வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தராவீஹ் தொழுகையின் முக்கியத்துவம்

 20-02-2026

ஜும்ஆ பயான்


RAMZAN -2

بسم الله الرحمن الرحيم  

தராவீஹ் தொழுகையின் சிறப்பு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில் ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் என்று அறிவித்தால் மக்கள் அங்கேயும் முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் அல்லாஹ் ரமழானில் ஆஃபர் அறிவிக்கிறான். ஒன்று எழுபது மடங்கு நன்மை என அறிவிக்கிறான். ஆனாலும் ஒரு சாரார் மட்டுமே அந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் ஏதோ ரமழானில் ஆரம்பத்தில் முதலாவது தராவீஹ் அதற்கு அடுத்து 27-ம் தராவீஹ் என இந்த இரண்டு இரவுகளில் மட்டுமே தொழுதால் ரமழானின் பெருமையை அடைந்து விட்டதாக தப்புக் கணக்குப் போடுகின்றனர். இதை உணர்த்துவது நமது கடமையாகும்.                      

பொதுவாகவே இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு

عن الْمُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا(بخاري). بَاب قِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّيْلَ- كتاب التهجد

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (مسلم)   

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا فَأَقُصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ غُلَامًا شَابًّا وَكُنْتُ أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَيِّ الْبِئْرِ وَإِذَا لَهَا قَرْنَانِ وَإِذَا فِيهَا أُنَاسٌ قَدْ عَرَفْتُهُمْ فَجَعَلْتُ أَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنْ النَّارِ قَالَ فَلَقِيَنَا مَلَكٌ آخَرُ فَقَالَ لِي لَمْ تُرَعْ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَكَانَ بَعْدُ لَا يَنَامُ مِنْ اللَّيْلِ إِلَّا قَلِيلًا(بخاري)بَاب فَضْلِ قِيَامِ اللَّيْلِ-كتاب التهجد(وفي الحديث إيماء إلى أن قيام الليل ينجي من النار)

விளக்கம்- ஸாலிம் ரஹ் அவர்களின் தந்தையான இப்னு உமர் ரழி கூறினார்கள். நபி ஸல் அவர்கள் காலத்தில் யாரேனும் கனவு கண்டால் அதை நபி ஸல் அவர்களிடம் கூறுவார்கள். எனக்கும் ஒரு ஆசை இருந்தது. நானும் இதுவரை இரவில் எழுந்து வணங்கும் பழக்கம் இல்லாத இளைஞர் அப்துல்லாஹ் ரழி அவர்கள் இனி அதை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த கனவு காட்டப்பட்டுள்ளது.  கனவில் அவரை இரு மலக்குகள் நரகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், மூன்றாவதாக ஒரு மலக்கு நீ பயப்படாதே என்று கூறி அவர்களிடமிருந்து இவரை காப்பாற்றுவதாகவும் கனவு காட்டப்பட்டுள்ளது. இந்த விஷயம் நபி ஸல் அவர்களுக்குத் தெரிந்த போது அப்துல்லாஹ் இரவில் வணங்குபவராக இருந்தால் நல்லது அவர்களும் கூறியுள்ளார்கள்.  

சஹாபாப் பெருமக்களின் தராவீஹ் தொழுகை எப்படி இருந்தது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى بَكْرٍ أَنَّهُ قَالَ سَمِعْتُ أَبِى يَقُولُ:كُنَّا نَنْصَرِفُ مِنَ الْقِيَامِ فِى رَمَضَانَ فَنَسْتَعْجِلُ الْخَادِمُ بِالطَّعَامِ مَخَافَةَ الْفَجْرِ (سنن الكبري

அப்துல்லாஹ் இப்னு அபீபக்ர் ரழி அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய தந்தை சொல்ல கேள்விப்பட்டுள்ளேன் நாங்கள் எங்களுடைய காலத்தில் ரமழானில் நின்று வணங்கி விட்டுத் திரும்புவோம். அப்போது ஃப்ஜ்ர் நேரம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சீக்கிரமாக உணவு சமைத்துத் தரும்படி பணியாளரிடம் நாங்கள் ஏவுவோம்.

ஒரு மணி நேரத்தில் முடிக்கச் சொல்லும் இந்தக் காலமும், நீண்ட நேரம் நின்று தொழுத அந்தக்காலமும்

عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً - قَالَ - وَكَانُوا يَقْرَءُونَ بِالْمِئِينِ  وَكَانُوا يَتَوَكَّئُونَ عَلَى عُصِيِّهِمْ فِى عَهْدِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِىَ اللَّهُ عَنْهُ مِنْ شِدَّةِ الْقِيَامِ (سنن الكبري للبيهقي) 

ஸாயிப் இப்னு யஜீத் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் உமர் ரழி அவர்களின் காலத்தில் ரமழானில் இருபது ரக்அத்துகள் தொழுவோம். அப்போது தொழ வைப்பவர்கள் (ஒரு தொழுகையில்) நூறு ஆயத்துகள் வரை ஓதுவார்கள். உமர் ரழி அவர்களின் காலத்திலும் இது தொடர்ந்தது. எந்த அளவுக்கென்றால் எங்களில் சிலர் நிற்க முடியாமல் கைத்தடி மீது சாய்ந்தவர்களாக நின்று தொழுவார்கள்.                

120-வது வயதிலும் தராவீஹ் தொழுகை நடத்தியவர்

عَنِ الْوَلِيدِ بْنِ عَلِيٍّ  عَنْ أَبِيهِ  قَالَ : كَانَ سُوَيْد بْنُ غَفَلَةَ يَؤُمُّنَا فَيَقُومُ بِنَا فِي شَهْرِ رَمَضَانَ وَهُوَ ابْنُ عِشْرِينَ وَمِئَةِ سَنَةٍ. (مصنف ابن ابي شيبة) 

குர்ஆனை விரைவாக ஓதுபவர், மெதுவாக ஓதுபவர், நடுத்தரமாக ஓதுபவர் என மூன்று சாரார் அப்போதே இருந்துள்ளனர்

عَنْ أَبِى عُثْمَانَ النَّهْدِىِّ قَالَ :دَعَا عُمَرُ بْنُ الْخَطَّابِرَضِىَ اللَّهُ عَنْهُ بِثَلاَثَةِ قُرَّاءٍ فَاسْتَقْرَأَهُمْ  فَأَمَرَ أَسْرَعَهُمْ قِرَاءَةً أَنْ يَقْرَأَ لِلنَّاسِ ثَلاَثِينَ آيَةً  وَأَمَرَ أَوْسَطَهُمْ أَنْ يَقْرَأَ خَمْسًا وَعِشْرِينَ آيَةً  وَأَمَرَ أَبْطَأَهُمْ أَنْ يَقْرَأَ عِشْرِينَ آيَةً وَكَذَلِكَ رَوَاهُ الثَّوْرِىُّ (سنن الكبري)  

 உமர் ரழி அவர்கள் மூன்று காரிகளை அழைத்து தொழ வைக்கக் கூறுவார்கள். அவர்களில் சற்று விரைவாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் முப்பது ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள். அவர்களில் இன்னும் சற்று தாமதமாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் 25 ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள். இன்னும் சற்று தாமதமாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் இருபது ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள்.   விளக்கம்- சஹாபாக்களில் யாரும் நம்முடைய சில ஹாஃபிழ்களைப் போன்று விரைவாக ஓதும் வழமை யாரிடமும் இருந்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் முப்பது ஆயத்துகள் ஓதி விரைவாகத் தொழு வைப்பவர் என்றால் நாம் சாதாரண காலத்தில் தொழ வைக்கும்போது எந்த வேகத்தில் ஓதுகிறோமோ அந்த விரைவாகும்.       

عَنِ الْحَسَنِ قَالَ:مَنْ أَمَّ النَّاسَ فِي رَمَضَانَ فَلْيَأْخُذْ بِهِمَ الْيُسْرَ  فَإِنْ كَانَ بَطِيءَ الْقِرَاءَةِ فَلْيَخْتِمَ الْقُرْآنَ خَتْمَةً  وَإِنْ كَانَ قِرَاءَةً بَيْنَ ذَلِكَ فَخَتْمَة وَنِصْف  فَإِنْ كَانَ سَرِيعَ الْقِرَاءَةِ فَمَرَّتَيْنِ- كَانَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ يَأْمُرُ الَّذِينَ يَقْرَؤُونَ فِي رَمَضَانَ  يَقْرَؤُونَ فِي كُلِّ رَكْعَةٍ بِعَشْرِ آيَاتٍ عَشْرِ آيَاتٍ (مصنف ابن ابي شيبة)

ஹஸன் ரஹ் கூறினார்கள் ரமழானில் மக்களுக்கு தராவீஹ் தொழவைப்பவர் மக்களை சிரமப்படுத்தாமல் இலகுவான நிலையைக் கடை பிடிக்கட்டும். யார் மெதுவாக ஓதுவாரோ அவர் ஒரு குர்ஆன் முடிக்கட்டும். யார் இன்னும் சற்று விரைவாக ஓதுவாரோ அவர் ஒன்றரை குர்ஆன் முடிக்கட்டும். யார் இன்னும் சற்று விரைவாக ஓதுவாரோ அவர் இரண்டு குர்ஆன் முடிக்கட்டும்.                                                   

நோன்புக்கு முந்தைய நாளிலேயே தராவீஹ் தொழுகையின் சிறப்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேசியது

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ رضي الله عنه عَنْ سَلْمَانَ قَالَ:خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ: أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ شَهْرٌمُبَارَكٌ شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍجَعَلَ اللَّهُ صِيَامَهُ فَرِيضَةً وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْركَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ وَمَنْ أَدَّى فِيهِ فَرِيضَةً كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ.. (ابن خزيمة) 

நோன்பு துவங்குவதற்கு ஓரிரு தினங்கள் இருக்கும்போது ஷஃபான் மாத இறுதியில் நபி ஸல்  எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். மக்களே மகத்தான மாதம்  இப்போது  நிழலிட்டுள்ளது. வரவுள்ளது. அது பரக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு அதில் உள்ளது. அதில் நோன்பு வைப்பதை அல்லாஹ் ஃபர்ளாகவும் இரவில் நின்று வணங்குவத சுன்னத்தாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அந்த மாதத்தில் ஒரு உபரியான வணக்கத்தை நிறைவேற்றுபவர்  மற்ற மாதங்களில் ஒரு ஃபர்ளை நிரைவேற்றுபவரைப் போலவும் அந்த மாதத்தில் ஒரு ஃபர்ளான வணக்கத்தை நிறைவேற்றுபவர்  மற்ற மாதங்களில் 70 ஃபர்ளை நிறைவேற்றுபவரைப் போலவும் ஆகி விடுவார்.                                                                                                    

தராவீஹ் தொழுகையை தொடங்கியவர்கள் நபி ஸல் அவர்கள்.

 என்றாலும் தொடர்ந்து தொழுதால் உம்மத் மீது கடமையாகி விடும் என்ற அச்சத்தால் அதை வழமையாக்கவில்லை 

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى ذَاتَ لَيْلَةٍ فِي الْمَسْجِدِ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ ثُمَّ صَلَّى مِنْ الْقَابِلَةِ فَكَثُرَ النَّاسُ ثُمَّ اجْتَمَعُوا مِنْ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوْ الرَّابِعَةِ فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَصْبَحَ قَالَ قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ وَلَمْ يَمْنَعْنِي مِنْ الْخُرُوجِ إِلَيْكُمْ إِلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ وَذَلِكَ فِي رَمَضَانَ.(بخاري) كتاب التهجد

இன்னும் பல சுன்னத்துகளை நபி (ஸல்) செய்ய விரும்பினாலும் உம்மத் மீது ஃபர்ளாகி விடுமோ என்ற பயத்தில் விட்டுள்ளார்கள்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدَعُ الْعَمَلَ وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ فَيُفْرَضَ عَلَيْهِمْ وَمَا سَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَةَ الضُّحَى قَطُّ وَإِنِّي لَأُسَبِّحُهَا(بخاري) كتاب التهجد

தன் உம்மத்தின் மீது கடமையாகி விடுவதை அஞ்சி நபி[ஸல்] வழமையாக்காத செயலை உமர்  [ரளி] வழமையாக்கினார்கள்

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنْ الَّتِي يَقُومُونَ يُرِيدُ آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ (بخاري) بَاب فَضْلِ مَنْ قَامَ رَمَضَانَ- كِتَاب صَلَاةِ التَّرَاوِيحِ

விளக்கம் -அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்காரீ ரழி கூறினார்கள் நான் உமர் ரழி அவர்களுடன் ரமழான் இரவில் மஸ்ஜிதுக்குச் சென்றேன்.அப்போது மக்கள் பல பிரிவுகளாக நின்று தராவீஹ் ஜமாஅத் நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு நான் இவர்களையெல்லாம் ஒரேயொரு ஹாஃபிழுக்குப் பின்னால் ஒன்று சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டார்கள். அதன்படி மிகச் சிறந்த காரீயாக விளங்கிய உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் மக்களை ஒன்று திரட்டினார்கள். பின்பு மற்றொரு இரவில் நான் மஸ்ஜிதுக்குச் சென்றேன். உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் தராவீஹ் தொழுகையை மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட உமர் ரழி அவர்கள் பித்அத்துகளில் இது நல்ல பித்அத் என்றார்கள்.                                    

குர்ஆனை ஒன்று திரட்டியதும் கூட நல்ல பித்அத் என்ற பட்டியலில் சேரும்

عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الْوَحْيَ قَالَ أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِالنَّاسِ وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ فَيَذْهَبَ كَثِيرٌ مِنْ الْقُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ الْقُرْآنَ قَالَ أَبُو بَكْرٍ قُلْتُ لِعُمَرَ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لَا يَتَكَلَّمُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ وَلَا نَتَّهِمُكَ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَتَبَّعْ الْقُرْآنَ فَاجْمَعْهُ فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنْ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلَانِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو بَكْرٍ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ فَقُمْتُ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنْ الرِّقَاعِ وَالْأَكْتَافِ وَالْعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ  (بخاري

விளக்கம்- யமாமா போருக்குப் பின்பு குர்ஆனை மனனம் செய்த அறிஞர்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள். இதனால் குர்ஆனை நம்மை விட்டும் சென்றுவிடுமோ என்ற கவலை ஹழ்ரத் உமர்(ரழி) அவர்களுக்கு ஏற்பட்டது. இக்கவலையை அப்போது கலீஃபாவாக இருந்த ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் தெரிவித்து குர்ஆனை ஒன்று திரட்டும்படி கூறினார்கள். இதைக் கேட்ட ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்யாத செயலை நாம் எவ்வாறு செய்ய முடியும் என்று கேட்டார்கள். அதற்கு ஹழ்ரத் உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ் மீது ஆணையாக குர்ஆனை ஒன்று திரட்டும் இந்தப் பணி நன்மையாகவே இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். பிறகு அபூபக்கர்(ரழி) அவர்கள் ஜைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்களிடம் குர்ஆனை நீங்கள் ஒரே பிரதியாக ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் இறைத் தூதர் (ஸல்) செய்யாத ஒரு செயலை நான் எப்படிச் செய்ய முடியும் என்று கேட்க, உமர்(ரழி) அவர்கள் கூறிய பதிலை அப்படியே இவர்களிடம் அபூபக்கர் (ரழி)  கூறினார்கள்

ஜைத்இப்னு ஸாபித்(ரழி)அவர்கள் கூறுகிறார்கள். எதற்காக அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகியோரின் அல்லாஹ் விரிவாக்கினானோஅதற்காக எனது மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் கூறியது போல் குர்ஆனை ஒன்று திரட்ட நான் முன் வந்தேன். மக்களின் கரங்களில் அவர்கள் குர்ஆனை எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள், பேரீத்த மட்டைகள், ஓடுகள் ஆகியவற்றிலிருந்து நான் திருக்குர்ஆனை ஒன்று திரட்டத் துவங்கினேன். யாரெல்லாம் குர்ஆனை மனனம் செய்திருந்தார்களோ அவர்களிடமிருந்து  ஒன்று திரட்ட ஆரம்பித்தேன். ஜைதுப்னு ஸாபித்(ரழி) அவர்கள் பொதுஅழைப்பாக யார் குர்ஆனை மனனம் செய்துள்ளீர்களோ குர்ஆனை யார் எழுதி வைத்துள்ளீர்களோ அவர்களெல்லாம் என்னிடம் வாருங்கள் என அழைத்தார்கள். தேடிச் சென்றும் குர்ஆனை ஒன்று திரட்டினார்கள். ஒருவர் சொன்னதை மட்டும் வைத்து முடிவு செய்யாமல் பலரிடம் அதை உறுதிப் படுத்துவார்கள். இவ்வாறு பல கோணங்களிலும் ஆராய்ந்த பின் தான் குர்ஆன் வசனங்களை தம் தொகுப்பில் பதிவு செய்வார்கள். திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் விடுபட்டுப் போகாத அளவுக்கு கடும் முயற்சி செய்தார்கள். இதைப் பற்றி ஜைத் இப்னு ஸாபித் (ரழி) கூறும்போது ஒரு மலையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றியமைக்கச் சொல்லியிருந்தாலும் அது எனக்கு இலகுவாக இருக்கலாம் அதை விட குர்ஆனை ஒன்று திரட்டும் பணி எனக்கு மிக சிரமமாக இருந்தது எனக் கூறினார்கள். இவ்வாறான கடும் சிரமத்திற்கு மத்தியில் குர்ஆனை அவர்கள் திரட்டினார்கள். 

 இதன் பிறகு நூல் வடிவிலான குர்ஆன் பிரதி அபூபக்கர் (ரழி)அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. அதன்பின் உமர் (ரழி) அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது.அதன்பின் உமர் (ரழி) அவர்களின் மகளும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹஃப்ஸா(ரழி) அவர்களிடம் குர்ஆன் பிரதி பாதுகாப்பாக இருந்தது

உமர் ரழி அவர்கள் தொடங்கி வைத்த தராவீஹ் தொழுகை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர் 

உமர் (ரழி) அவர்களின் கருத்துக்குத் தோதுவாக குர்ஆன் வசனங்கள் இறங்கியுள்ளன. 

قال الله تعالي وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى..(125التوبة)عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ اللَّهَ فِي ثَلَاثٍ أَوْ وَافَقَنِي رَبِّي فِي ثَلَاثٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ اتَّخَذْتَ مَقَامَ إِبْرَاهِيمَ مُصَلًّى وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِالْحِجَابِ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ قَالَ وَبَلَغَنِي مُعَاتَبَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضَ نِسَائِهِ فَدَخَلْتُ عَلَيْهِنَّ قُلْتُ إِنْ انْتَهَيْتُنَّ أَوْ لَيُبَدِّلَنَّ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرًا مِنْكُنَّ حَتَّى أَتَيْتُ إِحْدَى نِسَائِهِ قَالَتْ يَا عُمَرُ أَمَا فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَعِظُ نِسَاءَهُ حَتَّى تَعِظَهُنَّ أَنْتَ فَأَنْزَلَ اللَّهُ {عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ} الْآيَةَ (بخاري) باب قَوْلِه ( وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ) كتاب التفسير

عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ : وَافَقْتُ رَبِّي فِي ثَلاثٍ ، قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، هَذَا مَقَامُ إِبْرَاهِيمَ لَوِ اتَّخَذْنَاهُ مُصَلًّى ، فَأَنْزَلَ اللهُ تَعَالَى : وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ، وَقُلْتُ : يَا رَسُولَ اللهِ ، لَوْ حَجَبْتَ نِسَاءَكَ فَإِنَّهُ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ فَأَنْزَلَ اللهُ آيَةَ الْحِجَابِ: {وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ[الأحزاب:53} وَقُلْتُ فِي أُسَارَى بَدْرٍ: اضْرِبْ أَعْنَاقَهُمْ  فَاسْتَشَارَ أَصْحَابَهُ ، فَأَشَارُوا عَلَيْهِ بِأَخْذِ الْفِدَاءِ ، فَأَنْزَلَ اللهُ:{ كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الأَرْضِ[الأنفال:67}(طبراني)

மகாமே இப்றாஹீம் அருகில் இருந்தபடி உமர் ரழி அவர்கள் மகாமே இப்றாஹீமை தொழுமிடமாக நாம் ஆக்கிக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள். அல்லாஹ் அதற்குத் தோதுவாக வசனத்தை இறக்கினான்.   2. நபி ஸல் அவர்களிடம் உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்களை சந்திக்க நல்லவரும் வருகிறார் கெட்டவரும் வருகிறார். எனவே உங்கள் வீட்டில் திரையை ஏற்படுத்தி உங்கள் மனைவியரை மற்றவர்கள் பார்க்காத வகையில் செய்தால் நன்றாக இருக்குமே என்றார்கள். அல்லாஹ் அதற்குத் தோதுவாக ஹிஜாபுடைய வசனத்தை இறக்கினான்.  3.பத்ரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் அவர்களைக் கொன்று விடும்படி உமர் ரழி அவர்கள் ஆலோசனை தந்தார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடமும் ஆலோசனை செய்ததன் அட்ப்படையில் ஃபித்யா வாங்கிக் கொண்டு விட்டு விடலாம் என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அல்லாஹ் தஆலா உமர் ரழி அவர்களின் கருத்துக்குத் தோதுவாக வசனத்தை இறக்கினான். 

கலீபாக்கள் நடைமுறைப்படுத்தி, அப்போதைய சஹாபாக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட 20 ரக்அத் தராவீஹ் தொழுகை

 (الاحاديث المختارة للضياء)-عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ قَالَ :كَانَ النَّاسُ يَقُومُونَ فِى زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى رَمَضَانَ بِثَلاَثٍ وَعِشْرِينَ رَكْعَةً (سنن الكبري للبيهقي, مؤطا مالك, مصنف ابن ابي شيبة, مصنف عبد الرزاق, جامع الاصول)

عن أبي بن كعب أن عُمَرَ رضي الله عنه أمر أُبَيّا أن يصلي بالناس في رمضان فقال إن الناس يصومون النهار ولا يحسنون أن( يقرؤا )فلو قرأتَ القرآن عليهم بالليل فقال يا أمير المؤمنين هذا(شيء)لم يكنْ ؟فقال قد علمتُ ولكنه أحسن فصلى بهم عشرين ركعة (إسناده حسن)   عَنْ عَلِىٍّ رَضِىَ اللَّهُ عَنْهُ دَعَا الْقُرَّاءَ فِى رَمَضَانَ فَأَمَرَ مِنْهُمْ رَجُلاً يُصَلِّى بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً وَكَانَ عَلِىٌّ رَضِىَ اللَّهُ عَنْهُ يُوتِرُ بِهِمْ (سنن الكبري للبيهقي) 


அலீ ரழி அவர்கள் கலீஃபாவாக இருக்கும்போது ஹாஃபிழ்களை அழைத்து இருபது ரக்அத் தொழ வைக்க ஏவுவார்கள். கடைசியில் வித்ரை அலீ ரழி அவர்கள் தொழ வைப்பார்கள்

وَأَكْثَرُ أَهْلِ الْعِلْمِ عَلَى مَا رُوِىَ عَنْ عُمَرَ وَعَلِىٍّ وَغَيْرِهِمَا مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم عِشْرِينَ رَكْعَةً. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِىِّ.وَقَالَ الشَّافِعِىُّ وَهَكَذَا أَدْرَكْتُ بِبَلَدِنَا بِمَكَّةَ يُصَلُّونَ عِشْرِينَ رَكْعَةً (سنن الترمذي)

தராவீஹ் தொழுகை என்று பெயர் வந்ததற்கான அடிப்படைக் காரணங்களில் சில....

عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّى أَرْبَعَ رَكَعَاتٍ فِى اللَّيْلِ  ثُمَّ يَتَرَوَّحُ  فَأَطَالَ حَتَّى رَحِمْتُهُ فَقُلْتُ : بِأَبِى أَنْتَ وَأُمِّى يَا رَسُولَ اللَّهِ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ: أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا؟ 

وَقَوْلُهُ :ثُمَّ يَتَرَوَّحُ. فَهُوَ أَصْلٌ فِى تَرَوُّحِ الإِمَامِ فِى صَلاَةِ التَّرَاوِيحِ وَاللَّهُ أَعْلَمُ (سنن الكبري للبيهقي)  عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ:كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ يُرَوِّحُنَا فِى رَمَضَانَ يَعْنِى بَيْنَ التَّرْوِيحَتَيْنِ قَدْرَ مَا يَذْهَبُ الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ إِلَى سَلْعٍ (سنن الكبري للبيهقي)سلعகணவாய் 

தராவீஹ் என்றால் ஓய்வு என்று பொருள். ஒவ்வொரு நான்கு ரக்அத்துகளுக்கு மத்தியில் ஓய்வு எடுக்கச் சொல்லி உமர் ரழி கூறுவார்கள். மஸ்ஜிதில் இருந்து மலைக் கணவாய் வரை சென்று திரும்பும் அளவுக்கு ஓய்வு...

ஹிதாயா ஃபிக்ஹ் நூலில் இந்த ஓய்வு தர்வீஹா பற்றி வந்துள்ள விளக்கங்கள்

التَّرَاوِيحُ سُنَّةٌ وَالِاجْتِمَاعُ مُسْتَحَبٌّ .وَقَوْلُهُ : ( لِأَنَّهُ وَاظَبَ عَلَيْهَا الْخُلَفَاءُ الرَّاشِدُونَ ) إنَّمَا يَدُلُّ عَلَى سُنِّيَّتِهَا لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ { عَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ مِنْ بَعْدِي } 

وَأَهْلُ كُلِّ بَلْدَةٍ بِالْخِيَارِ يُسَبِّحُونَ أَوْ يُهَلِّلُونَ أَوْ يَنْتَظِرُونَ سُكُوتًا ، وَإِنَّمَا يُسْتَحَبُّ الِانْتِظَارُ بَيْنَ كُلِّ تَرْوِيحَتَيْنِ ؛ لِأَنَّ التَّرَاوِيحَ مَأْخُوذٌ مِنْ الرَّاحَةِ فَيُفْعَلُ مَا قُلْنَا تَحْقِيقًا لِلْمُسَمَّى ( وَاسْتَحْسَنَ الْبَعْضُ الِاسْتِرَاحَةَ عَلَى خَمْسِ تَسْلِيمَاتٍ وَهُوَ نِصْفُ التَّرَاوِيحِ وَلَيْسَ بِصَحِيحٍ ) أَيْ مُسْتَحَبٍّ .

ஒவ்வொரு ஊர் வாசிகளும் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இந்த தர்வீஹாவின் போது தஸ்பீஹ் அல்லது தஹ்லீல் ஓதிக் கொள்ளலாம். அல்லது மவுனமாக இருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும் ஒவ்வொரு நான்கு ரக்அத்துக்கு மத்தியில் ஓய்வு எடுப்பது முஸ்தஹப். ஏனெனில் ஓய்வு என்ற வார்த்தையில் இருந்துதான் தராவீஹ் என்ற வார்த்தே உருவாகியுள்ளது. சிலர் பத்து ரக்அத் முடிந்து ஓய்வு எடுக்கலாம் என்கின்றனர். அது சரியல்ல.

ரமளான் மாதத்தில் குர்ஆனை அதிகம் ஓதுவது, குறிப்பாக தராவீஹ் தொழுகையில் குர்ஆனை ஓதி முடிப்பது பற்றி....

شهر رمضان له خصوصية بالقرآن كما قال تعالي "شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ(البقرة 185 وقوله "إنا أنزلناه في ليلة القدر}{إنا أنزلناه في ليلة مباركة}كان بعض السلف يختم في قيام رمضان في كل ثلاث ليال وبعضهم في كل سبع منهم قتادة رض وبعضهم في كل عشرة منهم أبو رجاء العطاردي كان السلف يتلون القرآن في شهر رمضان في الصلاة وغيرها-كان الأسود يقرأ في كل ليلتين في رمضان- وكان قتادة يختم في كل سبع دائما وفي رمضان في كل ثلاث وفي العشرالأواخركل ليلة –كان للشافعي رح في رمضان ستون ختمة يقرؤها في غير الصلاة وعن أبي حنيفة نحوه وكان قتادة يدرس القرآن في شهر رمضان وكان الزهري إذا دخل رمضان قال : فإنما هو تلاوة القرآن و إطعام الطعام:كان مالك إذا دخل رمضان يَفِرُّ من قراءة الحديث و مجالسة أهل العلم وأقبل على تلاوة القرآن من المصحف (فضائل الاشهر)    

நமது முன்னோர்கள் ரமழானில் மூன்று நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள் இன்னும் சிலர் ரமழானில் ஏழு நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்களில் கதாதா ரஹ் அவர்களும் ஒருவர். இன்னும் சிலர் ரமழானில் பத்து நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இதுவெல்லாம் தொழுகையில் ஓதுவதைப் பற்றி....

 நமது முன்னோர்கள் ரமழானில் தொழுகையில் மட்டுமல்லாமல் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனை அதிகம் ஓதுவார்கள். இமாம் ஷாஃபிஈ ரஹ் ரமழானில் தொழுகைக்கு வெளியில் இரண்டு நாளைக்கு நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் ரமழான் வந்து விட்டால் குர்ஆன் வகுப்புகளை மட்டுமே நடத்துவார்கள். அதேபோல் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ரமழான் வந்து விட்டால் ஹதீஸ் நடத்துவது, கல்வியைக் கற்றுத் தரும் மஜ்லிஸ் ஆகியவற்றை விட்டும் புறக்கணித்து குர்ஆன் ஓதுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நூல் ஃபழாஇலுல் அஷ்ஹுர்                                                                          

  

     ஷைகுல் ஹிந்த் மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்களும் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்களும் மால்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். ரமழான் துவங்குவதற்கு இன்னும் சில தினங்கள் இருந்தன. அப்போது மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்கள் அழுதார்கள். அதற்கான காரணத்தை ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் கேட்ட போது எப்போதும் ரமழானில் ஒரு ஹாஃபிழுக்குப் பின்னால் நின்று குர்ஆன் முழுவதையும் கேட்பேன். ஆனால் இந்த வருடம் நாம் சிறையில் இருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என்றார்கள். அப்போது ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் இந்த வருடமும் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூற, அது எப்படி சாத்தியம் என்று மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்கள் கேட்க, நிச்சயமாக அது சாத்தியமாகும் என ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் கூறினார்கள் அடுத்த ஓரிரு தினங்களில் ரமழான் துவங்கும் முன் முதல்நாள் ஓத வேண்டிய ஒரு ஜுஸ்வை அன்றே மனப்பாடம் செய்து முதல் தராவீஹில் ஓதினார்கள். இரண்டாம் நாள் ஓத வேண்டிய ஒரு ஜுஸ்வை அன்றே மனப்பாடம் செய்து இரண்டாம் நாள் தராவீஹில் ஓதினார்கள். இப்படியாக ரமழான் முழுவதும் தொழ வைத்தார்கள். இறைநேசர்களுக்கு அல்லாஹ் எல்லாவற்றையும் சுலபமாக்கி வைத்தான்.            

நூல்- உலமாயே ஹிந்த்

வியாழன், 12 பிப்ரவரி, 2026

நோன்பின் சட்டங்கள்

13-02-2026

ஷஃபான் 24


بسم الله الرحمن الرحيم  

  நோன்பின் சட்டங்கள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


ரமழானில்  தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமாக காலமெல்லாம் நோன்பு வைத்தாலும் அதன் நன்மையை முழுமையாக அடைய முடியாது. இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் ஏற்கப்படாது என்றே கூறுகிறார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ عُذْرٍ وَلَا مَرَضٍ لَمْ يَقْضِهِ صِيَامُ الدَّهْرِ (بخاري)معناه أي لا سبيل إلى استدراك كمال فضيلة الأداء بالقضاء،قال عبد الله بن مسعود "من أفطر يوما في رمضان متعمدا من غير علة ثم قضى طول الدهر لم يقبل منه(فتح الباري)

ரமளானில் ஒரு நோன்பை விட்டால் என்ன பரிகாரம் என்று கேட்க இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் பதில்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ فِي غَيْرِ رُخْصَةٍ رَخَّصَهَا اللَّهُ لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ.زَادَ فِي خَبَرِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ : وَإِنْ صَامَهُ.(ابن خزيمة) عن سعيد بن جبير رضي الله عنه أن رجلا سأل ابن عباس فقال : إني أفطرتُ يوما من رمضان  فهل تجد لي مخرجا ؟ فقال له ابن عباس : إن قدرت على يوم من رمضان فارغا فصمه مكانه  قال : وهل أجد يوما من رمضان فارغا ؟ فقال ابن عباس : « هل أجد لك في الفتيا غير هذا ؟  (فضل شهر رمضان لابن شاهين)

இப்னுஅப்பாஸ் ரழி கூறியது -ஏதாவது ரமழானில் நோன்பு கடமையில்லாத நாள் ஒன்று வருமானால் அதில் அந்த நோன்பைக் களாச்செய் என்று கூறினார்கள். அதற்கு அவர் அது எப்படி சாத்தியம். ரமாழானில் ஒவ்வொரு நாளும் நோன்பு கடமை தானே. அதில் எங்கே இடைவெளி இருக்கிறது. அல்லாஹ் ஏதேனும் ஒருநாள் இடைவெளி விட்டு நோன்பு வைக்கச் சொல்லியிருந்தால் இடைவெளி இருந்திருக்கும்.அந்த இடைவெளியே இல்லையே என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் நீ ரமழானில் தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமே சாத்தியமில்லை என்பதைத் தான் நான் இவ்வாறு கூறினேன் என்றார்கள்.           

நபி ஸல் காலத்தில் மிகவும் சிறிய வயதுடைய பிள்ளைகளும்  நோன்பு வைத்தனர்

وَقَالَ عُمَرَ  رضى الله عنه  لِنَشْوَانٍ فِى رَمَضَانَ وَيْلَكَ ، وَصِبْيَانُنَا صِيَامٌ . فَضَرَبَهُ  (بخاري) باب صَوْمِ الصِّبْيَانِ-كتاب الصيام 1960

( لنشوان ) لرجل سكران أتي به عمر رضي الله عنه فوبخه بأن الصبيان صائمون وهو يفطر في رمضان ويشرب الخمر وأقام عليه الحد ثمانين جلدة ونفاه إلى الشام . - عيني - ]

விளக்கம் - ரமழானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் உமர் ரழி அவர்கள் உனக்கு கேடு உண்டாகட்டும் நம்முடைய சிறுவர்கள் கூட நோன்பு வைத்திருக்கும்போது நீ இவ்வாறு செய்திருக்கிறாயே என்று கூறி அவருக்கு 80 கசையடி கொடுத்தார்கள். வேறு சில நூல்களில் சிரியாவுக்கு நாடு கடத்தினார்கள் என்றும் உள்ளது

சிறுவர்களை நோன்பு வைக்கத் தூண்டுவது அதற்காக அன்பளிப்புகள் வழங்குவது, 

நீ நோன்பு வைத்தால் இஃப்தார் நேரம் உனக்கு இன்ன பதார்த்தம் வாங்கித் தருவேன் என்று கூறுவது சஹாபாக்களின் வழிமுறை

عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الْأَنْصَارِ مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَليَصُمْ قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا وَنَجْعَلُ لَهُمْ اللُّعْبَةَ مِنْ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الْإِفْطَارِ(بخاري

கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் தயார் செய்து சிறுவர்கள் பசியால் உணவு கேட்டு அழும்போது நோன்பு திறக்கும் நேரம் வரை அவன் பசியை மறந்திருப்பதற்காக அந்த விளையாட்டுப் பொருட்களை கொடுப்போம். (விளையாட்டுப் பொருட்களை விரும்பும் பிள்ளைகள் என்பதின் மூலம் சுமார் ஐந்து அல்லது ஆறு வயது பிள்ளைகளுக்கும் கூட நோன்புக்கான பயிற்சி தருவார்கள் என்று அறிய முடிகிறது.) 

நோன்பு சிறந்த வணக்கம் என்பதால் தான் தன்னிடம் உரையாட 

வரும்போது நோன்பாளியாக வர மூஸா நபிக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்

وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142)الاعراف  - قال المفسرون: فصامها موسى، عليه السلام، فلما تم الميقات استاك بلحاء شجرة، فأمره الله تعالى أن يكمل بعشر (2) أربعين.

وفي رواية فَلَمَّا أَتَى رَبّه وَأَرَادَ أَنْ يُكَلِّمهُ وَقَدْ صَامَهُنَّ لَيْلهنَّ وَنَهَارهنَّ وَكَرِهَ أَنْ يُكَلِّم رَبّه وَرِيح فِيهِ رِيح فَم الصَّائِم فَتَنَاوَلَ مُوسَى مِنْ نَبَات الْأَرْض شَيْئًا فَمَضَغَهُ فَقَالَ لَهُ رَبّه حِين أَتَاهُ لِمَ أَفْطَرْت وَهُوَ أَعْلَم بِاَلَّذِي كَانَ قَالَ يَا رَبّ إِنِّي كَرِهْت أَنْ أُكَلِّمك إِلَّا وَفَمِي طَيِّب الرِّيح قَالَ أَوَمَا عَلِمْت يَا مُوسَى أَنَّ رِيح فَم الصَّائِم أَطْيَب عِنْدِي مِنْ رِيح الْمِسْك اِرْجِعْ فَصُمْ عَشْرًا ثُمَّ اِئْتِنِي فَفَعَلَ مُوسَى عَلَيْهِ السَّلَام مَا أُمِرَ بِهِ  (تفسير ابن كثير

தன்னிடம் உரையாட வரும் முன்பு முப்பது நாட்கள் தொடர் நோன்பு  அதாவது நோன்பே திறக்காமல் நோன்பு வைக்கச் சொல்லி அல்லாஹ் உத்தரவிட்டான். அவ்வாறே ஸவ்முல் விஸால் வைத்த பிறகு மூஸா அலை அல்லாஹ் வாக்களித்த இடத்திற்கு வந்த போது வாய் வாடையோடு அல்லாஹ்விடம் உரையாடுவதை வெறுத்தவர்களாக மிஸ்வாக் செய்தார்கள். அல்லாஹ் அதைக் கண்டித்தான். நோன்பாளியின் வாய் வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட என்னிடம் மேலானது என உமக்குத் தெரியாதா என்று கூறி மீண்டும் பத்து நோன்பு வைத்து நாற்பதாக பூர்த்தி செய்ய உத்தரவிட்டான். அவ்வாறே செய்தார்கள்.                                              

குறிப்பு- ஸவ்முல் விஸால் அதாவது நோன்பே திறக்காமல் நோன்பு வைப்பது நபிமார்களுக்கு மட்டுமே சாத்தியம். அல்லாஹ் அதற்கான ஆற்றலை அவர்களுக்கு மட்டும் வழங்குவான்.

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاصَلَ فَوَاصَلَ النَّاسُ فَشَقَّ عَلَيْهِمْ فَنَهَاهُمْ قَالُوا إِنَّكَ تُوَاصِلُ قَالَ لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى (بخاري

நபி ஸல் அவர்கள் நோன்பே திறக்காமல் நோன்பு வைத்த போது சஹாபாக்கள் அவ்வாறு வைக்க ஆரம்பித்தனர். அப்போது நபி ஸல் அவர்கள் தடுத்தார்கள். அப்போது சஹாபாக்கள் நீங்கள் வைக்கிறீர்களே என்ற போது நான் உங்களைப் போன்றவர் அல்ல. ரப்பின் புறத்திலிருந்து உணவளிக்கப்படும் நிலையில்,  நீர் புகட்டப்படும் நிலையில் நான் நீடித்திருப்பேன். (அதாவது  ரப்பின் புறத்திலிருந்து உடலை மிகவும் பலவீனப்படுத்தும் அளவுக்கு பசியோ தாகமோ இல்லாத நிலைக்கு உட்படுத்தப்படுவேன்.) நீங்கள் அதற்கு சக்தி பெற மாட்டீர்கள்.  

           நோன்பின் சட்டங்கள்

நோன்பாளி எந்த வீண் பேச்சுகளிலும், சண்டை சச்சரவுரகளிலும் ஈடுபடக் கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ(بخاري

நோன்பாளி பொய்யான பேச்சுக்களையும், பொய்யான செயல்பாடுகளையும் தவிர்த்துக் கொள்ளா விட்டால் அந்த நோன்பு பயனற்றதாக ஆகி விடும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ (بخاري)

நோன்பு திறக்கும் முன்பு வீண்பேச்சுக்கள் பேசாமல் துஆவில் ஈடுபடுவது சிறந்த செயல்

عَنْ أَبِي هُرَيْرَةَ  رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ (ابن ماجة)

சஹர் நேரத்தில் உணவு உண்ணும் நேரம் போக மீதமுள்ள நேரத்தை வீணாக்காமல் இஸ்திஃபாரில் ஈடுபடுவது

قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ....(15) الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا...وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ(ال عمران)   قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97)قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي..(98 يوسف)وَقَدْ قِيلَ:إِنَّ يَعْقُوب عَلَيْهِ السَّلَام لَمَّا قَالَ لِبَنِيهِ"سَوْفَ أَسْتَغْفِر لَكُمْ رَبِّي" أَنَّهُ أَخَّرَهُمْ إِلَى وَقْت السَّحَر-عَنْ مُحَارِب قَالَ كَانَ عُمَر رَضِيَ اللَّه عَنْهُ يَأْتِي الْمَسْجِد فَيَسْمَع إِنْسَانًا يَقُول:اللَّهُمَّ دَعَوْتنِي فَأَجَبْت وَأَمَرْتنِي فَأَطَعْت وَهَذَا السَّحَر فَاغْفِرْ لِي قَالَ فَاسْتَمَعَ الصَّوْت فَإِذَا هُوَ مِنْ دَارعَبْد اللَّه بْن مَسْعُود فَسَأَلَ عَبْد اللَّه عَنْ ذَلِكَ فَقَالَ إِنَّ يَعْقُوب أَخَّرَ بَنِيهِ إِلَى السَّحَر بِقَوْلِهِ"سَوْفَ أَسْتَغْفِر لَكُمْ رَبِّي (تفسير ابن كثير) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ.(بخاري)

ஒருமுறை உமர் ரழி அவர்கள் அதிகாலை சஹர் நேரத்தில் மஸ்ஜிதுக்கு வந்த போது மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து அழுகை சப்தம் வந்த து. ஒருவர் அழுத படி யாஅல்லாஹ் உன் உத்தரவுக்கு இயன்ற வரை நான் கட்டுப்பட்டேன் யாஅல்லாஹ் இது சஹர் நேரம் ஆகவே என் பாவத்தை மன்னிப்பாயாக என்று அழுது துஆ செய்தார். கடைசியில் அது இப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் வீடு என்பதையும் அழுது துஆ செய்தவர் அவர் தான் என்பதையும் கண்டறிந்த உமர் ரழி அவர்கள்  இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது நபி யஃகூப் அலை அவர்களிடம் அவர்களின் பிள்ளைகள் வந்து யூஸுஃபுக்கு எதிராக அவர்கள் செய்த துரோகத்திற்காக தங்கள் சார்பில் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கும்படி வேண்டியபோது நபி யஃகூப் அலை அவர்கள் உடனே கேட்காமல் நான் இனிமேல் கேட்பேன் என்று கூறி சஹரில் எழுந்து தன் பிள்ளைகளுக்காக பாவ மன்னிப்புக் கேட்டார்கள். அதனால் தான் நானும் சஹரில் எழுந்து துஆ செய்கிறேன் என இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினாரகள்.                                              

சஹருக்கு எழுந்து சாப்பிடுவதின் சிறப்பு

இரவில் தாமதமாக தூங்குபவர்களில் சிலர், சஹருக்கு எழுந்து சாப்பிட சங்கடப்பட்டு நள்ளிரவிலேயே சாப்பிடுவதைப் பற்றி...

عن أَنَسَ  رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً (مسلم)عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ (مسلم)

சஹர் சாப்பிடுவதை ஃபஜ்ருடைய நேரம் துவங்குவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு வரை பிற்படுத்துவது நல்லது

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي ثُمَّ تَكُونُ سُرْعَتِي أَنْ أُدْرِكَ السُّجُودَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ(بخاري

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ قُلْتُ كَمْ كَانَ قَدْرُ مَا بَيْنَهُمَا قَالَ خَمْسِينَ آيَةً (مسلم)

சஹர் நேரத்தில் ஜுனுபாளியாக இருப்பவர் அத்துடனே சஹர் சாப்பிட்டால்  கூடுமா ?

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبِيتُ جُنُبًا فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَيَقُومُ فَيَغْتَسِلُ فَأَنْظُرُ إِلَى تَحَدُّرِ الْمَاءِ مِنْ رَأْسِهِ ثُمَّ يَخْرُجُ فَأَسْمَعُ صَوْتَهُ فِي صَلَاةِ الْفَجْرِ قَالَ مُطَرِّفٌ فَقُلْتُ لِعَامِرٍ أَفِي رَمَضَانَ قَالَ رَمَضَانُ وَغَيْرُهُ سَوَاءٌ (ابن ماجة)

நோன்பு திறக்கும் நேரம் வந்தவுடன் விரைவாக நோன்பு திறப்பது

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ(بخاري)عَنْ ابْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَصَامَ حَتَّى أَمْسَى قَالَ لِرَجُلٍ انْزِلْ فَاجْدَحْ لِي قَالَ لَوْ انْتَظَرْتَ حَتَّى تُمْسِيَ قَالَ انْزِلْ فَاجْدَحْ لِي إِذَا رَأَيْتَ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ (بخاري) عن أبى رجاء قال : ( كنتُ أَشْهدُ ابنَ عباس عند الفطر فى رمضان ، فكان يوضع له طعامه ، ثم يأمر مراقبًا يراقب الشمس  فإذا قال:قد وجبت قال :كلوا ثم قال :كنا نفطر قبل الصلاة (شرح صحيح البخاري لابن بطال)   

நோன்பு திறக்கும் நேரம் வரும் முன்பே நோன்பு திறப்பதும் கூடாது

عن أَبي أُمَامَةَ الْبَاهِلِى قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ :بَيْنَا أَنَا نَائِمٌ إِذْ أَتَانِى رَجُلاَنِ فَأَخَذَا بِضَبْعَىَّ فَأَتَيَا بِى جَبَلاً وَعْرًا فَقَالاَ لِىَ: اصْعَدْ فَقُلْتُ:إِنِّى لاَ أُطِيقُهُ فَقَالاَ:إِنَّا سَنُسَهِّلُهُ لَكَ فَصَعِدْتُ حَتَّى إِذَا كُنْتُ فِى سَوَاءِ الْجَبَلِ إِذَا أَنَا بَأَصْوَاتٍ شَدِيدَةٍ فَقُلْتُ:مَا هَذِهِ الأَصْوَاتُ قَالُوا هَذَا عُوَاءُ أَهْلِ النَّارِ،ثُمَّ انْطُلِقَ بِى فَإِذَا أَنَا بِقَوْمٍ مُعَلَّقِينَ بِعَرَاقِيبِهِمْ مُشَقَّقَةٌ أَشْدَاقُهُمْ تَسِيلُ أَشْدَاقُهُمْ دَمًا قُلْتُ مَنْ هَؤُلاَءِ قَالَ: هَؤُلاَءِ الَّذِينَ يُفْطِرُونَ قَبْلَ تَحِلَّةِ صَوْمِهِمْ (نسائ) باب التَّغْلِيظِ عَلَى مَنْ أَفْطَرَ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ) كَتَبَ عمرُ إلى أمراء الأجناد:لا تكونوا مسبوقين بفِطْرِكُم (شرح للبخاري   நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வதின் நன்மை

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا (ابن ماجة) -وفي رواية لابن خزيمة "قَالُوا : لَيْسَ كُلُّنَا نَجِدُ مَا يُفَطِّرُ الصَّائِمَ فَقَالَ: يُعْطِي اللَّهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى تَمْرَةٍ، َوْ شَرْبَةِ مَاءٍ،أَوْ مَذْقَةِ لَبَنٍ، - عن انس رضي الله عنه قال أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ فَأَكَلَ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ (ابوداود)

பேரீத்தம் பழம் அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்க ஆரம்பிப்பது நல்லது

عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ زَادَ ابْنُ عُيَيْنَةَ فَإِنَّهُ بَرَكَةٌ فَمَنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّهُ طَهُورٌ(ترمذي)عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ قَبْلَ أَنْ يُصَلِّيَ عَلَى رُطَبَاتٍ فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَتُمَيْرَاتٌ فَإِنْ لَمْ تَكُنْ تُمَيْرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ (ترمذي) وَرُوِيَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُفْطِرُ فِي الشِّتَاءِ عَلَى تَمَرَاتٍ وَفِي الصَّيْفِ عَلَى الْمَاءِ(ترمذي)

மறதியாக சாப்பிட்டாலோ, நீர் பருகினாலோ நோன்பு முறியாது. ஆனால் ஞாபகம் வந்தவுடன் அப்போதே நிறுத்த வேண்டும் 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ (بخاري-كتاب الصوم

وفي رواية للترمذي فَإِنَّمَا هُوَ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ فَإِنَّمَا هُوَ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ- وقال الطيبي إنما للحصر أي ما أطعمه أحد ولا سقاه إلا الله (فتح الباري

நோயாளி நோன்பை விட அனுமதி உண்டு. நோய் நீங்கியவுடன் வேறு மாதத்தில் அதை களா செய்வார்

فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ (184البقرة)

ஆரோக்கியமாக இருப்பவரும் நோன்புக்குப்  பகரமாக ஃபித்யா கொடுப்பதற்கு முன்பு அனுமதி இருந்தது. பின்பு அந்த சட்டம் மாற்றப்பட்டு தள்ளாத வயதை அடைந்தவரும், தீராத வியாதி உள்ளவரும் மட்டுமே ஃபித்யா கொடுக்கலாம் என்ற சட்டம் வந்தது

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (184البقرة) عَنْ سَلَمَةَ قَالَ لَمَّا نَزَلَتْ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ}كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا (بخاري)وَأَمَّا الشَّيْخُ الْكَبِيرُ إِذَا لَمْ يُطِقْ الصِّيَامَ فَقَدْ أَطْعَمَ أَنَسٌ بَعْدَ مَا كَبِرَ عَامًا أَوْ عَامَيْنِ كُلَّ يَوْمٍ مِسْكِينًا خُبْزًا وَلَحْمًا (بخاري)وَمَاتَ أَنَسُ بْنُ مَالِكٍ سَنَةَ ثَلاَثٍ وَتِسْعِينَ

பிரயாணத்தில் இருப்பவர் முடிந்தால் நோன்பு வைக்கவும், முடியா விட்டால் வேறு நாளில் களா செய்யவும் அனுமதி உண்டு

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ سَأَلَ حَمْزَةُ الْأَسْلَمِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ (ابن ماجة)عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ وَأَفْطَرَ- عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ قَالَ لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فِي الْيَوْمِ الْحَارِّ الشَّدِيدِ الْحَرِّ وَإِنَّ الرَّجُلَ لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا فِي الْقَوْمِ أَحَدٌ صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ (رواهما ابن ماجة)إن كان مسافرا لا يستضر بالصوم فصومه أفضل وإن أفطر وقضى جاز(قدوري

குறிப்பு-பிரயாணம் என்பது அக்காலத்தில் கடும் சிரமமானதாக இருந்துள்ளது என்பது மேற்கானும் ஹதீஸில் தெரிய வருகிறது

கர்ப்பிணியும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவளும் தற்காலிகமாக நோன்பை விட்டு, பிறகு களா செய்ய அனுமதி உண்டு

وَقَالَ الْحَسَنُ وَإِبْرَاهِيمُ فِي الْمُرْضِعِ أَوْ الْحَامِلِ إِذَا خَافَتَا عَلَى أَنْفُسِهِمَا أَوْ وَلَدِهِمَا تُفْطِرَانِ ثُمَّ تَقْضِيَانِ (بخاري) ولا فدية عليهم (قدوري)

குறிப்பு- குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தான் அந்த நேரத்தில் நோன்பை விடவும்  இஸ்லாம் அனுமதி தருகிறது.

விடுபட்ட ரமழான் நோன்பை களா செய்வது தொடர்பாக...

وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عنه لَا بَأْسَ أَنْ يُفَرَّقَ لِقَوْلِ اللَّهِ تَعَالَى {فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ}(بخاري) وقضاء رمضان إن شاء فَرَّقه وإن شاء تابعه فإن أخره حتى دخل رمضان آخر صام رمضان الثاني وقضى الأول بعده ولا فدية عليه(وعند الشافعية له قضاء وفدية)- ومن مات وعليه قضاء رمضان فأوصى به أطعم عنه وَلِيُّه لكل يوم مسكينا نصف صاع من بُرّ أو صاعا من تمر أو صاعا من شعير (مختصرالقدوري) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ  كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ قَالَ يَحْيَى الشُّغْلُ  بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بُخَارِيّ) أَيْ يَمْنَعنِي أَيّ الشَّغْل

நோன்பு பற்றிய சில சட்டங்கள்

وإِن نام فاحتلم أو نظر إلى امرأة فأنزل أو اِدَّهن أو اِحتجم أواكتحل أو قَبَّل لم يفطره فإن أنزل بقبلة أو لمس فعليه القضاء ومن احتقن أواستعط أو قطر في أذنيه أو داوى جائفة أو آمة بدواء فوصل إلى جوفه أو دماغه أفطر-وإن ذرعه القيء لم يفطر وإن استقاء عامدا ملء فيه فعليه القضاء-ومن ذاق شيئا بفمه لم يفطر ويكره له ذلك ويكره للمرأة أن تمضغ لصبيها الطعام إذا كان لها منه بُدّ (نور الايضاح)

தூக்கத்தில் இந்திரியம் ஏற்பட்டு விட்டால், அல்லது ஹிஜாமா செய்தால், அல்லது சுர்மா போட்டால் அல்லது மனைவியை முத்தமிட்டால் நோன்பு முறியாது. ஆனால் முத்தமிடுவதன் காரணமாக இந்திரியம் வெளியானால் களா மட்டும் செய்ய வேண்டும்.

மூக்கிற்குள் சொட்டு மருந்து ஊற்றி அது தொண்டைக்குள் சென்று விட்டால் அல்லது காதுகளுக்கு சொட்டு மருந்து ஊற்றி அது உள்ளே சென்று விட்டால் அல்லது ஆழமான காயத்திற்கு மருந்து போட்டு அது உள்ளே சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும். தானாக வாந்தி  வந்தால் நோன்பு முறியும். வேண்டுமென்றே வாந்தி எடுத்து  அது வாய் நிரம்ப இருந்தால் நோன்பு முறியும். களா உண்டு. வாயின் முன்பகுதியில் மட்டும் வைத்து ஒரு உணவுப் பொருளை ருசித்துப் பார்த்து பிறகு துப்பி விட்டால்  நோன்பு முறியாது. ஆனாலும் அது மக்ரூஹ் ஆகும்.                                                  

நோன்பை முறிக்காத வேறு சில செயல்கள்

சிகிச்சை அடிப்படையில் ஊசி போடுவதால் நோன்பு முறியாது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதாலோ, நகம் வெட்டுவதாலோ நோன்பு முறியாது சிகிச்சைக்காக குளுக்கோஸ் ஏற்றினால் நோன்பு முறியாது. தெம்புக்காக ஏற்றினால் நோன்பு முறியும். இரத்தம் வருவதால் நோன்பு முறியாது. ஆனால் பற்களின் ஈறுகளில்  இரத்தம் வந்து அதன் சுவை தொண்டையில் உணரப்பட்டால் நோன்பு முறியும். ஊதுபத்தி, சாம்பிராணி புகையை நோன்பாளி வேண்டுமென்றே வாயில் நுழைய வைத்தால் நோன்பு முறியும். அவருடைய விருப்பமின்றி நுழைந்தால் நோன்பு முறியாது. பல் துலக்குவதால் நோன்பு முறியாது. ஷாஃபியீ மத்ஹபில் மதியத்திற்குப் பிறகு பல் துலக்குவது மக்ரூஹ். நோன்பாளி முடி வெட்டுவதால் நோன்பு முறியாது.                                                

வேண்டுமென்றே நோன்பை முறித்தால்...

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ قَالَ مَا لَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا فَقَالَ فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا قَالَ فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ وَالْعَرَقُ الْمِكْتَلُ قَالَ أَيْنَ السَّائِلُ فَقَالَ أَنَا قَالَ خُذْهَا فَتَصَدَّقْ بِهِ فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لَابَتَيْهَا يُرِيدُ الْحَرَّتَيْنِ أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ أَطْعِمْهُ أَهْلَكَ (بخاري)

கருத்து - ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் நாசமாகி விட்டேன் என்றார். அவரிடம் விசாரித்த போது நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் நான் என் மனைவியிடம் உறவு கொண்டு என் நோன்பை முறித்து விட்டேன் என்றார். அவரிடம் நபி ஸல் அவர்கள் இதன் பரிகாரமாக ஒரு அடிமையை உரிமை விடு என்றார்கள். அவர் எனக்கு அதற்கு சக்தியில்லை என்றார்.  அடுத்து நபி ஸல் அவர்கள் இரண்டு மாதம் தொடர் நோன்பு வை என்றார்கள். எனக்கு அதற்கும் சக்தியில்லை என்றார். அடுத்த நபி ஸல் அவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவு கொடு என்றார்கள். அதற்கும் எனக்கு சக்தியில்லை என்றார். நபி ஸல் அவர்கள் அமைதியாக இருந்து விட, சற்று நேரம் கழித்து ஒரு கூடை நிறைய பேரீத்தம்பழம் வந்தது. நபி ஸல் அவர்கள் அவரை அழைத்து இதை வாங்கி மதீனாவில் மிகவும் ஏழை யார் இருக்கிறாரோ அவரிடம் தந்து விடு என்றார்கள். அதற்கு அவர்  மதீனாவில் என்னை விட ஏழை யாருமில்லை என்றார். நபி ஸல் சிரித்து விட்டார்கள். நீ உன் குடும்பத்திற்கு இதை உணவாக்கி விடு என்றார்கள். (எந்த பரிகாரமும் இல்லாமல் அவரை விடுவித்தது நபி ஸல் அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியாகும். இன்றைக்கு இதை யாரும் பின்பற்ற முடியாது 

ரமழான் முழுவதும் தராவீஹ் தொழுவதன் நன்மை

صلاة التراويح: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ (بخاري)

வியாழன், 5 பிப்ரவரி, 2026

ரமழானை எதிர் பார்ப்பதும்

 06-02-2026

شعبان   17 


بسم الله الرحمن الرحيم  

ரமழானை எதிர் பார்க்குதல்

ரமழானின் நேரங்களை திட்டமிடுதல்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


  ஒவ்வொரு வணக்கங்களிலும் அதைச் செய்வதற்காக எதிர் பார்த்துக் காத்திருப்பதிலும் அல்லாஹ் நன்மையை வைத்துள்ளான். குறிப்பாக சங்கையான ரமழானை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் நன்மை உண்டு. ரமழானை எதிர் பார்த்து நாம் காத்திருந்து ரமழான் வந்தவுடன் நாம் ஆர்வத்துடன் அமல்களில் ஈடுபடும்போது சுவனத்தில் நமக்கான ஜோடிகளான ஹூருல் ஈன்களையும் அல்லாஹ் காத்திருக்கச் செய்கிறான். நம்மை எதிர் பார்த்து அல்லாஹ்விடம் துஆச் செய்கிறார்கள்.                                                    

عَنْ أَبِي مَسْعُودٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهَذَا حَدِيثُ أَبِي الْخَطَّابِ - ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَاتَ يَوْمٍ وَقَدْ أَهَلَّ رَمَضَانُ ، فَقَالَ : لَوْ يَعْلَمُ الْعِبَادُ مَا رَمَضَانُ لَتَمَنَّتْ أُمَّتِي أَنْ يَكُونَ السَّنَةَ كُلَّهَا ، فَقَالَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ : يَا نَبِيَّ اللهِ ، حَدِّثْنَا ، فَقَالَ : إِنَّ الْجَنَّةَ لَتَزَيَّنُ لِرَمَضَانَ مِنْ رَأْسِ الْحَوْلِ إِلَى الْحَوْلِ ، فَإِذَا كَانَ أَوَّلُ يَوْمٍ مِنْ رَمَضَانَ هَبَّتْ رِيحٌ مِنْ تَحْتِ الْعَرْشِ ، فَصَفَقَتْ وَرَقَ الْجَنَّةِ ، فَتَنْظُرُ الْحُورُ الْعِينُ إِلَى ذَلِكَ ، فَيَقُلْنَ : يَا رَبِّ اجْعَلْ لَنَا مِنْ عِبَادِكَ فِي هَذَا الشَّهْرِ أَزْوَاجًا تُقِرُّ أَعْيُنَنَا بِهِمْ ، وَتُقِرُّ أَعْيُنَهُمْ بِنَا ، قَالَ : فَمَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا مِنْ رَمَضَانَ إِلاَّ زُوِّجَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ فِي خَيْمَةٍ مِنْ دُرَّةٍ مِمَّا نَعَتَ اللَّهُ : {حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ} [الرحمن] عَلَى كُلِّ امْرَأَةٍ سَبْعُونَ حُلَّةً ، لَيْسَ مِنْهَا حُلَّةٌ عَلَى لَوْنِ الأُخْرَى ، (ابن خزيمة

  ரமழான் எத்தகைய மாதம் என்பதை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுவதும் ரமழானாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவார்கள் என்று நபி ஸல் கூறியவுடன் குஜாஆ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் நபியே (ரமழான் எத்தகைய மாதம் என்பதைக்) கூறுங்கள் என்றார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் நிச்சயமாக சுவனமாகிறது ரமழானுக்காக வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து அலங்கரிக்கப்படுகிறது. ரமழானின் முதல் நாள் துவங்கும்போது அர்ஷுக்குக் கீழ் இருந்து ஓர் இதமான காற்றும் வீசும். அதனால் சுவனத்தில் இலைகள் அசையும். அதைக் கண்ட ஹூருல் ஈன்கள் ரப்பே இந்த மாதத்தில் அமல் செய்பவர்களில் நின்றும் எங்களுக்குப் பொருத்தமான ஜோடியை எங்களுக்கு ஆக்கி வைப்பாயாக. அவர்களைக் கொண்டு எங்களுக்கும் கண்குளிர்ச்சி ஏற்பட வேண்டும். எங்களைக் கொண்டு அவர்களுக்கும் கண்குளிர்ச்சி ஏற்பட வேண்டும் என்று துஆச் செய்வார்கள்.         

சுருக்கம்- ரமழானில் நோன்பு வைத்தவர்களுக்கு சுவனத்தில் உள்ள ஹூருல்ஊன் களுடன் திருமணம் செய்து வைக்கப்படும். அந்த ஹூருல் ஈன் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்றால் ஒவ்வொரு ஹூருல்ஊன் பெண்ணின் உடம்பில் அணிந்துள்ள (கவுன் மாதிரியான) ஆடையில் 70  அடுக்குகள் இருக்கும்.  ஒவ்வொரு அடுக்குகளும் வெவ்வேறு கலர்களில் இருக்கும்.                

எதிர்பார்ப்புகள் பலவிதம். சில எதிர்பார்ப்புகளுக்கும் நன்மை உண்டு

தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் மிகுந்த நன்மை உள்ளது

عَنْ أَنَسِ رض أَنَّ هَذِهِ الْآيَةَ{ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنْ الْمَضَاجِعِ } نَزَلَتْ فِي انْتِظَارِ الصَّلَاةِ الَّتِي تُدْعَى الْعَتَمَةَ(العشاء (ترمذي) سورة السجدة

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ احْتُبِسَ عَنَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ عَنْ صَلَاةِ الصُّبْحِ حَتَّى كِدْنَا نَتَرَاءَى عَيْنَ الشَّمْسِ فَخَرَجَ سَرِيعًا فَثُوِّبَ بِالصَّلَاةِ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَجَوَّزَ فِي صَلَاتِهِ فَلَمَّا سَلَّمَ دَعَا بِصَوْتِهِ فَقَالَ لَنَا عَلَى مَصَافِّكُمْ كَمَا أَنْتُمْ ثُمَّ انْفَتَلَ إِلَيْنَا ثُمَّ قَالَ أَمَا إِنِّي سَأُحَدِّثُكُمْ مَا حَبَسَنِي عَنْكُمْ الْغَدَاةَ أَنِّي قُمْتُ مِنْ اللَّيْلِ فَتَوَضَّأْتُ وَصَلَّيْتُ مَا قُدِّرَ لِي فَنَعَسْتُ فِي صَلَاتِي فَاسْتَثْقَلْتُ فَإِذَا أَنَا بِرَبِّي تَبَارَكَ وَتَعَالَى فِي أَحْسَنِ صُورَةٍ ..... فَقَالَ يَا مُحَمَّدُ قُلْتُ لَبَّيْكَ رَبِّ قَالَ فِيمَ يَخْتَصِمُ الْمَلَأُ الْأَعْلَى قُلْتُ فِي الْكَفَّارَاتِ قَالَ مَا هُنَّ قُلْتُ مَشْيُ الْأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ وَالْجُلُوسُ فِي الْمَسَاجِدِ بَعْدَ الصَّلَوَاتِ وَإِسْبَاغُ الْوُضُوءِ فِي الْمَكْرُوهَاتِ قَالَ ثُمَّ فِيمَ قُلْتُ إِطْعَامُ الطَّعَامِ وَلِينُ الْكَلَامِ وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ قَالَ سَلْ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا حَقٌّ فَادْرُسُوهَا ثُمَّ تَعَلَّمُوهَا  (ترمذي

   ஒருநாள் நபி ஸல் அவர்களுக்கு  சுப்ஹு தொழுகை சற்று   தாமதமாகி விட்டது. சூரியனை நாங்கள் பார்க்கும் அளவுக்கு நேரம் கடந்த பின் வேகமாக வெளியேறினார்கள். இகாமத் சொலப்பட்டது. நபி ஸல் சுருக்கமாகத் தொழ வைத்தார்கள். சலாம் கொடுத்தவுடன் உங்கள்  வரிசையில் அப்படியே அமருங்கள் என்று கூறி எங்கள் பக்கம் திரும்பி நான் ஏன் இன்று தாமதமாகி விட்டேன் தெரியுமா நேற்றிரவு நான் இரவில் எழுந்து உளூச் செய்து அல்லாஹ் நாடிய வரை தொழுதேன். அப்போது என்னையும் மீறி சிறு தூக்கம் ஏற்பட்டது. சற்று உறங்கினேன். அப்போது அல்லாஹ்வை என்னுடைய கனவில் அழகிய தோற்றத்தில் பார்த்தேன். அப்போது அல்லாஹ் என்னிடம் மனிதர்களின் எந்த அமல்களை எடுத்துச் செல்வதற்கு மலக்குகள் போட்டி போடுகிறார்கள் தெரியுமா என்று கேட்க, அதற்கு நான் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆக்கப்படும் நற்காரியங்களில் என்று கூறினேன். அவைகள் என்னென்ன என்று அல்லாஹ் கேட்க, அதற்கு நான் ஜமாஅத் தொழுகைக்காக நடந்து செல்வது. ஒரு தொழுகை முடிந்த பின்பு அடுத்த தொழுகைக்காக மஸ்ஜிதில் காத்திருப்பது.  (குளிர் போன்ற) சிரமமான நேரத்திலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்றுவது என்று கூற, மீண்டும் அல்லாஹ் என்னிடம் வேறு எவற்றில் மலக்குகள் போட்டி போடுகிறார்கள் தெரியுமா என்று கேட்க, அதற்கு நான் “உணவளிப்பது, மிருதுவாகப் பேசுவது, மனிதர்கள் உறங்கும் போது இரவில் எழுந்து தொழுவது” என்று நான் கூறினேன். பின்பு அல்லாஹ் தன்னிடம் ஏதேனும் கேட்கும்படி கூற, நான் இந்த துஆவைக் கேட்டேன். யாஅல்லாஹ் நல்லதைச் செய்வதற்கும், தீமையை விடுவதற்கும், ஏழைகளை நேசிப்பதற்கும் தவ்ஃபீகை உன்னிடம் கேட்கிறேன். என்னை மன்னிப்பதையும் என் மீது இரக்கம் காட்டுவதையும் உன்னிடம் கேட்கிறேன். குழப்பங்களின் மூலம் இந்த உம்மத்தை நீ சோதிக்க நாடினால் அத்தகைய குழப்பங்களில் சிக்குவதற்கு முன்பே என்னை உன்னிடம் அழைத்துக் கொள். யாஅல்லாஹ் உன்னை நேசிப்பதையும், உன்னை நேசிப்பவர்களை நான் நேசிப்பதையும், உன்னை நேசிப்பதை நெருக்கமாக்கி வைக்கும் நற்செயலையும் உன்னிடம் கேட்கிறேன்.                                        

 படிப்பினை- பின்பு நபிஸல் அவர்கள் நான் கண்ட கனவு உண்மை.இந்த துஆவை ஓதுங்கள். இதன் கருத்தையும் அறியுங்கள் என்றார்கள். மக்களுக்கு மார்க்கத்தைப் புரிய வைப்பதற்காக எப்படி நபிகளாரிடம் ஜிப்ரயீல் அலை கேள்வி கேட்டுப் புரிய வைத்தார்களோ அதுபோல அல்லாஹ் இங்கே நபி ஸல் அவர்களிடமே கேள்வி கேட்டு, பதிலை வரவழைத்துப் புரிய வைத்துள்ளான்.             

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَم    ْ يَقُمْ أَوْ يُحْدِثْ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ (مسند أحمد)

தொழுகை முடிந்தும் அந்த இடத்திலேயே காத்திருப்பவருக்காக மலக்குகள் துஆ செய்கின்றனர். அவர் எழாமல் இருக்கும் வரை அல்லது உளூ முறியாமல் இருக்கும் வரை இச்சிறப்பு உண்டு.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : صَلَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ ، فَرَجَعَ مَنْ رَجَعَ ، وَعَقَّبَ مَنْ عَقَّبَ ، فَجَاءَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يُثَوِّبَ النَّاسُ بِصَلاةِ الْعِشَاءِ ، فَقَالَ : أَبْشِرُوا أَبْشِرُوا ، هَذَا رَبُّكُمْ تَبَارَكَ وَتَعَالَى قَدْ فَتَحَ بَابًا مِنْ أَبْوَابِ السَّمَاءِ يُبَاهِيَ بِكُمُ الْمَلائِكَةَ ، يَقُولُ : انْظُرُوا إِلَى عِبَادِي قَضَوْا فَرِيضَةً ، وَهُمْ يَنْتَظِرُونَ أُخْرَى.( : مسند البزار

 ஒருநாள் மஃரிப் தொழுகை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்பவர்கள் சென்று விட்டனர். மஸ்ஜிதில் தங்கியவர்கள் தங்கினர். அப்போது இஷாவுக்கு இகாமத் சொல்லப்படும் முன்பு அங்கு நபி ஸல் அங்கு வருகை தந்து நீங்கள் சுபச் செய்தி பெறுங்கள். இதோ அல்லாஹ் தஆலா வானத்தின் ஒரு வாசலை உங்களுக்காகத் திறந்துள்ளான். மலக்குகளிடம் உங்களைப் பற்றிப் பெருமையாக எனது அடியார்களைப் பாருங்கள் ஒரு ஃபர்ளை முடித்து விட்டு அடுத்த ஃபர்ளுக்காக மஸ்ஜிதில் காத்திருக்கிறார்கள் என்று கூறி நம்மைப் பெருமைப் படுத்துகிறான்.          

إنه إذا كان يوم القيامة يحشر قوم وجوههم كالكوكب الدري فتقول لهم الملائكة ما كانت أعمالكم فيقولون كنا إذا سمعنا الأذان قمنا إلى الطهارة لا يشغلنا غيرها ثم تحشر طائفة وجوههم كالأقمار فيقولون بعد السؤال كنا نتوضأ قبل الوقت ثم تحشر طائفة وجوههم كالشمس فيقولون كنا نسمع الأذان في المسجد (احياء علوم الدين

  மறுமை நாளில் சிலரின் முகங்கள் நட்சத்திரங்களைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் நாங்கள் பாங்கு சப்தம் கேட்டவுடன் வேறு வேலைகளில் ஈடுபடாமல் உடன் எழுந்து உளூச் செய்வோம். என்று கூறுவர். இன்னும் சிலரின் முகங்கள் சந்திரனைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்பர். அதற்கு அவர்கள் நாங்கள் தொழுகை வரும் முன்பே உளூச் செய்து தயாராக இருப்போம். பாங்கு சப்தம் கேட்டதும் உடனே மஸ்ஜிதுக்கு விரைவோம் என்று கூறுவர். இன்னும் சிலரின் முகங்கள் சூரியனைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்பர். அதற்கு அவர்கள் நாங்கள் முன்பே உளூச் செய்து தயாராகி பாங்கு சொல்லும் போது மஸ்ஜிதுக்குள் இருப்போம் என்று கூறுவர்.  

ரமழானை எதிர்பார்ப்பதிலும் மிகுந்த நன்மை உண்டு

كان الصحابة -رضي الله عنهم- يحرصون أشدّ الحرص على الاستعداد لشهر رمضان استعداداً حقيقيّاً؛ فيتوجّهون إلى الله بالدعاء ستّة أشهرٍ أن يُبلّغهم الله رمضان، ثمّ يدعونه ستّة أشهرٍ أخرى أن يتقبّل منهم صيامهم، وطاعاتهم، وعباداتهم، فبذلك يكون العام لديهم كأنّه كلّه شهر رمضان،[٦]

ஸஹாபாக்கள் ரமழானை எதிர்பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பே ரமழானை எதிர்பார்ப்பார்கள். பின்பு ரமழான் வந்த பின்பு அது முடிந்து ஆறு மாதங்கள் வரை அந்த ரமழானில் செய்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக துஆ செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர்களுக்கு வருடம் முழுவதும் ரமழானாகவே ஆகி விடும். 

ரமழான் வரை  நமக்கு அல்லாஹ் ஆயுளை நீளமாக்கிட துஆ செய்ய வேண்டும்

இன்னும் பல ரமழான்களை சந்திக்கும் வரை ஆயுளை நீளமாக்கிட துஆச் செய்ய வேண்டும்

عَن أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد

இரு சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில் ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார். தல்ஹா ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப் பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள் இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார் என்றார்கள். 







ரமழானுக்காக முன்பே தயாராகுதல், 

ரமழானில் அமல் செய்வதற்கான நேரங்களை இப்போதே திட்டமிடுதல்

முக்கியமான ஒரு விழாவை நாம் நடத்தப்போகிறோம் என்றால் அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பே விழாவின் பொறுப்புதாரிகள் ஒன்று கூறி இத்தனை மணிக்கு விழா ஆரம்பம். இன்னார் இன்னார் இவ்வளவு நேரம் பேசுவார் இத்தனை மணிக்கு விழா முடியும் என்றெல்லாம் திட்டமிடுகிறோம். இவ்வாறு திட்டமிடப்படும் விழாக்களில் சற்று முன் பின் ஏற்பட்டாலும் விழாவை நல்ல முறையில் நடத்துவதற்கு இந்த திட்டமிடுதல் முக்கியப் பங்காற்றுகிறது.   

நேரங்களை, காலங்களை திட்டமிடுதல் அல்லாஹ்வின் வழிமுறை

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ (3)يونس عن سعيد بن جبير رضي الله عنهما . إنما خلقها في ستة أيام وهو يقدر على أن يخلقها في لحظة ، تعليماً لخلقه الرفق والتثبت (تفسير الرازي

அல்லாஹ் ஆகு என்றால் உடனே அனைத்தும் ஆகி விடும். எனினும் திட்டமிட்டு, நேரங்களை பங்கு வைத்து செயலாற்றுவதை நமக்குக் கற்றுத் தருவதற்காக அல்லாஹ் வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்தான். 

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ..... (مسلم)

அல்லாஹ் பூமியை சனிக்கிழமையில் படைத்தான்.அதில் மலைகளை அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமையில் படைத்தான் பூமியில் மரங்களை அல்லாஹ் திங்கள்கிழமையில் படைத்தான். மக்ரூஹானவைகளை செவ்வாய்க்கிழமையில் படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்தான். பூமியில் பிற உயிரினங்களை வியாழக்கிழமை யில் படைத்தான்

மனிதனை அதாவது ஆதம் அலை அவர்களை வெள்ளிக்கிழமை அசருக்குப் பின்பு அல்லாஹ் படைத்தான்.    

வருகிற ரமழானை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த ஒரு மாதத்தின் ஒவ்வொரு வினாடிகளும் நமக்குப் பொன்னானவை என விளங்கி ஒவ்வொரு அமலுக்கும் ஒரு நேரத்தை சரியான முறையில் ஒதுக்கி அமல்களில் ஈடுபட்டால் ரமழானின் பலன்களை நிறைய அடையலாம். உதாரணமாக ரமழான் என்பது துஆக்கள் அதிகம் ஏற்கப்படும் மாதம் என்பதால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் தஹஜ்ஜுதுக்குப் பிறகும் பத்து நிமிடமேனும் துஆ செய்ய வேண்டும் என்று நேரம் நிர்ணயித்தால் ரமழான் முழுக்க முப்பது மணி நேரம் துஆ செய்தவர்களாக நாம் ஆகி விடுவோம். இது மாதிரி ஒவ்வொரு அமலுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். 

நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே ஆக்கப்படும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)أي اشتغالا من غير منفعة ولم أسد فقرك أي لا من شغلك ولا من غيره وحاصله أنك تتعب نفسك بكثرة التردد في طلب المال ولا تنال إلا ما قدرت لك من المال في الأزل وتحرم عن غنى القلب لترك عبادة الرب (مرقاة)

அல்லாஹ் கூறுகிறான்- ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நேரத்தை (நிர்ணயம் செய்து)ஒதுக்கு! அவ்வாறு செய்தால் உனக்குள் (பணக்காரத்தனத்தை உருவாக்குவேன்) பிறரிடம் தேவையாகாத நிலையை ஏற்படுத்துவேன். உன் வறுமையைப் போக்குவேன். அவ்வாறு நீ நேரம் ஒதுக்கா விட்டால் அல்லாஹ்வை வணங்க நேரமில்லை என்று கூறி விட்டால் உன் கைகள் நிறைய வேலைப் பழுவை ஏற்படுத்தி நேரமில்லாமல் ஆக்கி விடுவேன். உன் வறுமையையும் போக்க மாட்டேன்.

விளக்கம்- இப்படிப்பட்டவரின் நேரங்கள் தேவையில்லாமல் வீணாகும். குறுகிய நேரத்தில் முடிய வேண்டிய வேலையை அல்லாஹ்வே நீளமாக்கி விடுவான். இறைவனை வணங்க நேரம் ஒதுக்கி இலகுவான முறையில் அடைய வேண்டிய வருமானத்தை இவன் மிகவும் சிரமப்பட்டு அடைவான். நிறைய சம்பாதித்தாலும் மனதளவில்  ஏழையாகவே இருப்பான். 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ (ابن ماجة

பொருள் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. மன நிறைவு உள்ளவனே பணக்காரன்.

                      

ரமழானில் வேலைப் பழுவை அதிகமாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக இப்போதே சில அலுவல்களை முன் கூட்டியே முடிப்பது  முடியுமானால் முடிப்பது நல்லது. 

மழைக்காலம் வருவதற்கு முன்பே தேவையான இரையை சேமித்து வைத்துக் கொள்ளும் எறும்பு.

 எறும்புகள் வெயில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்டநாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன. தானியங்கள் முளைவிட்டு வளரும்போது அவற்றின் அடிவேர்களை அறுத்து விடுகின்றன.  அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போது அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. அடிக்கடி நின்றும், திரும்பியும் வேகமாக ஊர்ந்துசெல்லும் எறும்பு தன் கூட்டில் இருந்து 200 மீட்டர் (655 அடி)பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆற குளம் குட்டை ஏரி மரம் கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன்வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது ஆச்சரியம். 

ரமழானுக்காக உடல் ரீதியாக நம்மைத் தயார் படுத்திக் கொள்ளுதல்

உடல் ரீதியாக நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வதற்காக ரமழான் துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே வேறு நோன்புகள் வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. ரமழானை கண்ணியப் படுத்துவதற்காகவும் இவ்வாறு நபி ஸல் கூறியிருக்கலாம். 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلَا تَصُومُوا (ابوداود)

கருத்து ஷஃபான் நடுப்பகுதி முடிந்து விட்டால் நோன்பு வைக்க வேண்டாம் 

عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : إذا بقي نصف شعبان ، فلا تصوموا " (شرح السنة)

ஷஃபானின் ஒரு பாதி முடிந்து மற்றொரு பாதி மீதம் இருக்கும்போது நோன்பு வைக்காதீர்கள்.

ரமழானில் பெரும்பாலான நேரங்களை துணிக்கடைகளில் செலவு செய்பவர்கள் கவனிக்க.. 

சிலர் புனிதமான ரமழானில் அதிகம் அமல் செய்வதற்கு பதிலாக அதிக நேரங்களை துணிக்கடையில் செலவு செய்வார்கள். கணவனுக்கு ஒருநாள் மனைவிக்கு மற்றொரு நாள் பிள்ளைகளுக்கு மூன்றாவது நாள் என பெரும்பாலான நேரங்களை துணிக்கடையில் செலவு செய்வார்கள். அதிலும் குறிப்பாக கடைசி பத்து நாட்களில் தராவீஹின் நேரத்திலும் கூட துணிக்கடைகளில் கூட்டத்தைப் பார்க்க முடியும். இது துர்பாக்கியமான செயல். ரமழான் என்ற அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாத செயலாகும். எனவே ரமழான் வரும் முன்பே துணிமணிகள் எடுத்து விடுவது நல்லோர்களின் செயலாகும்.     

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ (بخاري

அறியாமைக் காலத்திலேயே வணக்கத்தின் நாட்களில் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை விட்டு விடுவது அரபிகளின் பழக்கமாக இருந்தது

كان ناس من العرب لا يتّجرون في أيام الحج فإذا دخل العشر كفّوا عن الشراء والبيع فلم يقم لهم سوق وكانوا يسمون من يخرج إلى الحجّ ومعه تجارة : الداج  (الكشف والبيان) قال ابن عباس رضي الله عنه : كان ناس من العرب يحترزون من التجارة في أيام الحج وإذا دخل العشر بالغوا في ترك البيع والشراء بالكلية ، وكانوا يسمون التاجر في الحج : الداج ويقولون : هؤلاء الداج ، وليسوا بالحاج ،  ، فأنزل الله تعالى هذه الآية واباح التجارة في الحج .(لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُواْ فَضْلاً مِّن رَّبِّكُمْ) البقرة (198)   (تفسير الرازي   

الداج : هم الذين مع الحجاج من الأجراء والمكارين والأعوان والخدم ، وظاهر أنهم كانوا لا يحجون مع الناس .

அரபு மக்கள் ஹஜ்ஜுடைய காலங்கள் வந்து விட்டால் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை முற்றிலும் நிறுத்தி விடுவார்கள். மேலும் அவ்வாறு ஹஜ்ஜுடைய காலங்களில் கொடுக்கல் வாங்கல் செய்பவர்களை தாஜ் என்ற அடைமொழியுடன் அதாவது ஹஜ்ஜுக்கு வராமல் சம்பளத்திற்கு வேலை செய்ய வந்திருப்பவர்கள் என்ற பெயருடன் அழைப்பார்கள். இது பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அப்போது அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கி, அவசியத்திற்கு மட்டும் வியாபாரம் செய்தால் தவறில்லை என்று உணர்த்தினான்.                                                      

( وَيُكْرَهُ أَنْ يَنْتَفِلَ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ )

 لِأَنَّ الْكَرَاهَةَ كَانَتْ لِحَقِّ الْفَرْضِ لِيَصِيرَ الْوَقْتُ كَالْمَشْغُولِ بِهِ لَا لِمَعْنًى فِي الْوَقْتِ (هداية

 ஹிதாயா நூலில் ஃபஜ்ருக்குப் பின்னாலும் அசருக்குப் பின்னாலும் நஃபில் தொழுவது மக்ரூஹ் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் அதன் விளக்கம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அந்த நேரம் தொழுகைக்குத் தகுதியுள்ள நேரம் தான். உச்சம், உதயம், அஸ்தம் போன்று தொழுவது அறவே தடுக்கப் பட்ட நேரம் அல்ல. இருந்தாலும் ஃபஜ்ருக்குப் பின்னாலும் அசருக்குப் பின்னாலும் நஃபில் தொழுவது மக்ரூஹ் என்று கூறப்பட்டதற்குக் காரணம் அந்த நேரம் முழுவதும் ஃபஜ்ருக்கு மட்டுமே உரித்தானது அந்த நேரங்களில் வேறு நஃபில் தொழுகைகளில் ஈடுபட்டாலும் கூட அது ஃபர்ளின் கண்ணியத்திற்கு இடையூறாக அமைந்து விடும் என்பதால் மக்ரூஹ் என்று கூறப்பட்டுள்ளது.                                   

ஒரு முக்கியப் பிரமுகர் வருகிறார் என்றால் அதற்காக பல ஏற்பாடுகள் நடைபெறும். அவரின் வாகனம் செல்வதற்கு சிறிதளவு இடம் போதும் என்றிருந்தாலும் நிறைய இடங்கள் காலி செய்து வைக்கப்படும் இதுவெல்லாம் அவருடைய கண்ணியத்தைக் கருதியே செய்யப்படும். அதுபோல் தான் மேலே உள்ள ஹிதாயாவின் சட்டம். அதுபோல் ரமழானில் ரமழான் சம்பந்தப்பட்ட அமல்களுக்காக அதிக நேரங்கள் கொடுத்து நம் அவசிய வேலைகளுக்காக சிறிதளவு நேரத்தை மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நல்லது 

பொருளாதார ரீதியாக தயார் படுத்திக் கொள்ளுதல் 

சிலருக்கு ரமழானில் நிறைய தர்மம் செய்யலாம் என்ற ஆர்வம் இருக்கலாம். ஆனால் அவருடைய வருமானம் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அவர் இப்போதிருந்தே மிச்சப்படுத்தினால் இயன்றவரை தர்மம் செய்ய அவரால் இயலும்.வசதியற்றவர் தன்னால் இயன்றவரை சிறிது தர்மம் செய்தாலும் அல்லாஹ்விடம் நிறைய நன்மைகளைப் பெற்றுத்தரும் 

عن بن عباس كان يقول : كان رسول الله صلى الله عليه و سلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن قال فرسول الله صلى الله عليه و سلم حين يلقاه جبريل أجود من الريح المرسلة (نسائ

நபி ஸல் அவர்கள் பொதுவாகவே அதிகம் தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள். குறிப்பாக ஜிப்ரயீல் அலை அவர்களை அதிகம் சந்திக்கும் மாதமான ரமழான் வந்து விட்டால் இன்னும் அதிகமாக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களை சந்தித்து அதுவரை இறங்கிய குர்ஆனை ஓதிக் காட்டுபவர்களாக இருந்தார்கள். அத்தகைய ரமழானில் நபி ஸல் அவர்கள் புயல் காற்றை விட வேகமாக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள்.  

நிறைய சொத்துக்களுக்கு ஜகாத் தர வேண்டியவர்கள் ஜகாத்துடைய கணக்குகளை 

ரமழான் வரும் முன்பே சரி பார்த்துக் கொண்டால் ரமழானில் அந்த வேலை மிச்சமாகும்  



குர்ஆன் & மக்தப் முக்கியத்துவம்

27-03-2026 ஷவ்வால்-  7 بسم الله الرحمن الرحيم          குர்ஆனுடைய கல்வியின் முக்கியத்துவம் https://chennaijamaathululama.blogspot.com என்ற ம...