ஒவ்வொரு வணக்கங்களிலும் அதைச் செய்வதற்காக எதிர் பார்த்துக் காத்திருப்பதிலும் அல்லாஹ் நன்மையை வைத்துள்ளான். குறிப்பாக சங்கையான ரமழானை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் நன்மை உண்டு.
ரமளானை எதிர்பார்த்து ஷஃபான் மாதத்தின் இறுதி நாட்களை நபி(ஸல்)அவர்கள் எண்ணிக்கொண்டேயிருப்பார்கள்
عن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَا لَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صَامَ (ابوداود) يتحفظ من شعبان أي : يتكلف في عدِّ أيام شعبان لمحافظة صوم رمضان
தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும் மிகுந்த நன்மை உள்ளது
عَنْ أَنَسِ رض أَنَّ هَذِهِ الْآيَةَ{ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنْ الْمَضَاجِعِ } نَزَلَتْ فِي انْتِظَارِ الصَّلَاةِ الَّتِي تُدْعَى الْعَتَمَةَ(العشاء (ترمذي) سورة السجدة
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ احْتُبِسَ عَنَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ عَنْ صَلَاةِ الصُّبْحِ حَتَّى كِدْنَا نَتَرَاءَى عَيْنَ الشَّمْسِ فَخَرَجَ سَرِيعًا فَثُوِّبَ بِالصَّلَاةِ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَجَوَّزَ فِي صَلَاتِهِ فَلَمَّا سَلَّمَ دَعَا بِصَوْتِهِ فَقَالَ لَنَا عَلَى مَصَافِّكُمْ كَمَا أَنْتُمْ ثُمَّ انْفَتَلَ إِلَيْنَا ثُمَّ قَالَ أَمَا إِنِّي سَأُحَدِّثُكُمْ مَا حَبَسَنِي عَنْكُمْ الْغَدَاةَ أَنِّي قُمْتُ مِنْ اللَّيْلِ فَتَوَضَّأْتُ وَصَلَّيْتُ مَا قُدِّرَ لِي فَنَعَسْتُ فِي صَلَاتِي فَاسْتَثْقَلْتُ فَإِذَا أَنَا بِرَبِّي تَبَارَكَ وَتَعَالَى فِي أَحْسَنِ صُورَةٍ ..... فَقَالَ يَا مُحَمَّدُ قُلْتُ لَبَّيْكَ رَبِّ قَالَ فِيمَ يَخْتَصِمُ الْمَلَأُ الْأَعْلَى قُلْتُ فِي الْكَفَّارَاتِ قَالَ مَا هُنَّ قُلْتُ مَشْيُ الْأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ وَالْجُلُوسُ فِي الْمَسَاجِدِ بَعْدَ الصَّلَوَاتِ وَإِسْبَاغُ الْوُضُوءِ فِي الْمَكْرُوهَاتِ قَالَ ثُمَّ فِيمَ قُلْتُ إِطْعَامُ الطَّعَامِ وَلِينُ الْكَلَامِ وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ قَالَ سَلْ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا حَقٌّ فَادْرُسُوهَا ثُمَّ تَعَلَّمُوهَا (ترمذي
ஒருநாள் நபி ஸல் அவர்களுக்கு சுப்ஹு தொழுகை சற்று தாமதமாகி விட்டது. சூரியனை நாங்கள் பார்க்கும் அளவுக்கு நேரம் கடந்த பின் வேகமாக வெளியேறினார்கள். இகாமத் சொலப்பட்டது. நபி ஸல் சுருக்கமாகத் தொழ வைத்தார்கள். சலாம் கொடுத்தவுடன் உங்கள் வரிசையில் அப்படியே அமருங்கள் என்று கூறி எங்கள் பக்கம் திரும்பி நான் ஏன் இன்று தாமதமாகி விட்டேன் தெரியுமா நேற்றிரவு நான் இரவில் எழுந்து உளூச் செய்து அல்லாஹ் நாடிய வரை தொழுதேன். அப்போது என்னையும் மீறி சிறு தூக்கம் ஏற்பட்டது. சற்று உறங்கினேன். அப்போது அல்லாஹ்வை என்னுடைய கனவில் அழகிய தோற்றத்தில் பார்த்தேன். அப்போது அல்லாஹ் என்னிடம் மனிதர்களின் எந்த அமல்களை எடுத்துச் செல்வதற்கு மலக்குகள் போட்டி போடுகிறார்கள் தெரியுமா என்று கேட்க, அதற்கு நான் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆக்கப்படும் நற்காரியங்களில் என்று கூறினேன். அவைகள் என்னென்ன என்று அல்லாஹ் கேட்க, அதற்கு நான் ஜமாஅத் தொழுகைக்காக நடந்து செல்வது. ஒரு தொழுகை முடிந்த பின்பு அடுத்த தொழுகைக்காக மஸ்ஜிதில் காத்திருப்பது. (குளிர் போன்ற) சிரமமான நேரத்திலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்றுவது என்று கூற, மீண்டும் அல்லாஹ் என்னிடம் வேறு எவற்றில் மலக்குகள் போட்டி போடுகிறார்கள் தெரியுமா என்று கேட்க, அதற்கு நான் “உணவளிப்பது, மிருதுவாகப் பேசுவது, மனிதர்கள் உறங்கும் போது இரவில் எழுந்து தொழுவது” என்று நான் கூறினேன். பின்பு அல்லாஹ் தன்னிடம் ஏதேனும் கேட்கும்படி கூற, நான் இந்த துஆவைக் கேட்டேன். யாஅல்லாஹ் நல்லதைச் செய்வதற்கும், தீமையை விடுவதற்கும், ஏழைகளை நேசிப்பதற்கும் தவ்ஃபீகை உன்னிடம் கேட்கிறேன். என்னை மன்னிப்பதையும் என் மீது இரக்கம் காட்டுவதையும் உன்னிடம் கேட்கிறேன். குழப்பங்களின் மூலம் இந்த உம்மத்தை நீ சோதிக்க நாடினால் அத்தகைய குழப்பங்களில் சிக்குவதற்கு முன்பே என்னை உன்னிடம் அழைத்துக் கொள். யாஅல்லாஹ் உன்னை நேசிப்பதையும், உன்னை நேசிப்பவர்களை நான் நேசிப்பதையும், உன்னை நேசிப்பதை நெருக்கமாக்கி வைக்கும் நற்செயலையும் உன்னிடம் கேட்கிறேன்.
பின்பு நபிஸல் அவர்கள் நான் கண்ட கனவு உண்மை.இந்த துஆவை ஓதுங்கள். இதன் கருத்தையும் அறியுங்கள் என்றார்கள். மக்களுக்கு மார்க்கத்தைப் புரிய வைப்பதற்காக எப்படி நபிகளாரிடம் ஜிப்ரயீல் அலை கேள்வி கேட்டுப் புரிய வைத்தார்களோ அதுபோல அல்லாஹ் இங்கே நபி ஸல் அவர்களிடமே கேள்வி கேட்டு, பதிலை வரவழைத்துப் புரிய வைத்துள்ளான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَمْ يَقُمْ أَوْ يُحْدِثْ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ (مسند أحمد)
தொழுகை முடிந்தும் அந்த இடத்திலேயே காத்திருப்பவருக்காக மலக்குகள் துஆ செய்கின்றனர். அவர் எழாமல் இருக்கும் வரை அல்லது உளூ முறியாமல் இருக்கும் வரை இச்சிறப்பு உண்டு.
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : صَلَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ ، فَرَجَعَ مَنْ رَجَعَ ، وَعَقَّبَ مَنْ عَقَّبَ ، فَجَاءَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يُثَوِّبَ النَّاسُ بِصَلاةِ الْعِشَاءِ ، فَقَالَ : أَبْشِرُوا أَبْشِرُوا ، هَذَا رَبُّكُمْ تَبَارَكَ وَتَعَالَى قَدْ فَتَحَ بَابًا مِنْ أَبْوَابِ السَّمَاءِ يُبَاهِيَ بِكُمُ الْمَلائِكَةَ ، يَقُولُ : انْظُرُوا إِلَى عِبَادِي قَضَوْا فَرِيضَةً ، وَهُمْ يَنْتَظِرُونَ أُخْرَى.( : مسند البزار
ஒருநாள் மஃரிப் தொழுகை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்பவர்கள் சென்று விட்டனர். மஸ்ஜிதில் தங்கியவர்கள் தங்கினர். அப்போது இஷாவுக்கு இகாமத் சொல்லப்படும் முன்பு அங்கு நபி ஸல் அங்கு வருகை தந்து நீங்கள் சுபச் செய்தி பெறுங்கள். இதோ அல்லாஹ் தஆலா வானத்தின் ஒரு வாசலை உங்களுக்காகத் திறந்துள்ளான். மலக்குகளிடம் உங்களைப் பற்றிப் பெருமையாக எனது அடியார்களைப் பாருங்கள் ஒரு ஃபர்ளை முடித்து விட்டு அடுத்த ஃபர்ளுக்காக மஸ்ஜிதில் காத்திருக்கிறார்கள் என்று கூறி நம்மைப் பெருமைப் படுத்துகிறான்.
إنه إذا كان يوم القيامة يحشر قوم وجوههم كالكوكب الدري فتقول لهم الملائكة ما كانت أعمالكم فيقولون كنا إذا سمعنا الأذان قمنا إلى الطهارة لا يشغلنا غيرها ثم تحشر طائفة وجوههم كالأقمار فيقولون بعد السؤال كنا نتوضأ قبل الوقت ثم تحشر طائفة وجوههم كالشمس فيقولون كنا نسمع الأذان في المسجد (احياء علوم الدين
மறுமை நாளில் சிலரின் முகங்கள் நட்சத்திரங்களைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் நாங்கள் பாங்கு சப்தம் கேட்டவுடன் வேறு வேலைகளில் ஈடுபடாமல் உடன் எழுந்து உளூச் செய்வோம். என்று கூறுவர். இன்னும் சிலரின் முகங்கள் சந்திரனைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்பர். அதற்கு அவர்கள் நாங்கள் தொழுகை வரும் முன்பே உளூச் செய்து தயாராக இருப்போம். பாங்கு சப்தம் கேட்டதும் உடனே மஸ்ஜிதுக்கு விரைவோம் என்று கூறுவர். இன்னும் சிலரின் முகங்கள் சூரியனைப் போன்று இருக்கும். அவர்களிடம் மலக்குகள் நீங்கள் உலகில் என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்பர். அதற்கு அவர்கள் நாங்கள் முன்பே உளூச் செய்து தயாராகி பாங்கு சொல்லும் போது மஸ்ஜிதுக்குள் இருப்போம் என்று கூறுவர்.
அல்லாஹ் மலக்குகள் முன்னிலையில் ஏன் நம்மைப் பெருமைப் படுத்த விரும்புகிறான் என்பதற்கு விளக்கம்
إن الملائكة لما رأوا روحك محلاً للصفات الذميمة من الشهوة والغضب ما قبلوك فقالوا : أتجعل فيها من يفسد فيها ويفسك الدماء وأبواك لما رأوا قبح صورتك في أول الأمر حين كنت منياً وعلقة ما قبلوك أيضاً بل أظهروا النفرة واستقذروا ذلك المني والعلقة وغسلوا ثيابهم عنه ثم كم احتالوا للإسقاط والإبطال ثم إنه تعالى لما أعطاك الصورة الحسنة فالأبوان لما رأوا تلك الصورة الحسنة قبلوك ومالوا إليك فكذا الملائكة لما رأوا في روحك الصورة الحسنة وهي معرفة الله وطاعته أحبوك فنزلوا إليك معتذرين عما قالوه أولاً (تفسير الرازي) سورة القدر
நாம் நுத்ஃபா வாக இருக்கும்போது நம்மைக் கழுவி அப்புறப்படுத்தும் பெற்றோர்கள் நம்மை அழகிய உருவில் பார்க்கும்போது கொஞ்சுகின்றனர். அதுபோல் மனிதனை முதலில் அல்லாஹ் படைக்கும்போது பாவம் செய்யும் தோற்றத்தில் கண்டு இவர்களை ஏன் படைக்கிறாய் என்று கேட்ட மலக்குகளிடம் நீங்கள் அறியாத தை நான் அறிவேன் என்று சொன்னது மட்டுமன்றி நமது இபாதத்தை மலக்குகளிடம் காட்டி பெருமைப் படுத்துகிறான்.
ரமழானை எதிர்பார்ப்பதிலும் மிகுந்த நன்மை உண்டு
كان الصحابة -رضي الله عنهم- يحرصون أشدّ الحرص على الاستعداد لشهر رمضان استعداداً حقيقيّاً؛ فيتوجّهون إلى الله بالدعاء ستّة أشهرٍ أن يُبلّغهم الله رمضان، ثمّ يدعونه ستّة أشهرٍ أخرى أن يتقبّل منهم صيامهم، وطاعاتهم، وعباداتهم، فبذلك يكون العام لديهم كأنّه كلّه شهر رمضان،[٦]
ஸஹாபாக்கள் ரமழானை எதிர்பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பே ரமழானை எதிர்பார்ப்பார்கள். பின்பு ரமழான் வந்த பின்பு அது முடிந்து ஆறு மாதங்கள் வரை அந்த ரமழானில் செய்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக துஆ செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர்களுக்கு வருடம் முழுவதும் ரமழானாகவே ஆகி விடும்.
ரமழான் வரை நமக்கு அல்லாஹ் ஆயுளை நீளமாக்கிட துஆ செய்ய வேண்டும்
عَن أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد
இரு சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில் ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார். தல்ஹா ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப் பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள் இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார் என்றார்கள்.
வருகிற ரமழானை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த ஒரு மாதத்தின் ஒவ்வொரு வினாடிகளும் நமக்குப் பொன்னானவை என விளங்கி ஒவ்வொரு அமலுக்கும் ஒரு நேரத்தை சரியான முறையில் ஒதுக்கி அமல்களில் ஈடுபட்டால் ரமழானின் பலன்களை நிறைய அடையலாம். உதாரணமாக ரமழான் என்பது துஆக்கள் அதிகம் ஏற்கப்படும் மாதம் என்பதால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் தஹஜ்ஜுதுக்குப் பிறகும் பத்து நிமிடமேனும் துஆ செய்ய வேண்டும் என்று நேரம் நிர்ணயித்தால் ரமழான் முழுக்க முப்பது மணி நேரம் துஆ செய்தவர்களாக நாம் ஆகி விடுவோம். இது மாதிரி ஒவ்வொரு அமலுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
ரமழானுக்கு பல மாதங்களுக்கு முன்பே ரமழானுக்காக சுவனம் அலங்கரிக்கப் படுகிறது
عَنْ أَبِي مَسْعُودٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهَذَا حَدِيثُ أَبِي الْخَطَّابِ - ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَاتَ يَوْمٍ وَقَدْ أَهَلَّ رَمَضَانُ ، فَقَالَ : لَوْ يَعْلَمُ الْعِبَادُ مَا رَمَضَانُ لَتَمَنَّتْ أُمَّتِي أَنْ يَكُونَ السَّنَةَ كُلَّهَا ، فَقَالَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ : يَا نَبِيَّ اللهِ ، حَدِّثْنَا ، فَقَالَ : إِنَّ الْجَنَّةَ لَتَزَيَّنُ لِرَمَضَانَ مِنْ رَأْسِ الْحَوْلِ إِلَى الْحَوْلِ ، فَإِذَا كَانَ أَوَّلُ يَوْمٍ مِنْ رَمَضَانَ هَبَّتْ رِيحٌ مِنْ تَحْتِ الْعَرْشِ ، فَصَفَقَتْ وَرَقَ الْجَنَّةِ ، فَتَنْظُرُ الْحُورُ الْعِينُ إِلَى ذَلِكَ ، فَيَقُلْنَ : يَا رَبِّ اجْعَلْ لَنَا مِنْ عِبَادِكَ فِي هَذَا الشَّهْرِ أَزْوَاجًا تُقِرُّ أَعْيُنَنَا بِهِمْ ، وَتُقِرُّ أَعْيُنَهُمْ بِنَا ، قَالَ : فَمَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا مِنْ رَمَضَانَ إِلاَّ زُوِّجَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ فِي خَيْمَةٍ مِنْ دُرَّةٍ مِمَّا نَعَتَ اللَّهُ : {حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ} [الرحمن] عَلَى كُلِّ امْرَأَةٍ سَبْعُونَ حُلَّةً ، لَيْسَ مِنْهَا حُلَّةٌ عَلَى لَوْنِ الأُخْرَى ، (ابن خزيمة
ரமளான் மாதத்தில் உம்ராவை நிறைவேற்றுவது பாக்கியமான செயல்
عن ابْن عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنْ الْأَنْصَارِ إِذَا كَانَ رَمَضَانُ فَاعْتَمِرِي فِيهِ فَإِنَّ عُمْرَةً فِيهِ تَعْدِلُ حَجَّةً (نسائ) عن ابن عباس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : من أدرك شهر رمضان بمكة من أوله إلى آخره صيامه وقيامه كتب الله له مائة ألف شهر رمضان بغيرها ، وكان له بكل يوم مغفرة وشفاعة وبكل ليلة مغفرة وشفاعة وبكل يوم حملان فرس في سبيل الله وله بكل يوم دعوة مستجابة (فضل شهر رمضان لابن شاهين)
நபி ஸல் அவர்கள் ஒரு அன்சாரிப் பெண்ணிடம் ரமழான் மாதம் வந்தால் நீ உம்ராச் செய்வாயாக ஏனெனில் ரமழானின் உம்ரா ஹஜ்ஜுக்கு சமமான நன்மையைப் பெற்றுத் தரும் என்றார்கள்
மற்றொரு ரிவாயத்தில் யார் மக்காவில் முழு ரமழானையும் பெற்றுக் கொண்டு இரவு வணக்கம், நோன்பு ஆகியவற்றில் ஈடுபடுவாரோ அவருக்கு ஒரு இலட்சம் ரமழானின் நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான் ஒவ்வொரு நாளும் அவருக்கு மன்னிப்பு மற்றும் ஷஃபாஅத்தின் நாட்களாகும். ஒவ்வொரு நாளும் அவருக்கு இறைவனின் பாதையில் சவாரி செய்த நாட்களாகும். ஒவ்வொரு நாளும் அவருக்கு துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நாட்களாகும்.
ஷஃபான் மாதம் நோன்பு வைப்பதன் சிறப்புகள்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (بخاري
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நேரங்களில் தொடர்ந்து நோன்பு வைப்பார்கள். நோன்பை விட மாட்டார்களோ என்று நாங்கள் சொல்லும் அளவுக்கு அது இருக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நேரங்களில் தொடர்ந்து நோன்பை விடுவார்கள். நோன்பு வைக்க மாட்டார்களோ என்று நாங்கள் சொல்லும் அளவுக்கு அது இருக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மாதம் முழுவதும் நோன்பு வைத்ததை நான் பார்த்ததில்லை. மற்ற மாதங்களில் அதிகமான நோன்பு வைப்பவர்களாக ஷஃபானிலேயே தவிர நான் கண்டதில்லை.
கருத்து- ரமழான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். அதற்கு அடுத்தபடியாக ஷஃபானில் மற்ற மாதங்களை விட
அதிகமான நாட்கள் நோன்பு வைப்பார்கள்.
ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள் என்ற நபிமொழிக்கு விளக்கம்
أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ (بخاري
( يصوم شعبان كله ) أي كان يصوم أكثره والعرب تطلق الكل على الأكثر .
அதிகமான நாட்கள் நோன்பு வைப்பார்கள் என்பதைத் தான் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஷஃபானில் நோன்பு வைப்பது ரமழானை கண்ணியப் படுத்தும் செயலாகும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قِيلَ : يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّوْمِ أَفْضَلُ؟ قَالَ :« صَوْمُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ ». قَالَ : فَأَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ :« صَدَقَةٌ فِى رَمَضَانَ ». (بيهقي
ரமழானுக்கு அடுத்து சிறந்த மாதம் முஹர்ரம் என நபி ஸல் கூறியிருக்க,
ஷஃபானில் அதிகம் நோன்பு வைத்தார்கள் என்பதற்கான விளக்கம்
عَنْ أَبِي هُرَيْرَةَ يَرْفَعُهُ. ، إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : سُئِلَ : أَيُّ الصَّلاَةِ أَفْضَلُ بَعْدَ الْمَكْتُوبَةِ ؟ وَأَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ ؟ فَقَالَ : أَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْمَكْتُوبَةِ الصَّلاَةُ فِي جَوْفِ اللَّيْلِ , وَأَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللهِ الْمُحَرَّمُ. (ابن خزيمة
فَإِنْ قِيلَ : فِي الْحَدِيث الْآخَر إِنَّ أَفْضَل الصَّوْم بَعْد رَمَضَان صَوْم الْمُحَرَّم فَكَيْف أَكْثَرَ مِنْهُ فِي شَعْبَان دُون الْمُحَرَّم فَالْجَوَاب لَعَلَّهُ لَمْ يَعْلَم فَضْل الْمُحَرَّم إِلَّا فِي آخِر الْحَيَاة قَبْل التَّمَكُّن مِنْ صَوْمه (حاشية السيوطي
முஹர்ரம் மாதத்தின் சிறப்பைப் பற்றி கடைசி காலத்தில் நபி ஸல் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கலாம்.முஹர்ரம் மாதம் சிறந்த மாதம் என்ற விஷயம் ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பது சிறப்பு என்ற ஹதீஸுக்கு முரணல்ல
அமல்கள் உயர்த்தப்படும் மாதம் ஷஃபான் என்பதன் விளக்கம்
عن أُسَامَة بْن زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنْ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائ
உஸாமா ரழி அவர்கள் கூறினார்கள். நபி ஸல் அவர்களிடம் ரமழானுக்கு அடுத்து மற்ற மாதங்களை விட ஷஃபானில் அதிகம் நோன்பு வைக்கிறீர்களே என்று கேட்டேன். அப்போது நபி ஸல் அவர்கள் ரஜபுக்கும் ரமழானுக்கும் இடையே உள்ள அந்த மாதம் மக்கள் பாராமுகமாக இருக்கிறார்கள். அந்த மாதம் அமல்கள் உயர்த்தப்படும் மாதமாகும் என்று கூறினார்கள்.
قِيلَ مَا مَعْنَى هَذَا مَعَ أَنَّهُ ثَبَتَ فِي الصَّحِيحَيْنِ أَنَّ اللَّهَ تَعَالَى يُرْفَع إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ قُلْت يَحْتَمِلُ أَمْرَانِ أَحَدُهُمَا أَنَّ أَعْمَالَ الْعِبَادِ تُعْرَضُ عَلَى اللَّهِ تَعَالَى كُلَّ يَوْمٍ ثُمَّ تُعْرَضُ عَلَيْهِ أَعْمَالُ الْجُمُعَةِ فِي كُلِّ اِثْنَيْنِ وَخَمِيس ثُمَّ تُعْرَضُ عَلَيْهِ أَعْمَالُ السَّنَةِ فِي شَعْبَانَ فَتُعْرَضُ عَرْضًا بَعْد عَرْضٍ وَلِكُلِّ عَرْضٍ حِكْمَة يُطْلِعُ عَلَيْهَا مَنْ يَشَاءُ مِنْ خَلْقِهِ أَوْ يَسْتَأْثِرُ بِهَا عِنْدَهُ مَعَ أَنَّهُ تَعَالَى لَا يَخْفَى عَلَيْهِ مِنْ أَعْمَالِهِمْ خَافِيَةٌ ثَانِيهِمَا أَنَّ الْمُرَادَ أَنَّهَا تُعْرَضُ فِي الْيَوْم تَفْصِيلًا ثُمَّ فِي الْجُمُعَةِ جُمْلَةً أَوْ بِالْعَكْسِ . (حاشية السيوطي
தினமும் நமது அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்படுகிறது என்றும் நபிமொழி உள்ளது ஒவ்வொரு வியாழக் கிழமையும் நமது அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்படுகிறது என்றும் நபிமொழி உள்ளது. இந்த ஹதீஸில் ஷஃபான் மாத த்தில் நமது அமல்கள் உயர்த்தப்படுகிறது என்று உள்ளது. இதற்கான விளக்கம் என்னவென்றால் தினமும் உயர்த்தப்படுவது என்பது அந்தந்த நாளின் அமல்கள் மட்டும் தான். வாரம் ஒரு முறை உயர்த்தப்படுவது என்பது அந்த வாரத்தின் அமல்கள் மட்டும் தான். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை அந்த வருடத்தின் அமல்கள் ஷஃபான் மாத த்தில் உயர்த்தப்படும்.
وَالدَّلِيلِ عَلَى أَنَّ مَعْنَى خَبَرِ أَبِي هُرَيْرَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلاَ تَصُومُوا حَتَّى رَمَضَانَ أَيْ : لاَ تُوصِلُوا شَعْبَانَ بِرَمَضَانَ فَتَصُومُوا جَمِيعَ شَعْبَانَ , ، أَوْ أَنْ يُوَافِقَ ذَلِكَ صَوْمًا كَانَ يَصُومُهُ الْمَرْءُ قَبْلَ ذَاكَ , فَيَصُومُ ذَلِكَ الصِّيَامَ بَعْدَ النِّصْفِ مِنْ شَعْبَانَ , لاَ أَنَّهُ نَهَى عَنِ الصَّوْمِ إِذَا انْتَصَفَ شَعْبَانُ نَهْيًا مُطْلَقًا. (صحيح ابن خزيمة
ஷஃபானின் நடுப்பகுதி முடிந்து விட்டால் அதற்குப் பிறகு ரமழான் வரை நோன்பு வைக்காதீர்கள் என்ற ஹதீஸ் ஷஃபான் 15-க்கு முன்பும் நோன்பு வைத்துக் கொண்டே இருப்பவர்களுக்குப் பொருந்தாது. தொடராக நோன்பு வைப்பவர்கள் அதாவது ஒருநாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைப்பவர்கள் அல்லது வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தொடர்ந்து நோன்பு வைப்பவர்கள் ஆகியோருக்கு இச்சட்டம் பொருந்தாது.
புதிதாக நஃபில் நோன்பு வைக்கத் தொடங்குவதாக இருந்தால் ஷஃபானுக்குப் பிறகு வேண்டாம் என்பதே இந்த ஹதீஸின் நோக்கமாகும். அவ்வாறு வைப்பவர் ரமழானில் தளர்ந்து விட வாய்ப்புண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக