25-10-2024 ★ ரபீஉல் ஆகிர் 21 ★ ஹிஜ்ரி :1446 ★ بسم الله الرحمن الرحيم
தேவையில்லாத, அனாவசியமான, ஊதாரித்தனமான செலவுகள் செய்வதில் முஸ்லிம்களில் முதலிடத்தில் உள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அனாவசியமான செலவுகளால் நம் சமூகத்தில் பலர் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் இருக்கின்றனர். இவர்கள் தான் அடகுக் கடைக்காரர்களை வளர்த்து விடுகிறார்கள். வட்டிக்குக் கடன் வாங்கி ஆடம்பரத் திருமணங்களை, தேவையில்லாத வைபவங்களை நடத்துகின்றனர். இன்று நம் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஆடம்பர செலவுகளில் மூழ்கியிருக்கிறார்கள். எனவே இதைக் குறித்து எச்சரிக்கை செய்வது அவசியமாகும்.
வீண் விரயங்களை இஸ்லாம் அறவே விரும்புவதில்லை
وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (141)الانعام
1.உடலுக்குள்ளே செலுத்தப்படும் உணவிலும் வீண் விரயம் என்பது உண்டு. அது உடலையும் பாதிக்கும்
2. மீதமாகி குப்பையில் கொட்டப்படும் உணவிலும் வீண் விரயம் உண்டு. இதுவும் பல பாதிப்புகளை உண்டாக்கும்
1.அளவுக்கு மீறி உண்பதும் வீண் விரயம் தான்
عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ (ترمذي
மனிதன் நிரப்பிக் கொள்ளும் பாத்திரங்களில் மிகவும் மோசமானது அவனது இரைப்பை ஆகும். (அதாவது அளவுக்கு மீறி உண்பதாலோ அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதாலோ பாதிக்கப் படும் உறுப்புகளில் முக்கியமானது இரைப்பை.)
ஆதமின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்த சில கவள உணவுகள் போதும். இருந்தாலும் அது போதாது என்றிருந்தால் அவனது இரைப்பையில் மூன்றில் ஒரு பகுதியை நிரப்பிக் கொள்ளட்டும். மூன்றில் ஒரு பகுதியை தண்ணீருக்காக ஆக்கிக் கொள்ளட்டும். மூன்றில் ஒரு பகுதியை காலியாக விட்டு விடட்டும்.
மேற்காணும் ஹதீஸில் இருந்து படிப்பினைகள்
A. அளவுக்கு மீறி உண்பதால் ஆரோக்கியமும் பாதிக்கும்.
இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்துகளில் முக்கியமானவை தவறான உணவு முறைகள். தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டாலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன. மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. உணவு முறைகள் முறையாக பேணப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். “உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள் (குர்ஆன் 7:31) என்ற இறை வாக்கைப் பின்பற்றி வாழ்ந்த நபித்தோழர்கள் நோயற்றவர்களாக வாழ்ந்திருந்தனர். அளவின்றி உணவுண்டு, உடல் பருத்து விடுவதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது. எனவே பசித்த பின்பே உண்ணுவதும் அதுவும் அளவோடு உண்பதும் நலம் தரும் செயற்களாகும்.
B.மூன்றில் ஒரு பகுதி தண்ணீருக்கு என்று கூறியதால் அதிகம் தண்ணீர்அருந்துவதை நம்பிள்ளைகளுக்குப் பழக்க வேண்டும்
தண்ணீர் என்ற வார்த்தையை அல்லாஹ் குர்ஆனில் 63 இடங்களில் கூறியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்நாளும் 63 வருடங்கள். இவ்விரண்டுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
அதாவது நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்துக்கு எவ்வளவு பெரிய அருட்கொடையோ அதுபோன்று தண்ணீரும் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அருட்கொடை என்பதை விளக்க இவ்வாறு அல்லாஹ் கூறியுள்ளதாக சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் அல்லாஹ் தண்ணீரை பரக்கத் நிறைந்தது என குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.
நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் கூறுவது போல எல்லா உயிர்களும் அதன் உடலில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தண்ணீரைக்கொண்டு உள்ளவை. குறிப்பாக மனித உடலில் 75 சதவீதம் தண்ணீர் தான் நிரம்பியுள்ளது. எல்லா உறுப்புக்களுக்கும் தண்ணீர் தேவை. மேலும் நம்முடைய உடம்பில் வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை மல, ஜல துவாரங்களை நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதும் இந்தத் தண்ணீர் தான். அதனால்தான் மலம், ஜலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவர்.
மேற்காணும் ஹதீஸில் இருந்து மற்றொரு படிப்பினை
C. ஆரோக்கியத்திற்கு எதிரான உணவுகளை உண்பதால் ஆரோக்கியமும் பாதிக்கும்.
இன்று குழந்தைகளிடம் காணப்படும் உணவுப் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு எதிரானதாக இருப்பதோடு, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்கள் ஹராமான உயிரினங்களின் பாகங்கள் கலந்த நிலையில் விற்கப்படுகின்றன. எனவே இந்த விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. நம்முடைய பிள்ளைகளின் வளர்ந்து வரும்போதோ ஹராம் என்ற நஞ்சையும் உடலுக்குத் தீமை தரும் விஷ உணவுகளையும் கொடுத்துப் பழக்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، رض قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"الْمَعِدَةُ حَوْضُ الْبُدْنِ، وَالْعُرُوقُ إِلَيْهَا وَارِدَةٌ، فَإِذَا صَحَّتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالصِّحَّةِ، وَإِذَا فَسَدَتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالسَّقَمِ". (: المعجم الكبير للطبراني
கருத்து- இரைப்பை குடல் என்பது ஒரு தடாகம் போன்றதாகும். ஒரு குளத்தில் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வந்து தண்ணீர் எடுத்துச் செல்வது போன்று உடலின் மற்ற பாகங்கள் அனைத்திற்கும் நரம்புகள் வழியாக சத்துக்கள் சப்ளை ஆகின்றன. தனக்குத் தேவையான சத்துக்களை இந்த இரைப்பையில் இருந்தே நரம்புகள் எடுத்துச் செல்கின்றன. இங்கிருந்து தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சத்துக்கள் செல்கின்றன. எனவே இரைப்பை குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும். இரைப்பை கெட்டுப் போய் விட்டால் உடல் உறுப்புக்கள் கெட்டுப்போய் நோய் ஏற்படும். தப்ரானீ
கண்ட உணவுகளை உண்டு தன் ஆரோக்கியத்தை தானே கெடுத்துக் கொண்டால் அதற்கும் விசாரணை உண்டு.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رض قَالَ : لاَ تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ : عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ ، وَعَنْ جَسَدِهِ فِيمَا أَبْلاَهُ ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا وَضَعَهُ ، وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ (دارمي
மறுமை நாளில் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மனிதனின் கால்கள் நகராது. 1.அவனது ஆயுளை எப்படிக் கழித்தான் என்றும் 2. அவனது உடலை எவ்வாறு பயன்படுத்தினான் என்றும் 3. அவன் எவ்வாறு சம்பாதித்தான் எவ்வாறு செலவழித்தான் என்றும் 4.அவன் கற்ற கல்வியைக் கொண்டு எவ்வாறு அமல் செய்தான் என்றும் கேட்கப்படும்.
ஆரோக்கியம் நிறைந்த பல்வேறு வகையான பழங்களைச் சாப்பிடப் பழக்க வேண்டும்.
عن علي رضي الله عنه قال: إذا أكلتم الرمان فكلوه بشحمه، فإنه دباغ المعدة (كنز العمال) ورُوي في رواية مرفوعا الي النبي صلى الله عليه وسلم
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். மாதுளையை நீங்கள் உண்டால் அதன் உட்புறத் தோலுடன் சேர்த்து உண்ணுங்கள். ஏனெனில் அது குடலை சுத்தப்படுத்தும்.
عن مرجانة قالت: رأيت عليا يأكل رمانا فرأيته يتتبع ما يسقط منه ويأكله (كنز العمال)
அலீரழி அவர்களை மாதுளை உண்பதாக நான் கண்டேன். அப்போது அவர்கள் அதில் ஒன்றைக்கூடவீணாக்காமல் கீழே விழுந்ததையும் எடுத்து சுத்தப்படுத்தி உண்பதை நான் கண்டேன் என மர்ஜானா என்ற பெண் கூறினார்கள்
காய்கறிகளும் கீரை வகைகளும் குழந்தைகளுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும்.
وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا (البقرة 61
கீரை வகைகளில் மிகுந்த ஆரோக்கியம் உள்ளது.
கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
عَنْ أُمِّ الْمُنْذِرِ بِنْتِ قَيْسٍ الأَنْصَارِيَّةِ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهُ عَلِىٌّ رضي الله عنه وَعَلِىٌّ نَاقِهٌ وَلَنَا دَوَالِى مُعَلَّقَةٌ فَقَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَأْكُلُ مِنْهَا وَقَامَ عَلِىٌّ لِيَأْكُلَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ لِعَلِىٍّ « مَهْ إِنَّكَ نَاقِهٌ ». حَتَّى كَفَّ عَلِىٌّ عَلَيْهِ السَّلاَمُ. قَالَتْ وَصَنَعْتُ شَعِيرًا وَسِلْقًا فَجِئْتُ بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا عَلِىُّ أَصِبْ مِنْ هَذَا فَهُوَ أَنْفَعُ لَكَ ». (ابوداود
அலி (ரழி) அவர்களுக்கு நோய் ஏற்பட்டு அப்போதுதான் குணமடைந்த நிலையில் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது பேரீத்தங்காயின் ஒரு கொப்பு வைக்கப்பட்டிருக்க, அதிலிருந்து நபி (ஸல்) உண்ண ஆரம்பித்த போது அலீ (ரழி) அவர்களும் உண்ண ஆரம்பித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து “உமக்கு இப்போது தான் உடல் நலம் சற்று தேறியுள்ளது. நீங்கள் இதை உண்ண வேண்டாம்” என தடுத்தார்கள். பின்பு உம்முல் முன்திர் (ரழி) அம்மையார் அவர்கள் கீரையையும் கோதுமை உணவையும் கொண்டு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை நோக்கி“இதை உண்ணுங்கள்”இது உமக்குப் பயனுள்ளது என்றார்கள். அபூதாவூத்
நபித்தோழர்களுக்குப் பிடித்தமான கீரை உணவுகள்
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ
ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் கூறினார்கள்
வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். காரணம் எங்களிடம் ஒரு மூதாட்டி இருந்தார். அவர் கீரையின் தண்டுகளை எடுத்து தன் பாத்திரம் ஒன்றில் போட்டு அதில் கோதுமையைக் கலந்து கடைந்து வைப்பார். நாங்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியை அடைந்து வந்தோம்.
நாங்கள் வெள்ளிக் கிழமையில் மட்டும் ஜும்ஆ தொழுத பின்புதான் காலை உணவு உண்ணுவோம். கைலூலா எனும் ஓய்வையும் எடுப்போம். அல்லாஹ் மீது சத்தியமாக அந்த மூதாட்டி பரிமாறிய அந்த உணவில் கெட்டியான கொழுப்போ, திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை. நூல்-புகாரீ 5403 மேற்படி இரு ஹதீஸ்களும் கீரை வகைகளின் அவசியத்தை உணர்த்துகின்றன. பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள் வைட்டமின் பி, ஏ, சி சத்துக்களை அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை அடிக்கடி நாம் உட்கொண்டால் அல்லாஹ்வின் நாட்டப்படி ஆரோக்கியம் பாதுகாக்கப் படும்.
அசைவ உணவுகளையும் அவ்வப்போது உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது
عن عائشة رض أن رسول الله صلى الله عليه وسلم قال لأم هانيء: " ألكم غنم؟ قالت: لا، قال: اتخذوا الغنم فإن فيها بركة."(رواه ابن جرير".
عَنْ أُمِّ رَاشِدٍ جَدَّتِهِ ، قَالَتْ : كُنْت عِنْدَ أُمِّ هَانِئٍ فَأَتَاهَا عَلِي ، فَدَعَتْ لَهُ بِطَعَامٍ ، فَقَالَ : مَالِي لاَ أَرَى عِنْدَكُمْ بَرَكَةً ، يَعْنِي الشَّاةَ ، قَالَتْ : فَقَالَتْ : سُبْحَانَ اللهِ ، بَلَى وَاللهِ إِنَّ عِنْدَنَا لَبَرَكَةً ، قَالَ : إنَّمَا أَعَنْيَ الشَّاةَ ، (مُصنف ابن أبي شيبة)
உம்மு ஹானீ ரழி அவர்களின் வீட்டுக்கு ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் சென்றார்கள். அப்போது அந்த அம்மையார் உணவை வரவழைத்தார்கள். அதைக் கண்ட அலீ ரழி அவர்கள் உரிமையுடன் அந்த அம்மையாரிடம் பரக்கத்தை இன்னும் காணவில்லையே என்றார்கள். அதற்கு அந்த அம்மையார் அதுவும் இன்றைக்கு எங்களிடம் இருக்கிறது என்றார்கள். அதாவது ஆட்டிறைச்சியைத்தான் பரக்கத் என்று குறிப்பிட்டார்கள். இப்னு அபீ ஷைபா
நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இறைச்சிக்கு மறுபெயராக ஒவ்வொரு கினாயாவான வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன.
ஆனால் அசைவ உணவுகளை தினமும் உண்பது நல்லதல்ல
அவ்வாறு உண்பது அசைவம் இல்லாமல் ஒரு நாளும் இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விடும்.
عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ إِيَّاكُمْ وَاللَّحْمَ فَإِنَّ لَهُ ضَرَاوَةً كَضَرَاوَةِ الْخَمْرِ (مؤطا)
மதுவுக்கு எவ்வாறு மனிதனை அடிமைப் படுத்தும் தன்மை உண்டோ அதுபோன்று அசைவ உணவை தொடர்ந்து சாப்பிடுவது மனிதனை அடிமைப் படுத்தி விடும். எனவே தொடர்ந்து சாப்பிடாதீர்கள்.
யூதர்களின் சூழ்ச்சியால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சில திண்பண்டங்களில் ஹராம் கலக்கப்படுகிறது.
யூதர்களின் தயாரிப்புகளான சில திண்பண்டங்களில் பன்றியின் கொழுப்புகளும் கலக்கப்படுகின்றன. எந்தெந்த உணவுகளில் அவ்வாறு கலக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியா விட்டாலும் எந்தப் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற அடையாளம் போடப் பட்டுள்ளதோ அதில் அசைவம் கலக்கப்பட்டுள்ளது என்பது உறுதியான விஷயமாகும். பச்சை நிற அடையாளம் இருந்தால் அது சைவம் என்பதற்கான அடையாளமாகும். எனவே சிவப்பு நிற அடையாளம் போடப் பட்டுள்ள அசைவத்தை தவிர்க்க வேண்டும்.
உணவுகளை வீணாக்குவதும் பெரும் பாவம்
وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (141)الانعام
عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ سَمِعَهُ مِنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ قَالَ كُنْتُ غُلَامًا فِي حِجْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ فَقَالَ لِي يَا غُلَامُ سَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ (مسلم
ஏழைகளில் பலர் உணவின்றி பசியுடன் இருக்க, திருமண மண்டபங்களில் குப்பைக்குச் செல்லும் உணவுகள்
வீண் விரயங்களால் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்ட முஸ்லிம்கள்
2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துக் கொன்றது உட்பட பல்வேறுகொடூரங்களை அரங்கேற்றியவர்கள் பாசிசவாதிகளால் ஏவப்பட்டஅம்புகளான தாழ்த்தப் பட்ட மக்கள் தான். பாசிசவாதிகளால் அவர்களுக்கு வழங்கப்படும் பணங்களுக்காக அவர்கள் முஸ்லிம்களை வேட்டையாடினர். பின்னால் ஒருநேரத்தில் அவர்களின் ஒரு முக்கியமான தலைவனை முஸ்லிம்களில் சிலர் சென்று சந்தித்து உங்களுக்கு அப்படியென்ன முஸ்லிம்கள்மீது கோபம் என்று கேட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினர். நாங்கள் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில்தான் வசித்தோம்.அப்போது நாங்கள் மிகவும் வறுமையில் இருந்தோம். ஆனால் எங்களுக்கு அருகாமையில் முஸ்லிம்கள் வசித்தார்கள். அவ்வப்போது அவர்கள் விருந்து தயார் செய்வார்கள். அவர்களே சாப்பிட்டுக் கொள்வார்கள். சாப்பிட்ட பிறகு மிச்சமுள்ள உணவுகளை அண்டாக்களில் கொட்டு வந்து குப்பைகளில் கொட்டுவார்கள். அந்த உணவுகளை எங்களிடம் கொண்டு வந்து தந்திருந்தாலும் நாங்கள் ஒரு வாரத்திற்கு அதைப்பாதுகாத்து வைத்து சாப்பிடுவோம். ஆனால் எங்களுக்கும் அதை தர மாட்டார்கள். அவர்களே சாப்பிட்டு மீதியை குப்பையில் கொண்டு வந்து கொட்டுவார்கள். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க நாளடைவில் முஸ்லிம்கள் என்றாலே ஒரு விதமான வெறுப்பு எங்களுக்குள் இருந்தது. இந்த நிலையில் இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் எங்களிடம் வந்து முஸ்லிம்களைப் பற்றி மேலும் வெறுப்புணர்வைத் தூண்டி நீங்கள் முஸ்லிம்களைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு நிறைய செல்வங்களைத் தருகிறோம் என்று கூறி எங்களைத் தயார் படுத்தினார்கள். அதனடிப்படையில் தான் நாங்கள் கலவரத்தில் நிறைய முஸ்லிம்களைக் கொன்றோம் என்று அவர் கூறியுள்ளார்.
உணவின் வேறு சில ஒழுக்கங்கள்
وعن كعب بن مالك قال : كان رسول الله صلى الله عليه وسلم يأكل بثلاثة أصابع ويلعق يده قبل أن يمسحها . رواه مسلم
وعن جابر : أن النبي صلى الله عليه وسلم أمر بلعق الأصابع والصفحة وقال : " إنكم لا تدرون : في أية البركة ؟ " . رواه مسلم
கீழே சிந்தும் உணவுகள் ஷைத்தானுக்குரியதாகும்
وعن جابر قال : النبي صلى الله عليه وسلم يقول : " إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه حتى يحضره عند طعامه فإذا سقطت من أحدكم لقمة فليمط ما كان بها من أذى ثم ليأكلها ولا يدعها للشيطان فإذا فرع فليلعق أصاب فانه لا يدري : في أي طعامه يكون البركة ؟ " . رواه مسلم
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழ் உலகம் போற்றும் புலவர் திருவள்ளுவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாக இங்கு கூறலாம். வள்ளுவர் எப்போதும் உணவு உண்ணும்போது தன் மனைவி வாசுகியிடம் குடிப்பதற்கென்று ஒரு பாத்திரத்தில் தனியாக தண்ணீர் எடுத்து வரச் சொல்வதோடு மற்றொரு டம்ளரில் தண்ணீரும் கூடவே ஒரு ஊசியும் எடுத்து வரச் சொல்வாராம். அவ்விரண்டையும் ஒவ்வொரு முறையும் மனைவி வாசுகி தவறாமல் எடுத்து வருவார். ஆனால் அந்த டம்ளர் தண்ணீரையும் ஊசியையும் அப்படியே திருப்பிக் கொண்டு செல்வார். அதை வள்ளுவர் பயன்படுத்தவே மாட்டார். ஒவ்வொரு முறையும் மனைவி வாசுகி அவ்வாறே செய்வார். ஏன் எதற்காக என்று மனைவி வாசுகி கேள்வி கேட்டதில்லை. கடைசி காலத்தில் மனைவி வாசுகி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வள்ளுவரே தன் மனைவியிடம் இது பற்றி வினா எழுப்பி நான் எதற்காக அவ்வாறு செய்யச் சொன்னேன் என்று ஒருமுறை கூட நீ கேள்வி கேட்கவில்லேயே என்று கூற, அதற்கு அவரது மனைவி வாசுகி நீங்கள் சொன்னதை நான் செய்தேன். அவ்வளவு தான். ஏன் எதற்கு என்று நான் ஏன் கேட்க வேண்டும்
என்று பதில் கூற, அதன்பின்பு வள்ளுவரே அதற்கு பதில் கூறினார். ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும்போது ஏதேனும் உணவுப் பருக்கை கீழே விழுந்து விட்டால் அதை அந்த ஊசியால் குத்தி எடுத்து அதை நீரில் முக்கி சுத்தம் செய்து பிறகு சாப்படுவதற்காகவே நான் அவ்வாறு ஒவ்வொரு முறையும் ஒரு டம்ளர் தண்ணீரையும் ஊசியையும் எடுத்து வரச் சொன்னேன். ஆனால் வாழ்நாளில் ஒருமுறை கூட உணவுப் பருக்கைகள் கீழே சிந்தவில்லை. அதனால் அது தேவைப்படவில்லை என்றாராம்.
அல்லாஹ் தந்த உணவு என்ற நினைவோடு உண்ணும் முஃமினின் உணவில் அல்லாஹ் பரக்கத் செய்வான்
وعنه أن رجلا كان يأكل أكلا كثيرا فأسلم فكان يأكل قليلا فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال : " إن المؤمن يأكل في معى واحد والكافر يأكل في سبعة أمعاء " . رواه البخاري
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا كَانَ يَأْكُلُ أَكْلًا كَثِيرًا فَأَسْلَمَ فَكَانَ يَأْكُلُ أَكْلًا قَلِيلًا فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (بخاري
செலவு செய்வதில் வீண் விரயம் கூடாது
வீண் விரயம் செய்வதால் பரக்கத் நீங்கி விடுகிறது. பரக்கத் நீங்குவதால் வாழ்வில் நிம்மதி குறைந்து விடுகிறது. திருமணங்களுக்காக செலவு செய்வதில் போட்டி போட்டிக் கொண்டு சில செல்வந்தர்கள் செலவு செய்வார்கள். அவர் தன் குடும்பத் திருமணத்திற்கு இவ்வளவு செலவு செய்தார். நான் அதை விட அதிகம் செலவு செய்வேன் என்று போட்டி போட்டு வீண் விரயம் செய்கிறார்கள்.
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً (مسند أحمد
திருமணங்களில் மிகவும் பரக்கத்தானது குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணங்களாகும். ஹதீஸ்
வீண் விரயம் இல்லாத, குறைந்த செலவிலான திருமணங்களில் பரக்கத் உண்டு என்பதை பல விதமாக விளங்கலாம். இத்தகைய திருமணங்களின் இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதையும், ஆடம்பரமான திருமணங்களின் இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியில்லாமல் வாழ்வதையும் பார்க்கலாம். பரக்கத் இருந்தால் தான் நிம்மதி இருக்கும். ஆடம்பர திருமணங்களில் நிம்மதி கிடைப்பதில்லை.
பட்டாசுக்காக செலவு செய்வதும் வீண் விரயமாகும்
பட்டாசு வாங்கித் தரச் சொல்லி பிள்ளை அடம் பிடிப்பதால் வாங்கித் தருகிறேன் என்று சாக்குப் போக்குச் சொல்லும் பெற்றோர்களிடம் நீங்கள் ஒரு 100 ரூபாய் நோட்டை உங்கள் பிள்ளையிடம் தரும்போது அந்தப் பிள்ளை அதை நெருப்பில் காட்டி சாம்பலாக்க நினைத்தால் பிள்ளை ஆசைப் படுகிறான் என்று நீங்கள் விடுவீர்களா நிச்சயமாக அனுமதிக்க மாட்டீர்கள். 100 ரூபாயை சாம்பலாக்குவதும் அதை பட்டாசாக வாங்கி கரியாக்குவதும் இரண்டும் ஒன்று தான். அது மட்டுமல்ல பட்டாசு என்பது மாற்றார்களின் மதச்சடங்கு. அதைச்செய்வது அவர்களின் மதச் சடங்கைச் செய்வது போன்றாகும்
பட்டாசு வெடிப்பதால் மற்ற உயிரினங்களும் பாதிப்படைகின்றன.
பசுமை தீபாவளி என்ற தலைப்பில் அகிலாம்பாள் என்பவரின் கட்டுரையில் பட்டாசுகளின் தீமையைப் பற்றி நிறைய கூறப்படுள்ளது. அதில் சில துளிகள் இதோ... தீபாவளிப் பண்டிகையில் பிற உயிர்களைப் பாதுகாத்து மரம் செயி கொடிகளை நட்டு, பசுமை தீபாவளியைக் கொண்டாடுவோம் என்று அவர் எழுதுவதுடன் பட்டாசு வெடிப்பதால் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னா பின்னமாகி விடும். நீர் நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படும். நச்சுக்கள் நீரில் கலந்து நிலத்தடி நீர் மாறுபடும். பட்டாசுக் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மக்கும் குப்பையைக் கூட மக்க வைக்க முடியாத அளவுக்கு மண் மலடாகிறது. பட்டாசுப் புகையால் பறக்கும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. அதன் கரு கலைகின்றன. பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை. காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை. ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை. ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை. நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை. வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை. உணவு இல்லையேல் மனிதன் இல்லை என்று எழுதியுள்ளார்.
பறவைகள் அழிந்தால் உலகமும் அழியத் துவங்கும்
عَنْ جَابِر قَالَ : قَلَّ الْجَرَاد فِي سَنَة مِنْ سِنِي عُمَر الَّتِي وُلِّيَ فِيهَا فَسَأَلَ عَنْهُ فَلَمْ يُخْبَر بِشَيْءٍ فَاغْتَمَّ لِذَلِكَ فَأَرْسَلَ رَاكِبًا يَضْرِب إِلَى الْيَمَن وَآخَر إِلَى الشَّام وَآخَر إِلَى الْعِرَاق يَسْأَل هَلْ رُئِيَ مِنْ الْجَرَاد شَيْء أَمْ لَا قَالَ فَأَتَاهُ الرَّاكِب الَّذِي مِنْ قِبَل الْيَمَن بِقَبْضَةٍ مِنْ جَرَاد فَأَلْقَاهَا بَيْن يَدَيْهِ فَلَمَّا رَآهَا كَبَّرَ ثُمَّ قَالَ سَمِعْت رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول" خَلَقَ اللَّه أَلْفَ أُمَّة سِتُّمِائَةٍ فِي الْبَحْرِ وَأَرْبَعُمِائَةٍ فِي الْبَرِّ فَأَوَّل شَيْء يَهْلِك مِنْ هَذِهِ الْأُمَم الْجَرَاد فَإِذَا هَلَكَ تَتَابَعَتْ مِثْل النِّظَام إِذَا قُطِعَ سِلْكه "(تفسير ابن كثير)
உமர் ரழி அவர்களின் காலத்தில் வெட்டுக்கிளிகள் மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டு உமர் ரழி அதைப் பற்றி விசாரித்தார்கள். எந்த பதிலும் கிடைக்காத தால் கவலைப் பட்ட உமர் ரழி நாட்டின் பல பாகங்களுக்கும் அதிகாரிகளை அனுப்பி வெட்டுக் கிளிகள் கிடைக்கிறதா என்று தேடி அனுப்பினார்கள். தற்கு முக்கியத்துவம் கொடுத்து யமனுக்கு அனுப்ப ப்பட்ட அதிகாரி வெட்டுக்கிளிகளுடன் வந்து அவற்றை உமர் ரழி அவர்களின் முன்னிலையில் போட்ட போது அவற்றைக் கண்டு அல்லாஹு அக்பர் கூறிய பின்பு, நான் நபி ஸல் அவர்கள் கூற கேள்விப்பட்டுள்ளேன். அல்லாஹ் ஆயிரம் உயிரினங்களைப் படைத்துள்ளான் அவற்றில் 600 கடலில் வசிப்பவை. 400 தரையில் வசிப்பவை. தரையில் வசிக்கும் உயிரினங்களில் முதலில் அழியும் உயிரினம் இந்த வெட்டுக்கிளி தான். இது அழிந்து விட்டால் தொடர்ச்சியாக மற்ற உயிரினங்களும் அழிந்து கொண்டே வரும். எப்படி பாசி மாலை அறுந்து விழுந்தால் தொடர்ச்சியாக அதன் பாசிகள் கீழே விழுமோ அது போல என நபி ஸல் கூறினார்கள். எனவே வெட்டுக்கிளிகள் இல்லையென்றவுடன் கியாமத் வந்து நெருங்கி விட்டதோ என்ற அச்சம் எனக்குள் ஏற்பட்டு விட்டது என்ற கருத்தில் உமர் ரழி இவ்வாறு கூறினார்கள்.
இன்று வெட்டுக் கிளிகள் என்பது இக்காலத்தில் நாம் பார்க்கும் சிறிய வெட்டுக்கிளிகள் அல்ல. அக்காலத்தில் உணவாகப் பயன்படுத்தும் அளவுக்கு பெரிதாக இருந்துள்ளது. அத்தகைய வெட்டுக் கிளிகள் இன்று இல்லை.