வியாழன், 22 மே, 2025

உயர் கல்வி பெறுவோம்

23-5-2025  jumma bayan 

மார்க்கக் கல்வியில் முன்னேறுவது பற்றியும் சில வாரங்களுக்கு முன்பு பேசப்பட்டது. அதேபோல உலகக் கல்வியிலும் நம் சமூகம் முன்னேற வேண்டும். இன்றைக்கு நம் மாணவர்களில் பலர் குறிப்பாக ஆலிம்களின் பிள்ளைகளில் பலர் பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள். அவர்கள் மென்மேலும் முயற்சி செய்து உயர் பதவிகளை அடைய வேண்டும். அதேபோல மாணவர்களில்  மற்றொரு சாரார் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து விட்டோம் என்ற கவலையில் மனம் துவண்டு விடுவதும் உண்டு. அவர்களுக்கும் வழி காட்டுவது இந்நேரத்தில் அவசியமானதாக ஆகி விட்டது. எனவே அதைப் பற்றிப் பேசும் முன்பு அதன் முன்னுரையாக நம்முடைய மார்க்கத்தில் மார்க்கக் கல்வியைப் போன்றே உலக ரீதியான அடிப்படைக் கல்வி  எந்த அளவுக்கு அவசியம் என்பதைப் பற்றிக் காண்போம். 

இஸ்லாத்தில் உலகக் கல்விக்கும்  முக்கியத்துவம் உண்டு
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَمْ يَكُنْ لأُنَاسٍ مِنْ أُسَارَى بَدْرٍ فِدَاءٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِدَاءَهُمْ أَنْ يُعَلِّمُوا أَوْلاَدَ الأَنْصَارِ الْكِتَابَةَ  (سنن الكبري للبيهقي)  وكان زيد بن ثابت ممن تعلّم الكتابة  والكتابة من الاساري 
 பத்ரு யுத்தம் முடிவுற்ற பிறகு நபி (ஸல்) அவர்கள், "பிணைத்தொகை வழங்க முடியாத ஒவ்வொருவரும் 10 முஸ்லிம்களுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம்" என அறிவுறுத்தினார்கள். அவ்வாறு அந்தக் கைதிகளிடமிருந்து அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டவர்களில் ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் ஒருவர். அன்றைய தினத்தில் கல்வித் தேவையை விட நபி (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாமிய அரசாங்கத்திற்கும் பணத் தேவையும், குரைஷியருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்தக் கைதிகளை தம் வசம் வைத்திருப்பதுமே அவசியத் தேவையாக இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தேவையை விட, கல்வித் தேவை தான் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து அதையே தேர்ந்தெடுத்தார்கள்.
قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ أَمَرَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَتَعَلَّمْتُ لَهُ كِتَابَ يَهُودَ وَقَالَ « إِنِّى وَاللَّهِ مَا آمَنُ يَهُودَ عَلَى كِتَابِى ». فَتَعَلَّمْتُهُ فَلَمْ يَمُرَّ بِى إِلاَّ نِصْفُ شَهْرٍ حَتَّى حَذَقْتُهُ فَكُنْتُ أَكْتُبُ لَهُ إِذَا كَتَبَ وَأَقْرَأُ لَهُ إِذَا كُتِبَ إِلَيْهِ. (ابوداود
நபி ஸல் அவர்களுக்கு யூதர்களிடமிருந்து ஏதேனும் கடிதம் வரும்போது அதன் மொழி தெரியாத தால் அந்த யூதர்களில் ஒருவரை அழைத்தே அந்தக் கடித த்தை வாசிக்கச் சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் அதை வாசித்துச் சொல்வதில் நபி ஸல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழ்நிலை இருந்த து. அதனால் நபி ஸல் அவர்களின் உத்தரவுப்படி  ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் யூதர்களின் மொழியை  15 நாட்களில் கற்றுக் கொண்டார்கள். ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சிரியாக் மற்றும் ஹிப்ரு மொழிகளை தம் 13 ஆம் வயதிலேயே கற்றுக்கொண்டார்கள், நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் கடிதங்கள் எழுதுவதாக இருந்தால் இவர்களை அழைத்து தான் எழுதச் சொல்லுவார்கள். அதைப்போல் நபிகளாருக்கு வரும் கடிதங்களை வாசிப்பதற்கும்  இவர்களே நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் நபி (ஸல்)அவர்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டானது. நபிகளாரோடு நெருங்குவதற்கு காரணம் வாசிக்கத் தெரிந்ததுதான்!
    உலகில் முதல்முறையாக கல்விப் புரட்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று உலக அளவில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது. 
   2006 சச்சார் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகம் முஸ்லிம் சமூகம் தான். இன்றும் சிலரின் நிலை அவ்வாறு தான் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் படிக்கத் தெரியாத பல முஸ்லிம்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இந்தியாவைப்பொறுத்தவரை யார் தன்பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என அறியப்படுகிறார். ஆனால் இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் படித்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பவர்கள் இன்றும் நம்மில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான தக்க பதிலடி பத்ருப் போரில் நடைபெற்ற  மேற்படி நிகழ்வாகும். 
மலக்குகளிடம் மனிதனை அல்லாஹ் உயர்வாக்கிக் காட்டியது கல்வியறிவைக் கொண்டு தான்
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (31) قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ (32) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ (البقرة33)
வாழ்க்கைக்கு அவசியமான எல்லாக் கல்வியும் கற்க வேண்டியது தான். கடலில் பயணம் செய்பவனுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்
ஒரு படகில் மூன்று அறிஞர்களும் பயணம் செய்த போது, படகோட்டியிடம் தங்கள் அறிவுத் திறனைக் காட்ட, “ஏம்ப்பா உனக்கு கணிதம் தெரியுமா? என்று ஒரு அறிஞர் கேட்க, “அதெல்லாம் தெரியாதுங்க என்றான் படகோட்டி. அச்சச்சோ, வாழ்நாளின் கால்வாசியை வீணாக்கி விட்டாயே ! என்றார் அந்த அறிஞர். அடுத்து இரண்டாமவர் ஏம்ப்பா உனக்கு வான சாஸ்திரம் தெரியுமா? எனக் கேட்க அதெல்லாம் தெரியாதுங்க என்றதும் “அச்சச்சோ,உன் வாழ்வில் பாதி வீணாகி விட்டதே” என வருந்தினார். அடுத்து மூன்றாமவர் ஏம்ப்பா உனக்கு அறிவியலாவது தெரியுமா? எனக்கேட்க “அதெல்லாம் தெரியாதுங்க” என்று சொன்னவுடன் அச்சச்சோ உன் வாழ்நாளில் முக்கால் வாசியை வீணாக்கி விட்டாயே! என்று சலித்துக் கொண்டார். திடீரென அவன் கேட்டான். ஏங்க உங்களில் யாருக்காவது நீச்சல் தெரியுமா என்று.   “தெரியாதே” என அம்மூவரும் அலட்சியமாக சொன்னதும் அச்சச்சோ.. உங்க எல்லோரின் முழு வாழ்க்கையும் வீணாகிப் போச்சே நாம் சுழலில் மாட்டிக் கொண்டோம்” என்று சொல்லி தண்ணீரில் குதித்து காணாமல் போனான்
عن أبي رافع رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقُّ الوَلَدِ على الوَالِدِ أنْ يَعَلِّمَهُ الكِتابَةَ والسِّباحَةَ والرِّمايَةَ وأنْ لا يَرْزُقَهُ إلاَّ طَيباً-عن ابن عمر رض  عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِّمُوا أَبنَاءَكُمُ السِّبَاحَةَ1 والرَّمْيَ والمَرْأَةَ الْمِغْزَلَ2-عن بكر بن عبد الله بن الربيع الأنصاري عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنِعْمَ لَهْوُ المُؤْمِنَةِ فِي بَيْتِهَا الْمِغْزَلُ وَأَذَا دَعَاكَ أَبوكَ فَأَجِبْ -عن سهل بن سعد عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَمَلُ الأَبْرَارِ مِنَ النِّسَاءِ الْمِغْزَلُ (الفتح الكبير)
  நபி ஸல் கூறினார்கள். எழுத்தறிவு, நீச்சல், அம்பெறிதல் ஆகியவற்றைக் கற்றுத் தருவதும் ஹலாலான உணவு அல்லாத வேறு உணவுகளை வழங்காமல் இருப்பதும் பிள்ளையின் மீது தந்தையின் கடமையாகும். மேலும் இப்னு உமர்  ரழி கூறினார்கள். உங்களின் ஆண் பிள்ளைகளுக்கு நீச்சலையும்  அம்பெறிதல் கற்றுத் தாருங்கள்.  உங்களுடைய உங்களின் பெண் பிள்ளைகளுக்கு தையற்கலையைக் கற்றுத்   தாருங்கள்.  மேலும் நபி ஸல் கூறினார்கள். முஃமினான பெண்ணுக்கு அவளுடைய வீட்டில் ஓய்வான நேரங்களின் நன்மயான பொழுது போக்கு  தையற்கலையாகும். நல்ல பெண்களுக்கு உகந்த தொழில்களில் ஒன்று தையற்கலையாகும். படிப்பினை- நபி ஸல் சிலவற்றை மட்டும் கூறியிருந்தாலும் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்துக் கல்வியும் மனிதனுக்கு அவசியம் என்பதற்கு மேற்படி ஹதீஸ்கள் சான்றாகும். 
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடைய பெற்றோரின் கவனத்திற்கு......
பெற்றோர்களின் சிந்தனையில்  உயர்ந்த இலட்சியம் இருக்கலாம். ஆனால் நிர்பந்திக்கக் கூடாது
இன்றைய அநேக பெற்றோர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கும் இயந்திரக் கருவிகளாக தங்களின் பிள்ளைகளைப் பார்க்கின்றார்கள். வளரும் போதே, படிக்கும் போதே நீ டாக்டராக வேண்டும், இன்ஜீனியராக வேண்டும், நீ கலெக்டராக வேண்டும் என்று கூறுகின்றார்கள். விருப்பமில்லாத துறையில் பிள்ளைகளை கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு பல்கழைக்கழக துணை வேந்தர் கூறியது. உங்கள் பையனுக்குள்ளே ஒரு டாக்டரோ, ஒரு எஞ்சினியரோ, ஒரு ஆசிரியரோ, ஒரு மெக்கானிக்கோ, ஒரு வக்கீலோ, ஒரு வியாபாரியோ ஒளிந்திருக்கிறார்கள். அவர்களை அவர்களாக உருவாக்குவதற்கு பதிலாக நீங்கள் வேறுவிதமாக திசை திருப்புகிறீர்கள். தோற்றுப்போகிறீர்கள். மெக்கானிக்காக வர வேண்டியவனை நீங்கள் டாக்டராக உருவாக்க உங்கள் சக்தியை வீணடிக்கிறீர்கள். அவன் இரண்டு பேராகவும் (டாக்டர், மெக்கானிக்) வர முடியாமல் ஆகி விடுகிறான். ஆகவே அவனை ஆராயுங்கள். அவன் விருப்பத்தில் கவனம் வையுங்கள். அவனுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள். உமர் ரழி அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன் இஸ்லாமியர்களை வதைப்பதில் இன்பம் கண்டவர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் அந்த முரட்டுத்தனத்தை விடச்சொல்லி நபி ஸல் வலியுறுத்தவில்லை. மாறாக அந்த முரட்டுத்தனத்தை இஸ்லாமிய நெறிகளை பாதுகாப்பதிலும், இஸ்லாமிய எதிரிகளை வீழ்த்துவதிலும் திருப்பினார்கள்
சிறுவர்கள் தானே என்று அவர்களிடம் ஆலோசனை கேட்காமல் ஒதுக்கி விடக் கூடாது.
  நபி {ஸல்} அவர்களின் சபை நபித்தோழர்களால் நிரம்பி இருந்தது.எப்போதும் அண்ணலாரின் அருகே, வலப்பக்கத்தில் இருக்க வேண்டிய அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்போது இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.ஒரு கோப்பையில் பால் கொண்டு வரப்படுகின்றது. அண்ணலார் அதைப் பருகி விட்டு வலது பக்கத்தைப் பார்க்கின்றார்கள் அங்கே ஃபள்ல் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அமர்ந்திருக்கின்றார்கள். வயதில் மிகவும் சிறியவரான ஃபள்ல் (ரலி) அவர்களிடம் இப்போது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “ஃபள்லே! எப்போதும் என் அருகே என் தோழர் அபூபக்ர் (ரலி) தான் அமர்ந்திருப்பார், அவருக்கு தான் நான் கொடுப்பேன். இப்போது நீ அமர்ந்திருக்கின்றாய்? நான் அபூபக்ர் அவர்களுக்கு கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். இல்லை! அல்லாஹ்வின் தூதரே! நான் எனக்கான வாய்ப்பை விட்டுத் தர முடியாது! என்று சொல்லி விட்டார். ஃபள்ல் (ரலி) அவர்கள்.பின்னர் அந்தக் கோப்பை அனைவரிடமும் சுற்றி வந்து இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து சேர்ந்தது. கடைசியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் பாலைப் பருகினார்கள். இங்கே, சிறுவன் என்பதற்காக நபி {ஸல்} அவர்கள் தாங்கள் விரும்பியவாறு நடக்க வில்லை. ஃபள்ல் இடம் கேட்கிறார்கள். அவருக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பதை நபி {ஸல்} அவர்கள் உணர்த்துகின்றார்கள். ஆனால், இன்றைய பெற்றோர்கள் தங்களின் மகனிடமோ, மகளிடமோ நீ என்னவாக ஆக விரும்புகின்றாய் என்று கேட்பதும் இல்லை. அவர்களின் விருப்பத்திற்கு இசைவு தருவதும் இல்லை
நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்  முக்கியமான அரசுத் துறைகளில் பங்கெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%,-  +2 வரை படித்தவர்கள் 7.8%,    டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, --பட்டப்படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே,- 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள். தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.
குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு...
குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சோர்ந்து விடக்கூடாது. முன்னேறுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன
  இன்றைய பெற்றோர்களும்,ஆசிரியர்களும் தேர்வுகளில் பெறப்படும் அதிக மதிப்பெண்கள் தான் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக ஓர் தவறான பார்வையை மாணவச் சமூகத்தின் மீது திணித்து விடுகிறார்கள்.இதனால் மாணவச்சமூகம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டநாள் முதல் ரிசல்ட் வரும் நாள்வரை பதட்டத்தோடும், அச்சத்தோடும், மனச் சோர்வோடும் காணப்படுகின்றனர்.இந்திய மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும், 70 சதவீத மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வருவதாகத் தெரிவித்துள்ளது.எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத போது மிகுந்த ஏமாற்றமும், விரக்தியும் ஏற்பட்டு பெற்றோர்களை தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தும் முடிவை (தற்கொலை செய்து கொள்வது) மாணவச் சமூகம் கையில் எடுப்பது சமீப காலமாக பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன என்பதை மாணவர் களுக்கு உணர்த்த வேண்டும். 
ஆசிரியர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை மட்டும் ஊக்கப்படுத்தி அவர்களிடம் மட்டுமே அக்கறை காட்டுகின்றார்கள். கல்வி நிறுவனங்களும் அவர்களை மட்டுமே முன்னிறுத்தி,முக்கியத்துவம் அளிக்கிறது.கல்வித்தரம் குறைந்த மாணவர்களை மேம்படுத்தும் முயற்சிகளில் ஆசிரியர்களும்,நிறுவனங்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.இதுவும் மாணவச் சமூகம் மனச் சுமைகளோடும்,அச்சத்தோடும் இருப்பதற்கு ஓர் காரணமாகும்.
عن بن عباس قال: إن عمارة بنت حمزة بن عبد المطلب وأمها سلمى بنت عميس كانت بمكة، فلما قدم رسول الله كلم علي النبي، فقال: علام  تترك ابنة عمنا يتيمة بين ظهري المشركين ، فلم ينهه النبي عن إخراجها فخرج بها ، فتكلم زيد بن حارثة وكان وصي حمزة وكان النبي آخى بينهما حين آخى بين المهاجرين، فقال: أنا أحق بها، ابنة أخي. فلما سمع بذلك جعفر بن أبي طالب قال: الخالة والدة، وأنا أحق بها لمكان خالتها عندي أسماء بنت عميس. فقال علي: ألا أراكم تختصمون في ابنة عمي وأنا أخرجتها من بين أظهر المشركين وليس لكم إليها نسب دوني وأنا أحق بها منكم. فقال رسول الله: " أنا أحكم بينكم، أما أنت يا زيد فمولى الله ورسوله، وأما أنت يا علي فأخي وصاحبي، وأما أنت يا جعفر فشبيه خلقي وخلقي، وأنت يا جعفر أولى بها تحتك خالتها ولا تنكح المرأة على خالتها ولا على عمتها"، فقضى بها لجعفر                    .
ஹம்ஜா (ரலி) அவர்கள் உஹதில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களின் மனைவி ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி)அவர்களும், ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரே மகளான அமாரா (ரலி) அவர்களும் மக்காவில் வாழ்ந்து வந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் “ஹம்ஜா(ரலி) அவர்களின் ஒரேயொரு மகள் இப்போது அநாதையாகி மக்கத்து இணைவைப்பாளர்கள் மண்ணில் நிற்கிறாள். நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அனுமதி தரவே அலீ (ரலி) அவர்கள் மக்கா சென்று அமாராவை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள். அமாராவை யார் பொறுப்பேற்பது? என்று மூன்று நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் தாம் தான் எடுப்பேன் என சண்டையிட்டுக் கொண்டார்கள்.இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தனர் அந்த மூவரும்.அலீ (ரலி) அவர்கள், ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள், ஜஅஃபர் இப்னு அபூதாலிப் அவர்கள் இம்மூவரும் தான் சண்டையிட்டுக்கொண்டவர்கள்.நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! அமாரா என் தந்தையின் சகோதரரின் மகள் ஆகவே அதிகத் தகுதியுடையவன் நான்” என்று அலீ (ரலி) பதில் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா அவர்களும் நானும் ஒரே தாயிடத்தில் பால் குடித்திருக்கின்றோம். மேலும், எனக்கும் அவருக்கும் இடையே நீங்கள் தான் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள். ஆகவே, இரு தகுதிகள் இருப்பதால் நானே அதிகத்தகுதியுடையவன்” என்று ஜைத் (ரலி) பதில் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.“அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் ஆவார், மேலும், ஹம்ஜா (ரலி) மணம் முடித்திருக்கின்ற ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களை நான் மணம் முடித்திருக்கின்றேன். அமாராவுக்கு என் மனைவி சின்னம்மா ஆவாள். ஆகவே நானே அதிகத் தகுதியுடையவன்” என்று ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
மூவரின் உரிமை கோரலையும் செவிமடுத்து விட்டு பெருமானர் {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து ”அலீயே! நீர் என் சகோதரரும், என் சுவனத்து தோழரும் ஆவீர்! ஜைத் (ரலி) அவர்களை அழைத்து “ஜைதே! நீர் அல்லாஹ், ரசூலின் அடிமையாவீர்!, ஜஅஃபர் (ரலி) அவர்களை அழைத்து “ஜஅஃபரே! நீர் என்னைப் போன்றே குணத்திலும், தோற்றத்திலும் ஒத்து இருக்கின்றீர்!” என்று கூறி விட்டு, அமாராவின் சின்னம்மாவை நீர் மணம் முடித்திருப்பதால் நீரே அமாராவை வளர்ப்பதற்கு தகுதியாவீர்! நீர் அமாராவை உம் பொறுப்பில் எடுத்து வளர்த்துக் கொள்வீராக!” என்று தீர்ப்பளித்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )
இந்த சம்பவத்தில் பல உண்மைகளும் படிப்பினைகளும் பொதிந்திருக்கின்றன. அமாரா (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களுக்கும் பெரிய தந்தையின் மகள் தான். நபி {ஸல்} அவர்கள் நினைத்திருந்தால் மூவரையும் திருப்பி அனுப்பி விட்டு தாங்களே வளர்க்கும் உரிமையை எடுத்திருக்கலாம். ஏனென்றால் குடும்ப உறவு நபிகளாருக்கு இருக்கின்றது. அல்லது ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) அவர்களில் இருவரில் ஒருவருக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். குடும்ப உறுப்பினர் என்கிற முறையில். அல்லது மூவரில் எவரிடமாவது வளர்க்கும் உரிமையை கொடுத்திருக்கலாம் அல்லாஹ்வின் தூதர் என்கிற அடிப்படையில். இந்த மூன்றில் நபி {ஸல்} அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் யாரும் மறுப்பேதும் சொல்லப்போவதில்லை. மாறாக, மூவரையும் அழைத்து நேர்காணல் நடத்தி ஒவ்வொருவருக்கும் இடையே இருக்கும் உறவு முறைகளை அறிந்து வைத்துக் கொண்டே அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பின்னர் தீர்ப்பளிக்கின்றார்கள். அதுவும் உரிமை கோரி நின்ற மற்ற இருவருக்கும் தகுந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் வழங்குகின்றார்கள். இங்கே, நபி {ஸல்} ஒரு நபியாக, ஒரு குடும்ப உறவாக செயல்படாமல் தங்கள் பாசறையிலே பயின்று வரும் மூன்று மாணாக்கர்களின் மிக உயர்ந்த பண்பாட்டை அங்கீகரித்து, ஒரு ஆசிரியராக தட்டிக் கொடுத்து, உற்சாகமூட்டி மனம் உடைந்து விடாதபடி நடக்கின்றார்கள். ஒரு வகுப்பறையிலே பல தரப்பட்ட தரம் கொண்ட மாணவர்கள் இருப்பார்கள், அவரவர்களின் தரத்திற்கேற்ப அவர்களை உற்சாகமூட்டி, தட்டிக் கொடுத்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் வழங்கி முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையை இந்த சம்பவம் உணர்த்துவதாக அமைந்துள்ளது
மாணவர்களும் உயர்ந்த இலட்சியத்தோடு படித்து முன்னேற வேண்டும்.
قَالَ (ابوبكر رضي الله عنه ) ..فَارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا فَلَمْ يُدْرِكْنَا أَحَدٌ مِنْهُمْ إِلاَّ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْن جُعْشُمٍ عَلَى فَرَسٍ لَهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا. فَقَال « لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ». حَتَّى إِذَا دَنَا مِنَّا فَكَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قَدْرُ رُمْحٍ أَوْ رُمْحَيْنِ أَوْ ثَلاَثَةٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا وَبَكَيْتُ. قَالَ « لِمَ تَبْكِى ». قَالَ قُلْتُ أَمَا وَاللَّهِ مَا عَلَى نَفْسِى أَبْكِى وَلَكِنْ أَبْكِى عَلَيْكَ. قَالَ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ « اللَّهُمَّ اكْفِنَاهُ بِمَا شِئْتَ ». فَسَاخَتْ قَوَائِمُ فَرَسِهِ إِلَى بَطْنِهَا فِى أَرْضٍ صَلْدٍ وَوَثَبَ عَنْهَا وَقَالَ يَا مُحَمَّدُ قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ فَادْعُ اللَّهَ أَنْ يُنْجِيَنِى مِمَّا أَنَا فِيهِ فَوَاللَّهِ لأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِى مِنَ الطَّلَبِ وَهَذِهِ كِنَانَتِى فَخُذْ مِنْهَا سَهْماً فَإِنَّكَ سَتَمُرُّ بِإِبِلِى وَغَنَمِى فِى مَوْضِعِ كَذَا وَكَذَا فَخُذْ مِنْهَا حَاجَتَكَ. قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لا حَاجَةَ لِى فِيهَا ». قَالَ وَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأُطْلِقَ فَرَجَعَ إِلَى أَصْحَابِهِ وَمَضَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَة.....(مسند أحمد
عن الحسن أن رسول الله {صلى الله عليه وسلم} قال لسراقة بن مالك كيف بك إذا لبست سواري كسرى قال فلما أتى عمر رضي الله عنه بسواري كسرى ومنطقته وتاجه دعا سراقة ابن مالك فألبسه إياهما (الخصائص الكبري
சுருக்கம்- ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி ஸல் அவர்களைத் துரத்தி வந்த சுராகா உடைய சம்பவத்தை இங்கே சுட்டிக் காட்டலாம்.  (பிற்காலத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.) நபி ஸல்  அவர்களை நெருங்க அவர் முயற்சி செய்த போதெல்லாம்  பூமி அவரை உள்ளே  இழுத்தது.  கடைசியாக அவர் திருந்தி இனிமேல் நான் உங்களைப் பின் தொடர மாட்டேன். மேலும் நான் திரும்பிச் செல்லும் யார் வந்தாலும் நான் அவர்களைத் திசை திருப்பி விடுவேன் என்று கூறியபோது அவரிடம் நபி ஸல் அவர்கள் நான் உமக்கு கிஸ்ரா மன்னரின் அணிகலன்களை வாக்களிக்கிறேன் என்றார்கள். இதில் படிப்பினை என்னவென்றால் நபி ஸல் அவர்கள் அந்த நேரத்தில் மக்காவாசிகளின் எண்ணத்தின் படி தேடப்படும் கைதியாக இருந்தும் கூட, அவர்களின் மனதில் உயர்ந்த இலட்சியம் இருந்தது. அதாவது நம்மால் பாரசீகத்தை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்த து. அவ்வாறே உமர் ரழி அவர்களின் காலத்தில் பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மன்னர் கிஸ்ரா அணிந்த அணிகலன்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது. அப்போது நபி ஸல் அவர்கள் வாக்களித்த படி சுராகா அவர்களை அழைத்து உமர் ரழி அவர்கள் கிஸ்ராவின் அணிகலன்களை சுராகாவிடம் ஒப்படைத்தார்கள்.
விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும், மனவலிமையோடும் படிக்க வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ   (مسلم
“பலவீனமான இறைநம்பிக்கையாளனை விட, மனவலிமை உள்ள முஃமின் சிறந்தவனும், அல்லாஹ்விடம் உவப்பைப் பெற்றவனும் ஆவான்”   ( நூல்: முஸ்லிம்)
இயன்ற அளவு முயற்சி செய்து ஆர்வத்தோடும், ஆசையோடும் படிக்க வேண்டும்.
احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَاتَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَاتَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ  رواه مسلم
“உனக்கு பயன் தருகிற அனைத்தின் மீதும் நீ ஆசைப்படு! பின்னர் அதற்காக கஷ்டப்படு! அல்லாஹ்விடம் உதவி கேள்! சோர்ந்து போய்விடாதே! நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்காமல் போய் விட்டால் நான் இப்படி, இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியது தான் நடந்தது என்று சொல்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.    ( நூல்: முஸ்லிம் )
என்னால் முடியும், என்னிடம் நல்ல மதிப்பெண் எடுக்கும்திறமை  இருக்கிறது,  நான்  சாதிப்பேன்,  என  பாஸிட்டிவ் ஆகபேசுவதை, நினைப்பதைத் தான் அல்லாஹ்வும், அவனது ரஸூலும்  விரும்புகின்றனர்
யூஸுஃப் {அலை} அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசரோடு உரையாடும் வாய்ப்பை பெற்ற போது…“நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்றார்.மேலும், இதன் பின்னர் நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர்கள் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்கள்”. ( அல்குர்ஆன்: 12: 55, 56 )
ஸுலைமான் {அலை } அவர்கள் ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை உடனடியாக யாரால் கொண்டு வர முடியும் என்று கேட்ட போது….“அவர்களுள் கல்வியறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண் மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்றார்  (அல்குர்ஆன்: 27: 40 
ويوم جاء وفد نجران من اليمن مسلمين، وسألوه أن يبعث معهم من يعلمهم القرآن والسنة والاسلام، قال لهم رسول الله:" لأبعثن معكم رجلا أمينا، حق أمين، حق أمين.. حق أمين"..!! وسمع الصحابة هذا الثناء من رسول الله صلى الله عليه وسلم،  فتمنى كل منهم لو يكون هو الذي يقع اختيار الرسول عليه، فتصير هذه الشهادة الصادقة من حظه ونصيبه.. يقول عمر بن الخطاب رضي الله عنه:" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها، فرحت الى الظهر مهجّرا، فلما صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر، سلم، ثم نظر عن يمينه، وعن يساره، فجعلت أتطاول له ليراني..فلم يزل يلتمس ببصره حتى رأى أبا عبيدة بن الجرّاح، فدعاه، فقال: أخرج معهم، فاقض بينهم بالحق فيما اختلفوا فيه.. فذهب بها أبا عبيدة؟..!! ان هذه الواقعة لا تعني طبعا أن أبا عبيدة كان وحده دون بقية الأصحاب موضع ثقة الرسول وتقديره..
ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்க விஷயங்களை  கற்றுத்  தரவும், தங்கள்  பகுதியில்  அழைப்புப்பணி  செய்யவும், தங்களுக்கு இமாமத்  செய்யவும்  ஒரு நபரை தங்களோடு  அனுப்பி  வைக்குமாறு மாநபி {ஸல்}  அவர்களிடம்  வேண்டி  நின்றனர்.அப்போது  நபி {ஸல்}  அவர்கள் ”உங்களோடு  நம்பிக்கையான ஒருவரை அனுப்பி  வைக்கிறேன்”  என்றார்கள்.  இந்நேரத்தில்லுஹர்  தொழுகைக்கான  அழைப்பு  விடுக்கப்பட்டது.  நபிகளார்  கூறிய   நம்பிக்கையாளர் நாமாக  இருக்க மாட்டோமா?  என்று ஒவ்வொரு ஸஹாபியும்  ஆசைப் பட்டனர். இகாமத்  சொல்லப் பட்டது. நபி ஸல் அவர்கள் தொழ வைத்தார்கள். உமர்  {ரலி}  அவர்கள்  கூறுகின்றார்கள். தொழுது முடித்தவுடன் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள் பின்புஇடது புறம் பார்த்தார்கள்.என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க  வேண்டும்  என்று குதிங்காலால்  ஊனி  எட்டி  எட்டிப்பார்த்தேன்.இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல்ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்}அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள்.பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரைஅழைத்துச் செல்லுங்கள்.“ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர்நம்பிக்கையாளர் உண்டு.எனது உம்மத்தின் நம்பிக்கையாளர்அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்றார்கள்உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:”ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம்வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது. ”நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தைஅடையவேண்டுமென்று அன்று நான் ஆசைப்பட்டேன்”  ஆனால்,  அபூ உபைதா  அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள்.  ( நூல்:ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}, பக்கம்:241)
فقال رسول الله صلى الله عليه وسلم لأعطين الراية غدا رجلا يحبه الله ورسوله يفتح الله على يديه ليس بفرار قال يقول سلمة فدعا رسول الله صلى الله عليه وسلم عليا رضوان الله عليه وهو أرمد فتفل في عينه ثم قال خذ هذه الراية فامض بها حتى يفتح الله عليك يقول عمر بن الخطاب رضي الله عنه:
 ஃகைபர் கோட்டையை  நபி{ஸல்} அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள்  முற்றுகையிட்டிருந்தபோது  கோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அப்போது நபி {ஸல்}அவர்கள் “ நாளை நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற,அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம்கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம்வெற்றியை வழங்குவான்”  என்று கூறினார்கள். உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:   
" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها،
படிப்பினை- வெற்றியடைய வேண்டும் என்ற வேட்கை சஹாபாக்களின் உள்ளத்தில் அதிகமாக இருந்த து
படிப்புச் செலவுகளுக்காக பெற்றோர் படும் கஷ்டத்தை பிள்ளைகள் உணர்ந்து நேரங்களை வீணாக்காமல் முன்னேற வேண்டும்
முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் நான்கு காரியங்களுக்காகவே செலவு செய்யப் படுகின்றது.1. நோய்களுக்கான சிகிச்சைக்காக, 2.திருமண விருந்துக்காக,3. இயக்கங்களின் மாநாடுகளுக்காக 4, கல்விக்காக. பெரும்பாலான பெற்றோர்கள் வீடு, வாசல், தோட்டம் துறவுகளை, நகைகளை விற்று, கடன் வாங்கி, லோன் வாங்கி, வட்டிக்கு பணம் வாங்கி படிக்க வைக்கின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் பள்ளிக் கூடத்திற்கு சரியாக செல்லாமல் வீண் விளையாட்டுக்களிலும், சினிமா கேளிக்கைகளிலும், ஊர் சுற்றுவதிலும் கழித்து விட்டு பரீட்சை நேரத்தில் சரியாக தேர்வெழுதாமல் தோற்றுப் போய் விடுகின்றார்கள். இதுபற்றி அல்லாஹ்விடம் மாணவச் சமூகம் தங்களின் பள்ளிக் காலம் குறித்து கேள்வி கேட்கப் படுவார்கள்.

வெள்ளி, 16 மே, 2025

ஹஜ்ஜின் நினைவிடங்களும் படிப்பினைகளும்

16-05-2025

بسم الله الرحمن الرحيم  
ஹஜ்ஜின் நினைவிடங்களும் படிப்பினைகளும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 மக்கா மதீனாவில் ஹாஜிகள் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களும் பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதை அறிந்து கொண்டு ஹாஜிகளை அந்த இடங்களை சந்திக்கும்போது அது உணர்வுப் பூர்வமானதாக அமையும்.
அறியாமைக் காலத்தில்  குரைஷிகளிடமும் ஹலால் பேணுதல் இருந்ததன் அடையாளம்   ஹதீம்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ " سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ نَعَمْ قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ؟ قَالَ: إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمْ النَّفَقَةُ قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ: فَعَلَ ذَلِكَ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ" (بخاري
சுருக்கம்- ஹதீமைப் பற்றி அன்னை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது அதுவும் கஃபா தான் என்று கூறினார்கள் ஏன் அதை கஃபாவில் இணைக்கவில்லை என ஆயிஷா ரழி அவர்கள் கேட்ட போது அதற்கு நபி ஸல் உன்னுடைய சமூகத்தினர் அதாவது குறைஷிகள் கஃபாவைக் கட்டியபோது பணப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது என்று கூறினார்கள் ஏன் அதன் வாசல் இவ்வளவு உயரமாக இருக்கிறது என்று ஆயிஷா ரழி அவர்கள் கேட்க, அனைவரும் எளிதாக அதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் விரும்பும் முக்கியமானவர்கள் மட்டுமே உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காகவும் குறைஷிகள் அவ்வாறு கட்டினார்கள் குறைஷிகள் இஸ்லாத்திற்கு புதிய நபர்களாக இருந்திருக்கா விட்டால் அதாவது நான் புதிதாக எதை எதையோ செய்கிறேன் என்று எண்ணைப் பற்றி அவர்கள் தவறான எண்ணம் கொள்ள மாட்டார்கள் என்றிருந்தால் நான் ஹதீமை கஃபாவுடன் இணைத்துக் கட்டியிருப்பேன். மேலும் வாசலை தரைக்கு நெருக்கமாகவும ஆக்கியிருப்பேன்.                                                                  
நபி ஸல் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது இளம் ஆலிம்களுக்கு மிகவும் படிப்பினையாகும். பட்டம் வாங்கிய ஏதோ ஒரு  வேகத்தில் சமூகத்தை முற்றிலும் நான் மாற்றியமைத்து விடுவேன் என்று நினைத்து இருப்பதையும் கெடுத்து விடக்கூடாது. மார்க்க விளக்கங்களை பக்குவமாக எடுத்துச் சொல்ல முயற்சி செய்ய வேண்டும். உதாரணமாக நீண்ட காலங்களுக்கு முன்னால் வந்த ஒரு பிரிச்சன் அதாவது இமாம் மிம்பரில் நின்று தமிழ் பயான் செய்வதா அல்லது கீழே நின்று பயான் செய்து விட்டு  பிறகு அரபியில் குத்பா ஓதுவதற்கு மட்டும் மிம்பரைப் பயன்படுத்துவதா என்ற சர்ச்சை தமிழகத்தில் எழுந்தது அப்போது நமது உலமாக்கள் ஒன்றிணைந்து எங்கே எப்படி வழமை உள்ளதோ அதை அப்படியே விட்டு விடுங்கள் அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். இன்றும் நம் நாட்டின் நிறைய மஸ்ஜித்களில் கீழே நின்று பயான் செய்யும் வழமை இருந்தாலும் வேறு சில  சுன்னத் ஜமாஅத் மஸ்ஜித்களில் இன்றும் மிம்பரின் மீது நின்றே  தமிழ் உள்ளிட்ட வேறு மொழிகளில் பயான் செய்யப்படுகிறது.அது தடை செய்யப்படவில்லை.காரணம் மக்களிடையே வீண்குழப்பம் உண்டாகி விடக்கூடாது என்பதாகும்.
عَنْ أَبِي وَهْبٍ الْمَخْزُومِيِّ أَنَّهُ قَالَ لِقُرَيْشٍ : لَا تُدْخِلُوا فِيهِ مِنْ كَسْبِكُمْ إلَّا طَيِّبًا وَلَا تُدْخِلُوا فِيهِ مَهْرَ بَغِيٍّ وَلَا بَيْعَ رِبًا وَلَا مَظْلَمَةٌ أَحَدٍ مِنْ النَّاسِ
குறைஷிகளுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற விளக்கம் ஃபத்ஹுல் பாரி நூலில் பின்வருமாறு உள்ளது   அபூ வஹ்ப் என்பவர் எழுந்து குறைஷிகளிடம் பேசினார் மக்களே நிச்சயமாக கஃபா ஆலயத்தின் கட்டிடப் பணியில் முறையான சம்பாத்தியத்தைத் தவிர  பயன்படுத்த வேண்டாம். வட்டிப் பணத்தைப் பயன்படுத்த வேண்டாம். யாரிடமிருந்தும் அநியாயமாகப் பெறப்பட்ட பணத்தையும் பயன்படுத்த வேண்டாம்.
أن أبا وهب بن عايذ بن عمران بن مخزوم قال لقريش لا تدخلوا من كسبكم إلا طيبا ولا تدخلوا فيه مهر بغي ولا بيع ربا ولا مظلمة أحد من الناس وعند موسى بن عقبة أن الوليد بن المغيرة قال لا تجعلوا فيها مالا أخذ غصبا ولا قطعت فيه رحم ولا انتهكت فيه حرمة  وفي  رواية لا تدخلوا في بيت ربكم إلا طيب أموالكم وتجنبوا الخبيث فإن الله طيب لا يقبل إلا طيبا فلعلهما جميعا قالا ذلك (شرح الزرقاني
படிப்பினை- அறியாமைக் காலத்திலும் குறைஷிகளிடம் இத்தகைய பேணுதல் இருந்துள்ளது என்றால் இன்று நம்முடைய நிலை எவ்வாறு உள்ளது என்று சிந்திக்க வேண்டும். 
கஃபா கட்டப்பட்ட வரலாறு
 கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது. 1.ஆதம் அலை படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்களின் கரத்தால் கட்டவைத்தான். 2. ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள்.  3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாயீல் அலை அவர்கள் கட்டினார்கள்.இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. 4.நபி ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள்.  இந்த நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள். நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித கஃபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: கஃபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஃபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. கஃபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கத் தயாராகினர். ”குறைஷிகளே! கஃபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்களிடமிருந்து அநீதமாக பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது என்று சொல்லிக் கொண்டு, ஒவ்வொரு குறைஷிக் குலத்தாரும் தங்களுக்கிடையே பணியைப் பிரித்துக் கொண்டு செய்து முடித்தனர். ஆனால்  ஹலாலான பணப்பற்றாக்குறையின் காரணத்தினால் கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர். 
قال مجاهد : خلق الله موضع هذا البيت قبل أن يخلق شيئا من الأرض بألفي سنة وأن قواعده لفي الأرض السابعة السفلى (قرطبي
5. யஜீத் ஆட்சிக்காலத்தில் அப்துல்லாஹிப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் மக்காவின் ஆளுநராக இருந்த போது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பிய படி கஃபாவை சீரமைத்தார்கள். 6.அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் கட்டினார். அப்துல்லாஹிப்னு ஜுபைர்  ரழிஅவர்களை கொலை செய்ததும் ஹஜ்ஜாஜ் தான். அவர் தன் காலத்தில் மீண்டும் பழையபடியே ஹதீமை கஃபாவுடன் சேர்க்காமல் தனியாக விட்டு கட்டினார்.  இப்னு ஜுபைர் ரழி அவர்கள் கட்டியதை ஹஜ்ஜாஜ் இடித்தது யாருக்கும் பிடிக்கவில்லை மீண்டும் அதை மாற்ற ஆலோசனை நடந்த போது கஃபா மன்னர்களின் விளையாட்டு மைதானமாக ஆகி விடக்கூடாது எனக்கூறி இமாம் மாலிக் ரஹ்அதை தடுத்து விட்டார்கள்
فَدَلَّ هَذَا عَلَى صَوَاب مَا فَعَلَهُ ابْن الزُّبَيْر فَلَوْ تُرِكَ لَكَانَ جَيِّدًا وَلَكِنْ بَعْد مَا رَجَعَ الْأَمْر إِلَى هَذَا الْحَال فَقَدْ كَرِهَ بَعْض الْعُلَمَاء أَنْ يُغَيَّر عَنْ حَاله كَمَا ذُكِرَ عَنْ أَمِير الْمُؤْمِنِينَ هَارُون الرَّشِيد أَوْ أَبِيهِ الْمَهْدِيّ أَنَّهُ سَأَلَ الْإِمَام مَالِكًا عَنْ هَدْم الْكَعْبَة وَرَدّهَا إِلَى مَا فَعَلَهُ ابْنُ الزُّبَيْر فَقَالَ لَهُ مَالِك يَا أَمِير الْمُؤْمِنِينَ لَا تَجْعَل كَعْبَة اللَّه مَلْعَبَة لِلْمُلُوكِ لَا يَشَاء أَحَد أَنْ يَهْدِمهَا إِلَّا هَدَمَهَا فَتَرَكَ ذَلِكَ الرَّشِيد (تفسير ابن كثير     
அதற்குப்பின்னர் வாழ்ந்த புகஹாக்கள் இனி எந்த ஆட்சியாளரும் இந்த அமைப்பை மாற்றக்கூடாது என பத்வா வழங்கிவிட்டார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அதே அமைப்பே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
   மூன்று பொருட்களை மனிதன் எத்தனை முறை  பயன்படுத்தினாலும் அவனது உள்ளத்தின் ஆசை தீராது என உலமாக்கள் கூறுகிறார்கள். 1.:வானம்- அதன் நிறம்,அதில் தோன்றும் சூரியன் சந்திரன் நட்சத்திரம் போன்றவைகளை எத்தனை தடவை பார்த்தாலும் ஆசை தீராது. மேலும் ஒவ்வொரு தடவை காணும்போதும் புதிய தோற்றம் தரும்.2.தண்ணீர்.  ஆயுள் பூராவும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம் ஆனாலும் கடும் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்கும் போது அதன் சுகமே தனிதான். மூன்றாவது:கஃபதுல்லாஹ்வை பார்ப்பது-எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.மேலும் ஒவ்வொரு தடவையும் ஒரு புது தோற்றம் தரும். அல்லாஹ் மனிதனுக்கு பார்வையை வழங்கியதின் பயன் அந்த இல்லத்தை பார்க்கும் போதே பூர்த்தியாகிறது என ஒரு கவிஞர் கூறுகிறார். இப்பூமியின் மையத்தில் புள்ளி வைக்க வேண்டுமானால் அது கஃபாவின் மீது வைக்கவேண்டும் என்று காரி தய்யிப் ரஹ் கூறுகிறார்கள்.
மகாமே இப்றாஹீம் வரலாறு
عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ عُمَرُ رضي الله عنه  وَافَقْتُ رَبِّي فِي ثَلَاثٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ{وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى}وَآيَةُ الْحِجَابِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ{عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ}فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ (بخاري 402
உமர் ரழி அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மூன்று முறை என் கருத்துக்குத் தோதுவாக ஆயத்தை இறக்கினான். 1.அல்லாஹ்வின் தூதரே மகாமே இப்றாஹீம் அருகே தொழ வேண்டும் என்றேன் அல்லாஹ் அதையும் ஆயத்தாக இறக்கினான்.  அல்லாஹ்வின் தூதரே உங்கள் வீட்டுக்கு நல்லவரும் வருகிறார் கெட்டவரும் வருகிறார். எனவே உங்கள் மனைவியரை ஹிஜாப் அணியச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று கூறினேன் அல்லாஹ் அதையும் ஆயத்தாக இறக்கினான். 3. நபி ஸல் அவர்கள் செலவுக்குக் கொடுக்கும் விஷயத்தில் மனைவிகள் ஆட்சேபனை  தெரிவித்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இவர்களை தலாக் சொன்னாலும் இவர்களுக்கு பதிலாக சிறந்த மனைவிமார்களை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்றேன். அதுவும் ஆயத்தாக இறங்கியது.                           
சஃபா மர்வாவில் ஸயீ செய்வது வாஜிப். அவ்வாறு இருந்தும் ஸயீ செய்தால் குற்றமில்லை என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துவதற்குக் காரணம்.  
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا (158) البقرة
ذَكَرَ مُحَمَّد بْن إِسْحَاق فِي كِتَاب السِّيرَة أَنَّ إِسَافًا وَنَائِلَة كَانَا بَشَرَيْنِ فَزَنَيَا دَاخِل الْكَعْبَة فَمُسِخَا حَجَرَيْنِ فَنَصَبَتْهُمَا قُرَيْش تُجَاه الْكَعْبَة لِيَعْتَبِر بِهِمَا النَّاسُ فَلَمَّا طَالَ عَهْدهمَا عُبِدَا ثُمَّ حُوِّلَا إِلَى الصَّفَا وَالْمَرْوَة فَنُصِبَا هُنَالِكَ فَكَانَ مَنْ طَافَ بِالصَّفَا وَالْمَرْوَة يَسْتَلِمهُمَا .....
وَكَانَ مِنْ أَهْل لَهَا يَتَحَرَّج أَنْ يَطُوف بِالصَّفَا وَالْمَرْوَة فَسَأَلُوا عَنْ ذَلِكَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُول اللَّه إِنَّا كُنَّا نَتَحَرَّج أَنْ نَطُوف بِالصَّفَا وَالْمَرْوَة فِي الْجَاهِلِيَّة فَأَنْزَلَ اللَّه عَزَّ وَجَلَّ " إِنَّ الصَّفَا وَالْمَرْوَة مِنْ شَعَائِر اللَّه فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اِعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّف بِهِمَا " قَالَتْ عَائِشَة : ثُمَّ قَدْ سَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ الطَّوَاف بِهِمَا فَلَيْسَ لِأَحَدٍ أَنْ يَدَع الطَّوَاف بِهِمَا (تفسير ابن كثير
 அதாவது முன்புள்ள காலத்தில் சிரியாவில் இருந்து வந்த ஒரு ஆணும் பெண்ணும் கஃபாவுக்குள் வைத்து தவறாக நடந்து கொண்டனர். முத்தமிட்டுக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது அவர்களின் பெயர் இஸாஃப், நாஇலா என்று கூறப்படுகிறது. உடனே அல்லாஹ் அவர்களை கல்லாக மாற்றி  விட்டான். கல்லாக மாற்றப்பட்ட அவ்விரு சிலைகளும் சில காலம் கஃபாவுக்குள்ளேயே இருந்தன.சில காலங்களுக்குப்பின் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சஃபா மர்வா என்ற இரு மலைகளில் வைக்கப்பட்டன.  அதாவது சஃபாவில் ஒன்றும் மர்வாவில் ஒன்றும் வைக்கப் பட்டது. காலப்போக்கில் மக்கள் அதையும் வணங்க ஆரம்பித்து விட்டனர்.பின்னர் சில நல்லவர்களின் முயற்சியால் அது அங்கிருந்தும் அப்புறப்படுத்தப் பட்டது. இச்சம்பவம் நடந்த காரணத்தால் சஹாபாக்களுக்கு இந்த சஃபா, மர்வா இடையே ஸயீ செய்வதில் ஒரு நெருடல் இருந்த து என்ன இருந்தாலும் சிலைகள் இருந்த இடம் ஆயிற்றே என்று தயங்கினார்கள். அதனால் அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கி வைத்தான். ஆக இன்றைக்கு நாம் அவ்விரு மலைக்குன்றுகளுக்கு நடுவே ஸயீ செய்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஹாஜரா அம்மையார் அவர்களின் நினைவாக நாம் ஓடுகிறோம். அந்த அன்னையின் உள்ளத்தில் எத்தகைய பயபக்தி இருந்ததோ  எப்படியேனும் அல்லாஹ் நமக்கு நமக்கு உதவி செய்வான் என எப்படி உறுதியாக நம்பினார்களோ அதே போன்று நாமும் அல்லாஹ்வின் அருளை நாடி ஓட வேண்டும் என்பது இதன் கருத்தாக இருக்கிறது. 
நினைவுச் சின்னங்கள் எதுவும் மாற்றப்படாமல், அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது
பழைய தூண்கள் அப்படியே இருக்க அதற்கு மேலே தான் தற்போதைய தூண்கள் கட்டப்பட்டுள்ளன. நபி ஸல் அவர்களின் மிம்பரைக்கூட நல்லெண்ணத்தில் அடிப்படையில் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்ற நினைத்த போது அல்லாஹ் அதை விரும்பாததால் பல்வேறு எச்சரிக்கைகளை ஏற்படுத்தி எச்சரித்து அம்முயற்சியை தடுத்தான்
عن أبن الزناد أن النبي صلى الله عليه وسلم كان يجلس على المجلس ويضع رجليه على الدرجة الثانية فلما ولى أبو بكر رضي الله عنه قام على الدرجة الثانية ووضع رجليه على الدرجة السفلى فلما ولى عمر رضي الله عنه قام على الدرجة السفلى ووضع رجليه على الأرض إذا قعد فلما ولى عثمان رضي الله عنه فعل ذلك ست سنين من خلافته ثم علا إلى موضع النبيّ صلى الله عليه وسلم قالوا فلما أستخلف معاوية زاد في المنبر فجعل له ست درجات وكان عثمان أوّل من كسا المنبر قبطية قالوا فلما قدم معاوية عام حج حرك المنبر وأراد أن يخرجه إلى الشام فكسفت الشمس يومئذ حتى رؤيت النجوم فاعتذر معاوية رضي الله عنه إلى الناس وقال أردت أنظر إلى ما تحته وخشيت عليه من الأرضة وفي رواية له إن معاوية كتب إلى مروان بذلك فقلعه فأصابتهم ريح مظلمة بدت فيها النجوم نهارا فقال مروان إنما كتب إلى أن أرفعه من الأرض فدعا النجاجرة فعمل هذه الدرجات ورفعوه عليها وهي يعني الدرجات التي زادها ست درجات ولم يزد فيه أحد قبله ولا بعده- الكتاب:خلاصة الوفا بأخبار دار المصطفى                             
 சுருக்கம்- நபி ஸல் அவர்கள் மிம்பரில் மூன்றாம் படியில் அமர்ந்து 2-வது படியில் கால் வைப்பார்கள். அபூபக்கர் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் மரியாதை காரணமாக இரண்டாவது படியில் அமர்ந்து முதலாவது படியில் கால் வைத்தார்கள். உமர் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் முதலாவது படியில் அமர்ந்து தரையில் கால் வைத்தார்கள். உஸ்மான் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன்  வேறு வழியில்லாமல் உமர் ரழி அவர்களைப்போல் முதலாவது படியில்  அமர்ந்து தரையில் கால் வைத்தார்கள். இவ்வாறு ஆறு மாதங்கள் செய்தார்கள். அதற்குப் பிறகு மஷ்வரா அடிப்படையில் நபி ஸல் அவர்கள் அமர்ந்த படிக்கட்டின்மீதே அமர்ந்தார்கள். முஆவியா ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன்  மிம்பரில் ஆறு படிக்கட்டுகளை அமைத்தார்கள். அதற்குப் பிறகு அதை விட யாரும் அதை அதிகப் படுத்தவில்லை. முஆவியா ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது ஆட்சி மையம் ஷாம் பகுதியாக இருந்த தால் நபி ஸல் அவர்களின் மிம்பரை அப்படியே இடம் பெயர்த்து ஷாமுக்குக் கொண்டு செல்ல எண்ணி அதற்கு உத்தரவிட்டார்கள். ஆனால் அந்த முயற்சியில் ஈடுபட்டபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது மற்றொரு அறிவிப்பில் பட்டப் பகல் நேரத்திலேயே கடும் இருள் ஏற்பட்டு நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்தன. உடனே அந்த முயற்சி கை விடப்பட்டது. அப்போது தான் ஆறு படிக்கட்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டது. 
அதாவது நபி ஸல் அமர்ந்த படிக்கட்டு மேலே இருக்கும். அதில் யாரும் அமர வேண்டாம் என்ற மரியாதைக்காக அவ்வாறு செய்யப்பட்டது. 
ரவ்ழாவைச் சுற்றி அமைக்கப் பட்ட பாதுகாப்புச் சுவர் பற்றி...
ஹிஜ்ரி 650ல் எகிப்தை தலைமையாககொண்டு அரபுலகை ஆட்சி செய்து நீதமானவராகவும், இரவில் நீண்ட நேரம் நின்று தொழும் பழக்கம் உடைய மன்னராகிய சுல்தான் நூருத்தீன் மன்னருடைய கனவில் நபி(ஸல்) தோன்றி, இந்த இரண்டு நபர்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள் என்று கூறி, இருவரைக் காட்டி  விட்டு மறைந்து விட்டார்கள். உடனே திடுக்கிட்டு கண்விழித்து எழுந்த மன்னர் உளூச் செய்து தொழுது விட்டு மீண்டும் தூங்கினார். அப்போதும் ஏதோ கனவு தோன்றியது. இவ்வாறு 3 தடவை நடந்த பின் இனியும் தாமதிக்கக் கூடாது என்றெண்ணி நற்குணம் கொண்ட தன் மந்திரி ஜலாலுதீனிடம் கூற, அதைக் கேட்ட அவர் நாம் இனியும் தாமதிக்காமல் உடனே மதீனாவுக்கு புறப்பட வேண்டும்.மேலும் இத்தகவலை நாம் யாரிடமும் சொல்லக் கூடாது என்றார். மன்னர் அன்று இரவிலேயே மதீனா செல்லும் ஏற்பாடுகளைச் செய்து, வேகமாகச் செல்லும் வாகனத்தில் பல செல்வங்களை ஏற்றிக் கொண்டு இருபதுவேலையாட்களையும் அழைத்துக்கொண்டு இரவு பகலாக பயணம் செய்து பதினாறு நாட்களில் மிஸ்ரில் (எகிப்து) இருந்து மதீனாவந்தடைந்தார்கள். பிறகு மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று ரவ்ழாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, கவலையுடன் அங்கு அமர்ந்திருந்திருந்தார். அப்போது மந்திரி மதீனாவாசிகளிடம் மக்களே! மன்னர் உங்களுக்காக நிறைய அன்பளிப்புகளை தர காத்திருக்கிறார். உங்களுக்காக மாபெரும் விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் அனைவரும் வாருங்கள் என்று அறிவிப்புச் செய்தார். மன்னர் அவர்கள் விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கும்போது அனைவரையும் கூர்மையாக பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனால் கனவில் கண்ட அந்த இருவர் அங்கே காணப்படவில்லை. அப்போது மன்னர் மதீனா மக்களை நோக்கி இன்னும் யாரேனும் இங்கே வராமல் விடுபட்டுள்ளார்களா? என விசாரித்தார். அப்போது மக்கள் “ஆம்! மொராக்கோ  நாட்டைச் சார்ந்த இருவர் விடுபட்டுள்ளனர். அவர்கள் இங்கு வரவில்லை” என்றார்கள். உடனே மன்னர்  அந்த இருவரையும் அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அங்கே வந்தவுடன் கனவில் கண்ட அவ்விருவர் இவர்கள் தான் என்று  உணர்ந்து கொண்டார். உடனே மன்னர் அவ்விருவரை.ம் நோக்கி  நீங்கள் யார்? என விசாரித்தார். அதற்கு அவர்கள் நாங்கள் மொராக்கோ நாட்டைச் சார்ந்தவர்கள். ஹஜ்ஜை முடித்து விட்டு ஜியாரத்திற்காக நாங்கள் இங்கு வந்தோம். பிறகு எங்களுக்கு நபியவர்களின் அருகாமையிலேயே இருக்க ஆசை ஏற்பட்டது. ஆகையால் இங்கேயே தங்கி விட்டோம் என்றார்கள்மன்னர் அவ்விருவரை நோக்கி உண்மையைக் கூறி விடுங்கள் என்று கடுமையாக கேட்ட பின்பும்,  அவர்கள் முன்பு சொன்னதையே உறுதிப் படுத்தினார்கள். மன்னர் அவர்கள் அடுத்த படியாக அவர்கள் தங்குமிடத்திற்குச் சென்று மிக நுட்பமாக ஆராய்ந்தார்கள். ஆனால்  அங்கே எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதனால் மன்னர் அவர்கள் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. அங்கு அவ்விருவரின் முஸல்லாக்கள் ஒரு பாயின் மீது விரிக்கப் பட்டிருந்தது. அதை எடுத்துப் பார்த்த போது அங்கு ஒரு கல் போடப் பட்டிருந்தது. அந்தக் கல்லை நீக்கிப் பார்த்த போது அங்கே ஒரு ஆழமான குழி வெட்டப் பட்டிருந்தது. அதை ஆராய்ந்து பார்த்த போது  அது நபி(ஸல்)அவர்களின் கப்ரு ஷரீஃபின் அருகாமை வரை சென்றிருந்தது.அதைக்கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். 
பிறகு மன்னர் கடும் கோபத்துடன் அந்த இருவரிடமும் உண்மையை கூறும்படி நையப் புடைத்த போது அப்போது அவ்விருவரும் நாங்கள் முஸ்லிம்கள் அல்ல. நாங்கள் கிறிஸ்துவர்கள். எங்களுக்கு கிறிஸ்துவ அரசர்கள் அதிகமான பணத்தைக் கொடுத்து இன்னும் அதிகமாக தருவதாகக் கூறி ஆசை காட்டி எங்களை இந்த உடலை எடுத்து வர ஏவினர். எனவே நாங்கள் ஹாஜிகளின் கோலத்தில் இங்கு வந்தோம். இரவு நேரங்களில் சுரங்கம் தோண்டுவோம். தோண்டிய மண்ணை இரவோடு இரவாக பகீஃ கப்ருஸ்தானில் கொட்டி விடுவோம் என்றனர்.  மன்னர் தம் மீது சுமத்தப்பட்ட  மிகப் பெரும் கடமையை நிறைவற்றியதாக உணர்ந்தார் அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் இந்த விஷயத்தை கண்டு பிடிக்க தம்மைத் தேர்ந்தெடுத்ததற்காக  நன்றி செலுத்தினார். பிறகு அந்த இரு கிறிஸ்துவர்களையும் வெட்டும்படி உத்தரவிட்டார்கள். பிறகு ரவ்ழாவைச் சுற்றி நீர் மட்டம் வரை அகலமான அகழ் வெட்டச் செய்து அதில் இரும்பையும், ஈயத்தையும் காய்ச்சி ஊற்றி நபி (ஸல்) அவர்களின் உடல் வரை யாரும் செல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு அமைத்தார்.   நூல் - வஃபாஉல் அவ்வல்
மதீனாவின் சிறப்புகள்.  மதீனா நபி ஸல் அவர்கள் நேசித்த பூமி:
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَأَبْصَرَ جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ (أَيْ أَسْرَعَ) وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا مِنْ حُبِّهَا .
عَنِ أَنَس رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَأَبْصَرَ دَرَجَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا [ صحيح البخاري ] ( حركها من حبها ) حثها على الإسراع لجهة المدينة والدخول إليها لكثرة حبه لها .
நபி ஸல் அவர்கள் எந்த பயணத்திலிருந்து திரும்பும்போது மதீனாவின் சுவர்களை கண்டுவிட்டால் விரைந்து வாகனத்தை ஓட்டுவார்கள்.ஏனெனில் மதீனாவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பே காரணம்.
மரணத்தை கேட்பது நல்லதல்ல. ஆனால் மதீனாவில் மரணிக்க ஆசைப்படுவது நல்லது
عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنِ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَفْعَلْ ، فَإِنِّي أَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا. سنن النسائي
மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்துவிடுங்கள் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத்…….
عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ صحيح البخاري ] 1890 
மதீனாவின் மண்ணுக்கும் நோயை குணப்படுத்தும் தன்மை உண்டு
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى الْإِنْسَانُ الشَّيْءَ مِنْهُ أَوْ كَانَتْ بِهِ قَرْحَةٌ أَوْ جُرْحٌ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِصْبَعِهِ هَكَذَا وَوَضَعَ سُفْيَانُ سَبَّابَتَهُ بِالْأَرْضِ ثُمَّ رَفَعَهَا بِاسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا لِيُشْفَى بِهِ سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا [مسلم ]
ومعنى الحديث أنه يأخذ من ريق نفسه على إصبعه السبابة ثم يضعها على التراب فيعلق بها منه شيء فيمسح به على الموضع الجريح أو العليل ويقول هذا الكلام في حال المسح ] عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ وَهِيَ الْمَدِينَةُ تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ (بخاري)
மக்காவுக்காக இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம் துஆ செய்தது போல் மதீனாவுக்காக நபி ஸல் செய்த துஆ
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قَالَ كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ قَالَ ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ (مسلم)
இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன்
وفي رواية فَيَقُولُ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَةٍ ثُمَّ يُعْطِيهِ أَصْغَرَ مَنْ يَحْضُرُهُ مِنْ الْوِلْدَانِ(مسلم)
பேரீத்தம்பழத்தின் முதல் கனியை பரக்கத்துக்காக துஆ செய்து சிறு குழந்தைக்கு முதலில் கொடுக்க காரணம்
( فيعطيه ) أي الولد ( ذلك الثمر ) قال الباجي : يحتمل أن يريد بذلك عظم الأجر في إدخال المسرة على من لا ذنب له لصغره ؛ فإن سروره به أعظم من سرور الكبير  وقال عصام الدين رحمه الله وقوله يدعو أصغر وليد ليستمد بسرور قلبه على إجابة دعائه (مرقاة)
மதீனாவில் தட்ப, வெப்ப நிலைகளை சகித்துக் கொண்டு அங்கு வசிப்பவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரத்தியேக துஆ
عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ قَدِمْنَا الْمَدِينَةَ وَهِيَ وَبِيئَةٌ (يعنى ذات وباء)فَاشْتَكَى أَبُو بَكْرٍ وَاشْتَكَى بِلَالٌ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَكْوَى أَصْحَابِهِ قَالَ اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَمَا حَبَّبْتَ مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا وَحَوِّلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَةِ(مسلم
மதீனாவாசிகளுக்கு தீங்கு செய்பவர்களைப் பற்றி நபி ஸல் அவர்கள் எச்சரித்த ஹதீஸ்
عن  سَعْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَكِيدُ أَهْلَ الْمَدِينَةِ أَحَدٌ إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ الْمِلْحُ فِي الْمَاءِ (بخاري)
பூமியில் இருந்தாலும் சொர்க்கத்தின் ஒரு பகுதி என வர்ணிக்கப்பட்ட இடம் ரவ்ழா ஷரீஃப்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ (مسلم)
மதீனாவுக்குள் நுழைவதன் ஒழுக்கங்கள்
قالوا : إذا توجه لزيارة المصطفى - صلى الله عليه وسلم - يكثر من الصلاة والسلام عليه مدة الطريق ويصلي في طريقه من مكة إلى المدينة في المساجد التي يمر بها وهي عشرون مسجدا متى أمكنه ذلك، وإذا عاين حيطان المدينة يصلي على النبي - صلى الله عليه وسلم - ويقول : اللهم هذا حرم نبيك فاجعله وقاية لي من النار وأمانا من العذاب وسوء الحساب ،ويغتسل قبل الدخول وبعده إن أمكنه، ويتطيب ،ويلبس أحسن ثيابه، ويدخلها متواضعا عليه السكينة والوقار ،وإذا دخل المدينة يقول: اللَّهُمَّ رَبَّ السَّموَاتِ، وَمَا أَظْلَلْنَ وَرَبِّ الأَرَضِينَ وَمَا أَقْلَلْنَ، وَرَبِّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ، وَرَبِّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، أَسْأَلُكُ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا وَشَرِّ مَا فِيهَا(1)، اللهم هذا حرم رسولك فاجعل دخولي فيه وقاية لي من النار وأمانا من العذاب وسوء الحساب .
மதீனாவில் நபி ஸல் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதின் சிறப்பும்  அதன் ஒழுக்கங்களும்
عن عمر رض قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:من زار قبري أو قال:من زارني كنتُ له شفيعا أو شهيدا(مسند أبي داود الطيالسي آدَابُ زِيَارَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -أ- أَنْ يَنْوِيَ زِيَارَةَ الْمَسْجِدِ النَّبَوِيِّ أَيْضًا لِتَحْصِيل سُنَّةِ زِيَارَةِ الْمَسْجِدِ وَثَوَابِهَا لِمَا فِي الْحَدِيثِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال : لاَ تُشَدُّ الرِّحَال إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ  مَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الْحَرَامِ ، وَمَسْجِدِ الأْقْصَى ب - الاِغْتِسَال لِدُخُول الْمَدِينَةِ الْمُنَوَّرَةِ ، وَلُبْسِ أَنْظَفِ الثِّيَابِ ، وَاسْتِشْعَارُ شَرَفِ الْمَدِينَةِ لِتَشَرُّفِهَا بِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
ج - الْمُوَاظَبَةُ عَلَى صَلاَةِ الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ النَّبَوِيِّ مُدَّةَ الإْقَامَةِ فِي الْمَدِينَةِ ، عَمَلاً بِالْحَدِيثِ الثَّابِتِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال : صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ
.د - أَنْ يُتْبِعَ زِيَارَتَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِزِيَارَةِ صَاحِبَيْهِ شَيْخَيِ الصَّحَابَةِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَعَنْهُمْ جَمِيعًا ، أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، وَقَبْرُهُ إِلَى الْيَمِينِ قَدْرَ ذِرَاعٍ ، وَعُمَرَ يَلِي قَبْرَ أَبِي بَكْرٍ إِلَى الْيَمِينِ أَيْضًا .( آدَابُ زِيَارَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)
மஸ்ஜிதே குபாவில் தொழுவதின் சிறப்பு.
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ رَاكِبًا وَمَاشِيًا. عَنْ نَافِعٍ فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ.رواه البخاري

புதன், 2 ஏப்ரல், 2025

மார்க்கக் கல்வியின் அவசியம்

ஒவ்வொரு மஹல்லா தோறும் மக்தப் மதரஸாக்களை வலுப்படுத்த வேண்டும். மஹல்லாவில் உள்ள ஒவ்வொருவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் அந்தந்த மக்தப் மதரஸாவின் மாணவர்களாக மாற வேண்டும். குர்ஆனைக் கற்றுக் கொள்பவர்களாக மாற வேண்டும். குர்ஆனுடன் தொடர்பு எப்போது குறைந்து விடுமோ குர்ஆனுக்கும் நாம் கொடுக்கும் கண்ணியம் எப்போது குறைந்து விடுமோ அப்போது அல்லாஹ் குர்ஆனை நம்மை விட்டும் அப்புறப்படுத்தி விடுவான். உள்ளங்களில் இருந்தும் அனைவரின் இல்லங்களில் இருந்தும் அல்லாஹ் பறித்து விடுவான். வெறும் காகிதம் மட்டும் இருக்கும்.                                       

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ : لَيُسْرَيَنَّ عَلَى الْقُرْآنِ ذَاتَ لَيْلَةٍ فَلاَ يُتْرَكُ آيَةٌ فِى مُصْحَفٍ وَلاَ فِى قَلْبِ أَحَدٍ إِلاَّ رُفِعَتْ. (دارمي

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் ஒரே ஒரு இரவு கடப்பதற்குள் அல்லாஹ் குர்ஆனை (உள்ளங்களில் இருந்தும் அவரவர் இல்லங்களில் வைத்திருக்கும்) குர்ஆன் பிரதிகளில் இருந்தும்) நீக்கி விடுவான். ஒரு வசனம் கூட யாருடைய உள்ளத்திலும் ஞாபகம் இருக்காது. பிரதிகளிலும் இருக்காது.- தாரமீ

 عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ : أَكْثِرُوا تِلاَوَةَ الْقُرْآنِ قَبْلَ أَنْ يُرْفَعَ. قَالُوا : هَذِهِ الْمَصَاحِفُ تُرْفَعُ فَكَيْفَ بِمَا فِى صُدُورِ الرِّجَالِ؟ قَالَ : يُسْرَى عَلَيْهِ لَيْلاً فَيُصْبِحُونَ مِنْهُ فُقَرَاءَ وَيَنْسَوْنُ قَوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيَقَعُونَ فِى قَوْلِ الْجَاهِلِيَّةِ وَأَشْعَارِهِمْ......  (دارمي

 குர்ஆன் உயர்த்தப்படும் முன்பே குர்ஆனை அதிகம் ஓதிக் கொள்ளுங்கள் என இப்னு மஸ்ஊத் ரழி கூறியபோது பிரதிகளில் இருந்து உயர்த்தப் படலாம். ஆனால் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்களின் உள்ளங்களில் இருந்து எவ்வாறு நீக்கப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்  ஒரு இரவு கடந்து காலை நேரம் வருவதற்குள் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்கள் அனைவரும் குர்ஆனை இழந்த ஏழைகளாக ஆகி விடுவார்கள். கலிமாவைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இருக்காது. குர்ஆனுக்கு பதிலாக அறியாமைக் காலத்தின் சொற்களிலும். கவிதைகளிலும் மக்கள் மூழ்கி விடுவார்கள். இது கடைசி நேரமாக இருக்கும்.                          

குர்ஆனை விட்டும், தீனுடைய சூழ்நிலையை விட்டும் குடும்பங்கள் நீங்கி விட்டால் குடும்பங்கள் வீணாகி விடும்

  எந்த பூமியில் மழை இல்லையோ அந்த பூமியில் பயிர்கள் வீணாகி விடும். எந்த வீட்டில் தீன் இல்லையோ அந்த வீட்டில் சந்ததிகள் வீணாகி விடும் -  உர்தூ கவிதை

குர்ஆன்ஓதத்தெரியாமல்இருப்பதுமாபெரும்துர்பாக்கியம். யாருடைய மனதில் அறவே குர்ஆன் இல்லையோ அவரது உள்ளம் பாழடைந்த இல்லம்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)عَنْ عُثْمَانَرضي الله عنهقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ(ابن ماجة)

மதரஸாவுக்கு காலையில் சென்று ஒரு குர்ஆன் ஆயத்தை கற்பது 100 ரக்அத் தொழுவதை விட சிறந்தது

عَنْ أَبِي ذَرٍّ قَالَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ لَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنْ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ(ابن ماجة)

جاء شخص وعليه علامات الانكماش إلى أمير المؤمنين علي رضي الله عنه وقال له: أحس في نفسي أني أموت بعد ساعة، فقال له علي رضي الله عنه: (الموت ليس مشكلة، كلنا نموت).فقال له: ماذا أعمل في هذه الساعة؟قال (عليرضي الله عنه (اطلب العلم).

ஹழ்ரத் அலீ ரழி அவர்களிடம் ஒருவர் வந்து எனக்குள் மவ்த்துடைய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டதுஎன்றார். அதற்கு அலீ ரழி இது எல்லோருக்கும் வருவது  தானே என்று கூற, அதற்கு அவர் நான் இறுதிநேரத்தில் என்ன செய்ய வேண்டும்என்று கேட்க, கல்வியை கற்றுக் கொள் என்றார்கள்.                                              

நம்மில் எத்தனை பேர் குர்ஆன் ஒத தெரியாதவர்கள், மார்க்க சட்டதிட்டங்கள் தெரியாதவர்கள் நம்மில் பலருக்கு ஒளு செய்யும் முறையே தெரியவில்லை ஒளுவின் முறித்தல்கள் தெரியவில்லை, பர்ளான குளிப்பு ஒன்று இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களுக்கும் குளிப்பின் பர்ளுகள் என்ன என்று தெரிவதில்லை இது தான் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை....அதிகாலை எழுந்து தானும் பஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் பஜர் தொழ வைத்து பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அன்று இருந்தனர் ஆனால் இன்றோ தானும் எட்டு மணிக்கு எழுவதுடன் பிள்ளைகளை அதன் பின் எழுப்பி ஸ்கூலுக்கு அரக்க பறக்க அனுப்புவதே பெரும்பாடாக உள்ளது இதற்கிடையில் மக்தபை பற்றி சிந்திக்கவே முடிவதில்லை .மாலையில் பிள்ளைகள் வீடுதிரும்பியதும் டியூஸன் என்ற பெயரில் இரவுவரை கழித்து விட்டு வீடு வந்ததும் சாப்பிட்டு படுக்கவே நேரம் உள்ளது.                                                  

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள். 1.ஒற்றுமையின்மை 2. குர்ஆனின் தொடர்பை கை விட்டது.

காலித் இப்னு வலீத் ரழி பெரும்பாலும் மார்க்கப்போரில் நேரத்தை கழித்தவர்கள். பல போர்களில் தளபதி அவர்கள் தான். அதனால் குர்ஆனை அதிகமாக ஓத முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அவர்களின் ரடைசி நேரத்தில் குர்ஆனை கொண்டு வரச் சொல்லி அதை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்கள். அதிகமான மார்க்கப்போரின் காரணமாக உன்னை அதிகம் வாசிக்க என்னால் முடியவில்லை. என்று அழுத நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது

குர்ஆனை கற்று பின்பு மறந்தவர்களைப் பற்றி....

குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்

عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ- كتاب فضائل القرآنشَبَّهَ دَرْسَ الْقُرْآن وَاسْتِمْرَار تِلَاوَته بِرَبْطِ الْبَعِير الَّذِي يُخْشَى مِنْهُ الشِّرَاد ، فَمَا زَالَ التَّعَاهُد مَوْجُودًا فَالْحِفْظ مَوْجُود ، كَمَا أَنَّ الْبَعِير مَا دَامَ مَشْدُودًا بِالْعِقَالِ فَهُوَ مَحْفُوظ . وَخَصَّ الْإِبِل بِالذِّكْرِ لِأَنَّهَا أَشَدّ الْحَيَوَان الْإِنْسِيّ نُفُورًا ، وَفِي تَحْصِيلهَا بَعْد اِسْتِمْكَان نُفُورهَا صُعُوبَة .(فتح الباري)

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

الأجذم قيل هو مقطوع اليد ، وقيل هو الذي به جذام.வெண்குஷ்டம்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தினரின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்த த்தை அப்புறப் படுத்துவதாகும். அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்..                      

குர்ஆனைக் கற்று அதன் அதை மறந்தவர் அவராக மறக்கவில்லை. அல்லாஹ் மறக்கடித்து விட்டான்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ  (بخاري) مَعْنَاهُ أَنَّهُ عُوقِبَ بِوُقُوعِ النِّسْيَان عَلَيْهِ لِتَفْرِيطِهِ فِي مُعَاهَدَته وَاسْتِذْكَاره (فتح الباري)

உலகின் எந்த ஒரு அமலையும் இங்கே செய்ததை மறுமையிலும் தனக்கு முன்பாக செய்து காட்டும்படி அல்லாஹ் பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் குர்ஆனை அழகாக ஓதியவரை அங்கேயும் ஓதிக் காட்டும்படி அல்லாஹ் கூறி கண்ணியப்படுத்துவான். ஓத ஓத அந்தஸ்து உயரும்

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍورض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ (يوم القيمة) اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا (ترمذي) قَالَ كَانَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ يَقُولُ : يَا أَيُّهَا النَّاسُ عَلِّمُوا أَوْلادَكُمْ وَأَهَالِيكُمَ الْقُرْآنَ فَإِنَّهُ مَنْ كُتِبَ لَهُ مِنْ مُسْلِمٍ يُدْخِلُهُ اللَّهُ الْجَنَّةَ أَتَاهُ مَلَكَانِ فَاكْتَنَفَاهُ فَقَالا لَهُ : إقرأ وَارْتَقِ فِي دَرَجِ الْجَنَّةِ حَتَّى يَنْزِلانهِ حَيْثُ انْتَهَى عِلْمُهُ مِنَ الْقُرْآنِ(مصنف ابي شيبة)عَنْ أُمّ سَلَمَةرَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَة رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كَانَ يُقَطِّع قِرَاءَته آيَة آيَة " بِسْمِ اللَّه الرَّحْمَن الرَّحِيم الْحَمْد لِلَّهِ رَبّ الْعَالَمِينَ الرَّحْمَن الرَّحِيم مَالِك يَوْم الدِّين(أَحْمَد) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً (ترمذي) 

குர்ஆனாகிறது மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்ய வரும். ரப்பே அவருக்கு சுவனத்து நகைகளை அணிவிப்பாயாக என்று கூறும் அவ்வாறே அணிவிக்கப்படும். இன்னும் அதிகமாக அணிவிக்கும்படி கூறும் மீண்டும் அணிவிக்கப்படும். பின்பு ரப்பே அவரை நீ பொருந்திக்கொள்ள வேண்டும் என மன்றாடும் அவ்வாறே அல்லாஹ்வின் பொருத்தம் அவருக்குக் கிடைத்த பின் அவரிடம் நீங்கள் குர்ஆனை ஓதுவீராக என்று கூறப்படும் அவர் ஓதுவார். அவ்வாறு ஓதும்போது ஒவ்வொரு ஆயத்துக்கும் பகரமாக அவருடைய சுவன அந்தஸ்து கூடும்

شرح( يا رب حله ) والمعنى يا رب زَيِّنْهُ ( إقرأ ) ( وارق ) أي اِصْعَد ْأي يقال لصاحب القرآن اقرأ القرآن واصعد على درجات الجنة

பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் அக்கறை காட்டும் பல  பெற்றோர்கள் தீனுடைய கல்வியை கற்றுத்தருவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாட்டின் பல பகுதிகளிலும் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருந்தன.அனைத்து சமுதாயத்து மாணவர்களும் அங்கிருந்து அறிவை கற்றனர்.இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், உலகத் தலைவர்களால் போற்றப்பட்டவருமான லால்பகதூர் சாஸ்திரி மதரஸாவில் கல்வி பெற்றவராவார்.  இவர் போல் சுதந்திர இந்தியாவின் பல தலைவர்கள், குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப் பகுதியைச் சார்ந்த பலரும் மதரஸாக்களில் கல்வி பெற்றவர்களாவர். நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளை கடந்து விட்ட இன்றையை சூழ்நிலையிலும் கூட உத்தர பிரதேசம் பீகார் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருக்கின்றன. அதனால் தான் அங்கு மதரஸா கல்வி தொடக்க கல்விக்கு ஈடாக அரசாங்கத்தால் கருதப் படுகிறது.ஆனால் இன்று ஸ்கூல், மதரஸா இரண்டையும் தனித்தனியாக பிரித்து விட்ட காரணத்தாலும், மதரஸாவுடைய கல்வியை கற்க முடியாத அளவுக்கு பிள்ளைகளின் ஸ்கூல் நேரங்கள் அதைத் தொடர்ந்து வீட்டுப் பாடங்கள் என துன்யாவின் தேடல் தொடர்ந்து கொண்டே இருப்பதால் பாவம்.. நம் பிள்ளைகளில் எத்தனையோ பேருக்கு முறையாக தீனுடைய கல்வி கிடைக்காமலேயே இருக்கிறது.                        

ஒரு ஹதீஸைத் தேடி மதீனாவில் இருந்து சிரியாவுக்குச் சென்ற காலம் இருந்தது. ஆனால் இன்று பள்ளிவாசல் தோறும் மதரஸாக்கள் இருந்தும்  மார்க்கக் கல்வியைக் கற்கும் ஆர்வம் இல்லை

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَكُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ (ابوداود) باب الْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ- كتاب العلم

முகலாய மன்னர்களில் ஒளரங்கசீப் அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. சிறந்த பக்தியாளர். அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்யாதவர். ஆனால் அவரது தந்தை ஷாஜஹான். மூத்த சகோதரர் தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய அனைவரும் அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்பவர்கள்.  தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் அதற்குப் பதிலாக ஒரு மஸ்ஜிதை கட்டியிருந்தால் இன்று வரை அவருக்கு நன்மை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் இதுவே அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்பதற்கு உதாரணம். . தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய இருவரும் குடிகாரர்கள். அரசுப் பணத்தை குடித்தே அழித்தவர்கள். இந்த இருவருக்கும் உடந்தையாக ஷாஜஹான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒளரங்கசீப் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் வளர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்தமார்க்கக் கல்வி தான். ம்கதப் மதரஸாக்களில் ஆசிரியர்களின் போதனையால் தன்னுடைய தந்தையும், சகோதரர்களும் செய்வது தவறு என்று புரிந்து கொண்டார். மேலும் முந்தைய ஆட்சியின் அனைத்து ஆடம்பரங்களையும் ஒழித்தார். உதாரணமாக முந்தைய ஆட்சியில் கவிஞர் வாரியம் என்று இருந்தது. இவர்களின் முழு வேலை அரசரைப் புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது. அதைப் படித்து பொற்காசுகளைப் பெறுவது.  இதற்காக அரசுப் பணம் வீணாக்கப்பட்டது ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாரியத்தை கலைத்தார். மன்னரை இசையெழுப்பி தூங்க வைக்க இசைவாணர் குழு என்றிருந்தது அதையும் கலைத்தார். தன் கையால் தொப்பி தயாரித்து அந்தப் பணத்தில் செலவு செய்தார். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் அவர் ஆட்சியை அமையக் காரணம்அவர் பெற்ற மார்க்கக் கல்வியாகும்.                                                                            

இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுடைய தாய் ஆரம்பத்தில் இவர்களை துணி துவைக்கும் வண்ணானிடம் அனுப்பி வைத்தார்கள். அங்கே போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று. ஆனால் இமாம் அவர்களோ அந்தக் காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கிய இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் கல்வி கற்கச் சென்றார்கள்.  மகன் காசு இல்லாமல் வெறுங்கையோடு வருவதைக் கண்ட அந்தத் தாய் நேராக இமாமுல் அஃழம் ரஹ் அவர்களிடம் சென்று “ என்ன... என் மகனின் மனதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா ? வண்ணானிடம் சென்றாலும் நாலு காசு சம்பாதிப்பான். நீங்கள் அவனுடைய மனதை மாற்றி உங்களுடன் அமர வைத்துக் கொண்டீர்.. என்று கோபப்பட, இமாமுல் அஃழம் பொறுமையுடன் தாயே! நீங்கள் உங்களுடைய மகனை துணி துவைக்கும் வண்ணானாக பார்க்கிறீர்கள் ஆனால் நானோ இவரை இந்த நாட்டு மன்னருடன் சரி சமமாக உட்கார்ந்து ஃபாலூதா என்னும் உயர்வகை பானத்தை அருந்துபவராக பார்க்கிறேன் பிற்காலத்தில் இவர் அப்படி வருவார் என்று நினைக்கிறேன் என்றார்கள். அதன்பின்பு அந்தத் தாய் மகனுடைய விருப்பத்தில் தலையிடுவதில்லை. இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் பிற்காலத்தில் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்று அவருடைய திறமையின் காரணமாக அந்த நாட்டின் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களால் உயர்ந்த நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் ஒரு நேரத்தில் மன்னர் விருந்துக்கு அழைத்த போது, அங்கே சென்று மன்னருக்கு அருகில் அமர்ந்து ஃபாலூதாவை அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுக்கு பழைய நினைவு வருகிறது அன்று என் தாய் என்னை வண்ணானிடம் அனுப்ப, நான் இமாமுல் அஃழம் அவர்களிடம் சென்று கல்வி பயின்றேனே அப்போது அவர்கள் கூறியது இப்போது நிஜமாகி இருக்கிறதே என்று சந்தோஷத்தால் கண்கலங்கினார்கள்.                                                                             

மார்க்கக்கல்வியால் உயர்ந்த மற்றொரு மாமேதை இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களைப் பற்றி...

மார்க்கக் கல்வியில் மேற்படிப்பை கற்றுக் கொள்வதற்காக இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களை அவர்களின் தாய் மக்காவுக்கு அனுப்பி வைக்கும்போது மகனே!  நீ கல்வியைப் பெற்ற அறிஞனாக மட்டும் திரும்பி வர வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள்.  இமாம் ஷாஃபியீ ரஹ் மக்காவுக்குச் சென்று இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்களிடம் கல்வி பயின்று நன்கு தேர்ச்சி பெறுகிறார்கள் இவர்களின் உயர்ந்த பண்பும், திறமையும் மாலிக் ரஹ் அவர்களைக் கவர்ந்து விட சிறிது காலத்தில் இவர்களே ஒரு தனிப்பிரிவுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் விருதுகளை சுமந்தவர்களாக தன் ஆசிரியரால் தரப்பட்ட அன்பளிப்புகளுடன் சொந்த ஊர் வருகிறார்கள். அவர்கள் வருவதையும், எவ்வாறு வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட அந்தத் தாய்  “ என் மகனை இங்கிருந்து புறப்பட்ட கோலத்திலேயே பார்க்க விரும்புகிறேன். கல்வியினால் பிரதிபலன் பெற்றவராக அல்ல “ என்று செய்தி அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் தங்களிடமுள்ள பரிசுகளை அனைவருக்கும் தந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பி அந்தத் தாயின் மனதை குளிர வைத்தார்கள். தமது பிள்ளைகளின் மார்க்கக் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கருதும் அன்றைய பெற்றோர்களின் நிலை அவ்வாறிருந்தது

இளம் வயதிலேயே கல்வியை கற்பது சிறந்தது

عن موسى بن علي عن أبيه:أن لقمان الحكيم قال لابنه :يا بني اِبتغ العلم صغيرا فإن ابتغاء العلم يشق على الكبير (الفقيه والمتفقه للخطيب البغدادي)

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்யும்போது  மகனே சிறு வயதிலேயே கல்வியைத் தேடு. ஏனெனில் பெரிதாகி விட்டால் கல்வியைக் கற்பது கடினமாகி விடும்.                      

عن ابن عباس رضي الله عنه قال:قال رسول الله صلى الله عليه وسلم حِفظُ الغلامِ كالوَشم في الحَجر عن الحسن البصري  قال:التعلم في الصغر كالنقش في الحجر-قال ابن بشران وحفظ الرجل بعدما كبر كالكتاب على الماء-قال علقمة :ما حفظتُ وأنا شاب فكأني أنظر إليه في قرطاس أو ورقة- عن معمر قال :جالست قتادة وأنا ابن أربع عشرة سنة فما سمعت منه شيئا وأنا في , ذلك السن إلا وكأنه مكتوب في صدري (الفقيه والمتفقه للخطيب البغدادي)

நபி ஸல் கூறினார்கள் சிறுவயதில் மனப்பாடம் செய்வது கல்லைக் குடைந்து வரைவது  போன்றாகும். அதாவது நன்றாகப் பதியும். மேலும் அவ்வாறே ஹஸன் பஸரீ ரஹ் அவர்களும் கூறினார்கள். இப்னு பிஷ்ரான் ரஹ் அவர்கள் கூறும்போது முதுமையை அடைந்த ஒருவர் மனப்பாடம் செய்வது தண்ணீரில் எழுதுவது போன்றாகும் என்றார்கள். அல்கமா ரஹ் அவர்கள் கூறும்போது இளமையில் நான் கற்றுக் கொண்டவை தான் இப்போதும் அதன் பக்கங்களை அப்படியே கண்ணால் பார்ப்பது போன்றே மனப்பாடமாக உள்ளன என்றார்கள். மஃமர் ரஹ் அவர்கள் கூறும்போது நான் கதாதா ரழி அவர்களுடன் 14 வயதில் கல்வி கற்க மண்டியிட்டேன். அப்போது நான் கற்றுக் கொண்டவை என் நெஞ்சில் பதிந்தது போன்று ஆகி விட்டன.  

அந்தக்  காலத்தில்  14 வயது என்பது சிறிய வயதாக கருதப் பட்டது.  ஆனால் இந்த வயது சிறுவர்களின் கையிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டதால் இந்த வயதிலும் கூட மனன சக்தி மிகவும் குறைந்து விட்டது 

உண்மைச் சம்பவம் - ஒரு மதரஸாவின் 14 வயது மாணவன் அவன் என்ன மனப்பாடம் செய்தும் ஒரு வசனம் கூட மனப்பாடம் ஆகவில்லை இறுதியில் அவனிடம் ஆசிரியர் காரணம் கேட்கும் போது அவன் சொன்ன பதில் எனக்கு 10 வயது இருக்கும் போது என்னுடைய நண்பன் செல்போனில் ஒரு ஆபாசமான காட்சியை காட்டினான் அது அப்போது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை ஆனால் இப்போது குர்ஆனை மனப்பாடம் செய்ய நினைக்கும் போது அந்த காட்சி என் கண் முன்னால் வந்து நிற்கிறது என்னால் மனப்பாடம் செய்ய முடியவில்லை என்று கூறினான்

மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதாலும் பூமிக்கு பல்வேறு பாதிப்புகள்..

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ ». (ابوداود

கடைசி காலத்தில் தொழ வைப்பதற்கு இமாம் கிடைக்காமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை ஏற்படுவது அழிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்

 (إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام.  (مرعاة

கருத்து-  இமாமத், அதான் என்ற இந்த சிறந்த பணிகளை விட்டும் பலர் தூரமாகி விடுவார்கள். கடைசியில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழ வருபவர்களில் ஒருவர் தான் இமாமத் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள். காரணம் ஒவ்வொருவரும் எனக்கு இமாமத் செய்யத் தெரியாது என்று கூறி ஒதுங்குவார்கள். கடைசியில் ஜமாஅத் நடைபெறாமல் தனித்தனியே மக்கள் தொழுது விட்டுச் செல்வார்கள்.  

ولذا أجاز المتأخرون من أصحابنا أخذ الأجرة على الإمامة والآذان ونحوهما من تعليم القرآن بخلاف المتقدمين فإنهم كانوا يحرمون الأجرة على العبادة (مرقاة

மார்க்கக் கல்வியை மக்கள் அறவே வெறுப்பதன் மூலம் மஸ்ஜித்களுக்கு இமாம் இல்லாமல் ஆகி விடக் கூடாது என்ற கவலையின் அடிப்படையில் தான் பிற்கால உலமாக்கள் இமாமத்திற்கும் அதானுக்கும் சம்பளம் வாங்குவது கூடும் என அனுமதித்தார்கள். ஆனால் முற்காலத்தில் அவ்வாறு இல்லை.                              

மார்க்கக் கல்வியின் தற்கால சூழ்நிலை. குறிப்பாக இந்தியாவில்..

 ஒரு மஹல்லாவில் சுமார் 200 முஸ்லிம் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் அதில் சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே மக்தபுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள முஸ்லிம் பிள்ளைகள் குர்ஆனின் அடிப்படைக் கல்வி கூட இல்லாமல் துன்யாவின் சிந்தனையிலேயே வளருகின்றனர். இவர்களில் பலர் பிற்காலத்தில் மாற்று மதத்தவர்களைக் காதலித்து மதம் மாறி, கோவிலுக்கோ அல்லது சர்ச்சுக்கோ சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். சில பிள்ளைகள் இதிலிருந்து தப்பித்தாலும் மார்க்கம் அறியாததால் அவர்களால் தந்தை அல்லது தாயாரின் ஜனாஸா தொழுகை நடைபெறும்போத என்ன ஓத வேண்டும் என்று கூட அறியாதவர்களாக உள்ளனர். 

இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் மதரஸாக்களை ஒழிக்க வேண்டும் என்ற எதிரிகளின் கோஷம் ஓங்கியுள்ளது.

மார்க்கம் கற்று மார்க்கப் பற்றுடன் வாழும் பிள்ளைகளால் தான் உலகம் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"مَهْلًا عَنِ اللَّهِ مَهْلًا، لَوْلا شَبَابٌ خُشَّعٌ، وشُيُوخٌ رُكَّعٌ، وَأَطْفَالٌ رُضَّعٌ، وبَهَائِمُ رُتَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا، ثُمَّ لَرُضَّ رَضًّا". (رواه الطبراني في المعجم الكبير

அல்லாஹ்வின் வேதனைக்கு அவசரப் படாதீர். இறையச்சமுள்ள வாலிபர்களும் ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிப் பருவக் குழந்தைகளும் கால்நடைகளும் இல்லா விட்டால் அல்லாஹ் எப்போதோ உலகை அழித்திருப்பான்.  

முடிவுரை - எந்தப் பொருளை வாங்கினாலும் எதில் பயன்பாடு அதிகம் என்று பார்க்கிறோம். ஒன்றுக்கு ஒன்றுக்கு free  என்றால் கியூவில் நின்று வாங்குவோம். அப்படியானால் உலகக் கல்வி உலக வாழ்வின் நன்மைக்கு மட்டுமே பயன்படும். தீன் கல்வி ஈருலகிலும் பயன்படும்

ஹிஜ்ரத்

 12-06-2026 துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم          ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும்  இஸ்லாமியப் புத்தாண்டு https://chennaijamaathulula...