9- ம் தராவீஹ் பயான்
யாருக்கு என்ன ரிஜ்க் (இரணம்)
விதிக்கப்பட்டதோ நிச்சயம் வந்தடையும்
சில பாவங்களால் ரிஜ்க் தடைபடும். அதுவும் அல்லாஹ்வின்
விதியாகும்
وَمَا
مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ
مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ (6) هود
ரிஜ்க் வந்தடைதல் என்பது இரண்டு வகை- 1.சில உயிர்களுக்கு
அல்லாஹ் ரிஜ்கை வைத்திருப்பான். ஆனால் தேடிச் செல்வதால் அது கிடைக்கும். அதற்கு
உதாரணம்
عَنْ أَبِي تَمِيمٍ
الْجَيْشَانِيِّ قَالَ سَمِعْتُ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَوْ أَنَّكُمْ تَوَكَّلْتُمْ عَلَى اللَّهِ
حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ تَغْدُو خِمَاصًا
وَتَرُوحُ بِطَانًا (ابن ماجة
நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தால் பறவைக்கு அல்லாஹ் ரிஜ்க்
வழங்குவது போல் உங்களுக்கும் வழங்குவான். அது வயிறு ஒட்டிப் போன நிலையில் காலையில்
செல்கிறது. மாலையில் கூடு திரும்பும்போது வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகிறது.
படிப்பினை- தேடிச் செல்வதால் உணவு நிச்சயம் கிடைக்கும்.
உழைக்கும் சக்தி இருந்தும் உணவைத் தேடிச் செல்லாதவருக்கு
அந்த ரிஜ்க் தடையாகும் என்பதோடு அத்தகையவரை அல்லாஹ் சபிக்கிறான்.
عَنْ
عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ رضي الله عنه
قَالَ وَأَهْلُ
الْجَنَّةِ ثَلَاثَةٌ ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ مُوَفَّقٌ وَرَجُلٌ
رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ وَعَفِيفٌ مُتَعَفِّفٌ
ذُو عِيَالٍ قَالَ وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ
الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا
وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ
وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ
وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوْ الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم)
بَاب الصِّفَاتِ الَّتِي يُعْرَفُ بِهَا فِي الدُّنْيَا أَهْلُ الْجَنَّةِ
وَأَهْلُ النَّارِ- كِتَاب الْجَنَّةِ وَصِفَةِ نَعِيمِهَا وَأَهْلِهَا
ஐந்து
விதமான நபர்கள் நரகவாதிகள் 1, புத்தி சாதுர்யம்
இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென
சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள்
(செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும்
மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு
வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது
எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக
இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன்
காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்)
உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான்.
4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும்
ஒழுக்கமற்றவன் நூல்- முஸ்லிம்
மேற்படி ஹதீஸ் உழைக்காமல் ஊர் சுற்றும்
ஊதாரிகளுக்கு பெரும் எச்சரிக்கையாகும். ஒரு காலத்தில் பொருளாதாரத்திலும் இன்ன பிற
துறைகளிலும் முதலிடத்தில் இருந்த முஸ்லிம் சமூகம் இன்று பல வகையிலும் பின்னுக்குத்
தள்ளப்பட்டுள்ளது. இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமையில் இருப்பதாக
புள்ளி விபரம் கூறுகிறது. பல நகரங்களில் தலித்துகளின் வருமானத்தை விட
முஸ்லிம்களின் வருமானம் குறைவாக உள்ளது. பல ஊர்களில் சொந்த வீட்டில் வசித்த
முஸ்லிம்கள் அந்த வீடுகளை மாற்றார்களுக்கு விற்று விட்டு வாடகை வீட்டில் வசிக்கும்
அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2. சில உயிர்களுக்கு அல்லாஹ் ரிஜ்கை
வைத்திருப்பான். ஆனால் தேடிச் செல்வதற்கு அவைகளால் முடியாது. அதனால் இருந்த
இடத்திலேயே அவைகளுக்கு அது கிடைக்கும். அதற்கு உதாரணம்
ان
سليمان عليه السلام كان جالسا علي شاطئ بحر فبصر بنملة تحمل حبة قمح تذهب بها نحو
البحر فجعل سليمان عليه السلام ينظر اليها
حتي بلغت الماء...... .....
(الدرر السنية
நபி சுலைமான் அலை அவர்கள் ஒரு தடவை கடற்கரை ஓரம் நடந்து சென்ற போது ஒரு
எறும்பு ஒரேயொரு தானியத்தை சுமந்த படி வேகமாகச் செல்வதை கவனித்தார்கள். அது
தண்ணீருக்குள் அருகில் சென்றவுடன் அங்கே ஒரு தவளை தயாராக இருந்தது. அது வாயைத்
திறந்தவுடன் இந்த எறும்பு அதன் வாய்க்குள் சென்று அந்த தானியத்துடன் பாதுகாப்பாக
உட்கார்ந்து கொண்டது. உடனே அந்த தவளை தண்ணீருக்குள் பாய்ந்த து. நீண்ட நேரம்
கழித்து அந்த தவளை மேலே வந்த து. அதன் வாயைத் திறந்தவுடன் அந்த எறும்பு வெளியே
வந்த து. இப்போது அந்த தானியம் அதன் வாயில் இல்லை. இதைக் கண்ட சுலைமான் அலை என்ன
நடக்கிறது இங்கே என ஆச்சரியப்பட்டார்கள். அந்த எறும்பிடமே விஷயத்தைக் கேட்டார்கள்
அப்போது அந்த எறும்பு சொன்னது. கடலுக்குள் ஒரு பாறைக்குள் ஒரு பார்வையில்லாத புழு
இருக்கிறது. அந்தப் புழுவின் ரிஜ்குக்காக அல்லாஹ் எங்களை நியமித்துள்ளான். நான் அதற்கான இரையை சுமந்து
செல்வேன். தவளையின் பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்வேன். அந்தப் பாறையை அடைந்தாலும்
அதன் உட்பகுதிக்குள் அந்த தவளையால் செல்ல முடியாது எனவே அந்த பாறையை அடைந்தவுடன்
தவளை தன் வாயால் அந்த துவாரத்தை தண்ணீர் செல்லாத படி அடைத்துக் கொள்ளும் நான்
உள்ளே சென்று அந்த உணவை வைத்து விட்டு வருவேன். பிறகு என்னைக் கொண்டு வந்து அந்த
தவளை பாதுகாப்பாக கரையில் விட்டு விடும் என்று எறும்பு கூறியது. உடனே சுலைமான் அலை
அவர்கள் அந்தப் புழு அதற்கு நன்றி செலுத்துகிறதா என்று கேட்க, அதற்கு அந்த எறும்பு
ஆம் ஒவ்வொரு முறையும் அது பின்வருமாறு தஸ்பீஹ் செய்கிறது
يا
من تنساني في جوف هذه الصخرة تحت هذه اللجة
برزقك - لا تنس عبادك المؤمنين برحمتك
இந்த ஆழ்கடலுக்குள் இருக்கும் மறக்காமல் எனக்கு
உணவு கொடுக்கும் இறைவா உன் அடியார்களை நீ மறந்து விடாதே என்று கூறும் என்பதாக அந்த
எறும்பு செய்தி அறிவித்தது
அல்லாஹ்வுக்கு
கட்டுப்படும் இறைநேசர்களை அல்லாஹ் மற்ற ஜீவராசிகளைக் கொண்டு பாதுகாப்பான்
عن إبراهيم بن أدهم أنه قال كنت ضيفاً لبعض
القوم فقُدِّم المائدة فنزل غراب وسلب رغيفاً فاتبعته تعجباً فنزل في بعض التلال3
وإذا هو برجل مقيد مشدود اليدين فألقى الغراب ذلك الرغيف على وجهه وعن ذي النون أنه قال:كنت في البيت إذ وقعت ولولة
في قلبي وصرت بحيث ما ملكتُ نفسي فخرجتُ من البيت وانتهيت إلى شط النيل فرأيت
عقرباً قوياً يعدو فتبعته فوصل إلى طرف النيل4 فرأيت ضفدعاً5
واقفاً على طرف الوادي فوثب العقرب6 على ظهر الضفدع وأخذ الضفدع يسبح7
ويذهب فركبتُ السفينة وتبعتُه فوصل الضفدع إلى الطرف الآخر من النيل ونزل العقرب
من ظهره وأخذ يعدو8 فتبعته
فرأيت شاباً نائماً تحت شجرة ورأيت
أفعى9 يقصده فلما قربت الأفعى من ذلك الشاب وصل العقرب إلى الأفعى فوثب
العقرب على الأفعى فلدغه والأفعى أيضاً لدغ العقرب فماتا معاً وسلم ذلك الإنسان
منهما (تفسير الرازي
சுருக்கம்-
துன்னூனுல் மிஸ் ரீ ரஹ் கூறுகிறார்கள் நான் ஒரு நாள் வீட்டில் இருந்தபோது என் மனம்
ஒரு நிலையில் இல்லாமல் எதையோ தேடி புறப்பட நாடியது. நான் வீட்டிலிருந்து
புறப்பட்டு நைல் நதி ஓரம் நடந்து சென்றேன். அப்போது ஒரு பெரிய தேள் மிக வேகமாக
ஊர்ந்து செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதனைப் பின் தொடர்ந்து சென்றேன். நீரின்
அருகே தேள் சென்றவுடன் அங்கே ஒரு தவளை காத்திருந்தது அதன் முகுகின் மீது இந்தத்
தேள் ஏறிக் கொண்டது. அதனை தன் முதுகில் சுமந்தவாறு அந்த தவளை நீரில் பாய்ந்தது நானும் பின்
தொடர்ந்து சென்றேன் நதியின் மற்றொரு கரையை அடைந்ததும் அந்தத் தேள் தவளையில்
முதுகில் இருந்து இறங்கி பாய்ந்து ஓடியது. அங்கே கண்ட காட்சி என்னை மெய் சிலிர்க்க
வைத்தது அங்கு ஒரு நல்லடியார் உறங்கிக் கொண்டிருக்கிறார் அவரைத் தீண்டுவதற்காக ஒரு
கருநாகம் அருகில் வருகிறது அந்தப் பாம்பை அவரருகில் நெருங்க விடாமல் இந்தத் தேள்
ஓடி வந்து அதைத் தடுக்கிறது இரண்டும் சண்டை போடுகின்றன. தேள் தன் கொடுக்குகளால்
கருநாகத்தை முடிந்த வரை காயப்படுத்த கடைசியில் இரண்டும் இறந்தன. அந்த நல்லடியார்
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார் -தஃப்ஸீர் ராஜீ
ரிஜ்க்
விஷயத்தில் ஜீவராசிகளின் பிரார்த்தனையை அல்லாஹ் உடனே ஏற்பான்
عَنْ
زَيْد الْعَمِّيّ عَنْ أَبِي الصِّدِّيق النَّاجِيّ قَالَ خَرَجَ سُلَيْمَان بْن
دَاوُد عَلَيْهِمَا السَّلَام يَسْتَسْقِي فَإِذَا هُوَ بِنَمْلَةٍ مُسْتَلْقِيَة
عَلَى ظَهْرهَا رَافِعَة قَوَائِمهَا إِلَى السَّمَاء وَهِيَ تَقُول : اللَّهُمَّ
إِنَّا خَلْق مِنْ خَلْقك وَلَا غِنَى بِنَا عَنْ سُقْيَاك وَإِلَّا تَسْقِنَا
تُهْلِكنَا فَقَالَ سُلَيْمَان اِرْجِعُوا فَقَدْ سُقِيتُمْ بِدَعْوَةِ غَيْركُمْ
(تفسير ابن أبي حاتم) (تفسير ابن كثير)
மல்லாந்து படுத்துக் கொண்டு அந்த எறும்பு துஆ கேட்டதைக்
கண்டு நபி சுலைமான் அலை வாருங்கள் நாம் திரும்பிச் செல்வோம் இன்னொரு படைப்பின்
துஆவினால் நமக்கும் நிச்சயம் மழை பெய்யும் என்றார்கள் மனிதர்களிலும்
ஒழுக்கமுள்ளவர்கள் ரிஜ்க் விஷயத்தில் செய்த துஆ ஏற்கப்பட்டுள்ளது.
மெளலானா
ஷைகு அப்துல் ஹக் திஹ்லவீ ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் எழுதுகிறார்கள். ஒரு
காலத்தில் புது டெல்லியில் கடுமையான பஞ்சம். மழை இல்லை. அங்குள்ள முஸ்லிம்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து மழைத் தொழுகைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். வயதான
முதியவர்கள், குழந்தைகள், கால்நடைகள் அங்கே அழைத்து வரப்பட்டதுடன் தங்களின்
வறுமையை அல்லாஹ்விடம் முறையிட காலிப் பாத்திரங்களுடன் வருகிறார்கள். அனைவரும் சேர்ந்து நீண்ட நேரம்
இஸ்திஃபார் செய்து மழைத் தொழுகை நடத்தினர். மழைக்கான அறிகுறி தென்படவில்லை. அப்போது
அந்த வழியாக ஒரு வாலிபன் தன் தாயாரை குதிரையில் ஏற்றிக் கொண்டு வந்தான்.
குதிரையின் மேலிருந்த திரைச் சீலைக்குள் தாயார் இருக்கிறார். அவன் குதிரையில்
இருந்து கீழே இறங்கி இங்கே என்ன நடக்கிறது. என்று கேட்டான். மழைக்காக துஆச்
செய்தோம். இன்னும் மழை வரவில்லை என்றபோது நான் வேண்டுமானால் அல்லாஹ்விடம் துஆச்
செய்யட்டுமா என்று கேட்டு விட்டு தன் தாயாரைச் சுற்றியிருந்த திரையை இலேசாக
விலக்கி அவரின் முந்தானையை கையில் பிடித்தபடி திரைக்குள் இருந்த படி துஆச் செய்ய
உடனே மழை பெய்தது. அனைவரும் ஆச்சரியமடைந்து அந்த இளைஞனை சூழ்ந்து கொண்டு அப்படி
என்ன நீ துஆ செய்தாய் என்று கேட்க, அதற்கு அந்த இளைஞன் நான் பெரிதாக ஒன்றும்
கேட்டு விடவில்லை.
தேவைக்கு மேல் சேர்த்து வைப்பதால் ரிஜ்கில் பற்றாக்குறை
ஏற்படும்
திருடன் என்பவன்
யார் என்று ஒரு கவிஞரிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் “தேவைக்கு மேலே சேர்த்து வைப்பவனே திருடன். ஏனென்றால் இறைவன்
எல்லோருக்கும் படைத்ததிலிருந்து இவன் திருடுகிறான் என்று கூறினார்.
சோம்பேறித்தனத்தால் பற்றாக்குறை ஏற்படும். உ.ம் ஐந்து பேர்
நரகவாதிகள் என மேற்சொன்ன ஹதீஸ்
ஒரு முஃமின் சோம்பேறியாக இருக்க மாட்டார்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள்
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபொழுது வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எவ்வித
பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில், சஅத்பின்ரபீஆ(ரழி) அவர்களுடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்
(ரழி) அவர்களை சகோதரராக நபி (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். சஅத் (ரழி) அவர்கள்
அவருக்காக எவ்வளவோ உதவிகள் செய்ய தயாராக இருந்தார்கள். ஆனால் அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்ஃப் ரழி அவர்களோ அதை ஏற்காமல் சஃதே! அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! உங்களது
செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு கடைவீதியை காட்டுங்கள். எனது ரிஜ்கை நானே தேடிக்
கொள்கின்றேன். உங்களுக்கு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்றார்கள்.
அதன் படி அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அல்லாஹ்
அவரது வியாபாரத்தில் அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.அவர் கனவிலும்
நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்தன. அப்துர் ரஹ்மான் (ரழி)
அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு
அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்தான். இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான்
(ரழி) அவர்கள் தனது சம்பாத்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும்,அவற்றில் இருந்து வரக்
கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே
தயங்கியதில்லை.
வீண் விரயம் செய்வதால் பற்றாக்குறை வரும்.
உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள் என்பது இறைவனின் சொல்.அடுத்தவர்
கை பட்ட உணவு தீட்டுப்பட்ட உணவு என்று வாழை இலையில் எவ்வளவு உணவுகள்
மிச்சமிருந்தாலும் கழிவுகள் ஓடும் கால்வாயில் கொட்டுகிறார்கள். இங்கிலாந்தில்
மக்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை
வீணாக்குகிறார்களாம். புனிதமான நோன்பு மாதத்தில் கூட எண்ணெய் வளமிக்க வளைகுடா
நாடுகளில் எவ்வளவோ உணவுப் பொருட்கள் இறைவனின் கட்டளைக்கு முற்றிலும் விரோதமாக
வீணாக்கப் படுகின்றன. ஏழைகள்
அதிகம் வசிக்கும் இந்தியாவில் வருடத்துக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு
தானியங்கள் வீணாக்கப் படுகின்றன என்று புள்ளி விவரம் சொல்கிறது. இப்படி வளரும் மற்றும் வளர்ந்து விட்ட நாடுகளில் வாழும் நிறையப்பேருக்கு
உலகின் மற்ற பகுதிகளில் எவ்வளவு வறுமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நேரமும்
இல்லை. ஆர்வமும் இல்லை தன்னுடைய வயிறு நிரம்பினால் சரி என்ற மனப்பான்மை வளர்ந்து
கொண்டிருக்கிறது.
இன்னொரு முக்கியக் காரணம் உலக வர்த்தக அமைப்பின் WORLD TRADE
ORGANIZATION கொள்கைகளின்படி சில
நாடுகள் சில உணவுப் பொருட்களை மற்ற நாடுகளிலிருந்து தங்களுக்கு தேவை
இல்லாவிட்டாலும் இறக்குமதி செய்ய வேண்டுமாம். இதன்படி ஜப்பான் நிறைய அரிசியை
இறக்குமதி செய்து வைத்திருக்கிறதாம். ஆனால் அதை உபயோகிப்பவர்கள் இல்லையாம். அந்த
அரிசி அப்படியே கிடங்குகளில் கிடந்து மக்கிய பிறகு அதைக் கால்நடைகளுக்குக்
கொடுக்கிறார்களாம். இதை மற்ற நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்ய உலக வர்த்தக அமைப்பின் அனுமதி தேவையாம். இப்படி ஒரு கொடுமை.
இஸ்லாத்தை அலட்சியப்படுத்தும் அமெரிக்காவின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் உலக
வர்த்தக அமைப்பு இயங்கும் இலட்சணம் இது. தொழில் நுட்பத்திலும் மற்ற துறைகளிலும்
எத்தனையோ சாதனைகள் புரிந்து வரும் மனித இனம் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சிலர்
உணவில்லாமல் உயிரிழக்கிறார்கள் என்பதை உணர்ந்து தலை குனிய வேண்டும். அதை முழுவதும்
ஒழிக்க பாடுபட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக