வியாழன், 15 டிசம்பர், 2022

பிரிவினைவாதிகளை அடையாளம் காண்போம்

 


16-12-2022

 

بسم الله الرحمن الرحيم 

பிரிவினைவாதிகளை

அடையாளம் காண்போம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 





இஸ்லாத்தை அழிப்பதற்காக வெளியில் இருந்து சூழ்ச்சி செய்பவர்களின் தீங்கை விட உள்ளுக்குள் இருந்து கொண்டு நம்மைப் போன்ற தோற்றத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்களின் தீங்கு மிக மோசமானதாகும். அவர்களில் காதியானிகள், 19 குரூப், ஷகீலின் கூட்டத்தினர் ஆகியோரைப் பற்றி காண்போம்.

கடைசி காலத்தில் முஸ்லிம்களில் நிறைய கூட்டத்தினர் உருவாகுவார்கள் என்ற முன்னறிவிப்பு

 عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ..وَإِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ (ابوداود)- كِتَاب الْفِتَنِ

எனக்குப் பின்னால் நான் மிகவும் அஞ்சுவது வழி கெடுக்கும் தலைவர்களைத் தான். அவர்களை வெட்டுவதற்காக நான் அவர்களின் கழுத்தில் வாளை வைக்க ஆரம்பித்தால் கியாமத் வரை அதைக் கீழே வைக்க முடியாது.  

عن عَرْفَجَةَ رض قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ سَتَكُونُ هَنَاتٌ وَهَنَاتٌ فَمَنْ أَرَادَ أَنْ يُفَرِّقَ أَمْرَ هَذِهِ الْأُمَّةِ وَهِيَ جَمِيعٌ فَاضْرِبُوهُ بِالسَّيْفِ كَائِنًا مَنْ كَانَ(مسلم) بَاب حُكْمِ مَنْ فَرَّقَ أَمْرَ الْمُسْلِمِينَ وَهُوَ مُجْتَمِعٌ- كِتَاب الْإِمَارَةِ –( هَنَاتٌ والمراد بها هنا الفتن)

عن حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَيْرِ وَكُنْتُ أَسْأَلُهُ عَنْ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ نَعَمْ وَفِيهِ دَخَنٌ قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا قَالَ هُمْ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ قَالَ فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ (بخاري) باب كَيْفَ الأَمْرُ إِذَا لَمْ تَكُنْ جَمَاعَةٌ –الفتن

அல்லாஹ்வின் தூதரே! இந்த நன்மைக்குப்பின் தீமை ஏற்படுமா எனக் கேட்டேன்? ஆம். நரகத்தின் வாயிலில் நின்று கொண்டு அழைக்கும் அழைப்பாளர்கள். அவர்களுக்கு யார் பதில் தருகின்றானோ அவனை அவர்கள் அதில் (நரகில்) தூக்கிப் போட்டுவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப்பற்றி எமக்கு வர்ணியுங்கள் எனக் கேட்டேன். ஆம். அவர்கள் நமது இனத்திலுள்ள ஒரு கூட்டம்தான். நமது மொழியே பேசுவார்கள், எனக் கூறினார்கள். அந்த நிலையை அடைந்தால் என்ன செய்யட்டும் என்று கேட்டபோது முஸ்லிம்களுக்கென்று ஒட்டு மொத்த தலைமை இருந்தால் அதைப் பின்பற்று என்றார்கள். அவ்வாறு இல்லா விட்டால் (அதாவது ஆளாளுக்கு ஒரு ஜமாஅத் என்று பெயர் வைத்துக் கொண்டால்) என்ன செய்வது என்று கேட்டபோது எல்லா விதமான ஜமாஅத்துகளை விட்டும் நீங்கி விடு. (கீழே விழுந்தால் ஏதாவது ஒரு சகதியில் தான் விழ வேண்டியதிருக்கும் என்று அஞ்சி) ஒரு மரத்தின் கிளையைப் பற்றிப்பிடித்துக் கொண்டு தொங்குபவரைப் போன்று மவ்த் வரை உன் நிலை நீடித்தாலும் சரியே எந்தக் குழப்பத்திலும் சிக்கி விடாதே..  (முஸ்லிம்)                            

நபி (ஸல்) அவர்கள் இருக்கும்போதே தன்னை நபி வாதிட்டவர்களின் கெட்ட முடிவு

பனூ ஹனீஃபா கிளையைச் சார்ந்த பதினேழு நபர்கள் ஹிஜ்ரி 9ம் ஆண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இவர்களில் பொய்யன் முஸைலமாவும் ஒருவன். அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். ஆனால், முஸைலமா இஸ்லாத்தை ஏற்பது போல் நடித்தான். இவனிடம் பதவி மோகமும் அகம்பாவமும் இருந்ததால், குழுவுடன் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திக்காமல் தனியாக சந்தித்தான். இவனைத் தங்களது நேசனாக மாற்ற நபி (ஸல்) சொல்லாலும் செயலாலும் அழகிய முறையில் நடந்து கொண்டார்கள். அது எவ்விதப் பலனையும் தராததால் அவனிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு முன்பு நபி (ஸல்) ஒரு கனவு கண்டிருந்தார்கள். அதில் பூமியில் உள்ள பொக்கிஷங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, அதிலிருந்து தங்கக் காப்புகள் இரண்டு தங்களது கைக்குள் வருவதாக பார்த்தார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. மறைவில் இருந்து அவ்விரண்டையும் ஊதி விடுங்கள் என அறிவிக்கப்படவே நபி(ஸல்) ஊதிவிட்டார்கள். அது காணாமல் போய் விட்டது. தனக்குப் பின் இரண்டு பொய்யர்கள் வருவார்கள் என இக்கனவுக்கு விளக்கம் கூறினார்கள்.         

யமாமா திரும்பிய பின் தன்னையும் நபி (ஸல்) தூதுத்துவத்தில் கூட்டாக்கிக் கொண்டார்கள் என்று கூறி தனது வாதங்களை அடுக்கு மொழிகளினாலும் வசனங்களினாலும் மக்கள் மத்தியில் பரப்பினான். தம் கூட்டத்தாருக்கு மது விபச்சாரம் இரண்டையும் ஆகுமாக்கினான். அவனது கூட்டத்தினர் அவனை பின்பற்றினர். அவன் மக்களிடம் மிகப் பிரபலமானான். மக்கள் அவனை ரஹ்மானுல் யமாமா (யமாமாவின் இறைவன்)என்று பெயர் சூட்டி அழைத்தனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு அபூபக்ர் (ரழி) அவர்கள் இவனையும் இவனது தோழர்களையும் ஒழிப்பதற்காக யமாமாவுக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையில் ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி  இடம் பெற்றிருந்தார். அவர்தான் பொய்யன் முஸைலமாவைக் கொன்றொழித்தார்.- ஃபத்ஹுல் பாரீ     

நபியென்று தன்னை வாதிட்ட மற்றொருவன் அஸ்வத் அனஸி. இவனும் யமன் வாசியே! இவனைக் கொல்வதற்காக நபி (ஸல்) ஃபைரோஸ்’ (ரழி) என்ற தனது தோழர் ஒருவரை அனுப்பினார்கள். அவனது தலையை அவர் கொய்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்நிகழ்ச்சி நபி (ஸல்) மரணத்திற்கு ஒருநாள் முன்பு நடைபெற்றது. அல்லாஹ் இச்செய்தியை வஹி மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துத் தந்துவிட்டான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அபூபக்ர் (ரழி) கலீஃபாவான போது ஃபைரோஸ் (ரழி) மதீனா வந்தடைந்தார். (ஃபத்ஹுல் பாரி)                                                        

பொய் நபியின் வாதத்தை அழிக்க முற்பட்டவருக்கு அல்லாஹ் செய்து காட்டிய அற்புதம்

عن شُرَحْبِيْلُ بنُ مُسْلِمٍ، قَالَ: أَتَى أَبُو مُسْلِمٍ الخَوْلاَنِيُّ المَدِيْنَةَ، وَقَدْ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ.

عن شُرَحْبِيْلُ بنُ مُسْلِمٍ، : أَنَّ الأَسْوَدَ تَنَبَّأَ بِاليَمَنِ، فَبَعَثَ إِلَى أَبِي مُسْلِمٍ، فَأَتَاهُ بِنَارٍ عَظِيْمَةٍ، ثُمَّ إِنَّهُ أَلْقَى أَبَا مُسْلِمٍ فِيْهَا، فَلَمْ تَضَرَّهُ. فَقِيْلَ لِلأَسْوَدِ: إِنْ لَمْ تَنْفِ هَذَا عَنْكَ، أَفْسَدَ عَلَيْكَ مَنِ اتَّبَعَكَ. فَأَمَرَهُ بِالرَّحِيْلِ، فَقَدِمَ المَدِيْنَةَ، فَأَنَاخَ رَاحِلَتَهُ، وَدَخَلَ المَسْجِدَ يُصَلِّي، فَبَصُرَ بِهِ عُمَرُ -رَضِيَ اللهُ عَنْهُ- فَقَامَ إِلَيْهِ، فَقَالَ: مِمَّنِ الرَّجُلُ؟ قَالَ: مِنَ اليَمَنِ.قَالَ: مَا فَعَلَ الَّذِي حَرَّقَهُ الكَذَّابُ بِالنَّارِ؟ قَالَ: ذَاكَ عَبْدُ اللهِ بنُ ثُوَبٍ. قَالَ: نَشَدْتُكَ بِاللهِ، أَنْتَ هُوَ؟ قَالَ: اللَّهُمَّ نَعَمْ. فَاعْتَنَقَهُ عُمَرُ، وَبَكَى، ثُمَّ ذَهَبَ بِهِ حَتَّى أَجْلَسَهُ فِيْمَا بَيْنَهُ وَبَيْنَ الصِّدِّيْقِ، فَقَالَ:الحَمْدُ للهِ الَّذِي لَمْ يُمِتْنِي حَتَّى أَرَانِي فِي أُمَّةِ مُحَمَّدٍ مَنْ صُنِعَ بِهِ كَمَا صُنِعَ بِإِبْرَاهِيْمَ الخَلِيْلِ. (البداية والنهاية  (سير أعلام النبلاء)

 யமனில் அஸ்வத் என்பவன் தன்னை நபி என்று பிரகடனப் படுத்திக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் பெரும் கூட்டம் இருந்தது. அப்படியிருந்தும் அவன் பொய்யன் என்பதை அங்கே தனி நபராக இருந்து மக்களுக்கு விளக்குவதில் அபூ முஸ்லிம் கவ்லானீ ரஹ் அவர்கள் மும்முரமாக இருந்தார்கள். இவர் இருந்தால் நமக்கு ஆபத்து என்று அறிந்த அவன் அபூ முஸ்லிம் கவ்லானீ ரஹ் அவர்களை அழைத்து வர ஏவினான். அவர்களை மாபெரும் நெருப்புக் குண்டத்தில் தூக்கிப் போட்டான். ஆனால் எப்படி நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினானோ அவ்வாறு இவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான். நெருப்பு அவர்களை எதுவும் செய்யவில்லை. அப்போது அஸ்வதிடம் இவரை நீங்கள் நாடு கடத்தா விட்டால் உங்களைப் பின்பற்றுபவர்களை இவர் மாற்றி விடுவார் என்று கூறப்பட்டது. அப்போது அஸ்வதுல் அனஸீ ஒரு வாகனத்தில் ஏற்றி அபூ முஸ்லிம் கவ்லானீ ரஹ் அவர்களைக் கொண்டு போய் எங்காவது விட்டு விட ஏவினான். அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். தன் வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு மஸ்ஜ வந்த போது அவர்களை ஹழ்ரத் உமர் ரழி அவர்கள் பார்த்து விட்டார்கள். அவர்கள் அபூ முஸ்லிம் கவ்லானீ ரஹ் என்று உமர் ரழி அவர்களுக்குத் தெரியாது. ஆனால் யமனில் இப்படி ஒரு சம்பவம் நடந்த து என்று தெரியும். எனவே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, யமனில் இருந்து என்றவுடன் அப்படியானால் யமனில் பொய்யன் அஸ்வத் நெருப்பில் போட்டானே அவரைப் பற்றித் தெரியுமா என்று கேட்க, தன்னை யார் காட்டிக் கொள்ளாமல் தனது அசல் பெயரைக் கூறி, ஆம் அப்துல்லாஹ் இப்னு ஸுவப் என்பவருக்குத்தான் அவ்வாறு நடைபெற்றது என்று கூற, உமர் ரழி அவர்களின் மனதில் அல்லாஹ் உதிப்பை உண்டாக்கி விட்டான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் தானே அந்த நல்ல மனிதர் என்று கேட்க, அவர் வேறு வழியின்றி ஆம் என்றார். அவரைக் கட்டியணைத்த உமர் ரழி அவர்கள் அழுதார்கள். (அவரைப் பார்க்காத நிலையில் மவ்த் வந்து விடுமோ என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.) பிறகு உமர் ரழி அவர்கள் அபூபக்கர் ரழி அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். இருவருக்கும் நடுவில் அவர் அமர்ந்திருக்கும் நிலையில் ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் மிக சந்தோஷத்துடன் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நடந்த து போன்று இந்த உம்மத்தில் யாருக்கு நிகழ்ந்ததோ அந்த ஒருவரைப் பார்ப்பதற்கு முன்பாக என்னை மவ்த்தாக்காமல் விட்டு வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்கள்.                            

அஸ்வதைக் கொன்றவருக்கு நபி ஸல் அவர்களின் சுபசோபனம்

عن جشيش الديلمي قال قدم علينا وبرة بن يحنس بكتاب النبي {صلى الله عليه وسلم} يأمرنا فيه بالقيام على ديننا والنهوض في الحرب والعمل على الأسود الكذاب فقاتلناه حتى قتلت الأسود وألقيت إليهم رأسه وشننا الغارة وكتبنا إلى النبي {صلى الله عليه وسلم} بالخبر  وهو حي فناداه الوحي من ليلته وأخبر اصحابه بذلك وقدمت رسلنا بعده على أبي بكر الصديق فهو الذي أجابنا عن كتبنا

عن ابن عمر قال اتى النبي {صلى الله عليه وسلم} الخبر من السماء في الليلة التي قتل فيها الاسود العنسي فخرج علينا وقال قتل الأسود البارحة قتله رجل مبارك من أهل بيت مباركين قيل ومن هو قال فيروز  - فاز فيروز (الخصائص الكبرى للامام جلال الدين السيوطى رحمه الله

யமனில் அஸ்வத் தன்னை நபி என வாதிட்டது நபி ஸல் அவர்கள் வாழ்ந்த காலமாகும். அப்போது நபி ஸல் அவர்கள் ஒருவரை அனுப்பி யமனில் உள்ள ஒரு சிலரின் துணையோடு அஸ்வதின் கதையை முடித்து விட கடிதம் எழுதி அனுப்பினார்கள். அக்கடிதம் வந்து சேர்ந்தது. தந்திரமாக அவர்கள் இணைந்து அஸ்வதைக் கொன்றனர். அதில் முக்கியமானவர் ஃபைரோஸ் என்பவர். அஸ்வதின் கதையை முடித்தவுடன் அச்செய்தி நபி ஸல் அவர்களுக்குக் கடிதமாக வந்து சேர சில மாதங்கள் ஆனது. காரணம் யமன் 2 ஆயிரம் மைல்கள் தூரம் இருந்த து. ஆனால் இதற்கிடையில் அல்லாஹ் அஸ்வத் கொல்லப்பட்ட அன்று இரவே நபி ஸல் அவர்களுக்கு அறிவித்து விட்டான். அச்செய்தியை தோழர்களிடம் சொன்ன போது யார் கொன்றது என்று கேட்க, ஃபைரோஸ் என்பவர் தான் என்று கூறி விட்டு நிச்சயமாக ஃபைரோஸ் வெற்றியடைந்து விட்டார் என்றார்கள். ஆனால் அச்செய்தியை நேரடியாக வந்து சொல்லி நபிகளாரின் துஆவைப் பெற ஃபைரோஸ் அவர்கள் உட்பட மற்றவர்கள் மதீனாவுக்கு வந்து சேரும்போது நபி ஸல் அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து விட்டார்கள். ஃபைரோஸ் அழுதார்கள். அப்போது மற்றவர்கள் நபி ஸல் அவர்கள் சொன்ன சுபச் செய்தியைச் சொல்லி சமாதானப் படுத்தினார்கள்.    

முஸைலமா, அஸ்வதைப் போன்றே மிர்ஸா காதியானிக்கும் ஏற்பட்ட மோசமான மரணம்

1907 மற்றும் 1908ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மிர்ஸா பாகிஸ்தான் லாகூர் நகருக்கு குடும்பத்துடன் பயணமானான். அங்கு தன் பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினான். அதுசமயம் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு (பேதி) ஏற்பட்டு 1908ம் ஆண்டு மே மாதம் 26ம்நாள் மரணமடைந்தான். இதேபோலவே ரஷாத் கலீஃபாவும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். தன்னை நபி என்று சொன்னவர்களின் இறுதி முடிவு இப்படியே நடந்துள்ளது.

காதியானிகளை எப்படி  அடையாளம் கண்டு கொள்வது?

ஒவ்வொரு மஹல்லாவிலும் காதியானிகள், 19 குரூப், ஷகீலிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி மஸ்ஜிதில் அறிவிப்புச் செய்வது அவசியமாகும். முடிந்தால் அவர்களின் போட்டோவையும் அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைத்தால் நல்லது. அப்போது தான் அவர்கள் விஷயத்தில் மற்றவர்கள் கவனமாக இருக்க முடியும்.     

காதியானிகளின் வணக்கஸ்தலம் சென்னையில் கோடம்பாக்கத்தில் லிபர்டி அருகில் உள்ளது. பார்ப்பதற்கு மஸ்ஜித் போலவே இருக்கும். 40 வருடங்களாக தஃவாவுடைய பணியிலிருந்த ஒரு நல்ல முஸ்லிம் பாத்ரூமுக்காக இந்த வணக்கஸ்தலத்திற்குள் நுழைந்தவரை மேலே வாருங்கள் பயான் நடைபெறுகிறது என்று அழைத்துச் சென்றார்கள். அவர் கீழே திரும்பி வரும்போது காதியானியாக திரும்பி வந்தார். அந்த அளவுக்கு தங்களின் பேச்சில் மற்றவரை மயக்குபவர்கள் இந்த காதியானிகள். ஆதம்பாக்கத்திலும் இவர்களின் வணக்கஸ்தலம் உள்ளது. இது தவிர கோவை குனியமுத்தூரிலும் உடன்குடி மேலத்தெருவிலும் மதுரை அவனியா புரத்திலும் உள்ளது. அனைத்தும் பார்ப்பதற்கு மஸ்ஜித் போலவே இருக்கும். தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கலிமா தய்யிபாவை கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருப்பார்கள்.                                                              

காதியானிகள் மக்களை எப்படி கவருகிறார்கள்.

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அரசியலில் மிக உச்சத்தில் இருப்பவர்களை அடிக்கடி சந்தித்து தங்களை முஸ்லிம்கள் என காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஈத்மிலன் என்று அடிக்கடி அதில் மாற்று மதத்தவர்களை அழைத்து நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். இராணுவத்தின் தலைமை அதிகாரியைக் கூட சென்று சந்தித்து பொன்னாடை போர்த்தி விட்டு வந்துள்ளார்கள். பட்டி மன்ற பேச்சாளர்களான பர்வீன் சுல்தானா, சாலமன் பாப்பையா போன்ற பேச்சாளர்களையும் சந்தித்து தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.  

காதியானிகளின் வெப்சைட்

 ASK ISLAM என்ற பெயரில் காதியானிகளின் வெப்சைட் உள்ளது. இன்னும் பல பெயர்களிலும் செயல்படுகிறார்கள் ISLAM என்று வந்தவுடனே அதில் நல்ல விஷயங்கள் இருக்கும் என்று உள்ளே நுழைந்து விடக்கூடாது. அதில் நச்சுக் கருத்துக்களும் நிறைய இருக்கும். முக்கியமாக அஹ்மதிய்யா ஜமாஅத் என்று வந்தால் கவனம் தேவை.

19 குரூப்பின் தலைவன் ரஷாத் கலீஃபாவைப் பற்றி...

இவன் எகிப்தில் 1935-இல் பிறந்தான். படித்து பட்டம் பெற்றவன். வழக்கம் போல் யூத, கிறிஸ்தவர்களின் கைக்கூலியாக செயல்பட இவனையும் கருவியாக பயன்படுத்தப்பட்டது1971-இல் இருந்தே இவன் குழப்பம் செய்ய ஆரம்பித்தான் 1989-இல் இவன் தன்னை ரஸூல் என்று வாதிடுகிறான். அதற்கடுத்த வருடமே 1990-இல் அமெரிக்காவின் ரிஸோனா மாநிலத்தில் ஃபஜ்ரு தொழுகையை முடித்து விட்டு வந்த போது கொல்லப்பட்டான்.  

19 குரூப் என்று கூறப்படுவதற்குக் காரணம்

திருக்குர்ஆனில்  74-வது வது சூராவில் 30 வது வசனத்தில்  அந்த நரகத்தின் மீது 19 காவலாளிகள் உள்ளனர் என்று மலக்குகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.  ஆனால் இவர்கள் அதன் மீது 19 உள்ளது என ஒட்டு மொத்த குர்ஆனின் அத்தனை விஷயங்களையும் அப்ஜத் கணக்கின் அடிப்படையில் 19 என்ற எண்ணிக்கையில் வருவதாக ஒரு பிரமையை உண்டாக்கி அதன் மூலம் மக்களை திசை திருப்புவதால் 19 குரூப் என்றழைக்கப்படுகிறது.   

 இவன் ஆரம்பத்தில் குர்ஆனின் அத்தனை விஷயங்களையும் 19 என்ற எண்ணிக்கையில் வருவதாக கூறியபோது பல முஸ்லிம்கள் அவனை ஆதரித்தனர். மக்களின் ஈர்ப்பை உண்டாக்கிய பிறகு தான் தன்னை ரஸூல் என்று சொல்ல ஆரம்பித்தான். இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான இவனது கொள்கைகளை கிறிஸ்தவர்களை விடவும், காதியானிகளை விடவும் மோசமானதாகும்.                                   

இவர்களின் கொள்கைகளில் சில..

மற்ற குர்ஆன் தர்ஜுமாக்களைப் போன்றே இவன் வெளியிட்டுள்ள குர்ஆன் தர்ஜுமா  குர்ஆன் இறுதி ஏற்பாடு என்ற பெயரில் உள்ளது. யாரேனும் குர்ஆன் தர்ஜுமாவை இலவசமாக தருகிறார்கள் என்பதற்காக கண்டதையும் வாங்கி விடக்கூடாது. அவனது தர்ஜுமாவில் பல இடங்களில் ரஸூல் என்ற இடத்தில் அடைப்புக்குறியிட்டு ரஷாத் என்று தன்னை குறிப்பிட்டுள்ளான். குறிப்பாக குர்ஆனில் 33-வது சூராவில் 7-வது வசனத்தில் நபிமார்களிடமும் இன்னும் உம்மிடமும் நாம் வாக்குறுதி எடுத்தோம் என்ற இடத்தில் அந்த உம்மிடம் என்ற வார்த்தை தம்மைக் குறிப்பதாக எழுதியுள்ளான். அதாவது இவனது கருத்து நபிமார்களின் வருகை முடிந்து விட்டது ஆனால் ரஸூல்மார்களின் வருகை முடிந்து விடவில்லை அந்த ரஸூல் நான் தான். அதனால் தான் அல்லாஹ் நபிமார்கள் என்று தனியாக கூறி விட்டு உம்மிடம் என்று தனியாகவும் கூறுகிறான் என்பது இவன் வாதமாகும்.            

 

பொய்யன் ரஷாத் கலீஃபா மொழி பெயர்த்த தர்ஜுமாவிலும்,

132 பக்கத்தில் அவன் எழுதிய விரிவுரையிலும் கூறப்பட்டுள்ளவை

ஹதீஸ் என்பதும் சுன்னத் என்பதும் முழுக்க முழுக்க சாத்தானின் வார்த்தைகள். இட்டுக்கட்டாகும்.

குர்ஆனுக்கு முஹம்மது நபி கொடுத்த விளக்கங்கள் தவறானவை. நான் சொல்லும் விளக்கங்கள் தான் சரியானவை முஹம்மது நபி ஆரம்பத்தில் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தார்.

ஸலவாத் என்பதே கிடையாது.

நபிகள் நாயகம் ஒருவேளை உலகத்திற்கு திரும்பி வந்தால் முஸ்லிம்கள் அவரை கல்லால் அடித்துக் கொள்வார்கள்-ரஷாத் கலீஃபாவை ரஸூலாக ஏற்காதவர்கள் இணை வைப்பு முஸ்லிம்கள். இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள். (இவனது தர்ஜுமாவில் பெரும்பாலான நம்மை இணை வைப்பு முஸ்லிம்கள் என்றே குறிப்பிடுகிறான்)-

நரகத்தில் நுழைந்தால் (முஸ்லிம்களாக இருந்தாலும்) என்றைக்கும் வெளியேறவே முடியாது-

இசைகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது தான்.

கப்ருடைய வேதனை என்பது கிடையாது.                  

முஹம்மத் நபியோ அல்லது மற்றவர்களோ பரிந்துரை ஷஃபாஅத் செய்வார்கள் என்பது அறவே கிடையாது.

 இரு பெருநாட்கள் என்பது கிடையாது.

கொலை, திருட்டு ஆகியவற்றுக்கு தண்டனை என்பது கிடையாது. குர்ஆனில் இது பற்றி வந்துள்ள வசனங்களுக்கு வெறும் அடையாளமிடுதல் என்பது தான் பொருள். –

ஃபர்தா, ஹிஜாப் தேவையில்லை. இவர்களின் ஆலயங்களில் ஆண்களும், பெண்களும் கலந்து நின்று தொழுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிமாவே கிடையாது. லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதுடன் சேர்த்து முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று சொன்னவன் காஃபிர். 

உலக முடிவு நாள் எனக்கு மட்டுமே ( ரஷாத் கலீஃபா) அறிவித்துத் தரப்பட்டுள்ளது.

குர்ஆனில் சூரா தவ்பாவின் கடைசி இரு வசனங்களாக இடம் பெற்றிருப்பது குர்ஆன் வசனங்களே அல்ல. –

40 வயது வரை எத்தகைய பெரும்பாவத்தை செய்தாலும் மரணித்தால் உடனே சுவனம் சென்று விடலாம். குர்ஆனில் அல்லாஹ் தன்னைக் குறித்து நாம் என்ற வார்த்தையை எங்கெல்லாம் பண்மையாக பயன்படுத்துகிறானோ அங்கெல்லாம் அந்த வார்த்தை அல்லாஹ், ரஸூல், ஜிப்ரயீல் ஆகிய மூவரையும் குறிக்கும்      

 இவையனைத்தும் ரஷாத் கலீஃபா எழுதிய குர்ஆன் தர்ஜுமாவிலும், அவன் எழுதிய நூலிலும் இடம் பெற்றுள்ள செய்திகளில் சிறிதளவு தான். இன்னும் நிறைய உள்ளது. ஆக இப்படிப்பட்ட தீமையான ஒரு கூட்டத்தில் முஸ்லிம்களில் சிலர் (சென்னையில் மட்டும் சுமார் 700 பேர்) சேர்ந்திருக்கிறார்கள் என்றால் நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாமா ? முஸ்லிம்களில் 700 பேர் இஸ்லாத்தை விட்டு மதம் மாறி விட்டார்கள் என்ற செய்தி நல்லதா ? பெரும்பாலும் இதில் சேருபவர்கள் மார்க்கத்தை விளங்காதவர்கள், வித்தியாசமாக சிந்திப்பவர்கள். எதற்கெடுத்தாலும் வாதம் செய்பவர்கள் தான் இதில் சேர வாய்ப்புண்டு.  போனவர்களை திரும்ப கொண்டு வருவது கடினம் என்றாலும் இனி இருப்பவர்களையேனும் பாதுகாப்பது நம் கடமை நமக்குள்ளே இருக்கிற கருத்துவேறுபாடுகளை மறந்து இந்த ஷைத்தானிய கூட்டத்தை வேரறுக்கும் முயற்சியில் ஒன்றிணைய வேண்டும் 

மற்றொரு குழப்பவாதியான ஷகீல் பின் ஹனீஃப் பற்றி...

இவன் பீகார் மாநிலத்தில் உள்ள உஸ்மான் பூரைச் சார்ந்தவன். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள லஷ்மி நகரில் தன்னை இமாம் மஹ்தீ என்பதாகவும் தாம் தான் கடைசி காலத்தில் வரவிருக்கும் ஈஸா அலை என்பதாகவும் வாதிட்டான். இவனைப் பின்பற்றும் கூட்டமும் சென்னையில் ஆங்காங்கே வளர்ந்து வளருகின்றனர்.

அதாவது இமாம்மஹ்தீ என்பவரும் கடைசி காலத்தில் வரவிருக்கும் ஈஸா அலை ஆகியஇருவரும் ஒரே நபர்தான். அது தான் நான் என இவன் வாதிடுகிறான். இவனும் மோசமான மரணத்திற்காக காத்திருக்கிறான்.      

 

عن   عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا (بخاري)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...