வியாழன், 4 டிசம்பர், 2025

அண்டை வீட்டார்

 05-12-2025

جمادي الثاني  -  12 بسم الله الرحمن الرحيم  

  சிறந்த அண்டை வீட்டார்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

நபி ஸல் அவர்கள் இந்த உம்மத்துக்கு கற்றுத் தந்த பல்வேறு சுன்னத்தான விஷயங்கள் இன்று விடுபட்டுப் போனதால் இன்று முஸ்லிம் சமூகம் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது. அத்தகைய விடுபட்ட சுன்னத்துகளில் ஒன்று அண்டை வீட்டாரின் உரிமைகள். 

அருகருகே பல வருடங்களாக குடியிருந்தாலும் பெயர் என்ன என்று கூட தெரியாமல் அந்நியர்களைப் போன்று சிலர் வாழ்ந்து வருகின்றனர். எனவே அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி அறிவது அவசியமாகிறது.

அனைத்து ஃபிக்ஹ் நூல்களிலும் ஷுஃப்ஆ என்ற தனி பாடம் இடம் பெற்றிருக்கும். அதன் சுருக்கம்

அதாவது இரு அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் ஒருவர் தன் வீட்டை விற்பதாக இருந்தால் முதலாவதாக தன் அண்டை வீட்டாரிடம் தான் நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டு அவருக்கு விருப்பமில்லை என்றால்தான் அவர் இன்னொருவருக்கு விற்க முடியும் ஒரு வேளை அண்டை வீட்டாரை கேட்காமல் அந்த வீட்டை விற்று விட்டால் அண்டை வீட்டார் காஜி இடம் சென்று முறையிட்டு அந்த வீட்டை நான் வாங்கும் தகுதி இருந்தும் என்னை கேட்காமல் அவர் இன்னொருவருக்கு விற்று விட்டார் என்று புகார் கொடுத்தால் காஜி அதை விசாரித்து யாருக்கு விற்கப்பட்டதோ அவரிடமிருந்து அந்த வீட்டை இவருக்கு மீண்டும் மீட்டுக் கொடுப்பார் இந்த அளவுக்கு அண்டை வீட்டார் உடைய உரிமைகள் நம்முடைய மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னதற்குப் பிறகு பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்றும் கூறிய பிறகு மூன்றாவது இடத்திலே அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்பதைத்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது 

