வியாழன், 4 ஜூலை, 2024

ஆரோக்கியத்தை கெடுக்கும் தீய செயல்கள்

 وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (201)البقرة

அல்லாஹ்வை வணங்கி வாழ்வதற்கு ஆரோக்கியம் மிக அவசியம்

عن ابْن عُمَرَ يَقُولُ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَدَعُ هَؤُلاَءِ الدَّعَوَاتِ حِينَ يُمْسِى وَحِينَ يُصْبِحُ « اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَالآخِرَةِ (ابوداود

உடல் ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பது சிறந்த துஆ

عَنْ أَنَس رض قَالَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ فَإِذَا أُعْطِيتَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ (ابن ماجة

அல்லாஹ்வின் தூதரே துஆக்களின் சிறந்த துஆ எது என்று நபி ஸல் அவர்களிடம் ஒருவர் வந்து கேட்டார். அல்லாஹ்விடம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் கேள் என்று கூறினார்கள். மறுநாளும் அதே கேள்வியைக் கேட்க, அப்போதும் அதே பதிலை நபி ஸல் கூறினார்கள். மறுநாளும் மூன்றாவது நாளும் அதே கேள்வியைக் கேட்க, அப்போதும் அதே பதிலை கூறினார்கள். பிறகு கூறினார்கள். இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் நீ வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றியடைந்து விட்டாய்.

உடல் ஆரோக்கியத்திற்கு எதிராக துஆச் செய்த நபித் தோழரை கண்டித்த நபி ஸல்

عَنْ أَنَسِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا قَدْ جُهِدَ حَتَّى صَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ أَمَا كُنْتَ تَدْعُو أَمَا كُنْتَ تَسْأَلُ رَبَّكَ الْعَافِيَةَ قَالَ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَانَ اللَّهِ إِنَّكَ لَا تُطِيقُهُ أَوْ لَا تَسْتَطِيعُهُ أَفَلَا كُنْتَ تَقُولُ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (ترمذي- باب مَا جَاءَ فِى عَقْدِ التَّسْبِيحِ بِالْيَدِ.-كتاب الدعوات

  நபி ஸல் அவர்கள் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். (ஆரோக்கியமாக இருந்த) அவர் கோழிக் குஞ்சைப் போன்று (மிகவும் மெலிந்த உருவமாக) ஆகி விட்டார்.அவரிடம் நபி ஸல் அவர்கள் நீர் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை வேண்டி துஆக் கேட்டீர்களா என்றார்கள். அதற்கு அவர் நான் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் என்னை மறுமையில் தண்டிப்பதாக இருப்பதால் அதை உலகிலேயே தண்டித்து விடு என்று துஆச் செய்தேன் என்றார்.அவரிடம் நபிஸல் அவர்கள் சுப்ஹானல்லாஹ்.. இப்படி துஆக் கேட்கலாமா.. அவ்வாறு அல்லாஹ் தந்தால் நிச்சயமாக உம்மால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே நீர் ரப்பனா ஆதினா.. யாஅல்லாஹ் எங்களுக்கு இம்மையிலும் நலவைத் தா.. மறுமையிலும் நலவைத் தா.. என்று துஆவை ஓதியிருக்க வேண்டாமா என்றார்கள்

ரப்பனா ஆதினா... துஆ எல்லா நலவுகளையும் உள்ளடக்கியது

فَجَمَعَتْ هَذِهِ الدَّعْوَة كُلّ خَيْر فِي الدُّنْيَا وَصَرَفَتْ كُلّ شَرّ فَإِنَّ كُلّ الْحَسَنَة فِي الدُّنْيَا تَشْمَل كُلّ مَطْلُوب دُنْيَوِيّ مِنْ عَافِيَة وَدَار رَحْبَة وَزَوْجَة حَسَنَة وَرِزْق وَاسِع وَعِلْم نَافِع وَعَمَل صَالِح وَمَرْكَب هَيِّن وَثَنَاء جَمِيل إِلَى غَيْر ذَلِكَ (تفسير ابن كثير

عن عَبْد الْعَزِيز بْن صُهَيْب قَالَ : سَأَلَ قَتَادَة أَنَسًا أَيَّ دَعْوَة كَانَ أَكْثَر مَا يَدْعُوهَا النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَقُول " اللَّهُمَّ رَبّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة وَفِي الْآخِرَة حَسَنَة وَقِنَا عَذَاب النَّار " وَكَانَ أَنَس إِذَا أَرَادَ أَنْ يَدْعُو بِدَعْوَةٍ دَعَا بِهَا وَإِذَا أَرَادَ أَنْ يَدْعُو بِدُعَاءٍ دَعَا بِهَا فِيهِ ( أحمد

கதாதா ரழி அவர்கள் அனஸ் ரழி அவர்களிடம் அதிகமாக நபி ஸல் அவர்கள் எந்த துஆவை ஓதி வந்தார்கள் என்று கேட்ட போது ரப்பனா ஆதினா.. துஆவைத் தான் அதிகமாக நபி ஸல் ஓதியதாகக் கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللهِ الرُّومِيِّ ، قَالَ : كُنَّا عنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ فَقَالَ لَهُ رَجُلٌ : يَا أَبَا حَمْزَةَ ، إنَّ إخْوَانَك يُحِبُّونَ أَنْ تَدْعُوَ لَهُمْ ، فَقَالَ : اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَآتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ، قَالُوا : زِدْنَا يَا أَبَا حَمْزَةَ ، فَرَدَّهَا عَلَيْهِمْ ، قَالُوا : زِدْنَا يَا أَبَا حَمْزَةَ ، قَالَ : حَسْبُنَا اللَّهُ يَا أَبَا فُلانٍ ، إِنْ أُعْطِينَاهَا ، فَقَدْ أُعْطِينَا خَيْرَ الدُّنْيَا وَالآخِرَةِ.( مُصنف ابن أبي شيبة

ஆரோக்கியத்துடன் அல்லாஹ் நம்மை வைத்திருப்பதற்காக அடிக்கடி நன்றி செலுத்த வேண்டும்

360 மூட்டுகளும் சீராக இயங்கிக் கொண்டிருப்பதற்காக தினமும் நன்றி செலுத்த வேண்டும். இந்த மூட்டுகள் இல்லா விட்டால் நாம் மரக்கட்டை மாதிரி இருக்க வேண்டும். கை, கால்களை மடக்க முடியாது

عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَى مِنْ ابْنِ آدَمَ صَدَقَةٌ تَسْلِيمُهُ عَلَى مَنْ لَقِيَ صَدَقَةٌ وَأَمْرُهُ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيُهُ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِمَاطَتُهُ الْأَذَى عَنْ الطَّرِيقِ صَدَقَةٌ وَبُضْعَةُ أَهْلِهِ صَدَقَةٌ وَيُجْزِئُ مِنْ ذَلِكَ كُلِّهِ رَكْعَتَانِ مِنْ الضُّحَى (ابوداود

ஆதமின் மகன் அதிகாலையில் எழும்போது அவனின் ஒவ்வொரு மூட்டுகளும் ஆரோக்கியமாக இருப்பதற்காக அவன் தர்மம் செய்ய வேண்டும். சலாம் சொல்வதும் ஒருவகை தர்மம். நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒருவகை தர்மம். நோவினை தருபவற்றை பாதையை விட்டும் அப்புறப்படுத்துவதும் ஒருவகை தர்மம். பிற பெண்களை நாடாமல் மனைவியுடன் மட்டும் உறவு வைப்பதும்  தர்மம். இவையனைத்துக்கும் நிகராக ழுஹாவின் இரண்டு ரக்அத் அமையும்.    

நோவினை தரும் கழிவுகளை நீக்கி எனக்கு ஆரோக்கியம் அளித்தவனுக்கே எல்லாப் புகழும் என்ற துஆ

عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنْ الْخَلَاءِ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي (ابن ماجة

கழிவறையில் இருந்து வெளியே வருவதற்கும் அல்லாஹ்வின் மன்னிப்புக் கேட்பதற்கும் என்ன சம்பந்தம்

قالت عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ الْغَائِطِ قَالَ غُفْرَانَكَ (ابن ماجة

சிறந்த தக்வா உடைய மனிதர் எந்நேரமும் திக்ரிலேயே இருக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய ஒருவரால் கழிவறையில் இருக்கும் நேரத்தில் அவரால் திக்ரு செய்ய முடியாது. எனவே இந்த நேரத்தில் என்னால் எந்த திக்ரும் செய்ய முடியாமல் ஆகி விட்டதே என்பதற்காகவும் இந்த தவ்பாவின் வாசகம். 

ஆரோக்கியத்தை அளித்த அல்லாஹ்வுக்கு இப்படியும் நன்றி செலுத்திய உர்வா ரழி

وقد ذكر غير واحد أنه وفد على الوليد بدمشق، فلما رجع أصابته في رجله الآكلة فأرادوا قطعها، فعرضوا عليه أن يشرب شيئا يغيب عقله حتى لا يحس بالالم ويتمكنوا من قطعها، فقال: ما ظننت أن أحدا يؤمن بالله يشرب شيئا يغيب عقله حتى لا يعرف ربه عزوجل، ولكن هلموا فاقطعوها فقطعوها من ركبته وهو صامت لا يتكلم، ولا يعرف أنه أن، وروى أنهم قطعوها وهو في الصلاة فلم يشعر لشغله بالصلاة فالله أعلم. ووقع في هذه الليلة التي قطعت فيها رجله ولد له يسمى محمدا كان أحب أولاده من سطح فمات، فدخلوا عليه فعزوه فيه، فقال: اللهم لك الحمد، كانوا سبعة فأخذت واحدا وأبقيت ستة، وكان لي أطراف أربعة فأخذت واحدا وأبقيت ثلاثة، فلئن كنت قد أخذت فلقد أعطيت، ولئن كنت قد ابتليت فقد عافيت. (البداية والنهاية

ஹழ்ரத்உர்வத் இப்னு ஸுபைர் ரஹ் அவர்கள் ஒரு பிரயாணம் முடித்து திரும்பியபோது அவர்களின் காலில் ஒரு கிருமி தாக்கி அதனால் காலை வெட்டி எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. காலை எடுக்கும்போது மயக்க மருந்து கொடுக்க மருத்துவர்கள் முற்பட்ட போது அதை அவர்கள் அனுமதிக்கவில்லை. காலை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் மயக்க மருந்து உண்ண மாட்டேன் என மறுத்து விட்டார்கள். எனவே மயக்க மருந்தும் உண்ணாமல் வலியையும் உணராத சூழ்நிலையில் அவர்களின் கால் வெட்டி எடுக்கப்பட்டது.  கால் துண்டிக்கப்பட்ட அதே நாள் இரவில் அவர்களுக்குப் பிரியமான முஹம்மது என்ற ஒரு மகன் இறந்துபோய்விட்டார். அந்த சோதனையான கட்டத்தில் உர்வா ரஹ் அவர்கள் கேட்ட துஆ: யா அல்லாஹ்!எனக்கு ஏழு குழந்தைகளை கொடுத்து ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு, மீத ஆறு குழந்தைகளை ஹயாத்தாக தந்துள்ளாய். மேலும் எனக்கு இருகைகளையும் இரு கால்களையும் தந்து,அதில் ஒரு காலை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தந்திருக்கிறாய். நீ ஒன்றை என்னிடமிருந்து எடுத்தாலும் மற்றொன்றை எனக்குத் தந்துள்ளாய். நீ ஒரு விஷயத்தில் என்னை சோதித்தாலும் மற்றொரு விஷயத்தில் எனக்கு ஆரோக்கியம் அளித்துள்ளாய் உனக்கே புகழ் அனைத்தும் என்று புகழ்ந்தார்களாம்.

தோற்றத்தில் குள்ள மனிதரைப் பார்த்த நேரத்தில் நபி ஸல் அவர்கள் உடனே ஷுக்ர் சஜ்தா செய்தார்கள்

عن أبي جعفر : أن النبي صلى الله عليه و سلم رأى رجلا من النغاشين فخر ساجدا – دار قطني

جاء رجل إلى يونس بن عبيد رح يشكو ضيق حاله، فقال له "أيسرك ببصرك هذا الذي تبصر به مائة ألف درهم؟"،قال الرجل:لا،قال: "فبيديك مائة ألف؟"،قال الرجل: لا ، قال:" فبرجليك؟"قال الرجل: لا ، فذكره يونس بن عبيد رحمه الله بنعم الله عليه،ثم قال له"أرى عندك مئين ألوف!،وأنت تشكو الحاجة!".(الشكر لابن أبي الدنيا)                              

ஒருவர் யூனுஸ்இப்னு உபைத் (ரஹ்) அவர்களிடம் வந்து, தான் மிகவும் கஷ்டப்படுவதாக, வறுமையில் வாடுவதாக முறையிட, அது கேட்ட யூனுஸ் (ரஹ்) அவர்கள் அவரிடம் உம்முடைய கண்ணை எனக்கு ஒரு லட்சம் திர்ஹமுக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை நான் தரமாட்டேன் என்றார். சரி, அப்படியானால் உன் இரு கைகளையும் ஒரு லட்சம் திர்ஹமுக்கு எனக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை, நான் தரமாட்டேன் என்றார். சரி, அப்படியானால் உன் இரு கால்களையும் ஒரு லட்சம் திர்ஹமுக்கு எனக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை, நான் தரமாட்டேன் என்றார். அப்படியானால், அல்லாஹ் உனக்கு பேருபகாரம் செய்திருக்கின்றான். உன்னிடம் நான் பல லட்சம் திர்ஹம் மதிப்புடைய இறைவனின் உபகாரங்களைக் காண்கின்றேன். ஆனால், நீரோ! வாழ்க்கையில் கஷ்டப்படுவதாக என்னிடம் வந்து முறையிடுகின்றீர்?! என்று கூறினார்கள்.

ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எச்சரிக்கையாக இருப்பதும் தவறல்ல

عَنْ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا قَالَ هِيَ مِنْ قَدَرِ اللَّهِ (ترمذي- - باب مَا جَاءَ فِى الرُّقَى وَالأَدْوِيَةِ.كتاب الطب

நாங்கள் மருத்துவம் செய்து கொள்வதோ அல்லது ஓதிப்பார்ப்பதோ,(நோய் வராமல் தடுக்க) எச்சரிக்கையாக இருப்பதோ அல்லாஹ்வின் விதியை மாற்றி விடுமா? என நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல் அவர்கள்- நீங்கள் கூறிய இம்மூன்றும் அல்லாஹ்வின் விதி தான். (அதாவது ஓதிப் பார்ப்பது அல்லது மருந்து உண்பது அல்லது எச்சரிக்கையாக இருப்பது ஆகிய ஏதேனும் ஒன்றின் மூலம் உங்களின் நோய் குணமாகும் என்பதும் அல்லாஹ்வின் விதியாகும்

பல மனிதர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் ஏமாந்தவர்களாகவே இருக்கின்றனர்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ (بخاري

ஆரோக்கியத்தைக் கெடுக்கும் தீய செயல்கள். புகை பழக்கமும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ (195) البقرةகருத்து- உங்களுடைய கரங்களால் நீங்களே நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கு 90 சதவீத காரணம் புகை பிடிக்கும் பழக்கமாகும். மதுவும் புகையிலும் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷப் பொருட்களாகும்.  புகை பிடிப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. இன்னும் பல்வேறு நோய்களை புகைப்பழக்கம் உருவாக்குகிறது.

புகை பிடிக்கும் பழக்கம் வணக்கங்களிலும் இடையூறை ஏற்படுத்தும்

عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَطَبَ يَوْمَ الْجُمُعَةِ........ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا النَّاسُ تَأْكُلُونَ شَجَرَتَيْنِ لَا أَرَاهُمَا إِلَّا خَبِيثَتَيْنِ هَذَا الْبَصَلَ وَالثُّومَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وَجَدَ رِيحَهُمَا مِنْ الرَّجُلِ فِي الْمَسْجِدِ أَمَرَ بِهِ فَأُخْرِجَ إِلَى الْبَقِيعِ فَمَنْ أَكَلَهُمَا فَلْيُمِتْهُمَا طَبْخًا (مسلم

உமர் ரழி அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்தும்போது கூறினார்கள். மக்களே நீங்கள் வெங்காயம், பூண்டு இரண்டையும் வேக வைக்காமல் உண்ணுகிறீர்கள். துர்வாடையுள்ளதாகவே தவிர அவற்றை நான் கருதுவதில்லை. நபி ஸல் அவர்கள் இருக்கும்போது இந்த வாடையை எவரிடமேனும் உணர்ந்தால் அவரை மஸ்ஜிதில் இருந்து வெளியேற்றி பகீஃ வரை கொண்டு செல்லும்படி உத்தரவிடுவார்கள். எனவே எவர் அவற்றை உண்பாரோ அவர் வேக வைத்து உண்ணட்டும். 

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا (بخاري

வெங்காயம், பூண்டு இரண்டையும் வேக வைக்காமல் பச்சையாக சாப்பிட்டவர் மஸ்ஜிதை நெருங்க வேண்டாம்

படிப்பினை- வெங்காயம், பூண்டு இரண்டையும் வேக வைக்காமல் பச்சையாக சாப்பிட்டவர் மிஸ்வாக் செய்து அதன் துர்வாடையை நீக்காமல் பள்ளிக்குள் நுழைய வேண்டாம் என்பது இதன் கருத்தாகும். மேலும் வெங்காயம், பூண்டு இரண்டிலும் உள்ள துர்வாடைய விட பீடி, சிகரெட்டில் அதிகம் துர்வாடை உள்ளது என்பதை அறிவோம்.

எனவே வெங்காயம், பூண்டு இரண்டுக்கும் சொல்லப்பட்ட சட்டம் இதற்கும் பொருந்தும்.

போதைப் பழக்கமும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

  இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்ட கஞ்சா, பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள பெட்டிக் கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அந்தக் கடைகளில் வழக்கமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். புதிதாக யாரும் சென்றால் கொடுக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்... பேருந்து நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களிடம்கூட மிகச் சுலபமாகப் போதை மருந்துகள் கிடைக்கின்றன. பல இடங்களில் காவல்துறைக்கும் தெரிந்தே இத்தகைய போதை விற்பனை நடைபெறுகிறது.                    

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدْمِنُ الْخَمْرِ كَعَابِدِ وَثَنٍ  (ابن ماجة

பெரும்பாலும் மது போதையில் இருப்பவன் சிலை வணக்கம் செய்பவனுக்கு ஒப்பானவன்

عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ (ابن ماجة

ஒருமுறை மது அருந்தி போதை ஏற்பட்டால் அவன் தவ்பா செய்யாத வரை அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَسْقِيَهُ مِنْ رَدَغَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا رَدَغَةُ الْخَبَالِ قَالَ عُصَارَةُ أَهْلِ النَّارِ (ابن ماجة

மதுவுடன் சம்பந்தப்பட்ட பத்து பேர் சபிக்கப்பட்டவர்கள்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لُعِنَتْ الْخَمْرُ عَلَى عَشْرَةِ أَوْجُهٍ بِعَيْنِهَا وَعَاصِرِهَا وَمُعْتَصِرِهَا وَبَائِعِهَا وَمُبْتَاعِهَا وَحَامِلِهَا وَالْمَحْمُولَةِ إِلَيْهِ وَآكِلِ ثَمَنِهَا وَشَارِبِهَا وَسَاقِيهَا (ابن ماجة

இரவில் சீக்கிரம் தூங்காமல் தேவையின்றி விழித்திருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும்

عَنْ أَبِي بَرْزَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا (أي قبل العشاء)  وَالْحَدِيثَ بَعْدَهَا..(بخاري)

عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ   قَال:رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ النَّاسَ عَلَى الْحَدِيثِ بَعْدَ الْعِشَاءِ وَيَقُولُ:أَسَمَرٌ أَوَّلَ اللَّيْلِ وَنَوْمٌ آخِرَهُ ؟

(مصنف ابن ابي شيبة)-

     உமர் ரழி அவர்கள் இஷாவுக்குப் பின் வீண் பேச்சு பேசிக் கொண்டிருப்பவர்களை அடிப்பவர்களாக ஆயிருந்தார்கள். மேலும் அவர்களை நோக்கி... இரவின் துவக்கத்தில் (அதாவது தூங்க வேண்டிய இந்த நேரத்தில்) பேசிக் கொண்டிருந்து விட்டு,  இரவில் பிற்பகுதியில் (எழுந்து வணங்காமல்  அயர்ந்து) தூங்குவதற்காக (இவ்வாறு செய்கிறீர்கள்) என்று எச்சரிப்பார்கள்.                                    

عَنْ أَبِي وَائِلٍ وَإِبْرَاهِيمَ قَالاَ: جَاءَ رَجُلٌ إِلَى حُذَيْفَةَ فَدَقَّ الْبَابَ فَخَرَجَ إِلَيْهِ حُذَيْفَةُ فَقَالَ:مَا جَاءَ بِكَ ؟فَقَالَ:جِئْت لِلْحَدِيثِ فَسَفَقَ حُذَيْفَةُ الْبَابَ دُونَهُ  ثُمَّ قَالَ:إِنَّ عُمَرَ جَدَبَ لَنَا السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ(مصنف ابن ابي شيبة

ஹுதைஃபா ரழி அவர்களிடம் ஒருவர் வந்து இரவில் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த ஹுதைஃபா ரழி அவர்கள் எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, உம்மிடம் பேசிக் கொண்டிருப்பதற்காக வந்தேன் என்று கூற, உடனே ஹுதைஃபா ரழி அவர்கள் கதவை வேகமாக தாழிட்ட படி,  நிச்சயமாக உமர் ரழி அவர்கள் இஷாவுக்குப் பின்னால் வீண் பேச்சுப் பேடுவதை கண்டித்துள்ளார்கள் என்று கூறிய கதவைத் தாழிட்டார்கள்.                

இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும் என நமக்கு கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு நேர் மாற்றமாக இன்று....

இரவு நேரங்களில்  பெரும்பாலான குடும்பங்களில் ஆளுக்கு ஒரு மொபைல் போனை  கையில் வைத்துக் கொண்டு  அதனுடன்  இரவைக் கழிக்கும் வழமை பெருகி விட்டது.  இருட்டுக்குள்  பார்க்கப்படும் மொபைல்  போனில் உள்ள ஒளிக் கதிர்களால்  பலருக்கு பார்வைக் குறைவும் ஏற்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் தான் முக்கியமான சீரியல்கள் ஒலி பரப்பப்படுகிறது. 11 மணி வரை அவைகளை பார்த்து முடிக்காமல் பெரும்பாலான பெண்களுக்கு தூக்கம் வருவதில்லை.

இதனால் பல குடும்பங்களில் தூங்கும் நேரம் என்பது அடுத்த நாள் ஆரம்பமாகும்போது அதாவது 12 மணி என்றாகி விட்டது இது ஆரோக்கியத்தைபாதிக்கும். இரவு நேரங்களில் தூங்கும்போது நம் உடலில் ஆரோக்கியத்தைத் தரும் சில சுரப்பிகளை அல்லாஹ் உற்பத்தி செய்கிறான்.இரவுத் தூக்கம் மிகவும் குறைவதால் நாம் அந்த அருட்கொடையே இழந்து விடுகிறோம்.

அதி வேகமாக வாகனம் ஓட்டுவதும் ஆபத்தை விளைவிக்கும்

ஒவ்வொரு ஆண்டும் உலகில் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் உலகின் பெரும் பிரச்சனையாக மாறிவிடும்.

அதிவேகமாக  வாகனம் ஓட்டாதீர்கள். துன்யாவுடைய விஷயங்களில் நடுநிலையை இஸ்லாம் விரும்புகிறது

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ الْأَعْمَشُ وَلَا أَعْلَمُهُ إِلَّا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ5 وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ

عن سهل بن سعد قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ (ترمذي)كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ-

நிதானம் அல்லாஹ்வைச் சார்ந்தது அவசரம் ஷைத்தானைச் சார்ந்தது

அவசரம் என்ற மரத்தில் இருந்து கைசேதம் என்ற பழத்தைத் தான் மனிதன் பறிப்பான் எனும் சஹாபியின் கூற்று

وقال عمرو بن العاص لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة (تحفة الاحوذي)

எந்த ஒரு காரியத்திலும் கடைசி நேரத்தில் தயாராகுவதை விட சற்று முன்கூட்டியே தயாராகுவதால் அவசரத்தை தவிர்க்கலாம்.

عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ  أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ: اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ:حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ وَفَرَاغَك قَبْلَ شَغْلِكَ، وَغِنَاك قَبْلَ فَقْرِكَ ، وَشَبَابَك قَبْلَ هَرَمِكَ ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِك.(مصنف ابن ابي شيبة) مشكاة) باب تمنى الموت وذكره

தலை முடிக்கும், தாடிக்கும் டை அடிப்பதால்  ஆரோக்கியம் பாதிக்கும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ(ابوداود

டை அடிப்பதால் அதிலுள்ள இரசாயனப் பொருட்கள் தலையில் உள்ள தோலினுள் இறங்கி தலைமுடி கொட்ட ஆரம்பிக்கிறது. தலையில் சொரசொரப்பு ஏற்பட்டு தலையின் தோல் சிதில் சிதிலாக ஆக்கப்படுகிறது. அந்த இரசாயனத்தால் கண்பார்வை குறைகிறது. சிந்தனைத் திறனும் பாதிக்கப்படுகிறது என மருத்துவ மேதைகள் குறிப்பிடுகின்றனர்

மிகவும் சூடான உணவை உண்பதால் ஆரோக்கியம் பாதிக்கும்

عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِى بَكْرٍ : أَنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِثَرِيدٍ أَمَرَتْ بِهِ فَغُطِّىَ حَتَّى يَذْهَبَ فَوْرَةُ دُخَانِهِ وَتَقُولُ إِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ :« هُوَ أَعْظَمُ لِلْبَرَكَةِ ». (دارمي

அஸ்மா ரழி அவர்களிடம் மிகவும் சூடான உணவு கொண்டு வரப்பட்டால் அதன் சூடு அடங்கும் வரை மூடி வைக்கச் சொல்லி பிறகு சாப்பிடுவார்கள். மேலும் இதில் தான் பரக்கத் உள்ளது என நபி ஸல் அவர்கள் சொன்னதாகவும் கூறினார்கள்

டாக்டர் ஆல்பர்ட் என்பவர்  FEED & CARE  என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவரும் தனது ஒவ்வொரு மருத்துவக் குறிப்பிலும் நபி ஸல் அவர்களின் சுன்னத்துகளை மேற்கோள்காட்டுகிறார். அவர் கூறும் மிகவும் சூடான உணவுகளை சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படும். இரைப்பை வீக்கம் ஏற்படும். உடலில் துர்நாற்றம் ஏற்படும்.      

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதால் ஆரோக்கியம் பாதிக்கும்

عن أَبَي هُرَيْرَةَ  يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا  (مسلم 5398

ஒரு அருவிக்கு கீழே ஒரு பெரிய பாறை உள்ளது என்றால் அந்த அருவியின் தண்ணீர் எந்த அளவுக்கு வேகமாக அந்தப் பாறையின் மீது விழுகிறதோ அந்த பாறையின் விரிசலும் இரண்டாகப் பிளக்கவும்  வாய்ப்புள்ளது. அதேபோல் நாம் நின்று கொண்டு தண்ணீரை குடித்தால் அது நேராக குடலைத் தாக்குகிறது. ஒரு மனிதன் இவ்வாறு தொடர்ந்து செய்தால் அவனுடைய குடலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.         

பாத்திரங்களுக்குள் மூச்சு விட வேண்டாம் என்று சொன்னத்தில் அடங்கியுள்ள தத்துவம்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُتَنَفَّسَ فِى الإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ )ابوداود) باب فِى النَّفْخِ فِى الشَّرَابِ كتاب الأشربة  عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ النَّفْخِ فِي الشُّرْبِ فَقَالَ رَجُلٌ الْقَذَاةُ أَرَاهَا فِي الْإِنَاءِ قَالَ أَهْرِقْهَا قَالَ فَإِنِّي لَا أَرْوَى13 مِنْ نَفَسٍ وَاحِدٍ قَالَ فَأَبِنْ الْقَدَحَ14 إِذَنْ عَنْ فِيكَ )ترمذي) بَاب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّفْخِ فِي الشَّرَابِ- كِتَاب الْأَشْرِبَةِ

நீர் அருந்தும்போது பாத்திரத்துக்குள் மூச்சு விடுவதால் வாய், மற்றும் மூக்கில் இருந்து வெளிப்படும் கிருமிகள் நீரில் படும். அதனால் நீர் மாசுபடும். அந்த நீரை பருகினால் நோய்கள் உருவாகும்  என்பதால் அது தடுக்கப்பட்டுள்ளது.

பொருள்- 13,ஒரு மிடரில் என் தாகம் தீராது. 14,ஒரு மிடர் மட்டும் பருகு என்று நான் கூறவில்லை மாறாக ஒரு மிடர் குடித்த பின் கோப்பையை வாயை விட்டும் தள்ளி வைத்து மூச்சு விடு. பிறகு மீண்டும் பருகு..

தும்மலை அடக்கினாலும் ஆரோக்கியம் பாதிக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ الْحَمْدُ لِلَّهِ وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ فَإِذَا قَالَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ فَلْيَقُلْ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ (بخاري6224

   தும்மலை   அடக்கினால் அது பேராபத்தில் போய் முடியும் என லண்டனில், மருத்துவர்களின் மருத்துவ ஆய்வுகளையும் அனுபவங்களையும்  வெளியிடுகின்ற  BMJ Case Reports  என்ற மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது. 34 வயது  நோயாளி, வீங்கிய கழுத்துடன் தனக்கு உணவு எதுவும் விழுங்க முடியவில்லை;  தொண்டையில் ஒரே உறுத்தலாக இருக்கின்றது என்று  மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்படுகின்றார்.  அவருக்குத் தொண்டையின் பின்புறம் உடைந்து போய்  பேச்சும் வரவில்லை. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலுக்குள், காற்றுக் குமிழ்கள் மார்பை நோக்கி விரைகின்ற சப்தத்தின் அறிகுறியாக  கழுத்திலிருந்து விலா எலும்புகள் வரை ஒரு படபடக்கின்ற சப்தத்தைச் செவியுற்றனர்.  தும்மலை அடக்கியதால் தான் அவர் இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டார் என்று கண்டறிந்து அவருக்கு சிகிச்சை அளித்து இனி தும்மல் வந்தால் அடக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, காது மூக்கு தொண்டை நிபுணரும் லண்டனில் உள்ள  யுனிவர்ஸிட்டி ஹாஸ்பிடல் இயக்குநருமான டாக்டர் அந்தோணி கூறுகையில்,நீங்கள் தும்மும் போது 140 மைல்கள் வேகத்தில் காற்று வெளியேறுகின்றதுதும்மல் வருவதற்குக் காரணமே நம் உடலில் ஏற்பட்டுள்ள வைரஸ், பாக்டீரியாக்களை வெளியேற்றுவதற்காகத் தான். நாம் அதை நிறுத்தினால் அல்லது அடக்கினால் அந்த வைரஸ்கள் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் போய் புகுந்து கொள்ளும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் ஊடகங்கள்

 08-11-2024   بسم الله الرحمن الرحيم   இஸ்லாமிய வெறுப்பை  விதைக்கும் ஊடகங்கள்      https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...