வியாழன், 11 ஏப்ரல், 2024

ஓட்டுக்கள் சிதறி விடக் கூடாது

 ِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ (11)إِ

الرعد

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்டது. சிலருக்கு பட்டாலும் புத்தி வராது என்பது போன்று வழக்கம் போல இந்த முறையும் முஸ்லிம் கட்சிகளில் சில பிரிந்து பிரிந்து நிற்கின்றன. இலகுவாக எதிரிகளை ஜெயிக்க வைக்கும் யுக்தி எப்போதும் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஓட்டுக்கள் பிரிந்தால் என்ன நடைபெறும் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே வார்டில் ஆறு முஸ்லிம்கள் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டனர். 1.ஹயாத் கான். இவர் வாங்கிய ஓட்டுகள் 32.   2. ரசூல் கான் இவர் வாங்கிய ஓட்டுகள் 75.   3.முஸ்ரஃப் அலி. இவர் வாங்கிய ஓட்டுகள்  184.   4. அக்பர் காஜி இவர் வாங்கிய ஓட்டுகள் 239.  5.மன்ஷீகான் இவர் வாங்கிய ஓட்டுகள் 378.   6.காஜி அமீன் இவர் வாங்கிய ஓட்டுகள் 528.  இவர்கள் எல்லோருடைய ஓட்டுகளையும் இணைத்தால் மொத்தம் 1406.  ஆனால் ஜெயித்த து யார் தெரியுமா  மற்ற சமுதாயத்தின் ஒற்றுமை வேட்பாளர் தர்மேந்திரா 589 வாக்குகள் பெற்று ஜெயித்தார். இது ஒரு உதாரணம்தான். இப்படித் தான் நாடெங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  முஸ்லிம் வேட்பாளர்களின் நிலை இந்த தேர்தலிலும் இவ்வாறே உள்ளது

ஓரணியில் வாக்களிப்பது பற்றி இன்னும் சில தகவல்களைக் கூறும் முன்பு

 இந்த பாசிச ஆட்சி  கொண்டு வந்த CAA சட்டம்  ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் பேச வேண்டியுள்ளது.

மத்திய அரசின் சில குடியுரிமை திருத்தச் சட்டங்கள் முழ முழுமையாக நடைமுறைக்கு வந்தால் முஸ்லிம்கள் இரண்டாம் தர  குடி மக்களாக நடத்தப் படுவார்கள்.  நிறைய உரிமைகள் மறுக்கப்படும். சொந்தமாக தொழில் தொடங்க முடியாது. சொந்தமாக இடம் வாங்க முடியாது. இஸ்லாமிய அடிப்படையில் திருமணங்களை நடத்த முடியாது. மஸ்ஜித்கள் மதரஸாக்கள் புதிதாக கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படும்.

மேலும் CAA சட்டம் மூலம் ஒருவர் இந்தியர் அல்ல என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் அவரது வீடு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்படும். அவர் அவரது வீட்டில் வசிக்க முடியாது முகாம்களில் தான் தங்க வேண்டும்.

 இந்திய இராணுவத்தில் 30 வருடங்களாக வேலை செய்த முஹம்மது அஸ்மல் ஹக் அசாம் மாநிலத்தைச் சார்ந்தவர்.. நாட்டின் எல்லையை இரவு பகலாக பாதுகாத்தவர்களில் ஒருவர். ஆனால் அவர் இப்போது இந்தியக் குடிமகன் அல்ல. 1952-ம் வருட இந்தியக் குடிமக்கள் பட்டியலில் அவரது தாயார் பெயர் இருந்தது. 1966-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவரது தந்தை பெயர் இருந்தது. ஆனால் தற்போதைய குடியுரிமை சட்டத் திருத்தத்தின் படி அவர் இந்தியக் குடிமகன் அல்ல. அவர் முகாம்களில் தான் தங்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சட்ட விரோதமாக வங்க தேசத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியுள்ளார் என்று குற்றம் சாட்டியதுடன் அப்பெண்ணிடம் ஆதார், பேன் கார்டு ஆகியவை இருந்தும் அவை இந்தியர் என்று நிரூபிப்பதற்கான ஆதாரம் அல்ல என தீர்ப்பளித்தது.

 ஆவணங்களை சரி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு முஸ்லிம்கள் வசிக்கும் எத்தனையோ கிராமப் பகுதிகளுக்கு போய்ச் சேரவில்லை. அங்குள்ளவர்கள் ஒன்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். இரண்டு மூதாட்டிகள் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரியாமல் சேர்த்து வைத்திருந்தார்கள் என்ற செய்தியை அறிவோம். அந்த அளவுக்கு அறியாத ஜனங்கள் இருக்கும் நிலையில் இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் நிச்சயம் அத்தகைய மக்களை பாதிக்கும். முடிந்த வரை நாம் அந்த மக்களுக்கு இத்தகவலை தெரிவிக்கப் பாடுபட வேண்டும். ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த ஊர்களில் இருக்கும் உறவினர்களுக்கு இத்தகவலை தெரிவிக்க வேண்டும்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவில்  பாகிஸ்தான் வங்காள தேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாத மக்கள் 2014 டிசம்பர் 31-க்குள் வந்து குடியேறி இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் இது பொருந்தாது என இச்சட்டம் கூறுகிறது இதன்படி  அஸ்ஸாமில் சுமார் 20 இலட்சம் பேர் பிற நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள். இவர்களில் 12 இலட்சம் பேர் இந்துக்கள். 8 இலட்சம் பேர் முஸ்லிம்கள். இச்சட்டத்தின் படி அந்த 12 இலட்சம் இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும். அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.                                                                                                        

இத்தகையசட்டங்களை கொண்டு வந்து முஸ்லிம்களின் ஈமானை பலவீனப் படுத்த நினைக்கிறார்கள். அது  நடக்காது

ஷைத்தான் மற்றும் அவனது சகாக்களான பாசிச வாதிகள் இதுபோன்ற அச்சுறுத்தல் மூலம் முஸ்லிம்கள் பயந்து விடுவார்கள் என்றும்  பிரச்சினைகளை தவிர்க்க இஸ்லாத்தை விட்டுமே வெளியேறி விடுவார்கள் என்றும் கற்பனை செய்கிறார்கள். ஆனால் என்ன சோதனைகள் வந்தாலும் நாம் ஈமானை இழந்து விடக்கூடாது. நம் சந்த திகளுக்கு ஈமானின் முக்கியத்துவத்தை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை விட முக்கியமாக இந்த உம்மத்தை ஒற்றுமைப் படுத்த முயற்சி செய்ய வேண்டும்

ஒற்றுமை இல்லாததால் எத்தனையோ தோல்வி அனுபவங்கள் கிடைத்த போதும் நம் சமுதாயம் திருந்தவில்லை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ (بخاري) وَقَالَ مُعَاوِيَةُ لاَ حَكِيمَ إِلاَّ ذُو تَجْرِبَةٍ (بخاري)

விஷ ஜந்துக்களின் ஒரே பொந்துக்குள் இரண்டு தடவை கை விட்டு முஃமின் கடி வாங்க மாட்டான்.

அனுபவம் என்ற மருத்துவரை விட மிகப் பெரும் மருத்துவர் இல்லை.

விளக்கம்- ஒரு தடவை ஒரு பொந்துக்கள் கையை விட்டு அங்கிருக்கும் பூச்சி கடித்த பின் மற்றொரு முறையும் முஃமின் அங்கேயே திரும்பவும் கையை விட்டு கடி வாங்க மாட்டான். சுதாரித்துக் கொள்வான் என்பது இதன் மேலோட்டமாக விளக்கமாகும். ஆனால் பல்வேறு விஷயங்களுக்குப் பொருந்தும். ஒரு தடவை ஏமாந்தவன் இன்னொரு முறையும் ஏமாற மாட்டான். ஒரு தொழிலில் ஒரு தடவை ஈடுபட்டு நஷ்டத்தை சந்தித்தவன் ஒரு இன்னொரு தடவையும் அதே முறையில் அத்தொழிலை செய்து ஏமாற மாட்டான். ஒருவனிடம் காசு கொடுத்து ஏமாற்றப்பட்ட பின்பு மீண்டும் அவனிடமே காசு கொடுத்து ஏமாற மாட்டான். என்பது போன்ற பல்வேறு விளக்கங்கள் இதற்கு உண்டு.                                                               

الْمُرَاد الْخِدَاع فِي أُمُور الْآخِرَة دُون الدُّنْيَا . قَالَ : وَسَبَب الْحَدِيث مَعْرُوف ، وَهُوَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَسَرَ أَبَا عَزَّة الشَّاعِر يَوْم بَدْر ، فَمَنَّ عَلَيْهِ ، وَعَاهَدَهُ أَلَّا يُحَرِّض عَلَيْهِ وَلَا يَهْجُوهُ ، وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ ، ثُمَّ رَجَعَ إِلَى التَّحْرِيض وَالْهِجَاء ، ثُمَّ أَسَرَهُ يَوْم أُحُد ، فَسَأَلَهُ الْمَنّ ، فَقَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " الْمُؤْمِن لَا يُلْدَغ مِنْ جُحْر مَرَّتَيْنِ "  (شرح النووي علي مسلم)

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو عَزَّةَ يَوْمَ بَدْرٍ : يَا رَسُولَ اللَّهِ أَنْتَ أَعْرَفُ النَّاسِ بِفَاقَتِى وَعِيَالِى وَإِنِّى ذُو بَنَاتٍ قَالَ فَرَّقَ لَهُ وَمَنَّ عَلَيْهِ وَعَفَا عَنْهُ وَخَرَجَ إِلَى مَكَّةَ بِلاَ فِدَاءٍ فَلَمَّا أَتَى مَكَّةَ هَجَا النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَحَرَّضَ الْمُشْرِكِينَ عَلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأُسِرَ يَوْمَ أُحُدٍ أُتِىَ بِهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ : وَكَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ :« لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ ».  (السنن الكبرى للبيهقي)

ABOO  IZZAA   என்ற கவிஞன் நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்து கவிதை பாடுபவன். அவனை பத்ருப்போரில் நபி ஸல் அவர்கள் சிறை பிடித்தார்கள். அப்போது அவன் என்னை மன்னித்து விடுங்கள். நான் வறியவன். பெண் குழந்தைகளை வைத்திருப்பவன் என்றெல்லாம் கெஞ்சிய போது அவன் மீது இரக்கப் பட்டு அவனிடம் ஃபித்யாவும் வாங்காமல் விட்டு விட்டார்கள். அவன் மக்காவுக்கு வந்த பின் மீண்டும் இணை வைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்து கவிதை பாடினான். மீண்டும் அவன் உஹதில் பிடிபட்டான். அப்போதும் அவன் முன்பு போல கெஞ்சிய போது நபி ஸல் அவர்கள் அப்போது ஒரு முஃமின் இரண்டு தடவை ஏமாற மாட்டான் என்ற வார்த்தையைச் சொன்னார்கள்.

 இந்த ஹதீஸுக்கு ஏற்றவாறு இன்று முஸ்லிம் சமூகம் செய்த தவறையே மீண்டும் செய்து தனக்குத் தானே தோல்வியை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

கடந்த தேர்தலில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளில் கூட சங்பரிவார் கட்சி ஜெயிப்பதற்குக் காரணம்-அங்கு முஸ்லிம் வேட்பாளர் மூன்று நான்கு கட்சிகளில் தனித்தனியாக போட்டியிட்டார்கள் அது எதிரிகளுக்கே சாதகமாக அமைந்தது. சங்பரிவார் வேட்பாளர் பெற்ற வாக்குளை விட அம்மூன்று முஸ்லிம்களும் சேர்ந்து பெற்ற வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் பல மடங்கு அதிகம். எனினும் வாக்குகள் சிதறியதால் எந்த முஸ்லிமும் வெற்றி பெற முடியவில்லை. உபி.யில் முஸ்லிம்கள் நிறைந்த தேவ்பந்த் பகுதியிலும், கேரளாவில் பல இடங்களிலும் இதே தான் நடந்தது. சங்பரிவார் கட்சியைச் சார்ந்த முக்கியப்புள்ளியிடம் இந்த தேர்தலில் நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது முஸ்லிம் அமைப்புகளை ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்வோம் அதுவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு என்று கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறக்காரணம்முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்ற நிலை இந்தியாவில் பெரும்பாலும் உள்ளது.அந்த நிலை உருவாக விடக்கூடாது என்பதற்காக இத்தகைய சூழ்ச்சி நடைபெறுகிறது. அல்லாஹ் சூழ்ச்சிகளை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக-  

ஒன்றிணைந்து துஆ செய்தால் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுமோ

அவ்வாறே ஓரணியில் இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி நிச்சயம்

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا 89)يونس -   قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة (تفسير ابن كثير)قَالَ أَبُو الْعَالِيَة وَأَبُو صَالِح وَعِكْرِمَة وَمُحَمَّد بْن كَعْب الْقُرَظِيّ وَالرَّبِيع بْن أَنَس دَعَا مُوسَى وَأَمَّنَ هَارُون أَيْ قَدْ أَجَبْنَاكُمَا فِيمَا سَأَلْتُمَا مِنْ تَدْمِير آلِ فِرْعَوْن .وَقَدْ يَحْتَجّ بِهَذِهِ الْآيَة مَنْ يَقُول إِنَّ تَأْمِين الْمَأْمُوم عَلَى قِرَاءَة الْفَاتِحَة يُنَزَّل مَنْزِلَة قِرَاءَتهَا لِأَنَّ مُوسَى دَعَا وَهَارُون أَمَّنَ وَقَالَ تَعَالَى " قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا " (تفسير ابن كثير)

ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் சொன்னால் ஆமீன் சொன்னவரும் அதே துஆவை ஓதியதாக கருதப்படுவார். எனவே தான் மேற்படி வசனத்தில் மூஸா அலா மட்டும் தான் துஆ செய்தார்கள். ஹாரூன் அலை ஆமீன் மட்டுமே கூறினார்கள். இருப்பினும் அல்லாஹ் உங்கள் இருவரின் துஆவும் ஏற்கப்பட்டது என்று கூறினான். 

ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ஞாபகப்படுத்த வேண்டிய நபிமொழி

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்.

உலக அளவில் கிறிஸ்தவர்கள் 215 கோடி. முஸ்லிம்கள் 170 கோடி.

இந்துக்கள் 85 கோடி. சீக்கியர்கள் 2 கோடி, யூதர்கள் 1 ½  கோடி

 

ஒரு விடுமுறை நாளில் முல்லா நஸ்ருத்தீன் இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக் கிலோ ஆட்டுக்கறி வாங்கினார். அருகிலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி  என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக்கொண்டு ஓடியது தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரும் பதறினார்கள். நாயைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். முல்லா மட்டும் பதறவுமில்லை. ஓடவுமில்லை. குறுக்கே வந்த ஒருவர் ஏன்ம்பா.. நாய் உன் இறைச்சிப் பையை தூக்கிக் கொண்டு போகிறது. நீ பதறாமல் நிற்கிறாயே..? என்று கேட்டார். முல்லா சொன்னாராம். நாய் கறியைக் கொண்டு போனாலும் செய்முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது.                                               

இதுபோல் இன்று முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்களின் அவல நிலையை, குறிப்பாக அரசியலில் உரிய பங்களிப்பு இல்லாததை மேடை தோறும் பேசுகிறார்களே தவிர அதை சீர்படுத்த ஒரே அணியில் ஒன்றாக இணைவது தான் ஒரே வழி என்பதை சிந்திப்பதில்லை. முடிந்த வரை முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டாலே தீய சக்திகள் நெருங்க மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் பிரிந்து கிடப்பது போல் நடிக்கிறார்கள்.  உள்ளுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்கிறோம். ஆனால் உள்ளுக்குள் பிரிந்து கிடக்கிறோம்.                                        

ஒற்றுமை இல்லாததால் இதுவரை இந்த சமுதாயம் சந்தித்த கடந்த கால இழப்புகள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ 1مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ(أَبُو دَاوُد)قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ (أَبُو دَاوُد) كتاب الخاتم

عَنْ أَنَسٍ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ وَفِي يَدِ أَبِي بَكْرٍ بَعْدَهُ وَفِي يَدِ عُمَرَ بَعْدَ أَبِي بَكْرٍ فَلَمَّا كَانَ عُثْمَانُ جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسَ قَالَ فَأَخْرَجَ الْخَاتَمَ فَجَعَلَ يَعْبَثُ بِهِ فَسَقَطَ قَالَ فَاخْتَلَفْنَا ثَلَاثَةَ أَيَّامٍ مَعَ عُثْمَانَ فَنَزَحَ الْبِئْرَ فَلَمْ يَجِدْهُ (بخاري

قوله فاختلفنا ثلاثة أيام أي في الصدور والورود والمجيء والذهاب والتفتيش (عمدة القاري)

நபி ஸல் அவர்கள் அணிந்திருந்த மோதிரம் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று முத்திரை பதிக்கப்பட்டிருந்த து.  ஆரம்பத்தில் தங்கத்தால் அது இருந்த து. அதைப் பார்த்து மக்களும் தங்க மேதிரம் அணிய ஆரம்பித்த போது  நபி ஸல் அவர்கள் தங்க மோதிரத்தை வீசி எறிந்து இனிமேல் நான் தங்கம் அணிய மாட்டேன் என்று கூறினார்கள். பின்பு அதே மாதிரி வெள்ளி மோதிரம் செய்து அணிந்து கொண்டார்கள். அது அரசாங்க முத்திரையாகவும் பயன்பட்டதால் நபி ஸல் அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர் ரழி, உமர் ரழி, உஸ்மான் ரழி ஆகியோர் பொறுப்பில் இருக்கும் போது அணிந்தனர். ஆனால் எப்போது உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தோர்களோ அதற்குப் பின்பு உஸ்மான் ரழி அவர்கள் அரீஸ் என்ற கிணற்றின் விளிம்பின் மீது அமர்ந்தவர்களாக கவலையில், ஆழ்ந்த சிந்தனையில் மோதிரத்தை கழற்றுவதும் போடுவதுமாக இருந்தார்கள். பிறகு அந்த மோதிரம் கிணற்றில் விழுந்து விட்டது. அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் மூன்று நாட்கள் அதை தேடுவதும் வருவதும் போவதுமாக அலைந்தோம். கிணறு முழுவதும் இறைத்துப் பார்த்தும் மோதிரம் கிடைக்கவில்லை. அபூதாவூத் ரஹ் கூறினார்கள். ஒற்றுமையை கை விட்டு உஸ்மான் ரஹ் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புரட்சி செய்தார்கள். அதனால் காலமெல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டிய மோதிரம் தொலைந்து விட்டது.                                    

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

ஒற்றுமை இல்லா விட்டால் அது சமுதாயத்தையும் பாதிக்கும். தனி மனிதனையும் பாதிக்கும். அபூ ஹுரைரா (ரழி) காலம் காலமாக பாதுகாத்து வைத்த அற்புதப் பை உதுமான் (ரழி) கொல்லப்பட்ட நாளில் தொலைந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ2 ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ3 هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي4 حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي)

அபூரஹுரைரா ரழி கூறினார்கள் உஸ்மான் ரழி அவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் எல்லோருக்கும் ஒரு சோகம் என்றால் எனக்கு 2 சோகம். 1. உஸ்மான் ரழி அவர்கள் கொலை.  2. ஒரு பை தொலைந்து போன சோகம். ஒரு பிரயாணத்தில் அனைவரிடமும் உணவு தீர்ந்து போன போது என்னிடம் மட்டும்  21 பேரீத்தம்பழங்கள் இருந்தன. அதில் பரக்கத்துக்காக நபி ஸல் அவர்கள் துஆ செய்தார்கள் அந்தப் பிரயாணத்த்தில் இருந்த அனைவரும் சாப்பிட்டோம்.

உதுமான் (ரழி) அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களில் சிலர் செய்த புரட்சியின் விளைவாக உதுமான்(ரழி) கொல்லப்பட்டார்கள்

எல்லாவற்றும் மேலாக அதிகமாக அல்லாஹ்விடம் அழுது துஆச் செய்ய வேண்டும்

தாயிஃபில் இருந்து கடும் மன வருத்தத்துடன் நபி (ஸல்) அவர்கள் திரும்பும்போது கேட்ட துஆ

اللَّهُمَّ إلَيْكَ أشْكُو ضَعْفَ قُوَّتِي وقِلَّةَ حِيلَتِي وَهَوانِي على النَّاسِ يا أرْحَمَ الرَّاحِمِينَ إلى مَنْ تَكِلْني إلى عَدُوَ يَتَجَهَّمُنِي أمْ إلى قَرِيبٍ مَلَّكْتَهُ أمْرِي إِنْ لَمْ تَكُنْ ساخِطاً عَلَيَّ فلا أُبالِي غَيْرَ أنَّ عافِيَتَكَ أوْسَعُ لِي أعُوذُ بِنُورِ وَجْهِكَ الكَرِيمِ الَّذِي أضاءَتْ لَهُ السَّمواتُ والأرْضُ وأشْرَقَتْ لَهُ الظُّلُماتُ وصَلَحَ عليهِ أمْرُ الدُّنْيا والآخِرَةِ أنْ تُحِلَّ عَليَّ غَضَبَكَ أوْ تُنْزِلَ عَلَيَّ سَخَطَكَ وَلَكَ العُتْبى حَتَّى تَرْضى ولا حَوْلَ ولا قُوَّةَ إلاَّ بِكَ (طبراني

கருத்து- ரப்பே மற்றவர்கள் சூழ்ச்சி செய்வது போல் எங்களுக்கு எந்த சூழ்ச்சியும் எங்களுக்குத் தெரியாது. எங்களின் இயலாமையை உன்னிடமே முறையிடுகிறோம். வேறு யாரிடம் சென்று நாங்கள் முறையிட முடியும்.

ஆட்சியாளர்கள் மூலம்  நமக்கு ஏற்படும் சோதனைகள் நமது பாவங்களின் பாதிப்புகள் என்பதை உணர வேண்டும்

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ  (30)الشوري- ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا (41)الروم -عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يَقُولُ:"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا، مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ، قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي، وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ، وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ، فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ، وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (طبراني في المحجم الكبير)

நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடந்தால் உங்கள் ஆட்சியாளர்களின் உள்ளங்களை உங்களுக்குச் சாதகமாக நான் திருப்புவேன். நீங்கள் எனக்கு மாறு செய்தால் உங்கள் ஆட்சியாளர்களின் உள்ளங்களை உங்களுக்குப் பாதகமாக நான் திருப்புவேன். அவர்கள் உங்களை வஞ்சிப்பர்.எனவே ஆட்சியாளர்களைத் திட்டி உங்களுடைய காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் என்னை அஞ்சி எனக்குக் கட்டுப்படுங்கள் உங்களின் ஆட்சியாளர்களை நான் பார்த்துக் கொள்வேன்.                                     

        சிலுவை யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம்களில் பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது அந்த சிறைவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் அவர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலும் அவர்களுக்கு மத்தியில் ஒரு ஆலிம் பேசினார். அப்போது அந்த வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணி அவரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார். அவரிடம் விசாரணை நடந்தது. ஆலிமிடம் இராணி கூறினார். இறைவன் எங்கள் பக்கம் தான் இருக்கிறார். அதற்கு அந்த ஆலிம் இல்லை இறைவன் எங்கள் பக்கம் தான் என்றார். உடனே அந்த இராணி இறைவன் எங்கள் பக்கம் இருப்பதால் தான் உங்களைத் தோற்கடித்து எங்களை ஜெயிக்க வைத்துள்ளார். என்று கூற அதற்கு அந்த ஆலிம் கூறினார். காரணம அதுவல்ல. ஆடுகளை மேய்ப்பதற்கு சில நேரங்களில் நாய்களைப் பயன்படுத்துவார்கள். நாய்களுக்கப் பயிற்சி கொடுத்திருப்பார்கள். ஆடுகள் பாதை மாறும்போதும் அந்த நாய் குரைக்கும். அப்போது அந்த  ஆடுகள் சீராகச் செல்லும். அதுபோலத்தான் நாங்கள் பாதை மாறிச் செல்லும்போது எங்களை எச்சரிப்பதற்குத் தான் உங்களைப் போன்றவர்களை இறைவன் எங்கள் மீது சாட்டியுள்ளான். நாங்கள் சீராக இருந்தால் உங்களுக்கு வேலை இல்லை. என்றார். அதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வாக்குரிமை

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை பொறுத்த வரையில் ஓட்டுப்போடுவது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையாகும்.  அதிலும் குறிப்பாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் ஓட்டுப் போடா விட்டால் இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக ஆகி விடும். மற்றொரு புறம் ராம ராஜ்ஜியம் என்ற எதிரிகளின் சூழ்ச்சிக்கு நாம் மறைமுகமாக ஒத்துழைப்பது போன்றாகி விடும்.          

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2)المائدة - عَنْ خَالِدٍ  سَمِعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ بِعِقَابٍ و قَالَ عَمْرٌو عَنْ هُشَيْمٍ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ (ابن ماجة)

அநியாயத்தை தடுக்கும் சக்தி நம்மிடம் இருந்தும் அதை தடுக்காமல் இருந்தால் அதனால் அல்லாஹ் ஏற்படுத்தும் சோதனைகளுக்கு அத்தனை பேரும் பலியாவார்கள் என்பது மேற்படி ஹதீஸின் கருத்தாகும். இதன்படி அநியாயக்கார பாசிச அரசின் அநியாயத்தை நம் கைகளாலோ, நாவினாலோ தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை. நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம். வல்ல ரஹ்மானிடம் துஆ செய்வதற்கு அடுத்த படியாக ஓட்டு என்ற சட்ட ரீதியான ஆயுதம் மட்டுமே. இதையும் நாம் பயன்படுத்தாமல் ஒரு ஓட்டு குறைவதால் என்ன வந்து விடப்போகிறது என்றெண்ணி நாம் இருந்து விட்டால் பாசிச ஆட்சிக்கு துணை போன குற்றத்திற்காக கண்டிப்பாக அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவோம். இங்கேயும் அதற்கான விளைவை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.  ஒரு ஓட்டு தானே என நாம் நினைப்பது போல நூறு பேர் நினைத்தால் அந்த நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் இஸ்லாமிய எதிரி ஜெயித்து விட்டால் அவனை ஜெயிக்க வைத்த குற்றத்திற்காக அந்த நூறு பேரும் அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள்.                                                       

 இந்தக் காலத்தில் யார் தான் யோக்கியம். எல்லா வேட்பாளர்களும் நமக்கு எதிராகத் தானே இருக்கிறார்கள். என்று சிலர் கேட்பதும் சரி தான். ஆனால் விரோதி, மிகவும் விரோதி, மிக மிக மோசமான விரோதி என்று பல்வேறு ரகம் இருக்கிறது. இதில் மூன்றாவது நபர் வர விடாமல் தடுக்க வேறு வழியின்றி கொஞ்சம் சுமாரான எதிரிக்கு ஓட்டுப் போட வேண்டியுள்ளது.                 

ஓட்டுப்போடுவது என்பது காஃபிர்களை வெற்றியடைச் செய்வது என்ற தவறான கருத்து சிலரிடம் உள்ளது

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் நிறைய உள்ளன உதாரணமாக, பாரசீகத்துக்கு எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள்.காரணம் ரோமர்கள் வேதம் தரப்பட்டவர்கள் நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே மகிழ்ச்சிக்கு காரணம். ஹபஷாவில் நஜ்ஜாஷியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்துஅதுபோன்ற சமூக சேவைக்காக இன்று அழைக்கப்பட்டாலும் நிச்சயமாக பதில் அளிப்பேன் என்றார்கள். இவ்வாறு உலக விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் தேச நலன் கருதி அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார்கள்

நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வால்களுடன் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலே வந்து நீர்முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஜஹ்லும் அங்கீகரித்தான்.

வியாழன், 4 ஏப்ரல், 2024

ஃபித்ரா விளக்கம்

 

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى}ولإبن خزيمة من طريق كثير بن عبد الله عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه و سلم سئل عن هذه الآية فقال نزلت في زكاة الفطر (فتح الباري

மேற்படி வசனம் பற்றி நபி ஸல் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது இவ்வசனம் சதக்கத்துல் ஃபித்ரு விஷயமாக இறங்கியது என பதில் கூறியதாக ஃபத்ஹுல் பாரீ போன்ற நூல்களில் உள்ளது

நபி ஸல் அவர்களின் காலத்தில் கோதுமையாகவோ, பேரீத்தம்பழமாகவோ, பாலாடைக்கட்டியாகவோ, உலர் திராட்சையாகவோ கொடுக்கப்பட்டிருக்கிறது. பெருநாள் தொழுகைக்கு வரும் முன் கொடுத்து விட வேண்டும்

عَنْ ابْنِ عُمَرَ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ وَالذَّكَرِ وَالْأُنْثَى وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ (بخاري -  عن أَبي سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ أَقِطٍ أَوْ صَاعًا مِنْ زَبِيب(بخاري) بَاب صَدَقَةِ الْفِطْر

நபி ஸல் அவர்களின் காலத்தில் வழமையில் இருந்த ஸாஃ என்பதை நம்முடைய நாட்டின் கிலோ, கிராம் கணக்கோடு ஒப்பிடும்போது தான் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் தான் ஹனஃபீ, ஷாஃபீ வித்தியாசம் வருகிறது. ஹனஃபீ மத்ஹபில் பணமாகவும் கொடுக்கலாம். ஏனெனில் அதைப் பெற்றுக் கொள்ளும் ஏழைகள் தமக்குப் பிரியமான உணவை வாங்கிக்  கொள்ளலாம். என்பது அவர்களின் கருத்து

الدَّقِيقُ أَوْلَى مِنْ الْبُرِّ وَالدَّرَاهِمُ أَوْلَى مِنْ الدَّقِيقِ فِيمَا يُرْوَى عَنْ أَبِي يُوسُفَ وَهُوَ اخْتِيَارُ الْفَقِيهِ أَبِي جَعْفَرٍ لِأَنَّهَا أَدْفَعُ لِلْحَاجَةِ وَأَعْجَلُ بِه(هداية)الدَّقِيقُசலித்தகோதுமை

ஜகாத், ஃபித்ரா வேறுபாடு

ஜகாத் கடமையாகுவதற்கு அதற்குரிய நிஸாபை அடைந்திருக்க வேண்டும். ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரையும் கணக்கிடத் தேவையில்லை. ஆனால் ஃபித்ரா அப்படியல்ல. அன்றைய அவசியமான செலவுகள் போக கையிருப்பு வைத்திருப்பவர் தனக்காகவும், தன் குடும்ப நபர்களுக்காகவும் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அன்று அதிகாலையில் பிறந்த குழந்தையையும் கணக்கிட்டுத் தர வேண்டும்.

هي صدقة يعطيها المسلم في يوم عيد الفطر لمن تصرف إليهم الزكاة - أمرنا بها سيدنا النبي صلى الله عليه وسلم في السنة الثانية من الهجرة

ஜகாத்தை எந்த ஏழைகளுக்குத் தர முடியுமோ அத்தகையவர்களுக்கு இந்த ஃபித்ராவைத் தரலாம். எனவே இந்த ஃபித்ராவை முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தரக்கூடாது.  ஹிஜ்ரி இரண்டாம் வருடம் இது கடமையானது

ஃபித்ராவின் நான்கு விதமான நோக்கங்கள்

الاول :  إغناء الفقراء عن ذل السؤال في هذا اليوم العظيم   -   الثاني: إدخال الفرح والسرور عليهم في هذا اليوم الذي يفرح فيه المسلمون جميعا   - الثالث :  تطهير مال الصائم بعد أن تطهر جسده بالصوم   الرابع:  جبر ما عساه أن يكون من خلل في صومه

قال سيدنا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث (نور الايضاح

1.மகத்தான அந்த நாளில் எந்த ஏழைகளையும் கையேந்தும் நிலையை விட்டும் பாதுகாப்பது 2.அனைவரும் சந்தோஷமாக இருக்கும் அந்த நாளில் ஏழைகளையும் மகிழ்ச்சியாக்கி வைத்தல் 3.நோன்பாளி தம் உடலை பல்வேறு நோய்களை விட்டும் சுத்தப்படுத்தியது போன்று ஃபித்ரா மூலம் தம் பொருளை சுத்தப் படுத்துவது 4.நோன்பில்  ஏற்பட்ட  சிறிய தவறுகளுக்குப் பரிகாரம்

عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِىَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِىَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ. (ابوداود

நோன்பு வைக்காதவர்கள் ஃபித்ரா கொடுக்கலாமா 

ஃபித்ரா என்பது நோன்பில்  ஏற்பட்ட  சிறிய தவறுகளுக்குப் பரிகாரம் என்பதால் நோன்பு வைக்காதவர்கள் தர வேண்டிய அவசியமில்லை என்று சிலர் விளங்கி வைத்துள்ளனர். அது தவறு ஃபித்ரா வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். நோன்பு வைத்தவர், நோன்பு வைக்காதவர் என்ற வேறுபாடு கிடையாது

ஈதுப் பெருநாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு கொடுக்கலாமா ?

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ.. فَكَانَ ابْنُ عُمَرَ يُعْطِي عَنْ الصَّغِيرِ وَالْكَبِيرِ حَتَّى إِنْ كَانَ لِيُعْطِي عَنْ بَنِيَّ  وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ .(بخاري) باب صَدَقَةِ الْفِطْرِ عَلَى الْحُرِّ وَالْمَمْلُوك-كتاب الزكاة

இப்னு உமர் ரழி அவர்கள் தன்னுடைய பெரிய பிள்ளைகளுக்கும் சிறிய பிள்ளைகளுக்கும் சேர்த்தே ஃபித்ரா கொடுப்பவர்களாக இருந்தார்கள். மேலும் ஈத் பெருநாளுக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பாக கொடுப்பவர்களாக இருந்தார்கள்

وقال : هذا حسن ، وأنا أستحبه - يعني تعجيلها قبل يوم الفطر – (فتح الباري

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்பே கொடுப்பதை விரும்புபவர்களாக ஆயிருந்தார்கள்

ويصح أداؤها مقدما عن يوم الفطر أو مؤخرا عنه إلا أنه يستحب أداؤها قبل الخروج الى المصلى (نور الايضاح

ஃபித்ரா கடமையாகுவது பெருநாள் அன்று அதிகாலையின் தான் என்றாலும் ஃபித்ராவை ஈதுப் பெருநாளுக்கு முன்பு கொடுத்தாலும் கூடும். நிர்பந்தம் காரணமாக சற்று பிற்படுத்துவதும் கூடும் எனினும் ஈதுத் தொழுகைக்கு வரும் முன்பு தருவது முஸ்தஹப்பாகும்- நூருல் ஈழாஹ்

 ஃபித்ராவை முன்பே கொடுக்கலாம் என்பதற்குத் தோதுவான சம்பவம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَبِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ وَقُلْتُ وَاللَّهِ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَعُودُ فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ لَا أَعُودُ فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ وَهَذَا آخِرُ ثَلَاثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لَا تَعُودُ ثُمَّ تَعُودُ قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الْآيَةَ فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ مَا هِيَ قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الْآيَةَ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الْخَيْرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلَاثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ لَا قَالَ ذَاكَ شَيْطَانٌ (بخاري)2311

شرح: (وكلني رسول الله - صلى الله عليه وسلم - بحفظ زكاة رمضان) أي في حفظ زكاة الفطر من رمضان (مرعاة المفاتيح شرح مشكاة المصابيح)

சுருக்கம்- ஃபித்ரா தானியங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அபூஹுரைரா ரழி அவர்கள் ஈடுபட்டிருந்த போது தான் மேற்படி சம்பவம் நடந்தது. ஷைத்தான் மூன்று தடவை அதைத் திருட முற்பட்டான். அவன் ஷைத்தான் என அந்த சஹாபிக்குத் தெரியாது. முதல் இரண்டு தடவைகளில் அவன் தனது வறுமையைச் சொல்லி கெஞ்சியதால் விட்டு விட்டார்கள் மூன்றாவது முறை அவனை எப்படியேனும் பிடித்து நபி ஸல் அவர்களிடம் ஒப்படைக்க எண்ணிய போது தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸீயை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற இரகசியத்தைக் கூறி அவன் தப்பித்தான். ஆகா அற்பதமான விஷயம் கூறியுள்ளானே என்று அந்த சஹாபீ அவனை விட்டு விட்டார்கள். நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அவன் சொன்னது உண்மை தான் என்று கூறியதுடன் அவன் தான் ஷைத்தான் என்றும் கூறினார்கள்.        

ஆயத்துல் குர்ஸீயை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் ஸலாம் கொடுத்தவுடன் எப்போதும் ஓதினால் சுவனம் செல்வதற்கு மவ்த்தைத் தவிர வேறு தடை இல்லை என்ற நபிமொழி

: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ:"مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ، إِلا الْمَوْتُ"،(طبراني

ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஓத வேண்டிய வேறு சில திக்ருகள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى فُقَرَاءُ الْمُسْلِمِينَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ،"ذَهَبَ ذَوُو الأَمْوَالِ بِالدَّرَجَاتِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَحُجُّونَ كَمَا نَحُجُّ، وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَتَصَدَّقُونَ مِنْهَا، وَلَيْسَ لَنَا مَا نَتَصَدَّقُ، فَقَالَ: أَلا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ، وَلَمْ يَلْحَقْكُمْ مِنْ خَلْفِكُمْ إِلا مَنْ عَمِلَ بِمِثْلِ مَا عَمِلْتُمْ بِهِ؟ تُسَبِّحُونَ اللَّهَ دُبُرَ كُلِّ صَلاةٍ ثَلاثًا وَثَلاثِينَ، وتحَمَدُونَهُ ثَلاثًا وَثَلاثِينَ، وَتُكَبِّرُونَهُ أَرْبَعًا وَثَلاثِينَ، فَبَلَغَ ذَلِكَ الأَغْنِيَاءَ، فَقَالُوا مِثْلَ مَا قَالُوا، فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، فَأَخْبَرُوهُ، فَقَالَ: ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ"، (معجم الكبير للطبراني

ஏழைகள் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே செல்வந்தர்கள் எங்களை விட அந்தஸ்தால் முன் சென்று விட்டனர் எங்களைப் போன்று தொழுகின்றனர். எங்களைப் போன்று நோன்பு வைக்கின்றனர். எங்களைப் போன்று ஹஜ்ஜும் செய்கின்றனர் ஆனால் அவர்களுக்கு வசதி உள்ளது தர்மம் செய்கின்றனர் எங்களால் செய்ய முடியவில்லையே என்றபோது நபி ஸல் அவர்கள் நான் உங்களுக்கு ஒரு செயலை அறிவிக்கிறேன். அதைச் செய்தால் உங்களை விட முந்தி விட்டவர்களின் சிறப்பை நீங்கள் அடைவீர்கள் என்று கூறி, தஸ்பீஹே பாத்திமாவை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஓதும்படி கற்றுத் தந்தார்கள் எப்படியோ இவ்விஷயம் செல்வந்தர்களுக்கும் தெரிய வந்தபோது அவர்களும் இந்த தஸ்பீஹை ஓத ஆரம்பித்தார்கள் மறுபடியும் ஏழைகள் வந்து நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தரும் அருள் என்றார்கள் 

 

عَنْ وَرَّادٍ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ كَتَبَ الْمُغِيرَةُ إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا سَلَّمَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ (بخاري

நாவைப் பேணுவோம்

31-07-2026 ஸஃபர் - 16 بسم الله الرحمن الرحيم          நாவின் விபரீதங்கள் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN N...