07-01-2026
رجب - 19 بسم الله الرحمن الرحيم
அதிகாலையின் பரக்கத்தும் ஃபஜ்ரு தொழுகையும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
அதிகாலை நேரம் என்பது இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மாபெரும் பாக்கியமாகும். அதிகாலை ஃபஜ்ர் தொழுது விட்டு நம்முடைய காரியங்களைத் துவங்கும்போது அதில் நிறைய பரக்கத்துகளை அல்லாஹ் வைத்துள்ளான். ஆனால் குளிர்காலம் வந்தாலே இந்த பரக்கத்தான நேரத்தை பயன்படுத்துவதிலும் ஃபஜ்ர் தொழுவதிலும் நம்மில் பலருக்கு மிகப் பெரும் சிரமம் ஏற்பட்டு விடுகிறது.
வெப்பத்தை தாங்கி கொள்ளும் சில உடல்கள் குளிரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின் வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பனிப்பொழிவாலும், குளிராலும் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுவதை நாம் அறிவோம். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பாக்கியசாலிகள் என்று கூறினாலும் அது ஆச்சரியமல்ல. மற்ற நாடுகளை விட இங்கு குளிர் குறைவாக உள்ளது. எனவே இந்த தலைப்பின் கீழ் அதிகாலையின் மகத்துவம் பற்றியும், சிரமப்பட்டு செய்யும் நற்காரியங்களுக்கு சிறந்த நற்கூலி உண்டு என்பதைப் பற்றியும் குளிர் எவ்வாறு ஏற்படுகிறது என்பதைப் பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெற்றுள்ள படிப்பினைக்குரிய விஷயங்களைப் பற்றியும் நரகத்தின் கடுமையான குளிரைப் பற்றியும் இங்கு காண்போம்.
வெயில் காலமும் குளிர் காலமும் மழைக் காலமும் மாறி மாறி வருவதில் அல்லாஹ் நமக்கு நிறைய படிப்பினைகளை வைத்துள்ளான்.
لِإِيلَافِ قُرَيْشٍ (1) إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ (2) فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ (3) الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ (4)
وكانت إحدى الرحلتين إلى اليمن في الشتاء، لأنها بلاد حامية، والرحلة الأخرى في الصيف إلى الشام، لأنها بلاد باردة. وعن ابن عباس أيضا قال: كانوا يشتون بمكة لدفئها، ويصيفون بالطائف لهوائها. وهذه من أجل النعم أن يكون للقوم ناحية حر تدفع عنهم برد الشتاء، وناحية برد تدفع عنهم حر الصيف؛ فذكرهم الله تعالى هذه النعمة. (قرطبي)
குளிர் காலத்திலும் வெயில் காலத்திலும் குரைஷிகளுக்கு இரண்டு விதமான வெவ்வேறு பயணங்கள் இருந்ததை அல்லாஹ் தனது அருட்கொடையாக விபரித்துக் காட்டியுள்ளான். குளிர் காலம் வந்தால் யமன் நாட்டுக்குப் பயணம் செய்வார்கள். அங்கு தங்களது வியாபாரங்களை அமைத்துக் கொள்வார்கள். காரணம் அது வெப்பமாக பூமி என்பதால் குளிருக்கு பொருத்தமாக இருக்கும். வெயில் காலம் வந்தால் ஷாம் தேசத்திற்குப் பயணம் செய்து அங்கு தங்களது வியாபாரங்களை அமைத்துக் கொள்வார்கள். காரணம் அது குளிரான பூமி என்பதால் வெயிலுக்குப் பொருத்தமாக இருக்கும்.
மற்றொரு அறிவிப்பில் குளிர் காலம் வந்தால் எங்கும் செல்லாமல் மக்காவில் தங்கி விடுவார்கள். காரணம் அது வெப்பமான பூமியாகும். வெயில் காலம் வந்தால் தாயிஃபுக்குச் செல்வார்கள். காரணம் அது குளிரான பூமியாகும். இன்றைக்கும் ஹஜ் உம்ராவுக்குச் செல்லும்போது மதீனாவில் அதிகமான குளிர் இருப்பதைக் காண்கிறோம். மக்காவில் குளிர் குறைவாக இருப்பதைக் காண்கிறோம். ஆக பருவங்கள் மாறி மாறி வருவதில் பல்வேறு விதமான பயணங்களுக்கும் அதனால் ஏற்படும் பலன்களுக்கும் அது காரணமாக அமைகின்றன.
பனியும் வெயிலும் மாறி மாறி வருவதன் பலன் பற்றி தஃப்ஸீர் RAAZEE –யிலே கூறப்பட்டுள்ள விளக்கம்.
சில கனிகளுக்கு கோடை காலம் தான் சீசன். சில கனிகளுக்கு குளிர் காலம் தான் சீசன். இது அல்லாஹ்வின் ஏற்பாடு
أما ارتفاع الشمس وانحطاطها فقد جعله الله تعالى سبباً لإقامة الفصول الأربعة ففي الشتاء تغور الحرارة في الشجر والنبات فيتولد منه مواد الثمار ويلطف الهواء ويكثر السحاب والمطر ، ويقوي أبدان الحيوانات بسبب احتقان الحرارة الغريزية في البواطن ، وفي الربيع تتحرك الطبائع وتظهر المواد المتولدة في الشتاء فيطلع النبات وينور الشجر ويهيج الحيوان للسفاد ، وفي الصيف يحتدم الهواء فتنضج الثمار وتنحل فضول الأبدان ، ويجف وجه الأرض ، ويتهيأ للبناء والعمارات ، وفي الخريف يظهر اليبس والبرد فتنتقل الأبدان قليلاً قليلاً إلى الشتاء ، فإنه إن وقع الانتقال دفعة واحدة هلكت الأبدان وفسدت ،(تفسير الرازي)
கடும் குளிர் கலந்த சூறாவளி காற்றின் மூலம் ஆது சமூகத்தினர் அழிக்கப் பட்டார்கள்
قَالَ تَعَالَى " فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا (حم السجدة16) " قَالَ بَعْضهمْ وَهِيَ الشَّدِيدَة الْهُبُوب وَقِيلَ الْبَارِدَة وَقِيلَ هِيَ الَّتِي لَهَا صَوْت وَالْحَقّ أَنَّهَا مُتَّصِفَة بِجَمِيعِ ذَلِكَ فَإِنَّهَا كَانَتْ رِيحًا شَدِيدَة قَوِيَّة لِتَكُونَ عُقُوبَتهمْ مِنْ جِنْس مَا اِغْتَرُّوا بِهِ مِنْ قُوَاهُمْ وَكَانَتْ بَارِدَة شَدِيدَة الْبَرْد جِدًّا كَقَوْلِهِ تَعَالَى "(وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (سورة الحاقة(6)(تفسير ابن كثير)
நரகம் தன்னுடைய பனியை தானே தாங்கிக் கொள்ளாமல் நரகம் வெளிப்படுத்தும்
சிறு துளி பனியைத் தான் குளிர்காலத்தில் நாம் அனுபவிக்கிறோம்
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَتْ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الزَّمْهَرِيرِ(بخاري) باب صِفَةِ النَّارِ وَأَنَّهَا مَخْلُوقَةٌ – كتاب بدء الخلق وفي رواية للبيهقي) فَأَشَدَّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ فَمِنْ حَرِّهَا وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْبَرْدِ فَمِنْ زَمْهَرِيرِهَا- (الزَّمْهَرِير : شِدَّة الْبَرْد)
படிப்பினை - புஹாரீ இமாம் அவர்கள் “நரகம் ஏற்கெனவே படைக்கப்பட்டு விட்டது என்ற பாடத்தில் இதற்கு முந்தைய ஹதீஸை கொண்டு வருகிறார்கள். அதன் படி எங்கோ இருக்கும் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி வெப்பமும், குளிரும் பூமி வரை பரவி நம்மை வாட்டி வதைக்கிறது என்றால் நரகத்தின் வெப்பம், அல்லது குளிர் எப்படி இருக்கும் என்ற சிந்தனையை மக்களுடைய உள்ளத்தில் உண்டாக்க வேண்டியது நம் கடமையாகும். இந்தக் குளிரை தாங்க முடியாமல் காதுகளையும், முகத்தையும் முற்றிலுமாக மறைத்துக் கொண்டு காலை நேரங்களில் நாம் நடமாடுகிறோம் என்றால் அந்த நரகத்தின் கடும் குளிரை விட்டு நம்மை பாதுகாக்க எதை வைத்து மறைத்துக் கொள்ள முடியும்.
நரகத்தின் பனியில் ஒருநாள் வேதனைப்படுவது நரகத்தின் நெருப்பில் ஆயிரம் வருடம் வேதனைப்படுவதை விட பயங்கரமானது
الزمهرير:البرد القاطع وقال مقاتل بن حيان: هو شيء مثل رؤوس الإبر ينزل من السماء في غاية البرد وقال ابن مسعود : هو لون من العذاب وهو البرد الشديد حتى ان أهل النار إذا ألقوا فيه سألوا الله أن يعذبهم بالنارألف سنة أهون عليهم من عذاب الزمهرير يوما واحدا (قرطبي)
நரகவாதிகளில் சிலர் நரகத்தின் பணியில் போடப்படுவார்கள் எப்போது அவர்கள் அல்லாஹ்விடம் அதற்கு பதிலாக நரகத்தின் வெப்பத்தின் ஆயிரம் வருடம் வேண்டுமானாலும் இருந்து விடுகிறோம் என்பார்கள் அந்த அளவுக்கு நரகத்தின் பனி மிகவும் கடுமையானது ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஊசிகளை உடம்பில் குத்தினால் எப்படி இருக்குமோ அவ்வாறு இருக்கும் என முஆத் இப்னு ஹய்யான் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறியுள்ளார்கள்
உடலுக்கு சிரமம் தரும் குளிர் சுவனத்தில் இருக்காது
وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا -مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا (الدهر13) -فالمعنى لا يرون فيها شمسا كشمس الدنيا ولا قمرا كقمر الدنيا أي إنهم في ضياء مستديم لا ليل فيه ولا نهار لأن ضوء النهار بالشمس وضوء الليل بالقمر وقال ابن عباس رضي الله عنه :بينما أهل الجنة في الجنة إذ رأوا نورا ظنوه شمسا قد أشرقت بذلك النور الجنة فيقولون:قال ربنا:{لا يَرَوْنَ فِيهَا شَمْساً وَلا زَمْهَرِيراً}فما هذا النور؟ فيقول لهم رضوان: ليست هذه شمس ولا قمر ولكن هذه فاطمة وعلي ضحكا، فأشرقت الجنان من نور ضحكهما(قرطبي)وعن النبي صلى الله عليه وسلم أنه قال: "إن هواء الجنة سجسج: لا حر ولا برد" والسجسج: الظل الممتد كما بين طلوع الفجر وطلوع الشمس (قرطبي)
சுவனத்தில் இரவு, பகல் இல்லை எனும்போது குளிர் இருப்பது சாத்தியமில்லை
{لاَ يَرَوْنَ فِيهَا شَمْساً وَلاَ زَمْهَرِيراً }[ الدهر: 13] وقال عليه السلام:لا صباح عند ربك ولا مساء" والبكرة والعشي لا يوجدان إلا عند وجود الصباح والمساء (قرطبي)-فاالجواب لقوله تعالى: وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا (62مريم) أي لهم ما يشتهون من المطاعم والمشارب بكرة وعشيا أي في قدر هذين الوقتين إذ لا بكرة ثم ولا عشيا(قرطبي)ويحتمل ما قيل إنه تعالى جعل لقدر اليوم علامة يعرفون بها مقادير الغداة والعشي الثاني : أن المراد دوام الرزق كما تقول أنا عند فلان صباحاً ومساء وبكرة وعشياً تريد الدوام ولا تقصد الوقتين (تفسير الرازي)
மேற்படி வசனத்தின் விளக்கம்- உலகத்தில் நாம் பார்க்கும் சூரியனும் சந்திரனும் சுவனத்தில் இருக்காது
காரணம் சுவனவாசிகள் உடலுக்கு தீங்கு தரும் வெப்பமோ குளிரோ இல்லாத இதமான நிரந்தரமான நிழலில் எப்போதும் இருப்பார்கள்
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் சுவனவாதிகள் சொர்க்கத்தில் இருக்கும் போது ஒரு வெளிச்சத்தை பார்ப்பார்கள் அதை சூரியன் என்று எண்ணும் அளவுக்கு அந்த வெளிச்சத்தால் சுவனமே மிகவும் பிரகாசிக்கும் போது அவர்கள் அல்லாஹ்விடம் ரப்பே சுவனத்தில் சூரியனும் இருக்காது சந்திரனும் இருக்காது என்று உன்னுடைய வேதத்தில் நீ கூறியிருக்கும் போது எப்படி இந்த வெளிச்சம் என்று கேட்பார்கள் அதற்கு சுவனத்தில் பாதுகாவலரான ரிழ்வான் அலைஹிஸ்ஸலாம் கூறுவார்கள் இது சூரியனுடைய வெளிச்சம் கிடையாது சந்திரன் வெளிச்சமும் கிடையாது மாறாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள் அவர்களுடைய சிரிப்பின் வெளிப்பாடு சுவனமே பிரகாசிக்கிறது என்று கூறுவார்.
அவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உணவு உண்டு என்ற வசனத்தில் ஏற்படும் கேள்விக்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது சூரியனும் சந்திரன் இருந்தால்தானே காலை மாலை என்ற விஷயம் உண்டாகும் சுவனத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்கும்போது சுவனவாதிகள் தூங்க மாட்டார்கள் என்றிருக்க, காலை மாலை என்றால் அதற்கு என்ன விளக்கம் என்பதற்கு விரிவுரையாளர்கள் பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள் அதாவது உலக வாழ்க்கையில் காலையில் மாலையிலும் உணவு உண்ணுவதைப் போல சுவனத்தில் இரண்டு நேரங்கள் உணவு பரிமாறப்படும். ஆக இரண்டு நேர உணவு என்பதைத்தான் காலை மாலை என்று கூறப்பட்டுள்ளது இரண்டு நேரங்கள் என்பது தான் முக்கியம் காலை மாலை என்பது அல்ல. மற்றொரு அறிவிப்பில் எந்த நேரமும் அவர்களுக்கு உணவு விரும்பினால் கிடைக்கும் என்பதற்கு தான் காலையிலும் மாலையிலும் என்று கூறப்பட்டுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நெருப்பு குளிராக மாறிய போது அவர்களை துன்புறுத்தக் கூடியதாக இருக்கவில்லை
قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ (69)الانبياء - عَنْ عَلِيّ بْن أَبِي طَالِب " قُلْنَا يَا نَار كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيم " قَالَ لَا تَضُرّ بِهِ-وَقَالَ اِبْن عَبَّاس وَأَبُو الْعَالِيَة لَوْلَا أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ قَالَ" وَسَلَامًا " لَآذَى إِبْرَاهِيم بَرْدُهَا (تفسير ابن كثير)
قال أبو العالية: ولو لم يقل {بَرْداً وَسَلاماً} لكان بردها أشد عليه من حرها-وقال علي وابن عباس: لو لم يتبع بردها سلاما لمات إبراهيم من بردها-قال بعض العلماء: جعل الله فيها بردا يرفع حرها، وحرا يرفع بردها، فصارت سلاما عليه (قرطبي)
குளிரின் சிரமத்திலும் அமல்களைத் தொடர வேண்டும். அதனால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்
ஃபஜ்ரு தொழ வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருந்தாலும் கடும் பணியின் காரணமாக அவர்களால் ஜமாஅத்துக்கு வர முடியவில்லை, அப்படி இருந்தும் சிலர் காதுகளுக்கும் தலைக்கும் பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொண்டு சிரமப்பட்டு வருகின்றனர் அல்லாஹ் அப்படிப்பட்டவர்களுக்கு மேலான நற்கூலியை தருவான் சிரமப்பட்டு செய்யும் அமல்களுக்குஇத்தகைய நற்கூலி உண்டு
கடும் குளிரிலும் அதிகாலை எழுந்து உளூச் செய்து தொழுபவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (مسلم) باب فَضْلِ إِسْبَاغِ الْوُضُوءِ-كتاب الطهارة
பாவங்களை அழித்து நன்மைகளை அந்தஸ்துகளை உயர்த்தக்கூடிய நற்செயல்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள் அறிவியுங்கள் யா ரசூலுல்லாஹ் என்று சொன்னவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சிரமமான நேரத்திலும் உழுவை பரிபூரணமாக செய்வது சிரமமான நேரத்திலும் மஸ்ஜிதை நோக்கி நடையை அதிகப்படுத்துவது ஒரு தொழுகைக்கு பிறகு அடுத்த தொழுகையை எதிர்பார்த்து காத்திருப்பது ஆகியவை அந்த நற்செயல்களாகும் என்று கூறினார்கள்.
إسباغ الوضوء على المكاره أي تثنية الوضوء وتثليثه في زمان البرد الشديد ، وذلك أن الإنسان يكره ويجد المشقة والعناء بصب الماء على الجسد فإذا كرر الصب في الوضوء فقد أسبغ ووفي وأكمل ولذلك مُدح ووُعد بهذا الأجر والثواب (شرح الترمذي)
إسباغ الوضوء على المكاره يعني: في السبرات في البرد يُسبغ الإنسان الوضوء مع أنه يكره إيذاءه بهذا الماء البارد ن لكنه يفعله ابتغاء وجه الله هذا من أسباب دخول الجنة كذلك الإنسان عندما يسافر للحج او للجهاد هذا مكروهاً عنده ، لكنه كما قال تعالى:{وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ (216البقرة (شرح كتاب الرقاق) قيل: ومنها الجد في طلب الماء مع إعوازه وشراءه بالثمن الغالي(مرعاة شرح مشكاة)
பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்துகின்ற அமல்களின் வரிசையில் பனி காலத்திலும் உளூவைப் பரிபூரணமாக செய்வதின் சிறப்பைப் பற்றி மேற்படி ஹதீஸிலும் விரிவுரையிலும் உள்ளது. சிரமத்துடன் செய்யும் அமலுக்கு பெரும் நற்கூலி உண்டு என்பதும் கூறப்பட்டுள்ளது
சிரமங்களைத் தாண்டியே சுவனம் உண்டு. அந்த சிரமங்கள் என்பது கூட பொதுமக்களைக் கவனித்துத் தான். நல்லடியார்களுக்கு அதுவே சுகமானதாக இருக்கும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُجِبَتْ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ (بخاري)كتاب الرقاق ولأن عمل الخير مكروه للنفوس الأمارة بالسوء فتجد كثيراً من الناس عند عمل الخير يُرغم نفسه ويُكرهها على ذلك ولكن هذا يوصله إلى الجنة ومع هذا إذا تجاوز الإنسان هذه المكاره صارت بالنسبة إليه محابّ وصار لا يأنس إلا بهذه الأعمال كما قال النبي عليه الصلاة والسلام:( جُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ(نسائ) وقال بعض السلف: لو يعلم الملوك وأبناء الملوك ما نحن فيه لجالدونا عليه بالسيوف فالإنسان إذا اعتاد فعل الطاعة مع الإخلاص والمتابعة صارت الطاعة أحب شيء إليه ذَلِكَ (شرح كتاب الرقاق)
நற்காரியங்கள் நிய்யத்தை கவனித்து அதன் நன்மைகள் மாறுபடும்
وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا (78) الاسراء
நற்காரியங்கள் அனைத்தும் நன்மையில் சமமானவை அல்ல. நிய்யத்தை கவனித்து நன்மைகள் மாறுபடும் மேலும் அதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் சிரமங்களைக் கவனித்தும் நன்மைகள் மாறுபடும். சில நற்காரியங்களுக்கு செய்யாமலேயே நன்மைகள் கிடைக்கும். சில நற்காரியங்களை செய்தும் நன்மை கிடைக்காது.
நிய்யத் சரியில்லாததால் செய்தும் நன்மை கிடைக்காமல் போவதற்கு உதாரணம்.
(தர்மம் செய்த பிறகு அதைச் சொல்லிக் காட்டுவதால் அதற்கு நன்மை இல்லாமல் போய் விடும்)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى... (264) البقرة
நிய்யத் சரியாக இருந்தால் செய்யாமலேயே நன்மைகள் கிடைப்பதற்கு உதாரணம்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزَاةٍ فَقَالَ إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا مَا سَلَكْنَا شِعْبًا وَلَا وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ حَبَسَهُمْ الْعُذْرُ (بخاري
நபி ஸல் அவர்கள் ஒரு போரில் இருந்த போது கூறினார்கள். சில ஜனங்கள் (நம்மோடு வராமல்) மதீனாவில் தங்கி விட்டார்கள். (இருந்தாலும் அவர்கள் நம்மோடு தான் இருக்கிறார்கள்.) நாம் எந்தெந்த பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்கிறோமோ எந்தெந்த கணவாய்களைக் கடந்து செல்கிறோமோ அங்கெல்லாம் அவர்கள் நம்மோடு தான் இருக்கிறார்கள். காரணம் சூழ்நிலைகள் அவர்களைத் தடுத்துள்ளது. (ஆனால் அவர்களின் நிய்யத் நம்மோடு வர வேண்டும் என்று தான் உள்ளது.)
நாம் சகித்துக் கொள்ளும் சிரமங்களைக் கவனித்தும் நன்மைகள் மாறுபடும்
சிரமப்பட்டு எழுத்துக் கூட்டி குர்ஆனை ஓதுபவருக்கு மிகுந்த நற்கூலி உண்டு.
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ (مسلم) وفِي حَدِيثِ وَكِيعٍ وَالَّذِي يَقْرَأُ وَهُوَ يَشْتَدُّ عَلَيْهِ لَهُ أَجْرَانِ (الماهر بالقرآن) هو الحاذق الكامل الحافظ الذي لا يتوقف ولا يشق عليه القراءة لجودة حفظه وإتقانه ( ويتتعتع فيه ) هو الذي يتردد في تلاوته لضعف حفظه فله أجران أجر بالقراءة وأجر بتتعتعه في تلاوته ومشقته ]
கருத்து- குர்ஆனை சரளமாக ஓதுபவருக்கும் சிறப்பு உண்டு ஆனால் அதை சிரமப்பட்டு எழுத்துக் கூட்டி ஓதுபவருக்கு இரு மடங்கு நற்கூலி உண்டு
வாகனத்தில் வருபவரை விட நடந்து வருபவருக்கு சிறப்பு
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَلَتْ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-كِتَاب الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
மஸ்ஜிதை விட்டும் தூரமான வீடுகளைக் கொண்ட பனூஸலமா குடும்பத்தார்கள் மஸ்ஜிதுக்கு அருகில் மனைகள் காலியாக இருப்பதைக் கேள்விப்பட்டு மஸ்ஜிதுக்கு அருகில் தங்களுடைய வீடுகளை மாற்றியமைத்துக் கொள்ள நாடினார்கள். அப்போது நபி ஸல் அவர்களுக்கு இச்செய்தி கிடைத்த து. அவர்களிடம் நபி ஸல் அவர்கள் மஸ்ஜிதுக்கு அருகில் நீங்கள் இடம் பெயர நாடுகிறீர்களா என நபி ஸல் அவர்கள் கேட்க, ஆம் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.
عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَعْظَمَ النَّاسِ أَجْرًا فِي الصَّلَاةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشًى فَأَبْعَدُهُمْ وَالَّذِي يَنْتَظِرُ الصَّلَاةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنْ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-
நற்கூலியால் மக்களில் சிறந்தவர்கள் மஸ்ஜிதை நோக்கிய தூரமான நடை கொண்டவர்களாகும்.
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ رَجُلًا أَبْعَدَ مِنْ الْمَسْجِدِ مِنْهُ وَكَانَ لَا تُخْطِئُهُ صَلَاةٌ قَالَ فَقِيلَ لَهُ أَوْ قُلْتُ لَهُ لَوْ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الظَّلْمَاءِ وَفِي الرَّمْضَاءِ قَالَ مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ إِنِّي أُرِيدُ أَنْ يُكْتَبَ لِي مَمْشَايَ إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِذَا رَجَعْتُ إِلَى أَهْلِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَمَعَ اللَّهُ لَكَ ذَلِكَ كُلَّهُ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-
உபய் இப்னு கஃப் ரழி கூறினார்கள். ஒரு மனிதர் இருந்தார் மஸ்ஜிதை நோக்கி தூரமாக நடந்து வருபவர்களில் அவரை விட யாரையும் நான் கண்டதில்லை. அவரிடம் நான் நீங்கள் ஒரு கழுதையை வாங்கிக் கொள்ளக்கூடாதா என்று கேட்க, அதற்கு அவர் என்னுடைய நடை ஒவ்வொன்றுக்கும் நன்மைகள் எழுதப்படுவதை விரும்புகிறேன் என்று கூறினார். அவரைப் பற்றி நபி ஸல் கூறும்போது அவர் அனைத்து நன்மைகளை சேகரித்துக் கொண்டார் என்றார்கள்
சிரமத்துடன் செய்யும் அமலை சஹாபாக்கள் பெரும் பாக்கியமாக கருதினார்கள்
முஆத் ரழி அவர்களுக்கு மரண நேரம் நெருங்கிய போது அழுதார்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட போது நான் மவ்த் வந்து விட்டதை நினைத்து அழவில்லை மாறாக, இனி நான் ஜிஹாத் செய்ய முடியாதே என்றும், கடுமையான குளிர் காலங்களில் இரவில் நின்று வணங்க முடியாதே என்றும், கடுமையான வெயில் காலங்களில் நோன்பு வைக்கும் பாக்கியம் இனிமேல் எனக்குக் கிடைக்காதே என்பதற்காகவும் நான் அழுகிறேன் என்றார்கள்.
கஞ்சன் செய்யும் தர்மத்திற்கு அதிக நற்கூலியும் இதே அடிப்படையில் தான்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ أَنْ تَصَدَّقَ وَأَنْتَ شَحِيحٌ أَوْ صَحِيحٌ تَأْمُلُ الْعَيْشَ وَتَخْشَى الْفَقْرَ وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا كَانَتْ بِالْحُلْقُومِ قُلْتَ لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ (مسند احمد)
பனி காலத்தில் பெரும்பாலும் ஃபஜ்ரு தொழுகை பல பேருக்கு தவறி விடுகிறது
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَضْلُ صَلَاةِ الْجَمِيعِ عَلَى صَلَاةِ الْوَاحِدِ خَمْسٌ وَعِشْرُونَ دَرَجَةً وَتَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ فِي صَلَاةِ الصُّبْحِ يَقُولُ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا(78الاسراء) (بخاري)
அதிகாலை நேரத்தின் மகத்துவம் பற்றி விஞ்ஞானிகளின் கூற்று...
நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும் அவர்கள் கண்டு பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் ஒன்றரை மணி நேரம்) மனித மூளையின் ஆற்றல் 70 சதவீதமாக இருக்கிறது. ஒரு விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை- முஸ்லிம்கள் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். (MUSLIMS ARE BORN WITH SILVER SPOON IN THEIR MOUTH) அதாவது பாக்கிய சாலிகள். காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில் இருக்கும்போது ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது, தங்கள் அலுவல்களை துவங்கும்படி ஏவப்பட்டுள்ளார்கள். பெண்களின் வயிற்றில் கரு உருவாக காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில் உளூ, அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர் படும்போது பெண்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் படி ஒரு பெண் அதிகாலையில் எழுந்து குளித்து அல்லது உளூச் செய்து சுப்ஹு தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை சமச்சீராக இருக்கும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنْ اللَّيْلِ فَصَلَّى ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنْ اللَّيْلِ فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ (ابوداود)
காலையில் சுப்ஹு தொழுது விட்டு நேரத்தோடு வியாபாரத்தை துவக்க வேண்டும் என்ற நபிமொழி
عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ (ابوداود)
அதிகாலை நேரத்தில் நாமும் நேரத்தோடு எழுந்து, நம் பிள்ளைகளையும் நேரத்தோடு எழுப்பி அவர்களையும் சுப்ஹு தொழுகைக்கு அழைத்து வரும் பழக்கம் நம்மிடம் வர வேண்டும். அப்படியே அங்கு நடைபெறும் மதரஸாவிலும் அமர்ந்து நம் பிள்ளைகள் பாடம் பயின்றால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இன்று பரவலாக காலை மதரஸாக்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. காரணம் பல வீடுகளில் இரவு 11 மணி வரை கண்டதையும் பார்த்து விட்டு பிள்ளைகள் தூங்குவதால் அதிகாலை நேரத்தோடு அவர்களை எழுப்புவதற்கு பெற்றோர்களுக்கு மணம் வருவதில்லை. மாலையிலும் டியூஷன், HOME WORK என்று இதே ரீதியில் பிள்ளைகள் செல்வதால் மார்க்கக் கல்வியே இல்லாமல் பல பிள்ளைகள் வளரும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலை மாற ஒரேவழி இரவில் சீக்கிரமாக பிள்ளைகளை தூங்க வைத்து, அதிகாலை நேரத்தோடு எழுப்புவது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக