14-11-2025
جمادي الاولي - 22
بسم الله الرحمن الرحيم
பொதுச் சேவைகளில் பங்கெடுப்போம்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
மஸ்ஜித்களை வெறுமனே தொழுகை நடைபெறும் இடங்களாக மட்டும் ஆக்கி விடாமல் பல்வேறு சேவைகள் நடைபெறும் சேவை மையங்களாக மாற்ற வேண்டும். இதுதான் மஸ்ஜிதுன் நபவியின் மாடலாகும். எவ்வாறு ஜமாஅத்துல் உலமா சபை என்பது பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறதோ அதுபோன்று ஒவ்வொரு மஸ்ஜிதுகளும் மாற வேண்டும். குறிப்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கணக்கெடுப்பு விஷயத்தில் பல மக்கள் குழப்பதிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கான வழி காட்டுதல், பைத்துல் மால் போன்ற பொது நிதிகளை உருவாக்கி வட்டியை விட்டும் மக்களைப் பாதுகாத்தல், உயர்கல்வி விஷயத்தில் மக்களுக்கு வழி காட்டுதல், வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழி காட்டுதல், மாதாந்திர மருத்துவ முகாம்கள் நடத்தி ஏழைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளித்தல், இஸ்லாமிய அழைப்புப் பணி போன்ற பல்வேறு சேவைகள் செய்யலாம். இந்த சேவைகளுக்காக நமது இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து மஹல்லாவின் முன்னேற்றத்திற்காக முயற்சி செய்யலாம். நம் மஹல்லாவுக்குள் நாம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி முஸ்லிம்களின் நிலைகளை அறிந்தால் இது சாத்தியம்
சமுதாய அக்கறை ஒவ்வொரு முஃமினுக்கும் இருக்க வேண்டும்
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ (2المائدة) إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ (الحجرات10)
அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள உரிமைகளை மக்களுக்குப் பெற்றுத் தருவதன் நன்மை
عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ كَانَ وُصْلَةً لأَخِيهِ الْمُسْلِمِ إِلَى ذِى سُلْطَانٍ لِمَنْفَعَةِ بِرٍّ أَوْ تَيْسِيرِ عَسِيرٍ أُعِينَ عَلَى إِجَازَةِ الصِّرَاطِ يَوْمَ دَحْضِ الأَقْدَامِ (بيهقي ابن حبان)
அரசாங்கம் ஏற்படுத்தித் தரும் நலவுகளை தனது முஸ்லிமான சகோதரனுக்குப் பெற்றுத் தருவதற்கு எவர் அரசுக்கும் மக்களுக்கும் மத்தியில் பாலமாக இருந்து நலவைத் தேடித் தருவாரோ அதன் மூலம் அவரது சிரமத்தைக் குறைப்பாரோ அவருக்கு அல்லாஹ் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் பாதங்கள் சருகி விழும் நாளில் இவர் இலகுவாக கடப்பதற்கு உதவி செய்வான்.
ஒவ்வொரு பொதுச் சேவையும் தர்மமாக அங்கீகரிக்கப்படும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ سُلَامَى عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ يُحَامِلُهُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ وَدَلُّ الطَّرِيقِ صَدَقَةٌ (بخاري) باب فَضْلِ مَنْ حَمَلَ مَتَاعَ صَاحِبِهِ فِى السَّفَرِ-كتاب الجهاد
சமுதாயப் பணியில் ஈடுபடும் வாய்ப்பை அல்லாஹ் எல்லோருக்கும் வழங்குவதில்லை
عَنِ ابْنِ عُمَرَ ،رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ لِلَّهِ عَبَّادًا اخْتَصَّهُمْ بِالنِّعَمِ لِمَنَافِعِ الْعِبَادِ ، يُقِرُّهُمْ فِيهَا مَا بَذَلُوهَا ، فَإِذَا مَنَعُوهَا نَزَعَهَا مِنْهُمْ ، فَحَوَّلَهَا إِلَى غَيْرِهِمْ . (معجم الكبير للطبراني)
பொருள் - சமுதாயப் பணிகளை அல்லாஹ் தான் விரும்பும் ஒரு சிலரிடம் மட்டுமே அல்லாஹ் ஒப்படைக்கிறான். அந்த வாய்ப்பை அவர்கள் பயன் படுத்திக் கொள்ளும் வரை அவர்களை அதில் அல்லாஹ் நீடிக்க வைப்பான். அவர்கள் எப்போது அதிலிருந்து பின்வாங்கி விடுவார்களோ அப்போது அவர்களிடமிருந்து பிடுங்கி இன்னொருவரிடம் அல்லாஹ் ஒப்படைப்பான். – நூல் தப்ரானீ
பிறர் எனக்கு உபகாரம் செய்தால் மட்டுமே நான் அவர்களுக்கு உபகாரம் செய்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக இருக்காதீர்கள் மாறாக பிறர் எனக்கு தீமை செய்தாலும் நான் அவர்களுக்கு நன்மையே செய்வேன் என்று கூறும் பொதுநலவாதிகளாக இருங்கள்
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي) بَاب مَا جَاءَ فِي الْإِحْسَانِ وَالْعَفْوِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَة
சிரமத்தில் இருப்பவருக்கு உதவுவது போன்ற சேவைகள் நபிமார்களின் நல்ல குணமாகும்
பசியுடன் பட்டினியுடன் இருந்த போதும் பிறருக்கு உதவி செய்த மூஸா அலைஹிஸ்ஸலாம்
وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ (22) وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ (23) فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24) القصص
நீண்ட காலம் கழித்து தந்தையைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து, பார்க்கும் ஆர்வம் இருந்தும்
பொதுச் சேவை காரணமாக நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் செல்லவில்லை
يُوسُفُ أَيُّهَا الصِّدِيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (49)يوسف
விளக்கம்- நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் திறமையாக செயல்பட்டு செழிப்பான முதல் ஏழு வருடங்களில் முடிந்த வரை சேமித்து வைத்து அரசாங்கத்தின் பைத்துல் மாலில் பத்திரப்படுத்தினார்கள். அதற்கடுத்த பஞ்சமான ஏழு வருடங்கள் வந்த போது சேமித்து வைத்த அந்த தானியங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவியாக வழங்கினார்கள். அந்தப் பணிகளில் முழுமையாக அவர்கள் ஈடு பட்டதால் தான் குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு தந்தையைச் சந்திப்பதற்கும் கூட வர முடியவில்லை.
சிரமத்தில் சிக்கியவருக்கு உதவுவது போன்ற பொதுச் சேவைகள் ஹஜ்ஜுடைய நன்மையைப் பெற்றுத் தரும்
عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير
யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். மேலும் அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.
عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال : من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان
ஹஸன் ரழி தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழி அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள். அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழி அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழி அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.
கல்வியில் நம் சமூகம் முன்னேறுவதற்கு நாம் வழிகாட்ட வேண்டும்
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَمْ يَكُنْ لأُنَاسٍ مِنْ أُسَارَى بَدْرٍ فِدَاءٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِدَاءَهُمْ أَنْ يُعَلِّمُوا أَوْلاَدَ الأَنْصَارِ الْكِتَابَةَ (سنن الكبري للبيهقي) وكان زيد بن ثابت ممن تعلّم الكتابة والكتابة من الاساري
பத்ரு யுத்தம் முடிவுற்ற பிறகு நபி (ஸல்) அவர்கள், "பிணைத்தொகை வழங்க முடியாத ஒவ்வொருவரும் 10 முஸ்லிம்களுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம்" என அறிவுறுத்தினார்கள். அவ்வாறு அந்தக் கைதிகளிடமிருந்து அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டவர்களில் ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் ஒருவர். அன்றைய தினத்தில் கல்வித் தேவையை விட நபி (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாமிய அரசாங்கத்திற்கும் பணத் தேவையும், குரைஷியருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்தக் கைதிகளை தம் வசம் வைத்திருப்பதுமே அவசியத் தேவையாக இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தேவையை விட, கல்வித் தேவை தான் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து அதையே தேர்ந்தெடுத்தார்கள்.
உலகில் முதல்முறையாக கல்விப் புரட்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று உலக அளவில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது. கல்வி முன்னேற்றத்தில் கிறிஸ்தவர்கள் காட்டும் அக்கறை அளவுக்கு நம் சமூக மக்களிடம் இல்லை. கிறிஸ்தவர்கள் தமது கல்வி நிறுவனங்களில் தம் சமுதாய மக்களுக்கு வழங்கும் அளவுக்கு முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு சலுகை வழங்கப்படுவதில்லை.
2006 சச்சார் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகம் முஸ்லிம் சமூகம் தான். இன்றும் சிலரின் நிலை அவ்வாறு தான் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் படிக்கத் தெரியாத பல முஸ்லிம்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இந்தியாவைப்பொறுத்தவரை யார் தன்பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என அறியப்படுகிறார். ஆனால் இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில் 55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் படித்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பவர்கள் இன்றும் நம்மில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான தக்க பதிலடி பத்ருப் போரில் நடைபெற்ற மேற்படி நிகழ்வாகும்.
மலக்குகளிடம் மனிதனை அல்லாஹ் உயர்வாக்கிக் காட்டியது கல்வியறிவைக் கொண்டு தான்
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (31) قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ (32) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ (البقرة33)
வாழ்க்கைக்கு அவசியமான எல்லாக் கல்வியும் கற்க வேண்டியது தான். கடலில் பயணம் செய்பவனுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்
ஒரு படகில் மூன்று அறிஞர்களும் பயணம் செய்த போது, படகோட்டியிடம் தங்கள் அறிவுத் திறனைக் காட்ட, “ஏம்ப்பா உனக்கு கணிதம் தெரியுமா? என்று ஒரு அறிஞர் கேட்க, “அதெல்லாம் தெரியாதுங்க என்றான் படகோட்டி. அச்சச்சோ, வாழ்நாளின் கால்வாசியை வீணாக்கி விட்டாயே ! என்றார் அந்த அறிஞர். அடுத்து இரண்டாமவர் ஏம்ப்பா உனக்கு வான சாஸ்திரம் தெரியுமா? எனக் கேட்க அதெல்லாம் தெரியாதுங்க என்றதும் “அச்சச்சோ,உன் வாழ்வில் பாதி வீணாகி விட்டதே” என வருந்தினார். அடுத்து மூன்றாமவர் ஏம்ப்பா உனக்கு அறிவியலாவது தெரியுமா? எனக்கேட்க “அதெல்லாம் தெரியாதுங்க” என்று சொன்னவுடன் அச்சச்சோ உன் வாழ்நாளில் முக்கால் வாசியை வீணாக்கி விட்டாயே! என்று சலித்துக் கொண்டார். திடீரென அவன் கேட்டான். ஏங்க உங்களில் யாருக்காவது நீச்சல் தெரியுமா என்று. “தெரியாதே” என அம்மூவரும் அலட்சியமாக சொன்னதும் அச்சச்சோ.. உங்க எல்லோரின் முழு வாழ்க்கையும் வீணாகிப் போச்சே நாம் சுழலில் மாட்டிக் கொண்டோம்” என்று சொல்லி அவன் மட்டும் தண்ணீரில் குதித்து நீந்தி கரை வந்து சேர்ந்தான்.
வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருதல்
நம் மஹல்லாவுக்குள் நாம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி முஸ்லிம்களின் நிலைகளை அறிந்து, வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் யார் என்றும் வேலை தரும் நிலையில் இருப்பவர்கள் யார் என்றும் கண்டறிந்தால் இந்தப் பணிகள் நமக்கு இலகுவாகி விடும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ فَقَالَ أَمَا فِي بَيْتِكَ شَيْءٌ قَالَ بَلَى حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ مِنْ الْمَاءِ قَالَ ائْتِنِي بِهِمَا قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ مَنْ يَشْتَرِي هَذَيْنِ قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ الدِّرْهَمَيْنِ وَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ فَأَتَاهُ بِهِ فَشَدَّ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودًا بِيَدِهِ ثُمَّ قَالَ لَهُ اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَاشْتَرَى بِبَعْضِهَا ثَوْبًا وَبِبَعْضِهَا طَعَامًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَة (ابوداود
ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு யாசகம் கேட்டார். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா?” எனக் கேட்டார்கள். ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். அவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.அவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடாரி வாங்கி வாருங்கள் என்றும் கூறி அவரை அனுப்பி வைத்தார்கள்.கோடாரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி யாசித்த அந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள். “நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்குப் பின் எம்மை வந்து நீர் சந்திக்க வேண்டும்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார்.
பதினைந்து நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து மகிழ்ந்த முகத்தோடு இதற்காக நன்றி கூறினார். அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” என்று கூறி
நபி (ஸல்) அவர்கள் அவரை அனுப்பி வைத்தார்கள். ( நூல்: திர்மிதீ )
நம்மால் உதவி செய்ய முடியா விட்டாலும் உதவி செய்பவரிடம் அனுப்பி வைப்பது
عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُبْدِعَ بِي فَاحْمِلْنِي قَالَ لَا أَجِدُ مَا أَحْمِلُكَ عَلَيْهِ وَلَكِنْ ائْتِ فُلَانًا فَلَعَلَّهُ أَنْ يَحْمِلَكَ فَأَتَاهُ فَحَمَلَهُ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ (ابوداود
நன்மையின் பால் தூண்டினால் அதைச் செய்பவருடைய நன்மையில் இவருக்கும் பங்குண்டு.
தீமையின் பால் தூண்டினால் அதைச் செய்பவரின் தீமையில் இவருக்கும் பங்குண்டு
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا (مسلم)
மக்களுக்கான நீர் நிலைகளை அதிகப்படுத்துவதில்
நம்முடைய முன்னோர்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார்கள்.
قال رسول الله صلى الله عيه وسلم من يشتري بئر رومة فيجعلها للمسلمين يضرب بدلوه فى دلائهم وله بها مشرب فى الجنة فساومه فيها عثمان فأبى أن يبيعها كلها فاشترى نصفها باثنى عشر ألف درهم وجعل ذلك للمسلمين وجعل له يوما ولليهودى يوما فإذا كان يوم عثمان استقى المسلمون ما يكفيهم يومين فلما رأى اليهودى ذلك قال لعثمان أفسدت على ركيتى فاشترى النصف الآخر بثمانية آلاف (سيرة الحلبية
மதீனாவில் மிகவும் சுவையான கிணறாக இது இருந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை யார் இதை அந்த யூதனிடமிருந்து வாங்கி மக்களுக்கு வக்ஃப் செய்வார்களோ அவருக்கு சுவனத்தில் அதுபோன்றக நீர் நிலை உண்டு என்றவுடன் உஸ்மான் ரழி போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்க யூதனிடம் சென்ற போது அதை அவன் விட்டுக் கொடுக்க மறுத்தான் எப்படியோ சம்மதிக்க வைத்து 12 ஆயிரம் திர்ஹம் தந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் அந்தக் கிணற்றின் உரிமையை பெற்றார்கள். தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கு தண்ணீரை இலவசமாக சப்ளை செய்தார்கள். ஆனால் அந்த யூதன் காசுக்கு மட்டுமே விற்றான். நாளடைவில் அவனிடம் காசு கொடுத்து யாரும் வாங்காத ஒரு நிலை ஏற்பட்டது. ஏனெனில் உஸ்மான் ரழி தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்ததால் அவனிடம் யாரும் வாங்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் மீதி உரிமையையும் விட்டுத் தந்தான். மொத்தம் 20 ஆயிரம் திர்ஹம் தந்து விலைக்கு வாங்கி மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்கள்.- சீரத்துல் ஹலபிய்யா
மக்களுக்காக நீர் ஆதாரத்தை உருவாக்குவதில் முஸ்லிம் முன்னோடிகளின் பங்கு
பக்தாத் பேரரசர் கலீபா ஹாருன் ரஷீதின் மனைவி ஜுபைதா அம்மையார் மக்காவில் ஏற்பட்ட தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்கக் கால்வாய் ஒன்றை பத்துமைல் நீளத்திற்கு உருவாக்கினார். நஹ்ர் ஜுபைதா என்ற பெயரில் இன்றும் உள்ளது.
நல்ல நடைமுறைகளை ஒருவர் முதலில் தொடங்கி வைத்து மற்றவர்களும்
அதைப் பின்பற்றினால் தொடங்கி வைத்தவருக்கு நன்மை உண்டு
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ جَاءَ نَاسٌ مِنْ الْأَعْرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمْ الصُّوفُ فَرَأَى سُوءَ حَالِهِمْ قَدْ أَصَابَتْهُمْ حَاجَةٌ فَحَثَّ النَّاسَ عَلَى الصَّدَقَةِ فَأَبْطَئُوا عَنْهُ حَتَّى رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ قَالَ ثُمَّ إِنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ جَاءَ بِصُرَّةٍ مِنْ وَرِقٍ ثُمَّ جَاءَ آخَرُ ثُمَّ تَتَابَعُوا حَتَّى عُرِفَ السُّرُورُ فِي وَجْهِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا وَلَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا وَلَا يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ (مسلم)
சில கிராமவாசிகள் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்தார்கள். அவர்களின் வறுமைக் கோலத்தை நபி ஸல் அவர்கள் பார்த்தார்கள்.அவர்களுக்கு தேவை இருக்கிறது என்பதை அறிந்து, அவர்களுக்கு உதவும்படி தோழர்களைத் தூண்டினார்கள். ஆனால் யாரும் உடனடியாக முன்வரவில்லை. தாமதப் படுத்தினார்கள். அப்போது ஒரு அன்சாரித் தோழர் தங்கக் கட்டியை கையில் வைத்தபடி எழுந்தார். அதை ஏழை மக்களுக்காத தந்தார். அவர் தருவதைப் பார்த்தவுடன் மற்றவர்களும் தொடர்ந்து ஒவ்வொருவராக உதவி செய்ய முன்வந்தனர். அப்போது நபி ஸல் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அப்போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நல்ல நடைமுறைகளை ஒருவர் முதலில் தொடங்கி வைத்து மற்றவர்களும் அதைப் பின்பற்றினால் தொடங்கி வைத்தவருக்கும் நன்மை உண்டு. மற்றவர்களின் நன்மைகளில் எவ்வித குறைவும் ஏற்படாது.
وسنة حسنة وهي على نوعين النوع الأول أن تكون السنة مشروعة ثم يترك العمل بها ثم يجددها من يجددها مثل قيام رمضان بإمام فإن النبي صلى الله عليه وسلم شرع لأمته في أول الأمر الصلاة بإمام في قيام رمضان ثم تخلف خشية أن تفرض على الأمة ثم ترك الأمر في آخر حياة النبي صلى الله عليه وسلم وفي عهد أبي بكر رضي الله عنه وفي أول خلافة عمر ثم رأى عمر رضي الله عنه أن يجمع الناس على إمام واحد ففعل فهو رضي الله عنه قد سن في الإسلام سنة حسنة لأنه أحيا سنة كانت قد تركت والنوع الثاني من السنن الحسنة أن يكون الإنسان أول ما يبادر إليها مثل حال الرجل الذي بادر بالصدقة حتى تتابع الناس ووافقوه على ما فعل (الكتاب : شرح رياض الصالحين)المؤلف : محمد بن صالح بن محمد العثيمين
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் நாமும் அழைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் அதற்கு சில ஆலோசனைகள்.
اُدْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ(النحل)اِذْهَبَا إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى- فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى (44الفرقان)
அழைப்புப் பணியை மேற்கொள்ள இரண்டு வழிகள் உண்டு 1,தானாக தேடி வரும் வாய்ப்பு உதாரணமாக நம்முடைய நண்பர்களோ, அல்லது நம்முடன் பயணம் செய்பவர்களோ இஸ்லாம் சம்பந்தமாக ஏதாவது கேள்வியை கேட்கும்போது அதை மாபெரும் சந்தர்ப்பமாக எண்ணி இஸ்லாம் சம்பந்தமாக முடிந்த வரை அவருக்கு விளக்கிச் சொல்ல லாம். இதற்காக ஏதேனும் பயிற்சி எடுத்துக் கொண்டால் இன்னும் நலம். இஸ்லாம் சம்பந்தமான நூல்களையும் அவர்களுக்கு கொடுக்கலாம்.
2,தேடிச் செல்வது - அழைப்புப் பணிக்காக தேடிச்செல்லும் இடங்கள்-
A.,மருத்துவமனை-மருத்துவமனையில் நோயுற்று படுத்திருப்பவர்கள் ஆறுதலான வார்த்தைகளை எதிர்பார்ப்பார்கள். ஒரு குழுவாக சென்று அவர்களை நலம் விசாரித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அப்படியே அவர்களுக்கு இஸ்லாமிய நூல்களை வழங்கலாம். கிறிஸ்தவ மதம் பெரும்பாலும் பரவியது இந்த ரீதியில் தான். ஆனால் இந்த முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ غُلَامٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ النَّارِ (بخاري- باب إِذَا أَسْلَمَ الصَّبِىُّ فَمَاتَ هَلْ يُصَلَّى عَلَيْهِ-كتاب الجن
நபி ஸல் அவர்கள் கடைசியாக கூறிய வார்த்தையின் மூலம் ஒரு மாற்று மதத்தவரை முஸ்லிமாக ஆக்குவது நாம் அவருக்குச் செய்யும் மாபெரும் உதவி என்பதை விளங்க வேண்டும். அதற்கு பதிலாக கோடி ரூபாயை அவருக்குக் கொடுத்தாலும் அது ஈடாகாது. ஒரு நிரந்தர நரகவாதியை சுவனவாசியாக மாற்றுவதை விட மாபெரும் உதவி எதுவும் இல்லை. நம்மில் சிலருக்கு மாற்று மத நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு பெரும்பாலும் அமைந்தும் அவர்கள் ஒரு முறை கூட இஸ்லாத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறியிருக்க மாட்டார்கள். நாளை மறுமையில் நரகவாதியாக அந்த நண்பரை இவர் காணும்போது “இஸ்லாம் பற்றி என்னிடம் ஒரு வார்த்தையாவது கூறியிருக்கக் கூடாதா? என்று அவர் கேட்டால் இவரால் என்ன பதில் கூற முடியும்.
B.வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அப்படியே இஸ்லாத்தையும் எடுத்துக் கூறலாம். இதற்காக ஒவ்வொரு மஹல்லாவிலும் வசதி படைத்தவர்கள் ஒன்று சேர்ந்து பொது நிதியம் உருவாக்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய இந்த வேலையை இன்று வரை கிறிஸ்தவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
C.சிறைச்சாலை -சிறைச்சாலை பலருக்கு சிந்தனைச் சாலையாகவும், எதிர்கால வாழ்வை ஒழுங்கு படுத்துவதாவும் அமையும். அங்கு செல்வதற்கு முறையான அனுமதி பெற்று, அங்குள்ளவர்களுக்கு புத்திமதி கூறும் விதத்தில் இஸ்லாத்தை எடுத்துக் கூறலாம். இஸ்லாமிய நூல்களையும் வழங்கலாம்.
D. நூலகம்- எதிர்கால எண்ணங்களை உருவாக்குவதில் நூலகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அத்தகைய நூலகங்களில் இஸ்லாமிய நூல்களை வைக்க ஏற்பாடு செய்யலாம்.
குறிப்பு-மேற்காணும் பணிகளை தனித்து செய்வதை விட ஒரு குழுவாக செய்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்
குறிப்பு- மேற்கானும் பணிகள் எதையும் செய்ய இயலாதவர்கள், அல்லது நேரம் இல்லாதவர்கள் குறைந்த பட்சம் தங்களுடைய வாகனங்களிலேனும் தங்களின் பெயர்களை எழுதுவதை தவிர்த்து இஸ்லாமிய அழைப்பிற்கான வாசகங்களை எழுதலாம். கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாகனங்களில் தம் பெயர்களை எழுதியதை பெரும்பாலும் பார்க்க முடியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக