வியாழன், 1 ஜனவரி, 2026

நற்குணம்

02-01-2026
ரஜப் -12 بسم الله الرحمن الرحيم  
 நற்குணங்கள் 
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்
فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ (159) ال عمران
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ (4) القلم
இறையச்சமும் நற்குணமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள்தான் அதிகம் சுவனத்தில் இருப்பார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ (ترمذي
நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும்
عن أم سلمة زوج النبي صلى الله عليه و سلم قالت قلت يا رسول الله المرأة منا تتزوج الزوجين والثلاثة والأربعة في الدنيا ثم تموت فتدخل الجنة ويدخلون معها من يكون زوجها منهم قال يا أم سلمة إنها تخير فتختار أحسنهم خلقا فتقول أي رب إن هذا كان أحسنهم معي خلقا في دار الدنيا فزوجنيه يا أم سلمة ذهب حسن الخلق بخير الدنيا والآخرة  [ المعجم الأوسط - الطبراني ]
  உம்மு சல்மா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் யாரஸூலல்லாஹ் ஒரு பெண் ஒரு கணவர் இறந்த பின் அடுத்த கணவர் என இந்த துன்யாவுடைய வாழ்க்கையில் மூன்று அல்லது நான்கு கணவன்மார்களை திருமணம் செய்கிறாள். பின்பு அந்தப் பெண் இறந்து விடுகிறாள். நாளை மறுமை நாளில் அவளும் சுவனத்திற்குச் சென்று அந்த கணவன்மார்களும் சுவனம் சென்றால் சுவனத்தில் யாரேனும் ஒருவர் மட்டும் தானே கணவராக இருக்க முடியும். அவ்வாறிருக்க அந்தப் பெண் யாரை திருமணம் செய்வாள் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அந்தப் பெண் விருப்பம் தரப்டுவாள். இந்த உலக வாழ்க்கையில் எந்த்க கணவர் சிறந்த நற்குணத்துடன் அப்பெண்ணிடம் நடந்து கொண்டாரோ அந்தக் கணவரையே அவள் தேர்ந்தெடுப்பாள். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இவர் என்னிடம் சிறந்த நற்குணத்துடன் நடந்து கொண்டார். இவரையே எனக்குத் திருமணம் செய்து வை என துஆ செய்வாள். இவ்வாறு கூறிய நபி ஸல் அவர்கள் உம்மு சல்மாவே நற்குணம் என்பது இம்மை மறுமையில் அனைத்து நலவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் என்றார்கள்.               
படிப்பினை- இந்தக் கேள்வியை உம்மு சலமா ரழி அவர்கள் தனது நிலையை மனதில் வைத்தே கேட்டார்கள். அன்னை அவர்களுக்கு இவ்வுலகில் இதற்கு முன்பு பல கணவன்மார்கள் இருந்தாலும் மறுமையில் நபி ஸல் அவர்களே தனது கணவராக இருக்க வேண்டும் என விரும்பியிருக்கலாம். நிகாஹ் என்ற சுன்னத்தான அமல் மறுமையிலும் தொடரும் என்பதும் இதன் மூலம் புரிகிறது

வணக்க வழிபாடுகளில் சிறந்து விளங்கினாலும் நற்குணம் இல்லா விட்டால் நரகம் தான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ أَنَّهَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا قَالَ هِيَ فِي النَّارِ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ قِلَّةِ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلَاتِهَا وَإِنَّهَا تَصَدَّقُ بِالْأَثْوَارِ مِنْ الْأَقِطِ وَلَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا قَالَ هِيَ فِي الْجَنَّةِ (مسند أحمد
  மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: அஹ்மத் (9298)
நற்குணத்தின் அடையாளங்களில் சில... 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ وَصَفَ حُسْنَ الْخُلُقِ فَقَالَ هُوَ بَسْطُ الْوَجْهِ وَبَذْلُ الْمَعْرُوفِ وَكَفُّ الْأَذَى (ترمذي
நற்குணம் என்பது மலர்ந்த முகத்துடன் இருப்பது, உபகாரம் செய்வது, யாருக்கும் தீங்கு தராமல் இருப்பது என அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் கூறினார்கள்.
நிறைய நன்மைகளோடு வந்தவர் மற்றவர்களுக்கு நிறைய தீமைகள் செய்வதால் நரகம் செல்வார்
அதாவது தொழுகை இபாதத் நிறைய இருந்தும் நற்குணம் இல்லாத தால் நரகம் செல்வார்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ
பரிதாபமான ஏழை யார் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது யாரிடம் பணம் காசுகள் பொருட்கள் எதுவும் இல்லையோ அவர் தான் என்று நாங்கள் கூறினோம் அதற்கு நபி ஸல் அவர்கள் என்னுடைய உம்மத்தில் பரிதாபமான ஏழை யாரென்றால் மறுமை நாளில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய அனைத்தையும் சரியாக நிறைவேற்றியவராக வருவார். ஆனால் அவர் இன்னாரைத் திட்டியிருப்பார். இன்னார் மீது அவதூறு சுமத்தியிருப்பார். இன்னாருடைய பொருளை அபகரித்திருப்பார். இன்னாரின் உயிரைப் பறித்திருப்பார். இன்னாரை அடித்திருப்பார். எனவே இவருடைய நன்மைகளைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுக்கப்படும். இறுதியில் இவரின் நன்மைகள் தீர்ந்து விடும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மிச்சமிருப்பார்கள். தீர்ப்புகள் முடியும் முன்பே இவரின் நன்மைகள் தீர்ந்து விட்டதால் அவர்களின் பாவங்களை இவர் மீது சுமத்தப்பட்டு நரகில் வீசப்படுவார்.
நம்மால் முடிந்த வரை  பிறரை  சந்தோஷத்தப் படுத்த வேண்டுமே தவிர
தன்னுடைய சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவதை நம்முடைய மார்க்கம் தடுக்கிறது
عَن أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ أَوْ يَسْتَطِعْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالَ فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ يَأْمُرُ بِالْخَيْرِ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ يَفْعَلْ قَالَ يُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ صَدَقَةٌ (مسلم) بَاب بَيَانِ أَنَّ اسْمَ الصَّدَقَةِ يَقَعُ عَلَى كُلِّ نَوْعٍ - كِتَاب الزَّكَاةِ
ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்ய  வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறிய போது  அதற்கு இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, தம்மால் இயன்ற வரை உழைத்து அதில் தனக்கும் பயன்படுத்தி பிறருக்கும் தர் ம ம் செய்வார் என நபி ஸல் கூறினார்கள். அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு,  பொருளுதவி இல்லா விட்டாலும் துன்பத்தில் சிக்கியவருக்கு உடலால் ஒத்துழைப்புச் செய்வார் என்று கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, நன்மையை ஏவுவார் என நபி ஸல் கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, பிறருக்கு தீங்கு செய்யாமல் தடுத்துக் கொள்வதே ஒருவகை தர்மம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
தன்னுடைய கரத்தாலும் நாவாலும் பிறருக்குத் தொந்தரவு தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம். 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو  رضى الله عنهما  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ (بخاري)  عن أبي هريرة قال : (قال رجل: يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال : هي في النار. قال : يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة). أخرجه أحمد.
ஒரு பெண் அதிகம் நோன்பு வைக்கிறாள். அதிகம் தொழுகிறாள். அதிகம் தர்மமும் செய்கிறாள். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்கிறாள். அவளது நிலை என்ன என்று கேட்டதற்கு, அவள் நரகவாதி என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள். 
ஜனங்கள் நடந்து செல்லும் பாதையில் அவர்களுக்கு இடையூறு செய்வது மாபெரும் குற்றம்
عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم : إياكم والجلوس في الطرقات فقالوا : يا رسول الله مالنا بد من مجالسنا نتحدث فيها فقال: فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا  وما حقه قال : غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر. متفق عليه
பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நபி ஸல்  அவர்கள் கண்டித்த போது அல்லாஹ்வின் தூதரே அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது என தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையின் உரிமைகளைப் பேணுங்கள் என்றார்கள். அது என்ன என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, பாதையில் நடப்பவருக்குத்  தீங்கு செய்யாமல் இருப்பது, தவறான பார்வைகளை விட்டும் தற்காத்துக் கொள்வது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பது என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.                                
பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது மாபெரும் நன்மைக்குரிய செயல்
قال رسول الله صلى الله عليه وسلم (بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له) رواه مسلم.:
ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாதையில் ஒரு முள்செடியைப் பார்த்தார். மக்களுக்கு இடையூறாக இருக்குமே என்று அதை அப்புறப்படுத்தினார். அதற்காக அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து நன்றி பாராட்டினான்.
 قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبة، افضلها قول: لا اله الا الله وادناها اماطة الاذى عن الطريق) مسلم.
பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது நபி ஸல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.
عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ». (مسلم
என் உம்மத்தின் நற்செயல்கள், தீய செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் மிகச் சிறந்த நற்காரியமாக பாதையில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவதை நான் பெற்றுக் கொண்டேன். அவற்றில் மிகக்கெட்ட காரியமாக நான் கண்டது மஸ்ஜிதை ஒருவர்  எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி விட்டு அதை புதைக்காமல் (சுத்தம் செய்யாமல்) விடுவதாகும்.
நன்மையான காரியமாக இருப்பினும் பிறருக்கு தொந்தரவு கொடுத்து நிறைவேற்றப்பட்டால் நன்மை இல்லை
عن سَلْمَانُ الْفَارِسِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ فَصَلَّى مَا كُتِبَ لَهُ ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى (بخاري 
   யார் ஜும்ஆ நாளில் குளித்து தம்மிடம் உள்ள நறுமணத்தைப் பூசி பின்பு மஸ்ஜிதுக்கு வந்து அங்கு அமர்ந்திருக்கும் இருவரைப் பிரிக்காத நிலையில் அதாவது அவ்விருவரையும் தாண்டிச் செல்லாத நிலையில் உபரியான தொழுகை தொழுது பிறகு இமாம் அறையில் இருந்து குத்பாவுக்காக வெளியேறிய பின் அமைதியாக அவரது உரையைக் கேட்பாரோ அவருடைய அடுத்த ஜும்ஆ வரையிலான பாவங்கள் மன்னிக்கப்படும்.                                                          
படிப்பினை- இருவரின் பிடரிகளைத் தாண்டிச் சென்றால் ஜும்ஆவின் நன்மை இல்லை
عن ابْن عُمَرَ رَض نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا (بخاري
ஜும்ஆவிலோ மற்ற நாட்களிலோ ஒருவர் தான் அமருவதற்காக மற்றொருவரை எழுப்பி அந்த இடத்தில் அமர வேண்டாம்
عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُقِمْ أَحَدُكُمْ أَخَاهُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ  قَالَ وَكَانَ الرَّجُلُ يَقُومُ لِابْنِ عُمَرَ فَلَا يَجْلِسُ فِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ (ترمذي
நற்குணத்தின் அடையாளங்களில் ஒன்று மலர்ந்த முகம்
நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடம் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்
عَنْ جَرِيرٍ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا (بخاري6089
1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.       
كان النبي صلى الله عليه وسلم كالرجل من رجالكم ، إلا أنه كان أكرم الناس ، وألين الناس ضحّاكا بسّاما [ مكارم الأخلاق لابن أبي الدنيا
 மலர்ந்த முகத்துடன் இருக்கும்படி மற்றவர்களையும் ஏவினார்கள்
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (ترمذي) المعنى إذا بصرت رجلاً ردي البصر فأعنته كان ذلك لك صدقة
கருத்து- மற்றவர்களை சந்திக்கும்போது புன்னகை செய்வதும் தர்மம். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மம். தெரியாத ஊரில் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு வழி காட்டுவதும் தர்மம். கண் பார்வையில் தடுமாற்றம் உள்ளவருக்கு உதவுவதும் தர்மம். நடைபாதையில் கிடக்கும் கல்லையோ,  முள்ளையோ எலும்புத் துண்டையோ எடுத்து ஓரத்தில் போடுவதும் தர்மம். உன் வாளியில் இருந்து உன் உடன் பிறவா சகோதரரனின் வாளியில் நீர் ஊற்றுவதும் தர்மம். (அதாவது உணவில் அல்லது குடிபானங்களில் பங்கிட்டுத் தருவது).         
நபி ஸல் அவர்களைப் போன்ற முக மலர்ச்சி உடையவர்களைப் பார்க்க முடியாது
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه الترمذي
அநாகரீகமாக நடந்து கொண்ட கிராமவாசியிடமும் புன்னகையை வெளிப்படுத்திய நபி ஸல் அவர்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ (بخاري) باب الْبُرُودِ وَالْحِبَرَةِ وَالشَّمْلَةِ-كتاب اللباس 5809
அனஸ் ரழி கூறினார்கள். நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ”நஜ்ரான்” நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ”முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். நூல்: புகாரி 5809
தோழர்களிடம் நபி ஸல் அவர்கள் கடுகடுப்பாக இருக்காமல் 
கலகலப்பாக சிரித்துப் பேசிய நிகழ்வுகள் தான் அதிகம் உண்டு.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) 2348
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். நூல்: புகாரி 2348
முகம் கொடுத்துப் பேசவே விரும்பாதவர்களைப் போன்றில்லாமல்
 யார் பேசினாலும் நபி ஸல் அவர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள்.
عَنْ أَنَسِ رض قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ (ابن ماجة) وفي رواية بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ
தன்னிடம் பேசுபவர் அவராக தன் முகத்தைத் திருப்பும் வரை நபி ஸல் அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். யாரிடமேனும் முஸாஃபஹா செய்தால் அவராக தன் கையை விடுவிக்கும் வரை நபி ஸல் அவர்கள் தன் கையை விடுவிக்க மாட்டார்கள். தன்னோடு அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் (சபையில் தன்னை முற்படுத்தும் நோக்கத்தில்) நபி ஸல் அவர்களின் முட்டுக் கால்கள் முந்தியிருப்பதைக் காண முடியாது.         
மனநலம் குன்றிய பெண் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காத நபி ஸல்
عَنْ أَنَسٍ أَنَّ امْرَأَةً كَانَ فِى عَقْلِهَا شَىْءٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً فَقَالَ « يَا أُمَّ فُلاَنٍ انْظُرِى أَىَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِىَ لَكِ حَاجَتَكِ ». فَخَلاَ مَعَهَا فِى بَعْضِ الطُّرُقِ حَتَّى فَرَغَتْ مِنْ حَاجَتِهَا. (مسلم
மனநலம் குன்றிய பெண் எனக்கு உங்களிடம் ஒரு தேவை உள்ளது என்று கூறி நபி ஸல் அவர்களின் கையைப் பிடித்து தெருவில் அழைத்துச் சென்ற போது முகம் சுளிக்காமல் நபி ஸல் அவர்கள் இன்னாரின் அன்னையே! நீங்கள் எந்த த் தெருவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டு அந்த தெருவுக்குச் சென்று அந்தப் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்து தந்து விட்டு வந்தார்கள். 
பணியாளர்களிடமும் கடுகடுப்பைக் காட்டாத நபி ஸல் அவர்கள்
قَالَ أَنَسٌ رض كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لَا أَذْهَبُ وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ قَالَ قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَيْءٍ تَرَكْتُهُ هَلَّا فَعَلْتَ كَذَا وَكَذَا (بخاري
அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.                                 
அழகற்ற நீக்ரோவான காய்கறி வியாபாரியிடம் கண்ணா மூச்சி விளையாடிய நபி ஸல் அவர்கள்
عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا كَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنْ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا وَنَحْنُ حَاضِرُوهُ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ وَكَانَ رَجُلًا دَمِيمًا فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَهُوَ لَا يُبْصِرُهُ فَقَالَ الرَّجُلُ أَرْسِلْنِي مَنْ هَذَا فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يَشْتَرِي الْعَبْدَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ (مسند أحمد)
நபி ஸல் அவர்களிடம் ஒரு வெளியூர் காய்கறி வியாபாரி அவ்வப்போது காய்கறிகளை அன்பளிப்பாகக் கொண்டு வந்து தருவார். அவர் திரும்பிச் செல்லும்போது நபி ஸல் அவர்களும் அன்பளிப்புகள் தருவார்கள். அவர் அழகற்றவராக நீக்ரோவாக இருந்தும் நபி ஸல் அவர்கள் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபி ஸல் கட்டிப் பிடித்தார்கள். அவர் யாரது.. என்னை விடுங்கள் என்று கூறியவராக திரும்பிப் பார்த்த போது அது நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பதை அறிந்த அவர் அப்படியே தனது முதுகுடன் நபி ஸல் அவர்களின் நெஞ்சை அப்படியே இறுக்கக்  கட்டிக் கொண்டார். அப்போது நபி ஸல் அவர்கள் தமாஷாக இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே என்னை யார் வாங்குவார்கள் என்னை நீங்கள் விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசாகவே  என்னை நீங்கள்  பெற்றுக் கொள்வீர்கள் என்று அவரும் விளையாட்டாகக் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் நீங்கள் விலை மதிப்புள்ளவர்தான் என்று கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்திகாமத் - ஜும்ஆ பயான்

 20-03-2026 RAMZAN-  30 بسم الله الرحمن الرحيم          ஜும்ஆ பயான்- இஸ்திகாமத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவர...