عَنْ أَبِي هُرَيْرَةَ ،رضي الله
عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، قَالَ :
لَيْسَ السَّنَةُ بِأَنْ لا تُمْطَرُوا ، وَلَكِنَّ السَّنَةَ أَنْ تُمْطَرُوا
ثُمَّ تُمْطَرُوا ثُمَّ لا تُنْبِتُ الأَرْضُ شَيْئًا. (مسند الشافعي
நபி ஸல் கூறினார்கள். மழையே இல்லாத தால் ஏற்படும் பஞ்சம் உண்மையான பஞ்சம்
அல்ல. மாறாக மழை அளவுக்கு அதிகமாகப் பெய்து (வயல்கள் வீணாகி அதனால்) பூமி எதையும் விளைவிக்காமல் போகுமோ அது தான் உண்மையான பஞ்சமாகும்.
عن أنس بن مالك رضي الله عنه يقول : قال رسول الله صلى
الله عليه و سلم : يأتي على الناس زمان تمطر السماء مطرا و لا تنبت الأرض شيئا (مستدرك حاكم
கடைசியில் ஒரு காலம் வரும். மழை அளவுக்கு அதிகமாகப் பெய்யும். அதனால் (வயல்கள் வீணாகி) பூமி எதையும் விளைவிக்காமல் போகும்.
பழங்கால
மக்களின் வாழ்க்கை முறையை நினைவு படுத்திய புயல் பாதிப்பு
நவீன
சாதனங்களால் நன்மையா தீமையா என விவாதங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தாலும்
அவற்றுடன் பழகிப் போன சமூகத்திற்கு அது இல்லாமல் வாழ முடியாது. அத்தகைய நவீன
சாதனங்களில் ஒன்றான மின்சாரம் இல்லாமல் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்பதை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் பார்த்தோம். மஃரிபுக்கே வீடுகள் முழுவதும்
இருட்டாகி விட்டன. இப்படித் தான் பழங்கால மக்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று நாம்
நினைத்துப் பார்க்க வேண்டும்.
சிரமத்திலும் சில நன்மைகள்
எல்லா சீரியல்
தொடர்களையும் பார்த்து முடித்து இரவு 12 மணிக்குத் தூங்கும் பெண்களும் சொல்போன்
சார்ஜ் தீர்ந்து SWITCH-OFF ஆகும்
அளவுக்கு எல்லா விளையாட்டுக்களையும் விளையாடி முடித்து இரவு 12 மணிக்குத் தூங்கும்
சிறுவர்களும் அன்று சீக்கிரமாக தூங்கினார்கள். அது தான் சுன்னத்தும் கூட..
عَنْ أَبِي بَرْزَةَ رضي الله عنه
قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ..
يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا (أي قبل العشاء وَالْحَدِيثَ بَعْدَهَا..(بخاري)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழாமல்
தூங்குவதையும் இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதையும் தடுத்தார்கள்
لِأَنَّ النَّوْم قَبْلَهَا قَدْ يُؤَدِّي إِلَى إِخْرَاجهَا عَنْ وَقْتهَا
مُطْلَقًا أَوْ عَنْ الْوَقْت الْمُخْتَار وَالسَّمَر بَعْدَهَا قَدْ يُؤَدِّي
إِلَى النَّوْم عَنْ الصُّبْح أَوْ عَنْ وَقْتهَا الْمُخْتَار أَوْ عَنْ قِيَام
اللَّيْل (فتح الباري)
இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதால் அதிகாலையில்
எழுந்திருக்க முடியாமல் போகலாம் என்பதால் நபி ஸல் அவ்வாறு தடுத்தார்கள். ஃபத்ஹுல்
பாரீ
அன்றைய காலத்தில் கூறப்பட்ட வீண் பேச்சுக்கள் என்ற
பட்டியலில் இன்றுள்ள பொழுது போக்கு சாதனங்களும் அடங்கும். இத்தகைய பொழுது போக்கு
சாதனங்களால் இன்று மக்களின் தூக்கம் தாமதமாகி விட்டது
عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ
قَال:رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ النَّاسَ عَلَى الْحَدِيثِ بَعْدَ
الْعِشَاءِ وَيَقُولُ:أَسَمَرٌ أَوَّلَ اللَّيْلِ وَنَوْمٌ آخِرَهُ ؟
(مصنف ابن ابي شيبة)-
உமர் ரழியல்லாஹு
அன்ஹு அவர்கள் இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுபவர்களை அடிப்பவர்களாக
ஆயிருந்தார்கள். மேலும் இரவில் துவக்கத்தில் தூங்குவதற்கு பதிலாக பேசிக்
கொண்டிருந்து விட்டு இரவில் கடைசிப் பகுதியில் தூங்கப் போகிறீர்களா என்றும்
கண்டிப்பார்கள்.
عَنْ أَبِي وَائِلٍ وَإِبْرَاهِيمَ
قَالاَ: جَاءَ رَجُلٌ إِلَى حُذَيْفَةَ فَدَقَّ الْبَابَ فَخَرَجَ إِلَيْهِ
حُذَيْفَةُ فَقَالَ:مَا جَاءَ بِكَ ؟فَقَالَ:جِئْت لِلْحَدِيثِ فَسَفَقَ
حُذَيْفَةُ الْبَابَ دُونَهُ ثُمَّ
قَالَ:إِنَّ عُمَرَ جَدَبَ لَنَا السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ(مصنف ابن
ابي شيبة
ஹுதைபா ரழி அவர்களிடம் இரவில் ஒருவர் வந்து தகவைத்
தட்டினார். ஹுதைபா ரழி வெளியே வந்து இந்த நேரத்தில் எதற்காக வந்தீர்கள் என்று
கேட்க, உங்களிடம் பேசிக் கொண்டிருக்க வந்தேன் என்றார். அப்போது ஹுதைபா ரழி அவர்கள்
(அவரைக்
கண்டிக்கும் விதமாக) உமர் ரழி இஷாவுக்குப் பிறகு வீண்
பேச்சுக்கள் பேசுவதை முற்றிலும் தடை செய்தார்கள் என்று கூறி விட்டு கதவைச்
சாத்திக் கொண்டார்கள்.
وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ
مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ
فِى السَّمَرِ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ فَكَرِهَ قَوْمٌ مِنْهُمُ
السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ وَرَخَّصَ بَعْضُهُمْ إِذَا كَانَ فِى
مَعْنَى الْعِلْمِ وَمَا لاَ بُدَّ مِنْهُ مِنَ الْحَوَائِجِ (ترمذي)
மார்க்க விஷயங்களுக்காக சில நேரம் விழித்திருக்கும் தேவை
ஏற்பட்டால் தவறில்லை
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ أَنَّ رَسُولَ اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَعْقِدُ
الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ
يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ فَإِنْ اسْتَيْقَظَ
فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ
فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ
وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ.(بخاري)
ஷைத்தான் நீங்கள் தூங்கும்போது உங்களின் பிடரியில்
முடிச்சுப் போடுகிறான். இரவு நீளமாக உள்ளது. நன்றாக (விடியும் வரை)
தூங்கு என (மனிதனை மயக்கி வைக்கிறான்)
எப்போது ஒருவர் அதிகாலையில் எழுந்து அல்லாஹ்வை நினைப்பாரோ அப்போது முதல் முடிச்சு
அவிழும். எப்போது அவர் உளூச் செய்வாரோ
அப்போது இரண்டாவது முடிச்சு அவிழும். எப்போது அவர் ஃபஜ்ரு தொழுவாரோ அப்போது
மூன்றாவது முடிச்சு அவிழும். இம்மூன்றும் நடைபெறா விட்டால் அன்று முழுவதும்
ஷைத்தானின் கட்டுப்பாட்டில் உள்ளவராகவே இருப்பார்.
عن عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: "النَّوْمُ ثَلَاثَةٌ: فَنَوْمٌ خَرَقٌ،
وَنَوْمٌ خَلَقٌ، وَنَوْمٌ حُمْقٌ، فَأَمَّا نَوْمُ خَرَقٍ: فَنَوْمَةُ الضُّحَى
يَقْضِي النَّاسُ حَوَائِجَهُمْ وَهُوَ نَائِمٌ، وَأَمَّا نَوْمُ خَلَقٍ:
فَنَوْمَةُ الْقَايِلَةِ نِصفِ النَّهَارِ، وَأَمَّا نَوْمَةُ حُمْقٍ: نَوْمَةٌ
حِينَ تَحْضُرُ الصلَاةُ ؟(مصنف ابن ابي شيبة)
விளக்கம்-பண்புள்ள தூக்கம் என்றால் மதிய நேரத்தில் தூங்கும் கைலூலா தூக்கம்.
இது சுன்னத். 2,மடத்தனத் தூக்கம் என்றால் காலை நேரத்தில் தூங்குவது 3, மந்த புத்தியை ஏற்படுத்தும் தூக்கம் தொழுகை
நேரத்தில் தூங்குவது
சிரமத்திலும் மற்றும் சில
நன்மைகள்.
தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் தங்க முடியாத
மக்களுக்கு மஸ்ஜித்கள் வீடுகளாக மாறின
இது சிறந்த
முன்மாதிரியாகும். மஸ்ஜித்கள் என்பது வெறுமனே தொழுகைக்காக மட்டும் உள்ளதல்ல. மாறாக
பல்வேறு சேவைகளுக்கும் மஸ்ஜித் பயன்பட வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக நாம் விளங்க
வேண்டும்.
மழை, புயலால் எத்தனை
பெரிய பாதிப்புகள் வந்தாலும் அவற்றைத் திட்டவும் சபிக்கவும் கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسُبُّوا الرِّيحَ فَإِنَّهَا مِنْ رَوْحِ
اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ
خَيْرِهَا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا (ابن ماجة
காற்றைத் திட்டாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வின்
புறத்திலிருந்து வருவதாகும். சில நேரங்களில் அது அருளாகவும் சில நேரங்களில் அது
அதாபாகவும் இருக்கும். எனவே அல்லாஹ்விடம் அதன் நல்லதைக் கேளுங்கள். அதன் தீமையை
விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேளுங்கள்.
عَنِ الْحَسَنِ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه
وسلم كَانَ فِي سَيْرٍ ، فَهَبَّتْ رِيحٌ ، فَكَشَفَتْ عَن رَجُلٍ قَطِيفَةً
كَانَتْ عَلَيْهِ ، فَلَعَنَهَا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم :
ألَعَنْتهَا ؟ قَالَ : يَا رَسُولَ اللهِ ، كَشَفَتْ قَطِيفَتِي ، فَقَالَ : إذَا
رَأَيْتهَا فَسَلَ اللَّهَ مِنْ خَيْرِهَا ، وَتَعَوَّذْ بِاَللَّهِ مِنْ شَرِّهَا
، وَلاَ تَلَعَنَهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ. (مصنف ابن ابي شيبة
நபி ஸல் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்த போது காற்று
வேகமாக வீசியது. ஒருவரின் மேலாடையை காற்று கொண்டு சென்று விட்டது. உடனே அதை
சபித்தார். அப்போது நபி ஸல் அவர்கள் காற்றை
சபித்தீர்களா என்று கேட்டார்கள். அப்போது அவர் ஆம் அது என்னுடைய ஆடையை
நீக்கி விட்டது என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் அவ்வாறு திட்டாதீர்கள்.
அல்லாஹ்விடம் அதன் நல்லதைக் கேளுங்கள். அதன் தீமையை விட்டும் அல்லாஹ்விடம்
பாதுகாப்புக் கேளுங்கள் ஏனெனில் அது அல்லாஹ்வினால் ஏவப்பட்டதாகும்
என்றார்கள்.
عَنْ
عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه
وسلم : لاَ تَسُبُّوا اللَّيْلَ ، وَلاَ النَّهَارَ ، وَلاَ الشَّمْسَ ، وَلاَ
الْقَمَرَ ، وَلاَ الرِّيحَ ، فَإِنَّهَا تُبْعَثُ عَذَابًا عَلَى قَوْمٍ ,
وَرَحْمَةً عَلَى آخَرِينَ. (مصنف ابن شبية)
இரவையோ பகலையோ சூரிய(னால் ஏற்படும் வெப்பத்தி)னையோ சந்திரனையோ காற்றையோ திட்டாதீர்கள். ஏனெனில் அவை ஒரு சாராருக்கு
அருளாகவும் வேறு சிலருக்கு அதாபாகவும் இருக்கும்.
மழை, இடி, மின்னல், புயல் ஆகியவை அல்லாஹ்வின் படைகள்.
மேற்படி ஹதீஸின் விளக்கம்
இந்தப் புயலால் கடந்த காலங்களில் சில உம்மத்துகள்
அழிக்கப்பட்டுள்ளனர். காற்றின் மூலமாக ஆத் கூட்டத்தார்கள் அழிக்கப்பட்டார்கள்.
மேலும் அதே காற்றின் மூலமாக அகழ்ப்போரின் போது மக்கா காஃபிர்களை அல்லாஹ்
விரட்டியடித்தான்
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نُصِرْتُ بِالصَّبَا
وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ (بخاري) باب غَزْوَةُ الْخَنْدَقِ وَهْىَ
الأَحْزَابُ -كتاب المغازي
விளக்கம்-
சுமார் பத்தாயிரம் பேர் மக்காவிலுருந்து திரண்டு வருவதைக் கேள்விப்பட்ட நபி ஸல்
அவர்கள் மதீனாவுக்குள் அவர்களை வர விடாமல் தடுக்க அகழ் தோண்டினார்கள்.
காஃபிர்களின் படை அகழிக்கு அந்தப்பக்கம் இருந்து கொண்டு கற்களையும் அம்புகளையும்
வீசி தாக்க்குதல் நடத்தினார்கள் பதிலுக்கு முஸ்லிம்களும் அதேபோல் தாக்கினார்கள்
இந்தச் சண்டை சுமார் 15 நாட்கள் நீடித்தது. அதன் பின்பு அல்லாஹ் எதிரிகளின் பகுதியில்
மட்டும் சூறாவளி காற்றை அல்லாஹ் அனுப்பினான் அது அவர்களின் கூடாரங்கள்
நாசமாக்கியது அவர்கள் மூட்டியிருந்த அடுப்புகளையெல்லாம் அணைத்து விட்டது இறுதியில்
அவர்கள் வேறு வழியில்லாமல் அங்கிருந்து விரண்டோடினார்கள்.
தபூர் என்ற புயல் காற்றின் மூலம் ஆது கூட்டம்
அழிக்கப்பட்ட விதம்
வானில் மேகங்கள் திரண்டபோது மழை
வரப் போகிறது என ஆது கூட்டம் மகிழ்ந்தார்கள். ஆனால் கடும் புயலாக இருந்தது.
عن ابن عباس رضي الله عنه في قوله تعالى : فَلَمَّا رَأَوْهُ عَارِضًا
مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ(الاحقاف24
قالوا :غيم فيه مطر قال : بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم وأول ما
عرفوا أنه عذاب رأوا ما كان خارجا من رجالهم ومواشيهم يطير من السماء إلى الأرض
مثل الريش دخلوا بيوتهم ، وأغلقوا أبوابهم فجاءت الريح ففتحت أبوابهم ومالت عليهم
بالرمل ، فكانوا تحت الرمل سبع ليال وثمانية أيام حسوما لهم أنين ثم أمر الريح
فكشفت عنهم الرمل وأمر بها فطرحتهم في
البحر فهو قوله تعالى : فأصبحوا لا يرى إلا مساكنهم (رواه ابن ابي الدنيا)
ஆது
கூட்டத்தினர் ஆகாயத்தில் பார்த்த போது ஏதோ மழை மேகம் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.
ஆனால் கீழே இறங்க இறங்க அது கடும் புயலாக மாறியது. அந்தப் புயலின் வேகத்தால் மனிதர்களும்,
கால்நடைகளும் வானத்தில் காகிதம் போல பறப்பதைப் பார்த்து மற்றவர்கள் தங்களின்
வீடுகளுக்குள் புகுந்து கதவுகளைத் தாழிட்டனர். ஆனால் அந்தப் புயல் வீசிய வேகத்தில்
கதவுகள் தானாக திறந்தவுடன் வெளியே உள்ள மண்ணையெல்லாம் கொண்டு வந்து உள்ளே போட்டது.
வீடு முழுவதும் மண்ணால் நிரம்ப அதற்கடியில் அவர்கள் சிக்கிய படி முனகியபடி
உயிருக்குப் போராடினார்கள். ஆனால் அவர்களின் உயிரையும் அல்லாஹ் போக்கவில்லை. எட்டு
நாட்கள் கடந்து மீண்டும் புயல் வீட்டுக்குள் இருந்த மண்ணையெல்லாம் வெளியே கொண்டு
வந்து போட்டு அவர்களையும் வெளியே கொண்டு வந்தது. வானத்தில் காகிதம் போல
பறந்தார்கள். கடைசியில் தங்களை பலசாலிகள் என பெருமையடித்த அவர்கள் அனைவரும் கடலில்
தூக்கி வீசப்பட்டார்கள்.
நபிகளாரின் காலத்தில் ஒரே ஒரு கெட்ட மனிதனின்
அழிவுக்காகவும் புயல் வீசியுள்ளது
عَنْ جَابِرٍ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مِنْ سَفَرٍ
فَلَمَّا كَانَ قُرْبَ الْمَدِينَةِ هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ تَكَادُ أَنْ
تَدْفِنَ الرَّاكِبَ فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ بُعِثَتْ هَذِهِ الرِّيحُ لِمَوْتِ مُنَافِقٍ
فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ فَإِذَا مُنَافِقٌ عَظِيمٌ مِنْ الْمُنَافِقِينَ
قَدْ مَاتَ (مسلم) قيل هو رفاعة بن دريد والسفر غزوة تبوك
நபி ஸல் அவர்கள் ஒரு
பிரயாணத்தில் இருந்து திரும்பும்போது கடும் புயல் வீசியது. வாகன ஓட்டியைக் கீழே
தள்ளும் அளவுக்க்கு அதன் கடுமை இருந்தது. அப்போது நபி ஸல் அவர்கள் இந்தப் புயல்
ஒரு முனாஃபிக்குடைய மவ்த்திற்காக அவனது இறப்பின் அடையாளமாக அனுப்புப் பட்டுள்ளது
என்றார்கள். அவ்வாறே மதீனாவை அடைந்த போது ரிஃபாஆ என்ற முனாஃபிக் இறந்திருந்தான்.
மழையிலும் ரஹ்மத்தான மழை, அதாபான மழை என பல்வேறு வகை உண்டு
عَنْ أَبِي هُرَيْرَةَ ،رضي الله
عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، قَالَ :
لَيْسَ السَّنَةُ بِأَنْ لا تُمْطَرُوا ، وَلَكِنَّ السَّنَةَ أَنْ تُمْطَرُوا
ثُمَّ تُمْطَرُوا ثُمَّ لا تُنْبِتُ الأَرْضُ شَيْئًا. (مسند الشافعي
நபி ஸல் கூறினார்கள். மழையே இல்லாத தால் ஏற்படும் பஞ்சம் உண்மையான பஞ்சம்
அல்ல. மாறாக மழை அளவுக்கு அதிகமாகப் பெய்து (வயல்கள் வீணாகி அதனால்) பூமி எதையும் விளைவிக்காமல்
போகுமோ அது தான் உண்மையான பஞ்சமாகும்.
புயல் போன்ற ஆபத்துகள்
ஏற்படும்போது நபி ஸல் அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறிருக்கும்
வானில் வித்தியாசமான
தோற்றம் தெரிந்தாலே நபி (ஸல்) பள்ளிக்குச்
சென்று வணக்கத்தில் ஈடுபடுவார்கள்
عن أبي الدرداء رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم إذا
كانت ليلة ريح كان مفزعه إلى المسجد حتى تسكن الريح ، وإذا حدث في السماء حدث من
كسوف شمس أو قمر ، كان مفزعه إلى الصلاة حتى تنجلي (رواه ابن ابي الدنيا)
மேகம் திரள்வது கூட
கடும் புயலாக இருக்கலாம் என நபி ஸல் அவர்கள் அஞ்சுவார்கள். மழை பொழிந்தால் மட்டுமே
நிம்மதியடைவார்கள்.
عن عَائِشَة
رضي الله عنها قَالَتْ مَا رَأَيْتُ فِي
وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ هَيْجًا حَتَّى يَرَى غَيْمًا فَإِذَا أَمْطَرَ
ذَلِكَ الْغَيْمُ ذَهَبَ ذَلِكَ الْهَيْجُ(احمد
இடி, மின்னல்
தாக்காதிருக்க துஆ.
عَنْ سَالِمِ
بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ رضي الله عنهم أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ
وَالصَّوَاعِقِ قَالَ اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ
وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ (ترمذي)
அல்லாஹ்வை திக்ரு
செய்து கொண்டிருப்பவரை இடியும், மின்னலும் தாக்காது
عن أبي جعفر محمد بن علي قال الصواعق تصيب المسلم وغير المسلم ولا تصيب
ذاكرا - عن ابن أبي زكريا قال:من سمع
الرعد فقال:سبحان الله وبحمده لم تصبه صاعقة (رواهما ابن ابي الدنيا)
கடும் சூறாவளி காற்று
வீசினால் ஓத வேண்டிய துஆ
عَنْ أَنَس
أَنَّ النَّبِيّ صَلَّى
اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ
إِذَا هَاجَتْ رِيح شَدِيدَة قَالَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلك مِنْ خَيْر مَا
أُمِرَتْ بِهِ وَأَعُوذ بِك مِنْ شَرّ مَا أُمِرَتْ بِه- مسند أبي يعلى
மக்களின்
சுயநலம் மற்றும் அதிகாரிகள் வாங்கும் இலஞ்சம் ஆகியவற்றால் நீர் நிலைகள்
குடியிருப்புகளாக மாற்றப்பட்டன. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்த து என்று கூறுவதை
விட நீர் நிலைகளில் நாம் குடியிருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தம்.
2015
சென்னை பெருவெள்ளத்தின்போது 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை
இழந்தார்கள். 260-க்கும்
அதிகமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்கள். மிகப்பெரிய
பேரிழப்பை
சென்னை சந்தித்தது. ஐந்து ஆண்டுகளைக்
கடந்தும் அதன் வடுவும் மாறவில்லை. 2015
பெருவெள்ளத்துக்குப் பிறகு அரசுக்கு
அறிக்கை அளித்த அதிகாரிகள் குழு,‘சென்னை நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும், மழைநீர் வடிகால்கள் சரியாகச்
செயல்படாததும்தான் வெள்ளம் நகருக்குள் புகுந்ததற்குக் காரணம்.இதை
உடனடியாகச்சரிசெய்ய வேண்டும்’ என கூறியிருந்தது. இதற்கடுத்து அரசாங்கம் ஏதோ அப்போதைக்கு
மட்டும் அதிரடியாக சில ஆக்கிரமிப்புகளை அகற்றியதே தவிர அதற்கடுத்து அது கிடப்பில்
போடப்பட்டது. 2019, ஜூலை 15-ம் தேதி அப்போதையமுதல்வர் ஒரு
கேள்விக்கு பதில் கூறும்போது நாட்டில் ‘71,262 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன.
அவற்றில், 17,400 ஆக்கிரமிப்புகளை
அகற்றியுள்ளோம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து
பேசி, தகுந்த
முடிவு எடுக்கப்படும்’என்றார். ஆனால் 53,862 ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன.அப்போதைய
முதல்வர் அகற்றியதாக கூறிய 17,400ஆக்கிரமிப்புகளும் ‘கல்வித் தந்தைகள்’ கட்டிய கல்லூரிகளோ, கார்ப்பரேட் மருத்துவமனைகளோ, பிரமாண்டமான ஜவுளிக்கடைகளோ மலைக்கவைக்கும்
மால்களோ அல்ல. மாறாக அரசு அகற்ற உத்தரவுபோட்ட அனைத்தும் வெள்ளம் வந்தால், தானாக மிதந்து சென்று விடுகின்ற ஓலைக்
குடிசைகள்தான். பாடிக்கு அருகேயுள்ள பிரபல துணிக்கடை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தை
ஒரு குளத்தின்மீது அமைத்திருக்கிறார்கள். இதற்கு வருவாய்த்துறையே விதிமுறையை மீறி
பட்டா தந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உயர் நீதிமன்றமும்
உத்தரவிட்டிருக்கிறது. சென்னை மாதவரம் மண்டலத்தில் புத்தகரம் தாங்கல் ஏரி
ஆக்கிரமிப்புகளால் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. 2016-ல் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆரம்பித்த போதே
ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடங்கியது.
இன்று தமிழக அரசே அந்த ஏரியில் கழிவுநீர் அகற்றும் மையத்தை அமைத்ததுள்ளது. சில
இடங்களில் ஆற்றுப்பாலங்கள் ஐந்து வருடங்களாக கட்டப்படுகிறது. “கூவம் ஆற்றைச்
சீரமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், தமிழக
அரசுக்கு 100 கோடி
ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்தது.
ஆனால்கரையோரம் சில பணக்காரர்கள் வசிக்கும் இடங்களில் மட்டும் கூவம் ஆறு
சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன நதிகள்
நாட்டின்
விடுதலைக்கு முன் தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன.
இன்றைக்கு பாதிக்கும் குறைவாக 20,000 நீர்நிலைகள் மட்டுமே
உள்ளன. இதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகள்தான்.
ஆபத்து வருவதற்கு முன்பே சுதாரித்துக் கொள்வதை
கற்றுத் தரும் இஸ்லாம்
يُوسُفُ
أَيُّهَا الصِّدِيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ
عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى
النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا
فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ
(47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ
لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ
ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (سورة يوسف49)...
இச்சம்பவத்தில்
நிறைய படிப்பினைகள் உண்டு. பஞ்சமான அந்த வருடங்களை தன்னால் சிறப்பாக சமாளிக்க
முடியும் என்பதால் நபி யூசுஃப் அலை தானாக விரும்பி இந்தப் பொறுப்பைத் தனக்குத்
தரும்படி கேட்டார்கள். பஞ்சமான அந்தக் கால கட்டங்களில் நபி யூசுஃப் அலை ஒரு நேரம்
மட்டுமே உணவு உண்டார்கள் என்றும் சில விரிவுரைகளில் உள்ளது. தகுதியுள்ள தலைவர்கள்
மக்களுக்குப் பொறுப்பேற்பதை விட்டும் ஒதுங்கக் கூடாது என்பதற்கு இது சிறந்த
சான்றாகும்.
وفي الخبر: "يرحم
الله أخي يوسف لو لم يقل اجعلني على خزائن الأرض لاستعمله من ساعته ولكن أخر ذلك
سنة" . وقيل: إنما تأخر تمليكه إلى سنة لأنه لم يقل إن شاء الله. (قرطبي
நபி யூசுஃப் அலை தானாக விரும்பி பொறுப்பைக் கேட்காமல் இருந்திருந்தால் அப்போதே
அந்த அரசர் பொறுப்பை ஒப்படைத்திருப்பார். எனினும் அவ்வாறு விரும்பிக் கேட்டதால்
ஒரு வருடம் சோதித்துப் பார்த்த பிறகே அந்த அரசர் பொறுப்பை ஒப்படைத்தார் என்றும்
மற்றொரு அறிவிப்பில் நபி யூசுப் அலை இன்ஷா அல்லாஹ் சொல்லாததால் ஒரு வருடம் தாமதம்
ஆனது என்றும் கூறப்பட்டுள்ளது.
நீர் நிலைகள் மாசு படாமல் பாதுகாப்பதை இஸ்லாம்
அதிகம் வலியுறுத்தியுள்ளது
عَنْ جَابِرٍ
رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ
نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ (مسلم) كتاب الطهارة
மக்களுக்காக நீர் ஆதாரத்தை உருவாக்குவதில் முஸ்லிம் முன்னோடிகளின் பங்கு
பக்தாத் பேரரசர் கலீபா ஹாருன் ரஷீதின் மனைவி ஜுபைதா
அம்மையார் மக்காவில் ஏற்பட்ட தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்கக் கால்வாய் ஒன்றை பத்துமைல்
நீளத்திற்கு உருவாக்கினார். நஹ்ர் ஜுபைதா என்ற பெயரில் இன்றும் உள்ளது.
قال رسول الله صلى الله عيه وسلم من يشتري بئر رومة
فيجعلها للمسلمين يضرب بدلوه فى دلائهم وله بها مشرب فى الجنة فساومه فيها عثمان
فأبى أن يبيعها كلها فاشترى نصفها باثنى عشر ألف درهم وجعل ذلك للمسلمين وجعل له
يوما ولليهودى
يوما
فإذا كان يوم عثمان استقى المسلمون ما يكفيهم يومين فلما رأى اليهودى ذلك قال
لعثمان أفسدت على ركيتى فاشترى النصف الآخر بثمانية آلاف (سيرة الحلبية
மதீனாவில் மிகவும் சுவையான கிணறாக இது இருந்தது
நபி ஸல் ஒருமுறை யார் இதை அந்த
யூதனிடமிருந்து வாங்கி மக்களுக்கு வக்ஃப் செய்வார்களோ அவருக்கு சுவனத்தில்
அதுபோன்றக நீர் நிலை உண்டு என்றவுடன் உஸ்மான் ரழி போட்டி போட்டுக் கொண்டு அதை
வாங்க யூதனிடம் சென்ற போது அதை அவன் விட்டுக் கொடுக்க மறுத்தான் எப்படியோ
சம்மதிக்க வைத்து 12 ஆயிரம் திர்ஹம் தந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற
அடிப்படையில் அந்தக் கிணற்றின் உரிமையை பெற்றார்கள். தனக்கான அந்த நாளில் அனைத்து
மக்களுக்கு தண்ணீரை இலவசமாக சப்ளை செய்தார்கள். ஆனால் அந்த யூதன் காசுக்கு மட்டுமே
விற்றான். நாளடைவில் அவனிடம் காசு கொடுத்து யாரும் வாங்காத ஒரு நிலை ஏற்பட்டது.
ஏனெனில் உஸ்மான் ரழி தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக
சப்ளை செய்ததால் அவனிடம் யாரும் வாங்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன்
மீதி உரிமையையும் விட்டுத் தந்தான். மொத்தம் 20 ஆயிரம் திர்ஹம் தந்து விலைக்கு
வாங்கி மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்கள்.- சீரத்துல் ஹலபிய்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக