வியாழன், 10 அக்டோபர், 2024

இறைநேசர்களின் வழியில் உள்ளத்தைப் பக்குவப் படுத்துதல்

11-10-2024    ★    ரபீஉல் ஆகிர் 07    ★   ஹிஜ்ரி :1446    ★   بسم الله الرحمن الرحيم  


 وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى (41)النازغات

மனம் போன போக்கில் வாழாமல் தன் நஃப்ஸை கட்டுப்படுத்துவது அவ்வளவு எனிதான காரியம் அல்ல. இஃப்தார் நேரத்தில் துஆ கேட்டால் ஏற்கப்படும் என்று நன்றாக தெரிந்தும் கூட இந்த நஃப்ஸ் முன்னால் இருக்கும் கஞ்சியின் மீதும் வடையின் மீதும் தான் மையல் கொள்கிறது. இந்த சின்ன விஷயத்தில் கூட நம்மால் நஃப்ஸை கட்டுப்படுத்த முடியா விட்டால் பெரிய விஷயங்களில் கட்டுப்படுத்துவது அறவே முடியாது. நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தனிமையில் தன் எஜமானி அழைத்தும் நஃப்ஸைக் கட்டுப்படுத்தியதால் அல்லாஹ் பெரும் அந்தஸ்தை பதவியைத் தந்தான்

நஃப்ஸை கட்டுப்படுத்தா விட்டால் நாம் செய்யும் அமல்களின் பலனை முழுமையாகப் பெறுவது கடினம்.

   ஒரு மனிதர் நான் இறைவனை தியானம் செய்யப் போகிறேன். அதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்று சொல்லி ஓரிடத்தில் தனிமையில் அமர்ந்து தியானம்  செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஒரு அழகிய பெண் நடந்து வரும் சப்தம் கேட்டது. அந்தப் பெண்ணைப் பார்த்தார். அன்றைக்கு அவருடைய தியானம் கலைந்தது. அடுத்த நாளும் அவர் முயற்சியை கை விடாமல் என் கண்கள் திறந்திருந்தால் தானே யாரையும் பார்க்க முடியும். என்று கூறி தன் கண்களை துணியால் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போதும் அதே பெண் நடந்து வர, அவளின் கொலுசு சப்தம் கேட்டது. உடனே அவருடயை தியானம் கலைந்தது. அடுத்த நாள் அவர் என் காதுகளையும் மூடிக் கொண்டால் எந்த சப்தமும் இடையூறு செய்யாது  என்று கூறி தன் காதுகளையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார் அப்போதும் அதே பெண் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வர, அந்த நறுமணம் இவருடைய தவத்தை கலைத்து விட்டது. அடுத்த நாள் அவர் தன் மூக்கையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார். இப்போது அந்தப் பெண்ணும் வரவேயில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்த நேரம் வந்தவுடன் இவர் மனதில் நேற்று இதே நேரம் அந்தப் பெண் வந்தாள். என்ற சிந்தனை ஏற்பட்டது. உடனே அவருடயை தவம் கலைந்தது.                                       

-படிப்பினை-மனதை பக்குவப்படுத்தாமல் வேறு எதை மூடினாலும் பலனில்லை

உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தியவர்கள் பிறரைப் பற்றி தவறாக  எண்ண மாட்டார்கள்

 உள்ளம் என்பது ஒரு கண்ணாடி என்பார்கள் அந்தக் கண்ணாடி எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அந்த அளவுக்கு எதிரில் உள்ள உருவம் மங்கலாகவே தெரியும். அதேபோல் ஒருவரின் உள்ளம் மாசு பட்டிருந்தால் அவர் தன்னைப் போலவே மற்றவர்களையும் பார்ப்பார். எவர் மீதும் நல்லெண்ணம் கொள்ள மாட்டார். ஆகவே கல்பு என்ற கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடியை சுமார் 10 வருடங்களாக துடைக்காமல் இருந்து அதன் பின்பு அதை எடுத்து ஒரே நாளில் எப்படியாவது துடைத்து சுத்தமாக்கி விட வேண்டும் என்று நினைத்து, என்ன தான் கஷ்டப்பட்டு துடைத்தாலும் அந்த மங்கலான நிறம் மாறுவது கடினம். அதேபோல் படிப்படியாக மனதைப் பக்குவப்படுத்தாமல் அவசர  கதியில் பக்குவப்படுத்துவது சிரமம். 

இறை நேசர்கள் உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தியதால் செல்வச் செழிப்பை விரும்ப மாட்டார்கள்

عن  خالد بن الفزر قال : ( كان حيوة بن شريح دعاء من البكائين وكان ضَيِّقَ الحال جِدا فجلستُ إليه ذات يوم وهو مختل وحده يدعو فقلتُ : رحمك الله لو دعوتَ اللهَ فوَسَّعَ عليك في معيشتك قال : فالتفت يمينا وشمالا فلم ير أحدا فأَخَذَ حصاة من الأرض فقال : ( اللهم إِجْعَلْها ذهبا )  قال : فإذا هي والله تبرة في كفه ما رأيت أحسن منها  قال : فرمى بها إلَيَّ وقال : ما خَيْرَ في الدنيا إلا الآخرة ثم التفت إليَّ فقال : هو أعلم بما يَصلح عباده فقلتُ : ما أصنع بهذه ؟ قال : اِسْتَنْفِقْها فهَبَتُّهُ والله إِنْ أَراَدَهُ ) (مجابوا الدعوة)

ஹாலித் ரஹ் கூறுகிறார்கள்- ஹயாத் இப்னு ஷூரைஹ் ரஹ்எப்போதும் அழுது துஆ செய்பவர். மிகவும் ஏழையாக இருந்தார். ஒருநாள் அவர் துஆ செய்யும்போது அருகில் அமர்ந்தேன். அவரிடம் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தால் உங்களுக்கு செல்வத்தை வழங்குவான் அல்லவா? என்று கேட்டேன். உடனே அவர் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்து வேறு யாரும் தம்மை கவனிக்காததை அறிந்தவுடன் அருகில் இருந்த சிறிய கல்லை எடுத்து யாஅல்லாஹ் இதை தங்கமாக மாற்று என்று துஆ செய்தார். உடனே அது அழகான தங்கமாக மாறியது. அதை என்னை நோக்கி எறிந்து இது போன்ற துன்யாவின் அலங்காரங்களில் எந்த நன்மையும் இல்லை. மறுமையின் காரியங்களில் மட்டுமே நன்மை உண்டு. யாருக்கு எது நல்லது என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் (எனக்கு இந்த ஏழ்மைதான் நல்லது என்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கலாம்) என்றார்கள். பிறகு நான் அவர்களிடம் இதை வைத்து நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, இதை உனக்கு அன்பளிப்பாக தந்து விட்டேன். அதை நீ செலவு செய்து கொள். என்று கூறினார். அவருக்கு அந்த தங்கத்தின் மீது எந்த நாட்டமும் இல்லை.       

நஃப்ஸைக் கட்டுப் படுத்தியவர்களுக்கு எல்லாம் கைகூடும். பிற படைப்புகள் இவரைக் கண்டு அஞ்சும்

كان عمر يخطب يوم الجمعة فعرض فى خطبته أن قال: يا سارية الجبل من استرعى الذئب ظلم فالتفت الناس بعضهم إلى بعض فقال لهم علىٌّ ليخرجن مما قال فلما فرغ سألوه فقال: وقع فى خلدى أن المشركين هزموا إخواننا وأنهم يمرون بجبل ، فإن عدلوا إليه قاتلوا من وجه واحد  وإن جازوا هلكوا فخرج منى ما تزعمون أنكم سمعتموه فجاء البشير بعد شهر فذكر أنهم سمعوا صوت عمر فى ذلك اليوم  قال: فعدلنا إلى الجبل ففتح الله علينا (أبو نعيم فى الدلائل

உமர் ரழி அவர்கள் இராக் நாட்டிற்கு ஸாரியா ரழி அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்பியிருந்தார்கள் இந்நிலையில் ஒரு ஜும்ஆவில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது திடீரென தன் பிரசங்கத்துக்கிடையில் யா ஸாரியா அல்-ஜபல் ஸாரியாவே மலையைப்பாருங்கள் என்று கூறி விட்டு தன் பிரசங்கத்தை மீண்டும் தொடர்ந்தார்கள் மக்கள் அனைவரும் சம்பந்தமில்லாத வார்த்தையை உமர் ரழி கூறுவதாக கருதினார்கள் பிரசங்கம் முடிந்த பின் உமர் ரழி கூறினார்கள் நம் சகோதரர்கள் பின்பு  ஒரு மாதம் கழித்து அந்தப்படையினர் மதீனா திரும்பி வந்து சொன்ன விஷயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அதாவது நாங்கள் போரிட்டுக் கொண்டிருந்த போதுமலைக்குப்பின்னால் எதிரிகள் இருப்பதை கவனிக்காமல் அந்த மலையை கடக்க முற்பட்டோம் அப்போது எங்கிருந்தோ ஒரு சப்தம் வந்தது அந்த சப்தம் வந்தவுடன் நாங்கள் மலைக்குப் பின்னால் கவனித்தோம் நான் எங்கள் பாதையை மாற்றிக் கொண்டோம்

وقعت الزلزلة في المدينة فضرب عمر الدرة على الأرض وقال : اسكني بإذن الله فسكنت وما حدثت الزلزلة بالمدينة بعد ذلك .

: وقعت النار في بعض دور المدينة فكتب عمر على خزفة : يا نار اُسكني بإذنِ الله فألقوها في النار فانطفأت في الحال (الرازي)

மதீனாவில் ஒருமுறை பூகம்பம் ஏற்பட்ட போது தரையை சாட்டையால் அடித்து அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு நீ அடங்கு என்று உமர் ரழி அவர்கள் கூறிய போது பூகம்பம் நின்றது. அதன் பின் மதீனாவில் பூகம்பம் ஏற்படவேயில்லை. அதேபோல் மதீனாவில் ஒருமுறை ஒரு வீட்டில் நெருப்பு பற்றியது. உமர் ரழி அவர்கள் ஒரு துண்டுச் சீட்டில் நெருப்பே அடங்கு என்று எழுதி அதில் போடச் சொன்னார்கள். அவ்வாறு போட்டவுடன் உடனே நெருப்பு அணைந்தது.                           

உமர் ரழி அவர்கள் தனிமையில் இருப்பதைக் கண்டு சந்தர்ப்பம் பார்த்து ரோம் நாட்டின் தூதுவன் உமர் ரழி அவர்களைக் கொல்ல முற்பட்ட போது பூமியைப் பிளந்து இரண்டு சிங்கங்கள் தோன்றிய போது அவன் பயந்து உருவிய வாளை கீழே போட்ட பின் அவைகள் மறைந்தன. அதற்குள் உமர் ரழி எழுந்த போது அவர்களிடம் நடந்ததைக் கூறி இஸ்லாத்தையும் தழுவினான்.             நஃப்ஸைக் கட்டுப்படுத்தி  தான் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு  ஒரு நல்ல மனிதர் செய்த காரியம்

உண்மைச் சம்பவம்- வட மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். வீண் செலவுகளை அறவே விரும்ப மாட்டார். அவர் எங்காவது வெளியே சென்று ஏதேனும் ஒரு திண்பண்டத்தை விரும்பி உண்ண நினைத்தால் அதற்கான விலையை விசாரிப்பார். பிறகு அதை வாங்காமல் அந்தப்பணத்தை மிச்சப்படுத்தி சேமிப்பார். இப்படியாக சேமித்து பெரும் தொகையை சேர்த்தி விட்டார். இறுதியில் அதைக் கொண்டு என்ன செய்யலாம் என யோசித்த போது அந்தப் பகுதியில் ஒரு மஸ்ஜிதின் தேவை அதிகம் இருந்தது. எனவே தன்னுடைய செலவில் சேமித்த அப்பணத்தைக் கொண்டு மஸ்ஜித் கட்டினார். இன்றும் அவரின் நினைவாக அந்த மஸ்ஜித் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஒரு மஸ்ஜிதில் ரமழானில் தராவீஹ் தொழ வைக்கும் ஹாஃபிழுக்கு நடுத்தர வசதியுடைய தனிப்பட்ட ஒருவர் ஹதியா தருகிறார். ஆனால் அவர் அதற்காக வருடம் முழுவதும் சிறிது சிறிதாக சேர்த்து வைக்கிறார். ரமழான் கடைசியில் அதை அப்படியே ஹாஃபிழுக்கு ஹதியாவாக தருகிறார். சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக பார்க்கும்போது சுய நலமான சிந்தனை மேலோங்கி விடுகின்ற இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கின்றனர். 

உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தியவர்கள் எந்த ஒரு சிறு பாவத்தையும்  பெரிதாக   கருதுவார்கள் 

عَنْ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ حَدِيثَيْنِ أَحَدُهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ عَنْ نَفْسِهِ قَالَ إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ (بخاري) 6308

சிறந்த முஃமின் ஒரு பாவத்தைச் செய்து விட்டால் தனது தலைக்கு மேலே பெரிய மலை இருப்பது போலவும் அதற்குக் கீழே அமர்ந்திருப்பது போலவும் அது தன் மீது விழுந்து விடுவது போலவும் கவலைப்படுவார். ஆனால் பாவியான மனிதன் பெரும்பாவத்தைச் செய்தாலும் தன் மூக்கைக் கடந்து செல்லும் ஈயை எப்படி ஒருவர் பொருட்படுத்த மாட்டாரோ  அதுபோல் அவரது பாவத்தைப் பொருட்படுத்த மாட்டார். மலையை உதாரணமாகக் கூறிய காரணம். மற்ற ஆபத்துகளில் இருந்து கூட தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்திலிருந்து தப்புவது கடினம்.                                

والحكمة في التمثيل بالجبل إن غيره من المهلكات قد يحصل النسبب إلى النجاة منه بخلاف الجبل إذا سقط على الشخص لا ينجو منه عادة (مرعاة

فعلامة المؤمن أن توجعه المعصية حتى يسهر ليله فيما حل بقلبه من وجع الذنب ...فالمؤمن الكامل إذا أذنب يحل به أكثر من المصاب لحجبه عن ربه ومن أشفق من ذنوبه فكان على غاية الحذر منها لا يرجو لغفرها سوى ربه فهو يقبل على الله وهو الذي أراده الله من عباده ليتوب عليهم ويجزل ثوابهم  ولهذا قال بعض العارفين : ذنب يوصل العباد إلى الله تعالى خير من عبادة تصرفه عنه وخطيئة تفقره إلى الله خير من طاعة تغنيه عن الله. (فيض القدير

சிறந்த முஃமின் ஒரு சிறு பாவம் செய்தாலும்  அந்தக் கவலையால் அவருக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. அதற்காக மிகவும் வருந்துவார். அதுவே அவரது அந்தஸ்து உயர காரணமாக ஆகி விடும். இதனால்தான் சில ஆரிஃபீன்கள் “ஒரு அடியானிடம் ஏற்படும் பாவம் கூட சில நேரங்களில் அல்லாஹ்விடம் நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு அடியானிடம் ஏற்படும் நல்ல அமல் (அதை பிறரிடம் சொல்லிக் காட்டுவது போன்ற காரணங்களால்) அல்லாஹ்வை விட்டும் அவனைத் திருப்பி விடுகிறது. என்பார்கள்.                                              

عَنِ ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا عَدَلَهُ  وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا عَدَلَهُ (مصنف ابن ابي شيبة

உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி தாவூத் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. நபி தாவூத் அலை அவர்களின் அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி ஆதம் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.

நஃப்ஸைக் கட்டுப்படுத்துவதின் முக்கிய அங்கம் தற்பெருமையை  விட்டொழித்தல்

   இறை நேசர் ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்களிடம் மாணவராக இருந்த  ஒருவர் சுமார் 12 வருடங்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டார் அப்போது அவர் ஷைகு அவர்களிடம் பயணம் கூறும்போது நான் இத்தனை வருடங்களாக என் மனதில் வைத்துள்ள ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இத்தனை வருடத்தில் நான் உங்களிடம் எந்த கராமத்தையும் நான் கண்டதில்லையே என்று கூற ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதாவது ஒரு நேரம் இமாம் ஜமாஅத்தை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள் இல்லை என்று இவர் பதில் கூறினார் மீண்டும் ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதேனும் ஒரு நேரம் தக்பீர் தஹ்ரீமாவை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்க இல்லை என்று இவர் பதில் கூறினார் அதற்கு ஷைகு அவர்கள் இதை விட என்ன அற்புதம் உமக்கு வேண்டும் என்றார்கள்... உடனே அந்த சீடர் ஷைகு அவர்களை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தியவராக  உங்களுடைய நிலையை நானும் அடைய வேண்டும் நான் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்ப உங்களிடம் எப்போது வரட்டும் என்று கேட்டார் அதற்கு ஷைகு அவர்கள் "நான்" இறந்த பிறகு வா என்றார்கள் உடனே அந்த சீடர் ஷைகு அவர்களே நீங்கள் இறந்த பின்பு வருவதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நான் இறந்த பிறகு என்று என்னுடைய மவ்த்தை நான் குறிப்பிடவில்லை மாறாக "நான்" என்ற அகம்பாவம் எப்போது உன் உள்ளத்தில் அழியுமோ, இறந்து விடுமோ அப்போது என்னிடம் வா என்ற பொருளில் தான் நான் கூறினேன் என்றார்கள். 

அமல்களில் பெருமையடித்தே பலர் பாழாகி இருக்கிறார்கள். இறைநேசர்கள் அவ்வாறல்ல

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك؛ فقلت: أعوذُ بالله من الشيطان الرجيم اِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثمخاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق؛ فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.)  موسوعة الرد على الصوفية

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் வாழ்வில் நடைபெற்ற பிரபலமான சம்பவங்களில் ஒன்றை அவர்களே சொல்லிக் காட்டினார்கள். நான் என்னுடைய பயணங்களில் ஒரு பயணத்தில்  குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன். அதே நிலையில் கடற்கரையில் நான் இறை தியானத்தில் இருந்த போது எனக்கு முன்னால் மழை மேகம் போன்ற ஒரு காட்சி தோன்றியது. அதிலிருந்து இதமான காற்றை உணர்ந்தேன். பின்பு ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு பெரும் ஒளியை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரு உருவம் தோன்றி அப்துல் காதிரே! நான்தான் உன்னுடைய ரப்பு. மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களையெல்லாம் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறியது. உடனே நான் இது ஷைத்தானின் வேலை என்று எண்ணி சுதாரித்துக் கொண்டு அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு! என்றேன். ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு இருந்த அந்த ஒளி உடனே மறைந்து இருளாகி விட்டது. அந்த உருவமும் புகையாக மாறி விட்டது. பின்பு அவன் என்னை நோக்கி அப்துல் காதிரே! உம்முடைய கல்வி ஞானத்தாலும்  உம்முடைய உயர்வான பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்டும் என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டீர். நான் இது போன்ற யுக்தியை பயன்படுத்தி எழுபது தரீகத் வாதிகளை நான் கெடுத்துள்ளேன். (ஆனால் நீர் உன்னுடைய திறமையால் தப்பித்துக் கொண்டீர்)என்று பெருமையை உண்டாக்கும் வகையில் அடுத்த சூழ்ச்சியை ஆரம்பித்தான். அப்போதும் நான் சுதாரித்துக் கொண்டு (என்னிடம் எவ்வித பெருமையும் இல்லை. எவ்வித திறமையும் இல்லை) என்னுடைய ரப்புக்கே அனைத்துப் பெருமையும் உண்டு. என்று கூறினேன்.                                                                 

9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு

இறை நல்லடியார்களின் பேணுதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள்

وفي تهذيب الكمال عن الإمام الشافعي الناس عيال على أبي حنيفة في الفقه وعن ابن مبارك ما رأيت أورع من أبي حنيفة وعن مكي بن إبراهيم كان أعلم أهل زمانه. لما مات صلي عليه ست مرات كثرة الزحام وعن وكيع قال: كان أبو حنيفة عظيم الأمانة، وكان يؤثر رضا الله تعالى على كل شىء،- وعن ابن المبارك، قال: قلت لسفيان الثورى: ما أبعد أبا حنيفة من الغيبة، ما سمعته يغتاب عدوًا له قط، قال: هو والله أعقل من أن يسلط على حسناته ما يذهب بها. وعن على بن عاصم، قال: لو وزن عقل أبى حنيفة بعقل نصف أهل الأرض لرجح بهم.

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களைப் போன்ற பேணுதலான ஒருவரை நான் கண்டதில்லை என இப்னுல் முபாரக் ரஹ் கூறினார்கள் அவர்கள் வஃபாத்தான போது இட நெருக்கடியால்  ஆறு தடவை ஜனாஸா தொழுகை  நடைபெற்றது.  அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்கள்.  என வகீஃ ரஹ் அவர்கள் கூறினார்கள் அவர்கள் வாழ்வில் யாரைப் பற்றியும் புறம் பேசியதில்லை. என  இப்னுல் முபாரக் ரஹ் கூறினார்கள்.       

இமாம் அவர்களின் பேணுதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு

قال يزيد بن هارون رايته (أي ابا حنيفة رح) جالسا يوما في الشمس عند باب انسان فقلت له يا ابا حنيفة لو تحولت الي الظل فقال لي علي صاحب هذه الدار دراهم ولا احب ان اجلس في ظل فناء داره   (الابداع)

    பொருள் - ஒரு நான் இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் வெயிலில் ஒரு வீட்டின் நிழலருகே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் (அந்த வீட்டின்) நிழலுக்குச் சென்று நீங்கள் அமரலாமே என்றேன். அதற்கு இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் கூறியதாவது அந்த வீட்டுடையவர் என்னிடம் கடனாக வாங்கிய சில திர்ஹங்கள் மீதமுள்ளது. அதனால் அவரின் வீற்றின் முற்றத்தில் நான் அமர விரும்பவில்லை. (ஏனெனில் அது கூட வட்டியாகி விடுமே என்ற அச்சம் தான்) என்று பதில் கூறினார்கள்

யாருடைய மனதையும் புன்படுத்தாமல் இருப்பதும் இறைநேசர்களின் அடையாளம்

     மற்றொரு நேரத்தில் இமாமுல் அஃழம் ரஹ் அவர்களுக்கு கடன் பாக்கி வைத்திருந்த ஒரு யூதரின் வீட்டை இமாம் அவர்கள் கடந்து செல்லும்போது அவர்களின் செருப்பில் நஜீஸ் ஆகி விட்டது அதை உதறும்போது அதனுடைய ஒரு துளி அந்த யூதரின் வீட்டுச் சுவற்றின் மீது பட்டு விட்டது. உடனே இமாம் அவர்கள் மிகவும் கவலைப்பட்டவராக இப்போது நான் என்ன செய்ய செய்வேன். அந்த நஜீஸை நான் சுரண்டினால் அந்த வீட்டின் சுண்ணாம்பு மற்றும் காரையின் சில பகுதிகளை நான் பெயர்த்தவனாக ஆகி விடுவேன். (அந்தக் காலத்து வீடுகள் அந்த அமைப்பில் தான் இருக்கும்)  அதே வேளையில் அதை நான் அப்படியே விட்டு விட்டால் அடுத்தவரின் வீட்டை அசிங்கப்படுத்திய குற்றம் என் மீது வந்து விடுமே நான் என்ன செய்யட்டும் என்று புலம்பிய நிலையில் அவருடைய வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். அவரோ இமாம் அவர்கள் கடனை வசூல் செய்யத் தான் வந்துள்ளார் என்று எண்ணி வேகமாக வந்து கதவைத் திறந்து நீங்கள் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா? என்றார் ஆனால் இமாம் அவர்கள் நான் அதற்கு வரவில்லை உங்கள் வீட்டுச் சுவற்றை நான் இப்படி அசிங்கம் செய்து விட்டேன் அதை சுத்தம் செய்யும் வழியை எனக்குக் கூறுங்கள் என்று கூற, அவர் ஆச்சரியமடைந்தவராக “கொஞ்சம் இருங்கள். என் வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும் முன்பு நான் என் உள்ளத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறி இஸ்லாத்தை ஏற்றார்  

இறைநேசர்களின் வழியில் உள்ளத்தைப் பக்குவப் படுத்தியவர்கள் அமானித த்தைப் பேணுபவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் பொருள் மீது அறவே ஆசை கொள்ள மாட்டார்கள்

அமானிதம் என்பதற்கு நம்மிடம் ஒப்படைத்ததை அப்படியே திருப்பித் தருவது உட்பட விரிவான பொருள் உண்டு

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا (75)ال عمران   بِقِنْطَارٍ" أَيْ بِمَالٍ كَثِير "يُؤَدِّهِ إلَيْك" لِأَمَانَتِهِ كَعَبْدِ اللَّه بْن سَلَام أَوْدَعَهُ رَجُل أَلْفًا وَمِائَتَيْ أُوقِيَّة ذَهَبًا فَأَدَّاهَا إلَيْهِ "وَمِنْهُمْ مَنْ إنْ تَأْمَنهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إلَيْك" لِخِيَانَتِهِ "إلَّا مَا دُمْت عَلَيْهِ قَائِمًا" لَا تُفَارِقهُ فَمَتَى فَارَقْته أَنْكَرَهُ كَكَعْبِ بْن الْأَشْرَف اسْتَوْدَعَهُ قُرَشِيّ دِينَارًا فَجَحَدَهُ (تفسير الجلالين

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழி அவர்களிடம் ஒருவர் ஆயிரத்து இருநூறு ஊகியா தங்கத்தைக் கொடுத்து வைத்தார். அதை அவர் கேட்கும்போது  அப்படியே திருப்பித் தந்தார்கள். ஒரு ஊகியா என்பது 38 கிராம். ஆனால் கஃப் இப்னு அஷ்ரஃபிடம் ஒரு தீனாரை ஒருவர் கொடுத்து வைத்து திரும்பக் கேட்டபோது அவன் நீ தரவில்லை என மறுத்து விட்டான்.

இறையச்சம், பேணுதல், பித்அத், துஆ பற்றி முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உபதேசம்

மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்காதே ! துஆ ஏற்கப்படுவது தாமதாகுவதைப் பற்றி அவன் மீது குறை கூறாதே நீ துஆ செய்வதில் சோர்வடையாதே. இதனால் உனக்கு லாபம் இல்லா விட்டாலும் கூட நஷ்டம் இல்லை. உன் துஆவை அல்லாஹ் உடனடியாக இவ்வுலகில் ஏற்கா விட்டாலும் மறுமையில் அதற்குரிய வெகுமதியை உனக்கு தரவே செய்வான். மாக்க்கத்தில் விலக்கப்பட்டவைகளை விட்டும்  ஒதுங்க வேண்டியது உன்னுடைய கடமையாகும். இல்லையேல் அழிவுக்கயிறு உன்னை சுற்றிக் கொள்ளும் பாவத்தில் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆகுமானவற்றைக் கூட பத்தில் ஒன்பது பங்கை விட்டு நாங்கள் விலகிக் கொள்வதுண்டு என்று நபித்தோழர்களான உமர் ரழி, அபூபக்ர் ரழி ஆகியோர் கூறியுள்ளார்கள்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் எழுதிய ஃபுதூஹுல் ஙைப் என்ற நூலில் இருந்து ஒரு உபதேசம்.  

قَالَ "الشَّيْخُ عَبْدُ الْقَادِر رح "اِفْن عَنْ الْخَلْقِ بِحُكْمِ اللَّهِ وَعَنْ هَوَاك بِأَمْرِهِ وَعَنْ إرَادَتِك بِفِعْلِهِ لِحِينَئِذٍ يَصْلُحُ أَنْ تَكُونَ وِعَاءً لِعِلْمِ اللَّهِ" فَعَلَامَةُ فَنَائِك عَنْ خَلْقِ اللَّهِ انْقِطَاعُك عَنْهُمْ وَعَنْ التَّرَدُّدِ إلَيْهِمْ وَالْيَأْسِ مِمَّا فِي أَيْدِيهِمْ فَإِذَا كَانَ الْقَلْبُ لَا يَرْجُوهُمْ وَلَا يَخَافُهُمْ لَمْ يَتَرَدَّدْ إلَيْهِمْ لِطَلَبِ شَيْءٍ مِنْهُمْ (فتوح الغيب) شرح :افْنَ عَنْ عِبَادَةِ الْخَلْقِ وَالتَّوَكُّلِ عَلَيْهِمْ بِعِبَادَةِ اللَّهِ وَالتَّوَكُّلِ عَلَيْهِ فَلَا تُطِعْهُمْ فِي مَعْصِيَةِ اللَّهِ تَعَالَى وَلَا تَتَعَلَّقْ بِهِمْ فِي جَلْبِ مَنْفَعَةٍ وَلَا دَفْعِ مَضَرَّةٍ وَأَمَّا الْفَنَاءُ عَنْ الْهَوَى بِالْأَمْرِ وَعَنْ الْإِرَادَةِ بِالْفِعْلِ بِأَنْ يَكُونَ فِعْلُهُ مُوَافِقًا لِلْأَمْرِ الشَّرْعِيِّ لَا لِهَوَاهُ وَأَنْ تَكُونَ إرَادَتُهُ لِمَا يَخْلُقُ تَابِعَةً لِفِعْلِ اللَّهِ لَا لِإِرَادَةِ نَفْسِهِ 

கருத்து- அல்லாஹ்வின் படைப்புகளிடம் (பணக்காரர்களிடம்) தன் தேவையை  நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களுடன் உறவாடுவதை விட்டும் விலகி  இரு.. ஞானம் உனக்கு கிடைக்கும்.

வியாழன், 3 அக்டோபர், 2024

இறுதிப் பேருரை

 04-10-2024

ரபீஉல் அவ்வல்- 29 بسم الله الرحمن الرحيم  

இறுதிப் பேருரை

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

வக்ஃப் திருத்த  சட்டத்த்தின் மூலம் ஏற்படும் பேராபத்தை எதிர்த்து இன்ஷா அல்லாஹ் 4-10-2024 வெள்ளிக்கிழமை  மாலை 4 மணியளவில் எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது பற்றி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலிம்கள் ஜும்ஆவில் அறிவிப்புச் செய்து மக்களை திரளாக கலந்து கொள்ள வைக்குமாறு மாநில ஜமாஅத்துல் சபை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.                               

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து மிக மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உபதேசித்தார்கள். குறிப்பாக சகோதரத்துவம், வட்டி, கொலை, குலப்பெருமை, பெண்களின் நலம் நாடுதல், கடன், வாரிசுரிமையின் சட்டங்களைப் பேணுதல், நமபிக்கை மோசடி, அமானிதம், தஜ்ஜால் வருகை ஆகிய பல விஷயங்களைக் குறித்து பேசினார்கள்  அவற்றில் சிலவற்றை விரிவாக காண்போம்

ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் உரிமைகளைப் பேணுவது பற்றி..

عَنْ أَبِي بَكْرَةَ رَض قَالَ خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ قَالَ أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِاسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ أَيُّ شَهْرٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ ذُو الْحَجَّةِ قُلْنَا بَلَى قَالَ أَيُّ بَلَدٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ قَالَ أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الْحَرَامِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ أَلَا هَلْ بَلَّغْتُ قَالُوا نَعَمْ قَالَ اللَّهُمَّ اشْهَدْ فَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ فَلَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ(بخاري- باب الْخُطْبَةِ أَيَّامَ مِنًى-كتاب الحج

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நபி ஸல் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்தார்கள்.  அப்போது இது என்ன நான் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த ஹஜ்ஜுப் பெருநாளுக்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது (கண்ணியமான) ஹஜ்ஜுப் பெருநாள் அல்லவா என்றார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம்.  பிறகு இது என்ன மாதம் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். அப்போதும் நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த மாதத்திற்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது  (கண்ணியமான) துல்ஹஜ் மாதம் அல்லவா என்றார்கள்.  நாங்கள் ஆம் என்று கூறினோம்.  பிறகு இது என்ன ஊர் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். அப்போதும் நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த ஊருக்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது கண்ணியமான ஊர் அல்லவா என்றார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம்.   பின்பு நபி ஸல் அவர்கள் இந்த நாள் எவ்வளவு கண்ணியமானதோ, இந்த மாதம் எவ்வளவு கண்ணியமானதோ, இந்த ஊர் எவ்வளவு கண்ணியமானதோ அதேபோன்று ரப்பை சந்திக்கும் நாள் வரையிலும்  (நீங்கள் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து கொள்ள வேண்டும். )  உங்களுக்கிடையில் ஒருவருடைய உயிரையும் உடைமையையும் மற்றவர் கண்ணியமாக கருத வேண்டும்.  என்று கூறி விட்டு நான் எனக்கு ஏவப்பட்டதை உங்களுக்கு அறிவித்து விட்டேனா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதன் பிறகு யாஅல்லாஹ் நீயே இதற்கு சாட்சி என்று கூறி, இங்கு வந்திருப்பவர் வராதவருக்கு இதை அறிவிக்கட்டும். சில நேரங்களில் இந்த உபதேசத்தை என்னிடம் நேரடியாக கேட்டவரை விட  யாருக்கு இது சொல்லப்பட்டதோ அவர் மிகவும் பேணி நடப்பவராக இருக்கலாம். எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு காஃபிர்களாக ஆகி விடாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.

وَمَنَاط التَّشْبِيه فِي قَوْله :كَحُرْمَةِ يَوْمكُمْ  وَمَا بَعْده ظُهُوره عِنْد السَّامِعِينَ لِأَنَّ تَحْرِيم الْبَلَد وَالشَّهْر وَالْيَوْم كَانَ ثَابِتًا فِي نُفُوسهمْ مُقَرَّرًا عِنْدهمْ  بِخِلَافِ الْأَنْفُس وَالْأَمْوَال وَالْأَعْرَاض فَكَانُوا فِي الْجَاهِلِيَّة يَسْتَبِيحُونَهَا فَطَرَأَ الشَّرْع عَلَيْهِمْ بِأَنَّ تَحْرِيم دَم الْمُسْلِم وَمَاله وَعِرْضه أَعْظَم مِنْ تَحْرِيم الْبَلَد وَالشَّهْر وَالْيَوْم (فتح الباري)

ஹஜ்ஜுப் பெருநாள், முஹர்ரம் மாதம், மக்கா நகரம் ஆகியவற்றின் கண்ணியமும், உயர்வும் முற்காலத்தில் இருந்தே மக்கள் மனதில் நன்கு பதிந்திருந்தது. ஆனால் அவற்றின் கண்ணியத்தை விளங்கி வைத்திருந்த அளவுக்கு மக்களின் மனதைப் புரியாதவர்களாக அன்றைய மக்கள் இருந்தார்கள். அதனால் தான் நபி ஸல் அவர்கள் அதை ஒப்பிட்டு நபி ஸல்  ஒரு முஃமினின் கண்ணியமும், உயிரும், உடைமையும் இந்த நாளின் கண்ணியத்தை விட உயர்வானது என்றார்கள். 

மனித உயிரின் மதிப்பைப் பற்றி மேலும் விரிவாகப் புரிய வைப்பதற்காக அதே நாளில் நபி ஸல் கூறிய அறிவுரை 

وفي رواية لمسلم "قال "أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ كَانَ مُسْتَرْضِعًا فِي بَنِي سَعْدٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ... (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- كِتَاب الْحَجِّ-2334

وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ (أي متروكة لا قصاص ولا دية ولا كفارة) وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ كَانَ مُسْتَرْضِعًا فِى بَنِى سَعْدٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ (مسلم) فَقَالَ الْمُحَقِّقُونَ وَالْجُمْهُور اِسْم هَذَا الِابْن إِيَاس بْن رَبِيعَة بْن الْحَارِث بْن عَبْد الْمُطَّلِب . قَالُوا : وَكَانَ هَذَا الِابْنُ الْمَقْتُولُ طِفْلًا صَغِيرًا يَحْبُو بَيْن الْبُيُوت ، فَأَصَابَهُ حَجَر فِي حَرْب كَانَتْ بَيْن بَنِي سَعْد وَبَنِي لَيْث بْن بَكْر ، قال الولي العراقي : ظاهره أنها تعمدت قتله (شرح النووي)

(கொலை, வன்முறை எண்ணம், பழிவாங்குதல் போன்ற) அறியாமைக் காலத்தின் அத்தனை மடமைகளையும் என் காலுக்குக் கீழ் அடக்கி விட்டேன்.  அறியாமைக் காலத்தின் பழிவாங்குதலும் என் இரண்டு பாதங்களுக்கு அடியில் நசுக்கப்பட்டு விட்டது முதலாவதாக ரபீஆ இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப் உடைய கொலைக்கு பழிவாங்குவதை இல்லாமல் ஆக்கி விட்டேன் இவர் பனூஹுதைல் கோத்திரத்தில் பால்அருந்திக் கொண்டிருந்த குழந்தை.... இவரை ஹுதைல் என்பவர் கொலை செய்தார். 

விளக்கம்- அறியாமைக் காலத்தில் கோபம், பொறாமை போன்ற சிறுசிறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருந்தார்கள் ஒரு குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டால் 10 தலைமுறை கடந்தாலும் கூட அந்த கொலைக்காக பழிவாங்கும் படலம் தொடரந்து கொண்டேயிருக்கும். அத்தகைய வன்முறை எண்ணத்தை முற்றிலுமாக கைவிடும் விதத்தில் நபி ஸல் அவர்கள் பேசினார்கள். பழிவாங்குதல் கிடையாது என்பதை முதலில் தன் குடும்பத்தில் இருந்தே ஆரம்பித்து வைக்கும் விதமாக ரபீஆ இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப் உடைய கொலைக்கு பழிவாங்குவதை இல்லாமல் ஆக்கி விட்டேன் என்றார்கள். நபி ஸல் அவர்களின் குடும்பமான ஹாரிஸ் கோத்திரத்தைச் சார்ந்த இவர் பனூஹுதைல் கோத்திரத்தில் உள்ள தாய்மார்களிடம் பால் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நடந்த கோஷ்டி மோதலில் அந்தக் குழந்தை மீது ஒரு கல் பட்டு அக்குழந்தை இறந்து விட்டது. சரியாக கூற்றின் படி  ஹுதைல் என்பவர் வேண்டுமென்றே கல்லை வீசினார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கொலையால் இரு குடும்பத்தாருக்குமிடையே பெரும் பகை நீடித்தது. அதை நபி ஸல் முடித்து வைக்கும் விதமாக என்னுடைய குடும்பத்தைச் சாரந்த அந்தக் குழந்தை கொல்லப்பட்டதை நாங்களே மன்னித்து விடுகிறோம். இனி யாருடைய மனதிலும் அதற்குப் பழி வாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது என்றார்கள்.

  

எப்போதோ உள்ள பகையை இப்போதும் மனதில் வைத்துக் கொண்டு சிலர் இருப்பார்கள்

عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر بهجرهم -وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ (ابوداود)

மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின் இன்னொரு முஃமினை வெறு(த்து பேசாமல் இரு)ப்பது கூடாது. குறைந்த பட்சம் இருவரும் சந்தித்து இவரோ அல்லது அவரோ முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அவர்களில் சிறந்தவர் யார் முதலில் ஸலாம் கூறிப் பேச்சைத் துவங்குகிறாரோ அவர் தான் சிறந்தவர்.   அதே நேரத்தில் ஒருவரை தீன் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வெறுத்தால் அது தவறல்ல. போருக்கு வராமல் சிலரிடம் நபி ஸல் அவர்கள் பல நாட்கள் பேசாமல் இருந்துள்ளார்கள்.

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல

أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) مُكَافِئِ أي المجازي غيره بمثل فعله 

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப்போன உறவுகளையும் வலியச் சென்று மீண்டும் சேர்த்துக் கொள்பவரே உறவைப் பேணுபவர் ஆவார். 

عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)

மக்கள் எனக்கு நல்லது செய்தால் நானும் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தால் நானும் அவர்களுக்கு  கெடுதல் செய்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக நீங்கள் இருக்காதீர்கள். மாறாக உங்களில் உள்ளத்தில் பின்வருமாறு பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் எனக்கு நல்லது செய்தாலும்  நான் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தாலும் நான் அவர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டேன்.                    

ஒருவர் நமக்குச் செய்த தீங்கை அவர் திருந்திய பின்பும் நம் மனதில் மறக்காமல் வைத்திருப்பது கூடாது.

وَكَانَ من الَّذِينَ يَتَكَلَّم فِي افك عائشة مِسْطَح  بْن أُثَاثَة فَإِنَّهُ كَانَ اِبْن خَالَة الصِّدِّيق وَكَانَ مِسْكِينًا لَا مَال لَهُ إِلَّا مَا يُنْفِق عَلَيْهِ أَبُو بَكْر رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مِنْ الْمُهَاجِرِينَ فِي سَبِيل اللَّه وَقَدْ زَلِقَ زَلِقَة تَابَ اللَّه عَلَيْهِ مِنْهَا وَضُرِبَ الْحَدّ عَلَيْهَا فَحَلَفَ أَبُو بَكْر أَنْ لَا يَنْفَع مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا فَأَنْزَلَ اللَّه تَعَالَى :وَلَا يَأْتَلِ أُولُوا الْفَضْل مِنْكُمْ " يَعْنِي أَبَا بَكْر" وَالسَّعَة أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِين" يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْله " أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِر اللَّه لَكُمْ وَاَللَّه غَفُور رَحِيم (22النور)فَقَالَ أَبُو بَكْر : بَلَى وَاَللَّه يَا رَبّنَا إِنَّا لَنُحِبّ أَنْ تَغْفِر لَنَا وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَع (تفسير ابن كثير)

மிஸ்தஹ் என்பவர் ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களின் ஏழை உறவினர் ஆவார். அவருக்கு ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வந்தார்கள். அதைத் தவிர வேறு வசதி வாய்ப்பு அவருக்கு இல்லை. இந்நிலையில் ஆயிஷா ரழி உடைய அவதூறு விஷயத்தில் இவரும் சம்பந்தப்பட்டு விட்டார். ஆனால் பிறகு தவ்பா செய்து விட்டார். அதற்காக தண்டனை அவருக்குத் தரப்பட்டு விட்டது. எனினும் அபூபக்கர் ரழி அவர்கள் மனச் சங்கடம் காரணமாக இனிமேல் நான் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கினான். நீங்கள் ஒரு தவறு செய்த பின் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பதை விரும்ப மாட்டீர்களா அதுபோல் நீங்களும் அவரை மன்னித்து விடுங்கள் என்ற ஆயத் இறங்கியவுடன் அவரை மன்னித்து எப்போதும் போல உதவித்தொகை வழங்க ஆரம்பித்தார்கள்

இன்னா செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவர் சொன்னது போல தீமை செய்பவருக்கும் நன்மையே செய்வதால் பகைமை நீங்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ(مسلم)معناه كأنما تطعمهم الرماد الحار

   ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனக்கு ஒரு உறவினர் உள்ளனர். நான் அவர்களுடன் சேர்ந்து வாழ நினைக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை வெட்டி வாழுகின்றனர். நான் அவர்களுக்கு நல்லது செய்தாலும் அவர்கள் எனக்கு கெடுதலே செய்கின்றனர். இந்நிலையில் நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் நீ செய்வதை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதே அவர்களின் வாயில் சூடான மண்ணைப் போடுவதற்குச் சமம். அதாவது அவர்களை வாயடைப்பதற்குச் சமம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் புறக்கணித்தாலும் நீ அவர்களுடன் பேசுவதே அவர்களின் தவறுக்கு ஒவ்வொரு தடவையும் தண்டனை கொடுத்ததற்குச் சமம். அவ்வாறு நீ செய்வது உனக்குத் தான் நல்லதாக அமையும். அவர்களுக்கு தீமையாகவே அமையும். நீ அவ்வாறு செய்யும் வரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியாளர் உனக்கு இருந்து கொண்டிருப்பார்.                                                                  

பெண்களின் நலன் பேணுவது பற்றி இறுதிப்பேருரையில் அறிவுரை

وفي رواية لمسلم  (في خطبة حجة الوداع) ...فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ.. (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- كِتَاب الْحَجِّ-2334 قال الزرقاني (بِأَمَانِ اللَّهِ) أي بأن الله ائتمنكم عليهن فيجب حفظ الأمانة وصيانتها بمراعاة حقوقها والقيام بمصالحها الدينية والدنيوية - بِكَلِمَةِ اللَّهِ أي الصيغ التي ينعقد بها النكاح من الإيجاب والقبول (مرعاة)

       பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் அவர்களை உங்களிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளான். (அவர்களின் உலகியல் ரீதியான நலவுகளுக்கும் நீங்கள் வழியமைத்துத் தர வேண்டும். மறுமை சார்ந்த நலவுகளுக்கும் நீங்கள் வழியமைத்துத் தர வேண்டும். அவர்களின் உரிமைகளைப் பேண வேண்டும்.) மேலும் கலிமாவுடன் (இணைந்த ஈஜாப் கபூல் மூலமாக) அந்தப் பெண்களை நீங்கள் அந்தப் பெண்களை கரம் பற்றுகிறீர்கள். உங்கள் மீது அவர்களுக்குள்ள கடமையாகிறது நீங்கள் வெறுக்கும்படியாக அந்நிய ஆண்களுடன் படுக்கையை அவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்களை காயம் படாமல் அடிக்கலாம். அவர்கள் மீது உங்களுக்குள்ள கடமையாகிறது நல்ல முறையில் அவர்களுக்கான உணவு, உடைகளைத் தர வேண்டும்.                    

         

பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்பது 

அவர்கள் பக்கம் முழுமையாக சாய்ந்து விடக்கூடாது என்பதையும் குறிக்கும்.

பெண்களிடம் ஆலோசனை கேட்கலாம். நல்லதாக இருந்தால் அதைச் செயல்படுத்தலாம். நபி ஸல் அவர்கள் ஹுதைபிய்யா சம்பவத்தின் போது துணைவியார் உம்முஸல்மா ரழி அவர்களின் ஆலோசனைப்படி தலைமுடியை இறக்கியதால் அதுவரை காஃபிர்களுக்கு இவ்வளவு தூரம் நாம் பணிய வேண்டுமா என்ற ஆதங்கத்தில் நபி ஸல் அவர்கள் சொல்லியும் இஹ்ராமைக் களையாமல் இருந்த சஹாபாக்கள், நபி ஸல் அவர்களே இஹ்ராமைக் களைந்ததால் தாங்களும் இஹ்ராமைக் களைந்தார்கள். இதற்குக் காரணம் உம்முஸல்மா ரழி அவர்களின் ஆலோசனை தான். ஆனால் எல்லா முடிவுகளையும் அவர்களிடமே விட்டு விட்டு வெறும் பொம்மை மாதிரி இருந்து விடக்கூடாது.                                                                          

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي

எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும், உங்களில் செல்வந்தர்கள் தர்ம ம் செய்பவர்களாகவும், உங்களின் காரியங்கள் உங்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படுவதாவும் அமையுமோ அதுவரை இந்த பூமியின் மேற்பரப்பு அதன் கீழ்பரப்பை விட நல்லது. நீங்கள் இந்த பூமியில் வாழ்வது ஆனால் எப்போது உங்களில் தலைவர்கள் தீயவர்களாகவும், உங்களில் செல்வந்தர்கள் கஞ்சத்தனம் உள்ளவர்களாகவும், உங்களின் ஆலோசனைகள் பெண்களிடமே ஒப்படைக்கப் படுவதாகவும் ஆகி விடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு அதன் மேல்பரப்பை விட நல்லது.          

 விளக்கம்- இந்த பூமியில் வாழ்வது நல்லதல்ல (எனும் அளவுக்கு இந்த பூமிக்கு சுனாமி, கொரோனா போன்ற பல சோதனைகள் வந்து கொண்டேயிருக்கும்.)                                           

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ (مسلم)  كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ (فإن أول فتنة بني إسرائيل) يريد قتل النفس التي أُمِر بنو إسرائيل فيها بذبح البقرة واسم المقتول عاميل قتله ابن أخيه أو عمه ليتزوج ابنته أو زوجته وقال في المطامح يحتمل كونه أشار إلى قصة هاروت وماروت لأنهما فتنا بسبب امرأة من بني إسرائيل ، ويحتمل أنه أشار إلى قضية بلعام بن باعوراء لأنه إنما هلك بمطاوعة زوجته وبسببهن هلك كثير من العلماء (فيض القدير)

     பனீ இஸ்ராயீல் சமூகத்தில் முதல் சோதனை பெண்ணால் ஏற்பட்டது என்பது பகரா சூராவில் வரும் சம்பவத்தையும் குறிக்கும். தனது மகளை திருமணம் செய்து தராத சித்தப்பாவைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எதிர் கோஷ்டியினர் வசிக்கும் பகுதியில் வீசியதால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இறை உத்தரவுப்படி மாட்டை அறுத்து அதன் வாலை சித்தப்பாவின் கப்ரு மீது அடித்த தில் அவர் எழுந்து என்னைக் கொன்றது என்னுடைய சகோதர ர் மகன் தான் என்று கூறி விட்டு மீண்டும் கப்ருக்குள் சென்றதால் பிரச்சினை ஓய்ந்தது.                                                                                                         


முதல் சோதனை பெண்ணால் ஏற்பட்டது என்பது பல்அம் இப்னு பாஹூராவின் சம்பவத்தையும் குறிக்கும்.

பல்அம் இப்னு பாஹூரா விஷயமாக கூறப்படும் பல்வேறு செய்திகளில் ஒன்று

عَنْ اِبْن عَبَّاس"وَاتْلُ عَلَيْهِمْ نَبَأ الَّذِي آتَيْنَاهُ آيَاتنَا فَانْسَلَخَ مِنْهَا " قَالَ هُوَ رَجُل أُعْطِيَ ثَلَاث دَعَوَات يُسْتَجَاب لَهُ فِيهِنَّ وَكَانَتْ لَهُ اِمْرَأَة لَهُ مِنْهَا وَلَد فَقَالَتْ اِجْعَلْ لِي مِنْهَا وَاحِدَة قَالَ فَلَك وَاحِدَة فَمَا الَّذِي تُرِيدِينَ ؟ قَالَتْ اُدْعُ اللَّه أَنْ يَجْعَلنِي أَجْمَل اِمْرَأَة فِي بَنِي إِسْرَائِيل فَدَعَا اللَّه فَجَعَلَهَا أَجْمَل اِمْرَأَة فِي بَنِي إِسْرَائِيل فَلَمَّا عَلِمَتْ أَنَّ لَيْسَ فِيهِمْ مِثْلهَا رَغِبَتْ عَنْهُ وَأَرَادَتْ شَيْئًا آخَر فَدَعَا اللَّه أَنْ يَجْعَلهَا كَلْبَة فَصَارَتْ كَلْبَة فَذَهَبَتْ دَعْوَتَانِ فَجَاءَ بَنُوهَا فَقَالُوا لَيْسَ بِنَا عَلَى هَذَا قَرَار قَدْ صَارَتْ أُمّنَا كَلْبَة يُعَيِّرنَا النَّاس بِهَا فَادْعُ اللَّه أَنْ يَرُدّهَا إِلَى الْحَال الَّتِي كَانَتْ عَلَيْهَا فَدَعَا اللَّه فَعَادَتْ كَمَا كَانَتْ وَذَهَبَتْ الدَّعَوَات الثَّلَاث (تفسير ابن كثير

இவருடைய வணக்க வழிபாட்டின் காரணமாக மூன்று பிரத்தியேக துஆக்கள் இவருக்கு வழங்கப்பட்டிருந்தன அதன் மூலம் பெரிய கோரிக்கையை அல்லாஹ்விடம் கேட்டிருக்கலாம் ஆனால் இந்த மனிதர் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு அதை வீணாக்கினார் அந்த மனைவியின் மூலமாக இவருக்கு ஆண்மக்கள் இருந்தனர் அதாவது முதலில் அவர் மனைவி அவரிடம் ஒரு துஆவை எனக்காக பயன்படுத்துங்கள் என்று கேட்க, சரி உனக்கு என்ன வேண்டும் கேள் என்று இவர் கூற, பனீ இஸ்ராயீல் சமூகத்தில் மாபெரும் அழகியாக நான் மாற வேண்டும் என்றாள் இவர் துஆ செய்த போது அவ்வாறே மாபெரும் அழகியாக மாறினாள் ஆனால் அழகு வந்தவுடன் இவரை உதாசீனம் செய்து வேறொரு அழகிய ஆண்மகனை நாடி அவள் சென்று விட்டாள் இவருக்கு கோபம் வந்து மற்றொரு 2ம் துஆவைப் பயன்படுத்தி அவளை நாயாக ஆக்கும்படி பிரார்த்திக்க, அவ்வாறே அவள் நாயாக உருமாறினாள் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவளுடைய ஆண்மக்கள் இவரிடம் வந்து தம் தாயை மீண்டும் மனுஷியாக மாற்றும்படி துஆ செய்யக் கூறியபோது அவ்வாறே மூன்றாவது துஆவைப் பயன்படுத்தி பிரார்த்தித்தார் அவள் மனுஷியாக மாறினாள் இவ்வாறு மனைவிக்காகவே மூன்று பிரத்தியேக துஆக்களையும் அவர் வீணாக்கினார்.                  


மனித உரிமை மீறல் தொடர்பான பல்வேறு நபிமொழிகள்

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ....وَمَنْ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ (بخاري 7042  

எவர் ஒரு சமூகத்தாரின் பேச்சுக்களை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்கிறாரோ மறுமை நாளில் அவருடைய காதில் ஈயத்தை நரக நெருப்பில் காய்ச்சி ஊற்றப்படும்.                                



குறிப்பு- மேலும் 8-10-2024 செவ்வாயக்கிழமை  மாலை 4 மணியளவில் எக்மோர் சிராஜ் மஹாலில்  சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மீலாது மற்றும் சமய நல்லிணக்க மாநாடு , பட்டிமன்றம் ஆகியவை நடைபெறவுள்ளது. இதுபற்றியும் அறிவிப்புச் செய்ய வேண்டுகிறோம்.

வியாழன், 26 செப்டம்பர், 2024

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழுகையும் சிரிப்பும்

 

قال الله تعالي فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ (82التوبة)

நபி ஸல் அவர்கள் தமது வாழ்நாளில் யாரிடமும் கடுகடுப்பாகப் பேசியதில்லை. மாநபி ஸல் ல ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிச் சிறப்பே அவர்களின் மலர்ந்த முகம் தான்.

மக்களோடு மக்களாக  இருந்து கல கலப்பாகப் பேசுபவர்களாக நபி ஸல் அவர்கள் இருந்தார்கள்.

சின்னப் பூனையை கூடவே வைத்திருந்தவரை அபூஹுரைரா என்று அழைத்ததைப் போல இன்னும் ஒரு சம்பவம்

عَنِ أَبِي الْوَرْدِ قَالَ رَآنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَآنِي رَجُلا أَحْمَرَ فَقَالَ أَنْتَ أَبُو الْوَرْدِ (شرح السنة)

அபுல் வர்த் ரழி அறிவித்துள்ளார்கள். என்னை சிவப்பான மனிதராக இருக்க க் கண்டு நீர் சிவப்பின் தந்தை என்று   பட்டப் பெயர் கூறினார்கள் (அன்று முதல் அதுவே என் பெயராக மாறி விட்டது)

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَيْهِ لَأَبُو تُرَابٍ وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا وَمَا سَمَّاهُ أَبُو تُرَابٍ إِلَّا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ فَاضْطَجَعَ إِلَى الْجِدَارِ إِلَى الْمَسْجِدِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُهُ فَقَالَ هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الْجِدَارِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَامْتَلَأَ ظَهْرُهُ تُرَابًا فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ اجْلِسْ يَا أَبَا تُرَابٍ  (بخاري

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை மற்றவர்கள் அபுத்துராப் மண்ணின் தந்தையே என்று அழைத்தால் அது ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். முதன் முதலில் ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை அவ்வாறு அழைத்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான். ஒருநாள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது ஏற்பட்ட மனச்சங்கடம் காரணமாக அவர்கள் மஸ்ஜிதுக்குச் சென்று வெறும் தரையில் சுவற்றை நோக்கி படுத்துக் கொண்டார்கள். இதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று நேரத்தில் அங்கு வந்து அலீ (ரழி) அவர்களை எழுப்ப, அலீ (ரழி) அவர்களின் முதுகு முழுவதும் மண்ணாக இருப்பதைக் கண்டு யா அபத்துராப்  மண்ணின் தந்தையே என்று அழைத்தார்கள். பின்பு அலீ (ரழி) அவர்களின் முதுகில் இருந்த மண்ணைத் தட்டி விட்டார்கள். யா அபத்துராப் எழுந்து அமருங்கள் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். நூல் புகாரீ                                                       

கிழவிகளெல்லாம் சுவனம் செல்ல மாட்டார்கள் என நகைச்சுவையாக கூறி பின்பு அதற்கு விளக்கம் சொன்ன விதம்

عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال أن النبي صلى الله عليه وسلم قال لامرأة عجوز إنه لا يدخلُ الجنةَ عجوز فقالت: وما لهنَّ ؟ وكانت تقرأ القرآنَ فقال لها : أما تقرئين القرآن { إنا أنشأناهنَّ إنشاء فجعلناهنَّ أبكارا عُرُبا أتْرابا [ الواقعة 35] رواه رزين

ஒட்டகம் வேண்டும் என கேட்டவரிடம் ஒட்டகக்குட்டி தான் தருவேன் என நகைச்சுவையாக கூறி பிறகு  ஒவ்வொரு ஒட்டகமும் அதன்  தாய்க்கு குட்டி  தானே. அதைத் தான் அவ்வாறு  கூறினேன் என்றார்கள்.  

عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا اسْتَحْمَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي حَامِلُكَ عَلَى وَلَدِ النَّاقَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَلْ تَلِدُ الْإِبِلَ إِلَّا النُّوقُ (ترمذي)ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டி தான்

கண்ணில் வெண்மை இருக்குமே அவர் தானே உன் கணவர் என்று ஒரு பெண்ணிடம் நகைச்சுவையாக கேட்க, என் கணவரை நீங்கள் பார்த்ததில்லையே என்ற போது எல்லோருடைய கண்களிலும் வெண்மை இருக்குமே அதைச் சொன்னேன் என்றார்கள்

عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال سمعت النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول لامرأة :زوُجكِ ذلك البياضُ في عينيه ؟ قالت:عَقْرَى ومتى رأيتَه ؟ قال:وهل من عين إلا وفيها بياض ؟(رزين

அழகற்ற தோற்றமுள்ள காய்கறி வியாபாரியை முதுகுக்குப் பின் வந்து கட்டிப்பிடித்து அவரிடம் தமாஷாக பேசிய..

عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرَ بْنَ حَرَامٍ وَكَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنَ الْبَادِيَةِ1 فَيُجَهِّزُهُ 2رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ قَالَ  وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ دَمِيمًا3 فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ لا يُبْصِرُهُ فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا ؟ فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لا يَأْلُو مَا أَلْزَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ:مَنْ يَشْتَرِي الْعَبْدَ ؟ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا4 فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ :لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ5(سنن الكبري للبيهقي)

நபி ஸல் அவர்களிடம் ஒரு வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள் தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக்  கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள் தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசாகவே  என்னை நீங்கள்  பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும் விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள் விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.                                                                                                                         

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சில் நகைச்சுவை இருந்தாலும் அதில் பொய் இருக்காது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا قَالَ إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا رواه الترمذي (تُدَاعِبُنَا أي تُمازحنا)

பிறர் மனதை புண்படுத்தக்கூடிய. அல்லது பதட்டமடையச் செய்யக்கூடிய விளையாட்டும், கேலிப்பேச்சும் கூடாது

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَامَ رَجُلٌ مِنْهُمْ فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى حَبْلٍ مَعَهُ فَأَخَذَهُ فَفَزِعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا(ابوداود)وفي رواية لَا يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ أَخِيهِ لَاعِبًا وَلَاجَادًّا6

நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடம் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்

عَنْ جَرِيرٍ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا (بخاري6089

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லைஎன்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்குஎன்று பிரார்த்தனை செய்தார்கள்.

சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவராகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதை (புன்னகைப்பதை) மார்க்கம் வலியுறுத்துகிறது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ترمذي) عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوْ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ (مسلم

மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி மற்றவர்களையும் ஏவினார்கள்

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة

கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம் உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ,  முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில் போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர் ஊற்றுவதும் தர்மம். (அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).                              

நபி ஸல் அவர்களைப் போன்ற முக மலர்ச்சி உடையவர்களைப் பார்க்க முடியாது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه الترمذي

தோழர்களிடம் நபி ஸல் அவர்கள் கடுகடுப்பாக இருக்காமல் கலகலப்பாக சிரித்துப் பேசிய நிகழ்வுகள் தான் அதிகம் உண்டு.

عَنْ خَارِجَهَ بْنِ زَيْدٍ : أَنَّ نَفَرًا دَخَلُوا عَلَى أَبِيهِ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَقَالُوا : حَدِّثْنَا عَنْ بَعْضِ أَخْلاَقِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ : كُنْتُ جَارَهُ فَكَانَ إِذَا نَزَلَ الْوَحْىُ بَعَثَ إِلَىَّ فَأَتَيْتُهُ فَأَكْتُبُ الْوَحْىَ وَكُنَّا إِذَا ذَكَرْنَا الدُّنْيَا ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الآخِرَةَ ذَكَرَهَا مَعَنَا وَإِذَا ذَكَرْنَا الطَّعَامَ ذَكَرَهُ مَعَنَا (السنن الكبرى

ஜைதுப்னு தாபித் ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களின் அருகாமையில் இருக்கும் பாக்கியம் பெற்றவனாக இருந்தேன். வஹீ வந்த பின் அதை எழுத என்னை அழைப்பார்கள். நான் வருவேன். வஹீயை எழுதுவேன். (நபி ஸல் அவர்கள் எங்களில் ஒருவராக இருந்தார்கள்.) நாங்கள் துன்யாவை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து துன்யாவை நினைவு கூருவார்கள். நாங்கள் ஆகிரத்தை நினைவு கூர்ந்தால் எங்களுடன் இணைந்து ஆகிரத்தை நினைவு கூருவார்கள். நாங்கள் உணவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் எங்களுடன் இணைந்து அதைப் பற்றியும் பேசுவார்கள்.                

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) 2348

ஒருமுறை நபி ஸல் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக!அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல் சிரித்து விட்டார்கள். நூல்: புகாரி 2348

முகம் கொடுத்துப் பேசவே விரும்பாதவர்களைப் போன்றில்லாமல்

யார் பேசினாலும் நபி ஸல் அவர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள்.

عَنْ أَنَسِ رض قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ (ابن ماجة) وفي رواية بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ

தன்னிடம் பேசுபவர் அவராக தன் முகத்தைத் திருப்பும் வரை நபி ஸல் அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். யாரிடமேனும் முஸாஃபஹா செய்தால் அவராக தன் கையை விடுவிக்கும் வரை நபி ஸல் அவர்கள் தன் கையை விடுவிக்க மாட்டார்கள். தன்னோடு அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் (சபையில் தன்னை முற்படுத்தும் நோக்கத்தில்) நபி ஸல் அவர்களின் முட்டுக் கால்கள் முந்தியிருப்பதைக் காண முடியாது.                                  

மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்

عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ حَاجَتِهَا. (مسلم

மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள்.

பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல்

قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري

அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.                                 

முஸ்லிம் அல்லாதவரையும் நோய் விசாரிக்கச் செல்லுதல்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ غُلَامٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ النَّارِ . (بخاري

 யூத மதத்திலுள்ள ஒரு சிறுவன் நோயுற்றிருந்தான். அவனை நோய் விசாரிப்பதற்கு சென்றிருந்த நபி(ஸல்) அவர்கள் அப்பையனின் தலைப்பக்கமாக உட்கார்ந்து அப்பையனிடம் நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் எனக் கூறினார்கள். அப்பையனின் தலைப்பக்கம் நின்று கொண்டிருந்த தன் தந்தையை அப்பையன் பார்த்தான். அபுல்காசிமுக்கு கட்டுப்படு என அப்பையனின் தந்தை கூறினார். அப்பையன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். என் மூலம் அப்பையனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என கூறியவாறு எழுந்து சென்றார்கள்.                                      

 

 

நபி ஸல் கலகப்பாக ப் பேசிய சம்பவங்கள் இருப்பதைப் போல

நபி ஸல் அவர்கள் அழுத சம்பவங்களும் நிறைய உண்டு

ஒவ்வொரு தொழுகையின் போதும் நபி ஸல் அவர்களின் உள்ளம் அழுது கொண்டிருக்கும்

عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَفِي صَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الرَّحَى مِنْ الْبُكَاءِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ابوداود

பிரியமானவர் இறந்து விட்டால் நபி ஸல் அழுவார்கள். ஒப்பாரி வைப்பது தான் தடுக்கப்பட்டுள்ளது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ فَقَالَ قَدْ قَضَى قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ فَبَكَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكَوْا فَقَالَ أَلَا تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لَا يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ وَلَا بِحُزْنِ الْقَلْبِ وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا وَأَشَارَ إِلَى لِسَانِهِ أَوْ يَرْحَمُ وَإِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَضْرِبُ فِيهِ بِالْعَصَا وَيَرْمِي بِالْحِجَارَةِ وَيَحْثِي بِالتُّرَابِ .(بخاري

ஜனாஸாவை அடக்கம் செய்யும் போது மறுமையின் நினைவால் அழுத சம்பவம்

عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَجَلَسَ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَبَكَى حَتَّى بَلَّ الثَّرَى ثُمَّ قَالَ يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا  -  ابن ماجة

இரவில் எழுந்து தொழும்போது மறுமையின் நினைவால் அழுத சம்பவம்

عن عطاء قال : دخلت أنا و عبيد بن عمير على عائشة فقالت لعبيد بن عمير : قد آن لك أن تزورنا فقال : أقول يا أمه كما قال الأول : زر غبا تزدد حبا قال : فقالت : دعونا من رطانتكم هذه قال ابن عمير : أخبرينا بأعجب شيء رأيته من رسول الله صلى الله عليه و سلم قال : فسكتت ثم قالت : لما كان ليلة من الليالي قال : ( يا عائشة ذريني أتعبد الليلة لربي ) قلت : والله إني لأحب قربك وأحب ما سرك قالت : فقام فتطهر ثم قام يصلي قالت : فلم يزل يبكي حتى بل حجره قالت : ثم بكى فلم يزل يبكي حتى بل لحيته قالت : ثم بكى فلم يزل يبكي حتى بل الأرض فجاء بلال يؤذنه بالصلاة فلما رآه يبكي قال : يا رسول الله لم تبكي وقد غفر الله لك ما تقدم وما تأخر ؟ قال : ( أفلا أكون عبدا شكورا   -  صحيح ابن حبان

                    பத்ருப் போருக்கு முதல் நாள் இரவில் அனைவரும் தூங்கிய போதும்  நபி  ஸல் அவர்கள் மட்டும்  விடிய விடிய தூங்காமல்  அழுது துஆச் செய்த சம்பவம்

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَا كَانَ فِينَا فَارِسٌ يَوْمَ بَدْرٍ غَيْرُ الْمِقْدَادِ وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا فِينَا إِلَّا نَائِمٌ إِلَّا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ شَجَرَةٍ يُصَلِّي وَيَبْكِي حَتَّى أَصْبَحَ -  مسند أحمد

عن أبي هريرة قال : قال أبو القاسم صلى الله عليه وسلم : " والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا " . رواه البخاري

وعن أم العلاء الأنصارية قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " والله لا أدري والله لا أدري وأنا رسول الله ما يفعل بي وبكم " . رواه البخاري

 

 

 

 

 

 

ஹிஜ்ரத்

 12-06-2026 துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم          ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும்  இஸ்லாமியப் புத்தாண்டு https://chennaijamaathulula...