13- ம் தராவீஹ் பயான்
خُلِقَ
الْإِنْسَانُ مِنْ عَجَلٍ (37) الانبياء
அவசரப்படுவது மனிதனின் ஆதி காலத்து குணம்
وعن
السدي لما نفخ فيه الروح فدخل في رأسه عطس ، فقالت له الملائكة : قل الحمد لله ،
فقال ذلك : فقال الله له : يرحمك ربك. فلما دخل الروح في عينيه نظر إلى ثمار الجنة
، ولما دخل الروح في جوفه اشتهى الطعام ، فوثب قبل أن تبلغ الروح رجليه إلى ثمار
الجنة. وهذا هو الذي أورث أولاده العجلة.
(الرازي
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து
ரூஹ் ஊதப் படும் போது மேலிருந்து துவங்கப்பட்டது. ரூஹ் தலையை அடைந்தவுடன் தும்மினார்கள். அப்போது அல்ஹம்து லில்லாஹ் சொல்லும்படி கற்றுத் தரப்பட்டது அவ்வாறே அல்ஹம்து லில்லாஹ்
சொன்னார்கள். உடனே அல்லாஹ் பதிலுக்கு யர்ஹமுக ரப்புக என்றான். அன்று முதல் இன்று வரை
நடைமுறை உள்ளது. பின்பு ஊதப்பட்டது. ரூஹ்
கண்ணை அடைந்தவுடன் தன் கண்களால்
சுவனத்துக் கனிகளைக் கண்டார்கள். பின்பு ரூஹ் வயிற்றை அடைந்தவுடன் அந்தப் பழங்களை உண்ணும் ஆசை
ஏற்பட்டது. ரூஹ் கால் வரை சென்று அடையும் முன்பே உடனே எழ ஆசைப்பட்டார்கள்.
அப்போதிருந்து அவசரப்படும் குணம் மனிதனுக்கு உருவாகி விட்டது.
மறதியும் ஆதி காலத்துப்
பழக்கம் தான்
عن أبي هريرة عن النبي ـ صلى الله
عليه و سلم ـ قال : إن الله خلق آدم من تراب ثم جعله طينا ثم تركه حتى إذا كان حمأ
مسنونا خلقه وصورة ثم تركه حتى إذا كان صلصالا كالفخار قال : فكان إبليس يمر به فيقول : لقد خلقت لأمر
عظيم ثم نفخ الله فيه روحه فكان أول شيء جرى فيه الروح بصره وخياشيمه فعطس فلقاه
الله حمد ربه فقال الرب : يرحمك ربك ثم قال الله : يا آدم اذهب إلى أولئك النفر
فقل لهم وانظر ما يقولون فجاء فسلم عليهم فقالوا : وعليك السلام ورحمة الله فجاء
إلى ربه فقال : ماذا قالوا لك ؟ ـ وهو أعلم بما قالوا له ـ قال : يا رب لما سلمت
عليهم قالوا : وعليك السلام ورحمة الله
قال : يا آدم هذا تحيتك وتحية ذريتك قال : يا رب وما ذريتي ؟ قال : اختر يدي يا آدم قال : أختار يمين ربي ـ
وكلتا يدي ربي يمين ـ فبسط الله كفه فإذا كل ما هو كائن من ذريته في كف الرحمن ـ
عز و جل ـ فإذا رجال منهم على أفواههم النور وإذا رجل يعجب آدم من نوره قال : يا رب من هذا ؟ قال : ابنك داود قال : يا
رب فكم جعلت له من العمر ؟ قال : جعلت له ستين قال : يا رب فأتم له من عمري حتى
يكون عمره مئة سنة ففعل الله وأشهد علىذلك فلما نفد عمر آدم بعث الله إليه ملك
الموت فقال آدم : أو لم يبق من عمري أربعون سنة ؟ قال الملك : ألم تعطها ابنك داود
؟ فجحد ذلك فجحدت ذريته ونسي فنسيت ذريته
([ مسند أبي يعلى ]
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ، قَالَ: "إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَمَّا أَنْ خَلَقَ
آدم، مَسَحَ ظَهْرَهُ، فَخَرَجَتْ مِنْهُ كُلُّ نَسَمَةٍ هُوَ خَالِقُهَا إِلَى
يَوْمِ الْقِيَامَةِ، وَنَزَعَ ضِلْعًا مِنْ أَضْلاعِهِ، فَخَلَقَ مِنْهُ
حَوَّاءً، ثُمَّ أَخَذَ عَلَيْهِمُ الْعَهْدَ:
" أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا
يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ " ، ثُمَّ
اخْتَلَسَ كُلَّ نَسَمَةٍ مِنْ بَنِي آدم بِنُورِهِ فِي وَجْهِهِ، وَجَعَلَ فِيهِ
الْبَلْوَى الَّذِي كَتَبَ أَنَّهُ يُبْتَلَى بِهَا فِي الدُّنْيَا مِنَ الأَسْقَامِ،
ثُمَّ عَرَضَهُمْ عَلَى آدم، فَقَالَ: يَا آدم، هَؤُلاءِ ذُرِّيَّتُكَ، وَإِذَا
فِيهِمُ الأَجْذَمُ، وَالأَبْرَصُ، وَالأَعْمَى، وَأَنْوَاعُ الأَسْقَامِ، فَقَالَ
آدم: يَا رَبِّ، لِمَ فَعَلْتَ هَذَا بِذُرِّيَتِي ؟ قَالَ: كَيْ تَشْكُرَ
نِعْمَتِي يَا آدم، وَقَالَ آدم: يَا رَبِّ، مَنْ هَؤُلاءِ الَّذِينَ أَرَاهُمْ
أَظْهَرَ النَّاسِ نُورًا ؟ قَالَ: هَؤُلاءِ الأَنْبِيَاءُ، يَا آدم، مِنْ
ذُرِّيَّتِكَ، قَالَ: فَمَنْ هَذَا الَّذِي أُرَاهُ أَظْهَرَهُمْ نُورًا ؟ قَالَ:
هَذَا دَاوُدُ يَكُونُ فِي آخِرِ الأُمَمِ، قَالَ: يَا رَبِّ، كَمْ جَعَلْتَ
عُمْرَهُ ؟ قَالَ: سِتِّينَ سَنَةً، قَالَ: يَا رَبِّ، كَمْ جَعَلْتَ عُمْرِي ؟
قَالَ: كَذَا وَكَذَا، قَالَ: رَبِّ فَزِدْهُ مِنْ عُمْرِي أَرْبَعِينَ سَنَةً
حَتَّى يَكُونَ عُمْرُهُ مِائَةَ (تفسير ابن ابي حاتم
அல்லாஹ் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மண்
பிண்டமாக படைத்து வைத்திருக்கும் நிலையில் இன்னும் ரூஹ் ஊதப்படாத அந்த
சூழ்நிலையில் அப்போதே ஷைத்தான் பொறாமையுடன் பார்த்தான். மற்றொரு அறிவிப்பில் நபி
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடம்பின் ஒரு பகுதி வழியாக உள்ளே புகுந்து மற்றொரு
பகுதி வழியாக வெளியே வந்தான். நபி ஆதம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்த பிறகு அல்லாஹ் சஜ்தா செய்யச் சொன்னதற்கு இதுவும்
காரணம். எந்த உடம்பை ஷைத்தான் கேவலப் படுத்தினானோ அந்த உடம்பை
கண்ணியப்படுத்தும்படி அல்லாஹ் ஏவினான். பிறகு தலை வழியாக ரூஹ் ஊதப்பட்டது. ரூஹ்
மூக்குப் பகுதியை அடைந்தவுடன் தும்மினார்கள். அப்போது அல்ஹம்து லில்லாஹ்
சொல்லும்படி அல்லாஹ்விடமிருந்து சொல்லித் தரப்பட்டது. நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களை அல்ஹம்து லில்லாஹ் சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வே யர்ஹமுகல்லாஹ் சொன்னான். பிறகு உடல் முழுவதும்
ரூஹ் ஊதப்பட்டவுடன் அல்லாஹ் முதன் முதலாக நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி
அதோ அங்கே மலக்குகள் இருப்பார்கள். அவர்களுக்கு ஸலாம் சொல்லுவீராக என்று ஏவ,
அவ்வாறே நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸலாம் சொன்னார்கள். அப்போது மலக்குகள்
வஅலைகஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் என பதிலளித்தார்கள். பிறகு அல்லாஹ்விடம் திரும்பி
வந்தவுடன் அல்லாஹ் தெரிந்து கொண்டே உமது ஸலாமுக்கு மலக்குகள் என்ன பதில்
சொன்னார்கள் என்று கேட்க, அவர்கள் சொன்னதை அப்படியே நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
கூறினார்கள். அப்போது அல்லாஹ் இது தான் இனி உமது சந்ததிகள் ஒருவரை ஒருவர்
பார்க்கும்போது சொல்ல வேண்டிய வாழ்த்துச் செய்தியாகும் என்றான்.
அப்போது நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
அல்லாஹ்விடம் சந்ததிகள் என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு விளக்கம் சொல்லித்
தந்த அல்லாஹ் பிறகு தன் இரு கைகளையும் காட்டி இரண்டில் ஒன்றைத் தொடும்படி
கூறினான். ரஹ்மானின் இரு கரங்களுமே பரக்கத்தானது தான். எனினும் நபி ஆதம்
அலைஹிஸ்ஸலாம் வலது கையைத் தேர்ந்தெடுத்தார்கள். அக்கையை அல்லாஹ் விரித்த போது
அத்தனை சந்ததிகளும் அதில் இருந்தனர். நாம் உட்பட.. மற்றொரு அறிவிப்பில் நபி ஆதம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகைத் தடவி அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரையும்
அல்லாஹ் வெளியாக்கிக் காட்டினான் என்றும் உள்ளது. அதில் ஒருவரின் பிரகாசம் அதிகம்
காணப்பட்டது. யார் இவர் என கேட்ட போது இவர் உமது சந்ததிகளில் தோன்றப் போகும்
தாவூத் அலைஹிஸ்ஸலாம் என்று அல்லாஹ் கூற, அவரின் வயது என்ன என்று கேட்க, அறுபது
என்று அல்லாஹ் சொன்னான். தன்னுடைய வாழ்நாளில் இருந்து 40 ஐ அவருக்குத் தந்து அதை
100 ஆக பூர்த்தியாக்க அல்லாஹ்விடம் கோரிய போது அல்லாஹ் அதை ஏற்றான்.
பிறகு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு
வந்தார்கள். வாழ்ந்தார்கள். சரியாக 1000 வயதிற்கு 40 வயது மிச்சம் இருக்கும்போது
மலக்குல் மவ்த் வந்து உயிரைக் கைப்பற்ற அனுமதி கேட்டார்கள். எனக்கு இன்னும்
40 வயது மிச்சம் உள்ளதே என நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூற, மலக்குல் மவ்த் நடந்த தை
நினைவு படுத்திய போது அதை நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஏற்க மறுத்தார்கள். அதாவது மறந்து
விட்டார்கள். முதன் முதலில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறந்தார்கள். இன்றும் அவர்கள்
பிள்ளைகள் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். மற்றொரு அறிவிப்பில் அன்றிலிருந்து
தான் அல்லாஹ் இனிமேல் முக்கியமான ஒப்பந்தங்களில் வாய் வார்த்தை கிடையாது எழுத்துப்
பூர்வமாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டளையிட்டான். எனவே தான் சில தஃப்ஸீர்களில்
பகரா சூராவின் கடன் பற்றிய வசனத்திற்கு விளக்கமாக இச்சம்பவம்
கூறப்பட்டுள்ளது.
படிப்பினை- 1. உலகின் முதல் மனிதர் பேசிய முதல்
வார்த்தை ஸலாம் ஆகும். 2. உயிரைக் கைப்பற்ற நபிமார்களிடம் மட்டுமே அனுமதி
கேட்கப்படும்.
தர்மம் செய்வதில் அவசரப்பட வேண்டும். முந்த வேண்டும்
عَنْ عُقْبَةَ قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ
قَامَ مُسْرِعًا فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ
حُجَرِ نِسَائِهِ فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ فَرَأَى
أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ
عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري
தொழுகையில் அவசரம் கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ
رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَرَدَّ وَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ يُصَلِّي كَمَا
صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ثَلَاثًا فَقَالَ وَالَّذِي
بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي فَقَالَ إِذَا قُمْتَ إِلَى
الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنْ الْقُرْآنِ ثُمَّ
ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا
ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ
جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا (بخاري
உலக விஷயங்களில் யோசித்து
முடிவு செய்ய வேண்டும்
قال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إذا أردت أن تفعل أمرا فتدبر عاقبته فإن كان خيرا فأمضه و إن كان شرا
فانته (فيض القدير) فتدبر عاقبته) بأن
تتفكر وتتأمل ما يصلحه ويفسده وتدقق النظر في عواقبه مع الاستخارة ومشاروة ذوي
العقول فالهجوم على الأمور من غير نظر في العواقب موقع في المعاطب فلذا قيل : ومن
ترك العواقب مهملات
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக