வியாழன், 29 ஆகஸ்ட், 2024

குடும்ப உறவுகள் சீர் பெற.....

 29-08-2024

ஸஃபர்- 24 بسم الله الرحمن الرحيم  

குடும்ப உறவுகள் சீர் பெற.....

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

முன்னுரை- இன்று பல இஸ்லாமிய குடும்பங்களில் பிரச்சினை உருவாக முக்கிய காரணங்களில் ஒன்று.. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சரிவர மார்க்கத்தை போதிக்காத காரணத்தால் மிக கவனமாக பேணி பாதுகாக்க வேண்டிய நம் பிள்ளைகளின் ஒழுக்கம் நாளுக்கு நாள் சிதைந்து கொண்டு வருகிறது படிக்கச் செல்லும் இடத்தில் அல்லது  வேலைக்குச் செல்லும் இடத்தில் காதல் என்ற வலையில் விழுந்து சில நேரங்களில் உயிரினும் மேலான ஈமானையும் இழந்து நிரந்தர நரகவாதிகளாக ஆகி விடுகின்றனர். மற்றொன்று முறையாக பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தாலும் இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை நெறிகள் போதிக்கப்படாததால் மணவாழ்வில் ஒருவருகொருவர் பிரச்சினைகளை உருவாக்கி பிரிந்து விடுகின்றனர். 

இந்த இரண்டு விஷயங்களையும் தனித்தனியாக ஆராய்வோம்

இக்காலத்தில் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பது பெரும் சிரமமான காரியம் தான். காரணம் எங்கு திரும்பினாலும் ஆபாசம், சினிமா, இணைய தளம் என ஷைத்தானின் மாயவலைகள் நிரம்பியுள்ள இக்காலத்தில் நம் பிள்ளைகளை அவைகளை விட்டும் பாதுகாப்பது முட்கள் நிறைந்த பாதையில் அவர்களை அழைத்துச் செல்வது போல் தான். எனினும் நம் பிள்ளைகளை நரக நெருப்புக்கு இரையாகி விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவதைத் தவிர வேறு வழியில்லை

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَاراً وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ..[التحريم:6]

பிள்ளைகளின் மனதில் சிறிதும் கெட்ட எண்ணம் வரக் கூடாது என்பதற்காக தொலை நோக்கு சிந்தனையுடன் நபி (ஸல்) சொன்ன அறிவுரை

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ (ابوداود)-بَاب مَتَى يُؤْمَرُ الْغُلَامُ بِالصَّلَاةِ-كتاب الصلاة يعني أنهم لا يضطجع بعضهم مع بعض؛ حتى لا يحصل شيء من دواعي الشر أو شيء من الشيطان بحيث يحرك بعضهم على بعض فلا يكون هناك اضطجاع من بعضهم مع بعضهم، وإنما يكون هناك تفريق، سواء أكانوا ذكوراً وإناثاً أم ذكرواً فقط أم إناثاً فقط؛ لأنه عندما يحصل التقارب يحصل بسببه شيء من تحريك الشهوة أو الفتنة أو ما إلى ذلك، فجاءت السنة بأن يمرنوا على ذلك، وأن يعودوا على ذلك وهم صغار، بحيث يبتعد بعضهم عن بعض، ولا يكون هناك تلاصق وتقارب بحيث يحصل معه شيء لا تُحمد عقباه.(شرح ابي داود)

மேற்கூறப்பட்ட நபிமொழிக்கு நேர் மாற்றமாக இன்று பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதம் கவலை தருகிறது. தொலைக் காட்சிகளில் வரும்    ஆபாச பாடல்களை, ஆபாச காட்சிகளை பெற்றோருடன் வயது வந்த பிள்ளைகளும் பார்க்கும் அவலம் அரங்கேறி வருகிறது        

வயது வந்த நம் பிள்ளைகள் வெளியில் யார் யாருடன் பழகுகிறார்கள் என்பதையும், செல்ஃபோனில் யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். செல்ஃபோனும், இணைய தளமும் அவசியமானது தான் என்றாலும் இவ்விரண்டும் பெரும்பாலும் தவறான காரியங்களுக்காக பயன்படுப்படுகின்றன

ஃபர்தாவையும் அணிந்து கொண்டு, முகத்திரையையும் போட்டுக் கொண்டு பல  முஸ்லிம் பெண்கள்  மாற்று மத அந்நிய ஆண்களின் தோல் மீது கை போட்டு நடப்பதையும், பைக்கில் நெருங்கி ஒன்றாக அமர்ந்தும் பயணம் செய்யும் காட்சிகள் பல முஃமின்களின் மிகவும் மனதை வேதனஅடைகின்றனர்.

2008-ல் ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்- நண்பர்கள் மூலமாக 55 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். பள்ளி, கல்லூரி பருவத்திலேயே 42 சதவீத மாணவர்களும், 22 சதவீத மாணவிகளும் சிகரெட் பிடிக்க கற்றுக் கொள்கின்றனர்.

ஆண்களுக்கு சமமாக பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது. ஆண்கள் சம்பாதித்து பெண்களுக்கு தர வேண்டும் அதிலிருந்து பெண்கள் செலவு செய்ய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு. கணவன் வீட்டில் இல்லாத போது கணவனுக்குச் சொந்தமான கற்பையும், அவனது சொத்துக்களையும் பாதுகாக்கும்படி பெண்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ (34)النساء-

மேற்கானும் வசனத்திற்கு நேர் மாற்றமாக நிர்பந்தமின்றி பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் வேலைக்குச்செல்கிறார்கள்.இவர்களில் பலர்திருமணத்திற்கு முன்பே தான் பணியாற்றும் இடத்தில் ஆண் துணையைத் தேடிக் கொண்டு விடுகிறார்கள். அவன் முஸ்லிமா, நல்லவனா,என்பதையெல்லாம் பார்க்காமல் இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு,வாழ்வை தொலைக்கிறார்கள்.  பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும், அரசு கெஜட்டில் வெளியிட்டால் தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒருமுறை அரசிதழ்(gazette) ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதில் சராசரியாக இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறுவோர் ஒரு வாரத்தில் மட்டும் 8 பேர். 

மக்தப் மதரஸாவிலேயே நம் பிள்ளைகளுக்கு ஈமானை அழுத்தமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.

முடிந்த வரை ஒவ்வொரு மஹல்லாவிலும் முஸ்லிம்கள் நடத்தும் ஸ்கூல் அமைவதோடு, அதில் இஸ்லாத்தை சொல்லித் தர ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் கல்வி விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதால் தான் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகள் அதிகம் இருப்பதையும், அங்கு கிறிஸ்தவ போதனைகள் எப்படியேனும் புகுத்தப் படுவதையும் பரவலாக காண முடிகிறது. இந்த முயற்சி முஸ்லிம்களிடம் இருந்தால் நம் பிள்ளைகள் வருங்காலத்தில் ஈமானை இழந்து விடாமல் இருக்க உதவும்                                    

ஈமானை இழந்து மாற்று மதத்தவர்களுடன் நம் பிள்ளைகள் ஓடிப் போவதற்கு வரதட்சனையும் முக்கிய காரணம்

எத்தனையோ பெற்றோர்கள் வரதட்சனைக்கு பயந்து தன் மகளுக்கு முறையாக திருமணம் செய்து வைக்காமல் அவளாகவே ஒருவரை விரும்பி அவனுடன் செல்ல அனுமதித்து விடுகின்றனர். ஒரு தந்தை தன் நண்பரிடம் “நான் என் பிள்ளைக்கு வெறும் 1500 ரூபாய் செலவில் திருமணத்தை முடித்து விட்டேன் என்று சொன்னாராம். அது எப்படி என்று அவர் கேட்க, 1500 ரூபாய்க்கு ஒரு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்தேன். பிறகு என்ன-?  அவளாகவே ஒரு துணையை தேடிக் கொண்டாள். எனக்கு செலவு மிச்சம்” என்றாராம். 

இன்றைய குடும்பங்களில் கணவன், மனைவிக்கிடையே பிரச்சினைகள் பற்றி..

ஒரு பெண்ணைப் பொறுத்த வரை முதலில் கணவன் பிறகு தான் பெற்றோர்கள்  என்பது இஸ்லாமிய கோட்பாடு.  ஆனால் பல குடும்பங்களில் மனைவி தன் கணவனை விட, தன் தாய் தந்தையை பெரிதாக கருதுவதால் பிரச்சினை உருவாகிறது. 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ النَّاسَ جُلُوسًا بِبَابِهِ لَمْ يُؤْذَنْ لِأَحَدٍ مِنْهُمْ قَالَ فَأُذِنَ لِأَبِي بَكْرٍ فَدَخَلَ ثُمَّ أَقْبَلَ عُمَرُ فَاسْتَأْذَنَ فَأُذِنَ لَهُ فَوَجَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا حَوْلَهُ نِسَاؤُهُ وَاجِمًا سَاكِتًا قَالَ فَقَالَ لَأَقُولَنَّ شَيْئًا أُضْحِكُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَ بِنْتَ خَارِجَةَ (أي زوجة عمر)  سَأَلَتْنِي النَّفَقَةَ فَقُمْتُ إِلَيْهَا فَوَجَأْتُ عُنُقَهَا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ هُنَّ حَوْلِي كَمَا تَرَى يَسْأَلْنَنِي النَّفَقَةَ فَقَامَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ يَجَأُ عُنُقَهَا فَقَامَ عُمَرُ إِلَى حَفْصَةَ يَجَأُ عُنُقَهَا كِلَاهُمَا يَقُولُ تَسْأَلْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَيْسَ عِنْدَهُ فَقُلْنَ وَاللَّهِ لَا نَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا أَبَدًا لَيْسَ عِنْدَهُ ثُمَّ اعْتَزَلَهُنَّ شَهْرًا أَوْ تِسْعًا وَعِشْرِينَ ثُمَّ نَزَلَتْ عَلَيْهِ هَذِهِ الْآيَةُ{ يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ -حَتَّى بَلَغَ-  لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا } قَالَ فَبَدَأَ بِعَائِشَةَ فَقَالَ يَا عَائِشَةُ إِنِّي أُرِيدُ أَنْ أَعْرِضَ عَلَيْكِ أَمْرًا أُحِبُّ أَنْ لَا تَعْجَلِي فِيهِ حَتَّى تَسْتَشِيرِي أَبَوَيْكِ قَالَتْ وَمَا هُوَ يَا رَسُولَ اللَّهِ فَتَلَا عَلَيْهَا الْآيَةَ قَالَتْ أَفِيكَ يَا رَسُولَ اللَّهِ أَسْتَشِيرُ أَبَوَيَّ بَلْ أَخْتَارُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ وَأَسْأَلُكَ أَنْ لَا تُخْبِرَ امْرَأَةً مِنْ نِسَائِكَ بِالَّذِي قُلْتُ قَالَ لَا تَسْأَلُنِي امْرَأَةٌ مِنْهُنَّ إِلَّا أَخْبَرْتُهَا إِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّتًا وَلَا مُتَعَنِّتًا وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا (مسلم) باب بيان أن تخيير امرأته لا يكون طلاقا إلا بالنية - كتاب الطلاق

நபி ஸல் அவர்களிடம் சக்திக்கு மீறிய ஜீவனாம்சத்தை மனைவிமார்கள் கேட்டார்கள் என்பதை ஹஃப்ஸா ரழி அவர்களின் தந்தையான உமர் ரழி அறிந்த போது தன் மகளை கண்டித்தார்கள். அபூபக்ர் ரழி அவர்களும் தன் மகளை கண்டித்தார்கள். இதுவே நம் காலமாக இருந்தால் மகள் என்ன தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்திப் பேசுவார்கள். மேலும் விவாகரத்து விஷயமாக உன் தந்தையிடம் ஆலோசனை கேள் என  நபி ஸல் கூறிய போது உங்கள் விஷயத்திலா நான் என் தந்தையிடம் ஆலோசனை கேட்பேன் என ஆயிஷா ரழி கூறியது ஒவ்வொரு பெண்களும் கணவனுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது

மனைவியின் உறவினர்களை கணவன் மதிக்க வேண்டும். கணவனின் உறவினர்களை மனைவி மதிக்க   வேண்டும்.

ஜாபிர் ரழி அவர்கள் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்த போது அதற்காக காரணத்தை நபி ஸல் கேட்டார்கள். அதற்கு ஜாபிர் ரழி அவர்கள்  தாய், தந்தையை இழந்த என்னுடைய சகோதரிகளுக்குத் தாய் போல இருந்து கவனித்துக் கொள்வதற்காகவே நான் அவ்வாறு திருமணம் செய்தேன்  என்று கூறினார்கள்

ஒரு பெண் தன்னுடைய கணவனின் பெற்றோரை தன் பெற்றோரைப் போல் பாவிக்க வேண்டும். கணவனின் சகோதரிகளை தன் சகோதரிகளாக பாவிக்க வேண்டும். இந்த நிலை நீடித்தாலே குடும்பத்தில் பிரச்சினைகளை பெரும்பாலும் தவிர்க்கலாம்

عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ نَكَحْتَ يَا جَابِرُ قُلْتُ نَعَمْ قَالَ مَاذَا أَبِكْرًا أَمْ ثَيِّبًا قُلْتُ لَا بَلْ ثَيِّبًا قَالَ فَهَلَّا جَارِيَةً تُلَاعِبُكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي قُتِلَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ كُنَّ لِي تِسْعَ أَخَوَاتٍ فَكَرِهْتُ أَنْ أَجْمَعَ إِلَيْهِنَّ جَارِيَةً خَرْقَاءَ مِثْلَهُنَّ وَلَكِنْ امْرَأَةً تَمْشُطُهُنَّ وَتَقُومُ عَلَيْهِنَّ قَالَ أَصَبْتَ (بخاري) بَاب {إِذْ هَمَّتْ طَائِفَتَانِ –كتاب المغازى

படிப்பினை – ஒரு பெண் தன் கணவனின் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றிருந்தால் நபி ஸல் அவர்கள் நீ எப்படி இன்னொரு வீட்டுப் பெண்ணை அவள் உன் மனைவி என்பதற்காக உன் சகோதரிகளுக்கு தலை வாரி விடுமாறு கூறலாம் என்று கேட்டிருப்பார்கள். மாறாக நீ செய்தது சரி தான் என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். எனவே கணவனின் சகோதரிகளை கவனிப்பது பொறுப்பு எனும்போது கணவனின் தாய், தந்தைக்கு உபகாரமாக நடப்பதும் பொறுப்பாகும். ஆனால் எந்த ஒன்றும் சக்திக்கு மீறியதாக இருக்கக்கூடாது. மருமகள் என்பதற்காக எல்லா வேலைகளையும் அவளே செய்ய வேண்டும் என்று மாமியார்கள் கருதக் கூடாது மாமியாரும் தன் மருமகளை மகளாக கருத வேண்டும். இரு தரப்பினரும் அல்லாஹ்வை பயந்து நடந்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்                                                                                       

மாமியார் மருமகள் சண்டையால் நிம்மதி இழக்கும் ஆண்கள் 

மனைவியை கண்டாலே வெளியில் சென்று திரும்பும் கணவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என நபி ஸல் கூறியிருக்க இன்று பல வீடுகளில் கணவன் வீட்டுக்குள் வந்தவுடன் உங்க அம்மா பேசிய கேட்டீங்களா ?  உங்கம்மா பண்ணுற வேலையை கண்டும் காணாமல் இருக்கிறீர்களே என்று எள்ளும், கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது அக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு மேலதிகாரிகளின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாகி மனச்சுமையோடு வீடு திரும்புபவராக இருப்பார் அல்லது காலை முதல் மாலை வரை உழைத்து களைத்தவராக வருவார். அல்லது சரியாக படிக்காத மாணவர்களிடம் பகல் முழுவதும் மாரடித்து விட்டு வீடு திரும்பும் ஆசிரியராக இருப்பார்.  இப்படிப்பட்டவர்கள் மன அமைதியை நாடி வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்                 

வாயாடியான மனைவியை முடிந்த வரை அனுசரித்துத் தான் வாழ வேண்டும்

عن لقيط بن صبرة ..قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي امْرَأَةً وَإِنَّ فِي لِسَانِهَا شَيْئًا يَعْنِي الْبَذَاءَ قَالَ فَطَلِّقْهَا إِذًا قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لَهَا صُحْبَةً وَلِي مِنْهَا وَلَدٌ قَالَ فَمُرْهَا يَقُولُ عِظْهَا فَإِنْ يَكُ فِيهَا خَيْرٌ فَسَتَفْعَلْ وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ كَضَرْبِكَ أُمَيَّتَكَ (ابوداود) بَاب فِي الِاسْتِنْثَارِ- كِتَاب الطَّهَارَةِ البذاء : الفحش

சண்டையிட்டுக் கொள்ளும் தம்பதிகளை சேர்த்து வைக்க மற்றவர்கள் எந்த அளவுக்கு முயற்சிக்க வேண்டும் என்பதைப்பற்றி..

சண்டையிட்டுக்கொள்ளும் கணவன்,மனைவியை சேர்த்து வைக்க முயற்சிப்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا (35النساء)

عَنِ ابْنِ عَبَّاسٍ قَوْلُهُ: " " إِنْ يُرِيدَا إِصْلاحاً يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا "  قَالَ: وَكَذَلِكَ كُلُّ مُصْلِحٍ يُوَفِّقُهُ اللَّهُ لِلْحَقِّ وَالصَّوَابِ".ابن ابي حاتم

சண்டையிட்டுக் கொள்ளும் கணவன், மனைவியை சேர்த்து வைப்பதற்காக பொய் சொல்வதும் கூடும்

عن أُمّ كُلْثُومٍ بِنْت عُقْبَةَ سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيَنْمِي خَيْرًا أَوْ يَقُولُ خَيْرًا (بخاري-كتاب الصلح

தம்பதிகளுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்காக பொய் சொல்வது தவறில்லை. உதாரணமாக கணவனைப் பற்றி மனைவி குறையாக பேசியிருந்தால் அதை மறைத்து அவள் புகழ்ந்ததாக சொல்வதில் தவறில்லை

عن أُمَّ كُلْثُومٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيَنْمِي خَيْرًا أَوْ يَقُولُ خَيْرًا(بخاري)

உண்மையைச் சொல்லி பிரித்து வைப்பதை விட பொய்யைச் சொல்லி சமாதானம் செய்து வைப்பது  எவ்வளவோ மேலானது.

நமக்கு முன்னால் ஒரு நபர் இன்னொரு நபரைப் பற்றி குறையாக பேசினால் அந்தச் செய்தியை சம்பந்தப்பட்டவரிடம் கூறுவதால் ஏதேனும் நன்மை இருக்கும் என்றிருந்தால் மட்டுமே அதைக் கூறலாம். வருத்தம் ஏற்படும் என்றிருந்தால் கண்டிப்பாக மறைக்க வேண்டும்.

சண்டையிட்டுக் கொள்ளும் தம்பதிகளிடையே பிரிவினையை உண்டாக்குபவர் ஷைத்தானின் கூட்டாளி..

عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ (مسلم)

பிரிந்த உள்ளங்களை ஒட்ட வைப்பவன் அல்லாஹ் மட்டும் தான். எனினும் அதற்கான முயற்சிகள் மட்டுமே நம்முடையது

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ (الانفال63)

கணவனும் மனைவியும் இஸ்லாத்தின் படி வாழ்க்கை நடத்தினால் அவர்களுக்குள் பிரச்சினைகள் வராது

மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தாலும் அவளிடமுள்ள

 வேறு சில நல்ல குணங்களைப் பொருந்திக் கொண்டு அனுசரித்து வாழ வேண்டும்

وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا (19)النساء

روي أن رجلا جاء إلى [عمر بن الخطاب] رضى الله عنه ليشكو سوء خلق زوجته فوقف على بابه ينتظر خروجه فسمع هذا الرجل امرأة عمر تستطيل عليه بلسانها وتخاصمه وعمر ساكت لا يرد عليها. فانصرف الرجل راجعا وقال: إن كان هذا حال عمر مع شدته وصلابته وهو أمير المؤمنين فكيف حالي؟ وخرج عمر فرآه موليا عن بابه فناداه وقال: ما حاجتك أيها الرجل؟فقال: يا أمير المؤمنين جئت أشكو إليك سوء خلق امرأتي واستطالتها عَلَيّ فسمعت زوجتك كذلك فرجعت وقلت: إذا كان هذا حال أمير المؤمنين مع زوجته فكيف حالي ؟قال عمر ـ يا أخي اسمع لمواقفهم رضوان الله تعالى عليهم ـ يا أخي إني أحتملها لحقوق لها عليّ إنها لطباخة لطعامي، خبازة لخبزي، غسالة لثيابي، مرضعة لولدي وليس ذلك كله بواجب عليها ويسكن قلبي بها عن الحرام فأنا أحتملها لذلك ، فقال الرجل: يا أمير المؤمنين وكذلك زوجتي قال عمر: فاحتملها يا أخي فإنما هي مدة يسيرة (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا)  (عشرة النساء للنسائي)

 உமர் ரழி அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர் ரழி அவர்கள் வெளியே வருவதை எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் உமர் ரழி அவர்களின் மனைவி உமர் ரழி அவர்களைத் திட்டுவதையும் அதைக் கேட்டும் உமர் ரழி அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதையும் கண்டு உமர் ரழி அவர்களின் நிலையே இது என்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். அவரை அழைத்து எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் என் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினேன் என்றும் கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரிடம் சகோதரரே நன்றாக நான் சொல்வதைக் கேளுங்கள். மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் அடிப்படையில் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கிறாள். துணி துவைக்கிறாள். என் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லாமலேயே அவள் செய்கிறாள் இத்தனைக்கும் மேலாக அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது ஹராமான முறையில் அலைபாயாமல் நிலை பெறுகிறது. இத்தனை விஷயங்களுக்காக நான் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த மனிதர் என் மனைவியும் அவ்வாறே எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள் எனினும் வாய் அதிகம் என்று கூற அதற்கு உமர் ரழி நீர் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் துன்யாவுடைய கொஞ்ச கால வாழ்க்கை தான் என்றார்கள். பிறகு அந்தப் பெண்களின் சில குணங்களை நீங்கள் வெறுத்தாலும் வேறு சில நல்ல குணங்களை வைத்து பொருந்திக் கொள்ள வேண்டும். எனவும் அறிவுரை கூறினார்கள்.                                                            

கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று

 மனைவியின் கண்ணுக்கு கணவனும் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 

அதற்காக அழகு என்பதை தவறாகப் புரிந்த பெண்களில் யாரேனும் தாடி வைக்க வேண்டாம் என்று சொன்னால் அதை ஏற்கக் கூடாது. தாடியை அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைப்பது நல்லது

قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم  (الكتاب : عشرة النساء للنسائي)

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.

وقال [يحيى بن عبد الرحمن الحنظلي]: أتيت [محمد بن الحنفية] فخرج إلى في ملحفة حمراء ولحيته تقطر من الغالية ، والغالية هي خليط الأطياب بل خليط أفضل الأطياب ، ولحيته تقطر من الغالية ، يقول يحيى فقلت له: ما هذا ؟ قال محمد : إن هذه الملحفة ألقتها على امرأتى ودهنتنى بالطيب وإنهن يشتهين منا ما نشتهيه منهن ، ذكر ذلك القرطبي في تفسيره الجامع لأحكام القرآن (عشرة النساء للنسائي)

யஹ்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் முஹம்மது இப்னு ஹனஃபிய்யா ரஹ் அவர்களிடம் வருகை தந்தபோது அவர்கள் அழகான நீண்ட அங்கியை அணிந்தவர்களாகவும் மிகச்சிறந்த நறுமணம் தடவியவர்களாகவும் இருந்தார்கள். அந்த நறுமணம் தாடியிலும் வடிந்த படி இருந்தது. அதுபற்றி அவர்களிடம் நான் கேட்டபோது இந்த ஆடையை என் மனைவி எனக்கு அணிவித்தார். இந்த நறுமணத்தையும் அவரே எனக்குத் தடவி விட்டார். நம் கண்ணுக்கு முன்னால் நம் மனைவிமார்கள் அழகாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவது போல மனைவியின் கண்ணுக்கு முன்னால் நாம் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பு தானே என்றார்கள்.          

மனைவியின் மதிப்பு பற்றி அல்-குர்ஆன்

முன்னுரை- அல்லாஹ் ஒரு ஆணுக்கு சிறந்த துணையாக அவனது மனைவியைப் படைத்துள்ளான். காம உணர்வுகள் உருவாகும் வயதை அடைந்த பின்பு அந்த உணர்வுகளை மனைவி என்ற அந்தஸ்தில் இருப்பவளிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பணித்துள்ளான். 

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (21) الروم

واعلم أن الله تعالى في إيجاد حب الزوجة والولد في قلب الإنسان حكمة بالغة ، فإنه لولا هذا الحب لما حصل التوالد والتناسل ولأدى ذلك إلى انقطاع النسل ، وهذه المحبة كأنها حالة غريزية ولذلك فإنها حاصلة لجميع الحيوانات ، والحكمة فيه ما ذكرنا من بقاء النسل .(تفسير الرازي

சுவனத்தில் நபி ஆதம் அலை அவர்கள் மட்டும் இருந்த போது தனிமை அவர்களை வாட்டியது அதன் பின்பு அல்லாஹ் ஆதம் அலை அவர்களின் விலா எலும்பில் இருந்து அல்லாஹ் ஹவ்வா அலை அவர்களைப் படைத்தான்

மனைவிக்கு உணவு ஊட்டி விடுவதை நபி ஸல் அவர்கள் ஆர்வப்படுத்தினார்கள்

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ (بخاري

அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீ செய்யும் தர்மம் உட்பட ஒவ்வொரு காரியங்களுக்கும் நன்மை உண்டு. 

உன்னுடைய மனைவிக்கு நீ உணவு ஊட்டி விடுவது உட்பட..

கணவன் மனைவி இருவரும் ஒருவர் மற்றவரைப் பற்றி நன்கு புரிந்திருக்க வேண்டும்

فقد قال صلى الله عليه وسلم في حديث أم زرع الطويل قال لعائشة : « كُنْتُ لَكِ كَأَبِى زَرْعٍ لأُمِّ زَرْعٍ » (بخاري5189

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قَالَتْ فَقُلْتُ مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ فَقَالَ أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لَا وَرَبِّ مُحَمَّدٍ وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قُلْتِ لَا وَرَبِّ إِبْرَاهِيمَ قَالَتْ قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا أَهْجُرُ إِلَّا اسْمَكَ (بخاري 5228

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள்  நபி ஸல் அவர்கள் என்னிடம் நீ என் மீது எப்போது கோபமாக இருக்கிறாய் எப்போது அன்பாக இருக்கிறாய் என நான் அடையாளம் கண்டு கொள்வேன் என்று கூறினார்கள். அதற்கு நான் அது எப்படி? என்று கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நீ என் மீது அன்பாக இருந்தால் முஹம்மது ஸல் அவர்களுடைய ரப்பின் மீது சத்தியமாக என்று கூறுவாய். நீ என் மீது கோபமாக இருந்தால்  இப்றாஹீம் (அலை) அவர்களுடைய ரப்பின் மீது சத்தியமாக என்று கூறுவாய். என்றார்கள். அதற்கு நான் ஆம் யாரஸூலல்லாஹ் அந்த நேரத்திலும் உங்களுடைய பெயரை மட்டும் என் நாவு ஒதுக்குமே தவிர உங்கள் மீதான நேசம் எப்போதும் எனக்குள் இருக்கும் என்றேன்.                                            

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் தன் மனைவி வஃபாத்தான போது மிகவும் அழுதார்கள். அதற்குக் காரணம் கேட்ட போது நான் எனது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி அழுகிறேன். நாற்பது வருட காலத்தில் ஒருமுறை கூட எங்களுக்குள் சண்டை வந்த தில்லை என்று கூற, உடனே அருகில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் அது எப்படி முடியும் என்று கேட்ட போது  இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் பதில் கூறினார்கள். அதாவது அவளுக்கு கோபம் வந்தால் நான் அமைதியாக இருந்து விடுவேன். எனக்குக் கோபம் வந்தால் அவள் அமைதியாக இருந்து விடுவாள் என்றார்கள்

ஆயிஷா ரழி அவர்கள் மூலம் நபி ஸல் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த தகுதி ஆயிஷா ரழி அவர்களிடம் இல்லை என்பதல்ல. மாறாக கல்விக்காக மட்டுமே அல்லாஹ் ஜோடி சேர்த்து வைத்தான்.

عن عائشة رض قالت : وددت أني كنت ثكلت عشرة مثل الحارث بن هشام و أني لم أسر مسيري مع ابن الزبير [ مستدرك الحاكم ] وفي رواية لو لم اسر مسيري ذلك لكان احب الي من ان يكون لي ستة عشر ذكرا من رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (كتاب : الحسن والحسين –لمحمد رضا)

அப்துர் ரஹ்மான் இப்னு ஹிஷாம் ரழி அவர்கள் சிறு வயதில் இருந்தே மதீனாவில் பிரபலமான ஃபகீஹ். சிறந்த பிள்ளைக்கு அவரை உதாரணம் காட்டுவார்கள். நபி ஸல் அவர்களின் வஃபாத்தின் போது அவருக்கு பத்து வயது. அவரைக் குறித்து ஆயிஷா ரழி அவர்கள் கூறும்போது நபி ஸல் அவர்களிடமிருந்து கல்வியை அதிகமாகப் பெறுவது என்ற என்னுடைய வழியில் மற்றும் இப்னு ஜுபைருடைய வழியில் நான் செல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நான் நபி ஸல் அவர்கள் மூலம் அப்துர் ரஹ்மான் இப்னு ஹிஷாமைப் போல 10 ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருப்பேன். ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல.  என்றார்கள்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

அஹ்லுல் பைத்துகளின் சிறப்பு

بسم الله الرحمن الرحيم  

அஹ்லுல் பைத்துகளின் சிறப்புகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا (33) الاحزاب 

ஒவ்வொரு தொழுகையிலும் ஓதப்படும் தரூத் சலவாத்தில் நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் மீது ஸலவாத் ஓதாமல் அதாவது அவர்களுக்காக துஆச் செய்யாமல் தொழுகை பரிபூரணமடைவதில்லை 

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ  (بخاري

அல்லாஹ்வின் தூதரே உங்கள்  மீது எப்படி சலாம் சொல்வது என்பதை தாங்கள் கற்றுத் தந்த அத்தஹிய்யாத் மூலம் நாங்கள் அறிவோம். உங்கள் மீது  சலவாத்து சொல்வது எப்படி என்பதை விபரிக்கும்படி  நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டபோது நபி ஸல் மேற்காணும் தரூத் சலவாத்தை  சொல்லித்தந்தார்கள்.           .

 இதில் இரண்டு தடவை இடம் பெற்றுள்ள வஅலா ஆலி என்ற வார்த்தை நபி ஸல் அவர்களின் குடும்பத்தார் மீது ஸலவாத் சொல்வதாகும். துஆச் செய்வதாகும். அவர்களுக்காக துஆச் செய்வதால் நம்முடைய கண்ணியம் உயரும்

 ஷாஃபிஈ மத்ஹபில் அதிகாலை பஜ்ரு தொழுகையின் போது ஓதப்படுகிற குனூத்தில் பெருமானாரின் மீது சலாத் சொல்ல வேண்டும் அதற்காக நிற்க வேண்டும் என்பது போல பெருமானாரின் குடும்பத்தினர் மீது சலவாத் சொல்ல வேண்டும் அதற்காக நிற்க வேண்டும் என்று சட்டம் சொல்லப் பட்டிருக்கிறது. அதை விட்டால் சஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும் என்றும் சட்டம் சொல்லப்பட்டுள்ளது.                                                

நபி ஸல் அவர்களின் குடும்பத்தை நேசிப்பது அவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வது நிபாக்கிலிருந்து காப்பாற்றும் என்று இமாம் தஹாவீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق). (- متن العقيدة الطحاوية)

நபி ஸல் அவர்களின் குடும்பத்தினர்கள் யார் யார்?

இதில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அகீததுத் தஹாவீ நூலில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது

أهل البيت هم بنو هاشم ويدخل فيهم أمهات المؤمنين (عقيدة الطحاوي)

ففي صحيح مسلم عن زيد بن أرقم رضي الله عنه  ...  قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ أَلَا أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي فَقَالَ لَهُ حُصَيْنٌ وَمَنْ أَهْلُ بَيْتِهِ يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ قَالَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ قَالَ وَمَنْ هُمْ قَالَ هُمْ آلُ عَلِيٍّ وَآلُ عَقِيلٍ وَآلُ جَعْفَرٍ وَآلُ عَبَّاسٍ قَالَ كُلُّ هَؤُلَاءِ حُرِمَ الصَّدَقَةَ قَالَ نَعَمْ  (مسلم)4425

சுருக்கம்-நபி ஸல் அவர்கள் எங்களிடையே உரை நிகழ்த்தினார்கள். ஹம்து மற்றும் ஸலவாத்திற்குப்பிறகு அவர்கள் எங்களை நோக்கி மக்களே நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். என்னுடைய ரப்பின் தூதர் (மலக்குல் மவ்த்) என்னிடம் வரும் காலம் நெருங்கி விட்டது.நான் அவரின் அழைப்புக்கு பதில் தரக் காத்திருக்கிறேன். எனவே நான் உங்களிடம் வலுவான இரண்டை விட்டுச் செல்கிறேன். அதில் ஒன்று அல்லாஹ்வின் வேதம். அதில் நேர்வழி இருக்கிறது. எனவே அதைப் பற்றிப் பிடியுங்கள். என்று இறை வேத த்தைப் பின்பற்றும்படி ஆர்வப் படுத்திய நபி ஸல் அவர்கள் பிறகு கூறினார்கள். மற்றொன்று என்னுடைய குடும்பத்தார்கள். என்னுடைய குடும்பத்தார்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளும்படி உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன் என்று மூன்று முறை கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் ஜைத் ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் அஹ்லெ பைத்தில் இல்லையா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி ஸல் அவர்களின் மனைவிமார்களும் அஹ்லெ பைத்தில் உள்ளவர்கள் தான். காரணம் அவர்கள் அனைவருமே ஜகாத் வாங்குவதற்கு தடை செய்யப் பட்டவர்கள். எனவே இவர்களில் அலீ ரழி அவர்களின் குடும்பத்தாரும் ஜஃபர் ரழி அவர்களின் குடும்பத்தாரும் அப்பாஸ் ரழி அவர்களின் குடும்பத்தாரும் அடங்குவர் என்று பதில் கூறினார்கள்.                                     

عن ابن أبي مليكة أن خالد بن سعيد بن العاص بعث إلى عائشة ببقرة فردتها وقالت : (إنا آل محمد لا نأكل الصدقة) (مُصنف ابن أبي شيبة

நபி ஸல் அவர்களின் மனைவிமார்களும் அஹ்லெ பைத்தில் கட்டுப்படுவார்கள் என்பது 

அஹ்லுஸ் ஸுன்னத் வல்-ஜமாஅத்தின் கொள்கையாகும்.

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا (33) (الاحزاب 

பின்வரும் ஹதீஸின் மூலமாக ஏற்படும் கேள்விக்கு பதில் 

عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ - ترمذي 3719

நபி ஸல் அவர்களின் வளர்ப்பு மகன் உமர்பின் அபீசலமாகூறுகிறார்கள்.நபியின் குடும்பத்தினரான உங்களை சுத்தப் படுத்தவே அல்லாஹ் நினைக்கிறான்” என்ற திருக்குர் ஆனின் வசனம் நபி ஸல் உம்முசலமாவின் வீட்டிலிருந்த போது அருளப்பட்டது. உடனே நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமா, பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன்(ரலி), ஆகியோரை அழைத்து தான் அணிந்திருந்த போர்வைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். பின்னால் நின்று கொண்டிருந்த அலி (ரழி) அவர்களையும் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு “இறைவா!இவர்கள் என் குடும்பத்தினர். இவர்களை விட்டு அசுத்தத்தை நீக்குவாயாக! இவர்களை முழுமையாக பரிசுத்தப் படுத்துவாயாக! என்று பிரார்த்திதார்கள்.  அப்போது உம்மு சலமா அவர்கள் நானும் அவர்களுடன் சேர்ந்தவள் தானே என்று கேட்டார். நீ உனது அந்தஸ்தான இட்த்தில் இருக்கிறாய். என்று பதிலளித்தார்கள். திர்மிதி 3719               

போர்வைக்குள் உம்மு ஸல்மா ரழி அவர்களை நபி ஸல் ஏன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை?

 விளக்கம்- அசுத்தத்தை நீக்குவாயாக என்றால் இவர்கள் மீதான களங்கத்தை நீக்குவாயாக என்பது கருத்தாகும். இந்த நபிமொழி உம்மு சல்மா அம்மையாரை பெருமானார் தம்முடன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறது. மருமகன் அலி (ரழி) அவர்கள் போர்வைக்குள் இருந்த தால்  உம்முசல்மா ரழி அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. மற்றபடி நபி ஸல் அவர்களின் மனைவிமார்களும் அஹ்லெ பைத்தில் கட்டுப்படுவார்கள் என்று விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள்.                                   . 

சல்மான் ஃபார்ஸீ ரழி அவர்களும் சிறப்பு அனுமதி என்ற வகையில் அஹ்லே பைத்தில் கட்டுப் படுவார்கள்.

عن كثير بن عبد الله المزني عن ابيه عن جده : أن رسول الله صلى الله عليه و سلم وسلم خط الخندق من أحمر البسختين طرف بني حارثة عام حزب الأحزاب حتى بلغ المذابح فقطع لكل عشرة أربعين ذراعا فاحتج المهاجرون والأنصار في سلمان الفارسي رحمه الله وكان رجلا قويا فقال المهاجرون : سلمان منا وقالت الأنصار : سلمان منا فقال رسول الله صلى الله عليه و سلم : ( سلمان منا أهل البيت )  حاكم

 விளக்கம்- சல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல. பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்) அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்தத்தின் போது மதினாவின் வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர். அகழி தோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை தாயகமாக கொண்ட அன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப் பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் தனியாக நின்றார்கள். மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித்தோழர்களும் “இவர் எங்களவர் என்று அவரைச் சொந்தம் கொண்டாடப் போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு “சல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்”சல்மான் எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர்” என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.        

பொதுவாக அரபிகளிடம் குலப்பெருமை அதிகம். அந்நியக்குடும்பத்தை தன் குடும்பமாக எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் அதை அறவே மாற்றியமைத்தார்கள். குலப்பெருமை மிகுந்த  அன்றைய அரபகத்தின் சூழலில் ஒரு அன்னியரை தம்மவராக்கிக் கொண்ட பெருமானாரின் பெருந்தன்மை புரட்சிகரமானது. குலப்பெருமையின் ஆணிவேரையே அசைத்துப் போட்ட்து.                                           

அஹ்லெ பைத்துகளுக்கு எந்த அளவுக்கு கண்ணியம் உண்டோ 

அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளும் மற்றவர்களை விட அவர்களுக்கு அதிகம்

 இன்றைய காலத்தில் முக்கியமான தலைவரின் குடும்பம் என்றால் அவர்கள் செல்லும் இடங்களில் மற்றவர்களுக்கு இல்லாத சிறப்புச் சலுகைகளை அனுபவிப்பதற்கு மட்டுமே தங்களின் பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வழமை உண்டு. ஆனால் நபி(ஸல்) அவர்களின் குடும்பம் என்றால் அவர்களுக்கும் கண்ணியம் உள்ளது என்றாலும் அதை விட அதிகப்படியாக கட்டுப்பாடுகள் அக்குடும்பத்திற்கு உண்டு.                                  

عن بن شهاب فقال في الحديث فقال لنا : صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ وَلَا لِآلِ مُحَمَّدٍ (مسلم)

ஜகாத் பொருட்களாகிறது மக்களின் பாவ அழுக்குகளாகும். நிச்சயமாக அவை முஹம்மதுக்கும் ஸல் முஹம்மதுடைய குடும்பத்திற்கும் அனுமதிக்கப்பட்டதல்ல.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ أَخَذَ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلَهَا فِي فِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْفَارِسِيَّةِ كِخْ كِخْ أَمَا تَعْرِفُ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ (بخاري

 நபி ஸல் அவர்களின் பேரப்பிள்ளை ஹசன் ரழி அவர்கள் சிறுவயதில் ஒருமுறை ஜகாத்துடைய பேரீத்தம் பழங்களில் ஒரு பேரீத்தம்பழத்தை எடுத்து அதை தன் வாயில் போட்டு விட உடனே நபி ஸல் அவர்கள் அதை உடனே துப்பி விடு என்ற பாரசீக மொழியில் எச்சரித்து விட்டு, நிச்சயமாக நாம் ஜகாத்துடைய பொருளை உண்ணக்கூடாது என்று உனக்குத் தெரியாதா என்றும் எச்சரித்தார்கள்.                                   

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالتَّمْرِ عِنْدَ صِرَامِ النَّخْلِ فَيَجِيءُ هَذَا بِتَمْرِهِ وَهَذَا مِنْ تَمْرِهِ حَتَّى يَصِيرَ عِنْدَهُ كَوْمًا مِنْ تَمْرٍ فَجَعَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَلْعَبَانِ بِذَلِكَ التَّمْرِ فَأَخَذَ أَحَدُهُمَا تَمْرَةً فَجَعَلَهَا فِي فِيهِ فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْرَجَهَا مِنْ فِيهِ فَقَالَ أَمَا عَلِمْتَ أَنَّ آلَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَأْكُلُونَ الصَّدَقَةَ (بخاري

பேரீச்ச மரத்திலிருந்து  கனிகளைப் பறிக்கும் போதே அதன் ஜகாத் பழங்கள் நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரப்படும். ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வருவார்கள். இறுதியில் அவை நபி ஸல் அவர்களிடம் பெரும் பேரீச்சங் குவியலாக மாறி விடும். சிறுவர்களான ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி இருவரும் அக் குவியலுக்கருகே விளையாடுவார்கள். ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போடுவதை நபி ஸல் அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே அவரது வாயிலிருந்து அதை எடுத்து விட்டு முஹம்மதின் குடும்பத்தார் சதகாப் பொருளை உண்ணக்கூடாது  என்பதை நீ அறியவில்லையா என்று கேட்டார்கள்.

இரண்டு கைகள் மாறும்போது சட்டம் சில நேரங்களில் மாறும்.

عَنْ أَنَسٍ - رضى الله عنه - أَنَّ النَّبِىَّ - صلى الله عليه وسلم - أُتِىَ بِلَحْمٍ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ « هُوَ عَلَيْهَا صَدَقَةٌ ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ » . (بخاري

கருத்து- பரீரா ரழி அவர்களுக்கு சதகாவாக வழங்கப்பட்ட இறைச்சி நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதை வாங்கிக் கொண்ட நபி ஸல் அவர்கள் அது அவர்களுக்குத் தான் சதகாவாகும். அவர்களுக்குத் தரப்பட்டு அவர்கள் அதை சொந்தமாக்கிக் கொண்ட பின் அதைப் நமக்குத் தந்தால் அது அன்பளிப்பாகும் என்றார்கள்.   

படிப்பினை- இதிலிருந்து பல படிப்பினைகள் நமக்கு உண்டு. வங்கியில் நாம் இருப்பு வைத்திருக்கும் பணத்தை விட வங்கி தருகின்ற interest பணம் வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே அது ஹராமாகும். அவர் அதை எடுத்து நன்மையை எதிர் பார்க்காமல் ஏதேனும் ஒரு ஏழையிடம் கொடுத்து விடும்போது அது அவருக்கு ஹராம் அல்ல. அதுபோல் நபி ஸல் தங்களுடைய ஹதீஸில் ஜகாத்துடைய பொருட்களை பாவ அழுக்குகள் என்று கூறியிருந்தாலும் அது அந்தப் பணக்காரர்களைப் பொறுத்தவரை அதுபோல் நபிகளார் ஸல் அவர்களுடைய குடும்பத்தாரைப் பொறுத்த வரை பாவ அழுக்காக இருக்குமே தவிர அதைப் பயன்படுத்தும் ஏழைகளுக்கு அந்தப் பாவ அழுக்குகள் பாதிப்பை ஏற்படுத்தாது. பாவ அழுக்குகள் என்பதே அவர்களுக்குப் பொருந்தாது.        

ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி ஆகிய இருவருக்கும் உள்ள தனிச்சிறப்பு

عن علي قال : لما ولد الحسن سميته حربا فجاء النبي صلى الله عليه و سلم فقال : ( أروني ابني ما سميتموه ) ؟ قلنا : حربا قال : ( لا بل هو حسن ) فلما ولد الحسين سميته حربا فجاء النبي صلى الله عليه و سلم فقال : ( أروني ابني ما سميتموه ) ؟ قلنا : حربا قال : ( بل هو حسين ) فلما ولد لي الثالث سميته حربا فجاء النبي صلى الله عليه و سلم فقال : ( أروني ابني ما سميتموه ) ؟ فقلنا : سميناه حربا قال : ( بل هو محسن ) ثم قال : ( إنما سميتهم بولد هارون : شبر وشبير ومشبر ) (صحيح ابن حبان)

ஹழ்ரத் அலீரழி அவர்கள் கூறினார்கள். முதல் மகனார் ஹஸன் ரழி பிறந்த போது அவருக்கு நான் ஹர்ப் (யுத்தம்) என்று பெயர் வைத்தேன். அப்போது நபி ஸல் அவர்கள் அங்கு வந்து எனது பேரனை என்னிடம் காட்டுங்கள். என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் ஹர்ப் என்று பெயர் வைத்துள்ளதாக கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள்  இல்லை. இனிமேல் அவர் ஹஸன் என்றார்கள்.                            

இரண்டாவது மகனார் ஹஸன் ரழி பிறந்த போது அவருக்கும் நான் ஹர்ப் (யுத்தம்) என்று பெயர் வைத்தேன். அப்போதும் நபி ஸல் அவர்கள் அங்குவந்து எனது பேரனை என்னிடம் காட்டுங்கள்.என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் ஹர்ப் என்று பெயர் வைத்துள்ளதாக கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள்  இல்லை அவர் இனிமேல் ஹுஸைன் என்றார்கள்.                                                   

 மூன்றாவது மகனார் ஹஸன் ரழி பிறந்த போது அவருக்கும் நான் ஹர்ப் (யுத்தம்) என்று பெயர் வைத்தேன். அப்போதும் நபி ஸல் அவர்கள் அங்குவந்து எனது பேரனை என்னிடம் காட்டுங்கள்.என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் ஹர்ப் என்று பெயர் வைத்துள்ளதாக கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள்  இல்லை அவர் இனிமேல் முஹ்ஸின் என்றார்கள். பின்பு எங்களை நோக்கி நான் இந்த மூன்று பிள்ளைகளுக்கும் பெயர் வைத்த தெல்லாம் நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய நடைமுறையைப் பின்பற்றித்தான். நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் முதல் மகனுக்கு ஷபர் என்றும் இரண்டாவது மகனுக்கு ஷைபைர் என்றும் மூன்றாவது மகனுக்கு முஷ்பிர் என்றும் பெயர் வைத்தார்கள் என்று கூறினார்கள்.                                    

 عن حذيفة قال : أتيت النبي صلى الله عليه و سلم فصليت معه المغرب ثم قام يصلي حتى صلى العشاء ثم خرج فاتبعته فقال : ( عرض لي ملك استأذن ربه أن يسلم علي وبشرني أن الحسن والحسين سيدا شباب أهل الجنة ) ) (صحيح ابن حبان)

ஹுதைஃபா ரழி அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் நான் வருகை தந்தேன். அவர்களுடன் மஃரிப் தொழுதேன். பின்பு இஷா வரை அவர்கள் தொழுது கொண்டே இருந்தார்கள். பின்பு வெளியே வந்தார்கள். நான் அவர்களைப் பின் தொடர்ந்தேன். அப்போது என்னிடம் கூறினார்கள். என்னிடம் ஒரு மலக்கு தோன்றினார். அவர் தனது ரப்பிடம் எனக்கு ஸலாம் சொல்ல அனுமதி கேட்டு என்னிடம் வருகை தந்தார். அவர் என்னிடம் ஒரு சுபச் செய்தி கூறினார். நிச்சயமாக ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி இருவரும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்கள் என்று கூறினார்கள்.                                                                                   

عن عدي بن ثابت قال : سمعت البراء يقول : رأيت النبي صلى الله عليه و سلم حاملا الحسن بن علي على عاتقه وهو يقول : ( اللهم إني أحبه فأحبه ) ) (صحيح ابن حبان)

ஹஸன் ரழி அவர்கள் மூலம் இரு சாரார்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும் என்ற சுபச் செய்தி

நபி (ஸல்) அவர்கள் தன் பேரப்பிள்ளை ஹஸன் ரழி அவர்களைத் தோளில் சுமந்த படி யாஅல்லாஹ் நான் இவரை நேசிக்கிறேன் நீயும் நேசிப்பாயாக என்று துஆச் செய்தார்கள்

عَنْ الْحَسَنِ سَمِعَ أَبَا بَكْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ إِلَى جَنْبِهِ يَنْظُرُ إِلَى النَّاسِ مَرَّةً وَإِلَيْهِ مَرَّةً وَيَقُولُ ابْنِي هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنْ الْمُسْلِمِينَ (بخاري

كَانَ الْحَسَن رَضِيَ اللَّه عَنْهُ وَلِيَ الْخِلَافَة بَعْد قَتْل أَبِيهِ عَلِيّ بْن أَبِي طَالِب رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مُسْتَحِقًّا لِلْخِلَافَةِ وَبَايَعَهُ أَكْثَر مِنْ أَرْبَعِينَ أَلْفًا ثُمَّ جَرَى مَا جَرَى بَيْن الْحَسَن بْن عَلِيّ وَبَيْن مُعَاوِيَة رَضِيَ اللَّه عَنْهُمَا وَسَارَ إِلَيْهِ مُعَاوِيَة مِنْ الشَّام إِلَى الْعِرَاق ، وَسَارَ هُوَ إِلَى مُعَاوِيَة فَلَمَّا تَقَارَبَا رَأَى الْحَسَن رَضِيَ اللَّه عَنْهُ الْفِتْنَة وَأَنَّ الْأَمْر عَظِيم تُرَاق فِيهِ الدِّمَاء وَرَأَى اِخْتِلَاف أَهْل الْعِرَاق ، وَعَلِمَ الْحَسَن رَضِيَ اللَّه عَنْهُ أَنَّهُ لَنْ تُغْلَب إِحْدَى الطَّائِفَتَيْنِ حَتَّى يُقْتَل أَكْثَر الْأُخْرَى فَأَرْسَلَ إِلَى مُعَاوِيَة يُسَلِّم لَهُ أَمْر الْخِلَافَة وَعَادَ إِلَى الْمَدِينَة ، فَظَهَرَتْ الْمُعْجِزَة فِي قَوْله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " إِنَّ اِبْنِي هَذَا سَيِّد يُصْلِح اللَّه بِهِ بَيْن فِئَتَيْنِ مِنْ الْمُسْلِمِينَ " وَأَيّ شَرَف أَعْظَم مِنْ شَرَف مَنْ سَمَّاهُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ سَيِّدًا .(عون المعبود

கடைசி காலத்தில் அஹ்லெ பைத்துகளில் ஒருவராக இமாம்  மஹ்தீ  அலை அவர்கள் பிறந்து பிற்காலத்தில் பிரபலமடைவார்கள். அவர்களின் ஆட்சியில் உலகம் முழுவதும் செழிப்புகள் நிறைந்திருக்கும்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ  فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا  وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ  يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ(شرح السنة  وعَنْه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يُعْطِي الْمَالِ بِغَيْرِ عَدَدٍ

  கருத்து- முஸ்லிம்களுக்கு எதிராக உலகெங்கும் நடைபெறும் அநியாயம் காரணமாக அவர்கள் தஞ்சம் அடைய எங்கும் இடம் இல்லாத சூழ்நிலையில் இமாம் மஹ்தீ அலை அவர்களை அல்லாஹ் என்னுடைய குடும்பத்தில் பிறக்கச் செய்து அல்லாஹ் அவர்களை ஆட்சியாளராக ஆக்குவான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் எந்த அளவுக்கு அநியாயம் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தால் பூமியை நிரப்புவார்கள். அவர்களை விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்கள் பொருந்திக் கொள்வார்ரகள். வானம் சரியான முறையில் மழையை இறக்கும். பூமி அதன் செழிப்புகளை சரியான முறையில் தந்து கொண்டிருக்கும். உயிருடன் இருப்பவர்கள் தங்களில் இறந்தவர்கள் குறித்து இன்ன மனிதர்களுக்குஅல்லாஹ் இன்னும் ஆயுளை அதிகமாக்கி இவருடைய காலத்தில் வாழ வைத்திருக்கலாமே என்று எண்ணுவார்கள்.  மற்றொரு அறிவிப்பில் அவர்கள் கணக்குப் பார்க்காமல் மக்களுக்கு வாரி வாரி வழங்குவார்கள். என்றும் கூறப்பட்ட்டுள்ளது.            

நபியின் குடும்பத்தார் விஷயத்தில் - சமுதாயத்தின் கடமை என்ன

عَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ ارْقُبُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَهْلِ بَيْتِهِ –بخاري – 3713

والمراقبة للشيء المحافظة عليه , يقول احفظوه فيهم فلا تؤذوهم ولا تسيئوا إليهم . (فتح الباري

அபூபக்கர் (ரலி) கூறினார்கள். நபியின் குடும்பத்தார் விஷயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்- நூல் புகாரீ 

முஹம்மது (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் விசயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்வதன் மூலம் பெருமானரின் உணர்வுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தொல்லை தந்து விடாதீர்கள். தீங்கிழைத்து விடாதீர்கள். என்பது இந்த வாசக்த்தின் கருத்து என புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் ரஹ் கூறுகிறார்கள்

அவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும். அதாவது துஆச் செய்ய வேண்டும்

இது பற்றி இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் படித்த கவிதை

وللإمام الشافعي رضي الله عنه

يـا أهل بيت رســـول الله حُبكـــم

فـرضٌ مــن الله فـي القـرآنِ أنزله

يكـفيكم مــن عظـيم الفخـــر أنكم

مـن لـم يصــل عليكم لا صلاة لـه

فقوله لا صلاة له يحتمل أن المراد صحيحة فيكون موافقا للقول القديم بوجوب الصلاة على الآل ويحتمل أن المراد لا صلاة كاملة فيوافق أظهر قوليه وهو الجديد (اعانة الطالبين) 

அஹ்லெ பைத்துகளை நேசித்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரை பழிப்பதோ, இவர்களெலாம் என்ன வாரிசுகள் என்று இழிவாகப் பேசவோ, வேறு வகைகளில் அவர்கள் மனம் புண்படுமாறு நடந்து கொள்ளவோ கூடாது

அவர்களிடம் ஏதேனும் ஒரு குறை தென்பட்டால் பெருமானாரின் குடும்பம் என்பதை தொடர்பு படுத்தியோ சுட்டிக்காட்டியோ பேசிவிடக்கூடாது. இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியது ஈமானிய பண்பு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்கள்:

عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوْا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي إبن ماجة

 நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்ததும் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் “என்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும். அல்லாஹ்விற்காகவும் என்னிடமிக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும்” என்றார்கள் (இப்னுமாஜா         )

பெருமானாரின் குடும்பத்தாரின் சிறப்புக்கள். குடும்பங்களில் சிறந்த பரிசுத்தமான குடும்பம்

قال رسول الله -صلى الله عليه وسلم-: (إن الله اصطفى كنانة من ولد إسماعيل، واصطفى قريشاً من كنانة، واصطفاني من بني هاشم- (مسلم (2276)


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ  - البخاري -3096

   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசு) பங்காக பெற மாட்டார்கள். என் மனைவிமார்களுக்கு சேரவேண்டிய வாழ்க்கைச் செலவு என் பிரதிநிதியின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் ஏழைகளுக்குச் சேர வேண்டிய தர்மமேயாகும்).                         

فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ – البخاري

அஹ்லு பைத்துகள் அமைதியின் சின்னங்கள்

·       بقاؤهم أمان للأمة واقتفاؤهم نجاة لها


வியாழன், 22 ஆகஸ்ட், 2024

அலீ (ரழி) , பாத்திமா (ரழி) ஆகியோரின் மண வாழ்க்கையும் படிப்பினைகளும்

  بسم الله الرحمن الرحيم  

அலீ (ரழி)  ,  பாத்திமா (ரழி) ஆகியோரின்

மண வாழ்க்கையும் படிப்பினைகளும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

சஃபர் மாதம் என்றாலே அதை பீடை மாதமாக  கருதும் வழமை இன்றும் மக்களிடம் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட  சஃபர் மாத த்தில் தான்  ஹழ்ரத் அலீ (ரழி)  ஃபாத்திமா (ரழி) ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதைப் பற்றிப் பார்ப்போம்

وأما فاطمة فتزوجها ابن عمها على بن أبى طالب في صفر سنة اثنتين، فولدت له الحسن والحسين، ويقال ومحسن، وولدت له أم كلثوم وزينب. الكتاب :  (السيرة النبوية لابن كثير)

ஹிஜ்ரீ இரண்டாம் வருடம் சஃபர் மாதத்தில் ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கும் அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) , முஹ்ஸின் ரழி ஆகிய ஆண்மக்களும் இரண்டு பெண் மக்களும் பிறந்தனர். அவ்விரு பெண்மக்களுக்கும் தன்னுடைய சகோதரிகளான ஜைனப் (ரழி) உம்மு குல்ஸூம் (ரழி) ஆகியோரின் பெயரையே வைத்தார்கள். 

படிப்பினை- தன் குடும்பத்தில் முக்கியமானவர்களின் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு வைப்பது தவறல்ல.

وقد تزوج عمر بن الخطاب في أيام ولايته بأم كلثوم بنت على بن أبى طالب من فاطمة وأكرمها إكراما زائدا، أصدقها أربعين ألف درهم لاجل نسبها من رسول الله صلى الله عليه وسلم، فولدت له زيدا بن عمر بن الخطاب. (السيرة النبوية لابن كثير)

அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரழி) அவர்களை பிற்காலத்தில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்தார்கள். நபி ஸல் அவர்களின் வாரிசு என்பதால் நல்ல முறையில் அந்தப் பெண்ணை கவனித்துக் கொண்டார்கள். உம்மு குல்ஸூம் (ரழி) அவர்களுக்கு மஹராக 40 ஆயிரம் திர்ஹங்களை வழங்கினார்கள். அவ்விருவர் மூலம் ஜைத் என்ற குழந்தை பிறந்தது. 

وقد كان عبدالله بن جعفر تزوج بأختها زينب بنت على وماتت عنده أيضا،  . (السيرة النبوية لابن كثير)

மற்றொரு மகளான ஜைனப் (ரழி) அவர்களை அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் திருமணம் செய்தார்கள் 

அன்னை ஃபாத்திமா ரழி அவர்களின் மண வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்

ஃபாத்திமாவை ரழி பலர் பெண் கேட்ட போதும்  அலீ ரழி அவர்களையே மருமகனாக தேர்வு செய்தார்கள்

عَنْ عَلِىٍّ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ: لَقَدْ خُطِبَتْ فَاطِمَةُ بِنْتُ النَّبِىِّ صلى الله عليه وسلم فَقَالَتْ لِى مَوْلاَةٌ لِى : هَلْ عَلِمْتَ أَنَّ فَاطِمَةَ تُخْطَبُ؟ قُلْتُ : لاَ أَوْ نَعَمْ قَالَتْ: فَاخْطُبْهَا إِلَيْهِ قَالَ قُلْتُ: وَهَلْ عِنْدِى شَىْءٌ أَخْطُبُهَا عَلَيْهِ قَالَ فَوَاللَّهِ مَا زَالَتْ تُرَجِّينِى حَتَّى دَخَلْتُ عَلَيْهِ وَكُنَّا نُجِلُّهُ وَنُعَظِّمُهُ فَلَمَّا جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ أُلْجِمْتُ حَتَّى مَا اسْتَطَعْتُ الْكَلاَمَ فَقَالَ هَلْ لَكَ مِنْ حَاجَةٍ. فَسَكَتُّ فَقَالَهَا ثَلاَثَ مَرَّاتٍ قَالَ :لَعَلَّكَ جِئْتَ تُخْطُبُ فَاطِمَةَ  قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَىْءٍ تَسْتَحِلُّهَا بِهِ قَالَ قُلْتُ: لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ  فَمَا فَعَلَتِ الدِّرْعُ الَّتِى كُنْتُ سَلَّحْتُكَهَا قَالَ عَلِىٌّ:وَاللَّهِ إِنَّهَا لَدِرْعٌ حُطَمِيَّةٌ مَا ثَمَنُهَا إِلاَّ أَرْبَعُمِائَةِ دِرْهَمٍ قَالَ  اذْهَبْ فَقَدْ زَوَّجْتُكَهَا وَابْعَثْ بِهَا إِلَيْهَا فَاسْتَحِلَّهَا بِهِ (سنن الكبري للبيهقي)

ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் கூறினார்கள். அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பலர் பெண் கேட்டார்கள். எனக்கும் அந்தச் செய்தி வந்த போது என்னுடைய பணியாளர் என்னிடம் அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பலரும் பெண் கேட்கிறார்கள். நீங்களும் கேளுங்கள் என்றார். ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்யும் அளவுக்கு என்னிடம் என்ன தகுதி உள்ளது என்று தயங்கினேன். இருந்தாலும் மனதில் ஆசை இருந்தது. நாங்கள் நபி ஸல் அவர்களை மிகவும் கண்ணியப் படுத்துவோம். எனவே அவர்கள் முன்னிலையில் என் மனதில் உள்ளதை சொல்ல முனைந்த போது எனக்கு வார்த்தை வரவில்லை. நபி ஸல் அவர்கள் என்ன விஷயம் என்று கேட்டார்கள். நான் மவுனமாக இருந்தேன். மூன்று முறை நபி ஸல் அவர்கள் கேட்டும் கூட என்னால் பதில் கூற முடியவில்லை. பிறகு நபி ஸல் அவர்களே என்னிடம் ஃபாத்திமாவை பெண் கேட்க வந்தீர்கள் அல்லவா என்றார்கள். ஆம் என்றேன். உம்மிடம் என்ன மஹர் உள்ளது என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். என்னிடம் எதுவும் இல்லை என்று நான் கூற, நான் உமக்கு அன்பளிப்பாக கொடுத்த உருக்குச் சட்டையை என்ன செய்தீர் என்று கேட்க, அது இருக்கிறது. ஆனால் அது வெறும் நானூறு திர்ஹம் மதிப்புக்குக் கூட வராதே என்று நான் கூறினேன். பரவாயில்லை. அதைக் கொண்டு வாரும் என்று நபி ஸல் அவர்கள் கூற, அதை நான் கொண்டு வந்தேன். அதை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கொடுத்தனுப்பச் சொன்ன நபி ஸல் அவர்கள் இந்த மஹருக்குப் பகரமாக நான் ஃபாத்திமாவை உமக்கு திருமணம் செய்து வைத்தேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.       


பெரிய தந்தை அல்லது சிறிய தந்தையின் மகனையோ அல்லது மகளையோ மணமுடிக்கக்கூடாது என்று சிலர் கருதுகின்றனர். அதேபோல் பெரிய தாயார் அல்லது சிறிய தாயாரின் மகனை அல்லது மகளை  மணமுடிக்கக்கூடாது  என்றும் சிலர் கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ஏனெனில் ஃபாத்திமா ரழி அவர்கள் திருமணம் செய்தது தன் தந்தையின் தகப்பனாருடைய அதாவது பாட்டனாருடைய சகோதரர் மகனாகும். பாட்டனாரின் சகோதரர் மகனை திருமணம் செய்வது எவ்வாறு கூடுமோ அவ்வாறே தந்தையின் சகோதரர் மகனையும் திருமணம் செய்வது கூடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் 

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، أَنَّهُ قَالَ : يَا رسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي بِنْتِ عَمِّكَ بِنْتِ حَمْزَةَ ، فَإِنَّهَا أَجْمَلُ فَتَاةٍ فِي قُرَيْشٍ ؟ قَالَ : أَمَا عَلِمْتَ أَنَّ حَمْزَةَ أَخِي مِنَ الرَّضَاعَةِ ، وَإِنَّ اللَّهَ حَرَّمَ مِنَ الرَّضَاعَةِ مَا حَرَّمَ مِنَ النَّسَبِ (مشكاة) وفي رواة لمسلم أَلَا تَخْطُبُ بِنْتَ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ إِنَّ حَمْزَةَ أَخِي مِنْ الرَّضَاعَةِ (كِتَاب الرِّضَاعِ)  قال الله تعالي  حُرِّمَتْ عَلَيْكُمْ......   وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ (النساء:24

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் உங்களுடைய சிறிய தந்தை ஹம்ஜா ரழி அவர்களின் மகளை மணமுடித்திருக்கலாமே என்று வினவப்பட்ட போது நானும் ஹம்ஜா ரழி அவர்களும் ஒரே தாயிடம் பால் அருந்தியதால் அவரது மகள் என் சகோதரி என்று தான் கூறினார்களே தவிர தன் சிறிய தந்தையின் மகள் என்பதை திருமண உறவுக்கான தடையாக நபி ஸல் அவர்கள் கூறவில்லை.  

ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் வலீமா விருந்து கொடுப்பதற்காக உதவி செய்த நபித்தோழர்கள்

عَنِ ابْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ قَالَ : لَمَّا خَطَبَ عَلِيٌّ فَاطِمَةَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّهُ لاَ بُدَّ لِلْعُرْسِ مِنْ وَلِيمَةٍ قَالَ : فَقَالَ سَعْدٌ : عَلَيَّ كَبْشٌ ، وَقَالَ فُلاَنٌ : عَلَيَّ كَذَا وَكَذَا مِنْ ذُرَةٍ.(مسند أحمد) ( حديث بريدة الأسلمي رضي الله عنه )

ஹழ்ரத் அலீ ரழி அவர்களுக்கும் அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் என்றால் வலீமா விருந்து அவசியமாயிற்றே என்று கூறினார்கள். வலீமா விருந்துக்கு அலீ ரழி அவர்கள் ஏற்பாடு செய்த போது ஹழ்ரத் ஸஃது ரழி அவர்கள் நான் ஆட்டுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார்கள். வேறு சில நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.                              

படிப்பினை- ஒரு சுன்னத்தை நிறைவேற்ற மற்றவர்கள் உறுதுணையாக இருப்பது நல்ல நடைமுறை.

திருமணம் முடிந்த பின் கணவன், மனைவி உடலுறவு கொள்ளும் முன்பு வலீமா கொடுக்கலாமா?

قَالَ صَاحِبُ عَوْنِ الْمَعْبُودِ :قَدْ اِخْتَلَفَ السَّلَف فِي وَقْتهَا هَلْ هُوَ عِنْد الْعَقْد أَوْ عَقِبه أَوْ عِنْد الدُّخُول أَوْ عَقِبه أَوْ يُوَسَّع مِنْ اِبْتِدَاء الْعَقْد إِلَى اِنْتِهَاء الدُّخُول عَلَى أَقْوَال . قَالَ النَّوَوِيّ : اِخْتَلَفُوا ، فَحَكَى الْقَاضِي عِيَاض أَنَّ الْأَصَحّ عِنْد الْمَالِكِيَّة اِسْتِحْبَابهَا بَعْد الدُّخُول ، وَعَنْ جَمَاعَة مِنْهُمْ عِنْد الْعَقْد ، وَعَنْ اِبْن جُنْدُب عِنْد الْعَقْد وَبَعْد الدُّخُول . قَالَ السُّبْكِيُّ : وَالْمَنْقُول مِنْ فِعْل النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا بَعْد الدُّخُول اِنْتَهَى . وَفِي حَدِيث أَنَس عِنْد الْبُخَارِيّ وَغَيْره التَّصْرِيح بِأَنَّهَا بَعْد الدُّخُول لِقَوْلِهِ " أَصْبَحَ عَرُوسًا بِزَيْنَب فَدَعَا الْقَوْم "  (عون المعبود

قال الإمام ابن حجر الهيتمي في تحفة المحتاج في شرح المنهاج: الوليمة سنة بعد عقد النكاح الصحيح للزوج... (فتاوى الشبكة الإسلامية) 

عن أَنَس  رَضِىَ اللَّهُ عَنْهُ  : بَنَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِامْرَأَةٍ فَأَرْسَلَنِى فَدَعَوْتُ رِجَالاً إِلَى الطَّعَامِ. (سنن الكبرى للبيهقي  باب وَقْتِ الْوَلِيمَةِ

இது விஷயத்தில் இமாம்களிடம் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. சில இமாம்கள் திருமண ஒப்பந்தம் நடந்து விட்டாலே வலீமா கொடுக்கலாம் என்று கூறுவர். இதற்கு ஆதாரமாக துஹ்ஃபதுல் முஹ்தாஜ் நூலில் இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் சுட்டிக் காட்டிய கருத்தை முன் வைத்துள்ளனர் அதாவது இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறும்போது முறையான நிகாஹ் நடந்து விட்டாலே அதற்குப் பின்  வலீமா கொடுப்பது கூடும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்கள்.                          

 ஆனால் பெரும்பாலான இமாம்கள் கூறுவது உடலுறவுக்குப் பின்பு கொடுப்பது தான் வலீமா என்பதாகும். காரணம் நபி ஸல் அவர்கள்  தனது மனைவிமார்களில் ஒருவரிடம் புதிதாக இணைந்த பிறகு அனஸ்  ரழி அவர்களை அழைத்து  விருந்துக்கு சில நபர்களை அழைத்து வரச் சொன்னார்கள்.                                                                  

ஹழ்ரத் அலீ (ரழி), ஃபாத்திமா (ரழி) வாழ்வில் நடந்த படிப்பினைக்குரிய சம்பவங்கள்.

خرج علي بن أبي طالب رضي الله عنه يبيع إزار فاطمة رضي الله عنها ليأكلوا بثمنه فباعه بستة دراهم فرآه سائل فأعطاه إياها فجاءه جبريل في صورة أعرابي ومعه ناقة فقال يا أبا الحسن اشتر هذه الناقة فقال ما معي ثمنها قال إلى أجل فاشتراها بمائة ثم عرض له ميكائيل في طريقه فقال أتبيع هذه الناقة قال نعم واشتريتها بمائة قال ولك من الربح ستون فباعها له فعرض له جبريل قال بعته الناقة قال نعم قال ادفع إليّ ديني فدفع له مائة ورجع بستين فقالت له فاطمة من أين لك هذا قال تاجرت مع الله بستة فأعطاني ستين ثم جاء إلى النبي صلى الله عليه وسلم واخبره بذلك فقال البائع جبريل والمشتري ميكائيل والناقة لفاطمة تركبها يوم القيامة.  (السيرة الحلبية- الحاوي للفتاوي للسيوطي

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சிரமமான சூழ்நிலை காரணமாக ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னிடமிருந்த ஒரு ஆடையைக் கொடுத்து அதை விற்று அதைக் கொண்டு உணவு வாங்கி வரும்படி கணவரிடம் கூறினார்கள். அந்த துணி ஆறு திர்ஹம் விலை போனது. திரும்பி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை வந்து யாசகம் கேட்டவுடன் தன்னுடைய நிலையைப் பற்றி யோசிக்காமல் அதை தர்ம ம் செய்து விட்டார்கள். வெறும் கையுடன் வந்து கொண்டிருந்த போது ஒரு கிராமவாசியின் தோற்றத்தில் ஒருவர் வந்தார். அவரிடம் ஒரு ஒட்டகம் இருந்த து. அதை வாங்கிக் கொள்ளும்படி ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை வற்புறுத்தினார். ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, பரவாயில்லை. பணம் வரும்போது தந்தால் போதும் என்றார் அவர்.                                                        

  நூறு திர்ஹத்திற்கு அந்த ஒட்டகத்தை தவனை வியாபார அடிப்படையில் வாங்கிக் கொண்டு இன்னும் சற்று தூரம் சென்ற போது மற்றொரு மனிதர் வந்தார். இந்த ஒட்டகம் எனக்கு வேண்டும் என்றார். நானே இதற்கு இன்னும் பணம் தரவில்லை என்று ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் கூற, பரவாயில்லை. நான் தருகிறேன் என்று கூறினார். ஒட்டகத்தின் விலை 100 திர்ஹங்கள் என்று கூறியவுடன் அந்த நபர் நான் உங்களுக்கு 160 திர்ஹங்கள் தருகிறேன். நீங்கள் யாரிடம் ஒட்டகத்தை வாங்கினீர்களோ அவருக்கு 100 திர்ஹங்கள் தந்து விட்டு நீங்கள் இலாபமாக 60 திர்ஹங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி திர்ஹங்களை ஒப்படைத்தார். அந்த திர்ஹங்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒட்டகத்தை முதலில் விற்றவர் வந்தார். அவரிடம் 100 திர்ஹங்களை ஒப்படைத்து மீதம் 60 திர்ஹங்களுடன் அலீ (ரழி) அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள்.                      

  ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் ஆறு திர்ஹங்கள் மட்டுமே மதிப்புடைய துணிக்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது என்று ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்க, நான் அல்லாஹ்வுடன் ஆறு திர்ஹங்களுக்கு ஒரு வியாபாரம் செய்தேன். அல்லாஹ் எனக்கு அதை பத்து மடங்காக திருப்பித் தந்தான் என்றார்கள். இருவரும் சேர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.                                                                            

இந்த விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அலீ ரழி அவர்கள் கூறியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். முதலில் உம்மிடம் ஒட்டகத்தை விற்பது போன்ற தோற்றத்தில் வந்தவர்கள் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். பின்பு உம்மிடம் அதை வாங்குவது போல் வந்தவர்கள் ஹழ்ரத் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.                                                        

படிப்பினை- இன்பம் துன்பம் எல்லா நிலையிலும் இணைந்து வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கையாகும்.

கணவன், மனைவி இடையே எப்போதாவது மனஸ்தாபம் சகஜம். 

அதை ஊதிப் பெரிதாக்காமல் சமரசம் ஏற்படுத்தும் பெற்றோர்கள் தான் சிறந்தவர்கள்

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَيْهِ لَأَبُو تُرَابٍ وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا وَمَا سَمَّاهُ أَبُو تُرَابٍ إِلَّا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ فَاضْطَجَعَ إِلَى الْجِدَارِ إِلَى الْمَسْجِدِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُهُ فَقَالَ هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الْجِدَارِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَامْتَلَأَ ظَهْرُهُ تُرَابًا فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ اجْلِسْ يَا أَبَا تُرَابٍ  (بخاري

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை மற்றவர்கள் அபுத்துராப் மண்ணின் தந்தையே என்று அழைத்தால் அது ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். முதன் முதலில் ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை அவ்வாறு அழைத்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான். ஒருநாள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது ஏற்பட்ட மனச்சங்கடம் காரணமாக அவர்கள் மஸ்ஜிதுக்குச் சென்று வெறும் தரையில் சுவற்றை நோக்கி படுத்துக் கொண்டார்கள். இதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று நேரத்தில் அங்கு வந்து அலீ (ரழி) அவர்களை எழுப்ப, அலீ (ரழி) அவர்களின் முதுகு முழுவதும் மண்ணாக இருப்பதைக் கண்டு யா அபத்துராப்  மண்ணின் தந்தையே என்று அழைத்தார்கள். பின்பு அலீ (ரழி) அவர்களின் முதுகில் இருந்த மண்ணைத் தட்டி விட்டார்கள். யா அபத்துராப் எழுந்து அமருங்கள் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். நூல் புகாரீ                                                        

சஃபர் மாதத்தில் நடைபெற்ற மற்ற மகிழ்ச்சியான விஷயங்கள்

நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் முதன்முதலாக அவர்கள் போருக்கு புறப்பட்டது சஃபர் மாதத்தில் தான்

غزة الأبواء أو ودان :في صفر سنة 2 هـ، الموافق أغسطس سنة 623م، خرج رسول الله صلى الله عليه وسلم فيها بنفسه في سبعين رجلاً من المهاجرين خاصة يعترض عيراً لقريش، حتى بلغ ودان، فلم يلق كيداً، واستخلف فيها على المدينة سعد بن عبادة رضى الله عنه وهذه أول غزوة غزاها رسول الله صلى الله عليه وسلم،  (الرحيق المختوم)

வரலாற்றுச் சிறப்பு மிக்க கைபர் வெற்றியும் சஃபர் மாதத்தில் நிகழ்ந்தது. ஏழு பேர் சேர்ந்து தூக்க முடியாத கோட்டைக் கதவை அலீ ரழி அவர்கள் தனி நபராக தூக்கி அதை கேடயமாக பயன்படுத்தி நீண்ட நேரம் போரிட்டதும் இந்த கைபரில் தான். பல வருடங்களுக்கு முன்னால் மக்காவிலிருந்து அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற முஸ்லிம்கள் குறிப்பாக நபியவர்களின் சிறிய தந்தை ஆகியோர் மதீனா திரும்பிய போது நபியவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்ததும் இந்த கைபர் வெற்றியின் போது தான்

عَنْ الشّعْبِيّ : أَنّ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللّهُ عَنْهُ قَدِمَ عَلَى رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ يَوْمَ فَتْحِ خَيْبَرَ ، فَقَبّلَ رَسُولَ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ بَيْنَ عَيْنَيْهِ وَالْتَزَمَهُ وَقَالَ مَا أَدْرِي بِأَيّهِمَا أَنَا أُسَرّ : بِفَتْحِ خَيْبَرَ ، أَمْ بِقُدُومِ جَعْفَرٍ ؟ (السيرة النبوية لابن كثير)

அந்தக் காலத்தில் அரபிகள் ஷவ்வால் மாதத்தையே பீடையாக கருதி அம்மாதத்தில் எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள் அதனால் தான் ஆயிஷா ரழி அவர்கள் அந்த மூட நம்பிக்கையை தகர்க்கும் விதமாக பெரும்பாலும் தாம் நடத்தி வைக்கும் திருமணங்களை ஷவ்வால் மாதத்திலேயே ஏற்பாடு செய்வார்கள்

عَنْ عَائِشَةَ قَالَتْ تَزَوَّجَنِى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى شَوَّالٍ وَبَنَى بِى فِى شَوَّالٍ فَأَىُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّى. قَالَ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِى شَوَّالٍ(مسلم)  باب اسْتِحْبَابِ التَّزَوُّجِ وَالتَّزْوِيجِ فِى شَوَّالٍ وَاسْتِحْبَابِ الدُّخُولِ فِيهِ.- كتاب النكاح


கிஸ்ரா மன்னர்களின் ஆட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றியதும், 

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் பதவியை ஏற்றதும் இம்மாதத்தில் தான்.

عن ابن الدقيل قال لما نزل سعد نهر شير طلب السفن ليعبر بالناس فلم يقدر على شيء وجدهم قد ضموا السفن فأقاموا أياما من صفر وفجئهم المدفر أي رؤيا أن خيول المسلمين اقتحمتها فعبرت وقد أقبلت دجلة من المد بأمر عظيم فعزم لتأويل رؤياه على العبور فجمع الناس وقال إني قد عزمت على قطع هذا البحر إليهم فأجابوه فأذن للناس في الإقتحام وقال قولوا نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل لا حول ولا قوة إلا بالله العلي العظيم ثم اقتحموا دجلة وركبوا اللجة وأنها لترمي بالزبد وأنها لمسودة وأن الناس ليتحدثون في عومهم وقد اقترنوا كما كانوا يتحدثون في مسيرهم على الأرض فعجب أهل فارس بأمر لم يكن في حسابهم فأجهضوهم واعجلوهم عن جمهور أموالهم ودخلها المسلمون في صفر سنة عشر واستولوا على كل ما بقي في بيوت كسرى (الخصائص الكبرى)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு பின்பு கிஸ்ரா ஆட்சிக்கு எதிரான போரின் போது ஸஃது ரழியல்லாஹு அன்ஹு என்ற சஹாபியின் தலைமையில் திஜ்லா நதியைக் கடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்களுக்கு கப்பல் கிடைக்கவில்லை. அதன் கரையில் சில நாட்கள் தங்கும் நிலை நீடித்த து. அப்போது முஸ்லிம்களில் பலருக்கு ஒரு கனவு தோன்றியது. முஸ்லிம் படைகள் அந்த திஜ்லா நதியை வெறும் காலால் கடந்து செல்வது போலவும் திஜ்லா நதி அதற்கு வழி விடுவது போலவும் கனவு கண்டார்கள்.  அடுத்த நாள் முஸ்லிம்களை ஒன்று கூட்டி இந்த கனவை நனவாக ஆக்கி விட எண்ணி நஸ்தஈனு பில்லாஹி....... என்ற வாசகங்களை ஓதி அல்லாஹ்விடம் துஆக் கேட்டவர்களாக அந்த நதியைக் கடந்தார்கள். தண்ணீருக்குள் ஒரு சுரங்கம் போன்று பாதைகள் உருவானது. அதற்குள் நுழைந்து நடந்தார்கள். தரையில் நடப்பது போன்று ஒருவருக்கொருவர் பேசியபடி நடந்து சென்றார்கள். பாரசீகர்கள் இவர்களின் விரைவான வருகையைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார்கள். இறுதியாக பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. இது நடெபெற்றுது சஃபர் மாதம்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

வக்ஃப் திருத்தச் சட்டம்

وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ (161) ال عمران 

 உலகில் பாவங்கள் பெருகினால் அல்லாஹ்வின் சோதனைகள் பல்வேறு வடிவங்களில் வரும். அதிலும் குறிப்பாக கீழ்காணும் 15 விதமான பாவங்கள் பெருகும்போது இந்த பூமி பல விதமான ஆபத்துகளை சந்திக்கும் என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவற்றில் முதலாவதாக நபி ஸல் கூறியது பொதுச் சொத்துகள் முறைகேடாகப் பயன்படுத்தப் படுவதைப் பற்றித்தான். இன்றைய பாசிச அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய திருத்த மசோதா வக்ஃப் சொத்துக்கள் அதற்குரிய நோக்கமன்றி முறைகேடாகப் பயன்படுத்தப் படுவதற்கு வழி வகுக்கும் சட்டமாகும்.  

عن  أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذَا اتُّخِذَ الْفَيْءُ دُوَلًا ، وَالأمَانَةُ مَغْنَمًا ، وَالزَّكَاةُ مَغْرَمًا ، وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ ، وَعَقَّ أُمَّهُ ، وَأَدْنَى صَدِيقَهُ ، وَأَقْصَى أَبَاهُ ، وَظَهَرَتْ الأصْوَاتُ فِي الْمَسَاجِدِ ، وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ ، وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ ، وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ ، وَظَهَرَتْ الْقِيَانُ وَالْمَعَازِفُ ، وَشُرِبَتْ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأمَّةِ أَوَّلَهَا ، فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ بَعْضُهُ بَعْضًا » . رَوَاهُ التِّرْمِذِيُّ

சுருக்கம்-  1.பொதுச்சொத்துக்களில் முறைகேடு செய்வது 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 

4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5. மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது  8.மஸ்ஜித்களில் வீண் சப்தம்  9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது  11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை   13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது  14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது.           

மேற்காணும் பாவங்கள் பூமியில் பெருகினால் அந்த நேரத்தில் கீழ்காணும் ஆபத்துகள் வருவதை எதிர் பாருங்கள். சிவப்பு நிற அனல் காற்று வீசுதல். பூகம்பம், பூமி பிளக்குதல், எரி கற்கள் எரியப்படுதல், உருமாற்றப்படுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படும் எந்த அளவுக்கென்றால் பாசிமாலை அறுந்தால் அதிலுள்ள பாசி மணிகள் எவ்வாறு  தொடர்ச்சியாக கீழே விழுமோ அவ்வாறு தொடர்ச்சியான ஆபத்துகளை இந்த உலகம் சந்திக்கும்.  நூல்- திர்மிதீ                                            

15 விதமான பாவங்களில் சிலவற்றைப் பற்றி விரிவாக காண்போம்

1. பொதுச்சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகுதல்   

இதற்கு உதாரணமாக சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச்சட்டத்தைக் கூறலாம்

வக்ஃப் சொத்துக்களை முறையின்றிப்  பயன்படுத்த வழி வகுக்கும் வக்ஃப் திருத்தச்சட்டம்

நமது இந்திய நாட்டில் நம்முடைய முன்னோர்களான முஸ்லிம் மன்னர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் தங்களுடைய சொத்துக்களில் ஒரு பகுதியை மஸ்ஜித், மதரஸா போன்ற பொதுச் சேவைகளுக்காக வக்ஃப் செய்து விட்டுச் சென்றனர். அவற்றில் சில சொத்துக்கள் மட்டும் தான் இன்று மஸ்ஜித் மற்றும் மதரஸாக்களாக தர்காக்களாக செயல் பட்டு வருகின்றன. நிறைய வக்ஃப் சொத்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

 இந்திய இராணுவம் மற்றும் ரயில்வேவிற்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் வக்ஃபு சொத்துக்களாக உள்ளது. இந்த மொத்த சொத்துக்களின் பரப்பளவு 9.4 இலட்சம் ஏக்கர். உலகில் 54 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. எந்த நாட்டிலும் இந்தியாவில் இருக்கும்  அளவிற்கு வக்ஃபு சொத்துக்கள் இல்லை. இந்தியாவில் இருக்கும் அளவிற்கு தர்காக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மதராசக்களின் எண்ணிக்கை உலகில் எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லை. இதனால் தான் அரசாங்கத்தின் பார்வை இந்த வக்ஃபு சொத்துக்கள் மீது ஏற்பட்டுள்ளது. நம்முடைய முன்னோர்கள் எந்த நோக்கத்திற்காக வக்ஃப் செய்தார்களோ அந்த நோகத்தை சிதைக்கும் வகையில் இந்த வக்ஃப் திருத்த மசோதா  வடிவமைக்கப்பட்டுள்ளது.                          

வக்ஃப் திருத்த சட்டத்தின் ஆபத்துகளைப் பற்றிமஹாராஷ்டிர மாநில வக்ஃப் வாரியத்தின் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் அப்துல் ரவுஃப் கூறியது:

   வக்ஃப் தொடர்பான புதிய சட்டத்திருத்தத்தில். வக்ஃப் வாரியத்தின் மொத்தமுள்ள  22 உறுப்பினர்களில்  10 முஸ்லிம்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும்... அந்த 10 முஸ்லிம்களில் 2 முஸ்லிம் பெண்களும் இருக்க வேண்டும் என்றும். மீதமுள்ள 12 பேர்...அரசு நியமனம் என்பதால்... அவர்கள் முஸ்லிம்களாகவோ அல்லது முஸ்லிம்கள் ல்லாதவர்களாகவோ இருக்கலாம் எனவும்... ஆக... முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்த பட்சம் 2 பேர் முதல் அதிகபட்சம் 12 ஆக இருக்கலாம் எனவும்... இதனால்... சென்ட்ரல் வக்ஃப் கவுன்சிலில் மொத்தம் உள்ள 22 பேரில் 12 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் மெஜாரிட்டி ஆக இருக்க முடியும் 

 “ மாநில வக்ஃப் வாரியங்கள் இப்போதைய புதிய சட்டத்திருத்தப்படி, முஸ்லிம் அல்லாத ஒருவரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வைத்திருக்க முடியும். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும், வாரியத்தின் தலைவர், 2 எம்பி மற்றும் 2 எம்எல்ஏ இனிமேல் முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை;  பொதுப்பிரிவிலிருந்து இப்படியாக... முஸ்லிம்களின் மத விவகாரங்களை தலைமை தாங்கி நிர்வாகம் செய்வோரில்.... பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டு வாரியம் நிரப்பப் பட முடியும்,”           

வக்ஃப் சொத்துக்களை பின்வரும் அடிப்படையில் முறையாக  பயன்படுத்தப்பட வேண்டும். 

தமிழகம் முழுவதும் நம் இஸ்லாமிய சமூகத்தில் வறுமையில் வாடும் விதவைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அவர்கள் கண்ணியமாக வாழ தேவையான பராமரிப்பு தொகையை பெற்று கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும் . பள்ளிவாசல்களில் பிச்சை கேட்டு நிற்பவர்களின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்க முடியும். உலமாக்களுக்கு மாதம் மாதம் பென்ஷன் வழங்க பென்ஷன் திட்டம் 1981 உருவாக்கப்பட்டு உள்ளது அதன்படி குறைந்த  உலமாக்கள் மட்டுமே பயன்பெற்று வருகிறார்கள். அதை அதிகரிக்க வேண்டும். உலமா ஓய்வூதியம் குறைந்த பட்சம் 5000 வழங்க வேண்டும்.   வக்ஃப் சொத்துக்கள் மூலம் இவ்வளவு சேவைகள் செய்ய முடியும். ஆனால் இந்த அனைத்தும் இச்சட்டத்தின் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது.  

பொதுச் சொத்துக்களில் முறைகேடு செய்பவர்களை அக்காலத்தில் உடனுக்குடன் அல்லாஹ் அடையாளம் காட்டினான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري) كتاب فرض الخمس 

  விளக்கம்- நபிமார்களில் ஒருவர் போருக்குப் புறப்படும்போது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தன் உம்முத்தினரை போருக்கு அழைத்துச் சென்றார்கள். 1. புதிதாத திருமணம் நடந்து இன்னும் மனைவியுடன் சேராத எந்த ஆணும் என்னுடன் வர வேண்டாம்.. அதாவது புது மாப்பிள்ளை என்னுடன் வர வேண்டாம்.. 2. வீடு கட்டி அதன் மேல்தளம் அமைக்காத  நபர் என்னுடன் வர வேண்டாம்.. அதாவது வீடு கட்டிக் கொண்டிருப்பவர் என்னுடன் வர வேண்டாம்.. 3.  தனது ஆடு குட்டி போடுவதை எதிர் பார்த்துக் காத்திருப்பவரும் என்னுடன் வர வேண்டாம். என்றார்கள். காரணம் இவர்களெல்லாம்  முழு ஈடுபாட்டோடு போர் செய்ய மாட்டார்கள் என்று கருதி அவ்வாறு கூறினார்.                                                  

 அந்த நபி  போர் செய்யும் இடைத்தை அடைய அசர்  ஆகி விட்டது.  அப்போது சூரியனை நோக்கி  பேசானார்கள்.  சூரியனே நீயும் குறிப்பிட்ட நேரத்தில் மறைய வேண்டும் என கட்டளையிடப் பட்டுள்ளாய். நானும்  மஃரிபுக்குள் போரை  முடிக்க வேண்டும் என கட்டளையிடப் பட்டுள்ளேன். என்று கூறி விட்டு பிறகு அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்.  அல்லாஹ்ஹ்வே போர் முடியும் வரை சூரியனை மறைய விடாமல் தடுத்து நிறுத்து என துஆச் செய்ய, அவ்வாறே சூரியன் மறையாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. போரில் அல்லாஹ் அவருக்கு அதாவது முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்தான். பின்பு கனீமத்  பொருட்கள்  சேகரிக்கப்பட்டது. 

 அக்காலத்தின் வழமைப்படி  கனீமத்  பொருட்கள்  ஒரு மலை மீது வைக்கப்படும் அப்போது நெருப்பு வந்து  அதைக் கரித்துகி கொண்டு சென்று விடும். அது தான் அந்த கனீமத்  பொருட்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடையாளமாகும். அவ்வாறே அந்த கனீமத்  பொருட்கள் வைக்கப்பட்டன. ஆனால் நெருப்பு வந்த து. அதைக் கரிக்கவில்லை  அப்போது அந்த நபி கூறினார்கள். இங்கு வந்து சேர வேண்டியதில் ஏதோ ஊழல் நடந்துள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே கை கொடுத்த போது அவர்களில் ஒருவரின் கை  அந்த நபியின்  கையுடன்  ஒட்டிக் கொண்டது, அப்போது அந்த நபி கூறினார்கள். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் என்னிடம் கை கொடுக்க வேண்டும். அவ்வாறே கை கொடுத்த போது அவர்களில் இருவரின் கைகள்  அந்த நபியின்  கையுடன்  ஒட்டிக் கொண்டது, உடன் அந்த நபி கூறினார்கள். நீங்கள் தான் ஏதோ ஒளித்து வைத்துள்ளீர்கள். அதை எடுத்து வாருங்கள். என்று கூற, அவ்விருவரும் தங்கத்தால் செய்யப்பட்ட மாட்டின் தலையைப் போன்ற ஒரு தலையைக் கொண்டு வந்தார்கள். அதையும் சேர்த்து மலை மீது வைத்த பின்பு நெருப்பு வந்து அதை கரித்துக் கொண்டு சென்றது.  இதைக் கூறிய பின்பு நபி ஸல் கூறினார்கள். இந்த உம்மத்துக்கு அல்லாஹ்  கனீமத் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளான் ஆனால் முந்திய உம்மத்துக்கு  அனுமதிக்கப்படவில்லை.


வக்ஃப் சொத்துக்களில் ஏற்கெனவே  பல நிலங்கள் அரசியல் வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வக்ப் சட்டத் திருத்த மசோதா மூலம் அரசின்  துணையோடு  முறையில்லாத வகையில் பயன்படுத்தப்படும் அபாயம் உண்டு.             

2. நம்பகத்தன்மை  குறைந்து விடும்

இறுதி நாள் நெருக்கத்தில் நம்பகத்தன்மை தான் முதலில் மக்களிடமிருந்து எடுக்கப்படும்

عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما تفقدون من دينكم الأمانة ثم الصلاة  (الأحاديث المختارة للضياء

عن عبد الله بن مسعود قال : أول ما تفقدون من دينكم الأمانة وآخر ما تفقدون الصلاة وسيصلي أقوام لا دين لهم (بيهقي

தீனைக் கடைபிடிக்கும் மக்களிடமிருந்து முதலில் அமானிதம் இல்லாமல் போகும். அதன் பின்பு தொழுகையும் இல்லாமல் போகும். சிலர் தொழுகையை சரியாக நிறைவேற்றுவார்கள் ஆனால் அவர்களிடம் தீனின் மற்றொரு பங்கு (அமானிதத்தை முறையாக நிறைவேற்றுதல்) என்பது இருக்காது

அமானிதம் என்பதற்கு நம்மிடம் ஒப்படைத்ததை அப்படியே திருப்பித் தருவது என்ற பொருளும் உண்டு

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا (75)ال عمران   بِقِنْطَارٍ" أَيْ بِمَالٍ كَثِير "يُؤَدِّهِ إلَيْك" لِأَمَانَتِهِ كَعَبْدِ اللَّه بْن سَلَام أَوْدَعَهُ رَجُل أَلْفًا وَمِائَتَيْ أُوقِيَّة ذَهَبًا فَأَدَّاهَا إلَيْهِ "وَمِنْهُمْ مَنْ إنْ تَأْمَنهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إلَيْك" لِخِيَانَتِهِ "إلَّا مَا دُمْت عَلَيْهِ قَائِمًا" لَا تُفَارِقهُ فَمَتَى فَارَقْته أَنْكَرَهُ كَكَعْبِ بْن الْأَشْرَف اسْتَوْدَعَهُ قُرَشِيّ دِينَارًا فَجَحَدَهُ (تفسير الجلالين

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழி அவர்களிடம் ஒருவர் ஆயிரத்து இருநூறு ஊகியா தங்கத்தைக் கொடுத்து வைத்தார். அதை அவர் கேட்கும்போது  அப்படியே திருப்பித் தந்தார்கள். ஒரு ஊகியா என்பது 38 கிராம். ஆனால் கஃப் இப்னு அஷ்ரஃபிடம் ஒரு தீனாரை ஒருவர் கொடுத்து வைத்து திரும்பக் கேட்டபோது அவன் நீ தரவில்லை என மறுத்து விட்டான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ (بخاري

ஹிஜ்ரத் புறப்படும்போது நபி ஸல் அவர்கள் ஆபத்தான சூழ்நிலையிலும் அலீ ரழி அவர்களை மக்காவில் விட்டுச் சென்ற காரணம் அமானிதங்களை அவரவரிடம் ஒப்படைப்பதற்குத்தான். 

وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ (82) كهف -  قال ابن عباس حفظا بصلاح أبيهما ولم يذكر منهما صلاحا وقال جعفر بن محمد  كان بينهما وبين ذلك الأب الصالح سبعة آباء وقال مقاتل كان أبوهما ذا أمانة (تفسير زاد المسير

இந்த சிறுவர்களின் ஏழாவது தலைமுறையில் வாழ்ந்த தந்தை அமானிதத்தைப் பேணிப்பாதுகாப்பதில் மக்களிடம் சிறந்து விளங்கினார். அவரை நம்பி மக்கள் அவரிடம் எதையும் ஒப்படைப்பார்கள். அவர் சிறந்த நல்லடியாராக இருந்ததால் அவரது சந்ததியில் வந்த இந்த அநாதைச் சிறுவர்களின் சொத்தை கிழ்ர் அலை மூலம் அல்லாஹ் பாதுகாத்தான்.

إن عمر لما طلب تزكية أحد الشهود فزكاه رجل ، قال له عمر: هل جاورته؟ قال : لا ، قال : هل تعاملت معه في بيع وشراء؟ قال : لا ، قال: هل سافرت معه؟ قال: لا، قال: فأنت لا تعرفه (شرح بلوغ المرام

  ஒரு மனிதரை சாட்சிக்காக உமர் ரழி அவர்கள் அழைப்பதாக இருந்தார்கள். அதற்கு முன்பு அவரைப் பற்றி மற்றொருவரிடம் விசாரித்தார்கள். அப்போது அவர் அந்த மனிதரைப் பற்றி நல்ல விதமாக கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் எதை வைத்து நல்லவர் என்று அவரைக் கூறுகிறீர்கள் அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அவரோடு கொடுக்கல் வாங்கல் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார் அவரோடு பிரயாணம் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது உமர் ரழி கூறினார்கள். அப்படியானால் அவரைப் பற்றி  உனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள் மற்றொரு அறிவிப்பில் உமர் ரழி அவர்கள்  அந்த மனிதர் மஸ்ஜிதில் தொழுவதைப் பார்த்து விட்டு வந்து அவரைப் பற்றி நல்லவர் என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியதாக வந்துள்ளது.                                                 

பொறுப்புகளும் அமானிதம்

 நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம் செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப் பாழ்படுத்திய குற்றத்தைச் செய்தவராகி விடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ مَا قَالَ فَكَرِهَ مَا قَالَ وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ أَيْنَ أُرَاهُ السَّائِلُ عَنْ السَّاعَةِ قَالَ هَا أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِذَا ضُيِّعَتْ الْأَمَانَةُ فَانْتَظِرْ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرْ السَّاعَة  (بخاري)

ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். ''மறுமை நாள் எப்போது?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், ''நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை'' என்றனர். வேறு சிலர், ''அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை'' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, ''மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?'' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) ''அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்'' என்றார். அப்போது ''அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கவர், ''அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' எனக் கேட்டார். அதற்கு, ''எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி) நூல்: புகாரி (59)

2. ஜகாத் கொடுக்காதவர்களுக்கு உலகில் தண்டனைகள் பல வகை

அ. ஒரு பொருளின் ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் அப்பொருளின் தீங்கை விட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லா விட்டால் சேர்த்து வைத்த அந்தப் பொருளே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும்.

قال رسول الله صلى الله عليه وسلم ما تلف مال في بر ولا بحر إلا بحبس الزكاة (طبراني) عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما خالطت الصدقة أو قال:الزكاة مالا إلا أفسدته رواه البزار والبيهقي-وهذا الحديث يحتمل معنيين:أحدهما أن الصدقة ما تركت في مال ولم تخرج منه إلا أهلكته، ويشهد لهذا حديث عمر المتقدم:ما تلف مال في بر ولا بحر إلا بحبس الزكاة والثاني: أن الرجل يأخذ الزكاة وهو غني عنها فيضعها مع ماله فتهلكه، وبهذا فسره الإمام أحمد-

ஜகாத் எந்தப் பொருளுடன் கலந்து விட்டதோ அந்தப் பொருளை அது அழிக்காமல் விடாது என்பதற்கு இரு விளக்கம் 1.ஜகாத் தர வேண்டியவர் தரா விட்டால் அவருடைய மீதமுள்ள சொத்துக்களை அழித்து விடும். 2. ஜகாத் வாங்கத் தகுதியில்லாத ஒருவர் அதை வாங்கி தன்னுடைய சொத்துக்களுடன் அதை இணைத்தால் அந்த சொத்துக்களையும் அந்த ஜகாத் பணம் அழித்து விடும்

ஆ. ஒரு ஊரில் யாரும் ஜகாத் தரா விட்டால் அங்கு மழை பெய்யாது.மற்ற ஜீவராசிகளுக்காக பெய்தாலே தவிர

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ (ابن ماجة)

எந்த சமுதாயத்தில் ஆபாசம் மிகைத்து விடுமோ அந்த சமுதாயத்தில் இதுவரை கேள்விப்படாத வித விதமான நோய் வராமல் இருக்காது. 2. எந்த சமுதாயத்தில் எடை மோசடி அதிகரித்து  விடுமோ அந்த சமுதாயத்தில் பொருளாதார தட்டுப்பாடு, அநீத அரசர்களின் கொடுமைகள் வராமல் இருக்காது. 3. எந்த சமுதாயத்தில் ஜகாத் தரப்படாமல் விட்டு விடப்படுமோ அந்த சமுதாயத்தில் மழை பெய்யாது.மற்ற ஜீவராசிகளுக்காக பெய்தாலே தவிர 4.அல்லாஹ்வின் கட்டளையை மீறும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது எதிரிகளை அல்லாஹ் ஏவி விடுவான்.  அவர்கள் இவர்களின் சொத்துக்களை சூரையாடுவர் 5. சமுதாயத் தலைவர்கள் குர்ஆன் சட்டங்களை விட்டு விட்டு மனம்போன போக்கில்  மக்களை வழி நடத்தும்போது அல்லாஹ் அவர்களுக்கிடையே ஒற்றுமையில்லாத நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்

குடும்பத்தில் மனைவியின் ஆதிக்கம் முழுக்க முழுக்க   அதிகரித்து விடுவது  நல்லதல்ல.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلمإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلاَءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي

இளைஞர்களிடம் பொழுது போக்கு அம்சங்களின் மீது மோகம் அதிகரித்து விடும் 

நபி வழியை பின்பற்ற வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் நடிகர்களின் வழியை பின்பற்றி தங்களுடைய ஹேர் ஸ்டைலை வித விதமாக அமைத்துக் கொள்கிறார்கள். கரடிகளைப் போன்றும் நரிகளைப் போன்றும் தலைமுடிகளை அமைத்துக் கொண்டு அதையே ஸ்டைல் என்ற நினைக்கிறார்கள். மாற்றார்களின் கலாச்சாரம் நிறைய நமது இளைஞர்களிடம் ஊடுருவி உள்ளது

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயினை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் நிலைமையை கண்காணிக்க ஒரு ஒற்றனை அனுப்பினார்கள். அவன் முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்குச் சென்றான். அங்கு ஒரு இளைஞன் அழுது கொண்டிருந்தான். ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது நான் குர்ஆனை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன். 25 ஜுஸ்வுகள் முடிந்து இன்னும் 5 மீதி உள்ளது. இந்நிலையில் நான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் செய்ய விரும்புகிறேன். ஆனால் என் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை. நீ குர்ஆனை முடித்து விட்டு எங்கு வேண்டுமானாலும் போ என்கிறார்கள் அதனால் அழுகிறேன் என்றான். இதை அப்படியே அந்த ஒற்றன் தன் தலைமையிடம் வந்து சொன்ன போது  குர்ஆனுடன் தொடர்பில் முஸ்லிம்கள் இருக்கும் இந்த  நிலையில் நாம் சென்றால் ஜெயிக்க முடியாது இன்னும் சில காலம் செல்லட்டும்.  என்றனர். இருபது வருடம் கழித்து அதே ஒற்றன் முஸ்லிம்களின் பகுதிக்கு வந்த போது முன்பு போலவே ஒரு இளைஞன் அழுது கொண்டிருந்தான். ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் ஆனால் என் தாய் அவளை எனக்கு திருமணம் செய்து தர மறுக்கிறார்கள் என்றான் இதை அப்படியே அந்த ஒற்றன் தனது தலைமையிடம் சென்று சொன்னபோது இதுதான் தக்க தருணம் என்றைக்கு இளைஞர்கள் அவர்களுடைய வேதத்தின் சிந்தனையை விட்டும் மாறி காதல் சிந்தனைக்கு மாறி விட்டார்களோ இப்போது சென்றால் நாம் வென்று விடலாம் என்று வந்தார்கள். வென்றார்கள்.    

மதுப் பழக்கம் அதிகரித்து விடும் என்பதில் இருந்து படிப்பினை

இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில் அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிமான போதை இளைஞர்கள் தான்.  எனவே இதைப் பற்றி ஜும்ஆவில் பேசுவது மட்டுமே நிறைவான பலனைத் தராது. சம்பந்தப்பட்ட வாலிபர்களில் எவரும் ஜும்ஆ பயானுக்கு வரப்போவதில்லை. எனவே ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கென தனியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஏற்படுத்தியோ அல்லது பள்ளி வாசலில் உடற்பயிற்சி,  கராத்தே, ட்யூஷன் போன்ற பொதுவானவற்றை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை மஸ்ஜிதின் பக்கம் எப்படியேனும் வரவழைத்து அதன் வழியாக அவர்களைத் திருத்த முயற்சிப்பது ஒவ்வொரு முஸல்லிகள் மீதும் கடமையாகும்.                  

உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.                                                             

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்ட கஞ்சா, பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள பெட்டிக்கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சாக்லெட், பிஸ்கட்டுகளோடு சேர்த்து வைத்தே விற்பனை செய்கிறார்கள். அந்தக் கடைகளில் வழக்கமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். புதிதாக யாரும் சென்றால் கொடுக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்... பேருந்து நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களிடம்கூட மிகச் சுலபமாகப் போதை மருந்துகள் கிடைக்கின்றன. பல இடங்களில் காவல்துறைக்கும் தெரிந்தே இத்தகைய போதை விற்பனை நடைபெறுகிறது.                                                                                               

மக்களிடம் பகைமையை உண்டாக்கி, இறைவனின் நினைவைத் தடுக்க ஷைத்தான் அறிமுகப்படுத்தியது மதுவும், சூதாட்டமும் 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91)المائدة

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.  இதைக் கண்ட     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம்     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது


இந்திய அளவில் அதிகம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என புள்ளி விபரம் கூறுகிறது. முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் இடங்களைத் தேர்ந்தெடுத்து  சம்பந்தப்பட்ட ஏஜென்ட்டுகள்  மற்றவர்களுக்குத் தருவதை விட குறைந்த விலைக்கு  கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை விற்று முஸ்லிம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி விடுகின்றனர் என ஆதாரப் பூர்வமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன!

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

இந்திய முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு

 

இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதைப் பற்றி பேசுவதற்கு முன்பு இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமான பூர்வீகமான தொடர்பைப் பற்றிப் பேச வேண்டும். சில அறிவற்றவர்கள் கூறுவது போன்று இந்திய முஸ்லிம்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல என்பதை அடிக்கடி பதிய வைக்க வேண்டும்.

தான் பிறந்த சொந்த ஊரை சொந்த நாட்டை நேசிப்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்

وأخرج الأزرقي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لما خرج من مكة « أما والله اني لأخرج وإني لأعلم أنك أحب البلاد إلى الله وأكرمها على الله ، ولولا أن أهلك أخرجوني منك ما خرجت » .وأخرج الترمذي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمكة « ما أطيبك من بلدة وأحبك إليّ ، ولولا أن قومك أخرجوني ما سكنت غيرك (در المنثور

  நபி ஸல் அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது மக்காவை நோக்கிப் பேசுவது போல பின்வரும் வார்த்தையைச் சொன்னார்கள். ஊர்களிலேயே எனக்குப் பிரியமான ஊராகிய மக்கா என்ற உன்னை விட்டும் நான் வெளியேறுகிறேன். நிச்சயமாக உன்னிடம் வசிப்பவர்கள் என்னை வெளியேற்றியிருக்கா விட்டால் நான் ஒருபோதும் வெளியேறியிருக்க மாட்டேன்.   

இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உள்ள தொடர்பு  பூர்வீகமானது

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38)البقرة

.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن كثير

 நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும் இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின. நபி ஆதம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்... 

விளக்கம்- அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த இலங்கையில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கினார்கள் என்றால் இன்று அது இந்தியாவில் இல்லையே பிறகு எப்படி நாம் அதைப் பற்றிப் பெருமையாகப் பேச முடியும் என்று சிலர் கேட்கலாம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியது வேண்டுமானால் இலங்கையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பல அடையாளச் சின்னங்கள் இன்றும் இந்தியாவில் தான் உள்ளன. உதாரணமாக இராமேஸ்வரத்தில் உள்ள  ராமர் பாலம்  என்பது இன்று வரை ஆதம் பாலம் என்றே இந்திய வரை படங்களில் உள்ளது. சேது சமுத்திரத் திட்டம், சேதுபதி மன்னர்கள் என்றெல்லாம் கூறும்போது அந்த சேது என்பது நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஷீத் அலைஹிஸ்ஸலாம் என்பதிலிருந்து மருவி வந்ததாகும். ஹாபீல், காபீல் உடைய அடக்கஸ்தலம்  இராமேஸ்வரத்தில் உள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

عن ابن عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام ( وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريحا الهند هبط بها آدم عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)

 அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலை அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

  இந்த உலகின் முதல் மனிதரும், முதல் முஸ்லிமுமான நபி ஆதம் அலை இந்த பூமியில் அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தை ஒட்டியுள்ள இலங்கையின் ஸரந்தீப் எனும் மலையில் தான் இறக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடுகிறார். இவர் ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் பயணி ஆவார். இவர் மொராக்கோவைச் சேர்ந்தவர் இங்கிருந்து புறப்பட்டு சுமார் 24 வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து     

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (69)النمل -  قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ (20)العنكبوت

என்ற வசனங்களுக்கேற்ப இந்த பூமியின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து தனது அனுபவத்தை ரஹீலா என்ற பெயரில் நூலாக எழுதினார். அதில் அவர் குறிப்பிடும்போது நாங்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியதாக கூறப்படும் ஸரந்தீப் எனும் மலையை பார்த்தோம். அது கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமாக இருந்தது. அதை கடலில் இருந்து நாங்கள் பார்த்த போது எங்களுக்கும் அதற்கும் இடையில் 9 நாட்கள் தொலை தூரம் இருந்த து. எப்படியோ அதில் நாங்கள் ஏறிய போது எங்களுக்கும் தாழ்வாக ஒரு மேகம் இருந்த து. அம்மலையில் சில மரங்கள் இருந்தன. அதன் இலைகளோ பூக்களோ உதிர்வதில்லை. அங்கு ஃபஸீஹ் என்றொரு இடம் உள்ளது.அங்குள்ள ஒரு உயரமான கரும்பாறையில் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புனிதப் பாதங்கள் சுவடுகள் காணப்பட்டன. அந்த இடம் மட்டும் சிறிது பள்ளமாக காட்சியளித்தது             

நூல் – துஹ்ஃதுன் னளாயிர், புன்யானுல் மர்சூஸ் பக்கம் 57

நபி ஆதம் அலை அவர்களுக்குப் பின்னால் பல நபிமார்கள் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கலாம்

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الَعَزِيزُ الْحَكِيمُ (4)ابراهيم –

 وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا (36)النحل –

என்ற வசனங்களின் படி ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் நபிமார்களை அனுப்பாமல் இருக்கவில்லை என்று அல்லாஹ் கூறியுள்ளான். தமிழ் மிகவும் பழமையான மொழியாகும். நிச்சயமாக தமிழ் மொழியிலும் பல நபிமார்கள் வந்திருக்கலாம் என்பதை மேற்படி வசனங்கள் உணர்த்துகிறது.                                               

கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்து வழியாக இஸ்லாத்தின் வருகை

தென்னிந்தியாவில் இருந்து சில அனாதைச் சிறுவர்களும் சில விதவைப் பெண்களும் ஒரு பாய் மரக் கப்பலில் அரபு தேசத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த கப்பல் சிந்து மாகாணத்தை ஒட்டிய கடல் பகுதி வழியாகத்தான் அரபு தேசத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது சிந்துவைச் சேர்ந்த சில கொள்ளைக்காரர்கள் அதனைத் தாக்கி முஸ்லிம் பெண்களையும் சிறுவர்களையும் கடத்திச் சென்று விட்டார்கள். அரபு தேசத்தை நோக்கி வந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு இப்படியொரு கொடுமை நடந்த விபரம் அப்போதைய அரபு தேசத்தின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸபுக்கு தெரிந்தவுடன் அவர்களை விடுவிக்கும்படி சிந்து ராஜாவுக்கு கடிதம் எழுதினார். கடல் கொள்ளையர்கள் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று ராஜா பதில் எழுதி விட்டார். இந்த பதிலுக்குப் பின் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் நிர்பந்தமாக சிந்துவை நோக்கி படையை அனுப்ப நேர்ந்தது முதல் இரண்டு படையெடுப்பிலும் முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர். மூன்றாம் படையெடுப்பில் முஸ்லிம் ராணுவத்திற்கு பதினேழு வயது நிறைந்த முஹம்மது இப்னு காசிம் தளபதியாக இருந்தார். அவரின் வீரத்தாலும், யுக்தியாலும் முஸ்லிம்  ராணுவத்திற்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான். முஸ்லிம்கள் சிந்து முழுவதையும் கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு சிந்து மக்கள் அவர்களின் அரசர்கள் மூலமாக பல்வேறு அநீதிகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் முஸ்லிம்கள் ஆட்சி செய்த விதம் அவர்களுக்கு மாபெரும் ஆறுதலாக இருந்தது. முஸ்லிம்களின் இந்த அனுகுமுறையைக் கண்டு இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். மதவிஷயத்தில்யாரையும் நாங்கள் கட்டாயம் செய்யவில்லைவிரும்பியவர் மட்டும் இஸ்லாமை ஏற்கலாம் என முஹம்மது இப்னு காசிம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். இதற்குப் பின்பு இஸ்லாம் இன்னும் வேகமாக வட மாநிலங்களில் பரவியது. இதில் அதிகம் பயனடைந்தவர்கள் ஜாட் வகுப்பைச் சார்ந்தவர்கள் தான்.  இவ்வாறு சிந்து பஞ்சாப் மற்ற மாநிலங்களிலும் இஸ்லாம் பரவியது       

நபி ஸல் அவர்களின் காலத்திற்கு அடுத்த காலத்தில் இந்தியாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து வரலாறு

இந்த நாட்டில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டு வந்ததில் அரபு முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் அரபிக்கடல் வழியேவணிகர்களாக  தென்னிந்தியாவுக்கு கேரளாவுக்கு முஸ்லிம்கள் வந்த போது அவர்களின் நேர்மை நாணயம் இதையெல்லாம் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றனர். அதற்கு முன்பே அதாவது நபி ஸல் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்கலூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.                                                           

 என்ற வார்த்தை தான் மருவி கேரளா என்று மாறியதாக கூறுவர் ஏனெனில் அப்போதே அந்த பூமி செழிப்பானخير الله

பூமியாக இருந்ததால் வளம் நிறைந்த அல்லாஹ்வின் பூமி என்று கூறிஅதுவே கேரளா என மாறியதாம்.

இன்றைக்கும் கேரளாவை GOD’S OWN COUNTRY என்பர். அது அந்த அரபு வார்த்தையின் பொருளாகும்

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் இவ்வளவு நெருங்கிய இருந்ததால் தான் இந்திய மண்ணை அந்நியர்களிடம் விட்டுக் கொடுக்க முஸ்லிம்கள் இடம் கொடுக்கவில்லை

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த நேரத்தில் மூத்த ஆலிம்களுக்குள் உரையாடல் நடைபெற்றது நாமும் பாகிஸ்தானுக்குச் சென்று விடுவோம். இனிமேல் அது தான் நமக்குப் பாதுகாப்பான ஒரு நகரம் என்று சில ஆலிம்கள் முடிவெடுத்த நேரத்தில் ஹுசைன் அஹ்மது மதனீ ரஹ் மற்றும் அவர்களுடன் இருந்த நம்முடைய முன்னோடிகளான ஆலிம்கள் அதை மறுத்து நாம் எதற்காக இந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டும். இது நாம் பிறந்த மண். நாம் பிறந்த நாடு. கடைசி வரை இங்கே இருந்து நாம் போராட வேண்டும் என்று அறிவுரை கூறி அந்தச் செய்தியை மக்களிடம் பரப்பினார்கள். அதாவது நம்மை யாரும் நிர்பந்தமாக வெளியேற்றாமல் நாம் இங்கிருந்து வெளியேறக் கூடாது என்ற கொள்கையை மக்களிடம் பரப்பினார்கள்.   

இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி  பிரபல எழுத்தாளர்...

1975 டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான இல்லஸ்டிரேட்டட் வீக்லிஎன்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது”.

டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னமான இந்தியா கேட் எனும் பகுதியில் இந்தியாவுக்காக  உயிர் நீத்த 95,300 இராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945  பேர் முஸ்லிம்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள்

 ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்கள் தன் கையை தொட்டு விட்டால் அந்தக் கையைக் கழுவாமல் எந்தப் பொருளையும் தொட மாட்டார்கள் எனவே தான் ஒரு ஆங்கிலேயன் கூறுவான் மஹ்மூதுல் ஹஸன் அவர்ளை மால்டா சிறையில் எந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்தார்கள் என்பதை அவர்கள் வஃபாத்தான பின் குளிப்பாட்டும்போது தான் உணர முடிந்தது.  அதாவது அவர்களை குளிப்பாட்டும்போது இடுப்பில் சதையே இல்லை அது பற்றி அவருடன் சிறையில் இருந்த ஹுஸைன்அஹ்மத் மதனீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவரது இடுப்பில் சூடு வைப்பார்கள் அதனால் தான் அவரது இடுப்பில் சதையே இல்லை என்றார்கள் 

காந்தியை பிரபலப்படுத்தியது மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள்

காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தது மெளலானா அப்துல் பாரீ ரஹ் அவர்கள்

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் ஏழு மாதம் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களையும், அவர்களுடன் இருந்த நால்வரையும் 1920 ஜூன் 20- ம் தேதி ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் மால்டா விலிருந்து மும்பை துறைமுகத்திற்கு அழைத்து  வரப்பட்டனர். அப்போது  ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்களை வரவேற்பதற்காக பல்வேறு ஆலிம்கள், முக்கியத்தலைவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். அவ்வாறு வருகை புரிந்த தலைவர்களில் காந்திஜியும் ஒருவர்.பிறகு மும்பையில் ஒரு அறையில் காங்கிரஸ் தலைவர்களும், மற்றும் உலமாக்களும் இந்தியாவின் நிலை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இனிமேல் அகிம்சை வழியில் போராட வேண்டும் என்பது ஆலோசனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அகிம்சைப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஷைகுல் ஹிந்த் அவர்கள் பகலில் தன்னை வரவேற்க வந்தவர்களில் இளம் ஃபாரிஸ்டர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கே ?  என்று கேட்டு அவரையே அதாவது காந்தியையே தலைவராக நியமிக்கச் சொன்னார்கள்.  அதன் பின்பு  காந்தியை தலைவராக அறிமுகப் படுத்தவும் மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கவும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒருகூட்டத்தில் மெளலானா அப்துல் பாரீ ஃபரங்கீ மஹல்லீ ரஹ் அவர்கள்தான் முதலில் காந்தியை மாகாத்மா என பட்டம் சூட்டி அழைத்தார்கள் அன்று முதல் அப்பெயர் பிரபலமடைந்தது.

சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி உதவி செய்ததில் முஸ்லிம் பிரமுகர்களின் மாபெரும் பங்களிப்பு.

 போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்த போது  ஆச்சரியத்தால் விரிந்தது.காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது  பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக் காசோலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார்.  ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் 

மருத நாயகம் என்னும் கான் சாகிபு

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர். இவரது உடலும் தலையும் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்டது. அவரது தலை அடக்கம் செய்யப்பட்ட இடம் மதுரை அருகே சம்மட்டி புரத்தில் உள்ளது.

 

இந்தியாவின் முதல் தேசிய கீதம்    கவிஞர் அல்லாமா இக்பால்  அவர்கள் பாடியதாகும்

   நாடு விடுதலையான நேரத்தில் 1947  ஆகஸ்டு 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக 12 மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் தற்போதுள்ள ஜனகனமணஅல்ல: தேசிய கீதமாக ஒலித்தது அல்லாமா இக்பாலின்ஸாரே ஜஹான்ஸே அச்சா   ஹிந்துஸ்தான் ஹமாரா எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை இயற்றியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அந்தப் பாடல் ஓரம் கட்டப்பட்டது

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திப்பு இருந்தார். இந்திய அரசர்களும், மன்னர்களும் திப்புவுக்கு நேசக்கரம் நீட்டியிருந்தால் ஆங்கிலேய ஆட்சி சுமார் 100 வருடம் முன்பே முடிவுக்கு வந்திருக்கும்.  ஆனால் நம் நாட்டு குறுநில மன்னர்கள் வெள்ளையர்களின் வரவேற்பாளர்களாக இருந்தார்கள் திப்புவின் சுதந்திர உணர்வுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சதியில் சிக்கி இருந்தார்கள். ஆங்கிலேயர்களையும், ஆங்கில மொழியையும், அவர்களின் அரசில் பணிபுரிவதையும் அதிகம் வெறுத்து ஒதுக்கியவர்கள் முஸ்லிம்கள் தான். அந்த ஆங்கிலேய வெறுப்பு சுதந்திரத்திற்குப் பின்பும் தொடர்ந்ததால் தான் படிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். எந்த ஆலயங்களிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரம் நடைபெறவில்லை. ஆனால் ஒவ்வொரு மஸ்ஜிதிலும்  ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடைபெற்றன. ஆலிம்கள் ஜும்ஆ மேடைகளில் மார்க்கத்தை மட்டும் பேசாமல் சுதந்திரத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினர். அதனால் தான் ஆங்கிலேயர்கள் பெருமளவில் ஆலிம்களைக் கொன்றனர். மூவாயிரம் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன. மஸ்ஜிதில் தொழுகை நடைபெறும்போதே ஆங்கிலேயர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மஸ்ஜிதின் சுவர்களையும் துளைத்துக் கொண்டு உள்ளே இருந்தவர்களை குண்டுகள் பதம் பார்த்த வரலாறும் உண்டு  இப்படிப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்களை பின்வரும் சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பாசிச சக்திகளும், பாசிச ஊடகங்களும் மறைத்து வருகின்றன. வெள்ளையர்களுக்கு ஏவலாளிகளாக இருந்தவர்கள் இன்று தேசியவாதிகளாக வேடமிடுகிறார்கள்.ஆங்கிலேயர்களுக்கு அன்று அடிபணிந்து போகாமல் சுதந்திர உணர்வுக்கு முன்னோடிகளாக இருந்த முஸ்லிம்கள் இன்று சுதந்திரத்திற்குப் பிறகு நிமிர்ந்து நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பெற்றோர்களை,மனைவி மக்களைப் பிரிந்து வியர்வை சிந்தி உழைத்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.                                                  

சுதந்திரப் போராட்டத்திற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்திய காயிதே மில்லத் ரஹ்

தாயகம் மீது படையெடுத்து  வருபவர்கள் முஸ்லிம்களாயினும் துரத்தும் பரம்பரை நாங்கள் என முழங்கி காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் காயிதே மில்லத் அவர்கள்

இந்தியாவிற்கும், இஸ்லாத்திற்கும் எதிரான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஆலிம்களில் சிலரைப் பற்றி..

பள்ளப்பட்டி  மணிமொழி மெளலானா எனும் எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவீ (ரஹ்

29 -01 -1905ல் பள்ளப்பட்டியில் பிறந்தவர். குடியேறியவர், மணி மொழி பத்திரிக்கை ஆசிரியர், படிப்பை பாதியிலேயே  உதறியவர்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்த அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர். இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். 1946 டிசம்பர் 5ல் ரஜிலா  என்ற கப்பலில் சென்னை வந்தார். தாயார்  இறந்து இரண்டு வருடங்கள் ஆகிய செய்தியை  அப்போது அறிந்தார் நேதாஜியின் படை வரிசையில் நாட்டு விடுதலைக்கு வீட்டையும்  மறந்து தியாகம் செய்தவர் மணிமொழி மெளலானா. (மணிமொழி மெளலானா அவர்கள் பயன்டுத்திய பல அறிய நூல்கள் மதரஸா  காஷிஃபுல் ஹுதா நூலகத்தில்  உள்ளன)

                திண்டுக்கல் ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி

26-11-1876ல் சேலம் ஆத்தூரில் பிறந்தவர். ஹாஜி காதிர்  முஹ்யித்தீன் இராவுத்தர்  அவர்கள் புதல்வர் கிலாபத்  இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும்  உச்சத்திலிருந்தபோது  திண்டுக்கல்   நகரை தலைமையாக கொண்டு அதன் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்ததார். திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் கதர் அணியாத முஸ்லிம்களின் திருமணத்திற்கு  செல்வதில்லை என்ற கொள்கை உடையவர். கிலாபத், ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கேற்றார். மதுரை டவுன் ஹாலில் ராஜாஜி தலைமையில் நடந்த மது விலக்கு  பொதுக்  கூட்டத்தில் இரண்டு மணி நேரம் வீறு கொண்டு இவர் பேசியதற்குப்பின் வேறு எந்த பேச்சாளரும் பேசுவதற்கு பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்கியவர். இவரது '' இயற்கை மதம்'' நூலுக்கு ஈ.வெ.ரா. முன்னுரை எழுதியுள்ளார். 1955 ஜூன் 23ல் காலமானார் சிராஜுல்மில்லத்    அப்துஸ் ஸமது சாகிபின் தந்தையார் இவர்.

அல்லாமா நஹ்வி செய்யது அஹமது மெளலானா-

அல்ஹிதாயா, கமருஸ்ஸமான், காலச்சந்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியரான அல்லாமா நஹ்வி சையது அஹ்மது. மெளலானா தேசிய இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு கதராடை அணிந்து சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். தனது அல்ஹிதாயா பத்திரிக்கை மூலம் தேச விடுதலைக்கு வழிகளை அறிவித்தார். இவர் மீது சினங்கொண்ட ஆங்கிலேய  அரசாங்கம்   இவரை சிறையில் தள்ளியது. 1948 சுதந்திர இந்தியாவில் மரணத்தை தழுவினார்.

ஷைகு  அப்துல் காதிர் ஆலிம் சாஹிப்- 1885 இராமநாதபுரம் நம்புதாளையில் பிறந்து. நைனா முகம்மது ஆலிம்  சாஹிபிடம் கல்வி பயின்ற இவர் கிலாபத்     இயக்கப் போரில் பெரும்  தொண்டாற்றினார். 1955ல் காலமனார்.   -  அமானி ஹள்ரத்- 1893 ஜூலை 23ல் இராயவேலூரை அடித்த  பள்ளி கொண்டாவில் ஹாஜி மெளலானா அப்துல் ரஹீம் புதல்வராகப் பிறந்தார். கிலாபத் இயக்கத்தில் தீவிரப்  பணியாற்றினார். 1958ல் ஷைகுல் மில்லத் பட்டம் காயிதே மில்லத் அவர்களால்   அன்னாருக்கு வழங்கப்பட்டது

 

இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் ஊடகங்கள்

 08-11-2024   بسم الله الرحمن الرحيم   இஸ்லாமிய வெறுப்பை  விதைக்கும் ஊடகங்கள்      https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...