திங்கள், 11 ஏப்ரல், 2022

10- ம் தராவீஹ் பயான்- யூசுஃப் சூரா சில படிப்பினைகள்


10- ம் தராவீஹ்  பயான்- யூசுஃப் சூரா சில படிப்பினைகள்



யூசுஃப் சூராவில் நூற்றுக்கணக்கான படிப்பினைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

 தன்னால் இயன்ற வரை மாற்றாரிடம் அழைப்புப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்

கனவுக்கு விளக்கம் கேட்ட இருவரிடம் அதற்கான விளக்கத்தை நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் கூறும் முன்பு அவர்களிடம் தொடங்கியது அழைப்புப்பணியைத் தான்

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ (36) قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ذَلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ (37) وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (38) يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39) مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (40) يوسف

வாழ்க்கையில் ஒருவரையேனும் இஸ்லாத்தின் பால் கொண்டு வருவது மிகச் சிறந்த பாக்கியம்

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ (النحل125)عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ خَيْبَرَ لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ أَيْنَ عَلِيٌّ فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ فَأَمَرَ فَدُعِيَ لَهُ فَبَصَقَ فِي عَيْنَيْهِ فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّه لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ فَوَاللَّهِ لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ (بخاري)

பொருள்- கைபர் போரின் போது) நபி (ஸல்) அவர்கள், நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒருவரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான் என்றார்கள். ஆகவே, மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசையில் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், அலீ பின் அபீதாலிப் எங்கே? என்று கேட்டார்கள். மக்கள், அவருக்குக் கண்வலி என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அவர் களுடைய களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும், இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமை யாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.                                                              

தஃவா 3 வாய்ப்புகள் உண்டு1,தேடிச் செல்வது 2,தேடி வருவது 3,நாமாக உண்டாக்கிக் கொள்வதுவது

எழுத்தாற்றல் உள்ளவர்கள் எல்லோரும் படிக்கும் பத்திரிக்கைகள் வாயிலாக இஸ்லாம் பற்றிய நற்சிந்தனைகளை எழுதலாம். - பேச்சாற்றல் உள்ளவர்கள் பொதுமேடைகளில் நளினமாக இஸ்லாமை பிற மக்களுக்கு புரிய வைக்கலாம். நம்மோடு நல்ல நட்பும் முஸ்லிம்களின் மீது மதிப்பும் வைத்திருக்கக் கூடியவர்களுக்கு இஸ்லாம் பற்றிய புத்தகங்களை தரலாம் விளக்க உரையாடல்கள் நடத்தலாம்

 அழைப்புப் பணிக்காக தேடிச் செல்லும் இடங்கள் கிறிஸ்தவ மதம் பெரும்பாலும் பரவியது இந்த வகையில் தான்

சிறைச்சாலை என்பது பலருக்கு சிந்தனைச் சாலையாகவும், எதிர் கால வாழ்வை ஒழுங்கு படுத்துவதாகவும் அமையும் அங்கு முறையான அனுமதி பெற்று இஸ்லாம் பற்றிய நல்லுபதேசங்களை உரையாகவும், நூலாகவும வழங்கலாம் மருத்துவமனையில் நோயுற்று படுத்திருப்பவர்களில் பலர் படிப்பதற்கு ஏதாவது நூல் வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள் அங்கு சென்று அவர்களை நலம் விசாரித்து இஸ்லாமிய புத்தகங்களை வழங்கலாம்.                                  

عَنْ أَنَسِ  أَنَّ غُلَامًا يَهُودِيًّا كَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ أَطِعْ أَبَا الْقَاسِمِ فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ بِي مِنْ النَّارِ (مسند أحمد)

 எதிர் கால எண்ணங்களை உருவாக்குவதில் நூலகங்களுக்கு பெரிய பங்கு உண்டு. அத்தகைய நூலகங்களுக்குச் சென்று இஸ்லாமிய நூல்களை வைக்க ஏற்பாடு செய்யலாம். இது தவிர எந்த வகையில் மாற்று மதத்தவர்களுடன் பேச சந்தர்ப்பம் அமையுமோ அதையெல்லாம் வாய்ப்பாக பயன்படுத்தலாம். பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று அவர் இதுவரை சுமார் 3000 பேரை முஸ்லிம்களாக மாற்றியுள்ளார். பல தடவை தனது இரயில் பயணத்திலேயே பலரை முஸ்லிமாக்கியுள்ளார். மேற்கூறியவைகளில் சிலவற்றை தனி நபராகவும், செய்ய முடியும். ஆனால் சிலவற்றை ஒரு கூட்டு முயற்சியின் மூலமே செய்ய முடியும்                              

கண் திருஷ்டி ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரே வாசலில் நுழையக்கூடாது என யஃகூப் அலை அறிவுறுத்தினார்கள்

وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ وَمَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ (67)يوسف قَالَ اِبْن عَبَّاس وَمُحَمَّد بْن كَعْب وَمُجَاهِد وَالضَّحَّاك وَقَتَادَة وَالسُّدِّيّ وَغَيْر وَاحِد إِنَّهُ خَشِيَ عَلَيْهِمْ الْعَيْن وَذَلِكَ أَنَّهُمْ كَانُوا ذَوِي جَمَال وَهَيْئَة حَسَنَة وَمَنْظَر وَبَهَاء فَخَشِيَ عَلَيْهِمْ أَنْ يُصِيبهُمْ النَّاس بِعُيُونِهِمْ فَإِنَّ الْعَيْن حَقّ تَسْتَنْزِل الْفَارِس عَنْ فَرَسه (تفسير ابن كثير

கண் திருஷ்டி உண்மை தான். ஆனால் அல்லாஹ் நாடியபடியே நடக்கும்

عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخَبَّأَةٍ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلًا صَرِيعًا قَالَ مَنْ تَتَّهِمُونَ بِهِ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلْ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ (ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الْإِنَاءَ مِنْ خَلْفِهِ-(ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَيْنُ حَقٌّ (بخاري) باب الْعَيْنُ حَقٌّ -كتاب الطب

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழி அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ஆமிர் ரழி அவர்கள் அந்த வழியாகச் சென்றார். ஸஹ்ல் ரழி அவர்களின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்தவுடன் இது மாதிரி அழகிய உடம்பை வேறு எங்கும் கண்டதில்லை என கண் வைத்து விட்டார். அது அவரை உடனே பாதித்தது. படுத்த படுக்கையாக ஆகி விட்ட அவரை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது இவர் விஷயத்தில் யாரையும் சந்தேகிக்கிறீர்களா என்று நபி ஸல் கேட்க, ஆமிரை ரழி நாங்கள் சந்தேகிக்கிறோம் என தோழர்கள் பதில் கூறினார்கள். உடனே ஆமிர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் எதற்காக உங்களின் உடன் பிறவா சகோத ர ரை இப்படி கண்திருஷ்டியை ஏற்படுத்தி ஏன் கொலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் பாரகல்லாஹ் என்று கூறலாமே என்றார்கள். பிறகு ஆமிர் ரழி அவர்களிடம் தண்ணீரை எடுத்து வரச் சொல்லி ஆமிர் ரழி உடைய உடல் முழுவதையும் கழுவச் சொல்லி அந்த நீரை ஸஹ்ல் ரழி அவர்களின் மீது ஊற்றச் சொன்னார்கள். (அவ்வாறு ஊற்றப்பட்டது. அவர் குணமடைந்தார்.)

ஆரம்பத்தில் இந்த மாதிரி பரிகாரம். பின்பு முஅவ்விததைன் சூராக்கள் இறங்கிய பின்பு அதுவே பரிகாரமாக அமைந்தது

நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் எகிப்தில் இறந்து அடக்கப்பட்டாலும் பின்பு அவர்களின் உடல் அவர்களின் விருப்ப ப்படி பைத்துல் முகத்தஸுக்கு கொண்டு செல்லப்பட்டது.

عن  أبي موسى الأشعري ' أن النبي نزل على أعرابي في سفر ، فأحسن الأعرابي ضيافته ، فلما ارتحل من عنده ، قال للأعرابي : لو أتيتنا أكرمناك ، فجاءه الأعرابي بعد ذلك ، فقال له النبي : ما حاجتك ؟ فقال : ناقة برحلها وأخرى أحتلبها ، فأمر له النبي بذلك ، ثم قال : أيعجز أحدكم أن يكون كعجوز بني إسرائيل ؟ فسئل عن ذلك ، فقال : لما خرج موسى ببني إسرائيل من مصر ضلوا الطريق ، وفي بعض الأخبار : أن القمر خسف ، والشمس كسفت ، ووقع الناس في ظلمة عظيمة ، وتحير موسى ، فقال له علماء بني إسرائيل : إن يوسف - عليه السلام - أوصى أن بني إسرائيل إذا خرجوا من مصر فلينقلوا عظامه معهم (اي بدنه وهو من باب اطلاق الجزء ويراد به الكل) ، فعلم موسى انهم ضلوا الطريق لذلك ، فقال لهم : ومن يعرف موضع عظامه ؟ فقالوا : لا يعرفه سوى عجوز من بني إسرائيل ، فدعا بالعجوز وسألها عن موضع العظام ، فقالت : لا حتى تقضي حاجتي ، فقال : ما حاجتك ؟ قالت : حاجتي أن أكون معك في الجنة أي : في درجتك ، فكره موسى ذلك ، فنزل الوحي أن أعطها ذلك ، فأعطاها ، ثم إنها دلت على قبر يوسف ، فحمل موسى عظام يوسف (اي بدنه ) وانجلت الظلمة ' .( تفسير القرآن-للسمعاني

நபி ஸல் அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு கிழவி ஆசைப்பட்டது போன்று நீங்கள் ஆசைப்படுங்கள் என்று கூறினார்கள் உடனே தோழர்கள் அப்படி அவர் என்ன ஆசைப்பட்டார் என்று கேட்க, நபி மூஸா அலை எகிப்தில் இருந்து தன் உம்மத்தை அழைத்துக் கொண்டு பாலஸ்தீனம் நோக்கி புறப்பட்ட போது  மூஸா நபியிடம் சிலர்கள்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்  இந்த எகிப்தில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் ஆனால் அவர்கள் ஒரு வஸிய்யத் செய்துள்ளார்கள் நீங்கள் என்றாவது ஒருநாள் ஷாமுக்கு குடியேறுவீர்கள்  அன்று என்னுடைய உடலையும் அங்கு கொண்டு சென்று விடுங்கள்  என்று  வஸிய்யத் செய்துள்ளார்கள் என்று கூறிய போது அதை மூஸா அலை ஏற்றுக் கொண்ட பின் உங்களில் யாருக்கேனும் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் உடைய  கப்ரு தெரியுமா என்று கேட்க, எங்களில் யாருக்கும் தெரியாது ஆனால் ஒரே ஒரு மூதாட்டிக்கு மட்டும் தெரியும் என்றார்கள் உடனே  அந்த மூதாட்டியை சந்திப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் விரைந்தார்கள் அவரின் இருப்பிடத்தை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் கேட்ட போது அந்தப் பெண்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  கப்ரை காட்டுவதற்கு ஒரு மாபெரும் கோரிக்கையை முன்வைத்தார்.  மூஸா நபியே நான் உங்களோடு சுவனத்தில் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சிபாரிசு செய்தால் நான் கப்ரை காட்டுகிறேன் என்றார். மூஸா அலை  யோசித்தார்கள்.  கப்ரை காட்டுவதற்கு இவ்வளவு பெரிய நிபந்தனை விதிக்கிறாரே என்று  யோசித்த போது அல்லாஹ் அவர்களுக்கு வஹீ அறிவித்தான் மூஸாவே அப்பெண்ணின் நிபந்தனையை ஏற்று நீங்கள் துஆ செய்யுங்கள் நான் அதை நிறைவேற்றுவேன். ஏனெனில் அந்தப் பெண் தனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து தினமும் என்னிடம் யாஅல்லாஹ் நபிமார்களோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தைத் தா! என துஆ செய்து வந்தார் ஆகவே அவரை நிச்சயம் நான் சுவனத்தில் புகுத்துவேன் என்றான் அதன் பின் நபி மூஸா அலை துஆ செய்தார்கள் அப்பெண் கப்ரை காட்டினார் நபி  யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  கப்ரு தோண்டப்பட்டு பின்பு ஜெரூஸலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது

                              

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...