வியாழன், 16 ஜூன், 2022

அநியாயக்காரர்களை அழித்திட அல்லாஹ்விடம் மன்றாடுவோம்

 


17-06-2022

துல் கஃதா -16

 

بسم الله الرحمن الرحيم 

அநியாயக்காரர்களை அழித்திட

அல்லாஹ்விடம் மன்றாடுவோம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 



[8:09 

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ (60)غافر

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ (186)البقرة

ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொணேடே இருக்கின்றன. அறவழியில் போராட்டம் செய்பவர்களின் குரல் வலைகள் நசுக்கப்படுகின்றன. அவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகின்றன. இந்நேரத்தில் அகிம்சை வழியில் போராடுவதும் காலத்தின் கட்டாயம். அதே நேரத்தில் எந்த அளவுக்கு அல்லாஹ்விடம் கெஞ்ச முடியுமோ அந்த அளவுக்கு கெஞ்சி, அழுது கண்ணீர் விட்டு மனமுருகி கையேந்துவதும் முக்கியமானதாகும்.

எவ்வளவு பெரிய அநியாயக்காரனாக இருந்தாலும் அவனையும் அடக்குபவன் அல்லாஹ் ஒருவன் தான்.

அநீதமான அரசனின் தீமைக்கு எதிராக நமக்கு கற்றுத் தரப்பட்ட துஆக்கள்

عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال إذا تَخَوَّفَ أحَدُكُمُ السُّلْطانَ فَلْيَقُل اللَّهُمَّ رَبَّ السَّمَواتِ وَرَبَّ العَرْشِ العَظيم كُنْ لِي جاراً مِنْ شَرِّ فُلانِ بنِ فُلانٍ وَشَرِّ الجِنِّ والإِنْسِ وأتْباعِهِمْ أنْ يَفْرُطَ عَلَيَّ أحَدٌ مِنْهُمْ عَزَّ جارُكَ وَجَلَّ ثَناؤكَ وَلاَ إله  غَيْرُكَ رواه الطبراني  (الترغيب والترهيب  عن ابن عباس رضي الله عنه قال : إذا أتيت سلطانا مهيبا تخاف أن يسطو عليك فقل : الله أكبر ، الله أعز من خلقه جميعا ، الله أعز مما أخاف وأحذر ، أعوذ بالله الذي لا إله إلا هو الممسك السماوات السبع أن يقعن على الارض إلا بإذنه ، من شر عبدك فلان وجنوده وأتباعه وأشياعه من الجن والانس ، اللهم كن لي جارا من شرهم ، جل ثناؤك وعز جارك وتبارك اسمك ولا إله غيرك - ثلاث مرات. [ مصنف ابن أبي شيبة ] (الترغيب والترهيب

عن عامر قال : كنت جالسا مع زياد بن أبي سفيان فأتى برجل يحمل ، ما نشك في قتله ، قال : فرأيته حرك شفتيه بشئ ما ندري ما هو ، فخلى سبيله فأقبل إليه بعض القوم فقال : لقد جئ بك وما نشك في قتلك ، فرأيتك حركت شفتيك بشئ ما ندري ما هو ، فخلى سبيلك ، قال : قلت اللهم رب إبراهيم ورب إسحاق ورب يعقوب ورب جبريل وميكائيل وإسرافيل ومنزل التوراة والانجيل والزبور والقرآن العظيم [ مصنف ابن أبي شيبة ]

ஆட்சியாளர் ஜியாதிடம் ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவர் கொல்லப்படுவது உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தார். சற்று நேரத்தில் அவரை ஜியாத் விடுவித்து விட்டார் அவரிடம் சிலர் உங்களுக்கான மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் நீங்கள் அழைத்து வரப்பட்டீர்கள். ஆனால் உமது நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தீர்கள் பிறகு விடுவிக்கப்பட்டு விட்டீர்கள். அப்படி என்ன ஓதினீர்கள் என்று கேட்கப்பட்ட போது நான் இன்ன துஆவை ஓதினேன் என்று மேற்படி துஆவை ஓதிக்காட்டினார்              

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ قَالَ وَكِيعٌ مَرَّةً لَا إِلَهَ إِلَّا اللَّهُ فِيهَا كُلِّهَا (ابن ماجة

عن الحسن بن حسن أن عبد الله بن جعفر رضي الله عنه تزوج امرأة فدخل بها فلما خرج قلت لها ما قال لك قلت قال إذا نزل بك أمر فظيع أو عظيم فقولي لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله رب العرش العظيم سبحان الله رب العالمين فدعاني الحجاج فقلتها فقال لقد دعوتك وأنا أريد أن أضرب عنقك وما في أهلك اليوم أحد أحب إلي منك أو أعز منك  (سنن الكبرى )

ஹஸன் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் என் உறவுக்காரப் பெண்ணை மணமுடித்தார்கள். அப்பெண்ணிடம் முதலிரவையும் முடித்த பின்பு நான் அந்த அம்மையாரிடம் உங்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் ஏதேனும் துஆவைக் கற்றுத் தந்தார்களா என்று கேட்டேன். அதற்கு அப்பெண் ஆம் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால் இந்த துஆவை ஓது என அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி கூறியதாக மேற்படி துஆவை அந்தப் பெண் என்னிடம் கூறினார்கள். அந்த துஆவை நானும் கற்றுக் கொண்டேன். பின்பு ஒரு நேரத்தில் ஹஜ்ஜாஜ் என்னைக் கொல்வதற்காக அழைத்த போது நான் இந்த துஆவை ஓதினேன். அப்போது ஹஜ்ஜாஜ் என்னிடம் நான் உன் கழுத்தை வெட்டவே உம்மை அழைத்தேன். ஆனால் இன்று நீர் என் கண்ணுக்கு முன்னால் உம் குடும்பத்தார்களில் எனக்குப் பிரியமானவராக தெரிகிறீர் என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.  

அநீதிக்கு எதிராக நாம் செய்யும் துஆ ஏற்கப்படுவதில் அவசரம் கூடாது

முஸ்லிம்களுககு சோதனையான இக்காலத்தில் நம்மில் பலர் அந்த சோதனைகள் நீங்குவதற்காக துஆச்  செய்கிறோம் ஆனால் அந்த துஆக்களில் பலன் உடனே கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் பலரின் மனதில் உள்ளது. ஒரு முஃமின் ஹலாலை உண்பவராக இருந்து அவர் செய்யும் துஆ ஆகுமாக்கப்பட்ட துஆவாக, உறவைத் துண்டிக்காத துஆவாக, நம்பிக்கையுடன் கூடியதாக இருக்கும் பட்சத்தில் அவருடைய துஆவை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ قَالَ يَقُولُ قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ (مسلم) كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ

மூஸா அலை, ஹாரூன் அலை இருவரின் துஆ ஏற்கப்பட்ட பிறகும் என்று 40 வருடங்கள் கடந்தே ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டான்

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا..(يونس)قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة

வஞ்சிக்கப்பட்டவனின் துஆ உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ (بخاري)بَاب الِاتِّقَاءِ وَالْحَذَرِ مِنْ دَعْوَةِ الْمَظْلُومِ- المظالم -عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لَا شَكَّ فِيهِنَّ دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ (ابن ماجة-كتاب الدعاء)

