28-11-2025
جمادي الثاني - 6 بسم الله الرحمن الرحيم
இஸ்லாம் விரும்பும்
ஆடை ஒழுக்கமும் வெட்க குணமும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
இன்று நம்முடைய இஸ்லாமிய வாலிபர்களிடமும் இஸ்லாமிய இளம்பெண்களிடமும் வெட்க உணர்வும் ஆடை ஒழுக்கங்களும் குறைந்து கொண்டே வருகின்றன. முழங்கால் தெரியும்படி அரைக்கால் பேண்ட் அணிந்து வெளியில் திரியும் இஸ்லாமிய வாலிபர்கள் அதை தவறாக கருதுவதில்லை. ஹனஃபி மத்ஹபின் அடிப்படையில் முட்டிக் காலும் அவ்ரத் என்பது தெரிந்து விஷயம். கழுத்திலும் கைகளிலும் வெள்ளிச் செயின் அணிந்து தொழுகைக்கு வரும் வாலிபர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வெள்ளியினால் மோதிரம் மட்டுமே அணிவது சுன்னத். மற்ற வெள்ளி நகைகளை ஆண்கள் அணிவது கூடாது. சில ஆண்கள் மஸ்ஜிதுக்கு வரும்போது சிறிய டி- ஷர்ட் அணிந்து தொழ வருகிறார்கள். பனியனும் இருப்பதில்லை. அவர்கள் குணிந்து ருகூவு செய்யும்போது பின்புறம் தெரிகிறது. அவர்களின் தொழுகை அறவே கூடாது காரணம் ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் உட்பட மறைந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். அதேபோல் இஸ்லாமியப் பெண்களும் அரைகுறை ஆடையுடன் வெளியில் சுற்றுகின்றனர். எனவே இவற்றை விளக்கிச் சொல்வது நம் மீது கடமையாகும்.
ஆடை என்பது மனிதனுக்கு கண்ணியம் சேர்க்கும் அம்சங்களில் முக்கியமான ஒன்றாகும். அதனால் அந்த கண்ணியத்தைக் கெடுக்க அதாவது சுவன ஆடைகளை உருவ வேண்டும் என்பதற்காகவே ஷைத்தான் ஆதம் ஹவ்வா இருவரிடம் குழப்பம் செய்தான்.
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِنْ سَوْءَاتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ (20) وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ (21) فَدَلَّاهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ
சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருக்கு துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார்.
عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا (بخاري5652
அதாஃ ரஹ் அவர்கள் கூறினார்கள் என்னிடம் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் சுவனவாதியான ஒரு பெண்ணை உமக்குக் காட்டவா என்று கேட்டு விட்டு இதோ இந்த கறுப்பான பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து தனக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் அது நீங்க அல்லாஹ்விடம் துஆ செய்யும்படியும் கூறினார். நபி ஸல் அவர்கள் அப்பெண்ணிடம் நீ இதை பொறுத்துக் கொண்டால் உனக்கு சுவனம் உறுதியாகி விடும் என்றார்கள். அப்போது அந்தப்பெண் சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருப்பதற்கு மட்டும் துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார். அவ்வாறே நபி ஸல் துஆச் செய்தார்கள்.
3. அரசனிடம் ஈமானைப் பற்றி தைரியமாக பேசிய குகைவாலிபர்கள் அங்கிருந்து ஓடக் காரணம் ஆடையை உருவச் சொல்லி அரசன் சொன்னது தான்
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا (10) الكهف - فَيُقَال إِنَّ مَلِكهمْ لَمَّا دَعَوْهُ إِلَى الْإِيمَان بِاَللَّهِ أَبَى عَلَيْهِمْ وَتَهَدَّدَهُمْ وَتَوَعَّدَهُمْ وَأَمَرَ بِنَزْعِ لِبَاسهمْ عَنْهُمْ الَّذِي كَانَ عَلَيْهِمْ مِنْ زِينَة قَوْمهمْ وَأَجَّلَهُمْ لِيَنْظُرُوا فِي أَمْرهمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ عَنْ دِينهمْ الَّذِي كَانُوا عَلَيْهِ وَكَانَ هَذَا مِنْ لُطْف اللَّه بِهِمْ فَإِنَّهُمْ فِي تِلْكَ النَّظْرَة تَوَصَّلُوا إِلَى الْهَرَب مِنْهُ وَالْفِرَار بِدِينِهِمْ مِنْ الْفِتْنَة وَهَذَا هُوَ الْمَشْرُوع عِنْد وُقُوع الْفِتَن فِي النَّاس أَنْ يَفِرّ الْعَبْد مِنْهُمْ خَوْفًا عَلَى دِينه (تفسير ابن كثير
தொழுகையில் நமது ஆடைகள் கண்ணியமாக இருக்க வேண்டும்
يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ (31)الاعراف- والزينة هنا الملبس الحسن، إذا قدر عليه صاحبه -وَلِهَذِهِ الْآيَة وَمَا وَرَدَ فِي مَعْنَاهَا مِنْ السُّنَّة يُسْتَحَبّ التَّجَمُّل عِنْد الصَّلَاة وَلَا سِيَّمَا يَوْم الْجُمْعَة وَيَوْم الْعِيد وَالطِّيبُ لِأَنَّهُ مِنْ الزِّينَة وَالسِّوَاك لِأَنَّهُ مِنْ تَمَام ذَلِكَ(تفسيرالقرطبي)
நீங்கள் தொழும்போது அழகிய ஆடைகளை அவசியமாக்கிக் கொள்ளுங்கள் என்று இதற்கு பலர் விளக்கம் கூறியுள்ளனர். குறிப்பாக ஈத் ஜும்ஆ போன்ற நாட்களில் நல்ல ஆடைகளை உடுத்துவது சுன்னத்தாகும்.
தொப்பி, தலைப்பாகை அணிவதும் சுன்னத்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ(بخاري)
قَالَ رُكَانَةُ وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ(ابوداود)
عن عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَمَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَدَلَهَا بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِي(ابوداود)
عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلَانِيِّ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الشُّهَدَاءُ أَرْبَعَةٌ رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ هَكَذَا وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ قَالَ (الراوي)فَمَا أَدْرِي أَقَلَنْسُوَةَ عُمَرَ أَرَادَ أَمْ قَلَنْسُوَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...(بخاري)
வெண்மை ஆடையை அணிவது நல்லது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பச்சை, கறுப்பு நிற ஆடைகளையும் அணிந்துள்ளார்கள். சட்டையும் அணிந்துள்ளார்கள். சஹாபாக்களின் சட்டை என்பது கெண்டைக்காலின் பாதி வரைக்கும் இருந்தது. இப்போதுள்ள இளைஞர்கள் அணிவது போன்று இடுப்புக்கு மேல் உள்ளதாக இல்லை
عن أم سلمة رض قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص- عن المغيرة بن شعبة رض أن النبي صلى الله عليه وسلم لبس جبة رومية ضيقة الكمين(ترمذي)عن أبي إسحاق السبيعي يقول أدركتُهم وقُمُصُهم إلى نصف الساق أو قريب من ذلك وكم أحدهم لا يجاوز يده(التمهيد
ஆடை அழகாக அமைய வேண்டும் என்று விரும்பவுது தவறல்ல
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ رواه مسلم
இப்னு மஸ்வூத் (ர) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ”ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும் , காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
அழுக்கான ஆடையை அணிந்தவரை எச்சரித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ (ابوداود)
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் பரட்டைத் தலையுடன் இருப்பதைப் பார்த்தார்கள். அப்போது ” இவர் தனது தலைமுடியை சீர்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கூறினார்கள். அதேபோல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது ” இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத் (3540)
عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ أَبِيهِ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبٍ دُونٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَكَ مَالٌ قَالَ نَعَمْ مِنْ كُلِّ الْمَالِ قَالَ مِنْ أَيِّ الْمَالِ قَالَ قَدْ آتَانِي اللَّهُ مِنْ الْإِبِلِ وَالْغَنَمِ وَالْخَيْلِ وَالرَّقِيقِ قَالَ فَإِذَا آتَاكَ اللَّهُ مَالًا فَلْيُرَ عَلَيْكَ أَثَرُ نِعْمَةِ اللَّهِ وَكَرَامَتِهِ (نسائ)
முழுக்கைச் சட்டை அணிவது சுன்னத்
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ(ابوداود)
நபி ஸல் அவர்களின் சட்டைக் கை மணிக்கட்டு வரை இருந்தது.
சிறுநீர் கழிக்கும்போது நின்று கொண்டே ஆடையை தூக்க மாட்டார்கள் மாறாக பாதிக்கு மேல் உட்கார்ந்த பிறகு தான் ஆடையை தூக்குவார்கள் வெட்க உணர்வின் காரணமாக சிறுநீர் கழிப்பதற்காக தூரமாகச் சென்று விடுவார்கள்
عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ فَقَالَ لِي ائْتِ تِلْكَ الْأَشَاءَتَيْنِ قَالَ وَكِيعٌ يَعْنِي النَّخْلَ الصِّغَارَ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ لِي ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إِلَى مَكَانِهَا فَقُلْتُ لَهُمَا فَرَجَعَتَا (ابن ماجة)حديث صحيح
இந்தஹதீஸ் BAZZAR நூலில் சற்று விரிவாக உள்ளது. அதாவது ஹுனைன் போரின் போது நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது நபி ஸல் சிறுநீர் கழிக்க நாடினார்கள். நபி ஸல் எப்போது சிறுநீர் கழித்தாலும் சற்று தூரமாகவும், மறைவாகவும் செல்வார்கள். அங்கு மறைவு எதுவும் இல்லாததால் ஏதாவது மறைவு உள்ளதா என்று பார்க்கும்படி கூறினார்கள். சற்று தூரத்தில் சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, இன்னொரு மரம் இருந்தால் பார் என்றார்கள். நான் சென்று சற்று தூரத்தில் மற்றொரு சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, அந்த இரு மரங்களையும் சேர்ந்தாற்போல் இங்கு வரும்படி அல்லாஹ்வின் தூதர் அழைத்த தாக கூறி அழைத்து வா என்றார்கள். நான் போய் கூறியவுடன் ஒன்றுக்கொன்று தூரமாக இருந்த அந்த இரு மரங்களும் ஒன்று சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே வந்து மறைத்துக் கொண்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழித்தவுடன் அவ்விரு மரங்களும் பிரிந்து சென்று அதனதன் இடத்தில் போய் நின்று கொண்டன. நபியவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் மரங்களும் பங்கு வகிக்கின்றன என்றால் அவைளுக்கும் அவர்கள் அருட்கொடை..
அணிவதற்கு சுன்னத்தாக்கப்பட்ட சில ஆடைகள்
ஆடைகளில் சிறந்தது வெண்மை ஆடையாகும்
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا مِنْ ثِيَابِكُمْ الْبَيَاضَ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெண்மையான ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.”
ஆடைகளில் தூய்மையானது வெண்மை ஆடையாகும்
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا الْبَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُم رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.”
புதிய மனிதர்களை சந்திக்கும் போதும், விசேஷ நாட்களிலும் நல்ல ஆடைகளை உடுத்துவது நபிவழி தான்
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ.. 32 الاعراف)فقد دلت الآية على لباس الرفيع من الثياب والتجمل بها في الجمع والأعياد وعند لقاء الناس ومزاورة الإخوان.قال أبو العالية:كان المسلمون إذا تزاوروا تجملوا (قرطبي)وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا وَاشْرَبُوا وَالْبَسُوا وَتَصَدَّقُوا فِي غَيْرِ إِسْرَافٍ وَلَا مَخِيلَةٍ (بخاري)
நண்பர்களை சந்திக்கும்போது தன் ஆடைகளை, அங்க அவயங்களை சரி செய்து கொள்வதும் நபிவழி தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில நேரங்களில் தண்ணீரில் தன் முகத்தைப் பார்த்து தலை முடியையும், தாடி முடியையும் சரி செய்வார்கள்
அணிவதற்கு தடை செய்யப்பட்ட சில ஆடைகள்
عن عَبْد اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنه قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا (مسلم) وفي رواية قُلْتُ أَغْسِلُهُمَا قَالَ بَلْ أَحْرِقْهُمَا (مسلم)المعصفر : المصبوغ بالعصفر وهو نبات أصفر اللون
நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ” நிச்சயமாக இவை நரகவாதிகளின் ஆடையாகும். இதை அணிய வேண்டாம் என்று கூறினார்கள். நான் ”இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா?” என்று கேட்டேன். நபியவர்கள் ”இல்லை அதை எரித்து விடு” என்று கூறினார்கள்.
عن علي قال : نهى النبي صلى الله عليه وسلم عن خاتم الذهب وعن الْقَسِّىِّ وعن قطيفة الأرجوان والميثرة (مسند للشاشي)
(1) القَسِّي : ثياب من كَتَّان مَخْلوط بحَريِر(2) القطيفة : كساء أو فراش له أهداب(3) الأرجوان : ثوب أو سرج أحمر يحشى بالقطن أو الصوف ويوضع على ظهور الدواب للركوب عليه(4) الميثرة : غطاء للسرج من حرير أو جلد وقيل هي الفراش اللين
பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பட்டாடை அணிவதும் தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.”
பட்டாடைகளை பெண்கள் அணியலாம். ஆண்கள் அணிவது கூடாது. சிகிச்சைக்காகவே தவிர
عن عُمَرَ رضي الله عنه يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَة رواه البخاري-
عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةُ سِيَرَاءَ فَبَعَثَ بِهَا إِلَيَّ فَلَبِسْتُهَا فَعَرَفْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ فَقَالَ إِنِّي لَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتُشَقِّقَهَا خُمُرًا بَيْنَ النِّسَاءِ (مسلم) عن أَنَس رضي الله عنه أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ شَكَوَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمْلَ فَرَخَّصَ لَهُمَا فِي قُمُصِ الْحَرِيرِ فِي غَزَاةٍ لَهُمَا(مسلم)
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه خَطَبَ بِالْجَابِيَةِ فَقَالَ نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ إِصْبَعَيْنِ أَوْ ثَلَاثٍ أَوْ أَرْبَعٍ(مسلم
நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இருவிரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
பட்டாடை மீது அமர்வதற்கும் தடை
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَأَنْ نَأْكُلَ فِيهَا وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ رواه البخاري
தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் உணவு உண்பதையும் தண்ணீர் அருந்துவதையும் பட்டாடையின் மீது அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
பெண்கள் ஆடை அணியும் முறை முகம், முன் கை, அடிப்பாதம் தவிர அனைத்தையும் மறைக்க வேண்டும்
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
நடந்தால் சப்தம் வருகின்ற சலங்கைக் கொலுசு அணியத் தடை
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ(31) 24
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.
முத்துக்கள் குறைவாக உள்ள கொலுசு அணிவது தடையல்ல
உடல் உறுப்புக்கள் தெரியும் வகையில் அறைகுறை ஆடையணியத் தடை
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.
ஜில்பாப் முகத்திரை சுன்னத்தாகும்
أن الجلباب لابد منه في حق المرأة بالنسبة إلى غير محارمها، وقال -جل وعلا
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (59)الاحزاب الجلباب ثوب تلقيه المرأة على رأسها وبدنها زيادة في التحجب والستر،
வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்
عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا لَبِسَ قَمِيصًا بَدَأَ بِمَيَامِنِهِ.رواه الترمذي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ رواه أبو دود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடையணியும் போதும், உளூச் செய்யும் போதும் உங்களுடைய வலது
புறங்களிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.
புத்தாடையணியும் போது ஓத வேண்டிய துஆ
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு மேற்படி துஆவை ஓதுவார்கள். பொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதனுடைய தீங்கிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
ஜீன்ஸ் ஃபேண்ட் என்ற பெயரால் கரண்டைக்குக் கீழ் ஆடை உடுத்துவது பற்றி..
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ مِنْ الْإِزَارِ فَفِي النَّارِ(بخاري) عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ إِذْ خُسِفَ بِهِ فَهُوَ يَتَجَلَّلُ فِي الْأَرْضِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ(بخاري)
عَنْ ابْنِ عُمَرَ رَضِ قَالَ مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ زِدْ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ(مسلم)عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ جَرَّ ثَوْبَهُ مِنْ الْخُيَلَاءِ لَمْ يَنْظُرْ اللَّهُ إِلَيْهِ قَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ تَصْنَعُ النِّسَاءُ بِذُيُولِهِنَّ قَالَ تُرْخِينَهُ شِبْرًا قَالَتْ إِذًا تَنْكَشِفَ أَقْدَامُهُنَّ قَالَ تُرْخِينَهُ ذِرَاعًا لَا تَزِدْنَ عَلَيْهِ (نسائ
عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ رواه مسلم
”மூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றது” என்ற இறைவசனத்தை நபி ஸல் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்” என்று கூறிவிட்டு ”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடைய கணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியை சொல்க்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளை விற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.
இறுக்கமான ஆடையணிவது கூடாது
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ’ عَنْ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ رواه البخاري
கையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது மர்மஸ்தானம் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இன்று சில ஆண்கள் மஸ்ஜிதுக்கு வரும்போது சிறிய டி- ஷர்ட் அணிந்து தொழ வருகிறார்கள். பனியனும் இருப்பதில்லை. அவர்கள் குணிந்து ருகூவு செய்யும்போது பின்புறம் தெரிகிறது. அவர்களின் தொழுகை அறவே கூடாது காரணம் ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் உட்பட மறைந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்
பெண்களைப் போல் ஆடை அணியத் தடை
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنْ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنْ النِّسَاءِ بِالرِّجَالِ تَابَعَهُ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் , பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
வெள்ளியால் மோதிரம் தவிர மற்ற நகைகள் அணிவது ஆண்களுக்கு கூடாது
( وَلَا يَجُوزُ لِلرِّجَالِ التَّحَلِّي بِالذَّهَبِ ) ( وَلَا بِالْفِضَّةِ إلَّا بِالْخَاتَمِ (هداية)
நகைகள் அல்லாத தங்கம் வெள்ளியினால் ஆன பொருட்களைப் பயன்படுத்துவது ஆண்கள் பெண்கள் யாருக்குமே கூடாது
( وَلَا يَجُوزُ الْأَكْلُ وَالشُّرْبُ وَالِادِّهَانُ وَالتَّطَيُّبُ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ لِلرِّجَالِ وَالنِّسَاءِ ) لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فِي الَّذِي يَشْرَبُ فِي إنَاءِ الذَّهَبِ وَالْفِضَّةِ { إنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ } { وَأُتِيَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ بِشَرَابٍ فِي إنَاءِ فِضَّةٍ فَلَمْ يَقْبَلْهُ وَقَالَ : نَهَانَا عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ }(هداية)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக