தண்ணீரின் அருமையும் மழை பற்றிய செய்திகளும்
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68) أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ (69) لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ (70) الواقعة
மழை என்பது அல்லாஹ்வின்
அருள் என்பதை நாம் நன்றாக மனதில் பதிய வைப்பதற்காகவும் மழை நீரை நிலத்தடி நீராக
பூமிக்குள் தேங்கச் செய்து அதை மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவது அல்லாஹ்வின்
அளப்பரிய ஆற்றலால் மட்டுமே உள்ளது என்பதையும் அது நம்முடைய முயற்சியால் நடப்பதல்ல
என்பதையும் மக்களுக்கு உணர வைப்பதற்காக இத்தலைப்பு எடுக்கப் பட்டுள்ளது.
மேலும் மழை பெய்வதால் நம்முடைய காரியங்கள்
தடை பட்டாலும் அதற்காக மழையை சபிக்கக் கூடாது என்பதையும் மழை பெய்யும்போது நபி ஸல்
அவர்கள் கற்றுத்தந்த துஆவை ஓதும் வழமை நம்மிடம் வர வேண்டும் என்பதற்காகவும்
இன்னும் சில படிப்பினைகளை உள்ளடக்கியும் இத்தலைப்பு எடுக்கப் பட்டுள்ளது.
தண்ணீரின் அவசியம்
நீரின்றி அமையாது
உலகு என்று திருவள்ளுவர் கூறுவது போல எல்லா உயிர்களும் அதன் உடலில் 50 சதவீதம் முதல் 90
சதவீதம் வரை தண்ணீரைக்கொண்டு உள்ளவை. குறிப்பாக மனித உடலில் 75 சதவீதம்
தண்ணீர் தான் நிரம்பியுள்ளது. எல்லா உறுப்புக்களுக்கும் தண்ணீர் தேவை. மேலும்
நம்முடைய உடம்பில் வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை மல, ஜல துவாரங்களை நோக்கி
நகர்த்திக் கொண்டு செல்வதும் தண்ணீர் தான். அதனால் தான் மலம், ஜலம் வெளியேறுவதில்
சிரமம் ஏற்பட்டால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவர்.
மழை நீரையும் நிலத்தடி
நீரையும் மாபெரும் அருளாக கருத வேண்டும்.
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68)
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ (69) لَوْ
نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ (70) الواقعة
உலகின் ஒட்டுமொத்த நீரில் 97 சதவீதத்தை உப்பாக ஆக்கி வைத்த அல்லாஹ் அதில் வெறும் 3
சதவீதத்தை மட்டுமே குடிக்க உகந்ததாக ஆக்கியுள்ளான். அதையும் உப்பாக
ஆக்கியிருந்தால் உங்களால் என்ன செய்ய முடியும் என வாகிஆ சூராவில் 70வது ஆயத்தில்
கூறுகிறான். தண்ணீர் என்ற வார்த்தையை அல்லாஹ் குர்ஆனில் 63 இடங்களில்
கூறியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்நாளும் 63 வருடங்கள்.
இவ்விரண்டுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.அதாவது நபி (ஸல்) அவர்கள் இந்த
உம்மத்துக்கு எவ்வளவு பெரிய அருட்கொடையோ அதுபோன்று தண்ணீரும் மனித சமுதாயத்திற்கு
மிகப்பெரும் அருட்கொடை என்பதை விளக்க இவ்வாறு அல்லாஹ் கூறியுள்ளதாக சிலர்
கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் அல்லாஹ் தண்ணீரை பரக்கத் நிறைந்தது என
குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.
உலக
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலத்தடி நீர் உருவான வரலாறு
இப்போதுள்ள
நதிகள், ஆறுகள், கடல்கள் உருவானது வெள்ளப் பிரளயத்திற்குப் பின்னால் தான
{وقيل
يا أرض ابلعي ماءك} وقف قوم على ظاهر الآية وقالوا : إِنما ابتلعت مانبع منها ،
ولم تبتلع ماء السماء فصار ذلك بحاراً وأنهاراً
وهو معنى قول ابن عباس وذهب آخرون إِلى أن المراد: ابلعي ماءك الذي عليك
وهو ما نبع من الأرض ونزل من السماء وذلك بعد أن غرق ما على وجه الأرض (زاد
المسير)
வானமும் தன் நீரை பொழிந்தது. பூமியும் தனக்குள் உள்ள நீரை
வெளியே மேலே கொண்டு வந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் அல்லாஹ் வானமே நீ உன் தண்ணீரை
நிறுத்திக்கொள். பூமியே நீ உன் தண்ணீரை மீண்டும் விழுங்கிக் கொள் என அல்லாஹ்
உத்தரவிட்டான். அதன் படி பூமி தன்னுடைய தண்ணீரை மட்டும் தான் விழுங்கியது. வானம்
பொழிந்த நீரை விழுங்கவில்லை. அவைகள் ஆறுகளாகவும், நதிகளாகவும், கடல்களாகவும் நிலத்தடி
நீர்களாகவும் ஆகி விட்டன.
தண்ணீர் எவ்வளவு
அருந்துவது?
عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مَلَأَ آدَمِيٌّ
وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ
فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ
لِنَفَسِهِ (ترمذي
மனிதன் நிரப்பிக்
கொள்ளும் பாத்திரங்களில் அவனது வயிற்றைவிட கெட்டது வேறெதுவும் இல்லை. அவனுடைய
முதுகுத்தண்டை நிமிர்த்துவதற்கு (அதாவது ஆரோக்கியமாக இருப்பதற்கு) சில கவளங்கள்
போதுமானது. எனினும் அவன் மனம் கேட்காவிட்டால் அவன் வயிற்றில் மூன்றில் ஒரு பங்கு
உணவுக்கும், மற்றொரு பங்கு தண்ணீருக்கும் மற்றொரு பங்கு மூச்சு விடுவதற்காக காலியாகவும்
விட்டு விடவும். - திர்மிதீ
மேற்படி
நபிமொழி அடிப்படையில் ஒருநாளைக்கு நாம் எதையெல்லாம் உணவாகவும் திண்பண்டமாகவும்
வயிற்றில் எந்த அளவுக்கு செலுத்துகிறோமோ அதே அளவுக்கு நாம் தண்ணீருக்கு இடமளிக்க
வேண்டும் என அறிய முடிகிறது. இன்று மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரித்துக் கொள்ள தினமும் நான்கு லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்று
பரிந்துரைக்கிறார்கள். மனித உடலுக்குத் தேவையான சத்துக்களை இரத்தம்தான் எல்லா
பாகங்களுக்கும் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த இரத்த ஓட்டம் சீராக இருக்க தண்ணீர்
நிறைய குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும்
நல்லது. தற்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீரை சூடாக அருந்துவது நல்லது. ஏனெனில்
ஒருவேளை வைரஸ் கிருமிகள் நம்மைத் தாக்கினாலும் சில நாட்கள் அது தொண்டையில் இருக்கும்
என்றும் அடிக்கடி வெந்நீர் அருந்துவதால்
அந்த வைரஸ் கிருமி போய்விடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவில் இடையிலும்,
உணவு
உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும் என அபூநயீம் போன்ற
மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள்.
மழை பற்றிய செய்திகள்
அல்லாஹ்விடமிருந்து புதிய மழைத்துளி மேனியில் படும்போது மகிழ்ந்த
நபி ஸல்..
عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ أَنَسٌ أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ قَالَ فَحَسَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ حَتَّى أَصَابَهُ مِنْ الْمَطَرِ فَقُلْنَا يَا
رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا قَالَ لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ
تَعَالَى (مسلم) باب الدُّعَاءِ فِى الاِسْتِسْقَاءِ- صلاة الاستسقاء
நாங்கள் நபி ஸல் அவர்களுடன்
இருந்த போது மழை பெய்தது அப்போது நபி ஸல் அவர்கள் தன் மேலாடையை நீக்கி அந்த
மழைத்துளிகளில் சில தன் மீது படும்படி நடந்து கொண்டார்கள் அப்போது அவர்களிடம் ஏன்
இப்படி செய்தீர்கள் என்று கேட்ட போது இது அல்லாஹ்விடமிருந்து புதிதாக வந்து
இறங்குகிறது என்றார்கள். முஸ்லிம்
விளக்கம்- மழையில் நனைய
வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாக ஆகாது. மழையின் முதல் துளிகள் தன் மீது படுவதை
அல்லாஹ்வின் அருள் இறங்குவதாக நபி ஸல் அவர்கள் உணர்ந்தார்கள் என்பதே சரியான
விளக்கமாகும்
வருடம்தோறும் பெய்யும்
மழை ஒருபோதும் குறையாது.எனினும் அல்லாஹ் நாடிய இடங்களுக்கு மாறும்
وَأَنْزَلْنَا
مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ
فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ (18)
المؤمنون
வானத்தில் இருந்து
மழையை நாம் குறிப்பிட்ட அளவோடு தான் இறக்குகிறோம். அதை மக்களுக்கு நன்மை தரும்
தேக்கி வைப்பதும் நாம் தான். நிச்சயமாக நாம் அதை இல்லாமல் ஆக்கவும் சக்தி
பெற்றுள்ளோம்.
عن أبي هريرة رضي الله عنه قال :ما نزلت قطرة إلا بميزان إلا زمان نوح عليه السلام
(رواه ابن ابي الدنيا
عَنِ ابْنِ عَبَّاس رضي الله عنه أَنَّهُ قَالَ:مَا مِنْ عَامٍ بِأَكْثَرَ مَطَرًا مِنْ
عَامٍ وَلَكِنَّ اللَّهَ يُصَرِّفُهُ بَيْنَ عِبَادِهِ وَقَرَأَ:وَلَقَدْ
صَرَّفْنَاهُ بَيْنَهُمْ(الفرقان50
அபூ ஹுரைரா ரழி
அவர்கள் கூறினார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் அல்லாஹ்
ஏற்படுத்திய வெள்ளப் பிரளயத்திற்குப் பின் கடந்த ஐம்பதாயிரம் வருடங்களாக வருடம்
தோறும் பெய்யும் மழையில் அதாவது அதன் அளவில் கூடுதல் குறைவு ஏற்பட்டதே இல்லை.
எனினும் ஒரு இடத்தில் பெய்ய வேண்டிய மழையை அல்லாஹ் மற்றொரு ஊருக்கு மாற்றியமைத்து
விடுவான்.
மேற்படி வசனத்தின் விளக்கம்
-عن الحكم بن عتيبة
في قوله(وَمَا نُنزلُهُ إِلا بِقَدَرٍ مَعْلُومٍ(الحجر21) قال:ما من عام
بأكثر مطرا من عام ولا أقل ولكنه يمطر قوم ويُحرم آخرون وربما كان في البحر(تفسير
ابن ابي حاتم)
அல்லாஹ் மழையை வருடம்
தோறும் ஒரே அளவில் தான் இறக்குகிறான். எனினும் ஒரு இடத்தில் பெய்ய வேண்டிய மழையை
அல்லாஹ் மற்றொரு ஊருக்கு மாற்றியமைத்து விடுவான். ஒரு இடத்தில் வசிப்பவர்கள் மழையே இல்லாமல் சிரமப் படுவார்கள்.
மற்றொரு இடத்தில் உள்ளவர்களுக்கு அளவை விட அதிகமாகப் பெய்யும். இதன் நுட்பம்
அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
மழையில் பல வகைகள் உள்ளன. 1. அருளாகப் பெய்யும் மழை 2. அதாப் வேதனையாகப்
பெய்யும் மழை 3. சோதிப்பதற்காகப் பெய்யும்
மழை 4. பொதுவாக மக்களின் நன்மைக்காக பெய்யும் மழை
அருளாகப் பெய்யும் மழைக்கு உதாரணம்
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
قَالَ رَبُّكُمْ عَزَّ وَجَلَّ لَوْ أَنَّ عِبَادِي أَطَاعُونِي لَأَسْقَيْتُهُمْ
الْمَطَرَ بِاللَّيْلِ وَأَطْلَعْتُ عَلَيْهِمْ الشَّمْسَ بِالنَّهَارِ وَلَمَا
أَسْمَعْتُهُمْ صَوْتَ الرَّعْدِ (احمد)ضعيف-عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَوَاكِي فَقَالَ اللَّهُمَّ
اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا
غَيْرَ آجِلٍ قَالَ فَأَطْبَقَتْ عَلَيْهِمْ السَّمَاءُ (ابوداود)
باب رَفْعِ الْيَدَيْنِ فِى الاِسْتِسْقَاءِ- كتاب الإستسقاء
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என்னுடைய அடியார்கள் எனக்குக்
கட்டுப்பட்டு நடந்தால் (இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில்) பகலில் சூரிய வெளிச்சத்தை
வழமை போல ஆக்கி வைத்து இரவில் மட்டும் மழையை இறக்குவேன். இடி சப்தம் கூட
அவர்களுக்குக் கேட்காத வகையில் மழையை இறக்குவேன்.
விளக்கம்- சென்னை போன்ற நகரங்களில் இரவில் நல்ல மழை பெய்தாலும் தெருக்களில்
தண்ணீர் தேங்குகிறது அதனால் பகலிலும் பாதிப்பு தெரிகிறது என்ற விஷயம் மேற்படி
ஹதீஸுக்கு முரணாக ஆகாது. காரணம் மனிதர்களின் தவறுகள் காரணமாக தண்ணீர் தேங்கும்
இடங்களில் எல்லாம் வீடுகளைக் கட்டி வைத்து இயற்கை மழை நீர் தேங்குவதை தடுப்பதால் இரவில்
பெய்யும் மழையும் சோதனையாக அமையலாம்.
நீர் ஆதாரங்கள் அழிந்தால் ஊரே அழிந்து விடும்.
لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ
جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ
بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ
سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ
خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) سبا
அல்லாஹ் ஸபா என்ற ஊர்மக்களை அவர்கள்
செய்த பாவத்தின் காரணமாக அழிக்க எண்ணியபோது அவ்வூரின் தண்ணீர் வளத்துக்கு ஆதாரமாக
இருந்த மஆரிப் நீர்த்தேக்கத்தை முதலில் அழித்தான். எங்கிருந்தோ எண்ணிலடங்காத எலிகள் அங்கு வந்து அந்த அணையைச் சிறிதுசிறிதாக
அரிக்கத் துவங்கின. இதைக்கண்ட அம்மக்கள் அதிர்ச்சியடைந்து எலிகளை வேட்டையாட பல
ஊர்களிலிருந்தும் பூனைகளை வரவழைத்தனர். ஆனால் அந்தப் பூனைகளால் அல்லாஹ்வின்
படைகளான அந்த எலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அந்த அணைக்கட்டு
உடைந்து நீர் பெருக்கெடுத்தது. ஊர் அழிந்தது.
وقال عبدالرحمن بن زيد: إن الآية
التي كانت لأهل سبأ في مساكنهم أنهم لم يروا فيها بعوضة قط ولا ذبابا ولا برغوثا
ولا قملة ولا عقربا ولا حية ولا غيرها من الهوام، وإذا جاءهم الركب في ثيابهم
القمل والدواب فإذا نظروا إلى بيوتهم ماتت الدواب. وقيل: إن الآية هي الجنتان،
كانت المرأة تمشي فيهما وعلى رأسها مكتل4
فيمتلئ من أنواع الفواكه من غير أن تمسها بيدها (تفسير القرطبي)
மேற்படி வசனங்களின் விளக்கவுரைகளில் சபா என்ற அந்த ஊரின் செழிப்பைப்
பற்றிக் கூறப்படும்போது அந்த ஊரில் ஒரு ஈயை, ஒரு கொசுவை, ஒரு பேனை, ஒரு மூட்டைப்
பூச்சியைப் பார்க்க முடியாது. வெளியூரில் இருந்து வருபவர்களில் யாரேனும் ஒருவரின்
உடைமைகளில் ஈ போன்றவை இருந்தாலும் இந்த ஊருக்குள் நுழைந்தவுடன் அது செத்து விடும்.அந்த
ஊரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை வெறும் காலிக் கூடையைத் தலையில்
வைத்துக்கொண்டு ஒருபெண் நடந்து சென்றால் அந்தக்கூடையில் தானாக வந்து விழும்
பழங்களால் கூடை நிரம்பி விடும். அந்த அளவுக்கு
அல்லாஹ் அவர்களுக்குச் செழிப்பைத் தந்த பிறகும் அவர்கள் நன்றி செலுத்தவில்லை.
நீர் ஆதாரத்தை வைத்தே மக்காவை இந்த
அளவுக்கு அல்லாஹ் பிரபலப்படுத்தினான்.
عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ...... حَتَّى مَرَّتْ بِهِمْ رُفْقَةٌ مِنْ
جُرْهُمَ أَوْ أَهْلُ بَيْتٍ مِنْ جُرْهُمَ مُقْبِلِينَ مِنْ طَرِيقِ كَدَاءٍ
فَنَزَلُوا فِي أَسْفَلِ مَكَّةَ فَرَأَوْا طَائِرًا عَائِفًا فَقَالُوا إِنَّ
هَذَا الطَّائِرَ لَيَدُورُ عَلَى مَاءٍ لَعَهْدُنَا بِهَذَا الْوَادِي وَمَا فِيهِ
مَاءٌ فَأَرْسَلُوا جَرِيًّا أَوْ جَرِيَّيْنِ فَإِذَا هُمْ بِالْمَاءِ فَرَجَعُوا
فَأَخْبَرُوهُمْ بِالْمَاءِ فَأَقْبَلُوا قَالَ وَأُمُّ إِسْمَاعِيلَ عِنْدَ
الْمَاءِ فَقَالُوا أَتَأْذَنِينَ لَنَا أَنْ نَنْزِلَ عِنْدَكِ فَقَالَتْ نَعَمْ
وَلَكِنْ لَا حَقَّ لَكُمْ فِي الْمَاءِ قَالُوا نَعَمْ (بخاري
சுருக்கம்- ஜுர்ஹும் என்ற நாடோடிகளின் குடும்பத்தார் பல முறை மக்காவுக்கு
சற்று தொலைவில் இருந்த பாதை வழியாக பலமுறை கடந்து செல்வார்கள் ஆனால் அப்போதெல்லாம்
மக்காவைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் அவ்வாறு ஒருமுறை அவ்வழியாக்ப பயணம்
செய்த போதுதான் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பறவைகள் கூட்டம் வட்டமடிப்பதைக் கண்டு
அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்து அங்கே தங்க முடிவு செய்தார்கள். ஆனால் ஹாஜரா
அலைஹஸ்ஸலாம் அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அனுமதி தந்தார்கள். அதன் உரிமையை
விட்டுக் கொடுக்கவில்லை. அந்த தண்ணீரின் முழு உரிமையும் தங்களின்
குடும்பத்திற்குத் தான் என்றார்கள். அவ்வாறு கூறும்படி அல்லாஹ் அவர்களின் மனிதில்
ஏற்படுத்தியிருக்க க்கூடும்.
வேதனைக்காக பெய்யும் மழைக்கு உதாரணம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله
عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَتْ السَّنَةُ بِأَنْ لَا تُمْطَرُوا وَلَكِنْ
السَّنَةُ أَنْ تُمْطَرُوا وَتُمْطَرُوا وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا (مسلم)
بَاب فِي سُكْنَى الْمَدِينَةِ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ السَّاعَةِ
மழையே பெய்யாமல் இருப்பது உண்மையான பஞ்சம் அல்ல. மாறாக அளவுக்கு அதிகமாக மழை
பெய்து பயிர்கள் அதனால் நாசமாகி எதுவும் விளையாமல் போய் விடுமே அதுதான் உண்மையான
பஞ்சமாகும்.
மழையே பெய்யாமல்
இருப்பதும் சோதனை தான்.
நூஹ் அலை காலத்தில்
பாவங்களின் காரணமாக 40 வருடங்கள் மழை நிறுத்தப்பட்டது
وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ
السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا
تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ
السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ
وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح قال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ
أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام
واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا (تفسير ابن كثير)
நபி நூஹ்
அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்திய போது
அல்லாஹ் மழையை நிறுத்தினான். பெண்களை குழந்தை பாக்கியம் அற்றவர்களாக அல்லாஹ்
ஆக்கினான். இவ்வாறு 40 வருடங்கள் தொடர்ந்தன.
அதனால் தோட்டங்களும் கால்நடைகள் அழிந்தன. அப்போது தான் அவர்கள் நபி நூஹ்
அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து முறையிட்டபோது நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீங்கள்
திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அப்போது அல்லாஹ் உங்களுக்கு
மழையைத் தருவான் என்றார்கள்.
அருளாவும் இல்லாமல் அதாபாகவும் இல்லாமல் சோதிப்பதற்காகப் பெய்யும் மழை
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ
صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ
الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ
فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ
رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي
مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ
وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ
بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ (بخاري
ஹுதைபிய்யாவில் எங்களுக்கு நபி ஸல் அவர்கள் தொழ வைத்தார்கள். அதற்கு முதல்
நாள் இரவில் இருந்தே மழை பெய்து கொண்டிருந்த து. தொழுகை முடிந்து திரும்பிய நபி
ஸல் அவர்கள் மக்களை நோக்கி அல்லாஹ் இப்போது என்னிடம் என்ன கூறினான் தெரியுமா என்று
கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது ரசூலும் அறிவார்கள் என்று தோழர்கள் கூறினார்கள்.
அப்போது நபி ஸல் கூறினார்கள். இரவில் மழை பெய்த நிலையில் அதிகாலை நேரம் அடையும்
போது மக்கள் இரு விதமான நம்பிக்கை உள்ளவர்களாக ஆகி விட்டார்கள். யாரெல்லாம்
அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என நம்புகிறார்களோ அவர்கள் தான் ஈமான் உள்ளவர்கள்.
நட்சத்திரங்கள் நம்மை வழி நடத்துகின்றன என்ற மூட நம்பிக்கையில் இருந்து
நீங்கியவர்கள். அதற்கு மாறாக யாரெல்லாம் நட்சத்திரங்கள் இடம் பெயர்வதால் மழை
பெய்தது என நம்புகிறார்களோ அவர்கள்
நட்சத்திரங்களை கடவுளாக ஆக்கி என்னை நிராகரிப்பவர்கள்.
முற்காலத்தில் தனி
மனிதருக்காகவும் மழை பெய்துள்ளது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنْ الْأَرْضِ
فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ فَتَنَحَّى ذَلِكَ
السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ
الشِّرَاجِ قَدْ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ الْمَاءَ
فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ فَقَالَ
لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلَانٌ لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي
السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ تَسْأَلُنِي عَنْ اسْمِي
فَقَالَ إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ
اسْقِ حَدِيقَةَ فُلَانٍ لِاسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا قَالَ أَمَّا إِذْ
قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ
بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ (مسلم)
மழை
பெய்தால் ஓதும் துஆ
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ اللَّهُمَّ صَيِّبًا
نَافِعًا (بخاري
சகதி பட்டால் என்ன செய்வது
மழை மேகம் ஆது கூட்டத்தினருக்கு
இடியும் மின்னலும்
عن كعب قال:المطر زوج الأرض ألا ترى المرأة تكون قشفة فإذا جاء زوجها تخضبت
واكتحلت كذلك الأرض تكون مغبرة فإذا جاء المطر اهتزت وربت وأنبتت المطر والرعد والبرق (كتب ابن ابي الدنيا)
மழை
என்பது கணவனைப் போன்றும் பூமி என்பது மனைவி போன்றும் உள்ளது. நீண்ட நாள் கழித்து
கணவன் திரும்பும் போது மனைவி எவ்வாறு அலங்கரித்துக் கொள்வாளோ அதுபோல் இந்த பூமி
மலர்ச்சியுடன் மாறி விடுகிறது. கணவனுக்காக எப்படி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக