புதன், 30 நவம்பர், 2022

இறையச்சத்தின் இம்மை மறுமை பலன்கள்

 


02-12-2022

 

بسم الله الرحمن الرحيم 

இறையச்சத்தின் இம்மை மறுமை பலன்கள்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

 

  


முன்னுரை & முடிவுரை- உலகில் மனிதர்களுக்கிடையே ஏற்படும் சண்டை. சச்சரவுகள் குற்றங்கள், அனைத்தும் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இறையச்சம் ஏற்படுவதினால்  மட்டுமே முடியும். காவல் துறையோ இராணுவமோ,  ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியாது போலீஸோ, இராணுவத்தினரோ, ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியுமென்றிருந்தால் மனிதர்கள் அனைவரும் குற்றம் செய்யாதவர்களாக இருந்திருப்பார்கள். மாறாக காவல் துறையும், இராணுவமும் பெருகப் பெருக சண்டை சச்சரவுகளும், தீய எண்ணங்களும், வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் உள்ளங்களில் இறையச்சம் இல்லாமல் போனது தான். ஆகவே மனிதன் எல்லா நிலைகளிலும் குற்றங்களை விட்டும நீங்குவதற்கு இறையச்சமே முக்கியக் காரணமாகும். உதாரணமாக இலட்சக்கணக்கான ரூபாய்களும், பொருட்களும் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் நீங்கள் தனிமையாக இருக்கிறீர்கள் அதனைப் பாதுகாப்பதற்கும் அங்கு எவரும் இல்லை இந்நிலையில் அல்லாஹ்வுடைய பயம் மட்டும் உங்களுடைய உள்ளத்தில் இருந்தால் அப்பொருட்களிலிருந்து சிறிதளவையும் நீங்கள் எடுக்க மாட்டீர்கள் ஏனெனில் பிறர் பொருளை அனுமதியின்றி எடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்லியாக வேண்டும் தண்டனை கிடைக்கும் என்ற பயம் உங்களை தடுத்து விடும்.

 

وسأل عمر كعبا فقال له: ما التقوى؟ فقال كعب: يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ قال: نعم. قال: فماذا فعلت؟ فقال عمر: أشمر عن ساقي، وانظر إلى مواضع قدمي وأقدم قدما وأؤخر أخرى مخافة أن تصيبني شوكة. فقال كعب: تلك هي التقوى

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலே தக்வா என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள் நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் ஆம் என்றார்கள். எப்படிக் கடந்து சென்றீர்கள்? சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.அதற்கு, உமர் (ரலி) அவர்கள் உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன் என்று பதிலளித்தார்கள். அப்போது, உபை (ரலி) அவர்கள் இவ்வாறு தான் இறையச்சமும் என்று பதிலளித்தார்கள்..

 வரலாற்றில் ஒரு ஆட்டிடையன் சம்பவம் மிகவும் பிரபல்யமானது. காட்டில் ஒரு ஆட்டிடையன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். பிரயாணம் செய்த ஒரு பெரியவர் ஆட்டிடையனிடம் ஒரு ஆடு விலைக்கு கொடு, பணம் தருகிறேன், உணவு சமைத்து உனக்கு உண்ணவும் தருகிறேன் என்றார். அதற்கு ஆட்டிடையன் ஆடுகள் எனது எஜமானனுக்குச் சொந்தமானவை. அவரின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது இதைக் கேட்ட பெரியவர் எனக்கு ஒரு ஆடு விற்று விடு. எஜமானன் கேட்டால் ஆட்டை ஓநாய் அடித்து தின்று விட்டது எனக் கூறிவிடு என்றார். உடனே அந்த ஆட்டிடையன், பொய் சொல்வதா? அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான் எனக் கூறி தர மறுத்துவிட்டார். இவரது தக்வா ஆட்டு மந்தைக்கே அவரை சொந்தக்காரனாக்கியது.

அல்லாஹ்வை பயப்படுவதற்கும், மற்றவர்களைக் கண்டு பயப்படுவதற்கும் வித்தியாசம்

உலகில் நாம் ஒருவரைக் கண்டு பயந்தால் அவரை விட்டும் விலகி விடுவோம், அரசனை பயந்தால், அதிகாரியை பயந்தால், அவர்களை விட்டும் தூரமாகி விடுவோம் ஆனால் அல்லாஹ்வை பயப்படும் அளவுக்கு அவனை நாம் நெருங்குவோம்.

ஒரு பாவத்தை செய்ய நினைத்து பிறகு அல்லாஹ்வின் பயத்தால் அதை செய்யாமல் விட்டு விட்டால் அதற்கும் நன்மை உண்டு

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ (بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلاَمَ اللَّهِ )- كتاب التوحيد

அல்லாஹ் கூறுகிறான். என்னுடைய அடியான் ஒரு பாவத்தைச் செய்ய நினைத்தால் அதைச் செய்யும் வரை அதன் தீமையை எழுத வேண்டாம். அதைச் செய்து விட்டால் ஒரே ஒரு தீமையை மட்டும் எழுதுங்கள். அதே நேரத்தில் என்னை பயந்து அப்பாவத்தை அவன் செய்யாமல் விட்டு விட்டால் அதற்காகவும் ஒரு நன்மையை எழுதுங்கள். அதுபோல் என்னுடைய அடியான் ஒரு நன்மையைச் செய்ய நினைத்து அதைச் செய்யா விட்டாலும் அதைச் செய்ய நினைத்ததற்காக ஒரு நன்மையை எழுதுங்கள்.அதைச் செய்து விட்டால் அதற்கு பத்து முதல் 700 மடங்கு வரை நன்மையை எழுதுங்கள்.                                                                    

குகையில் மூன்று நபர்கள் மாட்டிக் கொண்டு துஆ செய்த சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். அதில் ஒருவர் தன் முறைப் பெண்ணை தவறாக நெருங்க முற்பட்டு அதற்கான வாய்ப்புகள் இருந்தும் இறையச்சத்தால் அதை விட்டும் தவிர்த்துக் கொண்டார்

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى (41النازغات)

இறையச்சத்திற்கு அல்லாஹ் தந்த பரிசு

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ رَجُلًا فِيمَنْ سَلَفَ أَوْ قَالَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا أَعْطَاهُ اللَّهُ مَالًا وَوَلَدًا قَالَ فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ قَالَ لِبَنِيهِ أَيَّ أَبٍ كُنْتُ لَكُمْ قَالُوا خَيْرَ أَبٍ قَالَ فَإِنَّهُ لَمْ يَبْتَئِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا قَطُّ قَالَ فَفَسَّرَهَا قَتَادَةُ لَمْ يَدَّخِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا وَإِنْ يَقْدِرْ اللَّهُ عَلَيْهِ يُعَذِّبْهُ فَإِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي حَتَّى إِذَا صِرْتُ فَحْمًا فَاسْحَقُونِي أَوْ قَالَ فَاسْهَكُونِي ثُمَّ إِذَا كَانَ رِيحٌ عَاصِفٌ فَأَذْرُونِي فِيهَا قَالَ نَبِيُّ اللَّهِ فَأَخَذَ مَوَاثِيقَهُمْ عَلَى ذَلِكَ قَالَ فَفَعَلُوا ذَلِكَ وَرَبِّي فَلَمَّا مَاتَ أَحْرَقُوهُ ثُمَّ سَحَقُوهُ أَوْ سَهَكُوهُ ثُمَّ ذَرُّوهُ فِي يَوْمٍ عَاصِفٍ قَالَ فَقَالَ اللَّهُ لَهُ كُنْ فَإِذَا هُوَ رَجُلٌ قَائِمٌ قَالَ اللَّهُ أَيْ عَبْدِي مَا حَمَلَكَ عَلَى أَنْ فَعَلْتَ مَا فَعَلْتَ فَقَالَ يَا رَبِّ مَخَافَتَكَ أَوْ فَرَقًا مِنْكَ قَالَ فَمَا تَلَافَاهُ أَنْ رَحِمَهُ وَقَالَ مَرَّةً أُخْرَى فَمَا تَلَافَاهُ غَيْرُهَا أَنْ رَحِمَهُ (أحمد

சுருக்கம்- முற்காலத்தில் ஒரு மனிதர் தன் கடைசி நேரத்தில் தன் பிள்ளைகளை அழைத்து நான் செய்த பாவங்களுக்காக அல்லாஹ் என்னைக் கடுமையான தண்டிக்கலாம் என்று அஞ்சுகிறேன் என்றார். எனவே நான் இறந்த பின்பு என்னை எரித்து அது கரிக்கட்டையாக ஆன பின்பு அதை சாம்பலாக ஆக்கி அதைக் காற்றில் பறக்க விட்டு விடுங்கள் என வஸிய்யத் செய்தார். அவ்வாறே அவர் இறந்த பின்பு அவரது பிள்ளைகள் செய்தனர். அவரை அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது. அவரிடம் அல்லாஹ் ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்க, உன்னுடைய பயத்தின் காரணமாகவே இவ்வாறு செய்யும்படி நான் என் பிள்ளைகளுக்கு வஸிய்யத் செய்தேன். அவர் அவ்வாறு சொல்லி வாயை மூடும்முன்பே அல்லாஹ் அவரை மன்னித்தான்.               

இறையச்சத்தால் அழுத கண்களுக்கு அல்லாஹ்  தரும் பரிசு

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ (بخاري) باب الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللَّهِ-كتاب الرقاق, باب فَضْلِ مَنْ تَرَكَ الْفَوَاحِشَ – كتاب المحاربين

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ (ترمذي) بَاب مَا جَاءَ فِي فَضْلِ الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللَّهِ- كِتَاب الزُّهْدِ

கறந்த பால் மீண்டும் மடியில் புகுவது எவ்வாறு சாத்தியம் இல்லையோ அவ்வாறே இறையச்சத்தால் அழுத கண்கள் நரகம் செல்லாது.

عن عبد الله بن شقيق العقيلي قال : سمعت كعبا يقول : لان أبكي من خشية الله تعالى حتى تسيل دموعي على وجنتي أحب إلي من أن أتصدق بوزني ذهبا والذي نفس كعب بيده ما من عبد مسلم يبكي من خشية الله حتى تقطر قطرة من دموعه على الارض فتمسه الناس أبدا حتى يعود قطر السماء الذي وقع إلى الارض من حيث جاء ولن يعود أبدا.(مصنف ابن ابي شيبة)

இறையச்சத்தால் என் நான் அழுது என் கண்ணம் வரை கண்ணீரால் நனைவது என்னுடைய எடை அளவுக்கு தங்கம் தர்மம் செய்வதை விட சிறந்ததாகும்.

உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி தாவூத் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. நபி தாவூத் அலை அவர்களின் அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி ஆதம் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.

عَنِ ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا عَدَلَهُ  وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا عَدَلَهُ (مصنف ابن ابي شيبة

இறை நேசர்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்கள்

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (الانفال2)

உமர் ரழி அவர்களின் வாழ்விலும்,சில இறைநேசர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்திய தக்வா பற்றிய வசனம்

أَنَّ فُضَيْل بْن عِيَاضٍ كَانَ يَقْطَعُ الطَّرِيقَ  وَأَنَّهُ عَشِقَ جَارِيَةً وَارْتَقَى جِدَارًا لَهَا فَسَمِعَ تَالِيًا يَتْلُو "أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ(57-16  فَتَابَ (رد المختار

ஃபத்வா &  தக்வா ஒரு விளக்கம்

 தக்வாவுக்கு பேணுதல் என்று ஒரு விளக்கம் உள்ளது சில பெரும் பாவங்களைப் பற்றி குர்ஆன் கூறும்போது அதைச் செய்யாதீர்கள் என்று கூறாமல் அதை நெருங்காதீர்கள் என்று கூறுகிறது  எனவே குறிப்பிட்ட பாவத்தைச் செய்யக் கூடாது என்பது ஃபத்வா ... அதன் பக்கம் தூண்டக்கூடிய அனைத்துக் காரியங்களையும் விட்டு விடுவது தக்வா.. ஃபிக்ஹ் ஆய்வாளர்கள் கூறுவார்கள்  அந்நியப் பெண் ஒருத்தி உளூச்  செய்து விட்டு மிச்சம் வைத்த தண்ணீரில் உளூச் செய்ய வேண்டாம். வேறு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் அந்த மீதித் தண்ணீரை உபயோகிக்கும்போது இது இன்ன பெண் உபயோகித்த தண்ணீர் என்ற நினைவு வரும் அதுவும் சில நேரங்களில் தவறான சிந்தனையை மனதில் உண்டாக்கி விடும் என்று கூறுவார்கள் இதுதான் தக்வா.. பேணுதல் என்பதாகும் ஷரீஅத்தில் இத்தகைய பேணுதல் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க க்கூடாது. அந்நியப் பெண்ணிண் குரலை காது கொடுத்து கேட்கக்கூடாது. அவள் நறுமணம் பூசியிருந்தால் நம்முடைய மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.ஆகிய அனைத்தும் இந்த அடிப்படையில் கூறப்பட்டதாகும்.                                                                         

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَةٌ فَمَنْ تَرَكَ مَا شُبِّهَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ كَانَ لِمَا اسْتَبَانَ أَتْرَكَ وَمَنْ اجْتَرَأَ عَلَى مَا يَشُكُّ فِيهِ مِنْ الْإِثْمِ أَوْشَكَ أَنْ يُوَاقِعَ مَا اسْتَبَانَ وَالْمَعَاصِي حِمَى اللَّهِ مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ (بخاري) باب الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ-كتاب البيوع- وَقَالَ ابْنُ عُمَرَ رضي الله عنه لَا يَبْلُغُ الْعَبْدُ حَقِيقَةَ التَّقْوَى حَتَّى يَدَعَ مَا حَاكَ فِي الصَّدْرِ (بخاري) باب الإِيمَانِ - عَنْ عَطِيَّةَ السَّعْدِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنْ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ (ترمذي)ضعيف بَاب الْوَرَعِ وَالتَّقْوَى- كِتَاب الزُّهْدِ –

விளக்கம்- எதைச் செய்வதால் அது கூடும். பரவாயில்லை என்று உறுதியற்ற நிலையில் கூறப்படுமோ அதையும் விடுவது தக்வா

இறையச்சம், பேணுதல், பித்அத், துஆ பற்றி முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உபதேசம்

மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்காதே! துஆ ஏற்கப்படுவது தாமதாகுவதைப் பற்றி அவன் மீது குறை கூறாதே நீ துஆ செய்வதில் சோர்வடையாதே. இதனால் உனக்கு லாபம் இல்லா விட்டாலும் கூட நஷ்டம் இல்லை. உன் துஆவை அல்லாஹ் உடனடியாக இவ்வுலகில் ஏற்கா விட்டாலும் மறுமையில் அதற்குரிய வெகுமதியை உனக்கு தரவே செய்வான். மாக்க்கத்தில் விலக்கப்பட்டவைகளை விட்டும்  ஒதுங்க வேண்டியது உன்னுடைய கடமையாகும். இல்லையேல் அழிவுக்கயிறு உன்னை சுற்றிக் கொள்ளும் பாவத்தில் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆகுமானவற்றைக் கூட பத்தில் ஒன்பது பங்கை விட்டு நாங்கள் விலகிக் கொள்வதுண்டு என்று நபித்தோழர்களான உமர் ரழி, அபூபக்ர் ரழி ஆகியோர் கூறியுள்ளார்கள்.

தக்வாவை அதிகப்படுத்தக்கூடிய விஷயங்கள்- 

மவ்த்தை அடிக்கடி நினைப்பது தக்வாவை அதிகப்படுத்தும்

عَنْ الْبَرَاءِ رضي الله عنه  قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَجَلَسَ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَبَكَى حَتَّى بَلَّ الثَّرَى ثُمَّ قَالَ يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا (ابن ماجة) بَاب الْحُزْنِ وَالْبُكَاءِ- كِتَاب الزُّهْدِ ( على شفير القبر ) أي طرفه . ( الثرى ) أي التراب

இறைநேசர்களில் சிலர் ஜனாஸாவில் கலந்து கொண்டால் ஜனாஸாவை குளிப்பாட்டும்போது த குளிப்பாட்டுவதாகவும், அந்த ஜனாஸாவுக்கு கஃபனிடும்போது தனக்கே கஃபனிடுதைப்போலவும், அந்த ஜனாஸாவுக்கு தொழ வைக்கும்போது தனக்கே தொழ வைப்பதைப் போலவும், அந்த ஜனாஸாவை அடக்கும்போது தன்னையே அடக்கம் செய்வதைப் போலவும் கருதுவார்களாம்

எப்போதும் வயிறு நிரம்பி இருப்பது தக்வாவை அதிகப்படுத்தாது

عَنْ أَبِي أُمَامَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَرَضَ عَلَيَّ رَبِّي لِيَجْعَلَ لِي بَطْحَاءَ مَكَّةَ ذَهَبًا قُلْتُ لَا يَا رَبِّ وَلَكِنْ أَشْبَعُ يَوْمًا وَأَجُوعُ يَوْمًا وَقَالَ ثَلَاثًا أَوْ نَحْوَ هَذَا فَإِذَا جُعْتُ تَضَرَّعْتُ إِلَيْكَ وَذَكَرْتُكَ وَإِذَا شَبِعْتُ شَكَرْتُكَ وَحَمِدْتُكَ (ترمذي) بَاب مَا جَاءَ فِي الْكَفَافِ وَالصَّبْرِ عَلَيْهِ- كِتَاب الزُّهْدِ

மண்ணறைகளை கடந்து செல்லும்போது தக்வாவின் அவசியத்தை உணர்த்தும் விதத்தில் ஹழ்ரத் அலீ ரழியல்லாஹு அன்ஹு பேசிய வார்த்தைகள். தக்வா தான் கப்ரிலும் நமக்குத் துணை

(دخل علي رضي الله عنه المقبرة فقال: يا أهل القبور ما الخبر عندكم: إن الخبر عندنا أن أموالكم قد قسمت وأن بيوتكم قد سكنت وإن زوجاتكم قد زوجت، ثم بكى ثم قال: والله لو استطاعوا أن يجيبوا لقالوا: إنا وجدنا أن خير الزاد التقوى).

 

ஏழு தலைமுறைக்கு முன்னால் தக்வாவுடன் வாழ்ந்த ஒரு நல்ல மனிதரின் சொத்துக்களைப்  பாதுகாக்க அல்லாஹ் ஒரு நபியையும் ஒரு வலியையும் ஏற்படுத்தினான்

وتأملوا عباد الله كيف أن الله سبحانه سخر نبيا هو موسى عليه السلام ووليا هو الخضر عليه السلام لإقامة جدار في قرية بخيلة فاعترض موسى عليه السلام قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْراً ))الكهف77 
ثم يخبر الخضر عليه السلام سبب فعله بالغيب الذي أطلعه الله عليه في هذا الأمر فيقول:
((وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحاً )) الكهف:82.
.

وقال ابن عباس : حفظا بصلاح أبيهما ، وقيل كان بينهما وبين الأب الصالح سبع آباء ،(تفسير الخازن

 

والتقوى وصية السلف الصالح رضوان الله عليهم ومن وصايا الرسول - صلى الله عليه وسلم - لمعاذ بن جبل:( اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن.)رواه الترمذي

وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى (البقرة197) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَفْضَلُ قَالَ كُلُّ مَخْمُومِ الْقَلْبِ صَدُوقِ اللِّسَانِ قَالُوا صَدُوقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ الْقَلْبِ قَالَ هُوَ التَّقِيُّ النَّقِيُّ لَا إِثْمَ فِيهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ (ابن ماجة) بَاب الْورع والتقوي- كِتَاب الزُّهْدِ

 

1 கருத்து:

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...