வியாழன், 25 ஜூலை, 2024

உலக காரியங்களில் நிதானமும் ஆலோசனை கேட்பதும்

சில காரியங்களில் அவசரப்படுவது அவசியம். சில காரியங்களில் நிதானம் அவசியம்.

துன்யாவுடைய காரியங்களில் நிதானம் அவசியம். ஒரு தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு திருமணம் நடத்த வேண்டுமானால் அதற்கு மாப்பிள்ளை அல்லது மணப்பெண் பார்க்க வேண்டுமானால் நிதானம் மிக அவசியம். 

துன்யாவின் காரியங்களில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமும், நடுநிலையும் மிகச் சிறந்தது

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ

எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்து அக்காரியத்தில் இறங்க வேண்டும்

عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَوْصِنِي ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خُذِ الأَمْرَ بِالتَّدْبِيرِ ، فَإِنْ رَأَيْتَ فِي عَاقِبَتِهِ خَيْرًا ، فَأَمْضِهِ ، وَإِنْ خِفْتَ غَيًّا ، فَأَمْسِكْ "(شرح السنة- مشكاة- باب الحذر والتأني- باب السلام

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார்.அதற்கு நபி ஸல் அவர்கள் (எந்த ஒரு உலக) காரியத்தையும் திட்டமிட்டு, யோசித்துச் செய்யுங்கள். அதன் பின் விளைவு நல்லதாக இருந்தால் அதைச் செயல்படுத்துங்கள். அதன் பின் விளைவு கெட்டதாக இருந்தால் அதைச் செய்யாமல் விட்டு விடுங்கள்.  

மறுமையின் நன்மையான காரியத்தைச் செய்வதற்கு யோசிக்கக்கூடாது.

عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلَاةِ تِبْرًا4 عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري) وَقَالَ عُمَرُ رضى الله عنه إِنِّى لأُجَهِّزُ جَيْشِى وَأَنَا فِى الصَّلاَةِ (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ-كتاب العمل في الصلاة

அசர் தொழுது முடித்து சலாம் கொடுத்தவுடன் வேகமாக நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களில் ஒருவரின் வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். பிறகு திரும்பி வந்தார்கள், அவர்களின் இந்த விரைவுக்கு காரணம் தெரியாமல் தோழர்கள் விழித்த போது நான் எங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியை உரியவருக்குக் கொடுத்த எண்ணியிருந்தேன் அது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அது மாலை வரை அல்லது இரவு வரை என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை அதனால் அதை உரியவர்களுக்குப் பங்கிட்டுத் தரும்படி என் வீட்டாரிடம் சொல்லி விட்டு வந்தேன் என்றார்கள்.  

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் சிலர் வருகை தந்து மஸ்ஜிதுக்காக அன்பளிப்புக் கேட்டபோது யோசிக்காமல் உடனே இடது கை அருகில் இருந்த ஒரு பண முடிப்பை எடுத்து அப்படியே தந்து விட்டார்கள். வந்தவர்களுக்கு ஒருபுறம் சந்தோஷம் என்றாலும் இடது கையால் எடுத்துக் கொடுத்ததில் கவலையும் இருந்தது. அதற்கு இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் விளக்கம் கூறினார்கள். என்னுடைய இடது கையில் இருந்து வலது கைக்கு மாறுவதற்குள் என்னுடைய மனம் மாறி விட்டால் என்ன செய்வது அதனால் தான் இடது கையால் தந்தேன் என்றார்கள்.                                       


وقال الطيبي : معناه أن الأمور الدنيوية لا يعلم أنها محمودة العواقب حتى يتعجل فيها أو مذمومة حتى يتأخر عنها بخلاف الأمور الأخروية لقوله سبحانه (فاستبقوا الخيرات) (فيض القدير) (إلا في عمل الآخرة) فإنه غير محمود بل الحزم بذل الجهد فيه لتكثير القربات ورفع الدرجات ذكره القاضي

துன்யாவின் காரியங்களில் யோசித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.

عن الزهري عن رجل من بَلِىٍّ قال  أتيت رسول الله صلى الله عليه وسلم مع أبي فنَاجى أبي دُوني قال فقلتُ لأبي ما قال لك قال إذا أردتَ أمرا فعليك بالتؤدة حتى يُريَك الله منه المخرج أو حتى يجعل الله لك مخرجا رواه البخاري في الأدب المفرد

என் தந்தையுடன் நபி ஸல் அவர்கள் ரகசியம் பேசினார்கள். நான் என் தந்தையிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்ட போது ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் அதில் அல்லாஹ் உனக்கு ஏதேனும் வழியை ஏற்படுத்தும் வரை நிதானத்தை கடை பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் கூறியதாக என் தந்தை கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)

அழகிய மவுனமும் உலக காரியங்களில் நிதானமும் நடுநிலையும் நுபுவ்வத்தின் 24 பங்குகளில் ஒன்றாகும். 

விளக்கம்- நுபுவ்வத் என்பது பல பாகங்களாகப் பிரிவது கிடையாது. இருப்பினும் மேற்காணும் தன்மைகள் நபிமார்களின் தன்மைகளைப் போன்றதாகும். நூல் மிர்காத் நபிமார்கள் யோசித்தே முடிவெடுப்பார்கள்.  

நிதானம் அல்லாஹ்வைச் சார்ந்தது. அவசரம் ஷைத்தானைச் சார்ந்தது

عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ (ترمذي)  عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-بَاب مَا جَاءَ فِي بِرِّ الْوَالِدَيْنِ

துன்யாவின் ஒரு காரியத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல்,அவசரப்பட்டுச் செய்தால் அக்காரியம் கெட்டு விடும்

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم : إِذَا تَأَنَّيْتَ. وَفِى رِوَايَةِ الْمُعَاذِىِّ وَالشُّعَيْبِىِّ وَالْهَرَوِىِّ :« إِذَا تَبَيَّنْتَ أَصَبْتَ أَوْ كِدْتَ تُصِيبُ وَإِذَا اسْتَعْجَلْتَ أَخْطَأْتَ أَوْ كِدْتَ تُخْطِئُ ».(سنن الكبري)

நன்கு யோசித்து அதைச் செய்ய முடிவெடுத்தாலும் அதற்காக இஸ்திகாரா தொழுவது சுன்னத். ஏதேனும் முக்கியமான (உலக) காரியத்தை தொடங்கும் முன்போ அல்லது அதை தொடங்குவதில் குழப்பம் ஏற்படும்போதோ நல்ல முறையில் உளூச் செய்து, மன ஓர்மையுடன் இஸ்திகாரா தொழுகை இரண்டு ரக்அத் தொழுது பின்வரும் துஆவை ஓதினால் 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ وَيُسَمِّي حَاجَتَهُ. (بخاري) باب الدُّعَاءِ عِنْدَ الاِسْتِخَارَةِ .- الدعوات

பொருள்- யாஅல்லாஹ் உன்னுடைய ஞானத்தின் பொருட்டால் நான் தொடங்கும் இக்காரியத்தில் நலம் உண்டாகுவதை உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய ஆற்றலின் பொருட்டால் இக்காரியத்தை நான் துணிவுடன் செய்வதையும் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அருளையும் நான் வேண்டுகிறேன். என்னிடம் எவ்வித ஆற்றலும் இல்லை. நீ தான் ஆற்றல் உடையவன். (எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவு பற்றி) நான் எதையும் அறியாதவன். நீ அனைத்தையும் அறிந்தவன். நீ மறைவானவைகளை அறியும் ஞானமுள்ளவன். ஆகவே (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்)இக்காரியம்  என் இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் நன்மையாக அமையும் என்று நீ அறிந்தால் இதை செய்வதற்குரிய ஆற்றலை எனக்கு தருவாயாக ! இதை எனக்கு எளிதாக்குவாயாக! இதில் எனக்கு பரக்கத்தையும் தருவாயாக ! அதற்கு மாறாக  (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்) இக்காரியம்  என்னுடைய இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் தீமையாக அமையும் என்று நீ அறிந்தால் இக்காரியத்தையும் விட்டும் என்னையும் திருப்புவாயாக ! என்னை விட்டு இக்காரியமும் திரும்பிச் செல்ல வைப்பாயாக ! இதை விட நன்மை எங்கே, எதில் இருக்குமோ அதை எனக்கு ஏற்படுத்துவாயாக ! அதை எனக்கு பிடித்தமானதாகவும் ஆக்கி வைப்பாயாக !  நூல்- புஹாரீ-5382

இஸ்திகாரா தொழுத பின் வேறு எந்த சகுணமும் பார்க்காமல் 

அல்லாஹ் மீது முழு நம்பிக்கையுடன் காரியத்தை துவங்குவது

عن ابْن عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَأَخَذَ النَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْأُمَّةُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ النَّفَرُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْعَشَرَةُ وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْخَمْسَةُ وَالنَّبِيُّ يَمُرُّ وَحْدَهُ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قُلْتُ يَا جِبْرِيلُ هَؤُلَاءِ أُمَّتِي قَالَ لَا وَلَكِنْ انْظُرْ إِلَى الْأُفُقِ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قَالَ هَؤُلَاءِ أُمَّتُكَ وَهَؤُلَاءِ سَبْعُونَ أَلْفًا قُدَّامَهُمْ لَا حِسَابَ عَلَيْهِمْ وَلَا عَذَابَ قُلْتُ وَلِمَ قَالَ كَانُوا لَا يَكْتَوُونَ وَلَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ إِلَيْهِ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ثُمَّ قَامَ إِلَيْهِ رَجُلٌ آخَرُ قَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ (بخاري) باب مَنْ لَمْ يَرْقِ-كتاب الطب

 “எனக்குப் பல சமுதாயத்தவர் (மிஃராஜின் போது) எடுத்துக் காட்டப்பட்டனர். அங்கு, ஒரு நபி பத்துக்கும் குறைவான) ஒரு சிறுகுழுவினரோடு இருந்தார். அவ்வளவு தான் அவருடைய உம்மத். பிறகு இரண்டே இரண்டு பேர் மட்டுமே உம்மத்தாக இருக்கும் மற்றொரு இறைத்தூதரையும் நான் கண்டேன். ஒருவர் கூட இல்லாத (தனியாளான) இறைத்தூதர் ஒருவரும் அங்கிருந்தார். பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தவர் என்று நான் எண்ணினேன். ஆனால், “இது (இறைத்தூதர்) மூஸாவும் அவருடைய சமுதாயமும் தான்; அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது.மேலும்,“மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்” என்றும் என்னிடம் கூறப்பட்டது; பார்த்தேன். அங்கு மாபெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, “இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களுள் அடங்குவர்” என்று எனக்குச் சொல்லப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, தம் இல்லத்துக்குள் சென்று விட்டார்கள்.

 எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யாவர் என்பது பற்றி மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், “நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்” என்று கூறினர். வேறு சிலர்,“இஸ்லாத்தில் பிறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காதவர்களாக இருக்கலாம்” என்றும் இன்னும் பலவற்றையும் கூறிக் கொண்டிருந்தனர்.

  அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து, “எதைப் பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் யாரெனில், யாருக்கும் (ஷிர்க்கான முறையில்) மந்திரிக்க மாட்டார்கள்; யாரிடத்திலும் (ஷிர்க்கான முறையில்)மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; தம்முடைய காரிங்களில் முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறினார்கள்.

 அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, “அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களுள் நீரும் ஒருவர்தாம்” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்” என்று சொன்னார்கள். 

அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் வேண்டும் முயற்சியும் வேண்டும். பறவை பறந்து  செல்கிறது அல்லாஹ் உணவளிக்கிறான்

عن عُمَرَ رضي الله عنه يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَوْ أَنَّكُمْ تَوَكَّلْتُمْ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا (ابن ماجة)  بَاب التَّوَكُّلِ وَالْيَقِينِ- كِتَاب الزُّهْدِ

எங்கும் செல்ல முடியாத இயலாதவர்களுக்கு அவர்களுடைய இருப்பிடம் தேடி உணவு வரலாம். தவக்குல் இருந்தால்.... பாறைக்குள் இருக்கும் தேரைக்கும், வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கும் அல்லாஹ் உணவளிப்பது போல

முக்கியமான விஷயங்களில் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைகளையோ அல்லது நமக்கு மிக நெருக்கமான நல்லடியாரின் ஆலோசனையைக் கேட்டு நிதானமாக முடிவெடுப்பது. 

وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (ال عمران159) وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (سورة الشوري 38)عن أَبي الْهَيْثَمِ رضي الله عنه... فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ لَكَ خَادِمٌ قَالَ لَا قَالَ فَإِذَا أَتَانَا سَبْيٌ فَأْتِنَا فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسَيْنِ لَيْسَ مَعَهُمَا ثَالِثٌ فَأَتَاهُ أَبُو الْهَيْثَمِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَرْ مِنْهُمَا فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمَنٌ خُذْ هَذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ مَعْرُوفًا (ترمذي) بَاب مَا جَاءَ فِي مَعِيشَةِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- كِتَاب الزُّهْدِ

 அபுல் ஹைதம் ரழி அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் உனக்கு அடிமைகள் உள்ளார்களா என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறியவுடன் நபி ஸல் அவர்கள் நம்மிடம் அடிமைகள் யாரேனும் வந்தால் நீங்கள் வாருங்கள். நான் உமக்கு அடிமைகளைத் தருகிறேன் என்று கூற, அவ்வாறே நபி ஸல் அவர்களிடம் இரண்டு அடிமைகள் கொண்டு வரப்பட்டபோது அபுல் ஹைதம் ரழி அங்கு வந்தார்கள். அவரிடம் நபி ஸல் அவர்கள் இந்த இரு அடிமைகளில் யாரேனும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். என்று கூற, அதற்கு அபுல் ஹைதம் ரழி அவர்கள் நீங்களே எனக்குத் தேர்ந்தெடுத்துத் தாருங்கள் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் நிச்சயமாக ஆலோசனை கேட்பவர் நஷ்டங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர் என்று கூறி விட்டு இந்த இரு அடிமைகளில் இதோ இவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவர் தொழுவதை நான் பார்த்தேன். இவரிடம் நல்ல விதமாகவும் நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.                 

ஆலோசித்து முடிவெடுப்பது தவக்குலுக்கு மாற்றமாகாது. தவக்குல் மட்டும் போதும் ஆலோசனை எதற்கு என்றும் கருதக்கூடாது

المسألة الثانية : دلت الآية على أنه ليس التوكل أن يهمل الانسان نفسه ، كما يقوله بعض الجهال ، وإلا لكان الأمر بالمشاورة منافياً للأمر بالتوكل ، بل التوكل هو أن يراعي الانسان الأسباب الظاهرة ، ولكن لا يعول بقلبه عليها ، بل يعول على عصمة الحق .

மனைவியிடம் ஆலோசனை கேட்கலாம். எனினும் எல்லா முடிவுகளையும் மனைவியிடமே ஒப்படைத்து விடுவது தான் தவறு. 

ولما فرغ رسول الله صلى الله عليه وسلم من قضية الكتاب قال : ( قوموا فانحروا ) ، فوالله ما قام منهم أحد حتى قال ثلاث مرات، فلما لم يقم منهم أحد قام فدخل على أم سلمة، فذكر لها ما لقي من الناس، فقالت : يا رسول الله، أتحب ذلك ؟ اُخْرج، ثم لا تكلم أحداً كلمة حتى تنحر بدنك، وتدعو حالقك فيحلقك، فقام فخرج فلم يكلم أحداً منهم حتى فعل ذلك، نحر بُدْنَه، ودعا حالقه فحلقه، فلما رأي الناس ذلك قاموا فنحروا، وجعل بعضهم يحلق بعضاً،(الرحيق المختوم

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்கா பயணம் ரத்தாகி விட நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களிடம் அனைவரும் எழுந்து முடியை நீக்குங்கள் என்றார்கள். மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியும் யாரும் எழுந்திருக்கவில்லை. காஃபிர்களின் ஒருதலைப் பட்சமான உடன்படிக்கையை நாம் ஏன் ஏற்க வேண்டும் என்ற ஆதங்கம் சஹாபாக்களுக்கு இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் மனைவி உம்முசல்மா (ரழி) அவர்களிடம் சென்று ஆலோசித்த போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் முதலில் யாரிடமும் எதுவும் பேசாமல் உங்களுடைய ஒட்டகத்தை அறுத்து விடுங்கள். முடியையும் நீக்கி விடுங்கள். அதற்குப் பிறகு அனைவரும் வேறு வழியின்றி முடியை நீக்கி விடுவார்கள் என்று கூற,அவ்வாறே நபி(ஸல்) செய்தார்கள். அவர்கள் செய்வதைப் பார்த்து நபித்தோழர்களும் தங்களின் முடிகளை நீக்கினார்கள்.                                                              

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي) بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ سَبِّ الرِّيَاحِ- كِتَاب الْفِتَنِ

எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் தர்மம் செய்பவர்களாகவும் இருந்து உங்களின் காரியங்கள் உங்களுக்கு மத்தியில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுமோ அதுவரை இந்த பூமியின் மேற் பரப்பு பூமியின் கீழ் பரப்பை விட நல்லதாகும். அதாவது பூமியில் நீங்கள் வாழ்வது நல்லதாக இருக்கும். ஆனால் உங்களில் தலைவர்கள் கெட்டவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் கஞ்சர்களாகவும் உங்களின் காரியங்கள் முற்றிலுமாக பெண்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் ஆகிவிடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு பூமியின் மேற்பரப்பை விட நல்லது. அதாவது பூமியில் நீங்கள் வாழ்வது நல்லதாக இருக்காது. ஆபத்துகள் நிறைந்திருக்கும்.                   

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு  கால் என்பது போல் எந்த ஒரு காரியத்திலும் ரெண்டுங்கெட்டான் நிலை இருக்கக்கூடாது. ஆலோசனைக்குப்பின் அல்லது இஸ்திகாரா தொழுகைக்குப்பின் ஒரு காரியத்தை செய்ய முடிவெடுத்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து துணிவுடன் இறங்க வேண்டும்

وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159)المعنى أنه إذا حصل الرأي المتأكد بالمشورة فلا يجب أن يقع الاعتماد عليه بل يجب أن يكون الاعتماد على إعانة الله وتسديده وعصمته ، والمقصود أن لا يكون للعبد اعتماد على شيء إلا على الله في جميع الأمور

துன்யாவின் எத்தனையோ காரியங்களில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கக்கூடாது என கற்றுத் தரப்பட்டுள்ளது உதாரணம்..... பாதி நிழலிலும், பாதி வெயிலிலும் உட்காரக் கூடாது 

عن أَبي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الشَّمْسِ فَقَلَصَ عَنْهُ الظِّلُّ وَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظِّلِّ فَلْيَقُمْ (ابوداود) بَاب فِي الْجُلُوسِ بَيْنَ الظِّلِّ وَالشَّمْسِ- كِتَاب الْأَدَبِ

உங்களில் ஒருவர் வெயிலில் அமர்ந்திருக்கும்போது வெயில் அந்த இடத்தை விட்டும் நீங்கி நிழல் வந்து விட்டால் பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் அவர் அமர வேண்டாம். அந்த இடத்தை விட்டும் எழுந்து விடட்டும்.

செருப்பணிந்தால் இரண்டு காலிலும் அணிவது அல்லது இரண்டையும் கழட்டி விடுவது. ஒரு காலில் மட்டும் அணியக்கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُحْفِهِمَا جَمِيعًا أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا (بخاري) باب لاَ يَمْشِى فِى نَعْلٍ وَاحِدٍ- اللباس

பாதி மொட்டை பாதி முடி – இதுவும் கூடாது

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْقَزَعِ (بخاري) باب الْقَزَعِ- كتاب اللباس- القزع : هو أن يحلق رأس الصبى فيترك بعض شعره

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் ஊடகங்கள்

 08-11-2024   بسم الله الرحمن الرحيم   இஸ்லாமிய வெறுப்பை  விதைக்கும் ஊடகங்கள்      https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...