ صَلَاةَ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلَاتِهِ وَحْدَهُ وَصَلَاتُهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلَاتِهِ مَعَ الرَّجُلِ وَمَا كَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى (ابوداود) كتاب الصلاة
சிலர் மஸ்ஜிதில் நடைபெறும் ஜமாஅத்தை பொடுபோக்காக தவற விட்டு விட்டு தாமதமாக வந்து தனியாக ஜமாஅத் நடத்துவதை வழமையாக்கிக் கொண்டுள்ளனர். எண்ணிக்கையில் அதிகமான நபர்கள் கொண்ட ஜமாஅத்தை வேண்டுமென்றே தவற விடுவது சுன்னத்துக்கு மாற்றமாகும்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنْ اتِّبَاعِهِ عُذْرٌ لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى (ابوداود) بَاب فِي التَّشْدِيدِ فِي تَرْكِ الْجَمَاعَةِ- كِتَاب الصَّلَاةِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ ثُمَّ آمُرَ بِالصَّلَاةِ فَيُؤَذَّنَ لَهَا ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ (بخاري) باب فَضْلِ الْعِشَاءِ فِى الْجَمَاعَةِ-كتاب الأذان- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ أَعْمَى فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرَخِّصَ لَهُ فَيُصَلِّيَ فِي بَيْتِهِ فَرَخَّصَ لَهُ فَلَمَّا وَلَّى دَعَاهُ فَقَالَ هَلْ تَسْمَعُ النِّدَاءَ بِالصَّلَاةِ قَالَ نَعَمْ قَالَ فَأَجِبْ (مسلم) بَاب يَجِبُ إِتْيَانُ الْمَسْجِدِ عَلَى مَنْ سَمِعَ النِّدَاءَ- كِتَاب الْمَسَاجِدِ
எப்போதும் ஜமாஅத்துக்கு வராமல் வீட்டில் தொழுபவரைப் பற்றி இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் எச்சரித்த விதம்
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ كَمَا يُصَلِّي هَذَا الْمُتَخَلِّفُ فِي بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ (مسلم)بَاب صَلَاةِ الْجَمَاعَةِ -المساجد
தனியாக மேயும் ஆட்டை ஓநாய் பிடிப்பது போல் எப்போதும் ஜமாஅத்துடன் சேராமல் இருப்பவரை ஷைத்தான் கெடுப்பான்
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمْ الصَّلَاةُ إِلَّا قَدْ اسْتَحْوَذَ عَلَيْهِمْ الشَّيْطَانُ فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ (ابوداود) بَاب فِي التَّشْدِيدِ فِي تَرْكِ الْجَمَاعَةِ - كِتَاب الصَّلَاةِ
தக்பீர் தஹ்ரீமாவுக்கே வந்து சேர்ந்து விட முயற்சி செய்ய வேண்டும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِى جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ».(ترمذي
மஃமூம்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள்.
தக்பீர் தஹ்ரீமாவிற்கே இமாமுடன் வந்து சேர்ந்து கொள்வது
عَنْ أَنَسِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنْ النَّارِ وَبَرَاءَةٌ مِنْ النِّفَاقِ (ترمذي- الصَّلَاةِ
ஜமாஅத்தில் கலந்து கொள்ள எண்ணி விரைந்து வந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் ஜமாஅத் தவறினால்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا وَحَضَرَهَا لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا(ابوداود) بَاب فِيمَنْ خَرَجَ يُرِيدُ الصَّلَاةَ فَسُبِقَ بِهَا- كِتَاب الصَّلَاةِ
இவர் அழகிய முறையில் உளுச் செய்து மஸ்ஜிதை நோக்கி வந்த நிலையில் ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாக தொழுகை முடிந்து விட்டதை அவர் பெற்றுக் கொண்டால் அவருடைய எண்ணம் எப்படியாவது ஜமாஅத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இருந்தால் அல்லாஹுத்தஆலா அந்த ஜமாஅத்தில் கலந்து கொண்ட நன்மையை அவருக்கு தருகிறான்
இமாமுடன் ருகூவில் சேர்ந்தால் அந்த ரக்அத் கணக்கிடப்படும். எனினும் அதற்காக ஓடி வரக்கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ (بخاري) بَاب مَنْ أَدْرَكَ مِنْ الصَّلَاةِ رَكْعَةً-كتاب مواقيت الصلاة (مَنْ أَدْرَكَ رَكْعَةً أي الركوع) مرعاة- عَنْ أَبِي قَتَادَةَ قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ 3 فَلَمَّا صَلَّى قَالَ مَا شَأْنُكُمْ قَالُوا اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ قَالَ فَلَا تَفْعَلُوا إِذَا أَتَيْتُمْ الصَّلَاةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا(بخاري) باب قَوْلِ الرَّجُلِ فَاتَتْنَا الصَّلاَةُ-كتاب الأذان
அபூ கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நாங்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது சில மனிதர்களின் ஓடிவரும் சப்தத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள் தொழுகை முடிந்த பிறகு காரணம் கேட்ட பொழுது நாங்கள் தொழுகைக்காக விரைந்து ஓடி வந்தோம் என்று கூறிய போது இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள் நீங்கள் தொழுகைக்கு வந்தால் அமைதியாக நடந்து வாருங்கள் எந்த ரக்அது கிடைத்ததோ அதை தொழுங்கள் தப்பிவிட்டதை திரும்ப எழுந்து தொழுங்கள் என்றார்கள்
இமாமை எந்த நிலையில் பெற்றுக் கொண்டாலும் அவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும். சிலர் தொழ வரும்போது இமாம் சுஜூதிலோ அல்லது அத்தஹிய்யாத்திலோ இருந்தால் அவர் மேலே வரும் வரை நின்று கொண்டேயிருப்பர். இது சரியானதல்ல
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جِئْتُمْ إِلَى الصَّلَاةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا وَلَا تَعُدُّوهَا شَيْئًا (ابوداود) بَاب فِي الرَّجُلِ يُدْرِكُ الْإِمَامَ سَاجِدًا كَيْفَ يَصْنَعُ- كِتَاب الصَّلَاةِ-
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் நீங்கள் தொழுகைக்கு வரும்போது நாங்கள் சுஜூதில் இருந்தால் எங்களோடு சேர்ந்து சுஜூது செய்யுங்கள் அந்த சுஜூதை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
عَنْ ابْنِ أَبِي لَيْلَى عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى أَحَدُكُمْ الصَّلَاةَ وَالْإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الْإِمَامُ (ترمذي) بَاب مَا ذُكِرَ فِي الرَّجُلِ يُدْرِكُ الْإِمَامَ وَهُوَ سَاجِدٌ كَيْفَ يَصْنَعُ-كِتَاب الْجُمُعَةِ
உங்களில் ஒருவர் தொழுகைக்கு வந்தால் இமாம் எந்த நிலையில இருக்கிறாரோ அந்த நிலையில் அவருடன் சேர்ந்து கொள்ளட்டும்
தொழுகையில் எந்த செயலிலும் இமாமை முந்தக் கூடாது
عَنْ أَنَسٍ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَلَمَّا قَضَى الصَّلَاةَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ أَيُّهَا النَّاسُ إِنِّي إِمَامُكُمْ فَلَا تَسْبِقُونِي بِالرُّكُوعِ وَلَا بِالسُّجُودِ وَلَا بِالْقِيَامِ وَلَا بِالِانْصِرَافِ فَإِنِّي أَرَاكُمْ أَمَامِي وَمِنْ خَلْفِي (مسلم) باب النَّهْىِ عَنْ سَبْقِ الإِمَامِ –الصلاة- عن الْبَرَاء بْنُ عَازِبٍ وَهُوَ غَيْرُ كَذُوبٍ قَالَ كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَضَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَبْهَتَهُ عَلَى الْأَرْضِ (بخاري) باب مَتَى يَسْجُدُ مَنْ خَلْفَ الإِمَامِ- الأذان
அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு ஒரு நாள் தொழுகை நடத்தினார்கள் தொழுகை முடிந்தவுடன் எங்களை முன்னோக்கி மக்களே நான் உங்களுடைய இமாமாக இருக்கிறேன் எந்த நிலையிலும் ருகூவிலோ சுஜூதிலோ என்னை முந்தாதீர்கள் சலாம் கொடுப்பதிலும் நிலையிலும் என்னை முந்தாதீர்கள் காரணம் உங்களை நான் முன்னால் இருந்தும் பார்க்கிறேன் முதுகுக்கு பின்னாலும் பார்க்கிறேன் என்றார்கள்.
எப்போதும் தொழுகையில் இமாமை முந்துபவர்களின் தலை கழுதையின் தலையாக மாற்றப்படலாம் என்ற எச்சரிக்கை...
இது இவ்வுலகிலோ அல்லது மறுமையிலோ நடைபெறலாம்
عن أَبي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَمَا يَخْشَى أَحَدُكُمْ أَوْ لَا يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ(بخاري) باب إِثْمِ مَنْ رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ-كتاب الأذان
எப்போதும் தொழுகையில் இமாமை முந்துபவரின் தலை கழுதையின் தலையாக மாற்றப்பட்ட உண்மைச் சம்பவம்
وقال ابن حجر يحتمل أن يكون على حقيقته فيكون ذلك مسخا خاصا والممتنع المسخ العام كما صرحت به الأحاديث الصحاح وأن يكون مجازا عن البلادة ويؤيد الأول ما حكي عن بعض المحدثين أنه رحل إلى دمشق لأخذ الحديث عن شيخ مشهور بها فقرأ عليه جملة لكنه كان يجعل بينه وبينه حجابا ولم ير وجهه فلما طالت ملازمته له ورأى حرصه على الحديث كشف له الستر فرأى وجهه وجه حمار فقال له اِحْذَرْ يا بُني أن تسبق الإمام فإني لما مَرَّ بي في الحديث استبعدتُ وقوعَه فسبقتُ الإمام فصار وجهي كما ترى (مرقاة شرح مشكاة) شرح ابن ماجة للسيوطي- تحفة الاحوذي
சிரியாவில் பிரபலமான ஆசிரியர் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரிடம் ஹதீஸ்களை கேட்க ஒரு மாணவர் சென்றார். அந்த ஆசிரியர் சிலவற்றை இவருக்கு கற்றுத் தந்தாலும் தன் முகத்தை காட்டாமலேயே திரைக்குப் பின்னால் இருந்து பாடம் நடத்தினார். ஒரு கட்டத்தில் இந்த மாணவரின் ஆர்வத்தைக் கண்ட ஆசிரியர் தன்னையும் மறந்து திரையை அவரே விலக்க, அங்கே கண்ட காட்சி மாணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருடைய உடம்பெல்லாம் மனித உடலாகவும், தலை மட்டும் கழுதையின் தலையாகவும் இருந்தது. பின்பு அந்த ஆசிரியர் சோகத்துடன் அதற்கான காரணத்தைக் கூறினார். மகனே தொழுகையில் இமாமை ஒரு போதும் நீ முந்துபவனாக ஆகி விடாதே ஏனெனில் அவ்வாறு முந்துபவர்களின் தலை கழுதையில் தலையாக மாற்றப்படக் கூடும் என்ற ஹதீஸை நான் பலமுறை படித்தேன் அப்படியிருந்தும் அதை நான் நம்பாமல் தொழுகையில் இமாமை முந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதனால் அல்லாஹ் என்னை இப்படி ஆக்கி விட்டான். என்று அழுதபடி கூறினார்.
இகாமத் சொல்வதற்கு முன்போ அல்லது இமாம் வருவதற்கு முன்போ மஃமூம்கள் எழலாமா ?
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُقِيمَتْ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ (بخاري)-كتاب الأذان
ومن الأدب القيام أي قيام القوم والإمام إن كان حاضرا بقرب المحراب ( حين قيل ) أي وقت قول المقيم ( حي على الفلاح ) لأنه أمر به فيجاب (مراقي الفلاح)
விளக்கம்-மிஹ்ராபுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் ஹய்ய அ ல ல் ஃபலாஹ் என்று சொல்லும்போது எழுந்தால் போதும்.
சில நேரங்களில் இமாமுக்கு மறதி ஏற்பட்டால் சுப்ஹானல்லாஹ் சொல்லி ஞாபகப்படுத்துவது
عَنْ عَبْدِ اللَّهِ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلَاةِ فَقَالَ وَمَا ذَاكَ قَالَ صَلَّيْتَ خَمْسًا فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ(بخاري) كتاب السهو وفي رواية وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لِيُسَلِّمْ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ (بخاري) باب التَّوَجُّهِ نَحْوَ الْقِبْلَةِ-كتاب الصلاة
இமாமத் பற்றிய மேலும் சில விளக்கங்கள்
عَنْ أَبِي عَطِيَّةَ رَجُلٍ مِنْهُمْ قَالَ كَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ يَأْتِينَا فِي مُصَلَّانَا يَتَحَدَّثُ فَحَضَرَتْ الصَّلَاةُ يَوْمًا فَقُلْنَا لَهُ تَقَدَّمْ فَقَالَ لِيَتَقَدَّمْ بَعْضُكُمْ حَتَّى أُحَدِّثَكُمْ لِمَ لَا أَتَقَدَّمُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ زَارَ قَوْمًا فَلَا يَؤُمَّهُمْ وَلْيَؤُمَّهُمْ رَجُلٌ مِنْهُمْ (ترمذي) قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ قَالُوا صَاحِبُ الْمَنْزِلِ أَحَقُّ بِالْإِمَامَةِ مِنْ الزَّائِرِ و قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَذِنَ لَهُ فَلَا بَأْسَ أَنْ يُصَلِّيَ بِهِ (ترمذي)
மாலிக் இப்னு ஹு இஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களுடைய தொழுகை பள்ளிக்கு சில நேரம் வந்து பேசிக் கொண்டிருப்பார்கள் அவர்கள் எங்களுடைய மஹல்லாவை சார்ந்தவர்கள் அல்ல ஒரு நேரம் அவர்கள் வருகை தந்த போது தொழுகை நேரம் வந்தது நாங்கள் சொன்னோம் நீங்கள் தொழ வையுங்கள் அப்போது அவர்கள் உங்களில் ஒருவர் தொழ வைக்கட்டும் அது பற்றிய நபிமொழியை நான் பின்பு கூறுகிறேன் என்றார்கள் தொழுகை முடிந்ததும் அவர்கள் கூறினார்கள் ஒரு கூட்டத்தாரை நீங்கள் சிந்திக்க சென்றால் நீங்கள் தொழ வைக்காதீர்கள் அவர்களில் ஒருவர் தொழ வைக்கட்டும் என்றார்கள் மற்றொரு அறிவிப்பில் சந்திக்க வருபவரை விட அந்த வீட்டினுடைய உள்ளவர்கள் தொழ வைக்க மிகவும் சிறந்தவர்கள் என்றும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக