வியாழன், 23 நவம்பர், 2023

தண்ணீரின் அருமையும் மழை பற்றிய செய்திகளும்

 

 தண்ணீரின் அருமையும்  மழை பற்றிய செய்திகளும்   



أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68) أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ (69) لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ (70) الواقعة

மழை என்பது அல்லாஹ்வின் அருள் என்பதை நாம் நன்றாக மனதில் பதிய வைப்பதற்காகவும் மழை நீரை நிலத்தடி நீராக பூமிக்குள் தேங்கச் செய்து அதை மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவது அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றலால் மட்டுமே உள்ளது என்பதையும் அது நம்முடைய முயற்சியால் நடப்பதல்ல என்பதையும் மக்களுக்கு உணர வைப்பதற்காக இத்தலைப்பு எடுக்கப் பட்டுள்ளது. மேலும்  மழை பெய்வதால் நம்முடைய காரியங்கள் தடை பட்டாலும் அதற்காக மழையை சபிக்கக் கூடாது என்பதையும் மழை பெய்யும்போது நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த துஆவை ஓதும் வழமை நம்மிடம் வர வேண்டும் என்பதற்காகவும் இன்னும் சில படிப்பினைகளை உள்ளடக்கியும் இத்தலைப்பு எடுக்கப் பட்டுள்ளது.    

தண்ணீரின் அவசியம்

 நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் கூறுவது போல எல்லா உயிர்களும் அதன் உடலில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தண்ணீரைக்கொண்டு உள்ளவை. குறிப்பாக மனித உடலில் 75 சதவீதம் தண்ணீர் தான் நிரம்பியுள்ளது. எல்லா உறுப்புக்களுக்கும் தண்ணீர் தேவை. மேலும் நம்முடைய உடம்பில் வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை மல, ஜல துவாரங்களை நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதும் தண்ணீர் தான். அதனால் தான் மலம், ஜலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவர்.

மழை நீரையும் நிலத்தடி நீரையும் மாபெரும் அருளாக கருத வேண்டும்.

أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68) أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ (69) لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ (70) الواقعة

 உலகின் ஒட்டுமொத்த நீரில் 97 சதவீதத்தை உப்பாக ஆக்கி வைத்த அல்லாஹ் அதில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே குடிக்க உகந்ததாக ஆக்கியுள்ளான். அதையும் உப்பாக ஆக்கியிருந்தால் உங்களால் என்ன செய்ய முடியும் என வாகிஆ சூராவில் 70வது ஆயத்தில் கூறுகிறான். தண்ணீர் என்ற வார்த்தையை அல்லாஹ் குர்ஆனில் 63 இடங்களில் கூறியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்நாளும் 63 வருடங்கள். இவ்விரண்டுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.அதாவது நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்துக்கு எவ்வளவு பெரிய அருட்கொடையோ அதுபோன்று தண்ணீரும் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அருட்கொடை என்பதை விளக்க இவ்வாறு அல்லாஹ் கூறியுள்ளதாக சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் அல்லாஹ் தண்ணீரை பரக்கத் நிறைந்தது என குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.                                     

உலக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலத்தடி நீர் உருவான வரலாறு

இப்போதுள்ள நதிகள், ஆறுகள், கடல்கள் உருவானது வெள்ளப் பிரளயத்திற்குப் பின்னால் தான

{وقيل يا أرض ابلعي ماءك} وقف قوم على ظاهر الآية وقالوا : إِنما ابتلعت مانبع منها ، ولم تبتلع ماء السماء فصار ذلك بحاراً وأنهاراً  وهو معنى قول ابن عباس وذهب آخرون إِلى أن المراد: ابلعي ماءك الذي عليك وهو ما نبع من الأرض ونزل من السماء وذلك بعد أن غرق ما على وجه الأرض (زاد المسير)

வானமும் தன் நீரை பொழிந்தது. பூமியும் தனக்குள் உள்ள நீரை வெளியே மேலே கொண்டு வந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் அல்லாஹ் வானமே நீ உன் தண்ணீரை நிறுத்திக்கொள். பூமியே நீ உன் தண்ணீரை மீண்டும் விழுங்கிக் கொள் என அல்லாஹ் உத்தரவிட்டான். அதன் படி பூமி தன்னுடைய தண்ணீரை மட்டும் தான் விழுங்கியது. வானம் பொழிந்த நீரை விழுங்கவில்லை. அவைகள் ஆறுகளாகவும், நதிகளாகவும், கடல்களாகவும் நிலத்தடி நீர்களாகவும் ஆகி விட்டன.

தண்ணீர் எவ்வளவு அருந்துவது?

عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ (ترمذي

 மனிதன் நிரப்பிக் கொள்ளும் பாத்திரங்களில் அவனது வயிற்றைவிட கெட்டது வேறெதுவும் இல்லை. அவனுடைய முதுகுத்தண்டை நிமிர்த்துவதற்கு (அதாவது ஆரோக்கியமாக இருப்பதற்கு) சில கவளங்கள் போதுமானது. எனினும் அவன் மனம் கேட்காவிட்டால் அவன் வயிற்றில் மூன்றில் ஒரு பங்கு உணவுக்கும், மற்றொரு பங்கு தண்ணீருக்கும் மற்றொரு பங்கு மூச்சு விடுவதற்காக காலியாகவும் விட்டு விடவும். - திர்மிதீ                               

                                     

 மேற்படி நபிமொழி அடிப்படையில் ஒருநாளைக்கு நாம் எதையெல்லாம் உணவாகவும் திண்பண்டமாகவும் வயிற்றில் எந்த அளவுக்கு செலுத்துகிறோமோ அதே அளவுக்கு நாம் தண்ணீருக்கு இடமளிக்க வேண்டும் என அறிய முடிகிறது. இன்று மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள தினமும் நான்கு லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். மனித உடலுக்குத் தேவையான சத்துக்களை இரத்தம்தான் எல்லா பாகங்களுக்கும் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த இரத்த ஓட்டம் சீராக இருக்க தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. தற்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீரை சூடாக அருந்துவது நல்லது. ஏனெனில் ஒருவேளை வைரஸ் கிருமிகள் நம்மைத் தாக்கினாலும் சில நாட்கள் அது தொண்டையில் இருக்கும் என்றும் அடிக்கடி வெந்நீர் அருந்துவதால்  அந்த வைரஸ் கிருமி போய்விடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவில் இடையிலும், உணவு உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும் என அபூநயீம் போன்ற மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள்.   

மழை பற்றிய செய்திகள்

அல்லாஹ்விடமிருந்து  புதிய மழைத்துளி மேனியில் படும்போது மகிழ்ந்த நபி ஸல்..

عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ أَنَسٌ أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ قَالَ فَحَسَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ حَتَّى أَصَابَهُ مِنْ الْمَطَرِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا قَالَ لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى (مسلم) باب الدُّعَاءِ فِى الاِسْتِسْقَاءِ- صلاة الاستسقاء

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் இருந்த போது மழை பெய்தது அப்போது நபி ஸல் அவர்கள் தன் மேலாடையை நீக்கி அந்த மழைத்துளிகளில் சில தன் மீது படும்படி நடந்து கொண்டார்கள் அப்போது அவர்களிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்ட போது இது அல்லாஹ்விடமிருந்து புதிதாக வந்து இறங்குகிறது என்றார்கள். முஸ்லிம்

விளக்கம்- மழையில் நனைய வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாக ஆகாது. மழையின் முதல் துளிகள் தன் மீது படுவதை அல்லாஹ்வின் அருள் இறங்குவதாக நபி ஸல் அவர்கள் உணர்ந்தார்கள் என்பதே சரியான விளக்கமாகும்

வருடம்தோறும் பெய்யும் மழை ஒருபோதும் குறையாது.எனினும் அல்லாஹ் நாடிய இடங்களுக்கு மாறும்

وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ (18) المؤمنون

வானத்தில் இருந்து மழையை நாம் குறிப்பிட்ட அளவோடு தான் இறக்குகிறோம். அதை மக்களுக்கு நன்மை தரும் தேக்கி வைப்பதும் நாம் தான். நிச்சயமாக நாம் அதை இல்லாமல் ஆக்கவும் சக்தி பெற்றுள்ளோம்.

عن أبي هريرة رضي الله عنه قال :ما نزلت قطرة إلا بميزان إلا زمان نوح عليه السلام (رواه ابن ابي الدنيا

عَنِ ابْنِ عَبَّاس رضي الله عنه أَنَّهُ قَالَ:مَا مِنْ عَامٍ بِأَكْثَرَ مَطَرًا مِنْ عَامٍ وَلَكِنَّ اللَّهَ يُصَرِّفُهُ بَيْنَ عِبَادِهِ وَقَرَأَ:وَلَقَدْ صَرَّفْنَاهُ بَيْنَهُمْ(الفرقان50

அபூ ஹுரைரா ரழி அவர்கள் கூறினார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய வெள்ளப் பிரளயத்திற்குப் பின் கடந்த ஐம்பதாயிரம் வருடங்களாக வருடம் தோறும் பெய்யும் மழையில் அதாவது அதன் அளவில் கூடுதல் குறைவு ஏற்பட்டதே இல்லை. எனினும் ஒரு இடத்தில் பெய்ய வேண்டிய மழையை அல்லாஹ் மற்றொரு ஊருக்கு மாற்றியமைத்து விடுவான்.  

   மேற்படி வசனத்தின் விளக்கம்

 -عن الحكم بن عتيبة  في قوله(وَمَا نُنزلُهُ إِلا بِقَدَرٍ مَعْلُومٍ(الحجر21) قال:ما من عام بأكثر مطرا من عام ولا أقل ولكنه يمطر قوم ويُحرم آخرون وربما كان في البحر(تفسير ابن ابي حاتم)

அல்லாஹ் மழையை வருடம் தோறும் ஒரே அளவில் தான் இறக்குகிறான். எனினும் ஒரு இடத்தில் பெய்ய வேண்டிய மழையை அல்லாஹ் மற்றொரு ஊருக்கு மாற்றியமைத்து விடுவான். ஒரு இடத்தில்   வசிப்பவர்கள் மழையே இல்லாமல் சிரமப் படுவார்கள். மற்றொரு இடத்தில் உள்ளவர்களுக்கு அளவை விட அதிகமாகப் பெய்யும். இதன் நுட்பம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.

மழையில் பல வகைகள் உள்ளன. 1. அருளாகப் பெய்யும் மழை 2. அதாப் வேதனையாகப் பெய்யும் மழை  3. சோதிப்பதற்காகப் பெய்யும் மழை 4. பொதுவாக மக்களின் நன்மைக்காக பெய்யும் மழை

அருளாகப் பெய்யும் மழைக்கு உதாரணம்

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَبُّكُمْ عَزَّ وَجَلَّ لَوْ أَنَّ عِبَادِي أَطَاعُونِي لَأَسْقَيْتُهُمْ الْمَطَرَ بِاللَّيْلِ وَأَطْلَعْتُ عَلَيْهِمْ الشَّمْسَ بِالنَّهَارِ وَلَمَا أَسْمَعْتُهُمْ صَوْتَ الرَّعْدِ (احمد)ضعيف-عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَوَاكِي فَقَالَ اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ قَالَ فَأَطْبَقَتْ عَلَيْهِمْ السَّمَاءُ (ابوداود) باب رَفْعِ الْيَدَيْنِ فِى الاِسْتِسْقَاءِ- كتاب الإستسقاء

அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என்னுடைய அடியார்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடந்தால் (இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில்) பகலில் சூரிய வெளிச்சத்தை வழமை போல ஆக்கி வைத்து இரவில் மட்டும் மழையை இறக்குவேன். இடி சப்தம் கூட அவர்களுக்குக் கேட்காத வகையில் மழையை இறக்குவேன்.

 

விளக்கம்- சென்னை போன்ற நகரங்களில் இரவில் நல்ல மழை பெய்தாலும் தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது அதனால் பகலிலும் பாதிப்பு தெரிகிறது என்ற விஷயம் மேற்படி ஹதீஸுக்கு முரணாக ஆகாது. காரணம் மனிதர்களின் தவறுகள் காரணமாக தண்ணீர் தேங்கும் இடங்களில் எல்லாம் வீடுகளைக் கட்டி வைத்து இயற்கை மழை நீர் தேங்குவதை தடுப்பதால் இரவில் பெய்யும் மழையும் சோதனையாக அமையலாம்.    

நீர் ஆதாரங்கள் அழிந்தால் ஊரே அழிந்து விடும்.

لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) سبا

அல்லாஹ் ஸபா என்ற ஊர்மக்களை அவர்கள் செய்த பாவத்தின் காரணமாக அழிக்க எண்ணியபோது அவ்வூரின் தண்ணீர் வளத்துக்கு ஆதாரமாக இருந்த மஆரிப் நீர்த்தேக்கத்தை முதலில் அழித்தான். எங்கிருந்தோ எண்ணிலடங்காத  எலிகள் அங்கு வந்து அந்த அணையைச் சிறிதுசிறிதாக அரிக்கத் துவங்கின. இதைக்கண்ட அம்மக்கள் அதிர்ச்சியடைந்து எலிகளை வேட்டையாட பல ஊர்களிலிருந்தும் பூனைகளை வரவழைத்தனர். ஆனால் அந்தப் பூனைகளால் அல்லாஹ்வின் படைகளான அந்த எலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அந்த அணைக்கட்டு உடைந்து நீர் பெருக்கெடுத்தது. ஊர் அழிந்தது.

وقال عبدالرحمن بن زيد: إن الآية التي كانت لأهل سبأ في مساكنهم أنهم لم يروا فيها بعوضة قط ولا ذبابا ولا برغوثا ولا قملة ولا عقربا ولا حية ولا غيرها من الهوام، وإذا جاءهم الركب في ثيابهم القمل والدواب فإذا نظروا إلى بيوتهم ماتت الدواب. وقيل: إن الآية هي الجنتان، كانت المرأة تمشي فيهما وعلى رأسها مكتل4 فيمتلئ من أنواع الفواكه من غير أن تمسها بيدها (تفسير القرطبي)

மேற்படி வசனங்களின் விளக்கவுரைகளில் சபா என்ற அந்த ஊரின் செழிப்பைப் பற்றிக் கூறப்படும்போது அந்த ஊரில் ஒரு ஈயை, ஒரு கொசுவை, ஒரு பேனை, ஒரு மூட்டைப் பூச்சியைப் பார்க்க முடியாது. வெளியூரில் இருந்து வருபவர்களில் யாரேனும் ஒருவரின் உடைமைகளில் ஈ போன்றவை இருந்தாலும் இந்த ஊருக்குள் நுழைந்தவுடன் அது செத்து விடும்.அந்த ஊரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை வெறும் காலிக் கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு ஒருபெண் நடந்து சென்றால் அந்தக்கூடையில் தானாக வந்து விழும் பழங்களால் கூடை நிரம்பி விடும். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களுக்குச் செழிப்பைத் தந்த பிறகும் அவர்கள் நன்றி செலுத்தவில்லை.

நீர் ஆதாரத்தை வைத்தே மக்காவை இந்த அளவுக்கு அல்லாஹ் பிரபலப்படுத்தினான்.

عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا  قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ......    حَتَّى مَرَّتْ بِهِمْ رُفْقَةٌ مِنْ جُرْهُمَ أَوْ أَهْلُ بَيْتٍ مِنْ جُرْهُمَ مُقْبِلِينَ مِنْ طَرِيقِ كَدَاءٍ فَنَزَلُوا فِي أَسْفَلِ مَكَّةَ فَرَأَوْا طَائِرًا عَائِفًا فَقَالُوا إِنَّ هَذَا الطَّائِرَ لَيَدُورُ عَلَى مَاءٍ لَعَهْدُنَا بِهَذَا الْوَادِي وَمَا فِيهِ مَاءٌ فَأَرْسَلُوا جَرِيًّا أَوْ جَرِيَّيْنِ فَإِذَا هُمْ بِالْمَاءِ فَرَجَعُوا فَأَخْبَرُوهُمْ بِالْمَاءِ فَأَقْبَلُوا قَالَ وَأُمُّ إِسْمَاعِيلَ عِنْدَ الْمَاءِ فَقَالُوا أَتَأْذَنِينَ لَنَا أَنْ نَنْزِلَ عِنْدَكِ فَقَالَتْ نَعَمْ وَلَكِنْ لَا حَقَّ لَكُمْ فِي الْمَاءِ قَالُوا نَعَمْ (بخاري

சுருக்கம்- ஜுர்ஹும் என்ற நாடோடிகளின் குடும்பத்தார் பல முறை மக்காவுக்கு சற்று தொலைவில் இருந்த பாதை வழியாக பலமுறை கடந்து செல்வார்கள் ஆனால் அப்போதெல்லாம் மக்காவைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் அவ்வாறு ஒருமுறை அவ்வழியாக்ப பயணம் செய்த போதுதான் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பறவைகள் கூட்டம் வட்டமடிப்பதைக் கண்டு அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்து அங்கே தங்க முடிவு செய்தார்கள். ஆனால் ஹாஜரா அலைஹஸ்ஸலாம் அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அனுமதி தந்தார்கள். அதன் உரிமையை விட்டுக் கொடுக்கவில்லை. அந்த தண்ணீரின் முழு உரிமையும் தங்களின் குடும்பத்திற்குத் தான் என்றார்கள். அவ்வாறு கூறும்படி அல்லாஹ் அவர்களின் மனிதில் ஏற்படுத்தியிருக்க க்கூடும்.   

வேதனைக்காக  பெய்யும் மழைக்கு உதாரணம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَتْ السَّنَةُ بِأَنْ لَا تُمْطَرُوا وَلَكِنْ السَّنَةُ أَنْ تُمْطَرُوا وَتُمْطَرُوا وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا (مسلم) بَاب فِي سُكْنَى الْمَدِينَةِ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ السَّاعَةِ

மழையே பெய்யாமல் இருப்பது உண்மையான பஞ்சம் அல்ல. மாறாக அளவுக்கு அதிகமாக மழை பெய்து பயிர்கள் அதனால் நாசமாகி எதுவும் விளையாமல் போய் விடுமே அதுதான் உண்மையான பஞ்சமாகும்.

மழையே பெய்யாமல் இருப்பதும் சோதனை தான்.

நூஹ் அலை காலத்தில் பாவங்களின் காரணமாக 40 வருடங்கள் மழை நிறுத்தப்பட்டது

وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح قال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا  (تفسير ابن كثير)

 நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்திய போது அல்லாஹ் மழையை நிறுத்தினான். பெண்களை குழந்தை பாக்கியம் அற்றவர்களாக அல்லாஹ் ஆக்கினான். இவ்வாறு 40 வருடங்கள் தொடர்ந்தன.  அதனால் தோட்டங்களும் கால்நடைகள் அழிந்தன. அப்போது தான் அவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து முறையிட்டபோது நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீங்கள் திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அப்போது அல்லாஹ் உங்களுக்கு மழையைத் தருவான் என்றார்கள்.       

அருளாவும் இல்லாமல் அதாபாகவும் இல்லாமல் சோதிப்பதற்காகப் பெய்யும் மழை

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ (بخاري

ஹுதைபிய்யாவில் எங்களுக்கு நபி ஸல் அவர்கள் தொழ வைத்தார்கள். அதற்கு முதல் நாள் இரவில் இருந்தே மழை பெய்து கொண்டிருந்த து. தொழுகை முடிந்து திரும்பிய நபி ஸல் அவர்கள் மக்களை நோக்கி அல்லாஹ் இப்போது என்னிடம் என்ன கூறினான் தெரியுமா என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது ரசூலும் அறிவார்கள் என்று தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி ஸல் கூறினார்கள். இரவில் மழை பெய்த நிலையில் அதிகாலை நேரம் அடையும் போது மக்கள் இரு விதமான நம்பிக்கை உள்ளவர்களாக ஆகி விட்டார்கள். யாரெல்லாம் அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என நம்புகிறார்களோ அவர்கள் தான் ஈமான் உள்ளவர்கள். நட்சத்திரங்கள் நம்மை வழி நடத்துகின்றன என்ற மூட நம்பிக்கையில் இருந்து நீங்கியவர்கள். அதற்கு மாறாக யாரெல்லாம் நட்சத்திரங்கள் இடம் பெயர்வதால் மழை பெய்தது என நம்புகிறார்களோ அவர்கள்  நட்சத்திரங்களை கடவுளாக ஆக்கி என்னை நிராகரிப்பவர்கள்.                                                       

முற்காலத்தில் தனி மனிதருக்காகவும் மழை பெய்துள்ளது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنْ الْأَرْضِ فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدْ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ الْمَاءَ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلَانٌ لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ تَسْأَلُنِي عَنْ اسْمِي فَقَالَ إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ لِاسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا قَالَ أَمَّا إِذْ قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ  (مسلم)

                               

 மழை பெய்தால் ஓதும் துஆ

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا (بخاري

 

சகதி பட்டால் என்ன செய்வது

 

மழை மேகம் ஆது கூட்டத்தினருக்கு

 

இடியும் மின்னலும்

 

عن كعب قال:المطر زوج الأرض ألا ترى المرأة تكون قشفة فإذا جاء زوجها تخضبت واكتحلت كذلك الأرض تكون مغبرة فإذا جاء المطر اهتزت وربت وأنبتت  المطر والرعد والبرق  (كتب ابن ابي الدنيا)

மழை என்பது கணவனைப் போன்றும் பூமி என்பது மனைவி போன்றும் உள்ளது. நீண்ட நாள் கழித்து கணவன் திரும்பும் போது மனைவி எவ்வாறு அலங்கரித்துக் கொள்வாளோ அதுபோல் இந்த பூமி மலர்ச்சியுடன் மாறி விடுகிறது. கணவனுக்காக எப்படி  

 

 

வியாழன், 16 நவம்பர், 2023

செலவு செய்வதில் நடுநிலை நல்லடியார்களின் குணமாகும்

 



செலவு செய்வதில் நடுநிலை  நல்லடியார்களின் குணமாகும்

 இந்தத் தலைப்பு தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் செலவு செய்வதைப் பற்றிய தலைப்பாகும். ஒரு முஃமின் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் செலவு செய்வதில் வீண் விரயமும் இல்லாமல் மிகவும் சுருக்கவும் செய்யாமல் நடுத்தரமாக செலவு செய்ய வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ........  وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا (67) الفرقان   -

إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا (27) الاسراء   -

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31) الاعراف –

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا (29)الاسراء

வீண் விரயம், பெருமை இல்லாமல் விருப்பமான உணவுகளை உண்பதில் தவறில்லை

عَنْ عَمْرو بْن شُعَيْب عَنْ أَبِيهِ عَنْ جَدّه أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " كُلُوا وَاشْرَبُوا وَالْبَسُوا وَتَصَدَّقُوا مِنْ غَيْر مَخِيلَة وَلَا سَرَف فَإِنَّ اللَّه يُحِبّ أَنْ يَرَى نِعْمَته عَلَى عَبْده " . (تفسير ابن كثير)

குடும்பத்திற்காக செலவு செய்வதிலும் நன்மைகள் உண்டு

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ (بخاري

அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீ செய்யும் தர்மம் உட்பட ஒவ்வொரு காரியங்களுக்கும் நன்மை உண்டு. உன்னுடைய மனைவிக்கு நீ உணவு ஊட்டி விடுவது உட்பட..

குடும்பத்திற்காக சொத்து சேர்த்து வைப்பதிலும் நன்மைகள் உண்டு

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ وَهُوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالْأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ لَا قُلْتُ فَالشَّطْرُ قَالَ لَا قُلْتُ الثُّلُثُ قَالَ فَالثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ (بخاري

  நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, "வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?" எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, "மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்", என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் "மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது" என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம் : புகாரி: 3936, 4409, 5668, 6373; முஸ்லிம்;          

 

 ''அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)அவர்கள் நிறைய தர்மமும் செய்தார்கள் அதேநேரத்தில் தனது குடும்பத்தாருக்காக நிறைய சொத்துக்களையும் விட்டுச் சென்றார்கள். அவரது சொத்தின் மதிப்புநாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவர்களின் நான்கு மனைவிகளுக்கு மட்டும்எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவர்கள் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம்ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார்கள்.                                                                  

மனைவிக்கான மஹரை நிரப்பமாக கொடுக்க வேண்டும்.

கொடுத்த மஹரை கட்டாயப் படுத்தி திருப்பி வாங்குவது கூடாது

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً (4).. وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا (20)النساء

 

வீண் விரயம் செய்வதை இஸ்லாம் தடுக்கிறது. உழைத்து சம்பாதித்து முன்னேறுவதை தடுக்கவில்லை

தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்குமான தேவைகளுக்காக உழைக்காமல் ஊர் சுற்றுபவன் நரகவாதி

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَاتَ يَوْمٍ فِي خُطْبَتِهِ ....... وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوْ الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم

ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள்1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன் நூல்- முஸ்லிம்                                   

 மேற்படிஹதீஸ் உழைக்காமல் ஊர்சுற்றும் ஊதாரிகளுக்கு பெரும் எச்சரிக்கையாகும். ஒருகாலத்தில் பொருளாதாரத்திலும் இன்ன பிற துறைகளிலும் முதலிடத்தில் இருந்த முஸ்லிம் சமூகம் இன்று பல வகையிலும் பின் தங்கியுள்ளது. இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமையில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. பல நகரங்களில் தலித்துகளின் வருமானத்தை விட முஸ்லிம்களின் வருமானம் குறைவாக உள்ளது. பல ஊர்களில் சொந்த வீட்டில் வசித்த முஸ்லிம்கள் அந்த வீடுகளை மாற்றார்களுக்கு விற்று விட்டு வாடகை வீட்டில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.            

 

சுறுசுறுப்பை எறும்புகளிடம் இருந்து கற்க வேண்டும்.

 எறும்புகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் சுறுசுறுப்பு மற்றும் உழைப்பு ஆகியவற்றில் மனிதர்களை விட மேலானவை. தனக்கான இரை தன்னை விட பல மடங்கு பெரியதாக இருந்தாலும் அதை நகர்த்தி கொண்டு செல்வதில் எறும்புக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பொய் சொல்வதை விரும்பாத, கட்டுப்பாடு மிக்க கூட்டம். தங்களுக்குள்ளே கண்காணிப்பாளர், வேலைக்காரர் என பொறுப்புகளை நியமித்துக் கொண்டு கட்டுப்பாட்டுடன் செயல்படும். முற்காலத்தில் ஒரு நல்லடியார் எறும்பு பற்றிய ஒரு செய்தியை கூறும்போது நான் ஒருமுறை ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதன் சிறிய ஒரு பகுதி கீழே விழ, ஒரு எறும்பு வந்து அதை கொண்டு செல்ல முயன்றது. அதனால் அந்த உணவை நகர்த்த முடியவில்லை. உடனே அங்கிருந்து சென்று சிறிது நேரத்தில் பல எறும்புகளை அழைத்து வந்தது. அவைகளுக்குள் இருக்கும் தகவல் பரிமாற்றம் என்னை மெய்சிலிரிக்க வைத்தது. சற்று தூரத்தில் அவைகள் வருவதைக் கண்ட நான், என்ன தான் நடக்கிறது என்று பார்க்கலாமே என்றெண்ணி அவைகள் வரும் முன்பே அந்த ரொட்டித் துண்டை கையில் எடுத்துக் கொண்டேன். அவைகள் வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பின. ஆனால் அந்த முதலாவது எறும்பு மட்டும் அங்கேயே ஏக்கத்துடன் சுற்றிக் கொண்டிருக்க, நான் மறுபடியும்  அந்த ரொட்டித் துண்டை அங்கேயே வைத்தேன். உடனே வேகமாகச் சென்று தன் கூட்டத்தை அழைத்து வந்தது. நான் மறுபடியும் அவைகள் வருவதற்கு முன்பு அந்த அந்த ரொட்டித் துண்டை கையில் தூக்கிக் கொள்ள, அவைகள் ஏமாற்றத்துடன் திரும்பின. இவ்வாறே மூன்றாவது தடவையும் நான் செய்தேன். மூன்றாவது முறை அவைகள் வந்த நேரத்தில் அந்த ரொட்டித் துண்டு அங்கே இல்லாத தைக் கண்ட அந்த எறும்புகள் அனைத்தும் அந்த முதலாவது எறும்பை சூழ்ந்து கொண்டு அதைக் கொன்று அதன் பாகங்களை தனித்தனியாத ஆக்கி விட்டன. இவ்வாறு நடக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத நான் கவலைப்பட்டு உடனே அந்த ரொட்டித் துண்டை அங்கே வைத்தேன். அதைக் கண்ட அந்த எறும்புகள் அந்த ரொட்டியின் மீது கூட சிந்தனை இல்லாமல் அநியாயமாக நமது சகோதரனை இப்படி கொன்று விட்டோமே என்ற கவலையுடன் அந்த எறும்பையே சுற்றிச்சுற்றி வந்த காட்சி பரிதாபமாக இருந்தது என அந்த இறைநேசர் கூறுகிறார்கள்

மனைவியின் செலவுக்குப் பணம் தராதவரை நிகாஹ் செய்ய வேண்டாம் என ஆலோசனை வழங்கிய நபி ஸல்  عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ  قَالَتْ.... فَلَمَّا حَلَلْتُ ذَكَرْتُ لَهُ (أي لرسول الله صلي الله عليه وسلم) أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ وَأَبَا جَهْمٍ خَطَبَانِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّا أَبُو جَهْمٍ فَلَا يَضَعُ عَصَاهُ عَنْ عَاتِقِهِ وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لَا مَالَ لَهُ انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ فَكَرِهْتُهُ ثُمَّ قَالَ انْكِحِي أُسَامَةَ فَنَكَحْتُهُ فَجَعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا وَاغْتَبَطْتُ (مسلم)

ஃபாத்திமா பின்த் கைஸ் ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து என்னை முஆவியா இப்னு அபூ ஸுஃப்யான் மற்றும் அபூஜஹ்ம் ஆகிய இருவர் பெண் கேட்கிறார்கள் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் அபூஜஹ்ம் பிரம்பை தோளை விட்டும் கீழே இறக்க மாட்டார். முஆவியா ஒரு கஞ்சர். எனவே நீ உஸாமாவை திருமணம் செய்து கொள் என அறிவுரை வழங்கினார்கள். அவரை ஆரம்பத்தில் நான் வெறுத்தேன். ஆனால் நபி ஸல் மீண்டும் என்னிடம் உஸாமாவை திருமணம் செய்து கொள் என்றார்கள். அவ்வாறே நான் திருமணம் செய்தேன். எங்களுக்கு அல்லாஹ் நிறைய நலவுகளைத் தந்தான். நான் அவர் மூலம் பெருமையடைந்தேன்.              

குடும்ப செலவுக்குக் கூட தராமல் சிரமப்படுத்தும் கணவன் பாக்கெட்டில் இருந்து தெரியாமல் எடுக்கலாமா عَنْ عَائِشَةَ أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ وَهُوَ لَا يَعْلَمُ فَقَالَ خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ (بخاريஹிந்தா ரழி என்ற பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என் கணவர் அபூஸுஃப்யான் கஞ்சர். எனக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான அளவுக்குக் கூட செலவுக்குத் தருவதில்லை. நான் அவருக்குத் தெரியாமல் எடுத்தாலே தவிர... என்று முறையிட அதற்கு நபி ஸல் அவர்கள்  உனக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான அளவுக்கு மட்டும் எடுத்துக் கொள் என்றார்கள்.                                    

ஆடம்பர செலவுகளில் முஸ்லிம்கள் முதலிடம்

 தேவையில்லாத, அனாவசியமான, ஊதாரித்தனமான செலவுகள் செய்வதில் முஸ்லிம்களில் முதலிடத்தில் உள்ளனர்.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது சில ஏரியாக்களில் மற்றவர்களைவிட பட்டாசுகளை வாங்கி வெடித்தவர்களில் அதிகம் பேர் முஸ்லிம்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது.இத்தகைய அனாவசிய செலவுகளால் நம் சமூகத்தில் பலர் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் இருக்கின்றனர். இவர்கள் தான் அடகுக் கடைக்காரர்களை வளர்த்து விடுகிறார்கள். வட்டிக்குக் கடன் வாங்கி ஆடம்பரத் திருமணங்களை, தேவையில்லாத வைபவங்களை நடத்துகின்றனர். பாலஸ்தீன மண்ணில் நம்முடைய சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும் செய்திகளை பார்க்கும்போது உண்மையான முஸ்லிம்களில் பலருக்கு உணவே வயிற்றுக்குள் செல்ல மறுக்கிறது. ஆனால் சில முஸ்லிம்கள் இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் ஆடம்பர செலவுகளில் மூழ்கியிருக்கிறார்கள்.

தேவையற்ற செலவுகளை மிச்சப்படுத்தினால் ஹஜ்ஜுக் கடமையைக் கூட நிறைவேற்றி விடலாம். இன்னும் பலர் கடனாளிகளாக மாறியதே வீண் செலவுகளால் தான்.                                                

                                                            

 உண்மைச் சம்பவம்- வட மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். வீண் செலவுகளை அறவே விரும்ப மாட்டார். அவர் எங்காவது வெளியே சென்று ஏதேனும் ஒரு திண்பண்டத்தை விரும்பி உண்ண நினைத்தால் அதற்கான விலையை விசாரிப்பார். பிறகு அதை வாங்காமல் அந்தப்பணத்தை மிச்சப்படுத்தி சேமிப்பார். இப்படியாக சேமித்து பெரும் தொகையை சேர்த்தி விட்டார். இறுதியில் அதைக் கொண்டு என்ன செய்யலாம் என யோசித்த போது அந்தப் பகுதியில் ஒரு மஸ்ஜிதின் தேவை அதிகம் இருந்தது. எனவே தன்னுடைய செலவில் சேமித்த அப்பணத்தைக் கொண்டு மஸ்ஜித் கட்டினார். இன்றும் அவரின் நினைவாக அந்த மஸ்ஜித் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஒரு மஸ்ஜிதில் ரமழானில் தராவீஹ் தொழ வைக்கும் ஹாஃபிழுக்கு நடுத்தர வசதியுடைய தனிப்பட்ட ஒருவர் ஹதியா தருகிறார். ஆனால் அவர் அதற்காக வருடம் முழுவதும் சிறிது சிறிதாக சேர்த்து வைக்கிறார். ரமழான் கடைசியில் அதை அப்படியே ஹாஃபிழுக்கு ஹதியாவாக தருகிறார். சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக பார்க்கும்போது சுய நலமான சிந்தனை மேலோங்கி விடுகின்ற இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கின்றனர்.                                              

வீண் செலவுகள் பலவிதம்.

வீட்டில் சமைக்காமல் ஹோட்டல் சாப்பாட்டில் ருசி காண்பவர்கள் பணத்தை வீண் விரயம் செய்கின்றனர். எப்போதாவது ஒருமுறை என்றால் அது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலர் அடிக்கடி இவ்வாறு செய்கின்றனர். இன்னும் சில குடும்பங்களில் மனைவிமார்களின் சீரியல் மோகம் அவர்களை சமைக்க விடாமல் செய்து விடும். கொஞ்சம் சோம்பலாக இருந்தாலும் கடையில் உணவு வாங்கி வாருங்கள் என்றுகூறும் மனைவிகளும் உள்ளனர்

கணவனுக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தாத அக்காலத்து அஸ்மாக்களைப் போல எல்லோரும் ஆகி விட மாட்டார்கள்

عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ تَزَوَّجَنِي الزُّبَيْرُ وَمَا لَهُ فِي الْأَرْضِ مِنْ مَالٍ وَلَا مَمْلُوكٍ وَلَا شَيْءٍ غَيْرَ نَاضِحٍ وَغَيْرَ فَرَسِهِ فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَسْتَقِي الْمَاءَ وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِزُ وَكَانَ يَخْبِزُ جَارَاتٌ لِي مِنْ الْأَنْصَارِ وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ وَكُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِي وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ فَرْسَخٍ فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي فَلَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ نَفَرٌ مِنْ الْأَنْصَارِ فَدَعَانِي ثُمَّ قَالَ إِخْ إِخْ لِيَحْمِلَنِي خَلْفَهُ فَاسْتَحْيَيْتُ أَنْ أَسِيرَ مَعَ الرِّجَالِ وَذَكَرْتُ الزُّبَيْرَ وَغَيْرَتَهُ وَكَانَ أَغْيَرَ النَّاسِ فَعَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي قَدْ اسْتَحْيَيْتُ فَمَضَى فَجِئْتُ الزُّبَيْرَ فَقُلْتُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى رَأْسِي النَّوَى وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ فَأَنَاخَ لِأَرْكَبَ فَاسْتَحْيَيْتُ مِنْهُ وَعَرَفْتُ غَيْرَتَكَ فَقَالَ وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى كَانَ أَشَدَّ عَلَيَّ مِنْ رُكُوبِكِ مَعَهُ قَالَتْ حَتَّى أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ بَعْدَ ذَلِكَ بِخَادِمٍ تَكْفِينِي سِيَاسَةَ الْفَرَسِ فَكَأَنَّمَا أَعْتَقَنِي (بخاري

ஏழைகளில் பலர் உணவின்றி பசியுடன் இருக்க, திருமண மண்டபங்களில் குப்பைக்குச் செல்லும் உணவுகள்  

வீண் விரயங்களால் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்ட முஸ்லிம்கள்

2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துக் கொன்றது உட்பட பல்வேறுகொடூரங்களை அரங்கேற்றியவர்கள் பாசிசவாதிகளால் ஏவப்பட்டஅம்புகளான தாழ்த்தப் பட்ட மக்கள் தான். பாசிசவாதிகளால் அவர்களுக்கு வழங்கப்படும் பணங்களுக்காக அவர்கள் முஸ்லிம்களை வேட்டையாடினர். பின்னால் ஒருநேரத்தில் அவர்களின் ஒரு முக்கியமான தலைவனை முஸ்லிம்களில் சிலர் சென்று சந்தித்து உங்களுக்கு அப்படியென்ன முஸ்லிம்கள்மீது கோபம் என்று கேட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினர் நாங்கள் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில்தான் வசித்தோம்.அப்போது நாங்கள் மிகவும் வறுமையில் இருந்தோம். ஆனால் எங்களுக்கு அருகாமையில் முஸ்லிம்கள் வசித்தார்கள். அவ்வப்போது அவர்கள் விருந்து தயார் செய்வார்கள். அவர்களே சாப்பிட்டுக் கொள்வார்கள். சாப்பிட்ட பிறகு மிச்சமுள்ள உணவுகளை அண்டாக்களில் கொட்டு வந்து குப்பைகளில் கொட்டுவார்கள். அந்த உணவுகளை எங்களிடம் கொண்டு வந்து தந்திருந்தாலும் நாங்கள் ஒரு வாரத்திற்கு அதைப்பாதுகாத்து வைத்து சாப்பிடுவோம். ஆனால் எங்களுக்கும் அதை தர மாட்டார்கள். அவர்களே சாப்பிட்டு மீதியை குப்பையில் கொண்டு வந்து கொட்டுவார்கள். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க நாளடைவில் முஸ்லிம்கள் என்றாலே ஒரு விதமான வெறுப்பு எங்களுக்குள் இருந்தது. இந்த நிலையில் இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் எங்களிடம் வந்து முஸ்லிம்களைப் பற்றி மேலும் வெறுப்புணர்வைத் தூண்டி நீங்கள் முஸ்லிம்களைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு நிறைய செல்வங்களைத் தருகிறோம் என்று கூறி எங்களைத் தயார் படுத்தினார்கள். அதனடிப்படையில் தான் நாங்கள் கலவரத்தில் நிறைய முஸ்லிம்களைக் கொன்று குவித்தோம் என்று அவர் கூறியுள்ளார்.                                                             

 

 

 

 

 

 

வீண் விரயம் செய்வதால் பரக்கத் நீங்கி விடுகிறது. பரக்கத் நீங்குவதால் வாழ்வில் நிம்மதி குறைந்து விடுகிறது

திருமணங்களுக்காக செலவு செய்வதில் போட்டி போட்டிக் கொண்டு சில செல்வந்தர்கள் செலவு செய்வார்கள். அவர் தன் குடும்பத் திருமணத்திற்கு இவ்வளவு செலவு செய்தார். நான் அதை விட அதிகம் செலவு செய்வேன் என்று போட்டி போட்டு வீண் விரயம் செய்கிறார்கள்.

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً (مسند أحمد

திருமணங்களில் மிகவும் பரக்கத்தானது குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணங்களாகும். ஹதீஸ்

வீண் விரயம் இல்லாத, குறைந்த செலவிலான திருமணங்களில் பரக்கத் உண்டு என்பதை பல விதமாக விளங்கலாம். இத்தகைய திருமணங்களின் இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதையும், ஆடம்பரமான திருமணங்களின் இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியில்லாமல் வாழ்வதையும் பார்க்கலாம். பரக்கத் இருந்தால் தான் நிம்மதி இருக்கும். ஆடம்பர திருமணங்களில் நிம்மதி கிடைப்பதில்லை.

அவசியமற்ற பயணங்களுக்கும் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வீண் விரயம்.

நடப்பதற்கு தூரமான இடங்களுக்குச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட வாகனங்கள் தற்போது அவசியமற்ற பயணங்களுக்கும் பயன்படுத்துப் படுகின்றன. அருகில் இருக்கும் கடைக்கோ, மஸ்ஜிதுக்கோ செல்வதற்கும் கூட வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் எரிபொருள் வீண் விரயம், பணம் வீண் விரயம் ஏற்படுகின்றன.

 

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் ரசாயன வாயுக்களில் சில காற்று மண்டலத்தில் 65 முதல் 130 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும். கரியமில வாயுவை விட பத்தாயிரம் மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தி இந்த வாயுவுக்கு உண்டு. ஓசோன் படலத்தை, அந்த சல்லடையை மேற்படி வாயுக்கள் அரிக்க ஆரம்பித்து பல்லாண்டுகளாகின்றன. சுமார் 8 சதவீதம் அரிக்கப்பட்டு விட்டதாம். இது இன்னும் சற்று அதிகரித்தால் உலகில் தற்போது 10 சதவீதம் உள்ள தோல் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவீதமாகி விடும் என்று ஐ.நா கூறியுள்ளது.                                       

நடந்து செல்லும் தூரத்திலுள்ள மஸ்ஜிதுக்கு நடந்து செல்வதால் நன்மையும் அதிகமாகும். பணமும் மிச்சமாகும்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يُكَفِّرُ اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَزِيدُ بِهِ فِي الْحَسَنَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَى إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ (ابن ماجة

பாவங்களைப் பரிகாரமாக அமைந்து நன்மைகளை அள்ளித் தரும் ஒரு நன்மையைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா என்று கேட்டு விட்டு பின்பு நபி ஸல் அவர்கள் கூறினார்கள். சிரம மான நிலையிலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்றுவது. மேலும் மஸ்ஜிதை நோக்கி அதிகம் நடந்து வருவது. ஒரு தொழுகைக்குப் பின்னால் மற்றொரு தொழுகைக்காக காத்திருப்பது என்று நபி ஸல் கூறினார்கள்.                          

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَلَتْ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم

அவசியம் இல்லாத போது வாகனங்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்

عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَرَّ عَلَى قَوْمٍ وَهُمْ وُقُوفٌ عَلَى دَوَابَّ لَهُمْ وَرَوَاحِلَ فَقَالَ لَهُمْ ارْكَبُوهَا سَالِمَةً وَدَعُوهَا سَالِمَةً وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ لِأَحَادِيثِكُمْ فِي الطُّرُقِ وَالْأَسْوَاقِ فَرُبَّ مَرْكُوبَةٍ خَيْرٌ مِنْ رَاكِبِهَا وَأَكْثَرُ ذِكْرًا لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى مِنْهُ (أحمد

அவசியமற்ற செலவுகளில் தான் சிக்கனம் வேண்டும். நற்காரியங்களுக்காக செலவு செய்வது இதில் அடங்காது

 

தன் குடும்பத்தாருக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அன்பளிப்புகள் தந்து பழகுவது வீண் விரயம் அல்ல. ஆனால் சமமாக தர வேண்டும்.

عن بن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم : سووا بين أولادكم في العطية فلو كنت مفضلا أحدا لفضلت النساء (بيهقي

அன்பளிப்புகள் தருவதில் பிள்ளைகளுக்கு மத்தியில் சமமாக நடந்து கொள்ளுங்கள். நாந் பிள்ளைகளில் யாரேனும் சிலருக்கு முன்னுரிமை தருவதாக இருந்திருந்தால் பெண் பிள்ளைகளுக்கு முன்னுரிமை தந்திருப்பேன். (ஆனால் அது முறையல்ல. எனவே சமமாக நடந்து கொள்ளுங்கள்)

  عَنْ بَشِيرٍ أَنَّهُ نَحَلَ ابْنَهُ غُلَامًا فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرَادَ أَنْ يُشْهِدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ ذَا قَالَ لَا قَالَ فَارْدُدْهُ (نسائ

பஷீர் இப்னு ஸஃத்ரழி அவர்கள் தன் மகனுக்கு அன்பளிப்புத் தந்தார்.அதற்கு நபி ஸல் அவர்களையும் சாட்சியாக ஆக்க நினைத்தார். அப்போது நபி ஸல் அவர்கள் உமது மற்ற பிள்ளைகளுக்கும் தந்தீரா என்று கேட்டார்கள் அவர் இல்லை என்றவுடன் அப்போது நபி ஸல் அவர்கள் கொடுத்தால் அனைவருக்கும் கொடு. இல்லையென்றால் அதை த் திருப்பித் தந்து விடு என்றார்கள்.   

அன்பளிப்புகள் தருவதும் அன்பளிப்புகளைப் பெறுவதும் முஃமினின் சிறந்த பண்பாகும்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ وَلَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ (ترمذي

عَنْ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ عَبْدِ اللَّهِ الْخُرَاسَانِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَافَحُوا يَذْهَبْ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبْ الشَّحْنَاءُ (مؤطا)

அன்பளிப்புக் கொடுத்துப் பழகுங்கள். அதனால் குரோதம் நீங்கும். எந்த அண்டை வீட்டாரும் தன் அண்டை வீட்டார் தரும் ஆட்டின் கால் போன்ற சிறிய அன்பளிப்பையும் அற்பமாக கருத வேண்டாம்

 

 

 

ஹிஜ்ரத்

 12-06-2026 துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم          ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும்  இஸ்லாமியப் புத்தாண்டு https://chennaijamaathulula...