ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

11- ம் தராவீஹ் பயான்- முதுமைப் பருவமும்

 

அறிவை மழுங்கச் செய்யும் தள்ளாத வயதை விட்டும் பாதுகாப்புத் தேடுவதும்

وَاللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ قَدِيرٌ (70)

முன்னுரை-அல்லாஹ்வுடைய படைப்பில் அற்புதமான படைப்பு மனிதன். அந்த மனிதனுக்குள் அவ்வப்போது பரிணாம மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தையாக இருக்கும்போது பலஹீனமாக இருக்கிறான். பின்பு வலிமையான வாலிபனாக மாறுகிறான். பிறகு மீண்டும் முதுமையை அடையும்போது பலஹீனம் அவனுக்கு ஏற்படுகிறது.

اَللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاء (54الروم)

وَمَنْ نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ (68) أَيْ يَتَفَكَّرُونَ بِعُقُولِهِمْ فِي اِبْتِدَاء خَلْقهمْ ثُمَّ صَيْرُورَتهمْ إِلَى سِنّ الشَّيْبَة ثُمَّ إِلَى الشَّيْخُوخَة لِيَعْلَمُوا أَنَّهُمْ خُلِقُوا لِدَارٍ أُخْرَى لَا زَوَال لَهَا وَلَا اِنْتِقَال مِنْهَا وَلَا مَحِيد عَنْهَا وَهِيَ الدَّار الْآخِرَة (تفسير ابن كثير)

கருத்து -ஒவ்வொரு  பருவத்திலும் ஒவ்வொரு மாற்றத்தை  அல்லாஹ் ஏற்படுத்துவது மட்டமான இந்த துன்யாவில் இப்படித்தான் நடக்கும் என்பதையும், உயர்வான, நிலையான சுவனத்தில் இந்த பரிணாம மாற்றங்கள் இருக்காது என்பதையும் உணர்த்துவதற்காக...

முதியவர்களாக இறந்தவர்களும் சுவனத்தில் நுழைந்தால் இளமையாக ஆக்கப் படுவார்கள்

إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً-فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا(36الواقعة) عَنْ الْحَسَن أَتَتْ عَجُوز فَقَالَتْ يَا رَسُول اللَّه اُدْعُ اللَّه تَعَالَى أَنْ يُدْخِلنِي الْجَنَّة فَقَالَ"يَا أُمّ فُلَان إِنَّ الْجَنَّة لَا تَدْخُلهَا عَجُوز"قَالَ فَوَلَّتْ تَبْكِي قَالَ"أَخْبِرُوهَا أَنَّهَا لَا تَدْخُلهَا وَهِيَ عَجُوز إِنَّ اللَّه تَعَالَى يَقُول"إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاء فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا (تفسير ابن كثير

கருத்து- ஒரு பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் சுவனத்தில் நுழைய துஆச் செய்யுங்கள் என்றார். அவரிடம் நபி ஸல் கிழவிகள் சுவனம் செல்ல மாட்டார்கள் என்று கூற, உடனே அவர் அழ ஆரம்பித்தார் அவரிடம் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் கிழவிகள் செல்ல மாட்டார்கள் என்று தான் நான் சொன்னேன் நீங்கள் சுவனம் செல்வீர்கள் ஆனால் குமரியாக செல்வீர்கள் என்று கூறி மேற்படி வசனத்தை ஓதிக் காட்டினார்கள்

முதுமைப் பருவத்தின் காலம் என்பது முந்திய உம்மத்தினர்களுக்கு அதிகமான இருந்தது. ஆயிரம் வயது வரை வாழ்ந்தார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் இருந்து தான் மனிதர்களின் ஆயுள் குறைய ஆரம்பித்தது

ولم يزل الناس ينقصون في الخلق والخلق والرزق والأجل من زمن نوح عليه السلام وقد كان أحدهم يعمر ألف سنة (نوادر الاصول)

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمْرُ أُمَّتِي مِنْ سِتِّينَ سَنَةً إِلَى سَبْعِينَ سَنَةً (ترمذي)

முந்திய உம்மத்திலும் நம்மைப்போல் குறைவான வயது கொடுக்கப்பட்டவர்கள் அபூர்வமாக இருந்தார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمُ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ قَالُوا وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ إِنَّ هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ فَقَالَ اللَّهُ لَهُ وَيَدَاهُ مَقْبُوضَتَانِ اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ فَقَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ رَجُلٌ أَضْوَؤُهُمْ أَوْ مِنْ أَضْوَئِهِمْ قَالَ يَا رَبِّ مَنْ هَذَا قَالَ هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً قَالَ يَا رَبِّ زِدْهُ فِي عُمْرِهِ قَالَ ذَاكَ الَّذِي كَتَبْتُ لَهُ قَالَ أَيْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً قَالَ أَنْتَ وَذَاكَ قَالَ ثُمَّ أُسْكِنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا فَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ قَالَ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ آدَمُ قَدْ عَجَّلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ قَالَ بَلَى وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكِ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ فَمِنْ يَوْمِئِذٍ أُمِرَ بِالْكِتَابِ وَالشُّهُودِ (ترمذي) باب- السلام عليكم تحية ادم وذريته - كِتَاب تَفْسِيرِ الْقُرْآنِ

 

கருத்து- அல்லாஹ் ஆதம் அலை அவர்களின் முதுகில் இருந்து அவருடைய சந்ததிகளை வெளியாகியபோது அவர்களிடையே அவர் நபிமார்களை கண்டார்கள் அவர்களிடையே ஒளி இலங்குகின்ற ஒரு நபியையும் கண்டார்கள். இறைவா இவர் யார் என்று கேட்டார் அவர் உம்முடைய மகனார் தாவூத் அலை என்று அல்லாஹ் கூறினான். அவருக்கு எத்தனை வயது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கேட்டார்கள் அவருக்கு 60 வயது என்று அல்லாஹ் பதில் அளித்தான். இறைவா அவருக்கு ஆயுளை அதிகப்படுத்துவாயாக என்று கேட்டுக்கொண்டார்கள் .உம்முடைய வயதில் இருந்து நான் அதிக படுத்தலாமே தவிர வேறு வழி இல்லை என்று அல்லாஹ் சொன்னான்.நபி ஆதம் அலை அவர்கள் 1000 வயது நிர்ணயிக்கப்பட்டு இருந்தார்கள் எனவே அவர் தம்முடைய வயதிலிருந்து நாற்பது வயதை அவருக்கு கொடுத்து விட்டார்கள்.

பின்னர் ஆதம் அலை உடைய ஆயுள் காலம் முடிவடைந்த போது உயிர் பறிக்கும் வானவர் வந்தார் நபி ஆதம் அலை அவர்கள் என் ஆயுளில் இன்னும் நாற்பது ஆண்டுகள் மீதம் உள்ளன என்று சொன்னார். மலக்கு அதை மறுத்தார்கள் ஆனால் ஆதம் அலை அதை ஏற்கவில்லை நான் அவ்வாறு சொல்லவில்லை என்றார்கள்

அன்றிலிருந்தே முக்கியமான விஷயங்கள் அனைத்தும் எழுத்துப் பூர்வமாகவும் சாட்சிகளுடனும் அமைய வேண்டும் என கட்டளையிடப்பட்டது.

கடைசியில் ஆதம் அலை உயிரை வாங்கிக் கொள்ள சம்மதித்து விட்டார்கள் என்றும் சில விரிவுரைகளில் உள்ளன

 நூல் : முஸ்னத் அஹ்மத் 2713 , திர்மிதி , இப்னு குஸைமா , இப்னு ஹிப்பான்.

முதுமைப் பருவத்தில் என்ன செய்ய வேண்டும்

முதுமையில் நரை ஏற்பட்டால் அதை பிடுங்க முயற்சி செய்வோம். ஆனால் அல்லாஹ் அதை கம்பீரம் என்று கூறுகிறான்

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ:أَنَّ إِبْرَاهِيمَ عليه السلام أَوَّلُ مَنِ اخْتَتَنَ وَأَوَّلُ مَنْ رَأَى الشَّيْبَ فَقَالَ : رَبِّ مَا هَذَا فَقِيلَ لَهُ:وَقَارٌ فَقَالَ:رَبِّ زِدْنِي وَقَارًا (شرح السنة

முதுமையின் அடையாளமான நரையை முதலில் பார்த்தவர்கள் இப்றாஹீம் அலை அவர்கள் தான் அதற்கு முன்பு ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் யாருக்கும் நரைக்காது

   {وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس: العاذر: وكان صديقا له، وابن العجوز  وابنة العاشر وسام بن نوح؛ فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم: دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛ فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي

ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறந்தவர்களில் நான்கு நபர்களை உயிராக்கியுள்ளார்கள். 1. ஈஸா அலை அவர்களின் நண்பர் ஆதிர். அவர் இறந்து சில தினங்களுக்குப் பின் உயிராக்கினார்கள். அதன் பின் அவர் குழந்தைகளையும் பெற்றார்.  2. ஒரு மூதாட்டியின் மகன் இவரை இறந்த நிலையில் கஃபனிட்டு கட்டிலில் தூக்கிச் சென்றனர். அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்து தனது இயல்பான ஆடையை அணிந்ததுடன் அந்தக் கட்டிலை அவரே வீடு வரை சுமந்து சென்றார்.  3. ஒரு பெண். இறந்த விட்ட இந்தப் பெண்ணின் வீட்டுக்கு இரவில் வந்த ஈஸா அலை அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்தார். அவருக்கும் குழந்தைகள் பிறந்தன. 4. நூஹ் அலை அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்கினார்கள். இதன் பின்னணிடாகிறது அந்தமக்கள் ஈஸா அலை அவர்களிடம் நீங்கள் சமீபத்தில் இறந்தவர்களை மட்டும் தான் உயிர் பெற வைக்கிறீர்கள். ஒருவேளை மயக்கத்தில் இருந்து அவர்களை இறந்த விட்டதாக கருதப் பட்டிருக்கலாம். அவர்களின் மயகத்தை நீங்கள் தெளிய வைத்ததாகவும் நாங்கள் கருதுகிறோம். எனவே இறந்து நீண்ட காலம் ஆகி விட்டவர்களை உயிராக்க முடியுமா குறிப்பாக 4000 வருடங்களுக்கு முன் இறந்த நூஹ் அலை அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்க முடியுமா என்று கேட்க அதற்கு ஈஸா அலை அவரின் கப்ரைக் காட்டுங்கள் என்றார்கள் அவ்வாறே காட்டப்பட்டது. அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்தார். ஆனால் தலைமுடி நரைத்த நிலையில் எழுந்தார். அவரிடம் ஈஸா அலை உங்களின் காலத்தில் நரை என்பதே இல்லையே என்று கேட்க,  நீங்கள் என்னை அழைத்தவுடன் கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் எழுந்தேன். அதனால் நரைத்து விட்டது என்றார். அவரிடம் அவருடைய சகராத் பற்றி ஈஸா அலை கேட்க, இத்தனை வருடங்கள் ஆகியும் அதன் வலியை இன்றும் உணருகிறேன் என்று கூறினார். மேலும் அவர் அந்த மக்களிடம் ஈஸா அவர்களை தூதர் என நம்புங்கள் என்றார். சிலர் மட்டும் அப்போதே இஸ்லாத்தை ஏற்றனர். வேறு சிலர் இதை சூனியம் என்றார்கள். வேறு சில அறிவிப்பில் அந்த சாம் சற்று நேரத்தில் மீண்டும் அந்த கப்ருக்குள் மய்யித்தாக ஆக்கப்பட்டார். ஆனால் அவர் ஈஸா அலை அவர்களிடம் கோரிக்கை வைத்தார். மீண்டும் என்னை மவ்த்தாக்கும் போது ஏற்கெனவே சகராத்தை அனுபவித்து விட்டதால் சகராத் நிலை மீண்டும் வராமல் இருக்க துஆ செய்யுங்கள் என்றார். அவ்வாறே ஈஸா அலை துஆ செய்தார்கள்.                                              

நரை முடிக்கு கறுப்புச்சாயம் பூசுவது கூடாது. மருதாணி இட்டு சிவப்பாக்கிக் கொள்வது சிறந்தது

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ (ابن ماجة) باب مَا جَاءَ فِى خِضَابِ السَّوَادِ- كتاب الترجل

عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ(ابن ماجة) بَاب الْخِضَابِ بِالْحِنَّاءِ- كِتَاب اللِّبَاسِ - عَنْ جَابِرٍ قَالَ جِيءَ بِأَبِي قُحَافَةَ (اي والد ابي بكر رضي الله عنه) يَوْمَ الْفَتْحِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَأَنَّ رَأْسَهُ ثَغَامَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اذْهَبُوا بِهِ إِلَى بَعْضِ نِسَائِهِ فَلْتُغَيِّرْهُ وَجَنِّبُوهُ السَّوَادَ(ابن ماجة) بَاب الْخِضَابِ بِالْحِنَّاءِ- كِتَاب اللِّبَاسِ

அறுபது வயதாகியும் தன்னை வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ளாதவர் நாளை மறுமையில் எனக்கு இன்னும் வயது இருந்திருந்தால் அமல் செய்திருப்பேன் என்பது போன்ற சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்

 أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ (37فافر) عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم  فَقَالَ أَعْذَرَ اللَّهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً (بخاري) باب مَنْ بَلَغَ سِتِّينَ سَنَةً فَقَدْ أَعْذَرَ اللَّهُ إِلَيْهِ فِى الْعُمُرِ- كتاب الرقاق (قَالَ العلماء:معناه لَمْ يَتْرُكْ لَهُ عُذراً إِذْ أمْهَلَهُ هذِهِ المُدَّةَ (شرح رياض الصالحين)

அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராக ஒருவர் வாழ்ந்தால் அவருடைய வயது கூடும்போது அந்தஸ்து கூடும்

 عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ قَالَ فَأَيُّ النَّاسِ شَرٌّ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ (ترمذي) باب مَا جَاءَ فِى تَقَارُبِ الزَّمَانِ وَقِصَرِ الأَمَلِ -كتاب الزهد   عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:أَلاَ أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ :أَطْوَلُكُمْ أَعْمَارًا وَأَحْسَنُكُمْ أَعْمَالاً (ترمذي)

மனிதர்களில் சிறந்தவர் யார் என கேட்கப்பட்ட போது யாருக்கு நல்ல அமல் செய்யும் நிலையில் வயதும் அதிகமாகிறதோ அவர் தான் என்று நபி ஸல் கூறினார்கள்

அல்லாஹ் யாருக்கு நல்லதை நாடுகிறானோ அவருடைய மரணத்திற்கு முன்பு நிறைய அமல் செய்யும் வாய்ப்பைத் தருகிறான்

عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ (ترمذي) باب مَا جَاءَ أَنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا لأَهْلِ الْجَنَّةِ وَأَهْلِ النَّارِ-كتاب القدر

அறிவை மழுங்கச் செய்யக் கூடிய மிகவும் தள்ளாத வயது வரை சிலரை அல்லாஹ் வாழச் செய்வதைப் பற்றியும்,

وَاللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ قَدِيرٌ (النحل70)قال ابن عباس رضي الله عنه يعني إلى أسفل العمر يصير كالصبي الذي لا عقل له (قرطبي)

தள்ளாத வயது என்பதற்கு இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் விளக்கம் கூறும்போது எந்த வயதில் புத்தி மங்கி சிறு குழந்தையின் அறிவுக்கு மாறுகிறாரோ அந்த நிலை என்றார்கள்

அறிவை மழுங்கச் செய்யக் கூடிய மிகவும் தள்ளாத வயதை விட்டும் பாதுகாப்புத் தேடுவது பற்றி..

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا تُعَلَّمُ الْكِتَابَةُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ نُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ(بخاري)باب التَّعَوُّذِ مِنْ أَرْذَلِ الْعُمُرِ-كتاب الدعوات عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ وَعَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ قَالَا كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُكْتِبُ الْغِلْمَانَ وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ..(نسائ) الِاسْتِعَاذَةُ مِنْ فِتْنَةِ الدُّنْيَا-كِتَاب الِاسْتِعَاذَةِ

அறிவை மழுங்கச் செய்யக் கூடிய மிகவும் தள்ளாத வயதை விட்டும் பாதுகாப்புத் தேடும் இந்த துஆவை நபி ஸல் எங்களுக்கு சிறுவர்கள் எழுதப் பழக்குவது போன்று நிதானமாக சொல்லித் தந்தார்கள்

முதுமையை அடைந்தாலும் அறிவுத் திறன் குறையாமல் இருக்க என்ன வழி

عن عبد الملك بن عمير قال : كان يقال أن أبقى الناس عقولاً قراء القرآن .(الدر المنثور)

தள்ளாத வயதிலும் அறிவில் சிறந்து விளங்குபவர்கள் குர்ஆனை அதிகம் ஓதியவர்கள்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ لَمْ يُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ(بيهقي) وقال عكرمة : من قرأ القرآن لم يرد إلى أرذل العمر حتى لا يعلم بعد علم شيئاً وقال في قوله : إلا الذين آمنوا وعملوا الصالحات هم الذين قرؤوا القرآن وقال ابن عباس رضي الله عنه في قوله تعالى : ثم رددناه أسفل سافلين يريد الكافرين ثم استثنى المؤمنين فقال تعالى إلا الذين آمنوا وعملوا الصالحات (تفسير الخازن)

குர்ஆனை அதிகம் ஓதி வருபவர் அறிவை மழுங்கச் செய்யக் கூடிய மிகவும் தள்ளாத வயதை அடைய மாட்டார் என இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள்                           

நற்செயல்களை அதிகம் செய்பவர்களும் அறிவை மழுங்கச் செய்யக் கூடிய மிகவும் தள்ளாத வயதை அடைய மாட்டார் என இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் 

அறிவுத்திறன் குறைந்த முதியவர்களால் சங்கடம் ஏற்பட்டாலும் அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது. குறிப்பாக பெற்றோரிடம்..

عن أَنَسَ  رضي الله عنه يَقُولُ جَاءَ شَيْخٌ يُرِيدُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْطَأَ الْقَوْمُ عَنْهُ أَنْ يُوَسِّعُوا لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا(ترمذي) بَاب مَا جَاءَ فِي رَحْمَةِ الصِّبْيَانِ-كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ- عن أَنَسَ  رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ (ترمذي-بَاب مَا جَاءَ فِي إِجْلَالِ الْكَبِيرِ-كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا (23)وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا (24سورة الاسراء)

عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : بَرُّوا آباءَكُمْ تَبَرُّكُمْ أَبْنَاؤُكُمْ وَعِفُّوا تَعِفُّ نِسَاؤُكُمْ (حاكم) كتاب البر والصلة

 

சனி, 1 ஏப்ரல், 2023

10- ம் தராவீஹ் பயான்- யூசுஃப் சூரா சில படிப்பினைகள


 

10- ம் தராவீஹ்  பயான்- யூசுஃப் சூரா சில படிப்பினைகள

யூசுஃப் சூராவில் நூற்றுக்கணக்கான படிப்பினைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

 தன்னால் இயன்ற வரை மாற்றாரிடம் அழைப்புப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்

கனவுக்கு விளக்கம் கேட்ட இருவரிடம் அதற்கான விளக்கத்தை நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் கூறும் முன்பு அவர்களிடம் தொடங்கியது அழைப்புப்பணியைத் தான்

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ (36) قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ذَلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ (37) وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (38) يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39) مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (40) يوسف

வாழ்க்கையில் ஒருவரையேனும் இஸ்லாத்தின் பால் கொண்டு வருவது மிகச் சிறந்த பாக்கியம்

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ (النحل125)عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ خَيْبَرَ لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ أَيْنَ عَلِيٌّ فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ فَأَمَرَ فَدُعِيَ لَهُ فَبَصَقَ فِي عَيْنَيْهِ فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّه لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ فَوَاللَّهِ لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ (بخاري)

பொருள்- கைபர் போரின் போது) நபி (ஸல்) அவர்கள்நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒருவரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான் என்றார்கள். ஆகவேமக்கள் தம்மில் எவரிடம் அது தரப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசையில் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள்அலீ பின் அபீதாலிப் எங்கேஎன்று கேட்டார்கள். மக்கள்அவருக்குக் கண்வலி என்று சொன்னார்கள்.உடனே நபி(ஸல்) அவர்கள்,அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப்போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் தூதரே!அவர்கள் நம்மைப்போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமாஎன்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்அவர் களுடைய களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும்இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமை யாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.     

தஃவா 3 வாய்ப்புகள் உண்டு1,தேடிச் செல்வது 2,தேடி வருவது 3,நாமாக உண்டாக்கிக் கொள்வதுவது

எழுத்தாற்றல் உள்ளவர்கள் எல்லோரும் படிக்கும் பத்திரிக்கைகள் வாயிலாக இஸ்லாம் பற்றிய நற்சிந்தனைகளை எழுதலாம். - பேச்சாற்றல் உள்ளவர்கள் பொதுமேடைகளில் நளினமாக இஸ்லாமை பிற மக்களுக்கு புரிய வைக்கலாம். நம்மோடு நல்ல நட்பும் முஸ்லிம்களின் மீது மதிப்பும் வைத்திருக்கக் கூடியவர்களுக்கு இஸ்லாம் பற்றிய புத்தகங்களை தரலாம் விளக்க உரையாடல்கள் நடத்தலாம்

 அழைப்புப் பணிக்காக தேடிச் செல்லும் இடங்கள் கிறிஸ்தவ மதம் பெரும்பாலும் பரவியது இந்த வகையில் தான்

சிறைச்சாலை பலருக்கு சிந்தனைச் சாலையாகவும், எதிர் கால வாழ்வை ஒழுங்கு படுத்துவதாகவும் அமையும் அங்கு முறையான அனுமதி பெற்று இஸ்லாம் பற்றிய நல்லுபதேசங்களை உரையாகவும், நூலாகவும வழங்கலாம் மருத்துவமனையில் நோயுற்று படுத்திருப்பவர்களில் பலர் படிப்பதற்கு ஏதாவது நூல் வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள் அங்கு சென்று அவர்களை நலம் விசாரித்து இஸ்லாமிய புத்தகங்களை வழங்கலாம். எதிர் கால எண்ணங்களை உருவாக்குவதில் நூலகங்களுக்கு பெரிய பங்கு உண்டு. அத்தகைய நூலகங்களுக்குச் சென்று இஸ்லாமிய நூல்களை வைக்க ஏற்பாடு செய்யலாம். இது தவிர எந்த வகையில் மாற்று மதத்தவர்களுடன் பேச சந்தர்ப்பம் அமையுமோ அதையெல்லாம் வாய்ப்பாக பயன்படுத்தலாம். பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று அவர் இதுவரை சுமார் 3000 பேரை முஸ்லிம்களாக மாற்றியுள்ளார். பல தடவை தனது இரயில் பயணத்திலேயே பலரை முஸ்லிமாக்கியுள்ளார். மேற்கூறியவைகளில் சிலவற்றை தனி நபராகவும், செய்ய முடியும். ஆனால் சிலவற்றை ஒரு கூட்டு முயற்சியின் மூலமே செய்ய முடியும்

عَنْ أَنَسِ  أَنَّ غُلَامًا يَهُودِيًّا كَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ أَطِعْ أَبَا الْقَاسِمِ فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ بِي مِنْ النَّارِ (أحمد

நபி ஸல் அவர்களிடம் பணிவிடை செய்த யூதச் சிறுவருக்கு உடல் நலம் குன்றிய  நேரத்தில் அவரை நலம் விசாரிக்க நபி ஸல் அவர்கள் சென்ற சம்பவம் மேற்படி ஹதீஸில் உள்ளது.                            

கண் திருஷ்டி ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரே வாசலில் நுழையக்கூடாது என யஃகூப் அலை அறிவுறுத்தினார்கள்

وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ وَمَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ (67)يوسف قَالَ اِبْن عَبَّاس وَمُحَمَّد بْن كَعْب وَمُجَاهِد وَالضَّحَّاك وَقَتَادَة وَالسُّدِّيّ وَغَيْر وَاحِد إِنَّهُ خَشِيَ عَلَيْهِمْ الْعَيْن وَذَلِكَ أَنَّهُمْ كَانُوا ذَوِي جَمَال وَهَيْئَة حَسَنَة وَمَنْظَر وَبَهَاء فَخَشِيَ عَلَيْهِمْ أَنْ يُصِيبهُمْ النَّاس بِعُيُونِهِمْ فَإِنَّ الْعَيْن حَقّ تَسْتَنْزِل الْفَارِس عَنْ فَرَسه (تفسير ابن كثير

கண் திருஷ்டி உண்மை தான். ஆனால் அல்லாஹ் நாடியபடியே நடக்கும்

عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخَبَّأَةٍ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلًا صَرِيعًا قَالَ مَنْ تَتَّهِمُونَ بِهِ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلْ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ (ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الْإِنَاءَ مِنْ خَلْفِهِ-(ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَيْنُ حَقٌّ (بخاري) باب الْعَيْنُ حَقٌّ -كتاب الطب

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழி அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ஆமிர் ரழி அவர்கள் அந்த வழியாகச் சென்றார். ஸஹ்ல் ரழி அவர்களின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்தவுடன் இது மாதிரி அழகிய உடம்பை வேறு எங்கும் கண்டதில்லை என கண் வைத்து விட்டார். அது அவரை உடனே பாதித்தது. படுத்த படுக்கையாக ஆகி விட்ட அவரை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது இவர் விஷயத்தில் யாரையும் சந்தேகிக்கிறீர்களா என்று நபி ஸல் கேட்க, ஆமிரை ரழி நாங்கள் சந்தேகிக்கிறோம் என தோழர்கள் பதில் கூறினார்கள். உடனே ஆமிர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் எதற்காக உங்களின் உடன் பிறவா சகோத ர ரை இப்படி கண்திருஷ்டியை ஏற்படுத்தி ஏன் கொலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் பாரகல்லாஹ் என்று கூறலாமே என்றார்கள். பிறகு ஆமிர் ரழி அவர்களிடம் தண்ணீரை எடுத்து வரச் சொல்லி ஆமிர் ரழி உடைய உடல் முழுவதையும் கழுவச் சொல்லி அந்த நீரை ஸஹ்ல் ரழி அவர்களின் மீது ஊற்றச் சொன்னார்கள். (அவ்வாறு ஊற்றப்பட்டது. அவர் குணமடைந்தார்.)

ஆரம்பத்தில் இந்த மாதிரி பரிகாரம். பின்பு முஅவ்விததைன் சூராக்கள் இறங்கிய பின்பு அதுவே பரிகாரமாக அமைந்தது

நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் எகிப்தில் வஃபாத்தாகி அடக்கப்பட்டாலும் பின்பு அவர்களின் உடல் அவர்களின் விருப்பப்படி பைத்துல் முகத்தஸுக்கு கொண்டு செல்லப்பட்டது.

عن  أبي موسى الأشعري ' أن النبي نزل على أعرابي في سفر ، فأحسن الأعرابي ضيافته ، فلما ارتحل من عنده ، قال للأعرابي : لو أتيتنا أكرمناك ، فجاءه الأعرابي بعد ذلك ، فقال له النبي : ما حاجتك ؟ فقال : ناقة برحلها وأخرى أحتلبها ، فأمر له النبي بذلك ، ثم قال : أيعجز أحدكم أن يكون كعجوز بني إسرائيل ؟ فسئل عن ذلك ، فقال : لما خرج موسى ببني إسرائيل من مصر ضلوا الطريق ، وفي بعض الأخبار : أن القمر خسف ، والشمس كسفت ، ووقع الناس في ظلمة عظيمة ، وتحير موسى ، فقال له علماء بني إسرائيل : إن يوسف - عليه السلام - أوصى أن بني إسرائيل إذا خرجوا من مصر فلينقلوا عظامه معهم (اي بدنه وهو من باب اطلاق الجزء ويراد به الكل) ، فعلم موسى انهم ضلوا الطريق لذلك ، فقال لهم : ومن يعرف موضع عظامه ؟ فقالوا : لا يعرفه سوى عجوز من بني إسرائيل ، فدعا بالعجوز وسألها عن موضع العظام ، فقالت : لا حتى تقضي حاجتي ، فقال : ما حاجتك ؟ قالت : حاجتي أن أكون معك في الجنة أي : في درجتك ، فكره موسى ذلك ، فنزل الوحي أن أعطها ذلك ، فأعطاها ، ثم إنها دلت على قبر يوسف ، فحمل موسى عظام يوسف (اي بدنه ) وانجلت الظلمة ' .( تفسير القرآن-للسمعاني

நபி ஸல் அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு கிழவி ஆசைப்பட்டது போன்று நீங்கள் ஆசைப்படுங்கள் என்று கூறினார்கள் உடனே தோழர்கள் அப்படி அவர் என்ன ஆசைப்பட்டார் என்று கேட்க, நபி மூஸா அலை எகிப்தில் இருந்து தன் உம்மத்தை அழைத்துக் கொண்டு பாலஸ்தீனம் நோக்கி புறப்பட்ட போது  மூஸா நபியிடம் சிலர்கள்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்  இந்த எகிப்தில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் ஆனால் அவர்கள் ஒரு வஸிய்யத் செய்துள்ளார்கள் நீங்கள் என்றாவது ஒருநாள் ஷாமுக்கு குடியேறுவீர்கள்  அன்று என்னுடைய உடலையும் அங்கு கொண்டு சென்று விடுங்கள்  என்று  வஸிய்யத் செய்துள்ளார்கள் என்று கூறிய போது அதை மூஸா அலை ஏற்றுக் கொண்ட பின் உங்களில் யாருக்கேனும் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் உடைய  கப்ரு தெரியுமா என்று கேட்க, எங்களில் யாருக்கும் தெரியாது ஆனால் ஒரே ஒரு மூதாட்டிக்கு மட்டும் தெரியும் என்றார்கள் உடனே  அந்த மூதாட்டியை சந்திப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் விரைந்தார்கள் அவரின் இருப்பிடத்தை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் கேட்ட போது அந்தப் பெண்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  கப்ரை காட்டுவதற்கு ஒரு மாபெரும் கோரிக்கையை முன்வைத்தார்.  மூஸா நபியே நான் உங்களோடு சுவனத்தில் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சிபாரிசு செய்தால் நான் கப்ரை காட்டுகிறேன் என்றார். மூஸா அலை  யோசித்தார்கள்.  கப்ரை காட்டுவதற்கு இவ்வளவு பெரிய நிபந்தனை விதிக்கிறாரே என்று  யோசித்த போது அல்லாஹ் அவர்களுக்கு வஹீ அறிவித்தான் மூஸாவே அப்பெண்ணின் நிபந்தனையை ஏற்று நீங்கள் துஆ செய்யுங்கள் நான் அதை நிறைவேற்றுவேன். ஏனெனில் அந்தப் பெண் தனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து தினமும் என்னிடம் யாஅல்லாஹ் நபிமார்களோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தைத் தா! என துஆ செய்து வந்தார் ஆகவே அவரை நிச்சயம் நான் சுவனத்தில் புகுத்துவேன் என்றான் அதன்பின் மூஸா அலை துஆ செய்தார்கள் அப்பெண் கப்ரை காட்டினார்  யூசுஃப் அலை அவர்களின்  கப்ரு தோண்டப்பட்டு பின்பு ஜெரூஸலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது   

சேமித்து வைப்பது தவறல்ல

அத்தியாவசியத் தேவை போக மீதமுள்ள உணவுப் பொருட்களை பழுதடையாது சேமிக்க வேண்டும்.

நபி யூஸுப் அலை அவர்கள் தேவை போக உள்ள பயிர்களை அதன் கதிர்களுடன் சேமித்து வைத்தார்கள். அதே நேரத்தில் தேவையுடைய உறவினர்களையும் அண்டை வீட்டாரையும் பசியில் போட்டு விட்டு சேமிக்கும் திட்டமாக அது இல்லை என்பதை நாம் விளங்க வேண்டும்.

عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ضَحَّى مِنْكُمْ فَلَا يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَبَقِيَ فِي بَيْتِهِ مِنْهُ شَيْءٌ فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ الْمَاضِي قَالَ كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا  (بخاري

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் :

நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர். (அறுத்ததிலிருந்து) மூன்று நாற்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில்எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்’ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோதுமக்கள் இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவேநீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்’ என்று பதிலளித்தார்கள்.ஸஹீஹ் புகாரி : 5569.

عن يزيد مولى سلمة بن الأكوع أن امرأته أم سليم : سألت عائشة عن لحوم الأضاحي فقالت : قدم علي بن أبي طالب من غزوة فدخل على أهله فقربت له لحما من لحوم الأضاحي فأبى أن يأكلة حتى سأل رسول الله صلى الله عليه و سلم فقال النبي صلى الله عليه و سلم : ( كله من ذي الحجة إلى ذي الحجة )

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِىِّ فَوْقَ ثَلاَثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ
தேவை உள்ளவர்களுக்குத் தராமல் சேமித்து வைப்பதும் நல்லதல்ல

عَنْ جَابِرٍ .....قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...ابْدَأْ بِنَفْسِكَ فَتَصَدَّقْ عَلَيْهَا فَإِنْ فَضَلَ شَيْءٌ فَلِأَهْلِكَ فَإِنْ فَضَلَ عَنْ أَهْلِكَ شَيْءٌ فَلِذِي قَرَابَتِكَ فَإِنْ فَضَلَ عَنْ ذِي قَرَابَتِكَ شَيْءٌ فَهَكَذَا وَهَكَذَا يَقُولُ فَبَيْنَ يَدَيْكَ وَعَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ (مسلم

கருத்து- முதலில் உன்னுடைய தேவைக்காகவும் உன் குடும்பத்தாரின் தைவைக்காகவும் எடுத்து வை.  பிறகு மீதமானால் உறவினர்கள் பின்பு மற்றவர்களுக்குக் கொடு...

عن أَبي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا ابْنَ آدَمَ إِنَّكَ أَنْ تَبْذُلَ الْفَضْلَ خَيْرٌ لَكَ وَأَنْ تُمْسِكَهُ شَرٌّ لَكَ وَلَا تُلَامُ عَلَى كَفَافٍ وَابْدَأْ بِمَنْ تَعُولُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى (مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا لَمْ يُوجِفْ الْمُسْلِمُونَ عَلَيْهِ بِخَيْلٍ وَلَا رِكَابٍ فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً وَكَانَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِ ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ فِي السِّلَاحِ وَالْكُرَاعِ عُدَّةً فِي سَبِيلِ اللَّهِ (مسلم

وفي رواية  للبخاري فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ  

கருத்து- பனூ நளீர் குலத்தாரின் தோட்டங்கள் கனீமத் என்ற அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது.  அதன் வருவாயில் தம் குடும்பத்தாருக்கு அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன் கூட்டியே) தருபவர்களாக இருந்தார்கள். முஸ்லிம்:



நாவைப் பேணுவோம்

31-07-2026 ஸஃபர் - 16 بسم الله الرحمن الرحيم          நாவின் விபரீதங்கள் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN N...