வியாழன், 14 டிசம்பர், 2023

ஹஜ்ஜுக் கடமையைத் தள்ளிப் போடாதீர்

 


  ஹஜ்ஜுக் கடமையைத் தள்ளிப் போடாதீர்

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا (97) ال عمران*

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய விரும்புவர்களுக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப் பட்டுக் கொண்டிருப்பதை முன்னிட்டு இத்தலைப்பு தொகுக்கப் பட்டுள்ளது. வரும் 20- ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆரோக்கியம் இருக்கும்போதே செய்ய வேண்டியவைகளில் ஹஜ்ஜுக் கடமை முக்கியமானது

عَمْرِو بْنِ مَيْمُونٍ الأَوْدِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ : اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ : شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ (مصنف ابي شيبة)

நபி ஸல் அவர்கள் ஒருவருக்கு உபதேசம் செய்தார்கள். ஐந்துக்கு முன்பு ஐந்தை ஙனீமத் (போன்ற)தாக ஆக்கிக் கொள். உனக்கு முதுமை வரும் முன்பே உன்னுடைய இளமையையும், உனக்கு நோய் வரும் முன்பு உன்னுடைய ஆரோக்கியத்தையும் உனக்கு ஏழ்மை வரும் முன்பு உன்னுடைய செல்வ நிலையையும் உனக்கு ஓய்வில்லாத நேரம் வரும் முன்பு உனது ஓய்வான நேரத்தையும் உனக்கு மவ்த் வரும் முன்பு உன்னுடைய ஹயாத்தையும் நல்ல சந்தர்ப்பமாக ஙனீமத் (போன்று) பயன்படுத்திக் கொள்.                                                 

வயதான காலத்தில் ஹஜ், உம்ராவுக்கு செல்லும் பலர் திருப்தியாக வணக்கங்களை நிறைவேற்றுவதில்லை

 இது சம்பந்தமாக பலரும் பல அனுபவங்களைக் கூறியுள்ளனர். இஹ்ராமின் போது தலையை மூடக் கூடாது. ஆனால் வயதானவர்களில் சிலர் அங்குள்ள ஏ.சி ஆகியவற்றின் குளிர் தாங்க முடியாமல் தலையை மூடி  விடுகின்றனர். தவாஃப், ஸயீ உட்பட பல வணக்கங்களை சேரில் அமர்ந்த படி நிறைவேற்ற வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது. அதுவும் கூடும் என்றாலும் அதில் திருப்தி இருப்பதில்லை. சில ஹாஜிகள் முஸ்தலிஃபா வரை நடக்க முடியாமல் முஸ்தலிஃபாவுக்கு வர முடியாத நிலை கூட ஏற்பட்டுள்ளது.           

 வயதானவர்களால் வேகமாக நடக்கவும் முடியாது.அடிக்கடி சிறுநீர் உபாதைகள் ஏற்படும். இதனால் அவர்களுடன் குரூப்பாக செல்பவர்களில் பலருக்கும் சிரமம் ஏற்படும். இவர்களுக்காக அனைவரும் காத்திருக்க வேண்டியிருக்கும் முக்கியமான ஜியாரத்திற்குரிய இடங்களைப் பார்க்கச் செல்லும்போது வயதானவர்களில் பலர் வாகனங்களிலேயே அமர்ந்து கொள்கின்றனர். அவ்வளவு தூரம் பயணம் செய்து, பணம் செலவழித்து சென்றும் கூட அல்லாஹ்வின் நினைவுச் சின்னங்களை அருகில் சென்று பார்க்க முடியாமல் தூரத்தில் இருந்த படி பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். சில வயதானவர்கள் இளைஞர்களை விடவும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அது விதி விலக்காகும்.  

ஹஜ் கடமையான பிறகும் அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துபவர்களைப் பற்றி எச்சரிக்கை

عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ{ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا }رواه الترمذي

யார் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான பொருளாதார தயாரிப்பையும், கஃபா வரை செல்வதற்கான போக்குவரத்துக்கான தயாரிப்பையும் பெற்றுக் கொண்ட பிறகும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ எப்படி இறந்து போனாலும் அதைப் பற்றிக் கவலையில்லை.

விளக்கம்- இந்த உம்மத்தில் ஒருவர் கூட நரகம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே காலமெல்லாம் கவலைப் பட்ட நபி ஸல் அவர்கள் இவ்வளவு வெறுத்துக் கூறினார்கள் என்றால் ஹஜ் எவ்வளவு முக்கியமான கடமை என நாம் உணர வேண்டும்.

عن الحسن البصري قال: قال عمر بن الخطاب: لقد هممت أن أبعث رجالا إلى هذه الأمصار فينظروا كل من كان له جَدةٌ فلم  يحج، فيضربوا عليهم الجِزْية، ما هم بمسلمين. ما هم بمسلمين . (تفسير القرطبي)

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது நான் அனைத்து ஊர்களுக்கும் ஆட்களை அனுப்பி யாரெல்லாம் வசதியிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இருக்கிறார்களோ அவர்களின் மீது ஜிஸ்யா விதிக்கலாம் என என் மனம் நாடுகிறது.ஏனெனில் அவர்கள் உண்மை முஸ்லிம்கள் கிடையாது. (எனவே இஸ்லாமிய நாட்டில் வாழும் திம்மிகளின் மீது விதிக்கப்படும் ஜிஸ்யாவுக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் தான்) என்றார்கள்.       

ثُمَّ هُوَ (أي الحج ) وَاجِبٌ عَلَى الْفَوْرِ عِنْدَ أَبِي يُوسُفَ رَحِمَهُ اللَّهُ .وَعَنْ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ مَا يَدُلُّ عَلَيْهِ . (هداية

( ثُمَّ هُوَ  (أي الحج ) وَاجِبٌ عَلَى الْفَوْرِ عِنْدَ أَبِي يُوسُفَ ) حَتَّى إنْ أَخَّرَ بَعْدَ اسْتِجْمَاعِ الشَّرَائِطِ أَثِمَ ، رَوَاهُ عَنْهُ بِشْرٌ وَالْمُعَلَّى ( وَعَنْ أَبِي حَنِيفَةَ مَا يَدُلُّ عَلَيْهِ ) أَيْ عَلَى الْفَوْرِ وَهُوَ مَا ذَكَرَهُ ابْنُ شُجَاعٍ عَنْهُ أَنَّهُ سُئِلَ عَمَّنْ لَهُ مَالٌ أَيَحُجُّ بِهِ أَمْ يَتَزَوَّجُ ؟ فَقَالَ : بَلْ يَحُجُّ بِهِ ، وَذَلِكَ دَلِيلٌ عَلَى أَنَّ الْوُجُوبَ عِنْدَهُ عَلَى الْفَوْرِ .  . (شرح الهداية

இமாமுல்அஃழம் கருத்துப்படி ஹஜ்ஜுக்கான வசதி வந்தவுடன் அந்த வருடமே ஹஜ் செய்வது வாஜிபாகும். அரபு நாடுகளில் ஒரு ஆண் திருமணம் செய்ய வேண்டுமானால் ஹஜ்ஜுக்கு ஆகும் செலவு அளவுக்கு அவருக்கு செலவு உண்டு. அதை மனதில் வைத்து ஒருவர் இப்னு ஷுஜாஃ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது. வசதி வந்தவுடன் திருமணம் முதலில் கடமையா ஹஜ் முதலில் கடமையா என்று கேட்க, ஹஜ் செய்வது முதல் கடமை என்றார்கள்.

ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம் வருவதற்கு முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள். ஒரு காலம் வரும். அப்போது மக்கள் ஹஜ் செய்ய விரும்பினாலும்  ஹஜ் செய்ய கஃபா இருக்காது

عن الحارث بن سويد ، قال : سمعت عليا ، رضي الله عنه ، يقول :  حجوا قبل أن لا تحجوا، فكأني أنظر إلى حبشي أصمع أفدع بيده  مِعْوَل يهدمها حجرا حجرا ، فقلت له شيء تقوله برأيك أو سمعته من رسول الله صلى الله عليه وسلم قال :  لا والذي فلق الحبة ، وبرأ  النسمة ، ولكني سمعته من نبيكم صلى الله عليه وسلم  رواه الحاكم في المستدرك (معولகோடாலி  أفدعமெலிந்த கால்கள் கொண்ட)

عن ابن عمر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  استمتعوا من هذا البيت ، فإنه قد هُدِم مرتين ، ويُرفع في الثالثة رواه ابن حبان

கருத்து- ஹஜ் செய்ய முடியாமல் போகும் வரும் முன்பு ஹஜ் செய்யுங்கள். ஏனெனில் கால்கள் சிறுத்த நீக்ரோ மனிதர்கள் கோடாரியால் கஃபாவின் கற்களை பெயர்த்து எடுப்பதை என் கண்ணால் பார்ப்பது போன்று உள்ளது என கவலையுடன் கூறினார்கள். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது கஃபா இருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இரண்டு முறை இடிக்கப்படும். மூன்றாவது முறை அது உயர்த்தப்பட்டு விடும் என்றார்கள்

கஃபா உயர்த்தப்பட்டு எப்போது ஹஜ் செய்ய முடியாத நிலை உருவாகுமோ

அப்போது உலகமும் அழிக்கப்பட்டு விடும்.

جَعَلَ اللَّه الْكَعْبَة الْبَيْت الْحَرَام قِيَامًا لِلنَّاسِ" أَيْ يَدْفَع عَنْهُمْ بِسَبَبِ تَعْظِيمهَا السُّوء كَمَا قَالَ اِبْن عَبَّاس : لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض  (تفسير ابن كثير

கண்ணியப்படுத்த வேண்டியவைகளை கண்ணியப்படுத்திக் கொண்டிருப்பது இந்த பூமிக்கு பாதுகாப்பாகும். கஃபாவை மக்கள் கண்ணியப்படுத்துவதால் பல்வேறு சோதனைகளை விட்டும் பாதுகாக்கப்படுகின்றனர். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள். ஒருவர் கூட ஹஜ் செய்யாத சூழ்நிலை ஏற்படும்போது அல்லாஹ் உலகத்தை அழித்து விடுவான்.

கஃபா இடிக்கப்பட்டு ஹஜ் செய்ய முடியாத நிலை ஏற்படும் முன்பே அநியாயக்கார அரசர்களால் ஹஜ் செய்வதற்கு தடை ஏற்படும் என்ற முன்னறிவிப்பு

عَنْ أَبِى أُمَامَةَ قَالَ عن أبي أمامة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :« مَنْ لَمْ يَمْنَعْهُ مِنَ الْحَجِّ حَاجَةٌ ظَاهِرَةٌ أَوْ سُلْطَانٌ جَائِرٌ أَوْ مَرَضٌ حَابِسٌ فَمَاتَ وَلَمْ يَحُجَّ فَلْيَمُتْ إِنْ شَاءَ يَهُودِيًّا وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا (دارمي)

عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "تَعَجَّلُوا إلى الحَجِّ -يعني الفريضة-فإنَّ أحَدَكُمْ لا يَدْرِي مَا يَعْرضُ لَهُ رواه احمد

ஹஜ்ஜை விரைந்து நிறைவேற்றுங்கள். ஏனெனில் யாருக்கு எப்போது நடைபெறும் என யாரும் அறிய மாட்டீர்கள்

 

விளக்கம்- மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது என்ற கருத்தும் இதற்குள் அடங்கும். அத்துடன் நபி ஸல் அவர்கள் கூறியது போன்று இனி காலங்கள் செல்லச் செல்ல என்ன மாதிரியான புதிய சட்டங்களை சவூதி அரசு கொண்டு வரும் என்று தெரியவில்லை. பணமும் ஆரோக்கியமும் இருந்தாலும் கூட அவ்வளவு எளிதாக  ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாத அளவுக்கு பல தடைகளை சவூதி அரசாங்கம் ஏற்படுத்த வாய்ப்புண்டு. காரணம் இப்போதுள்ள மன்னர் மேற்கத்தியர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார். ஒரு காலத்தில் ரவ்ழாவை ஜியாரத் செய்யும் வழிகள் இலகுவாக இருந்தது. ஆனால் அதுவும் மிகவும் சிரமமாகி விட்டது. தவாஃப் செய்வதற்கான அனுமதியும்உம்ராவின் உடையுடன் தான் அனுமதிக்கப்படுகிறது இப்படியாக ஒவ்வொன்றாக அனுமதி மறுக்கப்படும் சூழ்நிலைகள் வரும் முன்பே ஹஜ்ஜை நிறைவேற்றி விட வேண்டும்.

கடமையை நிறைவேற்றுவதற்கு நம்முடைய தொழில்கள் தடைகளாக இருப்பது கூடாது

நம்மில் பலர் ஹஜ்ஜை நிறைவேற்றும் அளவுக்கு வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் 40 நாட்கள் ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பும் வரை வியாபாரம் பாதித்து விடும் அல்லது அலுவலக வேலைகள் நின்று விடும் என்று எண்ணி ஹஜ்ஜைத் தள்ளிப் போடுகின்றனர். அல்லாஹ், ரசூலை விட தொழிலை பெரிதாக கருதுபவர்களை அல்லாஹ் எச்சரித்துள்ளான்

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ (24) التوبة

   ஹஜ்ஜுக்குச் செல்வதால் செலவாகும் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு...

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّة (ترمذي

ஹஜ்ஜையும் உம்ராவையும் அடுத்தடுத்து நிறைவேற்றுங்கள். ஏனெனில் அவ்விரண்டும் வறுமையை போக்கி விடும். எவ்வாறு இரும்பின் துருவையும் தங்கத்தின் துருவையும் வெள்ளியின் துருவையும் கொல்லனின் உலை நீக்கி விடுமோ அவ்வாறு ஹஜ்ஜும் உம்ராவும் வறுமையை நீக்கி விடும்.                                     

விளக்கம்- ஹாஜி ஒருபோதும் ஏழையாக மாட்டார் என்று தான் ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பினால் அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தைத் தருவான் என நம்பி இக்லாஸுடன் ஹஜ் செய்ய வேண்டும்.

ஹஜ்ஜுக்குச் செலவு செய்வது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதைப் போன்றாகும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّفَقَةُ فِي الْحَجِّ كَالنَّفَقَةِ فِي سَبِيلِ اللَّهِ بِسَبْعِ مِائَةِ ضِعْفٍ (مسند أحمد

   வசதியிருந்தும் ஹஜ் செய்ய இயலாத தள்ளாத வயதை அடைந்தவர்களுக்காக பத்லீ ஹஜ்

 ஒருவருக்கு ஹஜ்ஜு கடமையாக இருந்து அதனை நிறைவேற்றுவதற்கு சக்தியற்றவராக இருந்தால் அல்லது மரணித்திருந்தால் அவருக்கான ஃபர்ளான ஹஜ்ஜை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மற்றவர் நிறைவேற்றலாம். நஃபிலான ஹஜ் என்றால்அதைநிறைவேற்றுவதற்கான ஆரோக்கியம் அவரிடம் இருந்தாலும் இல்லா விட்டாலும்  அவர் சார்பாக பிறர் நிறைவேற்றலாம். ஆனால் பத்லீ ஹஜ் செய்ய யார் ஏவப்படுகிறாரோ அவரிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும்.

குறிப்பு-பத்லீ ஹஜ் செய்யச் சொல்லுபவரை ஆமிர் என்றும், அதை செய்கிறவரை மஃமூர் என்றும் சொல்லப்படும்.

தொழுகை, நோன்பு போன்ற அமல்களை ஒருவருக்காக மற்றவர் செய்ய முடியாது. கஃப்பாரா அல்லது ஃபித்யா மட்டும் தர முடியும். ஆனால் ஹஜ், உம்ரா, குர்பானி போன்ற சில அமல்களை ஒருவருக்காக மற்றவர் செய்யலாம்

பத்லீ ஹஜ் குறித்த ஹதீஸ்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ (بخاري

 ஃபழ்ல் என்ற சஹாபி நபி ஸல் அவர்ளுக்குப் பின்னால் அமர்ந்து வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது கஸ்அம் கிளைய் சார்ந்த ஒரு பெண்மணி வந்தார். அவரை ஃபழ்ல் ரழி பார்க்க, அந்தப் பெண்ணும் இவரைப் பார்க்க நேர்ந்த து. உடனே  நபி (ஸல்) அவர்கள் ஃபழ்ல் ரழி அவர்களின் பார்வையை வேறு பக்கமாக திருப்பி விட்டார்கள். அப்போது அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது கடமையாக்கிய ஹஜ் என்ற கடமை என் தந்தையின் மீது உள்ளது. ஆனால் அவர் வாகனத்தின் மீது உட்காருவதற்கும் சக்தியற்றவராக இருக்கிறார் எனவே அவருக்காக நான் ஹஜ்ஜு செய்யலாமா?  என்று கேட்ட போது, ஆம் ஹஜ்ஜு செய்வீராக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் - புகாரீ

பத்லீ ஹஜ்ஜுக்குரிய நிபந்தனைகள்

 அவரால் அறவே முடியாது என்ற நிலையில் மட்டுமே பிறரை  தனக்காக ஹஜ் செய்ய வைக்க முடியும். மேலும் பெரும்பாலான   இமாம்களின் கருத்துப் படி முதலில் தனக்காக ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்த  ஒருவர் தான் மற்றவருக்காக ஹஜ் செய்ய முடியும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شُبْرُمَةُ قَالَ قَرِيبٌ لِي قَالَ هَلْ حَجَجْتَ قَطُّ قَالَ لَا قَالَ فَاجْعَلْ هَذِهِ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ (ابن ماجة

 ஒரு மனிதர் ஹஜ்ஜின் போது லப்பைக அன் ஷுப்ருமா என்று கூறுவதைக் கேட்ட நபி ஸல் அவ்ரகள் யார் அந்த ஷுப்ருமா என்று கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் தான் ஷுப்ருமா என்பவர். அவருக்காக நான் ஹஜ்ஜுச் செய்கிறேன் என்றார் அப்போது நபி ஸல் நீர் இதற்கு முன்  ஹஜ்ஜை நிறைவேற்றியிருக்கிறீர்களா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் முதலில் உமக்காக நீ  இந்த ஹஜ்ஜை ஆக்கிக் கொள். பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய் என்றார்கள்.

இன்னும் சில நிபந்தனைகள்

 உயிரோடு இருக்கும் நிலையில் அதை செய்ய வைத்தாலும் சரி, அல்லது அவர் இறக்கும் தருவாயில் வஸிய்யத் செய்து விட்டு இறந்திருந்தாலும் சரி இது கூடும்

.ஆணுக்கு ஆண் சார்பாகவும், பெண்ணுக்கு பெண் சார்பாகவும் என்றில்லாமல் யாரும் யாருக்காகவும் பத்லீ ஹஜ் செய்யலாம்.

ஆமிர் தனக்குப் பகரமாக இன்னார் தான் பத்லீ ஹஜ் செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தால் அவர் தான் அதை நிறைவேற்ற வேண்டும். அவர் குறிப்பிட்டு யாரையும் கூறாதிருந்தால் அவருக்குப் பகரமாக யார் வேண்டுமானாலும் பத்லீ ஹஜ்ஜு செய்யலாம்.

மஃமூர் அதாவது பத்லீ ஹஜ் செய்பவர் ஹஜ்ஜுடைய செயல்களை விளங்கிக் கொள்ளக் கூடிய விளக்கமுள்ளவராக இருக்க வேண்டும்.

 தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றாத ஒருவர்  பிறருக்காக ஹஜ்ஜு செய்வது ஷாஃபியீ  மத்ஹபில் அறவேகூடாது. ஹனஃபீமத்ஹபில் கூடும். எனினும்அது மக்ரூஹ் ஆகும்.

பிறருக்காக ஹஜ்ஜு செய்பவர் ஒருவருக்காக மட்டுமே  ஹஜ்ஜு செய்யமுடியும். இரண்டு பேருக்கு நிய்யத் செய்ய முடியாது.

மக்கா வரை போய் வருவதற்கான நடுத்தரமான செலவுக்கான பணத்தை ஹஜ்ஜுக்குச் செல்கின்ற மஃமூருக்கு ஆமிர் கொடுக்க வேண்டும்.

பத்லீ ஹஜ் செய்து முடித்த பின் ஆமிருடைய பணம் அல்லது பொருள் மீதியிருந்தால் அதை ஆமிரிடமோ அல்லது அவரின் வாரிசுகளிடமோ கொடுத்து விட வேண்டும். அதை தான் வைத்துக் கொள்ளக் கூடாது. எனினும் மீதியுள்ளதை மஃமூர் தன் விருப்பப்படி செலவு செய்ய அனுமதி அளித்தால் அது நல்லதாகும்.

ஆமிரின்  பொருளில் இருந்து ஹஜ் செய்வதாக இருந்தால் பொதுவாக ஆமிருடைய ஊரில் இருந்து புறப்பட்டு ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். அவர் அனுமதித்தாலோ அல்லது வசதிக்கேற்ப வேறு ஊரில் இருந்து புறப்பட்டாலோ அந்த செலவுக்குள் முடியும் என்றிருந்தால் அவ்வாறு செய்யலாம்.

 ஹஜ்ஜுடைய செலவுகளில் அதிகமானதை ஆமிர் கொடுத்த பணத்தில் இருந்து செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் ஆமிருடைய பணம் குறைவாக இருந்து மஃமூரின் பணம் நிறைய இருந்தால் ஹஜ் நிறைவேறாது.

 பத்லீ ஹஜ்ஜில் ஹஜ்ஜுடைய நாளை எதிர் பார்த்து காத்திருக்கும் காலத்திலோ அல்லது ஹஜ்ஜு செய்து முடித்த பிறகுள்ள காலத்திலோ மஃமூர் தனக்காகவும். தன் உற்றார் உறவினர்களுக்காகவும் உம்ராக்களை செய்வதில் தவறேதும் இல்லை. 

ஆனால் இதற்கு ஆகும் செலவினை ஆமிருடைய கணக்கில் சேர்க்காமல் மஃமூரின் கணக்கில் தான் சேர்க்க வேண்டும். ஆமிர் விருப்பப்பட்டால் அவர் செலவில் கூடுதலான அமல்களை செய்யலாம்.

ஹஜ் செய்யும் ஆர்வம் இருந்தும் வசதி குறைவாக உள்ளவருக்கு உதவி செய்து ஹஜ் செய்ய வைப்பதின் நன்மை

عن زيد بن خالد الجهني رضي الله عنه، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  من فطر صائما ، أو أحَجَّ رجلا ، أو جهز غازيا أو خلفه في أهله فله مثل أجره (بيهقي

ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்து விட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது.

அந்த பாக்கியம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும். எத்தனையோ பேர் ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்து அதற்காக தயாராகி கடைசி நேரத்தில் அந்த பாக்கியம் கிடைக்காமல் போன வரலாறுகள் உண்டு. ஜித்தா வரை சென்றவரும் கூட திருப்பி அனுப்பப் பட்டுள்ளார். எனவே ஹஜ்ஜுடைய பாக்கியத்திற்காக அல்லாஹ்விடம் துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவை 800 வருடங்கள் ஆட்சி புரிந்த எத்தனையோ மொகலாய மன்னர்களுக்கு ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கவில்லை.

அல்லாஹ் யாரை நாடினானோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கும்

இப்றாஹீம் அலை அவர்களின் அழைப்பு பதில் அளித்தவர்கள் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் பெற்றவர்கள்

عن ابن عباس قال : لما أمر الله إبراهيم أن ينادي في الناس بالحج صعد أبا قبيس فوضع أصبعيه في أذنيه ثم نادى : إن الله كتب عليكم الحج فأجيبوا ربكم  فأجابوه بالتلبية في أصلاب الرجال وأرحام النساء وأول من أجابه أهل اليمن فليس حاج من يومئذ إلى أن تقوم الساعة إلا من كان أجاب إبراهيم يومئذ (الدر المنثور

  அபூகுபைஸ் மலை மீது ஏறி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைப்புக் கொடுத்த போது பாங்கு சொல்வதைப் போன்று காதுகளில் கை வைத்து அழைப்புக் கொடுத்தார்கள். அவ்வாறு அழைப்புக் கொடுத்த போது அல்லாஹ் நாடியவர்கள் அதற்கு பதிலளித்தனர்.அப்போது இருந்தவர்கள் உட்பட அவரவர் முன்னோர்களின் முகுதுத்தண்டில் இருந்த படியும் பதிலளித்தனர் அவ்வாறு பதிலளித்தவர்கள் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் பெற்ற மக்களாவார்கள்.                                                                            

عن علي رفعه : لما نادى إبراهيم بالحج لبى الخلق فمن لبى تلبية واحدة حج واحدة ومن لبى مرتين حج حجتين ومن زاد فبحساب ذلك (الدر المنثور

இப்றாஹீம் அலை அவர்கள் அழைப்புக் கொடுத்தபோது ஒருமுறை பதில் கொடுத்தவர்கள் ஒருமுறையும் இருமுறை பதில் கொடுத்தவர்கள் இருமுறையும் பல முறை பதில் கொடுத்தவர்கள் பல முறையும் ஹஜ்ஜு செய்யும் பாக்கியம் பெற்றார்கள்

 

பெருமைக்காகவும் மிகவும் சொகுசாகவும், மிகவும் ஆடம்பரமாகவும் ஹஜ் செய்வது நபிவழி அல்ல.

عن ابن مسعود رض أن النبي صلى الله عليه وسلم قال لا تزول قَدَمَا ابنِ آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيم أفناه وعن شبابه فيم أبلاه وعن ماله من أين اكتسبه وفيم أنفقه وماذا عمل فيما علم (الترمذي)  عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ الزَّادُ وَالرَّاحِلَةُ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْحَاجُّ قَالَ الشَّعِثُ التَّفِلُ... رواه ابن ماجة

எதனால் ஹஜ்ஜுக் கடமை ஏற்படும் என நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டபோது வாகனமும் உணவு ஏற்பாடும் என்றார்கள். ஹாஜி என்றால் யார் என்று புழுதி கலந்த உடையுடன் தலை விரி கோலமாக இருப்பவர் என்றார்கள். அரஃபாவில் பல ஹாஜிகளின் நிலை அவ்வாறு தான் இருக்கும்.

عن عمر بن عبد العزيز رحمة الله عليه قال "إن الله تعالى جعل هذا السفر نسكا ، وسيجعله الظالمون نكالا "(ابن عساكر)

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் இந்த ஹஜ்ஜை வணக்கமாக ஆக்கியுள்ளான். ஆனால் அநியாயக்காரர்கள் அதனை தண்டனைக்குரியதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

عن أنس رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يأتي على الناس زمان يَحُجُّ أغنياء الناس لِلنَّزَاهَة ، وأوساطهم للتجارة وقُرَّاؤُهم للرياء والسمعة وفقراؤهم للمسألة (كنز العمال) للنزاهةசுற்றுலாவுக்கு  

கடைசியில் ஒரு காலம் வரும். பணக்காரர்கள் சுற்றுலாவுக்குச் செல்வது போன்று ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். நடுத்தர மக்கள் வியாபார நோக்கத்தோடு ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். காரிகள் அதாவது ஆலிம்கள் விளம்பரம் மற்றும் பெருமைக்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். ஏழைகள் யாசிப்பதற்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள்.

குறிப்பு 

ஹஜ் என்பது ஒரு புனிதமான வணக்கம்

அத்தகைய புனிதமான வணக்கத்தை அல்லாஹ் விதித்த கட்டளைகளுக்கு உட்பட்டே நாம் நிறைவேற்ற வேண்டும்

அந்த வகையில் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் 

لا  تسافر المرأة الا مع ذي محرم  رواه البخاري 

ஒரு பெண் மஹ்ரமான ஆணின் துணை இல்லாமல் பிரயாணம் செய்ய வேண்டாம்

என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்துள்ளார்கள்

சாதாரண பிரயாணத்திற்கே இவ்வாறு  என்றால் ஹஜ் என்கிற புனிதமான  வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு மஹ்ரம் துணையில்லாமல் சென்றால் அந்த நற்காரியத்தை அல்லாஹ் ஏற்க மாட்டான்

 இப்போதுள்ள  அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம் ஆனால் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை 

ஆனால் இன்றைக்கு  பல பெண்கள்  அரசாங்கமே அனுமதி கொடுக்கும் போது பெண்கள் ஏன் மஹ்ரம் துணையில்லாமல் செல்லக்கூடாது என்று நினைக்கிறார்கள் 

 அரசாங்கம் கச்சேரி, டான்ஸ், மது,  சினிமா ஆகியவற்றுக்கெல்லாம் அனுமதி கொடுக்கும்

 அதற்காக அதை கூடும் என்று நாம் சொல்லிவிட முடியாது எனவே இந்த விஷயத்தில் பெண்கள்  அல்லாஹ்விற்கு பயந்து நடக்க வேண்டும்

மஹ்ரம் இல்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வதை அறவே விட்டு விட வேண்டும் 

அவ்வாறு சென்றால் அந்த ஹஜ் கூடாது என்பதையும்  பெண்கள் விளங்க வேண்டும் 


கடந்த வருடம் கேரளாவில் இருந்து பெண்கள் பெரும் குழுவாக ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பிய செய்தியை நாம் அறிவோம்

இத்தகைய வரம்பு மீறுதல் தடுக்கப் பட வேண்டும் 

இது சம்பந்தமாக மஹல்லா தோறும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்



                                                                                               

புதன், 6 டிசம்பர், 2023

புயல் தரும் படிப்பினைகள்

புயல் தரும் படிப்பினைகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ ،رضي الله عنه  أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، قَالَ : لَيْسَ السَّنَةُ بِأَنْ لا تُمْطَرُوا ، وَلَكِنَّ السَّنَةَ أَنْ تُمْطَرُوا ثُمَّ تُمْطَرُوا ثُمَّ لا تُنْبِتُ الأَرْضُ شَيْئًا. (مسند الشافعي

நபி ஸல் கூறினார்கள். மழையே இல்லாத தால் ஏற்படும் பஞ்சம் உண்மையான பஞ்சம் அல்ல. மாறாக மழை அளவுக்கு அதிகமாகப் பெய்து (வயல்கள் வீணாகி அதனால்) பூமி எதையும் விளைவிக்காமல் போகுமோ அது தான் உண்மையான பஞ்சமாகும்.

عن أنس بن مالك رضي الله عنه يقول : قال رسول الله صلى الله عليه و سلم : يأتي على الناس زمان تمطر السماء مطرا و لا تنبت الأرض شيئا (مستدرك حاكم

கடைசியில் ஒரு காலம் வரும். மழை அளவுக்கு அதிகமாகப் பெய்யும். அதனால் (வயல்கள் வீணாகி) பூமி எதையும் விளைவிக்காமல் போகும்.

 

பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை நினைவு படுத்திய புயல் பாதிப்பு

நவீன சாதனங்களால் நன்மையா தீமையா என விவாதங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தாலும் அவற்றுடன் பழகிப் போன சமூகத்திற்கு அது இல்லாமல் வாழ முடியாது. அத்தகைய நவீன சாதனங்களில் ஒன்றான மின்சாரம் இல்லாமல் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்பதை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் பார்த்தோம். மஃரிபுக்கே வீடுகள் முழுவதும் இருட்டாகி விட்டன. இப்படித் தான் பழங்கால மக்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.                                                            

சிரமத்திலும் சில நன்மைகள்

 எல்லா சீரியல் தொடர்களையும் பார்த்து முடித்து இரவு 12 மணிக்குத் தூங்கும் பெண்களும் சொல்போன் சார்ஜ் தீர்ந்து SWITCH-OFF ஆகும் அளவுக்கு எல்லா விளையாட்டுக்களையும் விளையாடி முடித்து இரவு 12 மணிக்குத் தூங்கும் சிறுவர்களும் அன்று சீக்கிரமாக தூங்கினார்கள். அது தான் சுன்னத்தும் கூட..

عَنْ أَبِي بَرْزَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا (أي قبل العشاء وَالْحَدِيثَ بَعْدَهَا..(بخاري)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழாமல் தூங்குவதையும் இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதையும்  தடுத்தார்கள்

لِأَنَّ النَّوْم قَبْلَهَا قَدْ يُؤَدِّي إِلَى إِخْرَاجهَا عَنْ وَقْتهَا مُطْلَقًا أَوْ عَنْ الْوَقْت الْمُخْتَار وَالسَّمَر بَعْدَهَا قَدْ يُؤَدِّي إِلَى النَّوْم عَنْ الصُّبْح أَوْ عَنْ وَقْتهَا الْمُخْتَار أَوْ عَنْ قِيَام اللَّيْل (فتح الباري)

இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதால் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் போகலாம் என்பதால் நபி ஸல் அவ்வாறு தடுத்தார்கள். ஃபத்ஹுல் பாரீ                               

அன்றைய காலத்தில் கூறப்பட்ட வீண் பேச்சுக்கள் என்ற பட்டியலில் இன்றுள்ள பொழுது போக்கு சாதனங்களும் அடங்கும். இத்தகைய பொழுது போக்கு சாதனங்களால் இன்று மக்களின் தூக்கம் தாமதமாகி விட்டது        

عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ قَال:رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ النَّاسَ عَلَى الْحَدِيثِ بَعْدَ الْعِشَاءِ وَيَقُولُ:أَسَمَرٌ أَوَّلَ اللَّيْلِ وَنَوْمٌ آخِرَهُ ؟

(مصنف ابن ابي شيبة)-

 உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுபவர்களை அடிப்பவர்களாக ஆயிருந்தார்கள். மேலும் இரவில் துவக்கத்தில் தூங்குவதற்கு பதிலாக பேசிக் கொண்டிருந்து விட்டு இரவில் கடைசிப் பகுதியில் தூங்கப் போகிறீர்களா என்றும் கண்டிப்பார்கள்.                   

عَنْ أَبِي وَائِلٍ وَإِبْرَاهِيمَ قَالاَ: جَاءَ رَجُلٌ إِلَى حُذَيْفَةَ فَدَقَّ الْبَابَ فَخَرَجَ إِلَيْهِ حُذَيْفَةُ فَقَالَ:مَا جَاءَ بِكَ ؟فَقَالَ:جِئْت لِلْحَدِيثِ فَسَفَقَ حُذَيْفَةُ الْبَابَ دُونَهُ  ثُمَّ قَالَ:إِنَّ عُمَرَ جَدَبَ لَنَا السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ(مصنف ابن ابي شيبة

ஹுதைபா ரழி அவர்களிடம் இரவில் ஒருவர் வந்து தகவைத் தட்டினார். ஹுதைபா ரழி வெளியே வந்து இந்த நேரத்தில் எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, உங்களிடம் பேசிக் கொண்டிருக்க வந்தேன் என்றார். அப்போது ஹுதைபா ரழி அவர்கள் (அவரைக் கண்டிக்கும் விதமாக) உமர் ரழி இஷாவுக்குப் பிறகு வீண் பேச்சுக்கள் பேசுவதை முற்றிலும் தடை செய்தார்கள் என்று கூறி விட்டு கதவைச் சாத்திக் கொண்டார்கள்.          

وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ فِى السَّمَرِ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ فَكَرِهَ قَوْمٌ مِنْهُمُ السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ وَرَخَّصَ بَعْضُهُمْ إِذَا كَانَ فِى مَعْنَى الْعِلْمِ وَمَا لاَ بُدَّ مِنْهُ مِنَ الْحَوَائِجِ (ترمذي)

மார்க்க விஷயங்களுக்காக சில நேரம் விழித்திருக்கும் தேவை ஏற்பட்டால் தவறில்லை

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ فَإِنْ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ.(بخاري)

ஷைத்தான் நீங்கள் தூங்கும்போது உங்களின் பிடரியில் முடிச்சுப் போடுகிறான். இரவு நீளமாக உள்ளது. நன்றாக (விடியும் வரை) தூங்கு என (மனிதனை மயக்கி வைக்கிறான்) எப்போது ஒருவர் அதிகாலையில் எழுந்து அல்லாஹ்வை நினைப்பாரோ அப்போது முதல் முடிச்சு அவிழும். எப்போது அவர் உளூச் செய்வாரோ  அப்போது இரண்டாவது முடிச்சு அவிழும். எப்போது அவர் ஃபஜ்ரு தொழுவாரோ அப்போது மூன்றாவது முடிச்சு அவிழும். இம்மூன்றும் நடைபெறா விட்டால் அன்று முழுவதும் ஷைத்தானின் கட்டுப்பாட்டில் உள்ளவராகவே இருப்பார்.    

عن عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: "النَّوْمُ ثَلَاثَةٌ: فَنَوْمٌ خَرَقٌ، وَنَوْمٌ خَلَقٌ، وَنَوْمٌ حُمْقٌ، فَأَمَّا نَوْمُ خَرَقٍ: فَنَوْمَةُ الضُّحَى يَقْضِي النَّاسُ حَوَائِجَهُمْ وَهُوَ نَائِمٌ، وَأَمَّا نَوْمُ خَلَقٍ: فَنَوْمَةُ الْقَايِلَةِ نِصفِ النَّهَارِ، وَأَمَّا نَوْمَةُ حُمْقٍ: نَوْمَةٌ حِينَ تَحْضُرُ الصلَاةُ ؟(مصنف ابن ابي شيبة)

விளக்கம்-பண்புள்ள தூக்கம் என்றால் மதிய நேரத்தில் தூங்கும் கைலூலா தூக்கம். இது சுன்னத். 2,மடத்தனத் தூக்கம் என்றால் காலை நேரத்தில் தூங்குவது 3, மந்த புத்தியை ஏற்படுத்தும் தூக்கம் தொழுகை நேரத்தில் தூங்குவது

            சிரமத்திலும் மற்றும் சில நன்மைகள்.

தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் தங்க முடியாத மக்களுக்கு மஸ்ஜித்கள் வீடுகளாக மாறின

இது சிறந்த முன்மாதிரியாகும். மஸ்ஜித்கள் என்பது வெறுமனே தொழுகைக்காக மட்டும் உள்ளதல்ல. மாறாக பல்வேறு சேவைகளுக்கும் மஸ்ஜித் பயன்பட வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக நாம் விளங்க வேண்டும்.

மழை, புயலால் எத்தனை பெரிய பாதிப்புகள் வந்தாலும் அவற்றைத் திட்டவும் சபிக்கவும் கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسُبُّوا الرِّيحَ فَإِنَّهَا مِنْ رَوْحِ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا (ابن ماجة

காற்றைத் திட்டாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். சில நேரங்களில் அது அருளாகவும் சில நேரங்களில் அது அதாபாகவும் இருக்கும். எனவே அல்லாஹ்விடம் அதன் நல்லதைக் கேளுங்கள். அதன் தீமையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேளுங்கள்.                                           

عَنِ الْحَسَنِ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ فِي سَيْرٍ ، فَهَبَّتْ رِيحٌ ، فَكَشَفَتْ عَن رَجُلٍ قَطِيفَةً كَانَتْ عَلَيْهِ ، فَلَعَنَهَا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم : ألَعَنْتهَا ؟ قَالَ : يَا رَسُولَ اللهِ ، كَشَفَتْ قَطِيفَتِي ، فَقَالَ : إذَا رَأَيْتهَا فَسَلَ اللَّهَ مِنْ خَيْرِهَا ، وَتَعَوَّذْ بِاَللَّهِ مِنْ شَرِّهَا ، وَلاَ تَلَعَنَهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ. (مصنف ابن ابي شيبة

நபி ஸல் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்த போது காற்று வேகமாக வீசியது. ஒருவரின் மேலாடையை காற்று கொண்டு சென்று விட்டது. உடனே அதை சபித்தார். அப்போது நபி ஸல் அவர்கள் காற்றை  சபித்தீர்களா என்று கேட்டார்கள். அப்போது அவர் ஆம் அது என்னுடைய ஆடையை நீக்கி விட்டது என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் அவ்வாறு திட்டாதீர்கள். அல்லாஹ்விடம் அதன் நல்லதைக் கேளுங்கள். அதன் தீமையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேளுங்கள் ஏனெனில் அது அல்லாஹ்வினால் ஏவப்பட்டதாகும் என்றார்கள்.     

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لاَ تَسُبُّوا اللَّيْلَ ، وَلاَ النَّهَارَ ، وَلاَ الشَّمْسَ ، وَلاَ الْقَمَرَ ، وَلاَ الرِّيحَ ، فَإِنَّهَا تُبْعَثُ عَذَابًا عَلَى قَوْمٍ , وَرَحْمَةً عَلَى آخَرِينَ.  (مصنف ابن شبية)

 இரவையோ பகலையோ சூரிய(னால் ஏற்படும் வெப்பத்தி)னையோ சந்திரனையோ காற்றையோ திட்டாதீர்கள். ஏனெனில் அவை ஒரு சாராருக்கு அருளாகவும் வேறு சிலருக்கு அதாபாகவும் இருக்கும்.                  

மழை, இடி, மின்னல், புயல் ஆகியவை அல்லாஹ்வின் படைகள். மேற்படி ஹதீஸின் விளக்கம்

இந்தப் புயலால் கடந்த காலங்களில் சில உம்மத்துகள் அழிக்கப்பட்டுள்ளனர். காற்றின் மூலமாக ஆத் கூட்டத்தார்கள் அழிக்கப்பட்டார்கள். மேலும் அதே காற்றின் மூலமாக அகழ்ப்போரின் போது மக்கா காஃபிர்களை அல்லாஹ் விரட்டியடித்தான்

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ (بخاري) باب غَزْوَةُ الْخَنْدَقِ وَهْىَ الأَحْزَابُ -كتاب المغازي

  விளக்கம்- சுமார் பத்தாயிரம் பேர் மக்காவிலுருந்து திரண்டு வருவதைக் கேள்விப்பட்ட நபி ஸல் அவர்கள் மதீனாவுக்குள் அவர்களை வர விடாமல் தடுக்க அகழ் தோண்டினார்கள். காஃபிர்களின் படை அகழிக்கு அந்தப்பக்கம் இருந்து கொண்டு கற்களையும் அம்புகளையும் வீசி தாக்க்குதல் நடத்தினார்கள் பதிலுக்கு முஸ்லிம்களும் அதேபோல் தாக்கினார்கள் இந்தச் சண்டை சுமார் 15 நாட்கள் நீடித்தது. அதன் பின்பு அல்லாஹ் எதிரிகளின் பகுதியில் மட்டும் சூறாவளி காற்றை அல்லாஹ் அனுப்பினான் அது அவர்களின் கூடாரங்கள் நாசமாக்கியது அவர்கள் மூட்டியிருந்த அடுப்புகளையெல்லாம் அணைத்து விட்டது இறுதியில் அவர்கள் வேறு வழியில்லாமல் அங்கிருந்து விரண்டோடினார்கள்.                                          

தபூர் என்ற புயல் காற்றின் மூலம் ஆது கூட்டம் அழிக்கப்பட்ட விதம்

வானில் மேகங்கள் திரண்டபோது மழை வரப் போகிறது என ஆது கூட்டம் மகிழ்ந்தார்கள். ஆனால் கடும் புயலாக இருந்தது.

عن ابن عباس رضي الله عنه في قوله تعالى : فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ(الاحقاف24  قالوا :غيم فيه مطر قال : بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم وأول ما عرفوا أنه عذاب رأوا ما كان خارجا من رجالهم ومواشيهم يطير من السماء إلى الأرض مثل الريش دخلوا بيوتهم ، وأغلقوا أبوابهم فجاءت الريح ففتحت أبوابهم ومالت عليهم بالرمل ، فكانوا تحت الرمل سبع ليال وثمانية أيام حسوما لهم أنين ثم أمر الريح فكشفت عنهم الرمل  وأمر بها فطرحتهم في البحر فهو قوله تعالى : فأصبحوا لا يرى إلا مساكنهم (رواه ابن ابي الدنيا)

ஆது கூட்டத்தினர் ஆகாயத்தில் பார்த்த போது ஏதோ மழை மேகம் என்று எண்ணி மகிழ்ந்தார்கள். ஆனால் கீழே இறங்க இறங்க அது கடும் புயலாக மாறியது.  அந்தப் புயலின் வேகத்தால் மனிதர்களும், கால்நடைகளும் வானத்தில் காகிதம் போல பறப்பதைப் பார்த்து மற்றவர்கள் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து கதவுகளைத் தாழிட்டனர். ஆனால் அந்தப் புயல் வீசிய வேகத்தில் கதவுகள் தானாக திறந்தவுடன் வெளியே உள்ள மண்ணையெல்லாம் கொண்டு வந்து உள்ளே போட்டது. வீடு முழுவதும் மண்ணால் நிரம்ப அதற்கடியில் அவர்கள் சிக்கிய படி முனகியபடி உயிருக்குப் போராடினார்கள். ஆனால் அவர்களின் உயிரையும் அல்லாஹ் போக்கவில்லை. எட்டு நாட்கள் கடந்து மீண்டும் புயல் வீட்டுக்குள் இருந்த மண்ணையெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு அவர்களையும் வெளியே கொண்டு வந்தது. வானத்தில் காகிதம் போல பறந்தார்கள். கடைசியில் தங்களை பலசாலிகள் என பெருமையடித்த அவர்கள் அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டார்கள்.                  

நபிகளாரின் காலத்தில் ஒரே ஒரு கெட்ட மனிதனின் அழிவுக்காகவும் புயல் வீசியுள்ளது

عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مِنْ سَفَرٍ فَلَمَّا كَانَ قُرْبَ الْمَدِينَةِ هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ تَكَادُ أَنْ تَدْفِنَ الرَّاكِبَ فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُعِثَتْ هَذِهِ الرِّيحُ لِمَوْتِ مُنَافِقٍ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ فَإِذَا مُنَافِقٌ عَظِيمٌ مِنْ الْمُنَافِقِينَ قَدْ مَاتَ (مسلم) قيل هو رفاعة بن دريد والسفر غزوة تبوك

நபி ஸல் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்து திரும்பும்போது கடும் புயல் வீசியது. வாகன ஓட்டியைக் கீழே தள்ளும் அளவுக்க்கு அதன் கடுமை இருந்தது. அப்போது நபி ஸல் அவர்கள் இந்தப் புயல் ஒரு முனாஃபிக்குடைய மவ்த்திற்காக அவனது இறப்பின் அடையாளமாக அனுப்புப் பட்டுள்ளது என்றார்கள். அவ்வாறே மதீனாவை அடைந்த போது ரிஃபாஆ என்ற முனாஃபிக் இறந்திருந்தான்.

மழையிலும் ரஹ்மத்தான மழை, அதாபான மழை என பல்வேறு வகை உண்டு

عَنْ أَبِي هُرَيْرَةَ ،رضي الله عنه  أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، قَالَ : لَيْسَ السَّنَةُ بِأَنْ لا تُمْطَرُوا ، وَلَكِنَّ السَّنَةَ أَنْ تُمْطَرُوا ثُمَّ تُمْطَرُوا ثُمَّ لا تُنْبِتُ الأَرْضُ شَيْئًا. (مسند الشافعي

நபி ஸல் கூறினார்கள். மழையே இல்லாத தால் ஏற்படும் பஞ்சம் உண்மையான பஞ்சம் அல்ல. மாறாக மழை அளவுக்கு அதிகமாகப் பெய்து (வயல்கள் வீணாகி அதனால்) பூமி எதையும் விளைவிக்காமல் போகுமோ அது தான் உண்மையான பஞ்சமாகும்.

புயல் போன்ற ஆபத்துகள் ஏற்படும்போது நபி ஸல் அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறிருக்கும்

வானில் வித்தியாசமான தோற்றம் தெரிந்தாலே நபி (ஸல்) பள்ளிக்குச் சென்று வணக்கத்தில் ஈடுபடுவார்கள்

عن أبي الدرداء رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة ريح كان مفزعه إلى المسجد حتى تسكن الريح ، وإذا حدث في السماء حدث من كسوف شمس أو قمر ، كان مفزعه إلى الصلاة حتى تنجلي (رواه ابن ابي الدنيا)

மேகம் திரள்வது கூட கடும் புயலாக இருக்கலாம் என நபி ஸல் அவர்கள் அஞ்சுவார்கள். மழை பொழிந்தால் மட்டுமே நிம்மதியடைவார்கள்.

عن عَائِشَة رضي الله عنها قَالَتْ مَا رَأَيْتُ فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَيْجًا حَتَّى يَرَى غَيْمًا فَإِذَا أَمْطَرَ ذَلِكَ الْغَيْمُ ذَهَبَ ذَلِكَ الْهَيْجُ(احمد

இடி, மின்னல் தாக்காதிருக்க துஆ.

عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ رضي الله عنهم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ قَالَ اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ (ترمذي)

அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருப்பவரை இடியும், மின்னலும் தாக்காது

عن أبي جعفر محمد بن علي قال الصواعق تصيب المسلم وغير المسلم ولا تصيب ذاكرا -  عن ابن أبي زكريا قال:من سمع الرعد فقال:سبحان الله وبحمده لم تصبه صاعقة (رواهما ابن ابي الدنيا)

கடும் சூறாவளி காற்று வீசினால் ஓத வேண்டிய துஆ

عَنْ أَنَس  أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا هَاجَتْ رِيح شَدِيدَة قَالَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلك مِنْ خَيْر مَا أُمِرَتْ بِهِ وَأَعُوذ بِك مِنْ شَرّ مَا أُمِرَتْ بِه- مسند أبي يعلى

மக்களின் சுயநலம் மற்றும் அதிகாரிகள் வாங்கும் இலஞ்சம் ஆகியவற்றால் நீர் நிலைகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டன. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்த து என்று கூறுவதை விட நீர் நிலைகளில் நாம் குடியிருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தம்.

  2015 சென்னை பெருவெள்ளத்தின்போது 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தார்கள். 260-க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்கள். மிகப்பெரிய பேரிழப்பை  சென்னை சந்தித்தது. ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் அதன் வடுவும் மாறவில்லை. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்த அதிகாரிகள் குழு,‘சென்னை நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும், மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படாததும்தான் வெள்ளம் நகருக்குள் புகுந்ததற்குக் காரணம்.இதை உடனடியாகச்சரிசெய்ய வேண்டும்என கூறியிருந்தது. இதற்கடுத்து அரசாங்கம் ஏதோ அப்போதைக்கு மட்டும் அதிரடியாக சில ஆக்கிரமிப்புகளை அகற்றியதே தவிர அதற்கடுத்து அது கிடப்பில் போடப்பட்டது. 2019, ஜூலை 15-ம் தேதி அப்போதையமுதல்வர் ஒரு கேள்விக்கு பதில் கூறும்போது நாட்டில் ‘71,262 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றில், 17,400 ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி, தகுந்த முடிவு எடுக்கப்படும்என்றார். ஆனால் 53,862 ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன.அப்போதைய முதல்வர் அகற்றியதாக கூறிய 17,400ஆக்கிரமிப்புகளும் கல்வித் தந்தைகள்கட்டிய கல்லூரிகளோ, கார்ப்பரேட் மருத்துவமனைகளோ,  பிரமாண்டமான ஜவுளிக்கடைகளோ மலைக்கவைக்கும் மால்களோ அல்ல. மாறாக அரசு அகற்ற உத்தரவுபோட்ட அனைத்தும் வெள்ளம் வந்தால், தானாக மிதந்து சென்று விடுகின்ற ஓலைக் குடிசைகள்தான். பாடிக்கு அருகேயுள்ள பிரபல துணிக்கடை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தை ஒரு குளத்தின்மீது அமைத்திருக்கிறார்கள். இதற்கு வருவாய்த்துறையே விதிமுறையை மீறி பட்டா தந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை மாதவரம் மண்டலத்தில் புத்தகரம் தாங்கல் ஏரி ஆக்கிரமிப்புகளால் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. 2016-ல் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆரம்பித்த போதே ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடங்கியது. இன்று தமிழக அரசே அந்த ஏரியில் கழிவுநீர் அகற்றும் மையத்தை அமைத்ததுள்ளது. சில இடங்களில் ஆற்றுப்பாலங்கள் ஐந்து வருடங்களாக கட்டப்படுகிறது. கூவம் ஆற்றைச் சீரமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்தது. ஆனால்கரையோரம் சில பணக்காரர்கள் வசிக்கும் இடங்களில் மட்டும் கூவம் ஆறு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.                       

காணாமல் போன நதிகள்

நாட்டின் விடுதலைக்கு முன் தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கும் குறைவாக 20,000 நீர்நிலைகள் மட்டுமே உள்ளன. இதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகள்தான்.

ஆபத்து வருவதற்கு முன்பே சுதாரித்துக் கொள்வதை கற்றுத் தரும் இஸ்லாம்

يُوسُفُ أَيُّهَا الصِّدِيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (سورة يوسف49)...

இச்சம்பவத்தில் நிறைய படிப்பினைகள் உண்டு. பஞ்சமான அந்த வருடங்களை தன்னால் சிறப்பாக சமாளிக்க முடியும் என்பதால் நபி யூசுஃப் அலை தானாக விரும்பி இந்தப் பொறுப்பைத் தனக்குத் தரும்படி கேட்டார்கள். பஞ்சமான அந்தக் கால கட்டங்களில் நபி யூசுஃப் அலை ஒரு நேரம் மட்டுமே உணவு உண்டார்கள் என்றும் சில விரிவுரைகளில் உள்ளது. தகுதியுள்ள தலைவர்கள் மக்களுக்குப் பொறுப்பேற்பதை விட்டும் ஒதுங்கக் கூடாது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.                  

وفي الخبر: "يرحم الله أخي يوسف لو لم يقل اجعلني على خزائن الأرض لاستعمله من ساعته ولكن أخر ذلك سنة" . وقيل: إنما تأخر تمليكه إلى سنة لأنه لم يقل إن شاء الله. (قرطبي

நபி யூசுஃப் அலை தானாக விரும்பி பொறுப்பைக் கேட்காமல் இருந்திருந்தால் அப்போதே அந்த அரசர் பொறுப்பை ஒப்படைத்திருப்பார். எனினும் அவ்வாறு விரும்பிக் கேட்டதால் ஒரு வருடம் சோதித்துப் பார்த்த பிறகே அந்த அரசர் பொறுப்பை ஒப்படைத்தார் என்றும் மற்றொரு அறிவிப்பில் நபி யூசுப் அலை இன்ஷா அல்லாஹ் சொல்லாததால் ஒரு வருடம் தாமதம் ஆனது என்றும் கூறப்பட்டுள்ளது.                     

நீர் நிலைகள் மாசு படாமல் பாதுகாப்பதை இஸ்லாம் அதிகம் வலியுறுத்தியுள்ளது

عَنْ جَابِرٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ (مسلم) كتاب الطهارة

மக்களுக்காக நீர் ஆதாரத்தை உருவாக்குவதில் முஸ்லிம் முன்னோடிகளின் பங்கு

பக்தாத் பேரரசர் கலீபா ஹாருன் ரஷீதின் மனைவி ஜுபைதா  அம்மையார் மக்காவில் ஏற்பட்ட தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்கக் கால்வாய் ஒன்றை பத்துமைல் நீளத்திற்கு உருவாக்கினார்.  நஹ்ர் ஜுபைதா என்ற பெயரில் இன்றும் உள்ளது.   

قال رسول الله صلى الله عيه وسلم من يشتري بئر رومة فيجعلها للمسلمين يضرب بدلوه فى دلائهم وله بها مشرب فى الجنة فساومه فيها عثمان فأبى أن يبيعها كلها فاشترى نصفها باثنى عشر ألف درهم وجعل ذلك للمسلمين وجعل له يوما ولليهودى يوما فإذا كان يوم عثمان استقى المسلمون ما يكفيهم يومين فلما رأى اليهودى ذلك قال لعثمان أفسدت على ركيتى فاشترى النصف الآخر بثمانية آلاف (سيرة الحلبية

மதீனாவில் மிகவும் சுவையான கிணறாக இது இருந்தது நபி ஸல் ஒருமுறை  யார் இதை அந்த யூதனிடமிருந்து வாங்கி மக்களுக்கு வக்ஃப் செய்வார்களோ அவருக்கு சுவனத்தில் அதுபோன்றக நீர் நிலை உண்டு என்றவுடன் உஸ்மான் ரழி போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்க யூதனிடம் சென்ற போது அதை அவன் விட்டுக் கொடுக்க மறுத்தான் எப்படியோ சம்மதிக்க வைத்து 12 ஆயிரம் திர்ஹம் தந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் அந்தக் கிணற்றின் உரிமையை பெற்றார்கள். தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கு தண்ணீரை இலவசமாக சப்ளை செய்தார்கள். ஆனால் அந்த யூதன் காசுக்கு மட்டுமே விற்றான். நாளடைவில் அவனிடம் காசு கொடுத்து யாரும் வாங்காத ஒரு நிலை ஏற்பட்டது. ஏனெனில் உஸ்மான் ரழி தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்ததால் அவனிடம் யாரும் வாங்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் மீதி உரிமையையும் விட்டுத் தந்தான். மொத்தம் 20 ஆயிரம் திர்ஹம் தந்து விலைக்கு வாங்கி மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்கள்.- சீரத்துல் ஹலபிய்யா             

ஹிஜ்ரத்

 12-06-2026 துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم          ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும்  இஸ்லாமியப் புத்தாண்டு https://chennaijamaathulula...