வியாழன், 25 டிசம்பர், 2025

ரஜப் துஆ

 26-12-2025

رجب  -  5 بسم الله الرحمن الرحيم  

   اللهم بارك لنا في رجب وشعبان 

எல்லாவற்றிலும் பரக்கத்தை வேண்டுவது ஏன்?

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

ரமழான் வரப் போகிறது என்பதற்கான முன்னுரையாக இருப்பது ரஜப் மாதம் வந்தாலே நாம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் ஓதும் அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ  ரஜப்... யாஅல்லாஹ் ரஜபிலும் ஷஃபானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வானாக என்று துவங்கும் துஆவாகும். ரமழானுக்காக நாம் தயாராக வேண்டும் என்ற முன்னறிவிப்பாக இந்த துஆ அமைந்துள்ளது. அந்த துஆவில் அடங்கியுள்ள தத்துவங்களைக் கூறும் முன்பு அந்த துஆவை எப்படி ஓத வேண்டும் என்பது பற்றியும் பொதுவாக பரக்கத் பற்றிய சில விளக்கங்களை நாம் பார்ப்போம்.  பலர் அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ  ரஜப என்று  ஙைர முன்சரிஃப் ஆக பயன்படுத்துகின்றனர். ஆனால் இமாம் முல்லா அலீ காரீ ரஹ் அவர்கள் கூறும்போது அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ  ரஜபின் வ ஷஃபான என்று ஓதுவது பொருத்துமானது அது தான் சிறப்பு என்று கூறுகிறார்கள். தன் கிதாபில் பின்வருமாறு கூறுகிறார்கள். அதாவது ரஜப் என்பது மட்டும் முன்சரிஃப் ஆக பயன்படுத்தப்படும் என்றும் ஷஃபான் என்பது  ஙைர முன்சரிஃப் ஆகவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.     

وقال اﻹمام علي القاري في كتابه: اﻷدب في رجب: "واعلم أنَّ رجبًا مُنصرِفٌ عند الأكثر، وهو الأظهر؛ لاشتقاقه من رَجَبَ فلانًا: هابَه وعظَّمه؛ لتعظيم العرب إيَّاه، ولذا يقال: رجبٌ المُرَجَّب، ويقال: رجبٌ الأصم؛ 

உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பெற்றெடுத்த பிள்ளை, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் பரக்கத் வேண்டி அல்லாஹ்விடம் கேட்கிறோம். காரணம் எல்லாவற்றிலும் பரக்கத் மிக மிக அவசியம். பரக்கத் என்பதற்கு அந்தந்த இடத்திற்கு தகுந்த மாதிரி வளர்ச்சி, முன்னேற்றம், வெற்றி, நிம்மதி என பல அர்த்தங்கள் உண்டு.                              

ஆட்டு இறைச்சிக்கும் பரக்கத்  என்ற வார்த்தையை நபித் தோழர்கள் பயன்படுத்தியுள்ளனர்

عن عائشة رض أن رسول الله صلى الله عليه وسلم قال لأم هانيء: " ألكم غنم؟ قالت: لا، قال: اتخذوا الغنم فإن فيها بركة."(رواه  ابن جرير".

உம்மு ஹானீ ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்கள் உங்களிடம் ஆடு உள்ளதா என்று கேட்க, அந்த அம்மையார் எங்களிடம் ஆடு இல்லை என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் ஆடுகளை வைத்துக் கொள்ளுங்கள் அதில் பரக்கத் உள்ளது என்றார்கள். 

عَنْ أُمِّ رَاشِدٍ جَدَّتِهِ ، قَالَتْ : كُنْت عِنْدَ أُمِّ هَانِئٍ فَأَتَاهَا عَلِي ، فَدَعَتْ لَهُ بِطَعَامٍ ، فَقَالَ : مَالِي لاَ أَرَى عِنْدَكُمْ بَرَكَةً ، يَعْنِي الشَّاةَ ، قَالَتْ : فَقَالَتْ : سُبْحَانَ اللهِ ، بَلَى وَاللهِ إِنَّ عِنْدَنَا لَبَرَكَةً ، قَالَ : إنَّمَا أَعَنْيَ الشَّاةَ ، (مُصنف ابن أبي شيبة)

உம்மு ஹானீ ரழி அவர்களின் வீட்டுக்கு ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் சென்றார்கள். அப்போது அந்த அம்மையார் உணவை வரவழைத்தார்கள். அதைக் கண்ட அலீ ரழி அவர்கள் உரிமையுடன் அந்த அம்மையாரிடம் பரக்கத்தை இன்னும் காணவில்லையே என்றார்கள். அதற்கு அந்த அம்மையார் அதுவும் இன்றைக்கு எங்களிடம் இருக்கிறது  என்றார்கள். அதாவது ஆட்டிறைச்சியைத்தான் பரக்கத் என்று குறிப்பிட்டார்கள். இப்னு அபீ ஷைபா            

  நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இறைச்சிக்கு மறுபெயராக  பீஸ், அட்ரஸ் என பல ஜாடையான வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன.

ஒருவரின் அழகு நம்மை ஆச்சரியப்படுத்தினால் பாரகல்லாஹு  என்று கூறுவதால் கண்திருஷ்டி ஏற்படாது

عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخَبَّأَةٍ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلًا صَرِيعًا قَالَ مَنْ تَتَّهِمُونَ بِهِ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلْ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ (ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الْإِنَاءَ مِنْ خَلْفِهِ-(ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَيْنُ حَقٌّ (بخاري) باب الْعَيْنُ حَقٌّ -كتاب الطب

 ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழி அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ஆமிர் ரழி அவர்கள் அந்த வழியாகச் சென்றார். ஸஹ்ல் ரழி அவர்களின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்தவுடன் இது மாதிரி அழகிய உடம்பை வேறு எங்கும் கண்டதில்லை என கண் வைத்து விட்டார். அது அவரை உடனே பாதித்தது. படுத்த படுக்கையாக ஆகி விட்ட அவரை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது இவர் விஷயத்தில் யாரையும் சந்தேகிக்கிறீர்களா என்று நபி ஸல் கேட்க, ஆமிரை ரழி நாங்கள் சந்தேகிக்கிறோம் என தோழர்கள் பதில் கூறினார்கள். உடனே ஆமிர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் எதற்காக உங்களின் உடன் பிறவா சகோத ர ரை இப்படி கண்திருஷ்டியை ஏற்படுத்தி ஏன் கொலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் பாரகல்லாஹ் என்று கூறலாமே என்றார்கள். பிறகு ஆமிர் ரழி அவர்களிடம் தண்ணீரை எடுத்து வரச் சொல்லி ஆமிர் ரழி உடைய உடல் முழுவதையும் கழுவச் சொல்லி அந்த நீரை ஸஹ்ல் ரழி அவர்களின் மீது ஊற்றச் சொன்னார்கள். (அவ்வாறு ஊற்றப்பட்டது. அவர் குணமடைந்தார்.)        

மணமக்களை வாழ்த்தும்போது பரக்கத்துக்காக துஆ   

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ (ابن ماجة) بَاب مَا يُقَالُ لِلْمُتَزَوِّجِ- كِتَاب النِّكَاحِ- عَنْ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي جُشَمَ فَقَالُوا بِالرَّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ لَا تَقُولُوا هَكَذَا وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ (ابن ماجة) بَاب تَهْنِئَةِ النِّكَاحِ- كِتَاب النِّكَاحِ  - (بارك الله لك)أي في زوجك (وبارك عليك) أي أدخل عليك البركة في مؤنتها ويُسِرَّها لك (فيض القدير) ودَلَّ صنيع المؤلف على أن الدعاء للمتزوج بالبركة هو المشروع (فتح الباري)- بِالرِّفَاءِ وَالْبَنِينَ كَلِمَة تَقُولهَا أَهْل الْجَاهِلِيَّة فَوَرَدَ النَّهْي عَنْهَا -وَاخْتُلِفَ فِي عِلَّة النَّهْي عَنْ ذَلِكَ قِيلَ لِمَا فِيهِ مِنْ الْإِشَارَة إِلَى بُغْض الْبَنَات لِتَخْصِيصِ الْبَنِينَ بِالذِّكْرِ وقال بن المنير الذي يظهر أنه صلى الله عليه وسلم كره اللفظ لما فيه من موافقة الجاهلية (مرقاة)

 பிர்ரிஃபாஇ  வல்-பனீன் என்று துஆ கேட்கக் கூடாது என அகீல் ரழி அவர்கள் கூறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை ஒதுக்கித் தள்ளுதல் என்பதும் இதில் இருக்கிறது. மேலும் மணமக்களை இவ்வாறு வாழ்த்துவது அறியாமைக்காலத்தின் பழக்கம். அதனால் நபி ஸல் அவர்கள் மணமக்களுக்கு பரக்கத்தை வேண்டி துஆச் செய்யக் கற்றுக் கொடுத்தார்கள்.           

உண்ணும் உணவில் பரக்கத் இருந்தால் குறைந்த உணவும் வயிறை நிரப்பும்

قَالَ النَّوَوِيّ :وَالْمُرَاد بِالْبَرَكَةِ مَا تَحْصُل بِهِ التَّغْذِيَة وَتَسْلَم عَاقِبَتُهُ مِنْ الْأَذَى وَيُقَوِّي عَلَى الطَّاعَة وَالْعِلْم عِنْد اللَّه(فتح الباري

 நவவீ ரஹ் அவர்கள் உணவு விஷயத்தில் பரக்கத் என்பதற்கு விளக்கம் கூறும்போது எந்த உணவின் மூலம் வயிறும் நிரம்புவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்குமோ, வணக்க வழிபாடுகளுக்கு உதவியாகவும் இருக்குமோ, தீனுடைய கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமோ அது தான் உணவில் பரக்கத் என்று கூறினார்கள். 

சிறந்த முஃமினின் உணவில் பரக்கத் செய்யப்படும் என்பதால் குறைந்த உணவே அவருக்குப்போதும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ (بخاري) بَاب طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ- كتاب الأطعمة-  عَنْ أَبِي هُرَيْرَةَ   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ وَهُوَ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (مسلم)بَاب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ-كِتَاب الْأَشْرِبَةِ-

  நபி ஸல் அவர்களிடம் ஒரு மாற்று மதத்தவர் விருந்தாளியாக வந்தார். முதல்நாள் அவருக்கு ஆட்டுப்பால் குடிக்கத் தரும்படி நபி ஸல் உத்தரவிட்டார்கள். அவர் குடித்தார். மீண்டும் தரப்ப்பட்டது. குடித்தார். இவ்வாறே ஏழு கோப்பைகளை காலி செய்தார். பிறகு அவர் முஸ்லிமாக விட்டார். அதன்பின்பு அவரிடம் ஆட்டுப்பால் குடிக்கத் தந்த போது ஒரு கோப்பைக்கு மேல் அவரால் குடிக்க முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு முஃமின் ஒரு இரைப்பையை நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே அருந்துவார். ஆனால் ஒரு காஃபிர் ஏழு இரைப்பைகளை நிரப்பிக் கொள்ளும்  அளவுக்கு அருந்துவார் என்றார்கள்.                                             

قال القرطبي:المؤمن يأكل للضرورة والكافر يأكل للشهوة أو المؤمن يقل حرصه وشرهه على الطعام ويبارك له في مأكله ومشربه فيشبع من قليل والكافر شديد الحرص لا يطمح بصره إلا للمطاعم والمشارب كالأنعام فمثل ما بينهما من التفاوت كما بين من يأكل في وعاء ومن يأكل في سبعة (فيض القدير) 

நபி ஸல் அவர்களின் விரல்களில் சுரந்த நீரை நபித்தோழர்கள் அருந்திய சம்பவத்தை கூறும்போது நீரை அருந்துவது என்று கூறாமல் பரக்கத்தை அருந்துவது என்ற தலைப்பில் புஹாரீ இமாம் கொண்டு வந்துள்ளார்கள்

عَنْ جَابِرِ قَالَ قَدْ رَأَيْتُنِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ حَضَرَتْ الْعَصْرُ وَلَيْسَ مَعَنَا مَاءٌ غَيْرَ فَضْلَةٍ فَجُعِلَ فِي إِنَاءٍ فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ فَأَدْخَلَ يَدَهُ فِيهِ وَفَرَّجَ أَصَابِعَهُ ثُمَّ قَالَ حَيَّ عَلَى أَهْلِ الْوُضُوءِ الْبَرَكَةُ مِنْ اللَّهِ فَلَقَدْ رَأَيْتُ الْمَاءَ يَتَفَجَّرُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ النَّاسُ وَشَرِبُوا فَجَعَلْتُ لَا آلُوا مَا جَعَلْتُ فِي بَطْنِي مِنْهُ فَعَلِمْتُ أَنَّهُ بَرَكَةٌ قُلْتُ لِجَابِرٍ كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ (بخاري)بَاب شُرْبِ الْبَرَكَةِ 

தட்டை வழித்துச் சாப்பிடுவதிலும், கைகளை சூப்பி சாப்பிடுவதிலும்  பரக்கத்

عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ الْأَصَابِعِ وَالصَّحْفَةِ وَقَالَ إِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ (مسلم)وعنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمْ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ثُمَّ لِيَأْكُلْهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ تَكُونُ الْبَرَكَةُ (مسلم) -كتاب الاشربة

சேர்ந்து சாப்பிடுவதிலும் பரக்கத்

عن وَحْشِي بْن حَرْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ (ابوداود) بَاب فِي الِاجْتِمَاعِ عَلَى الطَّعَامِ- كِتَاب الْأَطْعِمَةِ

நபி ஸல் அவர்களிடம் சில தோழர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உண்ணுகிறோம். ஆனால் வயிறு நிரம்புவதில்லை என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகிறீர்களா என்று கேட்க, ஆம் என்று அவர்கள் பதில் கூறியவுடன் இனிமேல் நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள் பிஸ்மி சொல்லி உண்ணுங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான் என்று கூறினார்கள்.                             

பெற்றோரை மதிப்பதாலும், உறவினர்களை அனுசரிப்பதாலும் பரக்கத் பெருகும் என்பதன் விளக்கம்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ (بخاري) بَاب مَنْ أَحَبَّ الْبَسْطَ فِي الرِّزْقِ-كتاب  البيوع قَالَ الْعُلَمَاءُ : مَعْنَى الْبَسْطِ فِي الرِّزْق الْبَرَكَة فِيهِ ، وَفِي الْعُمُر حُصُولُ الْقُوَّةِ فِي الْجَسَدِ ، لِأَنَّ صِلَةَ أَقَارِبِهِ صَدَقَةٌ وَالصَّدَقَةُ تُرَبِّي الْمَالَ وَتَزِيدُ فِيهِ فَيَنْمُو بِهَا وَيَزْكُو (فتح الباري)

நேரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வது பற்றி..

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خُفِّفَ عَلَى دَاوُدَ الْقِرَاءَةُ فَكَانَ يَأْمُرُ بِدَابَّتِهِ لِتُسْرَجَ فَكَانَ يَقْرَأُ قَبْلَ أَنْ يَفْرُغَ يَعْنِي الْقُرْآنَ اي الزبور (بخاري) باب قَوْلِهِ ( وَآتَيْنَا دَاوُدَ زَبُورًا ) كتاب التفسيبر- وَفِي الْحَدِيث أَنَّ الْبَرَكَة قَدْ تَقَع فِي الزَّمَن الْيَسِير حَتَّى يَقَع فِيهِ الْعَمَل الْكَثِير . قَالَ النَّوَوِيّ : أَكْثَر مَا بَلَغَنَا مِنْ ذَلِكَ مِنْ كَانَ يَقْرَأ أَرْبَع خَتَمَات بِاللَّيْلِ وَأَرْبَعًا بِالنَّهَارِ ، وَقَدْ بَالَغَ بَعْض الصُّوفِيَّة فِي ذَلِكَ فَادَّعَى شَيْئًا مُفْرِطًا وَالْعِلْم عِنْد اللَّه (فتح الباري) وفيه أن الله تعالى يطوي الزمان لمن شاء من عباده كما يطوي المكان(عمدة القاري)

பொருள்-வாகனத்தை கயிற்றால் கட்டி வைக்கும் நேரத்திற்குள் தாவூத் அலை ஜபூரை ஓதி முடிப்பார்கள். அதாவது பொறுமையாகவே ஓதுவார்கள். ஆனால் குறுகிய நேரத்தில் முடிப்பார்கள். நபிகளாரின் மிஃராஜ் பயணம் போல்..

ரஜப் மாதத்தில் பரக்கத் செய்வாயாக என்ற துஆவின் தாத்பரியம்

 عن أنس رضي الله عنه  أن رسول الله صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ رَجَبٌ قالَ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ  وَكَانَ إِذَا كَانَتْ لَيْلَةُ الجُمُعَةِ قالَ هذِهِ لَيْلَةٌ غَرَّاءُ وَيَوْمٌ أَزْهَرُ (بزار,كنز العمال)(مشكاة, باب الجمعة) عن أنس بن مالك رضي الله عنه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأعنا على الصيام والقيام وغض البصر وحفظ اللسان ولا تجعل حظنا منه الجوع والسهر (مسند الفردوس)

(اللهم بارك لنا) أي في طاعتنا وعبادتنا (في رجب وشعبان) يعني وفقنا للإكثار من الأعمال الصالحة فيهما(مرعاة شرح مشكاة)

ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாத த்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்பதன் தாத்பரியம் இந்த இரண்டு மாதங்களிலும் அதிகம் அமல் செய்யும் பாக்கியத்தை தருவாயாக என்பதாகும். இந்த இரண்டு மாதங்களிலும் அமல் செய்வதன் மூலமாக ரமழானில் இன்னும் அதிகமாக அமல் செய்யும் பாக்கியம்  கிடைக்கும்.

وبلغنا رمضان : قال ابن رجب:فيه أن دليل ندب الدعاء بالبقاء إلى الأزمان الفاضلة لإدراك الأعمال الصالحة فيها فإن المؤمن لا يزيده عمره إلا خيرا (فيض القدير) قال الطيبي:الأزهر الأبيض ومنه أكثروا الصلاة عليّ في الليلة الغراء، واليوم الأزهر أي ليلة الجمعة ويومها والنورانية فيهما معنوية لذاتهما،

ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக என்று கேட்பதன் நோக்கம் 

அதுவரை அல்லாஹ் நம்மை ஹயாத்தாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.

عَن أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد

 இரு சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில் ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார்.தல்ஹா ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப்பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள் இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான் முழுமையாக கிடைத்துள்ளது.மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார் என்றார்கள்.                                  

தமக்கு அநீதம் செய்தவர்களுக்கு எதிராக சங்கையான மாதத்தில்

 துஆ செய்ததால் அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்பட்ட விதம்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه  قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي يَوْمٍ يَعْرِضُ فِيهِ الدِّيوَانَ إِذْ مَرَّ بِهِ رَجُلٌ أَعْمَى أَعْرَجُ قَدْ عَنَّى قَائِدَهُ فَقَالَ عُمَرُ حِينَ رَآهُ وَأَعْجَبَهُ شَأْنُهُ:" مَنْ يَعْرِفُ هَذَا؟"، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: هَذَا مِنْ بَنِي صَنْعَاءَ بَهْلَةَ بَرِيقٍ قَالَ:" وَمَا بَرِيقٌ؟"، قَالَ: رَجُلٌ مِنَ الْيَمَنِ: قُلْتُ زَادَ غَيْرُهُ فِيهِ اسْمُهُ عِيَاضٌ، قَالَ:" أَشَاهِدٌ؟"، قَالَ: نَعَمْ، فَأُتِيَ بِهِ عُمَرَ فَقَالَ:" مَا شَأْنُكَ وَشَأَنُ بَنِي صَنْعَا؟" فَقَالَ: إِنَّ بَنِي صَنْعَا كَانُوا اثْنَيْ عَشَرَ رَجُلًا، وَإِنَّهُمْ جَاوَرُونِي فِي الْجَاهِلِيَّةِ فَجَعَلُوا يَأْكُلُونَ مَالِي، وَيَشْتُمُونَ عِرْضِي اسْتَنْهَيْتُهُمْ فَنَاشَدْتُهُمُ اللهَ وَالرَّحِمَ فَأَبَوْا فَأَمْهَلْتُهُمْ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَوْتُ اللهَ عَلَيْهِمْ...فَلَمْ يَحُلِ الْحَوْلُ حَتَّى هَلَكُوا غَيْرَ وَاحِدٍ وَهُوَ هَذَا كَمَا تَرَى قَدْ عَنَّى قَائِدَهُ فَقَالَ عُمَرُ: سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذَا لَعِبْرَةً وَعَجَبًا"، 

فَقَالَ رَجُلٌ آخَرُ مِنَ الْقَوْمِ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلَا أُحَدِّثُكَ مِثْلَ هَذَا وَأَعْجَبَ مِنْهُ؟ قَالَ:" بَلَى" قَالَ: فَإِنَّ نَفَرًا مِنْ خُزَاعَةَ جَاوَرُوا رَجُلًا مِنْهُمْ فَقَطَعُوا رَحِمَهُ، وَأَسَاءُوا مُجَاوَرَتَهُ، وَإِنَّهُ نَاشَدَهُمُ اللهَ وَالرَّحِمَ إِلَّا  أَعْفَوْهُ مِمَّا يَكْرَهُ فَأَبَوْا عَلَيْهِ فَأَمْهَلَهُمْ حَتَّى إِذَا جَاءَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِمْ قَالَ: فَبَيْنَمَا هُمْ عِنْدَ قَلِيبٍ يَنْزِفُونَهُ فَمِنْهُمْ مَنْ هُوَ فِيهِ، وَمِنْهُمْ مَنْ هُوَ فَوْقَهُ تَهَوَّرَ الْقَلِيبُ بِمَنْ كَانَ عَلَيْهِ وَعَلَى مَنْ كَانَ فِيهِ فَصَارَ قُبُورَهُمْ حَتَّى السَّاعَةِ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذِهِ لَعِبْرَةً وَعَجَبًا"، 


فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ آخَرُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلَا أُخْبِرُكَ بِمِثْلِ هَذَا وَأَعْجَبَ مِنْهُ؟، قَالَ: بَلَى، قَالَ: إِنَّ رَجُلًا مِنْ هُذَيْلٍ وَرِثَ فَخْذَهُ الَّذِي هُوَ فِيهَا حَتَّى لَمْ يَبْقَ مِنْهُمْ أَحَدٌ غَيْرُهُ فَجَمَعَ مَالًا كَثِيرًا، فَعَمِدَ إِلَى رَهْطٍ مِنْ قَوْمِهِ يُقَالُ لَهُمْ بَنُو الْمُؤَمَّلِ، فَجَاوَرَهُمْ لِيَمْنَعُوهُ وَلْيَرُدُّوا عَلَيْهِ مَاشِيَتَهُ، وَإِنَّهُمْ حَسَدُوهُ عَلَى مَالِهِ، وَنَفَسُوهُ مَالَهُ، فَجَعَلُوا يَأْكُلُونَ مِنْ مَالِهِ وَيَشْتُمُونَ عِرْضَهُ، وَإِنَّهُ نَاشَدَهُمُ اللهَ وَالرَّحِمَ إِلَّا عَدَلُوا عَنْهُ مَا يَكْرَهُ، فَأَبَوْا عَلَيْهِ فَجَعَلَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ رَبَاحٌ يُكَلِّمُهُمْ فِيهِ، وَيَقُولُ: يَا بَنِي الْمُؤَمَّلِ ابْنُ عَمِّكُمُ اخْتَارَ مُجَاوَرَتَكُمْ عَلَى مَنْ سِوَاكُمْ فَأَحْسِنُوا مُجَاوَرَتَهُ، فَأَبَوْا عَلَيْهِ فَأَمْهَلَهُمْ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِمْ قَالَ: فَبَيْنَمَا هُمْ ذَاتَ يَوْمٍ نُزُولٌ إِلَى أَصْلِ جَبَلٍ انْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ لَا  تَمُرُّ بِشَيْءٍ إِلَّا طَحَنَتْهُ حِينَ مَرَّتْ بَأَبْيَاتِهِمْ فَطَحَنَتْها طَحْنَةً وَاحِدَةً إِلَّا رَبَاحًا الَّذِي اسْتَثْنَاهُ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ هَذَا لَعِبَرًا وَعَجَبًا"، 

فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَلَا أُخْبِرُكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مِثْلَهُ وَأَعْجَبَ مِنْهُ؟، قَالَ:" بَلَى"، قَالَ: فَإِنَّ رَجُلًا مِنْ جُهَيْنَةَ جَاوَرَ قَوْمًا مِنْ بَنِي ضَمْرَةَ فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ رَجُلٌ مِنْ بَنِي ضَمْرَةَ يُقَالُ لَهُ رِيشَةُ يَعْدُو عَلَيْهِ، فَلَا يَزَالُ يَنْحَرُ بَعِيرًا مِنْ إِبِلِهِ، وَإِنَّهُ كَلَّمَ قَوْمَهُ فِيهِ، فَقَالُوا: إِنَّا قَدْ خَلَفْناهُ فَانْظُرْ أَنْ تَقْتُلَهُ، فَلَمَّا رَآهُ لَا يَنْتَهِي أَمْهَلَهُ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِ، فَسَلَّطَ اللهُ عَلَيْهِ أُكْلَةً فَأَكَلَتْهُ حَتَّى مَاتَ قَبْلَ الْحَوْلِ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذَا لَعِبْرَةً وَعَجَبًا، وَإِنْ كَانَ اللهُ لَيَصْنَعُ هَذَا بِالنَّاسِ فِي جَاهِلِيَّتِهِمْ لِيَنْزِعَ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ فَلَمَّا أَتَى اللهُ بِالْإِسْلَامِ أَخَّرَ الْعُقُوبَةَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَذَلِكَ أَنَّ اللهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: { إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ } [الدخان: 40]، وَإِنَّ مَوْعِدَهُمُ السَّاعَةُ، { وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ } [القمر: 46]، وَقَالَ: { وَلَوْ يُؤَاخِذُ اللهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى } [فاطر: 45](بيهقي في شعب الايمان)

  உமர் ரழி அவர்களின் சபையை ஒருவர் கடந்து சென்றார். குருடராகவும் நொண்டியாகவும் அவர் இருந்தார். மற்றவரின் தயவு இல்லாமல் அவரால் எங்கும் செல்ல முடியாதவராக இருந்தார். அவரைப் பற்றி உமர் விசாரித்த போது இவர் பனீ ஸன்ஆ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு சாபத்தின் காரணமாக அந்தக் குடும்பமே இப்படி ஆகி விட்டது என்று கூறப்பட்டது. அது கேட்டு ஆச்சரியமடைந்த உமர் ரழி இதற்கு சாட்சி உண்டா என்று கேட்க, யார் சபித்தாரோ அந்த  நபரையே அழைத்து வரப்பட்டது. அவரிடம் உமர் ரழி அவர்கள் நடந்ததை விசாரித்தார்கள். அப்போது அவர் கூறினார்.  பனீ ஸன்ஆ குடும்பத்தாருக்கு அருகில் வசிப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் 12 பேர். அவர்கள் எனக்கு நிறைய அநீதம் செய்தனர். என் சொத்துகளை அனுபவித்தனர். என் குடும்பம் பற்றி அவதூறாகப் பேசினர். நான் எவ்வளவோ தூரம் பொறுமை கொண்டேன். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்தேன்.குறிப்பிட்ட சிறந்த கண்ணியமான மாதம் வருவதை எதிர்பார்த்து  அந்தமாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்தேன். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அக்குடும்பத்தில் ஒருவன் பின் ஒருவராக இறந்தனர். கடைசியில் நீங்கள் பார்த்த இவர் மட்டும் தான் மிச்சமிருக்கிறார். அவரும் இந்நிலையில் இருக்கிறார் என்று கூறினார். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இது  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.      

  இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் கூறினார் இதுபோன்று எனக்கும் ஒரு சம்பவம் தெரியும். குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அதே குடும்பத்தைச் சார்ந்த, அண்டை வீட்டாரான மற்றொருவருக்கு  நிறைய அநீதம் செய்தனர். அவரும் முடிந்த வரை பொறுமை கொண்டார். இறுதியில் பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக ஒரு பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பள்ளத்திற்குள் சிலரும் பள்ளத்திற்கு மேலே சிலரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பள்ளம் இருந்த பகுதி அப்படியே குலுங்க ஆரம்பித்தது. இதில் பள்ளத்திற்கு மேல்  இருந்தவர்களுடன் பள்ளத்திற்குள் இருந்தவர்களும் சேர்ந்து அனைவரும் புதையுண்டு போயினர். அதுவே அவர்களின் கப்ராக மாறி விட்டது. என்று கூறியவுடன் அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இதுவும்  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                           

                                                                                               

 இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஹுதைல் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு வாரிசுரிமை என்ற அடிப்படையில் நிறைய சொத்துக்கள் கிடைத்த து. அந்தக் குடும்பத்த்துக்கு அவர் மட்டும் தான் வாரிசு என்பதால் கால்நடைகள் உட்பட நிறைய சொத்துக்களை அவர் பெற்றார்.  அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய கோத்திரத்தின் ஒரு பிரிவான பனூ முஅம்மல் குடும்பம் வசிக்கும் இடத்தில் தன்னுடைய வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டார். அவர்கள் தனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு குடி பெயர்ந்தார். ஆனால் அவர்கள் அதற்கு நேர் மாற்றமாக இவர் மீது பொறாமை கொண்டனர். இவரது சொத்துக்களை அநியாயமாக இவரிடமிருந்து பிடுங்கினர்.  எனக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று எவ்வளவோ தூரம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லை. ஆனால் அவர்களிலும் ஒரு நல்லவர் இருந்தார். அவர் பெயர் ரபாஹ். அவர் அந்தக் குடும்பத்தாரிடம் நம்மை நம்பி வந்தவருக்கும் துரோகம் செய்யாதீர்கள் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறி பரிந்து பேசினார். ஆனால் அதையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட அந்த நபர் பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். ஒருநேரத்தில்  அனைவரும் மலையடிவாரத்தில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்கியிருந்த போது மலை உச்சியில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து வழியில் உள்ள அனைத்தையும் நிர்மூலமாக்கியது. அந்தப் பாறை இவர்களின் மீது விழுந்து அவர்களை நசுக்கி சாகடித்தது. இதில் ரபாஹ் மட்டும் தப்பித்தார். அவருக்கு மட்டும் எதுவும் ஆகிவில்லை. என்று கூறியவுடன் உமர் ரழி அவர்கள்  சுப்ஹானல்லாஹ் இதுவும்  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                                

 இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர்  பனீ ழம்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு அருகில் வசித்தார். ரீஷா என்பது அவரின் பெயர். ரீஷா இவருக்கு மிகவும் அநீதம் செய்தார். இவரின் ஒட்டகங்களை அவ்வப்போது பிடித்து அறுத்து  உணவாக்கி விடுவார். இறுதியில் அந்த ரீஷாவின் உறவினர்களிடம் சென்று இவர் முறையிட்ட போது அவர்கள் கூறினார்கள். நாங்கள் தடுத்தாலும் அவன் கேட்க மாட்டான்.  எங்களுடைய  பங்காளிகளில் ஒருவன் என்பதால் அவன் விஷயத்தில்  நாங்கள் தலையிட மாட்டோம். நீ  வேண்டுமானால் அவனைக்  கொன்று விடு. என்று கூறினார்கள். ஆனால் இவர் குறிப்பிட்ட மாதம் வருவதை எதிர் பார்த்து அல்லாஹ்விடம் கையேந்தினார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அதன் விளைவாக அல்லாஹ் வைரஸ் கிருமியை ரீஷா என்பவன் மீது சாட்டினான். அது கொஞ்சம் கொஞ்சமாக அவனை அழித்து துஆ கேட்ட ஒரு வருடத்திற்குள் அவனை சாகடித்தது. என்றவுடன் இதையெல்லாம கேட்ட உமர் ரழி அவர்கள் அல்லாஹ் தஆலா முந்தைய காலங்களில் பிறருக்கு அநியாயம் செய்பவர்களை இப்படியெல்லாம் உடனுக்குடன் தண்டித்துள்ளான். ஆனால் இஸ்லாம் வந்த பின்பு, நபியின் துஆ காரணமாக அநியாயம் செய்பவர்களுக்கு அல்லாஹ் அவகாசம் வழங்கியுள்ளான் என்றுகூறி சில வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.             


வியாழன், 18 டிசம்பர், 2025

முதியவர்களை மதிப்பதும் சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவதும்

 19-12-2025

جمادي الثاني  -  27 بسم الله الرحمن الرحيم  

  முதியவர்களை கண்ணியப் படுத்துவதும் 

சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவதும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (1)

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரிடம் வயதில் மூத்தவர்களை மதிக்கும் பண்பு குறைந்து கொண்டே வருகிறது. பெற்றோரையே மதிக்காதவர்கள் குடும்பத்தில் உள்ள பெற்றோர் அல்லாத மற்ற பெரியவர்களையோ அல்லது வெளியிடங்களில் தாம் சந்திக்கும் பெரியவர்களையோ மதித்து நடப்பதில்லை. “யோவ் பெருசு” என்று ஆடு மாடுகளை அழைப்பது போல் அழைப்பது போன்று அழைக்கும் வழக்கம் சில இளைஞர்களிடம் உள்ளது. 

இஸ்லாம் கற்றுத் தரும் ஒழுக்கங்களில் வயதில் பெரியவர்களை மதிப்பதும் 

சிறியவர்கள் மீது அன்பு செலுத்துவதும் முக்கியமான அம்சங்களில் உள்ளதாகும்.

மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்பதைப் போன்று நாம்  இளம் வயதில் பெரியவர்களை மதித்தால் தான் நாம் முதுமையை அடையும்போது நம்மை மதிக்கின்ற இளம் தலை முறையினரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّه (ترمذي

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا (مسند أحمد

வயதில் மூத்தவர்களின் கண்ணியத்தை மதித்து நடந்ததால் 

இப்னு உமர் ரழி அவர்களின் கல்வித் தரத்தை அல்லாஹ் உயர்த்தினான்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا (بخاري)

  விளக்கம்- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுக்கு எந்த அளவுக்கு கல்வி ஞானம் இருந்ததோ அந்த அளவுக்கு பணிவும் இருந்தது. ஒரு சமயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களிடம் மரங்களில் ஒரு மரம் உண்டு. அந்த மரத்தின் இலைகள் உதிராது. அந்த மரத்தின் காய் கனிகள் அனைத்துமே பலன் தரக்கூடியது. அந்த மரத்தை ஒரு முஸ்லிமுக்கு ஒப்பிட்டுக் கூறலாம். அது எந்த மரம் என்று விடுகதை போன்று கேட்ட போது சபையில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு போன்ற பெரும் பெரும் சஹாபாக்கள் இருந்தும் பதில் தரவில்லை. அந்த இடத்தில் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள் அவர்களின் உள்ளத்தில் அது பேரிச்ச மரமாக இருக்கும் என்று எண்ணம் ஏற்பட்டது இருந்தாலும் மூத்த சஹாபாக்கள் யாரும் பதில் பேசாமல் இருக்கும்போது தான் மட்டும் பதில் சொல்வதை அவர்கள் விரும்பவில்லை. கடைசியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அதற்கான பதிலை கூறி அது பேரிச்ச மரம். ஏனென்றால் அதனுடைய இந்த பாகங்களும் வீணாகுவதில்லை. அதேபோல ஒரு உண்மையான முஸ்லிமின் எந்த காரியங்களும் வீணாகுவதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள். அந்த சபை முடிந்து வெளியே வந்தவுடன் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் தந்தையிடம் இந்த கேள்விக்கு அப்போதே எனக்கு பதில் தெரியும் என்று கூற அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மகனே நீ பதில் கூறியிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேனே என்றார்கள். அதற்கு இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வயதில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் முந்திக் கொள்வதை விரும்பவில்லை என்றார்கள். நூல் புகாரீ

மாற்று மதத்தவராக இருந்தாலும் வயதில் மூத்தவருக்கு ஏற்பட்ட 

கண்ணியக்குறைவு காரணமாக அல்லாஹ் இறைத்தூதரைக் கண்டித்தான்

    நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் விருந்தாளி இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் ஒரு நாள் விருந்தாளியை எதிர்பார்த்து காத்திருந்த பொழுது வயதான மாற்றுமத முதியவரைக் கண்டார்கள் விருந்துக்கு அவரை அழைத்தார்கள் அவர் வருகை தந்தார். அந்த மனிதர் மிகவும் பசியுடன் இருந்தார் அவரிடம் உணவைக் கொண்டு வந்து முன்னாள் வைத்தார்கள் அப்போது இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பிஸ்மில்லாஹ் சொல்லி அவருடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள் ஆனால் அவர் பிஸ்மில்லாஹ் சொல்லவில்லை அப்போது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பிஸ்மில்லாஹ் சொல்லும்படி கூற, அதற்கு அவர் நான் மஜூஸி எனவே நான் நீங்கள் ஏற்றுக் கொண்ட இறைவனின் பெயரைச்சொல்ல மாட்டேன் என்று கூறினார் இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் பிஸ்மில்லா விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருந்ததால் அவர் சாப்பிடாமல் சென்று விட்டார் உடனே அல்லாஹுத்தஆலா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் மூலம் அவர்களை கண்டித்தான் இப்ராஹீமே இந்த மனிதர் 70 வருடமாக என்னை நிராகரித்து வாழ்ந்து வருகிறார் நான் அவருக்கு உணவை கொடுத்து வருகிறேன் ஆனால் ஒருவேளை உணவுக்காக அவரை பட்டினியுடன் திருப்பி அனுப்பி விட்டீர்களே என்று கண்டித்தவுடன் உடனே இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவரை தேடிச் சென்று கண்டுபிடித்து உங்களை சாப்பிடாமல் அனுப்பியதற்காக அல்லாஹ் என்னை கண்டித்தான் என்று கூறி நீங்கள் மீண்டும் என் வீட்டுக்கு வர வேண்டும் நான் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன் உங்கள் விருப்பம் போல் சாப்பிடலாம் என்று கூற அவருடைய மனம் மாறியது. என்னை சாப்பிடாமல் அனுப்பியதற்காக இறைவனிடமிருந்து உங்கள் மீது கண்டனம் வரும் அளவுக்கு உங்கள் மார்க்கம் உயர்ந்ததா? என்று மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டார்

வயதில் மூத்தவர்கள் அறிவுரை சொன்னால் அதை செவிமடுக்க வேண்டும். உமர் ரழி அவர்களின் சம்பவம் 

وقد مر بها عمر بن الخطاب رضي الله عنه في خلافته والناس معه على حمار فاستوقفته طويلا ووعظته وقالت: يا عمر قد كنت تدعى عميرا، ثم قيل لك عمر، ثم قيل لك أمير المؤمنين، فاتق الله يا عمر، فإنه من أيقن بالموت خاف الفوت، ومن أيقن بالحساب خاف العذاب، وهو واقف يسمع كلامها، فقيل له: يا أمير المؤمنين أتقف لهذه العجوز هذا الوقوف ؟ فقال: والله لو حبستني من أول النهار إلى آخره لا زلت إلا للصلاة المكتوبة، أتدرون من هذه العجوز ؟ هي خولة بنت ثعلبة سمع الله قولها من فوق سبع سموات، أيسمع رب العالمين قولها ولا يسمعه عمر ؟ (قرطبي

சுருக்கம்- ஒருமுறை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது படையுடன் சென்று கொண்டிருந்தபோது ஒரு வயதான பெண் உமர் ரலியல்லாஹு தஆலா அவர்களை நிப்பாட்டி நீண்ட நேரம் உபதேசம் செய்தார்கள் அதுவரை அமைதியாக இருந்து நீண்ட நேரம் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இந்த வயதான பெண்ணுக்காக எவ்வளவு நேரம் நிற்கிறீர்கள் என்று கேட்டபோது அதற்கு உமர் ரலியல்லாஹு தஆலா அவர்கள் இந்தப் பெண் யார் தெரியுமா இவர் தான் கவ்லா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். இந்தப் பெண்ணின் விஷயமாகத்தான் பின்வரும் வசனம் இறங்கியது

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (1)

ஏழு வானங்களையும் தாண்டி அல்லாஹ்வே இந்த வயதான பெண்ணின் பேச்சை கேட்டு வசனத்தை அல்லாஹ் இறக்கினான் அல்லாஹ்வே இந்த பெண்ணின் பேச்சைக் கேட்கும் போது நான்  கேட்க கூடாதா பகல் முழுவதும் இந்த வயதான பெண் என்னை  நிற்க வைத்து உபதேசம் செய்து கொண்டிருந்தாலும் நான் அதைக் கேட்டுக் கொண்டிருப்பேன் என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.              

 கவ்லா பின்த் ஸஃலபா, ரழி அவர்களை அவரது கணவர் அவ்ஸ் பின் சாமித் ரழி அவர்கள் 'ழihar' (தன் மனைவியை தாயைப் போல் கூறி, அவளை விவாகரத்து செய்வது) செய்தபோது, அந்தப் பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து தனக்கு வயதாகி விட்டதாகவும், பிள்ளைகளும் இருப்பதாகவும் இப்போது கணவர் தன்னை விவாகரத்து செய்வதாகவும் கவலையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அவருடைய முறையீட்டைக் கேட்ட நபி ஸல் அவர்கள் இதுவரை உள்ள சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து ஏற்பட்டு விட்டது என்று கூறி, இனி அல்லாஹ் இதுபற்றி வசனத்தை இறக்கினால் தான் உண்டு என பதில் அளித்தார்கள். அந்தப் பெண் நேரடியாக அல்லாஹ்விடம் முறையிட்டார். அல்லாஹ், மேற்படி வசனத்தை இறக்கி, ழிஹார் செய்வதால் விவாகரத்து நடைபெறாது என்றாலும் இப்படி ஒரு வார்த்தை கூறியதற்காக கணவர் கஃப்பாரா கொடுத்து விட்டு சேர்ந்து வாழலாம் என வசனத்தை இறக்கினான். "அல்லாஹ் நிச்சயமாக தம் கணவரைப் பற்றி உம்மிடம் வாதிட்டு, அல்லாஹ்விடமே முறையிட்ட அந்தப் பெண்ணின் பேச்சை அல்லாஹ் செவியுற்றான்.....               

வயதில் மூத்தவர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட இளைஞர்களைக் கண்டித்த உமர் ரழி அவர்கள்

  அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி அவர்களும் கலீஃபா உமர் ரழி அவர்களும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது இரண்டு இளைஞர்கள் வருகை தந்தார்கள். அவர்களில் ஒருவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இஹ்ராம் சம்பந்தமாக ஒரு சட்டத்தைக் கேட்டார்.அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் கூறினாலும் அருகில் அப்துர் ரஹ்மான் இவனும் அவ்ஃப் ரலியல்லாஹு அவர்கள் இருந்ததால் அவர்களிடம் நான் சொன்னது சரிதானே என்று கேட்டார்கள் அப்போது கேள்வி கேட்ட இளைஞருடன் வந்திருந்த இளைஞர் உமர் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது போன்ற இதை காதில் கேட்டு விட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சாட்டையால் அவரை அடிக்க துணிந்தார்கள் அப்போது கேள்வி கேட்ட வாலிபர் வருத்தம் தெரிவித்து அவரை மன்னித்து விடுங்கள் அவர் ஏதோ தெரியாமல் பேசிவிட்டார் என்று கூற, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை விட்டு விட்டார்கள் இருப்பினும் அந்த இருவருக்கும் உபதேசம் செய்தார்கள் (பெரியவர்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்வது கெட்ட குணம் என்பதை மனதில் பதிய வைப்பதற்காக) அந்த இருவருக்கும் உபதேசம் செய்தார்கள்.                           

وقال عمر بن الخطاب إذا كان في الانسان عشر خصال تسعة منها صالحة وواحدة هي سوء الخلق أفسدت هذه الخصلة تلك التسعة (غرر الخصائص الواضحة

ஒரு மனிதரிடம் 10 குணங்கள் இருந்து அதில் ஒன்பது நற்குணங்கள் நல்லதாக இருந்து ஒரு குணம் மட்டும் தீயதாக இருக்கும் என்றால் அந்த ஒரு கெட்ட குணம் மற்ற ஒன்பது நல்ல குணங்களையும் கெடுத்து விடும் என்று உபதேசம் செய்தார்கள் 

வயதில் மூத்தவர்களுக்கு கண்ணியம் தருவது போன்று கல்விக்கும் நாம் கண்ணியம் கொடுக்க வேண்டும்

وكان ابن عباس - رضي الله عنه - يأتي باب الأنصاري لطلب الحديث ، فيقعد على الباب حتى يخرج ولا يستأذن ، فيخرج ذلك الرجل ويقول : يا ابن عم رسول الله ، لو أخبرتني ؟ فيقول : هكذا أمرنا أن نطلب العلم . 

கல்வி ஒருபோதும் நம்மை தேடி வரக்கூடாது. கல்வியைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும் என்ற சொல்லின் அடிப்படையில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்கு சில ஹதீஸ்களின் விளக்கம் அறியச் சென்றார்கள். அப்போது அந்த சஹாபியின் கதவு தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டுவது ஒழுக்கம் அல்ல என எண்ணிய அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கதவைத் தட்டாமல் வெளியில் காத்திருந்தார்கள். நீண்ட நேரம் கழித்து கதவைத் திறந்த உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்தவுடன் மிகவும் வருந்தியவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்த உங்களை இவ்வளவு நேரம் நான் காக்க வைத்து விட்டேனே என்று வருந்தினார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்விக்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்றார்கள். கல்விக்கும் கல்வி உடையவர்களுக்கும் நம் முன்னோர்கள் தந்த மரியாதையை நாம் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 எத்தனையோ விஷயங்களில் வயதில் மூத்தவர்களை முற்படுத்தும்படி மார்க்கம் வலியுறுத்துள்ளது

عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ أَتَى رَجُلَانِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا (بخاري

وأولى الناس بالإمامة أعلمهم بالسنة فإن تساووا فأقرؤهم فإن تساووا فأورعهم فإن تساووا فأسنهم (باب الإمامة

விளக்கம்- இமாமத் செய்வதாக இருந்தால் உங்களில் எவர் தொழுகையின் சட்ட திட்டங்களை தெரிந்து வைத்துள்ளாரோ அவர் தொழ வைக்கட்டும். அதில் அனைவரும் சமமாக இருந்தால் உங்களில் எவர் நன்கு கிராஅத் ஓதுவாரோ அவர் தொழ வைக்கட்டும் அதில் அனைவரும் சமமாக இருந்தால் உங்களில் எவர் பேணுதலாக இருப்பாரோ அவர்  தொழ வைக்கட்டும். அதில் அனைவரும் சமமாக இருந்தால் உங்களில் வயதானவர் தொழ வைக்கட்டும்.                                       

عن بن عباس أن النبي صلى الله عليه وسلم قال "البركة مع أكابركم" (صحيح ابن حبان.

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا » :طبراني المعجم الكبير    ( مَهْلًا ): أَيْ أَمْهِلْ مَهْلًا 

ஹசன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதில் ஒரு முதியவர்  உளூச் செய்து கொண்டிருப்பதை கண்டார்கள் அவர் தவறாக உளூச் செய்வதை கண்டு அவரிடம் பணிவுடன் அவருக்கு அறிவுரை சொல்வது போன்று ஆகி விடக் கூடாது என்பதற்காக பெரியவரே நான் உளூச் செய்கிறேன் அது சரியா என்று பார்த்து என்னைத் திருத்துங்கள் என்று கூறி உளூச் செய்து காட்ட அந்தப் பெரியவர் தன் தவறை உணர்ந்து நீ சரியாகத் தான் செய்கிறாய் நான் தான் தவறு செய்து விட்டேன் என்றார்          

   

இறையச்சமுள்ள வாலிபர்களும் மேயும் கால்நடைகளும், (முடியாத நிலையிலும் நாற்காலியை நாடாமல்)  ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிக் குழந்தைகளும் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்

عَنْ أَبِي قِلَابَةَ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَقِيقًا فَظَنَّ أَنَّا قَدْ اشْتَقْنَا أَهْلَنَا فَسَأَلَنَا عَنْ مَنْ تَرَكْنَا مِنْ أَهْلِنَا فَأَخْبَرْنَاهُ فَقَالَ ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ فَإِذَا حَضَرَتْ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ ثُمَّ لِيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ (مسلم

மாலிக் இப்னுல் ஹுவைரிஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் சம வயதுடைய இளைஞர்களாக இருந்த நிலையில் நபி ஸல் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். (நாங்கள் எங்கள் குடும்பத்தாரைப் பிரிந்து இருபது நாட்கள் ஆகி விட்டதால்) நபி ஸல் அவர்கள் எங்கள் மீது இரக்கப்பட்டார்கள். எங்களின் குடும்பத்தாரை விட்டும் பிரிந்து வந்த கவலையில் மீண்டும் குடும்பத்தாரை சந்திக்க எங்களிடம் ஆர்வம் அதிகம் இருக்கும் என எண்ணியவர்களாக உங்களில் யார் தன் குடும்பத்தாரை விட்டு விட்டு வந்துள்ளீர்களோ அவர்கள் உடனே வீட்டுக்குச் செல்லுங்கள். அவர்களுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுங்கள். நன்மையை ஏவுங்கள். தொழுகைநேரம் வந்தால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்ல உங்களில் மூத்தவர் தொழ வைக்கட்டும் என கூறினார்கள்

மூத்தவர்களை நாம் கண்ணியக் குறைவாக நடத்தினால்......

عن الحسن بن أبي جعفر قال:مرَّ الأمير يوما فصاحوا: "الطريق"ففرج الناس وبقيت عجوز كبيرة لا تقدر أن تمشي فجاء بعض الجلاوذة فضربها بسوط ضربة فقال حبيب أبو محمد ( اللهم اقطع يده ) فما لبث إلا ثلاثا حتى مرَّ بالرجل قد أُخذ في سرقة فقُطِعت يدُه (مجابو الدعوة....) 

மன்னர் ஒருவர் ஊர்வலம் வரும்போது  பாதையை விட்டும் ஒதுங்கச் சொல்லி  காவலர்கள் கத்திக் கொண்டிருக்க, மக்கள் வழி  விட்டு ஒதுங்கினர். ஆனால் ஒரு மூதாட்டி மட்டும்  உடனே சட்டென்று ஒதுங்க முடியவில்லை. அவ்வாறு ஒதுங்க முடியாத மூதாட்டியை காவலன் அடிக்க,  அதைப் பார்த்த ஒரு இறைநேசர் அதைப் பொறுக்க முடியாமல்  யாஅல்லாஹ் அவன் கையை துண்டாக்கி விடு  என துஆ செய்தார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் மூதாட்டியை அடித்த  காவலன் மூன்றே நாட்களில்  ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கை வெட்டப்பட்டான்.                                           

சிறுவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا فَقَالَ الْأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنْ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ(بخاري)عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ (بخاري)

நபி ஸல் அவர்கள் தமது பேரக் குழந்தைகளை முத்தமிட்ட போது அந்த இடத்தில் அக்ரஃ இப்னு ஹாபிஸ் என்ற நபித் தோழர் இருந்தார்கள்.  அந்த நபித் தோழர் நபி ஸல் அவர்களிடம் எனக்கு பத்து  குழந்தைகள் இருக்கிறார்கள் நான் இதுவரை ஒருவரைக் கூட முத்தமிட்டதில்லை என்று கூற, அவரைப் பார்த்து நபி ஸல் அவர்கள் யார் (பிள்ளைகள் மீது) இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் இதுபோன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது. அப்போது நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி உமது உள்ளத்திலிருந்து அல்லாஹ் இரக்க குணத்தை எடுத்து விட்டதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று கூறினார்கள். 

عن أَبي قَتَادَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ فَصَلَّى فَإِذَا رَكَعَ وَضَعَ وَإِذَا رَفَعَ رَفَعَهَا(بخاري)

நபி ஸல் அவர்கள் எங்களிடம் வருகை தந்த போது உமாமா என்ற சிறு பெண் குழந்தை அவர்களின் தோள் புஜத்தின் மீது இருந்தது. அவ்வாறே நபி ஸல் அவர்கள் தொழுதார்கள். ருகூஉ செய்யும்போது மட்டும் கீழே இறக்கி விடுவார்கள். மேலே எழும்போது மறுபடியும் தன் தோள் மீது தூக்கி வைத்துக் கொள்வார்கள்.                    

عَنْ بُرَيْدَةَ رضقَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ إِذْ أَقْبَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ 1 فَنَزَلَ وَحَمَلَهُمَا فَقَالَ صَدَقَ اللَّهُ إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ رَأَيْتُ هَذَيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فِي قَمِيصَيْهِمَا فَلَمْ أَصْبِرْ حَتَّى نَزَلْتُ فَحَمَلْتُهُمَا (نسائ

நபி ஸல் அவர்கள் மிம்பரின் மீது இருந்த படி குத்பா ஓதிக் கொண்டிருக்கும்போது  அவர்களின் பேரப் பிள்ளைகளான ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி இருவரும் வருகை தந்தார்கள் அவ்விருவர் மீதும் சிவப்பு சட்டைகள் இருந்தன. அவ்விருவரும் நடந்து வருவதைக் கண்ட நபி ஸல் அவர்கள் மிம்பரை விட்டும் கீழே இறங்கி அவ்விருவரையும் தோளில் சுமந்த படி நிச்சயமாக உங்களின் சொத்துக்களும் பிள்ளைகளும் சோதனைகள் தான் என்று அல்லாஹ் கூறியது உண்மையாகி விட்டது.  இவ்விருவரும் நடந்து வரும்  அழகைக் கண்டு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அதனால்   கீழே இறங்கி அவர்களை தோளில் சுமந்தேன் என்றார்கள்.                                                               

 நபி ஸல் அவர்களின் மடி மீது அமர்ந்து மோதிரத்தோடு விளையாடிய குழந்தையை அவரின் தந்தை கண்டித்த போது நபி ஸல் அவர்கள்  அந்தக் குழந்தையிடம் நீ  நன்கு விளையாடு. நீ அதனுடன் விளையாடி விளையாடி பழசாக  ஆக்கினாலும் சரி என்று அன்புடன் திரும்ப திரும்பக் கூறினார்கள் 

عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي وَعَلَيَّ قَمِيصٌ أَصْفَرُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَنَهْ سَنَهْ قَالَ عَبْدُ اللَّهِ وَهِيَ بِالْحَبَشِيَّةِ حَسَنَةٌ قَالَتْ فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ فَزَبَرَنِي أَبِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْلِي وَأَخْلِقِي ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي ثُمَّ أَبْلِي وَأَخْلِقي (بخاري

குழந்தைகளின் மீது அன்பு காட்டுவதோடு தேவைப்பட்டால் கண்டித்து நல்லொழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும்

عن وَهْب بْن كَيْسَان أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُما يَقُولُ كُنْتُ غُلَامًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا غُلَامُ سَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ (بخاري)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا (6التحريم) 

عن علي رَضِيَ اللَّهُ عَنْهُ  عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال  أدِّبُوا أوْلادَكُمْ على ثلاثِ خِصالٍ حُبِّ نَبِيِّكُمْ وَحُبِّ أهْلَ بَيْتِهِ وقِراءَةِ القُرآنِ فإِنَّ حَمَلَةَ القُرآنِ في ظِلِّ الله يَوْمَ القِيامَةِ يَوْمَ لا ظِلَّ إلاَّ ظِلُّهُ مَعَ أنْبِيائِهِ وأصْفِيائِهِ (كنز العمال

عن ابن عباس رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال افتحوا على صبيانكم أول كلمة لا إله إلا الله ولقنوهم عند الموت لا إله إلا الله فانه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاش ألف سنة ما سئل عن ذنب واحد (كنز العمال)

عن أبي رافع رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال حق الولد على والده أن يعلمه الكتابة والسباحة5 والرماية6وأن لا يرزقه إلا طيبا(كنز العمال

சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல்,

قال عبد الله بن مبارك رحمه الله  كاد الأدب أن يكون ثُلُثي الدِّين 

“ஒழுக்கம் தீனுல் இஸ்லாமின் மூன்றில் இரண்டு பங்காக விளங்கும் அளவிற்கு ஆகிவிட்டது

சில பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை அவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக எண்ணுகிறார்கள். அதனால் கண்டிக்காமல் வளர்க்கிறார்கள். வளர்கின்ற மரம், செடி கொடிகளை அப்படியே பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவை காடாகவும், முட் புதராகவும் மாறும் அல்லது நீரின்றி வாடி கருகிவிடும். அவற்றை ஒழுங்கு படுத்தினால் அவை தோப்பாகவும், தோட்டமாகவும், எழில்கொஞ்சும் சோலையாகவும் மாறும். எந்த ஒரு பொருளும் (இரும்பு உட்பட) கெட்டுப் போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. அதனை அப்படியே விட்டுவிட்டால் போதும். அது தானாக கெட்டுவிடும். எனவே, ஒரு பொருளை உருவாக்கி பாதுகாப்பதற்குத் தான் முயற்சிகள் தேவை. அது அழிந்து போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. பட்டத்தை வானில் பறக்கவிட்டு பார்த்திருப்போம். பட்டம் பறப்பதற்கு நூல் தான் ஆதாரம். நூல் இல்லையேல், பட்டம் வானில் உயர பறப்பதற்கு முடியாது. ஆனால், நூல் உங்கள் கைப்பிடியில் இருக்கிறது. பட்டம் தான் விரும்பியவாறு சுதந்திரமாக விண்ணில் பறப்பதற்கு தனக்கு நூல் ஒரு தடையாக இருக்கின்றது  என்று எண்ணி, கட்டுப்பாட்டை விரும்பாமல்  நூலை அறுத்துக் கொண்டால் என்ன நேரும்? விண்ணில் உயர பறந்த பட்டம், நூல் அறுந்தால்  மண்ணில், முட்புதரில் வீழ்ந்து தாறுமாறாக கிழிந்து அழியும். அதுபோல் தான், நம் பிள்ளைகளான மாணவ, மாணவிகள் ஒழுக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமெல்லாம் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள்.   





வியாழன், 11 டிசம்பர், 2025

பெற்றோரின் சிறப்பு

 12-12-2025

جمادي الثاني  -  20 بسم الله الرحمن الرحيم  

  பெற்றோரின் சிறப்பு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ.....

عن أبي بكرة رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : كل الذنوب يؤخر الله ما شاء منها إلى يوم القيامة إلا عقوق الوالدين فإن الله تعالى يعجله لصاحبه في الحياة قبل الممات (حاكم)

எந்த ஒரு பாவமாக இருந்தாலும் அல்லாஹ் அவன் நாடியவருக்கு  பாவத்திற்குரிய தண்டனையை கியாமத்நாள் வரை பிற்படுத்துவான் ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்ததின் தண்டனையை இவ்வுலகிலும் கொடுப்பான் நூல்: ஹாகிம்

عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا قَالَ هُمَا جَنَّتُكَ وَنَارُكَ (ابن ماجة)ஒரே வரியில் பதில்

பெற்றோரை அனுசரிப்பதால் ஆயுள் நீளும், ரிஜ்க் பெருகும், பாவம் போக்கப்படும்

عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَرَّهُ أَنْ يُمَدَّ لَهُ فِي عُمْرِهِ وَيُزَادَ فِي رِزْقِهِ فَلْيَبَرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ (أحمد

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ ذَنْبًا عَظِيمًا فَهَلْ لِي تَوْبَةٌ قَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ لَا قَالَ هَلْ لَكَ مِنْ خَالَةٍ قَالَ نَعَمْ قَالَ فَبِرَّهَا (ترمذي)

நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனக்கு தவ்பா உண்டா என ஒருவர் வந்து கேட்க, உனக்கு தாய் இருக்கிறாரா என்று நபி ஸல் கேட்டார்கள். இல்லை என்று அவர் கூற, உனக்கு சிறிய தாயார் இருக்கிறாரா என்று நபி ஸல் கேட்டார்கள். ஆம் என்று அவர் கூற, அப்போது நபி ஸல் அவர்கள் உன் சின்னம்மாவுக்கு நீ உபகாரம் செய் (அதுவே உன் தவ்பா) என்று கூறினார்கள்

நீ உன் பெற்றோரை மதித்தால் உன் பிள்ள உன்னை மதிக்கும்

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : بَرُّوا آباءَكُمْ تَبَرُّكُمْ أَبْنَاؤُكُمْ ، وَعِفُّوا تَعِفُّ نِسَاؤُكُمْ (طبراني)

குகையில் மூன்று நபர்கள் மாட்டிக் கொண்டு துஆ செய்த சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். அதில் ஒருவர் தினமும் இரவில் பால் கறந்து கொண்டு வரும்போது தன் மனைவி பிள்ளைகளை விட பெற்றோரை முற்படுத்திய சம்பவம்

பெற்றோரை மதிக்காத பிள்ளைகள் பெருகும்போது அல்லாஹ் பூமியில் பல அசம்பாவிதங்களை ஏற்படுத்துவான்

عن  أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذَا اتُّخِذَ الْفَيْءُ دُوَلًا ، وَالأمَانَةُ مَغْنَمًا ، وَالزَّكَاةُ مَغْرَمًا ، وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ ، وَعَقَّ أُمَّهُ ، وَأَدْنَى صَدِيقَهُ ، وَأَقْصَى أَبَاهُ ، وَظَهَرَتْ الأصْوَاتُ فِي الْمَسَاجِدِ ، وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ ، وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ ، وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ ، وَظَهَرَتْ الْقِيَانُ وَالْمَعَازِفُ ، وَشُرِبَتْ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأمَّةِ أَوَّلَهَا ، فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ بَعْضُهُ بَعْضًا » . رَوَاهُ التِّرْمِذِيُّ

சுருக்கம்-  1.பொதுச்சொத்துக்களில் முறைகேடு செய்வது 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 

4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5. மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது  8.மஸ்ஜித்களில் வீண் சப்தம்  9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது  11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை   13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது  14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது.           

மேற்காணும் பாவங்கள் பூமியில் பெருகினால் அந்த நேரத்தில் கீழ்காணும் ஆபத்துகள் வருவதை எதிர் பாருங்கள். சிவப்பு நிற அனல் காற்று வீசுதல். பூகம்பம், பூமி பிளக்குதல், எரி கற்கள் எரியப்படுதல், உருமாற்றப்படுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படும் எந்த அளவுக்கென்றால் பாசிமாலை அறுந்தால் அதிலுள்ள பாசி மணிகள் எவ்வாறு  தொடர்ச்சியாக கீழே விழுமோ அவ்வாறு தொடர்ச்சியான ஆபத்துகளை இந்த உலகம் சந்திக்கும்.  நூல்- திர்மிதீ                                           

إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا17 : 23)

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا 17 : 24)

நபி ஸல் அவர்களைப் பார்க்கா விட்டாலும் அந்தஸ்தில் உயர்ந்த நிலையை உவைஸுல் கர்னீ ரஹ் அவர்கள் அடைந்த தற்குக் காரணம்

عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِذَا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمَنِ سَأَلَهُمْ أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ حَتَّى أَتَى عَلَى أُوَيْسٍ فَقَالَ أَنْتَ أُوَيْسُ بْنُ عَامِرٍ قَالَ نَعَمْ قَالَ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ قَالَ نَعَمْ قَالَ فَكَانَ بِكَ بَرَصٌ فَبَرَأْتَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ قَالَ نَعَمْ قَالَ لَكَ وَالِدَةٌ قَالَ نَعَمْ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ فَإِنْ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ فَاسْتَغْفِرْ لِي فَاسْتَغْفَرَ لَهُ فَقَالَ لَهُ عُمَرُ أَيْنَ تُرِيدُ قَالَ الْكُوفَةَ قَالَ أَلَا أَكْتُبُ لَكَ إِلَى عَامِلِهَا قَالَ أَكُونُ فِي غَبْرَاءِ النَّاسِ أَحَبُّ إِلَيَّ قَالَ فَلَمَّا كَانَ مِنْ الْعَامِ الْمُقْبِلِ حَجَّ رَجُلٌ مِنْ أَشْرَافِهِمْ فَوَافَقَ عُمَرَ فَسَأَلَهُ عَنْ أُوَيْسٍ قَالَ تَرَكْتُهُ رَثَّ الْبَيْتِ قَلِيلَ الْمَتَاعِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ فَإِنْ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ فَأَتَى أُوَيْسًا فَقَالَ اسْتَغْفِرْ لِي قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِي قَالَ اسْتَغْفِرْ لِي قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِي قَالَ لَقِيتَ عُمَرَ قَالَ نَعَمْ فَاسْتَغْفَرَ لَهُ فَفَطِنَ لَهُ النَّاسُ (مسلم)

  4971. உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் ”உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?” என்று கேட்பார்கள். இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, ”நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கும் உவைஸ் அவர்கள் ”ஆம்” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ”உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் ”ஆம்” என்று பதிலளித்தார்கள்.உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”யமன்வாசி களின் உதவிப் படையினருடன் ”முராத்” (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும்.


 அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்.  அவருக்கு ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், ”நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், ”கூஃபாவிற்கு” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ”கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், ”சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறிவிட்டார்கள். அடுத்த ஆண்டில் ”கரன்” குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், ”மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்” என்று கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் ”முராத்” (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் ”கரன்” (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற்பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்” என்றார்கள். ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, ”எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், ”நீர்தான் இப்போது புனிதப்பயணத்தை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்” என்றார்கள். ”நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?” என்று கேட்டார்கள். அவர் ”ஆம்” என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித் தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர். -ஸஹீஹ் முஸ்லிம்

உவைசுல் கர்னி ( ரஹ்) அவர்கள் தன்னுடைய தாயை கவனித்துக் கொண்டிருந்ததால் நபியுடைய காலத்திலேயே ஈமான் கொண்டிருந்தாலும் நேரடியாக நபியை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை எனவே தாயிற்கு பணிவிடை செய்த இவரின் உயர்வை காட்டுவதற்காகவே இவரின் துஆவை பெற்றுக் கொள்ளும்படி உமர் ( ரலி) அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள்


   இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான் அல்லவா, பெற்றோருக்கு முன்னால் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்,அதட்டி பேசாதீர்கள்,கண்ணியமாக பேசுங்கள்,பணிவோடு நடந்து கொள்ளுங்கள் என்று. அதற்கு என்ன பொருள் தெரியுமா? “உங்கள் பெற்றோருக்கு முன்னால் உங்கள் ஆடைகளை உதறாதீர்கள். அப்படி உதறும் போது ஏற்படுகிற காற்றினாலோ அல்லது அந்த ஆடையில் பட்டு இருக்கக்கூடிய தூசியினால் அவர்கள் சிரமப்பட்டால் அதுவும் அவர்களுக்கு நீங்கள் செய்கிற நோவினை,குறைபாடு என்று இப்னு அப்பாஸ் அவர்கள் விளக்கம் சொல்கின்றார்கள். பார்க்க - (சாதுல் மஸீர் 1/92(அல்குர்ஆன் 2:83)

  மேலும் சொல்கின்றார்கள், அவர்களை அதட்டாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் அல்லவா, அவர்களுக்கு முன்னால் கத்திப் பேசாதீர்கள்,சத்தத்தை உயர்த்திப் பேசாதீர்கள்.

சயீத் இப்னு முஸய்யிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பல நூறு சஹாபாக்களிடத்தில் கல்வி படித்த மிகப்பெரிய தாபியீ. அவர்கள் சொல்கிறார்கள்; அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது, பெற்றோருக்கு முன்னால் முற்றிலும் பணிந்து விடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே இதற்கு விளக்கம் என்ன? என்று. விளக்கம் சொல்கிறார்கள்,“ஒரு அடிமை தவறு செய்து விட்டான்,தன் எஜமானனுக்கு குற்றம் இழைத்து விட்டான், அந்த எஜமானன் மிகக் கோபக்காரன்,மிகக் கண்டிப்புடையவன், அந்த எஜமானனுக்கு முன்னால் குற்றம் செய்த அடிமை எப்படி பயந்து பணிவோடு இருப்பானோ அப்படி பணிவோடு நீங்கள் நிற்பதைத்தான் அல்லாஹ் இங்கு சொல்கின்றான், பெற்றோர்களுக்கு முன்னால் பணிந்து விடுங்கள் என்று.”

முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்.

أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ

அல்லாஹ்வின் தூதர் எனக்கு வஸிய்யத் -அறிவுரை கூறினார்கள்; உன் பெற்றோருக்கு நீ மாறு செய்யாதே! அவர்கள் உன் குடும்பத்தை விட்டும் உன் சொத்தை விட்டும் உன்னை வெளியே செல் என்று சொன்னாலும் சரியே”. (நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21060.

அப்துல்லாஹ் பின் அம்ர் அறிவிக்கின்றார்கள். ”ஒருவர் ரஸூலுல்லாஹ் அவர்களிடத்தில் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் ஜிஹாதுக்கு வந்திருக்கிறேன் என்று. கூற, ரஸூல்  ஸல் கேட்டார்கள்,

 أَحَيٌّ وَالِدَاكَ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ

 உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா? என்று. ஆம் அல்லாஹ்வின் தூதரே. ரஸூல் ஸல் அவர்கள் சொன்னார்கள், அந்த இருவரிடத்தில் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து ஜிஹாதுடைய  நன்மையை தேடுவீராக. நூல் : புகாரி, எண் : 2782.

விளக்கம்- அந்தப் பெற்றோர் மிகவும் மிகவும் முடியாதவர்களாக இருந்திருக்கலாம். அதனால் அவ்வாறு நபி  ஸல் கூறியிருக்கலாம்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு மனிதர் வந்து கூறினார்.

أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ أَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ فَهَلْ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَيٌّ قَالَ نَعَمْ بَلْ كِلَاهُمَا قَالَ فَتَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ نَعَمْ قَالَ فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا

அல்லாஹ்வின் தூதரே! நான் ஹிஜ்ராவிற்காக உங்களிடத்தில் பைஅத் செய்கிறேன். இனி என் தாய் நாட்டிற்கு நான் திரும்பமாட்டேன். அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரா செய்து வந்துவிட்டேன். ஆனால், அந்த சஹாபி கூறுகிறார்,என் தந்தை என் தாயை அழும் நிலையில் நான் விட்டுவிட்டு வந்துவிட்டேன். ஒரே மகனார் அவர்கள், இந்த மகனின் பக்கம் தேவையுடையவராக இருக்கிறார்கள். எங்களை விட்டு விட்டுச் சென்றுவிட்டால் எங்க நிலைமை என்னவாகும் என்று அழைக்கிறார்கள். அவர்கள் அழுத நிலையில் நான் விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள். “நீ மதினாவில் தங்காதே, உன் பெற்றோர் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று விடு”. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர்இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 4624

இமாம் அபூதாவூத் பதிவுசெய்கிறார்கள். நீ அவர்களிடத்தில் சென்று அவர்களுக்கு சிரிப்பை கொடு,அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடு. எப்படி நீ அழ வைத்தாயோ, அவர்களை சிரிக்க வை என்று சொன்னார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். ஒருவர் ரஸூலுல்லாஹ் அவர்களிடத்தில் வருகிறார். ஜிஹாதிற்கு செல்ல வேண்டும் என்று அனுமதி தேடியவராக. ரஸூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். உன் பெற்றோரில் ஒருவராவது உயிரோடு இருக்கிறார்களா?அவர் சொன்னார்; என் தாய் உயிரோடு இருக்கிறார். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,நீ செல், உன் தாய்க்கு நன்மை செய் என்று. அவர் உடனடியாக தன் பயணத்திற்கு புரப்படுகிறார்.

ரஸூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :“அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோருடைய பொருத்ததில் இருக்கின்றது.”

  அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எமன் நாட்டிலிருந்து வருகிறார்.

هَاجَرَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْيَمَنِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَجَرْتَ الشِّرْكَ وَلَكِنَّهُ الْجِهَادُ هَلْ بِالْيَمَنِ أَبَوَاكَ قَالَ نَعَمْ قَالَ أَذِنَا لَكَ قَالَ لَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْجِعْ إِلَى أَبَوَيْكَ فَاسْتَأْذِنْهُمَا فَإِنْ فَعَلَا وَإِلَّا فَبِرَّهُمَا

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சொல்கிறார்; ”அல்லாஹ்வின் தூதரே! என் முழு வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்து வந்து விட்டேன். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ஷிர்க்கை விட்டு விட்டாயா?விட்டு விட்டேன். ஜிஹாத் பாக்கியிருக்கிறது, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது, உன்னிடம் கேட்கிறேன், இதை விட முக்கியமான ஒன்று இருக்கிறது. எமன் நாட்டில் உன் பெற்றோர் இருவரும் உயிரோடு இருக்கிறார்களா? அவர் கூறினார், உயிரோடு இருக்கிறார்கள் என்று.

(கவனிக்க வேண்டும்! எமன் நாடு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கடைசி காலத்தில் முஸ்லிம்களுடைய கைக்கு வந்துவிட்டது. அங்குள்ளவர்கள் எல்லாம் முஸ்லிம்களாக ஆகிவிட்டார்கள். அது முஸ்லிம்களின் நாடாக மாறிவிட்டது. இனி அங்கிருந்து ஹிஜ்ரா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதனடிப்படையில் தான், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கேட்கிறார்கள்; அங்கே உன்னுடைய பெற்றோர்கள்  உயிராக இருக்கிறார்களா?என்று). அவர் கூறினார்; அல்லாஹ்வின் தூதரே! இருவரும் உயிரோடு இருக்கிறார்கள். நீ ஜிஹாதிற்கு வந்திருக்கிறாயே, உன் பெற்றோர் இடத்தில் அனுமதி கேட்டு விட்டு வந்திருக்கிறாயா! என்று கேட்டார்கள். அப்போது அந்த நபித்தோழர் கூறுகிறார், அல்லாஹ்வின் தூதரே! நான் அனுமதி கேட்கவில்லை, ஜிஹாதின் மேல் உள்ள பிரியத்தால் நான் அனுமதி இல்லாமல் ஓடி வந்துவிட்டேன் என்று. அப்போது ரஸூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,உன் பெற்றோரிடத்தில் செல்வாயாக, அவர்களிடத்தில் அனுமதி கேட்பாயாக. அவர்கள் அனுமதி கொடுத்தால் நீ என்னிடம் வருவாயாக. அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால்,அவர்களிடத்தில் இருந்து அவர்களுக்கு நன்மை செய்வீராக.

அறிவிப்பாளர் : அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மது,எண் : 11296.

தாயின் மதிப்பை புரிய வைக்கும் ஒரு நீதிக்கதை 

ஒரு தாயும்  மகனும் இருந்தார்கள் அந்தத் தாயார் மிகவும் கண்டிப்பானவர் எப்போதும் மகனை கண்டிப்பாக வைத்திருப்பார். அந்த மகன் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்தார் அம்மாவுடைய கண்டிப்புகளை அவர் பாரமாக நினைத்தார் ஒரு பேனை ஆஃப் பண்ணாமல் வந்து விட்டாலும் அதற்கும் அம்மா திட்டுவார்கள் தண்ணீர் குழாயில் லேசாக தண்ணீரை சரியாக மூடாமல் வந்து விட்டாலும் அதற்கும் அம்மா திட்டுவார்கள் வீட்டில் ஒரு பொருளை அதற்குரிய இடத்தில் வைக்காமல் மாற்றிவைத்து விட்டாலும் அதற்கும் அம்மா திட்டுவார்கள் இதனால் அந்த மகன் எப்போது தனக்கு வேலை கிடைக்கும் வேலை கிடைத்தவுடன் காலையில் போனால் இரவில் திரும்பலாம் அம்மாவின் நச்சரிப்பு குறையும் என்று கருதினார் அவர் நினைத்த மாதிரி ஒரு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்தது அந்த மகனுக்கு நிம்மதி பிறந்தது இந்த வேலை எப்படியேனும் தனக்குக் கிடைத்து விட்டால் அம்மாவின் நச்சரிப்பு குறையும் என்று நினைத்தார் அடுத்த நாள் குறிப்பிட்ட அந்த அலுவலகத்திற்கு வந்தார். தன்னைப் போலவே நிறையப்பேர் அதே வேலைக்கு நேர்காணலுக்காக வந்திருப்பதை அறிந்தார். அது மிகப்பெரும் பங்களா போன்று இருந்தது வெளியில் பெரிய கேட் இருந்தது. அதைத் திறந்து உள்ளே செல்லும் போது இரண்டு பக்கமும் செடிகள் இருந்தன செடிகளுக்காக  தண்ணீர் பாய்ச்சும் பைப் குழாய்கள் செடிகளின் மீது விழாமல் வீணாக தரையில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதை அவர் பார்த்து இதை எல்லாம் என் அம்மா பார்த்தால் என்னை எப்படி திட்டுவார் என்று சொல்லிக் கொண்டே வீணாக கீழே போய்க் கொண்டிருந்த அந்த குழாயை எடுத்து செடிக்கு தண்ணீர் செல்லும் வகையில் சரி படுத்தி விட்டுச் சென்றார் 

அடுத்து கொஞ்சம் உள்ளே சென்றவுடன் கதவைத் திறந்த உடன் வெல்கம் என்ற MATE தலைகீழாக இருந்தது அதை பார்த்தவுடன் இது எல்லாம் என் அம்மா பார்த்தால் என்னை எவ்வளவு திட்டுவார் என்று தலைகீழாக இருந்த அந்த  MATE டை சரி படுத்தி விட்டு உள்ளே சென்றார் அடுத்து நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் அமர்வதற்கு சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன அதில் சில அறைகள் காலியாக இருந்தன ஆனாலும் பேன் ஓடிக் கொண்டிருந்தது அதை பார்த்த அந்த மகன் இதையெல்லாம் என் அம்மா பார்த்தால் எவ்வளவு திட்டுவார் என்று சொல்லிக் கொண்டே வீணாக ஓடிக்கொண்டிருந்த ஃபேனை ஆப் செய்தார் இறுதியாக நேர்காணலுக்காக அவனுடைய பெயர் அழைக்கப்பட்டது அவனுடைய பெயரையும் முகவரியையும் மட்டும் தான் கேட்டார்களே தவிர எந்தவிதமான நேர்காணலும் அவனுக்கு நடத்தப்படாமல் உனக்கு இந்த அலுவலகத்தில் வேலை உறுதி என்று சொல்லி விட்டார்கள் அவனுக்கு ஒரே ஆச்சரியம் என்னிடத்தில் எதுவுமே கேட்கவில்லையே எப்படி எனக்கு நீங்கள் வேலை தந்தீர்கள் என்று கேட்டபோது அவனிடம் அந்த அதிகாரி சொன்னார் நாங்கள் வெளியில் இருந்தே ஆங்காங்கே கேமரா வைத்திருக்கிறோம் நீ வருகின்ற வழியில் என்னென்ன செய்தாய் என்பதை எல்லாம் நாங்கள் கவனித்தோம் மற்றவர்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை உனக்கு இருக்கிறது என்றால் உன்னப் போன்றவர்கள் தான் எங்களுக்குத் தேவை அதனால் தான் உன்னிடம் எந்த ஒரு நேர் காணலும் நடத்தாமல் உன்னை நாங்கள் வேலைக்கு சேர்த்து விட்டோம் என்றார்கள் அப்பொழுதுதான் அந்த மகனுக்கு அம்மாவின் மதிப்பு புரிந்தது அம்மாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல் எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று நினைத்த அந்த மகனுக்கு அம்மாவின் கண்டிப்பு தான் இங்கே வேலையே பெற்று தந்தது என்று அந்த மகன் அம்மாவின் மதிப்பை புரிந்து கொண்டான்

பெற்றோரின் இறப்புக்குப் பிறகும் அவர்களுக்கு நன்மை சேர்த்து வைக்க வேண்டும்

இறந்து விட்ட பெற்றோர் சார்பில் ஹஜ்ஜை  உம்ராவை நிறைவேற்றலாம்

عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ حَجَّ عَنْ وَالِدَيْهِ بَعْدَ وَفَاتِهِمَا كُتِبَ لَهُ عِتْقٌ مِنَ النَّارِ، وَكَانَ لِلْمَحْجُوجِ عَنْهُمَا أَجْرُ حَجَّةٍ تَامَّةٍ مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أُجُورِهِمَا شَيْئٌ "(بيهقي

இறந்து விட்ட பெற்றோருக்காக ஹஜ் செய்தவருக்கு நரக விடுதலை கிடைக்கும். அந்தப் பெற்றோருக்கும் பரிபூரணமான ஹஜ் நிறைவேறும் 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ (مسلم) باب الْحَجِّ وَالنُّذُورِ عَنِ الْمَيِّتِ

ஜுஹைனா என்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து  என்னுடைய தாயார்  ஹஜ்ஜை நேர்ச்சை செய்திருந்தார். அவரால் ஹஜ் செய்ய முடியாமல் வஃபாத்தாகி விட்டார். அவருக்காக ஹஜ்ஜை நான் நிறைவேற்றலாமா என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம் நீ ஹஜ் செய். உன் தாயாருக்கு கடன் இருந்தால் அந்தக் கடனை நீ நிறைவேற்றுவாய் அல்லவா அவ்வாறே  இது அல்லாஹ்வின் மீது அவருக்குள்ள கடனாகும். நிறைவேற்றுவது மிகவும் தகுதியானதாகும் என்றார்கள். 

படிப்பினை- ஷரீஅத்தின் நான்கு ஆதாரங்களில் ஒன்றான கியாஸ் கூடும் என்பதற்கு மேற்படி ஹதீஸ் முக்கிய சான்று

நம்மை விட்டும் பிரிந்த சென்ற நம்முடைய மூதாதையர்களுக்காக நாம் செய்யும் நற்கருமங்கள் இரு வகை

1. அவர்கள் வஸிய்யத்  செய்து விட்டுச் சென்றதால் நாம் கட்டாயம் நாம் செய்ய வேண்டியவை 2. அவர்கள் வஸிய்யத்  செய்யாமல் அவர்களுக்காக நாமே விரும்பிச் செய்யும்  நல்லறங்கள்.  

மற்றொரு கண்ணோட்டத்தில் மவ்த்தாக்களுக்கு நாம் செய்யும் நற்கருமங்களில் இரு பிரிவுகள் உள்ளன. 1. பகரம் இல்லாமல் நேரடியாக அவற்றை அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியும். ஹஜ், உம்ரா, குர்பானி ஆகியவை இதற்கு உதாரணம். 

 இறந்தவர்களுக்காக  நாம் ஹஜ், உம்ரா, குர்பானி போன்றவற்றை நிறைவேற்ற முடியும். 

2. அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியாது ஆனால் அதற்குப் பகரமாக ஃபித்யா கொடுக்க முடியும். தொழுகை, நோன்பு ஆகியவை இதற்கு உதாரணம். இறந்தவருக்காக தொழுகை, நோன்பு ஆகியவை நாம் நிறைவேற்ற முடியாது. ஃபித்யா தரலாம்.

இறந்தவர் வஸிய்யத் செய்திருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும். அவ்வாறு வசிய்யத் செய்யா விட்டாலும் வாரிசுகள் செய்யலாம். 

பெற்றோர் உயிருடன் இருந்தால் அவர்களை ஹஜ் உம்ரா செய்ய வைப்பதன் நன்மை

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ஒரு தோழர் வருகிறார். ஈரானில் உள்ள ஹுராசானிலிருந்து என் தாயை சுமந்து வந்திருக்கிறேன். ஹஜ் செய்வதற்காக. (ஏறக்குறைய 2500கிலோ மீட்டர்களுக்கு மேல் உள்ள தூரம். அதைவிட தூரமாகத்தான் இருக்கும் . அங்கிருந்து தன் தாயை தூக்கி தன் முதுகில் சுமந்து ஒருவர் வந்திருக்கிறார்.) “என் தாயை முதுகில் சுமந்தவனாக தவாஃப் செய்தேன், என் தாயை முதுகில் சுமந்தவனாக சயீ செய்தேன், முதுகில் சுமந்தவனாக மினா அழைத்துச் சென்றேன், பிறகு அரஃபா, பிறகு முஸ்தலிஃபா, பிறகு மக்கா என அனைத்து கடமைகளையும் என் தாயை முதுகில் சுமந்தவனாகச் செய்தேன். பிறகு கேட்கிறார்; என் தாய்க்குள்ள கடமையை நான் செய்துவிட்டேனா? என்று. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் : இல்லை. நீ சிறு பிராயத்தில் இருக்கும் போது, அந்த தாய் உன்னை பார்த்து ஒரு புன்முறுவலாக சிரித்தாள் அல்லவா, மனமாற உன்னை பார்த்து மகிழ்ந்தாள் அல்லவா! அதற்கு கூட நீ இன்னும் நன்றி செலுத்தவில்லை.

   சில வயதான ஹாஜிகள் உடன் வரும் போது இவ்வளவு சிரமப்படுகிறீர்களே! உங்களுக்கு ஆண் பிள்ளைகள் இல்லையா?அவர்களுடைய துணையை நீங்கள் நாடி இருக்கலாமே! அவர்களை அழைத்து வந்திருக்கலாமே! என்று சொன்னால்,அந்த வயதான பெற்றோர்கள் சொல்கிறார்கள்.அவர்கள் எங்கே எங்களை பார்க்கிறார்கள். காசு கொடுத்து விட்டால் போதும் என்று சிலர் காசை கொடுத்து, எப்படியாவது நீ ஹஜ் செய்து கொள்ளுங்கள் என்று ஏதாவது ஒரு டிராவல்ஸ்லில் அனுப்பி விடுகிறார்கள்

வியாழன், 4 டிசம்பர், 2025

அண்டை வீட்டார்

 05-12-2025

جمادي الثاني  -  12 بسم الله الرحمن الرحيم  

  சிறந்த அண்டை வீட்டார்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

நபி ஸல் அவர்கள் இந்த உம்மத்துக்கு கற்றுத் தந்த பல்வேறு சுன்னத்தான விஷயங்கள் இன்று விடுபட்டுப் போனதால் இன்று முஸ்லிம் சமூகம் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது. அத்தகைய விடுபட்ட சுன்னத்துகளில் ஒன்று அண்டை வீட்டாரின் உரிமைகள். 

அருகருகே பல வருடங்களாக குடியிருந்தாலும் பெயர் என்ன என்று கூட தெரியாமல் அந்நியர்களைப் போன்று சிலர் வாழ்ந்து வருகின்றனர். எனவே அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி அறிவது அவசியமாகிறது.

அனைத்து ஃபிக்ஹ் நூல்களிலும் ஷுஃப்ஆ என்ற தனி பாடம் இடம் பெற்றிருக்கும். அதன் சுருக்கம்

அதாவது இரு அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் ஒருவர் தன் வீட்டை விற்பதாக இருந்தால் முதலாவதாக தன் அண்டை வீட்டாரிடம் தான் நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டு அவருக்கு விருப்பமில்லை என்றால்தான் அவர் இன்னொருவருக்கு விற்க முடியும் ஒரு வேளை அண்டை வீட்டாரை கேட்காமல் அந்த வீட்டை விற்று விட்டால் அண்டை வீட்டார் காஜி இடம் சென்று முறையிட்டு அந்த வீட்டை நான் வாங்கும் தகுதி இருந்தும் என்னை கேட்காமல் அவர் இன்னொருவருக்கு விற்று விட்டார் என்று புகார் கொடுத்தால் காஜி அதை விசாரித்து யாருக்கு விற்கப்பட்டதோ அவரிடமிருந்து அந்த வீட்டை இவருக்கு மீண்டும் மீட்டுக் கொடுப்பார் இந்த அளவுக்கு அண்டை வீட்டார் உடைய உரிமைகள் நம்முடைய மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னதற்குப் பிறகு பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்றும் கூறிய பிறகு மூன்றாவது இடத்திலே அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்பதைத்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது 

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ(  سورة النساء 36‏

என்ன தான் உறவினர்கள் நமக்கு நிறைய இருந்தாலும் ஆபத்து என்றவுடன் உடனே

ஓடி வரும் நிலையில் அண்டை வீட்டார் இருப்பதால் அவர்களைப் பகைத்துக் கொள்வது கூடாது

 முற்காலத்தில் இரண்டு அண்டை வீட்டார் இருந்துள்ளார்கள் அவர்களில் ஒருவர் ஆடுகளை நிறைய வைத்திருந்தார் மற்றொருவர் வேட்டைக்காக நாய் வளர்த்திருந்தார் இந்த வேட்டைக்காரருடைய தாய் அடிக்கடி பக்கத்து வீட்டு காரின் ஆட்டுக்குட்டிகளை அவ்வப்போது கடித்து காயப்படுத்தி விடும் அப்போதெல்லாம் ஆட்டு மந்தை வைத்திருப்பவர் வேட்டைக்காரரிடம் வந்து உன்னுடைய நாயை நீ கட்டிப்போடு என்று கூறுவார் அதற்கு அந்த வேட்டைக்காரன் நாய் என்றால் கடிக்கத் தான் செய்யும் நீதான் உன்னுடைய ஆடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விடுவார் ஒருநாள் வேட்டைக்காரன் நாய் இவருடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை பெரிய அளவில் சேதப்படுத்திய போது நேராக இவரைப் பற்றி புகார் கொடுப்பதற்காக ஊர் தலைவரிடம் சென்றார்  ஊர் தலைவருக்கும் இவருக்கும் நல்ல நட்பு இருந்தது அதன் அடிப்படையில் ஊர் தலைவர் விஷயத்தை கேட்டு விட்டு நான் அந்த வேட்டைக்காரன் மீது நடவடிக்கை எடுக்கலாம். இருந்தாலும் அவரும் நீங்களும் தினமும் ஒருவருக்கொருவர் பார்க்காமல் இருக்க முடியாது நான் அவர் மீது எடுக்கும் நடவடிக்கையே உங்கள் மீது தீராத பகையை ஏற்படுத்தி விடும் எனவே பகையும் இல்லாமல் உம்முடைய ஆட்டுக்குட்டிகளுக்கும் இனிமேல் பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆலோசனையை நான் கூறுகிறேன் என்று சொல்லி ஒரு ஆலோசனை கூறினார் அந்த ஆலோசனை இவருக்கு நல்லதாகப்பட்டது அந்த ஆலோசனையின் அடிப்படையில் விரைவில் இந்த வேட்டைக்காரனின் சிறிய வயது மகனுக்கு பிறந்தநாள் வந்தது அதைப் பெரிய அளவிலே கொண்டாடினார் அதற்கான அழைப்பு இவருக்கும் வந்தது அந்த குறிப்பிட்ட நாளில் பிறந்தநாள் பரிசாக பலரும் பல பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் ஊர் தலைவர் சொன்ன ஆலோசனை அடிப்படையிலே அவருடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை அந்த சிறுவனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார் அப்போது அந்த வேட்டைக்காரருக்கு மிகப்பெரிய சந்தோஷம் நான் பல தடவை உங்கள் மனதை புண்படுத்தி இருந்தாலும் நீங்கள் என் மகனுக்கு சிறந்த அன்பளிப்பை தந்து விட்டீர்கள் என்று மகிழ்ந்தார் ஆனால் இதற்குப் பிறகு இவருடைய ஆட்டு மந்தைகளுக்கு வேட்டைக்காரர் உடைய நாயின் மூலமாக இந்த தொந்தரவுகளும் ஏற்படுவதில்லை என்ன காரணம் என்றால் எப்போது ஆடுகள் அடுத்த வீட்டில் இருந்ததோ அப்போது நாயை கட்டி போடாத அந்த வேட்டைக்காரன் இப்போது அந்த ஆடுகளில் ஒன்று தன்னுடைய வீட்டுக்கே தன் மகனுக்கு பரிசாக வந்துவிட்டபோது அந்த ஆட்டை பாதுகாப்பதற்காக தன்னுடைய நாயை கட்டி போட ஆரம்பித்தார் இதுதான் ஊர் தலைவர் சொல்லிக் கொடுத்த சிறந்த ஆலோசனையாகும் ஊர் மக்களுக்கு தீர்ப்பு சொல்லும் தலைவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கும் இதில் நமக்கு படிப்பினை உள்ளது அத்துடன் இரண்டு அண்டை வீட்டார் தங்களுக்கு இடையில் அடிக்கடி அன்பளிப்புகள் கொடுத்து பழகுவதால் அவர்களுக்கு இடையே பகைமை நீங்கும் என்ற படிப்பினையும் இதில் உள்ளது

وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((تَهادُوا؛ فإن الهدية تسلُّ السَّخيمة))؛ رواه البزار

அன்பளிப்புகள் கொடுத்து பழகுங்கள் நிச்சயமாக அது உங்களுடைய பகைமையை நீக்கும்

அண்டை வீட்டார் தரும் அன்பளிப்புகளை இழிவாக கருதக் கூடாது

عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا ، وَلَوْ فِرْسِنَ شَاةٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். (ரலி) (புகாரி: 2566)

அண்டை வீட்டாரின் உரிமைகள் பற்றிய நீண்ட ஹதீஸ்

عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه و سلم قال من أغلق بابه دون جاره مخافة على أهله وماله فليس ذلك بمؤمن وليس مؤمنا من لا يأمن جاره بوائقه أتدري ما حق الجار إذا استعانك أعنته وإذا استقرضك أقرضته وإذا افتقر عدت عليه وإذا مرض عدته وإذا أصابه خير هنيته وإذا أصابته مصيبة عزيته وإذا مات اتبعت جنازته ولا تستطل عليه بالبناء فتحجب عنه الريح إلا بإذنه ولا تؤذيه بقتار قدرك إلا أن تغرف له وإن اشتريت فاكهة فاهد له فإن لم تفعل فأدخلها سرا ولا يخرج بها ولدك ليغيظ بها ولده  (كنز العمال)                                                           

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் அண்டை வீட்டார் உரிமைகள் என்ன தெரியுமா உன்னிடம் அவர் உதவி கேட்டால் நீ உதவி செய்ய வேண்டும் உன்னிடம் ஒரு கடன் கேட்டால் நீ கடன் கொடுக்க வேண்டும் உன்னிடம் தன் வறுமையை அவர் முறையில் நீ அவருக்கு உதவ வேண்டும் அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை நலம் விசாரிக்க வேண்டும் அவர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸாவை நீ பின்துயர வேண்டும் அதாவது ஜனாஸா சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும் அவருக்கு ஏதேனும் நல்லது நடந்தால் வாழ்த்து சொல்ல வேண்டும் அவருக்கு துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்ல வேண்டும் அவருடைய கட்டடத்தை விட உன்னுடைய கட்டடத்தை உயரமாக கட்டி அவருக்கு சேர வேண்டிய காற்றை நீ மறைத்து விடக்கூடாது அவரிடம் அனுமதி கேட்டே தவிர.... உன் வீட்டுக்கு நீ ஏதேனும் பழங்கள் வாங்கினால் உன்னால் முடிந்தால் உன் அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்கும் அதில் சிலதை கொடுக்க வேண்டும் அப்படி உன்னால் கொடுக்க முடியாவிட்டால் அதை அண்டை வீட்டின் பிள்ளைகளுக்கு தெரியாமல் மறைவாக கொண்டு செல்ல வேண்டும் 

ஒருவேளை உன் பிள்ளைகளிடம் அந்தப் பழங்களை கொடுத்த பிறகு அந்தப் பழங்களுடன் உன்னுடைய பிள்ளை அண்டை வீட்டுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (உன் பிள்ளைக்கு மட்டுமே பழங்கள் வாங்க சக்தி இருந்து அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்கு நீ கொடுக்க முடியாத சூழ்நிலையில்)  உன் பிள்ளை வைத்திருக்கும் பழங்களுடன் உன்னுடைய  பிள்ளை அண்டை வீட்டுக்கு செல்ல வேண்டாம்.  உன்னுடைய (வீட்டில் கமகமக்கும் சால்னா தயாரானால் அந்த) சால்னா சட்டியின் வாசனையைக் கொண்டு உன் அண்டை வீட்டுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம். நீ அதிலிருந்து கொஞ்சத்தை அவர்களுக்கு கொடுப்பதாக இருந்தாலே தவிர....

அண்டை வீட்டாருக்காக எதையும் விட்டுக் கொடுக்காத மனிதர் மாபெரும் கஞ்சர்

عَنْ جَابِرٍ  رض أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ لِفُلَانٍ فِي حَائِطِي عَذْقًا وَإِنَّهُ قَدْ آذَانِي وَشَقَّ عَلَيَّ مَكَانُ عَذْقِهِ فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بِعْنِي عَذْقَكَ الَّذِي فِي حَائِطِ فُلَانٍ قَالَ لَا قَالَ فَهَبْهُ لِي قَالَ لَا قَالَ فَبِعْنِيهِ بِعَذْقٍ فِي الْجَنَّةِ قَالَ لَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَيْتُ الَّذِي هُوَ أَبْخَلُ مِنْكَ إِلَّا الَّذِي يَبْخَلُ بِالسَّلَامِ (مسند احمد

  விளக்கம்- நபித்தோழருக்கு சொந்தமான ஒரு தோட்டம் இருந்தது அந்த தோட்டத்திற்கு அருகாமையில் மற்றொரு மனிதருடைய பேரித்த மரம் இருந்தது இந்த பேரித்த மரத்தின் கிளைகள் இவருடைய தோட்டத்தின் பக்கம் பெரும்பாலும் இருந்ததால் இந்தத் தோட்டத்துக்காரருக்கு அதனால் இடையூறு ஏற்பட்டது அப்போது அவர் அந்த நபரிடம் நீங்கள் உங்களுடைய பிடித்த பலத்தை மரத்தை பேரித்த மரத்தை எனக்கு விற்று விடுங்கள் அல்லது அதை விட்டு விடுங்கள் எனக்கு அது தொந்தரவாக உள்ளது என்றார் ஆனால் அந்த மனிதர் அதற்கு மறுத்துவிட்டார் உடனே இந்த சஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இது பற்றி புகார் கொடுத்தார் அப்போது அந்த மனிதரை அழைத்து வரும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி அவர் வந்தவுடன் அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முடைய மரத்தை எனக்கு நீங்கள் விட்டு விடுங்கள் என்று கூற அவர் அதற்கும் மறுத்துவிட்டார் இத்தனைக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்ல விலை கொடுப்பதாக கூறியும் அவர் அதற்கு மறுத்து விட்டார் அன்பளிப்பாவாகவது கொடுத்து விடுங்கள் என்று கூறி அதற்கும் மறுத்துவிட்டார் இறுதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரிடம் சொன்னார்கள் உம்மைப் போல கஞ்சனை நான் கண்டதில்லை சலாம் சொல்வதற்கு கஞ்சத்தணம் செய்தவரை தவிர…

விபச்சாரம் பெரிய பாவம் எதிலும் குறிப்பாக அண்டை வீட்டாரின் மனைவியுடன்

தகாத உறவில் ஈடுபடுவது ஆக மிகப்பெரிய பாவம் மிகப்பெரும் பாவமாகும்

عَنْ أَبِى وَائِلٍ عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ « أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ ». قَالَ ثُمَّ أَىٌّ قَالَ « أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ ». قَالَ ثُمَّ أَىٌّ قَالَ « أَنْ تُزَانِىَ حَلِيلَةَ جَارِكَ » فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا (وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِى حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا)

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’ என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்’ என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) (புகாரி: 4477)

அண்டை வீட்டாரை வாரிசுகளைப் போன்று கருத வேண்டும்

«مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُه

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.  (புகாரி: 6014) 

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ،

‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி: 6019) 


நம்மால் முடியும் என்றிருந்தால் அண்டை வீட்டாருக்கு தருவதற்காக சற்று கூடுதலாக சமை க்க வேண்டும்

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ رواه مسلم

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக” என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 5120) 

அண்டை வீட்டார் என்பது யாரைக் குறிக்கும்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு என்றார்கள். (புகாரி: 2259) 

தனக்கு விரும்புவதை தம் அண்டை வீட்டாருக்கும் விரும்ப வேண்டும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ – أَوْ قَالَ: لِجَارِهِ – مَا يُحِبُّ لِنَفْسِهِ 

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “தம் சகோதரருக்கும்” அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார். (முஸ்லிம்: 71) 

அண்டை வீட்டார் பசித்திருக்க நாம் மட்டும் சாப்பிடுவதற்குத் தடை

ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه.

 “தன் அண்டைவீட்டானை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி), (அஹ்மத்: 367) ..

அண்டை வீட்டார் நம் சுவரில் எதையாவது அடிப்பதற்கு தடை விதிக்காதீர்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لاَ يَمْنَعْ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ»، 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்’ என்று கூறினார்கள் (புகாரி: 2463)

வியாபாரத்தில் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமை

قَالَ وَقَفْتُ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، فَجَاءَ المِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَوَضَعَ يَدَهُ عَلَى إِحْدَى مَنْكِبَيَّ، إِذْ جَاءَ أَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا سَعْدُ ابْتَعْ مِنِّي بَيْتَيَّ فِي دَارِكَ؟ فَقَالَ سَعْدٌ وَاللَّهِ مَا أَبْتَاعُهُمَا، فَقَالَ المِسْوَرُ: وَاللَّهِ لَتَبْتَاعَنَّهُمَا، فَقَالَ سَعْدٌ: وَاللَّهِ لاَ أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلاَفٍ مُنَجَّمَةً، أَوْ مُقَطَّعَةً، قَالَ أَبُو رَافِعٍ: لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَ مِائَةِ دِينَارٍ، وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الجَارُ أَحَقُّ بِسَقَبِهِ»، مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلاَفٍ، وَأَنَا أُعْطَى بِهَا خَمْسَ مِائَةِ دِينَارٍ، فَأَعْطَاهَا إِيَّاهُ

நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, ‘ஸஅதே! உம்முடைய வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!’ எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!’ என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!’ என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), ‘அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!’ என்று கூறினார்கள்.

 அதற்கு அபூ ராஃபிவு(ரலி), ‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்’ என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.

அறிவிப்பவர் : அம்ர் இப்னு ஷரீத் (புகாரி: 2258) 

அண்டை வீட்டாருக்கு தொந்தரவு கொடுக்காதவனே இறைநம்பிக்கையாளன்

عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ» قِيلَ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ»

அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை’ என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஷுரைஹ்(ரலி நூல் ;(புகாரி: 6016) ➚

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»

எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்: 73)

அண்டை வீட்டாரிடையே சண்டை வருவதற்கான சின்னச் சின்ன காரணங்கள்

  வீட்டில் ரேடியோ டேப்ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தி தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது  போன்றவற்றால் சண்டை வரலாம் அவற்றில் கவனமாக இருக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ أَنَّهَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا قَالَ هِيَ فِي النَّارِ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ قِلَّةِ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلَاتِهَا وَإِنَّهَا تَصَدَّقُ بِالْأَثْوَارِ مِنْ الْأَقِطِ وَلَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا قَالَ هِيَ فِي الْجَنَّةِ (مسند أحمد

  மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: அஹ்மத் (9298)

ஒருவரின் இடத்தை மற்றவர் ஆக்கிரமத்துக் கட்டுவதால் அண்டை வீட்டாரிடையே பிரச்சினை வரும்

عَنْ أَبِي مَالِك الْأَشْجَعِيّ عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " أَعْظَم الْغُلُول عِنْد اللَّه ذِرَاع مِنْ الْأَرْض تَجِدُونَ الرَّجُلَيْنِ جَارَيْنِ فِي الْأَرْض - أَوْ فِي الدَّار - فَيَقْطَع أَحَدهمَا مِنْ حَظّ صَاحِبه ذِرَاعًا فَإِذَا قَطَعَهُ طُوِّقَهُ مِنْ سَبْع أَرْضِينَ يَوْم الْقِيَامَة  (مسند أحمد

ஒரு ஜான் இடத்தை அநியாயமாக அபகரித்தால் மறுமையில் ஏழு நிலங்கள் கழுத்தில் கட்டித் தொங்க விடப்படும்

சிறந்த முஃமின் எப்போதும் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا (بخاري 3473

 (பனூ இஸ்ராயீ¬ல்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் ''என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் ''நிலத்தை அதி¬ருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், ''உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ''எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், ''எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர்,''அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதி¬ருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார்.   

அருகருகே இருந்த இரு தோட்ட உரிமையாளர்கள் விஷயத்தில் நியாயமான தீர்ப்பு வழங்கிய நபி ஸல்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ - رضى الله عنهما - أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - فِى شِرَاجِ الْحَرَّةِ الَّتِى يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِىُّ سَرِّحِ الْمَاءَ يَمُرُّ فَأَبَى عَلَيْهِ ، فَاخْتَصَمَا عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - لِلزُّبَيْرِ « اسْقِ يَا زُبَيْرُ ، ثُمَّ أَرْسِلِ الْمَاء إِلَى جَارِكَ » . فَغَضِبَ الأَنْصَارِىُّ ، فَقَالَ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ . فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - ثُمَّ قَالَ « اسْقِ يَا زُبَيْرُ ، ثُمَّ احْبِسِ الْمَاءَ ، حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ » . فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّى لأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِى ذَلِكَ ( فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ) . (بخاري) باب المساقاة  2360

 அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓட விடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறைத் தொடர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சி விட்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), பின்வரும் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.                   

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا (65)النساء

விளக்கம்- ஜுபைர் ரழி அவர்களின் தோட்டம் சற்று உயரமான இடத்தில் இருந்தது. அதற்கடுத்து சற்று பள்ளமாக அன்சாரித்தோழரின் தோட்டம் இருந்தது. நபி ஸல் அவர்கள் யாருடைய உரிமையையும் பறிக்காமல் தீர்ப்புச் செய்தார்கள். ஒருவேளை அன்சாரித்தோழரின் தோட்டத்திற்கு முதலில் நீர் பாய்ந்து பிறகு ஜுபைர் ரழி அவர்களின் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதாக இருந்தால் கீழிருந்து மேலாக நீர் பாய்வது சிர ம ம் என்பதால் நபி ஸல் ஜுபைர் ரழி அவர்களிடம் முதலில் உனது தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி விட்டு அவரின் தோட்டத்திற்கும் தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் அவர் பேசியதால் நபிகளாருக்கு கோபம் ஏற்பட்டது.            


பராஅத் இரவு

 30-01-2026 شعبان  -  بسم الله الرحمن الرحيم     ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...