23-5-2025 jumma bayan
மார்க்கக் கல்வியில் முன்னேறுவது பற்றியும் சில வாரங்களுக்கு முன்பு பேசப்பட்டது. அதேபோல உலகக் கல்வியிலும் நம் சமூகம் முன்னேற வேண்டும். இன்றைக்கு நம் மாணவர்களில் பலர் குறிப்பாக ஆலிம்களின் பிள்ளைகளில் பலர் பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள். அவர்கள் மென்மேலும் முயற்சி செய்து உயர் பதவிகளை அடைய வேண்டும். அதேபோல மாணவர்களில் மற்றொரு சாரார் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து விட்டோம் என்ற கவலையில் மனம் துவண்டு விடுவதும் உண்டு. அவர்களுக்கும் வழி காட்டுவது இந்நேரத்தில் அவசியமானதாக ஆகி விட்டது. எனவே அதைப் பற்றிப் பேசும் முன்பு அதன் முன்னுரையாக நம்முடைய மார்க்கத்தில் மார்க்கக் கல்வியைப் போன்றே உலக ரீதியான அடிப்படைக் கல்வி எந்த அளவுக்கு அவசியம் என்பதைப் பற்றிக் காண்போம்.

இஸ்லாத்தில் உலகக் கல்விக்கும் முக்கியத்துவம் உண்டு
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَمْ يَكُنْ لأُنَاسٍ مِنْ أُسَارَى بَدْرٍ فِدَاءٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِدَاءَهُمْ أَنْ يُعَلِّمُوا أَوْلاَدَ الأَنْصَارِ الْكِتَابَةَ (سنن الكبري للبيهقي) وكان زيد بن ثابت ممن تعلّم الكتابة والكتابة من الاساري
பத்ரு யுத்தம் முடிவுற்ற பிறகு நபி (ஸல்) அவர்கள், "பிணைத்தொகை வழங்க முடியாத ஒவ்வொருவரும் 10 முஸ்லிம்களுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம்" என அறிவுறுத்தினார்கள். அவ்வாறு அந்தக் கைதிகளிடமிருந்து அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டவர்களில் ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் ஒருவர். அன்றைய தினத்தில் கல்வித் தேவையை விட நபி (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாமிய அரசாங்கத்திற்கும் பணத் தேவையும், குரைஷியருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்தக் கைதிகளை தம் வசம் வைத்திருப்பதுமே அவசியத் தேவையாக இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தேவையை விட, கல்வித் தேவை தான் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து அதையே தேர்ந்தெடுத்தார்கள்.
قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ أَمَرَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَتَعَلَّمْتُ لَهُ كِتَابَ يَهُودَ وَقَالَ « إِنِّى وَاللَّهِ مَا آمَنُ يَهُودَ عَلَى كِتَابِى ». فَتَعَلَّمْتُهُ فَلَمْ يَمُرَّ بِى إِلاَّ نِصْفُ شَهْرٍ حَتَّى حَذَقْتُهُ فَكُنْتُ أَكْتُبُ لَهُ إِذَا كَتَبَ وَأَقْرَأُ لَهُ إِذَا كُتِبَ إِلَيْهِ. (ابوداود
நபி ஸல் அவர்களுக்கு யூதர்களிடமிருந்து ஏதேனும் கடிதம் வரும்போது அதன் மொழி தெரியாத தால் அந்த யூதர்களில் ஒருவரை அழைத்தே அந்தக் கடித த்தை வாசிக்கச் சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் அதை வாசித்துச் சொல்வதில் நபி ஸல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழ்நிலை இருந்த து. அதனால் நபி ஸல் அவர்களின் உத்தரவுப்படி ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் யூதர்களின் மொழியை 15 நாட்களில் கற்றுக் கொண்டார்கள். ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சிரியாக் மற்றும் ஹிப்ரு மொழிகளை தம் 13 ஆம் வயதிலேயே கற்றுக்கொண்டார்கள், நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் கடிதங்கள் எழுதுவதாக இருந்தால் இவர்களை அழைத்து தான் எழுதச் சொல்லுவார்கள். அதைப்போல் நபிகளாருக்கு வரும் கடிதங்களை வாசிப்பதற்கும் இவர்களே நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் நபி (ஸல்)அவர்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டானது. நபிகளாரோடு நெருங்குவதற்கு காரணம் வாசிக்கத் தெரிந்ததுதான்!
உலகில் முதல்முறையாக கல்விப் புரட்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று உலக அளவில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது.
2006 சச்சார் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகம் முஸ்லிம் சமூகம் தான். இன்றும் சிலரின் நிலை அவ்வாறு தான் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் படிக்கத் தெரியாத பல முஸ்லிம்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இந்தியாவைப்பொறுத்தவரை யார் தன்பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என அறியப்படுகிறார். ஆனால் இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில் 55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் படித்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பவர்கள் இன்றும் நம்மில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான தக்க பதிலடி பத்ருப் போரில் நடைபெற்ற மேற்படி நிகழ்வாகும்.
மலக்குகளிடம் மனிதனை அல்லாஹ் உயர்வாக்கிக் காட்டியது கல்வியறிவைக் கொண்டு தான்
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (31) قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ (32) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ (البقرة33)
வாழ்க்கைக்கு அவசியமான எல்லாக் கல்வியும் கற்க வேண்டியது தான். கடலில் பயணம் செய்பவனுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்
ஒரு படகில் மூன்று அறிஞர்களும் பயணம் செய்த போது, படகோட்டியிடம் தங்கள் அறிவுத் திறனைக் காட்ட, “ஏம்ப்பா உனக்கு கணிதம் தெரியுமா? என்று ஒரு அறிஞர் கேட்க, “அதெல்லாம் தெரியாதுங்க என்றான் படகோட்டி. அச்சச்சோ, வாழ்நாளின் கால்வாசியை வீணாக்கி விட்டாயே ! என்றார் அந்த அறிஞர். அடுத்து இரண்டாமவர் ஏம்ப்பா உனக்கு வான சாஸ்திரம் தெரியுமா? எனக் கேட்க அதெல்லாம் தெரியாதுங்க என்றதும் “அச்சச்சோ,உன் வாழ்வில் பாதி வீணாகி விட்டதே” என வருந்தினார். அடுத்து மூன்றாமவர் ஏம்ப்பா உனக்கு அறிவியலாவது தெரியுமா? எனக்கேட்க “அதெல்லாம் தெரியாதுங்க” என்று சொன்னவுடன் அச்சச்சோ உன் வாழ்நாளில் முக்கால் வாசியை வீணாக்கி விட்டாயே! என்று சலித்துக் கொண்டார். திடீரென அவன் கேட்டான். ஏங்க உங்களில் யாருக்காவது நீச்சல் தெரியுமா என்று. “தெரியாதே” என அம்மூவரும் அலட்சியமாக சொன்னதும் அச்சச்சோ.. உங்க எல்லோரின் முழு வாழ்க்கையும் வீணாகிப் போச்சே நாம் சுழலில் மாட்டிக் கொண்டோம்” என்று சொல்லி தண்ணீரில் குதித்து காணாமல் போனான்
عن أبي رافع رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقُّ الوَلَدِ على الوَالِدِ أنْ يَعَلِّمَهُ الكِتابَةَ والسِّباحَةَ والرِّمايَةَ وأنْ لا يَرْزُقَهُ إلاَّ طَيباً-عن ابن عمر رض عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِّمُوا أَبنَاءَكُمُ السِّبَاحَةَ1 والرَّمْيَ والمَرْأَةَ الْمِغْزَلَ2-عن بكر بن عبد الله بن الربيع الأنصاري عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنِعْمَ لَهْوُ المُؤْمِنَةِ فِي بَيْتِهَا الْمِغْزَلُ وَأَذَا دَعَاكَ أَبوكَ فَأَجِبْ -عن سهل بن سعد عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَمَلُ الأَبْرَارِ مِنَ النِّسَاءِ الْمِغْزَلُ (الفتح الكبير)
நபி ஸல் கூறினார்கள். எழுத்தறிவு, நீச்சல், அம்பெறிதல் ஆகியவற்றைக் கற்றுத் தருவதும் ஹலாலான உணவு அல்லாத வேறு உணவுகளை வழங்காமல் இருப்பதும் பிள்ளையின் மீது தந்தையின் கடமையாகும். மேலும் இப்னு உமர் ரழி கூறினார்கள். உங்களின் ஆண் பிள்ளைகளுக்கு நீச்சலையும் அம்பெறிதல் கற்றுத் தாருங்கள். உங்களுடைய உங்களின் பெண் பிள்ளைகளுக்கு தையற்கலையைக் கற்றுத் தாருங்கள். மேலும் நபி ஸல் கூறினார்கள். முஃமினான பெண்ணுக்கு அவளுடைய வீட்டில் ஓய்வான நேரங்களின் நன்மயான பொழுது போக்கு தையற்கலையாகும். நல்ல பெண்களுக்கு உகந்த தொழில்களில் ஒன்று தையற்கலையாகும். படிப்பினை- நபி ஸல் சிலவற்றை மட்டும் கூறியிருந்தாலும் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்துக் கல்வியும் மனிதனுக்கு அவசியம் என்பதற்கு மேற்படி ஹதீஸ்கள் சான்றாகும்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடைய பெற்றோரின் கவனத்திற்கு......
பெற்றோர்களின் சிந்தனையில் உயர்ந்த இலட்சியம் இருக்கலாம். ஆனால் நிர்பந்திக்கக் கூடாது
இன்றைய அநேக பெற்றோர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கும் இயந்திரக் கருவிகளாக தங்களின் பிள்ளைகளைப் பார்க்கின்றார்கள். வளரும் போதே, படிக்கும் போதே நீ டாக்டராக வேண்டும், இன்ஜீனியராக வேண்டும், நீ கலெக்டராக வேண்டும் என்று கூறுகின்றார்கள். விருப்பமில்லாத துறையில் பிள்ளைகளை கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு பல்கழைக்கழக துணை வேந்தர் கூறியது. உங்கள் பையனுக்குள்ளே ஒரு டாக்டரோ, ஒரு எஞ்சினியரோ, ஒரு ஆசிரியரோ, ஒரு மெக்கானிக்கோ, ஒரு வக்கீலோ, ஒரு வியாபாரியோ ஒளிந்திருக்கிறார்கள். அவர்களை அவர்களாக உருவாக்குவதற்கு பதிலாக நீங்கள் வேறுவிதமாக திசை திருப்புகிறீர்கள். தோற்றுப்போகிறீர்கள். மெக்கானிக்காக வர வேண்டியவனை நீங்கள் டாக்டராக உருவாக்க உங்கள் சக்தியை வீணடிக்கிறீர்கள். அவன் இரண்டு பேராகவும் (டாக்டர், மெக்கானிக்) வர முடியாமல் ஆகி விடுகிறான். ஆகவே அவனை ஆராயுங்கள். அவன் விருப்பத்தில் கவனம் வையுங்கள். அவனுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள். உமர் ரழி அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன் இஸ்லாமியர்களை வதைப்பதில் இன்பம் கண்டவர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் அந்த முரட்டுத்தனத்தை விடச்சொல்லி நபி ஸல் வலியுறுத்தவில்லை. மாறாக அந்த முரட்டுத்தனத்தை இஸ்லாமிய நெறிகளை பாதுகாப்பதிலும், இஸ்லாமிய எதிரிகளை வீழ்த்துவதிலும் திருப்பினார்கள்
சிறுவர்கள் தானே என்று அவர்களிடம் ஆலோசனை கேட்காமல் ஒதுக்கி விடக் கூடாது.
நபி {ஸல்} அவர்களின் சபை நபித்தோழர்களால் நிரம்பி இருந்தது.எப்போதும் அண்ணலாரின் அருகே, வலப்பக்கத்தில் இருக்க வேண்டிய அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்போது இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.ஒரு கோப்பையில் பால் கொண்டு வரப்படுகின்றது. அண்ணலார் அதைப் பருகி விட்டு வலது பக்கத்தைப் பார்க்கின்றார்கள் அங்கே ஃபள்ல் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அமர்ந்திருக்கின்றார்கள். வயதில் மிகவும் சிறியவரான ஃபள்ல் (ரலி) அவர்களிடம் இப்போது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “ஃபள்லே! எப்போதும் என் அருகே என் தோழர் அபூபக்ர் (ரலி) தான் அமர்ந்திருப்பார், அவருக்கு தான் நான் கொடுப்பேன். இப்போது நீ அமர்ந்திருக்கின்றாய்? நான் அபூபக்ர் அவர்களுக்கு கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். இல்லை! அல்லாஹ்வின் தூதரே! நான் எனக்கான வாய்ப்பை விட்டுத் தர முடியாது! என்று சொல்லி விட்டார். ஃபள்ல் (ரலி) அவர்கள்.பின்னர் அந்தக் கோப்பை அனைவரிடமும் சுற்றி வந்து இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து சேர்ந்தது. கடைசியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் பாலைப் பருகினார்கள். இங்கே, சிறுவன் என்பதற்காக நபி {ஸல்} அவர்கள் தாங்கள் விரும்பியவாறு நடக்க வில்லை. ஃபள்ல் இடம் கேட்கிறார்கள். அவருக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பதை நபி {ஸல்} அவர்கள் உணர்த்துகின்றார்கள். ஆனால், இன்றைய பெற்றோர்கள் தங்களின் மகனிடமோ, மகளிடமோ நீ என்னவாக ஆக விரும்புகின்றாய் என்று கேட்பதும் இல்லை. அவர்களின் விருப்பத்திற்கு இசைவு தருவதும் இல்லை
நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் முக்கியமான அரசுத் துறைகளில் பங்கெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%,- +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, --பட்டப்படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே,- 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள். தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.
குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு...
குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சோர்ந்து விடக்கூடாது. முன்னேறுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன
இன்றைய பெற்றோர்களும்,ஆசிரியர்களும் தேர்வுகளில் பெறப்படும் அதிக மதிப்பெண்கள் தான் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக ஓர் தவறான பார்வையை மாணவச் சமூகத்தின் மீது திணித்து விடுகிறார்கள்.இதனால் மாணவச்சமூகம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டநாள் முதல் ரிசல்ட் வரும் நாள்வரை பதட்டத்தோடும், அச்சத்தோடும், மனச் சோர்வோடும் காணப்படுகின்றனர்.இந்திய மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும், 70 சதவீத மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வருவதாகத் தெரிவித்துள்ளது.எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத போது மிகுந்த ஏமாற்றமும், விரக்தியும் ஏற்பட்டு பெற்றோர்களை தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தும் முடிவை (தற்கொலை செய்து கொள்வது) மாணவச் சமூகம் கையில் எடுப்பது சமீப காலமாக பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன என்பதை மாணவர் களுக்கு உணர்த்த வேண்டும்.
ஆசிரியர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை மட்டும் ஊக்கப்படுத்தி அவர்களிடம் மட்டுமே அக்கறை காட்டுகின்றார்கள். கல்வி நிறுவனங்களும் அவர்களை மட்டுமே முன்னிறுத்தி,முக்கியத்துவம் அளிக்கிறது.கல்வித்தரம் குறைந்த மாணவர்களை மேம்படுத்தும் முயற்சிகளில் ஆசிரியர்களும்,நிறுவனங்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.இதுவும் மாணவச் சமூகம் மனச் சுமைகளோடும்,அச்சத்தோடும் இருப்பதற்கு ஓர் காரணமாகும்.
عن بن عباس قال: إن عمارة بنت حمزة بن عبد المطلب وأمها سلمى بنت عميس كانت بمكة، فلما قدم رسول الله كلم علي النبي، فقال: علام تترك ابنة عمنا يتيمة بين ظهري المشركين ، فلم ينهه النبي عن إخراجها فخرج بها ، فتكلم زيد بن حارثة وكان وصي حمزة وكان النبي آخى بينهما حين آخى بين المهاجرين، فقال: أنا أحق بها، ابنة أخي. فلما سمع بذلك جعفر بن أبي طالب قال: الخالة والدة، وأنا أحق بها لمكان خالتها عندي أسماء بنت عميس. فقال علي: ألا أراكم تختصمون في ابنة عمي وأنا أخرجتها من بين أظهر المشركين وليس لكم إليها نسب دوني وأنا أحق بها منكم. فقال رسول الله: " أنا أحكم بينكم، أما أنت يا زيد فمولى الله ورسوله، وأما أنت يا علي فأخي وصاحبي، وأما أنت يا جعفر فشبيه خلقي وخلقي، وأنت يا جعفر أولى بها تحتك خالتها ولا تنكح المرأة على خالتها ولا على عمتها"، فقضى بها لجعفر .
ஹம்ஜா (ரலி) அவர்கள் உஹதில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களின் மனைவி ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி)அவர்களும், ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரே மகளான அமாரா (ரலி) அவர்களும் மக்காவில் வாழ்ந்து வந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் “ஹம்ஜா(ரலி) அவர்களின் ஒரேயொரு மகள் இப்போது அநாதையாகி மக்கத்து இணைவைப்பாளர்கள் மண்ணில் நிற்கிறாள். நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அனுமதி தரவே அலீ (ரலி) அவர்கள் மக்கா சென்று அமாராவை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள். அமாராவை யார் பொறுப்பேற்பது? என்று மூன்று நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் தாம் தான் எடுப்பேன் என சண்டையிட்டுக் கொண்டார்கள்.இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தனர் அந்த மூவரும்.அலீ (ரலி) அவர்கள், ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள், ஜஅஃபர் இப்னு அபூதாலிப் அவர்கள் இம்மூவரும் தான் சண்டையிட்டுக்கொண்டவர்கள்.நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! அமாரா என் தந்தையின் சகோதரரின் மகள் ஆகவே அதிகத் தகுதியுடையவன் நான்” என்று அலீ (ரலி) பதில் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா அவர்களும் நானும் ஒரே தாயிடத்தில் பால் குடித்திருக்கின்றோம். மேலும், எனக்கும் அவருக்கும் இடையே நீங்கள் தான் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள். ஆகவே, இரு தகுதிகள் இருப்பதால் நானே அதிகத்தகுதியுடையவன்” என்று ஜைத் (ரலி) பதில் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.“அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் ஆவார், மேலும், ஹம்ஜா (ரலி) மணம் முடித்திருக்கின்ற ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களை நான் மணம் முடித்திருக்கின்றேன். அமாராவுக்கு என் மனைவி சின்னம்மா ஆவாள். ஆகவே நானே அதிகத் தகுதியுடையவன்” என்று ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
மூவரின் உரிமை கோரலையும் செவிமடுத்து விட்டு பெருமானர் {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து ”அலீயே! நீர் என் சகோதரரும், என் சுவனத்து தோழரும் ஆவீர்! ஜைத் (ரலி) அவர்களை அழைத்து “ஜைதே! நீர் அல்லாஹ், ரசூலின் அடிமையாவீர்!, ஜஅஃபர் (ரலி) அவர்களை அழைத்து “ஜஅஃபரே! நீர் என்னைப் போன்றே குணத்திலும், தோற்றத்திலும் ஒத்து இருக்கின்றீர்!” என்று கூறி விட்டு, அமாராவின் சின்னம்மாவை நீர் மணம் முடித்திருப்பதால் நீரே அமாராவை வளர்ப்பதற்கு தகுதியாவீர்! நீர் அமாராவை உம் பொறுப்பில் எடுத்து வளர்த்துக் கொள்வீராக!” என்று தீர்ப்பளித்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )
இந்த சம்பவத்தில் பல உண்மைகளும் படிப்பினைகளும் பொதிந்திருக்கின்றன. அமாரா (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களுக்கும் பெரிய தந்தையின் மகள் தான். நபி {ஸல்} அவர்கள் நினைத்திருந்தால் மூவரையும் திருப்பி அனுப்பி விட்டு தாங்களே வளர்க்கும் உரிமையை எடுத்திருக்கலாம். ஏனென்றால் குடும்ப உறவு நபிகளாருக்கு இருக்கின்றது. அல்லது ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) அவர்களில் இருவரில் ஒருவருக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். குடும்ப உறுப்பினர் என்கிற முறையில். அல்லது மூவரில் எவரிடமாவது வளர்க்கும் உரிமையை கொடுத்திருக்கலாம் அல்லாஹ்வின் தூதர் என்கிற அடிப்படையில். இந்த மூன்றில் நபி {ஸல்} அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் யாரும் மறுப்பேதும் சொல்லப்போவதில்லை. மாறாக, மூவரையும் அழைத்து நேர்காணல் நடத்தி ஒவ்வொருவருக்கும் இடையே இருக்கும் உறவு முறைகளை அறிந்து வைத்துக் கொண்டே அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பின்னர் தீர்ப்பளிக்கின்றார்கள். அதுவும் உரிமை கோரி நின்ற மற்ற இருவருக்கும் தகுந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் வழங்குகின்றார்கள். இங்கே, நபி {ஸல்} ஒரு நபியாக, ஒரு குடும்ப உறவாக செயல்படாமல் தங்கள் பாசறையிலே பயின்று வரும் மூன்று மாணாக்கர்களின் மிக உயர்ந்த பண்பாட்டை அங்கீகரித்து, ஒரு ஆசிரியராக தட்டிக் கொடுத்து, உற்சாகமூட்டி மனம் உடைந்து விடாதபடி நடக்கின்றார்கள். ஒரு வகுப்பறையிலே பல தரப்பட்ட தரம் கொண்ட மாணவர்கள் இருப்பார்கள், அவரவர்களின் தரத்திற்கேற்ப அவர்களை உற்சாகமூட்டி, தட்டிக் கொடுத்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் வழங்கி முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையை இந்த சம்பவம் உணர்த்துவதாக அமைந்துள்ளது
மாணவர்களும் உயர்ந்த இலட்சியத்தோடு படித்து முன்னேற வேண்டும்.
قَالَ (ابوبكر رضي الله عنه ) ..فَارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا فَلَمْ يُدْرِكْنَا أَحَدٌ مِنْهُمْ إِلاَّ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْن جُعْشُمٍ عَلَى فَرَسٍ لَهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا. فَقَال « لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ». حَتَّى إِذَا دَنَا مِنَّا فَكَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قَدْرُ رُمْحٍ أَوْ رُمْحَيْنِ أَوْ ثَلاَثَةٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا وَبَكَيْتُ. قَالَ « لِمَ تَبْكِى ». قَالَ قُلْتُ أَمَا وَاللَّهِ مَا عَلَى نَفْسِى أَبْكِى وَلَكِنْ أَبْكِى عَلَيْكَ. قَالَ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ « اللَّهُمَّ اكْفِنَاهُ بِمَا شِئْتَ ». فَسَاخَتْ قَوَائِمُ فَرَسِهِ إِلَى بَطْنِهَا فِى أَرْضٍ صَلْدٍ وَوَثَبَ عَنْهَا وَقَالَ يَا مُحَمَّدُ قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ فَادْعُ اللَّهَ أَنْ يُنْجِيَنِى مِمَّا أَنَا فِيهِ فَوَاللَّهِ لأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِى مِنَ الطَّلَبِ وَهَذِهِ كِنَانَتِى فَخُذْ مِنْهَا سَهْماً فَإِنَّكَ سَتَمُرُّ بِإِبِلِى وَغَنَمِى فِى مَوْضِعِ كَذَا وَكَذَا فَخُذْ مِنْهَا حَاجَتَكَ. قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لا حَاجَةَ لِى فِيهَا ». قَالَ وَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأُطْلِقَ فَرَجَعَ إِلَى أَصْحَابِهِ وَمَضَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَة.....(مسند أحمد
عن الحسن أن رسول الله {صلى الله عليه وسلم} قال لسراقة بن مالك كيف بك إذا لبست سواري كسرى قال فلما أتى عمر رضي الله عنه بسواري كسرى ومنطقته وتاجه دعا سراقة ابن مالك فألبسه إياهما (الخصائص الكبري
சுருக்கம்- ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி ஸல் அவர்களைத் துரத்தி வந்த சுராகா உடைய சம்பவத்தை இங்கே சுட்டிக் காட்டலாம். (பிற்காலத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.) நபி ஸல் அவர்களை நெருங்க அவர் முயற்சி செய்த போதெல்லாம் பூமி அவரை உள்ளே இழுத்தது. கடைசியாக அவர் திருந்தி இனிமேல் நான் உங்களைப் பின் தொடர மாட்டேன். மேலும் நான் திரும்பிச் செல்லும் யார் வந்தாலும் நான் அவர்களைத் திசை திருப்பி விடுவேன் என்று கூறியபோது அவரிடம் நபி ஸல் அவர்கள் நான் உமக்கு கிஸ்ரா மன்னரின் அணிகலன்களை வாக்களிக்கிறேன் என்றார்கள். இதில் படிப்பினை என்னவென்றால் நபி ஸல் அவர்கள் அந்த நேரத்தில் மக்காவாசிகளின் எண்ணத்தின் படி தேடப்படும் கைதியாக இருந்தும் கூட, அவர்களின் மனதில் உயர்ந்த இலட்சியம் இருந்தது. அதாவது நம்மால் பாரசீகத்தை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்த து. அவ்வாறே உமர் ரழி அவர்களின் காலத்தில் பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மன்னர் கிஸ்ரா அணிந்த அணிகலன்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது. அப்போது நபி ஸல் அவர்கள் வாக்களித்த படி சுராகா அவர்களை அழைத்து உமர் ரழி அவர்கள் கிஸ்ராவின் அணிகலன்களை சுராகாவிடம் ஒப்படைத்தார்கள்.
விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும், மனவலிமையோடும் படிக்க வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ (مسلم
“பலவீனமான இறைநம்பிக்கையாளனை விட, மனவலிமை உள்ள முஃமின் சிறந்தவனும், அல்லாஹ்விடம் உவப்பைப் பெற்றவனும் ஆவான்” ( நூல்: முஸ்லிம்)
இயன்ற அளவு முயற்சி செய்து ஆர்வத்தோடும், ஆசையோடும் படிக்க வேண்டும்.
احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَاتَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَاتَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ رواه مسلم
“உனக்கு பயன் தருகிற அனைத்தின் மீதும் நீ ஆசைப்படு! பின்னர் அதற்காக கஷ்டப்படு! அல்லாஹ்விடம் உதவி கேள்! சோர்ந்து போய்விடாதே! நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்காமல் போய் விட்டால் நான் இப்படி, இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியது தான் நடந்தது என்று சொல்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
என்னால் முடியும், என்னிடம் நல்ல மதிப்பெண் எடுக்கும்திறமை இருக்கிறது, நான் சாதிப்பேன், என பாஸிட்டிவ் ஆகபேசுவதை, நினைப்பதைத் தான் அல்லாஹ்வும், அவனது ரஸூலும் விரும்புகின்றனர்
யூஸுஃப் {அலை} அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசரோடு உரையாடும் வாய்ப்பை பெற்ற போது…“நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்றார்.மேலும், இதன் பின்னர் நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர்கள் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்கள்”. ( அல்குர்ஆன்: 12: 55, 56 )
ஸுலைமான் {அலை } அவர்கள் ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை உடனடியாக யாரால் கொண்டு வர முடியும் என்று கேட்ட போது….“அவர்களுள் கல்வியறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண் மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்றார் (அல்குர்ஆன்: 27: 40
ويوم جاء وفد نجران من اليمن مسلمين، وسألوه أن يبعث معهم من يعلمهم القرآن والسنة والاسلام، قال لهم رسول الله:" لأبعثن معكم رجلا أمينا، حق أمين، حق أمين.. حق أمين"..!! وسمع الصحابة هذا الثناء من رسول الله صلى الله عليه وسلم، فتمنى كل منهم لو يكون هو الذي يقع اختيار الرسول عليه، فتصير هذه الشهادة الصادقة من حظه ونصيبه.. يقول عمر بن الخطاب رضي الله عنه:" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها، فرحت الى الظهر مهجّرا، فلما صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر، سلم، ثم نظر عن يمينه، وعن يساره، فجعلت أتطاول له ليراني..فلم يزل يلتمس ببصره حتى رأى أبا عبيدة بن الجرّاح، فدعاه، فقال: أخرج معهم، فاقض بينهم بالحق فيما اختلفوا فيه.. فذهب بها أبا عبيدة؟..!! ان هذه الواقعة لا تعني طبعا أن أبا عبيدة كان وحده دون بقية الأصحاب موضع ثقة الرسول وتقديره..
ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்க விஷயங்களை கற்றுத் தரவும், தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும், தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒரு நபரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.அப்போது நபி {ஸல்} அவர்கள் ”உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்” என்றார்கள். இந்நேரத்தில்லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய நம்பிக்கையாளர் நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப் பட்டனர். இகாமத் சொல்லப் பட்டது. நபி ஸல் அவர்கள் தொழ வைத்தார்கள். உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள். தொழுது முடித்தவுடன் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள் பின்புஇடது புறம் பார்த்தார்கள்.என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்று குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப்பார்த்தேன்.இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல்ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்}அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள்.பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரைஅழைத்துச் செல்லுங்கள்.“ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர்நம்பிக்கையாளர் உண்டு.எனது உம்மத்தின் நம்பிக்கையாளர்அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்றார்கள்உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:”ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம்வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது. ”நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தைஅடையவேண்டுமென்று அன்று நான் ஆசைப்பட்டேன்” ஆனால், அபூ உபைதா அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள். ( நூல்:ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}, பக்கம்:241)
فقال رسول الله صلى الله عليه وسلم لأعطين الراية غدا رجلا يحبه الله ورسوله يفتح الله على يديه ليس بفرار قال يقول سلمة فدعا رسول الله صلى الله عليه وسلم عليا رضوان الله عليه وهو أرمد فتفل في عينه ثم قال خذ هذه الراية فامض بها حتى يفتح الله عليك يقول عمر بن الخطاب رضي الله عنه:
ஃகைபர் கோட்டையை நபி{ஸல்} அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் முற்றுகையிட்டிருந்தபோது கோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அப்போது நபி {ஸல்}அவர்கள் “ நாளை நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற,அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம்கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம்வெற்றியை வழங்குவான்” என்று கூறினார்கள். உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها،
படிப்பினை- வெற்றியடைய வேண்டும் என்ற வேட்கை சஹாபாக்களின் உள்ளத்தில் அதிகமாக இருந்த து
படிப்புச் செலவுகளுக்காக பெற்றோர் படும் கஷ்டத்தை பிள்ளைகள் உணர்ந்து நேரங்களை வீணாக்காமல் முன்னேற வேண்டும்
முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் நான்கு காரியங்களுக்காகவே செலவு செய்யப் படுகின்றது.1. நோய்களுக்கான சிகிச்சைக்காக, 2.திருமண விருந்துக்காக,3. இயக்கங்களின் மாநாடுகளுக்காக 4, கல்விக்காக. பெரும்பாலான பெற்றோர்கள் வீடு, வாசல், தோட்டம் துறவுகளை, நகைகளை விற்று, கடன் வாங்கி, லோன் வாங்கி, வட்டிக்கு பணம் வாங்கி படிக்க வைக்கின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் பள்ளிக் கூடத்திற்கு சரியாக செல்லாமல் வீண் விளையாட்டுக்களிலும், சினிமா கேளிக்கைகளிலும், ஊர் சுற்றுவதிலும் கழித்து விட்டு பரீட்சை நேரத்தில் சரியாக தேர்வெழுதாமல் தோற்றுப் போய் விடுகின்றார்கள். இதுபற்றி அல்லாஹ்விடம் மாணவச் சமூகம் தங்களின் பள்ளிக் காலம் குறித்து கேள்வி கேட்கப் படுவார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக