11-11-2022 ரபீஉல் ஆகிர் 15 |
|
بسم الله الرحمن الرحيم சொந்த பந்தங்களும் சொத்துத் தகராறுகளும் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
فَلَا وَرَبِّكَ لَا
يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي
أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا (65)النساء
இன்று பெரும்பாலும்
மனிதர்களுக்கிடையே பகைமை ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக சொத்துப்
பிரச்சினைகளும் இருக்கின்றன. ஒருவரின்
சொத்தை மற்றவர் முறையின்றி அடைய நினைப்பது, மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பது
ஆகியவற்றால் பெரும்பாலும் பகைமை ஏற்படுவது மட்டுமன்றி அதனால் கொலைகளும்
நடைபெறுகின்றன. குறிப்பாக உறவினர்களுக்கு மத்தியில் விரிசல் ஏற்படுவதற்கும்
முக்கியக் காரணம் சொத்துத் தகராறு தான். ஆகவே அது பற்றிய இஸ்லாமிய ஆய்வைப்
பார்ப்போம்.
சொந்த பந்தங்களைத் துண்டித்து வாழ்வதை
எச்சரிக்கும் ஹதீஸ்கள்
عَنْ
أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا
يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ
فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ
(بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان
لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر
بهجرهم -وقال رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ
دَمِهِ (ابوداود)
கருத்து- மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின்
இன்னொரு முஃமினிடம் பேசாமல் இருப்பது கூடாது. குறைந்த பட்சம் ஸலாம் கூறுவதாலும்
அந்தப் பாவம் நீங்கும். இருவரில் யார் முதலில் சலாம் கூறுகிறாரோ அவரே
சிறந்தவராவார்.
أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ
الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ
وَصَلَهَا(بخاري) أي المجازي غيره بمثل فعله
அவர் பேசினால் தான் நானும் பேசுவேன்
என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப்
போன உறவுகளையும் வலியச் சென்று சேர்த்துக் கொள்பவரே உண்மையில் உறவைப் பேணுபவர்.
عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا
وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ
النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)
மக்கள் என்னிடம் நல்லபடியாக நடந்து கொண்டால்
நானும் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வேன். மக்கள் என்னிடம் தீமையாக நடந்து
கொண்டால் நானும் அவர்களிடம் தீய முறையில் நடந்து கொள்வேன் என்று கூறும்
சுயநலவாதிகளாக இருக்காதீர்கள். மாறாக மக்கள் என்னிடம் நல்லபடியாக நடந்து
கொண்டாலும் நான் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வேன். மக்கள் என்னிடம் தீமையாக
நடந்து கொண்டாலும் நான் அவர்களிடம் நல்ல முறையிலேயே நடந்து கொள்வேன் என்று கூறும்
பொதுநலவாதிகளாக இருங்கள்.
சொந்த பந்தங்களுக்கு
மத்தியில் பகைமை ஏற்பட முக்கியக் காரணம் சொத்துத் தகராறுகள்
பனீ இஸ்ராயீல் சமூகத்தில்
சொத்துக்காக நடந்த கொலையும் பகரா சம்பவமும்
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ
يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ
أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ (67)البقرة
عن ابن عباس رضي الله عنه أن رجلاً من بني إسرائيل قتل
قريباً لكي يرثه ثم رماه في مجمع الطريق ثم شكا ذلك إلى موسى عليه السلام فاجتهد
موسى في تعرف القاتل ، فلما لم يظهر قالوا له : سل لنا ربك حتى يبينه ، فسأله
فأوحى الله إليه : {إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً } فتعجبوا
من ذلك ثم شددوا على أنفسهم بالاستفهام حالاً بعد حال واستقصوا في طلب الوصف فلما
تعينت لم يجدوها بذلك النعت إلا عند إنسان معين ولم يبعها إلا بأضعاف ثمنها ،
فاشتروها وذبحوها وأمرهم موسى أن يأخذوا عضواً منها فيضربوا به القتيل ، ففعلوا
فصار المقتول حياً وسمي لهم قاتله (الرازي
பகரா
என்றால் பசுமாடு என்று பொருள். பனீ இஸ்ராயீல் சமூகத்தில் இரு பிரிவினரிடையே பகை
இருந்தது. இந்த நிலையில் அவர்களில் ஒரு பிரிவைச் சார்ந்த ஒரு வாலிபன் சொத்துக்காக
தன் சித்தப்பாவைக் கொன்றுவிட்டான். அதை மறைப்பதற்காக அவரது பிரேதத்தை எதிர்
கோஷ்டியினர் வசிக்கும் பகுதியில் யாருக்கும் தெரியாமல் போட்டு விட, அடுத்த நாளே
இரு பிரிவினரிடையே பிரச்சினை வெடித்து, பெரும் கலவராமாக மாறியது. இறந்தவரை அடக்கம்
செய்த பிறகும் பிரச்சினை நீடித்தது.
அப்போது சில நல்லவர்கள் கூறினார்கள். நமக்கு மத்தியில் ஒரு நபி
இருக்கும்போது நாம் ஏன் சண்டை போட வேண்டும். அந்த நபியிடம் நாம் பிரச்சினையைக்
கொண்டு செல்வோம் என்றுகூற அவ்வாறே நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இதைக் கூறிய
போது அவர்கள் அல்லாஹ்விடம் துஆச்செய்தார்கள்.
உடன் அல்லாஹ் வஹீ
அறிவித்தான். ஒரு மாட்டை அறுத்து அதன் வாலை இறந்தவரின் கப்ரு மீது அடித்தால் அவர்
எழுந்து உண்மையைச் சொல்லி விட்டு கப்ருக்குள் சென்று விடுவார் என்று அல்லாஹ் வஹீ
அறிவித்தான். ஏதோ ஒரு மாட்டை அறுத்து அவ்வாறு செய்திருந்தால் அவர்களின் பிரச்சினை
முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் அந்த சமூகம் தேவை இல்லாமல் அது எத்தகைய மாடு? இளம்
கன்றா? அல்லது வயதான மாடா? என்ன
நிறம்? ஏர் உழுத மாடா?
அல்லது ஏர் உழாத மாடா? என்றெல்லாம் மூஸா (அலை) அவர்களிடம் கேள்விக்கு மேல்
கேள்வி கேட்டு அவர்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அல்லாஹ்வும் அந்தக்
கூட்டத்தை சோதிக்க எண்ணி அவர்கள் கேட்கக் கேட்க, நிபந்தனைகளை அதிகப் படுத்திக்
கொண்டே இருந்தான்.
இறுதியாக
அல்லாஹ்கூறிய நிபந்தனைகளுடன் கூடிய மாடு எங்குமே கிடைக்காமல் இறுதியாக ஒரே ஒரு
நபரிடம் அது இருந்தது. ஆனால் அதற்கு அவர் கடுமையான விலையைக் கூறினார். அதாவது அந்த
மாட்டின் தோல் நிறையும் அளவு தங்கம் தந்தால் தான் மாட்டைத் தருவேன் என்றார். அதே
போன்று கொடுத்து அம்மாட்டை விலைக்கு வாங்கி, அதை அறுத்து இறந்தவர் கப்ரின்மீது
அடித்தபோது அவர் எழுந்து உண்மையைச் சொல்லி விட்டு கப்ருக்குள் சென்று விட்டார்.
சிறந்த முஃமின் எப்போதும்
அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ
عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ
جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ
مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ
وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا
فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ
قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا
الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا
(بخاري 3473
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பனூ இஸ்ராயீல்) ஒரு மனிதர்
இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார்.
அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக்
கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் ''என்னிடமிருந்து உன்
தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான்
வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் ''நிலத்தை அதிருப்பவற்றுடன்
சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே
தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும்
தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், ''உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அவ்விருவரில் ஒருவர்,
''எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், ''எனக்குப் பெண் பிள்ளை
இருக்கிறது'' என்று
சொன்னார். தீர்ப்புச் சொல்பவர்,''அந்தப்
பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிருந்து
செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (3472)
அடுத்தவரின் இடத்தில் அவரின் அனுமதியைப்
பெறாமல்
மஸ்ஜித் கட்டியபோது அதை அல்லாஹ்
கண்டித்தான்
عن زيد بن
أسلم رض قال :كان للعباس بن عبد المطلب رض دار الي جنب مسجد المدينة فقال له عمر
رض بِعنِيها 7 : فأراد عمر رض ان يزيدها
في المسجد، فأبي العباس رض ان يبيعها إياه فقال عمر رض فهَبْها لي فأبي فقال
فوَسّعْها انت في المسجد، فأبي فقال عمر رض لابد لك من احداهن فأبي عليه فقال خذ
بيني وبينك رجلا، فأخذ أبيَّ بن كعب رض فاختصما اليه فقال أبيّ رض لعمر رض :ما أري
أن يُخرجه من داره حتي ترضيه .فقال له عمر رض: أرأيت قضائك هذا في كتاب الله وجدته
أم سنة من رسول الله صلي الله عليه وسلم؟ فقال أبيّ: بل سنة من رسول الله صلي الله
عليه وسلم فقال عمر رض وما ذاك؟ فقال اني سمعت رسول الله صلي الله عليه وسلم
يقول:إن سليمان بن داود عليهما الصلاة والسلام-لما بني بيت المقدس جعل كلما بني
حائطا أصبح مُنهدما، فأوحي الله اليه أن لاتبني في حق رجل حتي ترضيه)) فتركه عمر
رض فوسَّعها 8 ) (العباس
رض بعد ذلك في المسجد (حياة الصحابة)
அப்பாஸ் ரழி அவர்களுக்குச் சொந்தமான ஒரு
வீடு மஸ்ஜிதுக்கு அருகில் இருந்த து. மஸ்ஜிதின் விரிவாக்கத்திற்காக அந்த இடம்
தேவைப் பட்டபோது கலீஃபா உமர் ரழி அவர்கள் அந்த இடத்தை மஸ்ஜிதுக்காக விற்று
விடும்படி அப்பாஸ் ரழி அவர்களிடம் கேட்க, அதற்கு அப்பாஸ் ரழி அவர்கள் மறுத்து
விட்டார்கள். அதை நீங்களே அன்பளிப்பாகத் தந்து விடுங்கள் என்று கேட்க, அதற்கும்
அப்பாஸ் ரழி அவர்கள் மறுத்து விட்டார்கள். மஸ்ஜிதுக்காக நீங்களே விரிவு படுத்திக்
கொடுங்கள் என்று கேட்க, அதற்கும் அப்பாஸ் ரழி அவர்கள் மறுத்து விட்டார்கள்.
அவர்கள் மறுத்ததற்கு ஏதேனும் உள்ரங்கமான காரணம் இருந்திருக்கலாம். அதைக் குறையாக
நாம் பேசக்கூடாது. எப்படியும் மஸ்ஜிதை விரிவு படுத்த அந்த இடம் தேவை என்ற
சூழ்நிலையில் உமர் ரழி அவர்கள் அப்பாஸ் ரழி அவர்களிடம் இது விஷயமாக நமக்கு
மத்தியில் உபய் இப்னு கஃப் ரழி அவர்களை நடுவராக நாம் ஏற்படுத்திக் கொள்வோம். அவர்
சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வோம் என்று பேசி அவரிடம் பிரச்சினையைக் கூற, உபய் இப்னு
கஃப் ரழி அவர்கள் நன்கு யோசித்து விட்டு உமர் ரழி அவர்களிடம் நீங்கள் அப்பாஸ் ரழி
அவர்களின் சம்மதம் இல்லாமல் அவர்களின் வீட்டை மஸ்ஜிதுக்காக வாங்க முடியாது என்று
கூறி விட்டார்கள். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் இதை நீங்களாகச் சொல்கிறீர்களா
அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் சொல்கிறீர்களா என்று கேட்டபோது ஆதாரங்களின்
அடிப்படையில் தான் கூறுகிறேன் என்று கூறி விட்டு பின்வரும் ஹதீஸைச்
சுட்டிக்காட்டினார்கள்.
நபி ஸல் அவர்கள்
கூற நான் கேட்டுள்ளேன். நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பைத்துல் முகத்தஸின்
ஒரு பகுதியைக் கட்டிய போது அது எத்தனை தடவை எடுத்துக் கட்டினாலும் இடிந்து
விழுந்து கொண்டே இருந்த து. இறுதியில் அல்லாஹ் அவர்களுக்கு வஹீ அறிவித்தான். இந்த இடம்
ஒருவருக்குச் சொந்தமாக இருப்பதால் அவரின் சம்மதம் இல்லாமல் நீங்கள் இதைக் கட்டி
முடிக்க முடியாது என்று அறிவித்தான்.பின்பு நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்
சம்பந்தப்பட்ட அந்த மனிதரிடம் சம்மதம் வாங்கிய பின் அதைக் கட்ட முடிந்தது என்ற
இந்த ஹதீஸை உபய் இப்னு கஃப் ரழி அவர்கள் சொன்னதும்
உமர் ரழி அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டு அமைதியாகி விட்டார்கள். ஆனால் அதற்குப்
பிறகு அப்பாஸ் ரழி அவர்களே அந்த இடத்தை மஸ்ஜிதுக்காக விட்டுக் கொடுத்து
விட்டார்கள்.
யாருடைய உரிமைகளும் பறிக்கப்படக்கூடாது
என்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறை
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ - رضى
الله عنهما - أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ
الزُّبَيْرَ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - فِى شِرَاجِ الْحَرَّةِ
الَّتِى يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِىُّ سَرِّحِ الْمَاءَ
يَمُرُّ فَأَبَى عَلَيْهِ ، فَاخْتَصَمَا عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم
- فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - لِلزُّبَيْرِ « اسْقِ يَا
زُبَيْرُ ، ثُمَّ أَرْسِلِ الْمَاء إِلَى جَارِكَ » . فَغَضِبَ الأَنْصَارِىُّ ،
فَقَالَ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ . فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ - صلى
الله عليه وسلم - ثُمَّ قَالَ « اسْقِ يَا زُبَيْرُ ، ثُمَّ احْبِسِ الْمَاءَ ،
حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ » . فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّى
لأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِى ذَلِكَ ( فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ
حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ) . (بخاري) باب المساقاة 2360
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளின்
பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த)
கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன்
சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத்
திறந்து ஓட விடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத்
திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறைத் தொடர்ந்து) நபி(ஸல்)
அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே!
உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சி விட்டு, பிறகு
உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று
கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள்
அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத்
திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று
கேட்டார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால்
சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள்
மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச்
சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று
கூறினார்கள். (என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி),
பின்வரும் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று
கூறினார்கள்.
فَلَا وَرَبِّكَ لَا
يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي
أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا (65)النساء
‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மதே!)
உங்களுடைய இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில்
உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம்
உள்ளங்களில் எத்தனைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும்
அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’
விளக்கம்- ஜுபைர் ரழி அவர்களின் தோட்டம்
சற்று உயரமான இடத்தில் இருந்தது. அதற்கடுத்து சற்று பள்ளமாக அன்சாரித்தோழரின்
தோட்டம் இருந்தது. நபி ஸல் அவர்கள் யாருடைய உரிமையையும் பறிக்காமல் தீர்ப்புச்
செய்தார்கள். ஒருவேளை அன்சாரித்தோழரின் தோட்டத்திற்கு முதலில் நீர் பாய்ந்து பிறகு
ஜுபைர் ரழி அவர்களின் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதாக இருந்தால் கீழிருந்து மேலாக
நீர் பாய்வது சிர ம ம் என்பதால் நபி ஸல் ஜுபைர் ரழி அவர்களிடம் முதலில் உனது
தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி விட்டு அவரின் தோட்டத்திற்கும் தண்ணீரை அனுப்பி
விடுங்கள்” என்று கூறினார்கள். அதைப் புரிந்து
கொள்ளாமல் அவர் பேசியதால் நபிகளாருக்கு கோபம் ஏற்பட்டது.
அடுத்தவரின் பொருளுக்கு
ஆசைப் படுபவன் நரகவாதி
عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَاتَ يَوْمٍ فِي خُطْبَتِهِ......وَأَهْلُ
النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ
تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى
لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي
إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوْ
الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள் 1, புத்தி சாதுர்யம்
இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார்.
இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி)
திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2,
எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்- (இவன்
அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை
அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம்
செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான
வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன். நூல்- முஸ்லிம்
ஒரு ஜான் இடத்தை அநியாயமாக
அபகரித்தால்
மறுமையில் ஏழு நிலங்கள் கழுத்தில் கட்டித் தொங்க
விடப்படும்
عَنْ أَبِي مَالِك
الْأَشْجَعِيّ عَنْ النَّبِيّ صَلَّى
اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
" أَعْظَم الْغُلُول عِنْد اللَّه ذِرَاع مِنْ الْأَرْض تَجِدُونَ
الرَّجُلَيْنِ جَارَيْنِ فِي الْأَرْض - أَوْ فِي الدَّار - فَيَقْطَع أَحَدهمَا
مِنْ حَظّ صَاحِبه ذِرَاعًا فَإِذَا قَطَعَهُ طُوِّقَهُ مِنْ سَبْع أَرْضِينَ
يَوْم الْقِيَامَة (مسند أحمد
பிறர் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது.
ஆனால் தனக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமையைக் கேட்பது
தவறல்ல.
عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ لَوْ تَرَكَتْ زَمْزَمَ أَوْ قَالَ لَوْ لَمْ
تَغْرِفْ مِنْ الْمَاءِ لَكَانَتْ عَيْنًا مَعِينًا وَأَقْبَلَ جُرْهُمُ فَقَالُوا
أَتَأْذَنِينَ أَنْ نَنْزِلَ عِنْدَكِ قَالَتْ نَعَمْ وَلَا حَقَّ لَكُمْ فِي
الْمَاءِ قَالُوا نَعَمْ (بخاري2369 قال
الخطابي : فيه أن من أنبط ماء في فلاة من الأرض ملكه ولا يشاركه فيه غيره إلا
برضاه ، إلا أنه لا يمنع فضله إذا استغنى عنه ، وإنما شرطت هاجر عليهم أن لا
يتملكوه . (فتح الباري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (நபி) இஸ்மாயீலின் தாயாருக்கு (ஹாஜராவுக்கு) அல்லாஹ்
கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்)விட்டு விட்டிருந்தால் (அல்லது
நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) தண்ணீரைக் கையால் அள்ளிக் குடிக்காமல்
இருந்திருந்தால் அது (நிற்காமல்) ஓடுகிற நீரோடையாக இருந்திருக்கும்.
(பிறகு) பனூ ஜுர்ஹும் குலத்தார் அங்கு வந்து, ‘உங்கள்
இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?’ என்று
(ஹாஜராவிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘சரி, (தங்கி
வசித்துக் கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத் தண்ணீரில் உங்களுக்கு எந்த பாக்கியதையும்
இருக்காது” என்று
கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார். ‘சரி
(அவ்வாறே ஒப்புக் கொள்கிறோம்)” என்று
கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 2369
விளக்கம்- தண்ணீரின் உரிமை
தனக்குரியது என்று கூறினார்களே தவிர, தண்ணீரைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத்
தடுக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக