16-01-2026
رجب - 26 بسم الله الرحمن الرحيم
மிஃராஜ் படிப்பினைகள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
மிஃராஜ் நடைபெறக் காரணம்
அபூதாலிப், கதீஜா ரழி ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்கள் மூலம் மிகவும் கவலையடைந்த நபி [ஸல்] அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக இந்த நிகழ்வை அல்லாஹ் நடத்தினான்.
وبعد وفاة أبي طالب بنحو شهرين أو بثلاثة أيام ـ على اختلاف القولين ـ توفيت أم المؤمنين خديجة الكبرى رضي الله عنها وكانت وفاتها في شهر رمضان في السنة العاشرة من النبوة، ولها خمس وستون سنة على أشهر الأقوال، ورسول الله صلى الله عليه وسلم إذ ذاك في الخمسين من عمره .]الرحيق المختوم[
முக்கியமான பயணத்திற்கு நபி (ஸல்) அவர்களை தயார் படுத்த நடத்தப்பட்ட ஆன்மீக ஆபரேஷன்
عن أَنَس بْن مَالِكٍ كَانَ أَبُو ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْه يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُرِجَ سَقْفِي وَأَنَا بِمَكَّةَ فَنَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ إِلَى السَّمَاء (بخاري 1636
நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள்.
படிப்பினை- உலகில் எத்தனையோ ஆபரேஷன் நடைபெறும். மயக்க மருந்து செலுத்திய பின் உணவர்வற்ற நிலை இருக்கும்போது நடைபெறும். ஆனால் நபி ஸல் அவர்களுக்கு நடைபெற்ற ஆபரேஷன் முற்றிலும் உணர்வுடன் இருந்த நிலையில் நடைபெற்றது. மலக்குகள் செய்வதை நபி ஸல் அவர்கள் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
நபி ஸல் அவர்களுக்கு நடந்த சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் தற்காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்
கோமா நிலையில் இருந்து விட்டு பிறகு மீண்டும் நினைவு திரும்பியவர்களைப் பற்றிய ஒரு பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. பெரும்பாலும் கோமா நிலையில் இருந்தவர்கள் நினைவு திரும்பாமலேயே மரணிப்பது தான் பெரும்பாலும் நடைபெறும். ஆனால் வழமைக்கு மாற்றமாக யாருக்கு நினைவு திரும்பி மீண்டும் வாழ்ந்தார்களோ அவர்களைப் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப் பட்ட ஆய்வில் சிறந்த ஒரு முஃமினான முதியவரும் அவ்வாறு கோமாவில் இருந்த பிறகு மீண்டும் நினைவு திரும்பி மீண்டும் வாழ்ந்தவராக இருந்தார். அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. நீங்கள் கோமாவில் இருந்த போது உங்களைச் சுற்றி நடைபெற்ற நிகழ்வுகளில் ஏதேனும் நினைவில் உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு அப்படி எதுவும் நினைவில் இல்லை. ஆனால் கோமாவில் இருக்கும்போது எனக்கு அருகில் இருந்த படி யாரேனும் குர்ஆன் ஓதினால் அது மட்டும் என்னால் உணர முடியும் என்று கூறினார். அந்த அளவுக்கு குர்ஆனோடு தொடர்பு உள்ளவராக இருந்தார் என்பதை உணர முடிகிறது.
இதுபோன்றே மற்றொரு முஃமினான முதியவரைப் பற்றிய உண்மைச் சம்பவம். அவருக்கு முக்கியமான ஆபரேஷன் நடைபெறப் போகிறது. அந்த ஆபரேஷன் நடைபெறும் முன்பு மருத்துவர்களிடம் இந்த ஆபரேஷன் நடைபெற எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார். அதற்கு மருத்துவர்கள் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஆகலாம் என்று கூற, அவர் அழுக ஆரம்பித்தார். ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட போது, நான் அதிகமாக குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பேன். எனக்கு ஆறு மணி நேரம் நீங்கள் ஆபரேஷன் நடத்தினால் அவ்வளவு நேரம் என்னால் குர்ஆன் ஓத முடியாதா என்று கவலையுடன் கேட்டார். அவரிடம் மருத்துவர்கள் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் குர்ஆனை ஆசை தீர ஓதிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நாங்கள் ஆபரேஷன் நடத்துகிறோம் என்றார்கள். அவ்வாறே அவர் நீண்ட நேரம் குர்ஆன் ஓதினார். அதற்குப் பிறகு அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு ஆபரேஷன் நடத்தப்பட்டது. ஆபரேஷன் முடிந்த பிறகு மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் கூறினார்கள். நாங்கள் எத்தனோ ஆபரேஷன்களை நடத்தியுள்ளோம். ஆனால் இப்படி ஒரு ஆபரேஷனை நாங்கள் வாழ்நாளில் கண்டதில்லை. அவருக்கு நாங்கள் மயக்க மருந்து செலுத்தி விட்டோம். ஆபரேஷன் முடியும் வரை அவர் உணர்வற்ற நிலையில் தான் இருந்தார். ஆனால் அவருடைய உதடுகள் மட்டும் குர்ஆனை உச்சரித்துக் கொண்டே இருந்தது.
நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் மொத்தம் மூன்று தடவைகள் ஆன்மீக ஆபரேஷன் நடந்துள்ளது
நபியாக ஆக்கப் படும் முன்பும் நடந்ததாத அபூநயீம் ரஹ் அவர்கள் தம் தலாஇல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
أن جبريل وميكائيل عليهما السلام شقا صدره وغسلاه ثم قال اقرأ باسم ربك (تفسير روح المعاني
சிறு வயதில் ஹலீமா ரழி அவர்களிடம் வளரும்போது இந்த நிகழ்வு நடந்தது
عَنْ أَنَسِ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ يَعْنِي ظِئْرَهُ فَقَالُوا إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقِعُ اللَّوْنِ قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرْئِي أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ (مسلم
கருத்து- அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள். சிறு வயதில் நபி ஸல் அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ஜிப்ரயீல் அலை அங்கு வந்து நபி ஸல் அவர்களைப் பிடித்து நெஞ்சைப் பிளந்து இருதயத்தை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சதைத் துண்டை வெளியே எடுத்தார்கள். பின்பு இது ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கும் ஷைத்தானின் பங்காகும் என்று கூறி அதை நீக்கி விட்டு ஒரு தங்கத் தட்டில் இருதயத்தை வைத்து, ஜம்ஜம் நீரால் கழுவி பின்பு இருதயத்தை இருந்தவாறே வைத்து விட்டார்கள். நபி ஸல் அவர்களின் கண் பார்க்கவே இச்சம்பவம் நடந்தது. வலி எதுவுமே இல்லா விட்டாலும் ஒருவித பயம் நபி ஸல் அவர்களை ஆட்கொண்டது. இச்சம்பவம் நடைபெற ஆரம்பிக்கும்போதே அன்னை ஹலீமா ரழி அவர்களின் குழந்தைகள் ஓடிச் சென்று தன் தாயாரிடம் முஹம்மதை யாரோ கொன்று விட்டார்கள் என்று சொல்லி அவர்களை அழைத்து வந்தார்கள். அழுது கொண்டே அவர்கள் வந்து பார்த்த போது நபி ஸல் அவர்கள் நல்ல படியாக ஆபரேஷன் முடிந்து பயந்த படி நின்று கொண்டிருந்தார்கள். இச்சம்பவத்திற்குப் பிறகு தான் இனி நம்மிடம் இந்தக் குழந்தை இருந்தால் ஏதேனும் இதுபோல் நடைபெறலாம் என்று பயந்து நபி ஸல் அவர்களின் நான்காம் வயதில் தாயிடமே கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.
பைத்துல் முகத்தஸ் செல்லும் வழியில் நபி (ஸல்) அவர்கள் பார்த்த காட்சிகளும் படிப்பினைகளும்
عَنْ اِبْن عَبَّاس قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " لَمَّا أُسْرِيَ بِي مَرَّتْ بِي رَائِحَة طَيِّبَة فَقُلْت مَا هَذِهِ الرَّائِحَة ؟ قَالَ مَاشِطَة بِنْت فِرْعَوْن(وفي رواية خادمة لبنات فرعون) وَأَوْلَادهَا سَقَطَ الْمُشْط مِنْ يَدهَا فَقَالَتْ بِسْمِ اللَّه فَقَالَتْ بِنْت فِرْعَوْن أَبِي قَالَتْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك قَالَتْ أَوَلَك رَبّ غَيْر أَبِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك اللَّه . قَالَ فَدَعَاهَا فَقَالَ أَلَك رَبّ غَيْرِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك اللَّه عَزَّ وَجَلَّ .قَالَ فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاس فَأُحْمِيَتْ ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى فِيهَا قَالَتْ إِنَّ لِي إِلَيْك حَاجَة قَالَ مَا هِيَ ؟ قَالَ تَجْمَع عِظَامِي وَعِظَام وَلَدِي فِي مَوْضِع قَالَ ذَاكَ لَك لِمَا لَك عَلَيْنَا مِنْ الْحَقّ قَالَ فَأَمَرَ بِهِمْ فَأُلْقُوا وَاحِدًا وَاحِدًا حَتَّى بَلَغَ رَضِيعًا فِيهِمْ فَقَالَ يَا أُمَّهْ قَعِي وَلَا تَقَاعَسِي فَإِنَّك عَلَى الْحَقّ " قَالَ وَتَكَلَّمَ أَرْبَعَة فِي الْمَهْد وَهُمْ صِغَار هَذَا وَشَاهِد يُوسُف وَصَاحِب جُرَيْج وَعِيسَى اِبْن مَرْيَم عَلَيْهِ السَّلَام (تفسير ابن كثير)
மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கிச் செல்லும் வழியில் அருமையான வாசனையை நபி ஸல் அவர்கள் உணர்ந்து இது என்ன வாசனை என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்க, இதுதான் ஃபிர்அவ்னின் பெண் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த மாஷிதா மற்றும் அவரது சிறு குழந்தைகளின் கப்ருகளாகும். இந்தப் பெண்ணும் கணவரும் குழந்தைகளும் ஆசியா அம்மையாருக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றனர். ஒருநாள் வழக்கம்போல் ஃபிர்அவ்னின் மகள் ஒருத்திக்கு இவர் தலைவாரிக் கொண்டிருந்தார். (ஆசியா அம்மையார் மூலமாக பிறந்த பிள்ளை அல்ல. ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்னால் நெருங்கவே முடியவில்லை. அவனின் நுத்ஃபாவை அந்த அம்மையாருக்கு அல்லாஹ் ஹராமாக்கி விட்டான். விபரம் பின்பு கூறப்படும்.) அவ்வாறு தலைவாரியபோது சீப்பு கீழே விழுந்து விட, தன்னை மறந்து இதுநாள் வரை ஈமானை மறைத்து வைத்திருந்த சிந்தனை இன்றி பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அந்த சீப்பை எடுக்க, அது கேட்ட ஃபிர்அவ்னின் மகள் யார் அந்த அல்லாஹ் என் தந்தை தானே என்றாள். இல்லை. உண்மையான இறைவன். உன் தந்தைக்கும் நமக்கும் எல்லோருக்கும் அவன் தான் ரப்பு என்று உண்மையைக் கூறி விட, அவள் உடனே சென்று தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். அவன் உடனடியாக மாஷிதா அம்மையாரை அழைத்து வரச் சொன்னான். என்னையன்றி வேறு கடவுள் உனக்கு உண்டா என்று கேட்க, அந்த அம்மையாரின் பதில் உறுதியாக இருந்த து. ஆத்திரம் அடைந்த அவன் ஒரு ராட்சதச் சட்டியில் மாட்டின் தலை அளவுக்கு உள்ள ஈயத்தை உருக்கி அந்த அம்மையாரையும் அவரின் சின்னஞ்சிறு பிள்ளைகளையும் அதில் போட்டான். அதற்கு முன்பு அந்த அம்மையாரிடம் உனது கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது உடலும் என் பிள்ளைகளின் உடலும் கருகிய பின் எங்கள் அனைவரின் எலும்புக்கூடுகளை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு ஃபிர்அவ்ன் என்னுடைய விசுவாசமான வேலைக்காரி என்பதால் அவ்வாறே செய்கிறேன் என்றான். அதற்குப் பின் ஒவ்வொருவராக கொதிக்கும் அந்தச் சட்டியில் தூக்கிப் போடப்பட்டது. முதலில் மூத்த குழந்தை பிறகு அடுத்த குழந்தை என அந்த அம்மையாரின் கண்ணெதிரே போடப்பட்டது. இறுதியாக அந்தப் பெண்ணையும் பிறந்து சில நாட்களே ஆன அவருடைய ஆண் குழந்தையையும் ஒன்றாக கொதிக்கும் அந்தச் சட்டியில் போடும்போது அந்த அம்மையார் தன் பிஞ்சுக் குழந்தையை நினைத்து தயங்கியபோது அந்தக்குழந்தை வாய் திறந்து அம்மா.... நீங்கள் சத்தியத்தின் மீது இருக்கிறீர்கள். கலங்காதீர்கள். பின் வாங்காதீர்கள். என்று பேசியது. இறுதியில் அவ்விருவரும் போடப்பட்ட பின் உடல் கருகி இறந்தனர். தொட்டில் குழந்தையாக இருந்து பேசிய குழந்தைகளில் இதுவும் ஒன்று. சுமார் பத்து குழந்தைகள் இவ்வாறு பேசியதாக சில தஃப்ஸீர்களில் உள்ளது.
இன்னும் சில அறிவிப்புகளில் கீழ்காணும் விபரங்கள் உள்ளன
فقال لها : ويحك اكفري بإلهك وقري أني إلهك قالت لا أفعل فمدها بين أربعة أوتاد ثم أرسل عليها الحيات والعقارب وقال لها : اكفري بالله وإلا عذبتك بهذا العذاب شهرين فقالت لو عذبتني سبعين شهراً ما كفرت بالله وكان لها ابنتان فجاء فابنتها الكبرى فذبحها على قلبها ثم قال اكفري بالله وإلا ذبحت الصغرى على فيك وكانت رضيعاً فقالت لو ذبحت من في الأرض على فيّ ما كفرت بالله عزّ وجلّ فأتى بابنتها فلما اضطجعت على صدرها وأراد ذبحها جزعت المرأة فأطلق الله لسان ابنتها فتكلمت وهي من الأربعة الذين تكلموا في المهد صغاراً أطفالاً وقالت يا أماه لا تجزعي فإن الله قد بنى لك بيتاً في الجنة فاصبري فإنك تفضين إلى رحمة الله وكرامته فذبحت فلم تلبث الأم أن ماتت فأسكنها الله الجنة قال : وبعث في طلب زوجها حزقيل فلم يقدروا عليه فقيل لفرعون إنه قد رؤي في موضع كذا في جبل كذا فبعث رجلين في طلبه فانتهى إليه الرجلان , وهو يصلي وثلاثة صفوف من الوحش خلفه يصلون فلما رأوا ذلك انصرفوا فقال , حزقيل : اللّهم إنك تعلم أني كتمت إيماني مائة سنة ولم يظهر عليّ أحد فأيما هذين الرجلين كتم عليّ فاهده إلى دينك وأعطه من الدنيا سؤاله وأيما هذين الرجلين أظهر عليّ فعجل عقوبته في الدنيا واجعل مصيره في الآخرة إلى النار فانصرف الرجلان إلى فرعون فأما أحدهما فاعتبر وآمن وأما الآخر فأخبر فرعون بالقصة على رؤوس الملأ فقال له فرعون وهل معك غيرك قال نعم فلان فدعا به فقال أحق ما يقول هذا قال ما رأيت مما يقول شيئاً فأعطاه فرعون وأجزل وأما الآخر فقتله ثم صلبه (تفسير خازن
சில அறிவிப்புகளில் அப்பெண்ணை கட்டி வைத்து தேள்களையும் அவர் மீது சாட்டியதாகவும் அதன் பின்பு அந்த அம்மையாரிடம் இப்போதாவது என்னை இறைவன் என ஏற்கிறாயா இல்லை இன்னும் இரண்டு மாதங்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறாயா என்று கேட்க நீ இவ்வாறு எழுபது மாதங்கள் என்னை வேதனை செய்தாலும் நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப் பின்பு தான் கொதிக்கும் ஈயத்தில் போடப்பட்டது. மேலும் இவர்களைக் கொன்ற பின் அந்த அம்மையாரின் கணவரைத் தேடும்படி ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். அவர் ஒரு மலைப்பகுதியில் இருக்கிறார் என்று தெரிந்து அவரைக் கொண்டு வர இருவரை ஃபிர்அவ்ன் அனுப்பினான். அவ்விருவர் அந்த மலைப்பகுதிக்குச் சென்று அவருக்கு அருகில் நெருங்க முயற்சித்த போது திடுக்கிட்டனர், காரணம் அவர் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் அணி வகுத்து வன விலங்குகள் பாதுகாப்புக்கு நின்றன. உடனே அவ்விருவரும் திரும்பி விட்டனர். ஆனால் அவர் இவ்விருவரையும் கவனித்து விட்டார். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் நூறு வருடமாக என் ஈமானை மறைத்து வைத்திருந்தேன். எப்படியோ இவ்விருவரும் என்னைப் பார்த்து விட்டனர். யாஅல்லாஹ் இவ்விருவரில் யார் இந்த இரகசியத்தை ஃபிர்அவ்னிடம் சொல்லாமல் மறைக்கிறாரோ அவருக்கு ஹிதாயத்தை தா.. சுவனத்தைத் தா.. யார் இதை ஃபிர்அவ்னிடம் சென்று சொல்வாரோ அவரை இங்கேயே தண்டித்து விடு.. அவருக்கு நரகத்தைத் தா.. என துஆச் செய்தார். அவ்வாறே அவர்களில் ஒருவர் ஈமான் கொண்டு முஸ்லிமாகி விட்டார். பார்த்த செய்தியை ஃபிர்அவ்னிடம் மறைத்து விட்டார். இன்னொருவன் ஃபிர்அவ்னிடம் சென்று தான் கண்ட காட்சியை அப்படியே சொல்ல ஃபிர்அவ்ன் அதை நம்பாமல் உன்னோடு இருந்தவர் எங்கே என்று கேட்டு அவரை வரவழைத்து அவரிடம் விபரம் கேட்க, நாங்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இவர் கூறுவது போல் எந்தக் காட்சியையும் நான் பார்க்கவில்லை என்றார். அவருக்கு வெகுமதியைக் கொடுத்த ஃபிர்அவ்ன் உண்மையைச் சொன்ன இன்னொருவனைக் கொன்று சிலுவையில் அறைய உத்தரவிட்டான்-
தஃப்ஸீர் காஜின்
படிப்பினை- அல்லாஹ் முஃமினைக் காப்பாற்றவும் செய்வான். ஷஹீதாக்கி அந்தஸ்தை உயர்த்தவும் செய்வான்
மாஷிதா அம்மையாரின் நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்த ஆசியா அம்மையார் இஸ்லாத்தை ஏற்றார்கள்
وذلك كله بعين امرأة فرعون وسمعت كلام روح ابنها الأكبر ، ثم الأصغر ، فآمنت امرأة فرعون ، وقبض روح امرأة خازن فرعون ، وكشف الغطاء عن ثوابها ومنزلتها وكرامتها في الجنة لامرأة فرعون حتى رأته فازدادت إيمانا ويقينا وتصديقا ، واطلع فرعون على إيمانها ، فخرج إلى الملأ ، فقال لهم : ما تعلمون من آسية بنت مزاحم ؟ فأثنوا عليها ، فقال لهم : وإنها تعبد ربا غيري ، فقالوا له : اقتلها ، فأوتد لها أوتادا ، وشد يديها ورجليها فدعت آسية ربها فقالت : ( رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين (11) ) فكشف لها الغطاء فنظرت إلى بيتها في الجنة ووافق ذلك أن حضرها فرعون وضحكت حين رأت بيتها في الجنة ، فقال فرعون : ألا تعجبون من جنونها ، إنا نعذبها وهي تضحك فقبض روحها (تفسير مجاهد)
மாஷிதா அம்மையாருக்கு ஃபிர்அவ்ன் கொடுமைகளை ஆசியா அம்மையார் பார்த்து வேதனைப்பட்டார்கள். மாஷிதா அம்மையாரின் ஒவ்வொரு குழந்தைகளாக ஃபிர்அவ்ன் கொல்லும் நேரத்தில் அவர்களின் ஆன்மா மேலேறிச் செல்லும்போது தனது தாய்க்கு சுபச்செய்தி சொல்லும் காட்சியை ஆசியா அம்மையார் பார்த்தார்கள். இறுதியாக மாஷிதா அவர்களையும் ஃபிர்அவ்ன் கொன்றபோது அல்லாஹ் வானத்தின் திரைகளை விலக்கி ஆசியா அம்மையாரின் கண்களுக்கு இறந்த மாஷிதா அவர்களின் அந்தஸ்தையும் சிறப்பையும் அறிய வைத்தான். இது அவர்களின் ஈமானை இன்னும் அதிகமாக்கியது. இறுதியில் தன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்ற விபரம் ஃபிர்அவ்னுக்குத் தெரிய வந்த போது ஃபிர்அவ்ன் தனது சபையினரைக் கூட்டி, என் மனைவி ஆசியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான்.
அவர்கள் ஆரம்பத்தில் புகழ்ந்து பேசினார்கள். பின்பு ஃபிர்அவ்ன் கூறினான் அவள் என் அல்லாத வேறு கடவுளை வணங்குகிறாள் என்றவுடன் அனைவரும் அப்படியே அந்தர் பல்டி அடித்து அவளை உடனே கொல்ல வேண்டும் என்று கொக்கரித்தனர். இறுதியில் தன் மனைவியையே கொல்லும்படு ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போடவிருக்கும் நிலையில் அந்த அம்மையார் மேற்படி துஆவைச் செய்தார்கள். அல்லாஹ் அதை அப்படியே ஏற்றான். அவர்கள் கல்லை தூக்கிப் போடுவதற்கு சில நொடிகள் முன்பே உயிர் கைப்பற்றப்பட்டது. கடைசி நேரத்தில் சுவனத்தைப் பார்த்தவர்களாக சிரித்தபடி இருக்க வெறும் உடம்பின் மீது கல்லைப் போட்டார்கள். அங்கு வந்த ஃபிர்அவ்ன் பைத்தியக்காரி இவளை நான் கொல்லுகிறேன். இவளோ சிரிக்கிறாள் என்றானாம்.
ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்ன் திருமணம் செய்தது பற்றிய விபரம்
ஆசியா அம்மையார் இஸ்லாத்திற்கு வரும் முன்பே நல்ல பெண்ணாக இருந்தார்கள். அழகாக இருந்ததால் அவரது பெற்றோரிடம் ஃபிர்அவ்ன் பெண் கேட்ட போது இந்த அம்மையாருக்கோ பெற்றோருக்கோ துளியளவும் விருப்பம் இல்லை. ஃபிர்அவ்னின் அடக்கு முறைக்கு பயந்து திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும் ஃபிர்அவ்ன் அந்த அம்மையாரை நெருங்கும்போதெல்லாம் அவனின் ஆணுறுப்பு சுருங்கி ஆண்மையற்றவனாக ஆகி விடுவான். இறுதி வரை அந்த அம்மையாரை அவனால் நெருங்க முடியவில்லை என சில தஃப்ஸீர்களில் கூறப்பட்டுள்ளது.
மூதாதையர்களின் நல்வாழ்த்தைப் பெற்ற பிறகே விண்ணுலகப் பயணம் நடந்தேறியது.
முக்கியமான பயணம் புறப்படும்போது நல்லோர்களின் ஆசியைப் பெறவேண்டும் என்பதை பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களையும் சந்தித்த நிகழ்வு உணர்த்துகிறது
நாம் பார்க்கும் கண்ணாக அல்லாஹ் ஆகி விடும்போது
எவ்வளவு தூரத்தில் உள்ளதையும் இங்கிருந்த படியே பார்க்க முடியும்.
காஃபிர்கள் மிஃராஜை பொய்ப்படுத்தும் விதமாக பைத்துல் முகத்தஸை நேரில் பார்த்த படி வர்ணிக்கச் சொன்ன போது நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் பைத்துல் முகத்தஸைக் காட்டிக் கொடுத்தான். அதைப் பார்த்த படியே வர்ணித்தார்கள்.
عن جَابِر رَضِيَ اللَّه عَنْهُ يُحَدِّث أَنَّهُ سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " لَمَّا كَذَّبَتْنِي قُرَيْش حِين أُسْرِيَ بِي إِلَى بَيْت الْمَقْدِس قُمْت فِي الْحِجْر فَجَلَّى اللَّه لِي بَيْت الْمَقْدِس فَطَفِقْت أُخْبِرهُمْ عَنْ آيَاته وَأَنَا أَنْظُر إِلَيْهِ (بخاري) بَاب حَدِيثِ الْإِسْرَاءِ –كتاب مناقب الأنصار
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ (بخاري) باب التَّوَاضُعِ - كتاب الرقاق
அல்லாஹ் பேசுகிறான். என்னுடைய அடியான் ஃபர்ளுகளைக் கொண்டு மட்டும் என்னை நெருங்கி விட முடியாது. உபரியான வணக்கங்கள் மூலமாக அடியான் என்னை நெருங்கும்போது நான் அவனை நேசிக்க ஆரம்பித்து விடுகிறேன். எப்போது என் அடியானை நான் நேசிக்க ஆரம்பித்து விடுவேனோ அவன் கேட்கும் காதாக நான் ஆகி விடுவேன். அவன் பார்க்கும் கண்ணாக நான் ஆகி விடுவேன். அவன் பிடிக்கும் கரங்களாக, நடக்கும் கால்களாக நான்ஆகி விடுவேன்.விளக்கம்-அடியானின் காரியங்கள் அனைத்தையும் நலவுகளாக மாற்றி விடுவேன்.
அபூபக்கர் ரழி அவர்களுக்கு சித்தீக் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்த மிஃராஜ் பயணம்
قَالَ أَبُو سَلَمَة فَتَجَهَّزَ نَاس مِنْ قُرَيْش إِلَى أَبِي بَكْر فَقَالُوا هَلْ لَك فِي صَاحِبك يَزْعُم أَنَّهُ جَاءَ إِلَى بَيْت الْمَقْدِس ثُمَّ رَجَعَ إِلَى مَكَّة فِي لَيْلَة وَاحِدَة فَقَالَ أَبُو بَكْر أَوَقَالَ ذَلِكَ ؟ قَالُوا نَعَمْ قَالَ فَأَنَا أَشْهَد لَئِنْ كَانَ قَالَ ذَلِكَ لَقَدْ صَدَقَ قَالُوا فَتُصَدِّقهُ فِي أَنْ يَأْتِي الشَّام فِي لَيْلَة وَاحِدَة ثُمَّ يَرْجِع إِلَى مَكَّة قَبْل أَنْ يُصْبِح؟ قَالَ نَعَمْ أَنَا أُصَدِّقهُ بِأَبْعَد مِنْ ذَلِكَ أُصَدِّقهُ بِخَبَرِ السَّمَاء قَالَ أَبُو سَلَمَة فَبِهَا سُمِّيَ أَبُو بَكْر الصِّدِّيق (دلائل النبوة)
தொழுகை கடமையாக்கப்பட்ட நினைவு நாளில் தொழுகையை தவறாமல் கடைபிடிப்பதாக உறுதி கொள்வோம்
(وفي حدبث ليلة الاسراء) فَلَمْ أَزَلْ أَرْجِع بَيْن رَبِّي وَبَيْن مُوسَى وَيَحُطّ عَنِّي خَمْسًا خَمْسًا حَتَّى قَالَ : يَا مُحَمَّد هُنَّ خَمْس صَلَوَات فِي كُلّ يَوْم وَلَيْلَة بِكُلِّ صَلَاة عَشْر فَتِلْكَ خَمْسُونَ صَلَاة وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلهَا كُتِبَتْ لَهُ حَسَنَة فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ عَشْرًا (تفسير ابن كثير)
عنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ حَيْثُ يُنَادَى بِهِنّ (رواه البيهقى فى شعب الإيمان) (كنز العمال) عن أبي سعيد رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إن الله تعالى لم يفترض شيئا أفضل من التوحيد والصلاة ولو كان شيء أفضل منهما لافترضه الله على ملائكته منهم راكع ومنهم ساجد (كنز العمال)
ஒருவருக்கு ஒரு தொழுகை தவறுவது அவருடைய ஒட்டு மொத்த சொத்து சுகங்களும் பறிபோனதற்குச் சமம்
عَنْ بْنِ عُمَرَ رض أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ (بخاري) باب إِثْمِ مَنْ فَاتَتْهُ الْعَصْرُ- كتاب مواقيت الصلاة
புறம் பேசுபவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் மிஃராஜில் நபியவர்களுக்கு காட்டப்பட்டது
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ (ابوداود)
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الْغِيبَةُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدْ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهَتَّهُ (ابوداود)
இருப்பதைப் பேசுவது தான் புறம். இல்லாததைப் பேசினால் இட்டுக்கட்டு.
வட்டி உண்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதும் மிஃராஜில் நபிகளாருக்கு காட்டப்பட்டது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجِ بُطُونِهِمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرَائِيلُ قَالَ هَؤُلَاءِ أَكَلَةُ الرِّبَا (ابن ماجة) بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا- كِتَاب التِّجَارَاتِ- عَنْ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَحَدٌ أَكْثَرَ مِنْ الرِّبَا إِلَّا كَانَ عَاقِبَةُ أَمْرِهِ إِلَى قِلَّةٍ (ابن ماجة) بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا- كِتَاب التِّجَارَاتِ
மிஃராஜ் இரவில் பாலை நபி ஸல் அவர்கள் தேர்ந்தெடுத்ததும் அதன் படிப்பினைகளும்
ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ (مسلم) ومعناه والله أعلم اخترتَ علامة الاسلام والاستقامة وجعل اللبنَ علامة لكونه سهلا طيبا طاهرا سائغا للشاربين سليم العاقبة وأما الخمر فانها أم الخبائث وجالبة لأنواع من الشر فى الحال والمآل والله أعلم- قال الله تعالي وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ (66النحل)
பால் தூய்மையான பானம். என்பதால் இஸ்லாத்தை பாலுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. மாட்டிலிருந்து கறக்கப் படும்போது சுத்தமான பாலாக இருக்கிறது. பிறகு தான் அது பல வடிவங்களில் தயிர், மோர், வெண்ணெய், நெய், டீ, காஃபி, கேக், பால்கோவா என பல வடிவங்களில் மாறுகிறது அதேபோல் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கிறது அதன் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றுகிறார்கள் என்பதும் பாலின் பரிசுத்தத் தன்மையை மனிதர்கள் பல வடிவங்களில் மாற்றுகிறார்கள் என்பது போன்றாகும். மிஃராஜ் இரவில் பாலை தேர்ந்தெடுத்ததை பரிசுத்த இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததற்குச் சமமாக கூறப்பட்டுள்ளது.
பாலை கனவில் காண்பது கூட நல்ல விஷயங்களுக்கான அறிகுறியாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது
عن ابْن عُمَرَ قَالَ قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَطْرَافِي وفي رواية مِنْ أَظْفَارِي فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ مَنْ حَوْلَهُ فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ (بخاري)-كتاب التعبير
மிஃராஜ் இரவில் இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மூன்று அற்புதமான பாக்கியங்கள்
فَأُعْطِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ وَغُفِرَ لِمَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ مِنْ أُمَّتِهِ شَيْئًا الْمُقْحِمَاتُ (مسلم) بَاب فِي ذِكْرِ سِدْرَةِ الْمُنْتَهَى-كِتَاب الْإِيمَانِ ( المقحمات ) معناه الذنوب العظام الكبائر التي تهلك أصحابها وتوردهم النار وتقحمهم إياها والتقحم الوقوع في المهالك ومعنى الكلام من مات من هذه الأمة غير مشرك بالله غفر له المقحمات ]
خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ لَقِيتُ أَبَا مَسْعُودٍ عِنْدَ الْبَيْتِ فَقُلْتُ حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ فِي الْآيَتَيْنِ فِي سُورَةِ الْبَقَرَةِ فَقَالَ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ (مسلم) (بخاري) باب فَضْلُ الْبَقَرَةِ- فضائل القرآن (كفتاه ) حفظتاه من الشر ووقتاه من المكروه قيل أغنتاه عن قيام الليل وذلك لما فيهما من معاني الإيمان والإسلام والالتجاء إلى الله عز و جل والاستعانة به والتوكل عليه وطلب المغفرة والرحمة منه ]
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ بَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِىِّ صلى الله عليه وسلم سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِىٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلاَّ أُعْطِيتَهُ.(مسلم) باب فَضْلِ الْفَاتِحَةِ وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ وَالْحَثِّ عَلَى قِرَاءَةِ الآيَتَيْنِ مِنْ آخِرِ الْبَقَرَةِ.-كتاب صلاة المسافربن - عَنْ حُذَيْفَةَ قَالَ فُضِّلَتْ هَذِهِ الْأُمَّةُ عَلَى سَائِرِ الْأُمَمِ بِثَلَاثٍ جُعِلَتْ لَهَا الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَجُعِلَتْ صُفُوفُهَا عَلَى صُفُوفِ الْمَلَائِكَةِ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَا وَأُعْطِيتُ هَذِهِ الْآيَاتِ مِنْ آخِرِ الْبَقَرَةِ مِنْ كَنْزٍ تَحْتَ الْعَرْشِ لَمْ يُعْطَهَا نَبِيٌّ قَبْلِي (مسند أحمد)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக