வியாழன், 8 ஜூன், 2023

பயணத்தின் ஒழுக்கங்கள்


09-06-2023

துல்கஃதா 19

 

بسم الله الرحمن الرحيم 

 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 



ஹாஜிகள் ஹஜ்ஜுக்குப் புறப்படத் தயாராகி விட்டதை கவனித்தும்

கடந்த வாரம் ஏற்பட்ட ரயில் விபத்தைக் கவனித்தும் இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّفَرُ قِطْعَةٌ مِنْ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ (بخاري

  பிரயாணம் என்பதே ஒரு விதமான சோதனையாகும். உங்களில் ஒவ்வொருவருடைய  நிம்மதியான உணவை, நீர் அருந்துவதை, நிம்மதியான தூக்கத்தை அது தடுத்து விடுகிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் தேவையை நிறைவு செய்து விட்டு வீட்டுக்குத் திரும்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி விடுங்கள்.

 

ஒரு காலத்தில் குதிரையிலும், ஒட்டகத்திலும், மாட்டு வண்டியிலும் மக்கள் பிரயாணம் செய்தார்கள். அப்போது விபத்துகள் இல்லை.  ஒரு மாட்டு வண்டியும், இன்னொரு மாட்டு வண்டியும் மோதி இத்தனை பேர் இறந்தார்கள் என்று சரித்திரம் இல்லை. ஆனால் இன்று கார், பைக், விமானம், பஸ், இரயில் என நவீன வாகனங்கள் வந்தன. அதனால் மக்களிடம் சிரமங்கள் குறைந்தாலும் விபத்துகள் பெருகி விட்டன.

தற்காலத்தில் எல்லா விதமான பயணங்களிலும் ஆபத்துகளுக்கு வாய்ப்பு உண்டு. முடிந்த வரை நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்டு விட்டு பயணத்தைத் தொடர வேண்டும்.

 

   عَنْ ابْنِ عُمَرَ  رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا وَيَقُولُ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنْ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا وَكَانَ يَقُولُ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ  (ترمذي

நீண்ட தூர பயணம் என்றால் மஸ்ஜிதில் இருந்து இரண்டு ரக்அத் தொழுது விட்டு பயணத்தை தொடர வேண்டும். திரும்பி வரும்போதும் அவ்வாறே செய்வது சுன்னத்தாகும்

وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَصَلَّى فِيهِ  (بخاري

ويستحب إذا أراد الخروج من منزله أن يصلي ركعتين يقرأ فيهما بعد الفاتحة بـ { قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ } وفي الثانية سورة الإخلاص { قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ } ففي الحديث عن النبي - صلى الله عليه وسلم - : [ مَا خَلَّفَ أَحَدٌ عِنْدَ أَهْلِهِ أَفْضَلَ مِنْ رَكْعَتَيْنِ يَرْكَعُهُمَا عِنْدَمَا يُرِيدُ السَّفَرَ ]. (اوضح المسالك

நபி ஸல் கூறினார்கள். நீண்ட தூரப் பயணம் செய்பவர் தன் குடும்பத்தாரின் பாதுகாப்புக்காக அவர் தொழும் இரண்டு ரக்அத்துகளை விட பெரிதாக எதையும் விட்டுச் செல்வதில்லை

كان ابن عمر إذا قدم من سفر دخل المسجد ثم أتى القبر فقال : السلام عليك يا رسول الله,  السلام عليك يا أبا بكر ، السلام عليك يا أبتاه  (بيهقي

இப்னு உமர் ரழி அவர்கள் ஏதேனும் பயணம் முடித்து விட்டுத் திரும்பினால் மஸ்ஜிதில் இரண்டு ரக்அத் தொழுது விட்டு பிறகு நபி ஸல் அவர்களின் கப்ரு அருகே வந்து நபி ஸல் அவர்களுக்கும் அபூபக்கர் ரழி அவர்களுக்கும் உமர் ரழி அவர்களுக்கும்  ஸலாம் கூறி பிறகு வீட்டுக்குச் செல்வார்கள்.

விட்டுச் செல்லும் தன் குடும்பத்தாரை நோக்கி கூற வேண்டிய வார்த்தை

عَنْ عَبْدِ اللَّهِ الْخَطْمِىِّ قَالَ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِذَا أَرَادَ أَنْ يَسْتَوْدِعَ الْجَيْشَ قَالَ « أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكُمْ وَأَمَانَتَكُمْ وَخَوَاتِيمَ أَعْمَالِكُمْ ».

அல்லாஹ்வின் பாதுகாப்பில் உங்களை ஒப்படைக்கிறேன் என்பது இதன் கருத்தாகும்

நம்மை விட வயதில் சிறியவராக இருந்தாலும் பயணத்தின் போது துஆச் செய்யும்படி கூறலாம்

عَنْ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ رض أَنَّهُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعُمْرَةِ فَأَذِنَ لَهُ وَقَالَ لَهُ يَا أُخَيَّ أَشْرِكْنَا فِي شَيْءٍ مِنْ دُعَائِكَ وَلَا تَنْسَنَا(ابن ماجة

உம்ராவுக்கு புறப்பட்ட உமர் (ரழி) அவர்களிடம் தனக்காக துஆ செய்யும்படி  நபி ஸல் கூறினார்கள்

விமானம் மேலே ஏறும்போது தக்பீர் சொல்வதும் கீழே இறங்கும்போது தஸ்பீஹ் சொல்வதும் சுன்னத்

وينبغي إذا علا شرفًا من أرض كبر وإذا هبط واديًا سبح  (اوضح المسالك

செல்லும் வழியில் ஏதேனும் ஆபத்தை உணர்ந்தால் பின்வரும் துஆக்களையும் ஓதலாம்.

عن أبي موسى الأشعري - رضي الله عنه - :[أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ إِذَا خَافَ قَوْمًا قَالَ: اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ ] ويستحب أن يكثر من دعاء الكرب هنا وفي كل موطن وهو ما ثبت في صحيحي البخاري ومسلم عن ابن عباس رضي الله عنهما أن رسول الله - صلى الله عليه وسلم - كان يقول عند الكرب : [ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا اللُّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ ] ، وفي كتاب الترمذي عن أنس - رضي الله عنه - :[أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ إِذَا كَرَبَهُ أَمْرٌ قَال:َ يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ] (اوضح  المسالك

பிரயாணியின் துஆ ஏற்கப்படும். எனவே அதிகமாக துஆச் செய்ய வேண்டும்

عن أبي هريرة - رضي الله عنه - عن النبي - صلى الله عليه وسلم - قال: [ ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٍ لَا شَكَّ فِيهِنَّ : دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ]  (ابن ماجة

துஆக்களை ஓதி விட்டோம். எப்படி வேண்டுமானாலும் வண்டியை ஓட்டலாம் என்று நினைப்பது கூடாது. கவனமும் பொறுமையும் தேவை.

 ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக் கொண்டார்கள்.  அமெரிக்கர் சொன்னார் எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும். இங்கிலாந்து நாட்டுக்காரர் சொன்னார் எங்கள் நாட்டில் வாகனங்கள் இடது புறமாகச் செல்லும். கடைசியாக இந்தியர் சிரித்துக் கொண்டே எங்கள் நாட்டில் வாகனங்கள் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும் என்றாராம்.

 ஒவ்வொரு ஆண்டும் உலகில் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் உலகின் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். புயல் பூகம்பம் சுனாமி போல உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்வதில் சாலை விபத்துக்கு ஐந்தாவது இடம்.

துஆக்களை வாகனம் ஓதுகிறது. ஓட்டுபவரின் உதடுகள் அசைவதில்லை.

ஒரு மூத்த ஆலிம் தனது உரையில் கூறினார்கள். பைக்கை ஸ்டார்ட் பண்ணும்போது வாகனம் மட்டும் துஆவை ஓதுகிறது. ஏதேனும் ஆபத்து என்று வரும்போது வாகனம் எந்த சேதமும் இல்லாமல் தப்பித்து விடுகிறது. ஆனால் பயணித்தவர் அடி பட்டுக் கிடக்கிறார். காரணம் துஆ ஓதியது வாகனம் தானே.

நீண்ட தூரப் பயணமாக இருந்தாலும் குறைந்த தூரத்தைப் போன்று அந்தப் பயணம் ஆகுவதற்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله  عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أُسَافِرَ فَأَوْصِنِي قَالَ عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ فَلَمَّا أَنْ وَلَّى الرَّجُلُ قَالَ اللَّهُمَّ اطْوِ لَهُ الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ (ترمذي

நபி ஸல் அவர்களிடம் ஒருவர் வந்து நான் பிரயாணம் புறப்படுகிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்

என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் இறையச்சத்தைப் பற்றிப் பிடித்துக் கொள். வாகனம் உயரமான இடத்தில் ஏறும்போது தக்பீர் கூறு. என்று உபதேசம் செய்தார்கள். அதைக் கேட்டு விட்டு அவர்

திரும்பிச் சென்ற பிறகு யாஅல்லாஹ் இவருக்கு இந்த பூமியை சுருக்கிதே தருவாயாக இவரின் பயணத்தை   இலேசாக்குவாயாக என்று நபி ஸல் அவர்கள் துஆச் செய்தார்கள்.

பயணத் துணை இல்லாமல் தன்னந் தனியாக பயணம் செய்வது கூடாது

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلاَثَةُ رَكْبٌ »..(ابوداود

இது அந்தக் காலத்தின் பிரயாணத்தைக் குறிக்கும். ஒட்டகம் போன்ற வாகனத்தில் பயணம் செய்யும்போது தனியே பயணம் செய்தால் ஏதேனும் ஆபத்து ஏற்படலாம்

மூன்று பேர் பயணக் கூட்டாளிகள் தங்களுக்குள் ஒரு அமீரை ஏற்படுத்தி அவரின் வழி காட்டுதல் அடிப்படையில் தங்களின் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا كَانَ ثَلاَثَةٌ فِى سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ ». قَالَ نَافِعٌ فَقُلْنَا لأَبِى سَلَمَةَ فَأَنْتَ أَمِيرُنَا. »..(ابوداود

மஹ்ரம் இல்லாமல் பெண் தனியாக பயணம் செய்வது கூடாது

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ تُسَافِرُ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ إِلاَّ مَعَ ذِى مَحْرَمٍ عَلَيْهَا (مسلم

பிரயாண நண்பர்களை நல்லவர்களாக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 எத்தனையோ பிரயாண நண்பர்கள் போகும்போது நல்லபடியாக புறப்பட்டுச் செல்வார்கள். திரும்பி வரும்போது பகையுடன் திரும்பி வருவார்கள். காரணம் உள்ளூரில் இருக்கும்போது ஒருவரின் சுயரூபம் தெரியாது. தன் தீய குணத்தை மறைத்து நல்லவராக காட்டிக் கொள்ளலாம். ஆனால்  பிரயாணத்தில் அவரின் சுய ரூபம் எப்படியும் வெளிப்பட்டு விடும். பெரும்பாலும் ஹஜ்ஜுடைய பிரயாணங்களில் இதைப் பார்க்கலாம்.                    

عن عبد الله العمري قال قال رجل لعمر ابن الخطاب: "إن فلان رجل صدق، فقال له عمر: هل سافرت معه؟ قال: لا، قال: فهل كان بينك وبينه معاملة؟ قال: لا، قال: فهل ائتمنه على شيء؟ قال: لا قال: فأنت الذي لا علم لك به، أراك رأيته يرفع رأسه ويخفض في المسجد". (كنز العمال,  جامع الاحاديث

(உமர் ரழி அவர்கள் ஒரு நபரை சாட்சி சொல்ல வைப்பதற்காக அவரைப்பற்றி மற்றொருவரிடம் விசாரித்த போது) சாட்சியாளரைப் பற்றி (நல்ல விதமாக அவர் கூறினார்.) அவர் உண்மையாக நடந்து கொள்வார் என்றெல்லாம் கூற, உடனே உமர் ரழி அவர்கள் (நீங்கள் எப்படி அவரை நல்லவர் என்று கூறுகிறீர்கள்.) அவரோடு நீங்கள் பிரயாணம் செய்திருக்கிறீர்களா என்று கேட்க, அவர் இல்லை என்றார்.அவருக்கும் உங்களுக்குமிடையில் கொடுக்கல், வாங்கல் உள்ளதா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அவரிடம் நீங்கள் எதையேனும் அமானிதமாக கொடுத்து வைத்து அனுபவம் உண்டா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது உமர் ரழி அவர்கள் கூறினார்கள் அவரை நீங்கள் மஸ்ஜிதில் தொழுகைக்காக தலையை உயர்த்துபவராக, தாழ்த்துபவராக பார்த்திருப்பீர்கள். (தொழுகையை மட்டும் வைத்து ஒருவரை நல்லவர் என்று கூறி விட முடியாது.)                                        

பிரயாணம் புறப்படுவதற்கு ஏற்றமான கிழமை

عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَخْرُجُ فِى سَفَرٍ إِلاَّ يَوْمَ الْخَمِيسِ. (ابوداود   معناه: أن سفره في غير الخميس يكون قليلاً، وسفره في الخميس هو الكثير، (شرح ابي داود

வியாழக்கிழமை அல்லாத மற்ற நாட்களில் நபி ஸல் அவர்கள் பயணம் புறப்ப்பட்டது மிகவும் குறைவு

வியாபாரச் சரக்குகள் அனுப்புவதற்கும் அல்லது அத்துடன் புறப்படுவதற்கும் காலை நேரம் மிகவும் உகந்தது.

عَنْ صَخْرٍ الْغَامِدِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِى فِى بُكُورِهَا ». وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِى أَوَّلِ النَّهَارِ. وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ. قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ صَخْرُ بْنُ وَدَاعَةَ.(ابوداود

 சுருக்கம்- நபி ஸல் அவர்கள் யாஅல்லாஹ் காலை நேரத்தில் என் உம்மத்திற்கு பரக்கத் செய்வாயாக என துஆச் செய்தார்கள். ஏதேனும் படையை அனுப்புவதாக இருந்தால் காலை நேரத்தில் நபி ஸல் அதனை அனுப்பி வைப்பார்கள்.  ஸஹ்ருல் ஙாமிதீ ரழி என்ற நபித்தோழர் இதை முறையாக செயல் படுத்தினார். அவர் தன்னுடைய வியாபாரச் சரக்குகளை காலை நேரத்தில் அனுப்புவார். சுன்னத்தை செயல்படுத்தும் விதமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதால் அவருடைய வருமானம் பெருகியது.                                          

عن علي رضي الله عنه أنه قال: إذا أراد أحدكم الحاجة فليبكر في طلبها يوم الخميس فان رسول الله صلى الله عليه وسلم قال: اللهم بارك لامتي في بكورها (سبل الهدي

அலீ ரழி கூறினார்கள். உங்களில் யாரேனும் ஒரு தேவையை நாடிப் புறப்பட்டால் வியாழக்கிழமை காலையில் புறப்படட்டும். ஏனெனில் நபி ஸல் இந்த உம்மத்துக்கு காலைநேரத்தில் பரக்கத் செய்யும்படி துஆ செய்துள்ளார்கள்

பயணத்தின் விஷயத்தில் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த சலுகையை உதாசீனப் படுத்தியவர்களை அல்லாஹ் தண்டித்தான்.

لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ (17) وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ (18) فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (19) سبا

{وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرىً ظَاهِرَةً } قال الحسن: يعني بين اليمن والشأم. والقرى التي بورك فيها: الشام والأردن1 وفلسطين. والبركة: قيل إنها كانت أربعة آلاف وسبعمائة قرية بورك فيها بالشجر والثمر والماء. فيقيلون3 في قرية ويروحون فيبيتون في قرية. وقيل: كان على كل ميل قرية بسوق، وهو سبب أمن الطريق. (تفسير القرطبي

விளக்கம்- இவர்கள் வாழ்ந்த யமனில் இருந்து சிரியா செல்லும் பாதை முழுவதும் ஒவ்வொரு மைல்களுக்கும் ஒரு ஊரை அல்லாஹ் அமைத்து அச்சமற்று பயணம் செய்யும் நிலையை உருவாக்கியும் அவர்கள் அதை மறுத்து எங்களுடைய பிரயாணத்தில் ஊர்கள் தூரமாக இருக்க வேண்டும் எனக் கூறினர்.

மற்றொரு அறிவிப்பில் அவர்களுக்குள் ஒரு தலைவன் இருந்தான். அவன் அதிகம் ஜோசியம் பார்ப்பவனாக இருந்தான். அவனுடைய ஒவ்வொரு ஜோசியத்தையும் அந்த மக்கள் நம்பினார்கள். பயணம் செய்யும் போது ஊர்கள் தூர தூரமாக இருக்க வேண்டும்என்பதும் அவன் கணித்த ஜோசியத்தின் அடிப்படையில் உள்ளது தான்.

இவர்களின் பல்வேறு தவறுகளால் செழிப்பாக இருந்த இவர்களின் ஊரை அல்லாஹ்  முற்றிலும் மாற்றி விட்டான்.

أَنَّ الْمَرْأَة كَانَتْ تَمْشِي تَحْت الْأَشْجَار وَعَلَى رَأْسهَا مِكْتَل أَوْ زِنْبِيل وَهُوَ الَّذِي تُخْتَرَف فِيهِ الثِّمَار فَيَتَسَاقَط مِنْ الْأَشْجَار فِي ذَلِكَ مَا يَمْلَؤُهُ مِنْ غَيْر أَنْ يَحْتَاج إِلَى كُلْفَة وَلَا قِطَاف لِكَثْرَتِهِ وَنُضْجه وَاسْتِوَائِهِ وَكَانَ هَذَا السَّدّ بِمَأْرِبِ بَلْدَة بَيْنهَا وَبَيْن صَنْعَاء ثَلَاث مَرَاحِل وَيُعْرَف بِسَدِّ مَأْرِب وَذَكَرَ آخَرُونَ أَنَّهُ لَمْ يَكُنْ بِبَلَدِهِمْ شَيْء مِنْ الذُّبَاب وَلَا الْبَعُوض وَلَا الْبَرَاغِيث وَلَا شَيْء مِنْ الْهَوَامّ (تفسير ابن كثير

ஒரு பெண் காலியான கூடையை தலையில் சுமந்த வண்ணமாக அந்த ஊரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை நடந்து சென்றாலே போதும் எந்த ஒரு மரத்தில் இருந்தும் எதையும் பறிக்காமல் அவளின் கூடை வித விதமான பழங்களால் நிரம்பி விடும். அந்த அளவுக்கு ஊர் முழுக்க மரங்களும் அதில் கனிகளும் நிறைந்திருக்கும். அந்த ஊர் முழுக்க ஒரு கொசுவையோ ஒரு ஈயையோ பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அந்த ஊரின் தட்ப வெப்ப நிலையை அல்லாஹ் சீராக வைத்திருந்தான்.

وَذَكَر غَيْر وَاحِد مِنْهُمْ اِبْن عَبَّاس وَوَهْب بْن مُنَبِّه وَقَتَادَة وَالضَّحَّاك أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ لَمَّا أَرَادَ عُقُوبَتهمْ بِإِرْسَالِ الْعَرِم عَلَيْهِمْ بَعَثَ عَلَى السَّدّ دَابَّة مِنْ الْأَرْض يُقَال لَهَا الْجُرَذ نَقَبَتْهُ قَالَ وَهْب بْن مُنَبِّه وَقَدْ كَانُوا يَجِدُونَ فِي كُتُبهمْ أَنَّ سَبَب خَرَاب هَذَا السَّدّ هُوَ الْجُرَذ فَكَانُوا يَرْصُدُونَ عِنْده السَّنَانِير بُرْهَة مِنْ الزَّمَان فَلَمَّا جَاءَ الْقَدَر غَلَبَتْ الْفَأْر السَّنَانِير وَوَلَجَتْ إِلَى السَّدّ فَنَقَبَتْهُ فَانْهَارَ عَلَيْهِمْ (تفسير ابن كثير)

அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் மறுத்து குஃப்ர் என்ற பாவச் செயலையும் செய்த  அந்த ஊர் மக்களை தண்டிக்க நாடிய போது சபா என்ற அணைக்கட்டை அழிப்பதற்காக அல்லாஹ் எங்கிருந்தோ பல்லாயிரக்கணக்கான எலிகளை அல்லாஹ் சாட்டினான். அந்த எலிகளை ஒழிக்க அந்த மக்கள் எங்கிருந்தெல்லாமோ பூணைகளை வரவழைத்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் படைகளான எலிகளை பூணைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை இறுதியில் அணைக்கட்டு உடைந்த து ஊர் அழிந்தது.

 

பயணத்தில் கஸ்ரு செய்வது கட்டாயம் என்று ஹனஃபிகள் கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம். அல்லாஹ் தந்த சலுகையைப் புறக்கணிப்பது கூடாது

அதிவேகமாக  வாகனம் ஓட்டாதீர்கள். துன்யாவுடைய விஷயங்களில் நடுநிலையை இஸ்லாம் விரும்புகிறது

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ الْأَعْمَشُ وَلَا أَعْلَمُهُ إِلَّا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ5 وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ  وهذا يدلنا على أن أمور الآخرة لا بد فيها من منافسة ومسابقة ولا بد فيها من الجد والاجتهاد ولا بد فيها من اغتنام الفرص وعدم التساهل بخلاف أمور الدنيا فالإنسان يتأنى وقد يكون في التأني الخير الكثير بخلاف العجلة فإنه قد يترتب عليها شيء من الضرر فأمور الدنيا التأني. أنه خير للإنسان(شرح ابي داود)

நிதானமும் நடுநிலையும் நுபுவ்வத்தின் 24 பாகங்களில் ஒரு பங்காகும்.

அவசரம் என்ற மரத்தில் இருந்து கைசேதம் என்ற பழத்தைத் தான் மனிதன் பறிப்பான் எனும் சஹாபியின் கூற்று

عن سهل بن سعد قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ (ترمذي)كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ- لأن العجلة تَمْنَعُ من التثبت والنظر في العواقب وذلك من كيد الشيطان ووسوسته وقال عمرو بن العاص لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة (تحفة الاحوذي)

எந்த ஒரு காரியத்திலும் கடைசி நேரத்தில் தயாராகுவதை விட சற்று முன்கூட்டியே தயாராகுவதால் அவசரத்தை தவிர்க்கலாம். ஓய்வற்ற நேரம் வரும் முன்பு ஓய்வான நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ  أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ: اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ:حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ وَفَرَاغَك قَبْلَ شَغْلِكَ، وَغِنَاك قَبْلَ فَقْرِكَ ، وَشَبَابَك قَبْلَ هَرَمِكَ ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِك.(مصنف ابن ابي شيبة) مشكاة) باب تمنى الموت وذكره

பல நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் அதன் அகலம் சுருங்கி அதனால் வாகன விபத்துகள் நிறைய நடைபெறுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ (بخاري) باب أَفْنِيَةِ الدُّورِ - كتاب المظالم ( وَكَفُّ الْأَذَى ): أَيْ الِامْتِنَاع عَمَّا يُؤْذِي الْمَارِّينَ 

மேற்காணும்  நபிமொழியில் பார்வையை கட்டுப்படுத்துதல் என்பதும் மிக முக்கியமானது இன்று நடக்கும் பல விபத்துக்களுக்கும் பார்வை தவறுகளே காரணம். சேலையைப் பார்க்காதே சாலையைப் பார் என்றெல்லாம் சிலர் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர்

  பிறருக்கு தொல்லை தரக்கூடாது என்பதில் சாலையில் மற்றவர்களுக்கு உள்ள உரிமையை பறித்தல். வாகனங்களை தாறுமாறாக இயக்குதல்,கண்ட இடங்களில் நிறுத்துதல் சேறு இறைத்தல் ஆகியவை அடங்கும்.இதனால் பலரின் முக்கிய வேலைகள் பாதிப்படையும். 

 அடுத்தவரின் நிலத்தையோ, அல்லது அரசு நிலத்தையோ ஒரு ஜான் அபகரித்தாலும் மறுமையில் ஏழு பூமிகளை சுமக்க...

عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فِي أَرْضٍ فَدَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ لَهَا ذَلِكَ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبْ الْأَرْضَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ (بخاري) باب مَا جَاءَ فِى سَبْعِ أَرَضِينَ- بدء الخلق عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَخَذَ مِنْ الأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ (بخاري) باب إِثْمِ مَنْ ظَلَمَ شَيْئًا مِنَ الأَرْضِ-كتاب المظالم ومعنى التطويق أن يخسف الله به الأرض فتصير البقعة المغصوبة منها في عنقه يوم القيامة كالطوق (عمدة) عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ ، قَالَ : قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " إِنَّ أَعْظَمَ الْغُلُولِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ذِرَاعُ أَرْضٍ ، أَوْ قَالَ : شِبْرٌ ، يَسْرِقُهَا الرَّجُلُ وَالْجَارُ ، أَنْ يَكُونَ بَيْنَهُمَا الأَرْضُ ، فَيَسْرِقَها أَحَدُهُمَا صَاحِبَه ، فَيُطَوَّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ (مصنف ابن ابي شيبة)

ஹஜ்ஜில் ஹாஜி அறுக்கும் ஹத்ய் வேறு.  குர்பானி  என்பது வேறு. எனவே ஹாஜியின் மீது குர்பானி தனிப்பட்ட கடமை.

ஹஜ்ஜில் தரப்படும் ஆடு என்பது ஹஜ்ஜே தமத்துஃ செய்வதற்காக தரப்படும் பரிகாரமாகும். எனவே ஹாஜி முகீமாக இருப்பதாலும் வசதி உள்ளவராக இருப்பதாலும் அவர் குர்பானியை உள்ளூரில் அறுக்க ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும். அல்லது மக்காவில் வைத்து நிறைவேற்ற வேண்டும்.

الْأُضْحِيَّةُ وَاجِبَةٌ عَلَى كُلِّ حُرٍّ مُسْلِمٍ مُقِيمٍ مُوسِرٍ فِي يَوْمِ الْأَضْحَى (هداية

பதினைந்து நாட்களுக்கு மேல் மக்காவில் தங்குவதால் அவர் முகீமாக இருக்கிறார். எனவே குர்பானி அவர் மீது தனிப்பட்ட கடமையாகும்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...