தந்தையின் துஆ உடனே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால் எந்த தந்தையும் மகனை சபித்து துஆ செய்யக் கூடாது

عن جابر رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ  لَا تُوَافِقُوا مِنْ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ فَيَسْتَجِيبُ لَكُمْ (مسلم) بَاب حَدِيثِ جَابِرٍ الطَّوِيلِ-كتاب الزهد

எங்கோ இருக்கும் முகம் தெரியாத முஃமினுக்காக துஆ செய்வதும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ حِينَ يَسْتَنْصِرُ، وَدَعْوَةُ الْحَاجِّ حِينَ يَصْدُرُ ، وَدَعْوَةُ الْمُجَاهِدِ حِينَ يَقْفِلُ، وَدَعْوَةُ الْمَرِيضِ حِينَ يَبْرَأَ ، وَدَعْوَةُ الْأَخِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ - ثُمَّ قَالَ: - وَأَسْرَعُ هَذِهِ الدَّعَوَاتِ إِجَابَةً، دَعْوَةُ الْأَخِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ (شعب الايمان) عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنها قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ (مسلم) بَاب فَضْلِ الدُّعَاءِ لِلْمُسْلِمِينَ بِظَهْرِ الْغَيْبِ-كتاب الذكر

துஆ ஏற்றுக் கொள்ளப்படுவது மூன்று வகை. சில நேரங்களில் நமது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கலாம். அதை நாம் அறியாதவர்களாக இருப்போம்

عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنْ السُّوءِ مِثْلَهَا قَالُوا إِذًا نُكْثِرُ قَالَ اللَّهُ أَكْثَرُ (احمد)

ஒரு முஃமினின் துஆ மூன்று வகையில் ஏதேனும் ஒரு வகையில் ஏற்கப்படும். 1.அவர் கேட்டதை அல்லாஹ் உடனே தந்து விடுவான். 2. அவர் கேட்டதை இப்போது அதற்குப் பகரமாக மறுமையில் மிகவும் சிறப்பாக தருவான். 3. அவர் கேட்டதைத் தராமல் அதற்குப் பகரமாக அவருக்கு ஏற்படவிருந்த சோதனையை விட்டும் அவரைப் பாதுகாப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய போது அப்படியானால் நாங்கள் அளவுக்கு அதிகமாகவே அல்லாஹ்விடம் கேட்கலாமா என தோழர்கள் கேட்க, நபி ஸல் அவர்கள் அல்லாஹ் கொடுப்பதில் மிகப் பெரியவன் என்றார்கள்.        

عن جَابِرِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:يَدْعُو اللهُ بِالْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُوقِفَهُ بَيْنَ يَدَيْهِ فَيَقُولُ: عَبْدِي إِنِّي أَمَرْتُكَ أَنْ تَدْعُوَنِي؟وَوَعَدْتُكَ أَنْ أَسْتَجِيبَ لَكَ، فَهَلْ كُنْتَ تَدْعُونِي؟ فَيَقُولُ:نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: أَمَا إِنَّكَ لَمْ تَدْعُنِي بِدَعْوَةٍ إِلَّا اسْتَجَبْتُ لَكَ أَلَيْسَ دَعَوْتَنِي فِي يَوْمِ كَذَا وَكَذَا لِغَمٍّ نَزَلَ بِكَ أَنْ أُفَرِّجَهُ عَنْكَ فَفَرَّجْتُهُ عَنْكَ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: إِنِّي عَجَّلْتُهَا لَكَ فِي الدُّنْيَا، وَدَعَوْتَنِي يَوْمَ كَذَا وَكَذَا لِغَمٍّ نَزَلَ بِكَ أَنْ أُفَرِّجَ عَنْكَ فَلَمْ تَرَ فَرَجًا ؟قَالَ:نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: إِنِّي ادَّخَرْتُ لَكَ بِهَا فِي الْجَنَّةِ كَذَا وَكَذَا وَدَعَوْتَنِي فِي حَاجَةٍ أَقْضِيهَا لَكَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فَقَضَيْتُهَا ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ، فَيَقُولُ: فَإِنِّي عَجَّلْتُهَا لَكَ فِي الدُّنْيَا، وَدَعَوْتَنِي فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي حَاجَةٍ أَقْضِيهَا فَلَمْ تَرَ قَضَاءَهَا ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ، فَيَقُولُ: إِنِّي ادَّخَرْتُهَا لَكَ فِي الْجَنَّةِ كَذَا وَكَذَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:فَلَا يَدَعُ اللهُ دَعْوَةً دَعَا بِهَا عَبْدُهُ الْمُؤْمِنُ إِلَّا بَيَّنَ لَهُ إِمَّا أَنْ يَكُونَ عَجَّلَ لَهُ فِي الدُّنْيَا، وَإِمَّا أَنْ يَكُونَ ادَّخَرَ لَهُ فِي الْآخِرَةِ " قَالَ: " فَيَقُولُ الْمُؤْمِنُ فِي ذَلِكَ الْمَقَامِ: يَا لَيْتَهُ لَمْ يَكُنْ عُجِّلَ لَهُ شَيْءٌ مِنْ دُعَائِه (حاكم) (الترغيب) كتاب الذكر والدعاء

அல்லாஹ் ஒரு முஃமினை மறுமை நாளில் அழைத்து தனக்கு முன்னால் நிற்க வைத்துஎன் அடியானே என்னிடம் துஆச் செய்யும்படி ஏவியிருந்தேனே இன்னும் உனது துஆவுக்கு பதில் தருவதாகவும் கூறியிருந்தேனே துஆச் செய்தாயா என்று கேட்கும்போது ஆம் ரப்பே என்று அந்த அடியான் கூறுவான்.அதற்குஅல்லாஹ் நிச்சயமாக உன் துஆக்கள் அனைத்துக்கும் நான் பதிலளித்தேன். என்று கூறி விட்டு அடியானே இன்ன நாளில் நீ உனது சிரமத்தை நீக்கச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த சிரமத்தை நான் நீக்கினேன் அல்லவா என்று கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே அந்த துஆவின் பலனை உடனே பெற்றேன் என்பான். மறுபடியும் அல்லாஹ் அடியானிடம்  இன்ன நாளில் நீ உனது சிரமத்தை நீக்கச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த சிரமம் உனக்கு நீங்கியிருக்காதே என்று அல்லாஹ் கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே என்பான். அதற்கு அல்லாஹ் உன்னுடைய நீக்கப்படாத அந்த சிரமத்திற்காக சுவனத்தில் இத்தகைய பாக்கியங்களை வைத்துள்ளேன் என்பான். மறுபடியும் அல்லாஹ் அடியானிடம்  இன்ன நாளில் நீ உனது உன் தேவையை நிறைவேற்றச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த தேவை உனக்கு நிறைவேறியிருக்காதே என்று அல்லாஹ் கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே என்பான். அதற்கு அல்லாஹ் உன்னுடைய நிறைவறாத அந்த தேவைக்கு பதிலாக சுவனத்தில் இத்தகைய பாக்கியங்களை வைத்துள்ளேன் என்பான். இந்த அடியானைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய போது அந்த அடியான் கேட்ட எல்லா துஆக்களும் இவ்வாறாக ஏற்கப்பட்டிருக்கும். சில துஆக்களுக்கு உடனே உலகத்திலும் சில துஆக்கள் ஏற்கப்பட்டதற்கு பகரமாக மறுமை நாளிலும் அது தரப்படக்கூடியதாகவும் அமைந்திருக்கும். இறுதியாக அந்த அடியான் கூறுவான். நான் கேட்டும் உலகில் தரப்படாத துஆக்களுக்கு பதிலாக அல்லாஹ் இவ்வளவு இன்பங்கள் வைத்திருப்பது தெரியாமல் போய் விட்டதே நான் கேட்ட எந்த துஆவுக்கும் பதில் உலகில் தரப்படாமல் மறுமையில் தரப்பட்டிருக்க வேண்டுமே என்பான்.                      

கருத்து- துஆவில் தான் கேட்ட கோரிக்கைகளுக்குப் பகரமாக அல்லாஹ் மறுமையில் வைத்துள்ள இன்பங்களைக் கண்டு தான் கேட்ட அனைத்து துஆக்களுக்கும் பிரதிபலன் உலகில் தரப்படாமல் மறுமையிலேயே கிடைத்திருக்க வேண்டுமே எனக் கருதுவான்

துஆவின் மூலம் அல்லாஹ் விதியை மாற்றுவான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنْ الدُّعَاءِ-عَنْ  انس رضي الله عنه  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ-عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ (ترمذي)

துஆ என்பது (இறைவனிடம் மட்டுமே செய்ய வேண்டிய) ஒரு வணக்கம். அதைச் செய்ய மறுத்து பெருமையடிப்பவர்களுக்கு நரகம்.

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَرَأَ{وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ (60غافر) } (ترمذي) بَاب مَا جَاءَ فِي فَضْلِ الدُّعَاءِ-كتاب الدعوات

மனிதர்களிடம் கேட்டால் கோபப்படுவார்கள். அல்லாஹ்விடம்  கேட்கா விட்டால் அவன் கோபப்படுவான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَسْأَلْ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ (ترمذي) بَاب مَا جَاءَ فِي فَضْلِ الدُّعَاءِ

துஆ கேட்கும் முறை... அல்லாஹ் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என்ற மன உறுதியோடு துஆ செய்ய வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ  قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ (ترمذي)  عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا (ابوداود)

அல்லாஹ்விடம் பிடிவாதமாக கேட்பது கூடும்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُلْ أَحَدُكُمْ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ ارْحَمْنِي إِنْ شِئْتَ ارْزُقْنِي إِنْ شِئْتَ وَلْيَعْزِمْ مَسْأَلَتَهُ إِنَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ لَا مُكْرِهُ لَهُ (بخاري) باب لِيَعْزِمِ الْمَسْأَلَةَ ، فَإِنَّهُ لاَ مُكْرِهَ لَهُ-كتاب الدعوات-وفي رواية لمسلم"لِيَعْزِمْ الْمَسْأَلَةَ وَلْيُعَظِّمْ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ لَا يَتَعَاظَمُهُ شَيْءٌ أَعْطَاهُ (مسلم) وَمَعْنَى قَوْله لِيُعَظِّم الرَّغْبَة أَيْ يُبَالِغ فِي ذَلِكَ بِتَكْرَارِ الدُّعَاء وَالْإِلْحَاح فِيهِ وَيَحْتَمِل أَنْ يُرَاد بِهِ الْأَمْر بِطَلَبِ الشَّيْء الْعَظِيم الْكَثِير وَيُؤَيِّدهُ مَا فِي آخِر هَذِهِ الرِّوَايَة " فَإِنَّ اللَّه لَا يَتَعَاظَمهُ شَيْء (فتح الباري)

மனிதர்கள் அனைவரும் ஒரே மைதானத்தில் கூடி நின்று மனதில் உள்ளதையெல்லாம் கேட்டு, அல்லாஹ்வும் அவைகள் அனைத்தையும் கொடுத்து விட்டாலும் கடல் போன்ற அல்லாஹ்வின் கஜானாவில் ஊசியின் முனை அளவு மட்டுமே குறையும்

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَى عَنْ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ.... يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ

அல்லாஹ் கூறுகிறான் என் அடியார்களே உங்களில் மிகச் சிறந்த இறையச்சம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என்னுடைய அந்தஸ்து கடுகளவும் கூடி விடப்போவதில்லை. உங்களில் மிக மோசமான உள்ளம் உடையவரைப் போன்று முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை மாறி விட்டாலும் அதனால் என்னுடைய அந்தஸ்து கடுகளவும் குறைந்து விடப்போவதில்லை.உங்களில் முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி நின்று நீங்கள் விரும்பியதையெல்லாம் கேட்டு அதையெல்லாம் நான் கொடுத்து விட்டாலும் கடல் போன்ற என்னுடைய கஜானாவில் ஊசியின் முனை அளவு மட்டுமே குறையும். உங்களின் அமல்கள் உங்களுக்குத் தான். அவற்றைப் பாதுகாத்து வைத்து உங்களுக்கு அதன் நற்கூலியை நிரப்பமாக தருவேன். நல்லதைப் பெற்றுக் கொண்டால் அல்லாஹ்வைப் புகழுங்கள். கெட்டதைப் பெற்றுக் கொண்டால் உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். யார் மீதும் பழி போடாதீர்கள்.                         

துஆ ஓதத் துவங்குவதற்கு முன்பும், துஆ ஓதிய பின்பும் ஹம்து, சலவாத் சொல்வது

عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدْ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ قَالَ ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا الْمُصَلِّي ادْعُ تُجَبْ (ترمذي) بَاب مَا جَاءَ فِي جَامِعِ الدَّعَوَاتِ-كتاب الدعوات-    عَنْ جَابِرِ  رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَجْعَلُونِي كَقَدَحِ الرَّاكِبِ، إِنَّ الرَّاكِبَ يَمْلَأُ قَدَحَهُ مَاءً ثُمَّ يَضَعُهُ، ثُمَّ يَأْخُذُ فِي مَعَالِيقِهِ حَتَّى إِذَا فَرَغَ جَاءَ إِلَى الْقَدَحِ، فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ فِي الشَّرَابِ شَرِبَ، وَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَاجَةٌ فِي الشَّرَابِ تَوَضَّأَ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَاجَةٌ فِي الْوُضُوءِ أَهْرَقَهُ ، وَلَكِنِ اجْعَلُونِي فِي أَوَّلِ الدُّعَاءِ وَفِي آخِرِ الدُّعَاءِ (شعب الايمان)

கருத்து- ஒரு பயணி தான் கொண்டு வந்த தண்ணீரில் தன் தேவைகளையெல்லாம் நிறைவு செய்த பின் மிச்சமிருக்கும் கடைசி தண்ணீரை இது வேண்டாம். தேவையில்லை என்று கீழே ஊற்றுவது போல் துஆவின் கடைசியில் சலவாத் தேவையில்லை என்று நினைத்து விடாதீர்கள்

கைகளை ஏந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது அதாவது உள்ளங்கை வானத்தை நோக்கிய விதமாக..

عَنْ مَالِكِ بْنِ يَسَارٍ  رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا سَأَلْتُمْ اللَّهَ فَاسْأَلُوهُ بِبُطُونِ أَكُفِّكُمْ وَلَا تَسْأَلُوهُ بِظُهُورِهَا (ابوداود)

துஆ ஓதி முடித்தவுடன் கைகளை முகத்தில் தடவுவதும், அதன் தாத்பரியமும்

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ لَمْ يَحُطَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي رَفْعِ الْأَيْدِي عِنْدَ الدُّعَاءِ- كِتَاب الدَّعَوَاتِ -قال ابن الملك وذلك (أي مسح الوجه بعد الدعاء) على سبيل التفاؤل فكأن كفيه قد ملئتا من البركات السماوية والأنوار الإلهية وقيل وكأن المناسبة أنه تعالى لما كان لا يردهما صفرا فكأن الرحمة أصابتهما فناسب إفاضة ذلك على الوجه الذي هو أشرف الأعضاء وأحقها بالتكريم (تحفة الاحوذي)مرقاة المفاتيح شرح مشكاة)

துஆ ஓதி முடித்தவுடன் கைகளை முகத்தில் தடவுவதின் நோக்கம் நாம் துஆக் கேட்கும்போது அல்லாஹ்வின் அருள் நம் கைகள் மீது விழுவது போலவும் அதை அப்படியே நம் கைகளில் தடவிக் கொள்வது போலவும் இது அமைந்துள்ளது. என் அடியானின் கைகளை வெறுங்கையாக திருப்பி அனுப்ப மாட்டேன் என்பதும் இதற்குப் பொருந்தும்.

அல்லாஹ்விடம் அனைத்துத் தேவைகளையும் கேட்கலாம்

عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ حَتَّى يَسْأَلَهُ الْمِلْحَ وَحَتَّى يَسْأَلَهُ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ (ترمذي)

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களில் தஹஜ்ஜத் நேரமும் ஒன்றாகும்

عَنِ ابْنِ مَسْعُودٍ،  رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، قَالَ: إِذَا كَانَ ثُلُثُ اللَّيْلِ الْبَاقِى يَهْبِطُ اللَّهُ، عَزَّ وَجَلَّ، إِلَى السَّمَاءِ الدُّنْيَا، ثُمَّ تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، ثُمَّ يَبْسُطُ يَدَهُ، فَيَقُولُ: هَلْ مِنْ سَائِلٍ يُعْطَى سُؤْلَهُ، فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ. (شعب الايمان)

மழைத்தொழுகை தவிர மற்ற நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் கைகளை மிக உயரமாக உயர்த்தியதில்லை

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِهِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ (بخاري- متفق عليه . ولمسلم : ( أن النبي صلى الله عليه وآله وسلم استسقى فأشار بظهر كفه إلى السماء )

عن عمارة بن روبية : ( أنه رأى بشر بن مروان رافعًا يديه على المنبر ، فسبَّه وقال : لقد رأيت رسول الله لا يزيد على هذا يعنى أن يشير بالسبّابة ) . وروى سعيد عن قتادة قال : رأى ابن عمر قومًا رفعوا أيديهم ، فقال : من يتناول هؤلاء فوالله لو كانوا على رأس أطول جبل ما ازدادوا من الله قربًا . وكرهه جبير بن مطعم ، ورأى شريح رجلاً رافعًا يديه يدعو ، فقال : من تتناول بها ، لا أمّ لك . وقال مسروق لقوم رفعوا أيديهم : قد رفعوها قطعها الله . وكره ابن المسيب رفع الأيدى والصّوت فى الدعاء ، وكان قتادة يشير بأصبعيه ولا يرفع يديه ، ورأى سعيد بن جبير رجلاً يدعو رافعًا يديه فقال : ليس فى ديننا تكفير . واعتلوا بحديث عمارة بن روبية المتقدّم . وكان بعضهم يختار أن يبسط كفيه رافعهما ،     -   ثم يختلفون فى صفة رفعهما ، حذو صدره بطونهما إلى وجهه ، روى ذلك عن ابن عمر ، وقال ابن عباس إذا رفع يديه حذو صدره فهو الدعاء . وكان على بن أبى طالب يدعو بباطن كفيه ، وعن أنس مثله ، واحتجوا بما رواه صالح بن كيسان عن محمد بن كعب القرظى ، عن ابن عباس ، عن النبى ( صلى الله عليه وسلم ) قال : ( إذا سألتم الله تعالى فاسألوه ببطون أكفكم ولا تسألوه بظهورها ، وامسحوا بها وجوهكم ) . وكان آخرون يختارون رفع أيديهم إلى وجوههم ، روى ذلك عن ابن عمر وابن الزبير ، واعتلوا بما رواه حماد بن سلمة عن بشر بن حرب قال : سمعت أبا سعيد الخدرى يقول : ( وقف رسول الله بعرفة ، فجعل يدعو ، وجعل ظهر كفيه مما يلى وجهه ورفعهما فوق ثدييه وأسفل من منكبيه ) .

وكان آخرون يختارون رفع أيديهم حتى يحاذوا بها وجوههم وظهورها مما يلى وجوههم ، وروى يحيى بن سعيد عن القاسم قال : رأيت ابن عمرو بن العاص يرفع يديه يدعو حتى يحاذى منكبيه ظاهرهما يليانه . وعن ابن عباس قال : إذا أشار أحدكم بأصبع واحدة فهو الإخلاص ، وإذا رفع يديه حذو صدره فهو الدعاء ، وإذا رفعهما حتى يجاوز بهما رأسه ، وظاهرهما يلى وجهه فهو الابتهال . واحتجوا بحديث أبى موسى وابن عمر وأنس : ( أن النبى ( صلى الله عليه وسلم ) كان يرفع يديه فى الدعاء حتى يرى بياض إبطيه ) . قال الطبرى : والصواب أن يقال إن كل هذه الآثار المروية عن النبى ( صلى الله عليه وسلم ) متفقة غير مختلفة المعانى ، وللعمل بكل ذلك وجه صحيح ، فأمّا الدعاء بالإشارة بالأصبع الواحدة ، فكما قال ابن عباس أنه الإخلاص ، والدعاء بسط اليدين ، والابتهال رفعهما ، وقد حدثنى محمد بن خالد بن خراش قال : حدثنى مسلم عن عمر بن نبهان ، عن قتادة ، عن أنس قال : ( رأيت النبى ( صلى الله عليه وسلم ) يدعو بظهر كفيه وبباطنهما ) . وجائز أن يكون ذلك كان من النبى لاختلاف أحوال الدعاء كما قال ابن عباس ، وجائز أن يكون إعلامًا منه بسعة الأمر فى ذلك ، وأن لهم فعل أى ذلك شاءوا فى حال دعائهم ، غير أن أحبّ الأمر فى ذلك إلىّ أن يكون اختلاف هيئة الداعى على قدر اختلاف حاجته ، وأما الاستعاذة والاستجارة ، فأحب الهيئات إلى فيهما هيئة المبتهل ؛ لأنها أشبه بهيئة المستخبر ، وقد قال شهر بن حوشب : المسألة ببطن الكفين ، والتعوذ مثل التكبير إذا افتتح الصلاة . (مرقاة

قال في الفتح قال علماء السنة في كل دعاء لرفع بلاء أن يرفع يديه جاعلا ظهور كفيه إلى السماء وإذا دعا بحصول شيء أو تحصيله أن يجعل بطن كفيه إلى السماء وكذا قال النووي في شرح مسلم حاكيا بذلك عن جماعة من العلماء  (مرقاة

 

வியாழன், 9 ஜூன், 2022

நபிகளாரை(ஸல்) இழிவு படுத்தியவர்களை அல்லாஹ் நிச்சயம் தண்டிப்பான்.

 


10-06-2022

துல்கஃதா- 9

 

بسم الله الرحمن الرحيم

நபிகளாரை(ஸல்) இழிவு படுத்தியவர்களை அல்லாஹ் நிச்சயம் தண்டிப்பான்.

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 





முஸ்லிம்களையும் முஸ்லிம்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவ்வப்போது வசைபாடுவது பாசிசவாதிகளின் வழமை. சமீபத்திய அவர்களின் போங்கு என்னவென்றால் அவர்களில் கீழ் நிலையில் உள்ள யாருக்கேனும் பதவி உயர்வு வேண்டுமானால் முஸ்லிம்களை அல்லது இஸ்லாத்தை அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வசை பாடினால் போதும் அவர் காவித் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார். கூடிய விரைவில் அவருக்குப் பதவி உயர்வை காவித் தலைவர்களின் கொடுத்து விடுவார்கள். இதற்காகவே பல பாசிச அடிமைகள் வேண்டுமென்றே முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர்.                                                                                  

சமீபத்தில் பாஜக தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, டைம்ஸ் நவ் என்ற தொலைக்காட்சி விவாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அவமரியாதையாகப் பேசினார். இச்செய்தி வழக்கத்தை விட அதிகமாக அரபு நாடுகளில் பரவி அரபு நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அரபு நாடுகளில் பல வியாபார நிறுவனங்கள் இந்தியப் பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என்ற முடிவுக்கு வந்துள்ளன. இவற்றை அறிந்தவுடன் மத்திய அரசு அந்த நுபுர் சர்மாவை பதவியில் இருந்து நீக்கி விட்டதாகவும் அவர் மீது விசாரணை உண்டு எனவும் நாடகம் நடத்தியுள்ளது. கூடிய விரைவில் இவ்வாறு பேசியதற்காகவே அவர் பதவி உயர்வு அளிக்கப்படுவார் என்பது தான் உண்மை. இவர்கள் நடத்தும் நாடகங்களையும் சூழ்ச்சிகளையும் அல்லாஹ் விரைவில் அம்பலப்படுத்துவான்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள்  முஸ்லிம்களுக்கு உயிரை விட மேலானவர்கள்.

அவர்களைப் கேவலமாக பேசப்படுவதை எந்த முஸ்லிமும் பொருத்துக் கொள்ள மாட்டான்

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ (24التوبة)-النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ (الاعراف6)

நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் மீது எச்சில் துப்ப நினைத்தவனை அல்லாஹ் கேவலப் படுத்தினான்.

{وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ} هو عقبة بن أبي معيط، وكان صديقا لأمية بن خلف الجمحي ويروى لأبي بن خلف أخ أمية، وكان قد صنع وليمة فدعا إليها قريشا، ودعا رسول الله صلى الله عليه وسلم فأبى أن يأتيه إلا أن يسلم. وكره عقبة أن يتأخر عن طعامه من أشراف قريش أحد فأسلم ونطق بالشهادتين، فأتاه رسول الله صلى الله عليه وسلم وأكل من طعامه، فعاتبه خليله أمية بن خلف، أو أبي بن خلف وكان غائبا. فقال عقبة: رأيت عظيما ألا يحضر طعامي رجل من أشراف قريش. فقال له خليله: لا أرضى حتى ترجع وتبصق في وجهه وتطأ عنقه وتقول كيت وكيت. ففعل عدو الله ما أمره به خليله؛ فأنزل الله عز وجل: {وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ} قال الضحاك: لما بصق عقبة في وجه رسول الله صلى الله عليه وسلم رجع بصاقه في وجهه وشوى وجهه وشفتيه، حتى أثر في وجهه وأحرق خديه، فلم يزل أثر ذلك في وجهه حتى قتل. (تفسير قرطبي

 

 

கருத்து- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் முஸ்லிம்களின் எதிரிகளாக இருந்தவர்களில் உக்பா என்பவனும் ஒருவன். இந்த உக்பா ஒரு தடவை தன் வீட்டு திருமண விருந்துக்கு குறைஷிகள் அனைவரையும் அழைத்திருந்தான். அந்த வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அந்த விருந்துக்கு அழைத்திருந்தான். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் தான் நான் விருந்துக்கு வருவேன் என்று நிபந்தனை விதித்தார்கள் அந்த உக்பாவுக்கோ நம்முடைய விருந்தில் ஒருவர் தவறாமல் அனைவரும் கலந்து கொண்டால் தான் நமக்கு கவுரவம். அவ்வாறு இல்லா விட்டால் நம்முடைய கவுரவம் போய்விடும் என்று கருதினான் அதனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி வெறுமனே உதட்டளவில் கலிமாவை கூறினான். இதற்குப் பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விருந்துக்கு வர சம்மதித்தார்கள். இந்த நிலையில்  உக்பாவின் நண்பன்  உமய்யா  என்பவன் உக்பாவிடம் நீ  முஹம்மதை விருந்துக்கு அழைத்திருப்பதாக கேள்விப்பட்டேனே நீ அவருடைய மதத்தை ஏற்றுக் கொண்டதாகவும் கேள்விப்பட்டேனே அது உண்மையா என்று கேட்க, அதற்கு உக்பா நான் வெறுமனே உதட்டளவில் மட்டும் தான் கலிமா சொன்னேன். இல்லா விட்டால் அவர் விருந்துக்கு வர மாட்டேன் என்று மறுக்கிறார். என்று கூற உடனே அவனுடைய கெட்ட நண்பனான உமய்யா அதை ஏற்க மறுத்து அவனுடன் சண்டை போட்டான். கடைசியில் கெட்ட நண்பனான உமய்யா சொன்னான் நீ உண்மையாகவே அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று என்னிடம் நிரூபித்துக் காட்டு அதாவது அந்த முஹம்மத் இங்கே விருந்துக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தவுடன் நீ அவருடைய முகத்தில் எச்சில் துப்ப வேண்டும். பிறகு அவருடைய கழுத்தை நெறிக்க வேண்டும் அப்போது தான் நான் உன்னை நம்புவேன் என்ற கூற, அந்த உக்பா சரி நான் அவ்வாறே செய்கிறேன் என்று கூறி சம்மதித்தான். சற்று நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்து சாப்பிட ஆரம்பித்தவுடன் இருவரும் பேசி வைத்தது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் எச்சில் துப்ப முயற்சித்த போது அந்த எச்சில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகத்தில் படாத வகையில் சுவற்றில் மீது வீசப்படும் பந்து போல அப்படியே ரிட்டன் வந்து உக்பாவுடைய முகத்தில் படிந்தது. அதுமட்டுமல்ல  அந்த எச்சில் திரும்பி ரிட்டன் வரும்போது கடும் சூடான நிலையில் ஆசிட் போன்று ஆகி விட்டது. அதனால் அந்த எச்சில் பட்டு உக்பாவின் முகம் கரிந்தது. உதடுகளும் கரிந்தன. அந்த காயத்தை சரி செய்ய எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அந்த தளும்பு கடைசி வரைக்கும் மாறவேயில்லை. கடைசியில் அவன் ஒரு போரில் கொல்லப்பட்டான் அதுவரை அந்த தளும்பு அவனுடைய முகத்தை விட்டும் மறையவேயில்லை-   

தஃபஸீருல் குர்துபீ.

أَنَّ عُتْبَةَ بْنَ أَبِى لَهَبٍ كَانَ شَدِيدَ الأَذَى لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ :« اللَّهُمَّ سَلِّطْ عَلَيْهِ كَلْبًا مِنْ كِلاَبِكَ ». فَخَرَجَ عُتْبَةُ إِلَى الشَّامِ مَعَ أَصْحَابِهِ فَنَزَلَ مَنْزِلاً فَطَرَقَهُمُ الأَسَدُ فَتَخَطَّى إِلَيْهِ مِنْ بَيْنِ أَصْحَابِهِ فَقَتَلَهُ (بيهقي)- وروي أنه (عتبة بن أبي لهب)كان مبالغاً في عداوت النبي صلي الله عليه وسلم ، فقال النبي صلي الله عليه وسلم : اللهم سلط عليه كلباً من كلابك فوقع الرعب في قلب عتبة وكان يحترز فسار ليلة من الليالي فلما كان قريباً من الصبح ، فقال له أصحابه : هلكت الركاب فما زالوا به حتى نزل وهو مرعوب وأناخ الإبل حوله كالسرادق فسلط الله عليه الأسد وألقى السكينة على الإبل فجعل الأسد يتخلل حتى افترسه ومزقه ،(قرطبي)

عن عروة ابن الزبير رضي الله عنهما أن عتبة بن أبي لهب وكان تحته بنت رسول الله صلى الله عليه وسلم أراد الخروج إلى الشام فقال: لآتين محمدا فلأوذينه، فأتاه ثم تفل في وجه رسول الله صلى الله عليه وسلم، ورد عليه ابنته وطلقها؛ فقال رسول الله صلى الله عليه وسلم: "اللهم سلط عليه كلبا من كلابك" وكان أبو طالب حاضرا فوجم لها وقال: ما كان أغناك يا ابن أخي عن هذه الدعوة، فرجع عتبة إلى أبيه فأخبره، ثم خرجوا إلى الشام، فنزلوا منزلا، فأشرف عليهم راهب من الدير فقال لهم: إن هذه أرض مسبعة. فقال أبو لهب لأصحابه: أغيثونا يا معشر قريش هذه الليلة! فإني أخاف على ابني من دعوة محمد؛ فجمعوا جمالهم وأناخوها حولهم، وأحدقوا بعتبة، فجاء الأسد يتشمم وجوههم حتى ضرب عتبة فقتله. (قرطبي)

அபூலஹப் உடைய மகன் உத்பா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெரும் விரோதியாக இருந்தான். மற்றொரு அறிவிப்பின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகாஹ் பற்றிய சட்டங்கள் வரும் முன்பு தனது மகளை அபூலஹப் உடைய மகன் உத்பாவுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்கள். ஆனால் எப்போது லஹப் சூரா இறங்கியதோ அப்போது தந்தை அபூலஹபின் உத்தரவின்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளை தலாக் கூறியதுடன் மிகவும் கடுமையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திட்டினான். அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாஅல்லாஹ் இவன் மீது உன்னுடைய சிங்கங்களில் ஒரு சிங்கத்தை ஏவுவாயாக என்று துஆ செய்தார்கள். மகன் மீதான இந்த சாபம் அபூலஹபுடைய மளதிலும் ஒரு பீதியை ஏற்படுத்தியது. எங்கு சென்றாலும் கவனமாக இரு. என மகனை எச்சரித்தான். அன்று முதல் உத்பா எப்போது வெளியே சென்றாலும் பாதுகாப்புடன் செல்வான். ஒருமுறை ஷாமுக்கு குடும்பத்துடன் சென்றபோது ஒரு இடத்தில் தங்கும் நேரத்தில் அங்குள்ள பாதிரி ஒருவர் இங்கு சிங்கங்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது என்றார். அப்போது அபூலஹப் தன் குடும்பத்தார் அனைவரிடமும் இன்று இரவு மட்டும் எப்படியாவது என் மகனை எல்லோரும் சேர்ந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றான். ஏனெனில் முஹம்மதின் சாபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றான். அவர்கள் அனைவரும் மகனைப் பாதுகாக்கும் விதமாக சுற்றிலும் படுத்தார்கள். அப்படியிருந்தும் நடு இரவில் ஒரு சிங்கம் வந்து அவனை மட்டும் குதறிக் கொன்றது.                   

நபி(ஸல்) அவர்களுக்கு எவன் எதிரியோ அவன் அல்லாஹ்வுக்கும் எதிரி...

أن فرعون مع كمال سلطته ما كان يزيد كفره على القول ، وما كان ليتعرض لقتل موسى عليها السلام ولا لإيذائه. وأما أبو جهل فهو مع قلة جاهه كان / يقصد قتل النبي صلى الله عليه وسلّم وإيذاءه وثالثها : أن فرعون أحسن إلى موسى أولاً ، وقال آخراً : {ءَامَنتُ} . وأما أبو جهل فكان يحسد النبي في صباه ، وقال في آخر رمقه : بلغوا عني محمداً أني أموت ولا أحد أبغض إلي منه (تفسير الرازي

அபூஜஹ்ல், ஃபிர்அவ்ன் இருவரில் மிக மோசமானவன் யார்? என்று மேலோட்டமாக சிந்திக்கக் கூடிய ஒருவருக்கு  அபூஜஹ்ல் தன்னை கடவுள் என்று சொல்லவில்லையே ஆனால் ஃபிர்அவ்ன் தன்னை கடவுள் என்றல்லவா சொன்னான். எனவே ஃபிர்அவ்ன்தான் மிக மோசமானவன் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் ஃபிர்அவ்னைப் பற்றி குறிப்பிடும் போது

اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى (24)

அவன் வரம்பு மீறுகிறான் என்று கூறும் அல்லாஹ் அபூஜஹ்லைப் பற்றி அலக் சூராவில்

لَيَطْغَى நிச்சயமாக அவன் மிகவும் வரம்பு மீறுகிறான் என்று சாடுகிறான். இதை வைத்து விரிவுரையாளர்கள்  ஃபிர்அவ்னை விட அபூஜஹ்ல் தான் மோசமானவன் என்று கூறுவதோடு, அதற்கு சில ஆதாரங்களையும் முன் வைக்கிறார்கள்

1.அபூஜஹ்லை விட ஃபிர்அவ்ன் ஆட்சி, அதிகாரத்தில்பல மடங்கு பெரியவன். அவ்வாறிருந்தும் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களை பலமுறை மிரட்டியுள்ளானோ தவிர, ஒருமுறை கூட கொல்ல முயலவில்லை. ஆனால் அபூஜஹ்ல் பதவியிலும் அதிகாரத்திலும் பெரிய அளவில் இல்லாதிருந்தும் பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொல்ல முயன்றான். பலமுறை துன்புறுத்தினான். 

2.ஃபிர்அவ்ன் ஆரம்ப காலத்தில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை  தத்தெடுத்து வளர்த்தான். பாசமாகவும் இருந்தான். பிறகு தான் அவன் அவன் எதிரியாக மாறினான். அப்போதும் கூட கடைசி நேரத்தில் மூஸாவுடைய ரப்பை நான் நம்புகிறேன் என்றான். எனினும் தவ்பா ஏற்கப்படும் காலக்கெடு முடிவடைந்ததால் அவனுடயை ஈமான் ஏற்கப்படவில்லை. ஆனால் அபூஜஹ்ல் தன் சிறு வயதில் இருந்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிரியாக இருந்தான். உயிர் பிரியும் கடைசி நேரத்தில் கூட

بَلِّغُوْا عَنِّي مُحَمَّداً أَني أَمُوتُ ولا أحد أبغضَ إليَّ منه

முஹம்மதுக்கு என் கடைசி வார்த்தையை தெரிவித்து விடுங்கள். நான் மரணிக்கும் இந்த நேரத்திலும் கூட  அவர் தான் எனக்கு மிகப்பெரும் எதிரி என்று கூறிய நிலையில் இறந்தான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو جَهْلٍ هَلْ يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ بَيْنَ أَظْهُرِكُمْ قَالَ فَقِيلَ نَعَمْ فَقَالَ وَاللَّاتِ وَالْعُزَّى لَئِنْ رَأَيْتُهُ يَفْعَلُ ذَلِكَ لَأَطَأَنَّ عَلَى رَقَبَتِهِ أَوْ لَأُعَفِّرَنَّ وَجْهَهُ فِي التُّرَابِ قَالَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي زَعَمَ لِيَطَأَ عَلَى رَقَبَتِهِ قَالَ فَمَا فَجِئَهُمْ مِنْهُ إِلَّا وَهُوَ يَنْكُصُ عَلَى عَقِبَيْهِ وَيَتَّقِي بِيَدَيْهِ قَالَ فَقِيلَ لَهُ مَا لَكَ فَقَالَ إِنَّ بَيْنِي وَبَيْنَهُ لَخَنْدَقًا مِنْ نَارٍ وَهَوْلًا وَأَجْنِحَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ دَنَا مِنِّي لَاخْتَطَفَتْهُ الْمَلَائِكَةُ عُضْوًا عُضْوًا قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَا نَدْرِي فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ أَوْ شَيْءٌ بَلَغَهُ{ كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى أَنْ رَآهُ اسْتَغْنَى إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى أَرَأَيْتَ الَّذِي يَنْهَى عَبْدًا إِذَا صَلَّى أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَى أَوْ أَمَرَ بِالتَّقْوَى أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّى }يَعْنِي أَبَا جَهْلٍ (مسلم)

அபூஹுரைரா ரழி கூறியுள்ளார்கள் - ஒருமுறை அபூஜஹ்ல் தன் சகாக்களிடம் உங்களில் எவரேனும் முஹம்மது தன் தலையைக் கீழே வைப்பதை (சஜ்தா செய்வதைப்) பார்த்தீர்களா?  என்று கேட்க, ஆம்!  அவர் சஜ்தா செய்கிறார் என்று மற்றவர்கள் கூறினர். உடனே கோபமடைந்த அபூஜஹ்ல் (நான் பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை)  இப்போது நான் அவரிடம் சென்று அவர் தனது தலையை கீழே வைத்திருப்பதை நான் கண்டால் அவருடைய கழுத்திலேயே நான் மிதிப்பேன். அல்லது அவர் தலையை கீழே வைத்திருக்கும் நிலையிலேயே அந்த த் தலையை மண்ணில் புதைத்து விடுவேன் என்று கூறியவனாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி வந்தான்.  அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். உடனே அவர்களின் கழுத்தில் மிதிக்கும் நோக்கத்தில் அண்ணலாரை நெருங்கி, கைகளையும் நீட்டிய போது எதையோ கண்டு பயந்து பின்வாங்கினான். நீட்டிய அவனது கைகளையும் சுருக்கிக் கொண்டான். அவனிடம் என்ன ஆயிற்று உமக்கு?  என காரணம் கேட்கப்பட்ட போது, நிச்சயமாக நான் அவரை நெருங்கியபோது எனக்கும், அவருக்குமிடையில் பெரிய நெருப்புப் பள்ளம் இருப்பதையும், சில ராட்சத இறக்கைகளையும், பயமுறுத்தக் கூடியவைகளையும் நான் கண்டேன். என்று அபூஜஹ்ல் கூறினான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும்போது ஒருவேளை அவன் என்னை நெருங்கியிருந்தால் அந்த இறக்கைகளுக்குச் சொந்தமான மலக்குமார்கள் அவனைத் துண்டு துண்டாக ஆக்கி அந்த நெருப்புப் பள்ளத்தில் வீசியிருப்பார்கள் எனக்கூறினார்கள். நூல் முஸ்லிம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம்

ஏற்படுத்தியவன் இறந்த பிறகு அவனை பூமி ஏற்கவில்லை

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَجُلٌ نَصْرَانِيًّا فَأَسْلَمَ وَقَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ فَكَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَادَ نَصْرَانِيًّا فَكَانَ يَقُولُ مَا يَدْرِي مُحَمَّدٌ إِلَّا مَا كَتَبْتُ لَهُ فَأَمَاتَهُ اللَّهُ فَدَفَنُوهُ فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَقَالُوا هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ لَمَّا هَرَبَ مِنْهُمْ نَبَشُوا عَنْ صَاحِبِنَا فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ فَأَعْمَقُوا فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَقَالُوا هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ نَبَشُوا عَنْ صَاحِبِنَا لَمَّا هَرَبَ مِنْهُمْ فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ وَأَعْمَقُوا لَهُ فِي الْأَرْضِ مَا اسْتَطَاعُوا فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَعَلِمُوا أَنَّهُ لَيْسَ مِنْ النَّاسِ فَأَلْقَوْهُ (بخاري3617

கருத்து-ஒரு கிறிஸ்தவன் இஸ்லாத்தை ஏற்றான். அவன் நன்கு எழுதக் கூடியவனாக இருந்ததால் அவனை வஹீயை எழுதுவதற்கு  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்படுத்தியிருந்தார்கள். பிறகு அவன் மீண்டும் கிறிஸ்தவனாக மாறி விட்டான். அத்துடன் மக்களிடம் முஹம்மதுக்கு ஒன்றுமே தெரியாது. நான் எழுதிக் கொடுத்ததை வைத்துத்தான் வஹீ என்று சொல்லி முஹம்மத் மக்களுக்குக் கூறுகிறார். என்று பொய்யான செய்தியை மக்களுக்குப் பரப்பினான். ஒருநேரத்தில் அவன் இறந்தபோது அவனை அவனது குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவனது சடலம் வெளியே வந்து கிடந்தது. இது முஹம்மதுடைய (ஸல்) ஆட்களின் வேலையாக இருக்கும் என்றெண்ணி மீண்டும் அவனை இன்னும் ஆழமாக குழி தோண்டி அடக்கினார்கள். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவனது சடலம் மீண்டும் வெளியே வந்து கிடந்தது. இது முஹம்மதுடைய (ஸல்) ஆட்களின் வேலையாக இருக்கும் என்றெண்ணி மீண்டும் அவனை இன்னும் ஆழமாக குழி தோண்டி அடக்கினார்கள். மூன்றாவது நாளும் அவ்வாறே சடலம் வெளியே தள்ளப்பட்டபோது இது மனிதர்களின் வேலையல்ல என்று உணர்ந்து அவனது சடலத்தை அப்படியே போட்டு விட்டுச் சென்றனர்.                                               

                                                                       

உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான மனோ நிலை மாறுவதற்காக ஹாஜிகள்

துஆ ஏற்கப்படும் இடங்களைத் தேர்வு செய்து துஆச் செய்ய வேண்டும்.

கஃபாவுக்குள் நுழைந்தவுடன் கஃபாவைப் பார்க்கும் முதல் பார்வையில் துஆ

عن ابن جريج : أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى البيت رفع يديه ، وقال : اللهم " زد هذا البيت تشريفا وتعظيما وتكريما ومهابة ، وزد من شرفه ، وكرمه ممن حجه أو اعتمره تشريفا وتعظيما وتكريما وبرا "

عن سعيد بن المسيب أنه كان إذا دخل المسجد : الكعبة ، ونظر إلى البيت قال : اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام. [ مصنف ابن أبي شيبة ]

قال الشافعي رضي الله عنه : وإذا رأى البيت قال : اللَّهُمَّ زدْ هذا  البيت شرفاً وتعظيماً ، وتكريماً ومهابةً ، وزدْ من شَرَّفَه وعظَّمَه وكرَّمَه  ممن حَجهَّ واعتمره تشريفاً وتكريماً وبراً ، اللَّهُمَّ أنت السلامُ ومنك  السلامُ فحيِّنا ربنا بالسلام .  (سنن الصغرى للبيهقي

அரபா மைதானத்தில் செய்யும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ  (ترمذي

ஸயீ ஆரம்பிக்கும்போது சஃபா மீது நின்று கஃபாவைப் பார்த்த படி கேட்கும் துஆக்கள் ஏற்கப்படும்.

عن جابر رضي الله عنه ..... فَبَدَأَ (أي النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)  بِالصَّفَا فَرَقِيَ عَلَيْهِ حَتَّى رَأَى الْبَيْتَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَوَحَّدَ اللَّهَ وَكَبَّرَهُ وَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ ثُمَّ دَعَا بَيْنَ ذَلِكَ قَالَ مِثْلَ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ نَزَلَ إِلَى الْمَرْوَةِ حَتَّى إِذَا انْصَبَّتْ قَدَمَاهُ فِي بَطْنِ الْوَادِي سَعَى حَتَّى إِذَا صَعِدَتَا مَشَى حَتَّى أَتَى الْمَرْوَةَ فَفَعَلَ عَلَى الْمَرْوَةِ كَمَا فَعَلَ عَلَى الصَّفَا..(مسلم

முஜ்தலிஃபாவில் கேட்கும் துஆவும் ஏற்கப்படும்.

عن جابر رضي الله عنه .....  ثُمَّ رَكِبَ  (أي النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)  الْقَصْوَاءَ حَتَّى أَتَى الْمَشْعَرَ الْحَرَامَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَدَعَاهُ وَكَبَّرَهُ وَهَلَّلَهُ وَوَحَّدَهُ فَلَمْ يَزَلْ وَاقِفًا حَتَّى أَسْفَرَ جِدًّا فَدَفَعَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ  (مسلم)

ஜம்ரத்துல் ஊலா மற்றும் ஜம்ரத்துல் உஸ்தாவில் கல்லெறியும்போது

عَنْ الزُّهْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَمَى الْجَمْرَةَ الَّتِي تَلِي مَسْجِدَ مِنًى يَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ ثُمَّ تَقَدَّمَ أَمَامَهَا فَوَقَفَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو وَكَانَ يُطِيلُ الْوُقُوفَ ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الثَّانِيَةَ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ ثُمَّ يَنْحَدِرُ ذَاتَ الْيَسَارِ مِمَّا يَلِي الْوَادِيَ فَيَقِفُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الْعَقَبَةِ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ عِنْدَ كُلِّ حَصَاةٍ ثُمَّ يَنْصَرِفُ وَلَا يَقِفُ عِنْدَهَا (بخاري -بَاب الدُّعَاءِ عِنْدَ الْجَمْرَتَيْنِ

கஃபாவுக்குள் அல்லது ஹதீமுக்குள் இருக்கும்போது

عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ قَالَ لَمَّا دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا (مسلم

ஜம்ஜம் நீர் அருந்தும்போது

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ إِنْ شَرِبْتَهُ تَسْتَشْفِى بِهِ شَفَاكَ اللَّهُ وَإِنْ شَرِبْتَهُ لِشِبَعِكَ أَشْبَعَكَ اللَّهُ بِهِ وَإِنْ شَرِبْتَهُ لِقَطْعِ ظَمَئِكَ قَطَعَهُ وَهِىَ هَزْمَةُ جِبْرِيلَ وَسُقْيَا اللَّهِ إِسْمَاعِيلَ ».(دار قطني

ஹஜ்ஜில் 15   இடங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் இடங்களாக கூறப்பட்டுள்ளது.

وَفِي رِسَالَةِ الْحَسَنِ الْبَصْرِيِّ الَّتِي أَرْسَلَهَا إلَى أَهْلِ مَكَّةَ أَنَّ الدُّعَاءَ هُنَاكَ يُسْتَجَابُ فِي خَمْسَةَ عَشَرَ مَوْضِعًا فِي الطَّوَافِ وَعِنْدَ الْمُلْتَزَمِ وَتَحْتَ الْمِيزَابِ وَفِي الْبَيْتِ وَعِنْدَ زَمْزَمَ وَخَلْفَ الْمَقَامِ وَعَلَى الصَّفَا وَعَلَى الْمَرْوَةِ وَفِي السَّعْيِ وَفِي عَرَفَاتٍ وَفِي مُزْدَلِفَةَ وَفِي مِنًى وَعِنْدَ الْجَمَرَاتِ الثَّلَاثِ ،. (كتاب الحج من البحر الرائق شرح كنز الدقائق)  (الدر المنثور

ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் மக்காவாசிகளுக்கு அனுப்பிய கடித த்தில் பின்வருமாறு இருந்த து. மக்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 15 இடங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடங்களாகும். 1. தவாஃப் செய்யும்போது 2. முல்தஜிம் அதாவது ஹஜருல் அஸ்வதுக்கும் கஃபாவின் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதி 3. மீஜாபுக்குக் கீழே (அதாவது மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள தங்க நிற குழாயின் கீழ்) 4. கஃபாவுக்குள் (அல்லது ஹதீமுக்குள் இருக்கும்போது…) 5. ஜம்ஜம் நீர் அருந்தும்போது 6. மகாமே இப்றாஹீம் அருகில் 7. சஃபாவின் மீது 8. மர்வா மீது நின்ற படி 9. சயீ செய்யும்போது 10. அரஃபா மைதானம் 11. முஜ்தலிஃபா 12. மினா 13,14,15. மூன்று ஜம்ராக்கள்

 

 

 

 

நாவைப் பேணுவோம்

31-07-2026 ஸஃபர் - 16 بسم الله الرحمن الرحيم          நாவின் விபரீதங்கள் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN N...