வியாழன், 11 டிசம்பர், 2025

பெற்றோரின் சிறப்பு

 12-12-2025

جمادي الثاني  -  20 بسم الله الرحمن الرحيم  

  பெற்றோரின் சிறப்பு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ.....

عن أبي بكرة رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : كل الذنوب يؤخر الله ما شاء منها إلى يوم القيامة إلا عقوق الوالدين فإن الله تعالى يعجله لصاحبه في الحياة قبل الممات (حاكم)

எந்த ஒரு பாவமாக இருந்தாலும் அல்லாஹ் அவன் நாடியவருக்கு  பாவத்திற்குரிய தண்டனையை கியாமத்நாள் வரை பிற்படுத்துவான் ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்ததின் தண்டனையை இவ்வுலகிலும் கொடுப்பான் நூல்: ஹாகிம்

عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا قَالَ هُمَا جَنَّتُكَ وَنَارُكَ (ابن ماجة)ஒரே வரியில் பதில்

பெற்றோரை அனுசரிப்பதால் ஆயுள் நீளும், ரிஜ்க் பெருகும், பாவம் போக்கப்படும்

عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَرَّهُ أَنْ يُمَدَّ لَهُ فِي عُمْرِهِ وَيُزَادَ فِي رِزْقِهِ فَلْيَبَرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ (أحمد

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ ذَنْبًا عَظِيمًا فَهَلْ لِي تَوْبَةٌ قَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ لَا قَالَ هَلْ لَكَ مِنْ خَالَةٍ قَالَ نَعَمْ قَالَ فَبِرَّهَا (ترمذي)

நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனக்கு தவ்பா உண்டா என ஒருவர் வந்து கேட்க, உனக்கு தாய் இருக்கிறாரா என்று நபி ஸல் கேட்டார்கள். இல்லை என்று அவர் கூற, உனக்கு சிறிய தாயார் இருக்கிறாரா என்று நபி ஸல் கேட்டார்கள். ஆம் என்று அவர் கூற, அப்போது நபி ஸல் அவர்கள் உன் சின்னம்மாவுக்கு நீ உபகாரம் செய் (அதுவே உன் தவ்பா) என்று கூறினார்கள்

நீ உன் பெற்றோரை மதித்தால் உன் பிள்ள உன்னை மதிக்கும்

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : بَرُّوا آباءَكُمْ تَبَرُّكُمْ أَبْنَاؤُكُمْ ، وَعِفُّوا تَعِفُّ نِسَاؤُكُمْ (طبراني)

குகையில் மூன்று நபர்கள் மாட்டிக் கொண்டு துஆ செய்த சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். அதில் ஒருவர் தினமும் இரவில் பால் கறந்து கொண்டு வரும்போது தன் மனைவி பிள்ளைகளை விட பெற்றோரை முற்படுத்திய சம்பவம்

பெற்றோரை மதிக்காத பிள்ளைகள் பெருகும்போது அல்லாஹ் பூமியில் பல அசம்பாவிதங்களை ஏற்படுத்துவான்

عن  أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذَا اتُّخِذَ الْفَيْءُ دُوَلًا ، وَالأمَانَةُ مَغْنَمًا ، وَالزَّكَاةُ مَغْرَمًا ، وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ ، وَعَقَّ أُمَّهُ ، وَأَدْنَى صَدِيقَهُ ، وَأَقْصَى أَبَاهُ ، وَظَهَرَتْ الأصْوَاتُ فِي الْمَسَاجِدِ ، وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ ، وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ ، وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ ، وَظَهَرَتْ الْقِيَانُ وَالْمَعَازِفُ ، وَشُرِبَتْ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأمَّةِ أَوَّلَهَا ، فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ بَعْضُهُ بَعْضًا » . رَوَاهُ التِّرْمِذِيُّ

சுருக்கம்-  1.பொதுச்சொத்துக்களில் முறைகேடு செய்வது 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 

4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5. மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது  8.மஸ்ஜித்களில் வீண் சப்தம்  9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது  11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை   13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது  14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது.           

மேற்காணும் பாவங்கள் பூமியில் பெருகினால் அந்த நேரத்தில் கீழ்காணும் ஆபத்துகள் வருவதை எதிர் பாருங்கள். சிவப்பு நிற அனல் காற்று வீசுதல். பூகம்பம், பூமி பிளக்குதல், எரி கற்கள் எரியப்படுதல், உருமாற்றப்படுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படும் எந்த அளவுக்கென்றால் பாசிமாலை அறுந்தால் அதிலுள்ள பாசி மணிகள் எவ்வாறு  தொடர்ச்சியாக கீழே விழுமோ அவ்வாறு தொடர்ச்சியான ஆபத்துகளை இந்த உலகம் சந்திக்கும்.  நூல்- திர்மிதீ                                           

إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا17 : 23)

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا 17 : 24)

நபி ஸல் அவர்களைப் பார்க்கா விட்டாலும் அந்தஸ்தில் உயர்ந்த நிலையை உவைஸுல் கர்னீ ரஹ் அவர்கள் அடைந்த தற்குக் காரணம்

عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِذَا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمَنِ سَأَلَهُمْ أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ حَتَّى أَتَى عَلَى أُوَيْسٍ فَقَالَ أَنْتَ أُوَيْسُ بْنُ عَامِرٍ قَالَ نَعَمْ قَالَ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ قَالَ نَعَمْ قَالَ فَكَانَ بِكَ بَرَصٌ فَبَرَأْتَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ قَالَ نَعَمْ قَالَ لَكَ وَالِدَةٌ قَالَ نَعَمْ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ فَإِنْ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ فَاسْتَغْفِرْ لِي فَاسْتَغْفَرَ لَهُ فَقَالَ لَهُ عُمَرُ أَيْنَ تُرِيدُ قَالَ الْكُوفَةَ قَالَ أَلَا أَكْتُبُ لَكَ إِلَى عَامِلِهَا قَالَ أَكُونُ فِي غَبْرَاءِ النَّاسِ أَحَبُّ إِلَيَّ قَالَ فَلَمَّا كَانَ مِنْ الْعَامِ الْمُقْبِلِ حَجَّ رَجُلٌ مِنْ أَشْرَافِهِمْ فَوَافَقَ عُمَرَ فَسَأَلَهُ عَنْ أُوَيْسٍ قَالَ تَرَكْتُهُ رَثَّ الْبَيْتِ قَلِيلَ الْمَتَاعِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ فَإِنْ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ فَأَتَى أُوَيْسًا فَقَالَ اسْتَغْفِرْ لِي قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِي قَالَ اسْتَغْفِرْ لِي قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِي قَالَ لَقِيتَ عُمَرَ قَالَ نَعَمْ فَاسْتَغْفَرَ لَهُ فَفَطِنَ لَهُ النَّاسُ (مسلم)

  4971. உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் ”உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?” என்று கேட்பார்கள். இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, ”நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கும் உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்று பதிலளித்தார்கள்.உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”யமன்வாசி களின் உதவிப் படையினருடன் ”முராத்” (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும்.


 அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்.  அவருக்கு ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், ”நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், ”கூஃபாவிற்கு” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ”கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், ”சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறிவிட்டார்கள். அடுத்த ஆண்டில் ”கரன்” குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், ”மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்” என்று கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் ”முராத்” (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற்பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்” என்றார்கள். ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, ”எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், ”நீர்தான் இப்போது புனிதப்பயணத்தை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்” என்றார்கள். ”நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?” என்று கேட்டார்கள். அவர் ”ஆம்” என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித் தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர். -ஸஹீஹ் முஸ்லிம்

உவைசுல் கர்னி ( ரஹ்) அவர்கள் தன்னுடைய தாயை கவனித்துக் கொண்டிருந்ததால் நபியுடைய காலத்திலேயே ஈமான் கொண்டிருந்தாலும் நேரடியாக நபியை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை எனவே தாயிற்கு பணிவிடை செய்த இவரின் உயர்வை காட்டுவதற்காகவே இவரின் துஆவை பெற்றுக் கொள்ளும்படி உமர் ( ரலி) அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள்


   இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான் அல்லவா, பெற்றோருக்கு முன்னால் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்,அதட்டி பேசாதீர்கள்,கண்ணியமாக பேசுங்கள்,பணிவோடு நடந்து கொள்ளுங்கள் என்று. அதற்கு என்ன பொருள் தெரியுமா? “உங்கள் பெற்றோருக்கு முன்னால் உங்கள் ஆடைகளை உதறாதீர்கள். அப்படி உதறும் போது ஏற்படுகிற காற்றினாலோ அல்லது அந்த ஆடையில் பட்டு இருக்கக்கூடிய தூசியினால் அவர்கள் சிரமப்பட்டால் அதுவும் அவர்களுக்கு நீங்கள் செய்கிற நோவினை,குறைபாடு என்று இப்னு அப்பாஸ் அவர்கள் விளக்கம் சொல்கின்றார்கள். பார்க்க - (சாதுல் மஸீர் 1/92(அல்குர்ஆன் 2:83)

  மேலும் சொல்கின்றார்கள், அவர்களை அதட்டாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் அல்லவா, அவர்களுக்கு முன்னால் கத்திப் பேசாதீர்கள்,சத்தத்தை உயர்த்திப் பேசாதீர்கள்.

சயீத் இப்னு முஸய்யிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பல நூறு சஹாபாக்களிடத்தில் கல்வி படித்த மிகப்பெரிய தாபியீ. அவர்கள் சொல்கிறார்கள்; அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது, பெற்றோருக்கு முன்னால் முற்றிலும் பணிந்து விடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே இதற்கு விளக்கம் என்ன? என்று. விளக்கம் சொல்கிறார்கள்,“ஒரு அடிமை தவறு செய்து விட்டான்,தன் எஜமானனுக்கு குற்றம் இழைத்து விட்டான், அந்த எஜமானன் மிகக் கோபக்காரன்,மிகக் கண்டிப்புடையவன், அந்த எஜமானனுக்கு முன்னால் குற்றம் செய்த அடிமை எப்படி பயந்து பணிவோடு இருப்பானோ அப்படி பணிவோடு நீங்கள் நிற்பதைத்தான் அல்லாஹ் இங்கு சொல்கின்றான், பெற்றோர்களுக்கு முன்னால் பணிந்து விடுங்கள் என்று.”

முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்.

أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ

அல்லாஹ்வின் தூதர் எனக்கு வஸிய்யத் -அறிவுரை கூறினார்கள்; உன் பெற்றோருக்கு நீ மாறு செய்யாதே! அவர்கள் உன் குடும்பத்தை விட்டும் உன் சொத்தை விட்டும் உன்னை வெளியே செல் என்று சொன்னாலும் சரியே”. (நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21060.

அப்துல்லாஹ் பின் அம்ர் அறிவிக்கின்றார்கள். ”ஒருவர் ரஸூலுல்லாஹ் அவர்களிடத்தில் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் ஜிஹாதுக்கு வந்திருக்கிறேன் என்று. கூற, ரஸூல்  ஸல் கேட்டார்கள்,

 أَحَيٌّ وَالِدَاكَ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ

 உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா? என்று. ஆம் அல்லாஹ்வின் தூதரே. ரஸூல் ஸல் அவர்கள் சொன்னார்கள், அந்த இருவரிடத்தில் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து ஜிஹாதுடைய  நன்மையை தேடுவீராக. நூல் : புகாரி, எண் : 2782.

விளக்கம்- அந்தப் பெற்றோர் மிகவும் மிகவும் முடியாதவர்களாக இருந்திருக்கலாம். அதனால் அவ்வாறு நபி  ஸல் கூறியிருக்கலாம்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு மனிதர் வந்து கூறினார்.

أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ أَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ فَهَلْ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَيٌّ قَالَ نَعَمْ بَلْ كِلَاهُمَا قَالَ فَتَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ نَعَمْ قَالَ فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا

அல்லாஹ்வின் தூதரே! நான் ஹிஜ்ராவிற்காக உங்களிடத்தில் பைஅத் செய்கிறேன். இனி என் தாய் நாட்டிற்கு நான் திரும்பமாட்டேன். அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரா செய்து வந்துவிட்டேன். ஆனால், அந்த சஹாபி கூறுகிறார்,என் தந்தை என் தாயை அழும் நிலையில் நான் விட்டுவிட்டு வந்துவிட்டேன். ஒரே மகனார் அவர்கள், இந்த மகனின் பக்கம் தேவையுடையவராக இருக்கிறார்கள். எங்களை விட்டு விட்டுச் சென்றுவிட்டால் எங்க நிலைமை என்னவாகும் என்று அழைக்கிறார்கள். அவர்கள் அழுத நிலையில் நான் விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள். “நீ மதினாவில் தங்காதே, உன் பெற்றோர் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று விடு”. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர்இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 4624

இமாம் அபூதாவூத் பதிவுசெய்கிறார்கள். நீ அவர்களிடத்தில் சென்று அவர்களுக்கு சிரிப்பை கொடு,அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடு. எப்படி நீ அழ வைத்தாயோ, அவர்களை சிரிக்க வை என்று சொன்னார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். ஒருவர் ரஸூலுல்லாஹ் அவர்களிடத்தில் வருகிறார். ஜிஹாதிற்கு செல்ல வேண்டும் என்று அனுமதி தேடியவராக. ரஸூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். உன் பெற்றோரில் ஒருவராவது உயிரோடு இருக்கிறார்களா?அவர் சொன்னார்; என் தாய் உயிரோடு இருக்கிறார். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,நீ செல், உன் தாய்க்கு நன்மை செய் என்று. அவர் உடனடியாக தன் பயணத்திற்கு புரப்படுகிறார்.

ரஸூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :“அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோருடைய பொருத்ததில் இருக்கின்றது.”

  அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எமன் நாட்டிலிருந்து வருகிறார்.

هَاجَرَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْيَمَنِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَجَرْتَ الشِّرْكَ وَلَكِنَّهُ الْجِهَادُ هَلْ بِالْيَمَنِ أَبَوَاكَ قَالَ نَعَمْ قَالَ أَذِنَا لَكَ قَالَ لَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْجِعْ إِلَى أَبَوَيْكَ فَاسْتَأْذِنْهُمَا فَإِنْ فَعَلَا وَإِلَّا فَبِرَّهُمَا

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சொல்கிறார்; ”அல்லாஹ்வின் தூதரே! என் முழு வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்து வந்து விட்டேன். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ஷிர்க்கை விட்டு விட்டாயா?விட்டு விட்டேன். ஜிஹாத் பாக்கியிருக்கிறது, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது, உன்னிடம் கேட்கிறேன், இதை விட முக்கியமான ஒன்று இருக்கிறது. எமன் நாட்டில் உன் பெற்றோர் இருவரும் உயிரோடு இருக்கிறார்களா? அவர் கூறினார், உயிரோடு இருக்கிறார்கள் என்று.

(கவனிக்க வேண்டும்! எமன் நாடு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கடைசி காலத்தில் முஸ்லிம்களுடைய கைக்கு வந்துவிட்டது. அங்குள்ளவர்கள் எல்லாம் முஸ்லிம்களாக ஆகிவிட்டார்கள். அது முஸ்லிம்களின் நாடாக மாறிவிட்டது. இனி அங்கிருந்து ஹிஜ்ரா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதனடிப்படையில் தான், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கேட்கிறார்கள்; அங்கே உன்னுடைய பெற்றோர்கள்  உயிராக இருக்கிறார்களா?என்று). அவர் கூறினார்; அல்லாஹ்வின் தூதரே! இருவரும் உயிரோடு இருக்கிறார்கள். நீ ஜிஹாதிற்கு வந்திருக்கிறாயே, உன் பெற்றோர் இடத்தில் அனுமதி கேட்டு விட்டு வந்திருக்கிறாயா! என்று கேட்டார்கள். அப்போது அந்த நபித்தோழர் கூறுகிறார், அல்லாஹ்வின் தூதரே! நான் அனுமதி கேட்கவில்லை, ஜிஹாதின் மேல் உள்ள பிரியத்தால் நான் அனுமதி இல்லாமல் ஓடி வந்துவிட்டேன் என்று. அப்போது ரஸூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,உன் பெற்றோரிடத்தில் செல்வாயாக, அவர்களிடத்தில் அனுமதி கேட்பாயாக. அவர்கள் அனுமதி கொடுத்தால் நீ என்னிடம் வருவாயாக. அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால்,அவர்களிடத்தில் இருந்து அவர்களுக்கு நன்மை செய்வீராக.

அறிவிப்பாளர் : அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மது,எண் : 11296.

தாயின் மதிப்பை புரிய வைக்கும் ஒரு நீதிக்கதை 

ஒரு தாயும்  மகனும் இருந்தார்கள் அந்தத் தாயார் மிகவும் கண்டிப்பானவர் எப்போதும் மகனை கண்டிப்பாக வைத்திருப்பார். அந்த மகன் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்தார் அம்மாவுடைய கண்டிப்புகளை அவர் பாரமாக நினைத்தார் ஒரு பேனை ஆஃப் பண்ணாமல் வந்து விட்டாலும் அதற்கும் அம்மா திட்டுவார்கள் தண்ணீர் குழாயில் லேசாக தண்ணீரை சரியாக மூடாமல் வந்து விட்டாலும் அதற்கும் அம்மா திட்டுவார்கள் வீட்டில் ஒரு பொருளை அதற்குரிய இடத்தில் வைக்காமல் மாற்றிவைத்து விட்டாலும் அதற்கும் அம்மா திட்டுவார்கள் இதனால் அந்த மகன் எப்போது தனக்கு வேலை கிடைக்கும் வேலை கிடைத்தவுடன் காலையில் போனால் இரவில் திரும்பலாம் அம்மாவின் நச்சரிப்பு குறையும் என்று கருதினார் அவர் நினைத்த மாதிரி ஒரு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்தது அந்த மகனுக்கு நிம்மதி பிறந்தது இந்த வேலை எப்படியேனும் தனக்குக் கிடைத்து விட்டால் அம்மாவின் நச்சரிப்பு குறையும் என்று நினைத்தார் அடுத்த நாள் குறிப்பிட்ட அந்த அலுவலகத்திற்கு வந்தார். தன்னைப் போலவே நிறையப்பேர் அதே வேலைக்கு நேர்காணலுக்காக வந்திருப்பதை அறிந்தார். அது மிகப்பெரும் பங்களா போன்று இருந்தது வெளியில் பெரிய கேட் இருந்தது. அதைத் திறந்து உள்ளே செல்லும் போது இரண்டு பக்கமும் செடிகள் இருந்தன செடிகளுக்காக  தண்ணீர் பாய்ச்சும் பைப் குழாய்கள் செடிகளின் மீது விழாமல் வீணாக தரையில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதை அவர் பார்த்து இதை எல்லாம் என் அம்மா பார்த்தால் என்னை எப்படி திட்டுவார் என்று சொல்லிக் கொண்டே வீணாக கீழே போய்க் கொண்டிருந்த அந்த குழாயை எடுத்து செடிக்கு தண்ணீர் செல்லும் வகையில் சரி படுத்தி விட்டுச் சென்றார் 

அடுத்து கொஞ்சம் உள்ளே சென்றவுடன் கதவைத் திறந்த உடன் வெல்கம் என்ற MATE தலைகீழாக இருந்தது அதை பார்த்தவுடன் இது எல்லாம் என் அம்மா பார்த்தால் என்னை எவ்வளவு திட்டுவார் என்று தலைகீழாக இருந்த அந்த  MATE டை சரி படுத்தி விட்டு உள்ளே சென்றார் அடுத்து நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் அமர்வதற்கு சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன அதில் சில அறைகள் காலியாக இருந்தன ஆனாலும் பேன் ஓடிக் கொண்டிருந்தது அதை பார்த்த அந்த மகன் இதையெல்லாம் என் அம்மா பார்த்தால் எவ்வளவு திட்டுவார் என்று சொல்லிக் கொண்டே வீணாக ஓடிக்கொண்டிருந்த ஃபேனை ஆப் செய்தார் இறுதியாக நேர்காணலுக்காக அவனுடைய பெயர் அழைக்கப்பட்டது அவனுடைய பெயரையும் முகவரியையும் மட்டும் தான் கேட்டார்களே தவிர எந்தவிதமான நேர்காணலும் அவனுக்கு நடத்தப்படாமல் உனக்கு இந்த அலுவலகத்தில் வேலை உறுதி என்று சொல்லி விட்டார்கள் அவனுக்கு ஒரே ஆச்சரியம் என்னிடத்தில் எதுவுமே கேட்கவில்லையே எப்படி எனக்கு நீங்கள் வேலை தந்தீர்கள் என்று கேட்டபோது அவனிடம் அந்த அதிகாரி சொன்னார் நாங்கள் வெளியில் இருந்தே ஆங்காங்கே கேமரா வைத்திருக்கிறோம் நீ வருகின்ற வழியில் என்னென்ன செய்தாய் என்பதை எல்லாம் நாங்கள் கவனித்தோம் மற்றவர்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை உனக்கு இருக்கிறது என்றால் உன்னப் போன்றவர்கள் தான் எங்களுக்குத் தேவை அதனால் தான் உன்னிடம் எந்த ஒரு நேர் காணலும் நடத்தாமல் உன்னை நாங்கள் வேலைக்கு சேர்த்து விட்டோம் என்றார்கள் அப்பொழுதுதான் அந்த மகனுக்கு அம்மாவின் மதிப்பு புரிந்தது அம்மாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல் எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று நினைத்த அந்த மகனுக்கு அம்மாவின் கண்டிப்பு தான் இங்கே வேலையே பெற்று தந்தது என்று அந்த மகன் அம்மாவின் மதிப்பை புரிந்து கொண்டான்

பெற்றோரின் இறப்புக்குப் பிறகும் அவர்களுக்கு நன்மை சேர்த்து வைக்க வேண்டும்

இறந்து விட்ட பெற்றோர் சார்பில் ஹஜ்ஜை  உம்ராவை நிறைவேற்றலாம்

عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ حَجَّ عَنْ وَالِدَيْهِ بَعْدَ وَفَاتِهِمَا كُتِبَ لَهُ عِتْقٌ مِنَ النَّارِ، وَكَانَ لِلْمَحْجُوجِ عَنْهُمَا أَجْرُ حَجَّةٍ تَامَّةٍ مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أُجُورِهِمَا شَيْئٌ "(بيهقي

இறந்து விட்ட பெற்றோருக்காக ஹஜ் செய்தவருக்கு நரக விடுதலை கிடைக்கும். அந்தப் பெற்றோருக்கும் பரிபூரணமான ஹஜ் நிறைவேறும் 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ (مسلم) باب الْحَجِّ وَالنُّذُورِ عَنِ الْمَيِّتِ

ஜுஹைனா என்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து  என்னுடைய தாயார்  ஹஜ்ஜை நேர்ச்சை செய்திருந்தார். அவரால் ஹஜ் செய்ய முடியாமல் வஃபாத்தாகி விட்டார். அவருக்காக ஹஜ்ஜை நான் நிறைவேற்றலாமா என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம் நீ ஹஜ் செய். உன் தாயாருக்கு கடன் இருந்தால் அந்தக் கடனை நீ நிறைவேற்றுவாய் அல்லவா அவ்வாறே  இது அல்லாஹ்வின் மீது அவருக்குள்ள கடனாகும். நிறைவேற்றுவது மிகவும் தகுதியானதாகும் என்றார்கள். 

படிப்பினை- ஷரீஅத்தின் நான்கு ஆதாரங்களில் ஒன்றான கியாஸ் கூடும் என்பதற்கு மேற்படி ஹதீஸ் முக்கிய சான்று

நம்மை விட்டும் பிரிந்த சென்ற நம்முடைய மூதாதையர்களுக்காக நாம் செய்யும் நற்கருமங்கள் இரு வகை

1. அவர்கள் வஸிய்யத்  செய்து விட்டுச் சென்றதால் நாம் கட்டாயம் நாம் செய்ய வேண்டியவை 2. அவர்கள் வஸிய்யத்  செய்யாமல் அவர்களுக்காக நாமே விரும்பிச் செய்யும்  நல்லறங்கள்.  

மற்றொரு கண்ணோட்டத்தில் மவ்த்தாக்களுக்கு நாம் செய்யும் நற்கருமங்களில் இரு பிரிவுகள் உள்ளன. 1. பகரம் இல்லாமல் நேரடியாக அவற்றை அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியும். ஹஜ், உம்ரா, குர்பானி ஆகியவை இதற்கு உதாரணம். 

 இறந்தவர்களுக்காக  நாம் ஹஜ், உம்ரா, குர்பானி போன்றவற்றை நிறைவேற்ற முடியும். 

2. அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியாது ஆனால் அதற்குப் பகரமாக ஃபித்யா கொடுக்க முடியும். தொழுகை, நோன்பு ஆகியவை இதற்கு உதாரணம். இறந்தவருக்காக தொழுகை, நோன்பு ஆகியவை நாம் நிறைவேற்ற முடியாது. ஃபித்யா தரலாம்.

இறந்தவர் வஸிய்யத் செய்திருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும். அவ்வாறு வசிய்யத் செய்யா விட்டாலும் வாரிசுகள் செய்யலாம். 

பெற்றோர் உயிருடன் இருந்தால் அவர்களை ஹஜ் உம்ரா செய்ய வைப்பதன் நன்மை

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ஒரு தோழர் வருகிறார். ஈரானில் உள்ள ஹுராசானிலிருந்து என் தாயை சுமந்து வந்திருக்கிறேன். ஹஜ் செய்வதற்காக. (ஏறக்குறைய 2500கிலோ மீட்டர்களுக்கு மேல் உள்ள தூரம். அதைவிட தூரமாகத்தான் இருக்கும் . அங்கிருந்து தன் தாயை தூக்கி தன் முதுகில் சுமந்து ஒருவர் வந்திருக்கிறார்.) “என் தாயை முதுகில் சுமந்தவனாக தவாஃப் செய்தேன், என் தாயை முதுகில் சுமந்தவனாக சயீ செய்தேன், முதுகில் சுமந்தவனாக மினா அழைத்துச் சென்றேன், பிறகு அரஃபா, பிறகு முஸ்தலிஃபா, பிறகு மக்கா என அனைத்து கடமைகளையும் என் தாயை முதுகில் சுமந்தவனாகச் செய்தேன். பிறகு கேட்கிறார்; என் தாய்க்குள்ள கடமையை நான் செய்துவிட்டேனா? என்று. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் : இல்லை. நீ சிறு பிராயத்தில் இருக்கும் போது, அந்த தாய் உன்னை பார்த்து ஒரு புன்முறுவலாக சிரித்தாள் அல்லவா, மனமாற உன்னை பார்த்து மகிழ்ந்தாள் அல்லவா! அதற்கு கூட நீ இன்னும் நன்றி செலுத்தவில்லை.

   சில வயதான ஹாஜிகள் உடன் வரும் போது இவ்வளவு சிரமப்படுகிறீர்களே! உங்களுக்கு ஆண் பிள்ளைகள் இல்லையா?அவர்களுடைய துணையை நீங்கள் நாடி இருக்கலாமே! அவர்களை அழைத்து வந்திருக்கலாமே! என்று சொன்னால்,அந்த வயதான பெற்றோர்கள் சொல்கிறார்கள்.அவர்கள் எங்கே எங்களை பார்க்கிறார்கள். காசு கொடுத்து விட்டால் போதும் என்று சிலர் காசை கொடுத்து, எப்படியாவது நீ ஹஜ் செய்து கொள்ளுங்கள் என்று ஏதாவது ஒரு டிராவல்ஸ்லில் அனுப்பி விடுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பராஅத் இரவு

 30-01-2026 شعبان  -  بسم الله الرحمن الرحيم     ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...