புதன், 13 ஏப்ரல், 2022

-12 ம் தராவீஹ் பயான்- சிரம மான நிலையிலும் ஹலாலைப் பேணிய குகைவாசிகள்

 

 - 12ம் தராவீஹ்  பயான்-

சிரம மான நிலையிலும் ஹலாலைப் பேணிய குகைவாசிகள்

وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا (19)الكهف

{فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَاماً} قال ابن عباس: أحل ذبيحة؛ لأن أهل بلدهم كانوا يذبحون على اسم الصنم، وكان فيهم قوم يخفون إيمانهم. ابن عباس: كان عامتهم مجوسا.(قرطبي

300 வருடங்கள் தூங்கி எழுந்தவுடன் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது தங்களில் ஒருவரை உணவு வாங்க அனுப்பும்போது ஹலாலான உணவாகப் பார்த்து வாங்கி வா என்று கூறி அனுப்பினார்கள். காரணம் அந்த ஊரில் நிறைய பேர் மஜூஸிகள். சிலர் மட்டும் மறைவாக ஈமான் கொண்டிருந்தனர். அத்தகைய ஈமான் தாரிகள் அறுத்த உணவையே வாங்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்கள்

தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆட்டிறைச்சி அதன் உரிமையாளரின் முறையான அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى (ابوداود) باب فِى اجْتِنَابِ الشُّبُهَاتِ.

பொருள்- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு தோண்டுபவரிடம் மய்யித்தின் தலை வைக்கும் பகுதியையும், கால் வைக்கும் பகுதியையும் பெரிதாக தோண்டுங்கள் என அறிவரை கூறக் கண்டேன். அங்கிருந்து திரும்பியவுடன் ஒரு பெண்ணின் சார்பாக விருந்துக்கு அழைக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள். பின்பு உணவு கொண்டு வரப்பட்டது. அதில் கை வைத்து அவர்கள் சாப்பிட ஆரம்பித்தவுடன் மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாயில் ஒரு கவளத்தை மட்டுமே விழுங்கியதை எங்களின் தந்தைமார்கள் கண்டார்கள். பின்பு எங்களிடம் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்ட  ஆட்டிறைச்சியாக இதை நான் காண்கிறேன் என்றார்கள். பின்பு விருந்து கொடுத்த பெண்ணிடம் விளக்கம் கேட்டு அனுப்ப அப்பெண் யாரஸூலல்லாஹ் எனக்கு ஒரு ஆடு வேண்டும் என பகீஉக்கு ஆள் அனுப்பினேன். அங்கு கிடைக்கவில்லை. பிறகு என் அண்டை வீட்டாரிடம் சென்று எனக்காக ஆடு வாங்கி வரும்படி ஆள் அனுப்பினேன். அவரும் இல்லை. பின்பு என் அவருடைய மனைவியிடம் கேட்டு அனுப்ப அவர் இந்த ஆட்டைக் கொடுத்தனுப்பினார் என்று கூற பின்பு  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இறைச்சியை தான் சாப்பிடாமல் காஃபிர்களான கைதிகளுக்கு இதை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். 

மக்காவாசிகள் காஃபிர்களாக இருந்தும் கஃபாவை கட்டும் விஷத்தில் ஹலாலைப் பேணிய சம்பவம்

கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது. 1.ஆதம் அலை அவர்கள் படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்களின் கரத்தால் கட்டவைத்தான். 2. ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள்.  3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாயீல் அலை அவர்கள் கட்டினார்கள்.இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. 4.நபி ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள்.  இந்த நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள். நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித கஃபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: கஃபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும்  கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஃபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. கஃபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கத் தயாராகினர். குறைஷிகளே! கஃபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ,மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது” என்று சொல்லிக்கொண்டு,  ஒவ்வொரு குறைஷிக் குலத்தாரும் தங்களுக்கிடையே அப் பணியைப் பிரித்துக் கொண்டு அப்பணியை செய்து முடித்தனர். ஆனால் குரைஷிகள் ஹலாலான பணப்பற்றாக்குறையின் காரணத்தினால் இன்றைக்கு உள்ள ஹதீமை கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர். .

சந்தேகத்திற்குரிய விஷயங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ (بخاري)2051

மார்க்கத்தில் சில விஷயங்கள் தெளிவாக ஹலால் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள், ஹலாலான வியாபாரம் போன்றவை. சில விஷயங்கள் தெளிவாக ஹராம் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக பன்றியின் இறைச்சி, வட்டியினால் வரும் வருமானம் போன்றவை. ஆனால் சில விஷயங்கள் ஹலால் என்றோ, அல்லது ஹராம் என்றோ தெளிவில்லாமல் இருக்கும். உதாரணமாக ஒருவருக்கு ஹலாலான வருமானமும் உண்டு. ஹராமான வருமானமும் உண்டு. அவர் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கினார். அது அவருடைய ஹலாலான வருமானத்திலிருந்து வந்ததா அல்லது ஹராமான வருமானத்திலிருந்து வந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பமான நிலையில் அந்த அன்பளிப்பை தவிர்ப்பதே நல்லது. அது ஹராமான இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் அதை பயன்படுத்தத் துணிந்து விட்டால் நாளை ஹராமையே துணிவோடு செய்கின்ற நிலை ஏற்படலாம்.

ஹராம் என்பது வேலி. அந்த வேலிக்கு அருகில் கால்நடைகளை மேய்த்துப் பழகி விட்டால் ஒருநாள் அந்த வேலிக்கு உள்ளேயே செல்கின்ற துணிச்சல் பிறந்து விடும். இக்கருத்தை மேற்காணும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.

إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أي المعاصي التي حرمها الله كالقتل والزنا والسرقة والقذف والخمر والكذب والغيبة والنميية وأكل المال بالباطل وأشباه ذلك . فكل هذا حمى الله تعالى . من دخله بارتكابه شيئا من المعاصي استحق العقوبة . ومن قاربه يوشك أن يقع فيه. فمن احتاط لنفسه لم يقاربه ولم يتعلق بشيء يقربه من المعصية فلا يدخل في شيء من الشبهات (شرح النووي علي مسلم) قال ابنُ رجب في شرحِ حديث النعمان رضي الله عنه :يُستَدلُّ بهذا الحديثِ مَن يذهب إلى سدِّ الذرائع إلى المحرمات وتحريم الوسائل إليها؛ ويدلُّ على ذلك أيضا قواعد الشريعة تحريم قليل ما يُسكر كثيره، وتحريم الخلوة بالأجنبية، وتحريم الصلاة بعد الصبح وبعد العصر؛ سَدّاً لذريعةِ الصلاةِ عند طلوعِ الشمسِ وعند غروبها, ومنع الصائم من المباشرة إذا كانت تحرك شهوته, ومَنعَ كثيرٌ من العلماءِ مُباشَرةَ الحائضِ فيما بين سُرتها ورُكبتها إلا من وراء حائل كما كان النبي صلى الله عليه وسلم يأمر امرأته إذا كانت حائضا أن تتزر فيباشرها من فوق الإزار (موسوعة البحوث والمقالات العلمية)

தன் வருமானம் ஹராமானதா அல்லது ஹலாலானதா என்பதைப் பற்றி அறவே பொருட்படுத்தாத காலம் வரும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ (بخاري) بَاب قَوْلِ اللَّهِ تَعَالَى {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا} (كتاب التفاسير)

ஷரீஅத்தை பேணி வாழ முடியாத காலத்திலும் தன்னால் முடிந்த வரை பேணுதலாக வாழ்பவரின் சிறப்பு

عَنْ الْمُعَلَّى بْنِ زِيَادٍ رَدَّهُ إِلَى مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ رَدَّهُ إِلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ رَدَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ (مسلم) بَاب فَضْلِ الْعِبَادَةِ فِي الْهَرْجِ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ السَّاعَةِ-  المراد بالهرج هنا الفتنة واختلاط أمور الناس وسبب كثرة فضل العبادة فيه أن

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...