வியாழன், 14 ஜூலை, 2022

விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

 


15-07-2022

துல்ஹஜ் - 15

 

بسم الله الرحمن الرحيم 

விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 






இன்று நாம் செய்யும் பல நற்காரியங்கள்  நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நினைவு கூரக் கூறியகாக அமைந்துள்ளன

 

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நினைவு கூராமல் தொழுகை முழுமையடைவதில்லை

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (بخاري) كتاب التفسير

நபி ஸல் அவர்களும் அடிக்கடி நபி இப்றாஹீம் அலை அவர்களை நினைவு கூருவார்கள்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ ثُمَّ يَقُولُ كَانَ أَبُوكُمْ يُعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَقَ (ابوداود

தன் பேரப்பிள்ளைகளுக்கு ஓதிப் பார்க்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படித்தான் உங்களின் தந்தை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தம் பிள்ளைகளுக்கு ஓதிப் பார்ப்பார்கள் என நினைவு கூருவார்கள்

அல்லாஹ்வின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு  80 வயதிலும் கத்னா செய்து கொண்ட இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

عَنْ أَبِي هُرَيْرَةَرَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالْقَدُّومِ(بُخاري)قدومவெட்டும் கருவி

விருந்தோம்பலிலும் நபி  இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் சிறந்து விளங்கினார்கள்

وكان ابراهيم عليه السلام لا يأكل بغير ضيف (مؤطا)-

 நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் எப்போதும்  விருந்தாளிகள் இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் ஒரேயொரு தடவை மட்டும் விருந்தாளிகள் யாரும் வரவில்லை ஏமாற்றம் அடைந்த இப்றாஹீம் (அலை) விருந்தாளியைத் தேடி வெளியில் புறப்பட்டார்கள்அப்போதும் விருந்தாளிகள் யாரும் தென்படாத நிலையில் கவலையுடன் வீடு திரும்பிய போது சற்றும் எதிர்பாராமல் ஒரு மனிதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டினுள் நின்றார் உடனே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நீங்கள் யார் ? என் அனுமதி இல்லாமல் எப்படி என் வீட்டினுள் வந்தீர் ? என்று கேட்க அதற்கு அவர் நான் இந்த வீட்டின் உண்மையான அதிபதியின் அனுமதியோடு வந்துள்ளேன் என்று கூற இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு குழப்பமாகி விட்டது யார் நீங்கள் என்று வியப்புடன் கேட்க, அதற்கு அவர் நான் அல்லாஹ் அனுப்பிய வானவர். அல்லாஹ் உங்களிடம் ஒரு சுபச்செய்தியை கூறும்படி அனுப்பினான் அதாவது உங்கள் சமூகத்தில் ஒருவரை அல்லாஹ் தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டான் என்று கூறிய மறுநிமிடமே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆர்வத்துடன் அவர் யார் ? எங்கே இருக்கிறார்  ? இந்த உலகின் எந்த மூலையின் அவர் இருந்தாலும் சரி அவரை நான் என்னுடைய நேசராக ஆக்கிக் கொள்வேன் அவருடனே இருப்பேன் அவரை விட்டும் பிரிய மாட்டேன் என்று ஆர்வத்துடன் கேட்ட போது அந்த மலக்கு சொன்னார் அவர் இங்கே தான் இருக்கிறார்.... அது நீங்கள் தான் என்று கூற உடன் ஆச்சரியமடைந்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நான் தானா? என்னைத் தான் அல்லாஹ் தன் நேசராக ஆக்கிக் கொண்டானா ? எதனால் ? என்று ஆச்சரியத்துடன் கேட்க, உடன் அந்த வானவர்  நீங்கள் அனைவருக்கும் கொடுத்துத் தான் பழகியிருக்கிறீர்கள் யாரிடத்திலும் வாங்கிப் பழகியதில்லை அதுதான் காரணம் என்றார்.

فذُكِر أنّ إبراهيم صلى الله عليه وسلم كان يضيف الضيفان ويطعم الطعام، فأصاب الناس سنةُ جدب فعزَّ الطعام. فبعث إبراهيم صلى الله عليه وسلم إلى خليل له بمصر كانت المِيرة من عنده، فبعث غلمانه معهم الغرائر والإبل ليميره، فردّهم وقال: إبراهيم لا يريد هذا لنفسه، إنما يريده لغيره. قال: فرجع غلمانه، فمرّوا ببطحاء لينة. فاحتملوا من رملها فملئوا الغرائر؛ استحياء من أن يردّوها فارغة، فرُدّوا على إبراهيم صلى الله عليه وسلم فأخبروه الخبر وامرأه نائمة، فوقع عليه النوم هَمّا، وانتبهت والناس على الباب يلتمسون الطعام. فقالت للخبّازين: افتحوا هذه الغرائر واعتجنوا، ففتحوها فإذا أطيب طعام، فعجنوا واختبزوا. وانتبه إبراهيم صلى الله عليه وسلم فوجد ريح الطعام، فقال: مِن أين هذا؟ فقالت امرأة إبراهيم صلى الله عليه وسلم: هذا من عند خليلك المصرىّ. قال فقال إبراهيم: هذا من عند خليلى الله لا من عند خليلى المصرىّ. قال: فذلك خُلّته. (الكتاب : معانى القرآن)

ஒருமுறை இப்றாஹீம் (அலை) அவர்களின் ஊரில் பஞ்சம் நிலவிய போது ஊர் மக்கள் இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டை நோக்கி நம்பிக்கையுடன் வந்து விட்டார்கள் ஆனால் அந்நேரத்தில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வீட்டிலும் பஞ்சமே நிலவியது எனினும் வீடு தேடி வந்த மக்களை பசியோடு திருப்பி அனுப்பக் கூடாது என்றெண்ணி தமக்கு நெருக்கமான சில இளைஞர்களை பட்டணத்தில் வசிக்கும் தனக்கு நெருக்கமான நண்பரிடம் அனுப்பி வைக்கிறார்கள் நான் சொன்னதாக கூறி தானிய மூட்டைகளை வாங்கி வாருங்கள் என்று கூற அந்த இளைஞர்கள் காலியான தானியப் பைகளை தம்முடன் எடுத்துக் கொண்டு ஒட்டகங்களில் புறப்படுகிறார்கள் விரைவாகச் சென்று அந்த நபரை சந்தித்த போது அந்த நண்பர்  உங்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் தான் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வேண்டுமானால் இப்றாஹீம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மட்டும் போதுமான தானியங்களை என்னால் தர முடியும் என்று கூறி விடுகிறார் ஏமாற்றத்துடன் அந்த இளைஞர்கள் திரும்புகிறார்கள்.  வரும் வழியில் ஊர் எல்லையை நெருங்கும்போது அந்த இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்  நாம் காலியான தானியப் பைகளுடன் ஊருக்குள் நுழைய வேண்டாம். அவ்வாறு நுழைந்தால் காத்திருக்கும் மக்கள் மிகவும் விரக்தி அடைந்து விடுவார்கள் ஆகவே இந்த மூட்டைகளுக்குள் மணலை நாம் நிரப்பி கொண்டு செல்வோம் அந்த மக்களுக்கு அது தானிய மூட்டைகளைப் போல் தெரியும். நாம் வீட்டுக்குள் கொண்டு சென்றவுடன் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி விடுவோம் அல்லாஹ் ஏதேனும் அற்புதத்தை ஏற்படுத்தக் கூடும் என்றெண்ணி அவ்வாறே செய்தார்கள் மணல் மூட்டைகளுடன் வீட்டுக்குள் நுழைந்த போது நபியவர்களின் மனைவி சாரா அம்மையார் பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில்  நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மட்டும் விஷயத்தைக் கூறி விட்டு வெளியில் வந்து விட்டார்கள்  நபியவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள் இந்த மக்களுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்ற கவலை மிகுதியால் அவர்களை அறியாமல் தூக்கம் ஆட்கொண்டு விட்டது அவர்கள் தூங்கிய சற்று நேரத்தில் மனைவி சாரா அம்மையார் விழித்து அந்த மூட்டைகளை பார்க்கிறார்கள் பட்டணத்து நண்பர் தான் தானியம் கொடுத்தனுப்பியிருக்கிறார் என்றெண்ணி அதைப் பிரித்த போது அல்லாஹ்வின் அருளால் அதில் உண்மையான தானியமே இருந்தது. உடனே சமைக்க ஆரம்பித்து விட்டார்கள் சமையல் வாசனையைக் கண்டு நபியவர்கள் விழித்து  என்ன சாரா இந்த உணவு தானியம் எப்படி வந்தது என்று கேட்க, உங்களுடைய பட்டணத்து நண்பர் தான் கொடுத்தனுப்பினார் உங்களுக்கே தெரியாதா என்று மனைவி கூறிய போது நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள் இல்லை அந்த நண்பர் கொடுத்தனுப்பவில்லை என்னுடைய உண்மை நேசனாகிய அல்லாஹ் இதை அனுப்பினான்என்றார்கள் அப்போதே அல்லாஹ் அவர்களை தன் உற்றநேசராக ஆக்கிக்கொண்டான்.                

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விருந்தோம்பலுக்கு எடுத்துக் காட்டாக மற்றொரு சம்பவம்

قال السدي: لما بعث الله الملائكة لقوم لوط أقبلت تمشي في صور رجال شبان حتى نزلوا على إبراهيم فتضيفوه, فلما رآهم أجلهم {فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ} فذبحه ثم شواه في الرضف وأتاهم به فقعد معهم وقامت سارة تخدمهم فذلك حين يقول ـ وامرأته قائمة وهو جالس ـ في قراءة ابن مسعود {فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلا تَأْكُلُونَ ؟} قالوا: يا إبراهيم إنا لا نأكل طعاماً إلا بثمن, قال فإن لهذا ثمناً, قالوا: وما ثمنه ؟ قال تذكرون اسم الله على أوله وتحمدونه على آخره فنظر جبريل إلى ميكائيل فقال حق لهذا أن يتخذه ربه خليلاً {فَلَمَّا رَأى أَيْدِيَهُمْ لا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ} يقول فلما رآهم لا يأكلون فزع منهم وأوجس منهم خيفة, فلما نظرت سارة أنه قد أكرمهم وقامت هي تخدمهم ضحكت وقالت: عجبا لأضيافنا هؤلاء نخدمهم بأنفسنا كرامة لهم وهم لا يأكلون طعامنا.(تفسير ابن كثير

மலக்குகள் விருந்தாளிகளைப் போன்று வருகை தந்த போது அவர்களை மலக்குகள் என்று அறியாத நிலையிலும் அவர்களை இப்றாஹீம் அலை மிகவும் கண்ணியப்படுத்தினார்கள் அவர்களுக்காக மாட்டை அறுத்து அதை பொறித்து முன்னால் கொண்டு வந்து வைத்து அவர்களுடன் தானும் அமர்ந்து சாப்பிடச் சொன்ன போது அந்த மலக்குகள் இப்றாஹீம் அலை அவர்களை பரிசோதிப்பதற்காக  நாங்கள் இந்த உணவை சாப்பிட வேண்டுமானால் இதற்குரிய விலையை கொடுக்காமல் சாப்பிட மாட்டோம் என்று கூறிய போது உடனே இப்றாஹீம் அலை அப்படியானால் இதற்கு ஒரு விலை இருக்கிறது என்று கூற, மலக்குகள் ஆச்சரியத்துடன் என்ன விலை என்று கேட்க, உடனே இப்றாஹீம் அலை அவர்கள் இதை சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும் சாப்பிட்டு முடித்த பின் அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வேண்டும் அதுதான் இதன் விலை என்று கூற அப்போது ஜிப்ரயீல் அலை அவர்களும், மீகாயீல் அலை அவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்  கொண்ட நிலையில் ஜிப்ரயீல் அலை இவரை அல்லாஹ் தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டது சரி தான் என்றார்கள்

விருந்தோம்பல் எப்படி அமைய வேண்டும் என்ற விஷயத்தில் இப்றாஹீம் (அலை) பேணிய  ஒழுக்கங்கள்

هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ (24) إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ (25) فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ (26) فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ (27) فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ (28) الذاريات

فالإكرام أولاً ممن جاءه ضيف قبل أن يجتمع به ويسلم أحدهما على الآخر أنواع من الإكرام وهي اللقاء الحسن والخروج إليه والتهيؤ له ثم السلام من الضيف على الوجه الحسن الذي دل عليه النصب في قوله : { سَلاَماً } إما لكونه مؤكداً بالمصدر أو لكونه مبلغاً ممن هو أعظم منه ، ثم الرد الحسن الذي دل عليه الرفع والإمساك عن الكلام لا يكون فيه وفاء إن إبراهيم عليه السلام لم يقل سلام عليكم بل قال أمري مسالمة أو قولكم سلام وسلامكم منكر فإن ذلك وإن كان مخلاً بالإكرام ، لكن العذر ليس من شيم الكرام ومودة أعداء الله لا تليق بالأنبياء عليهم السلام ثم تعجيل القرى الذي دل عليه قوله تعالى : { فَمَا لَبِثَ أَن جَاء } [ هود : 69 ] وقوله ههنا : { فَرَاغَ } فإن الروغان يدل على السرعة والروغ الذي بمعنى النظر الخفي أو الرواح المخفي أيضاً كذلك ، ثم الإخفاء فإن المضيف إذا أحضر شيئاً ينبغي أن يخفيه عن الضيف كي لا يمنعه من الإحضار بنفسه حيث راغ هو ولم يقل هاتوا ، وغيبة المضيف لحظة من الضيف مستحسن ليستريح ويأتي بدفع ما يحتاج إليه ويمنعه الحياء منه ثم اختيار الأجود بقوله : { سَمِينٍ } ثم تقديم الطعام إليهم لا نقلهم إلى الطعام بقوله : { فَقَرَّبَهُ إِلَيْهِمْ } لأن من قدم الطعام إلى قوم يكون كل واحد مستقراً في مقره لا يختلف عليه المكان فإن نقلهم إلى مكان الطعام ربما يحصل هناك اختلاف جلوس فيقرب الأدنى ويضيق على الأعلى ثم العرض لا الأمر حيث قال : { أَلا تَأْكُلُونَ } ولم يقل كلوا ثم كون المضيف مسروراً بأكلهم غير مسرور بتركهم الطعام كما يوجد في بعض البخلاء المتكلفين الذين يحضرون طعاماً كثيراً ويكون نظره ونظر أهل بيته في الطعام متى يمسك الضيف يده عنه ، يدل عليه قوله تعالى : فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ (28)

ثم أدب الضيف أنه إذا أكل حفظ حق المؤاكلة ، يدل عليه أنه خافهم حيث لم يأكلوا ، ثم وجوب إظهار العذر عند الإمساك يدل عليه قوله : { لاَ تَخَفْ } ثم تحسين العبارة في العذر وذلك لأن من يكون محتمياً وأحضر لديه الطعام فهناك أمران . أحدهما : أن الطعام لا يصلح له لكونه مضراً به . الثاني : كونه ضعيف القوة عن هضم ذلك الطعام فينبغي أن لا يقول الضيف هذا طعام غليظ لا يصلح لي بل الحسن أن يأتي بالعبارة الأخرى ويقول : لي مانع من أكل الطعام وفي بيتي لا آكل أيضاً شيئاً ، يدل عليه قوله : { وَبَشَّرُوهُ بغلام } حيث فهموه أنهم ليسوا ممن يأكلون ولم يقولوا لا يصلح لنا الطعام والشراب ، ثم أدب آخر في البشارة أن لا يخبر الإنسان بما يسره دفعة فإنه يورث مرضاً يدل عليه أنهم جلسوا واستأنس بهم إبراهيم عليه السلام ثم قالوا نبشرك ثم ذكروا أشرف النوعين وهو الذكر ولم يقتنعوا به حتى وصفوه بأحسن الأوصاف فإن الابن يكون دون البنت إذا كانت البنت كاملة الخلقة حسنة الخلق والابن بالضد ، ثم إنهم تركوا سائر الأوصاف من الحسن والجمال والقوة والسلامة واختاروا العلم إشارة إلى أن العلم رأس الأوصاف ورئيس النعوت ، وقد ذكرنا فائدة تقديم البشارة على الإخبار عن إهلاكهم قوم لوط ، ليعلم أن الله تعالى يهلكهم إلى خلف ، ويأتي ببدلهم خيراً منهم . (تفسير الرازي     . قال نوح بن قيس: فزعم نوح بن أبي شداد أنهم لما دخلوا على إبراهيم، فقرب إليهم العجل، مسحه جبريل بجناحه، فقام يدرج حتى لحق بأمه، وأم العجل في الدار. (تفسير ابن كثير   

விருந்தோம்பலில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கடைபிடித்த அந்த உபசரிப்பு இன்று குறைந்து கொண்டே வருகிறது. எத்தனையோ விஷயங்களில் மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடம் தொற்றிக் கொண்டது போல் விருந்தோம்பல் விஷயத்திலும் பஃபே சிஷ்டம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடமும் பரவி விட்டது.  தட்டை ஏந்திக் கொண்டு கியூ வரிசையில் காத்திருக்க வேண்டும். உபசரிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.  மறு உணவு தேவை என்றாலும் நாமே தேடிப் போய் எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்.  இது விருந்தோம்பல் என்பதாக அறவே கூற முடியாது நபி இப்றாஹீம் அலை எத்தகைய ஒழுக்கத்தை கடை பிடித்தார்கள்  1,வந்த விருந்தாளிகளிடம் சாப்படுகிறீர்களா என்று கேட்காமலே விருந்து தயார் செய்தார்கள். 2, உணவுகளில் சிறந்த உணவை தயார் செய்தார்கள்  3, விருந்தாளிகளை அந்த அறைக்கு  வாருங்கள் அங்கு தான் உணவு வைக்கப்பட்டுள்ளது என்றோ, அல்லது அங்கு போய் கைகளை கழுவி விட்டு வாருங்கள் என்றோ சங்கடப்படுத்தாமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து உணவை வைத்தார்கள் 4, விருந்தாளிகளிடம்  சாப்பிடுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக நீங்கள் சாப்பிடக் கூடாதா என்று கணிவுடன்  கூறினார்கள் இந்த ஒழுக்கங்களில் பெரும்பகுதி பஃபே சிஷ்டத்தில் இருப்பதில்லை.

மற்றொரு அறிவிப்பில் விருந்தாளிகளுக்காக இளம் கன்றை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அறுத்து விருந்து ஏற்பாடு செய்தார்கள். கடைசியில் தான் அவர்கள் மலக்குகள் என்று தெரிய வந்தது. இறுதியாக நடந்த து என்னவென்றால் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் பொறித்து வைக்கப்பட்ட்ருந்த அந்த கன்றின் முன் சப்பையின் மீது தடவிய போது அது உயிர் பெற்று எழுந்து அங்கேயே இருந்த அதன் தாயுடன் சென்று சேர்ந்து கொண்டது. அந்த உணவு வீணாகவில்லை என்ற கருத்தும் இதில் அடங்கும்.

விருந்தாளிகளுக்காக நஃபிலான நோன்பை விடுவது

عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ قَالَ آخَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ قَالَ فَإِنِّي صَائِمٌ قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ قَالَ نَمْ فَنَامَ ثُمَ ذَهَبَ يَقُومُ فَقَالَ نَمْ فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمْ الْآنَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَصَدَقَ سَلْمَانُ (بخاري) باب صُنْعِ الطَّعَامِ وَالتَّكَلُّفِ لِلضَّيْفِ–كتاب الأدب

ஏழைகளை விட்டு விட்டு செல்வந்தர்களை மட்டும் அழைப்பவர்களைப் பற்றி...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ (بخاري) كتاب النكاح

 

عن أبي هريرة رضي الله عنهقال : قال رسول الله صلى الله عليه وسلمأفشوا السلام وأطعموا الطعام واضربوا الهام تورثوا الجنان (ترمذي)عن صهيب  أن النبي صلى الله عليه وسلم قالخيركم من أطعم الطعام ورد السلام (حاكم) (واضربوا الهام)أي رؤوس الكفار أي قاتلوا اَعْداءكم في الدين

ஸலாமைப் பரப்புங்கள். பசித்தோருக்கு உணவளியுங்கள். மார்க்கத்தின் விரோதிகளோடு போர் செய்யுங்கள் சுவனத்தை அடைவீர்கள்

 

விருந்தாளிகளுக்காக சக்திக்கு மீறிய, அளவுக்கு அதிகமாக சிரமம் எடுத்துக் கொள்வதும்  தேவையில்லை

عن سلمان رضي الله تعالى عنه: أن النبي صلى الله عليه وسلم قال: (لا يتكلفنَّ أحد لضيفه ما لا يقدر عليه رواه البيهقي

عَنْ أَنَسٍ قَالَ كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ نُهِينَا عَنِ التَّكَلُّفِ (بخاري) باب مَا يُكْرَهُ مِنْ كَثْرَةِ السُّؤَالِ وَتَكَلُّفِ مَا لاَ يَعْنِيهِ .-كتاب الاعتصام بالكتاب

 

உங்களில் எவரும் தன் விருந்தாளிகளுக்காக சக்திக்கு மீறிய சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம். பைஹகீ

கடன் வாங்கி விருந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையான ஹதீஸ்

 

 

 

 

 

 

வியாழன், 7 ஜூலை, 2022

குர்பானிப் பிராணி அறுப்பின் சட்டங்கள்

 


08-07-2022

துல்ஹஜ்- 8

 

بسم الله الرحمن الرحيم    

அறுப்பின் சட்டங்கள்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்





لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ (37)الحج

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் குர்பானி கொடுக்கலாம்.  கர்ப்பிணிப் பெண்கள் குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கிறது

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا لَكِ أَنَفِسْتِ قَالَتْ نَعَمْ قَالَ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ (بخاري) الأضحية للمسافر والنساء-كِتَاب الْأَضَاحِيِّ

குர்பானி விஷயத்தில் முக்கியமான விளக்கம்.

ஒரு குடும்பத்தில் யார் சம்பாதிக்கிறாரோ மேலும் ஜகாத்துடைய நிஸாப் அளவுக்கு மிச்சமாக பணம் வைத்துள்ளாரோ அவர் மீது குர்பானி கடமை. ஜகாத் கடமையான சிலர் குர்பானி கடமையான பின்பும் தன் பெயரில் கொடுக்காமல் தன் தந்தை அல்லது தாயார் பெயரில் குர்பானி கொடுக்கிறார்கள். அவ்வாறு தருவதால் இவரின் கடமை நீங்காது.  தாம் கொடுத்தது போக மிச்சமிருந்தால் பெற்றோர் பெயரில் கொடுப்பது தவறில்லை. என் பெற்றோரை விட நான் முக்கியமானவனா என்ற எண்ணத்தில் பலர் இத்தகைய தவறைச் செய்கிறார்கள். தொழுகை இவர் மீது கடமை என்றால் என் பெற்றோர் தொழாமல் நான் தொழுவதா என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். அதுபோன்றுதான் குர்பானி.                                                                  

தனக்காக அகீகா கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் அந்த அகீகாவை முதலில்  தராம்ல குர்பானி தரக்கூடாது என்ற எண்ணமும் சிலரிடம் உள்ளது. அகீகா குழந்தைப் பருவத்தில் தான் சுன்னத். அதைத் தாண்டினால் ஜாயிஸ்.  ஆனால் குர்பானி என்பது  வாஜிப்.

وَنَقَلَ التِّرْمِذِيُّ عَنْ أَهْلِ الْعِلْمِ أَنَّهُمْ يَسْتَحِبُّونَ أَنْ تُذْبَحَ الْعَقِيقَةُ فِي السَّابِعِ فَإِنْ لَمْ يُمْكِنْ فَفِي الرَّابِعَ عَشَرَ فَإِنْ لَمْ يُمْكِنْ فَيَوْمِ أَحَدِ وَعِشْرِينَ . وَقَالَ الشَّافِعِيُّ : لَا تُؤَخَّرُ عَنْ السَّابِعِ اخْتِيَارًا فَإِنْ تَأَخَّرَتْ إلَى الْبُلُوغِ سَقَطَتْ عَمَّنْ كَانَ يُرِيدُ أَنْ يَعُقَّ عَنْهُ لَكِنْ إنْ أَرَادَ هُوَ أَنْ يَعُقَّ عَنْ نَفْسِهِ فَعَلَ . (فتح الباري – عمدة القاري

குர்பானி கொடுக்க அனுமதிக்கப்பட்ட நாட்களும். குர்பானி கொடுப்பது மக்ரூஹாக கருதப்படும் நேரமும்

شَّافِعِيُّ :الاضحية جائزة في يَوْم النَّحْرِ وثَلَاثَةُ أَيَّامٍ بَعْدَهُ لما روي عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ (أحمد) حديث جُبَيْرِ بْنِ مُطْعِمٍحنفي :الأضحية جَائِزَةٌ فِي ثَلَاثَةِ أَيَّامٍ : يَوْمُ النَّحْرِ وَيَوْمَانِ بَعْدَهُقَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيَّامُ النَّحْرِ ثَلَاثَةٌ أَفْضَلُهَا أَوَّلُهَا- وَيَجُوزُ الذَّبْحُ فِي لَيَالِيِهَا إلَّا أَنَّهُ يُكْرَهُ لِاحْتِمَالِ الْغَلَطِ فِي ظُلْمَةِ اللَّيْلِ (المبسوط, الهداية)

சீக்கிரம் குர்பானி கொடுப்பது நல்லது. குத்பா முடிந்து மிம்பரிலிருந்து கீழே இறங்கியுடன்  நபி ஸல் குர்பானி கொடுத்துள்ளார்கள்

عَنْ جَابِرِ رضي الله عنه قَالَشَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ مِنْ مِنْبَرِهِ وَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي (ابوداود)

ஹாஜி தன்னுடைய ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பது அல்லாமல் பிறை 10-இல் அவருடைய ஊரில் அவருக்காக குர்பானி தரலாமா ?

والصحيح إن شاء الله أن هدي الحاج له بمنزلة الأضحية للمقيم ، ولم ينقل أحد أن النبي {صلى الله عليه وسلم} ولا أصحابه جمعوا بين الهدي والأضحية بل كان هديهم هو أضاحيهم فهو هدي بِمِنَى وإضحية بغيرها ، (مشكاة المصابيح مع شرحه مرعاة المفاتيح)

குர்பானிப் பிராணியை அறுக்கும் போது  நிய்யத்துடன் வஜ்ஜஹ்த்து, பிஸ்மில்லாஹ் ஓதி தக்பீர் சொல்வது

عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ:ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ فِى يَوْمِ الْعِيدِ فَقَالَ حِينَ وَجَّهَهُمَا (إِنِّى وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ) (إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ ثُمَّ سَمَّى اللَّهَ وَكَبَّرَ وَذَبَحَ (نسائ  وتستحب الصلاة على النبيصلى الله عليه وسلم عند الذبح (الأم للشافعي)

எந்தப்பிராணியை அறுத்தாலும் அறுக்கும் முன் கத்தியை தீட்டுவது, அறுத்தவுடன் உடனே உரிக்காமல் சூடு ஆற விடுவது

عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ (مسلم) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ1 (أحمد

அறுக்கப்படும் பிராணிக்கு முன்னால் கத்தியை தீட்டுவது அதனை பல முறை சாகடிப்பதாகும்

عن ابن عباس رضي الله عنه أن رجلا أضجع شاة وهو يحد شفرته2 فقال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أتريد أن تُمِيتَها موتاتٍ هَلاَّ حَدَدْتَ شَفْرَتك قبل أن تُضْجِعَها (مستدرك الحاكم) كتاب الاضحية) عن معاوية بن قرة عن أبيه : أن رجلا قال : يا رسول الله إني لأرحم الشاة أن أذبحها فقال رسول الله صلى الله عليه و سلم : إن رَحِمْتَها رحِمَك الله  (مستدرك الحاكم) كتاب الاضحية)

ஒருவர் கத்தியை தீட்டியபடியே ஆட்டைப் படுக்க வைத்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் இதை ஒருமுறை மவ்த்தாக்க நினைக்கிறீரா அல்லது பலமுறை மவ்த்தாக்க நினைக்கிறீரா நீ  ஆட்டைப் படுக்க வைக்கும் முன்பு மறைவாக கத்தியைத் தீட்டியிருக்க வேண்டாமா என நபி ஸல் அவர்கள் எச்சரித்தார்கள்.                                         

மென்மையாக அழைத்துச்செல்வதும், தண்ணீர் கொடுப்பதும், ஒரு ஆட்டின் முன் மற்றொரு ஆட்டை அறுக்காமலிருப்பதும்

والأولى أن تساق إلى المذبح برفق  وتضجع  برفق ويعرض عليها الماء قبل الذبح ولا يحد الشفرة قِبَالتهاولا يذبح بعضها قِبالة بعض (بحر الرائق) عنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَهُوَ يَجُرُّ شَاةً بِأُذُنِهَا فَقَالَ دَعْ أُذُنَهَا وَخُذْ بِسَالِفَتِهَا3 (ابن ماجة)عن الوضين بن عطاء رضي الله عنه  أن جزارًا فتح بابا علي شاة ليذبحها فانفلتت منه حتي جاءت الي النبي صلي الله عليه وسلم فأَتْبَعَها فأخذ يسحبها برِجْلِها4 فقال لها النبي صلي الله عليه وسلماصبري لأمر الله وأنت يا جزار  (مصنف عبد الرزاق)جزارகசாப்புக்கடைக்காரர்

நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் தனது ஆட்டின் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் அதன் காதை விட்டு விடு. அதன் பிடரியைப் பிடித்து இழுத்து வா என்றார்கள். காதைப் பிடித்தால் ஆட்டுக்கு வலி ஏற்படும். பிடரியைப் பிடித்தால் வலி ஏற்படாது என்பதால் இவ்வாறு. கூறினார்கள். மற்றொருவர் ஆடு அடைத்து வைக்கப்படிருந்த இடத்தைத் திறந்தார். அதிலிருந்து அந்த ஆடு நழுவி நேராக நபி ஸல் அவர்களை நோக்கி ஓடி வந்தது. அதை விரட்டி வந்த அதன் உரிமையாளர் அதன் காலைப் பிடித்து தரதரவென இழுத்தார். நபி ஸல் அவரைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ்வின் அனுமதியின் பேரில் நீ இதை அறுக்கிறாய் சற்று பொறுமையைக் கடைபிடி என்றார்கள்.                

மிருகங்களும் அடைக்கலம் தேடி வருகின்ற புகலிடமாக நபி ஸல் அவர்கள் இருந்தார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ(ابوداود

நபி ஸல் அவர்கள் சுவதோவைக்காக ஒரு அன்சாரித் தோழரின் பின் பக்கச் சுவற்றின் பக்கம் ஒதுங்கியபோது அங்கே ஒரு ஒட்டகம் நபி ஸல் அவர்களைக் கண்டவுடன் தேம்பி அழத் துவங்கியது.  நபி ஸல் அவர்கள் அதன் திமிலைத் தடவிக் கொடுத்த பின் அது அமைதியானது உடனே நபி ஸல் அவர்கள் அதன் உரிமையாளரை அழைத்து நீர் இந்த வாயில்லாப் பிராணிகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா நீ அதைப் பட்டினி போட்டதாகவும், அதைக் கொடுமைப் படுத்தியதாகவும் என்னிடம் முறையிட்டது என நபி ஸல் கூறினார்கள்

அறுக்கும் போது குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்து அறுப்பது

استقبال الذابح القبلة وتوجيه الذبيحة إليها وذلك في الهدي والأضحية أشد استحبابا لأن الاستقبال مستحب في القربات وفي كيفية توجيهها ثلاثة أوجه أصحها يوجه مذبحها إلى القبلة ولا يوجه وجهها ليمكنه هو أيضا الاستقبال والثاني يوجهها بجميع بدنها والثالث يوجه قوائمها5(مجموع

அறுக்கத் தெரிந்தால் முடிந்த வரை தானே அறுப்பது, அல்லது அறுப்பவருக்கு பக்கத்தில் நிற்பது

الْأَوْلَى في الْقُرَبِ أَنْ يَتَوَلَّاهَا الْإِنْسَانُ بِنَفْسِهِ وَإِنْ أَمَرَ بِهِ غَيْرَهُ فَلَا يَضُرُّ لِأَنَّهُ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ سَاقَ مِائَةَ بَدَنَةٍ فَنَحَرَ بيده نَيِّفًا وَسِتِّينَ ثُمَّ أَعْطَى الحِرْبَةَ عَلِيًّا فَنَحَرَ الْبَاقِيَ وَإِنْ كان لَا يُحْسِنُ ذلك فَالْأَحْسَنُ أَنْ يَسْتَعِينَ بِغَيْرِهِ كيلا يَجْعَلَهَا مَيْتَةً وَلَكِنْ يَنْبَغِي أَنْ يَشْهَدَهَا بِنَفْسِهِ لِقَوْلِهِ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ لِفَاطِمَةَ رض قَوْمِي فَاشْهَدِي أُضْحِيَّتَكِ فإنه يُغْفَرُ لَك بِأَوَّلِ قَطْرَةٍ من دَمِهَا كُلُّ ذنبه (سنن الكبري للبيهقي)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் 100 ஒட்டகங்களை அறுத்தார்கள். அதில் 63 ஒட்டகங்களை தாமே அறுத்தார்கள். மீதியை அலீ ரழி அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

குர்பானிப் பிராணியில் கூட்டு சேர்ந்து கொண்ட ஏழு பேர் அதனை அறுக்கும்போதும் கூட்டாக அறுத்த சம்பவம்

عن أَبي الأَسَدِّ السُّلَمِىّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنه قَالَ :كُنْتُ سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَمَعَ كُلُّ رَجُلٍ مِنَّا دِرْهَمًا فَاشْتَرَيْنَا أُضْحِيَّةً بِسَبْعَةِ دَرَاهِمَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَقَدْ أَغْلَيْنَا بِهَا6 فَقَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم: إِنَّ أَفْضَلَ الضَّحَايَا أَغْلاَهَا وَأَنْفَسُهَا  فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم  رَجُلاً يَأْخُذُ بِيَدٍ وَرَجُلاً بِيَدٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِقَرْنٍ وَرَجُلاً بِقَرْنٍ وَذَبَحَهَا السَّابِعُ وَكَبَّرْنَا عَلَيْهَا جَمِيعًا (مستدرك الحاكم) كتاب الاضحية) (معجم الاوسط للطبراني)

ஒருமுறை நாங்கள் ஏழு பேர் ஒரு பிராணியில் கூட்டாக இருந்தோம். அதில் நபி ஸல் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். ஆளுக்கு ஒரு திர்ஹம் சேர்த்து வைத்து ஏழு திர்ஹத்திற்கு ஒரு பிராணியை வாங்கினோம். அந்தப் பிராணியை அறுக்கும் போது அதன் நான்கு கால்களை நான்கு பேர் பிடிக்க, அதன் இரு கொம்புகளை இருவர் பிடிக்க, ஏழாவது நபர் அதனை அறுத்தார்.

அறுக்கும் முறைபிராணியின் கழுத்திலுள்ள இரத்தக்குழாய்கள், மூச்சுக்குழல், உணவுக்குழல் ஒரே நேரத்தில் அறுபட வேண்டும். அப்படி அறுத்தாலும் துடிப்பு அடங்கிய பின்பே தோலை உரிக்க வேண்டு இதனால் இரத்தம் விரைவாக வெளியேறி இறைச்சி சுத்தமாகும். கத்தி கூர்மையாக இருப்பதால் விரைவாக அறுக்க முடியும். அதனால் பிராணி வலியை உணர்வதில்லை. உதாரணமாக கூர்மையான பிளேடினால் ஏற்படும் காயம் உடனே வலியைத் தோற்றுவிப்பதில்லை. இரத்தம் வழிந்து சிறிது நேரம்  கழித்தே வலியை உணர்கிறோம்.

இஸ்லாமிய முறையி்ல் பிராணியை அறுக்கும் போது அது வலியை உணர்வதில்லை என்றால் பிராணி ஏன் துடிக்கிறது ?

கழுத்தின் இரு புறமுள்ள இரத்தக்குழாய்கள் துண்டிக்கப்பட்டவுடன் மூளைக்குச்செல்லும் இரத்தம் தடைபடுகிறது.உடன் பிராணிநினைவை இழந்து விடுகிறது. முதுகந்தண்டு சிதையாமல் இருப்பதால் மூளை அதன் பின் உணர்வுகளை இதயத்திற்கு அனுப்பி வைத்து உடனே மூளைக்கு அதிக இரத்தத்தை அனுப்பித் தருமாறு கோருகிறது. ஆகவே தான் அறுக்கப்பட்டவுடன் பிராணி துடிக்கிறது.அதனால் உடலின் பல பாகங்களிலிருந்தும் இரத்தம் துரிதமாக இதயத்தை அடைந்து அங்கிருந்து மூளைக்கு செலுத்தப்படுகிறது.ஆனால் இரத்தக் குழாய்கள் துண்டிக்கப்பட்டிருப்பதால் இரத்தம் மூளைக்குச்சென்றடையாமல் வெளியேறி விடுகிறது. பிராணி துடிப்பதைப் பார்ப்பவர் அது வலியால் துடிக்கிறது என்று கருதி விடுவார். ஆனால் அது வலியினால் ஏற்படும் துடிப்பு அல்ல. ஏனெனில் ஏற்கெனவே நினைவிழந்திருப்பதால் பிராணி வலியை உணர்வதில்லை.உடல் துடிப்பின்மூலம் இரத்தம் முழுவதும் வெளியேறி விடுகிறது. இதனால் தான் பிராணியின் உடல் துடிப்பு நின்று இரத்தம் முற்றிலும் வெளியேறும் வரை தோலை உரிக்கவோ, தசையை வெட்டவோ அனுமதி இல்லை. இவ்விதம் பெறப்படும் இறைச்சி இரத்தம் நீங்கிய தூய்மையான இறைச்சியாகி விடுகிறது. பிராணியும் வேதனையின்றி  உயிரிழக்கிறது.

மேல்நாடுகளில் பின்பற்றப்படும் ஸ்டன்னிங் என்ற முறையால் கறியும் சுத்தமாகாது. பிராணியும் வேதனையை உணரும்

இம்முறைப்படி பிராணியின் தலையில் ஓங்கி அடிக்கப்படுகிறது. உடனே பிராணி செயலிழந்து விடுகிறது. ஆனால் நினைவை இழப்பதில்லை. பிராணி செயலிழந்து விடுவதால் அதற்கு எவ்வித வலியும் ஏற்படுவதில்லை எனக் கருதலாம். ஆனால் உண்மையில் பிராணி மிகுந்த வேதனையுடன் இருக்கிறது.  மூளையும், நரம்பு மண்டலமும் செயலிழந்து விடுவதால் உடலில் துடிப்பு ஏற்படுவதில்லை. அதன் காரணமாக இரத்தம் உடலிலேயே தங்கி விடுகிறது. விரைவாக தசைகளை வெட்டுவதால் சிறிது இரத்தமே வெளியேறக்கூடும். எனவே இறைச்சி சுத்தமற்றதாக ஆகி விடுகிறது. அதன் தோற்றமும் மாறுபடுகிறது. சுவையும் குறைந்து விடுகிறது

ஆகுமாக்கப்பட்ட பிராணிகளில் சாப்பிட தடுக்கப்பட்ட ஏழு பொருட்கள். அவற்றில் இரத்தம் ஹராம். மற்றவை மக்ரூஹ்

1. இரத்தம், 2. பித்தப்பை, 3. ஆண்குறி, 4. பெண்குறி, 5. இரு விதைகள், 6. மூத்திரப்பைகள், 7. கழலை

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الْمَرَارَةَ ، وَالْمَثَانَةَ ، وَالْمحيَاةَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْغُدَّةَ ، وَالدَّمَ (طبراني

குர்பானி இறைச்சியை வீணாக்காமல் அதை பதப்படுத்தி தேவைக்கேற்ப பயன்படுத்துவது சுன்னத்

- عَنْ ثَوْبَانَ رض مَوْلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَنَحْنُ بِمِنًى :« أَصْلِحْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ ». فَأَصْلَحْتُ لَهُ مِنْهُ ، فَلَمْ يَزَلْ يَأْكُلُ مِنْهُ حَتَّى بَلَغْنَا الْمَدِينَةَ. رواه النسائ

ஸவ்பான் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் மினாவில் இருக்கும்போது என்னிடம் கூறினார்கள் இந்த குர்பானி இறைச்சியை பதப்படுத்தி வை என்றார்கள் நான் அதைக் காய வைத்து பதப்படுத்தினேன். நாங்கள் அங்கிருந்து மதீனா வந்து சேரும் வரை எங்களின் உணவாக அது இருந்தது

ஆரம்ப காலத்தில் சேமிப்பது தடை செய்யப்பட்டிருந்த து பின்பு அனுமதிக்கப்பட்டது.

عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَدْ نَهَى عَنْ لُحُومِ الأَضَاحِىِّ بَعْدَ ثَلاَثٍ ، فَلَمَّا كَانَ الْعَامُ الْقَابِلُ وَضَحَّى النَّاسُ قُلْتُ :  يَا نَبِىَّ اللَّهِ إِنْ كَانَتْ هَذِهِ الأَضَاحِىُّ لَتَرْفُقُ بِالنَّاسِ كَانُوا يَدَّخِرُونَ مِنْ لُحُومِهَا وَوَدَكِهَا. قَالَ :« فَمَا يَمْنَعُهُمْ مِنْ ذَلِكَ الْيَوْمَ؟ ». قُلْتُ : يَا نَبِىَّ اللَّهِ أَوَلَمْ تَنْهَهُمْ عَامَ أَوَّلَ عَنْ أَنْ يَأْكُلُوا لُحُومَهَا فَوْقَ ثَلاَثٍ؟ فَقَالَ :« إِنَّمَا نَهَيْتُ عَنْ ذَلِكَ لِلْحَاضِرَةِ الَّتِى حَضَرَتْهُمْ مِنْ أَهْلِ الْبَادِيَةِ لِيَبُثُّوا لُحُومَهَا فِيهِمْ ، فَأَمَّا الآنَ فَلْيَأْكُلُوا وَلْيَدَّخِرُوا ». تحفة 17901  رواه النسائ 

عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَلْتَزِدْكُمْ زِيَارَتُهَا خَيْرًا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثٍ فَكُلُوا مِنْهَا وَأَمْسِكُوا مَا شِئْتُمْ وَنَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي الْأَوْعِيَةِ فَاشْرَبُوا فِي أَيِّ وِعَاءٍ شِئْتُمْ وَلَا تَشْرَبُوا مُسْكِرًا وَلَمْ يَذْكُرْ مُحَمَّدٌ وَأَمْسِكُوا   رواه ابن ماجة 

கூட்டுக் குர்பானியாக இருந்தாலும் அதன் இறைச்சியிலுருந்து கொஞ்சம் சாப்பிடுவது சுன்னத். போய் வாங்குவது கடும் சிரமம் என்று இருந்தாலே தவிர.

فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28الحج) وفي حديث حجة الوداع... ثُمَّ انْصَرَفَ (رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ) إِلَى الْمَنْحَرِ فَنَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ بِيَدِهِ ثُمَّ أَعْطَى عَلِيًّا فَنَحَرَ مَا غَبَرَ وَأَشْرَكَهُ فِي هَدْيِهِ ثُمَّ أَمَرَ مِنْ كُلِّ بَدَنَةٍ بِبَضْعَةٍ فَجُعِلَتْ فِي قِدْرٍ فَطُبِخَتْ فَأَكَلَا مِنْ لَحْمِهَا وَشَرِبَا مِنْ مَرَقِهَا (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ عَبْد اللَّه بْن وَهْب قَالَ لِي مَالِك أُحِبّ أَنْ يَأْكُل مِنْ أُضْحِيَّته لِأَنَّ اللَّه يَقُول" فَكُلُوا مِنْهَ

ஹஜ்ஜதுல் விதாவில் நபி ஸல் அவர்கள் மொத்தம் 100 ஒட்டகங்கள் குர்பானி கொடுத்தார்கள். தான் அறுக்கும் குர்பானி இறைச்சியில் சிறிதளவேனும் சாப்பிடுவது நல்லது என்ற அடிப்படையில் நபி ஸல் அவர்கள் அத்தனை ஒட்டகங்களில் இருந்தும் ஒவ்வொரு மாமிசத் துண்டை எடுத்து சால்னா காய்ச்சும்படி ஏவினார்கள். அந்த மாமிசத்தை உண்டதோடு, அந்த சால்னாவை சிறிதளவு குடித்தார்கள். அதாவது அத்தனை ஒட்டகங்களின் இறைச்சி சாறு அதில் இறங்கி விட்டதால் இவ்வாறு செய்தார்கள்.

நிறைமாத கர்ப்பமான ஆட்டை அறுப்பது அதன் குட்டியையும் அறுத்ததாக கணக்கிடப்படும்

ذَكَاة الْجَنِينِ  عَنْ أَبِي سَعِيدٍ رض قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَنِينِ فَقَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ وَقَالَ مُسَدَّدٌ  قُلْنَا يَا رَسُولَ اللَّهِ نَنْحَرُ النَّاقَةَ وَنَذْبَحُ الْبَقَرَةَ وَالشَّاةَ فَنَجِدُ فِي بَطْنِهَا الْجَنِينَ أَنُلْقِيهِ أَمْ نَأْكُلُهُ قَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ ذَكَاةُ أُمِّهِ رواه ابو داود

குர்பானித் தோலை விற்பது கூடாது. அறுப்பவருக்குக் கூலியாகவும் தரக்கூடாது. ஏழைகளுக்கு தரலாம்

  ما ذا يفعل بجلدها؟  قال صاحب الهداية:ويتصدق بجلدها أو يعمل منه آلة تستعمل في البيت لقوله عليه السلام لعلي رض "تصدق بجلودها وخطامها ولا تعط أجر الجزار منها شيئا" ولقوله عليه السلام "من باع جلد أضحيته فلا أضحية له" لأن الاعطاء بجلدها او بجزء منهاأجرة في معني البيع

அரஃபா நோன்பு

عَنْ أَبِى قَتَادَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّى أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِى بَعْدَهُ (ترمذي

பிக்ஹ் நூல்கள் அனைத்திலும் அரஃபா நாள் என்பது துல்ஹஜ் 9-ம் நாள் என்றே கூறப்பட்டுள்ளது. அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்று கூறப்படவில்லை. ஆகவே அரஃபா நாள் ஹாஜிகளுக்கும், நமக்கும் மாறுபடுவது அல்லாஹ்வின் விதி.

 

 

 

ஈதுப் பெருநாள் தொழுகையில் அதிகப்படியான தக்பீர்களைப் பற்றிய விபரம்ஷாஃபிஈ, &ஹனஃபீ

عَنْ عَائِشَةَرضي الله عنها قالت أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ وَالْأَضْحَى فِي الْأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ وَفِي الثَّانِيَةِ خَمْسًا (ابوداود) بَاب التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ

 

-   أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ سَأَلَ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ وَحُذَيْفَةَ بْنَ الْيَمَانِ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي الْأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ أَبُو مُوسَى كَانَ يُكَبِّرُ أَرْبَعًا تَكْبِيرَهُ عَلَى الْجَنَائِزِ(ابوداود) بَاب التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ( أَرْبَعًا ): أَيْ مُتَوَالِيَة . وَالْمَعْنَى مَعَ تَكْبِيرَة الْإِحْرَام فِي الرَّكْعَة الْأُولَى وَمَعَ تَكْبِيرَة الرُّكُوع فِي الثَّانِيَة

இந்த ஹதீஸ் ஹனஃபீ மத்ஹபுக்கு ஆதாரம் இங்கே நான்கு தக்பீர் என்று கூறப்படுவது ஒவ்வொரு ரக்அத்திலும் நான்கு என்பதாகும். அதாவது முதல் ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமாவுடன் சேர்ந்து நான்கு பின்பு இரண்டாவது ரக்அத்தின் கடைசியில் ருகூவுடைய தக்பீருடன் சேர்த்து நான்கு என்பதாகும் ஆக அதிகப்படியான தக்பீர்கள் ஆறு என்பதாகும்

ஒவ்வொரு தக்பீருக்குமிடையில் கைகளை தொங்க விடுவதா ? அல்லது கைகளை கட்டிக் கொள்வதா ?

حنفي:( وَيُرْسِلُ يَدَيْهِ فِي قَوْمَةِ الرُّكُوعِ وَبَيْنَ تَكْبِيرَاتِ الْعِيدِ ) فَالْحَاصِلُ علي ما  قَالَ شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ : إنَّ كُلَّ قِيَامٍ لَيْسَ فِيهِ ذِكْرٌ مَسْنُونٌ فَالسُّنَّةُ فِيهِ الْإِرْسَالُ وَكُلُّ قِيَامٍ فِيهِ ذِكْرٌ مَسْنُونٌ فَالسُّنَّةُ فِيهِ الْوَضْعُ وَبِهِ كَانَ يُفْتِي شَمْسُ الْأَئِمَّةِ السَّرَخْسِيُّ وَالصَّدْرُ الْكَبِيرُ بُرْهَانُ الْأَئِمَّةِ ،فَيَضَعُ يَدَيْهِ فِي الْقُنُوتِ وَصَلَاةِ الْجِنَازَةِ عِنْدَ أبي حنيفة وابي يوسف رح ؛ لِأَنَّ فِيهِمَا ذِكْرًا مَسْنُونًامجمع الأنهر, (درر الحكام)عَنْ أَبِي حَنِيفَةَ رَحِمه الله قَالَ : وَيَسْكُتُ بَيْنَ كُلِّ تَكْبِيرَتَيْنِ بِقَدْرِ ثَلَاثِ تَسْبِيحَاتٍ

ஹனஃபிகளிடம் எந்த இரு தக்பீர்களுக்கு இடையில் சுன்னத்தான ஓதுதல் இருக்குமோ அந்த தக்பீரின் போது கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஜனாஸாத் தொழுகை, குனூத் ஆகியவை.

எந்த இரு தக்பீர்களுக்கு இடையில் சுன்னத்தான ஓதுதல் இல்லையோ அந்த தக்பீரின் போது கைகளைக் கீழே தொங்க விட வேண்டும். அந்த வகையில் ஈத் தக்பீர்களுக்கிடையில் ஹனஃபிகளிடம் எந்த ஓதுதலும் இல்லை

شافعي (وَوَاضِعَا) بَيْنَ كُلِّ تَكْبِيرَتَيْنِ  يُمْنَى  يَدَيْهِ عَلَى يَسَارِهِ مِنْهُمَا كَمَا بَعْدَ تَكْبِيرَةِ التَّحْرِيمِ وَظَاهِرٌ أَنَّهُ لَا بَأْسَ بِإِرْسَالِهِمَا إذَا لَمْ يَعْبَثْ2(الغرر البهية)

2,கைகளை கீழே தொங்க விட்டால் அந்தக் கைகளைக் கொண்டு ஏதேனும் வீண் விளையாட்டில் ஈடுபட மாட்டார் என்றிருந்தால் கைகளைத் தொங்க விடலாம்.

அதிகப்படியான தக்பீர்களை மறதியாக விட்டு விட்டால்.

وقال أبو حنيفة وأحمد يسجد لترك تكبيرات العيد (مجموع)

அதிகப்படியான தக்பீர்களை மறதியாக விட்டு விட்டால். கடைசியில் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

ஈதுப் பெருநாள் தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு செய்வது நல்லதல்ல என்ற கருத்தும் உள்ளது. தொழுகை கூடி விடும்.

شافعي :فان نسى تكبيرات العيد حتى افتتح القراءة ففيه قولان قال في القديم ياتي بها لان محلها القيام والقيام باق وقال في الجديد لا ياتي بها لانه ذكر مسنون قبل القراءة فسقط بالدخول في القراءة كدعاء الاستفتاح (مجموع)

இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களின் பிந்தைய சொல்லின் படி தக்பீர் சுன்னத் என்பதால் அதிகப்படியான தக்பீர்களில் ஒன்றை மறதியாக விட்டு விட்டு கிராஅத்தை ஆரம்பித்து விட்டால் அந்த தக்பீர்களை மீட்ட வேண்டியதில்லை. எப்படி தனாவை விட்டு விட்டால் மீட்ட வேண்டியதில்லையோ அதைப் போல..

 

 قال الشَّافِعِيُّ ) وإذا افْتَتَحَ الصَّلَاةَ ثُمَّ بَدَأَ بِالتَّكْبِيرَةِ الأولي من السَّبْعَةِ بَعْدَ افْتِتَاحِ الصَّلَاةِ فَكَبَّرَهَا ثُمَّ وَقَفَ بين الْأُولَى وَالثَّانِيَةِ قَدْرَ قِرَاءَةِ آيَةٍ لَا طَوِيلَةٍ وَلَا قَصِيرَةٍ فَيُهَلِّلُ اللَّهَ عز وجل وَيُكَبِّرُهُ وَيَحْمَدُهُ ثُمَّ صَنَعَ هذا بين كل تَكْبِيرَتَيْنِ من السَّبْعِ وَالْخَمْسِ ثُمَّ يَقْرَأُ بَعْدُ بِأُمِّ الْقُرْآنِ وَسُورَةٍ وَإِنْ أَتْبَعَ بَعْضَ التَّكْبِيرِ بَعْضًا ولم يَفْصِلْ بَيْنَهُ بِذِكْرِ كَرِهْتُ ذلك له وَلَا إعَادَةَ عليه وَلَا سُجُودَ لِلسَّهْوِ عليه فَإِنْ نسى التَّكْبِيرَ أو بَعْضَهُ حتى يَفْتَتِحَ الْقِرَاءَةَ فَقَطَعَ الْقِرَاءَةَ وَكَبَّرَ ثُمَّ عَادَ إلَى الْقِرَاءَةِ لم تَفْسُدْ صَلَاتُهُ وَلَا آمُرُهُ إذَا افْتَتَحَ الْقِرَاءَةَ أَنْ يَقْطَعَهَا وَلَا إذَا فَرَغَ منها أَنْ يُكَبِّرَ وَآمُرُهُ أَنْ يُكَبِّرَ في الثَّانِيَةِ تَكْبِيرَهَا لا يَزِيدُ عليه لِأَنَّهُ ذِكْرٌ في مَوْضِعٍ إذَا مَضَى الْمَوْضِعُ لم يَكُنْ على تَارِكِهِ قَضَاؤُهُ في غَيْرِهِ (الام)

குறிப்பு- இங்கு ஹனஃபீ, ஷாஃபிஈ இரு சட்டங்களையும் கூறப்பட்டிருந்தாலும் அவரவர் மஹல்லாவுக்குத் தகுந்தாற்போல் ஏதேனும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம்

 

நாவைப் பேணுவோம்

31-07-2026 ஸஃபர் - 16 بسم الله الرحمن الرحيم          நாவின் விபரீதங்கள் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN N...