வியாழன், 28 நவம்பர், 2024

தொழுகையில் ஷைத்தான் ஏற்படுத்தும் இடையூறுகள்

 29-11-2024    ★    ஜமாதில் அவ்வல் 26    ★   ஹிஜ்ரி :1446    ★   بسم الله الرحمن الرحيم  


وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ والمنكر(العنكبوت45)

நிச்சயமாக தொழுகை பாவங்களை பாவங்களை விட்டும் தடுக்கும் என்று அல்லாஹ் கூறியிருக்க இன்று எத்தனையோ பேர் தொழுகையாளிகளாக இருந்தும் பாவம் செய்கின்றனர். காரணம் அவர்களின் தொழுகை மன ஓர்மையுடன் கூடிய தொழுகையாக இல்லை என்பதே முக்கிய காரணம். ஆகவே தொழுகையில் மன ஓர்மையைக் கெடுக்கும் ஷைத்தானின் சாதனங்களை கண்டறிந்து அவற்றை விட்டும்  தற்காத்துக் கொள்ள வேண்டும்.                                       

எத்தனை ரக்அத் தொழுதோம் என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்.

عَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُذِّنَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ أَقْبَلَ فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ فَإِذَا سَكَتَ أَقْبَلَ فَلَا يَزَالُ بِالْمَرْءِ يَقُولُ لَهُ اذْكُرْ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى (بخاري)

தொழுகைக்கு அதான் சொல்லப் பட்டால் அந்த அதானை கேட்காமல் இருப்பதற்காக பின்புறம் காற்று வெளியாகும் அளவுக்கு ஷைத்தான் விரண்டோடுவான். முஅத்தின் பாங்கை முடித்து அமைதியானதும் மீண்டும் வருவான். இகாமத் சொல்லப் பட்டால் மறுபடியும் விரண்டோடுவான் இகாமத்தை முடித்த பின் மீண்டும் ஒவ்வொரு மனிதரிடமும் வருவான். மற்ற நேரங்களில் அவருக்கு ஞாபகத்தில் வராத விஷயங்கள் அனைத்தையும் தொழுகையில் அவருக்கு ஞாபகமூட்டி அதை நினைத்துப் பார் என  அவருக்குள் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான். இறுதியில் எத்தனை ரக்அத் தொழுதோம் என்பதை அறிய மாட்டார். மறந்து விடுவார்.                                      

தொழுகையில் இடையூறு செய்யும் ஷைத்தானுக்கு கின்ஜப் என்று பெயர்.

عَنْ أَبِي الْعَلَاءِ أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بَيْنِي وَبَيْنَ صَلَاتِي وَقِرَاءَتِي يَلْبِسُهَا عَلَيَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خَنْزَبٌ فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ وَاتْفِلْ عَلَى يَسَارِكَ ثَلَاثًا قَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللَّهُ عَنِّي (مسلم

   நபி (ஸல்) அவர்களிடம் உஸ்மான் இப்னு அபில் ஆஸ் (ரழி) என்ற ஸஹாபி வந்து அல்லாஹ்வின் தூதரே! “(நான் தொழுது கொண்டிருக்கும் போது) எனக்கும் என்  தொழுகைக்கும் எனது ஓதலுக்கும் இடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறான்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் அவன் தான் )தொழுகையில் குழப்பத்தை ஏற்படுத்தும்(  கின்ஸப் (خنزب) என்னும் ஷைத்தான் ஆவான்”........ என்று கூறினார்கள். 

உளூவில் வஸ்வாஸை ஏற்படுத்தும் ஷைத்தானுக்கு வலஹான் என்று பெயர். 

எனவே உளூவில் வஸ்வாஸை தவிர்த்துக் கொள்ளுங்கள்

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ لَهُ وَلَهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ (ابن ماجة

நபி அவர்களின் தொழுகையிலும் ஷைத்தான் இடையூறு செய்ய முயன்றான். ஆனால் முடியவில்லை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى صَلَاةً قَالَ إِنَّ الشَّيْطَانَ عَرَضَ لِي فَشَدَّ عَلَيَّ لِيَقْطَعَ الصَّلَاةَ1 عَلَيَّ فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَذَعَتُّهُ2 وَلَقَدْ هَمَمْتُ أَنْ أُوثِقَهُ إِلَى سَارِيَةٍ حَتَّى تُصْبِحُوا فَتَنْظُرُوا إِلَيْهِ فَذَكَرْتُ قَوْلَ سُلَيْمَانَ عَلَيْهِ السَّلَام رَبِّ {هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي (سورة ص35)} فَرَدَّهُ اللَّهُ خَاسِيًا (بخاري) باب مَا يَجُوزُ مِنَ الْعَمَلِ فِى الصَّلاَةِ

 என் தொழுகையில் ஷைத்தான் இடையூறு செய்ய முயன்றான். அல்லாஹ் எனக்கு ஷைத்தானை வசப்படுத்திக் கொடுத்ததால் அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து  காலையில் எல்லோரும் அவனை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் சுலைமான் அலை செய்த துஆ நினைவுக்கு வந்தது. யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யாருக்கும் தர மாட்டாயே அத்தகைய ஆட்சியை எனக்குத் தா என்று கேட்டதன் அடிப்படையில் ஷைத்தான்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்படும் நிலையை அல்லாஹ் வைத்தி ருந்தான். அதில் தலையிடக்கூடாது என்று எண்ணி அவனை அவிழ்த்து விட்டு விட்டேன். ஏமாற்றம் அடைந்தவனாக திரும்பிச் சென்றான்.   

தொழுகையில் ஷைத்தானின் ஊசலாட்டங்களை தடுப்பது எப்படி ?

1, அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணி, உளத்தூய்மையுடன் வணங்குவது

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ (5البينة)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ مَا الْإِيمَانُ قَالَ الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَبِلِقَائِهِ وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ قَالَ مَا الْإِسْلَامُ قَالَ الْإِسْلَامُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلَا تُشْرِكَ بِهِ وَتُقِيمَ الصَّلَاةَ وَتُؤَدِّيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ قَالَ مَا الْإِحْسَانُ قَالَ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ قَالَ مَتَى السَّاعَةُ قَالَ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنْ السَّائِلِ وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتْ الْأَمَةُ رَبَّهَا وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الْإِبِلِ الْبُهْمُ فِي الْبُنْيَانِ فِي خَمْسٍ لَا يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ ثُمَّ تَلَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ{إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ}الْآيَةَ ثُمَّ أَدْبَرَ فَقَالَ رُدُّوهُ فَلَمْ يَرَوْا شَيْئًا فَقَالَ هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ قَالَ أَبُو عَبْد اللَّهِ جَعَلَ ذَلِك كُلَّهُ مِنْ الْإِيمَانِ (بخاري)

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து, ‘ஈமான் என்றால் என்ன?‘ என்று கேட்டதற்கு,‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும்,

மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள். அடுத்து,‘இஸ்லாம் என்றால் என்ன?‘ என்று கேட்டதற்கு அவர்கள் கூறினார்கள்.‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்” என்று கூறினார்கள். அடுத்து,‘இஹ்ஸான் என்றால் என்ன?‘ என்று அவர் கேட்டதற்கு அவர்கள் கூறினார்கள்:‘(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்’ அடுத்து,‘மறுமை நாள் எப்போது?‘ என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:‘அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்;  மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல்.ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்” என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். ‘அவரை அழைத்து வாருங்கள்” என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, ‘இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” 

முகஸ்துதிக்காக தொழுபவர்களிடம் உளத்தூய்மை இருக்காது.

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6)عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنَّ فِي جَهَنَّم لَوَادِيًا تَسْتَعِيذ جَهَنَّم مِنْ ذَلِكَ الْوَادِي فِي كُلّ يَوْم أَرْبَعمِائَةِ مَرَّة أُعِدَّ ذَلِكَ الْوَادِي لِلْمُرَائِينَ مِنْ أُمَّة مُحَمَّد لِحَامِلِ كِتَاب اللَّه وَلِلْمُصَّدِّقِ3 فِي غَيْر ذَات اللَّه وَلِلْحَاجِّ إِلَى بَيْت اللَّه وَلِلْخَارِجِ فِي سَبِيل اللَّه (تفسير ابن كثير)(طبراني)

நரகத்தில் ஒரு பகுதி உள்ளது. அதை விட்டும் பாதுகாக்கும்படி ஜஹன்னம் ஒவ்வொரு நாளும் 400 தடவை பாதுகாப்புத் தேடும். அது இந்த உம்மத்தில் முகஸ்துதிக்காக  செயல்படுபவருக்கென்றே  அது தயார்செய்யப்பட்டுள்ளது. இறை வேதத்தை சுமந்தவர்களிலும் அல்லாஹ்வுக்காக  அல்லாமல் வேறுநோக்கத்திற்காக தர்மம் செய்தவருக்காக முகஸ்துதிக்காக ஹஜ் செய்தவருக்காக முகஸ்துதிக்காக போருக்குச் சென்றவருக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது.                         

முகஸ்துதிக்காக தொழுபவர்களைப் பற்றி  இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியது:

     அல்லாமா இப்னுல் கைய்யிம்  ரஹ் அவர்கள்  கூறியுள்ளார்கள். தொழுகையாளிகள் ஐந்து வகையினர். 1.தொழுகையில் அநியாயக்காரர்கள் இவர்கள் விட்டு விட்டு தொழுவார்கள். அல்லது ஜும்ஆ ஈத் ஆகிய முக்கிய தினங்களில் மட்டுமே தொழுவார்கள். தொழுகை தவறியதற்காக கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு. 2.இவர்கள் தவறாமல் தொழுபவர்கள். பாங்கு சொன்னவுடன் மஸ்ஜிதுக்கு வருபவர்கள். எனினும் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை சிந்தனைகள் வெளியே இருக்கும். அதை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். இவர்களும் மிகக் கடுமையாக அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள். 3. இவர்களும்  தவறாமல் தொழுபவர்கள் தான். இவர்களுக்கு தொழுகையில் வேறு சிந்தனைகள் சில நேரம் வரும். எனினும் அதை கட்டுப்படுத்த முடிந்த வரை முயற்சிப்பார்கள். இவர்களுக்கு தொழுகையின் நன்மைகள் கிடைக்காவிட்டாலும் இவர்களின் சிறுபாவங்கள் மன்னிக்கப்படலாம். 4.இவர்களும் தொழுகையாளிகள் தான். ஆனால் முழுக்க முழுக்க தொழுகையில் வெளி சிந்தனைகள் இன்றி கவனமாக தொழுவார்கள். இவர்கள் தான் தொழுகைக்கான நன்மைகள் வழங்கப்படுபவர்கள்.  5.இவர்கள் இறைநேசர்கள் இவர்கள் தொழ ஆரம்பித்தால் அல்லாஹ்வின் அன்பில் முற்றிலுமாக மூழ்கி அல்லாஹ் தன் முன் இருப்பது போன்று தொழுவார்கள் இவர்களே  மற்ற அனைவரையும் விட மேலானவர்கள்- நூல் வாபிலுஸ் ஸய்யிப்       

தொழுகையில் தேவையில்லாத செய்ல்களில் ஈடுபடுவது கூடாது.

رَأَى سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ رَجُلاً وَهُوَ يَعْبَثُ بِلِحْيَتِهِ فِي الصَّلاَة ، فَقَالَ : لَوْ خَشَعَ قَلْبُ هَذَا لَخَشَعَتْ جَوَارِحُهُ.

  ஒருமுறை ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவர் தொழுகையில் தனது தாடியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள் இவருடைய உள்ளம் ஒர்மைப்பட்டிருந்தால் இவரின் உறுப்புகளும் ஒர்மை அடைந்திருக்கும் என்று கூறினார்கள். (கன்ஜுல்உம்மால்)

உள்ளச்சமும், மனஒர்மையும் இல்லாத ஒருவரின் தொழுகை பெயரளவில் தொழுகையாக இருக்குமே  தவிர இறைவன் கூறும் தொழுகையாக ஆகாது. 

وَرَوَى مُحَمَّدُ بْنُ نَصْرٍ الْمَرْوَزِيِّ فِي كِتَابِ تَعْظِيمِ قَدْرِ الصَّلَاةِ فِي حَدِيثٍ مُرْسَلٍ { لَا يُقْبَلُ مِمَّنْ عَمِلَ عَمَلًا حَتَّى يَشْهَدَ قَلْبُهُ مَعَ بَدَنِهِ }

  (طرح التثريب)

உடலும், உள்ளமும் ஓர்மைப்படாத ஒருவரின் தொழுகையை அல்லாஹ் அறவே கண்டு கொள்ள மாட்டான்.

இமாம் ஓதும் கிராஅத்தை செவி சாய்த்து கேட்பதாலும் கவனம் சிதறாது.

قال الله تعالي وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ(204الاعراف) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا (ابوداود)

எப்போதாவது ஒருமுறை கவனம் சிதறுவது இயல்பு. அதுவும் நல்ல விஷயங்களுக்காக...

عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلَاةِ تِبْرًا4 عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري) وَقَالَ عُمَرُ رضى الله عنه إِنِّى لأُجَهِّزُ جَيْشِى وَأَنَا فِى الصَّلاَةِ (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ-كتاب العمل في الصلاة

அசர் தொழுது முடித்து சலாம் கொடுத்தவுடன் வேகமாக நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களில் ஒருவரின் வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். பிறகு திரும்பி வந்தார்கள், அவர்களின் இந்த விரைவுக்கு காரணம் தெரியாமல் தோழர்கள் விழித்த போது நான் எங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியை உரியவருக்குக் கொடுத்த எண்ணியிருந்தேன் அது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அது மாலை வரை அல்லது இரவு வரை என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை அதனால் அதை உரியவர்களுக்குப் பங்கிட்டுத் தரும்படி என் வீட்டாரிடம் சொல்லி விட்டு வந்தேன் என்றார்கள்.              

இஷாவில் நபி ஸல் என்ன சூரா ஓதினார்கள் என அபூஹுரைரா நினைவில் வைத்திருந்தார்கள். ஆனால் இன்னொருவருக்கு நினைவில் இல்லை.

عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ النَّاسُ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ فَلَقِيتُ رَجُلًا فَقُلْتُ بِمَا قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَارِحَةَ فِي الْعَتَمَةِ فَقَالَ لَا أَدْرِي فَقُلْتُ لَمْ تَشْهَدْهَا قَالَ بَلَى قُلْتُ لَكِنْ أَنَا أَدْرِي قَرَأَ سُورَةَ كَذَا وَكَذَا (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ

தொழுகையில் கவனம் சிதறாமல் இருப்பதற்காக தடுக்கப்பட்ட சில விஷயங்கள்.

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وُضِعَ عَشَاءُ5 أَحَدِكُمْ وَأُقِيمَتْ الصَّلَاةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ وَلَا يَعْجَلَنَّ حَتَّى يَفْرُغَ مِنْهُ (مسلم) بَاب كَرَاهَةِ الصَّلَاةِ بِحَضْرَةِ الطَّعَامِ الَّذِي يُرِيدُ أَكْلَهُ فِي الْحَالِ وَكَرَاهَةِ الصَّلَاةِ مَعَ مُدَافَعَةِ الْأَخْبَثَيْنِ- كتاب المساجد

இகாமத் சொல்லப்பட்டு விட்டாலும் இரவு உணவு தயாராக இருக்கும் நிலையில் நல்ல பசியும் இருந்தால் முதலில் அஷாவை அதாவது உணவை முடித்து விட்டு பிறகு இஷா தொழுங்கள். காரணம் இதே பசியுடன் தொழுதால் இஷா தொழுகை அனைத்தும் உணவு சிந்தனையாக மாறி விடும்.

 عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا نَعَسَ6 أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لَا يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ(بخاري) وَقَالَ أَبُو الدَّرْدَاءِ مِنْ فِقْهِ الْمَرْءِ إِقْبَالُهُ عَلَى حَاجَتِهِ حَتَّى يُقْبِلَ عَلَى صَلاَتِهِ وَقَلْبُهُ فَارِغٌ (بخاري)

உங்களில் ஒருவர் இரவுத் தொழுகை தொழுது கொண்டிருக்கும்போது தூக்கம் வந்தால் சற்று தூங்கிக் கொள்ளட்டும். ஏனெனில் தூக்க க் கலக்கத்தில்  உங்களில் ஒருவர் தொழுதால் அவர் தனக்காக இஸ்திஃபார் செய்கிறாரா அல்லது திட்டுகிறாரா என்பது அவருக்குத் தெரியாது.                                                                          

உருவப் படங்கள் உள்ள இடத்தில் தொழுவதால் கவனம் சிதறும்.

عَنْ أَنَسٍ رضي الله عنه  قال كَانَ قِرَامٌ لِعَائِشَةَ رضي الله عنها سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمِيطِي عَنَّا قِرَامَكِ7 هَذَا فَإِنَّهُ لَا تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلَاتِي(بخاري

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஒரு வண்ண மயமான துணி இருந்தது. அதன் மூலம் தன் வீட்டின் ஒரு பகுதியை மறைத்திருந்தார்கள். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள்  நம்மை விட்டும் இந்த த் துணியை நீக்கு.. ஏனெனில் அதிலுள்ள வண்ணங்கள் என்னுடைய தொழுகையில் இடையூறு செய்கின்றன என்றார்கள்.                                 

வண்ண மயமான ஆடையை அணிந்து தொழுததால் கவனம் சிதறியது என்பதற்காக அதை திருப்பிக் கொடுத்த நபி ஸல்.

عَنْ عَائِشَةَ رض قالت أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ8 لَهَا أَعْلَامٌ فَنَظَرَ إِلَى أَعْلَامِهَا نَظْرَةً فَلَمَّا انْصَرَفَ قَالَ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ9 أَبِي جَهْمٍ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلَاتِيوفي رواية كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا وَأَنَا فِي الصَّلَاةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِي(بخاري وجه تخصيص أبي جهم بإرسال الخميصة إليه أنه هو الذي أهداها له {صلى الله عليه وسلم} ، فلذلك ردها عليه (مرقاة

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். நபி ஸல் அவர்கள்  வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு ஆடையை அணிந்து தொழுதார்கள். அப்போது அதன் வேலைப்பாடுகளை சற்று கவனித்தார்கள். தொழுகை முடிந்து திரும்பியவுடன் இந்த ஆடையை அபூஜஹ்மிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக வண்ணம் இல்லாத ஆடையை வாங்கி வாருங்கள் என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் இந்த வண்ணங்களின் பால் என் கவனம் செல்கிறது அது என்னுடைய தொழுகையில் இடையூறு செய்கின்றது என்றார்கள்.

தொழுபவர்களின் கவனத்தை திசை திருப்பக் கூடாது என்பதில் நபி ஸல் அவர்களின் பேணுதல்.

عن أَنَس رضي الله عنه قَالَ بَيْنَمَا الْمُسْلِمُونَ فِي صَلَاةِ الْفَجْرِ لَمْ يَفْجَأْهُمْ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ صُفُوفٌ فَتَبَسَّمَ يَضْحَكُ وَنَكَصَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ لَهُ الصَّفَّ فَظَنَّ أَنَّهُ يُرِيدُ الْخُرُوجَ وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلَاتِهِمْ فَأَشَارَ إِلَيْهِمْ أَتِمُّوا صَلَاتَكُمْ فَأَرْخَى السِّتْرَ وَتُوُفِّيَ مِنْ آخِرِ ذَلِكَ الْيَوْمِ (بخاري)باب هَلْ يَلْتَفِتُ لأَمْرٍ يَنْزِلُ بِهِ-كتاب الاذان

 நபி ஸல் அவர்களின் கடைசி நேரத்தில் அவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் ஃபஜ்ருத்தொழுகை ஜமாஅத் நடைபெற்றது. திரையை விலக்கி தோழர்களைப் பார்த்தார்கள். நபி ஸல் அவர்களைக் கண்ட சந்தோஷத்தில் தோழர்களின் சிந்தனைகள் தடுமாறுவதைக் கண்ட நபி ஸல் தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள் என்று கூறி திரையை மூடிக் கொண்டார்கள். அது தான் கடைசியாக தோழர்களை நபி ஸல் அவர்கள் பார்த்த பார்வையாகும் அன்றே வஃபாத்தாகி விட்டார்கள்.             

தொழுகையில் ஏற்படும் மறதிக்கான பரிகாரங்கள்

இந்த உம்மத்துக்கு கற்றுத் தருவதற்காக நபி ஸல் அவர்களின் தொழுகையில் சில தடவைகள் மறதி ஏற்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ اثْنَتَيْنِ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقَصُرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَدَقَ ذُو الْيَدَيْنِ فَقَالَ النَّاسُ نَعَمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ (بخاري

நபி ஸல் அவர்கள் ஒருமுறை நான்கு ரக்அத் உள்ள தொழுகையில் இரண்டு ரக்அத் மட்டும் தொழுது விட்டு திரும்பினார்கள். அப்போது துல்யதைன் என்ற பெயர் கொண்ட நபித்தோழர் வந்து நபி ஸல் அவர்களிடம் தொழுகை குறைக்கப் பட்டு விட்டதா அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா என்று கேட்டார். இவர் சொல்வது உண்மையா என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று நபித்தோழர்கள் கூறினார்கள். உடனே நபி ஸல் அவர்கள் மீதமுள்ள இரண்டு ரக்அத்துகளை மட்டும் தொழுது  கடைசியில் ஸலாம் கொடுத்து பிறகு மீண்டும் ஸஜ்தா ஸஹ்வு செய்தார்கள். அந்த ஸஜ்தா தொழுகையின் சஜ்தா போன்றோ அல்லது சற்று நீளமாகவோ இருந்தது.                                                                      

மேற்காணும் தவறு போன்று நமக்கு ஏற்பட்டால் ஸலாம் கொடுத்த பின்பு எதுவும் பேசாமல் நெஞ்சைத் திருப்பாமல் இருக்கும் வரை இது போன்று விடுபட்ட ரக்அத்துகளை மட்டும் தொழுது ஸஜ்தா ஸஹ்வு செய்யலாம். ஆனால் சில வார்த்தைகள் பேசி விட்டால் மீண்டும் தொழு வேண்டும். அப்படியானால் மேற்படி ஹதீஸின் விளக்கம் என்ன என்பதற்கு பதில் பின்வருமாறு-

وحديث ذي اليدين منسوخ بحديث مسلم إن صلاتنا هذه لا يصلح فيها شيء من كلام الناس (الدر المختار

மேற்படி ஹதீஸின் சட்டம் மற்றொரு ஹதீஸின் மூலம் மன்ஸூஹ் அதாவது மாற்றப்பட்டதாகும்.   

عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ قَالَ بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ عَطَسَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ فَرَمَانِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَا ثُكْلَ أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَيَّ فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبِأَبِي هُوَ وَأُمِّي مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِي وَلَا ضَرَبَنِي وَلَا شَتَمَنِي قَالَ إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ (مسلم

தொழுகையில் ஏற்படும் எல்லா மறதிகளுக்கும்  ஸஜ்தா ஸஹ்வு அவசியமில்லை.

والسهو يلزم إذا راد في صلاته فعلا من جنسها ليس منها أو ترك فعلا مسنونا أو ترك قراءة فاتحة الكتاب أو القنوت أو التشهد أو تكبيرات العيدين أو جهز الإمام فيما يخافت أو خافت فيما يجهر  (مختصر القدوري)

ومن سها عن القعدة الأولى ثم تذكر وهو إلى حال القعود أقرب عاد فجلس وتشهد وإن كان إلى حال القيام أقرب لم يعد ويسجد للسهو ومن سها عن القعدة الأخيرة فقام إلى الخامسة رجع إلى القعدة ما لم يسجد وألغى الخامسة ويسجد للسهو وإن قيد الخامسة بسجدة بطل فرضه وتحولت صلاته نفلا وكان عليه أن يضم إليها ركعة سادسة وإن قعد في الرابعة قدر التشهد ثم قام ولم يسلم يظنها القعدة الأولى عاد إلى القعود ما لم يسجد في الخامسة ويسلم وإن قيد الخامسة بسجدة ضم إليها ركعة أخرى وقد تمت صلاته والركعتان له نافله وسجد للسهو  ومن شك في صلاته فلم يدر أثلاثا صلى أم أربعا وكان ذلك أول ما عرض له استأنف الصلاة فإن كان الشك يعرض له كثيرا بنى على غالب ظنه إن كان له ظن فإن لم يكن له ظن بنى على اليقين ( القدوري

சில குறிப்பிட்ட தவறுகளுக்கு மட்டும் தான் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும். மறதி என்பது தொழுகையில் பல்வேறு வகைகளில் ஏற்படலாம்.

தொழுகை சார்ந்த ஏதேனும் ஒரு அமலை அதிகப்படுத்துவதாலும் தவறு ஏற்படும். அதிகப்படுத்துதல் என்பது சொல்லாலும் இருக்கலாம். செயலாலும் இருக்கலாம்.செயலால் கூடுதல் என்பது ஸஜ்தா, ருகூஉ போன்றதை அதிகப்படியாக செய்வதாகும். சொல்லால் கூடுதல் என்பது கிராஅத், திக்ரு போன்றவற்றை அதற்குரிய இடத்தை அன்றி வேறு இடத்தில் மாற்றி ஓதுவதாகும்.

    தொழுகையில் வாஜிபான காரியங்களை மறதியாக விடுவதால் ஸஜ்தா ஸஹ்வு அவசியமாகும். உதாரணமாக நான்கு அல்லது மூன்று ரக்அத் உள்ள தொழுகையில் நடு அத்தஹிய்யாத்துக்கு அமருவது வாஜிப். இதை விட்டு விட்டு மூன்றாம் ரக்அத்திற்கு எழுந்து விட்டால் அதற்காக  ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும். ஒருவேளை அவனுக்கு விடுபட்ட வாஜிபான காரியம் தப்பிய நிலைக்கு நெருக்கமான சமயத்தில் ஞாபகம் வந்து விட்டால் அந்த (தப்பிய) நிலையை அவன் பெற்று கொள்ள வேண்டும். உதாரணமாக நடு அத்தஹிய்யாத் அமருவதை விட்டு விட்டு எழ ஆரம்பிக்கும்போது பாதி தூரம் கூட எழாத நிலையில் ஞாபகம் வந்து விட்டால் உடனே உட்கார்ந்து கொள்ளலாம். அதற்கு ஸஜ்தா ஸஹ்வு தேவையில்லை. இவ்வாறு வாஜிபை விட்டாலும் வாஜிபில் கூடுதல் குறைவு செய்தாலும் இவ்விரண்டு நிலைகளிலும் ஸஜ்தா ஸஹ்வு செய்வது வாஜிப் (கட்டாயம்) ஆகும்.

عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ الْإِمَامُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنْ ذَكَرَ قَبْلَ أَنْ يَسْتَوِيَ قَائِمًا فَلْيَجْلِسْ فَإِنْ اسْتَوَى قَائِمًا فَلَا يَجْلِسْ وَيَسْجُدْ سَجْدَتَيْ السَّهْوِ (ابوداود

நடுஅத்தஹிய்யாத்தை விட்டு விட்டு மறதியாக ஒருவர் எழுந்து விட்டால் நன்றாக எழுந்து நிற்பதற்கு முன் ஞாபகம் வந்தால் உடனே அமரட்டும். நன்கு எழுந்து விட்டால் அவர் மீண்டும் அமருவது கூடாது மாறாக தொடர்ந்து தொழுது இறுதியில் சஜ்தா ஸஹ்வு செய்யட்டும் 

 சந்தேகம் வந்தால்

  عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحْ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ....  (مسلم

யாருக்கேனும் தொழுகையில் எத்தனை ரக்அத் தொழுதோம் என்பதில் சந்தேகம் வந்தால் அதாவது மூன்றாவது ரக்அத்தா? அல்லது நான்காவது ரக்அத்தா? என்ற சந்தேகம் வந்தால் சந்தேகத்தை விட்டுவிட்டு உறுதியானதை எடுத்துக் கொள்ளவும் அதாவது மூன்று என்று முடிவு செய்து தொழுது விட்டு கடைசியில் ஸஜ்தா ஸஹ்வு செய்து கொள்ளவும்.

வியாழன், 21 நவம்பர், 2024

மறதியின் வகைகளும் மறதி நீங்குவதற்கான வழி முறைகளும்

 


22-11-2024

ஜமாதுல் ஊலா- 19

 

بسم الله الرحمن الرحيم  

மறதியின் வகைகளும் 

மறதி நீங்குவதற்கான வழி முறைகளும்  

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا (البقرة)

மனிதனிடம் உள்ள பலவீனங்களில் ஒன்று மறதி. இந்த மறதியைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றியும் எந்தெந்த காரணங்களால்  அதிகமான மறதி ஏற்படுகிறது என்பதைப் பற்றியும் அத்தகைய மறதி  நீங்குவதற்கு இஸ்லாம் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் காண்போம்

பல விஷயங்களில் மறதிக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு

عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ (ابن ماجة) 

عَنْ أَبِى هُرَيْرَةَ  رضى الله عنه  قَالَ قَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم  مَنْ أَكَلَ نَاسِيًا وَهْوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ (بخاري)

عَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « مَنْ نَسِىَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا ، لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ »(بخاري)

யார் தொழுகையை முற்றிலுமாக மறந்த நிலையில் ஏதேனும் வேலையில் ஈடுபட்டாரோ அவர் ஞாபகம் வந்தவுடன் தொழ வேண்டும்

இயல்பாக ஏற்படும் மறதிக்கு தண்டனை கிடையாது என்றால் பின்வரும் வசனத்தில் இறைவா நாங்கள் மறந்து செய்த தவறுக்காக எங்களை தண்டித்து விடாதே என்று அல்லாஹ் கற்றுக் கொடுப்பதற்கு என்ன காரணம்

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا (البقرة) قال الكلبي : كان بنو إسرائيل إذا نسوا شيئاً مما أمروا به أو أخطؤوا عجلت لهم العقوبة ، فحرم عليهم شيء من مطعم أو مشرب على حسب ذلك الذنب ، فأمر الله المؤمنين أن يسألوه ترك مؤاخذتهم بذلك وقد قال رسول الله صلى الله عليه وسلم "رفع عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه".(تفسير الخازن)- 

பனீ இஸ்ராயீல் சமூகத்தார் ஏதேனும் மறதியாக பாவம் செய்து விட்டாலும் அதற்காக தண்டிக்கப்பட்டார்கள் அந்தப் பாவம் அளவுக்கு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவுகள் நிறுத்தப்படும். அதுபோன்று எங்களின் நிலையை ஆக்கி விடாதே என்பது இந்த வசனத்தின் கருத்தாகும். இந்த உம்மத்தைப் பொறுத்த வரை மறதியும் நிர்பந்தமும் பெரும்பாலும் மன்னிக்கப்படும்.

மறதி பல வகை  1, அல்லாஹ்வே ஏற்படுத்தும் மறதி

அது இந்த உம்மத்தின் நன்மைக்காக இருக்கலாம். லைலத்துல் கத்ரு எது என்பதை தெரியப்படுத்தி பின்பு அல்லாஹ்வே மறக்கடித்தது போல. அல்லது முன்பிருந்த சட்டத்தை விட சிறந்த சட்டத்தை கொண்டு வருவதற்காக... அல்லது தமது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக

مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا ألَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (106) أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ (البقرة107) 

- مِثْل قَوْله "الشَّيْخ وَالشَّيْخَة إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّة " وَقَوْله " لَوْ كَانَ لِابْنِ آدَم وَادِيَانِ مِنْ ذَهَب لَابْتَغَى لَهُمَا ثَالِثًا (ت-ابن كثير

கிழவனும் கிழவியும் வபிச்சாரம் செய்தால் அவ்விருவரையும் கல்லால் எரிந்து கொள்ளுங்கள் என்ற மேற்படி குர்ஆன் வசனம் இறக்கப்பட்டு பின்பு அல்லாஹ்வே அதை மாற்றி விட்டான். அவற்றில் சில வசனங்களை அல்லாஹ்வே மறக்கடித்து விட்டான். அல்லாஹ் எதற்காக அவன் இறக்கிய வசனத்தை அவனே மாற்றுகிறான் என்பதற்கு 107 வது வசனத்தில் பதில் உள்ளது. அதாவது அவனுடைய அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. அவன் செய்யும் ஆற்றல் உடையவன்.                        

عَنْ سَالِم عَنْ أَبِيهِ قَالَ : قَرَأَ رَجُلَانِ سُورَة أَقْرَأهُمَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَا يَقْرَآنِ بِهَا فَقَامَا ذَات لَيْلَة يُصَلِّيَانِ فَلَمْ يَقْدِرَا مِنْهَا عَلَى حَرْف فَأَصْبَحَا غَادِيَيْنِ عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَا ذَلِكَ لَهُ فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " إِنَّهَا مِمَّا نُسِخَ وَأُنْسِيَ فَالْهُوا عَنْهَا "(تفسير ابن كثير)

இரு நபித் தோழர்களுக்கு நபி ஸல் அவர்கள் சில சூராக்களை கற்றுத் தந்தார்கள் பின்பு அந்த சூராக்களை அவ்விருவரும் ஒரு தொழுகையில் ஓத முயன்றபோது அதில் ஒரு எழுத்தைக் கூட ஓத முயியவில்லை. நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அதை அல்லாஹ்வே மறக்கடித்து விட்டான் விட்டு விடுங்கள் என்றார்கள்                                    

2. மனிதர்களின் நற்செயல்களை கெடுப்பதற்காக ஷைத்தான் ஏற்படுத்தும் மறதி 

நபி மூஸா அலை அவர்களின் சம்பவம். கல்வி கற்பதற்கான பயனத்தில் இரு கடல்கள் சங்கமிக்கும் இடம் வந்தால் என்னிடம் சொல் என்று தன்னோடு வந்த இளைஞரிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள். அவ்வாறு இரு கடல்கள் சங்கமிக்கும் இடம் வந்து அவர்கள் வைத்திருந்த மீனுக்கு உயிர் வந்து அது நீருக்குள் பாய்ந் தைக் கண்டும் அந்த இளைஞர் அதை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எழுப்பி சொல்ல மறந்து விட்டார். அதனால் அதைக் கடந்து நீண்ட தூரம் சென்று விட்டார்கள். பிறகு மூஸா அலைஹிஸ்ஸலாம் எழுந்து கேட்ட பின்பு  அவர் கூறினார், அவ்விருவரும் வந்த வழியே திரும்பி வந்த போது அந்த மீன் தண்ணீருக்குள்  விழுந்த இடத்தில் ஒரு சுரங்கம் போன்று தண்ணீர் விலகி காட்சியளித்தது........                  

قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا (63)

தொழுகை என்ற நற்செயலைக் கெடுப்பதற்காக  ஷைத்தான் ஏற்படுத்தும் மறதி

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ الْأَذَانَ فَإِذَا قُضِيَ الْأَذَانُ أَقْبَلَ فَإِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ فَإِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ اذْكُرْ كَذَا وَكَذَا مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى فَإِذَا لَمْ يَدْرِ أَحَدُكُمْ كَمْ صَلَّى ثَلَاثًا أَوْ أَرْبَعًا فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ .(بخاري) باب إِذَا لَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلاَثًا أَوْ أَرْبَعًا- كتاب السهو

3. பாவங்களால் ஏற்படும் மறதி. 

உதாரணமாக ஒருவர் குர்ஆனைக் கற்று அதை அடிக்கடி ஓதா விட்டால் அல்லாஹ்வே அதை மறக்கடிப்பான்

عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ (بخاري) عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ الْإِبِلِ فِي عُقُلِهَا (بخاري) ) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ .- فضائل القرآن                                         

ஒட்டகத்தை அவிழ்த்து விடப்பட்டால் பிடிக்க முடியாதது போன்று குர்ஆனை ஓதி மறந்து விட்டால் எளிதில் அதை மீட்க முடியாது

هذا ذم، وسببه ما فيه من الإشعار بعدم الاعتناء بالقرآن، إذ لا يقع النسيان إلا بكثرة التغافل وترك التعاهد، فإذا قال الإنسان نسيت آية كذا وكذا فقد شهد على نفسه بالتفريط، فيكون متعلق الذم ترك الاستنكار والتعاهد لأنه الذي يورث النسيان، قاله القرطبي،   

இன்றைக்கும் பலர் குர்ஆனை சிறு வயதில் கற்றிருப்பார்கள். பிறகு பல்வேறு அலுவல்கள் காரணமாக அதை முற்றிலுமாக மறந்திருப்பார்கள். அவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்            

4. இயல்பாக ஏற்படும் மறதி 

عَنْ سَعِيد بْن جُبَيْر عَنْ اِبْن عَبَّاس قَالَ : إِنَّمَا سُمِّيَ الْإِنْسَان لِأَنَّهُ عُهِدَ إِلَيْهِ فَنَسِيَ (تفسير ابن كثير)

இன்ஸான் என்ற வார்த்தையே நிஸ்யான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது- தஃப்ஸீர் இப்னு கஸீர் 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمُ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ قَالُوا وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ إِنَّ هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ فَقَالَ اللَّهُ لَهُ وَيَدَاهُ مَقْبُوضَتَانِ اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ فَقَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ رَجُلٌ أَضْوَؤُهُمْ أَوْ مِنْ أَضْوَئِهِمْ قَالَ يَا رَبِّ مَنْ هَذَا قَالَ هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً قَالَ يَا رَبِّ زِدْهُ فِي عُمْرِهِ قَالَ ذَاكَ الَّذِي كَتَبْتُ لَهُ قَالَ أَيْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً قَالَ أَنْتَ وَذَاكَ قَالَ ثُمَّ أُسْكِنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا فَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ قَالَ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ آدَمُ قَدْ عَجَّلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ قَالَ بَلَى وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكِ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ فَمِنْ يَوْمِئِذٍ أُمِرَ بِالْكِتَابِ وَالشُّهُودِ (ترمذي) باب- السلام عليكم تحية ادم وذريته - كِتَاب تَفْسِيرِ الْقُرْآنِ

 விளக்கம்- அல்லாஹ் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து ரூஹை அவர்களுக்குள் ஊதினான்.  ரூஹ் மூக்குப் பகுதியை அடைந்தவுடன் தும்மினார்கள். அப்போது அல்ஹம்து லில்லாஹ் சொல்லும்படி அல்லாஹ்விடமிருந்து சொல்லித் தரப்பட்டது. நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்ஹம்து லில்லாஹ் சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வே  யர்ஹமுகல்லாஹ் சொன்னான். பிறகு உடல் முழுவதும் ரூஹ் ஊதப்பட்டவுடன் அல்லாஹ் முதன் முதலாக நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி அதோ அங்கே மலக்குகள் இருப்பார்கள். அவர்களுக்கு ஸலாம் சொல்லுவீராக என்று ஏவ, அவ்வாறே நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸலாம் சொன்னார்கள். அப்போது மலக்குகள் வஅலைகஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் என பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ் இது தான் இனி உமது சந்ததிகள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சொல்ல வேண்டிய வாழ்த்துச் செய்தியாகும் என்றான்.                              

அல்லாஹ் பிறகு தன் இரு கைகளையும் காட்டி இரண்டில் ஒன்றைத் தொடும்படி கூறினான். ரஹ்மானின் இரு கரங்களுமே பரக்கத்தானது தான். எனினும் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் வலது கையைத் தேர்ந்தெடுத்தார்கள். அக்கையை அல்லாஹ் விரித்த போது அத்தனை சந்ததிகளும் அதில் இருந்தனர். நாம் உட்பட.. மற்றொரு அறிவிப்பில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகைத் தடவி அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரையும் அல்லாஹ் வெளியாக்கிக் காட்டினான் என்றும் உள்ளது. அதில் ஒருவரின் பிரகாசம் அதிகம் காணப்பட்டது. யார் இவர் என கேட்ட போது இவர் உமது சந்ததிகளில் தோன்றப் போகும் தாவூத் அலைஹிஸ்ஸலாம் என்று அல்லாஹ் கூற, அவரின் வயது என்ன என்று கேட்க, நாற்பது என்று அல்லாஹ் சொன்னான். தன்னுடைய வாழ்நாளில் இருந்து 60 ஐ அவருக்குத் தந்து அதை 100 ஆக பூர்த்தியாக்க அல்லாஹ்விடம் கோரிய போது அல்லாஹ் அதை ஏற்றான். 

பிறகு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வந்தார்கள். வாழ்ந்தார்கள். சரியாக 1000 வயதிற்கு 60 வயது மிச்சம் இருக்கும்போது மலக்குல் மவ்த் வந்து உயிரைக் கைப்பற்ற அனுமதி கேட்டார்கள். எனக்கு இன்னும் 60 வயது மிச்சம் உள்ளதே என நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூற, மலக்குல் மவ்த் நடந்த தை நினைவு படுத்திய போது அதை நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஏற்க மறுத்தார்கள். அதாவது மறந்து விட்டார்கள். முதன் முதலில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறந்தார்கள். இன்றும் அவர்கள் பிள்ளைகள் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். மற்றொரு அறிவிப்பில் அன்றிலிருந்து தான் அல்லாஹ் இனிமேல் முக்கியமான ஒப்பந்தங்களில் வாய் வார்த்தை கிடையாது எழுத்துப் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டளையிட்டான். எனவே தான் சில தஃப்ஸீர்களில் பகரா சூராவின் கடன் பற்றிய வசனத்திற்கு விளக்கமாக இச்சம்பவம் கூறப்பட்டுள்ளது.                                                                

படிப்பினை- 1. உலகின் முதல் மனிதர் பேசிய முதல் வார்த்தை ஸலாம் ஆகும்.

2. உயிரைக் கைப்பற்ற நபிமார்களிடம் மட்டுமே அனுமதி கேட்கப்படும்.

நபி ஸல் அவர்களுக்கு தொழுகையில் ஏற்பட்ட மறதி இந்த உம்மத்துக்கு சட்டங்களை சொல்லித் தருவதற்கே

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ أَوْ الْعَصْرَ فَسَلَّمَ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَنَقَصَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ أَحَقٌّ مَا يَقُولُ قَالُوا نَعَمْ فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ.. (بخاري

முடிந்த வரை மறதி நீங்குவதற்கு சில வழிமுறைகள் 

நல்லோர்களின் துஆவினாலும். அதிகமாக குர்ஆனை ஓதுவதாலும் மறதி நீங்கலாம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ وَاللَّهُ الْمَوْعِدُ وَيَقُولُونَ مَا لِلْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ لَا يُحَدِّثُونَ مِثْلَ أَحَادِيثِهِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمْ الصَّفْقُ بِالْأَسْوَاقِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَمْوَالِهِمْ وَكُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مِلْءِ بَطْنِي فَأَحْضُرُ حِينَ يَغِيبُونَ وَأَعِي حِينَ يَنْسَوْنَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا لَنْ يَبْسُطَ أَحَدٌ مِنْكُمْ ثَوْبَهُ حَتَّى أَقْضِيَ مَقَالَتِي هَذِهِ ثُمَّ يَجْمَعَهُ إِلَى صَدْرِهِ فَيَنْسَى مِنْ مَقَالَتِي شَيْئًا أَبَدًا فَبَسَطْتُ نَمِرَةً لَيْسَ عَلَيَّ ثَوْبٌ غَيْرُهَا حَتَّى قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَالَتَهُ ثُمَّ جَمَعْتُهَا إِلَى صَدْرِي فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا نَسِيتُ مِنْ مَقَالَتِهِ تِلْكَ إِلَى يَوْمِي هَذَا وَاللَّهِ لَوْلَا آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمْ شَيْئًا أَبَدًا {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنْ الْبَيِّنَاتِ وَالْهُدَى إِلَى قَوْلِهِ الرَّحِيمُ} (بخاري) باب مَا جَاءَ فِى الْغَرْسِ- كتاب المزارعة

அபூ ஹுரைரா ரழி அவர்கள் கூறினார்கள். என்னைப் பற்றி மற்ற மக்கள் இவர் அதிகமான நபிமொழிகளை அறிவிக்கிறார் என்று கூறுகிறார்கள். அதற்கான மீளுமிடம் அல்லாஹ் தான். அதாவது அல்லாஹ்வே மிக அறிந்தவன். என்னுடைய தோழர்களான முஹாஜிரீன்களும் அன்சாரிகளும் ஏன் அதிகமான நபிமொழிகளை அறிவிக்க முடியவில்லை. அதற்கான காரணம் என்னுடைய தோழர்களான முஹாஜிரீன்களுக்கு கடைவீதியில் அவர்கள் செய்து வந்த வியாபாரம் அவர்களை அதிலேயே ஈடுபடுத்தி விட்டது. என்னுடைய தோழர்களான  அன்சாரிகளுக்கு அவர்கள் செய்து வந்த விவசாயம் அவர்களை அதிலேயே ஈடுபடுத்தி விட்டது. ஆனால் நானோ என்னுடைய வயிற்றுப் பசிக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே அண்டியிருப்பேன். மற்றவர்கள் இல்லாத நேரத்திலும் நான் இருப்பேன். மற்றவர்கள் மறந்த விஷயங்களை நான் நினைவு படுத்திக் கொள்வேன்.        

அவ்வாறிருக்கும்போது ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  உங்களில் எவரேனும் தனது துண்டை விரித்தால் அதில் எனது வார்த்தைகளைக் கொட்டுவேன். அதை அவர் தன் நெஞ்சோடு  அணைத்துக் கொண்டால் அதற்குப் பிறகு நான் சொல்லும் சொல்லை ஒருபோதும் மறக்க மாட்டார் என்று கூறினார்கள். நான் என் மீது இருந்து ஒரு துண்டை விரித்தேன். அதைத் தவிர வேறு துண்டு என்னிடம் இல்லை. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது வார்த்தைகளை கொட்டினார்கள். அதை அவர்  நான் என் நெஞ்சோடு  அணைத்துக் கொண்டேன். அல்லாஹிவின் மீது சத்தியமாக அதற்குப் பிறகு அவர்கள் சொல்லும் எந்த சொல்லையும் நான்  ஒருபோதும் மறக்கவில்லை.                               

 

மறதியை உண்டாக்கும் சில விஷயங்கள்

اكل الحامض وسؤر الفار ونبذ القمل يورث النسيان –(تفسير روح البيان)

புளிப்பானதை அதிகம் உண்பதும் எலி வாய் வைத்த உணவை உண்ணுவதும்  பேனை நசுக்காமல் தூக்கி வீசுவதும் மறதியை உண்டாக்கும் என தஃப்ஸீர் ரூஹுல் பயானில் கூறப்பட்டுள்ளது.

وروي عن علي رضي الله عنه أنه قال :طهروا بيوتكم من نسج العنكبوت فإن تركه يورث الفقر (تفسير روح البيان)

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். உங்களுடைய வீடுகளை சிலந்தி வலைகளை விட்டும் சுத்தப் படுத்துங்கள். அதாவது சுத்தமாக வைத்திருங்கள். ஏனெனில் ஒட்டடைகளை  அப்புறப்படுத்தாமல் விட்டு வைப்பது வறுமையை உண்டாக்கும் 

أن الأولى لا ينظر كل واحد منهما إلى عورة صاحبه لقول رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ { إذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ فَلْيَسْتَتِرْ مَا اسْتَطَاعَ وَلَا يَتَجَرَّدَانِ تَجَرُّدَ الْعِيرِ}" وَلِأَنَّ ذَلِكَ يُورِثُ النِّسْيَانَ لِوُرُودِ الْأَثَرِ (المبسوط) (هداية 

தம்பதிகளில் ஒருவர் மற்றவரின் மர்மஸ்தானத்தைப் பார்க்காமல் இருப்பது சிறந்த தாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் சேர்ந்தால் முழு நிர்வாணமாக ஆகி விடாமல் முடிந்த வரை மறைத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.                                       

மேலும் அவ்வாறு தம்பதிகள் ஒருவர் மற்றவரின் மர்மஸ்தானத்தை அடிக்கடி பார்ப்பது மறதியை உண்டாக்கும். நூல்- ஹிதாயா

 

சில விஷயங்களை மறக்க வேண்டும். சில விஷயங்களை மறக்கக் கூடாது

நமக்கு யாரேனும் உபகாரம் செய்திருந்தால் அதை மறக்காமல் அவர்களுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும். ஆனால் யாரேனும் நம்மை எதுவும் பேசியிருந்தால் திட்டியிருந்தால் அதை மறந்து மன்னிக்கும் குணம் வர வேண்டும்.

 இது போன்றவைகளை மறக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மறதியை மனிதனுக்குள் ஏற்படுத்தியுள்ளான். 

ஒருவர் நமக்குச் செய்த தீங்கை அவர் திருந்திய பின்பும் நம் மனதில் மறக்காமல் வைத்திருப்பது கூடாது.

وَكَانَ من الَّذِينَ يَتَكَلَّم فِي افك عائشة مِسْطَح  بْن أُثَاثَة فَإِنَّهُ كَانَ اِبْن خَالَة الصِّدِّيق وَكَانَ مِسْكِينًا لَا مَال لَهُ إِلَّا مَا يُنْفِق عَلَيْهِ أَبُو بَكْر رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مِنْ الْمُهَاجِرِينَ فِي سَبِيل اللَّه وَقَدْ زَلِقَ زَلِقَة تَابَ اللَّه عَلَيْهِ مِنْهَا وَضُرِبَ الْحَدّ عَلَيْهَا فَحَلَفَ أَبُو بَكْر أَنْ لَا يَنْفَع مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا فَأَنْزَلَ اللَّه تَعَالَى :وَلَا يَأْتَلِ أُولُوا الْفَضْل مِنْكُمْ " يَعْنِي أَبَا بَكْر" وَالسَّعَة أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِين" يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْله " أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِر اللَّه لَكُمْ وَاَللَّه غَفُور رَحِيم (22النور)فَقَالَ أَبُو بَكْر : بَلَى وَاَللَّه يَا رَبّنَا إِنَّا لَنُحِبّ أَنْ تَغْفِر لَنَا وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَع (تفسير ابن كثير)

 கருத்து- மிஸ்தஹ் என்பவர் ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களின் ஏழை உறவினர் ஆவார். அவருக்கு ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வந்தார்கள். அதைத் தவிர வேறு வசதி வாய்ப்பு அவருக்கு இல்லை. இந்நிலையில் ஆயிஷா ரழி உடைய அவதூறு விஷயத்தில் இவரும் சம்பந்தப்பட்டு விட்டார். ஆனால் பிறகு தவ்பா செய்து விட்டார். அதற்காக தண்டனை அவருக்குத் தரப்பட்டு விட்டது. எனினும் அபூபக்கர் ரழி அவர்கள் மனச் சங்கடம் காரணமாக இனிமேல் நான் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கினான். நீங்கள் ஒருதவறு செய்த பின் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பதை விரும்ப மாட்டீர்களா அதுபோல் நீங்களும் அவரை மன்னித்து விடுங்கள் என்ற ஆயத் இறங்கியவுடன் அவரை மன்னித்து எப்போதும் போல உதவித்தொகை வழங்க ஆரம்பித்தார்கள்.                                           

 

இன்னா செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவர் சொன்னது போல தீமை செய்பவருக்கும் நன்மையே செய்வதால் பகைமை நீங்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ(مسلم)معناه كأنما تطعمهم الرماد الحار

எப்போதோ உள்ள பகையை இப்போதும் மனதில் வைத்துக் கொண்டு சிலர் இருப்பார்கள்

عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر بهجرهم -وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ (ابوداود)

மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின் இன்னொரு முஃமினை வெறு(த்து பேசாமல் இரு)ப்பது கூடாது. குறைந்த பட்சம் இருவரும் சந்தித்து இவரோ அல்லது அவரோ முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அவர்களில் சிறந்தவர் யார் முதலில் ஸலாம் கூறிப் பேச்சைத் துவங்குகிறாரோ அவர் தான் சிறந்தவர்.   அதே நேரத்தில் ஒருவரை தீன் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வெறுத்தால் அது தவறல்ல. போருக்கு வராமல் சிலரிடம் நபி ஸல் அவர்கள் பல நாட்கள் பேசாமல் இருந்துள்ளார்கள்.

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல

أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) مُكَافِئِ أي المجازي غيره بمثل فعله 

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப்போன உறவுகளையும் வலியச் சென்று மீண்டும் சேர்த்துக் கொள்பவரே உறவைப் பேணுபவர் ஆவார். 

عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)

மக்கள் எனக்கு நல்லது செய்தால் நானும் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தால் நானும் அவர்களுக்கு  கெடுதல் செய்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக நீங்கள் இருக்காதீர்கள். மாறாக உங்களில் உள்ளத்தை பின்வருமாறு பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் எனக்கு நல்லது செய்தாலும்  நான் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தாலும் நான் அவர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டேன் என்று....                             

 

வியாழன், 14 நவம்பர், 2024

பிள்ளைகள் மீது அன்பு செலுத்துவதும் ஒழுக்கம் கற்பிப்பதும்

 15-11-2024    ★    ஜமாதில் அவ்வல் 12    ★   ஹிஜ்ரி :1446    ★   بسم الله الرحمن الرحيم  


ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் நவம்பர் 20-ம்தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைப் பருவத்தைக் கொண்டாடும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டுக்கு முன் வரை  அக்டோபர் மாதம் உலகக் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. 1959-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுதகள் சபையின் பொதுக்குழு முடிவின்படி, நவம்பர் 20-ல் ஒவ்வோரு ஆண்டும் சர்வதேச குழந்தைகள் தினமாக  கொண்டாடப்படுகிறது.இந்த  நாள் சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டதன் குறிக்கோள், உலகம் முழுவதும் உள்ள      குழந்தைகளிடையே சமூக மாற்றத்திற்கான வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலனுக்கான  செயல்பாடுகளைக் கொண்டு வருவதுமேயாகும்.

1989 ல்  குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் 191 நாடுகள் கையெழுத்திட்ட நாளும் இந்த நாளேயாகும்.

இந்தியாவில் குழந்தைகள் தினம் நாட்டின் முதல் பிரதமரான நேரு பிறந்த நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது குழந்தைகளை அவர் மிகவும் நேசித்ததால் அவரது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا فَقَالَ الْأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنْ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ(بخاري)عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ (بخاري)

நபி ஸல் அவர்கள் தமது பேரக் குழந்தைகளை முத்தமிட்ட போது அந்த இடத்தில் அக்ரஃ இப்னு ஹாபிஸ் என்ற நபித் தோழர் இருந்தார்கள்.  அந்த நபித் தோழர் நபி ஸல் அவர்களிடம் எனக்கு பத்து  குழந்தைகள் இருக்கிறார்கள் நான் இதுவரை ஒருவரைக் கூட முத்தமிட்டதில்லை என்று கூற, அவரைப் பார்த்து நபி ஸல் அவர்கள் யார் (பிள்ளைகள் மீது) இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் இதுபோன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது. அப்போது நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி உமது உள்ளத்திலிருந்து அல்லாஹ் இரக்க குணத்தை எடுத்து விட்டதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று கூறினார்கள். 

عن أَبي قَتَادَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ فَصَلَّى فَإِذَا رَكَعَ وَضَعَ وَإِذَا رَفَعَ رَفَعَهَا(بخاري)

நபி ஸல் அவர்கள் எங்களிடம் வருகை தந்த போது உமாமா என்ற சிறு பெண் குழந்தை அவர்களின் தோள் புஜத்தின் மீது இருந்தது. அவ்வாறே நபி ஸல் அவர்கள் தொழுதார்கள். ருகூஉ செய்யும்போது மட்டும் கீழே இறக்கி விடுவார்கள். மேலே எழும்போது மறுபடியும் தன் தோள் மீது தூக்கி வைத்துக் கொள்வார்கள்.                    

عَنْ بُرَيْدَةَ رضقَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ إِذْ أَقْبَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ 1 فَنَزَلَ وَحَمَلَهُمَا فَقَالَ صَدَقَ اللَّهُ إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ رَأَيْتُ هَذَيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فِي قَمِيصَيْهِمَا فَلَمْ أَصْبِرْ حَتَّى نَزَلْتُ فَحَمَلْتُهُمَا (نسائ

நபி ஸல் அவர்கள் மிம்பரின் மீது இருந்த படி குத்பா ஓதிக் கொண்டிருக்கும்போது  அவர்களின் பேரப் பிள்ளைகளான ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி இருவரும் வருகை தந்தார்கள் அவ்விருவர் மீதும் சிவப்பு சட்டைகள் இருந்தன. அவ்விருவரும் நடந்து வருவதைக் கண்ட நபி ஸல் அவர்கள் மிம்பரை விட்டும் கீழே இறங்கி அவ்விருவரையும் தோளில் சுமந்த படி நிச்சயமாக உங்களின் சொத்துக்களும் பிள்ளைகளும் சோதனைகள் தான் என்று அல்லாஹ் கூறியது உண்மையாகி விட்டது.  இவ்விருவரும் நடந்து வரும்  அழகைக் கண்டு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அதனால்   கீழே இறங்கி அவர்களை தோளில் சுமந்தேன் என்றார்கள்.                                                               

குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதுடன் அவர்களுக்கு ஒழுக்கமும் கற்பிக்க வேண்டும்

ஒழுக்கம் கற்பிக்காமல் மகனை வளர்த்த தந்தைக்கு ஏற்பட்ட கதி.

يُروَى أن أحد العلماء جاءه رجل، فقال له: ابني ضربني، قال: تعال بابنك، فأتى به فإذا هذا الابن كبير سمين بدين كأكبر ما يكون من الرجال، فقال له: أضربتَ أباك؟ قال: نعم.ضربتُه، قال: لِمَ ضربتَه؟ قال: وهل يحرم أن يضرب الابن أباه؟ أي: هل في الشريعة أنه لا يجوز ضرب الابن لأبيه؟ قال العالم للأب: أعلَّمتَ ابنك شيئاً من القرآن؟ قال: لا والله.قال: أعلمتَه شيئاً من السنة؟ قال: لا والله.قال: أعلمتَه شيئاً من آداب السلف ؟ قال: لا.قال: فماذا صنعت معه في حياته؟ قال: أطعمتُه وسقيتهُ وآويتُه حتى كَبُر، قال: تستحق أن يضربك؛ لأنه ظن أنك. بقرة؛ فضربك فاحمدِ الله حيث لم يكسر رأسك (دروس للشيخ 

முற்கால மார்க்க அறிஞர் ஒருவரிடம் ஒரு நபர் வந்து என் மகன் என்னை அடிக்கிறான் என்று கூற, உமது மகனை அழைத்து வா என்றார்கள். அவர் அழைத்து வந்தார். அப்போது அந்த மகனை அந்த ஆலிம் பார்த்த போது கொழுத்த உருவத்தில் வயதுக்கு மீறிய வளர்ச்சி உடையவனாக கண்டார்.  அவனிடம் உன் தந்தையை அடித்தாயா என்று கேட்க, ஆம் அடித்தேன் என்று கூற, ஏன் அடித்தாய் என்று அந்த ஆலிம் கேட்டதற்கு தந்தையை மகன் அடிப்பது கூடாதா என்று அந்த மகன் திருப்பிக் கேட்டான். அப்போது தான் தவறு  யார் மீது உள்ளது என்பதை அறிந்த அந்த ஆலிம் அந்த மகனின் தந்தையை நோக்கி  நீ உன் மகனுக்கு குர்ஆன் சிறிதளவேனும் கற்றுத் தந்தாயா என்று கேட்க, அவர் இல்லை என்றார். நபிகளாரின் நடைமுறைகளில் எதேயேனும் நீ உன் மகனுக்கு  கற்றுத் தந்தாயா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை என்றார்.  முன்னோர்களின் நல்ல நடைமுறைகளில் நின்றும் எதேயேனும் நீ உன் மகனுக்கு  கற்றுத் தந்தாயா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை என்றார். பிறகு என்ன தான் உன் மகனுக்குச் செய்தாய் என்று கேட்க, அதற்கு அவர் அவனுக்கு  எந்தக் குறையும் இல்லாமல் உண்ண உணவும்  அருந்துவதற்கும் நீரும்  தந்து  அவனை  நன்கு வளர்த்து ஆளாக்கினேன்  என்றார். அப்போது அந்த ஆலிம்  சொன்னார். அவன் உன்னை அடித்த து சரி தான். ஏனென்றால் அவன் உன்னை மாடு என்று நினைத்து விட்டான் போலும். உன் மண்டையை உடைக்காமல் விட்டு வைத்தானே அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழந்து நன்று செலுத்து என்று கூறினாராம்.            

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ (بخاري) باب مَا قِيلَ فِى أَوْلاَدِ الْمُشْرِكِينَ-كتاب الجنائز -دَلَّ الحديث على أن المولود لو ترك مع فطرته الأصلية لما كان على شيء من الأديان الباطلة  وأنه إنما يقدم على الدين الباطل لأسباب خارجية ، وهي سعي الأبوين في ذلك 

இன்றைய காலத்தில்  வாலிபர்களின் ஒழுக்கம் மிகவும் சீரழிந்துள்ளது. 6-ம் வகுப்பு மற்றும்  7-ம்  வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலர் இன்று பல்வேறு கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி  ஒழுக்கத்தைத் தொலைத்து வாழ்ந்து வருகின்றனர் எனவே  ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.   

பிள்ளைகளின் மனதில் சிறிதளவும் கெட்ட எண்ணம் வந்து விடக் கூடாது என்பதற்காக 

தொலை நோக்கு சிந்தனையுடன் நபி (ஸல்) சொல்லித் தந்த அறிவுரை

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ -بَاب مَتَى يُؤْمَرُ الْغُلَامُ بِالصَّلَاةِ-كتاب الصلاة يعني أنهم لا يضطجع بعضهم مع بعض؛ حتى لا يحصل شيء من دواعي الشر أو شيء من الشيطان بحيث يحرك بعضهم على بعض فلا يكون هناك اضطجاع من بعضهم مع بعضهم، وإنما يكون هناك تفريق، سواء أكانوا ذكوراً وإناثاً أم ذكرواً فقط أم إناثاً فقط؛ لأنه عندما يحصل التقارب يحصل بسببه شيء من تحريك الشهوة أو الفتنة أو ما إلى ذلك، فجاءت السنة بأن يمرنوا على ذلك، وأن يعودوا على ذلك وهم صغار، بحيث يبتعد بعضهم عن بعض، ولا يكون هناك تلاصق وتقارب بحيث يحصل معه شيء لا تحمد عقباه.(شرح ابي داود)

கருத்து- உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாக இருந்தாலும் பத்து வயதைக் கடந்தவுடன் தனித்தனியாகப் படுக்க வையுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன காரணம் குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன் பிள்ளைகளின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மூலம் சில இனம் புரியாத  உணர்ச்சிகள் தூண்டப் படுகின்றன. அந்த உணர்ச்சிகள் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு  நபி ஸல் கூறினார்கள்.  

 

كاد الأدب أن يكون ثُلُثي الدِّين"قال عبد الله بن مبارك رحمه الله  

“ஒழுக்கம் தீனுல் இஸ்லாமின் மூன்றில் இரண்டு பங்காக விளங்கும் அளவிற்கு ஆகிவிட்டது. 

 பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் விதிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு தம் சுதந்தரத்திற்கு இடையூறாகவும், மகிழ்ச்சிக்கு தடைக் கற்ககலாகவும் இருப்பதாக மாணவர்களும், குழந்தைகளும் எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறு. வளர்கின்ற மரம், செடி கொடிகளை அப்படியே பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவை காடாகவும், முட் புதராகவும் மாறும் அல்லது நீரின்றி வாடி கருகிவிடும். அவற்றை ஒழுங்கு படுத்தினால் அவை தோப்பாகவும், தோட்டமாகவும், எழில்கொஞ்சும் சோலையாகவும் மாறும். எந்த ஒரு பொருளும் இரும்பு உட்பட, கெட்டுப் போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. அதனை அப்படியே விட்டுவிட்டால் போதும். அது தானாக கெட்டுவிடும்.எனவே, ஒரு பொருளை உருவாக்கி பாதுகாப்பதற்கு தான் முயற்சிகள் தேவை. அது அழிந்து போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. பட்டத்தை வானில் பறக்கவிட்டு பார்த்திருப்போம்.பட்டம் பறப்பதற்கு நூல் தான் ஆதாரம். நூல் இல்லையேல், பட்டம் வானில் உயர பறப்பதற்கு முடியாது. ஆனால், நூல் உங்கள் கைப்பிடியில் இருக்கிறது. பட்டம் தான் விரும்பியவாறு சுதந்திரமாக விண்ணில் பறப்பதற்கு தனக்கு நூல் ஒரு தடையாக இருக்கின்றது  என்று எண்ணி, கட்டுப்பாட்டை விரும்பாமல்  நூலை அறுத்துக் கொண்டால் என்ன நேரும்? விண்ணில் உயர பறந்த பட்டம், நூல் அறுந்த போது  மண்ணில் முட்புதரில் வீழ்ந்து தாறுமாறாக கிழிந்து அழியும். அதுபோல் தான், மாணவர்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமெல்லாம் வெற்றியைநோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள்.       

ஆடு, மாடு போல் உண்பதும், உறங்குவதும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் தான் வாழ்க்கையா?

وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ (12سورة محمد) وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ (الاعراف179)

ஒழுக்கம் கற்பிக்காமல் படிப்பை மட்டும்  போதிக்க நினைப்பது கழுதையின் முதுகில் சுமத்தும் பொதி போன்றது

مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا (الجمعة5)أَيْ كَمَثَلِ الْحِمَار إِذَا حَمَلَ كُتُبًا لَا يَدْرِي مَا فِيهَا فَهُوَ يَحْمِلهَا حَمْلًا حِسِّيًّا وَلَا يَدْرِي مَا عَلَيْهِ وَكَذَلِكَ هَؤُلَاءِ فِي حَمْلِهِمْ الْكِتَاب الَّذِي أُوتُوهُ حَفِظُوهُ لَفْظًا وَلَمْ يَتَفَهَّمُوهُ (تفسير ابن كثير)

நம்முடைய வாழ்வின் நேரங்கள் வீணாக கழியும் போது அது ஷைத்தானின் செயல்களின் பால் இட்டுச் செல்லும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ (بخاري) اول الحديث مِنْ باب ما جاء في الصحة والفراغ وأن لا عيش إلا عيش الآخر-كتاب الرقاق وقال الحسن البصري  رحمه الله (يا ابن آدم إنما أنت أيام فإذا ذهب يومك ذهب بعضك)وقال (أدركت أقواما كانوا على أوقاتهم أشد منكم حرصا على دراهمكم ودنانيركم) والنفس البشرية جُبلت على أن الإنسان إن لم يشغلها بالخير شغلته بالشر. وروي عن الإمام الشافعي في هذا المعني (الكتاب:الوقت وأهميته في حياة المسلم)

ஒழுக்கம் தவறிய சிறுவர், சிறுமிகளைப் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னையில் கல்லூரி மாணவர்களில் 60 சதவீதம் பேர் பீடி அல்லது சிகரெட்டுக்கு அடிமையாகி உள்ளனர். அதில் 40 பேரிடம் கூடவே மது அருந்தும் பழக்கமும் உண்டு.

மேலை  நாடுகளில் மாணவ, மாணவிகளின் ஒழுக்கம் மிகவும் சீரழிந்துள்ளது இங்கிலாந்தில் 15 வயதுக்கு முன்பே உடலுறவு கொண்ட மாணவர்கள் 20 சதவீதம் பேர். பள்ளிகளிலேயே கருக்கலைப்பு மையங்கள் பெருமளவில் இருப்பது இங்கிலாந்தில் தான். மேலும் ஆண்டு தோறும் 12 ஆயிரம் பள்ளிப் பருவ பிரசவங்கள் ஒட்டு மொத்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபிரான்ஸ் அரசாங்கம் பள்ளி, கல்லூரிகளில் நர்சு ஒருவரை நியமித்து கருத்தடை மாத்திரைகளை வழங்குகின்றனர்.                

    மனிதனிடம் தன் மன இச்சைக்குக் கட்டுப்படும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது. குறிப்பாக மாணவப் பருவத்தில் மனம், கேளிக்கை மற்றும் வீண் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபாடு கொள்ளும்.  மேலும்,  சுற்றுப்புற சூழல், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அத்து மீறிய சினிமாக் கலாச்சாரம், தொலைக்காட்சித் தொடர்கள், அலைபேசிகளின் ஆளுமை, இணையம்  போன்ற காரணிகள் மாணவர் உள்ளங்களை மாசுபெறச் செய்கின்றன.                 

எந்த நபியும் பிள்ளை வரம் கேட்கும்போது ஸாலிஹான பிள்ளையைத் தா! என்றே கேட்டார்கள்

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (38)ال عمران

நம்மையும் அவ்வாறே கேட்கும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான்

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ (15)الاحقاف وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (74)الفرقان

பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருபவர் அவர்களை நரக நெருப்பை விட்டும் காப்பாற்றுகிறார் என்பதால் தான் ஒழுக்கம் கற்பிப்பதை விட ஒரு தந்தை தன் பிள்ளைக்கு பெரிய அன்பளிப்பை தந்து விட முடியாது என்றார்கள்

عن أَيُّوب بْن مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ (ترمذي)

ஒரு தந்தை தன் பிள்ளைக்கு பல லட்சம் செலவில் கார் வாங்கிக் கொடுத்தால், அல்லது விமானம் வாங்கிக் கொடுத்தால் அவர் உயிரோடு இருக்கும் வரை தான் அவரை இவன் புகழுவான். (MY DADY,S  GIFT  தன் காரில் எழுதி வைப்பது போல.) ஆனால் ஒழுக்கத்தைக் கற்றுத்தந்தால் தந்தை இறந்த பிறகும் அவருக்காக துஆ செய்வான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ صَدَقَةٌ جَارِيَةٌ وَعِلْمٌ يُنْتَفَعُ بِهِ وَوَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ (ترمذي)عن سعيد بن المسيب يقول : إن الرجل ليرفع بدعاء ولده من بعده . وقال بيده فرفعها إلى السماء (مؤطا مالك- باب الدعاء-أبواب السير) إن الرجل ليرفع أي في درجاته ومنزله- أي أشار ابن المسيب بيده فرفعها إلى السماء تفهيما لعلو درجات الرجل 

பிள்ளைகள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.

  ஒரு சிறுவர் தன் வீட்டில் தன் தாய் அருகில் இருந்த போது அந்த அன்னை வீட்டில் அடுப்பெரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய சுள்ளிகளை விறகுகளை முதலில் எரிய விட்டு அதன் பிறகு பெரிய விறகுகளை வைத்து நெருப்பை மூட்டினார். அது சிறிய வீடு. ஒரே ஒரு அறை மட்டுமே. புகை மூட்டம் அதிகமாக இருந்த து. அப்போது அந்த சிறுவர் அழுது கொண்டிருக்கிறார். அந்த அன்னை தன் பிள்ளையிடம் மகனே புகை மூட்டம் அதிகம் இருப்பதால் கண் எரிகிறதா நீ வேண்டுமானால் அம்மாவின் அடுப்பு வேலை முடியும் வரை வெளியே நின்று கொள் மகனே என்று அன்புடன் கூற அது கேட்ட அந்த மகன் இவ்வாறு கூறினார். அன்னையே நான் புகை மூட்டத்தைக் கண்டு நான் அழவில்லை. மாறாக நீங்கள்  முதலில் சிறு சுள்ளிகளை வைத்து அடுப்பு நன்றாக எரிய ஆரம்பித்தவுடன் பெரிய விறகுகளை வைத்தீர்கள் அல்லவா அப்போது என் மனதில் குர்ஆனின் வசனம் நினைவுக்கு வந்தது  நரகத்தின் எரி கொள்ளிகள் என மனிதர்களையும் கற்சிலைகளையும் அல்லாஹ் கூறியுள்ளான் நீங்கள் சிறு சுள்ளிகளை ஆரம்பத்தில் வைத்ததைப் போன்று அல்லாஹ்வும் எங்களைப் போன்ற சிறுவர்களை முதலில் நரகில் போட்டு நன்றாக எரிய ஆரம்பித்தவுடன் பெரியவர்களைப் போடுவானோ என்ற அச்சம் எனக்குள் வந்தது அதனால் அழுகிறேன் என்றார்கள் அந்த அளவுக்கு பிஞ்சு உள்ளத்தில் இறையச்சம் இருந்தது. அவர்கள் தான் இமாம் ஜஃபர் சாதிக் ரஹ் அவர்கள்.                               

  இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில் அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிமான போதை இளைஞர்கள் தான்.  எனவே இதைப் பற்றி ஜும்ஆவில் பேசுவது மட்டுமே நிறைவான பலனைத் தராது. சம்பந்தப்பட்ட வாலிபர்களில் எவரும் ஜும்ஆ பயானுக்கு வரப்போவதில்லை. எனவே ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கென தனியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஏற்படுத்தியோ அல்லது பள்ளி வாசலில் உடற்பயிற்சி,  கராத்தே, ட்யூஷன் போன்ற பொதுவானவற்றை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை மஸ்ஜிதின் பக்கம் எப்படியேனும் வரவழைத்து அதன் வழியாக அவர்களைத் திருத்த முயற்சிப்பது ஒவ்வொரு முஸல்லிகள் மீதும் கடமையாகும்.                                    

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)                                                        

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.  இதைக் கண்ட     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம்     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது

பாவங்களுக்கெல்லாம் தாய் என போதை வஸ்துக்களை உஸ்மான் ரழி அவர்கள் வர்ணித்தார்கள்

عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ اجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ إِنَّهُ كَانَ رَجُلٌ مِمَّنْ خَلَا قَبْلَكُمْ تَعَبَّدَ فَعَلِقَتْهُ امْرَأَةٌ غَوِيَّةٌ فَأَرْسَلَتْ إِلَيْهِ جَارِيَتَهَا فَقَالَتْ لَهُ إِنَّا نَدْعُوكَ لِلشَّهَادَةِ فَانْطَلَقَ مَعَ جَارِيَتِهَا فَطَفِقَتْ كُلَّمَا دَخَلَ بَابًا أَغْلَقَتْهُ دُونَهُ حَتَّى أَفْضَى إِلَى امْرَأَةٍ وَضِيئَةٍ عِنْدَهَا غُلَامٌ وَبَاطِيَةُ خَمْرٍ فَقَالَتْ إِنِّي وَاللَّهِ مَا دَعَوْتُكَ لِلشَّهَادَةِ وَلَكِنْ دَعَوْتُكَ لِتَقَعَ عَلَيَّ أَوْ تَشْرَبَ مِنْ هَذِهِ الْخَمْرَةِ كَأْسًا أَوْ تَقْتُلَ هَذَا الْغُلَامَ قَالَ فَاسْقِينِي مِنْ هَذَا الْخَمْرِ كَأْسًا فَسَقَتْهُ كَأْسًا قَالَ زِيدُونِي فَلَمْ يَرِمْ حَتَّى وَقَعَ عَلَيْهَا وَقَتَلَ النَّفْسَ فَاجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا وَاللَّهِ لَا يَجْتَمِعُ الْإِيمَانُ وَإِدْمَانُ الْخَمْرِ إِلَّا لَيُوشِكُ أَنْ يُخْرِجَ أَحَدُهُمَا صَاحِبَهُ  (نسائ

    உஸ்மான் ரழி அவர்கள் கூறினார்கள் பாவங்களுக்கெல்லாம் தாயான மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் முற்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். அவருக்கு ஒரு  நடத்தை  கெட்ட பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது.  ஒருநாள் அவள்  தன் பணிப் பெண்ணை அனுப்பி  ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டதால் தனக்காக சாட்சி சொல்ல வரும்படி சொல்லியனுப்பினாள். அவரும் அவளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அங்கு வந்தார்.  ஆனால் அவர் வந்தவுடன் அப்பெண் கதவைத் தாழிட்டார். அங்கு அழகிய தோற்றத்தில் அவள் இருக்க அருகில் ஒரு குழந்தை இருந்தது. மதுவும் அருகில் இருந்தது.   அப்போது அப்பெண்  அவரிடம் சாட்சி சொல்ல உம்மை அழைக்கவில்லை. மாறாக நீ  என்னிடம் உறவு கொள்ள வேண்டும். அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும். அல்லது இக்குழந்தையைக் கொல்ல வேண்டும். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்த நகர முடியாது என்று கூற, அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஆகி விட்டது. அப்போது அவர்  மதுவை அருந்தினால் அந்தப் பாவம் நம்மோடு நின்று விடும். மற்ற இரண்டை விட்டும் தப்பித்து விடலாம் என்றெண்ணி மதுவை ஊற்றித் தரக்கூறினார். சற்று நேரத்தில் போதை  ஏறியவுடன்  அவளிடம் உறவும் கொண்டு விட்டார். போதையில் அக்குழந்தையையும் கொன்று விட்டார்.  எனவே மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக  ஈமானும்  மதுப்பழக்கத்தில் மூழ்குவதும்  ஒரு மனிதனிடம் ஒருபோதும் ஒன்று சேராது என உஸ்மான் ரழி கூறினார்கள்.          

வியாழன், 7 நவம்பர், 2024

இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் ஊடகங்கள்

 08-11-2024

 

بسم الله الرحمن الرحيم  

இஸ்லாமிய வெறுப்பை 

விதைக்கும் ஊடகங்கள் 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6) الحجرات

இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரங்களை  பாசிச வாதிகள்  செய்து வருகிறார்கள்.  திரைப் படங்கள் மூலமாகவும்  முஸ்லிம்களை  தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர். இதுவரை அத்தகைய எத்தனையோ திரைப் படங்கள் வந்து விட்டன. சில தினங்களுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படமும் அந்த வரிசையில்  இணைந்துள்ளது.  நாளுக்கு நாள் இவர்களின் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே இன்றைய ஜும்ஆ பயானின் தலைப்பாகும்.                                                                     

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் சதி வேலை என்றைக்கோ துவங்கி விட்டது

இந்தியா, பாகிஸ்தான் பிரிந்த பின் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே கலவரம் ஏற்பட்ட போது அதில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்செய்தி காந்திஜீக்கு சொல்லப்பட்ட போது காந்திஜீ அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலை தம்மை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பினார். முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்படுவது பற்றித்தான் அழைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்ட பட்டேல் “காந்திஜீக்கு கிடைத்த தகவல் மிகைப்படுத்தப்பட்டவை” என்றும் “முஸ்லிம்கள் அந்த அளவுக்கு கொல்லப்படவில்லை”  என்றும் பதில் கூறி அனுப்பினார்.                                                     

அபுல் கலாம் ஆசாத் கூறுகிறார்- நானும், நேருவும், பட்டேலும் காந்திஜீயுடன் பேசிக்கொண்டிருந்த போது நேருஜீ கவலையுடன் “முஸ்லிம்களை நாய்களையும், பூனைகளையும் கொல்வது போல கொல்கிறார்கள். அதைத் தடுக்க தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே”  என்று வருத்தப்பட்ட போது அருகில் இருந்த பட்டேல்  நேருவின் புகார்கள் அனைத்தும் ஆதாரமாற்றவை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. என்று கூறி உண்மையை மறைத்து பதில் கூறினார். காந்திஜீயால் ஒன்றும் பேச முடியவில்லை. அதற்குப் பிறகு பட்டேல் என்ன செய்தார் தெரியுமா ? முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயம் தான் என்று காட்டுவதற்காக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆபத்தான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், டில்லியில் உள்ள இந்துக்களையும், சீக்கியர்களையும் தாக்குவதற்காக அவைகளை முஸ்லிம்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் சில நாட்கள் கழித்து செய்தி வெளியிட்டார். நாங்கள் மந்திரி சபை கூட்டத்திற்கு சென்ற போது சர்தார் பட்டேல் எங்களை நோக்கி முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அடுத்த அறையில் உள்ளன. அதைப் பார்த்து விட்டு வந்து கூட்டத்தை ஆரம்பிப்போம் என்றார். நாங்கள் அங்கு சென்று  மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்தோம். அங்கு துருப்பிடித்த சமையலறைக் கத்திகள், தண்ணீர் குழாய்கள், தடுப்பு வேலியிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிகள் ஆகியவை இருந்தன. அவைகளைக் காட்டி இவை சீக்கியர்களையும், இந்துக்களையும் கொலை செய்ய முஸ்லிம்களால் திரட்டி வைக்கப்பட்ட ஆயுதங்கள் என்றார் பட்டேல். அப்போது அங்கிருந்த மவுன்ட் பேட்டன் பிரபு அந்தக் கத்திகளை எடுத்துப் பார்த்துக் கொண்டே கிண்டலாகவும், கேலியாகவும் சொன்னாராம் “இந்த ஆயுதங்களை சேகரித்தவர்களுக்கு அபாரமான கற்பனை வளம் உள்ளது. இவைகளைக் கொண்டு டில்லியைக் கைப்பற்றலாம் என்று கற்பனை செய்கிறார்கள் போலும்”  என்றார்.           

(மெளலானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய நூலில் இருந்து..  நன்றி சமநிலைச் சமுதாயம்)

அன்று வல்லபாய் பட்டேல் செய்த வேலையைத் தான் அப்போதிருந்து இன்று வரை ஆட்சியாளர்களில் பலரும், ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. இது போதாதென்று கடந்த பல வருடங்களாக திரைப்படங்களின் மூலமாகவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர். சமீபத்தில் சில  தினங்களுக்கு முன் வெளியான  திரைப்படத்திலும்  கூட முஸ்லிம்களின் மீது அவதூறுப் பிரச்சாரங்கள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன. இந்த நடிகர் அந்த நடிகர் என்று இல்லாமல்  அனைத்து நடிகர்களுமே இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை வைத்துத்  தான் தங்களை வளர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள்    

பிஞ்சு உள்ளங்களிலும் நஞ்சை விதைக்கும் விஷமிகள்

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்வதற்காகவே நாடு முழுவதும் 16,000 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. அங்கு பயிலும் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை ஊட்டுகிறார்கள். நாளடைவில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அந்த  வெறுப்புணர்வு தீயாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விடுகிறது. முஸ்லிம்களைக் கண்டால் கொல்ல வேண்டும் என்ற வெறி பிடித்தவர்களாக ஆக்கப் படுகிறார்கள்.                                    

வெறுப்புப் பிரச்சாரங்கள் செயலற்றுப் போவதற்கு நாம் செய்ய வேண்டியவை 

1. இஸ்லாம் கூறும் மனித நேய கருத்துக்களை நமக்குள்ளே மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, மஹல்லா தோறும்  சமய நல்லிணக்க கூட்டங்கள் நடத்தி   பிற மதத் தலைவர்கள் மூலமாக  நமது இஸ்லாத்தைப்  பற்றி  பேச வைக்க வேண்டும்

 

தாயிஃபில் இருந்து கவலையுடன் நபி ஸல் அவர்கள் திரும்பிய போது நடந்த சம்பவம்

وسار رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا من مكة مكث بحِرَاء، وبعث رجلًا من خزاعة إلى الأخنس بن شَرِيق ليجيره، فقال : أنا حليف، والحليف لا يجير ، فبعث إلى سهيل بن عمرو، فقال سهيل : إن بني عامر لا تجير على بني كعب، فبعث إلى المطعم بن عدى، فقال المطعم : نعم ، ثم تسلح ودعا بنيه وقومه ، فقال : البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرت محمدًا، ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم : أن ادخل، فدخل رسول الله صلى الله عليه وسلم ومعه زيد بن حارثة حتى انتهي إلى المسجد الحرام، فقام المطعم بن عدى على راحلته فنادى : يا معشر قريش، إني قد أجرت محمدًا فلا يهجه أحد منكم، وانتهي رسول الله صلى الله عليه وسلم إلى الركن فاستلمه، وطاف بالبيت، وصلى ركعتين، وانصرف إلى بيته، ومطعم بن عدى وولده محدقون به بالسلاح حتى دخل بيته .وقيل : إن أبا جهل سأل مطعمًا : أمجير أنت أم متابع ـ مسلم ؟ . قال : بل مجير . قال : قد أجرنا من أجرت .وقد حفظ رسول الله صلى الله عليه وسلم للمطعم هذا الصنيع، فقال في أسارى بدر : ( لو كان المطعم بن عدى حيًا ثم كلمنى في هؤلاء النتنى لتركتهم له ) .(الرحيق المختوم)

நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாட்களுடன் கஃபாவிற்குள்  நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலேவந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து  வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஜஹ்லும் அங்கீகரித்தான்.

عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي أُسَارَى بَدْرٍ لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلَاءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ (بخاري

பத்ருப் போரின் கைதிகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது இப்போது முத்இம்பின் அதி உயிரோடு இருந்து இந்த நாற்றமெடுத்தவர்கள் விஷயத்தில் சிபாரிசு செய்திருந்தால் அவருக்காக இவர்களை நான் விடுதலை செய்திருப்பேன்

படிப்பினை-  நமக்கு ஆதரவாக பிற  மதத்தவர்களைப் பேச வைக்கும் விதமாக  நபி ஸல் அவர்கள் நடந்து கொண்டார்கள்

 

2. மாற்று சமூகத்தாருடன் நம்முடைய நட்புறவை மேலும் பலப்படுத்த வேண்டும்

عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا (بخاري)

 கருத்து- நபி ஸல் அவர்களுடைய இஃதிகாஃபின் போது மனைவி சஃபிய்யா ரழி வந்தார்கள். திரும்பிச் செல்லும்போது இரவு நேரமாக இருந்ததால் தெருமுனை வரை நபி ஸல் அவர்கள் உடன் சென்றார்கள். இதை தூரத்தில் இருந்து இருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். நபி ஸல் அவர்கள் தன் மனைவியை அனுப்பி வைத்து விட்டு அவ்விருவரை நோக்கி சற்று நில்லுங்கள் என்றார்கள். பிறகு அவ்விருவரிடமும் இவர் வேறு யாருமல்ல. என் மனைவி சஃபிய்யா தான் என்றார்கள். அதற்கு அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ் நாங்கள் உங்களைப் பற்றி தவறாக எதுவும் எண்ணவில்லையே என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இப்போது உங்கள் மனதில் எதுவும் இல்லாதிருக்கலாம் ஆனால் ஷைத்தான் உங்கள் மனதில் ஏதேனும் எண்ணங்களை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதால் நான் முந்திக் கொண்டேன் என்றார்கள்.                                

படிப்பினை- இச்சம்பவம் பல படிப்பினைகளை உள்ளடக்கியது. நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை தீய சக்திகள் பரப்புவதற்கு முன்பே நாம் உஷாராகி, நம்மைப் பற்றிய நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்பதும் அடங்கும். 

3. மதரஸாக்களில், மஸ்ஜித்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என மார்க்கத்தைப் பற்றியும் மஸ்ஜித்களைப் பற்றியும் தவறாகக் கருதுபவர்களை அழைத்து வந்து  நமது மஸ்ஜிதை காட்ட வேண்டும்.

4. மதப் பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்க உதவ வேண்டும் கிறிஸ்தவ சமுதாயம் வளர்ந்தது இவ்வாறு தான்

 

5. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். 

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11) الرعد

சோதனைகளின் போது நமது பாவம் என்ன என்பதை சிந்திப்பது சிறந்த முஃமினின் அடையாளம்

ஷாம் தேசத்திற்கு உமர் ரழி அவர்கள் அனுப்பியிருந்த படைப் பிரிவுகளில் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் உமர் ரழி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன்  அவர்களே நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்று விட்டது. அல்லாஹ் நமது படைப் பிரிவுக்கு வெற்றியை நல்கினான் என்று கூறியபோது உமர் ரழி அவர்கள் எப்போது நமது படை வீரர்கள் எதிரிப்ப்படையுடன் போரிட ஆரம்பித்தார்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர் லுஹா நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். மீண்டும் உமர் ரழி அவர்கள் எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்த து என்று கேட்டார்கள். அதற்கு அவர் மஃரிப் நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டதும் உமர் ரழி அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். அழுகையின் உச்ச கட்டமாக தாடி முழுவதும் நனைய தேம்பித் தேம்பி அழுதார்கள். சபையில் இருந்தவர்கள் உமர் ரழி அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். எனினும் உமர் ரழி அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை. அப்போது சபையில் இருந்தவர்கள் அமீருல் முஃமினீன்  அவர்களே அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகிறீர்கள் அவர் நல்ல செய்தியைத்தானே சொல்லியுள்ளார். நமது படை வெற்றி பெற்ற செய்தி மகிழ்ச்சியான செய்தி தானே என்று கேட்டனர். அதற்கு உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அசத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு வநேரம் வரை தாமதம்ஆகாது. அப்படியானால் நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.                                                                      

قال الله تعالي إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (الرعد11)عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَقُولُ"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (رواه الطبراني في المعجم الكبير)

 

கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَى عَنْ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ.... يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ

 அல்லாஹ் கூறுகிறான் என் அடியார்களே உங்களில் மிகச் சிறந்த இறையச்சம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என்னுடைய அந்தஸ்து கடுகளவும் கூடி விடப்போவதில்லை. உங்களில் மிக மோசமான உள்ளம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என் அந்தஸ்து கடுகளவும் குறையப்போவதில்லை.உங்களில் முதல் மனிதர் முதல்கடைசி மனிதர்வரை அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி நின்று நீங்கள் விரும்பியதையெல்லாம் கேட்டு அதையெல்லாம் நான் கொடுத்து விட்டாலும் கடல் போன்ற எனது கஜானாவில் ஊசியின் முனை அளவு மட்டுமே குறையும். உங்களின் அமல்கள் உங்களுக்குத் தான். அவற்றைப் பாதுகாத்து வைத்து உங்களுக்கு அதன் நற்கூலியை நிரப்பமாக தருவேன். நல்லதைப் பெற்றுக் கொண்டால் அல்லாஹ்வைப் புகழுங்கள். கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்கள்.                                   

முஸ்லிம்களிடம் பதவி ஆசையும் பண ஆசையும் பெருகும்போது  

இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்கள் பெருகிக் கொண்டு தான் இருக்கும்

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க “நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்.

உலக அளவில் கிறிஸ்தவர்கள் 215 கோடி. முஸ்லிம்கள் 170 கோடி.

இந்துக்கள் 85 கோடி. சீக்கியர்கள் 2 கோடி, யூதர்கள் 1 ½  கோடி

இறையச்சமுள்ள வாலிபர்கள் இன்றும்  உள்ளனர்.  அவர்கள் இல்லா விட்டால் எப்போதோ உலகம் அழிந்திருக்கும்

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا » :طبراني المعجم الكبير    ( مَهْلًا ): أَيْ أَمْهِلْ مَهْلًا

இறையச்சமுள்ள வாலிபர்களும் மேயும் கால்நடைகளும், (முடியாத நிலையிலும் நாற்காலியை நாடாமல்)  ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிக் குழந்தைகளும் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்

وهو على أنطاكية لما قدمت منهزمة الروم‏:‏ ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم‏؟ قالوا‏:‏ بلى‏. قال‏:‏ فأنتم أكثر أم هم‏؟ قالوا‏:‏ بل نحن أكثر منهم أضعافاً في كل موطن‏. قال‏:‏ فما بالكم تنهزمون‏؟‏ فقال شيخ من عظمائهم‏:‏ من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض‏.‏ فقال‏:‏ أنت صدقتني‏.‏                         

ஹிஜ்ரி  15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின்ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில்ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போதுஅவர்களின் அரசர் ஹிர்கல் கேட்பான் உங்களைப்போன்றுஅவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள்அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள்தோற்றுவருகிறீர்கள் உங்கள் தோல்விக்கு காரணம் என்னஎன்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர்சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்றுவணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள்.நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தைநிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மதுஅருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தைமீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன்சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை. அவர்களுக்குவெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலானவாழ்க்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7 பக்கம்.20

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...