10-06-2022 துல்கஃதா- 9 |
|
بسم
الله الرحمن الرحيم நபிகளாரை(ஸல்) இழிவு
படுத்தியவர்களை அல்லாஹ் நிச்சயம் தண்டிப்பான். |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
முஸ்லிம்களையும் முஸ்லிம்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவ்வப்போது வசைபாடுவது பாசிசவாதிகளின்
வழமை. சமீபத்திய அவர்களின் போங்கு என்னவென்றால் அவர்களில் கீழ் நிலையில் உள்ள யாருக்கேனும் பதவி உயர்வு
வேண்டுமானால் முஸ்லிம்களை அல்லது இஸ்லாத்தை அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வசை பாடினால் போதும்
அவர் காவித் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார். கூடிய விரைவில் அவருக்குப்
பதவி உயர்வை காவித் தலைவர்களின் கொடுத்து விடுவார்கள். இதற்காகவே பல பாசிச
அடிமைகள் வேண்டுமென்றே முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் பாஜக தேசிய பெண்
செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, டைம்ஸ் நவ் என்ற தொலைக்காட்சி விவாதத்தில் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அவமரியாதையாகப் பேசினார். இச்செய்தி
வழக்கத்தை விட அதிகமாக அரபு நாடுகளில் பரவி அரபு நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்
தெரிவித்துள்ளது. அரபு நாடுகளில் பல வியாபார நிறுவனங்கள் இந்தியப் பொருட்களை
விற்பனை செய்யமாட்டோம் என்ற முடிவுக்கு வந்துள்ளன. இவற்றை அறிந்தவுடன் மத்திய அரசு
அந்த நுபுர் சர்மாவை பதவியில் இருந்து நீக்கி விட்டதாகவும் அவர் மீது விசாரணை
உண்டு எனவும் நாடகம் நடத்தியுள்ளது. கூடிய விரைவில் இவ்வாறு பேசியதற்காகவே அவர்
பதவி உயர்வு அளிக்கப்படுவார் என்பது தான் உண்மை. இவர்கள் நடத்தும் நாடகங்களையும்
சூழ்ச்சிகளையும் அல்லாஹ் விரைவில் அம்பலப்படுத்துவான்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு உயிரை விட மேலானவர்கள்.
அவர்களைப் கேவலமாக
பேசப்படுவதை எந்த முஸ்லிமும் பொருத்துக் கொள்ள மாட்டான்
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ
وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ
اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا
أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ
فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ (24التوبة)-النَّبِيُّ أَوْلَى
بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ (الاعراف6)
நபி ஸல்லல்லாஹுஅலைஹி
வஸல்லம் அவர்களின் மீது எச்சில் துப்ப நினைத்தவனை அல்லாஹ் கேவலப்
படுத்தினான்.
{وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى
يَدَيْهِ} هو عقبة بن أبي معيط، وكان صديقا لأمية بن خلف الجمحي ويروى لأبي بن خلف
أخ أمية، وكان قد صنع وليمة فدعا إليها قريشا، ودعا رسول الله صلى الله عليه وسلم
فأبى أن يأتيه إلا أن يسلم. وكره عقبة أن يتأخر عن طعامه من أشراف قريش أحد فأسلم
ونطق بالشهادتين، فأتاه رسول الله صلى الله عليه وسلم وأكل من طعامه، فعاتبه خليله
أمية بن خلف، أو أبي بن خلف وكان غائبا. فقال عقبة: رأيت عظيما ألا يحضر طعامي رجل
من أشراف قريش. فقال له خليله: لا أرضى حتى ترجع وتبصق في وجهه وتطأ عنقه وتقول
كيت وكيت. ففعل عدو الله ما أمره به خليله؛ فأنزل الله عز وجل: {وَيَوْمَ يَعَضُّ
الظَّالِمُ عَلَى يَدَيْهِ} قال الضحاك: لما بصق عقبة في وجه رسول الله صلى الله
عليه وسلم رجع بصاقه في وجهه وشوى وجهه وشفتيه، حتى أثر في وجهه وأحرق خديه، فلم
يزل أثر ذلك في وجهه حتى قتل. (تفسير قرطبي
கருத்து- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில்
முஸ்லிம்களின் எதிரிகளாக இருந்தவர்களில் உக்பா என்பவனும் ஒருவன். இந்த உக்பா ஒரு
தடவை தன் வீட்டு திருமண விருந்துக்கு குறைஷிகள் அனைவரையும் அழைத்திருந்தான். அந்த
வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களையும் அந்த விருந்துக்கு அழைத்திருந்தான். ஆனால் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களோ நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் தான் நான்
விருந்துக்கு வருவேன் என்று நிபந்தனை விதித்தார்கள் அந்த உக்பாவுக்கோ நம்முடைய
விருந்தில் ஒருவர் தவறாமல் அனைவரும் கலந்து கொண்டால் தான் நமக்கு கவுரவம். அவ்வாறு
இல்லா விட்டால் நம்முடைய கவுரவம் போய்விடும் என்று கருதினான் அதனால் இஸ்லாத்தை
ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி வெறுமனே உதட்டளவில் கலிமாவை கூறினான். இதற்குப்
பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களும் விருந்துக்கு வர சம்மதித்தார்கள். இந்த நிலையில் உக்பாவின் நண்பன் உமய்யா
என்பவன் உக்பாவிடம் நீ முஹம்மதை
விருந்துக்கு அழைத்திருப்பதாக கேள்விப்பட்டேனே நீ அவருடைய மதத்தை ஏற்றுக்
கொண்டதாகவும் கேள்விப்பட்டேனே அது உண்மையா என்று கேட்க, அதற்கு உக்பா நான் வெறுமனே
உதட்டளவில் மட்டும் தான் கலிமா சொன்னேன். இல்லா விட்டால் அவர் விருந்துக்கு வர
மாட்டேன் என்று மறுக்கிறார். என்று கூற உடனே அவனுடைய கெட்ட நண்பனான உமய்யா அதை
ஏற்க மறுத்து அவனுடன் சண்டை போட்டான். கடைசியில் கெட்ட நண்பனான உமய்யா சொன்னான் நீ
உண்மையாகவே அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று என்னிடம் நிரூபித்துக் காட்டு
அதாவது அந்த முஹம்மத் இங்கே விருந்துக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தவுடன் நீ அவருடைய
முகத்தில் எச்சில் துப்ப வேண்டும். பிறகு அவருடைய கழுத்தை நெறிக்க வேண்டும்
அப்போது தான் நான் உன்னை நம்புவேன் என்ற கூற, அந்த உக்பா சரி நான் அவ்வாறே
செய்கிறேன் என்று கூறி சம்மதித்தான். சற்று நேரத்தில் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்து சாப்பிட ஆரம்பித்தவுடன் இருவரும் பேசி
வைத்தது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் முகத்தில் எச்சில் துப்ப முயற்சித்த போது அந்த எச்சில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகத்தில்
படாத வகையில் சுவற்றில் மீது வீசப்படும் பந்து போல அப்படியே ரிட்டன் வந்து
உக்பாவுடைய முகத்தில் படிந்தது. அதுமட்டுமல்ல
அந்த எச்சில் திரும்பி ரிட்டன் வரும்போது கடும் சூடான நிலையில் ஆசிட்
போன்று ஆகி விட்டது. அதனால் அந்த எச்சில் பட்டு உக்பாவின் முகம் கரிந்தது. உதடுகளும்
கரிந்தன. அந்த காயத்தை சரி செய்ய எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அந்த தளும்பு கடைசி
வரைக்கும் மாறவேயில்லை. கடைசியில் அவன் ஒரு போரில் கொல்லப்பட்டான் அதுவரை அந்த
தளும்பு அவனுடைய முகத்தை விட்டும் மறையவேயில்லை-
தஃபஸீருல் குர்துபீ.
أَنَّ
عُتْبَةَ بْنَ أَبِى لَهَبٍ كَانَ شَدِيدَ الأَذَى لِلنَّبِىِّ -صلى
الله عليه وسلم- فَقَالَ :« اللَّهُمَّ سَلِّطْ
عَلَيْهِ كَلْبًا مِنْ كِلاَبِكَ ». فَخَرَجَ عُتْبَةُ إِلَى الشَّامِ مَعَ
أَصْحَابِهِ فَنَزَلَ مَنْزِلاً فَطَرَقَهُمُ الأَسَدُ فَتَخَطَّى إِلَيْهِ مِنْ
بَيْنِ أَصْحَابِهِ فَقَتَلَهُ (بيهقي)- وروي أنه (عتبة بن أبي لهب)كان مبالغاً في
عداوت النبي صلي الله عليه وسلم ، فقال النبي صلي الله عليه وسلم : اللهم سلط عليه
كلباً من كلابك فوقع الرعب في قلب عتبة وكان يحترز فسار ليلة من الليالي فلما كان
قريباً من الصبح ، فقال له أصحابه : هلكت الركاب فما زالوا به حتى نزل وهو مرعوب
وأناخ الإبل حوله كالسرادق فسلط الله عليه الأسد وألقى السكينة على الإبل فجعل
الأسد يتخلل حتى افترسه ومزقه ،(قرطبي)
عن
عروة ابن الزبير رضي الله عنهما أن
عتبة بن أبي لهب وكان تحته بنت رسول الله صلى
الله عليه وسلم أراد الخروج إلى الشام فقال: لآتين
محمدا فلأوذينه، فأتاه ثم تفل في وجه رسول الله صلى الله عليه وسلم، ورد عليه
ابنته وطلقها؛ فقال رسول الله صلى الله عليه وسلم: "اللهم
سلط عليه كلبا من كلابك" وكان أبو طالب حاضرا فوجم لها وقال: ما كان أغناك يا
ابن أخي عن هذه الدعوة، فرجع عتبة إلى أبيه فأخبره، ثم خرجوا إلى الشام، فنزلوا
منزلا، فأشرف عليهم راهب من الدير فقال لهم: إن هذه أرض مسبعة. فقال أبو لهب
لأصحابه: أغيثونا يا معشر قريش هذه الليلة! فإني أخاف على ابني من دعوة محمد؛
فجمعوا جمالهم وأناخوها حولهم، وأحدقوا بعتبة، فجاء الأسد يتشمم وجوههم حتى ضرب
عتبة فقتله. (قرطبي)
அபூலஹப் உடைய மகன் உத்பா
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெரும்
விரோதியாக இருந்தான். மற்றொரு அறிவிப்பின் படி நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்
அவர்கள் நிகாஹ் பற்றிய சட்டங்கள் வரும் முன்பு தனது மகளை அபூலஹப் உடைய மகன்
உத்பாவுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்கள். ஆனால் எப்போது லஹப் சூரா
இறங்கியதோ அப்போது தந்தை அபூலஹபின் உத்தரவின்படி நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்
அவர்களின் மகளை தலாக் கூறியதுடன் மிகவும் கடுமையாக நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களைத்
திட்டினான். அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாஅல்லாஹ் இவன்
மீது உன்னுடைய சிங்கங்களில் ஒரு சிங்கத்தை ஏவுவாயாக என்று துஆ செய்தார்கள். மகன்
மீதான இந்த சாபம் அபூலஹபுடைய மளதிலும் ஒரு பீதியை ஏற்படுத்தியது. எங்கு சென்றாலும்
கவனமாக இரு. என மகனை எச்சரித்தான். அன்று முதல் உத்பா எப்போது வெளியே சென்றாலும்
பாதுகாப்புடன் செல்வான். ஒருமுறை ஷாமுக்கு குடும்பத்துடன் சென்றபோது ஒரு இடத்தில்
தங்கும் நேரத்தில் அங்குள்ள பாதிரி ஒருவர் இங்கு சிங்கங்களின் நடமாட்டம் அதிகம்
உள்ளது என்றார். அப்போது அபூலஹப் தன் குடும்பத்தார் அனைவரிடமும் இன்று இரவு
மட்டும் எப்படியாவது என் மகனை எல்லோரும் சேர்ந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்
என்றான். ஏனெனில் முஹம்மதின் சாபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றான்.
அவர்கள் அனைவரும் மகனைப் பாதுகாக்கும் விதமாக சுற்றிலும் படுத்தார்கள். அப்படியிருந்தும்
நடு இரவில் ஒரு சிங்கம் வந்து அவனை மட்டும் குதறிக் கொன்றது.
நபி(ஸல்) அவர்களுக்கு எவன் எதிரியோ அவன் அல்லாஹ்வுக்கும் எதிரி...
أن
فرعون مع كمال سلطته ما كان يزيد كفره على القول ، وما كان ليتعرض لقتل موسى عليها
السلام ولا لإيذائه. وأما أبو جهل فهو مع قلة جاهه كان / يقصد قتل النبي صلى الله
عليه وسلّم وإيذاءه وثالثها : أن فرعون أحسن إلى موسى أولاً ، وقال آخراً :
{ءَامَنتُ} . وأما أبو جهل فكان يحسد النبي في صباه ، وقال في آخر رمقه : بلغوا
عني محمداً أني أموت ولا أحد أبغض إلي منه (تفسير الرازي
அபூஜஹ்ல், ஃபிர்அவ்ன்
இருவரில் மிக மோசமானவன் யார்? என்று மேலோட்டமாக
சிந்திக்கக் கூடிய ஒருவருக்கு அபூஜஹ்ல்
தன்னை கடவுள் என்று சொல்லவில்லையே ஆனால் ஃபிர்அவ்ன் தன்னை கடவுள் என்றல்லவா
சொன்னான். எனவே ஃபிர்அவ்ன்தான் மிக மோசமானவன் என்று எண்ணத் தோன்றும். ஆனால்
அல்லாஹ் தனது திருமறையில் ஃபிர்அவ்னைப் பற்றி குறிப்பிடும் போது
اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى (24)
அவன் வரம்பு மீறுகிறான்
என்று கூறும் அல்லாஹ் அபூஜஹ்லைப் பற்றி அலக் சூராவில்
لَيَطْغَى நிச்சயமாக அவன் மிகவும் வரம்பு மீறுகிறான் என்று சாடுகிறான். இதை வைத்து
விரிவுரையாளர்கள் ஃபிர்அவ்னை விட அபூஜஹ்ல்
தான் மோசமானவன் என்று கூறுவதோடு, அதற்கு சில ஆதாரங்களையும் முன் வைக்கிறார்கள்
1.அபூஜஹ்லை விட ஃபிர்அவ்ன் ஆட்சி, அதிகாரத்தில்பல மடங்கு பெரியவன்.
அவ்வாறிருந்தும் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களை பலமுறை மிரட்டியுள்ளானோ தவிர, ஒருமுறை
கூட கொல்ல முயலவில்லை. ஆனால் அபூஜஹ்ல் பதவியிலும் அதிகாரத்திலும் பெரிய அளவில்
இல்லாதிருந்தும் பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொல்ல முயன்றான். பலமுறை துன்புறுத்தினான்.
2.ஃபிர்அவ்ன் ஆரம்ப காலத்தில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தத்தெடுத்து வளர்த்தான். பாசமாகவும் இருந்தான்.
பிறகு தான் அவன் அவன் எதிரியாக மாறினான். அப்போதும் கூட கடைசி நேரத்தில் மூஸாவுடைய
ரப்பை நான் நம்புகிறேன் என்றான். எனினும் தவ்பா ஏற்கப்படும் காலக்கெடு
முடிவடைந்ததால் அவனுடயை ஈமான் ஏற்கப்படவில்லை. ஆனால் அபூஜஹ்ல் தன் சிறு வயதில்
இருந்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிரியாக இருந்தான். உயிர் பிரியும் கடைசி நேரத்தில் கூட
بَلِّغُوْا
عَنِّي مُحَمَّداً أَني أَمُوتُ ولا أحد أبغضَ إليَّ منه
முஹம்மதுக்கு என் கடைசி வார்த்தையை தெரிவித்து
விடுங்கள். நான் மரணிக்கும் இந்த நேரத்திலும் கூட
அவர் தான் எனக்கு மிகப்பெரும் எதிரி என்று கூறிய நிலையில் இறந்தான்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو جَهْلٍ هَلْ يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ
بَيْنَ أَظْهُرِكُمْ قَالَ فَقِيلَ نَعَمْ فَقَالَ وَاللَّاتِ وَالْعُزَّى لَئِنْ
رَأَيْتُهُ يَفْعَلُ ذَلِكَ لَأَطَأَنَّ عَلَى رَقَبَتِهِ أَوْ لَأُعَفِّرَنَّ
وَجْهَهُ فِي التُّرَابِ قَالَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي زَعَمَ لِيَطَأَ عَلَى رَقَبَتِهِ قَالَ فَمَا
فَجِئَهُمْ مِنْهُ إِلَّا وَهُوَ يَنْكُصُ عَلَى عَقِبَيْهِ وَيَتَّقِي بِيَدَيْهِ
قَالَ فَقِيلَ لَهُ مَا لَكَ فَقَالَ إِنَّ بَيْنِي وَبَيْنَهُ لَخَنْدَقًا مِنْ
نَارٍ وَهَوْلًا وَأَجْنِحَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ لَوْ دَنَا مِنِّي لَاخْتَطَفَتْهُ الْمَلَائِكَةُ عُضْوًا عُضْوًا
قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَا نَدْرِي فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ
أَوْ شَيْءٌ بَلَغَهُ{ كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى أَنْ رَآهُ اسْتَغْنَى
إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى أَرَأَيْتَ الَّذِي يَنْهَى عَبْدًا إِذَا صَلَّى
أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَى أَوْ أَمَرَ بِالتَّقْوَى أَرَأَيْتَ إِنْ
كَذَّبَ وَتَوَلَّى }يَعْنِي أَبَا جَهْلٍ (مسلم)
அபூஹுரைரா ரழி கூறியுள்ளார்கள் - ஒருமுறை அபூஜஹ்ல் தன்
சகாக்களிடம் உங்களில் எவரேனும் முஹம்மது தன் தலையைக் கீழே வைப்பதை (சஜ்தா செய்வதைப்) பார்த்தீர்களா? என்று கேட்க, ஆம்! அவர் சஜ்தா செய்கிறார் என்று மற்றவர்கள்
கூறினர். உடனே கோபமடைந்த அபூஜஹ்ல் (நான் பலமுறை சொல்லியும்
அவர் கேட்கவில்லை) இப்போது நான் அவரிடம் சென்று அவர் தனது தலையை
கீழே வைத்திருப்பதை நான் கண்டால் அவருடைய கழுத்திலேயே நான் மிதிப்பேன். அல்லது
அவர் தலையை கீழே வைத்திருக்கும் நிலையிலேயே அந்த த் தலையை மண்ணில் புதைத்து விடுவேன்
என்று கூறியவனாக நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி வந்தான்.
அப்போது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். உடனே அவர்களின் கழுத்தில்
மிதிக்கும் நோக்கத்தில் அண்ணலாரை நெருங்கி, கைகளையும் நீட்டிய போது எதையோ கண்டு
பயந்து பின்வாங்கினான். நீட்டிய அவனது கைகளையும் சுருக்கிக் கொண்டான். அவனிடம்
என்ன ஆயிற்று உமக்கு? என காரணம் கேட்கப்பட்ட போது, நிச்சயமாக நான் அவரை நெருங்கியபோது எனக்கும்,
அவருக்குமிடையில் பெரிய நெருப்புப் பள்ளம் இருப்பதையும், சில ராட்சத
இறக்கைகளையும், பயமுறுத்தக் கூடியவைகளையும் நான் கண்டேன். என்று அபூஜஹ்ல் கூறினான்.
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
அறிவிக்கும்போது “ஒருவேளை அவன் என்னை நெருங்கியிருந்தால் அந்த இறக்கைகளுக்குச் சொந்தமான
மலக்குமார்கள் அவனைத் துண்டு துண்டாக ஆக்கி அந்த நெருப்புப் பள்ளத்தில்
வீசியிருப்பார்கள்” எனக்கூறினார்கள். நூல் முஸ்லிம்
நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் நற்பெயருக்குக் களங்கம்
ஏற்படுத்தியவன்
இறந்த பிறகு அவனை பூமி ஏற்கவில்லை
عَنْ
أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَجُلٌ نَصْرَانِيًّا فَأَسْلَمَ
وَقَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ فَكَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَادَ نَصْرَانِيًّا فَكَانَ يَقُولُ مَا يَدْرِي
مُحَمَّدٌ إِلَّا مَا كَتَبْتُ لَهُ فَأَمَاتَهُ اللَّهُ فَدَفَنُوهُ فَأَصْبَحَ
وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَقَالُوا هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ
لَمَّا هَرَبَ مِنْهُمْ نَبَشُوا عَنْ صَاحِبِنَا فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ
فَأَعْمَقُوا فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَقَالُوا هَذَا فِعْلُ
مُحَمَّدٍ وَأَصْحَابِهِ نَبَشُوا عَنْ صَاحِبِنَا لَمَّا هَرَبَ مِنْهُمْ
فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ وَأَعْمَقُوا لَهُ فِي الْأَرْضِ مَا اسْتَطَاعُوا
فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَعَلِمُوا أَنَّهُ لَيْسَ مِنْ النَّاسِ
فَأَلْقَوْهُ (بخاري3617
கருத்து-ஒரு கிறிஸ்தவன்
இஸ்லாத்தை ஏற்றான். அவன் நன்கு எழுதக் கூடியவனாக இருந்ததால் அவனை வஹீயை
எழுதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஏற்படுத்தியிருந்தார்கள். பிறகு அவன் மீண்டும் கிறிஸ்தவனாக மாறி விட்டான். அத்துடன்
மக்களிடம் முஹம்மதுக்கு ஒன்றுமே தெரியாது. நான் எழுதிக் கொடுத்ததை வைத்துத்தான்
வஹீ என்று சொல்லி முஹம்மத் மக்களுக்குக் கூறுகிறார். என்று பொய்யான செய்தியை
மக்களுக்குப் பரப்பினான். ஒருநேரத்தில் அவன் இறந்தபோது அவனை அவனது குடும்பத்தினர்
அடக்கம் செய்தனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவனது சடலம் வெளியே வந்து
கிடந்தது. இது முஹம்மதுடைய (ஸல்) ஆட்களின் வேலையாக இருக்கும் என்றெண்ணி மீண்டும்
அவனை இன்னும் ஆழமாக குழி தோண்டி அடக்கினார்கள். மறுநாள் காலை வந்து பார்த்தபோது
அவனது சடலம் மீண்டும் வெளியே வந்து கிடந்தது. இது முஹம்மதுடைய (ஸல்) ஆட்களின் வேலையாக இருக்கும் என்றெண்ணி மீண்டும்
அவனை இன்னும் ஆழமாக குழி தோண்டி அடக்கினார்கள். மூன்றாவது நாளும் அவ்வாறே சடலம்
வெளியே தள்ளப்பட்டபோது இது மனிதர்களின் வேலையல்ல என்று உணர்ந்து அவனது சடலத்தை
அப்படியே போட்டு விட்டுச் சென்றனர்.
உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான மனோ நிலை மாறுவதற்காக
ஹாஜிகள்
துஆ ஏற்கப்படும் இடங்களைத் தேர்வு செய்து துஆச் செய்ய
வேண்டும்.
கஃபாவுக்குள் நுழைந்தவுடன் கஃபாவைப் பார்க்கும் முதல்
பார்வையில் துஆ
عن
ابن جريج : أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى البيت رفع يديه ، وقال :
اللهم " زد هذا البيت تشريفا وتعظيما وتكريما ومهابة ، وزد من شرفه ، وكرمه
ممن حجه أو اعتمره تشريفا وتعظيما وتكريما وبرا "
عن
سعيد بن المسيب أنه كان إذا دخل المسجد : الكعبة ، ونظر إلى البيت قال : اللهم أنت
السلام ومنك السلام فحينا ربنا بالسلام. [ مصنف ابن أبي شيبة ]
قال
الشافعي رضي الله عنه : وإذا رأى البيت قال : اللَّهُمَّ زدْ هذا البيت شرفاً وتعظيماً ، وتكريماً ومهابةً ،
وزدْ من شَرَّفَه وعظَّمَه وكرَّمَه ممن
حَجهَّ واعتمره تشريفاً وتكريماً وبراً ، اللَّهُمَّ أنت السلامُ ومنك السلامُ فحيِّنا ربنا بالسلام . (سنن الصغرى للبيهقي
அரபா மைதானத்தில் செய்யும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்
عَنْ
عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا
قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ
لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ
قَدِيرٌ (ترمذي
ஸயீ ஆரம்பிக்கும்போது
சஃபா மீது நின்று கஃபாவைப் பார்த்த படி கேட்கும் துஆக்கள் ஏற்கப்படும்.
عن
جابر رضي الله عنه ..... فَبَدَأَ (أي النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ) بِالصَّفَا فَرَقِيَ عَلَيْهِ
حَتَّى رَأَى الْبَيْتَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَوَحَّدَ اللَّهَ وَكَبَّرَهُ
وَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ
وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ ثُمَّ
دَعَا بَيْنَ ذَلِكَ قَالَ مِثْلَ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ نَزَلَ إِلَى
الْمَرْوَةِ حَتَّى إِذَا انْصَبَّتْ قَدَمَاهُ فِي بَطْنِ الْوَادِي سَعَى حَتَّى
إِذَا صَعِدَتَا مَشَى حَتَّى أَتَى الْمَرْوَةَ فَفَعَلَ عَلَى الْمَرْوَةِ كَمَا
فَعَلَ عَلَى الصَّفَا..(مسلم
முஜ்தலிஃபாவில்
கேட்கும் துஆவும் ஏற்கப்படும்.
عن جابر رضي الله عنه ..... ثُمَّ رَكِبَ (أي النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ) الْقَصْوَاءَ حَتَّى أَتَى
الْمَشْعَرَ الْحَرَامَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَدَعَاهُ وَكَبَّرَهُ
وَهَلَّلَهُ وَوَحَّدَهُ فَلَمْ يَزَلْ وَاقِفًا حَتَّى أَسْفَرَ جِدًّا فَدَفَعَ
قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ (مسلم)
ஜம்ரத்துல் ஊலா மற்றும்
ஜம்ரத்துல் உஸ்தாவில் கல்லெறியும்போது…
عَنْ الزُّهْرِيِّ أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَمَى الْجَمْرَةَ الَّتِي
تَلِي مَسْجِدَ مِنًى يَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى
بِحَصَاةٍ ثُمَّ تَقَدَّمَ أَمَامَهَا فَوَقَفَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا
يَدَيْهِ يَدْعُو وَكَانَ يُطِيلُ الْوُقُوفَ ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ
الثَّانِيَةَ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ
ثُمَّ يَنْحَدِرُ ذَاتَ الْيَسَارِ مِمَّا يَلِي الْوَادِيَ فَيَقِفُ مُسْتَقْبِلَ
الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الَّتِي عِنْدَ
الْعَقَبَةِ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ عِنْدَ كُلِّ حَصَاةٍ ثُمَّ
يَنْصَرِفُ وَلَا يَقِفُ عِنْدَهَا (بخاري -بَاب الدُّعَاءِ عِنْدَ
الْجَمْرَتَيْنِ
கஃபாவுக்குள் அல்லது
ஹதீமுக்குள் இருக்கும்போது…
عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ ابْنَ
عَبَّاسٍ قَالَ لَمَّا دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا (مسلم
ஜம்ஜம் நீர்
அருந்தும்போது
عَنِ
ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَاءُ
زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ إِنْ شَرِبْتَهُ تَسْتَشْفِى بِهِ شَفَاكَ اللَّهُ
وَإِنْ شَرِبْتَهُ لِشِبَعِكَ أَشْبَعَكَ اللَّهُ بِهِ وَإِنْ شَرِبْتَهُ لِقَطْعِ
ظَمَئِكَ قَطَعَهُ وَهِىَ هَزْمَةُ جِبْرِيلَ وَسُقْيَا اللَّهِ إِسْمَاعِيلَ
».(دار قطني
ஹஜ்ஜில் 15 இடங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் இடங்களாக
கூறப்பட்டுள்ளது.
وَفِي
رِسَالَةِ الْحَسَنِ الْبَصْرِيِّ الَّتِي أَرْسَلَهَا إلَى أَهْلِ مَكَّةَ أَنَّ
الدُّعَاءَ هُنَاكَ يُسْتَجَابُ فِي خَمْسَةَ عَشَرَ مَوْضِعًا فِي الطَّوَافِ
وَعِنْدَ الْمُلْتَزَمِ وَتَحْتَ الْمِيزَابِ وَفِي الْبَيْتِ وَعِنْدَ زَمْزَمَ
وَخَلْفَ الْمَقَامِ وَعَلَى الصَّفَا وَعَلَى الْمَرْوَةِ وَفِي السَّعْيِ وَفِي
عَرَفَاتٍ وَفِي مُزْدَلِفَةَ وَفِي مِنًى وَعِنْدَ الْجَمَرَاتِ الثَّلَاثِ ،. (كتاب
الحج من البحر الرائق شرح كنز الدقائق)
(الدر المنثور
ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் மக்காவாசிகளுக்கு அனுப்பிய கடித
த்தில் பின்வருமாறு இருந்த து. மக்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 15 இடங்கள்
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடங்களாகும். 1. தவாஃப் செய்யும்போது 2. முல்தஜிம் அதாவது
ஹஜருல் அஸ்வதுக்கும் கஃபாவின் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதி 3. மீஜாபுக்குக் கீழே (அதாவது மழை நீர் வடிவதற்காக
அமைக்கப்பட்டுள்ள தங்க நிற குழாயின் கீழ்) 4. கஃபாவுக்குள் (அல்லது ஹதீமுக்குள்
இருக்கும்போது…) 5. ஜம்ஜம் நீர் அருந்தும்போது 6. மகாமே
இப்றாஹீம் அருகில் 7. சஃபாவின் மீது 8. மர்வா மீது நின்ற படி 9. சயீ செய்யும்போது
10. அரஃபா மைதானம் 11. முஜ்தலிஃபா 12. மினா 13,14,15. மூன்று ஜம்ராக்கள்
அல்ஹம்து லில்லாஹ்
பதிலளிநீக்குஅழகிய முறை பயான் தொகுப்பு
ஜஸாகல்லாஹூ யா உலமாயே கிராம்.
ஷெரீப் ரப்பாணி