18-11-2022 |
|
بسم
الله الرحمن الرحيم நோயாளியை நலம்
விசாரிப்பதன் நன்மைகளும் வழிமுறைகளும் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
ஒரு முஃமின் பிற முஃமினுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில்
நோயாளியை நலம் விசாரிப்பதும் ஒன்று عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ
وَنَهَانَا عَنْ سَبْعٍ أَمَرَنَا بِاتِّبَاعِ الْجَنَائِزِ وَعِيَادَةِ
الْمَرِيضِ وَإِجَابَةِ الدَّاعِي وَنَصْرِ الْمَظْلُومِ وَإِبْرَارِ الْقَسَمِ
وَرَدِّ السَّلَامِ وَتَشْمِيتِ الْعَاطِسِ (بخاري
1) நோயாளியை உடல் நலம் விசாரித்தல், 2) ஜனாஸாவை (நல்லடக்கம் செய்ய) பின் தொடர்ந்து செல்லுதல், 3) தும்மியவருக்கு (யர்ரஹ்முகல்லாஹ் எனக்கூறி) துஆச் செய்தல், 4) சத்தியம் செய்தவரின் சத்தியத்தை (அது நன்மையானதாக இருந்தால்
அதனை) நிறை வேற்றி வைத்தல். 5) அநீதி
இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்தல், 6) அழைப்புக்
கொடுத்தவருக்கு (விருந்துக்கு) பதிலளித்தல் 7) ஸலாமை (மக்களிடையே) பரப்புதல் ஆகிய (ஏழு) விஷயங்களை
நபி(ஸல்) எங்களுக்கு ஏவினார்கள்.
عَنْ
ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَادَ مَرِيضًا
لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا خُرْفَةُ
الْجَنَّةِ قَالَ جَنَاهَا (مسلم
நபி(ஸல்) கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் சகோதரரை உடல் நலம் விசாரித்தால், அவரிடமிருந்து அவர்
திரும்பும் வரை 'குர்பத்துல் ஜன்னா'வில் ஆகிடுவார்.
அல்லாஹ்வின் தூதரே 'குர்பத்துல்
ஜன்னா' என்றால்
என்ன? என்று
அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அது சுவர்க்கத்தில் பறிக்கப்பட்ட கனிகள் ஆகும் எனக்
கூறினார்கள்.
நோயாளியை நலம் விசாரித்தால் அல்லாஹ் மகிழ்ச்சி அடைவான்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ
الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي قَالَ يَا رَبِّ كَيْفَ
أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي
فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي
عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي قَالَ يَا رَبِّ
وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ
اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ
أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ
تَسْقِنِي قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ
اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ
وَجَدْتَ ذَلِكَ عِنْدِي ( مسلم
நபி(ஸல்)
கூறினார்கள்: நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் (மனிதர்களை அழைத்து) 'ஆதமின்
மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?' என கேட்பான். அப்பொழுது அடியான்,'என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் 'என்
அடியான் நோய்வாய்ப் பட்டிருந்தான். அவனை
நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ
அறிவாயா?
என்று கூறுவான். 'ஆதமின்
மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ
எனக்கு உணவளிக்க வில்லை?' என்று அல்லாஹ் கேட்பான்.
அதற்கு அடியான் 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் 'என்
இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ
அறிவாயா?
நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?' என்று கூறுவான். 'ஆதமின்
மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்ட வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர்
புகட்டவில்லை'
என்று அல்லாஹ் கூறுவான்.அதற்கு அடியான். 'என்
இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின்
இரட்சகனாக இருக்கிறாய்' என்று கூறுவான். அதற்கு
அல்லாஹ்,
'என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி
வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர்
புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?' என்று கூறுவான்.
சஃது ரழி
அவர்களை நலம் விசாரித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا
بِمَكَّةَ وَهُوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالْأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا
قَالَ يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُوصِي
بِمَالِي كُلِّهِ قَالَ لَا قُلْتُ فَالشَّطْرُ قَالَ لَا قُلْتُ الثُّلُثُ قَالَ
فَالثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ
خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ (بخاري
நபி
(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை
நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின்
தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக்
கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே
ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை
தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, "வேண்டாம்"
என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது
சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?"
எனக்
கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில்
மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா?
என
நான் மீண்டும் கேட்க, "மூன்றில் ஒரு பங்கு
என்பது அதிகம்", என்று சொன்ன நபி (ஸல்)
அவர்கள் "மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச்
செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது" என நபி (ஸல்)
அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி: 3936, 4409, 5668,
6373; முஸ்லிம்;
முஸ்லிம் அல்லாதவரையும் நோய் விசாரிக்கச் செல்லுதல்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ غُلَامٌ
يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ
فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ
رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ
لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ
فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ الْحَمْدُ
لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ النَّارِ . (بخاري
யூத மதத்திலுள்ள ஒரு சிறுவன் நோயுற்றிருந்தான். அவனை
நோய் விசாரிப்பதற்கு சென்றிருந்த நபி(ஸல்) அவர்கள் அப்பையனின் தலைப்பக்கமாக
உட்கார்ந்து அப்பையனிடம் நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் எனக் கூறினார்கள். அப்பையனின்
தலைப்பக்கம் நின்று கொண்டிருந்த தன் தந்தையை அப்பையன் பார்த்தான். அபுல்காசிமுக்கு
கட்டுப்படு என அப்பையனின் தந்தை கூறினார். அப்பையன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
என் மூலம் அப்பையனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என
கூறியவாறு எழுந்து சென்றார்கள்.
நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றால் என்ன சொல்ல வேண்டும்.
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ
يَعُودُهُ قَالَ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا
دَخَلَ عَلَى مَرِيضٍ يَعُودُهُ قَالَ لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
فَقَالَ لَهُ لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ قَالَ قُلْتُ طَهُورٌ كَلَّا
بَلْ هِيَ حُمَّى تَفُورُ أَوْ تَثُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ تُزِيرُهُ الْقُبُورَ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَعَمْ إِذًا (بخاري
ஒரு
காட்டரபி நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது நபி(ஸல்) அவர்கள், அவரை உடல் நலம்
விசாரிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் நோயாளியை உடல் நலம் விசாரிக்கச் சென்றால், லாபஃஸ தஹூருன் இன்ஷா
அல்லாஹ் (பரவாயில்லை). 'அல்லாஹ்
நாடினால், குணமாகும்' எனக் கூறுவார்கள்.
عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَانَ إِذَا أَتَى مَرِيضًا أَوْ أُتِيَ بِهِ قَالَ أَذْهِبْ الْبَاسَ
رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً
لَا يُغَادِرُ سَقَمًا
. நபி(ஸல்) அவர்கள், தங்கள்
குடும்பத்தினரில் சிலரின் உடல் நலத்தை விசாரிப்பார்கள். அப்பொழுது தங்கள் வலது
கரத்தை அந்நோயாளியின் மீது தடவி. அல்லாஹும்ம ரப்பன்னாஸ், அத்ஹிபில் பஃஸ இஷ்பி
அன்தஷ் ஷாஃபீ லா ஷியா இல்லா ஷிபாவுக் ஷிபா அன் லாயுஹாதிரு ஸக்மா' பொருள்: இறைவா!
மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை போக்கி வைப்பாயாக! நோயைவிட்டு குணமளிப்பாயாக! நீயே
குணமளிப்பவன். உன் குணமளித்தலைத் தவிர வேறு குணமளித்தல் கிடையாது. அது எந்த
நோயையும் விட்டு வைக்காது என்று கூறுவார்கள்.
عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ
أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا
يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ
وَقُلْ بِاسْمِ اللَّهِ ثَلَاثًا وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ
وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ (مسلم
நான்
ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக!
பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக!' மேலும் ''அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது
வவுஹாதிரு'
பொருள்:
அல்லாஹ்வின் கண்ணியத்தையும் சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை
விட்டும், நான்
பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று ஏழு முறை
கூறுவீராக! அறிவிப்பாளர் : அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ் (ரலி
நோயாளி தன் நோய் பற்றி மற்றவர்களிடம் கூறுவதில் தவறில்லை
நோயாளி தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றி பிறரிடம் கூறுவதில் ஏதும்
தவறில்லை. ஆனால் அல்லாஹ்வின் விதியை மறுக்கும் முகமாகவும் அந்த அல்லாஹ்வின்
சோதனையை வெறுத்து பேசுவதும் தவறாகும்.
عَنْ
عَبْدِ اللَّهِ قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ فَمَسِسْتُهُ بِيَدِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ
إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلَانِ مِنْكُمْ قَالَ
فَقُلْتُ ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَجَلْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ إِلَّا
حَطَّ اللَّهُ بِهِ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا (مسلم
நபி(ஸல்) அவர்கள் காய்ச்சலாக இருந்தபொழுது நான் அவர்களிடம் சென்றேன்.
அப்பொழுது அவர்களைத் தொட்டுப் பார்த்தேன்.பிறகு நான் தாங்கள் கடினமான காய்ச்சலால்
கஷ்டப்படுகிறீர்கள் என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' உங்களில் இரண்டு பேருக்கு
ஏற்படும் காய்ச்சல் எனக்கு ஏற்படுகிறது எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு
மஸ்வூது(ரலி)
நோயாளியின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
அதற்காக அவரை துஆச் செய்யும்படி
வற்புறுத்தக்கூடாது
عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال : خمس
دعوات يستجاب لهن دعوة المظلوم حتى ينتصر ودعوة الحاج حتى يصدر ودعوة المجاهد حتى
يقفل ودعوة المريض حتى يبرأ ودعوة الأخ لأخيه بظهر الغيب .وفي رواية وأسرعُ هؤلاء الدعواتِ إجابةً دعوةُ الأخِ لأخيه بظهرِ
الغيبِ (كنز العمال (ودعوة المريض) أي مرضا لم يعص به (فيض القدير
ஐந்து நபர்களின் துஆ
மறுக்கப்பட்டாது. 1.அநீதம் இழைக்கப்பட்டவரின் துஆ. அவருக்கு நியாயம் கிடைக்கும்
வரை 2. ஹாஜியின் துஆ அவர் வீடு திரும்பும் வரை 3. மார்க்கப் போரில்
ஈடுபட்டிருப்பவரின் துஆ. அவர் வீடு திரும்பும் வரை 4. நோயாளியின் துஆ. அவருக்கு
குணமாகும் வரை 5. எங்கோ இருக்கும் (முகம் தெரியாத) உடன் பிறவா சகோதரருக்காக (அவருக்கு ஒரு பாதிப்பு
என்று கேள்விப்பட்டு) துஆச் செய்வது.
மற்றொரு அறிவிப்பில்
இந்த துஆக்களில் மிக விரைவானது எங்கோ இருக்கும் (முகம்
தெரியாத) உடன் பிறவா சகோதரருக்காக (அவருக்கு
ஒரு பாதிப்பு என்று கேள்விப்பட்டு) துஆச் செய்வது என்று
கூறப்பட்டுள்ளது.
அதேபோல பாவமான செயலின்
காரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு இது பொருந்தாது.
நோயை நீக்க துஆச் செய்யலாம். நோய் நீடிக்க என
துஆச் செய்யக்கூடாது
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم عاد رجلا من
المسلمين قد صار كالفرخ فقال له رسول الله صلى الله عليه وسلم ما كنت تدعوا بشئ أو
تسأله قال نعم كنت أقول اللهم ما كنت معاقبني به في الآخرة فعجله لي في الدنيا
فقال النبي صلى الله عليه وسلم أفلا قلت اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي
الآخرة حسنة وقنا عذاب النار قال فدعا الله فشفاه الله (سنن الكبرى للنسائ
நபி ஸல் அவர்கள் ஒருவரை
நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர் ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென கோழிக்
குஞ்சைப் போன்று பலவீனமாகி விட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் நீங்கள்
அல்லாஹ்விடம் கேட்கக் கூடாத துஆ ஏதேனும் கேட்டீர்களா என்று கேட்க, அதற்கு அவர்
ஆம். நான் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் செய்த பாவங்களுக்காக மறுமையில் தண்டிப்பதாக
இருந்தால் இவ்வுலகிலேயே தண்டித்து விடு என துஆச் செய்தேன். அதற்கு நபி ஸல் இப்படியெல்லாம் துஆச் செய்யலாமா
நீங்கள் துஆச் செய்வதாக இருந்தால் யாஅல்லாஹ் எனக்கு இந்த உலகில் எதுவெல்லாம்
நல்லதோ அவற்றைத் தருவாயாக.. மறு உலகிலும் எனக்கு எதுவெல்லாம் நல்லதோ அவற்றைத்
தருவாயாக என்ற பொருளடங்கிய ரப்பனா ஆதினா.... துஆவைக் கற்றுத் தந்தார்கள்.
கவலையில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவது
عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ
حَزْمٍ ، عَنْ جَدِّهِ ،عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ قَالَ مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ إِلَّا كَسَاهُ
اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ
எந்த ஒருவர் மற்றொரு முஃமினான சகோதர ருக்கு
அவருடைய மனக்கவலையின் போது ஆறுதல் கூறுவாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் உயர்தரமான
கண்ணியமான ஆடைகளை அணிவித்து கவுரவிப்பான்
நபிமொழி - நூல் இப்னுமாஜா
நாம் ஒருவருக்கு ஆறுதல் கூறும்போது
அவருடைய துக்கம் குறைய வாய்ப்பு உள்ளது “ “சந்தோஷம்
என்பது பிறரிடம் பகிர்ந்து கொள்வதால் அதிகரிக்கும். துக்கம் என்பது பிறரிடம்
பகிர்ந்து கொள்வதால் குறையும்”
ஆறுதல்
கூறுவது என்பது அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும் மவ்த் வீட்டில்
அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறுவது அதில் முக்கியமானதாகும். ஒருவர்
இறந்ததிலிருந்து மூன்று நாட்கள் வரை அந்தக் குடும்பத்தினருக்கு நாம் ஆறுதல்
கூறலாம் அதைக் கடந்து ஆறுதல் கூறுவது சிறந்ததல்ல என்று இமாம் ஷாஃபிஈ ரஹ்
கூறியுள்ளார்கள். (இறந்த செய்தி தாமதமாக கிடைத்தால் அப்போது இந்த கருத்து பொருந்தாது)
நோய்கள் பாவங்களைப் போக்கும்.
عَنْ عَائِشَةَ رض أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الطَّاعُونِ فَأَخْبَرَهَا
نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللَّهُ عَلَى
مَنْ يَشَاءُ فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ
الطَّاعُونُ فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا يَعْلَمُ أَنَّهُ لَنْ يُصِيبَهُ إِلَّا
مَا كَتَبَ اللَّهُ لَهُ إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الشَّهِيدِ(بُخاري) باب أَجْرِ الصَّابِرِ -كتاب الطب
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَبْطُونُ شَهِيدٌ
وَالْمَطْعُونُ شَهِيدٌ بُخاري5733 - عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ
رضي الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَخْتَصِمُ الشُّهَدَاءُ
وَالْمُتَوَفَّوْنَ عَلَى فُرُشِهِمْ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ فِي الَّذِينَ مَاتُوا
مِنْ الطَّاعُونِ فَيَقُولُ الشُّهَدَاءُ إِخْوَانُنَا قُتِلُوا وَيَقُولُ الْمُتَوَفَّوْنَ
عَلَى فُرُشِهِمْ إِخْوَانُنَا مَاتُوا عَلَى فُرُشِهِمْ كَمَا مِتْنَا فَيَقْضِي اللَّهُ
عَزَّ وَجَلَّ بَيْنَهُمْ أَنْ انْظُرُوا إِلَى جِرَاحَاتِ الْمُطَّعَنِينَ فَإِنْ
أَشْبَهَتْ جِرَاحَاتِ الشُّهَدَاءِ فَهُمْ مِنْهُمْ فَيَنْظُرُونَ إِلَى جِرَاحِ الْمُطَّعَنِينَ
فَإِذَا هُمْ قَدْ أَشْبَهَتْ فَيُلْحَقُونَ مَعَهُمْ (احمد)حديث العرباض بن سارية
கொள்ளை
நோயால் இறந்தவர்கள் விஷயமாக மறுமையில் ஷூஹதாக்களுக்கும், படுக்கையில்
இறந்தவர்களுக்குமிடையில் விவாதம் நடைபெறும் அப்போது ஷூஹதாக்கள் கூறுவார்கள்
இவர்கள் எங்களுடைய சகோதரர்கள் ஏனெனில் இவர்கள் எங்களைப் போலவே காயங்களுடன்
இறந்துள்ளனர் என்பார்கள் அதற்கு பதிலாக படுக்கையில் இறந்தவர்கள் கூறுவார்கள் “ இல்லை இவர்கள் எங்களின்
சகோதரர்கள் எங்களைப் போல் படுக்கையில் இறந்தவர்கள் தான் என்பார்கள் இவ்வாறு
விவாதம் நடைபெறும் போது அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான் அதாவது கொள்ளை நோயில்
இறந்தவர்களின் காயங்களை கணக்கிடுங்கள் அந்தக் காயங்கள் ஷுஹதாக்களின் காயங்களைப்
போன்று இருந்தால் அவர்கள் ஷுஹதாக்களுக்கு
ஒப்பானவர்கள் என்று கூற அவ்வாறே பார்க்கும்போது அந்தக் காயங்கள் ஷுஹதாக்களுக்களின்
காயங்களைப் போன்று இருக்கும் இறுதியில்
அவர்கள் ஷுஹதாக்களுக்களுக்கு ஒப்பானவர்கள் என்று
முடிவு செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக