24-03-2023 |
|
بسم
الله الرحمن الرحيم |
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
நோன்பின் அவசியமும் அதன் தத்துவமும் |
ரமழானில் தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமாக காலமெல்லாம் நோன்பு வைத்தாலும் அதன் நன்மையை முழுமையாக அடைய முடியாது. இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் ஏற்கப்படாது என்றே கூறுகிறார்கள்
عَنْ أَبِي
هُرَيْرَةَ رَفَعَهُ مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ
مِنْ غَيْرِ عُذْرٍ وَلَا مَرَضٍ لَمْ يَقْضِهِ صِيَامُ الدَّهْرِ (بخاري)
معناه أي لا
سبيل إلى استدراك كمال فضيلة الأداء بالقضاء،قال عبد الله بن مسعود "من أفطر
يوما في رمضان متعمدا من غير علة ثم قضى طول الدهر لم يقبل منه(فتح الباري)
ரமளான் மாதத்தில் ஒரு நோன்பை விட்டால் அதற்கு என்ன பரிகாரம்
என்று கேட்க இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறிய பதில்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ فِي غَيْرِ
رُخْصَةٍ رَخَّصَهَا اللَّهُ لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ.زَادَ فِي
خَبَرِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ : وَإِنْ صَامَهُ.(ابن خزيمة) عن سعيد بن جبير رضي
الله عنه أن رجلا سأل ابن عباس فقال : إني أفطرتُ يوما من رمضان فهل تجد لي مخرجا ؟ فقال له ابن عباس : إن قدرت
على يوم من رمضان فارغا فصمه مكانه قال :
وهل أجد يوما من رمضان فارغا ؟ فقال ابن عباس : « هل أجد لك في الفتيا غير هذا
؟ (فضل شهر رمضان لابن شاهين)
அந்தக்
கேள்விக்கு இப்னு அப்பாஸ்ரழி பின்வருமாறு பதில் கூறினார்கள்.ஏதாவது ஒரு ரமழானின்
பகலில் நோன்பு வைப்பது கடமையாகாத பகல் இருக்குமானால் அப்போது விடுபட்ட நோன்பைக்
களாச் செய் என்றார்கள். அதற்கு அந்த நபர் அது எப்படி சாத்தியம் எந்த ரமழானின்
பகலும் அவ்வாறு இல்லையே என்றார். அதற்கு இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் இதைத் தவிர
வேறு பதில் எனக்குக் கிடைக்கவில்லை என்றார்கள்.
விளக்கம்-
ஒரு ரமழானின் ஒரு நொடி வீணாக் கழிந்தாலும் அதே நொடிகளைத் திரும்பப் பெறுவது
கடினம்.
நபி ஸல் காலத்தில் சிறுவர்களும் நோன்பு வைத்தனர்
وَقَالَ
عُمَرَ رضى الله عنه لِنَشْوَانٍ فِى رَمَضَانَ وَيْلَكَ ،
وَصِبْيَانُنَا صِيَامٌ . فَضَرَبَهُ
(بخاري) باب صَوْمِ الصِّبْيَانِ-كتاب الصيام 1960
விளக்கம் – ரமழானில்
போதையுடன் இருந்த ஒருவரிடம் உமர் ரழி அவர்கள் உனக்கு கேடு உண்டாகட்டும் நம்முடைய
சிறுவர்கள் கூட நோன்பு வைத்திருக்கும்போது நீ இவ்வாறு செய்திருக்கிறாயே என்று கூறி
அவருக்கு 80 கசையடி கொடுத்தார்கள். வேறு சில நூல்களில் சிரியாவுக்கு நாடு
கடத்தினார்கள் என்றும் உள்ளது
சிறுவர்களை நோன்பு வைக்கத் தூண்டுவது அதற்காக அன்பளிப்புகள் வழங்குவதும், நீ
நோன்பு வைத்தால் இஃப்தார் நேரம் உனக்கு இன்ன பதார்த்தம் வாங்கித் தருவேன் என்று
சொல்வதும் சஹாபாக்களின் வழிமுறை
عن الرُّبَيِّعِ
بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الْأَنْصَارِ مَنْ
أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا
فَليَصُمْ قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا
وَنَجْعَلُ لَهُمْ اللُّعْبَةَ مِنْ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى
الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الْإِفْطَارِ(بخاري
கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் தயார் செய்து
சிறுவர்கள் பசியால் உணவு கேட்டு அழும்போது நோன்பு திறக்கும் நேரம் வரை அவன் பசியை
மறந்திருப்பதற்காக அந்த விளையாட்டுப் பொருட்களை கொடுப்போம்
நோன்பு சிறந்த வணக்கம் என்பதால் தான் தன்னிடம் உரையாட
வரும்போது நோன்பாளியாக வர மூஸா நபிக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ
لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ
لَيْلَةً (142)الاعراف
ரய்யான்
(அதிகம் தாகம் தீருதல்) என்ற பொருள் கொண்ட வாசல்
வழியாக நோன்பாளிகளை பிரவேசிக்க வைப்பதின் தாத்பரியம்
وقوله : (( إن في الجنة بابًا يقال له : الرَّيَّان وهو الكثير الرِّيّ
، الذي هو نقيض العطش . وسُمِّي هذا الباب بهذا الاسم : لأنه جزاء الصائمين على
عطشهم وجوعهم ، واكتفى بذكر الرِّي عن الشبع لأنه يدل عليه من حيث إنه يستلزمه
.(شرح مسلم)
விளக்கம்-தவறுகளுக்கு
அல்லாஹ் தரும் தண்டனைகளும், நன்மைகளுக்கு அல்லாஹ் தரும் சன்மானமும் பெரும்பாலும்
பொருத்தமாக அமையும். தற்கொலை செய்தவர்களுக்கு தற்கொலையே தண்டனை, புறம் பேசியவர்கள்
மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் என்ற அடிப்படையில் தங்களின் உடம்பை தாங்களே கீறிக்
கொள்ளும் தண்டனை, அந்த வகையில் அல்லாஹ்விற்காக தாகத்துடன் இருந்தவர்கள் நுழையும்
வாசலே தாகம் தீருதல் என்ற பெயருள்ளதாக இருக்கிறது என்றால் அதற்குள்ளே அவர்களுக்கு
எவ்வளவு குடிபானங்கள் காத்திருக்கும் என்பதை விளங்க முடியும். மேலும்
நோன்பாளி தாகத்தை மட்டுமல்ல. பசியையும்
அடக்கிக் கொள்கிறார் அப்படியிருந்தும் இங்கே தாகத்தை மட்டுமே மையமாக
ஆக்கப்படுவதின் காரணம் நோன்பாளியைப் பொறுத்த வரை பசியை விட தாகம் தான் அதிகம்
ஏற்படுகிறது என்பதால். பசியை அடக்கிக் கொண்டு நீண்ட நேரம் இருந்து விடலாம். ஆனால்
தாகத்தை அடக்கிக் கொண்டு நீண்ட நேரம் இருப்பது கடினம்.
நோன்பு எனக்குரியது என்ற
வார்த்தையின் பல விளக்கங்களில் ஒன்று..
عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ الصَّوْمُ
لِى وَأَنَا أَجْزِى بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِى ،
وَالصَّوْمُ جُنَّةٌ ، وَلِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ حِينَ يُفْطِرُ
وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ ، وَلَخَلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ
اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ (بخاري)
உண்ணுதல், பருகுதல் என்பது மனிதனின் இயல்பான குணம்
அவ்வாறிருக்க நோன்பாளி நோன்பு நேரத்தில் தன் இயல்பான குணத்தை மாற்றிக் கொண்டு உண்ணுதல், பருகுதல் இல்லாத
அல்லாஹ்வின் தன்மையைப் போன்று சற்று நேரம் தனது இயல்பை மாற்றிக் கொள்வதால் அல்லாஹ்
அவரை மிகவும் விரும்புகிறான்- ஆதாரம்- முஸ்லிம் விரிவுரை
சில விஷயங்களில், சில
நேரங்களில் மட்டும் அல்லாஹ் தனது தன்மை தன் அடியானிடம் பிரதிபலிப்பதை
விரும்புகிறான்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِىِّ صلى
الله عليه وسلم قَالَ لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِى قَلْبِهِ مِثْقَالُ
ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ
حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً. قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ
(مسلم)
கருத்து- யாருடைய மனதில்
சிறிதளவு பெருமை இருக்குமோ அவர் சுவனம் செல்ல மாட்டார் என நபி ஸல் கூற,
அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தனது ஆடை
அழகாக இருப்பதை விரும்புகிறார். தனது செருப்பு அழகாக இருப்பதை விரும்புகிறார். இது
பெருமையா என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் இல்லை. அது பெருமை கிடையாது.
ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் நம்மிடமும் அழகை அவன் விரும்புகிறான்
என்றார்கள்
நோன்பின் சில சட்டங்கள்
சஹர் நேரத்தில்
ஜுனுபாளியாக இருப்பவர் அத்துடனே சஹர் சாப்பிட்டால் கூடுமா ?
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ كَانَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبِيتُ جُنُبًا فَيَأْتِيهِ
بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَيَقُومُ فَيَغْتَسِلُ فَأَنْظُرُ إِلَى
تَحَدُّرِ الْمَاءِ مِنْ رَأْسِهِ ثُمَّ يَخْرُجُ فَأَسْمَعُ صَوْتَهُ فِي صَلَاةِ
الْفَجْرِ قَالَ مُطَرِّفٌ فَقُلْتُ لِعَامِرٍ أَفِي رَمَضَانَ قَالَ رَمَضَانُ
وَغَيْرُهُ سَوَاءٌ (ابن ماجة)
ஆயிஷா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ஒருநாள் இரவு வீட்டில் குளிப்பு
கடமையானவர்களாக இருந்தார்கள். அப்போது பிலால் ரழி அவர்கள் வந்து தொழுகைக்கு
அழைப்பு விடுத்தார்கள். உடனே எழுந்து குளித்தார்கள். பின்பு புறப்பட்டார்கள்.அவர்களின்
குரலை ஃபஜ்ரில் நான் கேட்டேன் என ஆயிஷாரழி அறிவித்த இந்த ஹதீஸைக் கேட்ட முதர்ரஃப் அவர்கள் தனக்கு அறிவித்த ஆமிர் ரழி
அவர்களிடம் இந்த சம்பவம் ரமழானிலா நடைபெற்றது என்று கேட்க, ரமழானும் மற்ற
மாதங்களும் சமம் தான் என்றார்கள்.
மறதியாக சாப்பிட்டாலோ,
நீர் பருகினாலோ நோன்பு முறியாது. ஆனால் ஞாபகம் வந்தவுடன் அப்போதே நிறுத்த வேண்டும்
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ
فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ (بخاري-كتاب
الصوم
وفي
رواية للترمذي فَإِنَّمَا
هُوَ رِزْقٌ رَزَقَهُ
اللَّهُ فَإِنَّمَا هُوَ
رِزْقٌ رَزَقَهُ اللَّهُ- وقال الطيبي إنما
للحصر أي ما أطعمه أحد ولا سقاه إلا الله (فتح الباري
நோயாளி நோன்பை விட அனுமதி உண்டு. நோய்
நீங்கியவுடன் வேறு மாதத்தில் அதை களா செய்வார்
فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ
عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ (184البقرة)
ஆரோக்கியமாக இருப்பவரும்
நோன்புக்குப் பகரமாக ஃபித்யா கொடுப்பதற்கு
முன்பு அனுமதி இருந்தது. பின்பு அந்த சட்டம் மாற்றப்பட்டு தள்ளாத வயதை
அடைந்தவரும், தீராத வியாதி உள்ளவரும் மட்டுமே ஃபித்யா கொடுக்கலாம் என்ற சட்டம்
வந்தது
وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ
فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ
كُنْتُمْ تَعْلَمُونَ (184البقرة) عَنْ سَلَمَةَ قَالَ لَمَّا نَزَلَتْ {وَعَلَى
الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ}كَانَ مَنْ أَرَادَ أَنْ
يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا
(بخاري)وَأَمَّا الشَّيْخُ الْكَبِيرُ إِذَا لَمْ يُطِقْ الصِّيَامَ فَقَدْ
أَطْعَمَ أَنَسٌ بَعْدَ مَا كَبِرَ عَامًا أَوْ عَامَيْنِ كُلَّ يَوْمٍ مِسْكِينًا
خُبْزًا وَلَحْمًا (بخاري)وَمَاتَ أَنَسُ بْنُ مَالِكٍ سَنَةَ ثَلاَثٍ وَتِسْعِينَ
அனஸ்
ரழி அவர்கள் தனது தள்ளாத வயதில் ஃபித்யா கொடுத்தார்கள்.
அவர்களின்
வஃபாத் 93 வயதில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
பிரயாணத்தில் இருப்பவர்
முடிந்தால் நோன்பு வைக்கவும், முடியா விட்டால் இன்னொரு நாளில் களா செய்யவும்
அனுமதி உண்டு
عَنْ
عَائِشَةَ رضي الله عنها قَالَتْ سَأَلَ
حَمْزَةُ الْأَسْلَمِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ
شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ (ابن ماجة)عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ وَأَفْطَرَ- عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ
قَالَ لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فِي الْيَوْمِ الْحَارِّ الشَّدِيدِ
الْحَرِّ وَإِنَّ الرَّجُلَ لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ
وَمَا فِي الْقَوْمِ أَحَدٌ صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ (رواهما ابن ماجة)إن كان مسافرا لا يستضر بالصوم
فصومه أفضل وإن أفطر وقضى جاز(قدوري
நபி ஸல் அவர்கள்
பிரயாணத்தில் சில சமயம் நோன்பு வைப்பார்கள் சில சமயம் விட்டு விடுவார்கள்.
அபுத்தர்தா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் எங்களுடன் பிரயாணத்தில் இருந்தபோது
பார்த்தோம் கடுமையான வெப்பம் காரணமாக தலையில் கை வைத்து மறைப்பவர்களாக
இருந்தார்கள் ஆனால் அந்த நிலையிலும் இரண்டு பேர் நோன்பு வைத்தார்கள் 1. நபி ஸல்
அவர்கள் 2. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா
குறிப்பு-பிரயாணம் என்பது
அந்தக் காலத்தில் கடும் சிரமமானதாக இருந்துள்ளது என்பது மேற்கானும் ஹதீஸில் தெரிய
வருகிறது
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா அவர்களைப் பற்றிய மற்றொரு செய்தி
وأخرج
البيهقي عن أبي قتادة قال بعث رسول الله {صلى الله عليه وسلم} جيش الامراء وقال
عليكم زيد بن حارثة فان اصيب زيد فجعفر فإن اصيب جعفر فعبد الله بن رواحة فانطلقوا
فلبثوا ما شاء الله فصعد رسول الله {صلى الله عليه وسلم} المنبر وأمر فنودي
بالصلاة جامعة فاجتمع الناس فقال اخبركم عن جيشكم هذا انهم انطلقوا فلقوا العدو
فقتل زيد شهيدا ثم اخذ اللواء جعفر فشد على القوم حتى قتل شهيدا ثم أخذ اللواء عبد
الله بن رواحة فاثبت قدميه حتى قتل شهيدا ثم اخذ اللواء
خالد بن الوليد وهو أمير نفسه ثم قال رسول الله {صلى الله عليه وسلم} اللهم إنه
سيف من سيوفك فانت تنصره فمن يومئذ سمى خالد سيف الله
மூத்தா போரில் நபி ஸல்
அவர்கள் வழமைக்கு மாற்றமாக பின்வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இப்போருக்கு
ஜைதுப்னு ஹாரிஸா தளபதியாக இருப்பார். ஒருவேளை அவர் கொல்லப்பட்டு விட்டால் அடுத்து
ஜஃபர் ரழி தளபதியாக இருப்பார். ஒருவேளை
அவரும் கொல்லப்பட்டு விட்டால் அடுத்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழி தளபதியாக இருப்பார்
என்றார்கள் நபி ஸல் அவர்கள் சொன்னது போன்றே போரில் நடந்தது. அங்கே நடைபெறும்
நிகழ்வை மதீனாவில் இருந்த படி நபி ஸல் அவர்கள் நேரில் நடந்தது போன்று சொல்லிக் காட்டினார்கள்.
கைகளில் கொடி இருக்கும் நிலையில் முடிந்த வரை கொடியைத் தாங்கிப் பிடித்தவாறு மூவரும் கொல்லப்பட்டனர். இம்மூவருக்குப் பின்னால்
கொடியை காலித் இப்னு வலீத் ரழி வாங்கினார்கள் அல்லாஹ் வெற்றியைத் தந்தான்
வேறு சில அறிவிப்புகளில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழி அவர்கள் அப்போது
நேன்பாளியாக இருந்தார்கள் குற்றுயிராக இருக்கும் நிலையில் தண்ணீர் தரப்பட்டபோது
நான் என்னுடைய ரப்பிடம் சென்று நோன்பு திறப்பேன் என்று கூறியதாக அறிவிப்புகள்
உள்ளது.
கர்ப்பிணியும்,
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவளும் தற்காலிகமாக நோன்பை விடவும், பிறகு களா
செய்யவும் அனுமதி உண்டு
وَقَالَ الْحَسَنُ وَإِبْرَاهِيمُ فِي الْمُرْضِعِ أَوْ
الْحَامِلِ إِذَا خَافَتَا عَلَى أَنْفُسِهِمَا أَوْ وَلَدِهِمَا تُفْطِرَانِ
ثُمَّ تَقْضِيَانِ (بخاري) ولا فدية عليهم (قدوري)
குறிப்பு- குழந்தைக்கு
தாய்ப்பால் அவசியம் என்பதால் தான் அந்த நேரத்தில் நோன்பை விடவும் இஸ்லாம் அனுமதி தருகிறது.
நோன்பை முறிக்காத வேறு சில
செயல்கள்
சிகிச்சை அடிப்படையில்
ஊசி போடுவதால் நோன்பு முறியாது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதாலோ, நகம் வெட்டுவதாலோ
நோன்பு முறியாது சிகிச்சைக்காக குளுக்கோஸ் ஏற்றினால் நோன்பு முறியாது. தெம்புக்காக
ஏற்றினால் நோன்பு முறியும். இரத்தம் வருவதால் நோன்பு முறியாது. ஆனால் பற்களின்
ஈறுகளில் இரத்தம் வந்து அதன் சுவை
தொண்டையில் உணரப்பட்டால் நோன்பு முறியும். ஊதுபத்தி, சாம்பிராணி புகையை நோன்பாளி
வேண்டுமென்றே வாயில் நுழைய வைத்தால் நோன்பு முறியும். அவருடைய விருப்பமின்றி நுழைந்தால்
நோன்பு முறியாது. பல் துலக்குவதால் நோன்பு முறியாது. ஷாஃபியீ மத்ஹபில்
மதியத்திற்குப் பிறகு பல் துலக்குவது மக்ரூஹ். நோன்பாளி முடி வெட்டுவதால் நோன்பு
முறியாது
வேண்டுமென்றே நோன்பை
முறித்தால் கஃப்பாரா கொடுக்க வேண்டும்
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا
رَسُولَ اللَّهِ هَلَكْتُ قَالَ مَا لَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا
صَائِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَجِدُ
رَقَبَةً تُعْتِقُهَا قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ
مُتَتَابِعَيْنِ قَالَ لَا فَقَالَ فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا
قَالَ لَا قَالَ فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا
نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بِعَرَقٍ فِيهَا تَمْرٌ وَالْعَرَقُ الْمِكْتَلُ قَالَ أَيْنَ السَّائِلُ فَقَالَ
أَنَا قَالَ خُذْهَا فَتَصَدَّقْ بِهِ فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي
يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لَابَتَيْهَا يُرِيدُ الْحَرَّتَيْنِ
أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ
أَطْعِمْهُ أَهْلَكَ (بخاري)
நோன்பின் தத்துவங்கள்
يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ
مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183البقرة)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்துகளில் முக்கியமானவை 1. உடல் இச்சை.2- கோபம்.-3- தவறான உணவு முறை. -4- தவறான பேச்சு.
நோன்பு உடல் இச்சையை
கட்டுப்படுத்தும்
மனிதனிடம் இயல்பிலேயே
பாலியல் உணர்வு இருக்கின்றது. உலகில் வாழவும் உயிரினங்களின்
பரவலுக்கும் பாலியல் உணர்வு
அவசியமானதாகும். எனினும், இந்த
உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள்
தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது. இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை
அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம்
இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத
சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன. உலகம் சந்தித்து வரும்
பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத்
தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது
சாத்தியமாகின்றது.
عَنْ بْنِ
مَسْعُودٍ رضي الله عنهكُنَّا مَعَ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
شَبَابًا لَا نَجِدُ شَيْئًا فَقَالَ
لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ
أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ
بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ (بخاري) -كتاب النكاح
நோன்பு கோபத்தை
கட்டுப்படுத்தும்
இன்று மனிதன் இயந்திர
மயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த
முடியாத மிருகமாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி
கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக் கல்லைத் தலையில் போட்டுக்
கொல்கிறாள். மண்ணெண்ணையை ஊற்றி
எரிக்கின்றாள். பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத்
தூக்கத்தைக் கெடுத்ததற்காக பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக்
கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது
அடம் பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவற்றில் அடித்துப் பெற்றோரே கொலை
செய்கின்றனர்; இரு சகோதரர்கள் கழிவறைக்கு
முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை
அன்றாடம் பார்த்து வருகின்றோம். ஆனால் நோன்பு மனிதனுடைய கோப உணர்வைக் கட்டுப்படுத்தப்
பழக்குகின்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ(بخاري) باب فَضْلِ الصَّوْمِ
நோன்பு தவறான பேச்சை
விட்டும் தடுக்கிறது
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப்
பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது
பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும்
ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால்
பொய்யின் விபரீதத்தை உணர வேறு ஆதாரம் தேவையில்லை.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي
الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ
الزُّورِ وَالْعَمَلَ بِهِ
وَالْجَهْلَ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ (بخاري)
நோன்பு என்பது உணவு
முறையில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது
தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய
பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை
ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு
நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டாலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன. மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது
தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து
விடுபடப் பயிற்சியளிக்கின்றது. நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற
உலக நலன்களை நாம் அடையலாம்.
“உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள் (குர்ஆன் 7:31) என்ற இறை வாக்கைப் பின்பற்றி
வாழ்ந்த நபித்தோழர்கள் நோயற்றவர்களாக வாழ்ந்திருந்தனர். அளவின்றி உணவுண்டு, உடல் பருத்து விடுவதே பெரும்பாலான
நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது. எனவே பசித்திருப்பதும் பசித்த பின்பே உண்ணுவதும் நலம் தரும்
செயற்களாகும்.
நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான
ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது
பல மணிநேரம்
பசித்திருப்பதன் மூலம் உடற் செல்கள் புத்துணர்வு பெறுகின்றன. நோன்பின் போது
உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. கண் பார்வை சீரடைகிறது. காது நன்றாக
கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.
உள்ளுறுப்புகள் தூய்மையுறுகின்றன. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன.
கொழுத்த உடல் கொண்டவர்கள், நோன்பு
மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள்
கரைக்கப்படும்.நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. காம உணர்வு தணிகிறது. தூய
சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. இளையவரும், முதியவரும், புதுப்பிக்கப் படுகிறார்கள். நோன்பு
மேற்கொள்வதால் முதுமை தள்ளிப்போடப்படுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன. வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில்
நடுநிலைமையை உருவாக்குகிறது. நோன்பு சில செயல்களை நிறுத்துகிறது. இதனால் ஒரு
சமநிலை உண்டாகிறது. இந்த ரசாயனச் செயல்களின் சமநிலை உயிர் வாழ்வதற்கு மிகவும்
இன்றியமையாதது ஆகும். ஆகவே நீண்ட ஆயுளுடன் வாழ நோன்பு சிறந்த மருந்தாகும்.“அமெரிக்கர்களின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உணவுக்
கட்டுப்பாடு இல்லாததேயாகும். நோன்பு என்பதே அவர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். உயர்
இரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலியன தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும்.
நோன்பு இவற்றைத் தடுக்கும் கருவியாக உள்ளது.”
நோன்பு வைப்பதால் புத்துணர்வு பெறும் நுரையீரல்
நுரையீரல் அதிகப்படியாக
இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா
நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து
உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும்
போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும்.
அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி
செய்கின்றன. இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில்
நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு
பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு
பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில்
அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள். “நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். இப்பொழுது
பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல; அவருடைய நோயே” என அமெரிக்க மருத்துவர் டியூவே கூறுகிறார். மற்றொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் எல்ஸன்
எம். ஹாஸ் என்பவர் கூறுகிறார் (நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் “நோன்பு
மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மிகத் தொன்மையான உலகளாவிய நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத்
தவிர்த்திருந்ததே என் உடல் நலம் தேற உதவியது எனக் கண்டுபிடித்தேன். புதிய சக்தி
உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் ஓர் உத்வேகம் பளிச்சிடுவதையும்
உணர்ந்து கொண்டேன். நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது” என்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக