வியாழன், 26 செப்டம்பர், 2024

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழுகையும் சிரிப்பும்

 

قال الله تعالي فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ (82التوبة)

நபி ஸல் அவர்கள் தமது வாழ்நாளில் யாரிடமும் கடுகடுப்பாகப் பேசியதில்லை. மாநபி ஸல் ல ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிச் சிறப்பே அவர்களின் மலர்ந்த முகம் தான்.

மக்களோடு மக்களாக  இருந்து கல கலப்பாகப் பேசுபவர்களாக நபி ஸல் அவர்கள் இருந்தார்கள்.

சின்னப் பூனையை கூடவே வைத்திருந்தவரை அபூஹுரைரா என்று அழைத்ததைப் போல இன்னும் ஒரு சம்பவம்

عَنِ أَبِي الْوَرْدِ قَالَ رَآنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَآنِي رَجُلا أَحْمَرَ فَقَالَ أَنْتَ أَبُو الْوَرْدِ (شرح السنة)

அபுல் வர்த் ரழி அறிவித்துள்ளார்கள். என்னை சிவப்பான மனிதராக இருக்க க் கண்டு நீர் சிவப்பின் தந்தை என்று   பட்டப் பெயர் கூறினார்கள் (அன்று முதல் அதுவே என் பெயராக மாறி விட்டது)

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَيْهِ لَأَبُو تُرَابٍ وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا وَمَا سَمَّاهُ أَبُو تُرَابٍ إِلَّا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ فَاضْطَجَعَ إِلَى الْجِدَارِ إِلَى الْمَسْجِدِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُهُ فَقَالَ هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الْجِدَارِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَامْتَلَأَ ظَهْرُهُ تُرَابًا فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ اجْلِسْ يَا أَبَا تُرَابٍ  (بخاري

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை மற்றவர்கள் அபுத்துராப் மண்ணின் தந்தையே என்று அழைத்தால் அது ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். முதன் முதலில் ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை அவ்வாறு அழைத்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான். ஒருநாள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது ஏற்பட்ட மனச்சங்கடம் காரணமாக அவர்கள் மஸ்ஜிதுக்குச் சென்று வெறும் தரையில் சுவற்றை நோக்கி படுத்துக் கொண்டார்கள். இதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று நேரத்தில் அங்கு வந்து அலீ (ரழி) அவர்களை எழுப்ப, அலீ (ரழி) அவர்களின் முதுகு முழுவதும் மண்ணாக இருப்பதைக் கண்டு யா அபத்துராப்  மண்ணின் தந்தையே என்று அழைத்தார்கள். பின்பு அலீ (ரழி) அவர்களின் முதுகில் இருந்த மண்ணைத் தட்டி விட்டார்கள். யா அபத்துராப் எழுந்து அமருங்கள் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். நூல் புகாரீ                                                       

கிழவிகளெல்லாம் சுவனம் செல்ல மாட்டார்கள் என நகைச்சுவையாக கூறி பின்பு அதற்கு விளக்கம் சொன்ன விதம்

عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال أن النبي صلى الله عليه وسلم قال لامرأة عجوز إنه لا يدخلُ الجنةَ عجوز فقالت: وما لهنَّ ؟ وكانت تقرأ القرآنَ فقال لها : أما تقرئين القرآن { إنا أنشأناهنَّ إنشاء فجعلناهنَّ أبكارا عُرُبا أتْرابا [ الواقعة 35] رواه رزين

ஒட்டகம் வேண்டும் என கேட்டவரிடம் ஒட்டகக்குட்டி தான் தருவேன் என நகைச்சுவையாக கூறி பிறகு  ஒவ்வொரு ஒட்டகமும் அதன்  தாய்க்கு குட்டி  தானே. அதைத் தான் அவ்வாறு  கூறினேன் என்றார்கள்.  

عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا اسْتَحْمَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي حَامِلُكَ عَلَى وَلَدِ النَّاقَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَلْ تَلِدُ الْإِبِلَ إِلَّا النُّوقُ (ترمذي)ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டி தான்

கண்ணில் வெண்மை இருக்குமே அவர் தானே உன் கணவர் என்று ஒரு பெண்ணிடம் நகைச்சுவையாக கேட்க, என் கணவரை நீங்கள் பார்த்ததில்லையே என்ற போது எல்லோருடைய கண்களிலும் வெண்மை இருக்குமே அதைச் சொன்னேன் என்றார்கள்

عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال سمعت النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول لامرأة :زوُجكِ ذلك البياضُ في عينيه ؟ قالت:عَقْرَى ومتى رأيتَه ؟ قال:وهل من عين إلا وفيها بياض ؟(رزين

அழகற்ற தோற்றமுள்ள காய்கறி வியாபாரியை முதுகுக்குப் பின் வந்து கட்டிப்பிடித்து அவரிடம் தமாஷாக பேசிய..

عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرَ بْنَ حَرَامٍ وَكَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنَ الْبَادِيَةِ1 فَيُجَهِّزُهُ 2رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ قَالَ  وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ دَمِيمًا3 فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ لا يُبْصِرُهُ فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا ؟ فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لا يَأْلُو مَا أَلْزَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ:مَنْ يَشْتَرِي الْعَبْدَ ؟ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا4 فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ :لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ5(سنن الكبري للبيهقي)

நபி ஸல் அவர்களிடம் ஒரு வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள் தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக்  கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள் தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசாகவே  என்னை நீங்கள்  பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும் விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள் விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.                                                                                                                         

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சில் நகைச்சுவை இருந்தாலும் அதில் பொய் இருக்காது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا قَالَ إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا رواه الترمذي (تُدَاعِبُنَا أي تُمازحنا)

பிறர் மனதை புண்படுத்தக்கூடிய. அல்லது பதட்டமடையச் செய்யக்கூடிய விளையாட்டும், கேலிப்பேச்சும் கூடாது

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَامَ رَجُلٌ مِنْهُمْ فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى حَبْلٍ مَعَهُ فَأَخَذَهُ فَفَزِعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا(ابوداود)وفي رواية لَا يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ أَخِيهِ لَاعِبًا وَلَاجَادًّا6

நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடம் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்

عَنْ جَرِيرٍ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا (بخاري6089

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லைஎன்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்குஎன்று பிரார்த்தனை செய்தார்கள்.

சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவராகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதை (புன்னகைப்பதை) மார்க்கம் வலியுறுத்துகிறது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ترمذي) عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوْ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ (مسلم

மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி மற்றவர்களையும் ஏவினார்கள்

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة

கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம் உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ,  முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில் போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர் ஊற்றுவதும் தர்மம். (அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).                              

நபி ஸல் அவர்களைப் போன்ற முக மலர்ச்சி உடையவர்களைப் பார்க்க முடியாது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه الترمذي

தோழர்களிடம் நபி ஸல் அவர்கள் கடுகடுப்பாக இருக்காமல் கலகலப்பாக சிரித்துப் பேசிய நிகழ்வுகள் தான் அதிகம் உண்டு.

عَنْ خَارِجَهَ بْنِ زَيْدٍ : أَنَّ نَفَرًا دَخَلُوا عَلَى أَبِيهِ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَقَالُوا : حَدِّثْنَا عَنْ بَعْضِ أَخْلاَقِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ : كُنْتُ جَارَهُ فَكَانَ إِذَا نَزَلَ الْوَحْىُ بَعَثَ إِلَىَّ فَأَتَيْتُهُ فَأَكْتُبُ الْوَحْىَ وَكُنَّا إِذَا ذَكَرْنَا الدُّنْيَا ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الآخِرَةَ ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الطَّعَامَ ذَكَرَهُ مَعَنَا (السنن الكبرى

ஜைதுப்னு தாபித் ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களின் அருகாமையில் இருக்கும் பாக்கியம் பெற்றவனாக இருந்தேன். வஹீ வந்த பின் அதை எழுத என்னை அழைப்பார்கள். நான் வருவேன். வஹீயை எழுதுவேன். (நபி ஸல் அவர்கள் எங்களில் ஒருவராக இருந்தார்கள்.) நாங்கள் துன்யாவை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து துன்யாவை நினைவு கூருவார்கள். நாங்கள் ஆகிரத்தை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து ஆகிரத்தை நினைவு கூருவார்கள். நாங்கள் உணவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் எங்களுடன் இணைந்து அதைப் பற்றியும் பேசுவார்கள்.                

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) 2348

ஒருமுறை நபி ஸல் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக!அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல் சிரித்து விட்டார்கள். நூல்: புகாரி 2348

முகம் கொடுத்துப் பேசவே விரும்பாதவர்களைப் போன்றில்லாமல்

யார் பேசினாலும் நபி ஸல் அவர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள்.

عَنْ أَنَسِ رض قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ (ابن ماجة) وفي رواية بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ

தன்னிடம் பேசுபவர் அவராக தன் முகத்தைத் திருப்பும் வரை நபி ஸல் அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். யாரிடமேனும் முஸாஃபஹா செய்தால் அவராக தன் கையை விடுவிக்கும் வரை நபி ஸல் அவர்கள் தன் கையை விடுவிக்க மாட்டார்கள். தன்னோடு அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் (சபையில் தன்னை முற்படுத்தும் நோக்கத்தில்) நபி ஸல் அவர்களின் முட்டுக் கால்கள் முந்தியிருப்பதைக் காண முடியாது.                                  

மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்

عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ حَاجَتِهَا. (مسلم

மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள்.

பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல்

قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري

அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.                                 

முஸ்லிம் அல்லாதவரையும் நோய் விசாரிக்கச் செல்லுதல்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ غُلَامٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ النَّارِ . (بخاري

 யூத மதத்திலுள்ள ஒரு சிறுவன் நோயுற்றிருந்தான். அவனை நோய் விசாரிப்பதற்கு சென்றிருந்த நபி(ஸல்) அவர்கள் அப்பையனின் தலைப்பக்கமாக உட்கார்ந்து அப்பையனிடம் நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் எனக் கூறினார்கள். அப்பையனின் தலைப்பக்கம் நின்று கொண்டிருந்த தன் தந்தையை அப்பையன் பார்த்தான். அபுல்காசிமுக்கு கட்டுப்படு என அப்பையனின் தந்தை கூறினார். அப்பையன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். என் மூலம் அப்பையனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என கூறியவாறு எழுந்து சென்றார்கள்.                                      

 

 

நபி ஸல் கலகப்பாக ப் பேசிய சம்பவங்கள் இருப்பதைப் போல

நபி ஸல் அவர்கள் அழுத சம்பவங்களும் நிறைய உண்டு

ஒவ்வொரு தொழுகையின் போதும் நபி ஸல் அவர்களின் உள்ளம் அழுது கொண்டிருக்கும்

عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَفِي صَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الرَّحَى مِنْ الْبُكَاءِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ابوداود

பிரியமானவர் இறந்து விட்டால் நபி ஸல் அழுவார்கள். ஒப்பாரி வைப்பது தான் தடுக்கப்பட்டுள்ளது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ فَقَالَ قَدْ قَضَى قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ فَبَكَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكَوْا فَقَالَ أَلَا تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لَا يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ وَلَا بِحُزْنِ الْقَلْبِ وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا وَأَشَارَ إِلَى لِسَانِهِ أَوْ يَرْحَمُ وَإِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَضْرِبُ فِيهِ بِالْعَصَا وَيَرْمِي بِالْحِجَارَةِ وَيَحْثِي بِالتُّرَابِ .(بخاري

ஜனாஸாவை அடக்கம் செய்யும் போது மறுமையின் நினைவால் அழுத சம்பவம்

عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَجَلَسَ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَبَكَى حَتَّى بَلَّ الثَّرَى ثُمَّ قَالَ يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا  -  ابن ماجة

இரவில் எழுந்து தொழும்போது மறுமையின் நினைவால் அழுத சம்பவம்

عن عطاء قال : دخلت أنا و عبيد بن عمير على عائشة فقالت لعبيد بن عمير : قد آن لك أن تزورنا فقال : أقول يا أمه كما قال الأول : زر غبا تزدد حبا قال : فقالت : دعونا من رطانتكم هذه قال ابن عمير : أخبرينا بأعجب شيء رأيته من رسول الله صلى الله عليه و سلم قال : فسكتت ثم قالت : لما كان ليلة من الليالي قال : ( يا عائشة ذريني أتعبد الليلة لربي ) قلت : والله إني لأحب قربك وأحب ما سرك قالت : فقام فتطهر ثم قام يصلي قالت : فلم يزل يبكي حتى بل حجره قالت : ثم بكى فلم يزل يبكي حتى بل لحيته قالت : ثم بكى فلم يزل يبكي حتى بل الأرض فجاء بلال يؤذنه بالصلاة فلما رآه يبكي قال : يا رسول الله لم تبكي وقد غفر الله لك ما تقدم وما تأخر ؟ قال : ( أفلا أكون عبدا شكورا   -  صحيح ابن حبان

                    பத்ருப் போருக்கு முதல் நாள் இரவில் அனைவரும் தூங்கிய போதும்  நபி  ஸல் அவர்கள் மட்டும்  விடிய விடிய தூங்காமல்  அழுது துஆச் செய்த சம்பவம்

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَا كَانَ فِينَا فَارِسٌ يَوْمَ بَدْرٍ غَيْرُ الْمِقْدَادِ وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا فِينَا إِلَّا نَائِمٌ إِلَّا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ شَجَرَةٍ يُصَلِّي وَيَبْكِي حَتَّى أَصْبَحَ -  مسند أحمد

عن أبي هريرة قال : قال أبو القاسم صلى الله عليه وسلم : " والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا " . رواه البخاري

وعن أم العلاء الأنصارية قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " والله لا أدري والله لا أدري وأنا رسول الله ما يفعل بي وبكم " . رواه البخاري

 

 

 

 

 

 

வியாழன், 19 செப்டம்பர், 2024

நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை

 20-09-2024

ரபீஉல் அவ்வல்- 15 بسم الله الرحمن الرحيم  

நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا (19) النساء

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي ابن ماجة

வயதான பெண்ணாக இருந்தும் அன்னை கதீஜா ரழி அவர்களின் மீது நபி ஸல் அவர்களின் மிகுந்த பாசம். அவர்கள் இருக்கும் வரை நபி ஸல் அவர்கள் வேறு திருமணம் செய்யவில்லை 

عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أَسْرَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بِمَالٍ وَبَعَثَتْ فِيهِ بِقِلَادَةٍ لَهَا كَانَتْ عِنْدَ خَدِيجَةَ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ قَالَتْ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا فَقَالُوا نَعَمْ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ عَلَيْهِ أَوْ وَعَدَهُ أَنْ يُخَلِّيَ سَبِيلَ زَيْنَبَ إِلَيْهِ (ابوداود

நபி ஸல் அவர்கள் ஆரம்ப காலத்தில் தன் மகள் ஜைனப் ரழி அவர்களை அபுல் ஆஸ் ரழி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அபுல் ஆஸ் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பத்ருப் போரில் அவர் எதிரிகளுடன் இருந்தார். அதில் அவர் கைது செய்யப்பட்டார். அந்தக் கைதிகளை விடுவிக்க மக்காவாசிகள் பிணைத் தொகைகளைக் கொடுத்தனுப்பினர். அதில் அபுல்ஆஸ் ரழி அவர்களை விடுவிக்க அவர்களின் மனைவி ஜைனப்ரழி அவர்கள் அதாவது நபி ஸல் அவர்களின் மகள் தன் செயினைக் கொடுத்தனுப்பினார்கள். அந்த செயின் உண்மையில் கதீஜா ரழி அவர்களுடையதாகும். அதைக் கண்டவுடன் (பழைய நினைவுகளால்) நபி ஸல் அவர்களின் உள்ளம் கலங்கியது. சஹாபாக்களிடம் நபி ஸல் இந்தச் செயினை அவரிடமே திருப்பிக் கொடுத்து அவரை பிணைத் தொகை இல்லாமல் விடுதலை செய்வதற்கு நீங்கள் அனுமதித்தால் செய்யலாம் என்று கூற அதற்கு சஹாபாக்கள் சம்மதித்தனர்.                                                                                                        

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا رَأَيْتُهَا وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ فَرُبَّمَا قُلْتُ لَهُ كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلَّا خَدِيجَةُ فَيَقُولُ إِنَّهَا كَانَتْ وَكَانَتْ وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ (بخاري3818

அன்னை ஆயிஷா ரழி கூறினார்கள்- (என் சக்களத்தியான) கதீஜா ரழி அவர்களின் மீது நான் பொறாமை கொண்டது போல வேறு யார் மீதும் நான் பொறாமை கொண்டதில்லை. இத்தனைக்கும் அவர்களை நான் பார்த்ததில்லை. நபி ஸல் அவர்கள் அடிக்கடி அவரை நினைவு கூறுவார்கள். சில நேரம் ஆடு அறுத்தால்  (கதீஜா ரழி அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக) அவரின் தோழிகளுக்குக் கொடுத்தனுப்புவார்கள். சில நேரங்களில் நான் நபி ஸல் அவர்களிடம் துன்யாவில் கதீஜா ரழி அவர்களை விட்டால் வேறு பெண்ணே இல்லையா? என்று நான் கேட்பேன். அதற்கு நபி ஸல் அவர்கள் கதீஜா ரழி இப்படி இப்படியெல்லாம் (எனக்கு உறுதுணையாக) இருந்தார். அவர் மூலம் தான் எனக்குக் குழந்தைகள் பிறந்தது என்றும் கூறினார்கள்.            

ஆயிஷா ரழி அவர்கள் மூலம் நபி ஸல் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த தகுதி 

ஆயிஷா ரழி அவர்களிடம் இல்லை என்பதல்ல. மாறாக கல்விக்காக மட்டுமே அல்லாஹ் ஜோடி சேர்த்து வைத்தான்.

عن عائشة رض قالت : وددت أني كنت ثكلت عشرة مثل الحارث بن هشام و أني لم أسر مسيري مع ابن الزبير [ مستدرك الحاكم ] وفي رواية لو لم اسر مسيري ذلك لكان احب الي من ان يكون لي ستة عشر ذكرا من رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (كتاب : الحسن والحسين –لمحمد رضا)

அப்துர் ரஹ்மான் இப்னு ஹிஷாம் ரழி அவர்கள் சிறு வயதில் இருந்தே மதீனாவில் பிரபலமான ஃபகீஹ். சிறந்த பிள்ளைக்கு அவரை உதாரணம் காட்டுவார்கள். நபி ஸல் அவர்களின் வஃபாத்தின் போது அவருக்கு பத்து வயது. அவரைக் குறித்து ஆயிஷா ரழி அவர்கள் கூறும்போது நபி ஸல் அவர்களிடமிருந்து கல்வியை அதிகமாகப் பெறுவது என்ற என்னுடைய வழியில் மற்றும் இப்னு ஜுபைருடைய வழியில் நான் செல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நான் நபி ஸல் அவர்கள் மூலம் அப்துர் ரஹ்மான் இப்னு ஹிஷாமைப் போல 10 ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருப்பேன். ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல.  என்றார்கள்.                             

அன்னை ஆயிஷா ரழி அவர்களின் நபி ஸல் அவர்கள் அன்பு செலுத்திய விதம்

عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ فَيَشْرَبُ وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ (مسلم)  718

என்னிடைய மாதவிடாய் காலத்தில் நான் வாய் வைத்துக் குடித்த பாத்திரத்தை நபி ஸல் அவர்களிடம் தருவேன். நபி ஸல் அவர்கள் நான் வாய் வைத்த அதே இடத்தில் வாய் வைத்துக் குடிப்பார்கள். எலும்பை பல்லால் கடித்து அதை நபி ஸல் அவர்களிடம் தருவேன். நபி ஸல் அவர்கள் நான் வாய் வைத்த அதே இடத்தில் வாய் வைத்து எலும்பைக் கடிப்பார்கள்.                              

அன்னை ஆயிஷா ரழி அவர்கள் சிறுமி என்பதால் அவருக்குத் தோதுவாக நபி ஸல் நடந்து கொண்டார்கள் 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ قَالَتْ فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَيَّ فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي فَقَالَ هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ (ابوداود

فقد قال صلى الله عليه وسلم في حديث أم زرع الطويل قال لعائشة : « كُنْتُ لَكِ كَأَبِى زَرْعٍ لأُمِّ زَرْعٍ » (بخاري5189

 பல பெண்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய கணவன்மார்களைப் பற்றிப் பேசும் சம்பவத்தை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கூறுவார்கள். அதை முழுமையாகக் கேட்ட பின்பு இந்தச் சம்பவத்தில் வரும் உம்மு ஸர்உ  என்ற பெண் அபூ ஸர்உக்கு மனைவியாக இருந்த போது அந்த மனைவி மீது  எத்தகைய பாசம் உள்ளவராக இருந்தாரோ அதுபோல உன்னிடம் நான் பாசமாக இருக்க ஆசைப் படுகிறேன் என்றார்கள்.                                              

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قَالَتْ فَقُلْتُ مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ فَقَالَ أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لَا وَرَبِّ مُحَمَّدٍ وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قُلْتِ لَا وَرَبِّ إِبْرَاهِيمَ قَالَتْ قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا أَهْجُرُ إِلَّا اسْمَكَ (بخاري 5228

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள்  நபி ஸல் அவர்கள் என்னிடம் நீ என் மீது எப்போது கோபமாக இருக்கிறாய் எப்போது அன்பாக இருக்கிறாய் என நான் அடையாளம் கண்டு கொள்வேன் என்று கூறினார்கள். அதற்கு நான் அது எப்படி? என்று கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நீ என் மீது அன்பாக இருந்தால் முஹம்மது ஸல் அவர்களுடைய ரப்பின் மீது சத்தியமாக என்று கூறுவாய். நீ என் மீது கோபமாக இருந்தால்  இப்றாஹீம் (அலை) அவர்களுடைய ரப்பின் மீது சத்தியமாக என்று கூறுவாய். என்றார்கள். அதற்கு நான் ஆம் யாரஸூலல்லாஹ் அந்த நேரத்திலும் உங்கள் பெயரை மட்டும் என் நாவு ஒதுக்குமே தவிர உங்கள் மீதான நேசம் எப்போதும் எனக்குள் இருக்கும் என்றேன்.

வீட்டில் இருக்கும்போது மனைவியிடம் அன்பாகப் பேசுவதில் நபி ஸல் நமக்குச் சிறந்த முன்மாதிரி...

كان  رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يضرب يده على فخِذِ عائشة أحيانا ويقول كلميني ليشتغل بكلامها عن عظيم ما هو فيه لقصور طاقة قالبه عنه (الشمائل الشريفة )


மனைவியை செல்லமாகப் பெயர் வைத்து அழைப்பவர்களாகவும் நபி ஸல் அவர்கள் ஆயிருந்தார்கள்

عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّارُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ قَالَ يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا -  (ابن ماجة

அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறுவதாவது நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். நம்மிடமுள்ள சில அற்பமான (விலை மலிவான) பொருட்களில் சிலவற்றை யாரேனும் தாம் சிறிது பயன்படுத்திக் கொள்ள கேட்கும்போது எந்தெந்தப் பொருட்களை நாம் தராமல் மறுக்கக் கூடாது என்று ஏதேனும்  சட்டம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் என்னை நோக்கி சிவப்பான பெண்ணே என்று அழைத்து அந்தப் பொருட்களாகிறது  தண்ணீர், உப்பு, நெருப்பு என பதிலளித்தார்கள். உடனே நான் தண்ணீர் தர மறுக்கக்கூடாது என்பது எனக்கும் புரிகிறது. பிறரை தாகத்தோடு விட்டு விடுவது தவறு. ஆனால் நெருப்பையும், உப்பையும் பிறருக்குத் தருவதற்கு ஏன் மறுக்கக்கூடாது என்ற காரணம் எனக்குப் புரியவில்லையே என்றேன் அதற்கு நபி ஸல் அவர்கள் பற்ற வைப்பதற்காக ஒரு நெருப்புக் கங்கை ஒருவர் தந்தால் அந்த நெருப்பின் மூலம் என்னென்ன சமைக்கப்படுகிறதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். அதேபோல அதேபோல் உப்பை ஒருவர் சிறிதளவு தானமாக கொடுத்தாலும் அந்த உப்பு எந்த உணவுக்கெல்லாம் சுவையைக் கூட்டியதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் ஒரு அடிமையை உரிமையை விட்டவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடுள்ள  நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் அந்த முஸ்லிமுக்கு உயிர் கொடுத்தவரைப் போலாவார். 

தவறே செய்தாலும் பலர் முன்னிலையில் நபி ஸல் அவர்கள் மனைவியை அவமரியாதையாகப் பேச மாட்டார்கள்

عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ فَضَرَبَتْ الَّتِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهَا يَدَ الْخَادِمِ فَسَقَطَتْ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِلَقَ الصَّحْفَةِ ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ وَيَقُولُ غَارَتْ أُمُّكُمْ ثُمَّ حَبَسَ الْخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتِهَا فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا وَأَمْسَكَ الْمَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْ (بخاري 55

நபி ஸல் அவர்கள் ஒரு மனைவியின் வீட்டில் இருந்த போது உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருந்த து. சில நபித் தோழர்களும் அங்கு இருந்தனர். அப்போது மற்றொரு மனைவியின் வீட்டில் இருந்து  ஒரு தட்டில் உணவு கொடுத்தனுப்ப ப்பட்டது. அப்போது இந்த வீட்டில் இருந்த மனைவி பணியாளரின்  கையில் இருந்து அதைத் தட்டி விட்டார்கள். தட்டு கீழே விழுந்து உடைந்த து. அப்போது நபி ஸல் அவர்கள் கோபப் படாமல் உடைந்த தட்டை ஒன்று  சேர்த்து சிதறிய ரொட்டிகளையும் ஒன்று சேர்த்தார்கள். மேலும் உங்களின் அன்னைக்கு ரோஷம் ஏற்பட்டு விட்டது என்று மட்டும் கூறினார்கள். பிறகு உடைந்த தட்டை இந்த வீட்டில் இந்த வீட்டில் வைத்து விட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு நல்ல தட்டை அந்த மற்றொரு மனைவிக்குக் கொடுத்தனுப்பினார்கள்.        

இருக்கும்போதும் இல்லாத போதும் குடும்பத்தார்களை அனுசரித்துப் போகும் தன்மை

عن جابر رضي الله عنه  أن رسول الله صلى الله عليه وسلم أقام أيامًا لم يَطْعَمْ طعاما، حتى شَقّ ذلك عليه، فطاف في منازل أزواجه فلم يجد عند واحدة منهن شيئًا، فأتى فاطمة فقال: "يا بُنَيَّة، هَلْ عِنْدَكِ شَيْء آكُلُهُ، فَإِنَّي جَائِع؟" فقالت: لا والله بأبي أنتَ وأمّي. فلما خَرَج من عندها بعثت إليها جارة لها برغيفين وقطعة لحم، فأخذته منها فوضعته في جَفْنَةٍ لها، وقالت: والله لأوثرن بهذا رسول الله [صلى الله عليه وسلم]  على نفسي ومن عندي. وكانوا جميعًا محتاجين إلى شبعة طعام، فبعثت حَسَنا أو حُسَينا إلى رسول الله [صلى الله عليه وسلم]  فرجع إليها فقالت له: بأبي وأمي  قد أتى الله بشيء فخَبَّأتُه لك. قال: "هَلُمِّي يا بُنيَّة" قالت: فأتيته بالجفنة. فكشفت عن الجفنة فإذا هي مملوءة خبزًا ولحمًا، فلما نظرَتْ إليها بُهِتتْ وعرفَتْ أنها بركة من الله، فحمدَت الله وصلَّت على نَبِيِّهِ، وقدّمَتْه إلى رسولِ الله صلى الله عليه وسلم. فلما رآه حمد الله وقال: "مِنْ أيْنَ لَكِ هَذَا يَا بُنَية؟" فقالت  يا أبت، 

{ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ } فحمد الله وقال: "الحَمْدُ للهِ الَّذي جَعَلَكِ -يا بُنَيّة-شَبيهَةِ بسيدةِ  نِساء بَنيِ إسْرَائيلَ، فَإنَّها كَانَتْ إذَا رَزَقَهَا اللهُ شَيْئًا فَسُئِلَتْ عَنْهُ قَالَتْ: { هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ } فبعث رسول الله صلى الله عليه وسلم إلى عَلِي  ثم أكل رسولُ الله صلى الله عليه وسلم وأكل علي، وفاطمة، وحسن، وحسين، وجميع أزواج النبيّ صلى الله عليه وسلم وأهل بيته جميعًا حتى شبعوا. قالت: وبقيت الجفنة كما هي، فأوسعت ببقيتها  على جميع الجيران، وجعل الله فيها بركة وخيرا كثيرا  .(تفسير ابن كثير) الجفنةதட்டு

விளக்கம்- நபி ஸல் அவர்கள் எப்போதும்  தனக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க மாட்டார்கள். அடுத்த நேரம் அல்லாஹ் எப்படியும் தருவான் என்ற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். அவ்வாறு  ஒருமுறை  நபி ஸல் அவர்களின் குடும்பத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எந்த மனைவிமார்களின் வீட்டிலும் எதுவும் இல்லை.  கடைசியாக பாத்திமா ரழி அவர்களின் வீட்டுக்கும் நபி ஸல் அவர்கள் சென்றார்கள். அங்கும் எதுவும் இல்லை. பசியுடன் நபி ஸல் அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். சற்று நேரத்தில் அண்டை வீட்டுப் பெண்  இரண்டு ரொட்டித் துண்டுகளையும்  சிறிதளவு இறைச்சியையும் கொடுத்தனுப்ப, உடனே பாத்திமா ரழி அவர்கள் நிச்சயமாக நாம் பசியோடு இருந்தாலும் கூட, இதை நபி ஸல் அவர்களுக்காக எடுத்து வைப்பேன் என்று எண்ணி அதை தனியாக எடுத்து வைத்து விட்டு நபி ஸல் அவர்களை அழைத்து வருவதற்காக ஹஸன், ஹுஸைன் ரழி இருவரையும் அனுப்ப, நபி ஸல் அவர்கள் அங்கு வருகை தந்தார்கள். அப்போது பாத்திமா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம்  உங்களுக்காக  ஒரு உணவை எடுத்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதை எடுத்து வா என்று நபி ஸல் அவர்கள் கூற, அதை எடுக்கச் சென்ற பாத்திமா ரழி அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் அதை வைக்கும்போது இருந்த தை விட மிக அதிகமாகவே இருந்தது. இதை முஃஜிஸா என்று கூறலாம். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் இது எப்படி உமக்குக் கிடைத்த து என்று மகளிடம் கேட்க,  அன்னை மர்யம் அலை அவர்கள் பதில் கூறியதைப் போன்று பாத்திமா ரழி அவர்கள் 

 

{ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ }

இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த து என பதிலளித்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அன்னை மர்யம் அலை பதில் கூறியது போன்று உன்னை பதில் கூற வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறி விட்டு, தனக்காக எடுத்து வைத்த உணவை தான் மட்டும் உண்ணாமல் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரச்சொன்னார்கள். காரணம் அப்போது அத்தனை பேரும் பசியோடு தான் இருந்தனர் அனைவரும் வந்த பிறகு  முதலில் நபி ஸல் அவர்களும்  பின்பு அலீ ரழி அவர்களும் பின்பு வரிசையாக அனைவரும் உண்டனர். அத்தனை பேரும் உண்ட பிறகும் உணவு  தட்டு நிறைய முன்பு இருந்தது  போன்றே மிச்சம் இருந்தது.  பிறகு அனைத்து அண்டை வீட்டாருக்கும் அது கொடுத்து அனுப்பப் பட்டது.  

படிப்பினை- உணவு கிடைத்தவுடன் தான் மட்டும் வயிற்றை நிரப்பிக் கொள்ளாமல் தன் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்தார்கள்.   தான் சாப்பிட்டால் போதும் என்றில்லாமல் தன் குடும்பத்தினர் சாப்பிட்டார்களா என்று கவலைப் படுபவர் தான் உண்மையான குடும்பத் தலைவன். 

மனைவியிடம் ஆலோசனை கேட்பது தவறல்ல.

முற்றிலுமாக பொறுப்பு அனைத்தையும் பெண்களிடமே ஒப்படைப்பது தான் தடுக்கப்பட்டுள்ளது

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி ஸல் தன் மனைவி உம்மு ஸல்மா ரழி அவர்களின் ஆலோசனையைக் கேட்டார்கள்

ففي قصة الحديبية : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ قُومُوا فَانْحَرُوا ثُمَّ احْلِقُوا قَالَ فَوَاللَّهِ مَا قَامَ مِنْهُمْ رَجُلٌ حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ فَلَمَّا لَمْ يَقُمْ مِنْهُمْ أَحَدٌ دَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ فَذَكَرَ لَهَا مَا لَقِيَ مِنْ النَّاسِ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا نَبِيَّ اللَّهِ أَتُحِبُّ ذَلِكَ اخْرُجْ ثُمَّ لَا تُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ كَلِمَةً حَتَّى تَنْحَرَ بُدْنَكَ وَتَدْعُوَ حَالِقَكَ فَيَحْلِقَكَ فَخَرَجَ فَلَمْ يُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ حَتَّى فَعَلَ ذَلِكَ نَحَرَ بُدْنَهُ وَدَعَا حَالِقَهُ فَحَلَقَهُ فَلَمَّا رَأَوْا ذَلِكَ قَامُوا فَنَحَرُوا وَجَعَلَ بَعْضُهُمْ يَحْلِقُ بَعْضًا حَتَّى كَادَ بَعْضُهُمْ يَقْتُلُ بَعْضًا غَمًّا .....(بخاري  2732

வியாழன், 12 செப்டம்பர், 2024

நபி நேசம் நம் சுவாசத்தை விட மேலானது

 13-09-2024

ரபீஉல் அவ்வல்- 8 بسم الله الرحمن الرحيم  

நபி நேசம் நம் சுவாசத்தை விட மேலானது

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

உயிருக்கும் மேலாக நபிகளாரை நேசிக்க வேண்டும்

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ (6) الاحزاب -  

அல்லாஹ் ரஸூலை விட மற்றவைகளை அதிகமாக நேசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)التوبة

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதால் கிடைக்கும் பலன்கள்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لَا شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ (بخاري3688

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கியாமத் எப்போது வரும் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கியாமத் நாளுக்காக நீர் என்ன தயாரித்து வைத்துள்ளீர் என்று கேட்க, அதற்கு அவர் |(பெரிதாக) எதுவும் என்னிடம் இல்லை. எனினும் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் நேசிக்கிறேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள்  நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களுடன் சுவனத்தில் இருப்பீர் என்று பதில் கூறினார்கள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கியது.நான் நபி ஸல் அவர்களையும், அபூபக்கர் (ரழி) உமர்  (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். அவர்கள் அளவுக்கு நான் அமல் செய்யவலில்லை. எனினும் அவர்களை நான் நேசிப்பதால் அவர்களுடன் சுவனத்தில் இருப்பேன் என்பதை ஆதரவு வைக்கிறேன். புகாரீ3688                           

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் வெளிப்பாடாக

அவர்களுடன் சுவனத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபித்தோழர்கள்

عَنْ عَائِشَة قَالَتْ جَاءَ رَجُل إِلَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُول اللَّه : إِنَّك لَأَحَبّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَحَبّ إِلَيَّ مِنْ أَهْلِي وَأَحَبّ إِلَيَّ مِنْ وَلَدِي وَإِنِّي لَأَكُون فِي الْبَيْت فَأَذْكُرك فَمَا أَصْبِر حَتَّى آتِيك فَأَنْظُر إِلَيْك وَإِذَا ذَكَرْت مَوْتِي وَمَوْتك عَرَفْت أَنَّك إِذَا دَخَلْت الْجَنَّة رُفِعْت مَعَ النَّبِيِّينَ وَإِنْ دَخَلْت الْجَنَّة خَشِيت أَنْ لَا أَرَاك فَلَمْ يَرُدّ عَلَيْهِ النَّبِيّ صَلَّى حَتَّى نَزَلَتْ عَلَيْهِ وَمَنْ يُطِعْ اللَّه وَالرَّسُول فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّه عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاء وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ( تفسير ابن كثير

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து யாரஸூலல்லாஹ் நீங்கள் எனக்கு என் உயிரை விடவும் என் மனைவியை விடவும் என் பிள்ளைகளை விடவும் மிகவும் பிரியமானவர்களாக இருக்கிறீர்கள். நான் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி உங்களின் ஞாபகம் வந்தால் உடனே உங்களை வந்து  பார்த்து விடுகிறேன். இந்த நிலையில் ஒரு விஷயம் என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனக்கும் மவ்த் உண்டு. உங்களுக்கும் மவ்த் உண்டு. எனினும் உங்களின் வஃபாத்துக்குப் பின்னால் நீங்கள் மற்ற நபிமார்களுடன் உயர்ந்த சுவனத்தில் நுழைவீர்கள். நாங்கள் கீழ்நிலையில் இருப்போம் எனவே இந்த உலக வாழ்வுக்குப் பிறகு உங்களைப் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற கவலை என்னை வாட்டியது. இதன் விளக்கம் தெரியாமல் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை அதனால் ஓடோடி வந்தேன் என்றார். நபி ஸல் அவர்கள் சற்று மவுனமாக இருந்தார்கள். சற்று நேரத்தில் மேற்படி வசனம் இறங்கியது. 

عَنْ سَعِيد بْن جُبَيْر قَالَ : جَاءَ رَجُل مِنْ الْأَنْصَار إِلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَحْزُون فَقَالَ لَهُ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " يَا فُلَان مَالِي أَرَاك مَحْزُونًا " فَقَالَ يَا نَبِيّ اللَّه شَيْء فَكَّرْت فِيهِ فَقَالَ مَا هُوَ ؟ قَالَ نَحْنُ نَغْدُو عَلَيْك وَنَرُوح نَنْظُر إِلَى وَجْهك وَنُجَالِسك وَغَدًا تُرْفَع مَعَ النَّبِيِّينَ فَلَا نَصِل إِلَيْك فَلَمْ يَرُدّ عَلَيْهِ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَأَتَاهُ جِبْرِيل بِهَذِهِ الْآيَة " وَمَنْ يُطِعْ اللَّه وَالرَّسُول فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّه عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ " الْآيَة فَبَعَثَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَبَشَّرَهُ . (تفسير ابن كثير)

மற்றொரு அறிவிப்பில் (நன்கு திடகாத்திரமாக இருந்த) ஒரு சஹாபீ  கவலையுடன் (உடல் மெலிந்து) நபிகளாரிடம் வந்தபோது ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்க, யாரஸூலல்லாஹ் நாங்கள் காலையிலும் மாலையிலும் உங்களுடனே இருக்கிறோம் உங்களின் திருமுகத்தை தினமும் காண்பதிலும் உங்களுடன் அமருவதிலும் நாங்கள் சந்தோஷம் அடைகிறோம். ஆனால் உங்களின் மறைவுக்குப் பின்னால் நீங்கள் மற்ற நபிமார்களுடன் உயர்ந்த சுவனத்தில் நுழைவீர்கள். உங்களை நெருங்க முடியாதவர்களாக மறுமையில் ஆகி விடுவோமோ என்ற கவலைப் படுகிறோம் என்று கூற, சற்று நேரத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இந்த வசனத்துடன் இறங்கினார்கள்                                              

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய தோழர்கள்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا (مسلم4742

உஹதுப்போரில் நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஏழு அன்சாரித் தோழர்கள் மற்றும் இரண்டு குரைஷித் தோழர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிரிகளுடன் தனித்து விடப்பட்டார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்ட  அந்த சூழ்நிலையில்  (நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நோக்கத்தில்) தமது தோழர்களிடம் கூறினார்கள். உங்களில் யார் எதிரிகளிடமிருந்து இறைத்தூதரைப் பாதுகாக்கும் கேடயமாக இப்போது செயல்படுகிறாரோ அவருக்கு சுவனம் உண்டு என்றவுடன் முதலில் ஒரு அன்சாரித்தோழர் முன்வந்து எதிரிகளுடன் சண்டையிட்டார். இறுதியில் ஷஹீதாக்கப்பட்டார். மறுபடியும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட  நிலையில் நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அந்த சுபச்செய்தியைக் கூறினார்கள்.  அதற்குப் பின் மற்றொரு அன்சாரித்தோழர் முன்வந்து எதிரிகளுடன் சண்டையிட்டார். அவரும் ஷஹீதாக்கப்பட்டார். இப்படியாக ஏழு அன்சாரித்தோழர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள். (இறுதியில் அல்லாஹ்வின் அருளால் நபி(ஸல்) அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்) அப்போது நபி(ஸல்)அவர்கள் அவ்விரு குரைஷித் தோழர்களிடம் கூறினார்கள். குரைஷித் தோழர்களான நாம் நமது அன்சாரித்தோழர்களுக்கு சரி சமமாக நடந்து கொள்ளவில்லை. அதாவது அந்த ஏழு பேர் மட்டுமே ஷஹாத த்திலும் சுவனத்தைப் பெற்றுக் கொள்வதிலும் முந்திக் கொண்டார்கள்.                        

விளக்கம்- அனைத்து நபித் தோழர்களுக்கும் நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை இருந்தது. இருப்பினும் அதில் அவர்களுக்கு மத்தியில் போட்டி இருந்தது.ஒருவர் ஷஹீதாக்கப்பட்டவுடன் உடனே வேகமாக களத்தில் இறங்குவதில் அன்சாரித்தோழர்கள் மிக வேகமாக இருந்தார்கள்.                                                       

عن مخرمة بن بكير عن أبيه قال : بعثني رسول الله صلى الله عليه و سلم يوم أحد لطلب سعد بن الربيع و قال لي : إن رأيته فاقرئه مني السلام و قل له : يقول لك رسول الله صلى الله عليه و سلم : كيف تجدك ؟ قال : فجعلت أطوف بين القتلى فأصبته وفي آخر رمق و به سبعون ضربة ما بين طعنة برمح و ضربة بسيف و رمية بسهم فقلت له : يا سعد إن رسول الله صلى الله عليه و سلم يقرأ عليك السلام و يقول لك : خبرني كيف تجدك ؟ قال على رسول الله السلام و عليك السلام قل له : يا رسول الله أجدني أجد ريح الجنة و قل لقومي الأنصار لا عذر لكم عند الله أن يخلص إلى رسول الله صلى الله عليه و سلم و فيكم شفر يطرف قال : و فاضت نفسه رحمه الله [ مستدرك الحاكم   وفي رواية يقول سعد : جزاك الله عنا و عن جميع الأمة خيرا 

ஹழ்ரத் ஸஃது இப்னு ரபீஉ (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமான அன்சாரீ  சஹாபீ. நபி (ஸல்) அவர்களை மதீனாவுக்கு வரும்படியும் அங்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் தருகிறோம் என்று கூறி அகபாவில் ஒப்பந்தம் செய்தவர்களில் இவரும் ஒருவர். உஹதுப் போர் முடிந்த போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் உங்களில் யாரேனும் சென்று ஸஃது இப்னு ரபீஉ (ரழி) எந்த இடத்தில் குற்றுயிராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு அவர் இறுதியாக என்ன சொல்கிறார். என்பதையும் கேட்டு வரும்படி அனுப்புகிறார்கள். ஹழ்ரத் ஜைதுப்னு தாபித் ரழி அவர்கள் சென்று பார்த்தபோது ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் எழுபது வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக மயக்கமுற்றுக் கிடந்தார்கள். அந்த எழுபது வெட்டுகளில் 12 மட்டுமே அன்னாரின் விழிப்பு நிலையில் எதிரிகள் வெட்டியதாகும் மீதி அனைத்தும் அன்னார் மயக்கமுற்ற பிறகு வெட்டியதாகும். மயக்கம் தெளிந்த பின் அவர்கள் ஜைது (ரழி) அவர்களை நோக்கி நான் இன்னும் சற்றுநேரத்தில் இறந்து விடுவேன். என் பாசமுள்ள நபிக்கு என் சலாமைக் கூறுங்கள். மேலும் இத்தகைய ஷஹாதத் என்னும் மாபெரும் பாக்கியத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்ததற்காக என் சார்பில் நன்றியும் கூறுங்கள். என் நண்பர்கள் அனைவருக்கும் என் சலாமைக் கூறுங்கள் மேலும் எனது நண்பர்களிடம் கூறுங்கள். நம் தோழர்களில் யாரேனும் உயிருடன் இருக்கும் நிலையில் நமது உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை எதிரிகளில் ஒருவன் நெருங்கினால் அந்த தோழரின் கண்களில் மட்டுமே உயிர் ஒட்டியிருந்தாலும் சரி, அந்த நிலையில் அவர் நமது நபியைப் பாதுகாக்கத் தவறினால் அவரை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான் என்று கூறுங்கள் என்றார்.இந்த வார்த்தையைக் கூறிய சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. நூல் ஜாதுல் மஆத்  

நபிகளாரின் மீதுள்ள பிரியத்தால் அவர்களின் புனித உடம்பை முத்தமிடும் பாக்கியம் பெற்ற சஹாபீ

عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ وَكَانَ فِيهِ مِزَاحٌ بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ أَصْبِرْنِي فَقَالَ اصْطَبِرْ قَالَ إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ (ابن ماجة- بَاب فِي قُبْلَةِ الْجَسَدِ- كِتَاب الْأَدَبِ

உஸைத் இப்னு ஹுழைர் என்ற நபித்தோழர் தமாஷாகப் பேசுவார்.  ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களும் விளையாட்டாக அவரது இடுப்பில் ஒரு குச்சியால் குத்தினார்கள். இதன் பின்பு அந்த சஹாபீ யாரஸூலல்லாஹ் என்னுடைய இடுப்பில் நீங்கள் குத்தி வலியை ஏற்படுத்தி விட்டீர்கள். எனவே அதற்குப் பழிக்குப் பழியாக நான் உங்களை அதே போன்று குத்துவதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும் என்ற போது நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது அவர் யாரஸூலல்லாஹ் நீங்கள் என்னைக் குத்தும்போது என் உடம்பில் சட்டை இருந்திருக்கவில்லை. ஆனால் உங்கள் உடம்பில் சட்டை உள்ளதே என்று கூற, நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை உயர்த்திக் காண்பிக்க, அவர் நபி (ஸல்) அவர்களைக் கட்டியணைத்து அவர்களின் புனித மேனியில் முத்தமிட்டு யாரஸூலல்லாஹ் இதைத் தான் நான் விரும்பினேன் என்றார்.                                                              

மேற்படி ஹதீஸ் பின்வரும் அறிவிப்பில் ஸவாத் ரழி என்ற சஹாபீ விஷயமாக வருகிறது

عن سَوَاد بْن عَمْرٍو قَالَ : أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَأَنَا مُتَخَلِّقٌ بِخَلُوقٍ فَلَمَّا رَآنِى قَالَ لِى :« يَا سَوَادُ بْنَ عَمْرٍو خَلُوقُ وَرْسٍ أَوَلَمْ أَنْهَ عَنِ الْخَلُوقِ؟ ». وَنَخَسَنِى بِقَضِيبٍ فِى يَدِهِ فِى بَطْنِى فَأَوْجَعَنِى فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الْقِصَاصَ قَالَ الْقِصَاصَ فَكَشَفَ لِى عَنْ بَطْنِهِ فَجَعَلْتُ أُقَبِّلُهُ ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَدَعُهُ شَفَاعَةً لِى يَوْمَ الْقِيَامَةِ (سنن الكبري للبيهقي

ஸவாத் இப்னு அம்ர் ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் தடுத்த ஒரு நறுமணத்தைப் பூசிய படி நான் வந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்த போது அவர்களின் கையில் வைத்திருந்த குச்சியைக் கொண்டு என் வயிற்றில் இடித்து விட்டார்கள். எனக்கு வலித்தது. நான் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே என்னை அடித்ததற்கு நான் உங்களைப் பழி வாங்க வேண்டும் என்றேன். நபி(ஸல்)அவர்கள் தன் வயிற்றைத் திறந்து காட்டினார்கள், நான் அவர்களின் வயிற்றை முத்தமிட்டு, யாரஸூலல்லாஹ் மறுமையில் என் சிபாரிசுக்காக விட்டு வைக்கிறேன் என்றேன்                                                                 

நபி (ஸல்) அவர்களை உளமாற நேசிப்பவர்களின் அடையாளங்களில் சில

யார் மீதும் சிறிதளவும் பொறாமை கொள்ளாமல் எதார்த்தமான உள்ளத்துடன் இருப்பது நபிகளார் சுன்னத். 

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لِأَحَدٍ فَافْعَلْ ثُمَّ قَالَ لِي يَا بُنَيَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ (ترمذي) بَاب مَنْ أَحْيَا سُنَّةً قَدْ أُمِيتَتْ- كِتَاب الْمُقَدِّمَةِ

அனஸ் ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்கள் உன்னால் இயன்ற வரை யார் மீதும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கொள்ளாமல் இரு அது தான் எனது சுன்னத்தாகும். எனது இந்த நடைமுறையை எவர் பின்பற்றுவாரோ அவர் என்னை நேசித்தவர் ஆவார். என்னை நேசித்தவர் என்னோடு சுவனத்தில் இருப்பார் என்றார்கள் - நூல் திர்மிதீ                                                             

عن ابن مسعود رضي الله عنه قال  قال  رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يُبَلِّغُنِي احدٌ من اصحابي عن احد شيئا فاِنِّي اُحبُّ ان أَخْرُجَ اليكم وانا سليم الصدر  (ابوداود)

உங்களில் யாரும் யாரைப் பற்றியும் குறையாக என்னிடம் வந்து பேச வேண்டாம். காரணம் நான் உங்களிடமிருந்து விடை பெறும்போதும் யாரைப் பற்றியும் தவறான எண்ணம் இல்லாமல் விடைபெற நினைக்கிறேன்.

أَنَسُ بْنُ مَالِكٍ ، قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَطْلُعُ عَلَيْكُمُ الآنَ مِنْ هَذَا الْفَجِّ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، قَالَ : فَطَلَعَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وَضُوئِهِ قَدْ عَلَّقَ نَعْلَهُ فِي يَدِهِ الشِّمَالِ ، فَسَلَّمَ ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ : فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ مَرَّتِهِ الأُولَى ، فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا : فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الأُولَى ، فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ، قَالَ : إِنِّي لاحَيْتُ أَبِي ، فَأَقْسَمْتُ أَلا أَدْخُلَ عَلَيْهِ ثَلاثًا ، فَإِنْ رَأَيْتَ أنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَنْقَضِيَ الثَّلاثَةُ ، فَعَلْتَ ، قَالَ : نَعَمْ ، قَالَ أَنَسٌ : فَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ ثَلاثَ لَيَالٍ ، قَال : فَلَمْ يَرَهُ يَقُومُ مِنَ اللَّيْلِ شَيْئًا ، غَيْرَ أَنَّهُ إذَا تَعَارَّ مِنَ اللَّيْلِ ، وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ، ذَكَرَ اللَّهَ ، وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلاةِ الْفَجْرِ غَيْرَ أَنَّهُ لا يَقُولُ إِلا خَيْرًا قَالَ : فَلَمَّا مَضَتِ الثَّلاثُ لَيَالٍ ، وَكِدْتُ أَحْتَقِرُ عَمَلَهُ ، قُلْتُ : يَا عَبْدَ اللَّهِ إِنَّهُ لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ وَالِدِي غَضَبٌ ، وَلا هَجْرٌ ، وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ ثَلاثَ مَرَّاتٍ : يَطْلُعُ عَلَيْكُمُ الآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، فَطَلَعْتَ أَنْتَ الثَّلاثَ مَرَّاتٍ ، فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لأَنْظُرَ مَا عَمَلُكَ ، فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ ، فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالَ : مَا هُوَ إِلا مَا رَأَيْتَ قَالَ : فَانْصَرَفْتُ عَنْهُ ، فَلَمَّا وَلَّيْتُ ، دَعَانِي ، فَقَالَ : مَا هُوَ إِلا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لا أَجِدُ فِي نَفْسِي عَلَى أَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ غِشًّا ، وَلا أَحْسُدُهُ عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ : فَهَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ ، وَهِيَ الَّتِي لا تُطَاقُ  (أحمد

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் நாங்கள் நபி ஸல் அவர்களோடு அமர்ந்திருந்தோம், நபி (ஸல்) அவர்கள். அப்போது உங்கள் முன் ஒரு சுவனவாசி வருகை தருவார். என்றார்கள்அப்போது ஒரு அன்சாரித் தோழர் உளூச் செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார், இடக்கரத்தில் செருப்பை பற்றியிருந்தார்.

மறுநாள் நபிஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதால் அதே மனிதர் கோலத்தில் வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம் மனிதரும் முதல் நாளைப் போன்றே வந்தார். நபி (ஸல்) அவர்கள் சபையிலிருந்து எழுந்தபோது அம் மனிதரை அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் பின் தொடர்ந்து சென்று அம்மனிதரிடம் நான் என் தந்தையைிடம் வாக்கு வாதம் செய்து, மூன்று நாட்கள் அவரிடம் வரமாட்டேன் என சத்தியம் செய்து விட்டேன். அந்த மூன்று நாட்கள் வரை உம்முடன் தங்கிக் கொள்ள அனுமதிப்பீரா என்று கேட்டார் அதற்கு அந்த அன்சாரித் தோழர் சரி என பதிலளித்தார்.

அனஸ் (ரலி அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ் (ரலி அம் மனிதரிடம் மூன்று இரவுகள் தங்கினார். அம்மனிதர் இரவில் எழுந்து வணங்கவில்லை, ஆனால், தூக்கத்தில் விழிப்பு ஏற்பட்டு புரண்டு படுத்தால் அல்லாஹ்வை திக்ரு செய்து தக்பீர் சொல்லிக் கொள்வார். இறுதியில் ஃபஜ்ருத் தொழுகைக்கு எழுவார்

அப்துல்லாஹ் (ரலி அவர்கள் கூறினார்கள் அவர் நன்மையான விஷயங்களை மட்டுமே பேசக் கேட்டேன், மூன்று இரவுகள் கடந்த பின் அவரது அமல்கள் மிகக் குறைவானது என நினைத்து அவரிடம் நான் கூறினேன். அல்லாஹ்வின் அடியாரே எனக்கும் என் தந்தைக்குமிடையே கோபமோ, வெறுப்போ கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக உங்களிடத்தில் சுவனவாசி ஒருவர் வருகிறார் என்று கூறினார்கள். மூன்று நாட்களும் நீங்கள் தான் வந்தீர்கள் நான் உங்களது செயல்களை கவனித்து நான் உம்மை பின்பற்ற எண்ணி தொடர்ந்து வந்தேன் ஆனால் உமது செயல்கள் எதுவும் எனக்கு பெரிதாக தோன்றவில்லையே! பிறகு எப்படி நபி (ஸல் அவர்கள் கூறிய அந்தஸ்தை அடைந்தீர்? என்று கேட்டேன் அதற்கு அவர் நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை என்றார். நான் திரும்பிச் செல்ல முயன்ற போது என்னை அழைத்த அவர். நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை என்றாலும் நான் எந்த மனிதனையும் மோசடி செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் கண்டு எவர்மீதும் பொறாமை கொண்டதில்லை என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி அதனால் தான் இத்தகைய உயர் அந்தஸ்தை அடைந்தீர்கள் என்று கூறினார்கள்

மக்களிடம் விடுபட்டுப் போன ஒரு சுன்னத்தை உயிர்ப்பிப்பவருக்கு கிடைக்கும் நற்கூலி

عن كَثِير بْن عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلَ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا مِنْ النَّاسِ لَا يَنْقُصُ مِنْ أُجُورِ النَّاسِ شَيْئًا وَمَنْ ابْتَدَعَ بِدْعَةً لَا يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ فَإِنَّ عَلَيْهِ مِثْلَ إِثْمِ مَنْ عَمِلَ بِهَا مِنْ النَّاسِ لَا يَنْقُصُ مِنْ آثَامِ النَّاسِ شَيْئًا (ابن ماجة) بَاب مَنْ أَحْيَا سُنَّةً قَدْ أُمِيتَتْ- كِتَاب الْمُقَدِّمَةِ

عن أبي هريرةَ ( رضي اللَّه عنه ) ، عن النبيِّ صلى الله عليه وسلم قَالَ : " المُسْتَمْسِكُ بسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي ، لَهُ أَجْرُ مِائَةِ شَهِيدٍ " ،(طبراني

காலம் கெட்டு விட்ட இந்த உம்மத்தின் கடைசிக் காலத்தில் என்னுடைய ஒரு சுன்னத்துக்கு உயிர் கொடுப்பவர் அதாவது நடைமுறைப் படுத்துபவரின் நற்கூலி நூறு ஷஹீதுகளின் நற்கூலியைப் போன்றதாகும். -  

கடைசி காலத்தில் ஒரே ஒரு சுன்னத்தைக் கடை பிடிப்பவருக்கு  இவ்வளவு சிறப்பை நபி ஸல் கூறுவதன் காரணம் அத்தகைய காலத்தில்  சுன்னத்தைப் பின்பற்றுவதில்  மிகப் பெரும் வெற்றிடம் இருக்கும் என்பதால்தான்

சுன்னத்துக்களைப் பின்பற்றுபவரால் தான் ஃபர்ளுகளை பரிபூரணமாக நிறைவேற்ற முடியும்.

உளூவை உதாரணமாக எடுத்துக் கொண்டால் உளூவில் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது ஷர்த். ஆனால் துவக்கத்தில் முகத்தைக் கழுவுதல் என்ற ஃபர்ளை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதற்கு முன்பு வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்துதல் என்ற சுன்னத்துகளை நிறைவேற்றி விட்டு பிறகு முகத்தைக் கழுவுகிறோம். காரணம் வாய் கொப்பளிக்கும்போது தண்ணீரில் ஏதேனும் டேஸ்ட் மாறியிருந்தால் நாசிக்கு நீர் செலுத்தும்போது ஏதேனும் தண்ணீரில் ஏதேனும் வாடை மாறியிருந்தால் தெரிந்து விடும். வேறு தண்ணீரை மாற்றிக் கொள்ளலாம். ஃபர்ளை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக சுன்னத்துக்கள் உள்ளன.              

நபிகளாரின் சுன்னத்தை சஹாபாக்கள் சின்னச் சின்ன விஷயங்களிலும் பின்பற்றினார்கள்

நபி ஸல் நடந்து போகும்போது குறிப்பிட்ட இடத்தில் பாதையை மாற்றிச் செல்வது போல் நடந்தார்கள் என்பதற்காக அவ்வாறே நடந்த சஹாபி 

عَنْ مُجَاهِدٍ قَالَ كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ فَمَرَّ بِمَكَانٍ فَحَادَ عَنْهُ فَسُئِلَ لِمَ فَعَلْتَ فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ هَذَا فَفَعَلْتُ (احمد)  عَن ابن عُمَر  أنه كان يأتي شجرة بين مكة والمدينة ، فيقيل تحتها ، ويُخْبِرُ أن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك.(بزار) الترغيب والترهيب (يقيل -قيلولة

நபி ஸல் அவர்களை சந்தித்த போது அவர்களின் சட்டையில் ஒரு சில பட்டன்கள் திறந்திருந்தது என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் கடும் குளிரிலும் அந்த குறிப்பிட்ட சட்டை பட்டன்களை பூட்டாத நபித் தோழர்கள்

عَنْ عُرْوَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُشَيْرٍ حَدَّثَنِي  مُعَاوِيَة بْن قُرَّةَ حَدَّثَنِي أَبِي قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ فَبَايَعْنَاهُ وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ قَالَ فَبَايَعْتُهُ ثُمَّ أَدْخَلْتُ يَدَيَّ فِي جَيْبِ قَمِيصِهِ فَمَسِسْتُ الْخَاتَمَ قَالَ عُرْوَةُ ( اَحَدُ  الرواة) "فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلَا ابْنَهُ قَطُّ إِلَّا مُطْلِقَيْ أَزْرَارِهِمَا فِي شِتَاءٍ وَلَا حَرٍّ وَلَا يُزَرِّرَانِ أَزْرَارَهُمَا أَبَدًا (ابوداود) بَاب فِي حَلِّ الْأَزْرَارِ - كِتَاب اللِّبَاسِ

நபி ஸல் அவர்கள் சுரைக்காயை விரும்பி சாப்பிட்டதால் அதையே தினமும் தன்னுடைய உணவாக ஆக்கியவர்

عن انس إِنَّ خَيَّاطًا2 دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ قَالَ أَنَسٌ فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَتَتَبَّعُ6 الدُّبَّاءَ مِنْ حَوَالَيْ الْقَصْعَةِ قَالَ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ (بخاري) وفي رواية لمسلم فَمَا صُنِعَ لِى طَعَامٌ بَعْدُ أَقْدِرُ عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءٌ إِلاَّ صُنِعَ (مسلم) باب جَوَازِ أَكْلِ الْمَرَقِ- كتاب الأشربة

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதை வெறுத்தார்களோ அதை முற்றிலும் வெறுத்த நபித்தோழர்கள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺوَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ زِدْ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ رواه مسلم كتاب اللباس والزينة4238

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ ﷺرَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللَّهِ ﷺخُذْ خَاتِمَكَ انْتَفِعْ بِهِ قَالَ لَا وَاللَّهِ لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللَّهِ ﷺرواه مسلم كتاب اللباس والزينة4243

நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். தங்கத்தாலான மோதிரம் அவருடைய கையில் இருந்த து. அதைக் கழற்றி நபி ஸல் அவர்கள் வீசி எறிந்தார்கள். பிறகு கூறினார்கள். யார் நெருப்புக் கங்கு அணிவிக்கப் படுவதை விரும்புவாரோ அவர் தனது கையில் அதை அணிந்து கொள்ளட்டும். என்றும் எச்சிரித்தார்கள். பிறகு நபி ஸல் சென்ற பிறகு  அந்த மனிதரிடம் அந்த மோதிரத்தை எடுத்து வேறு வகையில் பயனடைந்துகொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர் அல்லாஹ் மீது சத்தியமாக  நபி ஸல் அவர்கள் வெறுத்து வீசி  எறிந்த  ஒன்றை ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்.  என்றார்

عَنْ أَنَسٍ رضي الله عنه  قَالَ كُنْتُ سَاقِيَ الْقَوْمِ يَوْمَ حُرِّمَتْ الْخَمْرُ قَالَ وَكَانَ أَبُو طَلْحَةَ قَدْ اجْتَمَعَ إِلَيْهِ بَعْضُ أَصْحَابِهِ فَجَاءَ رَجُلٌ فَقَالَ أَلَا إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَانْظُرْ قَالَ فَخَرَجْتُ فَنَظَرْتُ فَسَمِعْتُ مُنَادِيًا يُنَادِي أَلَا إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَأَخْبَرْتُهُ قَالَ فَاذْهَبْ فَأَهْرِقْهَا قَالَ فَجِئْتُ فَأَهْرَقْتُهَا رواه احمد

வியாழன், 5 செப்டம்பர், 2024

பிறக்கும் முன்பே புகழப்பட்ட பூமான் நபி (ஸல்)

 பொதுவாக உலகில் மனிதர்கள் பிறந்த பின்பு  புகழடைவது தான் இயல்பு. ஆனால் அண்ணல் நபி ஸல் அவர்கள் இந்த பூமியில் பிறப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே புகழடைந்தார்கள். 

உலகில் தோன்றிய எந்த நபியும் நபி ஸல் அவர்களைப் பற்றி தன் உம்மத்திடம் எடுத்துக் கூறாமல் இருந்த தில்லை. 

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ (81) ال عمران 

முன் வேதங்களைக் கற்றவர்கள் தான் பெற்ற மகனை அறிவதை விட 

மிக நன்றாக முஹம்மது நபி ஸல் அவர்களை அறிவார்கள்

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ وَإِنَّ فَرِيقًا مِنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ (146) البقرة 

மூஸா நபிக்கு இறக்கப்பட்ட தவ்ராத் வேதத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்

عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّوْرَاةِ قَالَ أَجَلْ وَاللَّهِ إِنَّهُ لَمَوْصُوفٌ فِي التَّوْرَاةِ بِبَعْضِ صِفَتِهِ فِي الْقُرْآنِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا} وَحِرْزًا لِلْأُمِّيِّينَ أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ المتَوَكِّلَ لَيْسَ بِفَظٍّ وَلَا غَلِيظٍ وَلَا سَخَّابٍ فِي الْأَسْوَاقِ وَلَا يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيَفْتَحُ بِهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا(بخاري)باب (إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا)كتاب التفاسير

இன்ஜீல் வேதத்தில் நபி ஸல் அவர்களைப் பற்றி....

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف6 عن أَبي أُمَامَة قَالَ قُلْت يَا رَسُول اللَّه مَا كَانَ أَوَّل بَدْء أَمْرك ؟ قَالَ "دَعْوَة أَبِي إِبْرَاهِيم وَبُشْرَى عِيسَى بِي وَرَأَتْ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُور أَضَاءَتْ لَهُ قُصُور الشَّام (أَحْمَد)

மேற்கானும் வசனம் பைபிளில் பின்வருமாறு- நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாக வேறொரு தேற்றரவாளரை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்  (யோவான் 14:16) 'பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளர் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26) 'அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி,. உன்னைப் போல ஒரு தீர்க்க தரிசியை நான் அவர்களுக்கு அவர்கள் சகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்திலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகேடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19) பைபிளில் இடம்பெற்றுள்ள இந்த வசனங்களில் நபியவர்களின் பெயரை திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் “இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்று கூறுவார்கள்.                                                                                                                         


இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் செய்த துஆவினால்

 நான்  கிடைக்கப் பெற்றேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்


رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آَيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ..(129البقرة)

நபி(ஸல்)அவர்களின் மதீனா வருகையைப் பற்றி 700 வருடம் முன்பே யூதர்கள் “துBப்பஃ “என்ற மன்னரிடம் கூறினர்

قال الله تعالي أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ (سورةالدخان37) وتُبَّع كان رجلاً من ملوك العرب من حِمير سُمّي تُبَّعاً لكثرة من تبعه وَاسْمه أَسْعَد أَبُو كُرَيْب بْن مليكرب الْيَمَانِيّ ذَكَرُوا أَنَّهُ مَلَكَ عَلَى قَوْمه ثَلَاثمِائَةِ سَنَة وَسِتًّا وَعِشْرِينَ سَنَة وَلَمْ يَكُنْ فِي حِمْيَر أَطْول مُدَّة مِنْهُ وَتُوُفِّيَ قَبْل مَبْعَث رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوٍ مِنْ سَبْعمِائَةِ سَنَة .وَذَكَرُوا أَنَّهُ لَمَّا ذَكَرَ لَهُ الْحَبْرَانِ مِنْ يَهُود الْمَدِينَة أَنَّ هَذِهِ الْبَلْدَة مَهَاجِر نَبِيّ فِي آخِر الزَّمَان اِسْمه أَحْمَد قَالَ فِي ذَلِكَ شِعْرًا وَاسْتَوْدَعَهُ عِنْد أَهْل الْمَدِينَة فَكَانُوا يَتَوَارَثُونَهُ وَيَرْوُونَهُ خَلَفًا عَنْ سَلَف وَكَانَ مِمَّنْ يَحْفَظهُ وعن النبي صلى الله عليه وسلم: لا تسبوا تبعاً فإنه كان قد أسلم ما أدري أكان تبع نبياً أو غير نبي وقال كعب : ذم الله قومه ولم يذمه (تفسير ابن كثير)

நபி ஸல்  பிறந்த  அன்றைய தினம்  யூத அறிஞர் சொன்ன சுபச் செய்தி:

عن عائشةَ رضي الله عنها قالت :كان يهوديٌّ قد سَكَنَ مكةَ يتَّجِرُ بها فلما كانتْ الليلةُ التي وُلِدَ فيها رسولُ الله صلى الله عليه وسلم قال في مجلسٍ من قريش يا معشرَ قُريشٍ هل وُلِدَ فيكم الليلةَ مولودٌ ؟ فقال القوم والله ما نعلمُه قال: الله أكبرقال:ا إذ أخطَأَكم فلا بأسَ انظروا واحفَظوا ما أقولُ لكم وُلِدَ فيكم هذه الليلة نبيُّ هذه الأمةِ الأخيرةِ بين كَتِفَيْهِ علامةٌ فيها شعراتٌ متواتراتٌ كأنهنَّ عرفُ فَرَسٍ1 لا يرضَعُ ليلتينِ وذلك أن عِفريتاً من الجنِّ أَدْخَلَ إصبَعَه في فمه فمنعه الرضاعَ فتصدَّعَ 2 القومُ من مجلِسهم وهم يتعجَّبونَ من قولِه فلما صاروا إلى منازِلهم أخبَرَ كلُّ إنسانٍ منهم أهلَه فقالوا : لقد وُلِدَ لعبدِ الله بنِ عبدِ المطلب غلامٌ سَمَّوه محمداً فالتقى القومُ فقالوا هل سمعتُم حديثَ هذا اليهوديِّ ؟ بلَغَكُم مولدُ هذا الغلامِ ؟ فانطلقوا حتى جاءوا اليهوديَّ فأخبروه الخبر قال: فاذهبوا معي حتى أنظرَ إليه فخرجوا به حتى أدْخَلُوه على آمنةَ فقال أَخرِجي إلينا ابنَكِ فأخْرَجَتْه وكشَفوا له عن ظهرِه فرأى تلك الشامةَ 3 فوقعَ اليهوديُّ مغْشِياً عليه فلما أفاقَ قالوا:ويلَكَ مالَكَ ؟ قال:ذهبتْ واللهِ النبوةُ من بني إسرائيلَ أَفَرِحْتُمْ به يا معشرَ قريش ؟ أما والله ليَسْطُوَنَّ4 بكم سطوةً يخرج خبرُها من المشرقِ والمغربِ (السيرة النبوية - لابن كثير)

மக்காவில் ஒரு யூத அறிஞர் வியாபார விஷயமாக தங்கியிருந்தார். நபி ஸல் அவர்கள் பிறந்த அன்றைய தினம் அவர் தனது  சக வியாபாரிகளாக குரைஷிகளிடம் குரைஷிகளே நேற்று இரவு உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்திருக்க வேண்டுமே என்றார். அதற்கு குரைஷிகள்  எங்களுக்குத் தெரியவில்லை என்றார்கள். அப்போது அந்த யூத அறிஞர் உங்களுக்குத் தெரியா விட்டால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் நான் சொல்வதை விசாரித்துப் பாருங்கள். நிச்சயமாக இந்த உம்மத்தின் இறைத் தூதர் நேற்று இரவில் பிறந்திருப்பார். அதற்கான அவரது முதுகில் நுபுவ்வத்தின் அடையாளமாக  குதிரையின் நெற்றி முடிகள் போன்ற அடர்த்தியான முடிகள் இருக்கும் என்று யூத அறிஞர் கூற,  குரைஷிகள் ஆச்சரியத்துடன் தங்கள் வீடுகளுக்குச் சென்று தமது குடும்பப் பெண்களிடம் இதைச் சொன்ன போது அந்தப் பெண்கள் அப்போது தான் கூறினார்கள். ஆமாம் அப்துல் முத்தலிபின் மகனான அப்துல்லாஹ்விற்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதற்கு முஹம்மது என்று பெயர்  வைத்துள்ளனர் என்றார்கள். பின்பு மறுபடியும் சந்தித்துக் கொண்ட  குரைஷிகள் இவ்விஷயத்தை யூத அறிஞரிடம் சென்று கூற, அவர் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அக்குழந்தைப் பார்க்க வேண்டும் என்றார். அவரை ஆமினா அம்மையாரிடம் அழைத்துச் சென்றனர். குழந்தையை என்னிடம் காட்டுங்கள் என்று கூற, ஆமினா அம்மையார் குழந்தையைக் காட்டினார்கள். குழந்தையின் முதுகைக் காட்டும்படி அவர் கூற, அவ்வாறே திறந்து காட்டப்பட்டது. அப்போது நபி ஸல் அவர்களின் முதுகில் இருந்த நுபுவ்வத்தின் முத்திரையைப் பார்த்தார். அதைக் கண்டவுடன் மயக்கமுற்றக் கீழே விழுந்து விழுந்து விட்டார். மயக்கம் தெளிந்தவுடன் அவரிடம் உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதுவரை எங்களின் பரம்பரையில் இருந்து வந்த நுபுவ்வத் இப்போது உங்களின் பரம்பரைக்குச் சென்று விட்டது. அதனால் ஏற்பட்ட வருத்தம் என்னை மயக்கமடைய வைத்து விட்டது என்றார். பிறகு குரைஷிகளை நோக்கி குரைஷிகளே பிற்காலத்தில் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவும் என்று கூறினார்

முன் வேதங்களைக் கற்ற  துறவி பஹீராவின் சுபச் செய்தி:

بَحِيرَى الراهب :ولما بلغ رسول الله صلى الله عليه وسلم اثنتى عشرة سنة ـ قيل : وشهرين وعشرة أيام ـ ارتحل به أبو طالب تاجرًا إلى الشام، حتى وصل إلى بُصْرَى ـ وهي معدودة من الشام، وقَصَبَة لحُورَان، وكانت في ذلك الوقت قصبة للبلاد العربية التي كانت تحت حكم الرومان . وكان في هذا البلد راهب عرف بَبحِيرَى، واسمه ـ فيما يقال : جرجيس، فلما نزل الركب خرج إليهم، وكان لا يخرج إليهم قبل ذلك، فجعل يتخلّلهم حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم، وقال : هذا سيد العالمين، هذا رسول رب العالمين، هذا يبعثه الله رحمة للعالمين . فقال له [ أبو طالب و ] أشياخ قريش : [ و ] ما علمك [ بذلك ] ؟ فقال : إنكم حين أشرفتم من العقبة لم يبق حجر ولا شجر إلا خر ساجدًا، ولا يسجدان إلا لنبى، وإنى أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفه مثل التفاحة، [ وإنا نجده في كتبنا ] ، ثم أكرمهم بالضيافة، وسأل أبا طالب أن يرده، ولا يقدم به إلى الشام؛ خوفًا عليه من الروم واليهود، فبعثه عمه مع بعض غلمانه إلى مكة .(الرحيق المختوم

       நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ‘ஷாம்' தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா' என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்' என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு ‘‘இதோ உலகத்தாரின் தலைவர்! உலகத்தாரின் இறைத்தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்''என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் ‘‘இது எப்படி உமக்குத் தெரியும்?'' என வினவினர். அவர் ‘‘நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன்.எங்கள் வேதங்களில் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று கூறினார்.பிறகுஅவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப் அபீஷைபா, இப்னு ஹிஷாம், பைஹகீ

புஹைராவின் சம்பவம் பற்றி வேறு சில நூல்களில்..

அபுதாலிப் அடிக்கடி ஷாம் தேசம் பயணம் செய்வார். இன்றைய 16 அரபுநாடுகள் இணைந்தது தான் அன்றைய ஷாம் எனப்படும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில், அவர்  நபி  (ஸல்) அவர்களையும் அழைத்துச் சென்றார் அவர்களுடன் மக்காவின் தலைவர்களும் இருந்தனர். அவர்கள் துறவி புஹைராவின் ஆலயத்தில் அருகில் தங்கியிருந்தனர். வழமைக்கு மாற்றமாக புஹைரா அவர்களைச் சந்திக்க வெளியே வந்து கொண்டிருந்தார்.  மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முந்தைய வணிகப் பயணங்களில் அவர்கள் அடிக்கடி அவரது மடத்தின் அருகில் நின்றுகொண்டிருந்தாலும், அவர் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்களைக் கவனிக்கவோ மாட்டார். 

ஆனால் இம்முறை அவர் நபி ஸல் அவர்களிடம் சில அடையாளங்களைக் கண்டு கொண்டதால் அதை ஊர்ஜிதப் படுத்த அனைவரையும் விருந்துக்கு அழைத்தார். அவர் அவ்வாறு அழைப்பது மிக ஆச்சரியமாக இருந்தது. அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் நபி ஸல் அவர்கள் சிறுவராக இருந்த காரணத்தால் அவர்களை வாகனங்களின் பாதுகாப்புக்கு விட்டு வந்தனர். புஹைரா அனைவரையும் கவனித்து விட்டு உங்களில் யாரும் இங்கு வராமல் இருக்கிறீர்களா என்று கேட்க, ஒரே ஒரு சிறுவரை மட்டும் வாகனங்களின் பாதுகாப்புக்கு விட்டு வந்தோம் என்றனர்.அவர் தான் முக்கியமாக இங்கு வர வேண்டும் என்று கூறி நபி ஸல் அவர்களை அழைத்து வரச் செய்து  நபி ஸல் அவர்களின் அங்க அடையாளங்களைப் பார்த்து விட்டு சுபச் செய்திகளைச் சொன்னார். 

பூமான் நபி ஸல்  அவர்கள் பிறக்கும் போதும் பிறந்த பின்பும் நடந்த அதிசயங்கள்

நபி (ஸல்) அவர்களை கருவில் சுமக்கும்போதே ஆமினா அம்மையார் அவர்களுக்கு சொல்லப்பட்ட சுபச்செய்திகள்

قال محمد بن إسحاق:أَنّ آمِنَةَ ابْنَةَ وَهْبٍ أُمّ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  كَانَتْ تُحَدّثُ أَنّهَا أُتِيَتْ حِينَ حَمَلَتْ بِرَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقِيلَ لَهَا إنّك قَدْ حَمَلْت بِسَيّدِ هَذِهِ الْأُمّةِ فَإِذَا وَقَعَ إلَى الْأَرْضِ فَقُولِي: أُعِيذُهُ بِالْوَاحِدِ مِنْ شَرّ كُلّ حَاسِدٍ ثُمّ سَمّيهِ مُحَمّدًا فإن اسمه في التوراة أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في الانجيل أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في القرآن محمد وَرَأَتْ حِينَ حَمَلَتْ بِهِ أَنّهُ خَرَجَ مِنْهَا نُورٌ رَأَتْ بِهِ قُصُورَ بُصْرَى مِنْ أَرْضِ الشّامِ ثم لما وضعته رأتْ عيانا تأويل ذلك كما رأته قبل ذلك والله أعلم (السيرة النبوية لابن كثير)

நபி(ஸல்) பிறந்தது திங்கள்கிழமை என்பதால் அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத்

عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ (مسلم)عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ وُلِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ وَاسْتُنْبِئَ يَوْمَ الِاثْنَيْنِ وَتُوُفِّيَ يَوْمَ الِاثْنَيْنِ وَخَرَجَ مُهَاجِرًا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ يَوْمَ الِاثْنَيْنِ وَقَدِمَ الْمَدِينَةَ يَوْمَ الِاثْنَيْنِ وَرَفَعَ الْحَجَرَ الْأَسْوَدَ يَوْمَ الِاثْنَيْنِ-عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ (احمد)

பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை அவர்களின் தாய் அனுபவிக்கவில்லை

عن ابن عباس رضي الله عنه  أن آمنة بنت وهب قالت:لقد علقت به (أي رسول الله صلى الله عليه وسلم) فما وجدت له مشقة حتى وضعته فلما فصل منى خرج معه نور أضاء له ما بين المشرق والمغرب ثم وقع إلى الارض معتمدا على يديه ثم أخذ قبضة من التراب فقبضها ورفع رأسه إلى السماء (السيرة النبوية)  عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ عَنْ أُمّهِ أُمّ عُثْمَانَ الثّقَفِيّةِ قَالَتْ"حَضَرْتُ وِلَادَةَ رَسُولِ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  فَرَأَيْت الْبَيْتَ حِينَ وُضِعَ قَدْ امْتَلَأَ نُورًا وَرَأَيْت النّجُومَ تَدْنُو حَتّى ظَنَنْت أَنّهَا سَتَقَعُ5 عَلَيّ"- (السيرة النبوية - لابن كثير)

குழந்தையைக் கொடுத்தனுப்பி, அக்குழந்தை பற்றிய முன்னறிவிப்பையும் அப்துல் முத்தலிபிடம் கூறப்பட்ட போது.

قال محمد بن إسحاق: فلما وضعته بعثت إلى عبد المطلب جاريتهافلما جاءها أخبرته وحدثته بما كانت رأت حين حملت به وما قيل لها فيه وما أمرت أن تسميه فأخذه عبد المطلب فأدخله على هُبَلُ6 في جوف الكعبة فقام عبد المطلب يدعو ويشكر الله عزوجل ويقول: الحمد لله الذى أعطاني * هذا الغلام الطيب الاردان قد ساد في المهد على الغلمان * أعيذه بالبيت ذى الاركان حتى يكون بلغة الفتيان * حتى أراه بالغ البنيان أعيذه من كل ذى شنآن * من حاسد مضطرب العنان ذى همة ليس له عينان * حتى أراه رافع اللسان أنت الذى سميت في القرآن * في كتب ثابتة المثانى * أحمد مكتوب على اللسان (السيرة النبوية - لابن كثير) (دلائل النبوة للبيهقي)

வானத்தை நோக்கி பார்க்க முடியாத வகையில் குழந்தையின் மீது வைக்கப்பட்டிருந்த பானை உடைந்த சம்பவம்

عن أبى الحكم:كان المولود إذا ولد في قريش دفعوه إلى نسوة من قريش إلى الصبح يكفأن عليه برمة (أي وضعوه تحته لا ينظرون إليه حتى يصحبوا) فلما ولد رسول الله صلى الله عليه وسلم دفعه عبد المطلب إلى نسوة فكفأن7 عليه برمة فلما أصبحن أتين فوجدن البرمة قد انفلقت8 عنه باثنتين (ولم يبت تحتها صلى الله عليه وسلم) ووجدنه مفتوح العينين شاخصا ببصره إلى السماء فأتاهن عبد المطلب فقلن له:ما رأينا مولودا مثله وجدناه قد انفلقت عنه البرمة ووجدناه مفتوحا عينيه شاخصا ببصره إلى السماء.فقال:احفظنه فإنى أرجو أن يكون له شأن أو أن يصيب خيرا ..فلما كان اليوم السابع ذبح عنه ودعا له قريشا فلما أكلوا قالوا يا عبد المطلب أرأيت ابنك هذا الذى أكرمتنا على وجهه ما سميته ؟ قال سميته محمدا قالوا:فما رغبت به عن أسماء أهل بيته ؟ قال: أردت أن يحمده الله في السماء وخلقه في الارض (السيرة النبوية - لابن كثير 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான்

وفي تفسير بْنِ مَخْلَدٍ أَنّ إبْلِيسَ رَنّ أَرْبَعَ رَنّاتٍ رَنّةً حِينَ لُعِنَ وَرَنّةً حِينَ أُهْبِطَ وَرَنّةً حِينَ وُلِدَ رَسُولُ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَرَنّةً حِينَ أُنْزِلَتْ فَاتِحَةُ الْكِتَابِ قَالَ وَالرّنِينُ وَالنّخَارُ مِنْ عَمَلِ الشّيْطَانِ (السيرة النبوية  لابن كثير) وكان إبليس يخرق السموات السبعَ فلما وُلد عيسى  عليه  السلام حُجب من ثلاث سموات وكان يصل إلى أَربَعٍ فلما وُلدَ محمد صلى الله عليه وسلم حُجب من السبع ورُميت الشياطين بالشُّهب الثواقب (السيرة الحلبية)

மாநபி ஸல் அவர்களின் குழந்தைப் பருவத்தில்  அவர்களின் பரக்கத்தால் மழை பொழிதல்:

يستسقى الغمام بوجهه- أخرج ابن عساكر عن جَلْهُمَة بن عُرْفُطَة قال : قدمت مكة وهم في قحط، فقالت قريش : يا أبا طالب، أقحط الوادي، وأجدب العيال، فهَلُمَّ فاستسق، فخرج أبو طالب ومعه غلام، كأنه شمس دُجُنَّة، تجلت عنه سحابة قَتْمَاء، حوله أُغَيْلمة، فأخذه أبو طالب، فألصق ظهره بالكعبة،ولاذ بأضبعه الغلام، وما في السماء قَزَعَة، فأقبل السحاب من هاهنا وهاهنا وأغدق واغْدَوْدَق، وانفجر الوادي، وأخصب النادي والبادي، وإلى هذا أشار أبو طالب حين قال :وأبيضَ يُستسقى الغَمَام بوجهه ** ثِمالُ اليتامى عِصْمَةٌ للأرامل  (الرحيق

ஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும் பஞ்ச காலத்தில் மக்காவுகுச் சென்றேன். அப்போது குறைஷியர்கள் ‘‘கணவாய்கள் வரண்டு விட்டன. பிள்ளைககள் வாடுகின்றனர்.வாருங்கள்! மழைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என அபூதாலிபிடம் கூறினர். அவர் வெளியேறி வந்தார். அவருடன் மேகம் மறைக்காத சூரியனின் பிரகாசமுடைய ஒரு சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள் பலர் அபூதாலிபைச் சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப் அச்சிறுவரை தூக்கிஅவரின் முதுகைசேர்த்து வைத்து பிரார்த்தித்தார்.அபூதாலிபின் தோள்புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார். மேகமற்றுக்கிடந்த வானத்தில் அங்கும் இங்குமிருந்த மேகங்கள் ஒன்று திரண்டன. பிறகு பெய்த பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன் சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. இதை சுட்டிக்காட்டும் விதமாக அபூதாலிப் கவிதை பாடினார். அவர் அழகரல்லவேர் அவரை முன்னிறுத்தி நாங்கள் மழை வேண்டுவோம்; அவர் அநாதைகளின் அரணல்லவேர் கைம்பெண்களின் காவலரல்லவோ.

ஹிஜ்ரத்

 12-06-2026 துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم          ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும்  இஸ்லாமியப் புத்தாண்டு https://chennaijamaathulula...