வியாழன், 18 டிசம்பர், 2025

முதியவர்களை மதிப்பதும் சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவதும்

 19-12-2025

جمادي الثاني  -  27 بسم الله الرحمن الرحيم  

  முதியவர்களை கண்ணியப் படுத்துவதும் 

சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவதும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (1)

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரிடம் வயதில் மூத்தவர்களை மதிக்கும் பண்பு குறைந்து கொண்டே வருகிறது. பெற்றோரையே மதிக்காதவர்கள் குடும்பத்தில் உள்ள பெற்றோர் அல்லாத மற்ற பெரியவர்களையோ அல்லது வெளியிடங்களில் தாம் சந்திக்கும் பெரியவர்களையோ மதித்து நடப்பதில்லை. “யோவ் பெருசு” என்று ஆடு மாடுகளை அழைப்பது போல் அழைப்பது போன்று அழைக்கும் வழக்கம் சில இளைஞர்களிடம் உள்ளது. 

இஸ்லாம் கற்றுத் தரும் ஒழுக்கங்களில் வயதில் பெரியவர்களை மதிப்பதும் 

சிறியவர்கள் மீது அன்பு செலுத்துவதும் முக்கியமான அம்சங்களில் உள்ளதாகும்.

மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்பதைப் போன்று நாம்  இளம் வயதில் பெரியவர்களை மதித்தால் தான் நாம் முதுமையை அடையும்போது நம்மை மதிக்கின்ற இளம் தலை முறையினரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّه (ترمذي

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا (مسند أحمد

வயதில் மூத்தவர்களின் கண்ணியத்தை மதித்து நடந்ததால் 

இப்னு உமர் ரழி அவர்களின் கல்வித் தரத்தை அல்லாஹ் உயர்த்தினான்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا (بخاري)

  விளக்கம்- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுக்கு எந்த அளவுக்கு கல்வி ஞானம் இருந்ததோ அந்த அளவுக்கு பணிவும் இருந்தது. ஒரு சமயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களிடம் மரங்களில் ஒரு மரம் உண்டு. அந்த மரத்தின் இலைகள் உதிராது. அந்த மரத்தின் காய் கனிகள் அனைத்துமே பலன் தரக்கூடியது. அந்த மரத்தை ஒரு முஸ்லிமுக்கு ஒப்பிட்டுக் கூறலாம். அது எந்த மரம் என்று விடுகதை போன்று கேட்ட போது சபையில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு போன்ற பெரும் பெரும் சஹாபாக்கள் இருந்தும் பதில் தரவில்லை. அந்த இடத்தில் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள் அவர்களின் உள்ளத்தில் அது பேரிச்ச மரமாக இருக்கும் என்று எண்ணம் ஏற்பட்டது இருந்தாலும் மூத்த சஹாபாக்கள் யாரும் பதில் பேசாமல் இருக்கும்போது தான் மட்டும் பதில் சொல்வதை அவர்கள் விரும்பவில்லை. கடைசியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அதற்கான பதிலை கூறி அது பேரிச்ச மரம். ஏனென்றால் அதனுடைய இந்த பாகங்களும் வீணாகுவதில்லை. அதேபோல ஒரு உண்மையான முஸ்லிமின் எந்த காரியங்களும் வீணாகுவதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள். அந்த சபை முடிந்து வெளியே வந்தவுடன் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் தந்தையிடம் இந்த கேள்விக்கு அப்போதே எனக்கு பதில் தெரியும் என்று கூற அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மகனே நீ பதில் கூறியிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேனே என்றார்கள். அதற்கு இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வயதில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் முந்திக் கொள்வதை விரும்பவில்லை என்றார்கள். நூல் புகாரீ

மாற்று மதத்தவராக இருந்தாலும் வயதில் மூத்தவருக்கு ஏற்பட்ட 

கண்ணியக்குறைவு காரணமாக அல்லாஹ் இறைத்தூதரைக் கண்டித்தான்

    நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் விருந்தாளி இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் ஒரு நாள் விருந்தாளியை எதிர்பார்த்து காத்திருந்த பொழுது வயதான மாற்றுமத முதியவரைக் கண்டார்கள் விருந்துக்கு அவரை அழைத்தார்கள் அவர் வருகை தந்தார். அந்த மனிதர் மிகவும் பசியுடன் இருந்தார் அவரிடம் உணவைக் கொண்டு வந்து முன்னாள் வைத்தார்கள் அப்போது இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பிஸ்மில்லாஹ் சொல்லி அவருடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள் ஆனால் அவர் பிஸ்மில்லாஹ் சொல்லவில்லை அப்போது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பிஸ்மில்லாஹ் சொல்லும்படி கூற, அதற்கு அவர் நான் மஜூஸி எனவே நான் நீங்கள் ஏற்றுக் கொண்ட இறைவனின் பெயரைச்சொல்ல மாட்டேன் என்று கூறினார் இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் பிஸ்மில்லா விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருந்ததால் அவர் சாப்பிடாமல் சென்று விட்டார் உடனே அல்லாஹுத்தஆலா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் மூலம் அவர்களை கண்டித்தான் இப்ராஹீமே இந்த மனிதர் 70 வருடமாக என்னை நிராகரித்து வாழ்ந்து வருகிறார் நான் அவருக்கு உணவை கொடுத்து வருகிறேன் ஆனால் ஒருவேளை உணவுக்காக அவரை பட்டினியுடன் திருப்பி அனுப்பி விட்டீர்களே என்று கண்டித்தவுடன் உடனே இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவரை தேடிச் சென்று கண்டுபிடித்து உங்களை சாப்பிடாமல் அனுப்பியதற்காக அல்லாஹ் என்னை கண்டித்தான் என்று கூறி நீங்கள் மீண்டும் என் வீட்டுக்கு வர வேண்டும் நான் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன் உங்கள் விருப்பம் போல் சாப்பிடலாம் என்று கூற அவருடைய மனம் மாறியது. என்னை சாப்பிடாமல் அனுப்பியதற்காக இறைவனிடமிருந்து உங்கள் மீது கண்டனம் வரும் அளவுக்கு உங்கள் மார்க்கம் உயர்ந்ததா? என்று மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டார்

வயதில் மூத்தவர்கள் அறிவுரை சொன்னால் அதை செவிமடுக்க வேண்டும். உமர் ரழி அவர்களின் சம்பவம் 

وقد مر بها عمر بن الخطاب رضي الله عنه في خلافته والناس معه على حمار فاستوقفته طويلا ووعظته وقالت: يا عمر قد كنت تدعى عميرا، ثم قيل لك عمر، ثم قيل لك أمير المؤمنين، فاتق الله يا عمر، فإنه من أيقن بالموت خاف الفوت، ومن أيقن بالحساب خاف العذاب، وهو واقف يسمع كلامها، فقيل له: يا أمير المؤمنين أتقف لهذه العجوز هذا الوقوف ؟ فقال: والله لو حبستني من أول النهار إلى آخره لا زلت إلا للصلاة المكتوبة، أتدرون من هذه العجوز ؟ هي خولة بنت ثعلبة سمع الله قولها من فوق سبع سموات، أيسمع رب العالمين قولها ولا يسمعه عمر ؟ (قرطبي

சுருக்கம்- ஒருமுறை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது படையுடன் சென்று கொண்டிருந்தபோது ஒரு வயதான பெண் உமர் ரலியல்லாஹு தஆலா அவர்களை நிப்பாட்டி நீண்ட நேரம் உபதேசம் செய்தார்கள் அதுவரை அமைதியாக இருந்து நீண்ட நேரம் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இந்த வயதான பெண்ணுக்காக எவ்வளவு நேரம் நிற்கிறீர்கள் என்று கேட்டபோது அதற்கு உமர் ரலியல்லாஹு தஆலா அவர்கள் இந்தப் பெண் யார் தெரியுமா இவர் தான் கவ்லா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். இந்தப் பெண்ணின் விஷயமாகத்தான் பின்வரும் வசனம் இறங்கியது

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (1)

ஏழு வானங்களையும் தாண்டி அல்லாஹ்வே இந்த வயதான பெண்ணின் பேச்சை கேட்டு வசனத்தை அல்லாஹ் இறக்கினான் அல்லாஹ்வே இந்த பெண்ணின் பேச்சைக் கேட்கும் போது நான்  கேட்க கூடாதா பகல் முழுவதும் இந்த வயதான பெண் என்னை  நிற்க வைத்து உபதேசம் செய்து கொண்டிருந்தாலும் நான் அதைக் கேட்டுக் கொண்டிருப்பேன் என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.              

 கவ்லா பின்த் ஸஃலபா, ரழி அவர்களை அவரது கணவர் அவ்ஸ் பின் சாமித் ரழி அவர்கள் 'ழihar' (தன் மனைவியை தாயைப் போல் கூறி, அவளை விவாகரத்து செய்வது) செய்தபோது, அந்தப் பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து தனக்கு வயதாகி விட்டதாகவும், பிள்ளைகளும் இருப்பதாகவும் இப்போது கணவர் தன்னை விவாகரத்து செய்வதாகவும் கவலையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அவருடைய முறையீட்டைக் கேட்ட நபி ஸல் அவர்கள் இதுவரை உள்ள சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து ஏற்பட்டு விட்டது என்று கூறி, இனி அல்லாஹ் இதுபற்றி வசனத்தை இறக்கினால் தான் உண்டு என பதில் அளித்தார்கள். அந்தப் பெண் நேரடியாக அல்லாஹ்விடம் முறையிட்டார். அல்லாஹ், மேற்படி வசனத்தை இறக்கி, ழிஹார் செய்வதால் விவாகரத்து நடைபெறாது என்றாலும் இப்படி ஒரு வார்த்தை கூறியதற்காக கணவர் கஃப்பாரா கொடுத்து விட்டு சேர்ந்து வாழலாம் என வசனத்தை இறக்கினான். "அல்லாஹ் நிச்சயமாக தம் கணவரைப் பற்றி உம்மிடம் வாதிட்டு, அல்லாஹ்விடமே முறையிட்ட அந்தப் பெண்ணின் பேச்சை அல்லாஹ் செவியுற்றான்.....               

வயதில் மூத்தவர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட இளைஞர்களைக் கண்டித்த உமர் ரழி அவர்கள்

  அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி அவர்களும் கலீஃபா உமர் ரழி அவர்களும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது இரண்டு இளைஞர்கள் வருகை தந்தார்கள். அவர்களில் ஒருவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இஹ்ராம் சம்பந்தமாக ஒரு சட்டத்தைக் கேட்டார்.அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் கூறினாலும் அருகில் அப்துர் ரஹ்மான் இவனும் அவ்ஃப் ரலியல்லாஹு அவர்கள் இருந்ததால் அவர்களிடம் நான் சொன்னது சரிதானே என்று கேட்டார்கள் அப்போது கேள்வி கேட்ட இளைஞருடன் வந்திருந்த இளைஞர் உமர் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது போன்ற இதை காதில் கேட்டு விட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சாட்டையால் அவரை அடிக்க துணிந்தார்கள் அப்போது கேள்வி கேட்ட வாலிபர் வருத்தம் தெரிவித்து அவரை மன்னித்து விடுங்கள் அவர் ஏதோ தெரியாமல் பேசிவிட்டார் என்று கூற, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை விட்டு விட்டார்கள் இருப்பினும் அந்த இருவருக்கும் உபதேசம் செய்தார்கள் (பெரியவர்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்வது கெட்ட குணம் என்பதை மனதில் பதிய வைப்பதற்காக) அந்த இருவருக்கும் உபதேசம் செய்தார்கள்.                           

وقال عمر بن الخطاب إذا كان في الانسان عشر خصال تسعة منها صالحة وواحدة هي سوء الخلق أفسدت هذه الخصلة تلك التسعة (غرر الخصائص الواضحة

ஒரு மனிதரிடம் 10 குணங்கள் இருந்து அதில் ஒன்பது நற்குணங்கள் நல்லதாக இருந்து ஒரு குணம் மட்டும் தீயதாக இருக்கும் என்றால் அந்த ஒரு கெட்ட குணம் மற்ற ஒன்பது நல்ல குணங்களையும் கெடுத்து விடும் என்று உபதேசம் செய்தார்கள் 

வயதில் மூத்தவர்களுக்கு கண்ணியம் தருவது போன்று கல்விக்கும் நாம் கண்ணியம் கொடுக்க வேண்டும்

وكان ابن عباس - رضي الله عنه - يأتي باب الأنصاري لطلب الحديث ، فيقعد على الباب حتى يخرج ولا يستأذن ، فيخرج ذلك الرجل ويقول : يا ابن عم رسول الله ، لو أخبرتني ؟ فيقول : هكذا أمرنا أن نطلب العلم . 

கல்வி ஒருபோதும் நம்மை தேடி வரக்கூடாது. கல்வியைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும் என்ற சொல்லின் அடிப்படையில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்கு சில ஹதீஸ்களின் விளக்கம் அறியச் சென்றார்கள். அப்போது அந்த சஹாபியின் கதவு தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டுவது ஒழுக்கம் அல்ல என எண்ணிய அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கதவைத் தட்டாமல் வெளியில் காத்திருந்தார்கள். நீண்ட நேரம் கழித்து கதவைத் திறந்த உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்தவுடன் மிகவும் வருந்தியவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்த உங்களை இவ்வளவு நேரம் நான் காக்க வைத்து விட்டேனே என்று வருந்தினார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்விக்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்றார்கள். கல்விக்கும் கல்வி உடையவர்களுக்கும் நம் முன்னோர்கள் தந்த மரியாதையை நாம் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 எத்தனையோ விஷயங்களில் வயதில் மூத்தவர்களை முற்படுத்தும்படி மார்க்கம் வலியுறுத்துள்ளது

عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ أَتَى رَجُلَانِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا (بخاري

وأولى الناس بالإمامة أعلمهم بالسنة فإن تساووا فأقرؤهم فإن تساووا فأورعهم فإن تساووا فأسنهم (باب الإمامة

விளக்கம்- இமாமத் செய்வதாக இருந்தால் உங்களில் எவர் தொழுகையின் சட்ட திட்டங்களை தெரிந்து வைத்துள்ளாரோ அவர் தொழ வைக்கட்டும். அதில் அனைவரும் சமமாக இருந்தால் உங்களில் எவர் நன்கு கிராஅத் ஓதுவாரோ அவர் தொழ வைக்கட்டும் அதில் அனைவரும் சமமாக இருந்தால் உங்களில் எவர் பேணுதலாக இருப்பாரோ அவர்  தொழ வைக்கட்டும். அதில் அனைவரும் சமமாக இருந்தால் உங்களில் வயதானவர் தொழ வைக்கட்டும்.                                       

عن بن عباس أن النبي صلى الله عليه وسلم قال "البركة مع أكابركم" (صحيح ابن حبان.

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا » :طبراني المعجم الكبير    ( مَهْلًا ): أَيْ أَمْهِلْ مَهْلًا 

ஹசன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதில் ஒரு முதியவர்  உளூச் செய்து கொண்டிருப்பதை கண்டார்கள் அவர் தவறாக உளூச் செய்வதை கண்டு அவரிடம் பணிவுடன் அவருக்கு அறிவுரை சொல்வது போன்று ஆகி விடக் கூடாது என்பதற்காக பெரியவரே நான் உளூச் செய்கிறேன் அது சரியா என்று பார்த்து என்னைத் திருத்துங்கள் என்று கூறி உளூச் செய்து காட்ட அந்தப் பெரியவர் தன் தவறை உணர்ந்து நீ சரியாகத் தான் செய்கிறாய் நான் தான் தவறு செய்து விட்டேன் என்றார்          

   

இறையச்சமுள்ள வாலிபர்களும் மேயும் கால்நடைகளும், (முடியாத நிலையிலும் நாற்காலியை நாடாமல்)  ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிக் குழந்தைகளும் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்

عَنْ أَبِي قِلَابَةَ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَقِيقًا فَظَنَّ أَنَّا قَدْ اشْتَقْنَا أَهْلَنَا فَسَأَلَنَا عَنْ مَنْ تَرَكْنَا مِنْ أَهْلِنَا فَأَخْبَرْنَاهُ فَقَالَ ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ فَإِذَا حَضَرَتْ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ ثُمَّ لِيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ (مسلم

மாலிக் இப்னுல் ஹுவைரிஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் சம வயதுடைய இளைஞர்களாக இருந்த நிலையில் நபி ஸல் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். (நாங்கள் எங்கள் குடும்பத்தாரைப் பிரிந்து இருபது நாட்கள் ஆகி விட்டதால்) நபி ஸல் அவர்கள் எங்கள் மீது இரக்கப்பட்டார்கள். எங்களின் குடும்பத்தாரை விட்டும் பிரிந்து வந்த கவலையில் மீண்டும் குடும்பத்தாரை சந்திக்க எங்களிடம் ஆர்வம் அதிகம் இருக்கும் என எண்ணியவர்களாக உங்களில் யார் தன் குடும்பத்தாரை விட்டு விட்டு வந்துள்ளீர்களோ அவர்கள் உடனே வீட்டுக்குச் செல்லுங்கள். அவர்களுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுங்கள். நன்மையை ஏவுங்கள். தொழுகைநேரம் வந்தால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்ல உங்களில் மூத்தவர் தொழ வைக்கட்டும் என கூறினார்கள்

மூத்தவர்களை நாம் கண்ணியக் குறைவாக நடத்தினால்......

عن الحسن بن أبي جعفر قال:مرَّ الأمير يوما فصاحوا: "الطريق"ففرج الناس وبقيت عجوز كبيرة لا تقدر أن تمشي فجاء بعض الجلاوذة فضربها بسوط ضربة فقال حبيب أبو محمد ( اللهم اقطع يده ) فما لبث إلا ثلاثا حتى مرَّ بالرجل قد أُخذ في سرقة فقُطِعت يدُه (مجابو الدعوة....) 

மன்னர் ஒருவர் ஊர்வலம் வரும்போது  பாதையை விட்டும் ஒதுங்கச் சொல்லி  காவலர்கள் கத்திக் கொண்டிருக்க, மக்கள் வழி  விட்டு ஒதுங்கினர். ஆனால் ஒரு மூதாட்டி மட்டும்  உடனே சட்டென்று ஒதுங்க முடியவில்லை. அவ்வாறு ஒதுங்க முடியாத மூதாட்டியை காவலன் அடிக்க,  அதைப் பார்த்த ஒரு இறைநேசர் அதைப் பொறுக்க முடியாமல்  யாஅல்லாஹ் அவன் கையை துண்டாக்கி விடு  என துஆ செய்தார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் மூதாட்டியை அடித்த  காவலன் மூன்றே நாட்களில்  ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கை வெட்டப்பட்டான்.                                           

சிறுவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا فَقَالَ الْأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنْ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ(بخاري)عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ (بخاري)

நபி ஸல் அவர்கள் தமது பேரக் குழந்தைகளை முத்தமிட்ட போது அந்த இடத்தில் அக்ரஃ இப்னு ஹாபிஸ் என்ற நபித் தோழர் இருந்தார்கள்.  அந்த நபித் தோழர் நபி ஸல் அவர்களிடம் எனக்கு பத்து  குழந்தைகள் இருக்கிறார்கள் நான் இதுவரை ஒருவரைக் கூட முத்தமிட்டதில்லை என்று கூற, அவரைப் பார்த்து நபி ஸல் அவர்கள் யார் (பிள்ளைகள் மீது) இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் இதுபோன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது. அப்போது நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி உமது உள்ளத்திலிருந்து அல்லாஹ் இரக்க குணத்தை எடுத்து விட்டதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று கூறினார்கள். 

عن أَبي قَتَادَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ فَصَلَّى فَإِذَا رَكَعَ وَضَعَ وَإِذَا رَفَعَ رَفَعَهَا(بخاري)

நபி ஸல் அவர்கள் எங்களிடம் வருகை தந்த போது உமாமா என்ற சிறு பெண் குழந்தை அவர்களின் தோள் புஜத்தின் மீது இருந்தது. அவ்வாறே நபி ஸல் அவர்கள் தொழுதார்கள். ருகூஉ செய்யும்போது மட்டும் கீழே இறக்கி விடுவார்கள். மேலே எழும்போது மறுபடியும் தன் தோள் மீது தூக்கி வைத்துக் கொள்வார்கள்.                    

عَنْ بُرَيْدَةَ رضقَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ إِذْ أَقْبَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ 1 فَنَزَلَ وَحَمَلَهُمَا فَقَالَ صَدَقَ اللَّهُ إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ رَأَيْتُ هَذَيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فِي قَمِيصَيْهِمَا فَلَمْ أَصْبِرْ حَتَّى نَزَلْتُ فَحَمَلْتُهُمَا (نسائ

நபி ஸல் அவர்கள் மிம்பரின் மீது இருந்த படி குத்பா ஓதிக் கொண்டிருக்கும்போது  அவர்களின் பேரப் பிள்ளைகளான ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி இருவரும் வருகை தந்தார்கள் அவ்விருவர் மீதும் சிவப்பு சட்டைகள் இருந்தன. அவ்விருவரும் நடந்து வருவதைக் கண்ட நபி ஸல் அவர்கள் மிம்பரை விட்டும் கீழே இறங்கி அவ்விருவரையும் தோளில் சுமந்த படி நிச்சயமாக உங்களின் சொத்துக்களும் பிள்ளைகளும் சோதனைகள் தான் என்று அல்லாஹ் கூறியது உண்மையாகி விட்டது.  இவ்விருவரும் நடந்து வரும்  அழகைக் கண்டு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அதனால்   கீழே இறங்கி அவர்களை தோளில் சுமந்தேன் என்றார்கள்.                                                               

 நபி ஸல் அவர்களின் மடி மீது அமர்ந்து மோதிரத்தோடு விளையாடிய குழந்தையை அவரின் தந்தை கண்டித்த போது நபி ஸல் அவர்கள்  அந்தக் குழந்தையிடம் நீ  நன்கு விளையாடு. நீ அதனுடன் விளையாடி விளையாடி பழசாக  ஆக்கினாலும் சரி என்று அன்புடன் திரும்ப திரும்பக் கூறினார்கள் 

عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي وَعَلَيَّ قَمِيصٌ أَصْفَرُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَنَهْ سَنَهْ قَالَ عَبْدُ اللَّهِ وَهِيَ بِالْحَبَشِيَّةِ حَسَنَةٌ قَالَتْ فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ فَزَبَرَنِي أَبِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْلِي وَأَخْلِقِي ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي ثُمَّ أَبْلِي وَأَخْلِقي (بخاري

குழந்தைகளின் மீது அன்பு காட்டுவதோடு தேவைப்பட்டால் கண்டித்து நல்லொழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும்

عن وَهْب بْن كَيْسَان أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُما يَقُولُ كُنْتُ غُلَامًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا غُلَامُ سَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ (بخاري)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا (6التحريم) 

عن علي رَضِيَ اللَّهُ عَنْهُ  عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال  أدِّبُوا أوْلادَكُمْ على ثلاثِ خِصالٍ حُبِّ نَبِيِّكُمْ وَحُبِّ أهْلَ بَيْتِهِ وقِراءَةِ القُرآنِ فإِنَّ حَمَلَةَ القُرآنِ في ظِلِّ الله يَوْمَ القِيامَةِ يَوْمَ لا ظِلَّ إلاَّ ظِلُّهُ مَعَ أنْبِيائِهِ وأصْفِيائِهِ (كنز العمال

عن ابن عباس رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال افتحوا على صبيانكم أول كلمة لا إله إلا الله ولقنوهم عند الموت لا إله إلا الله فانه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاش ألف سنة ما سئل عن ذنب واحد (كنز العمال)

عن أبي رافع رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال حق الولد على والده أن يعلمه الكتابة والسباحة5 والرماية6وأن لا يرزقه إلا طيبا(كنز العمال

சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல்,

قال عبد الله بن مبارك رحمه الله  كاد الأدب أن يكون ثُلُثي الدِّين 

“ஒழுக்கம் தீனுல் இஸ்லாமின் மூன்றில் இரண்டு பங்காக விளங்கும் அளவிற்கு ஆகிவிட்டது

சில பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை அவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக எண்ணுகிறார்கள். அதனால் கண்டிக்காமல் வளர்க்கிறார்கள். வளர்கின்ற மரம், செடி கொடிகளை அப்படியே பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவை காடாகவும், முட் புதராகவும் மாறும் அல்லது நீரின்றி வாடி கருகிவிடும். அவற்றை ஒழுங்கு படுத்தினால் அவை தோப்பாகவும், தோட்டமாகவும், எழில்கொஞ்சும் சோலையாகவும் மாறும். எந்த ஒரு பொருளும் (இரும்பு உட்பட) கெட்டுப் போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. அதனை அப்படியே விட்டுவிட்டால் போதும். அது தானாக கெட்டுவிடும். எனவே, ஒரு பொருளை உருவாக்கி பாதுகாப்பதற்குத் தான் முயற்சிகள் தேவை. அது அழிந்து போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. பட்டத்தை வானில் பறக்கவிட்டு பார்த்திருப்போம். பட்டம் பறப்பதற்கு நூல் தான் ஆதாரம். நூல் இல்லையேல், பட்டம் வானில் உயர பறப்பதற்கு முடியாது. ஆனால், நூல் உங்கள் கைப்பிடியில் இருக்கிறது. பட்டம் தான் விரும்பியவாறு சுதந்திரமாக விண்ணில் பறப்பதற்கு தனக்கு நூல் ஒரு தடையாக இருக்கின்றது  என்று எண்ணி, கட்டுப்பாட்டை விரும்பாமல்  நூலை அறுத்துக் கொண்டால் என்ன நேரும்? விண்ணில் உயர பறந்த பட்டம், நூல் அறுந்தால்  மண்ணில், முட்புதரில் வீழ்ந்து தாறுமாறாக கிழிந்து அழியும். அதுபோல் தான், நம் பிள்ளைகளான மாணவ, மாணவிகள் ஒழுக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமெல்லாம் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள்.   





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பராஅத் இரவு

 30-01-2026 شعبان  -  بسم الله الرحمن الرحيم     ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...