வியாழன், 26 டிசம்பர், 2024

தடுக்கப்பட்ட கொண்டாட்டங்கள்

 


جمادي الثانية –24 بسم الله الرحمن الرحيم  

தடுக்கப்பட்ட கொண்டாட்டங்கள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

  மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு  இஸ்லாமிய நாடுகளும் இன்றைக்கு  அடிமையாகி விட்டன. கடைசி காலத்தில் அரபுலகில் என்னென்ன அனாச்சாரங்கள் உருவாகும் என நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அவை இன்று இஸ்லாமிய நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. கட்டுக் கதைகளான மாகபாரதம், இராமாயணம் ஆகியவற்றை அரபியில் மொழி பெயர்த்து அதை இந்தியப் பிரதமருக்கு அன்பளிப்பாக தரும் அளவுக்கு அது உச்ச கட்டம் அடைந்துள்ளது. மேலும் சமீபத்தில் மவ்ஸமுர் ரியாத் என்ற பெயரில் சவூதியின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சி உண்மையான முஃமின்களின் உள்ளத்தில் மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மின் விளக்குகளால் கஃபா போன்று அமைக்கப்பட்ட அதைச் சுற்றி அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனமாடும் அசிங்கம் புனித மண்ணில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய உலகின் முன்னோடியாக இருக்க வேண்டிய சவூதி  இன்று தலைகீழாக மாறி ஹராமான கொண்டாட்டங்களின் புகலிடமாக மாறியுள்ளது. அதைப் பற்றிப் பேசும் முன்பு ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் தீமைகளைப் பற்றிக் காண்போம்.

ஆங்கிலப் புத்தாண்டை ஏன் நாம் கொண்டாடுவது கூடாது.

  ஆங்கிலப் புத்தாண்டை கிறிஸ்தவர்களும் ஏனைய சமூக மக்களும் கொண்டாடுகின்றனர் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் முஸ்லிம்களும் அதைக் கொண்டாடுவது தான் வேதனையான விஷயம்.

 புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பம் என்பது அதாவது காலங்கள் கடந்து கொண்டிருப்பது கவலையான விஷயமே தவிர மகிழ்ச்சியான விஷயம் அல்ல. காரணம் வாழ்க்கை எனும் பயணம் உண்மையில் மரணத்தை நோக்கிய பயணமாகும்.  ஒருவரின் 80 வருட வாழ்க்கையில் 20 வயது முடிந்து 21 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 60 வருடம் தான். அதேபோல் 30 வயது முடிந்து 31 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 50 வருடம் தான். அதேபோல் 70 வயது முடிந்து 71 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 10 வருடம் தான். ஆகவே ஒருவரின் ஆயுள் குறைந்து கொண்டேயிருப்பதை என் ஆயுள் குறைந்து விட்டது என இனிப்பு வழங்கி கொண்டாடுவதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. இது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும். அதே நேரத்தில் இதுபோன்ற புத்தாண்டு தினங்களில் ஒரு முஸ்லிம் இத்தனை வருடங்களை கடந்து விட்டோம். இனி மீதமுள்ள என் வாழ்நாளில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக வாழ வேண்டும் என்று எண்ணி, நல்ல நடைமுறைகளைத் துவங்குவதற்கான கணக்காக இந்த நாட்களை ஆக்கிக் கொள்வதிலும், அதை செயல்படுத்தத் துவங்குவதிலும் தவறில்லை.                                                                 

வாழ்க்கை என்பது மவ்த்தை நோக்கிய ஒரு பயணம்

  ஷைத்தான்,  நஃப்ஸ், நண்பன் இப்படியாக பலரும் நம்மை அழைக்கும்போது கண்ட கண்ட வாகனத்தில் ஏறினால் நாம் போய்ச் சேருமிடம் நரகமாகி விடலாம். மற்றொரு புறம் குர்ஆனும் நம்மை அழைக்கும். அதன் வழியில் சென்றால் சுவனம். 

ஒரு பேருந்து நிலையத்தில் நிற்கும்போது தமது பஸ்ஸில் ஏறும்படி பலரும் கூவிக்கூவி நம்மை அழைத்தாலும் நாம் நிதானமாக யோசித்து எந்தப் பேருந்து பாதுகாப்பாகவும், விரைவாகவும் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என தேர்ந்தெடுக்கிறோம். வாழ்க்கைப் பயணம் என்பது அதை விட மிக முக்கியமானது 

عن إبراهيم بن أدهم أنه كان يسير إلى بيت الله ، فإذا أعرابي على ناقة له فقال : يا شيخ إلى أين ؟فقال إبراهيم إلى بيت الله ، قال كأنك مجنون لا أرى لك مركباً ؛ ولا زاداً ، والسفر طويل ، فقال إبراهيم : إن لي مراكب كثيرة ولكنك لا تراها ، قال : وما هي ؟قال : إذا نزلت على بلية ركبت مركب الصبر ، وإذا نزل على نعمة ركبت مركب الشكر وإذا نزل بي القضاء ركبت مركب الرضا ، وإذا دعتني النفس إلى شيء علمت أن ما بقي من العمر أقل مما مضى فقال الأعرابي : سر بإذن الله فأنت الراكب وأنا الراجل.( تفسير الرازي

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் ஒருமுறை நடந்தே ஹஜ்ஜுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் வாகனத்தில் இவரைக் கடந்து சென்ற  ஒருவர் “ இப்றாஹீமே எங்கு செல்கிறீர்?  எனக்கேட்க, நான் கஃபாவை நோக்கிச் செல்கிறேன் என்று கூறிய போது உடனே அவர் “ உங்களிடம் எந்த வாகனமும், உணவும் இல்லாத நிலையில் நீண்ட தொலைவில் உள்ள கஃபாவுக்குச் செல்வதாக கூறுகிறீர் உமக்கென்ன பைத்தியமா?  என்றார். அதற்கு  இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் “உம்மால் பார்க்க இயலாத எத்தனையோ வாகனங்கள் என்னிடம் உள்ளன. அதில் நான் பயணம் செய்கிறேன். எனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் பொறுமை எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். எனக்கு ஏதேனும் அல்லாஹ்வின் உபகாரம் கிடைத்தால் நன்றி செலுத்துதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன்.  நான் துஆ கேட்ட பின்பும் அல்லாஹ்வின் விதியின் படி நான் விரும்பாதது நடைபெற்றால் விதியைப் பொருந்திக் கொள்ளுதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என்னுடைய நஃப்ஸு ஏதேனும் தீமையை எனக்குத் தூண்டினால் நான் வாழ்ந்த காலங்களை விட நான் வாழப்போகும் காலங்கள் குறைவு என்று எண்ணும்அந்த வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என சொல்லிக் கொண்டேயிருக்க உடனே அந்த மனிதர் பதில் சொல்ல முடியாமல் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நீங்கள் தான் உண்மையிலேயே வாகனத்தில் செல்பவர் நான் நடந்து செல்பவன் என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்று விட்டார்.                                                         





மற்றவர்களின் கலாச்சாரத்தை நாம் முடிந்த வரை தடுக்க வேண்டும். 

அல்லது வெறுக்க வேண்டும். அவர்களுடன் ஐக்கியமாகி விடக்கூடாது.

عن ابن مسعودٍ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أول ما دخل النقص على بني إسرائيل أنه كان الرجل يلقى الرجل فيقول: يا هذا اِتّقِ الله ودَعْ ما تصنع فإنه لا يحل لك، ثم يلقاه من الغد وهو على حاله، فلا يمنعه ذلك أن يكون أكيله وشريبه وقعيده، فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعضٍ ثم قال: " لُعِنَ الَّذينَ كَفَرُوا مِنْ بَنِي إسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاودَ وعِيسَى ابْنِ مَرْيَمَ ذلكَ بِمَا عَصَوْا وكَانُوا يَعْتَدُونَ. كَانُوا لا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ. تَرَى كَثِيراً مِنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذينَ كَفَرُوا لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ " إلى قوله: " فَاسِقُونَ " المائدة: 78، 81 ثم قال: كلا، والله لتأمرن بالمعروف، ولتنهون عن المنكر، ولتأخذن على يد الظالم، ولتأطرنه على الحق أطراً، ولتقصرن على الحق قصراً، أو ليضربن الله بقلوب بعضكم على بعضٍ، ثم لَيَلْعَنَنَّكم كما لعنهم رواه أبو داود، 

   பனீ இஸ்ராயீல் சமூகத்துக்கு பிரச்சினை எங்கிருந்து துவங்கியது என்றால் அவர்களில் சில நல்லவர்கள் இருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களின் நிலையாகிறது அவர்கள் தவறு செய்பவர்களைக் கண்டால் இறைவனுக்கு பயந்து இதை விட்டு விடு என உபதேசம் செய்வார்கள். அடுத்த நாள் காணும்போது அவர் அதே தவறை செய்து கொண்டிருப்பதை இந்த நல்லவர் காண்பார். நாட்கள் செல்லச் செல்ல தவறு செய்பவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள். இன்னும் சில நாட்களில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவும் உண்ண ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் தவறு செய்யா விட்டாலும் தவறு செய்பவர்களைக் கண்டு எந்த வெறுப்பும் வராத நிலை ஏற்பட்டு விட்டதால் அல்லாஹ் இவர்களின் உள்ளங்களையும் தவறை செய்பவர்களின் உள்ளங்களைப் போன்று ஆக்கி அனைவரையும் சாபத்திற்கு உள்ளானவர்களாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.    

عن جابر رضي الله عنه  قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ: فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ "(شعب الايمان

முற்காலத்தில் அல்லாஹ் பாவிகள் நிறைந்த ஒரு நகரத்தை தலைகீழாக புரட்டி அழிக்கும்படி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் உத்தரவிட்டான். அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ரப்பே இந்நகரில் ஒரு நல்ல மனிதர் இருக்கிறார். அவர் கண் சிமிட்டும் நேரம் கூட உனக்கு மாறு செய்ததில்லை என்று கூற,அதற்கு அல்லாஹ் அவரையும் சேர்த்தே அழித்து விடுங்கள். காரணம் அவர்கள் பாவங்கள் செய்ததை இவர் கண்டும் இவரின் முகத்தில் வெறுப்பின் அடையாளம் ஏற்படவில்லை என்று கூறினான்.                                                                     

புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவில் மூழ்கும் முஸ்லிம் இளைஞர்கள்

புத்தாண்டு என்றாலே  மதுவை ஞாபகப்படுத்தும் அளவுக்கு வருடத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மது விற்பனை அதிகம் நடைபெறும் நாள் ஜனவரி 1 ம் தேதி  ஆகும்.  மேலும் இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில் அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிமான போதை இளைஞர்கள் தான்.  

மக்களிடம் பகைமையை உண்டாக்கி, இறைவனின் நினைவைத் தடுக்க ஷைத்தான் அறிமுகப்படுத்தியது மதுவும், சூதாட்டமும் 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91)المائدة

மதுவைத் தடை செய்த பின் அதன் ஞாபகமும் வரக்கூடாது என மது ஊற்றப் பயன்படும் பாத்திரத்தை நபி ஸல் தடை செய்தார்கள்

عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا (مسلم)

அபூக்கர் ரழி அவர்கள் அறியாமைக் காலத்திலும் மதுவைத் தொட்டதில்லை. அதற்கான காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது

عن أبي العالية الرياحي قال : قيل لأبي بكر الصديق في مجمع من أصحاب رسول الله صلى الله عليه و سلم : هل شربت الخمر في الجاهلية ؟ فقال : أعوذ بالله فقيل : و لم ؟ قال : كنت أصون عرضي و أحفظ مروءتي فإن من شرب الخمر كان مضيعا في عرضه و مروءته قال : فبلغ ذلك رسول الله صلى الله عليه و سلم فقال : صدق أبو بكر صدق أبو بكر مرتين ( تاريخ الخلفاء

அபூபக்கர் ரழி கூறினார்கள்- நான் என் மனித த்தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மதுவை அருந்துபவர் மனிதத் தன்மையை இழந்து விடுகிறான் என்றார்கள்.  அபூபக்கர் ரழி இவ்வாறு கூறினார்கள் என்ற விஷயத்தை நபி ஸல் அவர்களிடம்  எடுத்துக் கூறப்பட்ட போது  அபூபக்கர் ரழி கூறியது  உண்மை தான் என்று இரண்டு  தடவை கூறினார்கள்.                  

 ஹழ்ரத் அபூபக்கர் ரழி கூறியதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். வக்கிர புத்தியும் வன்முறை குணமும் குடிகாரனுக்கு ஏற்பட்டு விடுகிறது. மஹ்ரமான பெண்களிடம் கூட தவறாக நடந்து கொள்வார்கள்.                                 

ஒருமுறை மட்டும் ருசித்துப் பார்க்கலாம் என நினைப்பவர் காலம் முழுவதும் அதற்கு அடிமையாகி விடுவார்

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)                                                      

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.  இதைக் கண்ட     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம்     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது

மதுவுக்கு அடிமையானவன் சிலை வணக்கம் செய்தவனைப் போன்று அல்லாஹ்வை சந்திப்பான் 

عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدْمِنُ الْخَمْرِ كَعَابِدِ وَثَنٍ (ابن ماجة-  عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "من لقي الله مدمن خمر, لقيه كعابد وثن" (صحيح ابن حبان).

மது அருந்திய நிலையில் இருப்பவனிடம் ஈமான் இருக்காது. அதே நிலையில் இறந்து விட்டால்...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ (بخاري

மதுவில் சில நிவாரணங்கள் இருக்கிறதே என்று பலமுறை கேள்வி எழுப்பியவர்களிடம் நபி ஸல் கூறிய ஒரே பதில் அது நோயை உண்டாக்குமே தவிர நோயை குணப்படுத்தாது என்பதாகும். இன்றும் மது அருந்துவர்கள் பல காரணங்கள் சொல்லி நியாயப்படுத்துவார்கள்.

عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ ذَكَرَ طَارِقُ بْنُ سُوَيْدٍ أَوْ سُوَيْدُ بْنُ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَمْرِ فَنَهَاهُ ثُمَّ سَأَلَهُ فَنَهَاهُ فَقَالَ لَهُ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهَا دَوَاءٌ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا وَلَكِنَّهَا دَاءٌ (ترمذي

போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

‘அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக்கியவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை’ (புகாரி)

அரபு நாடுகளும் இன்று பல்வேறு விதமான அனாச்சாரங்களிலும் கொண்டாட்டங்களிலும் மூழ்கியுள்ளன.  

அரபு நாடுகளிலேயே அவ்வாறு நடைபெறுகிறது என்று கூறி யாரும் அதை நியாயப் படுத்த முடியாது. காரணம் நமக்கு நபி ஸல் அவர்கள் தான் முன்மாதிரியே தவிர அரபு நாடுகள் நமக்கு முன்மாதிரி அல்ல.

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ (بخاري)

யூத, கிறிஸ்தவ (மேற்கத்தியர்களின்) கலாச்சாரத்தை ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக நீங்கள் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் புகுந்தாலும் நீங்களும் புகுந்து விடூவீர்கள் – புகாரீ

قال النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ..(بخاري

என் உம்மத்தில் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் அல்லாஹ் ஹராமாக்கிய விபச்சாரத்தையும், பட்டாடையையும், மதுவையும், இசைக்கருவிகளையும் ஹலாலாக்கி விடுவார்கள்  - நூல் புகாரீ 

விளக்கம் – மேற்படி ஹதீஸ்களின் படி பல முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் மீறப்படுகின்றன. இன்னும் சொல்வதானால் இந்திய முஸ்லிம்களிடம் இருக்கும் பேணுதல் கூட சில முஸ்லிம் நாடுகளில் உள்ள பலரிடம் இல்லை என்பதே உண்மையாகும். குறிப்பாக சவூதியில்  தற்போதைய மன்னர் சல்மான் ஏற்படுத்திய  ‘வி‌ஷன் 2030’ என்ற மறுசீரமைப்பு திட்டத்தின் படி பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கணவரின் அனுமதி  தேவையில்லை என்ற சட்டமும்  இயற்றப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக சமீபத்தில் மவ்ஸமுர் ரியாத் என்ற பெயரில் சவூதியின் தலைநகர் ரியாத்தில்  நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி உண்மையான முஃமின்களின் உள்ளத்தில் மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி விஷயங்களை எதிர்த்த பல வயதான உலமாக்கள் கூட சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் சிலருக்கு தூக்கு தண்டனை கிடைக்கலாம் ன்றும் கூறப்படுகிறது. இப்படியாக மெல்ல மெல்ல ஷரீஅத் சட்டங்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன . இதுபோன்று வேறு சில அரபு நாடுகளிலும் மெல்ல மெல்ல ஷிர்க் நுழைந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அபுதாபியில் ஒரு கோவிலை நமது பிரதமர் சென்று திறந்து வைத்தது பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரபலமான விஷயம். மாகபாரதம், இராமாயணம் ஆகியவற்றை அரபியில் மொழி பெயர்த்து அதை இந்தியப் பிரதமருக்கு அன்பளிப்பாக தந்தது சமீபத்தில் நடைபெற்ற விஷயம்.

  ‘நடுநிலை இஸ்லாத்தை அறிமுகம் செய்யப்போகிறோம்’‘ முழு உலகுடனும் உறவாடும் திறந்த சமூகமாக சவூதி அரேபியாவை மாற்றப்போகிறோம்’ என்பதெல்லாம் தற்போது சவூதி அரசாங்கம் அறிவிக்கும் வாசகங்களாகும். இதன் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான இமாம்கள் மஸ்ஜித்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தங்களின் கருத்துக்களை ஏற்பவர்கள் மட்டுமே பணியில் தக்க வைக்கப்படுகின்றனர். சமீபத்தில் அங்குள்ள ஒரு இமாம் பெண்கள் புர்கா அணிய வேண்டிய அவசியமில்லை என்று கூறியதே இதற்கு சான்றாகும். முற்கால மாமேதைகள் ஆய்வு செய்தஹதீஸ்களை மறு ஆய்வு செய்யும் நோக்கில்  ‘மன்னர் ஸல்மான் ஹதீஸ் கலை ஆய்வகம் திறக்கப்படும்’ என்று சவூதி அறிவித்துள்ளது. ஹதீஸ்களுக்கு நம் முன்னோர்கள் சொன்ன விளக்கங்கள் சரியில்லை என்பதும் நாங்கள் புதிதாக ஆய்வு செய்வோம் என்பதும் இதன் கருத்தாகும். 

அரபுலகிலும் சிலை வணக்கம் தலை தூக்கும் என அன்றே நபி ஸல் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்

عَنْ الزُّهْرِيِّ قَالَ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ (بخاري

'தவ்ஸ்' இனப் பெண்களின் புட்டங்கள், 'துல்கலஸா கடவுள் சிலைகயைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் 'தவ்ஸ்' இன மக்கள் வழிபட்டு வந்த நிலையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் - புகாரீ 7116). 

விளக்கம்-அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த 'தவ்ஸ்' குலத்தைச் சேர்ந்தவர்களே.இக்குலத்தினர் கடைசி காலத்தில்  இஸ்லாத்தைக் கைவிட்டு இறைமறுப்புக்குத் திரும்பிவிடுவர். ஒழிக்கப்பட்ட 'துல்கலஸா' சிலை வழிபாடு மீண்டும் தலைதூக்கும். அக்குலப் பெண்கள் போட்டியிட்டுக் கொண்டு நெரிசலில் அந்தச் சிலையைச் சுற்றிச் சுற்றி வருவர். நிலைமை இவ்வளவு தூரம் மோசமாகும் அளவுக்கு மார்க்கம் ஆதரவற்றுப் போய்விடும். அதன் பின்னரே உலக அழிவுநாள் வரும். (ஃபத்ஹுல் பாரீ).

அரபுலகிலும் சிலை வணக்கம் தலை தூக்கும் என்பதைப் பற்றிய மற்றொரு முன்னறிவிப்பு

عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ زُوِيَتْ لِي الْأَرْضُ حَتَّى رَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَصْفَرَ أَوْ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ يَعْنِي الذَّهَبَ وَالْفِضَّةَ وَقِيلَ لِي إِنَّ مُلْكَكَ إِلَى حَيْثُ زُوِيَ لَكَ وَإِنِّي سَأَلْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ ثَلَاثًا أَنْ لَا يُسَلِّطَ عَلَى أُمَّتِي جُوعًا فَيُهْلِكَهُمْ بِهِ عَامَّةً وَأَنْ لَا يَلْبِسَهُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَهُمْ بَأْسَ بَعْضٍ وَإِنَّهُ قِيلَ لِي إِذَا قَضَيْتُ قَضَاءً فَلَا مَرَدَّ لَهُ وَإِنِّي لَنْ أُسَلِّطَ عَلَى أُمَّتِكَ جُوعًا فَيُهْلِكَهُمْ فِيهِ وَلَنْ أَجْمَعَ عَلَيْهِمْ مِنْ بَيْنَ أَقْطَارِهَا حَتَّى يُفْنِيَ بَعْضُهُمْ بَعْضًا وَيَقْتُلَ بَعْضُهُمْ بَعْضًا وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي فَلَنْ يُرْفَعَ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنَّ مِمَّا أَتَخَوَّفُ عَلَى أُمَّتِي أَئِمَّةً مُضِلِّينَ وَسَتَعْبُدُ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ وَسَتَلْحَقُ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ (ابن ماجة) 

மேற்படி கால கட்டத்தில்  புனித கஃபாவையே இடித்து தகர்க்கும் அளவுக்கு  நிலைமை மோசமாகி விடும்

عَنْ أَبِى أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ اتْرُكُوا الْحَبَشَةَ مَا تَرَكُوكُمْ فَإِنَّهُ لاَ يَسْتَخْرِجُ كَنْزَ الْكَعْبَةِ إِلاَّ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ (بخاري)عن ابْن عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ أَسْوَدَ أَفْحَجَ يَنْقُضُهَا حَجَرًا حَجَرًا يَعْنِي الْكَعْبَةَ (مسند أحمد)الأفحج : الذى إذا مشى باعد بين رجليه

கஃபாவின் ஒவ்வொரு செங்கலையும் அவர்கள் பெயர்த்து எடுப்பதை நான் இப்போதே கண்ணால் பார்ப்பது போன்றிருக்கிறது என  கவலையுடன் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.இத்தகைய மோசமாக காலத்தில் அல்லாஹ் நல்லவர்களின் ரூஹை மிக மிக இலகுவாக அல்லாஹ் கைப்பற்றுவான். அதன் பின் கெட்டவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது தான் உலகம் அழியும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدَأَ الْإِسْلَامُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ (مسلم)عَنْ ابْنِ عُمَرَرضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ غَرِيبًا كَمَا بَدَأَ وَهُوَ يَأْرِزُ بَيْنَ الْمَسْجِدَيْنِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ فِي جُحْرِهَا (مسلم) بَاب بَيَانِ أَنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا-كِتَاب الْإِيمَانِ قال النووي : قال القاضي عياض : وظاهر الحديث العموم وأن الإسلام بدأ في آحاد من الناس وقلة ثم انتشر وظهر ثم سيلحقه النقص والإخلال حتى لا يبقى إلا في آحاد وقله أيضا كما بدأ 

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் இஸ்லாம் என்பது குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களில் இருந்தே துவங்கியது. மீண்டும் அவ்வாறே திரும்பும். நூல் முஸ்லிம்  

    மேற்படி ஹதீஸின் படி அரபகத்து மண்ணில் மிகக் குறைந்த நபர்களைக் கொண்டு துவங்கிய இந்த இஸ்லாம் இன்று 170 கோடியை தொட்டுள்ளது. இனியும் இன்ஷா அல்லாஹ் அதிகமாகும். பிரபலமான ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தற்போது உலகின் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக இருக்கிற முஸ்லிம்கள் வருகிற 2050 ம் ஆண்டில் உலகின் முதன்மை சமூகமாக இருக்கும். அந்த அளவுக்கு மிக வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. இது ஒரு புறம் இருப்பினும் இதற்குப் பின் கடைசியில் ஒரு காலம் வரும் அது ஈஸா அலை அவர்களின் வருகை, மற்றும் அவர்களின் மரணத்திற்குப் பின்னுள்ள காலமாக இருக்கலாம். அப்போது இஸ்லாம் மீண்டும் குறைவை நோக்கி செல்லும் இறுதியில் அல்லாஹ் என்று கூற ஒருவர் கூட இல்லாத நிலையில் கியாமத் ஏற்படும்.

வியாழன், 19 டிசம்பர், 2024

நான்கு நற்பாக்கியங்கள்

 20-12-2024

جمادي الثاني     17 بسم الله الرحمن الرحيم  

நான்கு நற்பாக்கியங்கள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

நான்கு விஷயங்கள் யாருக்கு நல்லதாக அமையுமோ அவர் பாக்கியசாலி என நபி ஸல் கூறினார்கள் 1. நல்ல மனைவி 2.நெருக்கடியில்லாத வீடு. 3. சிறந்த அண்டை வீட்டார். 4. விபத்தை ஏற்படுத்தாத நல்ல வாகனம். இவற்றை விரிவாக காண்போம் 

عن مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِى وَقَّاصٍ ، عَنْ أَبِيهِ ،رضي الله عنه  قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَرْبَعٌ مِنَ اَلسعَادَةِ : الْمَرْأَةُ الصَّالِحَةُ ، وَالْمَسْكَنُ ألوَاسِعُ ، وَاَلجَارُ الصَّالِحُ ، وَالْمَرْكَبُ اَلهَنِيءُ ، (مسند الجامع)

1. நல்ல மனைவி அமைவது பெரும் பாக்கியமாகும்

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (21) الروم

فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ (34) سورة النساء

மேற்படி வசனத்தில் மனைவி என்பவள் வீட்டைப் பாதுகாப்பவள் என்பதற்குத் தகுந்த மாதிரி தமிழில் கணவன், மனைவி என்ற வார்த்தைகள் அதே மாதிரி அமைக்கப்பட்டுள்ளன. கணவன் என்பது கண்- அவன் என்ற வார்த்தையில் இருந்து மருவி கணவன் என்று மாறியதாகும் என தமிழ் அறிஞர்கள் கூறுவர். அதாவது  ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை  கண்ணைப் போல் கருத வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு அந்த வார்த்தைகள் உருவானது என்பார்கள். அதுபோல மனைவி என்பது மனை- அவி  என்ற இரு  வார்த்தைகளில் இருந்து மருவியது என தமிழ் அறிஞர்கள் கூறுவர். மனை என்றால் வீடு என்று பொருள். அவி என்றால் வேலி என்று பொருள். வீட்டுக்கு வேலியாக இருந்து வீட்டைப் பாதுகாப்பவள் என்ற பொருளில் அவ்வாறு பெயர் வைக்கப்பட்டுள்ளது. குர்ஆன் கூறும் வார்த்தைகள் பெயராக உள்ளன.   

அதுபோல் நாத்தனார் என்பதும் நாவுக்குத் துணையார் என்ற பொருளில் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக வரும் மனைவியுடன் கணவனின் சகோதரியான நாத்தனார் நாவுக்குத் துணையாக என்பதே இதன் நோக்கமாகும்.  

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ (مسلم)

عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ ( ابن ماجة)

கணவனின் சூழ்நிலையை அனுசரித்து வாழ்ந்த மனைவிக்கு சில  எடுத்துக்காட்டுகள்

وكان الامام  أحمد بن  حنبل رحمة الله عليه  يثني  علي زوجها  وماتت  وهو حيٌّ  فيقول  أقامت  امّ  صالح  معي  ثلاثين سنة  فما  اختلفت  انا  وهي  في كلمة  (طبقات الحنابلة)

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்களின் மனைவி உம்மு ஸாலிஹ் அவர்கள் இறந்த போது இமாம் அவர்கள் மிகவும் அழுதார்கள். பிறகு கூறினார்கள். நான் என் மனைவி உம்மு ஸாலிஹுடன் 30 வருடம் குடும்பம் நடத்தியுள்ளேன். ஒரு தடவை கூட எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்ததில்லை.                                       

عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ تَزَوَّجَنِي الزُّبَيْرُ وَمَا لَهُ فِي الْأَرْضِ مِنْ مَالٍ وَلَا مَمْلُوكٍ وَلَا شَيْءٍ غَيْرَ نَاضِحٍ وَغَيْرَ فَرَسِهِ فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَسْتَقِي الْمَاءَ وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِزُ وَكَانَ يَخْبِزُ جَارَاتٌ لِي مِنْ الْأَنْصَارِ وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ وَكُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِي وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ فَرْسَخٍ فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي فَلَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ نَفَرٌ مِنْ الْأَنْصَارِ فَدَعَانِي ثُمَّ قَالَ إِخْ إِخْ لِيَحْمِلَنِي خَلْفَهُ فَاسْتَحْيَيْتُ أَنْ أَسِيرَ مَعَ الرِّجَالِ وَذَكَرْتُ الزُّبَيْرَ وَغَيْرَتَهُ وَكَانَ أَغْيَرَ النَّاسِ فَعَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي قَدْ اسْتَحْيَيْتُ فَمَضَى فَجِئْتُ الزُّبَيْرَ فَقُلْتُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى رَأْسِي النَّوَى وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ فَأَنَاخَ لِأَرْكَبَ فَاسْتَحْيَيْتُ مِنْهُ وَعَرَفْتُ غَيْرَتَكَ فَقَالَ وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى كَانَ أَشَدَّ عَلَيَّ مِنْ رُكُوبِكِ مَعَهُ قَالَتْ حَتَّى أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ بَعْدَ ذَلِكَ بِخَادِمٍ تَكْفِينِي سِيَاسَةَ الْفَرَسِ فَكَأَنَّمَا أَعْتَقَنِي (بخاري

அஸ்மா பின்த் அபீபக்கர் ரழி அவர்கள்

2. சிறந்த வீடு அமைவதும்  பாக்கியமாகும்

 விசாலமான வீடு அமைய நபி ஸல் அவர்கள் கற்றுத் தந்த துஆ (உளூவின் நடுவில் ஓதும் துஆ)

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قال أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُ دُعَاءَكَ اللَّيْلَةَ فَكَانَ الَّذِي وَصَلَ إِلَيَّ مِنْهُ أَنَّكَ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي قَالَ فَهَلْ تَرَاهُنَّ تَرَكْنَ شَيْئًا (ترمذي)

  ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இரவில் ஒரு துஆவை ஓதினீர்களே என்று மேற்படி துஆவை சுட்டிக் காட்டினார். மற்றொரு அறிவிப்பில் உளூச் செய்யும்போது நபி ஸல் இதை ஓதினார்கள் என்றும் அதைப் பற்றி அவர் கேட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு நபி ஸல் அவர்கள் நான் அந்த துஆவில் கேட்க வேண்டிய எதையும் விட்டு விட்டதாக நீர் காண்கிறீரா என்று கேட்டார்கள்.                                                          

நெருக்கடி இல்லாத விசாலமான வீட்டைத் தா என்ற மேற்படி துஆவுக்கு இரண்டு விதமான விளக்கங்கள்...

(ووسع لي في داري) محل سكني في الدنيا لأن ضيق مرافق الدار يضيق الصدر ويشتت الأمتعة ويجلب الهم ويشغل البال أو المراد القبر : إذ هو الدار الحقيقية ،(فيض القدير)

இந்த உலகில் நாம் வாழும் வீடு என்றும் கப்ரு என்றும் இரு விதமான விளக்கங்கள் உண்டு. யாருக்கு ஏற்கெனவே விசாலமான வீடு ஏற்கெனவே உள்ளதோ அவரைப் பொருத்த வரை இந்த துஆ கப்ரு விசாலமாகுவதை எடுத்துக் கொள்ளும். மற்றவர்களைப் பொறுத்த வரை கப்ரு விசாலமாகுதல் வீடு விசாலமாக இருக்குதல் என்ற இரண்டையும் எடுத்துக் கொள்ளும்.                             

என்ன தான் வெளியில் பல சவுகரியங்கள் இருந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் கிடைக்கும் நிம்மதி.. 

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ..(80)النحل

பல்வேறு அலுவல்களுக்காக வெளியே செல்லும் ஆண்களுக்கு வீட்டுக்கு வந்தால் ஒரு நிம்மதி ஏற்படுவது இயல்பு. சில நேரம் வீட்டிலுள்ளவர்களுடைய தீயகுணத்தால் நிம்மதி இல்லாமல் போகலாம். அதற்கு இவ்வசனம் முரணல்ல.

ஹராமான சம்பாத்தியத்தில் வீடு கட்டினால் அதனால் நிம்மதி இல்லாமல் போகலாம்

عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اتَّقُوا الْحَرَامَ فِي الْبُنْيَانِ فَإِنَّهُ أَسَاسُ الْخَرَابِ(شعب الايمان)أي لخراب الدين أو البنيان

வீடு கட்டுவதில் ஹராமை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அழிவுக்கான அஸ்திவாரமாகும்.

ஒவ்வொரு முஃமினும் சொந்த வீட்டுக்கு முயற்சி செய்ய வேண்டும்.

 ஒரு காலத்தில் பொருளாதாரத்திலும் இன்ன பிற துறைகளிலும் முதலிடத்தில் இருந்த முஸ்லிம் சமூகம் இன்று பல வகையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமையில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. பல நகரங்களில் தலித்துகளின் வருமானத்தை விட முஸ்லிம்களின் வருமானம் குறைவாக உள்ளது. பல ஊர்களில் சொந்த வீட்டில் வசித்த முஸ்லிம்கள் அந்த வீடுகளை மாற்றார்களுக்கு விற்று விட்டு வாடகை வீட்டில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சோம்பேறித்தனம்.        

சோம்பேறித்தனத்தை விட்டும் நபி ஸல் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்

عَنْ أَنَسِ رَضِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي طَلْحَةَ الْتَمِسْ غُلَامًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي حَتَّى أَخْرُجَ إِلَى خَيْبَرَ فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ مُرْدِفِي وَأَنَا غُلَامٌ رَاهَقْتُ الْحُلُمَ فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ فَكُنْتُ أَسْمَعُهُ كَثِيرًا يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ1 وَالْحَزَنِ2 وَالْعَجْزِ3 وَالْكَسَلِ4 وَالْبُخْلِ5 وَالْجُبْنِ6 وَضَلَعِ الدَّيْنِ7 وَغَلَبَةِ الرِّجَالِ8...(بخاري) باب مَنْ غَزَا بِصَبِىٍّ لِلْخِدْمَةِ-كتاب الجهاد

1.நடந்ததை எண்ணி கவலைப்படுவது 2.நடைபெறப் போவதை எண்ணி கவலைப்படுவது 3.இயலாமை உடல் பலவீனம் 4.சோம்பேறித்தனம் 5.கஞ்சத்தனம் 6.வீரமற்ற கோழைதத்தனம் 7.கடன் இரட்டிப்பாகுதல் 8.கடன்காரர்களின் அல்லது அநியாயக்காரர்களின் அடக்கு முறை

சோம்பேறித்தனம் மனிதனை நரகத்தின் பால் கொண்டு செல்லும்

 عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ ذَاتَ يَوْمٍ فِى خُطْبَتِهِ ....... - وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِى لاَ زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لاَ يَتْبَعُونَ أَهْلاً وَلاَ مَالاً وَالْخَائِنُ الَّذِى لاَ يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلاَّ خَانَهُ وَرَجُلٌ لاَ يُصْبِحُ وَلاَ يُمْسِى إِلاَّ وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ ». وَذَكَرَ الْبُخْلَ أَوِ الْكَذِبَ «(مسلم)

  ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள் 1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்-(இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன்     நூல்- முஸ்லிம்

   அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபொழுது வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எவ்வித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில், சஅத்பின்ரபீஆ(ரழி) அவர்களுடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக நபி (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். சஅத் (ரழி) அவர்கள் அவருக்காக எவ்வளவோ உதவிகள் செய்ய தயாராக இருந்தார்கள். ஆனால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி அவர்களோ அதை ஏற்காமல் சஃதே! அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு கடைவீதியை காட்டுங்கள். எனது ரிஜ்கை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்றார்கள். அதன் படி அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அல்லாஹ் அவரது வியாபாரத்தில் அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்தன. அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்தான்.  இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சம்பாத்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும்,அவற்றில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை.                                      

 இவ்வாறு அவர்கள் நிறைய தர்மம் செய்த போதும் அவரது சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவரது சந்ததிக்காக மிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார்கள்.                                    

ஒவ்வொரு முஃமின்களின் வீடுகளிலும் தொழுகைக்கு தனி அறை PREYER HALL, அல்லது தனி இடம் ஏற்படுத்த வேண்டும்

عن مَحْمُود بْن الرَّبِيعِ الْأَنْصَارِيّ رضي الله عنه أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنْ الْأَنْصَارِ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَنْكَرْتُ بَصَرِي وَأَنَا أُصَلِّي لِقَوْمِي فَإِذَا كَانَتْ الْأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّيَ فِي بَيْتِي فَأَتَّخِذَهُ مُصَلًّى قَالَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ قَالَ عِتْبَانُ فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذِنْتُ لَهُ فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ ثُمَّ قَالَ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ قَالَ فَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنْ الْبَيْتِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ فَقُمْنَا فَصَفَّنَا فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ(بخاري)667باب الْمَسَاجِدِ فِى الْبُيُوتِ- كِتَاب الصَّلَاةِ

இத்பான் இப்னு மாலிக் என்ற நபித்தோழர் பத்ருப் போரில் கலந்து கொண்ட அன்சாரித்தோழர் ஆவார். அவர் நபிஸல் அவர்களிடம் வந்து என்னுடைய கண்பார்வை குறைந்து விட்டது. நான் என்னுடைய சமூக மக்களுக்குத் தொழ வைக்கிறேன். மழை வந்தால் நான் செல்லும் வழியிலுள்ள பள்ளத்தாக்குகளில் வெள்ளம் ஓடுகின்றன. நான் அவர்களின் மஸ்ஜிதுக்கு வந்து தொழ வைக்க முடியாமல் ஆகி விடுகிறேன். எனவே தாங்கள் ஒரு நேரம் எனது வீட்டுக்கு வந்து ஒரு இடத்தில் தொழுதால் அந்த இடத்தை என்னுடைய தொழுமிடமாக ஆக்கிக் கொண்டு வீட்டில் தொழுது கொள்ள நினைக்கிறேன். தாங்கள் என் வீட்டிற்கு வர வேண்டும் என்றார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இன்ஷா அல்லாஹ் அவ்வாறே செய்கிறேன் என்றார்கள். இத்பான் இப்னுமாலிக் ரழி அவர்கள் கூறினார்கள்ஒருநாள் காலையில் நபி ஸல் அவர்களும் அபூபக்கர் ரழி அவர்களும் என் வீட்டிற்கு வந்து அனுமதி கேட்க,நான் அனுமதி தந்தேன். அவர்கள் அமரவில்லை. மாறாக உங்களின் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழ வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்க, நான் வீட்டின் ஒரு ஓரத்தை சுட்டிக்காட்டினேன். நபி ஸல் அவர்கள் அங்கு நின்று தக்பீர் கட்டினார்கள். நாங்களும் நின்றோம் எங்களின் வரிசைகளை சரி செய்து இரு ரக்அத் தொழ வைத்தார்கள் பின்பு ஸலாம் கொடுத்தார்கள். (பின்பு அந்த இடத்தை என் தொழுமிடமாக ஆக்கிக் கொண்டேன்.)                                 

குறிப்பு- தொழுகை அறையை ஏற்படுத்தினால் மட்டும் போதாது. வீட்டில் தொழுகையும் நடைபெற வேண்டும்

3.  நல்ல அண்டை வீட்டார் அமைவதும் பாக்கியமாகும்

عن مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِى وَقَّاصٍ ، عَنْ أَبِيهِ ،رضي الله عنه  قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَرْبَعٌ مِنَ اَلسعَادَةِ : الْمَرْأَةُ الصَّالِحَةُ ، وَالْمَسْكَنُ ألوَاسِعُ ، وَاَلجَارُ الصَّالِحُ ، وَالْمَرْكَبُ اَلهَنِيءُ ، (مسند الجامع)

பழங்காலத்தின் கதைகளில் ஒன்று-ஒரு வேட்டைக்காரனும் ஒரு ஆட்டு மந்தை வைத்திருப்பவரும் அருகருகே வசித்தார்கள். அவ்விருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். அதாவது வேட்டைக்காரன் வைத்திருக்கும் நாய் அடிக்கடி இவருடைய ஆட்டுக் குட்டிகளைக் கடித்து விடும். இவர் சென்று  உன் நாயைக் கட்டி  வை என்று  கூறினால் அவர் கண்டு கொள்ள மாட்டார். ஒருமுறை அவ்வாறு நடந்த போது  இவர் பொறுக்க முடியாமல் அவரிடம் சென்று நியாயம் கேட்க, அதற்கு அவர் நாய் என்றால் கடிக்கத் தான் செய்யும். நீ வேண்டுமானால் உன் ஆட்டுக் குட்டிகளைக் கட்டி வைத்துக் கொள் என்று பேசினான். இவர் உடனே  ஊர்த் தலைவரிடம் சென்று நடந்த தை முறையிட்டார். ஊர்த் தலைவர்  இந்த விவசாயின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் தன் நண்பருக்கு மிகவும் பயனுள்ள ஒரு ஆலோசனை கூறினார்கள். அதாவது நான் உடனே அவனை அழைத்து தண்டிக்க முடியும். ஆனால் அது உங்களிருவருக்கிடையில் பெரும் பகையாக உருவாகி விடும். நீங்கள் இருவரும் தினமும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருக்க முடியாது. எனவே உமக்கு நான் வித்தியாசமான ஆலோசனை கூறுகிறேன் என்று ஒரு ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனையைக் கேட்டவுடன் அந்த  விவசாயிக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. ஊர்த் தலைவர் சொன்ன ஆலோசனை அடிப்படையில் அந்த விவசாயி தனது அண்டை வீட்டாருக்கு அதாவது வேட்டைக்காரன் வீட்டில் என்றைக்காவது ஏதேனும் நிகழ்ச்சி நடக்குமா என்று எதிர் பார்த்தார். விரைவில் அவனுடைய மகனுக்கு ஒரு வைபவ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது இந்த விவசாயி தன்னுடைய ஆட்டுக் குட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த வேட்டைக்காரன் வீட்டுக்குச் சென்று என்னுடைய சார்பில் உங்களுடைய மகனுக்கு இதைப் பரிசாகத் தருகிறேன் என்றார். அந்த வேட்டைக்காரனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நான் எவ்வளவோ உங்களை வேதனைப் படுத்தியிருந்தும் நீங்கள் அதை மனதில் வைக்காமல் என் மகனுக்குப் பரிசாக இந்த  ஆட்டுக் குட்டியைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று மனம் நெகிழ்ந்தார். ஆனால் விவசாயியின் சூட்சுமம் அவருக்குப் புரியவில்லை. அதற்குப் பிறகு வேட்டைக்காரனின் நாய் மூலம் எவ்வித தொந்தரவுகளும் இவருடைய ஆடுகளுக்கு ஏற்படவில்லை காரணம் தன்னுடைய வீட்டிலேயே ஒரு ஆட்டுக் குட்டி இருப்பதால் அந்த ஆட்டுக் குட்டியைப் பாதுகாக்க வேட்டைக்காரன் தன் நாயைக் கட்டிப் போட ஆரம்பித்தான். பிரச்சினை ஓய்ந்த து

படிப்பினை- ஒரு ஆபத்து என்று வரும்போது முதலில் வந்து காப்பாற்றும்  நிலையில் உள்ளவர்கள் அண்டை வீட்டார் தான். எனவே அவர்களை ஒருபோதும் பகைத்துக் கொள்ளக்  கூடாது. நல்ல அண்டை வீட்டார் அமைய,  நீடிக்க துஆ செய்ய வேண்டும்     

4. விபத்தை ஏற்படுத்தாத நல்ல வாகனம் அமைவதும் பாக்கியமாகும்

அந்தக் காலத்திலும் வாகன விபத்துகள் நிகழ்ந்தன

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْصَعَتْهُ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ وَلَا تُحَنِّطُوهُ وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا .(بخاري) باب الْحَنُوطِ لِلْمَيِّتِ .-كتاب الجنائز

இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் நபி ஸல் அவர்களுடன் அரஃபா மைதானத்தில் தங்கியிருந்தார் திடீரென அவர் தம் வாகன ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார் அது அவரது கழுத்தை மிதித்து முறித்து விட்டது அவர் இறந்து விட்டார் அப்போது நபி ஸல் அவர்கள் அவரது இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி அவருக்கு இரு துணிகளைக் கொண்டு கஃபனிடுங்கள் ஆனால் அவருக்கு நறுமணம் பூச வேண்டாம் அவரது தலையை மறைக்க  வேண்டாம் ஏனெனில்  மறுமை நாளில் தல்பியா சொன்ன நிலையில் அவரை அல்லாஹ் எழுப்புவான் எனவே அவர் எந்த இஹ்ராமுடைய நிலையில் ஷஹீதானாரோ அதே நிலையில் அவரை அடக்கம் செய்யுங்கள் என்று  கூறினார்கள் – புகாரீ – 1266 –

இஹ்ராம் அணிந்தவர் தலையை மறைக்கக்கூடாது என்பதும், நறுமணம் தடவக் கூடாது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே..                                  

அடிக்கடி வாகன விபத்து ஏற்படாமல் இருக்க நபிகளாரிடம் துஆவைப் பெற்ற சஹாபி

عَنْ جَرِيرٍ رضي الله عنه  قال ....وَكُنْتُ لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَرَبَ يَدَهُ عَلَى صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ يَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا قَالَ فَمَا وَقَعْتُ عَنْ فَرَسٍ بَعْدُ.... (بخاري)

ஜரீர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.  ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” (அடிக்கடி குதிரையில் இருந்து கீழே விழுந்து விடுகிறேன்) என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். நபி ஸல் அவர்களின் முபாரக்கான கரங்கள் (என் நெஞ்சின் பதிந்து) அதன் பிரதிபலிப்பை நான் என் நெஞ்சில் பார்த்தேன். அதற்குப் பிறகு நான் ஒருபோதும் குதிரையில் இருந்து கீழே விழுவதில்லை. 

சரியான வாகனம் இன்றி சிரமப்பட்ட சஹாபிக்கு வாகனம் அமைத்துக் கொடுக்க நபி ஸல் காட்டிய அக்கறை

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ   وَغَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاضِحٍ لَنَا فَأَزْحَفَ الْجَمَلُ فَتَخَلَّفَ عَلَيَّ فَوَكَزَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَلْفِهِ قَالَ بِعْنِيهِ وَلَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ فَلَمَّا دَنَوْنَا اسْتَأْذَنْتُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا قُلْتُ ثَيِّبًا أُصِيبَ عَبْدُ اللَّهِ وَتَرَكَ جَوَارِيَ صِغَارًا فَتَزَوَّجْتُ ثَيِّبًا تُعَلِّمُهُنَّ وَتُؤَدِّبُهُنَّ ثُمَّ قَالَ ائْتِ أَهْلَكَ فَقَدِمْتُ فَأَخْبَرْتُ خَالِي بِبَيْعِ الْجَمَلِ فَلَامَنِي فَأَخْبَرْتُهُ بِإِعْيَاءِ الْجَمَلِ وَبِالَّذِي كَانَ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَكْزِهِ إِيَّاهُ فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَوْتُ إِلَيْهِ بِالْجَمَلِ فَأَعْطَانِي ثَمَنَ الْجَمَلِ وَالْجَمَلَ وَسَهْمِي مَعَ الْقَوْم (بخاري 2405

(பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் இறைக்கும்) எங்கள் ஒட்டகம் ஒன்றின் மீது வாகனித்தவனாக நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் கலந்து கொண்டேன். (திரும்பி வருகையில்) திடீரென ஒட்டகம் களைப்படைந்து என்னுடன் பின்தங்கிவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அதன் பின்பகுதியில் அறைந்தார்கள் அவர்களின் கை பட்ட பரக்கத்தால் அது நன்றாக முந்திக் கொண்டு ஓடத் துவங்கியது பின்பு நபி ஸல் 'இதை எனக்கு நீ விற்றுவிடு. மதீனா சென்று சேரும்வரை இதன் மீது சவாரி செய்து நீ வரலாம்' என்றார்கள். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, யாரஸூலல்லாஹ்! சமீபத்தில்தான் திருமணம் நடந்தது' என்று கூறி, நான் என் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'யாரை மணம் முடித்தாய்? கன்னிப் பெண்ணையா? வாழ்ந்த அனுபவமுள்ள (விதவையான அல்லது விவாகரத்து பெற்ற) பெண்ணையா?' என்று கேட்டார்கள். நான், 'வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணையே மணமுடித்தேன். (ஏனெனில்,) என் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் (உஹுதுப் போரில் ஷஹீதாக்கப்பட்டுவிட்டார்கள்; (என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தைகளை விட்டு விட்டுச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே நான் மணமுடித்துக் கொண்டேன்' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'உன் வீட்டாரிடம் போ!' என்று கூறினார்கள். நான் வீட்டிற்குச் சென்று என் தாய்மாமனிடம் ஒட்டகத்தை விற்றுவிட்டதைக் கூறினேன். அதற்கு அவர்கள் என்னைக் குறை கூறினார்கள். எனவே, நான் ஒட்டகம் களைத்து விட, நபி(ஸல்) அவர்கள் அதைப் (பின்பக்கத்தில்) அறைந்ததையும் கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தபோது நான் காலை நேரத்தில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒட்டகத்தின் விலையையும் எனக்குக் கொடுத்து, ஒட்டகத்தையும் (எனக்கே) கொடுத்துவிட்டார்கள். மேலும், மக்களுக்குப் போர்ச்செல்வங்களை வழங்கும்போதுஅதில் என் பங்கையும் (எனக்குக்) கொடுத்தார்கள்.

படிப்பினை- ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாகனப் பயன்பாடுக்கு  நல்ல ஒரு ஒட்டகம் கொடுக்க வேண்டும் என்பது நபி ஸல் அவர்களின்  எண்ணம். அதை வெளிக்காட்டாமல் அவரிடம் விலைக்கு வாங்குவது போல் வாங்கி அன்பளிப்பாக தந்தார்கள்                              

அவசியத் தேவையின்றி  புதிது புதிதாக வாகனங்களை வட்டிக்கு வாங்காதீர்கள்.

வட்டிக்கு கடன் வாங்கி வாகனம் வாங்கி அதனால் பரக்கத் இல்லாமல் போகலாம். அதனாலும் விபத்துகள் ஏற்படலாம் விபத்தை ஏற்படுத்தாத வாகனமும் நான்கு அருட்கொடைகளில் ஒன்று  என்ற நபிமொழியில் இதுவும் அடங்கும். 

வேகம் தவிர்த்தல் – சாலை விபத்தின் முக்கியமான  காரணம் வேகம்

عن سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ – ترمذي

நிதானம் அல்லாஹ்வைச் சார்ந்தது. அவசரம் ஷைத்தானைச் சார்ந்தது

தற்போது ஒவ்வொரு ஆண்டும் உலகில் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் உலகின் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். புயல் பூகம்பம் சுனாமி போல உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்வதில் சாலை விபத்துக்கு ஐந்தாவது இடம்.

வாகனத்தைப் பராமரிப்பதும் சுன்னத்

عَنْ الشَّعْبِيِّ يَرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ تَرَكَ دَابَّةً بِمَهْلَكٍ فَأَحْيَاهَا رَجُلٌ فَهِيَ لِمَنْ أَحْيَاهَا  (ابوداود

قالوا : وهذا إذا كان ترك صاحبها لها على إباحته إياها لمن أخذها ،(تهذيب الاثار)

ஒருவர் தனது வாகனத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட  நிலையில்  அது அழியும் நிலைக்குச் சென்ற பின்பு அதை இன்னொருவர் காப்பாற்றினால் எவர் காப்பாற்றினாரோ அவருக்கு அந்த  அந்த வாகனம் உரியதாகும்.   விளக்கம்- இது அதன் உரிமையாளர் சம்மதித்து விட்டுக் கொடுத்து விட்டால் ஜாயிஸாகும். குறிப்பு- யாரேனும் ஒருவர் அதைப் பராமரிப்பது நல்லது என்பதை இது வலியுறுத்துகிறது. 

வாகனத்தில் ஏறும்போதெல்லாம் வாகனத்தை  நமக்கு வசப்படுத்திக் கொடுத்த

வல்ல நாயனுக்கு நன்றி செலுத்த வேண்டும்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا وَيَقُولُ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنْ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا وَكَانَ يَقُولُ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ (ترمذي)

     நபி ஸல் அவர்கள் பிரயாணம் புறப்படும் போது வாகனத்தில் ஏறினால் மூன்று முறை தக்பீர் கூறுவார்கள். பிறகு துஆ ஓதுவார்கள். எங்களால் வசப்படுத்த முடியாத இந்த வாகனத்தை எங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவன் மிகவும் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாம் அனைவரும் அவன் பக்கமே மீளவேண்டியவர்களாக இருக்கிறோம். யாஅல்லாஹ் இப்பிரயாணத்தில் நான் இறையச்சத்தையும் நலவையும் உன்னிடம் வேண்டுகிறேன். உனக்குப் பிடித்தமான செயலை மட்டுமே நான் செய்யும் பாக்கியத்தை உன்னிடம் வேண்டுகிறேன். யாஅல்லாஹ் இப்பிரயாணத்தின் தொலை தூரத்தை எனக்கு இலேசாக்குவாயாக. பூமியின் தூரத்தை சுருக்கித் தருவாயாக. யாஅல்லாஹ் நீ தான் எங்களின் பிரயாணத் தோழன்.நீ தான் எங்களது இல்லங்களின் பிரதிநிதி. நாங்கள் பிரயாணத்தில் ஆகி விட்டோம். எங்களது இல்லங்களின் பிரதிநிதியாக நீ  ஆகி விடுவாயாக... என்று நபி ஸல் துஆ ஓதுவார்கள். பிரயாணம் முடிந்து திரும்பி வந்தவுடனும் துஆ ஓதுவார்கள். 

குறிப்பு- பாதுகாப்பான பயணத்திற்கு மேற்படி துஆவை ஒவ்வொரு முஃமினும் மனப்பாடம் செய்து அவரது நாவினால் ஓதுவது அவசியமாகும். வாகனத்தை இயக்க ஆரம்பிக்கும்போது வாகனம் ஓதுவது போன்று ஆடியோ பொருத்தி வைப்பது சுன்னத்தைக் கடைபிடிப்பதாக ஆகாது.

வியாழன், 12 டிசம்பர், 2024

நிர்பந்தங்களுக்கும் வரையறை உண்டு

 13-12-2024

جمادي الثانية -  10 بسم الله الرحمن الرحيم  

நிர்பந்தங்களுக்கும் வரையறை உண்டு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (106النحل)

தடுக்கப்பட்ட எத்தனையோ விஷயங்களை நிர்பந்தமான சில சூழ்நிலைகளில் நம்முடைய மார்க்கம் சிலதை அனுமதிக்கிறது. அதேநேரத்தில் அதற்கு சில வரையறைகள் உண்டு. எது நிர்பந்தம் என்பதை  நாமே முடிவு செய்து விட முடியாது. மாறாக ஷரீஅத் நிர்ணயித்துள்ளது. உதாரணமாக ஃபர்ளான தொழுகையை சக்திக்கு இயன்ற வரை நின்று தான் தொழ வேண்டும். நின்று தொழ முடியா விட்டால் சேரில் அமர்ந்து தொழுவதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை ஷரீஅத் நிர்ணயித்துள்ளது. அதைப் பற்றி விரிவாக பேசும் முன்  நிர்பந்தம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சில விஷயங்களைப் பார்ப்போம்.                                                      

عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ (ابن ماجة) كِتَاب الطَّلَاقِ

தங்கம், பட்டாடை ஆண்கள் அணியக்கூடாது என்று தடுத்த போதிலும் நிர்பந்தம் காரணமாக அனுமதித்தார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي إِحْدَى يَدَيْهِ ثَوْبٌ مِنْ حَرِيرٍ وَفِي الْأُخْرَى ذَهَبٌ فَقَالَ إِنَّ هَذَيْنِ مُحَرَّمٌ عَلَى ذُكُورِ أُمَّتِي حِلٌّ لِإِنَاثِهِمْ (ابن ماجة) بَاب لُبْسِ الْحَرِيرِ وَالذَّهَبِ لِلنِّسَاءِ- كِتَاب اللِّبَاسِ 

நபி ஸல்அவர்கள் ஒருநாள் எங்களிடம் வந்தார்கள் அவர்களின் ஒரு கையில் பட்டாடையும் மற்றொரு கையில் தங்கமும் இருந்த நிலையில் இந்த இரண்டும் என் உம்மத்தைச் சார்ந்த ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது என..

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ أَنَّ جَدَّهُ عَرْفَجَةَ بْنَ أَسْعَدَ قُطِعَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَ أَنْفًا مِنْ ذَهَبٍ (ابوداود) بَاب مَا جَاءَ فِي رَبْطِ الْأَسْنَانِ بِالذَّهَبِ-كِتَاب الْخَاتَمِ عَنْ أَنَس بْنَ مَالِكٍ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَلِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي قَمِيصَيْنِ مِنْ حَرِيرٍ مِنْ وَجَعٍ كَانَ بِهِمَا حِكَّةٍ-(ابن ماجة)  بَاب مَنْ رُخِّصَ لَهُ فِي لُبْسِ الْحَرِيرِ- كِتَاب اللِّبَاسِ

அர்ஃபஜா என்ற சஹாபியின் மூக்கு ஒரு போரில் துண்டிக்கப்பட்டது. அவர் வெள்ளியினால் மூக்கு செய்து அணிந்தார். நாளடைவில் அது அழுகியது. அவரிடம் நபி ஸல் தங்கத்தால் மூக்கு செய்து அணிய ஏவினார்கள்.. குறிப்பு - அந்தக் காலத்தில் தங்கத்தால் மூக்கு செய்தால் மட்டுமே நீடிக்கும் என்ற நிர்பந்தம் இருந்தது

உணர்ச்சி மேலீட்டால் தன் நிலை மறந்து ஒருவர் குஃப்ருடைய வார்த்தையை உபயோகித்து விட்டால் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்

عن أنس رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَأَيِسَ مِنْهَا فَأَتَى شَجَرَةً فَاضْطَجَعَ فِي ظِلِّهَا قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا قَائِمَةً عِنْدَهُ فَأَخَذَ بِخِطَامِهَا ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ اللَّهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ (مسلم -كِتَاب التَّوْبَة

அல்லாஹ் ஒருவரின் தவ்பாவை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்பதை கீழ்காணும்  உதாரணத்தைக் கூறி நபி (ஸல்) விபரிக்கிறார்கள். உங்களில் ஒருவர் ஒரு வனாந்தரத்தில் வாகனத்தில் பயணித்த நிலையில் திடீரென அவரது வாகனம் காணாமல் ஆகி விட்டது. அதில் தான் அவரது உணவு தண்ணீர் என அனைத்தும் இருக்கும் நிலையில் அவர் அதைத் தேடி மிகவும் அலைந்து கடைசியில் நிராசையாகி ஒரு மரத்திற்குக் கீழே படுத்தார். திடீரென அவரது வாகனம் அனைத்துப் பொருட்களுடன் அவருக்கு முன்னால் வந்து நின்றது அவர் அதைக் கண்டவுடன் சந்தோஷ மிகுதியால் யாஅல்லாஹ் நீ எனது அடியான் நான் உனது ரப்பு என்று கூறி விட்டார். அவருக்கு எந்த அளவுக்கு சந்தோஷம் இருந்திருந்தால் மனதில் ஈமான் உள்ள நிலையிலும் வார்த்தை தடுமாற்றத்தால் இந்த வார்த்தையைக் கூறியிருப்பாரோ அவரைவிட அல்லாஹ் தன்அடியான் திருந்தி தவ்பா செய்யும்போது மகிழ்கிறான்.                                        

எதிரிகளிடம் சிக்கிய முஃமின் நிர்பந்தம் காரணமாக உயிருக்கு பயந்து குஃப்ரு வார்த்தை கூறினால்

مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (106النحل) عَنْ أَبِي عُبَيْدَة مُحَمَّد بْن عَمَّار بْن يَاسِر قَالَ أَخَذَ الْمُشْرِكُونَ عَمَّار بْن يَاسِر فَعَذَّبُوهُ حَتَّى قَارَبَهُمْ فِي بَعْض مَا أَرَادُوا فَشَكَا ذَلِكَ إِلَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " كَيْف تَجِد قَلْبك؟" قَالَ مُطْمَئِنًّا بِالْإِيمَانِ قَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " إِنْ عَادُوا فَعُدْ "(وَلِهَذَا اِتَّفَقَ الْعُلَمَاء عَلَى أَنَّ الْمُكْرَه عَلَى الْكُفْر يَجُوز لَهُ هذا وَيَجُوز لَهُ أَنْ يَأْبَى كَمَا كَانَ بِلَال رَضِيَ اللَّه عَنْهُ يَأْبَى عَلَيْهِمْ ذَلِكَ)(تفسير ابن كثير)

அம்மார் ரழி அவர்களை எதிரிகள் சிறைப் பிடித்த போது அவரைக் கடுமையாக வேதனை செய்தார்கள். அவர் வேறு வழியின்றி அவர்கள் நாடிய (நிர்பந்தித்த) சில வார்த்தைகளைக் கூறும் நிலைக்கு நெருங்கி விட்டார். இது விஷயமாக அந்த சஹாபி நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் உனது உள்ளத்தை அப்போது நீ எப்படி பெற்றுக் கொண்டாய் என்று கேட்டார்கள். அதற்கு அந்த சஹாபீ என் உள்ளம் ஈமானால் நிம்மதி பெற்றிருந்தது என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் மீண்டும் உனக்கு அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டு மற்றொரு முறையும் நீ அந்த வார்த்தையை கூறினாலும் தவறில்லை என்று கூறினார்கள். இதை வைத்து இமாம்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மனதால் முஃமினாக இருக்கும் ஒருவர் குஃப்ருடைய வார்த்தையைக் கூறி ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் தவறில்லை என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் பிலால் ரழி அவர்களைப் போன்று உயிரே போனாலும் நான் அந்த வார்த்தையைக் கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருப்பது அவரது அந்தஸ்தை அதிகப்படுத்தும். -  

போட்டோ உருவப்படம் தான் ஷிர்க் உடைய அஸ்திவாரம் என்பதால் அதை அடியோடு ஒழிப்பதற்காக 

இஸ்லாம் போட்டோவை தடை செய்கிறது நிர்பந்தம் இருந்தாலே தவிர...

عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَا رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَاهُنَا فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ (مسلم) 

  நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் அலை குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதாக வாக்களித்திருந்தார்கள் ஆனால் அந்த நேரம் வந்த பிறகும் ஜிப்ரயீல் அலை வரவில்லை. (அதற்கான காரணம் தெரியாமல் மிகவும் கவலையில் இருந்த) நபி ஸல் அவர்கள் தன் கையில் இருந்த குச்சியைக் கீழே போட்ட படி அல்லாஹ்வோ அவனது தூதர்களோ (மலக்குகளோ) ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள் (ஆனால் இன்று என்ன ஆகி விட்டது என்று தெரியவில்லையே) என்று கூறினார்கள். இந்நிலையில் நாய்க்குட்டி கட்டிலுக்குக் கீழே இருந்த து. உடனே ஆயிஷா ரழி அவர்களிடம் இது எப்போது வந்த து என்று கேட்க எனக்குத் தெரியாது என அவர்கள் பதில் கூறினார்கள். உடனே நபி ஸ்ல அதை வெளியேற்ற உத்தரவிட்டார்கள். அதன் பின்பு ஜிப்ரயீல் அலை வந்தார்கள்.  அப்போது நபி ஸல் அவர்கள் நீங்கள் என்னிடம் வருகை தருவதாக வாக்களித்திருந்தீர்கள் உங்களுக்காக நான் காத்திருந்தேன் நீங்கள் வரவில்லையே என்று கூற, அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள் என்னை அந்த நாய் தடுத்து விட்டது. உருவப்படமும் நாயும் இருக்கும் வீட்டில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று கூறினார்கள்.                                                               

பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களிலும், குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் அரசுத் துறைகளிலும், மற்றும் இதுபோன்றவைகளில் போட்டோ தவிர்க்க முடியாததாகும். எனினும் இன்று சோப்பு முதல் சீப்பு வரை எந்தப்பொருள் வாங்கினாலும் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆகவே நாம் அந்தப் பொருட்களை வாங்கிய பின்பு அதன் மேல் உறைகளை உடனே அப்புறப்படுத்தி குப்பைக்கூடையில் போடலாம். உருவப்படங்கள் குப்பையில் அல்லது காலில் மிதிபடும் வகையில் இருந்தால் தவறில்லை.                           

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவோ பணம் கொடுத்தால் அது இலஞ்சம் அல்ல

الرِّشْوَة مَا يُعْطَى لِإِبْطَالِ حَقّ أَوْ لِإِحْقَاقِ بَاطِل أَمَّا إِذَا أُعْطِيَ لِيُتَوَصَّل بِهِ إِلَى حَقّ أَوْ لِيَدْفَع بِهِ عَنْ نَفْسه ظُلْمًا فَلَا بَأْس بِهِ -رُوِيَ أَنَّ اِبْن مَسْعُود رضي الله عنه أُخِذَ بِأَرْضِ الْحَبَشَة فِي شَيْء فَأَعْطَى دِينَارَيْنِ حَتَّى خُلِّيَ سَبِيلُهُ (بيهقي) وَرُوِيَ عَنْ جَمَاعَة مِنْ أَئِمَّة التَّابِعِينَ قَالُوا: لَا بَأْس أَنْ يُصَانِع عَنْ نَفْسه وَمَاله إِذَا خَافَ الظُّلْم (كنز العمال) (عون المعبود) (تحفة الاحوذي) (شرح السنة) (تفسير سنن أبي داود) )شرح ابن ماجة للسيوطي

இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் அபீசீனியாவில் அநியாயமாக சிறை பிடிக்கப்பட்டார்கள். அப்போது இரண்டு தீனார்கள் கொடுத்தார்கள் அதனால் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். தாபிஈன்களின் பலரின் கருத்துப்படி தனது உயிருக்கோ உடைமைக்கோ வேண்டுமென்றே அநியாயம் ஏற்படுவதை பயந்தால் அப்போது நிர்பந்தம் காரணமாக இலஞ்சம் தருவது கூடும் என்று கூறியுள்ளனர். நூல்- ஷரஹ் இப்னுமாஜா

ஆனால் நிர்பந்தம் இன்றி தன் காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக கொடுத்தால் அது இலஞ்சம். அது பாவம். உதாரணமாக அரசிடம் இருந்து பெற வேண்டிய ஒரு ID எப்படியும் வந்து விடும் ஆனால் சற்று தாமதம் ஆகும் என்பதற்காக இலஞ்சம் கொடுத்து அதை சீக்கிரமாக அடைய முயற்சிப்பது போன்ற செயல்கள் பாவமானதாகும்.

 சிகிச்சைக்காக ஆண் டாக்டரிடம் செல்லவேண்டிய நிர்பந்தம் பெண்களுக்கு ஏற்பட்டால்..

المشروع للمرأة أن تعالج عند طبيبة مسلمة فإن لم توجد فعند امرأة غير مسلمة فإن لم توجد طبيبة فتعالج عند طبيب مسلم عند الضرورة وإن لم يمكن فطبيب غير مسلم فيجوز لها أن تذهب بشروط الأول أن يكون معها محرم لها لقوله عليه السلام:لا يخلون رجل بامرأة إلا مع ذي محرم -الثاني: أن لا يرى منها إلا بقدر الحاجة فإذا احتاجت إلى الكشف على عين أو سِنّ فتُبدي ما يحتاج إلى كشف (فتاوي العامة) النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُبْرِزْ فَخِذَكَ وَلَا تَنْظُرَنَّ إِلَى فَخِذِ حَيٍّ وَلَا مَيِّتٍ(ابوداود

ஒரு பெண் முடிந்த வரை முஸ்லிமான பெண் டாக்டரிடம் சிகிச்சை செய்வது நல்லது. அது முடியா விட்டால் முஸ்லிம் அல்லாத பெண் டாக்டரிடம் சிகிச்சை செய்யலாம். அதுவும் முடியாத நிர்பந்த நிலையில் முஸ்லிமான ஆண் டாக்டரிடம் செல்லலாம். அதுவும் முடியாத நிர்பந்த சூழ்நிலையில் முஸ்லிம் அல்லாத ஆண் டாக்டரிடம் செல்ல நேரிட்டால் மஹ்ரமுடன் செல்ல வேண்டும். காட்ட வேண்டிய உறுப்பை மட்டும் காட்ட வேண்டும். மற்ற உறுப்புகளை மூடிக் கொள்ள வேண்டும்.                                          

வங்கியுடன் தொடர்பு ஒரு நிர்பந்தம்-

لا يجوز للمسلم أن يودع أمواله في البنوك الربوية، وكذا تحويل راتبه عليها، لما في ذلك من إعانتها على الاستمرار في العمل وإقرار ما هي عليه من حرب الله، إلا إذا اضطر المرء لذلك، فإن الضرورة تبيح المحظور، ومثال الاضطرار: الخوف على المال من الضياع، أو الإلزام من جهة العمل بتحويل الراتب على هذا البنك ونحو ذلك، وينبه إلى أنه في حالة الاضطرار يوضع المال ويُحول الراتب على الحساب الجاري، (فتاوي الشبكة الاسلامية)

வீட்டில் இருந்தால் பணத்துக்கு பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலையில் வங்கியில் சேமிப்பது கூடும். எனினும் அதன் மூலம் வருகிற வட்டியை நன்மையை நாடாமல் யாருக்கேனும் தந்து விட வேண்டும். வண்டி இன்ஸூரன்ஸ் என்பதும் ஒரு நிர்பந்தம் எனினும் அல்லாஹ்வின் விதிப்படி ஏதேனும் விபத்து ஏற்பட்டு  நமக்கு அதிகப்படியான பணம் வந்தால் நாம் கட்டிய தொகை அளவுக்கு மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை நன்மையை நாடாமல் யாருக்கேனும் தந்துவிட வேண்டும். அதுபோல் P.F பணத்தில் அதாவது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அரசாங்கமே பிடித்தம் செய்து ஓய்வு பெறும்போது திருப்பித்தரும் பணத்தில் நமக்குரிய தொகை எவ்வளவோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை யாருக்கேனும் தந்து விட வேண்டும். Fixed deposit, L.I.C போன்றவையும் கூடாது. ஒருவர் கடந்தகாலத்தில் மார்க்க அறிவின்மையால் அதில் இணைந்திருந்தால் அதிலிருந்து நீங்குவதுடன் வரக்கூடிய பணத்தில் அவர் செலுத்திய தொகை போக மீதியை யாருக்கேனும் நன்மையை நாடாமல் தந்து விட வேண்டும்.                                                                   

வங்கியின் மூலம் வருகிற பணத்தில் என்னென்ன செய்யக் கூடாது. 

வங்கியின் மூலம் வருகிற பணத்தில் கழிவறை, கப்ருஸ்தான் சுவர் கட்டுவது, வண்டி இன்ஸூரன்ஸ் கட்டுவது கூடாது. இவற்றில் பலன் நமக்கு கிடைப்பதால் அவ்வாறு செய்வது கூடாது. 

கேள்வி- அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை இதில் செலுத்தலாமா?  பதில் - நம் நாட்டில் வரி இரு வகை உண்டு. 1,ஜப்ரீ என்னும் நிர்பந்த வரி. 2,வாஜிப் என்னும் அவசியமான வரி. ஜப்ரீ என்ற அநியாயமான வரியை வங்கியின் வட்டிப்பணத்தில் கொடுக்கலாம். ஆனால் தண்ணீர் வரி, வீட்டு வரி போன்ற அவசியமான வரியை  வங்கியின் வட்டிப் பணத்தில் கொடுக்கக் கூடாது  (ஃபதாவா மஹ்மூதிய்யா)

தொழில் தொடங்க  அல்லது வீடு கட்ட நினைக்கும் சிலர் லோன் வாங்கினால் தானே என்னால் வீடு கட்ட முடியும் தொழில் தொடங்க  முடியும் இல்லை யென்றால் என்னால் எப்படி வீடு கட்ட முடியும். தொழில் தொடங்க  முடியும்  என்று கூறுவர். முடிந்த வரை வட்டியை விட்டும் விலகி இருக்க நினைத்தால் அல்லாஹ் வழியை ஏற்படுத்துவான் 

ومن ترك شيئا لله عوضه الله خيرا منه، قال الله سبحانه: [ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجاً وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لا يَحْتَسِبُ ] (الطلاق: 3)

திருமணம் செய்ய வசதி இல்லை என்று சிலர் கூறிய போது நோன்பு வைக்க நபி ஸல் ஏவினார்கள். தவறு செய்ய அனுமதிக்கவில்லை

قَالَ  رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ (بخاري)

மாற்றார்களோடு நம்மை ஒப்பிடக்கூடாது. நிரந்தர நரகம் என்று முடிவு செய்யப்பட்டவர்களும் நாமும் சமமல்ல..மாற்றார்கள் லோன் வாங்கி வீடு கட்டலாம். தொழில் தொடங்கலாம் ஆனால் இஸ்லாமிய நெறியுடன் வாழும் முஃமினுக்கு இது எளிதில் சாத்தியம் அல்ல

ففي صحيح البخاري  عن عمر في حديثه الطويل  فَأَذِنَ لِي......وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَيْءٌ وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا مَصْبُوبًا وَعِنْدَ رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ فَرَأَيْتُ أَثَرَ الْحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ فَقَالَ مَا يُبْكِيكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ وَأَنْتَ رَسُولُ اللَّهِ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمْ الدُّنْيَا وَلَنَا الْآخِرَةُ (بخاري) - باب ( تَبْتَغِى مَرْضَاةَ أَزْوَاجِكَ )كتاب التفسير

நபி ஸல் அவர்கள் ஈச்சம் பாயில் அமர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு அந்தப் பாய்க்குமிடையில் எந்த விரிப்பும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக்கீழே ஈச்ச நார்களால் நிரப்பப்பட்ட தலையனை இருந்தது. கால்களுக்கு அருகில் கருவேல இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக்கொண்டிருந்தது.(இந்த எளிய நிலை ஒரு புறமிருக்க) அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு பதிந்திருப்பதைக் கண்டு நான் அழுது விட்டேன். ஏன் அழுகிறீர் என்று காரணம் கேட்ட போது அல்லாஹ்வின் பாரசீக, ரோம் மன்னர்கள் சகல வசதிகளுடன் இருக்கும்போது அல்லாஹ்வின் தூதரான உங்களின் நிலை ஏன் இப்படி?  என்றெண்ணி அழுகிறேன் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் அவர்களுக்கு உலகம் தான் எல்லாம்.. நமக்கு மறுமை தான் என்றார்கள். புகாரீ-4910 (அதாவது அவர்களுக்கு எல்லா இன்பங்களும் இங்கேயே முடிந்து விடும். நமக்கு அவ்வாறல்ல..

عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا حَمَاهُ الدُّنْيَا كَمَا يَظَلُّ أَحَدُكُمْ يَحْمِي سَقِيمَهُ الْمَاءَ (ترمذي)

காயத்தை தண்ணீர் படாமல் பாதுகாப்பது போல் அல்லாஹ் தனக்குப் பிரியமான அடியானை துன்யாவின் சுக போகங்களை விட்டும் பாதுகாப்பான் -

 முடியாத நிலையில் அமர்ந்து தொழுவது பற்றி... 

ஃபர்ளான தொழுகைகளை முடிந்த வரை நின்று தான் தொழ வேண்டும்

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238)البقرة عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلَاةِ فَقَالَ صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ (بخاري) بَوَاسِيرُமூலநோய்

இம்ரானுப்னு ஹுஸைன் ரழிஅவர்கள் கூறினார்கள் எனக்கு மூலநோய் இருந்தது. அதற்காக நபி ஸல் அவர்களிடம் (அமர்ந்து) தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் முடிந்த வரை நின்று தொழு. முடியா விட்டால் உட்கார்ந்து தொழு. அதுவும் முடியா விட்டால் படுத்துத் தொழு என்று கூறினார்கள்.

நிற்க முடியாது ஆனால் அமர்ந்து சைக்கினை செய்து ருகூவு, சுஜூது செய்ய  முடியும் என்றிருந்தால் சேரில் அமருவதை விட அவ்வாறு அமர்ந்து சைக்கினை செய்து ருகூவு, சுஜூது செய்வது சிறப்பாகும். அவ்வாறு அமர்ந்த பிறகும் ருகூவு, சுஜூது இயல்பாக செய்ய முடியா விட்டால்  தரையை நோக்கி எவ்வளவு தூரம் குனிய முடியுமோ அவ்வளவு தூரம் தரைக்கு நெருக்கமாக குனிவது சிறப்பாகும்.  இருக்கும் நிலை தான் சிறப்பாகும். காரணம் எப்போது  கியாம் என்பது முடியாமல் ஆகுமோ அப்போது  சஜ்தாவுக்கு நெருக்கமான நிலை தான் சிறப்பானது. 

وَإِنْ عَجَزَ عن الْقِيَامِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ وَقَدَرَ على الْقُعُودِ يُصَلِّي قَاعِدًا بِإِيمَاءٍ وَيَجْعَلُ السُّجُودَ أَخْفَضَ من الرُّكُوعِ كَذَا في فَتَاوَى قَاضِي خَانْ حتى لو سَوَّى لم يَصِحَّ كَذَا في الْبَحْرِ الرَّائِقِ -وَإِنْ كان بِجَبْهَتِهِ جُرْحٌ لَا يَسْتَطِيعُ السُّجُودَ عليه لم يُجْزِئْهُ الْإِيمَاءُ وَعَلَيْهِ أَنْ يَسْجُدَ على أَنْفِهِ وَإِنْ لم يَسْجُدْ على أَنْفِهِ وَأَوْمَأَ لم تَجُزْ صَلَاتُهُ (فتاوي الهندية) -  وإن قدر على القيام وعجز عن الركوع والسجود يومئ قاعدا وهو قاعدا أفضل من الإيماء قائما لكون رأسه فيه أقرب إلى الأرض (فتح القدير)

நபி ஸல் அவர்கள் நஃபிலான தொழுகைகளைக் கூட தங்களின் வயதான காலத்தில் தான் உட்கார்ந்து  தொழுதார்கள். அப்போதும் ருகூவு செய்யும் நேரம் நெருங்கியவுடன் எழுந்து நின்று சுமார் 30, அல்லது 40 ஆயத்துகள் ஓதி விட்டு பிறகு ருகூவு செய்வார்கள்

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي جَالِسًا (وفي رواية قالت لَمْ تَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ اللَّيْلِ قَاعِدًا قَطُّ حَتَّى أَسَنَّ) فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ نَحْوٌ مِنْ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَهَا وَهُوَ قَائِمٌ ثُمَّ يَرْكَعُ ثُمَّ سَجَدَ يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ فَإِذَا قَضَى صَلَاتَهُ نَظَرَ فَإِنْ كُنْتُ يَقْظَى تَحَدَّثَ مَعِي وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ(بخاري) بَاب إِذَا صَلَّى قَاعِدًا ثُمَّ صَحَّ أَوْ وَجَدَ خِفَّةً تَمَّمَ مَا بَقِيَ -  وَقَالَ الْحَسَنُ :إِنْ شَاءَ الْمَرِيضُ صَلَّى رَكْعَتَيْنِ قَائِمًا وَرَكْعَتَيْنِ قَاعِدًا. بخاري

குறிப்பு- உட்கார்ந்து தொழுது கொண்டிருக்கும்போதே சிரமம் குறைந்தால் அப்படியே எழுந்து தொழலாம் என்பதற்கு இது ஆதாரம்

கருத்து-- வயதான காலத்தில் மட்டும் நபி ஸல் அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். அப்போதும் கூட ருகூவுக்கு நெருக்கமான நேரம் ஆகி விட்டால் அதாவது ருகூவுக்கு இன்னும் 30 அல்லது 40 ஆயத்துகள் மிச்சமிருக்கும்போது எழுந்து நின்று அந்த ஆயத்துகளை நின்ற படி ஓதி பிறகு ருகூவு செய்வார்கள். 2-வது ரக்அத்திலும் இதே மாதிரி செய்வார்கள். தொழுகை முடிந்தவுடன் என்னைப் பார்ப்பார்கள் நான் விழித்திருந்தால் மட்டுமே என்னிடம் பேச்சுக் கொடுப்பார்கள். நான் தூங்கி விட்டால் என்னை எழுப்ப மாட்டார்கள்.

சுன்னத்தான தொழுகைகளை நிற்க முடிந்த ஒருவர் உட்கார்ந்து தொழுதால் நன்மை குறையும்

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ الرَّجُلِ وَهُوَ قَاعِدٌ فَقَالَ مَنْ صَلَّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ . .(بخاري) 

உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரில் பாதி நன்மை. படுத்துத் தொழுதால் இன்னும் பாதியாகக் குறையும். இது யாருக்கு என்றால் எவர் நிற்க முடிந்தும் நஃபிலான தொழுகைக்கு உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு என்று கருதி உட்கார்ந்து தொழுவாரோ அவருக்குத் தான். முடியாத நிலையில் அமர்ந்து தொழுபவருக்கு நின்று தொழுத நன்மை உண்டு. 

 وقال سفيان الثوري في هذا الحديث من صلى جالسا فله نصف أجر القائم قال هذا للصحيح ولمن ليس له عذر فأما من كان له عذر من مرض أو غيره فصلى جالسا فله مثل أجر القائم وقال النووي إذا صلى قاعدا صلاة النفل مع القدرة على القيام فهذا له نصف ثواب القائم وأما إذا صلى النفل قاعدا لعجزه عن القيام فلا ينقص ثوابه بل يكون ثوابه كثوابه قائما (عمدة القاري)

ஃபர்ளான தொழுகைகளை நின்று தொழ இயலாத நிலை என்பதற்கு விளக்கம்

إذَا عَجَزَ الْمَرِيضُ عن الْقِيَامِ صلى قَاعِدًا يَرْكَعُ وَيَسْجُدُ هَكَذَا في الْهِدَايَةِ وَأَصَحُّ الْأَقَاوِيلِ في تَفْسِيرِ الْعَجْزِ أَنْ يَلْحَقَهُ بِالْقِيَامِ ضَرَرٌ وَعَلَيْهِ الْفَتْوَى كَذَا في مِعْرَاجِ الدِّرَايَةِ وَكَذَلِكَ إذَا خَافَ زِيَادَةَ الْمَرَضِ أو إبْطَاءَ الْبُرْءِ بِالْقِيَامِ أو دَوَرَانِ الرَّأْسِ كَذَا في التَّبْيِينِ (فتاوي الهندية)

நின்று தொழ முடியவில்லை என்பதன் அளவுகோல். நின்று தொழுதால் நோய் அதிகமாகி விடும் அல்லது நோய் நீங்குவது தாமதமாகி விடும் அல்லது தலை சுற்ற ஆரம்பித்து என்பது போன்ற காரணங்கள் தான்.                          

இலேசான சிரமம் ஏற்படும் என்பதற்காக ஃபர்ளான தொழுகையில் நிற்பதை விட்டு விடக் கூடாது

فَإِنْ لَحِقَهُ نَوْعُ مَشَقَّةٍ لم يَجُزْ تَرْكُ ذلك الْقِيَامِ كَذَا في الْكَافِي وَلَوْ كان قَادِرًا على بَعْضِ الْقِيَامِ دُونَ تَمَامِهِ يُؤْمَرُ بِأَنْ يَقُومَ قَدْرَ ما يَقْدِرُ حتى إذَا كان قَادِرًا على أَنْ يُكَبِّرَ قَائِمًا وَلَا يَقْدِرُ على الْقِيَامِ لِلْقِرَاءَةِ أو كان قَادِرًا على الْقِيَامِ لِبَعْضِ الْقِرَاءَةِ دُونَ تَمَامِهَا يُؤْمَرُ بِأَنْ يُكَبِّرَ قَائِمًا وَيَقْرَأَ قَدْرَ ما يَقْدِرُ عليه قَائِمًا ثُمَّ يَقْعُدَ إذَا عَجَزَ قال شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى هو الْمَذْهَبُ الصَّحِيحُ وَلَوْ تَرَكَ هذا خِفْتُ أَنْ لَا تَجُوزَ صَلَاتُهُ كَذَا في الْخُلَاصَةِ وَلَوْ قَدَرَ على الْقِيَامِ مُتَّكِئًا الصَّحِيحُ أَنَّهُ يُصَلِّي قَائِمًا مُتَّكِئًا وَلَا يُجْزِيهِ غَيْرُ ذلك (فتاوي الهندية) 

சற்று நேரம் தான் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நிற்க வேண்டும். ஒருவரால் தக்பீர் தஹ்ரீமா கட்டிய பின் சிறிது நேரம் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நின்று தொழ வேண்டும். அல்லது தக்பீர் தஹ்ரீமா அளவுக்கு மட்டும் தான் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நிற்க வேண்டும். இந்த அளவுக்கு முடிந்தும் ஒருவர் உட்கார்ந்து தொழுதால் அவரது தொழுகை கூடாது என்று இமாம்கள் கூறுவர் 

قَالَ شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ : وَإِنْ قَدَرَ عَلَى الْقِيَامِ مُتَّكِئًا ، الصَّحِيحُ أَنَّهُ يُصَلِّي قَائِمًا مُتَّكِئًا ، وَلَا يُجْزِيهِ غَيْرُ ذَلِكَ ، وَكَذَلِكَ إذَا قَدَرَ أَنْ يَعْتَمِدَ عَلَى عَصًا أَوْ كَانَ لَهُ خَادِمٌ لَوْ اتَّكَأَ عَلَيْهِ قَدَرَ عَلَى الْقِيَامِ . (العناية

ஏதேனும் ஒன்றின் மீது சாய்ந்து நிற்க முடியும் என்றிருந்தால் அல்லது பணியாளர் ஒருவர் இவரைத் தாங்கிப் பிடித்த நிலையில் நிற்க முடியும் என்றிருந்தால் அப்படியேனும் நின்று தொழ வேண்டும்.

ஃபர்ளான தொழுகையை நின்று தொழ முடிந்தாலும் உட்கார்ந்து தொழலாம் என வாதிடுபவரின் ஈமான் பறிபோய் விடும்

قال النووي رحمه الله وَأَمَّا الْفَرْض فَإِنَّ الصَّلَاة قَاعِدًا مَعَ قُدْرَته عَلَى الْقِيَام لَمْ يَصِحّ فَلَا يَكُون فِيهِ ثَوَاب بَلْ يَأْثَم قَالَ أَصْحَابنَا وَإِنْ اِسْتَحَلَّهُ كَفَرَ وَجَرَتْ عَلَيْهِ أَحْكَام الْمُرْتَدِّينَ كَمَا لَوْ اِسْتَحَلَّ الرِّبَا وَالزِّنَا أَوْ غَيْره مِنْ الْمُحَرَّمَات الشَّائِعَة التَّحْرِيم (شرح النووي على صحيح مسلم) (عمدة القاري)

வீட்டில் தொழுதால் நின்று தொழ முடியும். வெளியில் தொழுதால் நின்று தொழ முடியாது என்றால் வீட்டில் தொழுவதே சிறப்பு

الْمَرِيضُ إذَا صلى في بَيْتِهِ يَسْتَطِيعُ الْقِيَامَ وإذا خَرَجَ لَا يَسْتَطِيعُ اخْتَلَفَ الْمَشَايِخُ رَحِمَهُمْ اللَّهُ تَعَالَى فيه الْمُخْتَارُ أَنَّهُ يُصَلِّي في بَيْتِهِ قَائِمًا وَبِهِ يُفْتَى هَكَذَا في الْمُضْمَرَاتِ (فتاوي الهندية)   

அதாவது வீட்டில் தொழுதால் ஒருவரால் நின்று தொழ முடியும். ஆனால் பள்ளிக்கு வருகிறேன் என விரும்பி அவர் வந்தால் அதற்காக அவர் நடந்தால் அவர் பலவீனமாகி விடுவார். அதனால் அவர் பள்ளிவாசலில் நிற்க முடியாது என்றிருந்தால் வீட்டில் நின்று தொழுவது நல்லது. 

தமிழகத்தின் தலை சிறந்த ஆலிமான அமானீ ஹழ்ரத் கூறியது

சிறிது சிரமம் இருந்தாலும் நின்று தொழ முயற்சி செய்பவருக்கு மிக விரைவில் சிரமமின்றியே நின்று தொழுவதற்கு அல்லாஹ் அருள் புரிகிறான். ஆனால் சிறிய சிரமத்தை காரணம் காட்டி உட்கார்ந்து தொழுவதற்கு முற்பட்டு விடுபவர்களை கடைசி வரை உட்கார்ந்தே தொழும் நிலைக்கு அல்லாஹ் ஆக்கி விடுகிறான். அமானீ ஹழ்ரத் தனது பெரிய ஹழ்ரத் சரித்திரம் என்ற நூலில் அண்ணல் அஃலா ஹழ்ரத் பற்றி எழுதும் போது அண்ணார் அவர்கள் தனது 93 வயதிலும் கூன் விழுந்த நிலையில் நின்றே தொழுதார்கள் எனக் குறிப்படுகிறார்கள். ஆரணிபாவா கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் தன் 80 வயதுவரை நின்றே தொழுதிருக்கிறார்கள்.                                                                           

 சேரில் அமர்ந்து தொழும் கலாச்சாரம் வந்த பின்பு உட்கார்ந்து அதில் உட்கார்ந்து தொழுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முற்காலத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களால் நின்று தொழ முடியவில்லையே என்று வருந்தியவர்களாக அமர்ந்து தொழுவார்கள். பிற தொழுகையாளிகளும் இவர்களைக் காணும் போது “பாவம்” நம்மைப் போல இவர்களால் நின்று தொழ முடியவில்லையே என்று பரிதாப ப் படுவார்கள். ஆனால் காலில் சிறிய வலி வந்து விட்டால் போதும் தாங்களும் சிம்மாசனத் தொழுகைக்குத் தகுதி பெற்றவர்கள் என கருதி விடுகின்றனர்.  

சேரில் அமர்ந்து தொழுவதைப் பற்றிய ஃபத்வாக்களில் ஒன்று..

 جواب:والسائل يقرر أنه لا يستطيع الجلوس إلا على كرسى وأنه لا يستطيع الركوع، وفى هذه الحالة يصلى وهو جالس على الكرسى ويومىء للركوع برأسه ويسجد فعلا إن كان يستطيع السجود فإن لم يستطعه أيضا أومأ له برأسه كالركوع وجعل إيماءه للسجود أخفض من الركوع وصلاته صحيحة مادام العذر قائما فإن زال عنه المرض وجب عليه أن يصلى وهو قائم بركوع وسجود لعدم وجود العذر حينئذ(فتاوي الازهر

வயதான காலத்திலும் இயல்பாக ருகூவு சுஜூது செய்து தொழுபவர்கள் இருக்கும் வரை அல்லாஹ் இவ்வுலகை அழிக்க மாட்டான்.

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا (سنن الكبري للبيهقي)

இறையச்சமுள்ள இளைஞர்களும் மேய்ந்து திரியும் கால்நடைகளும் வயதான காலத்திலும் இயல்பாக ருகூவு செய்து தொழுபவர்களும் பால் குடிப்பருவத்திலுள்ள குழந்தைகள் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்

சேரில் அமர்ந்து தொழுபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்

சேரில் அமர்ந்து சைக்கினை செய்து தொழும்போது தலையை சிறிது கீழே கொண்டு செல்வது ருகூவு. இன்னும் சற்று கீழே கொண்டு செல்வது சுஜூது. இது அல்லாமல் எந்த அசைவும் தேவையில்லை. சிலர் கைகளை முன் புறமாக கொண்டு செல்வார்கள். அது தவறாகும்.  ருகூவு சுஜூதுக்காக குனியும் போது கைகள் தொடைகளின் மீது தான் இருக்க வேண்டும்.

வியாழன், 5 டிசம்பர், 2024

மஸ்ஜித்களை பாதுகாப்போம்

 



06-12-2024

جمادي الثانية    3

 

بسم الله الرحمن الرحيم  


மஸ்ஜித்களை பாதுகாப்போம்


 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


 ஒவ்வொரு இயக்கத்திற்கும் பைழா  எனப்படும் செயல் திட்டங்கள் உண்டு. அவற்றை அந்த இயக்கத்தின் கொள்கைகள் என்றும் கூறுவர். அந்த வகையில் இந்தியாவில் பாசிசவாதிகள் தங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கும் ரகசிய சுற்றறிக்கையின் 12-வது விதியில் இந்துக்கள் அல்லாதவர்களுடைய வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் சில படிமங்களையும், சிலைகளையும் வைப்பது முன்பு போலவே தொடர வேண்டும்.முஹமதியரின் தொழுகை இடங்களும்,நினைவுத்தூண்களும் பழைய கோவில்கள் என நிரூபிக்க நம் தலைமையகத்தை அணுக வேண்டும் என்று உள்ளது.

 மேற்படி செயல் திட்டத்தை சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டனர். பாபரி மஸ்ஜிதின் வரிசையில் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித், தற்போது உ.பி.  சம்பால் மாவட்டம்  சாந்தவ்ஸி நகரில் உள்ள ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் என இன்னும் 3000 மஸ்ஜித்கள் இவர்களின் திட்டத்தில் உள்ளன.அவர்களின் திட்டத்தை  ஒவ்வொன்றாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகம் சற்றும் சமூக சிந்தனை இல்லாமல் தங்களுடைய சுயநல வாழ்க்கையிலேயே 

எத்தனை மஸ்ஜித்களை திட்டமிட்டு அவர்கள் அழிக்க நினைத்தாலும்

அல்லாஹ் அதற்குப் பதிலாக எண்ணற்ற மஸ்ஜித்களை உருவாக்கிக் கொண்டேயிருப்பான்.

உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமான மஸ்ஜித்கள் இருக்கிறது என்பது இதற்கு மிகப் பெரும் சான்றாகும். 

அதுமட்டுமல்ல. உலகம் முழுவதும் முஸ்லிம்களே கிடையாது என்று சொல்லப்பட்ட பல நாடுகளில்  இன்று முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டேயிருக்கிறது. 

சீன அரசாங்கம் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்களை இடித்ததாகக் கூறுவார்கள். ஆனால் சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது வெய்சூ பிராந்தியத்தில் மட்டும் 24,000 மஸ்ஜித்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். ஃபிரான்ஸில் 2014 ம் ஆண்டுகளுக்கு முன்பு  20 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால் இன்று ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள் உள்ளன.  ஜெர்மனியில் 1999- ல் 40  பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால் இன்று 4000  மஸ்ஜித்கள் உள்ளன. இங்கிலாந்தில் 1890- ல் ஒரு  பள்ளிவாசல் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான  மஸ்ஜித்கள் உள்ளன. இதுபோன்று பெல்ஜியம், இத்தாலி, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நேபாளத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாக நேபாள் இஸ்லாமிக் சொஸைட்டியில் உள்ள குர்ஷித் ஆலம் என்பவர் குறிப்பிடுகிறார். 

ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சி அமெரிக்காவில் எந்த அளவிற்கு உச்சத்தை எட்டியது என்றால் கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸேஜித்களாக மாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ள்னர் என்பதற்கு சான்றாக உள்ளது

அமெரிக்காவில் இஸ்லாத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றால் அங்குள்ள வாஷ் வேகாஸ் என்ற பகுதியை சூதாட்ட நகரம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அங்கு ஷைத்தானிய செயல்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த நகரத்திலும் கூட இஸ்லாம் வேரூன்றியதன் விளைவாக அங்கும் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது மேலும், பள்ளிவாசல்களில் தொழுகையின் போது மக்கள் வெள்ளம் நிரம்பி வழிவதால் சாலைகளிலும் முஸ்லிம்கள் தொழும் காட்சிகளை சர்வசாதாரணமாக அங்கு காணலாம் 

 

 இவ்வாறு உலகம் முழுவதும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டு தானே இருக்கிறது என்பதற்காக நமது மஸ்ஜித்களில் ஒரு மஸ்ஜிதுக்கு எதிரிகள் மூலம் ஆபத்து வந்தாலும் அதைப்  பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவன் முஃமினல்ல.

மஸ்ஜித்களை இடிக்க வேண்டும் என்றெண்ணியவர்களை அல்லாஹ் அழித்த வரலாறுகள் நிறைய உண்டு

அவர்களின் அழிவு உடனே நடைபெறும். அல்லது பல காலங்கள் கழித்தும் நடக்கும்.

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (1) أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (2) وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (3) تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ (4) فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ (5)

وَأَرْسَلَ أَبَرْهَة يَقُول لِلنَّجَاشِيِّ إِنِّي سَأَبْنِي كَنِيسَة بِأَرْضِ الْيَمَن لَمْ يُبْنَ قَبْلهَا مِثْلهَا فَشَرَعَ فِي بِنَاء كَنِيسَة هَائِلَة بِصَنْعَاء رَفِيعَة الْبِنَاء عَالِيَة الْفِنَاء مُزَخْرَفَة الْأَرْجَاء سَمَّتْهَا الْعَرَب الْقُلَّيْس لِارْتِفَاعِهَا لِأَنَّ النَّاظِر إِلَيْهَا تَكَاد تَسْقُط قَلَنْسُوَته عَنْ رَأْسه مِنْ اِرْتِفَاع بِنَائِهَا وَعَزَمَ أَبَرْهَة الْأَشْرَم عَلَى أَنْ يَصْرِف حَجّ الْعَرَب إِلَيْهَا كَمَا يُحَجّ إِلَى الْكَعْبَة بِمَكَّة وَنَادَى بِذَلِكَ فِي مَمْلَكَته فَكَرِهَتْ الْعَرَب الْعَدْنَانِيَّة وَالْقَحْطَانِيَّة ذَلِكَ وَغَضِبَتْ قُرَيْش لِذَلِكَ غَضَبًا شَدِيدًا حَتَّى قَصَدَهَا بَعْضهمْ وَتَوَصَّلَ إِلَى أَنْ دَخَلَهَا لَيْلًا فَأَحْدَثَ فِيهَا وَكَرَّ رَاجِعًا فَلَمَّا رَأَى السَّدَنَة ذَلِكَ الْحَدَث رَفَعُوا أَمْره إِلَى مَلِكهمْ أَبَرْهَة وَقَالُوا لَهُ إِنَّمَا صَنَعَ هَذَا بَعْض قُرَيْش غَضَبًا لِبَيْتِهِمْ الَّذِي ضَاهَيْت هَذَا بِهِ فَأَقْسَمَ أَبَرْهَة لَيَسِيرَنَّ إِلَى بَيْت مَكَّة وَلَيُخَرِّبَنَّهُ حَجَرًا حَجَرًا .

ذَكَرَ الْوَاقِدِيّ بِإِسْنَادِهِ أَنَّهُمْ لَمَّا تَعِبُوا لِدُخُولِ الْحَرَم وَهَيَّئُوا الْفِيل جَعَلُوا لَا يَصْرِفُونَهُ إِلَى جِهَة مِنْ سَائِر الْجِهَات إِلَّا ذَهَبَ فِيهَا فَإِذَا وَجَّهُوهُ إِلَى الْحَرَم رَبَضَ وَصَاحَ وَجَعَلَ أَبَرْهَة يَحْمِل عَلَى سَائِس الْفِيل وَيَنْهَرهُ وَيَضْرِبهُ لِيَقْهَر الْفِيل عَلَى دُخُول الْحَرَم

அப்ரஹா தனது யானைப் படைகளை  ஹரமை நோக்கி அனுப்ப முயன்ற போது அந்த யானைகள் அந்த திசையில் செல்லாமல் அடம் பிடித்தன. மற்ற திசைகளில் செலுத்தினால் அடம் பிடிக்கவில்லை. ஹரமின் பக்கம் செலுத்த முனைந்த போது மட்டும் முரண்டு பிடித்தன. அப்ரஹா எப்படியேனும்  தனது யானையை ஹரமின் பக்கம் செலுத்துவதற்காக அதனை அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் தான் அல்லாஹ் அபாபீல் பறவைகளை  அனுப்பினான்.                          

وَأَرْسَلَ اللَّه عَلَيْهِمْ طَيْرًا مِنْ الْبَحْر أَمْثَال الْخَطَاطِيف وَالْبَلَسَان . مَعَ كُلّ طَائِر مِنْهَا ثَلَاثَة أَحْجَار يَحْمِلهَا : حَجَر فِي مِنْقَاره وَحَجَرَانِ فِي رِجْلَيْهِ أَمْثَال الْحِمَّص وَالْعَدَس لَا يُصِيب مِنْهُمْ أَحَدًا إِلَّا هَلَكَ وَلَيْسَ كُلّهمْ أَصَابَتْ وَخَرَجُوا هَارِبِينَ يَبْتَدِرُونَ الطَّرِيق

அவை  கடலில் இருந்து கிளம்பி வந்தன. சிறிய அளவில் இருந்த அந்த ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் இரு நெருப்புக் கற்கள், அதன் வாயில் ஒரு கல் என, ஒவ்வொரு பறவையுடனும் மூன்று கற்கள் இருந்தன. அதை அப்பறவைகள் யானைக் கூட்டத்தின் மீது வீசின. அந்தக் கற்கள் வெறும் துவரம் பருப்பு அல்லது சிறிய கொண்டைக் கடலை அளவில் மட்டுமே இருந்தன. ஆனால் அவை பட்டு யாருடைய  உடம்புக்குள் சென்றதோ அவர்கள் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.

وَقَالَ اِبْن إِسْحَاق فَخَرَجُوا يَتَسَاقَطُونَ بِكُلِّ طَرِيق وَيَهْلِكُونَ عَلَى كُلّ مَنْهَل وَأُصِيبَ أَبَرْهَة فِي جَسَده وَخَرَجُوا بِهِ مَعَهُمْ يَسْقُط أُنْمُلَة أُنْمُلَة حَتَّى قَدِمُوا بِهِ صَنْعَاء وَهُوَ مِثْل فَرْخ الطَّائِر فَمَا مَاتَ حَتَّى اِنْصَدَعَ صَدْره عَنْ لُبّه فِيمَا يَزْعُمُونَ.

அபாபீல் பறவைகள் வீசிய நெருப்புக் கற்கள் உடலுக்குள் ஊடுருவி சென்றவுடன் உடம்பில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழன்று விழுந்து பலர் இறந்தனர். (யானைகளின் உடலுக்குள்ளும் அவை ஊடுருவி அவை மதம் பிடித்து அங்குமிங்கும் அங்குமிங்கு ஓடி இறந்தன.)  அப்ரஹாவின் உடம்பிலும் நெருப்புக் கல் விழுந்த து. அவனை அல்லாஹ் உடனே சாகடிக்கவில்லை. அவனுடைய உடம்பில் அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழன்று விழும் நிலையில் அவனோடு இருந்த  மற்றவர்கள் அதாவது கல் யார் மீது விழவில்லோயோ அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து யமன் வரை அவனைத் தூக்கி வந்தார்கள். மிகவும் வேதனைப் பட்டு கோழிக் குஞ்சு போன்று எலும்பும் தோலுமாக ஆகி விட்ட நிலையில்  அவன் கடைசியில் இறந்தான்.  அவனுடைய வாய் வழியாக அவனுடைய இருதயம் வெளியே வந்த நிலையில் அவன் இறந்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.                               

படிப்பினை- இறையில்லத்தை பாழ்படுத்த வந்தவனின் நிலையை அல்லாஹ் இப்படித் தான் ஆக்கினான்

புக்து நஸ்ர் என்பவன் பைத்துல் முகத்தஸை நாசமாக்கினான். இறுதியில் அவருக்கு ஏற்பட்ட கதி..

وَقَالَ سَعِيد عَنْ قَتَادَة : قَالَ أُولَئِكَ أَعْدَاء اللَّه النَّصَارَى حَمَلَهُمْ بُغْض الْيَهُود عَلَى أَنْ أَعَانُوا بُخْتُنَصَّرَ الْبَابِلِيّ الْمَجُوسِيّ عَلَى تَخْرِيب بَيْت الْمَقْدِس وَقَالَ السُّدِّيّ : كَانُوا ظَاهَرُوا بُخْتُنَصَّرَ عَلَى خَرَاب بَيْت الْمَقْدِس حَتَّى خَرَّبَهُ وَأَمَرَ أَنْ تُطْرَح فِيهِ الْجِيَف (تفسير ابن كثير

 ஸுலைமான் (அலை) மரணித்த பின்பு யூதர்களின் கை வசம் பைத்துல் முகத்தஸ் இருந்த து அப்போது அதை மஜூஸியான  புஹ்து நஸ்ர் என்பவன் அதைக் கைப்பற்றி மாபரும் அழிவை ஏற்படுத்தினான். பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி தீக்கிரையாக்கினான். தவ்ராத் வேதமும், பத்துக் கட்டளைகளும், தாபூத் என்ற பெட்டியும், மூஸா (அலை) அவர்களின் அற்புதக் கைத்தடியும் நெருப்புக்கு இரையாகின. பள்ளிவாசலை அவனது ஆட்கள் இடித்துத் தரை மட்டமாக்கினர். புக்துநஸர் கையில் அகப்படாமல் யூதர்கள் தப்பியோடினார்கள். இப்படி ஓடியவர்களில் சிலர் இப்போதைய மதீனாவிலும், சிரியாவிலும் குடியேறினார்கள். இவ்வாறாக 40 ஆண்டுகள் வெறும் காடாகவே பைத்துல் முகத்தஸ் இருந்தது. 

புக்து நஸ்ரின் மோசமான அழிவு பற்றி பல விதமான அறிவிப்புகள் உள்ளன. 

وقوله تعالي : {ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ...  (سورة الاسراء} وعذب بختنصر بالمسخ سبع سنين ومسخ الله تعالى بختنصر من الدوابّ كلها، فجعل من كل صنف من الدوابّ رأسه رأس سبع من السباع الأسد، ومن الطير النسر،   (تفسير  الطبري

அல்லாஹ் புக்து நஸ்ரின் உருவத்தை  வன விலங்குகளின் ஒன்றின் உருவத்தைப் போல மாற்றியமைத்தான் என மேற்படி அறிவிப்பு... 

மற்றொரு அறிவிப்பில் நம்ரூதைப் போல அவனது மூளையில் கொசு புகுந்து  வேதனை செய்த து என்றும் கூறப்பட்டுள்ளது

ثم لما أراد الله هلاك بختنصر انبعث فقال لمن في يده من بني إسرائيل: أرأيتم هذا البيت الذي خربته والناس الذين قتلت منهم؟ وما هذا البيت؟ قالوا: هذا بيت الله وهؤلاء أهله كانوا من ذراري الأنبياء فظلموا وتعدوا فسلطت عليهم بذنوبهم وكان ربهم رب السموات والأرض ورب الخلق كلهم يكرمهم ويعزهم فلما فعلوا ما فعلوا أهلكهم الله وسلط عليهم غيرهم فاستكبر وظن أنه بجبروته فعل ذلك ببني إسرائيل. قال: فأخبروني كيف لي أن أطلع إلى السماء العليا فأقتل من فيها وأتخذها ملكا لي فإني قد فرغت من الأرض، قالوا: ما يقدر عليها أحد من الخلائق قال: لتفعلن أو لأقتلنكم عن آخركم، فبكوا وتضرعوا إلى الله تعالى فبعث الله عليه بقدرته بعوضة فدخلت منخرة حتى عضت بأم دماغه فما كان يقر ولا يسكن حتى يوجأ له رأسه على أم دماغه فلما مات شقوا رأسه فوجدوا البعوضة عاضة على أم دماغه ليري الله العباد قدرته (تفسير البغوي)

சுருக்கம்- பைத்துல் முகத்தஸை நாசப்படுத்திய புக்து நஸ்ரை அல்லாஹ் உடனே அழிக்கவில்லை. அவன் கடைசி காலத்தில் மிகவும் அட்டூழியம் செய்தான். அவனுக்குள் பெருமை குடி கொண்டது. மோசமான கூட்டமான யூதர்கள் விஷயத்தில் நிறைய யூதர்களைக் கொன்றதன் மூலம் நபிமார்களால் செய்ய முடியாத செயலை தாம் செய்ததாக அவன் பெருமை கொண்டான். அதனால் இன்னும் நிறைய அநியாயம் செய்தான். அப்போது பனீ இஸ்ராயீல் சமூகத்தில் சில நல்லவர்கள் அவனது அழிவுக்காக துஆ செய்தனர். இறுதியில் அவனுடைய மூளைக்குள் ஒரு கொசு புகுந்தது. அது அவனை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது. அதனால் அவன் இறந்தான். அவன் இறந்த பின் அவனது தலையை பிளந்து பார்த்த அவனது மூளையை தாக்கிக் கொண்டிருந்த கொசு கண்டு பிடிக்கப்பட்டது.                                                                                                                         

 

 

கடைசி காலத்தில் இறையில்லமான கஃபாவை தாக்க வரும் கும்பலை அல்லாஹ் அழிப்பான் என்ற முன்னறிவிப்பு

عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري

கடைசி காலத்தில் கஃபாவை தாக்க ஒரு கும்பல்  படையெடுத்து வரும் அப்போது அவர்கள் வரும் வழியிலேயே பூமி பிளந்து உள்வாங்கப் படுவார்கள். அப்போது அந்தக் கும்பல் மட்டுமல்லாமல் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் உட்பட அனைவரும் அழிந்து விடுவார்கள். இவ்வாறு நபி ஸல் அவர்கள் கூறிய போது அன்னை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கெட்டவர்கள் அழிக்கப்படுவது நியாயம் தான் ஆனால் நல்லவர்களும் ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று காரணம் கேட்கும்போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். தீயவர்கள் அழிக்கப்படும்போது நல்லவர்களும் அழிக்கப்படுவார்கள். பின்பு அவரவர் நிய்யத்துக்குத் தகுந்த மாதிரி எழுப்ப ப் படுவார்கள் என்று கூறினார்கள். அதாவது அதற்குத் தகுந்த நற்கூலி வழங்கப் படுவார்கள்.  

இறையில்லத்தின் கண்ணியம் தெரியாமல் கஃபாவுக்குள் வைத்தே தவறு செய்த 

ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் கல்லாக மாற்றினான்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا (158)البقرة 

ذَكَرَ مُحَمَّد بْن إِسْحَاق فِي كِتَاب السِّيرَة أَنَّ إِسَافًا وَنَائِلَة كَانَا بَشَرَيْنِ فَزَنَيَا دَاخِل الْكَعْبَة فَمُسِخَا حَجَرَيْنِ فَنَصَبَتْهُمَا قُرَيْش تُجَاه الْكَعْبَة لِيَعْتَبِر بِهِمَا النَّاسُ فَلَمَّا طَالَ عَهْدهمَا عُبِدَا ثُمَّ حُوِّلَا إِلَى الصَّفَا وَالْمَرْوَة فَنُصِبَا هُنَالِكَ فَكَانَ مَنْ طَافَ بِالصَّفَا وَالْمَرْوَة يَسْتَلِمهُمَا وَلِهَذَا.... (تفسير كثير)

முற்காலத்தில் சிரியாவில் இருந்து வந்த ஒரு ஆணும் பெண்ணும் கஃபாவுக்குள் வைத்து தவறாக நடந்து கொண்டனர். முத்தமிட்டுக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது அவர்களின் பெயர் இஸாஃப், நாஇலா என்று கூறப்படுகிறது. உடனே அல்லாஹ் அவர்களை கல்லாக மாற்றி  விட்டான். கல்லாக மாற்றப்பட்ட அவ்விரு சிலைகளும் சில காலம் கஃபாவுக்குள்ளேயே இருந்தன. சில காலங்களுக்குப் பிறகு அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டு சஃபா மர்வா என்ற இரு மலைகளில் வைக்கப்பட்டன.  அதாவது சஃபாவில் ஒன்றும் மர்வாவில் ஒன்றும் வைக்கப்பட்டது. காலப்போக்கில் மக்கள் அதையும் வணங்க ஆரம்பித்து விட்டனர். பின்னர் சில நல்லவர்களின் முயற்சியால் அது அங்கிருந்தும் அப்புறப்படுத்தப் பட்டது. இச்சம்பவம் நடந்த காரணத்தால் சஹாபாக்களுக்கு இந்த சஃபா, மர்வா இடையே ஸயீ செய்வதில் ஒரு நெருடல் இருந்தது என்ன இருந்தாலும் சிலைகள் இருந்த இடம் ஆயிற்றே என்று தயங்கினார்கள். அதனால் அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கினான்.                                     

ஒவ்வொரு உம்மத்திலும் இஸ்லாமிய வழிபாட்டுத்தளங்களை தகர்க்கும் வெறி கொண்டவர்கள் இருந்துள்ளார்கள் அப்போது அல்லாஹ் முஸ்லிம்களில் சிலருக்கு ஆட்சி அதிகாரத்தை தந்து பாதுகாத்துள்ளான்

قال الله تعالي وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ(الحج)

أي لولا ما شرعه الله تعالى للانبياء والمؤمنين من قتال الاعداء، لاستولى أهل الشرك وعطلوا ما بينته  أرباب الديانات من مواضع العبادات، ولكنه دفع بأن أوجب القتال ليتفرغ أهل الدين للعبادة. (تفسير القرطبي) ومعنى الآية: ولولا دفع الله الناس بعضهم ببعض لهدم في شريعة كل نبي مكان صلاتهم، لهدم في زمن موسى الكنائس، وفي زمن عيسى البيع والصوامع، وفي زمن محمد صلى الله عليه وسلم المساجد.(تفسير البغوي) سورة الحج:40

அப்ரஹாவுக்கு அல்லாஹ் அழிவைத் தந்த து போன்று, புஹ்துநஸ்ருக்கு அல்லாஹ் அழிவைத் தந்தது போன்று இன்று மஸ்ஜித்களை அழிக்க நினைக்கும் பாசிசவாதிகளுக்கும் அல்லாஹ் தண்டனை தருவான். முஃமின்கள் ஒருபோதும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. தொடர்ந்து துஆச் செய்ய வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு போராடவும் வேண்டும்

ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா அலை துஆ செய்து 40 வருடங்களுக்குப் பின்பு தான் அவனை அழித்தான்

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ لَا يَعْلَمُونَ (89يونس) قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة وَقَالَ مُحَمَّد بْن كَعْب وَعَلِيّ بْن الْحُسَيْن أَرْبَعِينَ يَوْمًا (تفسير ابن كثير)

அநீதம் செய்யும் அனைவரையும் அல்லாஹ் உடனே தண்டிக்க ஆரம்பித்தால் பூமியில் எவரும் மிஞ்ச முடியாது

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا (45فاطر)

உலகையே ஆட்சி செய்யும் அதிகாரத்தை இரு முஸ்லிம்களுக்கு வழங்கியது போன்று இரண்டு காஃபிர்களுக்கும்..

قَالَ مُجَاهِد:مَلَكَ الدُّنْيَا مَشَارِقهَا وَمَغَارِبهَا أَرْبَعَة: مُؤْمِنَانِ وَكَافِرَانِ فَالْمُؤْمِنَانِ سُلَيْمَان عليه السلام وَذُو الْقَرْنَيْنِ وَالْكَافِرَانِ نُمْرُود وَبُخْتُنَصَّرَ وَاَللَّه أَعْلَم

இந்த தலைப்பில் துவக்கத்தில் கூறப்பட்டது போன்று  நம்முடைய முன்னோர்கள் கோவிலை இடித்து விட்டு மஸ்ஜித்கள் கட்டியதாக பொய்யான வரலாறுகளை உருவாக்கியும் மஸ்ஜித்களில் யாருக்கும் தெரியாமல் சிலைகளை புதைத்து வைத்தும் அந்த மஸ்ஜித்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர்

நம்முடைய முன்னோர்களின் ஆட்சியில் அனைவருக்கும் சம நீதி என்ற அடிப்படையில் 

கோவில்கள் கட்ட  உதவிய வரலாறுகள் நிறைய உண்டு

காசியில் சைவ மடாலயலங்களை அமைப்பதற்காக, ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல் பலவேறு கோயில்களுக்கு மானியங்கள் வழங்கியதற்கான குறிப்புகளும் இருக்கின்றன. காசியில் விஸ்வநாதர் கோயிலை ஒளரங்கசிப் இடிக்கச்சொல்லி உத்தரவிட்டார். அக்கோயில் இடிக்கப்பட்டது. அதற்கு காரணமாக கூறப்படும் சம்பவம் இதுதான். ஒரு ஹிந்து ராஜாவின் ராணிகள், காசியில் குளிக்க வந்தனர். அந்த ராணிகளுள் ஒருவர், கோயிலில் வைத்து அவமானப்படுத்தப்பட்டார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக மற்ற ஹிந்து ராஜாக்கள் முறையிட்டனர். விஸ்வநாத விக்கிரகம் அங்கிருந்து அகற்றப் பட்டது.  கோவிலை இடித்து மீண்டும் கட்டித் தர அனுமதி கேட்டனர். மாமன்னர் அதை அனுமதித்தார். இதைத் தான் ஒளரங்கசீப் கோவிலை இடிக்கச் சொன்னார் என்று பொய்யுரைக்கிறார்கள். 

 

காலங்கள் செல்லச் செல்ல சோதனைகள் அதிகரிக்கலாம்.

தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ......   وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ.  (ابن ماجة)

அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த  நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை. .... 

தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம்  அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். 

மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை  முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர்,  தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)

 

தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم

தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.

படிப்பினை- முஃமின்கள் தங்களை திருத்திக்கொண்டால் சோதனைகளை அல்லாஹ் மாற்றிக் காட்டுவான்

 

 

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...