செவ்வாய், 12 ஏப்ரல், 2022

11- ம் தராவீஹ் பயான்- நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குபவைகளில் தேன் முக்கியமானது

 

11- ம் தராவீஹ்  பயான்-

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குபவைகளில் தேன் முக்கியமானது

பலவிதமான நோய்கள் பரவிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தேனின் பயன்பாடு அவசியம்.

وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ (68) ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (69)النحل

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْكُمْ بِالشِّفَاءَيْنِ الْعَسَلِ وَالْقُرْآنِ (ابن ماجة

நிவாரணம் அளிக்கும் இரண்டை நீங்கள் அவசியம் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்  1.குர்ஆன்2.தேன் 

عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَخِي يَشْتَكِي بَطْنَهُ فَقَالَ اسْقِهِ عَسَلًا ثُمَّ أَتَى الثَّانِيَةَ فَقَالَ اسْقِهِ عَسَلًا ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ اسْقِهِ عَسَلًا ثُمَّ أَتَاهُ فَقَالَ قَدْ فَعَلْتُ فَقَالَ صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ اسْقِهِ عَسَلًا فَسَقَاهُ فَبَرَأَ (بخاري 5684

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூற, நபி (ஸல்) அவர்கள்,'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்றார்கள்.பிறகு இரண்டாம் தடவை அவர் வந்து (நீங்கள் சொன்னது போல்) தேன் ஊட்டியதில் வயிற்றுப்போக்குதான் ஏற்பட்டது'  என்று கூற,  மீண்டும் நபி (ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'  என்றார்கள். பிறகு மூன்றாம் முறையும் அவர் வந்து அதையே கூற, நபி (ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்றார்கள் பிறகும் அவர் வந்து (தாங்கள் சொன்னதை) செய்தேன் குணமாகவில்லை என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(தேனில் நிவாரணம் இருப்பதாக) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. அவருக்குத் தேன் (நிறைய) ஊட்டுங்கள் 'என்று சொன்னார்கள். இறுதியாக தம் சகோதரருக்கு நிறைய தேன் ஊட்டினார். அதன்பின் அவர் குணமடைந்தார். - புகாரி-5684

தேன் பல நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கும் நம்பிக்கையான மருந்தாக இருப்பதால் அதற்கு அறிஞர்களில் சிலர் அல்-ஹாஃபிழ் (பாதுகாப்பு அளிப்பது)அல்-அமீன்  (நம்பிக்கையானது) என்பதாகவும் பெயரிட்டுள்ளனர்

நபி (ஸல்) அவர்கள் தேனை மிகவும் விரும்புவார்கள்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْعَسَلَ وَالْحَلْوَاءَ وَكَانَ إِذَا انْصَرَفَ مِنْ الْعَصْرِ دَخَلَ عَلَى نِسَائِهِ فَيَدْنُو مِنْ إِحْدَاهُنَّ فَدَخَلَ عَلَى حَفْصَةَ بِنْتِ عُمَرَ فَاحْتَبَسَ أَكْثَرَ مَا كَانَ يَحْتَبِسُ فَغِرْتُ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ فَقِيلَ لِي أَهْدَتْ لَهَا امْرَأَةٌ مِنْ قَوْمِهَا عُكَّةً مِنْ عَسَلٍ فَسَقَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ شَرْبَةً فَقُلْتُ أَمَا وَاللَّهِ لَنَحْتَالَنَّ لَهُ فَقُلْتُ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ إِنَّهُ سَيَدْنُو مِنْكِ فَإِذَا دَنَا مِنْكِ فَقُولِي أَكَلْتَ مَغَافِيرَ فَإِنَّهُ سَيَقُولُ لَكِ لَا فَقُولِي لَهُ مَا هَذِهِ الرِّيحُ الَّتِي أَجِدُ مِنْكَ فَإِنَّهُ سَيَقُولُ لَكِ سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ فَقُولِي لَهُ جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ وَسَأَقُولُ ذَلِكِ وَقُولِي أَنْتِ يَا صَفِيَّةُ ذَاكِ قَالَتْ تَقُولُ سَوْدَةُ فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ قَامَ عَلَى الْبَابِ فَأَرَدْتُ أَنْ أُبَادِيَهُ بِمَا أَمَرْتِنِي بِهِ فَرَقًا مِنْكِ فَلَمَّا دَنَا مِنْهَا قَالَتْ لَهُ سَوْدَةُ يَا رَسُولَ اللَّهِ أَكَلْتَ مَغَافِيرَ قَالَ لَا قَالَتْ فَمَا هَذِهِ الرِّيحُ الَّتِي أَجِدُ مِنْكَ قَالَ سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ فَقَالَتْ جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ فَلَمَّا دَارَ إِلَيَّ قُلْتُ لَهُ نَحْوَ ذَلِكَ فَلَمَّا دَارَ إِلَى صَفِيَّةَ قَالَتْ لَهُ مِثْلَ ذَلِكَ فَلَمَّا دَارَ إِلَى حَفْصَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلَا أَسْقِيكَ مِنْهُ قَالَ لَا حَاجَةَ لِي فِيهِقَالَتْ تَقُولُ سَوْدَةُ وَاللَّهِ لَقَدْ حَرَمْنَاهُ قُلْتُ لَهَا اسْكُتِي  (بخاري)

 

 

 

 

 

 -நூல்: புகாரீ 5682

தேனீக்களின் மூலம் மனிதர்களுக்குப் படிப்பினைகள்

தேனீக்களின் கூட்டு வாழ்க்கை மனிதர்களுக்கு கூடி வாழும் முறையையும், இன்னும் பல படிப்பினை களையும் கற்றுத் தருகிறது. ஒரு தேன் கூட்டில் நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை தேனீக்கள் இருக்கும். அதில் பத்து சதவீதம் ஆண் தேனீக்கள். சுமார் பதினைந்தாயிரம் வரை வேலைக்காரத் தேனீக்கள், மற்றவை பெண் தேனீக்கள். இவற்றில் இராணித் தேனி ஒன்று மட்டும் தான்.

அத்தனை தேனீக்களையும் ஒழுங்குபடுத்தி அவை தன் வேலைகளை சரியாக செய்வதற்கு கட்டளை பிறப்பித்து, ஆட்சி செய்வது அந்த ஒரு இராணித் தேனீ மட்டுமே! இது அல்லாஹ் தஆலாவுடைய மாபெரும் அறிவும், ஆற்றலுமாகும்.

மலர்களில் இருந்து நேரடியாக தேன் எடுக்கப் படுவதில்லை.

மலர்களில் இருந்து நேரடியாக தேன் எடுக்கப் படுவதில்லை. மாறாக அந்த மலர்களில் இருந்து ரசத்தை தேனீக்கள் உறிஞ்சி அது அவைகளின் வயிற்றில் சேகரிக்கப்பட்டு அங்கு இரசாயன மாற்றம் ஏற்பட்டு கெட்டியான தேனாக மாறுகிறது.ஆகவே தேனீக்களின் வயிற்றில் இருந்து அதன் கழிவுப் பொருளாக வெளியாகுவது தான் தேனாகும்

தேனீக்களின் உடலில் சென்று சில இராசயன மாற்றங்கள் ஏற்படுவதன் அடிப்படையில் தான் தேன் கிடைக்கிறது. பெண் தேனீக்கள் மட்டுமே தேன் கொண்டு வர வெளியில் செல்கின்றன. ஏனென்றால் மலரிலிருந்து அதன் ரசத்தை எடுக்கும் வகையில் நீளமான மூக்கை அல்லாஹ் அந்த பெண் தேனீக்களுக்கு மட்டுமே அமைத்துள்ளான்.  ஆண்தேனீக்களுக்கு அது இல்லை

தேனீக்களின் மூளை

தேனீக்களின் மூளை மிகச் சிறியதாகும். அந்த சிறிய மூளையின் வேகம் அதன் ஆற்றல் ஆகியவை இன்றைய சூப்பர் கம்ப்யூட்டரை விடவும் ஆயிரம் மடங்கு அதிகம். தேனீக்கள் அந்த சிறிய மூளையைக் கொண்டே   பறப்பது, பார்ப்பது,முகருவது, மலர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது, அதிகமாக தேன் எங்கேஇருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது  நீண்ட தூரம் பறந்து சென்றாலும் திசை தப்பாமல் தன் கூட்டுக்கு திரும்புவது, வேலைக்காரத் தேன் பூச்சிகளுக்கு சங்கேதக்குறிகளை அனுப்புவது,முன்பு எந்த மலரில் இருந்து தேன் எடுக்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்வது போன்ற பல்வேறு செயல்களை செய்து முடிக்கின்றன.

தேனின் பலன்கள்

நூற்றுக்குநூறு உடலுக்கு சத்துக்களைத்தருவது தேன்.

இரண்டு தேக்கரண்டி தேனில் ஒரு எலும்ச்சைப்பழச் சாறை கலந்து சூடாக பருகி வந்தால் இருமல்நீங்கும்

வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவடையும். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கணத்த உடல் இளைக்கும். அவ்வாறே தேனுடன் கேரட் சாறும், மிளகுத் தூள் கொஞ்சமும் சேர்த்து சாப்பிட்டால் உடல் இளைக்கும். தேனுடன் கேள்வரகு  ரொட்டியும், வேர்க்கடலைப் பொடியும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பருமனாகும். சுத்தமான தேன் எத்தனை காலம் ஆனாலும்கெடாது. மூளை வலுப்பெற,  நினைவாற்றல் அதிகரிக்க தேன் பருகி வருவதுடன் சுரைக்காய், மற்றும் பூண்டு ஆகியவற்றையும் சாப்பிட்டு வர வேண்டும். சத்தமான தேன் தானும் கெடாது. அதைத் தடவி வைக்கப்பட்ட பொருளையும் கெட்டுப் போக விடாது. மம்மி எனப்படும் சில இறந்தவர்களின் உடலை தேன் தடவி பாதுகாத்து வருகின்றனர்.

தேனீ மனிதனுக்கு தொந்தரவு செய்யக்கூடிய பூச்சியா?

தேனீ மனிதனுக்கு தொந்தரவு செய்யக்கூடிய பூச்சி அல்ல. மாறாக தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுகின்ற நேரத்தில் மட்டும் தற்காப்புக்காக அது கொட்டுகிறது. தேனீ கொட்டுவதின்மூலம் ஏற்படும் விஷம் மனிதனின் மூட்டு வலியை குணமடையச் செய்ய சிறந்த மருந்தாகும். பெண் தேனீக்கள் மட்டுமே கொட்டும். தேனீ பறக்கும்போது வினாடிக்கு 250 தடவை சிறகுகளை அசைப்பதால் அது பறக்கும்போது மெல்லியஒலி கேட்கிறது. அதை தேனீயின் ரீங்காரம் என்று கூறுவர்.

இறைச்சி, மீன் போன்றவற்றை தேன் தடவி வைத்து பாதுகாத்தால் மூன்று மாதங்கள் வரை அவைகள் கெட்டுப் போகாது. அலெக்சாண்டரின் உடலை தேன் தடவிய நிலையில் பல்லாண்டுகள் வரை பாதுகாத்து வந்தனர். கண்களில் சுர்மா தடவுவது போன்று தேனையும் தடவி வந்தால் பார்வை கூர்மையாகும். பற்களில் தேனைக் கொண்டு தடவி, பல்துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...