வியாழன், 30 அக்டோபர், 2025

ஜும்ஆ நாளின் முக்கியத்துவம்

 31-10-2025

جمادي الاولي-  8


بسم الله الرحمن الرحيم  

 ஜும்ஆ நாள் & ஜும்ஆ உரையின் முக்கியத்துவம்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


ஜும்ஆ  நாளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் ஜும்ஆ உரைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் இந்த தலைப்பு அமைந்துள்ளது. இந்த தலைப்பின் கீழ் ஜும்ஆ தொழுகைக்கு முன்பு விரிவாக பேசினாலும் ஜும்ஆ தொழுகை முடிந்த பிறகு உண்டியல் வசூல் நடைபெறும் நேரத்தில் சுருக்கமாக இதன் சாராம்சத்தைப் பேசினால் தான் இது யாருக்குப் போய் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய்ச் சேரும்.   

ஒவ்வொரு உம்மத்துக்கும் வாரத்தில் ஒருநாள் பெருநாளாக இருந்தது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உம்மத்துக்கு  சனிக்கிழமை பெருநாளாகும். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உம்மத்துக்கு  ஞாயிற்றுக்கிழமை, இந்த உம்மத்துக்கு வெள்ளிக்கிழமை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْنُ الْآخِرُونَ وَنَحْنُ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ أَنَّ كُلَّ أُمَّةٍ أُوتِيَتْ الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ ثُمَّ هَذَا الْيَوْمُ الَّذِي كَتَبَهُ اللَّهُ عَلَيْنَا هَدَانَا اللَّهُ لَهُ فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ (مسلم

    இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இருப்பினும் எந்த ஜும்ஆ நாளை பெருநாளாக அல்லாஹ் நமக்கு வழங்கினானோ அதன் மூலம் அல்லாஹ் நமக்கு ஹிதாயத் வழங்கினான். காலத்தில் நாம் பிந்தி இருந்தாலும் வாரத்தின் பெருநாளை கொண்டாடுவதில் நாம் முந்தி விட்டோம். நமக்கு அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

கண்ணியப்படுத்த பெருநாளை அலட்சியப்படுத்தியதால் (அதாவது சனிக்கிழமையை பெருநாளாக கடைபிடிப்பதற்கும், அன்று முழுவதும் வியாபாரத்தை விட்டு விடுவதற்கும் ஏவப்பட்ட யூதர்களில் ஒரு சாரார் அதை மீறியதால்) குரங்குகளாக உருமாற்றப்பட்டனர்

وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ (163) وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ (164) فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ (165) فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (166الاعراف)

விளக்கம்- சனிக்கிழமை பெருநாள் என்பதால் அன்று முழுவதும் மீன் பிடிக்கக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டான் ஆனால் சனிக்கிழமை தான் மீன்கள் அதிகமாக கிடைக்கும். மற்ற நாட்களில் மீன்களின் வருகை குறைவாகவே இருக்கும். எனினும் அவர்கள் ஆரம்பத்தில் அந்தக் கட்டளையை முறையாக கடைபிடித்தார்கள். பின்பு அவர்களில் ஒரு நபர் சனிக்கிழமையில் ஒரு பெரிய மீனைப் பிடித்து அதை கயிற்றால் கட்டி, அந்தக் கயிற்றின் மறுமுனையை கரையில் ஒரு கொம்பில் கட்டி வைத்து விட்டு மீனை தண்ணீருக்குள்ளேயே மிதக்க விட்டு விட்டு அடுத்த நாள் வந்து அதை பிடித்தார். கேட்டால் நான் நேற்று கட்டி வைத்தாலும் இன்றைக்குத் தானே அதை பிடிக்கிறேன் என்று கூறினார். காலப்போக்கில் இதை பலரும் கடை பிடித்தனர். இதுவரை செய்த தந்திரத்தால் அல்லாஹ்விடமிருந்து எந்த வேதனையும் வரவில்லை என்று தைரியமடைந்த அவர்கள் சனிக்கிழமையிலேயே மீன் பிடிக்க ஆரம்பித்தனர் இதை நல்லவர்கள் கண்டித்தும் கேட்கவில்லை. அந்த நல்லவர்கள் உங்களுடன் சேர்ந்து வசித்தால் எங்களுக்கும் வேதனை வந்து விடும் என்று தம் வீடுகளை மாற்றியமைத்துக் கொண்டனர். ஆனால் வியாபாரம் செய்யும் இடம் ஒன்றாகவே இருந்தது ஒருநாள் வழக்கம் போல் மீன் மார்க்கெட் கூடியது ஆனால் சனிக்கிழமையில் வரம்பு மீறியவர்கள் யாரும் அன்று மாலை வரை வரவில்லை. உடனே மற்றவர்கள் அவர்களுக்கு வசிப்பிடங்களுக்குச் சென்று பார்த்த போது அனைத்துக் கதவுகளும் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை இறுதியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தால் அவர்கள் அனைவரும் குரங்குகளாக மாற்றப்பட்டிருந்தனர் அவர்களுடைய கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. படிப்பினை- கண்ணியப்படுத்த வேண்டிய பெருநாளை அவர்கள் கண்ணியப் படுத்த தவறியதால் தண்டிக்கப்பட்டனர். இன்றும் நம்மில் பலர் ஜும்ஆ நாளை கண்ணியப் படுத்துவதில்லை. ஜும்ஆ நாளில்  இரண்டு ரக்அத்துகள் தான் ஃபர்ளாகும். காரணம் அதற்கு இணையாக  ஜும்ஆ நாளின் உரை அமைந்துள்ளது. ஆனால் இன்று பலர் எப்படியேனும் தொழுகைக்கு வந்தால் போதும் என்று கருதி ஜும்ஆ உரையில் கலந்து கொள்வதில்லை. இது அந்த ஜும்ஆவை அலட்சியப் படுத்துவதாகும்.         

ஜும்ஆ உரைக்கு மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகவே இஸ்லாத்தின் 

ஆரம்ப காலத்தில் ஜும்ஆ உரையை ஜும்ஆ தொழுகையை விட முற்படுத்தப்பட்டது.

عن مقاتل بن حيان قال: كان رسول الله صلى الله عليه وسلم يصلي الجمعة قبل الخطبة مثل العيدين، حتى كان يوم جمعة والنبي صلى الله عليه وسلم يخطب، وقد صلى الجمعة، فدخل، رجل فقال: إن دحية بن خليفة الكلبي قدم بتجارة، وكان دحية إذا قدم تلقاه أهله بالدفاف؛ فخرج الناس فلم يظنوا إلا أنه ليس في ترك الخطبة شيء؛ فأنزل الله عز وجل: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْواً انْفَضُّوا إِلَيْهَا}. فقدم النبي صلى الله عليه وسلم الخطبة يوم الجمعة وأخر الصلاة. (قرطبي)                              

قال رسول الله صلى الله عليه و سلم : والذي نفسي بيده لو تتابعتم حتى لا يبقى منكم أحد لسال بكم الوادي النار (فتح الباري

    விளக்கம்- நபி(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஈத் பெருநாளைப் போல  முதலில் ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டு பிறகு உரை நிகழ்த்துபவர்களாக ஆயிருந்தார்கள். அவ்வாறு ஒரு தடவை  (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்குள் வந்தது. அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. எனினும் அந்த வாணிபக் கூட்டம் வந்தவுடன் தஃப் அடித்து அறிவிப்புச் செய்வார்கள். நமது ஊரில் சந்தை போன்றதாகும். அவ்வாறு தண்டோரா போட்டவுடன் முதலில் செல்பவர்களுக்குத் தான் நிரப்பமாக பொருட்கள் கிடைக்கும். கொஞ்சம் தாமதமாகி விட்டாலும் கைசேதம் தான். எனவே அந்த அறிவிப்பைக் கேட்டவுடன் ஜும்ஆத் தொழுகை முடிந்து விட்டதே இனி ஜும்ஆ உரை தானே மிச்சமுள்ளது என்று எண்ணி கடைவீதிக்கு  மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கினான்.  

'அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில்விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்'' (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் அருளப்பட்டது.

மேலும் நபி ஸல் கூறினார்கள். 12 பேர் மிச்சமாக இருந்திருக்கவில்லையென்றால் அதாவது அவர்களும் பின் தொடர்ந்து சென்றிருந்தால் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் நெருப்பாக ஓடும் அளவுக்கு அல்லாஹ் தண்டனையை இறக்கியிருப்பான்

இதற்குப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை இரண்டாவதாக ஆக்கி, ஜும்ஆ உரையை முதலாவதாக ஆக்கினார்கள். ஆனால் அன்று எந்த தவறு நடந்து விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மாற்றியமைத்தார்களோ அதே தவறு இன்று நடந்து கொண்டிருக்கிறது. குத்பா முடிந்த பிறகு பலர் வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ஜும்ஆவின் நன்மையை அடைந்து கொள்ள மாட்டார்கள்.

ஜும்ஆ நாளில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம் பற்றி...

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُهْبِطَ وَفِيهِ تِيبَ عَلَيْهِ وَفِيهِ مَاتَ وَفِيهِ تَقُومُ السَّاعَةُ وَمَا مِنْ دَابَّةٍ إِلاَّ وَهِىَ مُسِيخَةٌ يَوْمَ الْجُمُعَةِ مِنْ حِينَ تُصْبِحُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ شَفَقًا مِنَ السَّاعَةِ إِلاَّ الْجِنَّ وَالإِنْسَ وَفِيهِ سَاعَةٌ لاَ يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّى يَسْأَلُ اللَّهَ حَاجَةً إِلاَّ أَعْطَاهُ إِيَّاهَا (ابوداود

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அன்று தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள். அன்று தான் பூமிக்கு இறக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்களின் தவ்பா ஏற்றுக் கொள்ளப் பட்டது. அன்று தான்  அவர்கள் வஃபாத்தானார்கள். அன்று தான்  கியாமத் ஏற்படும். அன்றைய தினம் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் கியாமத் வந்து விடுமோ என்ற பயத்திலேயே ஃபஜ்ருடைய நேரம் துவங்கி சூரியன் உதிக்கும் வரை அஞ்சி நடுங்காமல் இருப்பதில்லை. “ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறி விட்டு (அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.) “அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 

அந்த நேரம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

وفيها أكثر من أربعين قولا أرجحها ثلاثة : الأول أنها تنتقل كليلة القدر  ورجحه المحب الطبري تبعا للحجة ، الثاني أنها آخر ساعة من النهار واختاره أحمد ونقله العلائي عن الشافعي ، الثالث ما بين قعود الإمام على المنبر إلى انقضاء الصلاة وصححه النووي ، قال ابن حجر : وما عدا الثلاثة ضعيف (فيض القدير)

அந்த நேரம் எது என்பதில் 40 க்கும் அதிகமான  கருத்துக்கள் உள்ளன. அவற்ற்றில் மூன்று ஏற்றமானதாகும். 1. அது அல்லாஹ்வின் நாட்டப்படி மாறிக் கொண்டேயிருக்கும் 2. பகலின் கடைசி நேரம். 3.இமாம் மிம்பரில் அமர்ந்த தில் இருந்து தொழுகை முடியும் வரை.  

ஜும்ஆ நாளில் ஸலவாத்துகளை அதிகப் படுத்த வேண்டும்

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَام (نسائ

   உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள். நூல் : அபூதாவூத் 883

ஜும்ஆ நாள் வந்தால் சஹாபாக்களுக்கு இரட்டை சந்தோஷம்

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ

 ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் கூறினார்கள் வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். காரணம் எங்களிடம் ஒரு மூதாட்டி இருந்தார். அவர் கீரையின் தண்டுகளை எடுத்து தனது பாத்திரம் ஒன்றில் போட்டு அதில் கோதுமையைக் கலந்து கடைந்து வைப்பார். நாங்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியை அடைந்து வந்தோம்.                

 நாங்கள் வெள்ளிக் கிழமையில் மட்டும் ஜும்ஆ தொழுத பின்புதான் காலை உணவு உண்ணுவோம். கைலூலா எனும் ஓய்வையும் எடுப்போம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அந்த மூதாட்டி பரிமாறிய அந்த உணவில் கெட்டியான கொழுப்போ, திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை. நூல்-புகாரீ 5403 

ஜும்ஆவின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும்

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ  أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ (مسلم

ஜும்ஆவை விடுவதை தவிர்த்துக் கொள்ளட்டும் அவ்வாறு தவிர்த்துக் கொள்ளா விட்டால் அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டு விடுவான்.  அவர்கள் (திருந்தாத உள்ளம் கொண்டவர்களாக) பொடு போக்கானவர்களாக மாறி விடுவார்கள்.     

عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ وَكَانَ لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طُبِعَ عَلَى قَلْبِهِ (ابن ماجة

ஜும்ஆவை தகுந்த காரணமின்றி  போடுபோக்காக எவர்  விட்டு விட்டாரோ  அவரது உள்ளம் சீல் வைக்கப்படும்.


குறிப்பு- முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆவுக்கான ஏற்படீடுகள் பெரும்பாலும் இருக்கும். ஆனால் மற்றவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆத் தொழுவதற்கு பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. எனவே பெறரோர் அல்லது சம்பந்தப்பட்ட  ஜமாஅத் ஸ்கூல் நிர்வாகத்திடம்  போசி  கால் மணி நேரமேனும் அனுமதி தரச் சொல்ல வேண்டும். பெரிய மாணவர்கள் மூலமாகவே பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நடப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஹனஃபி மத்ஹபைப் பொருத்த வரை  நிர்பந்தமான சூழ்நிலையில் இமாம் அல்லாத மூன்று பேர் இருந்தாலே ஜும்ஆ நிறைவேறும்

ومن شرائطها : الجماعة وأقلهم عند أبي حنيفة  ثلاثة سوى الإمام  (محتصر القدوري

நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ وَقَفَتْ الْمَلَائِكَةُ عَلَى بَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَبْشًا ثُمَّ دَجَاجَةً ثُمَّ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ وَيَسْتَمِعُونَ الذِّكْرَ(بخاري

   ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம் 1555

ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஜும்ஆ பாங்கு சொல்லப்பட்ட பிறகும் வியாபாரம் செய்து கொண்டிருப்பது  நல்லதல்ல

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (9)

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)

عن أبي هريرة رضي الله عنه : أن رسول الله صلى الله عليه و سلم قال : الصلوات الخمس و الجمعة إلى الجمعة كفارات لما بينهن ما لم تغش الكبائر [ صحيح ابن خزيمة ]


ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَحْضُرُ الْجُمُعَةَ ثَلَاثَةُ نَفَرٍ رَجُلٌ حَضَرَهَا يَلْغُو وَهُوَ حَظُّهُ مِنْهَا وَرَجُلٌ حَضَرَهَا يَدْعُو فَهُوَ رَجُلٌ دَعَا اللَّهَ عَزَّ وَجَلَّ إِنْ شَاءَ أَعْطَاهُ وَإِنْ شَاءَ مَنَعَهُ وَرَجُلٌ حَضَرَهَا بِإِنْصَاتٍ وَسُكُوتٍ وَلَمْ يَتَخَطَّ رَقَبَةَ مُسْلِمٍ وَلَمْ يُؤْذِ أَحَدًا فَهِيَ كَفَّارَةٌ إِلَى الْجُمُعَةِ الَّتِي تَلِيهَا وَزِيَادَةِ ثَلَاثَةِ أَيَّامٍ وَذَلِكَ بِأَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ{ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا } (ابوداود

மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும்,கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்” என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),நூல் : அபூதாவூத் 939

இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.



ஜும்ஆவின் பலனை இழக்க வைக்கும் செயல்கள்:

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاَثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا ». (ابوداود)                             

عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ تَكَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ فَهُوَ كَالْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ، وَالَّذِي يَقُولُ لَهُ أَنْصِتْ لَيْسَتْ لَهُ جُمُعَةٌ. (الكتاب : مُصنف ابن أبي شيبة)   

'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது பேசுபவன் பொதி சுமக்கும் கழுதையைப் போன்றவன். அருகிலிருப்பவரிடம் வாய் மூடு என்று கூறினால் ஜும்ஆவின் நன்மை கிடையாது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்தபின் ஆகுமான பிரயாணம் செய்வது ஹராம். ஆனால் இடைவழியில் ஜும்ஆ கிடைக்கும் என்ற நம்பிக்கையிருப்பின் அல்லது வழித்தோழர்கள் அவனை விட்டுச் சென்று அதனால் சிரமம் ஏற்பட்டுவிடுமென்றிருந்தால் செல்வது ஹராமல்ல. வெள்ளிக்கிழமை இரவில் பிரயாணம் செய்வது மக்ரூஹ்.

قال الشافعي في رواية أبي سعيد : وبلغنا أنه من قرأ سورة الكهف وقي فتنة الدجال قال الشافعي : وأحب كثرة الصلاة على النبي صلى الله عليه وسلم في كل حال ، وأما في يوم الجمعة وليلتها أشد استحبابا ، وأحب قراءة الكهف ليلة الجمعة ويومها لما جاء فيها

الكتاب : معرفة السنن والآثار


வியாழன், 23 அக்டோபர், 2025

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்

24-10-2025

ஜமாதுல் அவ்வல்-1


بسم الله الرحمن الرحيم  

 ஜமாஅத் தொழுகையின் 

சிறப்புகளும் சட்டங்களும்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


முஸ்லிம்களில் பலரிடம் ஐவேளைத் தொழும் வழமை இல்லை. அவ்வாறு ஐவேளை தொழுபவர்களாக இருந்தாலும் ஜமாஅத்துடன் தொழுவதில் பேணுதல் இருப்பதில்லை. ஜமாஅத்துடன் தொழுவது ஆண்களுக்கு எவ்வளவு தூரம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் முற்காலத்திலும் தற்காலத்திலும் இமாம் ஜமாஅத்தைக் கடைபிடிப்பதில் பேணுதலாக வாழ்ந்தவர்களைப் பற்றி, வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் தமிழக அரசு காஜியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹழ்ரத் கிப்லா அவர்கள் ஸாஹிபுத் தர்தீப் எனும் சிறப்பைப் பெற்றவர்கள் அதாவது வாழ்நாளில் ஒரு நேரத் தொழுகை கூட தவறியதில்லை. தஹஜ்ஜத் தொழுகையும் தவறியதில்லை என அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்.            

நாற்பது வருடங்களாக இமாம் ஜமாஅத்தை தவற விடாத ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள்

   ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்கள் தாபியீன்களில் சிறந்தவர்கள். 40 வருடங்களாக அவர்களுக்கு இமாம் ஜமாஅத் தவறியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஹர்ரா என்ற போர் நடைபெற்ற நேரத்தில் தான் அவர்களுக்கு இமாம் ஜமாஅத் தவறி இருக்கலாம் என்று வரலாறுகள் கூறுகின்றன. ஹர்ரா போர் நடைபெற்ற நாட்களில் மஸ்ஜிதுன் நபவியில் மூன்று நாட்கள் பாங்கும் சொல்லப்படவில்லை. தொழுகையும் நடைபெறவில்லை. ஹழ்ரத் ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்கள் பள்ளியிலேயே இருந்தார்கள். இந்த மூன்று நாட்களும் தொழுகையின் நேரத்தை நபி ஸல் அவர்களின் ரவ்ழாவில் இருந்து வரும் கனைப்புச் சப்தத்தை வைத்தே அறிந்து கொண்டார்கள். நூல் தாரமீ 93  

عن سعيد بن عبد العزيز قال : لما كان أيام الحرة لم يُؤذن في مسجد النبي صلى الله عليه و سلم ثلاثا ولم يَقُم ولم يبرح سعيد بن المسيب من المسجد وكان لا يعرف وقت الصلاة الا بهمهمة يسمعها من قبر النبي صلى الله عليه و سلم (سنن الدارمي)

ஹர்ரா என்பது மதீனாவுக்கு வெளியே பாறைகள் நிறைந்த பகுதியாகும். அங்கு ஒரு போர் நடைபெற்றது. யஜீத் ஆட்சியில் ஷாம் வாசிகளில் சிலர் மதீனாவைக் கொள்ளையடிக்க வந்த போது அவர்களுக்கு எதிராக யஜீத் உடைய உத்தரவின் பேரில் மதீனாவாசிகள் போர் செய்தார்கள். இது ஹிஜ்ரி 63- துல்ஹஜ் மாதம் நிகழ்ந்தது                       

قال الطيبي الحرة يوم مشهور في الإسلام أيام يزيد بن معاوية لما نهب المدينة عسكر من أهل الشام ندبهم لقتال أهل المدينة من الصحابة والتابعين وأمَّر عليهم مسلم بن عيينة المري في ذي الحجة سنة ثلاث وستين وعقيبها هلك يزيد والحرة هذه أرض بظاهر المدينة بها حجارة سود كثيرة وقعت فيها هذه الوقعة-   لم يؤذن في مسجد النبي بصيغة المجهول أي لم يؤذن أحد فيه لأجل الفتنة ثلاثا أي ثلاث ليال بأيامها ولم يقم على بناء المفعول من الإقامة أي ولم يقم أحد للصلاة أيضا ولم يبرح بفتح الراء لم يفارق سعيد بن المسيب المسجد وكان الناس يقولون في حقه إنه شيخ مجنون  (مرقاة)

வாழ்நாள் முழுவதும் ஜமாஅத் தவற விடாமல் தொழுவதே பெரிய கராமத்

   இறை நேசர் ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்களிடம் மாணவராக இருந்த  ஒருவர் சுமார் 12 வருடங்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டார் அப்போது அவர் ஷைகு அவர்களிடம் பயணம் கூறும்போது நான் இத்தனை வருடங்களாக என் மனதில் வைத்துள்ள ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இத்தனை வருடத்தில் நான் உங்களிடம் எந்த கராமத்தையும் நான் கண்டதில்லையே என்று கூற ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதாவது ஒரு நேரம் இமாம் ஜமாஅத்தை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள் இல்லை என்று இவர் பதில் கூறினார் மீண்டும் ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதேனும் ஒரு நேரம் தக்பீர் தஹ்ரீமாவை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்க இல்லை என்று இவர் பதில் கூறினார் அதற்கு ஷைகு அவர்கள் இதை விட என்ன அற்புதம் உமக்கு வேண்டும் என்றார்கள்... உடனே அந்த சீடர் ஷைகு அவர்களை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தியவராக  உங்களுடைய நிலையை நானும் அடைய வேண்டும் நான் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்ப உங்களிடம் எப்போது வரட்டும் என்று கேட்டார் அதற்கு ஷைகு அவர்கள் "நான்" இறந்த பிறகு வா என்றார்கள் உடனே அந்த சீடர் ஷைகு அவர்களே நீங்கள் இறந்த பின்பு வருவதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நான் இறந்த பிறகு என்று என்னுடைய மவ்த்தை நான் குறிப்பிடவில்லை மாறாக "நான்" என்ற அகம்பாவம் எப்போது உன் உள்ளத்தில் அழியுமோ, இறந்து விடுமோ அப்போது என்னிடம் வா என்ற பொருளில் தான் நான் கூறினேன் என்றார்கள். 

ஜமாஅத் தொழுகையில் அடங்கியுள்ள தத்துவங்கள்

   உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அளவுக்கு சமுதாய ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தியுள்ளது இஸ்லாம். அந்த ஒற்றுமையை இஸ்லாத்தின் தூணாகிய தொழுகையில் இருந்தே முஸ்லிம்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. மனிதர்கள் அனைவரும் சமம். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை என்ற விஷயமும் ஜமாஅத் தொழுகையின் மூலமே பயிற்றுவிக்கப் படுகிறது. நாட்டின் ஜனாதிபதியே வந்து தொழுதாலும் தலையை கீழே தான் வைத்தாக வேண்டும். அவரின் தலைக்கு அருகில் சாதாரண மனிதரின் கால்கள் இருக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். இதுதான் சமத்துவம். 

இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதற்கு ஜமாஅத் தொழுகையே மாபெரும் சாட்சியாகும். இது வெறும் வணக்கம் மட்டுமல்ல. மாறாக சமத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு வழியாக இருக்கிறது. இமாம் முன்னால் நின்று தொழுகை நடத்துகிறார் என்றால் அது அவருக்கு இருக்கிற தனிப்பட்ட முன்னுரிமையினால் அல்ல. சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் சீராக செயல்பட வேண்டும் என்பதை பழக்கப்படுத்துவதற்குத் தான். 

நிர்பந்தம் இல்லாமல் ஜமாஅத் தொழுகையை விடுவது நிஃபாக் தன்மையின் அடையாளம்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلاَءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صلى الله عليه وسلم سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِى بُيُوتِكُمْ كَمَا يُصَلِّى هَذَا الْمُتَخَلِّفُ فِى بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَعْمِدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الْمَسَاجِدِ إِلاَّ كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ خَطْوَةٍ يَخْطُوهَا حَسَنَةً وَيَرْفَعُهُ بِهَا دَرَجَةً وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلاَّ مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُؤْتَى بِهِ يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِى الصَّفِّ(مسلم)باب صَلاَةُ الْجَمَاعَةِ مِنْ سُنَنِ الْهُدَى- كتاب المساجد

அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது யாருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துமோ அவர் தொழுகையை பேணித் தொழட்டும். நீங்கள் வீட்டில் தொழுதால் நபியின் சுன்னத்தை விட்டவர்களாக ஆகிவிடுவீர்கள் நபியின் சுன்னத்தை விட்டு விட்டால் நீங்கள் வழிகெட்டு விடுவீர்கள்

யார் அழகான முறையில் ஒழு செய்து மஸ்ஜிதுக்கு நடந்து வருவாரோ அவருடைய ஒவ்வொரு எட்டுக்களுக்கும் நன்மை உண்டு அந்தஸ்து உயர்த்தப்படும் எங்களுடைய காலத்தில் முனாபிக் தவிர மற்ற யாரும் தொழுகையை விட மாட்டார் எந்த அளவுக்கு என்றால் முடியாத நபரும் கூட இரண்டு நபர்கள் கை தாங்கலாக அழைத்து வரப்பட்டு ஸஃப்பிலே நிப்பாட்டப்படுவார்கள் 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ صَلَاةٌ أَثْقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنْ الْفَجْرِ وَالْعِشَاءِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْت أَنْ آمُر بِالصَّلَاةِ فَتُقَام ثُمَّ آمُر رَجُلًا فَيُصَلِّي بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِق مَعِي بِرِجَالٍ وَمَعَهُمْ حُزَم مِنْ حَطَب إِلَى قَوْم لَا يَشْهَدُونَ الصَّلَاة فَأُحَرِّق عَلَيْهِمْ بُيُوتهمْ بِالنَّارِ (بخاري) باب فَضْلِ الْعِشَاءِ فِى الْجَمَاعَةِ- كتاب الأذان 

முனாபிக்கீன்ளுக்கு பஜ்ருடைய தொழுகை மற்றும் இஷாவுடைய தொழுகையை விட கஷ்டமான தொழுகை எதுவுமில்லை இந்த இரண்டிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் வந்து விடுவார்கள் நான் தொழ வைப்பதற்கு எவரேனும் ஒருவரை ஏவி விட்டு நான் வீடுகளுக்கு சென்று என்னோடு சிலர்களை அழைத்துக் கொண்டு விறகுகளை எங்களுடன் எடுத்துக் கொண்டு வீட்டில் யார் தொழுகிறார்களோ அவர்களின் வீடுகளை எரிக்க நாடுகிறேன்.                     ..

وَفِي رِوَايَة وَاَلَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ عَلِمَ أَحَدهمْ أَنَّهُ يَجِد عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الصَّلَاة وَلَوْلَا مَا فِي الْبُيُوت مِنْ النِّسَاء وَالذُّرِّيَّة لَحَرَّقْت عَلَيْهِمْ بُيُوتهمْ بِالنَّارِ(بخاري)باب وُجُوبِ صَلاَةِ الْجَمَاعَةِ-كتاب  الأذان

                எப்படியேனும் தவழ்ந்தாவது  மஸ்ஜிதுக்கு வந்தால் இரண்டு எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என்று இருந்தால்       ஜமாஅத்துக்கு வந்து விடுவார்கள் என்று மேற்படி ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துள்ளார்கள் 

இன்றைய காலத்திலும் இமாம் ஜமாஅத்துக்கு வராத நபர்கள் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஏதேனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உணவு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தால் அன்றைய தினம் மஸ்ஜிதே நிரம்பி வழிவதை நாம் பார்க்க முடியும் 

ஜமாஅத் தொழுகைக்கு ஒருவர் வராமல் ஆகிவிட்டாலும் ஏன் வரவில்லை என்று விசாரிக்கும் வழக்கம் இருந்தது 

عَنْ أَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَدَ سُلَيْمَانَ بْنَ أَبِي حَثْمَةَ فِي صَلَاةِ الصُّبْحِ وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غَدَا إِلَى السُّوقِ وَمَسْكَنُ سُلَيْمَانَ بَيْنَ السُّوقِ وَالْمَسْجِدِ النَّبَوِيِّ فَمَرَّ عَلَى الشِّفَاءِ أُمِّ سُلَيْمَانَ فَقَالَ لَهَا لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ فَقَالَتْ إِنَّهُ بَاتَ يُصَلِّي فَغَلَبَتْهُ عَيْنَاهُ فَقَالَ عُمَرُ لَأَنْ أَشْهَدَ صَلَاةَ الصُّبْحِ فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً (مؤطا)

ஜமாஅத் தொழுகைக்கு ஒருவர் வராமல் ஆகிவிட்டாலும் அவர் ஏன் வரவில்லை என்று விசாரிக்கும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது சுலைமான் என்பவர் பஜ்ர் தொழுகைக்கு வரவில்லை என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கவலைப்பட்டு அவருடைய தாயாரை கடைவீதியிலே சந்தித்து காரணம் கேட்க என்னுடைய மகன் சுலைமான் இரவெல்லாம் தொழுதார் அந்த அசதியிலே தூங்கிவிட்டார் என்று சொன்னபோது உமர் ரலியல்லாஹு தஆலா கூறினார்கள் சுபஹுத் தொழுகைக்கு ஜமாத்துடன் கலந்து கொள்வது இரவெல்லாம் நின்று தொழுவதை விட மேலானது என்றார்கள் அதாவது இரவுத் தொழுகை வேண்டாம் என்று கூறவில்லை மாறாக பஜ்ர் தொழுகையின் ஜமாஅத் தப்பிவிடும் அளவுக்கு இரவுத் தொழுகை தொழுவதை தான் உமர் ரலி கண்டித்தார்கள்.               

கூட்டாக ஒற்றுமையுடன் சேர்ந்து தொழுவதில் கிடைக்கும் நன்மை தனியாக தொழுவதில் கிடைப்பதில்லை

عَنْ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً (بخاري) وَكَانَ الأَسْوَدُ إِذَا فَاتَتْهُ الْجَمَاعَةُ ذَهَبَ إِلَى مَسْجِدٍ آخَرَ(بخاري- باب فَضْلِ صَلاَةِ الْجَمَاعَةِ-كتاب الاذان-عَنْ قُبَاثِ بْنِ أَشْيَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ:صَلاَةُ رَجُلَيْنِ يَؤُمُّ أَحَدُهُمَا صَاحِبَهُ أَزْكَى عِنْدَ اللَّهِ مِنْ صَلاَةِ أَرْبَعَةٍ تَتْرَى وَصَلاَةُ أَرْبَعَةٍ يَؤُمُّهُمْ أَحَدُهُمْ أَزْكَى عِنْدَ اللَّهِ مِنْ صَلاَةِ ثَمَانِيَةٍ تَتْرَى1 وَصَلاَةُ ثَمَانِيَةٍ يَؤُمُّهُمْ أَحَدُهُمْ أَزْكَى عِنْدَ اللَّهِ مِنْ صَلاَةِ مِائَةٍ تَتْرَى (بيهقي)

ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்து மஸ்ஜிதில் காத்திருப்பவருக்கு மலக்குகளின் துஆ

عن أَبي هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةُ الرَّجُلِ فِى الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلاَتِهِ فِى بَيْتِهِ وَفِى سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا وَذَلِكَ أَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لاَ يُخْرِجُهُ إِلاَّ الصَّلاَةُ  لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ فَإِذَا صَلَّى لَمْ تَزَلِ الْمَلاَئِكَةُ تُصَلِّى عَلَيْهِ مَا دَامَ فِى مُصَلاَّهُ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ اللَّهُمَّ ارْحَمْهُ وَلاَ يَزَالُ أَحَدُكُمْ فِى صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ (بخاري) - باب فَضْلِ صَلاَةِ الْجَمَاعَةِ-كتاب الاذان

இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக தொழுகை நடத்தலாம்

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ اللَّيْلِ فَلَمَّا كَانَ فِي بَعْضِ اللَّيْلِ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا يُخَفِّفُهُ عَمْرٌو وَيُقَلِّلُهُ وَقَامَ يُصَلِّي فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ عَنْ شِمَالِهِ فَحَوَّلَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ ثُمَّ أَتَاهُ الْمُنَادِي فَآذَنَهُ بِالصَّلَاةِ فَقَامَ مَعَهُ إِلَى الصَّلَاةِ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ قُلْنَا لِعَمْرٍو إِنَّ نَاسًا يَقُولُونَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَامُ عَيْنُهُ وَلَا يَنَامُ قَلْبُهُ قَالَ عَمْرٌو سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ رُؤْيَا الْأَنْبِيَاءِ وَحْيٌ ثُمَّ قَرَأَ{إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ} (بخاري) باب التَّخْفِيفِ فِى الْوُضُوءِ- الوضوء

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் நான் என்னுடைய சின்னம்மா மைமுனா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் தொழுவதற்காக எழுந்தார்கள் உளூச் செய்தார்கள் அவர்கள் உளுச் செய்ததைப் போல நானும் உளூ செய்தேன் பின்பு அவர்களின் தொழ ஆரம்பிக்கும் போது எழுது புறமாக வந்து நின்றேன் என் கையைப் பிடித்து என்னை வலது புறமாக ஆக்கினார்கள் பிறகு அல்லாஹ் நாடியவரை தொழுதார்கள் பிறகு மீண்டும் தொழுதார்கள் தூங்கினார்கள் பிறகு தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அழைத்தார் உடனே தொழுகையின் பக்கம் எழுந்தார்கள் உளூச் செய்யவில்லை.                    

உளு செய்யவில்லை என்பதற்கான காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிச்சிறப்பாக அவர்கள் தூங்கினாலும் கண்கள் மட்டுமே உறங்கும் உள்ளம் உறங்காது என்பதாகும் 

ஜமாஅத் தொழுகையில் எண்ணிக்கை கூடும் அளவுக்கு நன்மை அதிகம்

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا الصُّبْحَ فَقَالَ أَشَاهِدٌ فُلَانٌ قَالُوا لَا قَالَ أَشَاهِدٌ فُلَانٌ قَالُوا لَا قَالَ إِنَّ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ أَثْقَلُ الصَّلَوَاتِ عَلَى الْمُنَافِقِينَ وَلَوْ تَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَيْتُمُوهُمَا وَلَوْ حَبْوًا2 عَلَى الرُّكَبِ وَإِنَّ الصَّفَّ الْأَوَّلَ عَلَى مِثْلِ صَفِّ الْمَلَائِكَةِ وَلَوْ عَلِمْتُمْ مَا فَضِيلَتُهُ لَابْتَدَرْتُمُوهُ وَإِنَّ صَلَاةَ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلَاتِهِ وَحْدَهُ وَصَلَاتُهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلَاتِهِ مَعَ الرَّجُلِ وَمَا كَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى (ابوداود) كتاب الصلاة

சிலர் மஸ்ஜிதில் நடைபெறும் ஜமாஅத்தை பொடுபோக்காக தவற விட்டு விட்டு தாமதமாக வந்து தனியாக ஜமாஅத் நடத்துவதை வழமையாக்கிக் கொண்டுள்ளனர். எண்ணிக்கையில் அதிகமான நபர்கள் கொண்ட ஜமாஅத்தை வேண்டுமென்றே தவற விடுவது சுன்னத்துக்கு மாற்றமாகும்        

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنْ اتِّبَاعِهِ عُذْرٌ لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى (ابوداود) بَاب فِي التَّشْدِيدِ فِي تَرْكِ الْجَمَاعَةِ- كِتَاب الصَّلَاةِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ ثُمَّ آمُرَ بِالصَّلَاةِ فَيُؤَذَّنَ لَهَا ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ (بخاري) باب فَضْلِ الْعِشَاءِ فِى الْجَمَاعَةِ-كتاب الأذان- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ أَعْمَى فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرَخِّصَ لَهُ فَيُصَلِّيَ فِي بَيْتِهِ فَرَخَّصَ لَهُ فَلَمَّا وَلَّى دَعَاهُ فَقَالَ هَلْ تَسْمَعُ النِّدَاءَ بِالصَّلَاةِ قَالَ نَعَمْ قَالَ فَأَجِبْ (مسلم) بَاب يَجِبُ إِتْيَانُ الْمَسْجِدِ عَلَى مَنْ سَمِعَ النِّدَاءَ- كِتَاب الْمَسَاجِدِ

எப்போதும் ஜமாஅத்துக்கு வராமல் வீட்டில் தொழுபவரைப் பற்றி இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் எச்சரித்த விதம்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ كَمَا يُصَلِّي هَذَا الْمُتَخَلِّفُ فِي بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ (مسلم)بَاب صَلَاةِ الْجَمَاعَةِ -المساجد

தனியாக மேயும் ஆட்டை ஓநாய் பிடிப்பது போல் எப்போதும் ஜமாஅத்துடன் சேராமல் இருப்பவரை ஷைத்தான் கெடுப்பான்

عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمْ الصَّلَاةُ إِلَّا قَدْ اسْتَحْوَذَ عَلَيْهِمْ الشَّيْطَانُ فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ (ابوداود) بَاب فِي التَّشْدِيدِ فِي تَرْكِ الْجَمَاعَةِ - كِتَاب الصَّلَاةِ

தக்பீர் தஹ்ரீமாவுக்கே வந்து சேர்ந்து விட முயற்சி செய்ய வேண்டும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِى جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ».(ترمذي

மஃமூம்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள்.

தக்பீர் தஹ்ரீமாவிற்கே இமாமுடன் வந்து சேர்ந்து கொள்வது

عَنْ أَنَسِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنْ النَّارِ وَبَرَاءَةٌ مِنْ النِّفَاقِ (ترمذي- الصَّلَاةِ

ஜமாஅத்தில் கலந்து கொள்ள எண்ணி விரைந்து வந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் ஜமாஅத் தவறினால்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا وَحَضَرَهَا لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا(ابوداود) بَاب فِيمَنْ خَرَجَ يُرِيدُ الصَّلَاةَ فَسُبِقَ بِهَا- كِتَاب الصَّلَاةِ

இவர் அழகிய முறையில் உளுச் செய்து மஸ்ஜிதை நோக்கி வந்த நிலையில் ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாக தொழுகை முடிந்து விட்டதை அவர் பெற்றுக் கொண்டால் அவருடைய எண்ணம் எப்படியாவது ஜமாஅத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இருந்தால்  அல்லாஹுத்தஆலா அந்த ஜமாஅத்தில் கலந்து கொண்ட நன்மையை அவருக்கு தருகிறான் 

இமாமுடன் ருகூவில் சேர்ந்தால் அந்த ரக்அத் கணக்கிடப்படும். எனினும் அதற்காக ஓடி வரக்கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَدْرَكَ رَكْعَةً  مِنْ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ (بخاري) بَاب مَنْ أَدْرَكَ مِنْ الصَّلَاةِ رَكْعَةً-كتاب مواقيت الصلاة (مَنْ أَدْرَكَ رَكْعَةً  أي الركوع) مرعاة- عَنْ أَبِي قَتَادَةَ  قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ 3 فَلَمَّا صَلَّى قَالَ مَا شَأْنُكُمْ قَالُوا اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ قَالَ فَلَا تَفْعَلُوا إِذَا أَتَيْتُمْ الصَّلَاةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا(بخاري) باب قَوْلِ الرَّجُلِ فَاتَتْنَا الصَّلاَةُ-كتاب الأذان

அபூ கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நாங்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது சில மனிதர்களின் ஓடிவரும் சப்தத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள் தொழுகை முடிந்த பிறகு காரணம் கேட்ட பொழுது நாங்கள் தொழுகைக்காக விரைந்து ஓடி வந்தோம் என்று கூறிய போது இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள் நீங்கள் தொழுகைக்கு வந்தால் அமைதியாக  நடந்து வாருங்கள் எந்த ரக்அது கிடைத்ததோ அதை தொழுங்கள் தப்பிவிட்டதை திரும்ப எழுந்து தொழுங்கள் என்றார்கள் 

இமாமை எந்த நிலையில் பெற்றுக் கொண்டாலும் அவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும். சிலர் தொழ வரும்போது இமாம் சுஜூதிலோ அல்லது அத்தஹிய்யாத்திலோ இருந்தால் அவர் மேலே வரும் வரை நின்று கொண்டேயிருப்பர். இது சரியானதல்ல

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جِئْتُمْ إِلَى الصَّلَاةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا وَلَا تَعُدُّوهَا شَيْئًا (ابوداود) بَاب فِي الرَّجُلِ يُدْرِكُ الْإِمَامَ سَاجِدًا كَيْفَ يَصْنَعُ-  كِتَاب الصَّلَاةِ-  

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் நீங்கள் தொழுகைக்கு வரும்போது நாங்கள் சுஜூதில் இருந்தால் எங்களோடு சேர்ந்து சுஜூது செய்யுங்கள் அந்த சுஜூதை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.  

عَنْ ابْنِ أَبِي لَيْلَى عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى أَحَدُكُمْ الصَّلَاةَ وَالْإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الْإِمَامُ (ترمذي) بَاب مَا ذُكِرَ فِي الرَّجُلِ يُدْرِكُ الْإِمَامَ وَهُوَ سَاجِدٌ كَيْفَ يَصْنَعُ-كِتَاب الْجُمُعَةِ

உங்களில் ஒருவர் தொழுகைக்கு வந்தால் இமாம் எந்த நிலையில இருக்கிறாரோ அந்த நிலையில் அவருடன் சேர்ந்து கொள்ளட்டும் 

தொழுகையில் எந்த செயலிலும் இமாமை முந்தக் கூடாது

عَنْ أَنَسٍ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَلَمَّا قَضَى الصَّلَاةَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ أَيُّهَا النَّاسُ إِنِّي إِمَامُكُمْ فَلَا تَسْبِقُونِي بِالرُّكُوعِ وَلَا بِالسُّجُودِ وَلَا بِالْقِيَامِ وَلَا بِالِانْصِرَافِ فَإِنِّي أَرَاكُمْ أَمَامِي وَمِنْ خَلْفِي (مسلم) باب النَّهْىِ عَنْ سَبْقِ الإِمَامِ –الصلاة- عن الْبَرَاء بْنُ عَازِبٍ وَهُوَ غَيْرُ كَذُوبٍ قَالَ كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَضَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَبْهَتَهُ عَلَى الْأَرْضِ (بخاري) باب مَتَى يَسْجُدُ مَنْ خَلْفَ الإِمَامِ- الأذان

       அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு ஒரு நாள் தொழுகை நடத்தினார்கள் தொழுகை முடிந்தவுடன் எங்களை முன்னோக்கி மக்களே நான் உங்களுடைய இமாமாக இருக்கிறேன் எந்த நிலையிலும் ருகூவிலோ சுஜூதிலோ  என்னை முந்தாதீர்கள் சலாம் கொடுப்பதிலும் நிலையிலும் என்னை முந்தாதீர்கள் காரணம் உங்களை நான் முன்னால் இருந்தும் பார்க்கிறேன் முதுகுக்கு பின்னாலும் பார்க்கிறேன் என்றார்கள்.                                                 

எப்போதும் தொழுகையில் இமாமை முந்துபவர்களின் தலை கழுதையின் தலையாக மாற்றப்படலாம் என்ற எச்சரிக்கை... 

இது இவ்வுலகிலோ அல்லது மறுமையிலோ நடைபெறலாம்

عن أَبي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَمَا يَخْشَى أَحَدُكُمْ أَوْ لَا يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ(بخاري) باب إِثْمِ مَنْ رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ-كتاب  الأذان

எப்போதும் தொழுகையில் இமாமை முந்துபவரின் தலை கழுதையின் தலையாக மாற்றப்பட்ட உண்மைச் சம்பவம்

وقال ابن حجر يحتمل أن يكون على حقيقته فيكون ذلك مسخا خاصا والممتنع المسخ العام كما صرحت به الأحاديث الصحاح وأن يكون مجازا عن البلادة ويؤيد الأول ما حكي عن بعض المحدثين أنه رحل إلى دمشق لأخذ الحديث عن شيخ مشهور بها فقرأ عليه جملة لكنه كان يجعل بينه وبينه حجابا ولم ير وجهه فلما طالت ملازمته له ورأى حرصه على الحديث كشف له الستر فرأى وجهه وجه حمار فقال له اِحْذَرْ يا بُني أن تسبق الإمام فإني لما مَرَّ بي في الحديث استبعدتُ وقوعَه فسبقتُ الإمام فصار وجهي كما ترى (مرقاة شرح مشكاة) شرح ابن ماجة للسيوطي- تحفة الاحوذي 

சிரியாவில் பிரபலமான ஆசிரியர் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரிடம் ஹதீஸ்களை  கேட்க ஒரு மாணவர் சென்றார். அந்த ஆசிரியர் சிலவற்றை இவருக்கு கற்றுத் தந்தாலும் தன் முகத்தை காட்டாமலேயே திரைக்குப் பின்னால் இருந்து பாடம் நடத்தினார். ஒரு கட்டத்தில் இந்த மாணவரின் ஆர்வத்தைக் கண்ட  ஆசிரியர் தன்னையும் மறந்து திரையை அவரே விலக்க, அங்கே கண்ட காட்சி மாணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருடைய உடம்பெல்லாம் மனித உடலாகவும், தலை மட்டும் கழுதையின் தலையாகவும் இருந்தது. பின்பு அந்த ஆசிரியர் சோகத்துடன் அதற்கான காரணத்தைக் கூறினார். மகனே தொழுகையில் இமாமை ஒரு போதும் நீ முந்துபவனாக ஆகி விடாதே ஏனெனில் அவ்வாறு முந்துபவர்களின்  தலை கழுதையில் தலையாக மாற்றப்படக் கூடும் என்ற  ஹதீஸை நான் பலமுறை படித்தேன் அப்படியிருந்தும் அதை நான் நம்பாமல்  தொழுகையில் இமாமை முந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதனால் அல்லாஹ் என்னை இப்படி ஆக்கி விட்டான். என்று அழுதபடி கூறினார்.            

இகாமத் சொல்வதற்கு முன்போ அல்லது இமாம் வருவதற்கு முன்போ மஃமூம்கள் எழலாமா ?

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُقِيمَتْ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ (بخاري)-كتاب الأذان 

ومن الأدب القيام أي قيام القوم والإمام إن كان حاضرا بقرب المحراب ( حين قيل ) أي وقت قول المقيم ( حي على الفلاح ) لأنه أمر به فيجاب (مراقي الفلاح)

விளக்கம்-மிஹ்ராபுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் ஹய்ய அ ல ல் ஃபலாஹ் என்று சொல்லும்போது எழுந்தால் போதும்.

சில நேரங்களில் இமாமுக்கு மறதி ஏற்பட்டால் சுப்ஹானல்லாஹ் சொல்லி ஞாபகப்படுத்துவது

عَنْ عَبْدِ اللَّهِ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلَاةِ فَقَالَ وَمَا ذَاكَ قَالَ صَلَّيْتَ خَمْسًا فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ(بخاري)  كتاب السهو وفي رواية وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لِيُسَلِّمْ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ (بخاري) باب التَّوَجُّهِ نَحْوَ الْقِبْلَةِ-كتاب الصلاة

இமாமத் பற்றிய மேலும் சில விளக்கங்கள்

عَنْ أَبِي عَطِيَّةَ رَجُلٍ مِنْهُمْ قَالَ كَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ يَأْتِينَا فِي مُصَلَّانَا يَتَحَدَّثُ فَحَضَرَتْ الصَّلَاةُ يَوْمًا فَقُلْنَا لَهُ تَقَدَّمْ فَقَالَ لِيَتَقَدَّمْ بَعْضُكُمْ حَتَّى أُحَدِّثَكُمْ لِمَ لَا أَتَقَدَّمُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ زَارَ قَوْمًا فَلَا يَؤُمَّهُمْ وَلْيَؤُمَّهُمْ رَجُلٌ مِنْهُمْ (ترمذي) قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ قَالُوا صَاحِبُ الْمَنْزِلِ أَحَقُّ بِالْإِمَامَةِ مِنْ الزَّائِرِ و قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَذِنَ لَهُ فَلَا بَأْسَ أَنْ يُصَلِّيَ بِهِ (ترمذي)

மாலிக் இப்னு ஹு இஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களுடைய தொழுகை பள்ளிக்கு சில நேரம் வந்து பேசிக் கொண்டிருப்பார்கள் அவர்கள் எங்களுடைய மஹல்லாவை சார்ந்தவர்கள் அல்ல ஒரு நேரம் அவர்கள் வருகை தந்த போது தொழுகை நேரம் வந்தது நாங்கள் சொன்னோம் நீங்கள் தொழ வையுங்கள் அப்போது அவர்கள் உங்களில் ஒருவர் தொழ வைக்கட்டும் அது பற்றிய நபிமொழியை நான் பின்பு கூறுகிறேன் என்றார்கள் தொழுகை முடிந்ததும் அவர்கள் கூறினார்கள் ஒரு கூட்டத்தாரை நீங்கள் சிந்திக்க சென்றால் நீங்கள் தொழ வைக்காதீர்கள் அவர்களில் ஒருவர் தொழ வைக்கட்டும் என்றார்கள் மற்றொரு அறிவிப்பில் சந்திக்க வருபவரை விட அந்த வீட்டினுடைய உள்ளவர்கள் தொழ வைக்க மிகவும் சிறந்தவர்கள் என்றும் உள்ளது.  

புதன், 15 அக்டோபர், 2025

வீண் விரயம் தவிர்ப்போம்

 17-10-2025

ரபீஉல் ஆகிர் 24 بسم الله الرحمن الرحيم  

 வீண் விரயங்கள் பலவிதம்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 காசைக் கரியாக்குவது என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது தீபாவளியைப் பற்றித் தான். ஒவ்வொரு வருடமும் பட்டாசு என்ற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் சாம்பலாக ஆக்கப்படுகிறது. அதை நமது முஸ்லிம் பிள்ளைகளும் செய்வது தான் மிகப்பெரும் கைசேதம். 

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31) الاعراف

நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை நல்லது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் வரவேற்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை கெட்டது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கும். எத்தனையோ மக்கள் உண்ணுவதற்கு உணவு இல்லாமல் கஷ்டப் படும் நேரத்தில் இது போன்ற வீண் விரயத்தை எந்த நடுநிலை சிந்தனை கொண்டவர்களும் ஜீரணிக்க மாட்டார்கள்.பட்டாசுகளால் பணம் வீண் விரயம் என்பது மட்டுமல்ல. சுற்றுச் சூழல் பாதிக்கப் படுகிறது. உதாரணம் இறந்து விட்ட ஒரு மனிதனை எரிப்பது நல்லதா புதைப்பது நல்லதா எனும்போதுஅறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களைப் போன்ற புதைப்பது தான் சுற்றுச் சூழலை பாதிக்காது. மாறாக எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்கின்றனர். 

பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகளை  நான்கு வகையாக  பிரிக்கலாம்

1. சுற்றுச் சூழல் பாதிப்பு 2. வீண் விரயம். 3.தன் சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவது 4. மாற்றாருடன் ஒப்பாகுதல்

1. சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றி...

பசுமை தீபாவளி என்ற தலைப்பில் அகிலாம்பாள் என்பவரின் கட்டுரையின் சில துளிகள் இதோ... பட்டாசு வெடிப்பதால் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னா பின்னமாகி விடும். நீர் நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படும். நச்சுக்கள் நீரில் கலந்து நிலத்தடி நீர் மாறுபடும். பட்டாசுக் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மக்கும் குப்பையைக் கூட மக்க வைக்க முடியாத அளவுக்கு மண் மலடாகிறது. பட்டாசுப் புகையால் பறக்கும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. அதன் கரு கலைகின்றன. பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை. காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை. ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை. ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை. நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை. வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை.  உணவு இல்லையேல் மனிதன் இல்லை.

2. வீண் விரயம்

வீண் விரயம் செய்வதை இஸ்லாம் கடுமையாக எச்சரித்துள்ளது

  ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் சில ஏரியாக்களில் மற்றவர்களைவிட பட்டாசுகளை வாங்கி வெடித்தவர்களில் அதிகம் பேர் முஸ்லிம்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய அனாவசிய செலவுகளால் நம் சமூகத்தில் பலர் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் இருக்கின்றனர். இவர்கள் தான் அடகுக் கடைக்காரர்களை வளர்த்து விடுகிறார்கள். வட்டிக்குக் கடன் வாங்கி ஆடம்பரத் திருமணங்களை, தேவையில்லாத வைபவங்களை நடத்துகின்றனர். பாலஸ்தீன மண்ணில் நம்முடைய சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும் செய்திகளை பார்க்கும்போது உண்மையான முஸ்லிம்களில் பலருக்கு உணவே வயிற்றுக்குள் செல்ல மறுக்கிறது. ஆனால் சில முஸ்லிம்கள் இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் ஆடம்பர செலவுகளில் மூழ்கியிருக்கிறார்கள். தேவையற்ற செலவுகளை மிச்சப்படுத்தினால் ஹஜ்ஜுக் கடமையைக் கூட நிறைவேற்றி விடலாம். இன்னும் பலர் கடனாளிகளாக மாறியதே வீண் செலவுகளால் தான்.                             

வீண் செலவுகள் பலவிதம்.

வீட்டில் சமைக்காமல் ஹோட்டல் சாப்பாட்டில் ருசி காண்பவர்கள் பணத்தை வீண் விரயம் செய்கின்றனர். எப்போதாவது ஒருமுறை என்றால் அது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலர் அடிக்கடி இவ்வாறு செய்கின்றனர். இன்னும் சில குடும்பங்களில் மனைவிமார்களின் சீரியல் மோகம் அவர்களை சமைக்க விடாமல் செய்து விடும். கொஞ்சம் சோம்பலாக இருந்தாலும் கடையில் உணவு வாங்கி வாருங்கள் என்றுகூறும் மனைவிகளும் உள்ளனர்.                           

ஏழைகளில் பலர் உணவின்றி பசியுடன் இருக்க, திருமண மண்டபங்களில் குப்பைக்குச் செல்லும் உணவுகள்  

வீண் விரயங்களால் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்ட முஸ்லிம்கள்

  2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துக் கொன்றது உட்பட பல்வேறுகொடூரங்களை அரங்கேற்றியவர்கள் பாசிசவாதிகளால் ஏவப்பட்டஅம்புகளான தாழ்த்தப் பட்ட மக்கள் தான். பாசிசவாதிகளால் அவர்களுக்கு வழங்கப்படும் பணங்களுக்காக அவர்கள் முஸ்லிம்களை வேட்டையாடினர். பின்னால் ஒரு நேரத்தில் அவர்களின் ஒரு முக்கியமான தலைவனை முஸ்லிம்களில் சிலர் சென்று சந்தித்து உங்களுக்கு அப்படியென்ன முஸ்லிம்கள்மீது கோபம் என்று கேட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினர் நாங்கள் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில்தான் வசித்தோம்.அப்போது நாங்கள் மிகவும் வறுமையில் இருந்தோம். ஆனால் எங்களுக்கு அருகில் முஸ்லிம்கள் வசித்தார்கள். அவ்வப்போது அவர்கள் விருந்து தயார் செய்வார்கள். அவர்களே சாப்பிட்டுக் கொள்வார்கள். சாப்பிட்ட பிறகு மிச்சமுள்ள உணவுகளை அண்டாக்களில் கொட்டு வந்து குப்பைகளில் கொட்டுவார்கள். அந்த உணவுகளை எங்களிடம் கொண்டு வந்து தந்திருந்தாலும் நாங்கள் ஒரு வாரத்திற்கு அதைப்பாதுகாத்து வைத்து சாப்பிடுவோம். ஆனால் எங்களுக்கும் அதை தர மாட்டார்கள். அவர்களே சாப்பிட்டு மீதியை குப்பையில் கொண்டு வந்து கொட்டுவார்கள். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க நாளடைவில் முஸ்லிம்கள் என்றாலே ஒரு விதமான வெறுப்பு எங்களுக்குள் இருந்தது. இந்த நிலையில் இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் எங்களிடம் வந்து முஸ்லிம்களைப் பற்றி மேலும் வெறுப்புணர்வைத் தூண்டி நீங்கள் முஸ்லிம்களைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு நிறைய செல்வங்களைத் தருகிறோம் என்று கூறி எங்களைத் தயார் படுத்தினார்கள். அதனடிப்படையில் தான் நாங்கள் கலவரத்தில் நிறைய முஸ்லிம்களைக் கொன்று குவித்தோம் என்று அவர் கூறியுள்ளார். 

வீண் விரயம் செய்வதால் பரக்கத் நீங்கி விடுகிறது. பரக்கத் நீங்குவதால் வாழ்வில் நிம்மதி குறைந்து விடுகிறது

திருமணங்களுக்காக செலவு செய்வதில் போட்டி போட்டிக் கொண்டு சில செல்வந்தர்கள் செலவு செய்வார்கள். அவர் தன் குடும்பத் திருமணத்திற்கு இவ்வளவு செலவு செய்தார். நான் அதை விட அதிகம் செலவு செய்வேன் என்று போட்டி போட்டு வீண் விரயம் செய்கிறார்கள்.

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً (مسند أحمد

திருமணங்களில் மிகவும் பரக்கத்தானது குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணங்களாகும். ஹதீஸ்

வீண் விரயம் இல்லாத, குறைந்த செலவிலான திருமணங்களில் பரக்கத் உண்டு என்பதை பல விதமாக விளங்கலாம். இத்தகைய திருமணங்களின் இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதையும், ஆடம்பரமான திருமணங்களின் இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியில்லாமல் வாழ்வதையும் பார்க்கலாம். பரக்கத் இருந்தால் தான் நிம்மதி இருக்கும். ஆடம்பர திருமணங்களில் நிம்மதி கிடைப்பதில்லை.

அவசியமற்ற பயணங்களுக்கும் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வீண் விரயம்.

நடப்பதற்கு தூரமான இடங்களுக்குச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட வாகனங்கள் தற்போது அவசியமற்ற பயணங்களுக்கும் பயன்படுத்துப் படுகின்றன. அருகில் இருக்கும் கடைக்கோ, மஸ்ஜிதுக்கோ செல்வதற்கும் கூட வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் எரிபொருள் வீண் விரயம், பணம் வீண் விரயம் ஏற்படுகின்றன. 

நடந்து செல்லும் தூரத்திலுள்ள மஸ்ஜிதுக்கு நடந்து செல்வதால் நன்மையும் அதிகமாகும். பணமும் மிச்சமாகும். 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يُكَفِّرُ اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَزِيدُ بِهِ فِي الْحَسَنَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَى إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ (ابن ماجة

பாவங்களைப் பரிகாரமாக அமைந்து நன்மைகளை அள்ளித் தரும் ஒரு நன்மையைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா என்று கேட்டு விட்டு பின்பு நபி ஸல் அவர்கள் கூறினார்கள். சிரம மான நிலையிலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்றுவது. மேலும் மஸ்ஜிதை நோக்கி அதிகம் நடந்து வருவது. ஒரு தொழுகைக்குப் பின்னால் மற்றொரு தொழுகைக்காக காத்திருப்பது என்று நபி ஸல் கூறினார்கள்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَلَتْ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم

பட்டாசுக்காக செய்த செலவுகளும் வீண் விரயமாகும். அதைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31)الاعراف

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَزُولُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمْرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلاَهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ (ترمذي)

3.தன் சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவது

முடிந்த வரை பிறருக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர, நோவினை தரக்கூடாது  ஆனால் பட்டாசுகளால் பல்வேறு வகையிலும் பிற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு காது கேட்பதில் மந்த நிலை நீடிப்பதற்கு பட்டாசு முக்கிய காரணம்

சப்தங்களை டெசிபல் என்ற அளவில் கணக்கிடுவார்கள் நாம் பேசும் சப்தங்கள் 30 டெசிபலுக்கு மேலே போகாது அதிக பட்சம் 60 டெசிபல் சப்த த்திற்கு மேல் கேட்டால் அது காதை பாதிக்கும். ஜவ்வு கிழிய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுவார்கள். இதனால் வாகனங்களின் ஹாரன் கூட 80 டெசிபலுக்கும் மேலே இருக்க க் கடாது என போக்குவரத்து துறை சட்டம் இயற்றியுள்ளது ஆனால் பட்டாசுக்கு அதற்கும் மேலாக அதிக பட்சம் 125 டெசிபல் வரை  அரசாங்கம் அனுமதி தந்துள்ளது.125 டெசிபலுக்கு மேலே வெடிகளை வெடித்தால் அவர் 1986 ஆம் ஈண்டு சுற்றுப்புற சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி அவர் தண்டனைக்குரியவர் ஆவார். ஆனால் அதையும் மீறி 150 முதல் 200 டெசிபல் வரை பட்டாசுகள்  வரைமுறையை மீறி தயாரிக்கப் படுகின்றன. இதனால் சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் 10 ஒருவருக்கு காது சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு பல காரணங்கள். அளவுக்கு மீறிய சப்தத்துடன் காதுகளில் வாக்மேன் மாட்டிக் கொண்டு இசை கேட்பது. வாகன இரைச்சல், திருவிழாக்களில் அதிக சப்தத்துடன்  ஒலி பரப்பப்படும் பாட்டுகள், அதிக சப்தத்துடன்  தியேட்டர் மற்றும் டிவி முன்பு அமருதல் மற்றும் பட்டாசு வெடி சப்தங்கள் ஆகியவை இதற்கான காரணங்களாகும்

நம்மால் முடிந்த வரை  பிறரை  சந்தோஷத்தப் படுத்த வேண்டுமே தவிர

தன்னுடைய சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவதை நம்முடைய மார்க்கம் தடுக்கிறது

عَن أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ أَوْ يَسْتَطِعْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالَ فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ يَأْمُرُ بِالْخَيْرِ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ يَفْعَلْ قَالَ يُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ صَدَقَةٌ (مسلم) بَاب بَيَانِ أَنَّ اسْمَ الصَّدَقَةِ يَقَعُ عَلَى كُلِّ نَوْعٍ - كِتَاب الزَّكَاةِ

ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்ய  வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறிய போது  அதற்கு இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, தம்மால் இயன்ற வரை உழைத்து அதில் தனக்கும் பயன்படுத்தி பிறருக்கும் தர் ம ம் செய்வார் என நபி ஸல் கூறினார்கள். அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு,  பொருளுதவி இல்லா விட்டாலும் துன்பத்தில் சிக்கியவருக்கு உடலால் ஒத்துழைப்புச் செய்வார் என்று கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, நன்மையை ஏவுவார் என நபி ஸல் கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, பிறருக்கு தீங்கு செய்யாமல் தடுத்துக் கொள்வதே ஒருவகை தர்மம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தன்னுடைய கரத்தாலும் நாவாலும் பிறருக்குத் தொந்தரவு தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம். 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو  رضى الله عنهما  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ (بخاري)  عن أبي هريرة قال : (قال رجل: يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال : هي في النار. قال : يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة). أخرجه أحمد.

ஒரு பெண் அதிகம் நோன்பு வைக்கிறாள். அதிகம் தொழுகிறாள். அதிகம் தர்மமும் செய்கிறாள். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்கிறாள். அவளது நிலை என்ன என்று கேட்டதற்கு, அவள் நரகவாதி என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள். 

ஜனங்கள் நடந்து செல்லும் பாதையில் அவர்களுக்கு இடையூறு செய்வது மாபெரும் குற்றம்

عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم : إياكم والجلوس في الطرقات فقالوا : يا رسول الله مالنا بد من مجالسنا نتحدث فيها فقال: فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا  وما حقه قال : غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر. متفق عليه

பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நபி ஸல்  அவர்கள் கண்டித்த போது அல்லாஹ்வின் தூதரே அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது என தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையின் உரிமைகளைப் பேணுங்கள் என்றார்கள். அது என்ன என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, பாதையில் நடப்பவருக்குத்  தீங்கு செய்யாமல் இருப்பது, தவறான பார்வைகளை விட்டும் தற்காத்துக் கொள்வது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பது என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.                                

பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது மாபெரும் நன்மைக்குரிய செயல்

قال رسول الله صلى الله عليه وسلم (بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له) رواه مسلم.:

ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாதையில் ஒரு முள்செடியைப் பார்த்தார். மக்களுக்கு இடையூறாக இருக்குமே என்று அதை அப்புறப்படுத்தினார். அதற்காக அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து நன்றி பாராட்டினான்.

 قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبة، افضلها قول: لا اله الا الله وادناها اماطة الاذى عن الطريق) مسلم.

பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது நபி ஸல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ». (مسلم

என் உம்மத்தின் நற்செயல்கள், தீய செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் மிகச் சிறந்த நற்காரியமாக பாதையில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவதை நான் பெற்றுக் கொண்டேன். அவற்றில் மிகக்கெட்ட காரியமாக நான் கண்டது மஸ்ஜிதை ஒருவர்  எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி விட்டு அதை புதைக்காமல் (சுத்தம் செய்யாமல்) விடுவதாகும்.

நன்மையான காரியமாக இருப்பினும் பிறருக்கு தொந்தரவு கொடுத்து நிறைவேற்றப்பட்டால் நன்மை இல்லை

عن سَلْمَانُ الْفَارِسِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ فَصَلَّى مَا كُتِبَ لَهُ ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى (بخاري 

   யார் ஜும்ஆ நாளில் குளித்து தம்மிடம் உள்ள நறுமணத்தைப் பூசி பின்பு மஸ்ஜிதுக்கு வந்து அங்கு அமர்ந்திருக்கும் இருவரைப் பிரிக்காத நிலையில் அதாவது அவ்விருவரையும் தாண்டிச் செல்லாத நிலையில் உபரியான தொழுகை தொழுது பிறகு இமாம் அறையில் இருந்து குத்பாவுக்காக வெளியேறிய பின் அமைதியாக அவரது உரையைக் கேட்பாரோ அவருடைய அடுத்த ஜும்ஆ வரையிலான பாவங்கள் மன்னிக்கப்படும்.                                                          

படிப்பினை- இருவரின் பிடரிகளைத் தாண்டிச் சென்றால் ஜும்ஆவின் நன்மை இல்லை

عن ابْن عُمَرَ رَض نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا (بخاري

ஜும்ஆவிலோ மற்ற நாட்களிலோ ஒருவர் தான் அமருவதற்காக மற்றொருவரை எழுப்பி அந்த இடத்தில் அமர வேண்டாம்

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُقِمْ أَحَدُكُمْ أَخَاهُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ  قَالَ وَكَانَ الرَّجُلُ يَقُومُ لِابْنِ عُمَرَ فَلَا يَجْلِسُ فِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ (ترمذي

இப்னு உமர் ரழி அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்த போது அவர்களுக்காக ஒருவர் எழுந்து தம்முடைய இருப்பிடத்தை விட்டுக் கொடுத்தார். அந்த இடத்தில் இப்னு உமர் ரழி அமர மறுத்து விட்டார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، وَأَبِي سَعِيدٍ ، قَالاَ :سَمِعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَاسْتَنَّ وَمَسَّ مِنَ الطِّيبِ إِنْ كَانَ عِنْدَهُ , وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ , ثُمَّ جَاءَ إِلَى الْمَسْجِدِ , وَلَمْ يَتَخَطَّ رِقَابَ النَّاسِ , ثُمَّ رَكَعَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَرْكَعَ , ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يُصَلِّيَ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الَّتِي كَانَتْ قَبْلَهَا (صحيح ابن حبان)

ஆயிஷா ரழி அவர்களிடம் அவர்களின் பணிப்பெண் வந்து அன்னையே! நான் என்னுடைய தவாஃபின் ஏழு சுற்றில் இரண்டு மூன்று தடவை ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டேன் என்று பெருமையுடன் வந்து கூறினார். உடனே ஆயிஷா ரழி அவர்கள் கோபத்துடன் ஆண்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவர்களை இடித்துக் கொண்டு நீ இவ்வாறு செய்தாயல்லவா?  அல்லாஹ் உனக்கு நற்கூலி தராமல் போகட்டுமாக! கூட்ட நெரிசலாக இருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கி தக்பீர் மட்டும் சொல்லி அந்த இடத்தை விட்டும் நீ கடந்து போயிருக்க வேண்டாமா? என்றார்கள்- நூல் பைஹகீ                       

மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பவன் மறுமையில் தான் செய்த நன்மைகளை இழப்பான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ

பரிதாபமான ஏழை யார் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது யாரிடம் பணம் காசுகள் பொருட்கள் எதுவும் இல்லையோ அவர் தான் என்று நாங்கள் கூறினோம் அதற்கு நபி ஸல் அவர்கள் என்னுடைய உம்மத்தில் பரிதாபமான ஏழை யாரென்றால் மறுமை நாளில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய அனைத்தையும் சரியாக நிறைவேற்றியவராக வருவார். ஆனால் அவர் இன்னாரைத் திட்டியிருப்பார். இன்னார் மீது அவதூறு சுமத்தியிருப்பார். இன்னாருடைய பொருளை அபகரித்திருப்பார். இன்னாரின் உயிரைப் பறித்திருப்பார். இன்னாரை அடித்திருப்பார். எனவே இவருடைய நன்மைகளைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுக்கப்படும். இறுதியில் இவரின் நன்மைகள் தீர்ந்து விடும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மிச்சமிருப்பார்கள். தீர்ப்புகள் முடியும் முன்பே இவரின் நன்மைகள் தீர்ந்து விட்டதால் அவர்களின் பாவங்களை இவர் மீது சுமத்தப்பட்டு நரகில் வீசப்படுவார்.

முடிவுரை- பட்டாசு வாங்கித் தரச் சொல்லி பிள்ளை அடம் பிடிப்பதால் வாங்கித் தருகிறேன் என்று சாக்குப் போக்குச் சொல்லும் பெற்றோர்களிடம் நீங்கள் ஒரு 100 ரூபாய் நோட்டை உங்கள் பிள்ளையிடம் தரும்போது அந்தப் பிள்ளை அதை நெருப்பில் காட்டி சாம்பலாக்க நினைத்தால் பிள்ளை ஆசைப் படுகிறான் என்று நீங்கள் விடுவீர்களா நிச்சயமாக அனுமதிக்க மாட்டீர்கள். 100 ரூபாயை சாம்பலாக்குவதும் அதை பட்டாசாக வாங்கி கரியாக்குவதும் இரண்டும் ஒன்று தான். 

பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம்.

ஒன்று நம்மை நாமேஅழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ (195) البقرة

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மைசெய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். 

4. மாற்றார்களுடன் ஒப்பாகுதல்

பட்டாசு என்பது மாற்றார்களின் மதச்சடங்கு. அதைச்செய்வது அவர்களின் மதச் சடங்கைச் செய்வது போன்றாகும்

மாற்றார்களின் எந்த ஒரு பண்டிகைகளையும் நாம் கொண்டாடுவது அவர்களுக்கு ஒப்பாகுவதாக ஆகும்

மாற்று மதத்தவர்களோடு நாம் ஒப்பாகி விடக் கூடாது என்ற கருத்தில் கூறப்பட்ட பல்வேறு விஷயங்களில் சில..

சலாம் கூறுவதில்

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا لَا تَشَبَّهُوا بِالْيَهُودِ وَلَا بِالنَّصَارَى فَإِنَّ تَسْلِيمَ الْيَهُودِ الْإِشَارَةُ بِالْأَصَابِعِ وَتَسْلِيمَ النَّصَارَى الْإِشَارَةُ بِالْأَكُفِّ (ترمذي)

நோன்பு வைப்பதில்

عن عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم)

உடை உடுத்துவதில்

عن عَبْد اللَّهِ بْن عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنه قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا وفي رواية قُلْتُ أَغْسِلُهُمَا قَالَ بَلْ أَحْرِقْهُمَا (مسلم)

தாடியை வளர்ப்பதில்

عَنْ ابْنِ عُمَرَ رضعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ رضي الله عنه إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ (بخاري)خالفوا المشركين أي فإنهم يقصون اللحى ويتركون الشوارب حتى تطول

தலை முடி, தாடிக்கு மருதாணி இடுவதில்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ(بخاري)عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا الشَّيْبَ وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ (نسائ) عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ (والد ابي بكر رضي الله عنه)يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ (نسائ)عَنْ ابْنِ عَبَّاسٍ رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ(ابوداود)


வியாழன், 9 அக்டோபர், 2025

இறையச்சத்தின் பலன்கள்

10-10-2025
ரபீஉல் ஆகிர் -17

بسم الله الرحمن الرحيم  
  இறையச்சத்தின் இம்மை மறுமை பலன்கள்


https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

   முன்னுரை & முடிவுரை- உலகில் மனிதர்களுக்கிடையே ஏற்படும் சண்டை. சச்சரவுகள் குற்றங்கள், சொத்து தகராறுகள் அனைத்தும் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இறையச்சம் ஏற்படுவதினால்  மட்டுமே முடியும். காவல் துறையோ இராணுவமோ,  ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியாது போலீஸோ, இராணுவத்தினரோ, ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியுமென்றிருந்தால் மனிதர்கள் அனைவரும் குற்றம் செய்யாதவர்களாக இருந்திருப்பார்கள். மாறாக காவல் துறையும், இராணுவமும் பெருகப் பெருக சண்டை சச்சரவுகளும், தீய எண்ணங்களும், வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் உள்ளங்களில் இறையச்சம் இல்லாமல் போனது தான். ஆகவே மனிதன் எல்லா நிலைகளிலும் குற்றங்களை விட்டும நீங்குவதற்கு இறையச்சமே முக்கியக் காரணமாகும். உதாரணமாக இலட்சக்கணக்கான ரூபாய்களும், பொருட்களும் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் நீங்கள் தனிமையாக இருக்கிறீர்கள் அதனைப் பாதுகாப்பதற்கும் அங்கு எவரும் இல்லை இந்நிலையில் அல்லாஹ்வுடைய பயம் மட்டும் உங்களுடைய உள்ளத்தில் இருந்தால் அப்பொருட்களிலிருந்து சிறிதளவையும் நீங்கள் எடுக்க மாட்டீர்கள் ஏனெனில் பிறர் பொருளை அனுமதியின்றி எடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்லியாக வேண்டும் தண்டனை கிடைக்கும் என்ற பயம் உங்களை தடுத்து விடும். 
இறையச்சமுள்ள சிறந்த முஃமின் எப்போதும் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا (بخاري 3473
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (பனூ இஸ்ராயீல்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் ''என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் ''நிலத்தை அதிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், ''உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றனரா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ''எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், ''எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறாள்'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர்,''அந்தப் பையனுக்கு அந்தப் பெண் மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (3472)                    
படிப்பினை – காலி மனையில் கிடைத்த தங்கப் புதையலை இருவருமே எனக்கு வேண்டாம் என்று கஊரக் காரணம் அவ்விருவரின் உள்ளத்திலும் இருந்த இறையச்சம் தான்.
ஒரு ஜான் இடத்தை அநியாயமாக அபகரித்தால்
 மறுமையில் ஏழு நிலங்கள் கழுத்தில் கட்டித் தொங்க விடப்படும்
عَنْ أَبِي مَالِك الْأَشْجَعِيّ عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " أَعْظَم الْغُلُول عِنْد اللَّه ذِرَاع مِنْ الْأَرْض تَجِدُونَ الرَّجُلَيْنِ جَارَيْنِ فِي الْأَرْض - أَوْ فِي الدَّار - فَيَقْطَع أَحَدهمَا مِنْ حَظّ صَاحِبه ذِرَاعًا فَإِذَا قَطَعَهُ طُوِّقَهُ مِنْ سَبْع أَرْضِينَ يَوْم الْقِيَامَة  (مسند أحمد
பிறர் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது. ஆனால் தனக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமையைக் கேட்பது தவறல்ல.
عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ لَوْ تَرَكَتْ زَمْزَمَ أَوْ قَالَ لَوْ لَمْ تَغْرِفْ مِنْ الْمَاءِ لَكَانَتْ عَيْنًا مَعِينًا وَأَقْبَلَ جُرْهُمُ فَقَالُوا أَتَأْذَنِينَ أَنْ نَنْزِلَ عِنْدَكِ قَالَتْ نَعَمْ وَلَا حَقَّ لَكُمْ فِي الْمَاءِ قَالُوا نَعَمْ  (بخاري2369  قال الخطابي : فيه أن من أنبط ماء في فلاة من الأرض ملكه ولا يشاركه فيه غيره إلا برضاه ، إلا أنه لا يمنع فضله إذا استغنى عنه ، وإنما شرطت هاجر عليهم أن لا يتملكوه . (فتح الباري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (நபி) இஸ்மாயீலின் தாயாருக்கு (ஹாஜராவுக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்)விட்டு விட்டிருந்தால் (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) தண்ணீரைக் கையால் அள்ளிக் குடிக்காமல் இருந்திருந்தால் அது (நிற்காமல்) ஓடுகிற நீரோடையாக இருந்திருக்கும். (பிறகு) பனூ ஜுர்ஹும் குலத்தார் அங்கு வந்து, ‘உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?’ என்று (ஹாஜராவிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘சரி, (தங்கி வசித்துக் கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத் தண்ணீரில் உங்களுக்கு எந்த பாக்கியதையும் இருக்காது” என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார். ‘சரி (அவ்வாறே ஒப்புக் கொள்கிறோம்)” என்று கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 2369
விளக்கம்- தண்ணீரின் உரிமை தனக்குரியது என்று கூறினார்களே தவிர, தண்ணீரைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தடுக்கவில்லை.
தக்வா என்பதற்கு கஃப் ரழி அவர்கள் கூறிய விளக்கம்
وسأل عمر كعبا فقال له: ما التقوى؟ فقال كعب: يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ قال: نعم. قال: فماذا فعلت؟ فقال عمر: أشمر عن ساقي، وانظر إلى مواضع قدمي وأقدم قدما وأؤخر أخرى مخافة أن تصيبني شوكة. فقال كعب: تلك هي التقوى
  உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலே “தக்வா” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள் “நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “ஆம்” என்றார்கள். ”எப்படிக் கடந்து சென்றீர்கள்?” சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன்” என்று பதிலளித்தார்கள். அப்போது, உபை (ரலி) அவர்கள் “இவ்வாறு தான் இறையச்சமும்” என்று பதிலளித்தார்கள்..
 வரலாற்றில் ஒரு ஆட்டிடையன் சம்பவம் மிகவும் பிரபல்யமானது. காட்டில் ஒரு ஆட்டிடையன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். பிரயாணம் செய்த ஒரு பெரியவர் ஆட்டிடையனிடம் “ஒரு ஆடு விலைக்கு கொடு, பணம் தருகிறேன், உணவு சமைத்து உனக்கு உண்ணவும் தருகிறேன்” என்றார். அதற்கு ஆட்டிடையன் “ஆடுகள் எனது எஜமானனுக்குச் சொந்தமானவை. அவரின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது” இதைக் கேட்ட பெரியவர் “எனக்கு ஒரு ஆடு விற்று விடு. எஜமானன் கேட்டால் ஆட்டை ஓநாய் அடித்து தின்று விட்டது எனக் கூறிவிடு” என்றார். உடனே அந்த ஆட்டிடையன், “பொய் சொல்வதா? அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான்” எனக் கூறி தர மறுத்துவிட்டார். இவரது தக்வா ஆட்டு மந்தைக்கே அவரை சொந்தக்காரனாக்கியது.
அல்லாஹ்வை பயப்படுவதற்கும், மற்றவர்களைக் கண்டு பயப்படுவதற்கும் வித்தியாசம்
உலகில் நாம் ஒருவரைக் கண்டு பயந்தால் அவரை விட்டும் விலகி விடுவோம், அரசனை பயந்தால், அதிகாரியை பயந்தால், அவர்களை விட்டும் தூரமாகி விடுவோம் ஆனால் அல்லாஹ்வை பயப்படும் அளவுக்கு அவனை நாம் நெருங்குவோம். 
ஒரு பாவத்தை செய்ய நினைத்து பிறகு அல்லாஹ்வின் பயத்தால் அதை செய்யாமல் விட்டு விட்டால் அதற்கும் நன்மை உண்டு
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ (بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلاَمَ اللَّهِ )- كتاب التوحيد
அல்லாஹ் கூறுகிறான். என்னுடைய அடியான் ஒரு பாவத்தைச் செய்ய நினைத்தால் அதைச் செய்யும் வரை அதன் தீமையை எழுத வேண்டாம். அதைச் செய்து விட்டால் ஒரே ஒரு தீமையை மட்டும் எழுதுங்கள். அதே நேரத்தில் என்னை பயந்து அப்பாவத்தை அவன் செய்யாமல் விட்டு விட்டால் அதற்காகவும் ஒரு நன்மையை எழுதுங்கள். அதுபோல் என்னுடைய அடியான் ஒரு நன்மையைச் செய்ய நினைத்து அதைச் செய்யா விட்டாலும் அதைச் செய்ய நினைத்ததற்காக ஒரு நன்மையை எழுதுங்கள்.அதைச் செய்து விட்டால் அதற்கு பத்து முதல் 700 மடங்கு வரை நன்மையை எழுதுங்கள்.                
                                                                   
குகையில் மூன்று நபர்கள் மாட்டிக் கொண்டு துஆ செய்த சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். அதில் ஒருவர் தன் முறைப் பெண்ணை தவறாக நெருங்க முற்பட்டு அதற்கான வாய்ப்புகள் இருந்தும் இறையச்சத்தால் அதை விட்டும் தவிர்த்துக் கொண்டார்
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى (41النازغات)
இறையச்சத்திற்கு அல்லாஹ் தந்த பரிசு
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ رَجُلًا فِيمَنْ سَلَفَ أَوْ قَالَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا أَعْطَاهُ اللَّهُ مَالًا وَوَلَدًا قَالَ فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ قَالَ لِبَنِيهِ أَيَّ أَبٍ كُنْتُ لَكُمْ قَالُوا خَيْرَ أَبٍ قَالَ فَإِنَّهُ لَمْ يَبْتَئِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا قَطُّ قَالَ فَفَسَّرَهَا قَتَادَةُ لَمْ يَدَّخِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا وَإِنْ يَقْدِرْ اللَّهُ عَلَيْهِ يُعَذِّبْهُ فَإِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي حَتَّى إِذَا صِرْتُ فَحْمًا فَاسْحَقُونِي أَوْ قَالَ فَاسْهَكُونِي ثُمَّ إِذَا كَانَ رِيحٌ عَاصِفٌ فَأَذْرُونِي فِيهَا قَالَ نَبِيُّ اللَّهِ فَأَخَذَ مَوَاثِيقَهُمْ عَلَى ذَلِكَ قَالَ فَفَعَلُوا ذَلِكَ وَرَبِّي فَلَمَّا مَاتَ أَحْرَقُوهُ ثُمَّ سَحَقُوهُ أَوْ سَهَكُوهُ ثُمَّ ذَرُّوهُ فِي يَوْمٍ عَاصِفٍ قَالَ فَقَالَ اللَّهُ لَهُ كُنْ فَإِذَا هُوَ رَجُلٌ قَائِمٌ قَالَ اللَّهُ أَيْ عَبْدِي مَا حَمَلَكَ عَلَى أَنْ فَعَلْتَ مَا فَعَلْتَ فَقَالَ يَا رَبِّ مَخَافَتَكَ أَوْ فَرَقًا مِنْكَ قَالَ فَمَا تَلَافَاهُ أَنْ رَحِمَهُ وَقَالَ مَرَّةً أُخْرَى فَمَا تَلَافَاهُ غَيْرُهَا أَنْ رَحِمَهُ (أحمد
சுருக்கம்- முற்காலத்தில் ஒரு மனிதர் தன் கடைசி நேரத்தில் தன் பிள்ளைகளை அழைத்து நான் செய்த பாவங்களுக்காக அல்லாஹ் என்னைக் கடுமையான தண்டிக்கலாம் என்று அஞ்சுகிறேன் என்றார். எனவே நான் இறந்த பின்பு என்னை எரித்து அது கரிக்கட்டையாக ஆன பின்பு அதை சாம்பலாக ஆக்கி அதைக் காற்றில் பறக்க விட்டு விடுங்கள் என வஸிய்யத் செய்தார். அவ்வாறே அவர் இறந்த பின்பு அவரது பிள்ளைகள் செய்தனர். அவரை அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது. அவரிடம் அல்லாஹ் ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்க, உன்னுடைய பயத்தின் காரணமாகவே இவ்வாறு செய்யும்படி நான் என் பிள்ளைகளுக்கு வஸிய்யத் செய்தேன். அவர் அவ்வாறு சொல்லி வாயை மூடும்முன்பே அல்லாஹ் அவரை மன்னித்தான். 
இறையச்சத்தால் அழுத கண்களுக்கு அல்லாஹ்  தரும் பரிசு
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ (بخاري) باب الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللَّهِ-كتاب الرقاق, باب فَضْلِ مَنْ تَرَكَ الْفَوَاحِشَ – كتاب المحاربين 
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ (ترمذي) بَاب مَا جَاءَ فِي فَضْلِ الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللَّهِ- كِتَاب الزُّهْدِ
கறந்த பால் மீண்டும் மடியில் புகுவது எவ்வாறு சாத்தியம் இல்லையோ அவ்வாறே இறையச்சத்தால் அழுத கண்கள் நரகம் செல்லாது.
عن عبد الله بن شقيق العقيلي قال : سمعت كعبا يقول : لان أبكي من خشية الله تعالى حتى تسيل دموعي على وجنتي أحب إلي من أن أتصدق بوزني ذهبا والذي نفس كعب بيده ما من عبد مسلم يبكي من خشية الله حتى تقطر قطرة من دموعه على الارض فتمسه الناس أبدا حتى يعود قطر السماء الذي وقع إلى الارض من حيث جاء ولن يعود أبدا.(مصنف ابن ابي شيبة)
இறையச்சத்தால் என் நான் அழுது என் கண்ணம் வரை கண்ணீரால் நனைவது 
என்னுடைய எடை அளவுக்கு தங்கம் தர்மம் செய்வதை விட சிறந்ததாகும்.
உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.                                 
عَنِ ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا عَدَلَهُ  وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا عَدَلَهُ (مصنف ابن ابي شيبة
இறை நேசர்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்கள்
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (الانفال2)
உமர் ரழி அவர்களின் வாழ்விலும்,சில இறைநேசர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்திய தக்வா பற்றிய வசனம்
أَنَّ فُضَيْل بْن عِيَاضٍ كَانَ يَقْطَعُ الطَّرِيقَ  وَأَنَّهُ عَشِقَ جَارِيَةً وَارْتَقَى جِدَارًا لَهَا فَسَمِعَ تَالِيًا يَتْلُو "أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ(57-16  فَتَابَ (رد المختار 
இறையச்சம் உடையவர் அமானித த்தைப் பேணுவதில் சிறந்தவராக இருப்பார்
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِين....... وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) سورة المؤمنون
ஏழு தலைமுறைக்கு முன்னால் அமானிதம் பேணுபவராக  வாழ்ந்த ஒரு நல்ல மனிதரின் சொத்துக்களைப்  பாதுகாக்க அல்லாஹ் ஒரு நபியையும் ஒரு வலியையும் ஏற்படுத்தினான்
 ((وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحاً )) الكهف:82..
وقال ابن عباس : حفظا بصلاح أبيهما ، وقيل كان بينهما وبين الأب الصالح سبع آباء ،(تفسير الخازن
إن عمر لما طلب تزكية أحد الشهود فزكاه رجل ، قال له عمر: هل جاورته؟ قال : لا ، قال : هل تعاملت معه في بيع وشراء؟ قال : لا ، قال: هل سافرت معه؟ قال: لا، قال: فأنت لا تعرفه (شرح بلوغ المرام
  ஒரு மனிதரை சாட்சிக்காக உமர் ரழி அவர்கள் அழைப்பதாக இருந்தார்கள். அதற்கு முன்பு அவரைப் பற்றி மற்றொருவரிடம் விசாரித்தார்கள். அப்போது அவர் அந்த மனிதரைப் பற்றி நல்ல விதமாக கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் எதை வைத்து நல்லவர் என்று அவரைக் கூறுகிறீர்கள் அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அவரோடு கொடுக்கல் வாங்கல் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார் அவரோடு பிரயாணம் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது உமர் ரழி கூறினார்கள். அப்படியானால் அவரைப் பற்றி  உனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள் மற்றொரு அறிவிப்பில் உமர் ரழி அவர்கள்  அந்த மனிதர் மஸ்ஜிதில் தொழுவதைப் பார்த்து விட்டு வந்து அவரைப் பற்றி நல்லவர் என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியதாக வந்துள்ளது.                                                
ஃபத்வா &  தக்வா ஒரு விளக்கம்
 தக்வாவுக்கு பேணுதல் என்று ஒரு விளக்கம் உள்ளது சில பெரும் பாவங்களைப் பற்றி குர்ஆன் கூறும்போது அதைச் செய்யாதீர்கள் என்று கூறாமல் அதை நெருங்காதீர்கள் என்று கூறுகிறது  எனவே குறிப்பிட்ட பாவத்தைச் செய்யக் கூடாது என்பது ஃபத்வா ... அதன் பக்கம் தூண்டக்கூடிய அனைத்துக் காரியங்களையும் விட்டு விடுவது தக்வா.. ஃபிக்ஹ் ஆய்வாளர்கள் கூறுவார்கள்  அந்நியப் பெண் ஒருத்தி உளூச்  செய்து விட்டு மிச்சம் வைத்த தண்ணீரில் உளூச் செய்ய வேண்டாம். வேறு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் அந்த மீதித் தண்ணீரை உபயோகிக்கும்போது இது இன்ன பெண் உபயோகித்த தண்ணீர் என்ற நினைவு வரும் அதுவும் சில நேரங்களில் தவறான சிந்தனையை மனதில் உண்டாக்கி விடும் என்று கூறுவார்கள் இதுதான் தக்வா.. பேணுதல் என்பதாகும் ஷரீஅத்தில் இத்தகைய பேணுதல் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க க்கூடாது. அந்நியப் பெண்ணிண் குரலை காது கொடுத்து கேட்கக்கூடாது. அவள் நறுமணம் பூசியிருந்தால் நம்முடைய மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.ஆகிய அனைத்தும் இந்த அடிப்படையில் கூறப்பட்டதாகும்.  
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَةٌ فَمَنْ تَرَكَ مَا شُبِّهَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ كَانَ لِمَا اسْتَبَانَ أَتْرَكَ وَمَنْ اجْتَرَأَ عَلَى مَا يَشُكُّ فِيهِ مِنْ الْإِثْمِ أَوْشَكَ أَنْ يُوَاقِعَ مَا اسْتَبَانَ وَالْمَعَاصِي حِمَى اللَّهِ مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ (بخاري) باب الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ-كتاب البيوع- وَقَالَ ابْنُ عُمَرَ رضي الله عنه لَا يَبْلُغُ الْعَبْدُ حَقِيقَةَ التَّقْوَى حَتَّى يَدَعَ مَا حَاكَ فِي الصَّدْرِ (بخاري) باب الإِيمَانِ - عَنْ عَطِيَّةَ السَّعْدِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنْ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ (ترمذي)ضعيف بَاب الْوَرَعِ وَالتَّقْوَى- كِتَاب الزُّهْدِ –
விளக்கம்- எதைச் செய்வதால் அது கூடும். பரவாயில்லை என்று உறுதியற்ற நிலையில் கூறப்படுமோ அதையும் விடுவது தக்வா

தக்வாவை அதிகப்படுத்தக்கூடிய விஷயங்கள்-  
மவ்த்தை அடிக்கடி நினைப்பது தக்வாவை அதிகப்படுத்தும்
عَنْ الْبَرَاءِ رضي الله عنه  قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَجَلَسَ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَبَكَى حَتَّى بَلَّ الثَّرَى ثُمَّ قَالَ يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا (ابن ماجة) بَاب الْحُزْنِ وَالْبُكَاءِ- كِتَاب الزُّهْدِ ( على شفير القبر ) أي طرفه . ( الثرى ) أي التراب 
இறைநேசர்களில் சிலர் ஜனாஸாவில் கலந்து கொண்டால் ஜனாஸாவை குளிப்பாட்டும்போது த குளிப்பாட்டுவதாகவும், அந்த ஜனாஸாவுக்கு கஃபனிடும்போது தனக்கே கஃபனிடுதைப்போலவும், அந்த ஜனாஸாவுக்கு தொழ வைக்கும்போது தனக்கே தொழ வைப்பதைப் போலவும், அந்த ஜனாஸாவை அடக்கும்போது தன்னையே அடக்கம் செய்வதைப் போலவும் கருதுவார்களாம்
எப்போதும் வயிறு நிரம்பி இருப்பது தக்வாவை அதிகப்படுத்தாது
عَنْ أَبِي أُمَامَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَرَضَ عَلَيَّ رَبِّي لِيَجْعَلَ لِي بَطْحَاءَ مَكَّةَ ذَهَبًا قُلْتُ لَا يَا رَبِّ وَلَكِنْ أَشْبَعُ يَوْمًا وَأَجُوعُ يَوْمًا وَقَالَ ثَلَاثًا أَوْ نَحْوَ هَذَا فَإِذَا جُعْتُ تَضَرَّعْتُ إِلَيْكَ وَذَكَرْتُكَ وَإِذَا شَبِعْتُ شَكَرْتُكَ وَحَمِدْتُكَ (ترمذي) بَاب مَا جَاءَ فِي الْكَفَافِ وَالصَّبْرِ عَلَيْهِ- كِتَاب الزُّهْدِ

மண்ணறைகளை கடந்து செல்லும்போது தக்வாவின் அவசியத்தை உணர்த்தும் விதத்தில் 
ஹழ்ரத் அலீ ரழியல்லாஹு அன்ஹு பேசிய வார்த்தைகள். தக்வா தான் கப்ரிலும் நமக்குத் துணை
(دخل علي رضي الله عنه المقبرة فقال: يا أهل القبور ما الخبر عندكم: إن الخبر عندنا أن أموالكم قد قسمت وأن بيوتكم قد سكنت وإن زوجاتكم قد زوجت، ثم بكى ثم قال: والله لو استطاعوا أن يجيبوا لقالوا: إنا وجدنا أن خير الزاد التقوى).

வியாழன், 2 அக்டோபர், 2025

இறை நேசர்கள் வாழ்வில் படிப்பினைக்குரிய நிகழ்வுகள்

 03-10-2025

ரபீஉல் ஆகிர் -10 بسم الله الرحمن الرحيم  

 இறைநேசர்களின் வாழ்வில் 

படிப்பினைக்குரிய நிகழ்வுகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

இறை நல்லடியார்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சியதால் அல்லாஹ் அவர்ளின் வாழ்வில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். அந்த வகையில் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்வில் நடந்த படிப்பினைக்குரிய சில நிகழ்வுகளையும் மற்றும் சில நல்லடியார்களின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளையும் அறிந்து கொள்வது நம்முடைய ஈமானை அதிகப் படுத்தும்.

கண்ணிமைக்கும் நேரத்தில் யமன் நாட்டின் சபா  அரசியின் சிம்மாசனத்தை சுலைமான் அலை அவர்களிடம் கொண்டு வந்த இறைநேசரின் சம்பவமும், அதற்கு சுலைமான் அலைஹிஸ்ஸலாம் நன்றி செலுத்திய விதமும்

قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي مُسْلِمِينَ (38) قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِنْ مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ (39) قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ...... النمل40 قَالَ اِبْن عَبَّاس رضي الله عنه وَهُوَ آصَف كَاتِب سُلَيْمَان عَنْ يَزِيد بْن رُومَان أَنَّهُ آصَف بْن بَرْخِيَاء وَكَانَ صِدِّيقًا يَعْلَم الِاسْم الْأَعْظَم (تفسير ابن كثير)

படிப்பினை- யமனுக்கும், பைத்துல் முகத்தஸுக்கும் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் உள்ளது. அவ்வளவு தூரத்தில் உள்ள சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வர இறை நேசரால் முடிந்தது என்றால் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்த காலத்திலும் செய்ய முடியாத சாதனையை அல்லாஹ்வின் அளப்பரிய கருணையால் மெஞ்ஞானம் செய்து காட்டும்  

தன்னை தாக்க வந்த சிங்கத்திடம் ஒரு நபித்தோழர் நான் நபி ஸல் அவர்களுக்கு பணிவிடை செய்பவன்  என்று கூற, அந்த சிங்கம் அடங்கியதோடு, வனப்பகுதியின் எல்லை வரை அவரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது

عَنِ ابْنِ الْمُنْكَدِرِ  أَنَّ سَفِينَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطَأَ الْجَيْشَ بِأَرْضِ الرُّومِ  أَوْ أُسِرَ فِي أَرْضِ الرُّومِ  فَانْطَلَقَ هَارِبًا يَلْتَمِسُ الْجَيْشَ فَإِذَا هُوَ بِالأَسَدِ فَقَالَ لَهُ : أَبَا الْحَارِثِ ، إِنِّي مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَمْرِي كَيْتَ وَكَيْتَ فَأَقْبَلَ الأَسَدُ لَهُ بَصْبَصَةٌ حَتَّى قَامَ إِلَى جَنْبِهِ كُلَّمَا سَمِعَ صَوْتًا  أَهْوَى إِلَيْهِ  ثُمَّ أَقْبَلَ يَمْشِي إِلَى جَنْبِهِ  فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى بَلَغَ الْجَيْشَ ، ثُمَّ رَجَعَ الأَسَدُ "(مشكاة-شرح السنة)صحيح

நபித் தோழர்களில் ஒருவர் போருக்குச் சென்று திரும்பும்போதோ அல்லது எதிரிகளிடமிரிந்து தப்பிய போதோ பாதை மாறி வன விலங்குகள் நடமாடும் பகுதிக்கு சென்று விட்டார். அப்போது ஒரு சிங்கம் எதிரில் வர, நபி ஸல் அவர்களுடன் தமது நெருக்கத்தையும், தாம் வழி மாறி வந்து விட்டதையும் கூற அந்த சிங்கம் அவரது வலது புறத்தில் வந்து அவருடன் சேர்ந்து நடந்த  து. வழியில் ஏதேனும் வேறு மிருகத்தைக் கண்டால்  இந்த சிங்கம் கர்ஜிக்கும். உடனே அந்த மிருகம் ஓடி விடும். இவ்வாறு காட்டுப் பகுதியை கடந்து படையினர் தங்கியிருக்கும் இடம் வரை கூடவே வந்து அவரை வழியனுப்பி விட்டுச் சென்றது                  

நபி ஸல் அவர்களிடம் இரவில் நீண்ட நேரம் பேசி விட்டு வந்த நபித்தோழர்கள் இருவரின் கைகளில் இருந்த குச்சி இருள் நீக்கும் டார்ச் லைட் ஆக மாறிய  சம்பவம். இருவிதமான அறிவிப்புகள்

عن أَنَس رض أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  فِى لَيْلَةٍ مُظْلِمَةٍ وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ- عَنْ أَنَسٍ كَانَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ عِنْدَ النَّبِىِّ  صلى الله عليه وسلم  (بخاري)465 كتاب الصلاة

قضة1: عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَرَجُلًا آخَرَ مِنْ الْأَنْصَارِ تَحَدَّثَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فِي حَاجَةٍ لَهُمَا حَتَّى ذَهَبَ مِنْ اللَّيْلِ سَاعَةٌ وَلَيْلَةٌ شَدِيدَةُ الظُّلْمَةِ ثُمَّ خَرَجَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقَلِبَانِ وَبِيَدِ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عُصَيَّةٌ فَأَضَاءَتْ عَصَا أَحَدِهِمَا لَهُمَا حَتَّى مَشَيَا فِي ضَوْئِهَا حَتَّى إِذَا افْتَرَقَ بِهِمَا الطَّرِيقُ أَضَاءَتْ لِلْآخَرِ عَصَاهُ فَمَشَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي ضَوْءِ عَصَاهُ حَتَّى بَلَغَ إِلَى أَهْلِهِ (مسند أحمد) مُسْنَدُ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ (مشكاة-باب الكرامات

இரு சஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பும்போது கடும் இருட்டாக இருந்தது அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த குச்சி பிரகாசித்தது. அதன் வெளிச்சத்தில் நடந்தனர். பிறகு அவ்விருவரும் அவரவர் வீட்டுக்குச் செல்ல பிரிந்த போது இருவரின் கையிலும் இருந்த குச்சிகள் தனியே பிரகாசித்தன. அந்த வெளிச்சத்தில் வீடு போய் சேர்ந்தனர்.

நபி ஸல் அவர்களை குளிப்பாட்டிய போது நபித் தோழர்கள் காதில் கேட்ட அசரீரியான சப்தம்.  நபி ஸல் அவர்களின் கண்ணியம் கருதி மற்ற ஜனாஸாக்களைப்போல் ஆடையைக் கழற்றி குளிப்பாட்டப்படவில்லை

عن عَائِشَةَ رض لَمَّا أَرَادُوا غَسْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا وَاللَّهِ مَا نَدْرِي أَنُجَرِّدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثِيَابِهِ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا أَمْ نَغْسِلُهُ وَعَلَيْهِ ثِيَابُهُ فَلَمَّا اخْتَلَفُوا أَلْقَى اللَّهُ عَلَيْهِمْ النَّوْمَ حَتَّى مَا مِنْهُمْ رَجُلٌ إِلَّا وَذَقْنُهُ فِي صَدْرِهِ ثُمَّ كَلَّمَهُمْ مُكَلِّمٌ مِنْ نَاحِيَةِ الْبَيْتِ لَا يَدْرُونَ مَنْ هُوَ أَنْ اغْسِلُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثِيَابُهُ فَقَامُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَسَلُوهُ وَعَلَيْهِ قَمِيصُهُ يَصُبُّونَ الْمَاءَ فَوْقَ الْقَمِيصِ وَيُدَلِّكُونَهُ بِالْقَمِيصِ دُونَ أَيْدِيهِمْ.(ابوداود) - كتاب الجنائز

உஹது மலையில் நபி ஸல் அவர்களும், கீழ்கானும் தோழர்களும் நின்றிருக்க உஹது மலை குலுங்கியபோது நபி ஸல் மலையை காலால் அழுத்தி  உன் மீது நபி, சித்தீக், இரு ஷஹீதுகள் இருக்க குலுங்குகிறாயா என்று கூற உடனே அமைதியானது

عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُمْ قَالَ صَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُحُدًا وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ وَقَالَ اسْكُنْ أُحُدُ أَظُنُّهُ ضَرَبَهُ بِرِجْلِهِ فَلَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ (بخاري) باب مَنَاقِبُ عُثْمَانَ بْنِ عَفَّانَ - فضائل الصحابة

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியும் அவர்களின் துஆவால் தப்பியது

عن يحيى بن عثمان بقية بن الوليد قال :(كنا في البحر فهبت الرياح وهاجت الأمواج فبكى الناس وصاحوا فقيل لمعيوف - أو ابن معيوف - هذا ابراهيم بن أدهم لو سألته أن يدعو الله عز و جل ؟ وإذا هو نائم في ناحية السفينة ملفوف رأسه في كساء فدنا منه فقال: 

يا أباإسحاق أما ترى ما الناس فيه ؟ فقال :اللهم قد أريتنا قدرتك فأرنا رحمتك  فهدأت السفينة (مجابوا الدعوة)

இறைநேசரின் துஆவால் முடியே வளராத வழுக்கைத் தலை கொண்ட 12 வயது சிறுவனின் தலையில் முடி வளர்ந்த அதிசயம்

عن محمد بن الحسين حدثني العباس بن الفضل بن الأزرق : حدثني مجاشع الديري قال : ( ولدت امرأة من جيران حبيب غلاما جميلا أقرع الرأس قال : فجاء به أبوه إلى حبيب بعدما كبر الغلام وأتت عليه إثنتا عشرة سنة فقال : يا أبا محمد ألا ترى إلى ابني هذا وإلى جماله وقد بقي أقرع الرأس كما ترى ؟ فادْعُ الله له فجعل حبيب يبكي ويدعو للغلام ويمسح بالدموع رأسه قال : فو الله ما قام بين يديه حتى اسود رأسه من أصول الشعر فلم يزل بعد ذلك الشعر ينبت حتى صار كأحسن الناس شعرا (مجابوا الدعوة) 

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவன் திட்டினான். அவனை ஸஃது ரழி தடுத்தும் கேட்கவில்லை. உனக்கு எதிராக துஆ செய்வேன் என்று எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. இறுதியில்  அவனுக்கு எதிராக ஸஃது ரழி அவர்கள் துஆ செய்ய, அவனை ஒட்டகம் மிதித்துக் கொன்றது.  இனிமேல் யாருக்கும் எதிராக நான் துஆ செய்ய மாட்டேன் என ஸஃது ரழி கூறினார்கள். 

عن سعد رضي الله عنه أن : رجلا نال من علي رضي الله عنه (وفي رواية فنهاه سعد فلم ينته فقال سعد : أدعو عليك فلم ينته) فدعا عليه سعد بن مالك فجاءته ناقة أو جمل فقتله فأعتق سعد نسمة و حلف أن لا يدعو على أحد (مستدرك الحاكم) (مجابوا الدعوة)

இறை நேசர்கள் செல்வச் செழிப்பை விரும்ப மாட்டார்கள்

عن  خالد بن الفزر قال : ( كان حيوة بن شريح دعاء من البكائين وكان ضَيِّقَ الحال جِدا فجلستُ إليه ذات يوم وهو مختل وحده يدعو فقلتُ : رحمك الله لو دعوتَ اللهَ فوَسَّعَ عليك في معيشتك قال : فالتفت يمينا وشمالا فلم ير أحدا فأَخَذَ حصاة من الأرض فقال : ( اللهم إِجْعَلْها ذهبا )  قال : فإذا هي والله تبرة في كفه ما رأيت أحسن منها  قال : فرمى بها إلَيَّ وقال : ما خَيْرَ في الدنيا إلا الآخرة ثم التفت إليَّ فقال : هو أعلم بما يَصلح عباده فقلتُ : ما أصنع بهذه ؟ قال : اِسْتَنْفِقْها فهَبَتُّهُ والله إِنْ أَراَدَهُ ) (مجابوا الدعوة)

ஹாலித் என்பவர் கூறுகிறார்கள்-ஹயாத் இப்னு ஷூரைஹ் ரஹ்  எப்போதும் அழுது துஆ செய்பவர். மிகவும் ஏழையாக இருந்தார். ஒருநாள் அவர் துஆ செய்து கொண்டிருக்கும்போது அருகில் அமர்ந்தேன். பின்பு அவரிடம் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தால் உங்களுக்கு செல்வத்தை வழங்குவான் அல்லவா ? என்று கேட்டேன். உடனே அவர் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்து வேறு யாரும் தம்மை கவனிக்காததை அறிந்தவுடன் அருகில் இருந்த சிறிய கல்லை எடுத்து யாஅல்லாஹ் இதை தங்கமாக மாற்று என்று துஆ செய்தார். உடனே அது அழகான தங்கமாக மாறியது. அதை என்னை நோக்கி எறிந்து இது போன்ற துன்யாவின் அலங்காரங்களில் எந்த நன்மையும் இல்லை. மறுமையின் காரியங்களில் மட்டுமே நன்மை உண்டு. யாருக்கு எது நல்லது என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் (எனக்கு இந்த ஏழ்மை தான் நல்லது என்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கலாம்) என்றார்கள். பிறகு நான் அவர்களிடம் இதை வைத்து நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, இதை உனக்கு அன்பளிப்பாக தந்து விட்டேன். அதை நீ செலவு செய்து கொள். என்று கூறினார். அவருக்கு அந்த தங்கத்தின் மீது எந்த நாட்டமும் இல்லை.                                     

படிப்பினை – எத்தனையோ நல்லோர்கள் தம் மனதில் நாம் ஐவேளை தொழுகிறோம். அமல் செய்கிறோம். வியர்வை சிந்தி உழைக்கிறோம் அவ்வாறிருந்தும் அல்லாஹ் நம்மை ஏழ்மையில் வைத்துள்ளானே என்ற எண்ணம் சில நேரம் வரும். இந்த எண்ணம் வராமல் இருக்க ஒரு குட்டிக் கதை-  ஒரு தாய்க்கு மூன்று ஆண் மக்கள். மூவரும் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ஒரு உறவினர் அப்பெண்ணின் வீட்டுக்கு வருகிறார்.  வந்தவரை உபசரித்து அவருக்காக பிரியாணி தயார் செய்கிறார். இந்நிலையில் மூத்த மகன் மதிய உணவுக்காக வீட்டுக்கு வருகிறான். விருந்தாளியுடன் சேர்த்து அவனுக்கும் பிரியாணியை அப்பெண் பரிமாறுகிறார். சற்று நேரத்தில் இன்னொரு மகனும் வருகிறான். அவன் எனக்கும் பிரியாணி வேண்டும். என்கிறான். ஆனால் அந்த தாய் “உனக்கு ரசம் சோறு தான்” என்று கூறி அவனுக்காக தனியாக சமைத்து வைத்த ரசம், சோற்றைப் பரிமாறுகிறார். சற்று நேரத்தில் மூன்றாவது மகன் வருகிறான். அவனும் வந்து பிரியாணி கேட்க, உனக்கு பிரியாணி கிடையாது என்கிறார். ரசம் சோறாவது தரும்படி கேட்க, அதுவும் உனக்கு இல்லை என்று கூறி வெறும் கஞ்சியை கொடுத்து அனுப்புகிறார். மூவரும் சென்ற பின் விருந்தாளி அப்பெண்ணிடம் கேட்டார். மூவரும் உன்னுடைய பிள்ளைகள் தானே. அவ்வாறிருக்க மூத்த மகனுக்கு மட்டும் பிரியாணி தந்தாய். இரண்டாது மகனுக்கு வெறும் ரசம் சோறு தந்தாய்.  மூன்றாவது மகனுக்கு அது கூட இல்லை. வெறும் கஞ்சியைக் கொடுத்து அனுப்பி விட்டாய். ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்க அந்த தாய் கூறினார். என் மூத்த மகன் உடல் நலத்தோடு இருக்கிறான். அதனால் அவனுக்கு பிரியாணி தந்தேன். இரண்டாம் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அதனால் அவனுக்கு ரசம் சோறு தந்தேன். என்றார். உடனே விருந்தாளி சரி... அது போகட்டும். மூன்றாம் மகனுக்கு ஏன் வெறும் கஞ்சி..? என்று கேட்க, அந்த தாய் சொன்னார். அவனுக்கு பேதி ஏற்பட்டு இன்று தான் இனிமா கொடுக்கப்பட்டது. கெட்டியான உணவு அவனுக்கு ஆகாது. அதனால் அவனுக்கு கஞ்சியைக் கொடுத்தேன் என்றார். அந்த தாயின் பாசத்தைக் கண்டு அவர் நெகிழ்ந்து போனார். இதேபோல் தான் அல்லாஹ் தன்னுடைய நல்லடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான். யாரை எப்படி வாழ வைத்தால் அவர்களுக்கு நல்லது என்றிருக்குமோ அப்படி வைப்பான்      

தம்மை வழி கெடுக்க முயன்ற ஷைத்தானின் சதியிலிருந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தப்பித்த சம்பவம்

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10  فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيم  اِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.)  موسوعة الرد على الصوفية

 முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் வாழ்வில் நடைபெற்ற பிரபலமான சம்பவங்களில் ஒன்றை அவர்களே சொல்லிக் காட்டினார்கள். நான் என்னுடைய பயணங்களில் ஒரு பயணத்தில்  குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன். அதே நிலையில் கடற்கரையில் நான் இறை தியானத்தில் இருந்த போது எனக்கு முன்னால் மழை மேகம் போன்ற ஒரு காட்சி தோன்றியது. அதிலிருந்து இதமான காற்றை உணர்ந்தேன். பின்பு ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு பெரும் ஒளியை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரு உருவம் தோன்றி அப்துல் காதிரே! நான்தான் உன்னுடைய ரப்பு. மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களையெல்லாம் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறியது. உடனே நான் இது ஷைத்தானின் வேலை என்று எண்ணி சுதாரித்துக் கொண்டு அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு! என்றேன். ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு இருந்த அந்த ஒளி உடனே மறைந்து இருளாகி விட்டது. அந்த உருவமும் புகையாக மாறி விட்டது. பின்பு அவன் என்னை நோக்கி அப்துல் காதிரே! உம்முடைய கல்வி ஞானத்தாலும்  உம்முடைய உயர்வான பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்டும் என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டீர். நான் இது போன்ற யுக்தியை பயன்படுத்தி எழுபது தரீகத் வாதிகளை நான் கெடுத்துள்ளேன். (ஆனால் நீர் உன்னுடைய திறமையால் தப்பித்துக் கொண்டீர்)என்று பெருமையை உண்டாக்கும் வகையில் அடுத்த சூழ்ச்சியை ஆரம்பித்தான். அப்போதும் நான் சுதாரித்துக் கொண்டு (என்னிடம் எவ்வித பெருமையும் இல்லை. எவ்வித திறமையும் இல்லை) என்னுடைய ரப்புக்கே அனைத்துப் பெருமையும் உண்டு. என்று கூறினேன். 

 இவ்வாறு அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் கூறிய போது அவர்களிடம் நீங்கள் எப்படி அவனை ஷைத்தான் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். எப்போது அவன் மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களை உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன் என்று கூறினானோ உடனே நான் சுதாரித்துக் கொண்டேன் என்றார்கள். (இப்படி ஒரு விஷயம் அல்லாஹ்விடமிருந்து ஏற்படுவதாக இருந்தால் முதலில் நபி ஸல் அவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்பட்டிருக்கும் என்பது ஆலிம்களுக்கு மட்டுமே தெரியும்.)      

படிப்பினை- மார்க்கத்தில் ஹராம் என்று கூறப்பட்டதை இன்றைக்கு யாரும் ஹலாலாக்க முடியாது என்றிருக்க சிலர் ஹராமை ஹலால் என்று ஃபத்வா கொடுக்கின்றனர். அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.  

 மற்றொரு படிப்பினை- மார்க்க ஞானம் உள்ளவராகவும் அதேநேரத்தில் பணிவை மேற்கொள்பவராகவும் இருக்கும் மார்க்க அறிஞரை ஷைத்தான் அவ்வளவு சீக்கிரத்தில் வழி கெடுக்க முடியாது. எழுபது பேரை அவன் வழி கெடுத்ததாக அவனே கூறினான் என்றால் ஒன்று அவர்களிடம் பணிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது மார்க்க ஞானம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். 

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه  قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ (سنن ابن ماجة

 துஆ ஏற்றுக் கொள்ளப்படும் புனிதராக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் ஆயிருந்தார்கள்.  

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் காலத்தில் அபுல் முழஃப்பர் என்பவர் இருந்தார், அவர் எப்போது வியாபார விஷ.மாக வெளியூர் சென்றாலும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லிச் செல்வது வழக்கம். ஒருமுறை அவ்வாறு அவர் செல்லும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வதற்காக வந்தார், அப்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் நீங்கள் இப்போது செல்ல வேண்டாம் இப்பயணம் முடித்து விட்டு நீங்கள்   திரும்பும்போது உங்களுக்கு ஆபத்து வரலாம் என எச்சரித்தர்கள் அவர் கவலையுடன் திரும்பிய போது வழிய.ல் ஹம்மாத் ரஹ அவர்களை சந்தித்தார்கள் கவலைக்கு காரணம் கேட்ட போது அபுல்முழஃஃப்பர் அவர்கள் காரணத்தைக் கூற, அதற்கு ஹம்மாத் ரஹ் அவர்கள் நீங்கள் சென்று வாருங்கள். அல்லாஹ்வின் விதி அப்படி இருந்தாலும் அவன் உங்களைப் பாதுகாப்பான் என்று கூறி அனுப்பினார்கள், அவர் சென்று சரக்குகளை விற்பனை செய்து விட்டு பணப்பையுடன் திரும்பும்போது வழி.யில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது ஒரு இடத்தில் பையை வைத்தார் ஆனால் அதை எடுக்க மறந்து விட்டார். அதை தாண்டி சற்று தூரம் வந்து ஓரிடத்தில் ஓய்வெடுத்த போது அயர்ந்து தூங்கினார். அதில் ஒரு கனவு கண்டார் தன்னோடு பல வியாபாரிகள் பணப்பைகளுடன் இருப்பது போலவும் அவற்றைப் பறிக்க கொள்ளைக் கூட்டம் ஆயதங்களுடன் வருவது போலவும் கனவு கண்டார். அதில் ஒரு கொள்ளையன் இவருக்கு அருகில் வந்து இவரைக் கழுத்தில் தாக்கி இவரிடமிருந்து பணப்பையைப் பறித்தான். அத்துடன் கனவு கலைந்தது. ஆனால் அருகில் யாரும் இல்லை. ஆனால் கழுத்தில் மட்டும் காயத்தின் தழும்பு இருந்த து. அப்போது தான் மறந்த பணப்பையின் நினைவு வந்தது, உடனே அந்த இடத்திற்குச் சென்றபோது அது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அவர் ஊர் திரும்பியவுடன் வழியில் ஹம்மாத் ரஹ் அவர்களைச் சந்தித்து நடந்த விஷயத்தைக் கூறியவுடன் ஹம்மாத் ரஹ் அவர்கள் கறினார்கள் நீங்கள் கனவில் பார்த்த அத்தனை விஷயங்களும் நிஜத்தில் நடைபெற வேண்டியவை ஆனால் அவையனைத்தும் அல்லாஹ் கனவில் நிகழ்த்தி அல்லாஹ் உங்களைப் பாதுகாத்துள்ளான் இதற்குக் காரணம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள்  தான். அவர்கள் நீங்கள் சென்றதை அறிந்த தில் இருந்து உங்களுக்காக  எழுபது தடவை துஆ செய்தார்கள். அதனால் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்றார்கள் 

இறையச்சம், பேணுதல், பித்அத், துஆ பற்றி முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உபதேசம்

மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்காதே ! துஆ ஏற்கப்படுவது தாமதாகுவதைப் பற்றி அவன் மீது குறை கூறாதே நீ துஆ செய்வதில் சோர்வடையாதே. இதனால் உனக்கு லாபம் இல்லா விட்டாலும் கூட நஷ்டம் இல்லை. உன் துஆவை அல்லாஹ் உடனடியாக இவ்வுலகில் ஏற்கா விட்டாலும் மறுமையில் அதற்குரிய வெகுமதியை உனக்கு தரவே செய்வான். மாக்க்கத்தில் விலக்கப்பட்டவைகளை விட்டும்  ஒதுங்க வேண்டியது உன்னுடைய கடமையாகும். இல்லையேல் அழிவுக்கயிறு உன்னை சுற்றிக் கொள்ளும் பாவத்தில் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆகுமானவற்றைக் கூட பத்தில் ஒன்பது பங்கை விட்டு நாங்கள் விலகிக் கொள்வதுண்டு என்று நபித்தோழர்களான உமர் ரழி, அபூபக்ர் ரழி ஆகியோர் கூறியுள்ளார்கள்.

துஆ ஏற்கப்படாதது ஏன் என்று வினவியவருக்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் கூறிய அற்புத பதில்

حُكي إنّ إبراهيم بن أدهم قيل له ما بالنا ندعوا الله فلا يستجيب لنا؟ قال لأنّكم عرفتم الله فلم تطيعوه وعرفتم الرسول فلم تتبعوا سنّته  وعرفتم القرآن فلم تعملوا بما فيه وأكلتم نعمة الله فلم تؤدّوا شكرها وعرفتم الجنّة فلم تطلبوها وعرفتم النّار فلم تهربوا منها وعرفتم الشيطان فلم تحاربوه ووافقتموه وعرفتم الموت فلم تستعدّوا له ودفنتم الأموات فلم تعتبروا بهم وتركتم عيوبكم واشتغلتم بعيوب الناس (قرطبي

عن مشرف بن أبان : حدثني صالح بن سليمان أ وغيره قال : ( احتاج إبراهيم بن أدهم إلى دينار وكان على شاطىء البحر فدعا الله عز و جل فتشرعت السمك في فم كل واحدة منهن دينار واحد فأخذ دينارا واحدا ) 

عن عصام بن زيد - رجل من مزينة - قال : ( كان رجل من الخوارج يغشى مجلس الحسن فيؤذيهم فقيل للحسن : يا أبا سعيد ألا تكلم الأمير حتى يصرفه عنا ؟ قال : فسكت عنهم  قال : فأقبل ذات يوم و الحسن جالس مع أصحابه فلما رآه قال : ( اللهم قد علمت أذاه لنا فاكفناه بماشئت )   قال : فخر الرجل والله من قامته فما حل إلى أهله إلا ميتا على سرير فكان الحسن إذا ذكره بكى 

ஹஸன் பஸரீ ரஹ் அவர்களின் மஜ்லிஸுக்கு வந்து ஒருவர் எப்போதும் தொந்தரவு தந்து கொண்டிருந்தார். ஹஸன் பஸரீ ரஹ் அவர்களைத் திட்டுவார் அப்போது ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மற்றவர் இந்த அளவுக்கு உங்களை திட்டுகிறார். அவரைப் பற்றி நீங்கள் அரசரிடம் புகார் கூறக் கூடாதா என்று கேட்க இமாம் அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். மற்றொரு முறை அந்த மனிதர் சபைக்கு வந்து மிகவும் நோவினைப் படுத்திய போது இமாம் அவர்கள் அவரை விட்டும் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய உடனே அந்த மனிதர் கீழே விழுந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் இறந்து விட்டார். நல்லோர்களின் சாபம் உடனே பலிக்கும்         

عن الحكم بن هشام الثقفي قال : ( أخبرت أن رجلا أخذ أسيرا فألقي في جب ووضع على رأس الجب صخرة فكتب فيها : ( سبحان الملك الحق القدوس سبحان الله وبحمده ) فأخرج من الجب من غير أن يكون أخرجه إنسان 

கொடிய அரசனிடமிருந்து காப்பாற்றும்படி துஆ செய்த  இளைஞர்கள் நுழைந்த குகை பிறரின் கண்களுக்கு மாயமானதையும், அக்குகைக்குள் 300 வருடங்கள் அவர்களை தூங்க வைத்த சம்பவத்தையும் குர்ஆனில் கஹ்ஃப் சூராவில் பார்க்கலாம்      

ஹஜ்ஜாஜுக்கு எதிராக ஸயீத் ரழி அவர்கள் செய்த துஆவை அல்லாஹ்  உடனே ஏற்றுக் கொண்டான் 

ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية 

قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)

ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்த து ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله

என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "

ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்              


பராஅத் இரவு

 30-01-2026 شعبان  -  بسم الله الرحمن الرحيم     ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...