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ(  سورة النساء 36‏

என்ன தான் உறவினர்கள் நமக்கு நிறைய இருந்தாலும் ஆபத்து என்றவுடன் உடனே

ஓடி வரும் நிலையில் அண்டை வீட்டார் இருப்பதால் அவர்களைப் பகைத்துக் கொள்வது கூடாது

 முற்காலத்தில் இரண்டு அண்டை வீட்டார் இருந்துள்ளார்கள் அவர்களில் ஒருவர் ஆடுகளை நிறைய வைத்திருந்தார் மற்றொருவர் வேட்டைக்காக நாய் வளர்த்திருந்தார் இந்த வேட்டைக்காரருடைய தாய் அடிக்கடி பக்கத்து வீட்டு காரின் ஆட்டுக்குட்டிகளை அவ்வப்போது கடித்து காயப்படுத்தி விடும் அப்போதெல்லாம் ஆட்டு மந்தை வைத்திருப்பவர் வேட்டைக்காரரிடம் வந்து உன்னுடைய நாயை நீ கட்டிப்போடு என்று கூறுவார் அதற்கு அந்த வேட்டைக்காரன் நாய் என்றால் கடிக்கத் தான் செய்யும் நீதான் உன்னுடைய ஆடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விடுவார் ஒருநாள் வேட்டைக்காரன் நாய் இவருடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை பெரிய அளவில் சேதப்படுத்திய போது நேராக இவரைப் பற்றி புகார் கொடுப்பதற்காக ஊர் தலைவரிடம் சென்றார்  ஊர் தலைவருக்கும் இவருக்கும் நல்ல நட்பு இருந்தது அதன் அடிப்படையில் ஊர் தலைவர் விஷயத்தை கேட்டு விட்டு நான் அந்த வேட்டைக்காரன் மீது நடவடிக்கை எடுக்கலாம். இருந்தாலும் அவரும் நீங்களும் தினமும் ஒருவருக்கொருவர் பார்க்காமல் இருக்க முடியாது நான் அவர் மீது எடுக்கும் நடவடிக்கையே உங்கள் மீது தீராத பகையை ஏற்படுத்தி விடும் எனவே பகையும் இல்லாமல் உம்முடைய ஆட்டுக்குட்டிகளுக்கும் இனிமேல் பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆலோசனையை நான் கூறுகிறேன் என்று சொல்லி ஒரு ஆலோசனை கூறினார் அந்த ஆலோசனை இவருக்கு நல்லதாகப்பட்டது அந்த ஆலோசனையின் அடிப்படையில் விரைவில் இந்த வேட்டைக்காரனின் சிறிய வயது மகனுக்கு பிறந்தநாள் வந்தது அதைப் பெரிய அளவிலே கொண்டாடினார் அதற்கான அழைப்பு இவருக்கும் வந்தது அந்த குறிப்பிட்ட நாளில் பிறந்தநாள் பரிசாக பலரும் பல பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் ஊர் தலைவர் சொன்ன ஆலோசனை அடிப்படையிலே அவருடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை அந்த சிறுவனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார் அப்போது அந்த வேட்டைக்காரருக்கு மிகப்பெரிய சந்தோஷம் நான் பல தடவை உங்கள் மனதை புண்படுத்தி இருந்தாலும் நீங்கள் என் மகனுக்கு சிறந்த அன்பளிப்பை தந்து விட்டீர்கள் என்று மகிழ்ந்தார் ஆனால் இதற்குப் பிறகு இவருடைய ஆட்டு மந்தைகளுக்கு வேட்டைக்காரர் உடைய நாயின் மூலமாக இந்த தொந்தரவுகளும் ஏற்படுவதில்லை என்ன காரணம் என்றால் எப்போது ஆடுகள் அடுத்த வீட்டில் இருந்ததோ அப்போது நாயை கட்டி போடாத அந்த வேட்டைக்காரன் இப்போது அந்த ஆடுகளில் ஒன்று தன்னுடைய வீட்டுக்கே தன் மகனுக்கு பரிசாக வந்துவிட்டபோது அந்த ஆட்டை பாதுகாப்பதற்காக தன்னுடைய நாயை கட்டி போட ஆரம்பித்தார் இதுதான் ஊர் தலைவர் சொல்லிக் கொடுத்த சிறந்த ஆலோசனையாகும் ஊர் மக்களுக்கு தீர்ப்பு சொல்லும் தலைவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கும் இதில் நமக்கு படிப்பினை உள்ளது அத்துடன் இரண்டு அண்டை வீட்டார் தங்களுக்கு இடையில் அடிக்கடி அன்பளிப்புகள் கொடுத்து பழகுவதால் அவர்களுக்கு இடையே பகைமை நீங்கும் என்ற படிப்பினையும் இதில் உள்ளது

وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((تَهادُوا؛ فإن الهدية تسلُّ السَّخيمة))؛ رواه البزار

அன்பளிப்புகள் கொடுத்து பழகுங்கள் நிச்சயமாக அது உங்களுடைய பகைமையை நீக்கும்

அண்டை வீட்டார் தரும் அன்பளிப்புகளை இழிவாக கருதக் கூடாது

عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا ، وَلَوْ فِرْسِنَ شَاةٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். (ரலி) (புகாரி: 2566)

அண்டை வீட்டாரின் உரிமைகள் பற்றிய நீண்ட ஹதீஸ்

عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه و سلم قال من أغلق بابه دون جاره مخافة على أهله وماله فليس ذلك بمؤمن وليس مؤمنا من لا يأمن جاره بوائقه أتدري ما حق الجار إذا استعانك أعنته وإذا استقرضك أقرضته وإذا افتقر عدت عليه وإذا مرض عدته وإذا أصابه خير هنيته وإذا أصابته مصيبة عزيته وإذا مات اتبعت جنازته ولا تستطل عليه بالبناء فتحجب عنه الريح إلا بإذنه ولا تؤذيه بقتار قدرك إلا أن تغرف له وإن اشتريت فاكهة فاهد له فإن لم تفعل فأدخلها سرا ولا يخرج بها ولدك ليغيظ بها ولده  (كنز العمال)                                                           

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் அண்டை வீட்டார் உரிமைகள் என்ன தெரியுமா உன்னிடம் அவர் உதவி கேட்டால் நீ உதவி செய்ய வேண்டும் உன்னிடம் ஒரு கடன் கேட்டால் நீ கடன் கொடுக்க வேண்டும் உன்னிடம் தன் வறுமையை அவர் முறையில் நீ அவருக்கு உதவ வேண்டும் அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை நலம் விசாரிக்க வேண்டும் அவர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸாவை நீ பின்துயர வேண்டும் அதாவது ஜனாஸா சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும் அவருக்கு ஏதேனும் நல்லது நடந்தால் வாழ்த்து சொல்ல வேண்டும் அவருக்கு துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்ல வேண்டும் அவருடைய கட்டடத்தை விட உன்னுடைய கட்டடத்தை உயரமாக கட்டி அவருக்கு சேர வேண்டிய காற்றை நீ மறைத்து விடக்கூடாது அவரிடம் அனுமதி கேட்டே தவிர.... உன் வீட்டுக்கு நீ ஏதேனும் பழங்கள் வாங்கினால் உன்னால் முடிந்தால் உன் அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்கும் அதில் சிலதை கொடுக்க வேண்டும் அப்படி உன்னால் கொடுக்க முடியாவிட்டால் அதை அண்டை வீட்டின் பிள்ளைகளுக்கு தெரியாமல் மறைவாக கொண்டு செல்ல வேண்டும் 

ஒருவேளை உன் பிள்ளைகளிடம் அந்தப் பழங்களை கொடுத்த பிறகு அந்தப் பழங்களுடன் உன்னுடைய பிள்ளை அண்டை வீட்டுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (உன் பிள்ளைக்கு மட்டுமே பழங்கள் வாங்க சக்தி இருந்து அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்கு நீ கொடுக்க முடியாத சூழ்நிலையில்)  உன் பிள்ளை வைத்திருக்கும் பழங்களுடன் உன்னுடைய  பிள்ளை அண்டை வீட்டுக்கு செல்ல வேண்டாம்.  உன்னுடைய (வீட்டில் கமகமக்கும் சால்னா தயாரானால் அந்த) சால்னா சட்டியின் வாசனையைக் கொண்டு உன் அண்டை வீட்டுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம். நீ அதிலிருந்து கொஞ்சத்தை அவர்களுக்கு கொடுப்பதாக இருந்தாலே தவிர....

அண்டை வீட்டாருக்காக எதையும் விட்டுக் கொடுக்காத மனிதர் மாபெரும் கஞ்சர்

عَنْ جَابِرٍ  رض أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ لِفُلَانٍ فِي حَائِطِي عَذْقًا وَإِنَّهُ قَدْ آذَانِي وَشَقَّ عَلَيَّ مَكَانُ عَذْقِهِ فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بِعْنِي عَذْقَكَ الَّذِي فِي حَائِطِ فُلَانٍ قَالَ لَا قَالَ فَهَبْهُ لِي قَالَ لَا قَالَ فَبِعْنِيهِ بِعَذْقٍ فِي الْجَنَّةِ قَالَ لَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَيْتُ الَّذِي هُوَ أَبْخَلُ مِنْكَ إِلَّا الَّذِي يَبْخَلُ بِالسَّلَامِ (مسند احمد

  விளக்கம்- நபித்தோழருக்கு சொந்தமான ஒரு தோட்டம் இருந்தது அந்த தோட்டத்திற்கு அருகாமையில் மற்றொரு மனிதருடைய பேரித்த மரம் இருந்தது இந்த பேரித்த மரத்தின் கிளைகள் இவருடைய தோட்டத்தின் பக்கம் பெரும்பாலும் இருந்ததால் இந்தத் தோட்டத்துக்காரருக்கு அதனால் இடையூறு ஏற்பட்டது அப்போது அவர் அந்த நபரிடம் நீங்கள் உங்களுடைய பிடித்த பலத்தை மரத்தை பேரித்த மரத்தை எனக்கு விற்று விடுங்கள் அல்லது அதை விட்டு விடுங்கள் எனக்கு அது தொந்தரவாக உள்ளது என்றார் ஆனால் அந்த மனிதர் அதற்கு மறுத்துவிட்டார் உடனே இந்த சஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இது பற்றி புகார் கொடுத்தார் அப்போது அந்த மனிதரை அழைத்து வரும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி அவர் வந்தவுடன் அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முடைய மரத்தை எனக்கு நீங்கள் விட்டு விடுங்கள் என்று கூற அவர் அதற்கும் மறுத்துவிட்டார் இத்தனைக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்ல விலை கொடுப்பதாக கூறியும் அவர் அதற்கு மறுத்து விட்டார் அன்பளிப்பாவாகவது கொடுத்து விடுங்கள் என்று கூறி அதற்கும் மறுத்துவிட்டார் இறுதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரிடம் சொன்னார்கள் உம்மைப் போல கஞ்சனை நான் கண்டதில்லை சலாம் சொல்வதற்கு கஞ்சத்தணம் செய்தவரை தவிர…

விபச்சாரம் பெரிய பாவம் எதிலும் குறிப்பாக அண்டை வீட்டாரின் மனைவியுடன்

தகாத உறவில் ஈடுபடுவது ஆக மிகப்பெரிய பாவம் மிகப்பெரும் பாவமாகும்

عَنْ أَبِى وَائِلٍ عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ « أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ ». قَالَ ثُمَّ أَىٌّ قَالَ « أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ ». قَالَ ثُمَّ أَىٌّ قَالَ « أَنْ تُزَانِىَ حَلِيلَةَ جَارِكَ » فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا (وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِى حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا)

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’ என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்’ என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) (புகாரி: 4477)

அண்டை வீட்டாரை வாரிசுகளைப் போன்று கருத வேண்டும்

«مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُه

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.  (புகாரி: 6014) 

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ،

‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி: 6019) 


நம்மால் முடியும் என்றிருந்தால் அண்டை வீட்டாருக்கு தருவதற்காக சற்று கூடுதலாக சமை க்க வேண்டும்

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ رواه مسلم

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக” என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 5120) 

அண்டை வீட்டார் என்பது யாரைக் குறிக்கும்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு என்றார்கள். (புகாரி: 2259) 

தனக்கு விரும்புவதை தம் அண்டை வீட்டாருக்கும் விரும்ப வேண்டும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ – أَوْ قَالَ: لِجَارِهِ – مَا يُحِبُّ لِنَفْسِهِ 

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “தம் சகோதரருக்கும்” அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார். (முஸ்லிம்: 71) 

அண்டை வீட்டார் பசித்திருக்க நாம் மட்டும் சாப்பிடுவதற்குத் தடை

ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه.

 “தன் அண்டைவீட்டானை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி), (அஹ்மத்: 367) ..

அண்டை வீட்டார் நம் சுவரில் எதையாவது அடிப்பதற்கு தடை விதிக்காதீர்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لاَ يَمْنَعْ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ»، 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்’ என்று கூறினார்கள் (புகாரி: 2463)

வியாபாரத்தில் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமை

قَالَ وَقَفْتُ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، فَجَاءَ المِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَوَضَعَ يَدَهُ عَلَى إِحْدَى مَنْكِبَيَّ، إِذْ جَاءَ أَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا سَعْدُ ابْتَعْ مِنِّي بَيْتَيَّ فِي دَارِكَ؟ فَقَالَ سَعْدٌ وَاللَّهِ مَا أَبْتَاعُهُمَا، فَقَالَ المِسْوَرُ: وَاللَّهِ لَتَبْتَاعَنَّهُمَا، فَقَالَ سَعْدٌ: وَاللَّهِ لاَ أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلاَفٍ مُنَجَّمَةً، أَوْ مُقَطَّعَةً، قَالَ أَبُو رَافِعٍ: لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَ مِائَةِ دِينَارٍ، وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الجَارُ أَحَقُّ بِسَقَبِهِ»، مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلاَفٍ، وَأَنَا أُعْطَى بِهَا خَمْسَ مِائَةِ دِينَارٍ، فَأَعْطَاهَا إِيَّاهُ

நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, ‘ஸஅதே! உம்முடைய வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!’ எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!’ என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!’ என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), ‘அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!’ என்று கூறினார்கள்.

 அதற்கு அபூ ராஃபிவு(ரலி), ‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்’ என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.

அறிவிப்பவர் : அம்ர் இப்னு ஷரீத் (புகாரி: 2258) 

அண்டை வீட்டாருக்கு தொந்தரவு கொடுக்காதவனே இறைநம்பிக்கையாளன்

عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ» قِيلَ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ»

அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை’ என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஷுரைஹ்(ரலி நூல் ;(புகாரி: 6016) ➚

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»

எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்: 73)

அண்டை வீட்டாரிடையே சண்டை வருவதற்கான சின்னச் சின்ன காரணங்கள்

  வீட்டில் ரேடியோ டேப்ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தி தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது  போன்றவற்றால் சண்டை வரலாம் அவற்றில் கவனமாக இருக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ أَنَّهَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا قَالَ هِيَ فِي النَّارِ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ قِلَّةِ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلَاتِهَا وَإِنَّهَا تَصَدَّقُ بِالْأَثْوَارِ مِنْ الْأَقِطِ وَلَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا قَالَ هِيَ فِي الْجَنَّةِ (مسند أحمد

  மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: அஹ்மத் (9298)

ஒருவரின் இடத்தை மற்றவர் ஆக்கிரமத்துக் கட்டுவதால் அண்டை வீட்டாரிடையே பிரச்சினை வரும்

عَنْ أَبِي مَالِك الْأَشْجَعِيّ عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " أَعْظَم الْغُلُول عِنْد اللَّه ذِرَاع مِنْ الْأَرْض تَجِدُونَ الرَّجُلَيْنِ جَارَيْنِ فِي الْأَرْض - أَوْ فِي الدَّار - فَيَقْطَع أَحَدهمَا مِنْ حَظّ صَاحِبه ذِرَاعًا فَإِذَا قَطَعَهُ طُوِّقَهُ مِنْ سَبْع أَرْضِينَ يَوْم الْقِيَامَة  (مسند أحمد

ஒரு ஜான் இடத்தை அநியாயமாக அபகரித்தால் மறுமையில் ஏழு நிலங்கள் கழுத்தில் கட்டித் தொங்க விடப்படும்

சிறந்த முஃமின் எப்போதும் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا (بخاري 3473

 (பனூ இஸ்ராயீ¬ல்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் ''என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் ''நிலத்தை அதி¬ருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், ''உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ''எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், ''எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர்,''அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதி¬ருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார்.   

அருகருகே இருந்த இரு தோட்ட உரிமையாளர்கள் விஷயத்தில் நியாயமான தீர்ப்பு வழங்கிய நபி ஸல்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ - رضى الله عنهما - أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - فِى شِرَاجِ الْحَرَّةِ الَّتِى يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِىُّ سَرِّحِ الْمَاءَ يَمُرُّ فَأَبَى عَلَيْهِ ، فَاخْتَصَمَا عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - لِلزُّبَيْرِ « اسْقِ يَا زُبَيْرُ ، ثُمَّ أَرْسِلِ الْمَاء إِلَى جَارِكَ » . فَغَضِبَ الأَنْصَارِىُّ ، فَقَالَ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ . فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - ثُمَّ قَالَ « اسْقِ يَا زُبَيْرُ ، ثُمَّ احْبِسِ الْمَاءَ ، حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ » . فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّى لأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِى ذَلِكَ ( فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ) . (بخاري) باب المساقاة  2360

 அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓட விடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறைத் தொடர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சி விட்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), பின்வரும் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.                   

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا (65)النساء

விளக்கம்- ஜுபைர் ரழி அவர்களின் தோட்டம் சற்று உயரமான இடத்தில் இருந்தது. அதற்கடுத்து சற்று பள்ளமாக அன்சாரித்தோழரின் தோட்டம் இருந்தது. நபி ஸல் அவர்கள் யாருடைய உரிமையையும் பறிக்காமல் தீர்ப்புச் செய்தார்கள். ஒருவேளை அன்சாரித்தோழரின் தோட்டத்திற்கு முதலில் நீர் பாய்ந்து பிறகு ஜுபைர் ரழி அவர்களின் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதாக இருந்தால் கீழிருந்து மேலாக நீர் பாய்வது சிர ம ம் என்பதால் நபி ஸல் ஜுபைர் ரழி அவர்களிடம் முதலில் உனது தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி விட்டு அவரின் தோட்டத்திற்கும் தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் அவர் பேசியதால் நபிகளாருக்கு கோபம் ஏற்பட்டது.            


1 கருத்து:

பராஅத் இரவு

 30-01-2026 شعبان  -  بسم الله الرحمن الرحيم     ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...